Pages

Saturday, October 05, 2019

மீண்டும் ஆண்டாளின் தெருக்களில் & மதுரைக்கு வந்த ஒப்பனைக்காரன் - கோணங்கி

மீண்டும் ஆண்டாளின் தெருக்களில் & மதுரைக்கு வந்த ஒப்பனைக்காரன்  - கோணங்கி 
0 0 
மீண்டும் ஆண்டாளின் தெருக்களில் - கோணங்கி 
தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரியத்
தூபங் கமழத் துயிலணைமேல் கண்வளரும்
மாமன் மகளே மணிக்கதவம் தாள் திறவாய்
மாமீ ரவளை யெழுப்பீரோ உன் மகள் தான்
ஊமையோ வன்றிச் செவி ேடா அனந்தலோ
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ
-ஆண்டாள் 

என்னைத் திறந்த சிற்பம் ஒன்று அலபீடு சிற்பக் கூடத்தில், இறந்து கிடந்தது. கைகள் முலைகள் முகம் அறுந்த சிலை ஒன்று கோபத்தில் சுடரும் ஒளி... அலபீடு சிற்பக்கூடம் முதல் ஆண்டாள் தெருக்கள் வரை நடந்து திரிந்தேன். எல்லாம் அற்ற அமைதியில் உறங்கும் பயணிகளோடு ஹாஸ்பட் பாசஞ்சரின் தனிமை. இருளில் நகரும் பயணம் ஹம்பிக்கும். புராணிக வீதியிலிருந்து வரு கிறேன். மௌனத்தின் அடியில் நொறுங்கிய சிருஷ்டிகளின் அதிர்வு. உளியின் பதிவுகள். கரையான் தின்ற ஏடுகளில் உளியின் கோடு. உளியின் தொகுதி ஒன்று கல்லில் பதுங்கிய பூதம் 
மூல உயிரென மைய இருள்நோக்கி தெறித்த வில் திறம் அதிர அதிர அலையலையாய் நூறாயிரம் கல் மண்டபங்கள். தூண் கள் எல்லாம் பேசாதிருந்த சிலை. கல்லின் பாஷை விரக்தி யின். ஊற்று. கல்லில் ஒளிரேகை, இருளில் புகுந்து அடிக் குரலில் குமுறும் புறா ஒன்றின் - சோகமென ஊமையான சிலை முகம். புறங்கள் தோறும் அசைகிறது. 
கர்ப்பக்கிரஹ இருளில் திரிகள் எரிகின்றன. கிளியஞ்சிட்டி தீபங்கள் கொண்டு வந்த மகளிர் சூழ்ந்துவா அலபீடு கோபுர வாசல், சிற்பிகள் வாழும் புஷ்பவனத் தெரு. கூட்டமாய் உறங்கும் மரங்கள். கீழே ஊர்ந்து நகர்கிற நதி. 
இடிந்த மாடத்தில் இருந்து சென்ற சிலை விளக்கு, கசியும் மாடம். ஒளிபட்டு இருண்ட மாடம். எண்ணெயும் திரிகள் விழுந்த மசகும் கோடு கோடாய் பதிவுகள். உள்ளே புகை மறைத்த காலம் அடிமனசில். இருளில் நகரும் வெண் பருந்து, காலத்தில் மௌனமான மரம் ஒன்றின் சாஸ்வத நிலைபோலும் அவள் மௌனம். எதிர் நின்று எதிர்கொள்ள முடியாத முகம். கண்கள் ஆழத்தில் புதைந்து உள்ளே சஞ் சரித்துக் கொண்டிருந்தன.கருமைக்குள்ளிருந்தாவாறே என்னைப் பார்த்தாள் எதிர்பார்ப்பில்லாமல். 
அவளுள் எரியும் கோப விளக்கொன்றின் சுடர் தீவிரமடைந் தது. உயிரை நோக்கி ஆயிரமாய் கதிர்கள் வீசி அழைத்தன. தன் நிலை இழந்து உள்ளே... புகையான நிலை. அங்கே ஆண்டாள் சிறைப்பட்டு சுவருக்குள் பதுங்கியிருந்தாள். தனிமைப் பெருநிலையில் இந்த அகால , இருள் அவளுள் அடைந்து கிடக்குமென்று எதிர்பார்க்கவில்லை. சிறு துவாரம் கிடைத்தால் தப்பி வெளிப்பட்டு விடலாமென, அடிமை போலும் உலகின் வட்டத்தில் எதிர்கொள்ள ஏதுமற்று அனாதையென அவள் நிலை. 
