Pages

Sunday, March 10, 2024


அழகம்மாள் - கு.அழகிரிசாமி
அழகம்மாள் இரண்டாவது தடவையாக இலையில் சாதத்தை வைப் பதற்காகக் குனிந்தாள். ஆனால், அதற்குள்ளாகக் கிருஷ்ணக் கோனார், "போதும் என்று
கையால் தடுத்துவிட்டு எழுந்து
விட்டார்.

இது என்ன, ஒரு உருண்டைச் சாதம்கூடச் சரியாகச் சாப்பி டல்லியே. அதுக்குள்ளே எழுந்திட்டீங்க!" என்று சொல்லி உண்மை யாகவே அங்கலாய்த்தாள் அழகம்மாள். கோனார் அன்று வழக்கம் போலத்தான் சாப்பிட்டு எழுந்தார். ஆனால், அது அழகம்மா ளுக்கு ஒர் உருண்டையாகப் பட்டது; அத்தோடு நாலைந்து நாட்களா கவே கோனார் சரியாகச் சாப்பிடவில்லை என்று அவளுடைய எண் ணம் ; ஒன்றும் தோன்றாமல் சாதத்தைக் கையில் ஏந்தியவாறு நின்றாள்.

""
"கை
கை களுவத் தண்ணி கொண்டா
என் று சொல்லிவிட்டு டது கையைப் பக்கத்திலிருந்து கதவில் ஊன்றிக்கொண்டு நின்றார் கிருஷ்ணக்கோனார். அழகம்மாள் மௌனமாகத் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள்.
"உடம்புக்கு ஏதாச்சுலும் செய்தாச் சொல்லுங்களேன் " என்று சொல்லிவிட்டுக் கவலையோடு அவருடைய முகத்தைப் பார்த் தாள். கோனார், உடம்புக்கு என்ன ? ஒண்ணுமில்லை ' என்று சொல்லிவிட்டு இடதுகையால் தண்ணீரை வாங்கிக்கொண்டு வெளியே வந்து கையைக் கழுவினார்.
கோனார் வாசல் திண்ணையில் போய்ப் படுப்பதற்காகப் பாயை விரித்தார். மிகவும் அப்போடு ஒரு பழைய தலையணையை எடுத்துப்

போட்டுக்கொண்டு சாய்ந்தார். 'எம்பெருமானே என்று தீனமான குரலில் சொல்லிவிட்டு, தலையணையைச் சரிப்படுத்தித் தலைக்குத் தாங் கிக்கொண்டார். பகலில் உடம்பை முறித்து வேலைசெய்த களைப்பு கண்ணிமைகளை மூடியது. உடம்பு வலி தாங்காமல் காலையும் கையை யும் உதறிக்கொண்டு கிடந்தார் கோனார். இந்தச் சமயத்தில் உ உள்ளே யிருந்து, "கொஞ்சம் இஞ்சிச்சாறு சாப்பிட்டுவிட்டுப் படுக்கிறீர்களா? உடம்பு வலிக்குத் தேவலை என்று அழகம்மாள் பரிவோடு
கேட்டாள்.
""
''கொஞ்சம் சீக்கிரம் போட்டுக் கொண்டா. தூக்கம் கண்ணைச் சொக்குது'' என்று சொல்லிவிட்டுப் புரண்டு படுத்தார் கோனார்.

அன்றிரவு இஞ்சிச் சாற்றைக் கோனார் சாப்பிட்டபின்தான் அழகம்மாள் சாப்பிட உட்கார்ந்தாள். அவளுக்கு அன்று சாப்பாட் டில் கவனமில்லை. வயசாகுது, மனுஷன் உடம்பு வேலைக்குத் தாங்கல்லை. அதிலும் சாப்பிடாமே இப்படிக் கிடந்தா உடம்பு என் னத்துக்காகும்?'' என்ற சிந்தனையிலே மனசை அலட்டிக்கொண்டிருந் தாள் அழகம்மாள். ஏதோ இரண்டு கவளம் சோற்றை வாயில் போட்டுக்கொண்டு, முந்தானையை விரித்துப் படுத்துவிட்டாள்.
அழகம்மாள் படுத்த கொஞ்ச நேரத்துக்கெல்லாம் வீட்டுக் கதவை யாரோ தட்டுவது கேட்டது. வாசல் திண்ணையில் படுத் திருந்த கோனார் தூங்கிப் போய்விட்டார். அதனால், அழகம்மாள் யாரென்று கேட்டுக்கொண்டே வெளியே ஓடிவந்து கதவைத் திறந் தாள். திறந்ததும், கோபால் உள்ளே நுழைந்தான். கோபாலு, இப்போகான்
போகான் வர்ரயா ?" என்று ஆவலோடு கேட்டுக் கொண்டு அவனது வலது கையிலிருந்த பையை வாங்கினாள் அழ கம்மாள்.
"என்ன
கோபால், " ஒன்பதரைப் பஸ்ஸுக்கு வர்ரேன். என்ன அதுக் குள்ளே கதவையடைச்சுத் தூங்கிட்டீங்களே ?" என்றான்.
"இப்போதுதான் கொஞ்சம் கண் அசந்தேன். சாப்பிட்டாச்சு, வேறேவேலை என்ன, தூங்காமே ?" என்று சொல்லிவிட்டு வீட்டுக் குள்ளே வந்து விளக்கேற்றினாள் அழகம்மாள்.
கோபால் இந்தத் தம்பதிகளின் ஏகபுத்திரன். வயது
வயது இருபதா கிறது.
மதுரை காலேஜிலிருந்து கிறிஸ்துமஸ் லீவுக்காக ஊருக்கு அன்று வந்திருக்கிறான்.
அவன் கோனாருடைய எதிர்கால நம்பிக்கைக்கு ஒரு சின்னமாக இருந்தான். தாயினுடைய வாழ்க்கையிலும் அவனால் ஏற்பட்ட மாறுதல்கள் பல. இருவருக்கும் பையன்மேல் இருந்த பாசம் இவ் வளவு அவ்வளவு என் என்று சொல்லுவதற்கில்லை. அவன் சென்ற தசரா விடுமுறையில் ஊருக்கே வராமல் இருந்துவிட்டான். ஏன் வாவில்லை என்பதற்குக் கடிதம்கூடப் போடவில்லை. இப்போது அநேக நாட்கள் சழித்து மகனைத் தாய் பார்த்துக்கொள்ளு வதும், தாயைத் தனயன் பார்த்துக்கொள்ளுவதும் உருக்கமாக இருந்தன.
"அப்பாவை எழுப்பட்டுமா? நல்லாத் தூங்குறாப்போலே இருக்கு. இப்போதான் தூங்கினாரா அம்மா?" என்று சொல்லிக் கொண்டே,"அப்பா அப்பா'' என்று தட்டி எழுப்பினான் கோபால்.
அயர்ந்து உறங்கிய கிருஷ்ணக்கோனார் மிரண்டுபோய் எழுந்து உட்கார்ந்தார். அதற்குள், "என்ன, தூக்கமா?" என்று கோபால் சிரித்துக்கொண்டே கேட்டான். கோனார் கண்களைத் துடைத்துக் கொண்டே, "கோபாலு " என்ற ஒரே வார்த்தையைச் சொன்னார். அதற்குள் அவர் தொண்டை அடைத்துக்கொண்டது. தகப்பனாரின் பக்கத்திலே கோபால் உட்கார்ந்தான். இதற்குள் வீட்டுக்குள் போன அழகம்மாள் விளக்கெண்ணெய் விளக்கைக் காற்றில் அணைந்துவிடாத படி முந்தானையால் மறைத்து எடுத்துக் கொண்டு வாசல் திண்ணைக்கு வந்தாள்.
வெளிச்சம் முகத்தில் பட்டதும் கோனார், முகத்தை வேறுபக்க மாகத் திருப்பிக்கொண்டார். கோபாலும் அழகம்மாளும் ஒன்றும் புரியாமல் திகைத்தார்கள். சிறிது நேரத்தில் கோனாரின் உடல் விம்மிவிம்மித் துடித்தது. முகத்தைத் திருப்பி அவர் அழுதுகொண் டிருந்தார். கோபால் திடுக்கிட்டு, "அப்பா, என்ன?" என்று கேட்டுக்கொண்டு அவருடைய முதுகைத் தொட்டான். கோனார் ஒன்றும் சொல்லாமல் ஏங்கி ஏங்கி அழுதார். அழகம்மாள் கண் கலங்க நின்றுகொண்டிருந்தாள். சிறிது கோத்தில் கோனார் முகத் தைத் துடைத்துக்கொண்டு கோபாலைப் பார்த்து, "ஒண்ணுமில்லை என்று
சொல்விட்டுத் தலையைக் குனிந்துகொண்டார். அவர் கண்ணில் ரத்தம் கொதிப்பது போல ஒரே சிவப்பு.
அவர் அழுத காரணத்தை மேலும்மேலும் கேட்டும் பிரயோ ஜனம் இல்லாமல் போய்விட்டது. அழகம்மாள் தனக்குத் தெரிந்த ஒரு காரணத்தை வேண்டுமென்றே சிருஷ்டித்துக்கொண்டு, "கோபால், நீ இத்தனை நாளாகக் காயிதம்கூடப் போடாமல் இருக்க லாமா? என்னமோ
என்னமோ ஏதோன்னு நாங்கள் தூக்கமில்லாமல் இங்கே கிடக்கிறோம்
"" என் று சொல்லி வைத்தாள். இதைக்கேட்டதும், 'ஹும்' என்று சொல்லிச் செருமினார் கோனார். கோபாலும் அழு கைக்குக் காரணமாக ஏதோ ஒன்றை ஊகித்துக்கொண்டான்.

