Pages

Saturday, July 28, 2018

பொம்மைகள் உடைபடும் நகரம், நவீனம் - -மதிப்புரை ::: ஜெயமோகன் :: சுபமங்களா, ஜூலை,1992

1) "பொம்மைகள் உடைபடும் நகரம் பதினைந்து கதைகள் - கோணங்கி - பக்கம் 180, விலை ரூ. 30, அன்னம் புத்தக மையம், மதுரை. 

2) நவீனம் - 14 கதைகள் - சுப்ரபாரதி மணியன், பக்கம் 138 - விலை ரூ.  18, அன்னம் புத்தக மையம், மதுரை.

தமிழ்ச் சூழலின் அடிப்படையில் எழுத்தாளர்களை பொதுவாக மூன்றாகப் பிரிக்கலாம். வணிக இதழ்களின் மேலோட்டமான வாசக இலட்சங்களுக்காக கேளிக்கை வடிவங்களை தேவைக்கேற்ப உற்பத்தி செய்து குவிக்கும் வணிக எழுத்தாளர்கள் முதல் வகை. வணிக இதழ்களிலும், இலக்கிய இதழ் களிலும் தொடர்ந்து எழுதும் குறைந்தபட்ச இலக்கியத் தகுதி உடையவர்கள் இரண்டாம் வகையினர். இலக்கியத்தரத்தை எவ்வகையிலும் சமரசம் செய்து கொள்ள மறுத்து, தரமான இலக்கிய இதழ்களில் மட்டும் தங்கள் எழுத்துகளை முன்வைத்து வரும் எழுத்துக்கலைஞர்கள் மூன்றாம் வகை. இவ்வகை பினர் பெரும்பாலும் மிகக் குறைவான வாசகர்கள் மட்டும் அறிந்திருப்பவர்கள்.

தற்போது தமிழ்ச் சிற்றிதழ்களில் ஏற்பட்டுள்ள தொய்வு தரமான படைப்பாளிகளைக்கூட பிரபல இதழ்களுக்காக சமரசம் செய்து கொள்ளச் செய் கிறது. கணையாழி, நிகழ் போன்ற ஒருசில சிற்றிதழ் களைத் தவிர பிறவற்றுக்குப் பக்கங்கள் இல்லை . எனவே சித்தரிப்பை (Naration) பாணியாக கொண்ட, நிறைய எழுதும் எழுத்தாளர்கள் பிரபல இதழ் களில் படைப்புகளை எளிமைப்படுத்தி எழுதுவது அல்னது சும்மா இருந்துவிடுவது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு விடுகிறார்கள். இதைத்தவிர புகழ், பணம், அதிகாரத்துடனான தொடர்பு ஆகியவற் நின் மீதான சபலம் எழுத்தாளர்களை வணிக எழுத்தை நோக்கி ஈர்க்கிறது. உத்வேகமான ஒரு படைப்புக் காலகட்டம் முடிந்து எழுதியவைகளையே மீண்டும் எழுதும் மூத்த படைப்பாளிகளும் வணிக இதழ்கள் தரும் பரபரப்பை விரும்பி சமரசம் செய்து கொள்கிறார்கள். ஆனால் எந்நிலையிலும் வணிக இதழ்களுக்குச் சென்றவர்களின் இலக்கியத் தகுதி களில் பெரும் சரிவுகள் ஏற்பட்டிருப்பதையே தமிழ் இலக்கிய உலகம் காட்டுகிறது. தன் எழுத்தில் பிடிவாதமான சமரசமின்மை என்பது ஒரு எழுத் தாளன் தன் ஆத்மாவை தக்க வைத்துக் கொள்ளும் முதன்மையான வழிமுறையாகும்.
முதல்வகையினரை விட்டுவிடலாம். வணிக எழுத்தாளர்களுக்கு இலக்கிய உலகில் மரியாதை தருவது அனேகமாக உலகில் தமிழ்மொழியில் மட்டுமே நடந்து வரும் அபத்தம். இளைய தலைமுறை படைப்பாளிகளில் இரண்டாம் வகையைச் சார்ந் தவர்களே அதிக கவனத்தை கவர்ந்து வருகிறார்கள். பாவண்ணன், சுப்ரபாரதிமணியன், எஸ். ராமகிருஷ்ணன், இரா. முருகன், எஸ். சங்கரநாராயணன், கார்த்திகா ராஜ்குமார் ஆகியோரை குறிப்பிடத்தக் கவர்களாக கூறலாம். ஆனால் இவர்களுக்குரிய இலக்கிய மதிப்பு குறைந்தபட்ச வரையறைக்கு உட் பட்டது. வணிக இதழ்களில் பிரசுமாகும் பல நூறு பெயர்களுள் ஒன்று மட்டுமே இவர்களுடைது