அவளுள் அசந்தர்ப்பமாக மாட்டிக்கொண்டதால் என் வருகை கலவரமாகி விட்டது வரவேற்று அன்புதர சமிக்ஞை - யற்று தாறுமாறாய் கோடுகள் வந்தன. இருளின் அடியில் அமர்ந்திருந்த கைதி போலும் என் நிழல் கண்டு மருண்டு இன்னும் தொலைவில் அதிர்ந்து, எனக்கு எட்டாத இடம் புகுந்தாள். உள்ளே இருந்தன பல அறைகள். சுவர்களில் ஓவியங்கள் விநோதவகைக் கோடுகள், பாசுரங்களின் ஆதார ஊற்று சுரந்து கொண்டிருந்தது. மனபிம்பங்களில் அலைந்து திருடனைப்போல் அவள் அறைகளில் தேடினேன். உள்ளே - அவள் இல்லை . 
அற்புத சிருஷ்டிகளின் இருப்பிடம் கண்டு திகைக்கையில் எதுவும் அவளுள்ளிருந்து வெளிப்படாமல் உள்ளே இருந்தன 

தூரத்தில் முனகலாகக் கேட்டது அவள்தானா என்று புரிய வில்லை . 
எதுவுமற்ற வெண்படலத்துக்குள் போய்க்கொண்டிருந்த பாதை. மண்புழுவென இருபக்கமும் அசைந்தது உயிர். ஜீவ னொளி போன்றே இவ்வெறுமையில் மின்னும் விந்தைப் பொழுது. விழையாமல் விழையும் வெளி; உயிர். ஆண்டா ளின் உயிரிடம் கண்டு அதிசயிக்க, 'வெளி' ரூபம் கரைந்து மெலிந்து கனமற்ற பனித் திவலையாய் என்மேல் விழுந்தாள். அவ்வுயிர் வியக்கத்தக்கவகையில் கூடவே இருந்து இரவு முழுவதும் தழுவி என் ஜடரூபம் மலர்ந்து காலையென உரு மாறியிருந்தது. மௌனமாய் எரிகிற மலர் ஒன்று - பனித் திவலைகளால் நிரம்புகிறது. 
இருளின் உள்ளே ஆண்டாள் இருந்த வீடு. காவி நிற மாடங் களில் புறாக்கள் 'இன்னும் மறையவில்லை. ஆண்டாளின் பசுக்கள் எங்கு மறைந்தன. கழுத்து மணி புலம்பிய பாதை களை தேடி வருவோம். ஆண்டாள் சென்று மறைந்த திசை களுக்கு அப்பால் கேட்கும் பாசுரங்கள். 
கிராமத்தின் ஆத்மாவில் ஆண்டாள். அவள் இருந்த மாட வீடு, செங்கல் வைத்து அடுக்கடுக்காக சட்டிவைத்த ஓவியம் போல். இரவில் அவள் வீடு, வசீகரஒளியுடன். நிலவு புகுந்த கருமேகம் பிளந்து ஆதி மகளிர். ஆதிமகளிர் சூழ ஆண்டாள் வருகிறாள். உயிரின் உள்ளே பாசுரம். இசையில் வளரும் உலகங்கள். ஆதிமகளிர் சூழ்ந்த நெருப்பு. குரவையிட்ட பாடல். 
நீல வண்ண பிந்து சூழ்கொண்ட வட்ட வெளி. இரவின் நீல நிறம் கிராமத்தை மூடியுள்ளது. மேற்கு மலைத் தொடரும் நீலமாய் எழுந்து உயிரைத் தொடுகிறது. பாசுரங்கள் பாடி வளர்ந்த பிராய காலம். ஆண்டாளுடன் கூடி விளையாடிய மார்கழி மாதம். வந்து வந்து மறையும் கண்ணாடி உள்ளே பசுக் கூட்டம். 