மூன்று பேரும் சேர்ந்து மூன்று பேருக்கும் தெரிந்த ஒன்றை ஒருவருக்குத் தெரியாமல் ஒருவர் மறைத்துக் கொண்டு ஏதேதோ பேசினார்கள். மறைந்து நிற்கும் ரகசியம் மூன்று பேரையும் பேச் சுக்கு நடுவிலே வந்து முள்ளைப் போல குத்திக் கொண்டிருந்தது. சிறிது நேரத்தில், தூங்கப்போகிற சாக்கில் மூவருமே எழுந்தனர். கோபாலன் கொண்டு வந்த மலைப்பழங்களில் ஆளுக்கு இரண்டை வாயில் போட்டுக் கொண்டு ஒவ்வொருவரும் ஒவ்வொரு மூலையில் போய்ப் படுத்தார்கள்.
அந்த இரவு மிகவும் விசித்திரமான இரவு. தனித் தனியாகப் பிறரை நோகாத நிலையில் வேதனைப்படும் மூன்று ஜீவன்கள், படுக் கையில் புரண்டு கொண்டிருந்தன. மூவரும் செய்யாது மூவராலும் உண்டான ஒரு தீவினை அந்த மூவரை மாத்திரம் நெஞ்சைப் பிசைந்து கொண்டிருந்தது. யார் யாரை, எப்போது எப்போது தூக் கம் தழுவியதோ அன்று?

பெரியப்பா
படுக்கையில் படுத்த கோபாலுக்கு, 'இப்போதும் கூட ஏன் ஊருக்கு வந்தோம்? தசரா விடுமுறையின் போது வீட்டிலேயே மதுரையில் இருந்துவிட்டது போல, ஏதாவது சாக்குப் போக்குச் சொல்லி ஊருக்குக் கடிதம் எழுதிவிட்டு இப்போதும் போன முறை இருந்துவிட்டிருக்கக் கூடாதா ?" என்று இருந்தது. அவன் வராமல் இருந்ததற்கு, இன்று போலவே அன்றும் வேதனை தரும் காரணம் இருந்தது. சென்ற இரண்டு வருஷங்களில் அவன் ஊருக்கு வரும்போதெல்லாம் தன் பெற்றோர்கள் நடந்துகொள்ளும் சுபாவம் அவனுக்குச் சகிக்கக்கூடாமல் இருந்தது. கோனார் மீது அழகம்மாள் எரிந்து எரிந்து விழுவாள். சாந்தமாக இருந்த அவள் எதற்கு இப்படிச் சீறுகிறாள் என்று வருந்துவான் கோபால்.அம் மாவை இரண்டொரு தடவை மறைமுகமாகக் கண்டித்தும் பார்த்
ய தான். ஆனால் இவனுடைய கண்டிப்புக்களால் அவளுடைய கோபம் இரட்டிப்பாகிக் கொண்டு தான் வருமே ஒழியத் தணியாது.
ஒரு தடவை கோபால் சற்று ரோஷம் வரும்படியாகவே கடிந்து கொண்டான். ஒரு மகன் சொல்ல வேண்டிய முறையில் இல்லாமல் சற்றுக் காரமாகவே இருந்தது அவன் சொன்னது. தன் தாயாரைப் பார்த்து,"இப்படி அவர்மேலே வெறுப்பு இருக்குமானால் அந்தக் காலத்திலேயே அவருக்குத் தாலிகட்டத் தலையைச் சாய்த்திருக்க வேண்டாமே?" என்று கேட்டுவிட்டான். அவ்வளவுதான்.அன்றும் அதற்கு மறுநாளும் சாப்பிடாமல் இருந்து அழுதாள்; வெறும் மண் தரையில் படுத்துக்கொண்டு பகலையும் இரவையும் கழித்தாள் அழ கம்மாள். 'நீயும் கூடவா இப்படி என்னைக் கேட்கணும்?' என்பது

தான், அவனுக்கு அவள் மனம் கொதித்துச் சொன்ன பதில். அவனாலும் தன் துயரத்துக்கு ஓர் எல்லை காண முடியவில்லையே என்ற ஏமாற்றம் அவள் கண்களில் பெருக்கெடுத்ததே ஒழிய, அவன் கேட்டுவிட்டானே என்ற ரோஷத்தின் கண்ணீரல்ல அவள் பெருக்கியது. பாவம், அந்த வார்த்தையைச் சொல்லிவிட்டு கோபால் தனியே போய் அழுதது அழகம்மாளுக்குத் தெரியுமா?
அதற்குப் பிறகு, அவன் அப்படிப்பட்ட - ஏன் இலேசான அபிப்பிராய வேற்றுமைக்குக் காரணமான சொற்களைக் கூடச் சொன்னதே இல்லை. ஒன்றையும் கவனியாமல், லீவில் ஊருக்கு வந்தால் தாயையும் தந்தையையும் வளைய வளைய வருவான். வீட்டிலே பெற்றோர்களோடு கொஞ்ச, அந்த இருபது வயதுக் குழந்தையைத் தவிர வேறு யாருமில்லை. மதுரையிலே, எத்தனையோ புதுப் புதுப் பெயர்களைக் கொண்ட பட்சணங்களைத் தின்று தெவிட் டிய குழந்தைக்கு, பொறியுருண்டையையும், பணியாரைத்தையும் அபூர்வமாகச் செய்து கொடுப்பாள் அழகம்மாள். அப்போது சமையலுக்கு ஒத்தாசை செய்யும் கிருஷ்ணக் கோனாரின் முகத்தில் சீதேவி தாண்டவமாடுவாள்.
இப்படிச் சந்தோஷமாக இருக்கும்போதே, அழகம்மாளுக்குக் கோனார்மேல் ஒருசிறிய தவறுதலுக்கும்கூடப் பிரமாதமான கோபம் வந்துவிடும். பணியாரத்துக்கு மாவைச் சரியாகத் தட்டி வைத்திருக்கமாட்டார் கோனார். கோபம் அவள் முகத்தில் செக்கர் வர்ணத்தைத் தீட்டும். எரித்து விடுபவள்போல் புருஷனை ஒரு பார்வை பார்த்துவிட்டு, கோபால் வீட்டிலிருப்பதால் அவர்மேல் சீறி விழுவதற்கு அஞ்சி, "போதும் வேலைசெய்தது, எந்திரியுங்கள்" என்று சொல்லிவிட்டு முகத்தைத் திருப்பிக்கொள்வாள். கிருஷ்ணக் கோனார் மாவைத் தட்டிவைக்கும் முறத்தை அவள் 'சாட்' என்று தன்பக்கம் இழுத்துக்கொண்ட பிறகு அவருக்கு அங்கு வேறு என்ன வேலை ? பேசாமல் எழுந்திருப்பார். அடிபட்டு வரும் அவ மானத்தினால் அவர் மனம் கலங்கும்.
சீறிக் கனல் கக்கும் எரிமலை இப்போது உள்ளேயே பயங்கா மாகப் புகைந்து வந்தது கோபாலுக்குத் தெரிந்தது. 'தகப்பனார் மேல் இப்படி என்ன வெறுப்பு அம்மாவுக்கு? இவர்கள் எப்படிக் காலமெல்லாம் ஒரு வீட்டில் இருக்கிறார்கள்? அதுவும் சமீபத்தில் தானே இந்தச் 'சனியன்' குடும்பத்துள் நுழைந்திருக்கிறது. இதற் குக் காரணம்?" என்று கோபால் யோசித்து யோசித்து மனம் உடைந்துபோய் விட்டான். நாளாவட்டத்தில் அவன் உள்ளத் தில் ஒரு பயமும் குடிகொண்டு விட்டது. என்றைக்காவது தன்

