வண்ணத்துப் பூச்சியும் கடலும்
பிரமிள்
சமுத்திரக் கரையின்
பூந்தோட்ட மலர்களிலே
தேன்குடிக்க அலைந்தது ஒரு
வண்ணத்துப் பூச்சி
வேளை சரிய
சிறகின் திசைமீறி
காற்றும் புரண்டோட
கரையோர மலர்களை நீத்து
கடல் நோக்கிப் பறந்து
நாளiரவு பாராமல்
ஓயாது மலர்கின்ற
எல்லையற்ற பூ ஒன்றில்
ஓய்ந்து அமர்ந்தது
முதல் கணம்
உவர்த்த சமுத்திரம்
தேனாய் இனிக்கிறது.
உள் முரண்
பிரமிள்
அலைகளiன் சொல்தொடர்கள்
செவிட்டு மண்கரையில்
காற்றின் யாத்ரையை
கண் தொடர்ந்தால்
விழிப்பின் நடையை
தடுக்கி விழுத்தும்
மண்துகள்
தீயின் தௌiவினுள்
இமைவிழும் சாம்பல்.
பிரமிள் கவிதைகள்
தொகுப்பு: கால சுப்ரமணியம்
லயம் வெளியீடு
அக்டோபர், 1998
327 பக்கங்கள்
தொகுப்பு: கால சுப்ரமணியம்
லயம் வெளியீடு
அக்டோபர், 1998
327 பக்கங்கள்
பிரமிளின் கவிதைகள் கால சுப்பிரமணியம் அவர்களால் தொகுக்கப்பட்டு ‘அடையாளம்’ பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. இணையத்தில் http://www.udumalai.com/?prd=&page=products&id=6091 வாங்கலாம்.