ஆண்டாளின் பசுக்கள் எல்லாம் தோட்டத்தில் மேய்கிறது. செடிகளுக்குள் பசுவின் முகம். இலைமறைவில் பசுவின் கண் கள் நீர் கசிந்து மறையும் யாருக்கும் தெரியாமல், பசுவின் முகம் அழியாத காடு. காட்டு ஓடையில் புலம்பும் புல்லாங் குழல். தம்மையறியாது கனியும் அன்பு. மார்கழி பொலி வுற்ற காடு. காடே அவள் மனசு. வேடன் அம்பில் வில்திறம் அதிர்ந்த கானகத்தே பறவைகள் தொகுதி: ஒலிக்கோடு. பகலில் உறங்கி இரவில் அலறும் மிரு கங்கள். மறைந்த நதி. ஆண்டாளின் தெருக்களில் மீண்டும் வருகிறது. மூளிக் கோபுரங்களில் வெளவாலின் குரல். உள்ளே சாஸ்வதமான உயிர் கள் வழி வழியாய் அடைந்து கிடக்கின்றன. 
ஆண்டாள் கோயில் கோபுர வாசலில் சிறு மிக ளும் பெண் களும் மறையவில்லை. பிரஹாரம் வேண்டிய பேரமைதியுடன் பூர்வகால ஸர்ப்பம் ஒன்று யுகங்கள் பல கடந்து வருகிறது. 
நாக சிற்பத்தின் அருகே புற்றொன்றில் தலைகாட்டி மறையும் ஸர்ப்பம், பால் வார்த்து வருகிறார்கள். வெளிப்பிரஹாரத்துக்கு அருகில் நாகலிங்கமரம். அதில் வாழும் ஸர்ப்பத்தின் குடும்பம். ஆண்டாள் பால் கொண்டு வந்த காலம். நாகலிங்க மரம் சாட்சியாக ஸர்ப்பத்தின் கோடுகள் கோயில் சுவர்கள் எங்கும். 
கனவின் ஆழத்துள் அழைத்தன ஸர்ப்பத்தின் கோலங்கள். வளைந்து வளைந்து ஆடும் விஷம் சுமந்த ஸர்ப்பங்கள். தேகமெங்கும்படம் விரிகோலம். விசும்பிய வால் மீதமர்ந்து சுருண்டு உள்ளே...வெகு தூரம் இழுத்தது. இருளானபாதை உள்ளே சுற்றிச் சுற்றி இறங்கும். ஆழத்தில் இருள் புரண்டு உள்ளிழுத்தது. ஒரு கணம் மௌனம். நினைவுகளின் சூட்சுமத் திரவம் ஒளிர்ந்து ஸர்ப்பம் ஒன்றின் பார்வை, உணர்வில் உயிரில் கலந்து ஒலிகளற்ற புயலில் உறைந்தது. உள்ளே கரு கருவென சிலைகள். 
ஒளி நடுங்கும் உள்தளத்தில் தழுவும் ஜீவகோடி விதைகள் எழுந்தன. ஸ்பரிசத்தின் ஒளித்திவலைகள் ரகஸிய மொன் றின் கருங்கோடுகளில் ஈரமாய்ப் படிகிறது. ஸர்ப்பத்தின் 
ஸ்பரிச லயம். எங்கோ மறைந்த ஆண்டாளின் பெண்மையுரு. . மாறாத புன்னகை. எங்கும் ஒளி ஊமையான மோனம். மன தின் கருமைபிளந்து உதடுகளின் துடிப்பு. அவள் தானா. கால நீர் புரண்டு வருகிறது. எல்லா வற்றின் மீதும் ஆண் டாள். என்னை , இழந்து மெலிந்து ஒளித்திவலைகள். உள் வட்டக் கண்ணாடியில் கூட்டமாய் ஸர்ப்பங்கள், 
ஆழ்ந்த இருளில் மகுடி சுழன்றது. மகுடியின் தீவளையம் ஸர்ப்பத்தில் ஆடியது. சிலைகள் எழுந்து நின்றன. உள்ளே இருளில் நகரும் ஸர்ப்பங்கள். 
பொந்தை விட்டு வெளியேறி நகரும் பாதையில் சௌனக முனியின் ஸர்ப்பயாகம் நடந்து கொண்டிருந்தது. யாக குண் டத்தில் வீழ்ந்த ஸர்ப்பங்கள் எழுந்த தீயில் ஆடி வெளியேறு கின்றன. வேதவியாசனின் புற்றில் உயர எழுந்து தவமான ஸர்ப்பம் கமண்டலத்தில் சுற்றி புராணம் கடந்து வருகிறது. கலையைத் தீண்டி அழிவற்ற ஸர்ப்பம் காலகாலமாய் ஆண்டாள் கோயில் 
பிரஹார இருளில் கருங்கோடுகள் வரைகிறது. கோடுகள் அதிரும் ஆழத்தில் கல் லில் எழுந்த சிற்பகூடம். இசைவடிவ ஸர்ப்பம் திசைகளில் எழுந்த மோன நிலை. 
