Pages

Wednesday, October 09, 2019

சக் - மூல் - கார்லோஸ் ஃபுயன்டஸ் தமிழில் : நாகார்ஜுனன் ::: லத்தீன் அமெரிக்க கதைகள் ( ஆர். சிவகுமார் தொகுப்பு)

சக் - மூல் - கார்லோஸ் ஃபுயன்டஸ் தமிழில் : நாகார்ஜுனன்
கார்லோஸ் ஃபுயன்டஸ் மெக்சிகோவின் முன்னணி எழுத்தாளர். ஐம்பதுகளில் எக்சிஸ்டென்ஷியலிசம் கோலோச்சிய பாரிஸின் ரெஸ்டாரெண்டுகளில் கடனுக்கு டீ சாப்பிட்டு வாழ்ந்த சில லத்தின் அமெரிக்க இலக்கிய நண்பர்களிடையே எழுதத்துவங்கியவர். அப்போது இவருடன் இருந்தவர்கள் கார்சியா மார்க்யுஸ், ஜீலியோ கொர்டஸார் மற்றும் ஜோர்ஜ் சுமடோ. நாவல் என்கிற மேற்கத்திய இலக்கிய வடிவத்தை மாற்றி அமைப்பதாக இந்த நண்பர்கள் பேசிக்கொண்டு, கடைசியில் விக்கிரமாதித்தன் கதை போன்ற நாவல் வடிவத்தை எய்தினார்கள். இவருடைய நாவல்கள் The death of Artemio cruz, A change of skin, Where the Air is clean, Aura மற்றும் Distant Relations. சிறு கதைத் தொகுப்பு: Burnt water' கதைகளில் சிலபாத்திரங்கள் மீண்டும் மீண்டும் வருவனவாகும்.
அப்புறம் இவர் லத்தீன் அமெரிக்க நாவல் பற்றிய விமரிசன நூலில் எழுதுகிறார்: ''ஐரோப்பாவைப் போலல்லாமல் எங்கள் கண்டம் பிரம்மாண்டமான நதிகளையும், ஏறமுடியாத மலைகளையும் கொண்டது. அது எப்போதும் வெடிக்கக் காத்திருக்கிறது.'' - அமெரிக்க வல்லரசின் மூர்க்கத்தனமான தலையீட்டால் பல லத்தீன் அமெரிக்க நாடுகள் தாக்கப்பட்டு வருவதைக் கண்டிக்கும் ஃபுயன்டஸ் அமெரிக்க பல்கலைக் கழகங்களில் பணியாற்றியவர். தற்போது பத்திரிகையாளராக இருக்கிறார்.103 - 
*************************************************************************
எனக்குச் சொந்தமாக ஒரு கற்பனையான பலமாடிக் கட்டிடம் மெக்சிகோ நகரத்தில் உள்ளது. அதன்மேல் மாடியில் அர்டேமியோ க்ரூஸ் என்ற பழைய புரட்சிவாதி இருக்கிறார். இப்பொது வியாபாரி. அடித்தளத்தில் ஆரா என்ற சூனியக்காரக் கிழவி வாழ்கிறாள். இடையிலுள்ள தளங்களில் இந்தக் கதைகளில் வந்து போகும் மனிதர்களை நீங்கள் காணக்கூடும். அதில் சிலர் இப்போது நாட்டுப்புறத்துக்குச் சென்றிருக்கலாம்; வெறு சிலர் வெளிநாடுகளுக்குப் போயிருக்கலாம்; பலர் விரட்டப்பட்டிருக்கக்கூடும்; பதினேழு மிலியன் ஜனத்தொகையுள்ள, அழுக்கும் கார்ப்புகையும் படிந்த இந்த நகரத்தின் வறுமைப்பகுதிக்கு அவர்கள் போயிருப்பார்கள், இப்பகுதி கிடுகிடுவென்று வளர்ந்து, இருபதாம் நூற்றாண்டின் இறுதிக்குள் மெக்சிகோ நகரம் என்பது உலகத்திலேயே பெரிய நகரமாகிவிடும். குறைவளர்ச்சியின் தலை நகரம். 
என் கற்பனைக் கட்டிடமும் இதற்கேற்றபடி சேற்றுக்குள் வேகமாகப் புதைந்து கொண்டு வருகிறது. இந்தப் புதைச் சேற்றுக்குள் தான் சக்-மூல் என்கிற ஈரமான சிவப்பிந்தியக் கடவுள் இருக்கிறான். இவனை வணங்கும் அஸ்டெக் குடிகளால் 1325-ல் அமெரிக்கக் கண்டத்திலேயே பெரும் நகரமாக இது ஸ்தாபிக்கப்பட்டது. அதை அவர்கள் டினோச் டிட்லான் என்று அழைத்தார்கள். பின்பு 1521-ல் ஸ்பானியர்கள் இந்த ஊரைக் கைப்பற்றி சுற்றியிருந்த ஒரு பழைய ஏரியின் எரிந்த தண்ணீரின்மேல் மெக்சிகோ நகரத்தை நிர்மாணித்தனர். இந்த நகரத்துக்கு எரிந்த தண்ணீர்தான் குறியீடாகிறது. எரிந்த தண்ணீர்-ஆம்! வாழ்க்கையின் ஆக்கத்துக்கும் அழிவுக்கும் இதுவே காரணமாகும். இதனால்தான் ஒரு மெக்சிகன் --வாழ்வையும் சாவையும் பிரித்துப்பார்ப்பதில்லை.