மன வெறுப்பினால் அழகம்மாள் கோனாருக்குச் சாப்பாட்டிலே விஷம் வைத்தாலும் வைத்துவிடுவாள் என்று பயந்தான். அல்லது அவளே கிணற்றிலோ, குளத்திலோ விழுந்து உயிரை மாய்த்துக் கொண்டால்?
கடந்த இரண்டு வருஷங்களாக இந்தத் துன்பானுபவம் அவன் எங்கிருந்தாலும் அவனை வதைக்கத் தவறவில்லை. அம்மாவின் எரிமலை என்று எந்தச் சந்தர்ப்பத்தில் எப்படி வெடிக்கப் போகி றதோ? யார் யார் அந்தத் தீக்குழம்பில் பலியாகவேண்டி யிருக் றதோ?' என்று ஒவ்வொரு சமயத்தில் அவன் 'சடக்' என்று நின்று சிறிது யோசிப்பான். ஆனால் கூடவரும் கூட்டாளிகளுக்குத் தன் மன விகாரங்களைக் காட்டிக் கொள்ளாமல் மேலே செல்வான்.
நடந்து
போன கோடைவிடுமுறைக்கு அவன் தன் நண்பனோடு ஊருக்கு வந்தது தான், அப்புறம் இந்தக் கிறிஸ்துமஸுக்குத்தான் வந்திருக்கிறான். முன்னால் அவனோடு விடுமுறைக்கு ஊருக்கு வந்து, சிலநாட்கள் அவனோடு தங்கியிருந்தவன் ஒரு ஜமீன்தார் வீட்டுப் பையன்.
தூக்கம் வராதது கோபாலுக்குச் சிரமமாகவே இருந்தது. பக் கத்தில் அலுத்து உறங்கும் கோனாரின் குறட்டைச் சப்தம் கேட் டது. புஜத்திலே முகத்தைத் தேய்த்துக் கொண்டே கோபால் என்னென்னவோ மன் உளைச்சலில் வாதைப்பட்டுக் கொண்டிருந் தான் அன்றிரவு.

விடிந்தது. வழக்கம்போல அதிகாலையிலேயே எழுந்துவிட்டார் கோனார். பிறருடைய பண்ணையில் கூலிக்கு உழைக்கும் மனித டைய நித்திய நியமங்களின்படி, கோனாருடைய காலைக் கருமங்கள் நிறைவேறின. வீட்டுக்குத் தெற்கே பருத்தி மார் படலின் மறைவி
ள்ள தண்ணீர்க் குடங்களின் பக்கமாகப் போய், ஒரு செங்கல் துண்டைக் 'கரகா' என்று கல்லில் தேய்த்துக் கரடு முரடான தூளைக் கொண்டு பல்லில் இரண்டு இழுப்பு இழுத்து வாயைக் கொப்பளித் தார். வீட்டிலே உள்ள பழைய சாதத்தை வாயில் போட்டுக் கொண்டு, கொஞ்சம் சாதத்தை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு தள்ளாடிக்கொண்டே போனார். பழுதுபட்ட யந்திரம் வேலை செய் யாமல் கிடக்கையில், பழுதுபார்ப்பவன் அதை வந்து ஒட்டிப்பார்க் கும் போது மூலைக்கு ஓர் இடத்தில் இலேசாக அசைவது போல இருந்தது கோனாரின் நடை. நாற்பத்தைந்து வயதில் அதற்கு இரட்டிப்பு வயதின் பலஹீனம் ஏற்பட்டிருந்தது.

நேரங்கழித்துப் படுக்கையை விட்டு எழுந்தான் கோபால். இரவு நேரத்தில் நடந்ததைக் கோபாலும் பிறரும் மறந்துவிட் டார்கள். வேண்டுமானால் மறதி துயரத்திற்குத் தற்காலிகமாகத் ஒழிய, அடியோடு மாசு தெரியாமல் அதை அழித்து விடுமா? துயரத்தின் பின்னணியிலேயே தாயும் மகனும் பரஸ்பரம் உற்சாகத்தை நடித்துக் கொண்டிருந்தனர்.
ரை
ஏழெட்டு மாதங்களாக வராமல், கடிதம்கூடப் போடாமல் இருந்த மகன் இப்போது வந்திருக்கும்போது தாயின் மனம் கொள் ளும் பெருமகிழ்ச்சிக்கு எல்லை எது? அழகம்மாள் கூலி வேலை செய்து தன் கையில் சேர்த்து வைத்திருந்த காசுகளை அன்று தான் அவிழ்த் தாள். அந்த சொற்பக்காசுகள் மகனுடைய உபசார விருந்துக்குச் சரியாய்ப் போகும். வருஷத்துக்கு ஒரு தடவை தானே விருந்து செய்யப் போகிறாள்!
""
று
அழகம்மாள் ஏதோ "அபூர்வமான பலகாரங்களைத் தயார் செய்து கொண்டிருந்தாள். கோபால் ஸ்நானம் செய்து விட்டு அழ கான உடைகளை எடுத்து அணிந்து கொண்டான். தலையை நன்றாக வாரிவிட்டுக் கொண்டு, வாசல் திண்ணையில் பாயை விரித்து உட் கார்ந்து ஒரு புஸ்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்தான்.
வெளியூரில் மேல்படிப்புப் படிக்கும் இளைஞர்கள் கிராமத்துக்கு வரும்போது அவர்களுக்குக் கிராமத்திலுள்ள இரண்டொரு படிப் பாளிகள், சோதிடர்கள், வைத்தியர்கள் முதலிய எல்லோரிடத்திலும் ஒரு சிநேகிதம் ஏற்படாமல் தீராது. எல்லோரும் வந்து தங்கள் தங்கள் சந்தேகங்களைக் கேட்பார்கள். "பேப்பர் சமாச்சாரம் எப்படி இருக்கிறது ?" "கம்பராமாயணப் பாட்டு வில்லி பாரதத்தை விட நயமில்லையா, ஐயா ?' "மதுரையில் சோதிட அலங்காரம் கிடைக்குமா ?" -இப்படிக் கதம்பக் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் யோக்கியதை யில்லாதவர்கள் சர்வகலாசாலைக்குப் பட்டதாரிகளானா லும், கிராமத்திலே படித்தவன் என்ற பெயர் வாங்க முடியாது. கோபால் உண்மையிலேயே ஒரு கிராமத்துப் பட்டதாரி'தான். அத்தோடு அவன்மேல் ஊராருக்கும் நல்ல பிரியம்.
அன்று அவன் உட்கார்ந்து படித்துக் கொண்டிருக்கும்போது அந்த ஊர்ப் பெரிய பண்ணையாரே வந்து விட்டார். அந்தப் பண்ணையாரின் தம்பி வீட்டிலேதான் கிருஷ்ணக் கோனார் வேலை செய்கிறார். சட்டபூர்வமான அதிகாரமில்லாமல், சட்டபூர்வமான அதிகாரங்களை விட அதிக அதிகாரத்துடன் ஊரைப் பரிபாலனம் செய்யும் ஒரு பெரியவர், ஏழைக் குடிசையில் அன்று அடியெடுத்து

