Pages

Friday, April 08, 2016

கை விளக்கு , வேகம் - ஆனந்த்


ஆனந்த்
நன்றி : லயம் 13 
google-ocr

கை விளக்கு 

முன்னொரு காலத்தில்
நான் ஒரு கோட்டின்
மேல் நடந்து கொண்டிருந்தேன்.
அப்போது என் கையில்
சிறு விளக்கொன்று
இருப்பதுண்டு.

இருள் சூழ் உலகின்
மையத்தில் ஒரு சிறு
ஒளிவட்டம் கோட்டின்மேல்
மெல்ல
 நகர்ந்து கொண்டிருந்தது.

ஒருநாள் இருளை
விழுங்க நினைத்து
முடியாமல் -
ஒளியை விழுங்கினேன்

இப்போது நான் - வேகம்
கோட்டின் மேல் நடப்பதை
விட்டு விட்டேன்.

எங்காவது பார்க்க
அல்லது போகநினைத்தால்
என் வயிற்றிலிருந்து -
ஒளிவட்டம் விரிகிறது
 நினைக்குமளவிற்கு

விரிந்த ஒளிவட்டத்தின்
பரப்பினுள் எல்லா
இடத்திலும் இருக்கிறேன்.

நேற்றே முகர்ந்த -
நாளைய மலர்கள்
 இன்று மலர்கின்றன.
*
.
வேகம்

 பூமியை பிளந்து
 வெடித்துச் சீறி
வான் நோக்கிப் பாய்கிறது
தென்னை மரம்.

உச்சியில் நாற்புறமும்
மட்டையும் ஒலையுமாய்
 பீய்ச்சி அடிக்கிறது.

சொட்டுச் சொட்டாய்
துளிர்த்து உடன்
வளர்கின்றன
தேங்காய்க் குலைகள்.

மலைகளும் மடுக்களும்
கண்ணெதிரே உருவாகும்
கதி மாறிய உலகில் -
உள்ளே சுற்றுமுற்றும்
பார்த்து வியந்து நிற்கிறேன்
என்னை மட்டும்
காணவில்லை