'Burnt Water' என்ற தன் சிறுகதைத்தொகுதிக்கு கார்லோஸ் ஃபுயன்டஸ் எழுதிய முன் குறிப்பு.105 
********************************************************************
சக் - மூல் 
சமீபத்தில்தான் ஃபிலிபர்ட்டோ அகபுல்கோவுக்கு அருகில் கடலில் மூழ்கிப்போனான். ஈஸ்டர் வாரத்தில் அது நடந்தது அரசாங்க வேலையிலிருந்து நீக்கப்பட்டிருந்தாலும் கூட ஒரு நிறுவனவாதிக்குரிய நப்பாசை அவனுக்கு இன்னுமிருந்தது. அதனால் வருஷத்துக்கு ஒரு முறையாவது அகபுல்கோவிலுள்ள கடற்கரைக்கு போகும் பழக்கத்தை அவனால் விடமுடியவில்லை. அங்கே அந்த ஜெர்மானிய முல்லர் பெண்மணி நடத்தும் விடுதியில் வியர்வையால் இனிப்பாக்கப்பட்ட பதார்த்தங்களை உண்டு, 'புனித சனிக்கிழமை'யை லாக்வெப்ரடாவில் அனுபவித்து நடனமாடி, ஹோர்னோ கடற் கரையில் மங்கிய, தனிமையான மாலை நேரத்தைக் கடத்திவிடும் மனிதர்களில் ஒருவனாக தான் இருக்க வேண்டும் என்ற ஆசையைப் பூர்த்தி செய்ய வேண்டும். இதையெல்லாம் செய்து விட்டு அவன் தூங்கப்போகாமல் நீந்தச் சென்றிருக்கிறான். இளைஞனாக இருந்தபோது அவன் நல்ல நீச்சல்காரனாக இருந்தது நமக்கெல்லாம் தெரிந்தாலும், நாற்பது வயது உடம்பை வைத்துக்கொண்டு, ஃபிலிபர்ட்டோ இரவு நேரத்தில் கடலுக்குள் தொலைவாகச் சென்றது தவறுதான். 
அந்த அகால நேரத்தில் ஃபிலிபர்ட்டோவின் உடல் கொண்டுவரப்பட்டபோது அந்த முல்லர் பெண்மணி எதுவுமே நடக்காதது போல மொட்டைமாடியில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த பின்னிரவு நடன நிகழ்ச்சியொன்றைக் கவனித்துக் கொண்டிருந்தாள். ஃபிலிபர்ட்டோ வெளிறிய முகத்துடன் பார்சல்களுக்கும், ஒரு டப்பாவுக்கும் இடையில் கிடந்த சவப் பெட்டியில் கிடந்தவாறே தன் புதிய வாழ்க்கையைத் துவங்கியிருந்தான். காலையில் வரும் முதல் பஸ்ஸில் அவன் போக வேண்டும். 
- பார்சல்களை வண்டியில் . ஏற்ற நான் அங்கே போன -போது, பஸ் டிரைவர் ஃபிலிபர்ட்டோவை சாமான்கள் வைக்குமிடத்தில் 'சீக்கிரமாகவே ஏற்றி விட்டிருந்தான். பிரயாணிகள் உடலைப்பார்த்துக் கலவரம் அடையக் கூடா -தல்லவா? கடைசியில் தேங்காய்க்குலைகள் ஏற்றப்பட்டபோது ஃபிலிபர்ட்டோவின் முகம் முழுவதும் மறைந்துவிட்டது. சாமான்களுக்கு மேல் ஒரு கான்வஸ் போர்வை கிடத்தப் பட்டது. 