காற்றில் கலந்த மழையின் குரலில் ஆதி மகளிர் சென்ற பாதை , நிலம் ஆதியின் யோனி. ஒவ்வொரு அணுவிலும் அவள் அதிர்வு. உள்ளே கருமை புரண்டு சீறும் ஸர்ப்பங்கள்., 
மழை பில் நனைந்த தெருவில் இருந்து வரு கிறார்கள். எங்கள் காவி நிற மாடங்களில் புறாக்கள் இன்னும் மறையவில்லை. 
ஆண்டாள் விஸ்வரூபமோகினி. அவளைப் பார்க்காமலே ஒரு ) தனித்த சுரம் சிதைந்த ராகம் எங்கள் தெருவில். 
மார்கழி முழுவதும் ஆண்டாள் வளைந்து வளைந்து விளையாடுகிறாள். பெண்கள் வாசல் முழுவதும் கோலமிடு கிறார்கள். 
அவள் கல் மடந்தை, சிலை ஒன்றின் ஆழத்தில் நெஞ்சறுக்கும் பெண்சோகம், கோபுரத்தை அண்ணாந்த பார்வையில் தொண்டைக்குள் வலியை உணரும் போதெல்லாம் எங்கேயோ கோயில் அம்பலத்தில் வயதானவர்கள் பாடிக்கொண்டிருந்த ஆண்டாள் பாசுரங்கள். மூளிக் கலசங்களில் மோதும் சிறகு களோடும் காதல் தேக்கிய கண்களோடும் எங்கள் காவி நிற மாடங்களில் புறாக்கள் மறையவில்லை. 

0 0 மதுரைக்கு வந்த ஒப்பனைக்காரன் 

பட்டினியும் வறுமையும் பின்துரத்த மவுண்ட் ரோட்டில் புதுமைப்பித்தன் மதுரைத் தெருவில் ஒப்பனைகள் கலைத்தெறிந்த ஜி. நாகராஜன் நிரந்தரத் தற்கொலையில் வாழ்ந்துகொண்டிருக்கும் " ஆத்மாநாம் இந்த விதிகளுக்கு அப்பால் எழுதப்படாத சரித்திரத்தில் 
அலைந்து கொண்டிருக்கிறான் ஒப்பனைக்காரன். சுண்ணாம்புக்காரத் தெருவில் நாடகக்காரி இருந்தாள்: கொழும்பு மலேயா வரை அவளோட புகழ் பரவியிருந்தது. அவளுக்கு ஒப்பனை செய்யும் யுவனொருவன். சாஸ்திரம், இசை, ஓவியம் பயின்றவன். பல நாடகங்களை யார்த்தான். கல்கத்தாவின் வீதிகளில் அவனைப் பற்றி பரவியது. பர்மா, மலேயாவுக்கு கம்பெனி சென்ற சமயம் அங்கும் பல நாட்க குழுக்கள் தோன்றின. மீண்டும் நாடகங்கள் எழுத வசனகர்த்தா எழுத்தாளியை தீட்டுகிறார். திறந்த ஏடுகளில் நாடகங்கள், பாடல்கள், 
சரித்திர முக்கியத்துவம் பெற்றன. மிருச்ச கடிகம் - வட மொழியிலிருந்து 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் தமிழாக் கம் செய்து அரங்கேறியது. நாடகாசிரியன் சூத்ரகன் எனும் அரசன் சிருஷ்டித்த பாத்திரங்கள், சூத்திரதாரன் - நடி விதூஷகன் - சாருதத்தன்- வசந்தசேனை என்று. யுவனின் ஒப்பனையில் இரவுகள் மெல்ல நகர்கின்றன. கம்பெனி கொடி கட்டியது. 
சந்திரமதி வேடம் பூண்டுச் லோகிதாசனை சுடுகாட்டுக்கு கொண்டு வருகிறாள். புத்திர சோகத்தில் சந்திரமதி. பிணந் தள்ளும் கோலுடன் அரிச்சந்திர மகராசன் எரிக்க பணம் கேட்டு வாதிடும் காட்சி. 