வைத்தது கோபாலுக்கே ஆச்சரியமாக இருந்தது. வந்தவர், தம் மகனை மதுரையில் படிக்க அனுப்பும் விஷயமாகக் கோபாலுடைய ஆலோசனையைக் கேட்கலானார். பேச்சு அவ்வளவில் நிற்காமல் இரு வரும் உலக சமாச்சாரங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். இதை வீட்டுக்குள்ளிருந்து கேட்டுக் கொண்டிருந்த அழகம்மாளின் மனம் சந்தோஷத்தினால் பூரித்தது. இந்த இரண்டு குடும்பங்களின் அந்தஸ்த்துக்களுக்கு நடுவே உள்ளது எட்டாத பெருந்தூரம். கோனா ரின் குடும்பத்தை விடத் தாழ்ந்த குடும்பமோ, பண்ணையாரைவிட உயர்ந்தவர்களோ அந்த ஊரில் இல்லை.
மகனுடைய படிப்பு எவ்வளவு பெரிய ராஜவைபவத்துடன் தன் வீட்டில் கால் வைத்திருக்கிறது என்பதை அழகம்மாள் இரண்டு வருஷங்களுக்கு முன்னாலேயே அறிந்துகொண்டாள். அறிந்து கொண்டதனால்தான்

கிருஷ்ணக் கோனாருடைய வாலிபப் பருவத்தின் சுட்டித்தனங் களில் ஒன்றுகூட இப்போது எஞ்சவில்லை என்பது உண்மைதான். ஆனால் அந்தப் பருவத்தில் இரும்புப் பாதத்தால் மிதிபட்டு அவருடைய சதையும் எலும்பும் நொறுங்கி, மனசோடு உடைந்து போன காட்சி இன்றும் மாறவில்லை. அப்போது, அந்த இருபத்து நாலு இருபத்து ஐந்தாவது வயதில், அவருடைய சகவாசங்களும், ஆட்டபாட்டங்களும் எவருடைய சாமபேத் தான தண்டங்களுக்கும் அடங்காமல் தறிகெட்டுக் கூத்தாடின. நான்கு தடவைகள் வீட்டி லிருந்து பணத்தைத் திருடிக் கொண்டு போயிருக்கிறார். ஆயிரக் கணக்கான ரூபாய் வெள்ளத்தில் போனது போல, அவரால் இரண்டு வருஷங்களுக்குள்ளாகக் குடும்பத்தில் பெருத்த நஷ்டம் ஏற்பட்டது, ஒரு சமயம் அவர் மதுரையில் ஒரு தாசி வீட்டின் வாசல் படியி லேயே, சூரியோதயம் ஆகி வெயிலடிப்பதுகூடத் தெரியாமல் படுத் துக் கிடந்தார். அதற்கு மறுநாளே குடும்பத்தில் பாகப் பிரிவினை செய்யும்படி ஏற்பட்டது. கிருஷ்ணக்கோனாருக்கு ஒரே தமையன். இருக்கிற பூர்வீகச் சொத்தும், வயிற்றுப் பாட்டுக்கே போதாமல் இருந்தது. வரவும் செலவும் ஒன்றை மற்றொன்று விழுங்கிக் கொண் டிருக்கும் அற்ப ஆஸ்திதான். அதிலே கிருஷ்ணக்கோனாரால் ஏற் பட்ட கடனை அவரே பொறுக்க வேண்டியது என்றும் ஏற்பட்டது. பாகப் பிரிவினையானதும் மூத்தவர் தம் சொத்துக்களை யெல்லாம் விற்று விட்டு, மதுரைக்குப் போய் விட்டார். அதற்கு அப்புறமும் கிருஷ்ணக்கோனார் வழிக்கு வந்தாரில்லை.

இந்தச் சந்தர்ப்பத்தில் கிருஷ்ணக் கோனாரை நல்லவனாக்கு வதற்கென்று,கல்யாண உபாயத்தைக் கண்டு பிடித்தார்கள். ஆனால் பெரிய பிரச்னை குறுக்கிட்டது. அதாவது அவருக்கு யாரும் பெண் கொடுக்கத் தயாரில்லை. காரணம், மனுஷனின் நிலைமை ஆட் டத்தில் இருக்கிறது என்பதோடு மட்டுமல்ல; அவருக்கு வலது கண் ஊனம்; சிறு வயதில் அம்மை வார்த்ததன் துன்பக்குறி அது.

று

பெரியவர்கள் கஷ்டப்பட்டார்கள். இந்தச் சமயத்திலே கிருஷ் ணக்கோனாரின் தகப்பனாருடன் பிறந்த அம்மாளின் இளைய மகளை - அழகம்மாளை முறை
முறை' கொண்டாடி மணம்
முடிக்க வேண்டியதாய் விட்டது. அழகம்மாளுக்கு அப்போது
வயது தினாறு இருக்கும். அவளுடைய குடும்பம் சுகமாகப் பிழைத்து வந்தது. அவளுடைய தமக்கை பக்கத்து ஊரில் தான் ஒரு நல்ல தடும்பத்தில் வாழ்க்கைப்பட்டிருந்தாள். இவளுக்கும் எதிர் காலம் ஒரு நல்ல இடத்தைத் தேடிக் கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஏனென்றால், அழகம்மாள் பெயருக்கு ஏற்றபடி. அப்படி அழகாக இருந்தாள்.
ஆனால், அவளுடைய தலை விதி வேறுவிதமாக இருந்தது. அவ ளைப் பிற்காலத்தில் அந்த இரண்டுங் கெட்டான் நிலையில் நிறுத் தியவை, அவளுடைய இளகிய மனமும், படித்தவர்கள் சொல்லுகி அந்தத் தியாக புத்தியும் தான். கிருஷ்ணக்கோனாரின் மானம்
றிய அம்பலத்தில் இழுபடுவது அந்த ஊரைவிட்டுப் பக்கத்து வரிலிருந்த அவள் வீட்டையும், அதோடு அவளையும்கூடப் பிடித்து அசைத்து விட்டது. வெளியே தலைகாட்ட முடியாது கஷ்டப்படும் அதே சமயத்தில் அழகம்மாளுக்குக் கோனாரின் மேல் ஓர் இரக்கம் கூடப் பிறந்தது.
காரணம் அவருடைய கண்ணின் ஊனம்தான். அவருக்காக, இத்தனை குறைகளோடு இருக்கும் அந்த ஊதாரிக் காக, எவனும் பெண் கொடுக்கமாட்டான் என்பதை அவள் மன உருக்கத்துடன் எண்ணிப் பார்த்தாள். பரம்பரையாகக் கௌரவ
டன் இருந்த ஒரு குடும்பத்தின் மானத்தைக் காக்க அன்று யாரா வது ஒருவர் தங்களைக் களப்பலி கொடுக்காமல் தீராது என்று நிச்ச யிப்பதற்கு, அழகம்மாளுக்குக் கடைசிச் சமயத்தில் வந்து ஒத் தாசையும் செய்தாள் அவள் தாயார். தூதிர்ஷ்டச்சீட்டு அழகம் மாள் பேருக்கே விழுந்தது. அவள்தான் அந்தச் சீட்டை உருவிக் கொண்டாள். அவளுடைய இரக்கப்பட்ட உள்ளம் தியாகத்தின் வளர்பாரத்தை அன்று தாங்கிக் கொள்ள முடியும் என்று நினைத்தது. கல்யாணத்துக்குச் சம்மதித்தாள். கல்யாணமும் நடந்தது.