பஸ் கிளம்பும் போது ஈரமான காற்று வீசினாலும், டியரா கொலராடோவை நெருங்கும்போது மிகவும் வெம்மையாகி விட்டது. நான் சில ஸாஸேஜ் துண்டங்களைப் புசித்தவாறே ஃபிலிபர்ட்டோவின் அந்தரங்கப்பையைத் திறந்து பார்த்தேன், இருநூறு பெசோ பணம், காலாவதியான லாட்டரிச்சீட்டுகள்,  - அகபுல்கோவுக்கு ஒருவழி. (?) டிக்கட், அப்புறம் மலிவான, - - பைண்ட் செய்யப்பட்ட ஒரு நோட்டுப்புத்தகம். -- 
சாலையின் வளைவுகளையும், குடலைப்பிடுங்கும் 'நாற்றத்தையும், இறந்துபோன நண்பனுடைய அந்தரங்க வாழ்க்கை - மேல் தோன்றும் இயல்பான மரியாதை - உணர்வையும் பொருட்படுத்தாமல் நான் அதைப்படிக்கத் துவங்கினேன். - டைரிபோல் எழுதப்பட்டிருந்த அதைப்படித்தால் அவனைப் பற்றிய ரகசியங்கள் விளங்கலாம். ஃபிலிபர்ட்டோ வேலையிலிருந்து நீக்கப்பட்டு பென்ஷன் கூட இல்லாமல் போய்விட்ட கதை கூட தெளிவாகலாம். -
0

இன்று பென்ஷனுக்காக வக்கீலைப் பார்த்தேன்; : - சுமுகமான சந்திப்பு. அங்கிருந்து கிளம்பும் போது சந்தோஷமாக  -  உணர்ந்ததால் ஒரு ஓட்டலுக்குச் சென்று ஐந்து பெசோக்களைச் செலவு செய்வது என்று முடிவு செய்து . கொண்டேன். நாங்கள் இளைஞர்களாக இருந்தபோது போகும் அதே இடம்தான். (இப்போதெல்லாம் நான் : அங்கே . போவதில்லை) அந்த நாட்களில் வாழ்க்கை இதைவிட நன்றாகத் தான் இருந்தது. அனைவரும் ஒருவரையொருவர் விட்டுக் கொடுக்காமல் இருந்தோம். அப்போதே எங்களில் சிலர் வாழ்க்கையின் மேல் தளத்துக்குச் செல்லக் கூடியவர்கள் என்று எனக்குத் தெரிந்திருந்தது. ஆனாலும் நட்பின் உறுதியால், பெரிய சோதனைகளைக் கூட சேர்ந்தே சமாளிப்போம் என்று. . நம்பினேன். உண்மையில் அப்படி எதுவும் நடக்கவில்லை....... யாராவது ஒரு ஆள் விதிகளை மீற வேண்டியிருந்தது... பலர் கீழே தள்ளப்பட்டோம்; சிலர் மட்டும் பார்ட்டிகளில் நாங்கள். - அரட்டையின் போது பேசி, நினைத்திருந்ததை விட வேகமாக --- முன்னேறினார்கள். அவர்களுக்கும் எனக்குமிடையே கண்ணுக் - -குத் தெரியாத சுவர் எழும்பிவிட்டது.'
"பழக்கமான. நாற்காலி ஒன்றில் உட்கார்ந்து  கொண்டு ஒரு பிஸினஸ் பேப்பரைப் - படிப்பதாக பாவனை செய்தேன். பல பழைய முகங்கள் தென்பட்டன. தூக்கம் கலந்தவை , - நியான் லைட் வெளிச்சத்தில் மலருபவை, சுபிட்சமடந்தவை. அவர்களில் பலரும் அந்த ஹோட்டல் அல்லது இந்த நகரத்தைப் போல மிக வேறொரு வேகத்தில் இயங்கிக் கொண்டிருந்தார்கள். என்னை அடையாளம் கண்டு கொள்ள அவர்களுக்கு அவகாசமில்லை. ஆனாலும் ஓரிருவர் முதுகில் தட்டி விட்டுச் செல்கிறார்கள்......." 
பழைய நண்பனே, எப்படியிருக்கிறாய் ? - 
ஓ, நமக்கிடையே கோல்ஃப் கோர்ஸின் பதினெட்டு ஓட்டைகள் இருக்கின்றன. தலையைப் பேப்பருக்குள் புதைத்துக் .. கொண்டேன். எதிர்காலத்தை நம்பி வாழ்ந்த வருடங்கள்  கண்ணெதிரே கலந்து சென்றன-அது கனவுதான். கடமையுணர்வுடன் பணியாற்றுபவனாக மாறியிருக்கிறேன்...அடிக்கடி ரில்க்கேவின் நினைவு வேறு அலைக்கழிக்கிறது: இளமையின் துடிப்புக்கு ஒரே பதில் மரணமாகத்தான் இருக்க முடியும். நம் ரகசியங்களை நம்முடனே வைத்துக் கொண்டு இறக்கவேண்டும் சட், இறந்திருக்க வேண்டும். இந்தக் கணத்தில் வியர்வை - கலந்த இந்நகரத்தைப் பார்க்க நான் இருக்க வேண்டாமே! - 
‘ஐந்து பெசோவா, இரண்டு பெசோ டிப்! '
0
நகரத்தின் கார்ப்பரேஷன் சட்டங்களை ஒப்பிப்பதைத் தவிர பெபேவுக்குத் தியரிகளை உருவாக்குவதிலும் ஆர்வம் இருக்கிறது. கதீட்ரலிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்த போது அவனைச் சந்தித்தேன். வழக்கமாக அவனுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. என்றாலும் அவன் ஒரு தியரியை முன்வைத்தான்: நான் மெக்சிகனாக இல்லாவிட்டால் ஏசுவை வழிபட்டிருக்க மாட்டேன். மேலும்... (அடடா, இது மிகவும் , நதர்சனமானது). ஸ்பானியர்கள் செவ்விந்தியர்களிடம் கூறினார்கள்: உங்களுக்காக சிலுவையில் அறையப்பட்டு உயிர் மரித்த கடவுளை வணங்குங்கள். (ஒரு சமயம்,  முஸ்லிம்களோ, பௌத்தர்களோ மெக்சிகோவைக் கைப்பற்றியிருந்தால் அஜீரணத்தால் மரணமடைந்த கடவுளை வணங்கி இருக்க மாட்டார்கள்!) ஆனால் இதுவோ ஒரு பலி. இதயம் ரத்த விளாறாகப் பிய்த்தெடுக்கப்பட்ட கடவுள்..." இந்தியர்களின்  ஹிஸிலோபோசிலிக்குச் சரியான மாறுதல். கிறித்துவம் இங்குள்ள பழைய மதத்துடன் சேர்ந்துவிடுகிறது. ஆனால் அன்பு, ஒரு கன்னத்தை அடித்தால் மறு கன்னத்தை காட்டுதல் என்பது நிராகரிக்கப்பட்டது. அதுதான் மெக்சிகோவின் ரகசியம்-ஒரு மனிதனை நீங்கள் நம்பவேண்டுமென்றால் முதலில் அவனைக் கொல்ல வேண்டும். அவ்வளவுதான்.
