Pages

Saturday, June 25, 2011

வண்ணத்துப் பூச்சியும் கடலும் பிரமிள்


வண்ணத்துப் பூச்சியும் கடலும்
 பிரமிள் 


சமுத்திரக் கரையின்
பூந்தோட்ட மலர்களிலே
தேன்குடிக்க அலைந்தது ஒரு
வண்ணத்துப் பூச்சி
வேளை சரிய
சிறகின் திசைமீறி
காற்றும் புரண்டோட
கரையோர மலர்களை நீத்து
கடல் நோக்கிப் பறந்து
நாளiரவு பாராமல்
ஓயாது மலர்கின்ற
எல்லையற்ற பூ ஒன்றில்
ஓய்ந்து அமர்ந்தது
முதல் கணம்
உவர்த்த  சமுத்திரம்
தேனாய் இனிக்கிறது.


உள் முரண்

பிரமிள் 


அலைகளiன் சொல்தொடர்கள்
செவிட்டு மண்கரையில்
காற்றின் யாத்ரையை
கண் தொடர்ந்தால்
விழிப்பின் நடையை
தடுக்கி விழுத்தும்
மண்துகள்
தீயின் தௌiவினுள்
இமைவிழும் சாம்பல்.


பிரமிள் கவிதைகள்
தொகுப்பு: கால சுப்ரமணியம்
லயம் வெளியீடு
அக்டோபர், 1998

327 பக்கங்கள்

பிரமிளின் கவிதைகள் கால சுப்பிரமணியம் அவர்களால் தொகுக்கப்பட்டு ‘அடையாளம்’ பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. இணையத்தில் http://www.udumalai.com/?prd=&page=products&id=6091 வாங்கலாம்.