அழகம்மாள் கிருஷ்ணக் கோனாரின் வீட்டுக்கு வந்து விளக் கேற்றும்போது வீட்டில் சூனியம்தான் பரவிக் கிடந்தது. குடும்ப வாழ்வின் லக்ஷ்மீகரம் எங்கோ குடிபோய்விட்டது. அழகம்மாளின் ருவில்தான் அந்த வீட்டில் உயிர்க் களை இங்கும் அங்கும் அலை யடித்துக் கொண்டிருந்தது. சிறிது நாட்களில் ஜீவனாம்சத்துக்கான எல்லாமே அவளுடைய
டய வீட்டிலிருந்துதான் வந்தாக வேண்டியிருந் தது. ஆனால், வருஷம் தவறாமல் பெய்யும் மழையும் தினசரி பெய் வது கிடையாதே!
கோனாரின் ஆட்ட பாட்டம் அடங்கி ஓய்ந்தது. உயிரோடு நின்ற சந்தன மரம் ஒடிந்து விழுந்து கட்டையானாலும் சந்தனத்தின் வாசம் போகாகதுபோல, கிருஷ்ணக்கோனாரிடத்திலே கொஞ்சம் உயிரும் மனுஷத் தன்மையும் எஞ்சியிருந்தன. அவற்றைக் கொண்டு வாழ்க்கையில் பழையபடியும் துளிர்த்து மலா அவர் ஆசைப்பட வில்லை. அழகம்மாளும் அவரும் ஒடிந்து விழுந்த சந்தனக் கட்டை காலத்தினால் உளுத்துப் போகாமல் இருக்க மட்டுமே பிரார்த்தித் தார்கள்.
அழகம்மாள் அதிகமாகப் படித்தவள் அல்ல, தியாகத்தின் பெருமையை நினைத்து நினைத்துப் புளகிப்பதற்கு. அவள் தியாகத் தின் பெருமையையும் மறந்தாள் ; துயரத்தையும் மறந்துவிட்டாள். ''சொத்துச் சுகமிழந்த கூலிக்கார மனிதனும், அவனுக்குச் சமைத் துப் போடும் மனைவியும்."-இப்படிச் சாதாரணமான ஒரு கதை யிருந்தால் எப்படி யிருக்கும்? அந்தக் கதைதான் அவர்களுடைய வாழ்க்கையும். ஆனால், சம்சாரப்பாதையில் அவ்வப்போது குத்தும் முட்களை அழகம்மாள் வேதனையோடு பிடுங்கி எறிந்திருக்கிறாள். அந்தப் பாதையில் செல்லும்போது, கோனாரைக் கோபித்த நாட் களும் இல்லாமல் இல்லை.
கல்யாணமான மறு வருஷத்தில்தான் கோபால் பிறந்தான். அவன் பிறந்ததும், தகர்ந்து போன கோட்டையில் குடியிருக்கும் அவருடைய ஏழை ஆத்மா தன் எல்லையில் பழுத்துக் குலுங்கப் போகும் ஒரு பழச்செடி முளை விட்டதைக் கண்டு தன் வாழ்க்கை யையே அந்தச் செடியின்மேல் பாரமாகப் போட்டுவிட்டது. அவன் பிறந்த நாளன்றுதான் அழகம்மாள், உலகத்திலே பெண்கள் கல் யாணத்தில் பெறும் இன்பத்தைப் பெற்றாள்.
கோபால் உருவில் வளர்ந்தது. இவர்களுடைய நம்பிக்கை வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள் மேலும்' பையன் வளர்ந்து வந்தான். கிராமத்திலே கொஞ்சம் படித்தான். அந்தச்
1
சமயத்தில் மதுரையில் பிள்ளையில்லாமல் இருக்கும் அவனுடைய பெரியப்பா வந்து அவனைத் தம்மோடு அழைத்துக் கொண்டு போனார். யார் யாரையோ பிடித்து, அவன் இனாமாகப் படிக்க ஸ்காலர்ஷிப்' வாங்கிக் கொடுத்தார். ஹோட்டல்களுக்கு வாடிக் கைப் பால் விட்டு வரும் சொற்ப வரும்படியைக் கொண்டு கோபா லுக்குச் செய்யாததெல்லாம் செய்தார்.
அப்படிப் படித்த கோபால் இந்த வருஷம் பி.ஏ. வகுப்புக்கு வந்திருக்கிறான். அவனுடைய சுபாவமும் ஞானமும் சாந்தமும் எல்லோரையும் வசீகரித்தன. பையன் தன் தாயை யொட்டி, பார்ப் பதற்குக்கூட நன்றாக இருந்தான்.
அவன் ஊருக்கு வரும்போதெல்லாம் அந்தஸ்திலுள்ளவர்கள் கோபாலைப் பார்ப்பதற்காக வருவார்கள். ஒருநாள் ஒரு ஜமீன்தார் வீட்டுப் பையனும் வந்திருந்தான். 'சமூகத்தில் இப்படி, உயர்ந்த அந்தஸ்துள்ளவர்கள்
தன் வீட்டுக்கு வருகிறார்கள், அவர்களுக் கேற்றபடி நடந்துகொள்ள வேண்டுமே' என்ற எண்ணத்துடன் தான் அழகம்மாள் சென்ற ஒரு வருஷமாகக் கன்னிப் பெண்ணைப் போலத் தன்னை யலங்கரித்துக் கொண்டு அழகு பார்த்துக் கொண்டிருந்தாள் என்று நிச்சயமாகச் சொல்ல முடியாது. ஏதோ அவளைத் தூண்டி யது. அவள் செய்தாள். அவ்வளவுதான்.
அவ்வளவுதான். கோபாலுக்குக் கூட அழகம்மாளின் நடவடிக்கையில் ஏற்பட்ட இந்த மாறுதல் அதிசயத் தைக் கொடுத்தது. அப்படியிருக்க ஊராருக்குச் சொல்ல வேண்டுமா?
அலங்
கல்யாணத்துக்கு முந்தியிருந்த அழகம்மாள், இருபது வருஷங் களுக்குப் பிறகு அதே சரீரத்தில் புனர் ஜன்மம் எடுத்ததுபோலக் காணப்பட்டாள். இலையுதிர் காலத்துக்குப் பின் பிறந்த வசந்தத் தின் சோபைபோலக் காணப்பட்டன அவளுடைய உடை காரங்கள். அவள் ஒரு மனிதனுக்காகத் தன வாழ்க்கையைத் தியா கம் செய்தவள். ஆனால் அவளால் அந்தத் தியாகத்தைத் தாங்கமுடியவில்லை. கல் வாழ்க்கையை இழந்த அவளுக்கு இப் பொழுது வாழ்க்கையின்மீது திடீரென்று ஆசை பிறந்தது.பாவம், அந்த வாழ்வாசையினால்தான் தன் புருஷனது கஷ்ட ஜீவனத்தையும் பொருட்படுத்தாது, சாதாரணமாக வாங்குவதைவிட இரட்டிப்புப்
பங்கு விலையுள்ள புடவைகளை வாங்குவாள். இப்போது
அவற்றை மாசுபடாமல் உடுத்திக் கொள்வது வழக்கம். இருபது வருஷமாகப் புழுதியில், தூசி தும்பில், நடமாடிக் கூலிக்காரியாக வாழ்ந்தவள் நிமிஷத்துக்கு ஒருதடவை தன் ஆடையில் ஒட்டிய