குடிகார கோவிந்தன் விஸ்வாமித்ர முனிவராய் இரவில் வந்து நிற்கிறான் சீலைகள் காற்றிலாடுகின்றன. பிணம் எரிகிறது. சடலங்கள் எழுந்து ஆட ஆட தீமூண்டுஎரிகிறது பாடல். மயானகாண்டம் உச்சக்கட்டம். 
விடிவெள்ளி முளைத்து அரிச்சந்திர நாடகங்களுக்கு அருகே சரிந்து கொண்டிருந்தது. மேடைகளில் சரியும் நட்சத்திரங் களைப் பார்த்து வருகிறார்கள் ஒவ்வொரு காலமும். 
சந்திரமதியானவள் நாடகம் ஓய்ந்த வீதிகளில் பிச்சை யெடுத்து வருகிறாள். மலார் ராகம் ஓய்ந்தது. கடல்கடந்த காலம் மறைந்தது. ஒப்பனைக் காரன் யுவம் இழந்தான். பதி னெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் வளையத் துவங்கிய அவன் மூக்கு பெரிதாகி சுருண்டு கருத்துப் போனது. 
பிச்சைக்கிழவியான பழைய நாடகக்காரியின் பிரேமையினால் கிழவன் பழைய யுவன் போல் ஒப்பனை கொண்டான். திப்பு வின் சட்டை அணிந்து கொண்டான். 'வீரன் திப்புசுல்தான்' நாடக ஒப்பனை. திப்புவின் தொப்பி • பழுதான தொப்பி. தொப்பிக்கு அழகாக கோழி ரோமங்களை நட்டி குஞ்சம் அமைத்தான். வெள்ளி மீசையென்றாலும் திப்புவின் வீரம் துடிக்கும். வாய் திறந்தால் வசனம். வெள்ளைப் பரங்கியரை வாள் கொண்டு துண்டித்த வாய் வீச்சு. 
சுய எள்ளலாய் கிழப்புன்னகை உதட்டின் ஓரங்களில் மீசை யும் சேர்ந்து சிரிக்கும் கண்ணுக்கு அழகான கிழவனவன். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேடம் தரித்து மதுரை வீதி களில் தோன்றினான். உடை வாளை உருவியபடி வேகமாய் நடந்தான். நாடகச் சுவடிகள் சுமந்து செல்லும் ராவுத்தன் குதிரை. கம்பீர சுல்தான் நடை. அவன் வளைக்குள் புகுந்த பெருச்சாளிகளைப் பற்றி சிந்தைவயப்பட்டிருந்தான். 
பல ஒப்பனைகளில் பெருச்சாளிகள் வரும் இரவுகள்...சுவடி களை கடத்திச்செல்லும் பழுதான துணிகள் ராஜாவின் சட்டை மந்திரியார் வேஷ்டி. சீமான்கள் வேஷத்தில் பெருச்சாளிகள் நடமாட்டம். சேகரித்த பாடல்களைப்பாடும் பெருச்சாளிகள். சுவடிகள் மேல் மோகம். பழமையில் மோகம். அதிநவீன பெருச்சாளிகள் சுவடிகளை கரைத்துக் குடித்தன. - , 
பெருச்சாளி கடித்த வஸ்திரங்களை மூட்டித் தைப்பது ஊசி நூலின் வேலை. ஏடுகளைக் கொரிக்கும் நவீன பெருச்சாளி களை நகரின் மேல் ஏவுகிறது கிழவனின் மந்திரப் புல்லாங் குழல். நெடுங்காலம் அது. மதுரை நகரம். விளக்குகள் ஏற்றிய இரவு. கிழவன் தனிமையில் பாடுகிறான். மூப்படைந்த அவன் மூக்கு பாபகெனோ படைப்பில் வரும் பறவை மனிதனைப் பாடும். கோட்டை - நடனமண்டபம் 
அரண்மனை இரவு- நதிக்கரை காட்சிகள் - நாடகத் தெரு ஸ்கிரீன்கள் எல்லாம் கிழிந்தன. அவன் பாடலில் வரும் யுவன் நகரங்களுக்கு மேல் பறந்து பார்க்கிறான். இசைக்குழு கோரஸ் பாடுகிறது. 