மூன்றாம் வகை படைப்பாளிகளில் கோணங்கி, சுரேஷ்குமார் இந்திரஜித், கோபி கிருஷ்ணன், சில்வியா (எம்.டி. முத்துகுமாரசாமி) ஜோசஃப் லூயிஸ் (தர்மராஜ்), கௌதம சித்தார்த்தன், கோலாகல ஸ்ரீனிவாஸ் ஆகியோரை குறிப்பிடலாம். இவர்களில் கோபிகிருஷ்ணன் முதலிய ஒருசிலர் சிலசமயம் தினமணி கதிர் முதலிய இதழ்களில் கட்டுரைகள் எழுதுவதுண்டு. பிறர் முற்றிலும் சிற்றிதழ் சார்ந்து செயல்படுபவர்கள். எனவே பிரபலம் பெறாதவர்கள். இவர்களில் தமிழ் எழுத்தின் தன்மைகளை தீர்மானிக்கும் வலிமை கொண்ட கலைஞர்கள் என்று கோணங்கியையும் சில்வியாவையும் குறிப்பிடலாம். நான் உட்பட உள்ள இந்த சிறு குழுவில் கோணங்கியே முதன்மையானவர். இவ் வகைப் பாடுகளைத் தவிர முற்போக்கு இலக்கியச் சூழலில் போப்பு, பவா. செல்லத்துரை, கமலாலயன் முதலிய படைப்பாளிகள் நேர்மை யாக செயல்பட்டு வருகிறார்கள். இவர்களில் போப்பு மிகவும் குறிப்பிடத்தக்கவர் என்று கருதுகிறேன்.

கோணங்கி, சுப்ரபாரதி மணியன் ஆகிய இரு இளம் படைப்பாளிகளின் இரு தொகுப் புகளையும் இந்த சூழலில் வைத்தே நாம் மதிப்பிட வேண்டும். இவற்றின் பொதுவான நிறைகுறைகளை தமிழ் நவீன இலக்கியச் சூழலின் நிறைகுறை களாகவும் கூற முடியும். சுப்ரபாரதி மணியன் முற் றிலும் சிற்றிதழ் சார்ந்து இயங்கி வந்தவர். குறிப் பிடத்தக்க இலக்கிய இதழான 'கனவு' பத்திரிகை ஆசிரியர். இவருடைய முதல் தொகுப்பான அப் பா'வின் பின் அட்டை சிற்றிதழ் சார்ந்த எழுதி தாளராக இவரை அறிமுகம் செய்கிறது. இவருடைய மூன்றாம் தொகுப்பாகிய 'நவீனம்' இரு தளங் களிலும் சிறப்பாக செயல்படுபவர் என்று சமாளிக்க முயல்கிறது. சமீபத்தில்தான் சுப்ரபாரதி மணியன் பிரபல இதழ்களில் எழுத ஆரம்பித்திருக்கிறார்: ஆனால் ஒரு பிரபல எழுத்தாளராகத் தடைகளாக இருப்பவை அவருடைய நெகிழ்ச்சிகள் அற்ற இலேசான கவிதைச்சாயல் உடைய, நவீனத்தமி' நடையும், சம்பவங்களை பரபரப்பானவையாக ஆக்கும் முயற்சியில்லாத இலக்கிய நேர்மையும். இவ்விரு 'தகுதி'களும் இல்லாத ஒருவர் பிரபல இதழ்களில் சகட்டுமேனிக்கு எழுதும்போது ஏறி படும் தீவிரமான அலுப்பு இப்போதே அக்கதைகளில் தெரிய ஆரம்பித்து விட்டிருக்கிறது. பதினான்கு கதைகள் அடங்கியுள்ள நவீனம் தொகுப் பில் 'எல்லையா' என்ற ஒரே ஒரு கதை மட்டுமே இலக்கிய ரீதியான மதிப்பை பெறத்தக்கது. 'பங்கீடு' சித்தரிப்பின் ஒருமை சிதைவதனால் வீழ்ச்சி பெற்ற ஒரு முயற்சி. பிற கதைகள் பரிபூரணமான தோல்விகள்.