0
எனக்கு பழைய இந்திய கலைப்பொருட்கள் மீது மிகுந்த ஈடுபாடு உண்டு. இது பெபேவுக்குத் தெரியும். சிறிய சிலைகள், பாத்திரங்களைச் சேகரிக்க லாக்ஸ்கலாவுக்கோ, மேடி -ஹீகனுக்கோ நான் போவதுண்டு. இதனாலேயே பெபே சிவப்பிந்தியக் கதைகளுடன் என்னை இணைத்துத் தியரிகள் செய்கிறான். லா லாகூனில்லா மார்க்கெட்டில் சக்-மூலின் சிலை கிடைக்கிறது என்று சொன்னான். போய்ப் பார்க்க வேண்டும்.
0
ஆபீசில் யாரோ ஒரு மடையன் வாட்டர் கூலரில் சிவப்பு திரவத்தை ஊற்றிவிட்டான்.. புகார் செய்தால், டைரக்டர் இதை ஒரு ஜோக்காக எடுத்துக் கொண்டு கலாட்டா செய்கிறார்.
 0
இன்றைக்கு லா லாகூனில்லாவுக்குப் போய், பெபே குறிப்பிட்ட பழைய மலிவான கடையில் சக்-மூல் சிலையைக் கண்டெடுத்தேன். அழகான நுண்மையான சிலை. ஆனாலும் கடைக்காரன் ஒரிஜினல் என்று சாதித்ததால் எனக்குச் சந்தேகமாக இருக்கிறது. அதன் வயிற்றில் தக்காளிச் சாற்றைப் பூசியிருக்கிறான், டூரிஸ்டுகளை ஏமாற்ற! சிலையை வீட்டுக்கு கொண்டுவருவதே பெரும்பாடாகப் போய் விட்டது. தற்காலிகமாக ஸெல்லரில் போட்டு வைத்திருக்கிறேன். சூரிய வெளிச்சம் படும் இடமாக வைக்க வேண்டும். இல்லா விட்டால் அது ஜடப்பொருளாக ஆகிவிடவும் கூடும். வெளிச் சம்மில்லாத ஸெல்லரில் அது என்னைப்பார்த்து முறைப் பதாகக் கூடத் தோன்றுகிறது. கடைக்காரன் கூட ஸ்பாட் --லைட் வெளிச்சத்தைப் பாய்ச்சி அதன் அழகை எடுத்துக் காட்டியிருந்தான்.
 0
திடீரென்று தூக்கத்திலிருந்து எழுந்தேன். தண்ணீர் பைப் வெடித்து விட்டது. சமையலறைக் குழாயைத்திறந்தே வைத்ததால் இருக்கும். அடடா, தரையெல்லாம் வெள்ளமாகி விட்டது .... ஸெல்லருக்கு உள்ளும் ஏகப்பட்ட தண்ணீர். சக்- மூலுக்கு ஏதும் ஆகவில்லை என்றே நம்புகிறேன். சூட் கேஸ் முழுவதும் நனைந்து விட்டது ... எல்லாம் வேலைக்குப் போக வேண்டிய சமயத்தில்தான் நடக்க வேண்டுமா -... மிகவும் நேரமாகி விட்டது.
0
குழாய் ரிப்பேர்காரன் வந்த போது அவனுடன் ஸெல்லருக்குள்ளே போனேன். சூட்கேஸ் கெட்டுப் போயி ருந்தது. சக் - மூலின் மேல் பாசி படிந்துள்ளது....