மாசை இரண்டு விரல்களால் சுண்டித் தட்டிவிட்டுக் கொள்ளுவது ஊர்ப் பெண்களின் கண்களுக்குப் படாமல் போகவில்லை. முகத்தைக் கழுவுவது ஒரு நாளைக்கு இத்தனை தடவையென்றில்லை. வெற்றிலை, வெற்றிலை - ஓயாமல் வெற்றிலைதான். சிவந்த வாயில் அனாயாசமாக வெற்றிலை மெல்லும் தோற்றம் கவர்ச்சியளிக்கத்தான் செய்யும் என்றாலும் இப்போது அவளுக்குப் பிராயம் தவறி விட்டது. ஆனால், அழகு செய்து கொள்ளவேண்டு மென்று நினைக்
க்கும்போது சரீர லக்ஷணங்களை யார்தான் கவனிக்கிறார்கள்? இவளுடைய புதிய போக்கைச் சூழ்ந்து அபவாதத்தைச் சிருஷ்டிக்க முயன்ற ஊர்ப் பெண்களின் வாயை, அழகம்மாளின் பரிசுத்தமான நடத்தை மூடி விட்டது. ஆனால், ஒரு நாள் மதுரையிலிருந்து வந்த கோபாலின் கண்களுக்கு இந்தத் தோற்றம் எப்படியோதான் இருந்தது. இருந்தாலும் தன் நவநாகரிகமான நிலைக்கேற்பத் தாயும் தன்னைத் திருத்திக்கொண்டால் அதில் என்ன குற்றம் என்று சமாதானம் செய்து கொண்டான்.
புடவை
ஒருநாள் வீட்டுக்கு ஒரு புடவை வியாபாரி வந்தான். விலை உயர்ந்த புடைவைகள். கோபாலும் அப்போது ஊருக்கு வந்திருந் தான். அழகம்மாளின் குடும்ப நிலைக்கு அப்படிப்பட்ட சேலைகளை வாங்கக் கனவுகூடக் காணமுடியாது. ஆனால் அவற்றை வாங்கத் தான் வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தாள், விவரம் அறியாத சிறு பெண் மாதிரி. கோபாலுக்கு என்ன வென்றே புரியவில்லை. வியாபாரியின் பககத்தில் உட்கார்ந்து கொண்டிருந்த கோபாலை வீட்டுக்குள்ளே வரும்படி அழைத்தாள் அழகம்மாள். கோபால் போய் நின்றதும் அழகம்மாள் மிகவும் ரகசியம் போலவும், பரிதாபகரமான குரலிலும், "கோபால், அவர் வேஷ்டி யெடுக்க வேண்டுமென்று நாலு ரூபாய் வச்சிருந்தார். அதை எடுத்துக் கிட்டேன். என் கிட்டே மூணேகால் ரூபாய் இருக்கும், சேலைக்கு இன்னும் அஞ்சு ரூபாய் வேணும். உன் கிட்டே இருக்கா ?" என்றாள்.
கோபாலுக்குத் திடுக்கிட்டு விட்டது. இதுவரைக்கும் தாயார் தன்னிடம் பணம் கேட்டதே இல்லை. தவிரவும்,அவன் சம்பாதிக் கிறானா என்ன? அதுமட்டு மின்றி கந்தலை உடுத்திக் கொண் டிருக்கும் கோனாரைக் கவனியாமல், போனமாதத்தில்தான் ஒரு விலையுயர்ந்த புடைவையை எடுத்துவிட்டு, இப்பொழுது திரும்பவும்

எடுக்கவேண்டும் என்று கேட்டால் அதற்கு என்ன அர்த்தம்? அத்தோடு விலை குறைந்த புடைவைகள் இருந்தும் இப்படி பணத் தைக் கரியாக்க நினைப்பானேன்?
"என் கிட்டே ஏதம்மா பணம் ?" என்றான் கோபால்.
இல்லையாக்கும். உன் கிட்டே இல்லாவிட்டால் பண்ணையா ரிடத்தில் கேளேன். அவர்தான் உன்னிடத்திலே, பார்த்த இடத்தி லெல்லாம் பிரியமாயிருக்கிறார் என்று ஊரெல்லாம் சொல்லுகிறார் களே "
என்றாள்.
கோபால் உண்மையிலேயே அதிர்ச்சி யடைந்தான். 'பண்ணை யாரிடம் கடன் கேட்கவா? இவ்வளவு மதிப்புக்குறைந்த காரியத் தைச் செய்ய அழகம்மாளும் தூண்டி விடுவதா?' என்று நினைத்துத் திகைத்தான். யாரிடத்திலும் எந்தத் தயவையும் எதிர்பாராது மானத் துடன் வாழவேண்டு மென்று எத்தனையோ கஷ்டமான சந்தர்ப்பங் களிலும் சமாளித்த அழகம்மாள் இப்போது தன்னைப் பண்ணையார் வீட்டில் கடன் கேட்கத் தூண்டுவதா? கோபாலுக்குக் கோபம் கூட வந்தது, உடனே, "போனமாதம் தானே ஒரு சேலை எடுத் தாற்போலிருக்கிறது. அதற்குள் என்ன? அப்பாவின் வேஷ்டி யைப் பார்த்தாயா ?" என்றான். அவ்வளவுதான், அழகம்மாள் அழுது விட்டாள். அவளுடைய விம்மலும் பெருமூச்சும் வீட்டு வாசலுக் குக் கேட்டன. நெஞ்சிலே பற்றி எரியும் நெருப்பை இந்தப் பெரு மூச்சு ஒன்றே பக்குவமாக ஊதிவிட்டது.
அழகம்மாள், தன் நல்வாழ்வுக்குக் கிருஷ்ணக் கோனார் தடங்க லாக நின்றார் என்பதை எண்ணிச் சில சந்தர்ப்பங்களில் மனத் துக்குள்ளேயே வருந்தியதுண்டு. ஆனால் அழவில்லை. இன்றுதான் முதல் முதலாக அழுதாள். ஒரு பெரிய பந்தலைச் சாய்க்க ஒரு தூணைச் சாய்த்தாலே போதும். இந்தப் புடவை விஷயம், வருஷக் கணக்காகத் தெரியாமல் அடங்கியிருந்த அவள் துயரம், அழுகை மூலம் வெளிப்படக் காரண பூதமாயிருந்தது.
என்ன தேறுதல் மொழிகளைச் சொல்லுவதென்றே கோபா லுக்குத் தோன்றவில்லை. கண்ணில் கலங்கிய கண்ணீர் கீழே உருண்டு விழாதபடி முகத்தை மேல் நோக்கித் திருப்பிக்கொண் டான். அன்று புடவை வியாபாரியைப் போகச் சொல்லிவிட்டு கோபாலும் வெளியே போய்விட்டான். அதே அலங்காரப் பைத் தியம் இன்று விடுமுறையில் கோபால் வந்திருக்கும் இந்தச் சந்தர்ப் பத்திலும் தலைவிரித்தாடத் தொடங்கிவிட்டது.