நூற்றாண்டுகள் அடுக்கி வைக்கப்பட்ட ஒப்பனைக்காரன் . வீடு. திரைச் சீலைகளில் வரைந்த சித்திரங்கள். பாய்ஸ் கம்பெனி இசைக்குழுவின் போட்டோ. மீசை கிருதாவுடன் தோன்றும் பழைய நடிகர்கள் . நாடகக்காரி ரங்கூனில் வைத்து எடுத்த படம். பழுதடைந்த யுவன் இவர்களுக்கு நடுவில் அமர்ந்திருந்தான். ஒப்பனைப் பொருட்கள் நிறைந்துள்ளன. நாடகம் போட அழைப்பு வருமென்று நப்பாசையில் கிழவன் காத்திருக்கிறான். 
அதுவரைக்கும் எல்லா ஒப்பனைகளிலும் தன்னைப் பார்த்துக் கொண்டான். வெயில் கிளம்பும் வேளை நாடகத்திற்கு ஆயத்தம் நடக்கும். வசனங்கள் தலைகீழ் பாடம். பெரிய கஞ்சப்பிரபு வேடம் தரித்துக் கொண்டான். அதைக் கலைத்து விட்டு சற்று நேரம் ஓய்வு . பின் அடுத்த ஒப்பனை. புராணிக வணிகன் தோன்றினான். 
மதுரை நகருக்கு அதிசய வணிகன் வந்திருக்கிறான். நகருக் குள் பரபரப்பு. 
கிழவனின் சின்ன குடிசை. மண் சுவர் பதித்த நிலைக் கண்ணாடி, கண்ணாடி முன் அதிசய வணிகன் .பல தேசங்கள் கடந்து வருகிறான். வெளி நாட்டு மீசையை எடுத்து பெரிய மூக்கில் இணைத்து மூக்கால் பேச தொடங்குகிறான். 
வாத்தியக் கருவிகள், பின்னணி இசை முழங்க நகருக்குள் வணிகன். ஒவ்வொரு எட்டிலும் ஹார்மோனியத்தின் குரல் அதிகரிக்கிறது. 

ஏலம் விடவேண்டியவை மூட்டையாகி கட்டித்தூக்கிக் கொண்டு போகிறான். ஏலம் வி டுவ து வ ணி என் தொழில். சீமானைப் போல் ஐ ரிகைக்கரை வேஷ்டி மின்னுகிறது. ஜன நடமாட்டம் அதிகமான பகுதிகளில் வணிகன் நடமாடு கிறான். தெருவில் போவோர் அவனைக் கடந்து செல்ல முடியாது. எதிரே முகவெட்டை பார்த்ததுமே சொல்லிவிடு வான் வருவது யாரென்று. முற்பிறப்பை சொல்லும் வணிகனின் நிமித்தகம். 
தமிழன் மானம் காத்த புலவனைய்யா நீர் என்பான். இவர் தானய்யா குதிரைவீரன், தக்காண இளவரசி' சாந்த் பீபியின் குதிரைலாயத்தில் குதிரைகளுக்குச் சேணம் கட்டியவன். அய்யா கவிஞரே வருக... நீங்கள் பாடினதால் குதிரை தின்ற மேய்ச்சல் நிலங்கள் வளர்ந்தன. கவி பாடப் பாட புல் வளர்ந் தது பாண்டிய நாட்டில். 
டவுன்ஹால் ரோட்டில் வணிகன் நடந்து கொண்டிருந்தான். அவன் முதுகில் செல்லும் சுமையில் ஏராளமான ரகஸியங்கள். வணிகனின் கையிலிருந்த உடைவாள் தவறி விழுந்து விட்டது, குனிந்து எடுக்கிறான். இது என் பரம்பரை வாள், பரம்பரை மீசை என்று கூவுகிறான். வழி நடை வியாபாரிகள் இரைச்சல். சந்தியை அடைகிறான். 