0
- நள்ளிரவு ஒரு மணிக்கு எழுந்தேன். பயங்கரமான முனகல் சப்தம் கேட்டது. கற்பனையாக இருந்திருக்கலாம்.
0
இரவுக் குரல் தொடர்ந்து கேட்கிறது. எங்கிருந்து என்பது தெரியாவிட்டாலும் பயமாக இருக்கிறது. ' 

- மீண்டும் தண்ணீர்க்குழாய் உடைந்து மழை நீர் ஸெல்லருக்குள் புகுந்து விட்டது. ஸெல்லரிலிருந்து தண்ணீரை பம்ப் செய்து எடுத்தார்கள். சக்-மூலின்மேல் முழுவதும் பாசி. கண்கள் மட்டும் அப்படியே இருந்தன. பார்க்க அழுக்காகவும் கோரமாகவும் இருந்தது. ஞாயிற்றுக்கிழமை போல நேரமிருக்கும் போது சுரண்டிச் சுத்தம் செய்ய வேண்டும்.
0
 பெபே முதல் மாடிக்கு வீட்டை மாற்றிவிடச் சொல்கிறான். அடித்தளத்தில்தான் தண்ணீர் புகுந்து விடுகிறதே. ஆனாலும் என்னால் இந்த வீட்டை விட முடியாது. என் முன்னோர்களின் ஒரே ஞாபகமாக இந்த வீடு இருக்கிறது. 'இதே இடத்தில் ஒரு சோடா ஃபவுன்டனும், ஜுக் பாக்ஸும், ஒரு அலங்கரிப்பு சாமான் கடையும் வந்துவிட்டால் நான் மிகவும் வருத்தமடைவேன்.
ஒரு துண்டை வைத்து சக்-மூலைச் சுத்தம் செய்தேன். ஆனால் பாசி கல்லுடன் பல இடங்களில் ஒட்டிக் கொண்டு விட்டது. துடைத்து முடிப்பதற்குள் ஆறு மணியாகிவிட்டது ...... இருட்டில் சிலை தெரியாவிட்டாலும் அது கொஞ்சம் நெகிழ்ந்து விட்டது போலவே உணர்ந்தேன். கடைக்காரன் என்னைச் சரியாகத்தான் ஏமாற்றியிருக்கிறான். இது ஒன்றும் சிவப்பிந்தியர்களின் சிலையல்ல ... வெறும் பிளாஸ்டர்தான். ஈரம் பட்டதும் சாயம் வெளுத்துவிட்டது ... பழைய துணியைப் போட்டு மூடி வைத்திருக்கிறேன். முழுவதும் கரைவதற்குள் மேலே கொண்டுவர வேண்டும் ...
0
துணி கீழே கிடந்தது. நம்ப முடியவில்லை. மீண்டும் சிலையை அழுத்திப்பார்த்தேன். கல்லைப்போல இல்லை. இதை எழுதுவதற்கு தயக்கமாக இருக்கிறது: சில இடங்களில் ரப்பர் மாதிரி மிருதுவாக இருந்தது - இரவு மீண்டும் போய்ப் பார்த்தேன். சக்-மூலின் கைகளில் மயிர் இருந்தது.
0
- இப்படியொரு அனுபவம் எனக்கேற்பட்டதில்லை. ஆபீஸில் தவறான இடத்திற்கு பணத்தை அனுப்பிவிட்டேன். நண்பர்களிடம் கூட எரிந்து விழுந்தேன். டைரக்டர் கூப்பிட்டு கண்டித்தார். டாக்டரிடம் போக வேண்டுமா என்று யோசிக்கிறேன் .... என் அனுபவங்கள் கற்பனையா என்பதை நிச்சயப் படுத்த வேண்டும் .... முதலில் அந்த சக்-மூல் சிலையை தூக்கி எறிய வேண்டும்.
0

இதுவரை ஃபிலிபர்ட்டோவின் கையெழுத்தை என்னால் அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது. ஆபீஸ் மெமோவிலும், கடிதங்களிலும் பார்த்த அதே கையெழுத்துதான். ஆகஸ்ட் 25க்குப் பிறகு அதுவே ஒரு குழந்தையுடையது போல கோணலாகவும், விட்டு விட்டும், நடுக்கத்தோடும் இருந்தது. மூன்று நாட்கள் காலியாக இருந்து, பின்பு தொடர்கிறது. 
- மிகவும் இயற்கையாக, பரிச்சயமாக இருக்கிறேன். வழக்கமாக நாம் ஸ்தூல உலகை நம்பவேண்டி இருக்கிறது ...