கோணங்கியின் பொம்மைகள் உடைபடும் நகரம்' அவருடைய மூன்றாவது தொகுப்பு. கோணங்கி தன் எழுத்து வெளிப்பாடுக்கு, தான் நடத்தும் 'கல் குதிரை' சிற்றிதழையே பெரிதும் நம்பியிருக்கிறார். அது மிகமிகச் சிறிய சூழலில் மட்டுமே புழங் குகிறது, குறிப்பாக கோணங்கியின் நண்பர்கள் மத் தியில். இந்தத் தன்மை கதைகளில் ஒரு குறுகிய புழங்கும் தளம் உருவாக காரணமாக அமைகிறது. கோணங்கியின் முதல் தொகுப்பான 'மதினிமார்கள் கதை' தீவிரமும் கவித்துவமும் கொண்ட நான்கு கதைகளை உள்ளடக்கியதாக இருந்தது. இத்தொகுப் பில் நான்கு கதைகளை கோணங்கிக்கே உரிய தீவிரமான கவித்துவம் கொண்ட படைப்புகளாக கூற முடியும், 'கறுப்பன் போன பாதை' தொண் ணூறுகளில் தமிழில் எழுதப்பட்ட மிகச்சிறந்த கதைகளுள் ஒன்று. ஒரு இலக்கியச் சாதனை என்றே - சற்று மிகைப்படுத்தி - கூறிவிட முடியும். தச்சன் மகள், தையற்காரன் கதை, கறுத்தபசு' ஆகிய கதைகளும் குறிப்பிடத்தக்க இலக்கிய வெற்றிகள். பிறகதைகள் வெறும் வார்த்தைக் கூட்டங்கள். எத்தனை விசாலமாக நம் இலக்கிய அளவைகளை வைத்துக் கொண்டாலும்கூட இவற்றை நாம் இலக்கியப் படைப்புகளாகக் கொள்ள முடியாது.

இவ்விரு தொகுப்புகளிலும் பெரும்பான்மை படைப்புகளை சரிவுறச் செய்யும் இருவித பலவீனங்கள் உள்ளன. இவற்றைத் தமிழ்ச் சூழலுக்கு பொதுவாக பொருந்தும் பலவீனங்களாகக் கூறலாம். சுப்ரபாரதி மணியனின் எழுத்து பெரும்பாலும் புறஉலகம் சார்ந்தது (இதை அவரைப்போன்ற மற்ற எழுத்தாளர்களுக்கும் சொல்லலாம்) புற உலகின் சம்பவங்களை ஒரு ஒழுங்கமைவுக்குள் கொண்டுவந்தால் இலக்கியப் படைப்பாக ஆகிவிடும் என நம்புகிறார் அவர். எனவே அவருடைய பல கதைகள் அழுத்தமற்ற சம்பவங்களை பலவீனமாக அடுக்கப் பட்டிருப்பதாக தோற்றம் தருகின்றன. சித்தரிப்பின் தொழில்நுட்பம் தவிர வேறு விதத்தில் கலைஞனின் ஆளுமையும் அவற்றில் இல்லை. அலுப்பூட்டும் வெறுமையுடன் நம்மை அடைந்து, படித்து முடித்த உடனேயே உதிர்ந்து விடுகின்றன அவை.