பண்ணையார் விடைபெற்றுக்கொண்டு வெளியே போய்விட்டார். கோபால் வீட்டுக்குள்ளே வரும்போது அழகம்மாள் வாரி முடித்த தலையுடன் தண்ணீர்ப் பானையில் முகத்தைப் பார்த்துக் கொண்டு குங்குமத்தை அழித்து அழித்து வைத்துக்கொண்டிருந் தாள். கோபால் உள்ளே போனதும், திரும்பிப் பார்த்தபோது அழ கம்மாள் முகத்தில் காலணா அகலத்தில் இருந்தது குங்குமம்; உதடோ ரத்தச் சிவப்பு - வெற்றிலைக் காவியினால். பக்கத்தில் உள்ள பாதரசத் துளிகள் சிறிதே தொட்ட மாத்திரத்தில் பளிச்சென்று ஒன்றாகக் கலந்து விடுவதைப்போல, இந்த இரண்டு சிவப்புக்களும் எட்டிப் போய் ஒன்றாகக் கலந்து முகமெங்கும் சிவப்பு வண்ணம் ஆகும்படி செய்து விட்டன. கோபாலுக்கு வெட்கமாகக் கூட இருந்தது. என்ன சொல்லுவது?
மாலைக் கருக்கலில் ஓய்ந்து போய்த் தள்ளாடிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தார் கோனார். அவர் குளிப்பதற்காகத் தினம்தோறும் வெந்நீர் போட்டுத் தயாராக வைத்திருக்கும் அழகம்மாள் அன்று தன் அலங்காரத்திலேயே நேரத்தைப் போக்கிவிட்டாள்.
அதனால், கோனார்,"வெந்நீர் இருக்கா ?" என்று கேட்டதற்கு வெடுக்கென்று, "என்னாலே ஒண்ணும் ஆகல்லே ஐயா... எல்லா வேலை யையும் செய்துட்டு வெந்நீரையும் போட்டு வைக்க எனக்கு நாலு கையில்லே " என்றாள்.
கோனாருக்கு இந்த வர்ம - அடிகள் சகஜம்தான். ஆனால் கோபால் வரும்போதுதான் தனக்கு இந்த அவஸ்தை யென்பது அவருக்குத் தெளிவாகத் தெரிந்த விஷயம். நேற்று இஞ்சிச் சாறு சாப்பிடச் சொல்லிப் பரிவோடு சொன்ன அதே வாயில்தான் இந்தச் சுடு சொற்களும் கிளம்பின. அப்படியே பருத்திமார்ப் படலின் மறை வில் ஜில்லிட்டுக் கிடக்கும் மண்பானைத் தண்ணீரை எடுத்து உடம் பில் கொட்டிக் கொண்டார்.
கோபால் ஒன்றையும் கவனியாதவன்போல இருந்தான். இந்தச் சந்தர்ப்பத்தில் தன் கோழிக் குஞ்சைக் காணோம் என்று தேடிக் கொண்டு வந்த பக்கத்து வீட்டு அம்மாள் கோபாலிடம் ஏதோ பேச்சுக் கொடுத்தாள். அப்போது அவள் வெளியே வந்த அழகம் மாளையும் அவளுடைய 'அலங்கார'த்தையும் பார்த்து,"மகன் வர்க போதெல்லாம் அம்மாவுக்குச் சந்தோஷம் பொறுக்க முடியல்லே.

நேத்தெல்லாம் - எதுக்கு - இந்த ஒரு வருஷமா அவளுடைய குமமும் வெத்திலையும் எங்கே போச்சோ? இப்போ மகன் வந்தது எல்லாம் வந்துவிட்டது!" என்று சொல்லிச் சிரித்தாள்.கோனா தவிர்த்து மற்ற இருவரும் சிரித்துக் கொண்டார்கள். ஆனால் கோனார் சிரிக்காததற்கும், அழகம்மாளும் கோபாலும் சிரித்ததற்கும் பொருள் ஒன்றுதான்.
-
இரவு தகப்பனும் மகனும் பக்கத்தில் உட்கார்ந்து சாப்பிட் டார்கள். சாப்பாட்டின் நடுவே, "கோபாலு, கொஞ்சம் கறி விட்டுச் சாப்பிடேன் " என்றார் கோனார். இதைக் கா
தில் கேட் டதும் அழகம்மாள், ''அவனுக்குக் கறிவிடுவதற்கு எனக்குத் தெரியாதா? நீங்க சொல்லித்தான் அவனை இதுவரைக்
துவரைக்கும் நான் வளர்த்தேனா ?'' என்றாள். ஆனால், அத்தோடு நிறுத்தவில்லை.
?" அதற்கு மேலாகவும் போய், "நான் செய்ததும் செய்யாததும் அந்த அவிஞ்ச கண்ணுக்குத் தெரியப் போகிறதா?" என்றும் சொல்லி
விட்டாள்.
எல்லா விஷயங்களுமே இன்றுதான் உச்சத்தில் வந்து நின்றன. சாப்பாட்டை அப்படியே வைத்துவிட்டு எழுந்து வாசலுக்குப் போய் விட்டார் கோனார். அழகம்மாள் இதைச் சட்டை செய்யவே இல்லை. திகைத்துப் போய் உட்கார்ந்திருக்கும் கோபாலின் எச்சிற் கையில் சாதம் உலர்ந்து பிசு பிசுத்தது.
கோனாரின் அழுகையொலி தீடீரென்று வாள் உரசுவது போல ஒரே தடவைதான் கேட்டது. அதற்குமேல் சத்தம் கேளாமல் அழுகையை அடக்கிக் கொண்டார். கோபால் எழுந்து வாசலுக்கு அவன் எவ்வளவு தேற்றியும் அவர் அழுகை நிற்கவே இல்லை.
வந்
இந்தத் துயர நாடகம் நாளுக்கு நாள் சோகத்தை அதிகரித்து கொண்டு போனால் அதன் முடிவுதான் என்ன? கோபால் மனம் கலங்கினான். தான் வரும்போது மட்டும் தாயார் அவரிடம் இவ் வளவு மூர்க்கமாக நடந்துகொள்ளவும், அத்தோடு அதிசயமாக அலங் காரம் செய்து கொள்ளவும் காரணம்? குடும்பத்தின் கஷ்டநஷ்டங் களைக் கவனியாமல், ஈவிரக்கமற்ற ராக்ஷஸியைப் போன்றிருந் தாள் அழகம்மாள். 'இப்போதும் ஏன் மதுரையை விட்டு வந்தோம்' என்ற ஒரே உணர்ச்சிதான் அவனுக்கு ஏற்பட்டது. கடைசியில்

கோனாரை ஒருவாறு தேற்றிவிட்டுப் படுத்தான். முந்தின நாள் இரவைவிட இந்த இரவு மகா கொடூரமாக இருந்தது. கோபால் முள்ளில்தான் புரண்டான் அன்று.
நடுராத்திரி ஆகிவிட்டது. கோனாரின் குறட்டைச் சப்தம் கேட் டது. இந்தச் சந்தர்ப்பத்தில், கொஞ்ச நேரத்துக்கு முன்புதான் கண்ணயர்ந்த கோபால் எப்படியோ தூக்கம் கலைந்து எழுந்தான். வீட்டுக்குப் பின்னால் சிள்வண்டுகள் இரைந்து கொண்டிருந்தன. அதே சுருதியில் வீட்டுக்குள்ளிருந்து அழகம்மாள் அழுவதும் ஈனஸ். வரத்தில் கேட்டது.
இந்த மெல்லொலிகளின் மூலம் இரவு பயங்கரமாக மாறியது. மெல்ல எழுந்தான். நெஞ்சு 'திக் திக்' கென்று அடிக்கொள்ள, கோபால் கதவின் பக்கமாக வந்து இடுக்கு வழியே உள்ளே பார்த்த போது 'மினுக் மினுக்' கென்று எரியும் அகல் விளக்கின் மங்கிய ஒளியில் விரித்த கூந்தல் கன்னங்களை மறைக்கும்படியாகக் குனிந்து கொண்டு அழகம்மாள் ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தாள். குளறுகின்ற சொல்லில்,
"சேனை தளத்தோடே - உன்னை சேர்ந்திருக்கக் கிட்டலையே"
என்று மாறி மாறிச் சொல்லிக் கொண்டிருந்தாள். பைத்தியம் தான் பிடித்துவிட்டதா அழகம்மாளுக்கு? கோபால் பயந்தே போய் விட்டான். அவன் உடம்பு நடுங்கியது. கதவை ஓங்கி ஒரு குத்துக் குத்தி, "அம்மா!" என் று அலறினான். அவ்வளவுதான், உடனே எழுந்துவந்து கதவைத் திறந்தாள் அழகம்மாள். "அம்மா, என்ன அம்மா ?" என்று அவள் கைகளைப் பிடித்தான். பயத்தினால் கோபாலின் விழிகள் வெளியே பிதுங்கியிருந்தன. அழகம்மாளின் முகத்தையே கூர்ந்து பார்த்தான். சிறிது நேரம் கழித்து அவள் தன் கண்களைத் துடைத்துவிட்டு, "ஒன்றுமில்லை, எங்க அப்பா நினைவு வந்தது. அவரை நினைச்சு அழறேன், கோபாலு ”
என்றான்.
று
"பத்து வருஷங்களுக்கு முன்னாலே செத்தவருக்கு இப்போ என். சொல்லிவிட்டுத் என்ன அழுகை - இந்த ராத்திரியில் ? ” தாயின் பதிலை எதிர்பார்த்தான் கோபால். அவள் பேசாமல் நின்றாள்.