ஆனாலும் இதுவும் உண்மையே. இதன் உள்ளுமையை நாம் உணர்ந்தால்... யாரோ மடையன் தண்ணீரைச் சிவப்பாக மாற்றியது போலவே... ஒரு புகைவட்டம் உண்மைதானே... ... நிகழ்கால, மறக்கப்படுகின்ற சாவுகளும் உண்மைதானே... கனவில் ஒருவன் சொர்க்கத்துக்குள் சென்று அதற்கு அடையாளமாக ஒரு பூவை பெற்று, பின்பு தூக்கம் விழித்த பின்பு அந்தப் பூவைத் தன் கையில் கண்டால் ? ஸ்தூல உலகம்? ஒராயிரம் துகள்களாக அது வெடித்துச் சிதறியது - ஒரு மர்மமான அலை கடலைப் போல ஒரு சிப்பிக்குள் அடங்கும் போதே அது ஸ்தூலமாகிறது... மூன்று நாட்களுக்கு முன்பு வரை தான் வாழ்ந்த உலகம் இன்று அழிக்கப்படுகிறது. அது வெறும் ரிஃப்ளெக்ஸ் உலகம்; பழகிப்போன செயல்கள், வாழ்க்கை. ஆனால் இதுவோ தீடீரென்று வெடித்துச்சிதறி தன் பலத்தை உறுதிப்படுத்தும் பூமியைப் போல, வாழ்க்கையை வெறுத்து ஒதுக்கிய என்னைத் தூக்கி நிறுத்துகிறது. நிகழ் காலத்தில் வாழ வற்புறுத்துகிறது. மீண்டும் அதைக் கற்பனை என்றே தீர்மானிக்க விரும்பினேன் ! சக் - மூல் தங்க நிறமாக மாறி கருணையுடன், நிதானமாக ஒரு கடவுளாக அமர்ந்திருக்கிறான். கடைசியில் நேற்றிரவு விழித்துக் கொண்டபோது புனுகும் இரத்தமும் கலந்த வாசனையில் இந்த அறை அமிழ்ந்திருந்தது. தங்க நிறமான ஜோடிக்கண்கள் என்னை உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தன. மொதுவாக விளக்கை ஏற்றினேன். சக் - மூல் சிரிப்புடன் தங்கமாகி நின்றான். வயிறு மட்டுமே சிவப்பு. கண்கள் ஒன்றையொன்று வெட்டிக் கொண்டும் மூக்குக்கு மிக அருகிலும் இருந்தன. உடலைவிடப் பெரிதான தலையின் ஒளியே அவனை உயிருள்ளவனாகக் காட்டியது. சக் - மூல் என் கட்டிலை நோக்கி வந்தான் பெரும் மழை பெய்யத் தொடங்கியது.
0
ஆகஸ்ட் மாதக் கடைசியில் ஃபிலிபர்ட்டோ வேலையை விட்டு நீக்கப்பட்டான் என்பது என் நினைவுக்கு வந்தது. டைரக்டர் அவனைத் திருடன் என்றும், பைத்தியம் என்றும் குற்றம் சாட்டினார். எனக்கு அதிலெல்லாம் நம்பிக்கை இல்லை என்றாலும், ஃபிலிபர்ட்டோ எழுதிய மடத்தனமான மெமோவையெல்லாம் பார்த்திருக்கிறேன். தண்ணீரில் புதிய வாசனை வருவதைக் கண்டித்து செக்ரடரிக்கு ஒன்று; மற்றொன்று பாலைவனத்தில் மழை பெய்யவைக்க உதவுவதாகக் கூறியது... என்னால் இதை விளக்க முடியாமல் போனாலும், கோடையில் பெய்த அந்த பெரும் மழையே அவனை பாதித்திருக்க வேண்டும் எனலாம். அல்லது அந்தப் பழைய பெரிய வீட்டில் தனியாக நெடுங்காலம் , வாழ்ந்து வருவது அவனைப் பேதலிப்புக்கு அழைத்துச் சென்றிருக்கக் கூடும்...... செப்டம்பரில் சில குறிப்புகள் : 
நினைத்தபோதெல்லாம் சக்-மூல் கனிவாகி விடுகிறான் ...மணமுள்ள நீரோட்டம் அவனுக்குப் பிடித்திருக்கிறது. அருமையான கதைகளைச் சொல்லுகிறான்: பருவ மழை, பாலைவனத்தின் அலைச்சல், அங்குள்ள தாவரங்களின் உறவு முறைகள் : வில்லோ மரம், அவனுடைய ஓடிப்போன மகள்; தாமரை, பிடித்த கைக்குழந்தை: காக்டஸ், மாமியார்... எனக்குப் பிடிக்காமல் போனது அந்த மனிதனற்ற உடலிலிருந்து வரும் நாற்றமும், செருப்புக்களின் தொன்மையான சப்தமுமே. சிரித்துக்கொண்டே சக் - மூல் கூறுகிறான்: லா ஃப்லாங்கியன் அவனைக் கண்டெடுத்து மற்ற கடவுளருடன் ஒன்று சேர்த்தான்; ஆத்மாவோ இங்கே தண்ணீர்க் குடங்களிலும், புயல்களிலும் வாழ்கிறது; அவன் கல்லுடல் இன்னொரு விஷயம் - அது தன் மறைவிடத்திலிருந்து வெளியே வந்தது குரூரமானது. சக்-மூல் அதை மன்னிக்கவே மாட்டான். வெறும் அழகியல் உணர்வுகளை வெறுக்கிறான் அவன்.