கோணங்கி அக உலகின் வார்த்தை வடிவமே எழுத்து என்று நம்புகிறார். தங்குதடையின்றி மன ஓட்டத்தை வார்த்தைகளிலோ, படிமங்களிலோ பதிவு செய்துவிட்டால் வெற்றிகரமான கதையாகி விடுமென்று நம்புகிறார். "நான் வார்த்தைகளை ஒழுங்கு செய்யவில்லை பொருட்கள் கால - இட ரீதியான இடைவெளியில் வேறு தோற்றம் கொண்டன. முன் யோசிக்கப்படாத ஒரு கணம் கதையினை எழுதியது. கைகள் மட்டுமே கதையினை எழுதி போயின... " என்று கோணங்கி முன்குறிப்பில் குறிப்பிடுகிறார். படைப்பாக்கம் பற்றிய இந்தப் பிரமை, வார்த்தைகளை சிதறடிக்கும் ஒரு எந்திரமாக கலைஞனை மாற்றிவிட்டிருக்கிறது. இளம் தலைமுறையின் தலைசிறந்த கலைஞனிடமிருந்து சொற் குப்பைகளை கொட்டும்படிச் செய்கிறது.

அக உலகமற்ற புற உலகச் சித்தரிப்பு வெற்று விவரணை. புறஉலகின் பிடிமானமற்ற அகஉலகச் சித்தரிப்பு வெறும் வார்த்தைப்பிரவாகம் - படைப் பாளி தவிர வேறு எவருக்கும் எந்த அனுபவத் தையும் தராத ஒன்று. இவ்விரண்டும் முயங்கும் தருணங்களே மேலான எழுத்தை உண்டு பண் ணுகின்றன. மாபெரும் ருஷ்ய இலக்கிய மேதை களில் இவ்விரு உலகங்களும் தெளிவான இரு ஓட் டங்களாக பிரவாகமெடுப்பதையே காண்கிறோம். நவீன படைப்பாளிகளில் ஒன்றை நிர்ணயிக்கும் மவுன ஒழுங்காக இன்னொன்று இயங்குவதைக் காணலாம்.
இவ்விரு முடிவின்மைகளும் பிரபஞ்ச முடிவின் மையின் இரு முகங்கள். மனித இருப்பை அளவாக வைத்து நாம் உண்டு பண்ணுபவை. இவையிரண் டும் அவற்றின் இயல்பான ஒரு மாபெரும் ஒழுங் கின்மையைக் கொண்டுள்ளன. இந்த இயல்பான சிதறல் பிரமாண்டத்திலிருந்து ஒழுங்குகளையும், வடிவங்களையும் உண்டுபண்ணும் மானுட இனத் தின் எளிய முயற்சிகளே கலையும் தத்துவமும் இலக் கியமும் எல்லாம். எல்லா ஒழுங்கமைவுகளும் அடிப் படையில் ஒழுங்கின்மையை கொண்டிருப்பதனால் தான் அவை ஒருபோதும் பூரணமடைவதில்லை. எனவேதான் இருபதாயிரம் வருடங்களாக மானுட மனம் திரும்பத்திரும்ப ஒழுங்கமைவுகளை உண்டு பண்ணியபடியே வருகிறது. எனவே படைப்பின் ஆதி நோக்கமே ஒழுங்குதான்; மொழிக்கு தொடர்பு' போல. தன் ஆதி நோக்கங்களை முற்றிலும் மீறி எவ் வடிவமும் வளர்ச்சி' பெறுவது இல்லை என்று உறுதியாக கூறமுடியும்.

இலக்கிய வடிவாக்கத்தில் ஒருங்கிணைவுள்ள வடிவங்களும் ஒருங்கிணைவை உதறிய வடிவங் களும் மாறிமாறி காலம் நெடுக வந்துள்ளன. இலக் கியப் படைப்பின் சிதைவு என்பது உண்மையில் 'சிதைவொழுங்கு' தானேயொழிய சிதைவேயல்ல. அதாவது சிதைவு என்ற மனப்பிம்பத்தைத் தரும் ஒருவிதமான ஒழுங்கு. சிதைவே இலக்கியம் என்று கூறப்போனால் உலகின் கோடானுகோடி பித்தர் களின் அத்தனை பிதற்றல்களும் கலை வடிவங்களே. சாலையோரத்தில் அமர்ந்து அத்தனை நிகழ்ச்சி களையும் அப்படியே பதிவு செய்து வைப்பதும் கலையே. எந்த பிதற்றலிலும் சற்று கவிதை இருக் கும். எந்த சித்தரிப்பிலும் சற்று வேடிக்கை இருக்கும். அவை அந்த பதிவுகளை நியாயப்படுத்தப் போதுமானவை அல்ல. அவலகமோ புற உலகமோ ஒரு பிரக்ஞை வழியாக கடந்து வந்தேயாக வேண் டும் அப்பிரக்ஞைக்கே உரிய ஒழுங்கமைவை அது அடைந்தேயாக வேண்டும். அவ்வொழுங்கமைவை மொழி வடிவமாக ஆக்கும் கதைத் தொழில்நுட்பமும் மொழிப் பயிற்சியும் அவசியம் செயல்பட்டாக வேண்டும்.