அதிசயங்கள் எல்லாம் ஏலத்தில் விடுகிறேன். எதை வேண்டு மானாலும் கேளுங்கள். துணி பொம்மையை எடுத்து ஆட்டு கிறான். இதோ அரிமர்த்தன பாண்டியன் எனக்களித்த முத்து மாலை. வைரம் பதித்த கிரீடங்கள். கோவலன் கொண்டு வந்த சிலம்பு. இரும்புத் தொப்பிகள். பரங்கியரின் துரோகத் துப்பாக்கிகள். இதைப் பாருங்கள், ஜெர்மன் நாட்டு புஸ்தகங் கள், களிமண் ஊசிகள், முடிதிருத்தும் கருவிகள் கட்ட பொம்மு பிச்சுவா, புலித்தேவன் பிடித்த வாள், அரச வஸ்தி ரங்கள், ஆபரணங்கள், பகல் வேஷக்காரனின் முகமூடிகள். இரும்பு முகமூடிகள். ராஜதந்திரிகளின் சதியில் பயன்பட்ட தூதுச் சுவடிகள். சங்கேத பாஷைகள் அடங்கிய ஏடுகள், வானசாஸ்திரம், தத்துவம், சரித்திரம் படைத்த பொம்மைகள், உலகயுத்தம் ஒடித்த ஊசிகள், பீரங்கி மூக்குகள், மதுரை எரிந்த சாம்பல் கிண்ணங்கள், மண்டையோட்டு அதிசயங் கள். மாயக்குரங்காட்டி சொல்லடா சொல்லு! மதுரைக்கு வந்த சேதியை சொல்லடா சொல்லு! மரப்பாச்சி குதிரைப் படை யானைப்படை. யானை வேணுமா குதிரை வேணுமா? எதை வேண்டுமானாலும் வாங்கலாம்! விலை சகாயம். 
கூவி விற்கிறான் கிழவன். பாதசாரிகளை வழிமறித்து முதுகை பின்னுக்கு வளைத்து வணங்கி வரவேற்கிறான். அவன் பேச்சு சாதுர்யத்தால் கூட்டமே நிற்கிறது. வியந்த கண் இமை விரித்து நிற்கிறது. 
எல்லாம் உங்களுக்கே! எழுத்தாணிகள் வேண்டுமா.- புலமை வாய்ந்த எழுத்தாணி. ஒட்டக்கூத்தன் பிடித்த எழுத்தாணி . விலை மலிவு . காலத்தை திறந்து காட்டும் பேனா வேண்டுமா. கவிஞன் பேனா, கட்டியம் கூறும் பேனா, நாட்டின் நெம்புகோல் பேனா, விலை சகாயமான பேனா சார்! நக்கீரன் பேனா சார். அரசியல் பேனா சார், சிகப்பு பேனா சார், பேனாவுக்குள்ள என்னருக்கு சொல்லடா சொல்லு! பேனாவுக்குள்ள பூதமிருக்கு ; அற்புத பெண் இருக்கு; கேளுங் கள். ரூபாய்க்கு ரெண்டு பேனா சார்! உங்களுக்கு வேண்டிய முகமூடிகள் முகத்தை மூடும் இரும்பு முகமூடிகள். திறந்த முகத்தை மூடும் முகமூடிகள் இத்தனை யும் உங்களுக்கே என்ன விலை.... கேளுங்கள்... வாங்க சார் வாங்க! 
விளக்குகள் ஏற்றிய மதுரை வீதி. எங்கும் ஒப்பனை கலைந்து முகம் வீடு திரும்பும். டவுன்ஹால் ரோட்டில் விபரீத வியா பாரங்கள். கிழவனின் ஏலவிளக்கு எரிகிறது. விளக்கின் அடியில் விலைபோகாத நிழல்கள்! எல்லாப் பொருளும் ஏலத் தில் எடுக்கலாம். கிழவன் களிக்கூத்தாடுகிறான். கூட்டம் நிரம்புகிறது; தேவையான பொருட்களை வாங்கிக் கொள் கிறார்கள். பழைய பொருள் மேல் மோகம். கொலுவில் வைக் கும் பொருள், விநோத பொருள், வேண்டாத பொருள் மேல் புது மோகம். எல்லாமே விலை போகும். நாடகமாடி முடித்த மதுரை. அன்று அரங்கேறிய நாடகங் கள். விளக்கேந்திய காவலர்கள். தீப்பந்தம் ஏற்றி வைத்த கிராமத்தில் ஓலைக் கொட்டகையில் கிருஷ்ணலீலா பவளக்கொடி நல்லதங்காள் கோவிலன் கதைகளுக்கு போட்ட ஒப்பனைகள். இரவில் வந்துபோன கதாபாத்திரங்கள். ஸ்திரீ பார்ட் வேஷங்களில் நடன சங்கீதம். திரைச்சீலைகள் அசை கின்றன. காட்சிகள் மாறுகின்றன. ஹார்மோனியம் கண்ணுச் சாமிபிள்ளை அடுத்த கட்டத்திற்கான சுதியை ஏற்றுகிறார். தைல விளக்குகளுக்கு எண்ணை ஊற்றுகிறார்கள். 