0
கடைக்காரன் வயிற்றில் பூசிய தக்காளிச்சாற்றை சுரண்டிக் கொண்டிருந்தான். லாலோக்கிடம் அவனுக்கிருந்த ஈடுபாடு பற்றிய என் கேள்வியை உதாசீனப்படுத்தினான். அவனுக்கு கோபம் வந்தால் பற்களை நறநற வென்று கடித்து, பிரகாசமாக வெளிக்காட்டுவான். நேற்றிலிருந்து என் படுக்கையில் தூங்குகிறான். -
0

வறண்ட காலம் துவங்கிவிட்டது. நேற்றிரவு நான் வெளியில் படுத்தேன். படுக்கை அறையிலிருந்து விநோதமான சப்தங்களும், முனகல்களும் கேட்டன. ஓடிப் போய்ப் பார்த்தேன். சக் - மூல் விளக்கையும், நாற்காலியையும் உடைத்துக் கொண்டிருந்தான். இரத்த விளாறான கைகளை விரித்துக்கொண்டே கதவை நோக்கி ஓடிவந்தான். நான் சட்டென்று கதவை மூடிவிட்டு பாத்ரூமில் ஓடிப்போய் ஒளிந்து கொண்டேன். அப்புறம் இறைஞ்சியவாறே தண்ணீருக்காக அலைவதைப் பார்த்தேன். அவனுக்கு பயங்கரமாக இரைக்கிறது. .... குழாய்களைத் திறந்து விட்டுவிடுகிறான். வீடெங்கும் ஈரமாகி விட்டது. கம்பளிக்குள்தான் உறங்க வேண்டி யிருக்கிறது. ஹாலில் தண்ணீரைக் கொட்டாதே என்று சொன்னேன்.* |
0
ஹாலையும் இன்று ஈரமாக்கிவிட்டான். எரிச்சலுடன் அவனை மீண்டும் லாகூனில்லா கடையில் போட்டு விடுவேன் என்று சொன்னேன். அவனுடைய பயங்கரமான சிரிப்பு - நிச்சயமாக மனித சிரிப்போ, விலங்கின் சிரிப்போ அல்ல - வளையல்களணிந்த அந்தக் கையால் வாங்கிய அடியை போலவே விண்ணென்றிருந்தது. நான் சிறைப்பிடிக்கப் பட்டிருக்கிறேன் என்பது உண்மைதான். அவனுடன் விளையாடி விடலாம் என்றே முதலில் நம்பினேன். அது குழந்தைப் பருவத்தின் பாதுகாப்பு உணர்ச்சியால் இருக்கலாம். ஆனால் குழந்தைப் பருவத்தின் முனைப்போ வயதாகையில் கரைந்து விடுகிறது. அவன் என் உடைகளை அணிந்து உடற்பாசியை மறைத்துக் கொள்கிறான். சக்மூல் இணங்குதலுக்குப் பழகிப் - நானோ கீழ்படியவே பழக்கப்பட்டவன். எனவே - மழை வரும் வரை சக்-மூல் எரிச்சலூட்டுபவனாகவே இருப்பான்.
0
இரவு சக்-மூல் வெளியே போகிறான் என்பதைக் கண்டு பிடித்தேன். அவன் ஒரு பழைய, புரியாத பாட்டை, அதை விட பழைய மெட்டில் முனகுவது கேட்கிறது. அப்புறம் அமைதியானவுடன் படுக்கையறைக்குள் மெதுவாகப் போனேன். அது பெரும் அலங்கோலமாக இருந்தது. பல விதமான வாசனைகள் வந்தன. கதவுக்குப்பின்பு சில எலும்புகளைக் கண்டுபிடித்தேன் - நாய், பூனை, எலியுடையதாக இருக்கும். இதைத்தான் சத்துக்காகத் திருடிச் சாப்பிடுகிறானா? காலை நேரத்தில் கேட்கும் குரைப்பும் இப்போது பிடிபட்டு விடுகிறது.

0
பிப்ரவரி மாதம் இன்னும் வறட்சிதான். சக் - மூல் என்னை அருகிலிருந்து கண்காணித்துக் கொண்டிருக்கிறான். ஓட்டலுக்கு ஃபோன் பண்ணி உணவு கொண்டு வரச் 
* ஃபிலிபர்ட்டோ எந்த மொழியில் பேசினான் என்று சொல்லப்படவில்லை. . 