இலக்கியம் என்பதை அகமனத்தின் ஒரு தீவிரச் செயல்பாடு என்று வரையறை செய்யலாம். எல்லா மேலான படைப்புகளும் அகமன உத்வேகங்களிலிருந்து உருவாகுபவையே. ஆனால் அதே சமயம் எந்தக் கலையும் அடிப்படையில் ஒரு தொழில்நுட் பமும் கூடத்தான். தொழில்நுட்பமும் அகமன வேகமும் சந்திக்கும் கணமே படைப்பின் கணம். கோணங்கியில் பல கதைகளில் அகமனம் தொழில் நுட்பத்தின் ஒருங்கமைவு இன்றி சிதறித் தெறிக் கிறது. சுப்ரபாரதி மணியனின் பல படைப்புகளில் அகமன உத்வேகமின்றி சித்தரிப்பின் கூரிய தொழில் நுட்பம் வீணாக இயங்குகிறது. இரண்டுமே சக்தி விரயங்கள்.
இவ்விருவர் படைப்புகளிலும் வெற்றிபெற்ற இருகதைகளை வைத்து இதை விளக்க முடியும். எல்லையா முடமானவன். தொழில் செய்து அந்தத் தொழில் நொடித்து பிச்சைக்காரன் ஆனவன். பிச் சைக்காரனுக்கேயுரிய கீழ்மைகளும், மன வரட்சியும் கைகூடப் பெற்றவன். அவன் புழங்கும் புறஉலகம் திறமையாக சித்தரிக்கப்படுகிறது. ஆனால் ஒரு இரும்பாணி கிடைத்ததும் மீண்டும் உழைப்புக்கு, அதன் வழியாக 'கலாச்சாரத்திற்கே', திரும்பிவர யத்தனிக்கிறான். இம்முடிவு கதையின்
________________
புறஉலகச் சித்தரிப்பை மிக மவுனமாக தொடர்ந்து
அத்தனை சித்தரிப்பையும் ஒழுங்கு செய்யும் அகமலகின் இருப்பை சட்டென்று வெளிக்காட் டுகிறது. எல்லையா பிச்சையெடுக்கும் போது கூட மீள வேண்டுமென்ற உத்வேகம் அவனுள் ஒளிக் திருக்கிறதா? அந்த உள்ளெழுச்சியுடன் அவனால் எப்படி அங்கு வாழ முடிந்தது? அவனுடைய அந்த கணம் வரையிலான செயல்பாடுகளை திரும்பிப் பார்க்கச் செய்கிறது இந்த முடிவு. கூறப்படாத எல் லையாவின் அகஉலகு கதை நெடுக தொக்கி நில் பதை காண்கிறோம். சம்பந்தமற்ற சித்திரங்களினா லான கதை முழு ஒருங்கமைவையும், கலை ஒழுங் கையும் பெற்றுவிடுகிறது. இவ்விரு உலகங்களும் பரஸ்பரம் அர்த்தம் தந்து நமக்கும் இலக்கிய அனுபவத்தை தருபவையாக ஆகின்றன.
கருப்பன் போனபாதை மனப்பிம்பங்களின் சிதறடிக்கப்பட்ட வடிவில் உள்ளது. பொட்டலில் நீண்டு போகும் பாதை, அனல் பொழியும் வெயில், தாகம், என்று புறஉலகச் சித்தரிப்பின் ஒரு தளம் அம் மன உணர்வுகளை ஒரு ஒழுங்கில் பொருத்துகிறது. கருப்பனின் சிறைவாசத்துக்கு காரணமான சம் பவமும், அதன் உத்வேகமான பிம்பங்களும் இந்த மனஉணர்வுகளை சீர்படுத்தி தீவிரமான ஒரு அனுபவத்தை ஏற்படுத்துகின்றன. (பூமணியின் வெக்கை கதையின் இன்னொரு வடிவம் இது) மொழியின் அகவயமான தன்மையையும் கதை சொல்லலின் சிதைவுத் தன்மையையும் முழுமை பெறச் செய்வது இந்த புறஉலகச் சித்தரிப்பு தான். அழுத்தமான சமூகப்பிரச்சினை; அதன் கலாச்சாரப் பின்னணி; அதன் மானுட உத்வேகம். ஒன்று மற் றொன்றை உருவாக்குவதன் மூலம் சிறப்பான ஒரு இலக்கிய வடிவம் உருவாகிறது. அதே சமயம் 'பொம்மைகள் உடைபடும் நகரம்' முதலிய கதைகள் அந்தரத்தில் நிற்கின்றன. எங்கும் ஒட்டாத படிமங் களும், சிதறிய சொற்களுமாக அனுபவம் தராது உதிர்கின்றன.)
சித்தரிப்பின் அழகை சுப்ரபாரதி மணியனின் வார்த்தைகள் அனாயசமாய் சாதிக்கின்றன. "ஸ்டேஷன் ரோடு பரபரத்துக் கொண்டிருந்தது. பெரும்பான்மையான ஜனங்கள் சப்தமற்று எங்கோ மனம் வைத்து நடந்து கொண்டிருந்தாலும் அவர்களின் அவலத்தை யாரோ உரக்கவும் ஒழுங்கின் றியும் கத்துவது போலத்தான் சப்தம் இருந்து கொண்டிருந்தது.” (எல்லையா)