''
அவரை நினைச்சு அழுகிறேன் என்று பழையபடியும் சொன்னாள்.
அழகம்மாள் உண்மையைச் சொல்ல மாட்டாள், சொல்லவும் இல்லை யென்பது கோபாலுக்குத் தெளிவாகத் தெரிந்தது. அவ னுக்கு ஒன்றுமே புரியாமல், உடலும் மனமும் புழுவாகத் துடித் துக் கொண்டிருந்தான். மிகவும் கோப வெறியோடு, "எதற்கம்மா இப்படி எல்லோரையும் சித்திரவதை செய்றே? எதுக்குத்தான் அழறே?'' என்று வீடே கிடுகிடுக்கும்படி கேட்டுவிட்டுத் திடீ ரென்று குரலைத் தாழ்த்தி ரகசியத் தொனியில், "அம்மா, என் அழறே ? சொல்லு" என்றான்.
"சேலை...'' என்ற ஒரே ஒரு சொல் மட்டும் அழகம்மாள் வாயி லிருந்து வெளியே வந்தது.

'அம்மாவுக்குப் பைத்தியமா, என்ன? சேலைக்குத்தானா இப்படி ஒப்பாரி வைத்து அழுகிறாள்? உண்மையில் சேலைக்குத்தானா இது கோபால் தத்தளித்தான். அம்மாவுக்குப் பைத்தியம்தான் பிடித்து விட்டது என்று நினைத்து வாசல் திண்ணைக்கு ஓடிக் கோனாரை எழுப்பப் போனான்.
கோனார் இவன் எழுப்பும் வரை காத்திருக்கவில்லை. எழுந்து தான் இருந்தார். எழுந்து,உட்கார்ந்து, முகத்தில் துணியைப் போட்டு மூடிக்கொண்டு 'மூஸ் மூஸ்' என்று பெரு மூச்சோடு கேவிக் கேவி அழுதுகொண்டிருந்தார். கோபாலுக்கு இரண்டு பக் கத்திலுமே கொள்ளிதான் சுடர் விட்டு எரிந்து கொண்டிருந்தது !
அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. ஆனால், தெய்வாதீனமாக, இவர்களுடைய பாபாப்பும் கூச்சலும் ஊரை யெழுப்பி விட்டன. பக்கத்து வீட்டார்கள் எழுந்து வந்து விட்டார்கள். ஊர்க் கூட்ட மாக ஜனங்கள் கூடிவிட்டார்கள். அழகம்மாளின் பைத்தியம் ஊர்க் கூட்டத்தைக் கண்டதும், சிறிது மட்டுப்பட்டது. அழகம்மாள், வெட்க மேலீட்டால், பழைய அழகம்மாளானாள். ஆனால் ஊர் ஜனங்களின் புலன் விசாரணைக்குப் பதில் சொல்லியாக வேண்டுமே!
கோபால் இடிந்துபோய் உட்கார்ந்து விட்டான். ஏறக்குறைய இதே நிலையில் தான் கோனாரும், அழகம்மாளும் ஆளுக்கு ஓர்
இடத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள்.

சந்தடிகளெல்லாம் சிறிது சிறிதாகக் குறைந்து மட்டுப்படவே பக்கத்து வீட்டு அம்மாள் - முதல் நாளும், அன்றும் அழகம்மாளுக்

கும் கோனாருக்கும் இடையே நிகழ்ந்த இந்தப் பிணக்கின் இரண் டொரு வெறியாட்டங்களைச் சாடையாகப் பார்த்தவள் என் னவோ, புருஷன் பெண்டாட்டிக் குள்ளே கொஞ்சம் மனச் சடைவு. நேத்திலிருந்தே ஒரு மாதிரியா இருக்கிறாக. நேத்துக்கூட அழகம் மாள் பணியாரம் சுட்டுக் கொண்டிருந்தாள். அப்போது கோனார் அண்ணாச்சியைப் பார்த்து அழகம்மாள் எதுக்கோ வெடுக்கென்று சொன்னது கேட்டது. என்னவோ ஏதோ என்று நானும் பேசாம லிருந்து விட்டேன் " என்று விஸ்தாரமாக விளக்கினாள் ஊர் ஜனங் களுக்கு. இப்போதுதான் விஷயம் என்னவென்று புரிந்தது. கோனாருக்கும் அழகம்மாளுக்கும் கோபாலுக்கும் கூட இப்போது தான் விஷயம் என்ன வென்று புரிந்தது போல் இருந்தது.
"
பழையபடியும் கோனாருக்கும் அழகம்மாளுக்கும் ஒவ்வாமல் போய் விட்டது என்ற அதே காரணம் தான், நீரில் மூழ்கி வெளியே தலைகாட்டும் தெப்பத்தைப்போல வெளியே தெரிந்தது.
ஊரார் இரு சார்பிலும் சமாதானப் படுத்திவிட்டுப் போய்விட் டார்கள்.
கடிகாரப்படி, விடிவதற்கு இன்னும் ஒரு சில மணிகள் தான் இருந்தன. ஆனால் கோபாலுக்கு எத்தனையோ சதுர் யுகங்களைக் கடக்க வேண்டும் போல இருந்தது.
விடிவதற்கு முன்பாகவே
'படிப்பை இம்மட்டில் நிறுத்திவிட்டு அம்மா வை மதுரைக்கு அழைத்துக் கொண்டுபோய், தான் ஏதாவது ஒரு உத்தியோகத்துக்கு வழிதேட வேண்டியது தான் ; பெரியப்பா ஒரு சில மாதங்களுக்குத் தன் தாயாரைப் பராமரிக்கச் சம்மதித்தால் பி.ஏ. பரீக்ஷை முடியும் வரை படிக்கலாம். கிருஷ்ணக்கோனாரோ, கிராமத்திலேயே இருந்து தம் வாழ்நாளைக் கழிக்க வேண்டியதுதான்! என்று திட்டமிட்டான் கோபால்.
'தகப்பனார் ஊரில் தங்கி விட்டால் அவருக்குச் சமைத்துப் போடுவது யார் ? இந்த வயோதிகத்தில் அவர் தனியே எப்படிக் காலந் தள்ளுவார் ?....'
சிக்கல் அவிழும்போதே, புதிய சிக்கல் விழுந்ததுபோல் இருந் து அவனுக்கு. மனத்தில் சமாதானம் ஏற்படாமல் தூங்குவது

எப்படி? நாளை விடிந்தால் அந்தத் தேதியிலிருந்து தொடங்கும் எதிர்காலத்தில் வாழ்க்கை நடத்துவதுதான் எப்படி?
கடைசியில் கோபாலுக்கு ஒரு யோசனை உதயமானது.
அதன் படி நடக்குமா நடக்காதா என்றாலும், மனோராஜ்யம் மனச்சாந்திக்கு வழிக்காட்டத்தான் செய்தது.
தன் பாட்டியின் ஊருக்கு - அழகம்மாளின் பிறந்தகத்துக்கு- அப்பாவை அனுப்பி விடுவது; அங்கே அவர் நிலபுலன்களைக் கண் காணித்துக் கொள்ளவும், வேண்டிய வேலைகளைச் செய்யவும் மாட் டாரா? நல்லகாலம் பிறந்த அன்றைக்குத் தகப்பனாரைத் தன்னிடம் அழைத்துக்கொள்ளுவது...
இருபது வருஷகாலத்துக்குப் பிறகு தலைவிரித்தாடிய பிசாசு அலுத்துப்போன பாவனையில், மூவரும் அன்று படுத்திருந்தார்கள். ஆனால் தூங்கவில்லை ; விழித்துக் கொண்டுதான் இருந்தார்கள்.