சொல்லுகிறான். ஆனால் நான். ஆபீஸிலிருந்து கொண்டு வந்ததெல்லாம் தீர்ந்து விடும் என்றே நினைக்கிறேன் ... கடைசியில், தண்ணீரையும், மின்சாரத்தையும் நிறுத்தி விட்டார்கள். ஆனால் சக்-மூல் அருகிலிருந்த பொது ஃபவுண்டனிலிருந்து தண்ணீர் கொண்டு வரச் செய்தான். தினமும் பத்துப் பன்னிரண்டு முறை போய் வர வேண்டியிருக்கிறது. நான் ஓட நினைத்தால் இடியால் என்னைக் கொன்றுவிடுவேன் என்று சக் சொல்கிறான். ஆனால் அவன் இரவில் வெளியே செல்வது பற்றிய ரகசியம் எனக்குத் தெரிந்து விட்டது. மின்சாரம் இல்லாததால் எட்டு மணிக்கே தூங்கப் போகிறேன் ..... இவ்வளவு மாதங்களில் சக் - மூல் எனக்கு பழகிப்போயிருக்க வேண்டும். ஆனால், படிக்கட்டில் அவன் மீது இடித்துக் கொண்டபோது அவன், கைகளைத் தொட்டேன், செதில்களை உராய்ந்தேன். அப்படியே அலற வேண்டும் போல இருந்தது ....
0
சீக்கிரமாக மழை பெய்யாவிட்டால், சக்-மூல் மீண்டும் கல்லாகி விடுவான், சமீபத்தில் அவனால் வேகமாக நகரமுடிய வில்லை. மணிக்கணக்காக பராலிஸிஸ் பாதிப்பு வந்தவன் மாதிரி படுத்துக் கொண்டிருக்கிறான். ஆனால் என்னைத்திட்டுவதற்கும் பயமுறுத்துவதற்கும் அதிக சக்தியை அது அவனுக்கு தரக்கூடும். கதைகள் சொல்லக்கூடிய சமயங்கள் குறைந்து விட்டன. பதிலாக, என் ஒயின்பாட்டில்கள் குறைந்து கொண்டு வருகின்றன; சோப்பும் லோஷனும் வேண்டுமென்று கேட்கிறான்; வேலைக்காரப் பெண் வைத்தால் என்ன என்று கூட கேட்டான். சக்-மூல் மனித யத்தனங்களுக்கும் ஆசைப்படுவதாகத் தோன்றுகிறது. முகம் கூட வயதானமாதிரி தோன்றுகிறது. இதுவே என் மீட்சியாக இருக்கக் கூடும். சக்-மூல் மனிதனாக மாறினால், அவனுடைய பல நூற்றாண்டு கால வாழ்க்கை அனைத்தும் ஒரு கணத்தில் ஐக்கியமாகி பட்டென்று அவன் செத்துவிடக்கூடும். நானும் மரணமடைந்து விடக்கூடும். அப்போது தன் மரணத்தைப்பார்க்க சக்-மூல் என்னை அனுமதிக்கமாட்டான். அவன் என்னைக் கொன்றுவிடக்கூடும். எனவே இன்றிரவு சக் - மூல் வெளியில் போகும் போது ஓடிவிடப் போகிறேன். அகபுல்கோ கடற்கரைக்குச் சென்று சக் - மூலின் மரணத்துக் காகக் காத்துக் கொண்டிருப்போன் .... அவன் தலை முடி சாம்பல் நிறமாகி விட்டது. அவன் முகம் கூட வீங்கி விட்டது .....எனக்குத் தேவை கொஞ்சம் சூரியனும், நீச்சலடிக்க ஒரு கடற்கரையும். கையில் நானூறு பெசோ மிச்சமிருக் கிறது. அந்த முல்லர் - பெண்மணி நடத்தும் ஹோட்டலுக்குப் போகப் போகிறேன் ..... சக் - மூல் இந்த இடத்தில் கனியாக தண்ணீரில்லாமல் எவ்வளவு நாள் தான் வாழ முடியும்?
0
ஃபிலிபர்ட்டோவின் டயரி முடிந்து விட்டது. அதைப் பற்றி யோசிக்க மறந்துபோய் குர்னவாகா வரும்வரையில் உறங்கினேன். மெக்சிகோ நகரம் வரும்போது தோன்றியது - புரிந்து கொள்ள முடியாத மனப்பேதலிப்புக்கு அவன் ஆளாகியிருக்கக் கூடும். 
உடலைப் புதைப்பதற்கு ஏற்பாடு செய்வதற்காக அவன் வீட்டுக்கே சவப்பெட்டியைக் கொண்டு போனேன். சாவியை எடுத்துக் கதவைத் திறப்பதற்குள் சட்டென்று அதுவே திறந்தது. மஞ்சள் நிறமான ஒரு இந்தியன் என்னை எதிர் கொண்டான். மலிவான ஸென்ட் பூசி தன் சுருக்கங்களைப் பவுடர் அடித்து மறைக்க முயன்றிந்தான். மிகவும் அருவருப் பாக இருந்தது. 
'' மன்னிக்கவும். எனக்கு ஃபிலிபர்ட்டோவின் வீடு ......'' 
'' பரவாயில்லை. இதைப்பற்றி எனக்குத் தெரியும். அந்த சவப்பெட்டியை ஸெல்லருக்கு எடுத்துப் போகச் சொல்லுங்கள். 
தமிழில் : நாகார்ஜுனன்