கோணங்கியின் மொழி, மன அவசத்தைப் பற்றும் தவிப்பில் அர்த்த ஒழுங்கை இழந்து, பலசமயம் கவித்துவ எழிலை அடைவது. கூர்மையும் ஆவேச் மும் ததும்புவது. கோணங்கியின் படிமங்களின் எழிலை தமிழின் சிறந்த கவிஞர்கள்கூட அபூர்வ மாகவே அடைந்திருக்கிறார்கள். குறிப்பாக தையல்காரன் மனைவியின் பிரசவத்தின் போது, 'இருளில் கண்கள் மினுங்க, ஓசையற்ற காலடிகளுட' அலையும் அந்த கரியபூனை. குடும்பனின் உதிரம் தோய்ந்த வேட்டி', (தையல்காரன் கதை, கறுப்பன் போன பாதை) படிமங்களைப் பின்னி கதையை தொடர்ந்து உருமாறும் நிழல்களின் விளையாட டாக மாற்றும் கோணங்கியின் திறமை தமிழுக்கு அபூர்வமான ஒன்று எனலாம்.
________________
இவ்விரு தொகுப்புகளையும் வைத்து நவ தமிழின் பலத்தையும் பலவீனத்தையும் அளவிட முடிகிறது. தமிழ் எழுத்தில் இருக்கும் வெவ்வேறு துருவங்களையும் காண முடிகிறது. சுப்ரபாரதி மணியன், கோணங்கி இருவர் படைப்புகளையும் சிதைக்கும் பலவீனங்கள் அவர்களுடைய முதல் தொகுப்பிலேயே தெரிய ஆரம்பித்துவிட்டிருந்தன. அவை வளர்ந்து வருவதையே இப்போதைய தொகுப்புகள் காட்டுகின்றன. வேறு புறக்காரணங் களுடன், இதற்கு முக்கியமான காரணங்களில், ஒன்று படைப்பாளியிடம் அவனுடைய அதிகபட்சத்தை கோரும் தீவிரமும், நுண்ணிய ரசனையும் உடைய வாசகர் வட்டம் இல்லாதது. இன்னொன்று ரசனை யேயில்லாமல் தவறான பாராட்டுதல் களையோ விமரிசனங்களையோ முன்வைத்த படியிருக்கும் 'சிந்தாந்த ' விமரிசகர்கள். ஆயினும் தமிழ்ச் சிறுகதைகளில் இப்போதும் சாதனைகள் உருவாக முடியும் என்ற எண்ணத்தையே தற் போதைய எழுத்துக்கள் தருகின்றன.
-ஜெயமோகன்