ஒப்பனைக் கண்ணாடியில் எரியும் தீப்பந்தம். வெளிச்சத்தில் அர்ஜுனன் தருமன் துரியோதனாதிகள் கிருஷ்ணன் எல்லா ரும் வசனங்களை பேசிக் கொள்கிறார்கள். பாஞ்சாலி சேலை யுடுத்திக் கொண்டிருக்கிறாள். துச்சாதனன் பாஞ்சாலியோடு வசனங்களை ஒத்திகை பார்த்துக் கொள்கிறான். பாரதியின் பாஞ்சாலி சபதம். ஜனக்கூட்டம் உற்சாகமடைகிறது. நாடகாசிரியர் நோட்டுப் புஸ்தகத்திலிருந்து அடுத்த கட்டத்துக்கான உச்சரிப்பு அடை யாளங்களை எச்சரிக்கை செய்கிறார். 

ஒப்பனை மேஜை மீது ஆராணங்களும் வஸ் திரங்களும் பட்டு உடைகளும், பவுடர் சாயங்கள், ஒட்டுத் தாடி. நரைமுடிகள். சதனியாமாவுக்கு ஒப்பனை நடக்கிறது. ஒப்பனைக்காரன் ஆழ்ந்து ஈடுபட்டு மு.வடிவு உருவம் அணிகலன்கள் என்று சிருஷ்டியில் இருக்கிறான். 
மேடையேறிய பாஸ்கரதாஸின் நாடகங்களுக்கு உயிர் கொடுத்த ஒப்பனைக்காரன். எம்மெஸ் விஸ்வநாததாஸ் குடிகார கோவிந்தன் டிகேயெஸ் சகோதரர்கள் நடித்த பாஸ்கர தாஸின் பாடல்களை அன்று பாடாதவர்களே இல்லை . தேசீயம் பற்றி... விடுதலை பற்றி .. பஞ்சாப் படு கொலை பற்றி... காந்தி பற்றி... பகத்சிங் வீரம் பற்றி பாடல் களோடு ஜனக்கூட்டம் அலையென எழுந்தகாலம். 
நாடகம் ஓய்ந்த வீதிகளில் ஒருவன் பாடிக்கொண்டு போகி றான். அரங்குகளுக்கு வெளியேயும் பாடல்கள். முதல் முதலில் தீவிர காங்கிரஸ் தொண்டனுக்கு ஒப்பனை செய்து கொண்டிருந்தான் கிழவன். பகத்சிங் நாடகம் திப்புவின் வீர வரலாறு கட்டபொம்மு புலித்தேவன் கதை எல்லாவற்றுக்கும் ஏற்ற ஒப்பனை நடந்தது. ஒப்பனைக்குரியவை துப்பாக்கிகள் ஈட்டிகள் சுடுகருவிகள் ஒவ்வொன்றையும் கிழவன் கொண்டு வந்தான். 
சரித்திரத்தில் எழுதப்படாத சித்திரமாய் போய்க் கொண்டி ருந்தான் ஒப்பனைக்காரன்... கால தேச வர்த்தமானங்களில் செல்லாத வேஷங்கள் எல்லாம் வேடிக்கை காட்டும் குரளி வித்தை போலும். 
அந்த இரவுகளில் திரைச்சீலைகளுக்குப் பின்னால் லாந்தர் ஒளியில் அவன் செய்த முகங்கள் ஒவ்வொருவரும் அவனுடன், நாடகங்களில் உருவான உற்சாக கட்டங்களை அடைந்தான் கிழவன். திப்புவின் சட்டைக்கு உயிர் வந்தது. ஒப்பனைகள் எல்லாம் சரித்திரம் பேசும் அவனிடம். 
இரவானதும் கிழவன் விடு திரும்புகிறான். அவனிடம் எந்த துயாமும் பாவங்களாய் மாறுகிறது. ஏலவிளக்கேந்திய படி இருளில் போகிறான். ஒப்பனைக்காரன்... பெரிய பெரிய நிழல்களோடு நகர்கிறது ஏலவிளக்கு.