Pages

Friday, April 08, 2016

பிட்சாடனரின் கேசம் - எஸ். ராமகிருஷ்ணன்


WWW.padippakam.com
காலண் டி த ழ் 1 9 9 8
இதழ் - 9 விலை 25/
காலக்குறி | 9அக், 98
படிப்பகம்
 பிட்சாடனரின் கேசம்
எஸ். ராமகிருஷ்ணன்
Automated google-ocr in windows using python 2.7
https://github.com/tshrinivasan/google-ocr-python

ஊரின் மையமாக இருந்தது பிட்சாடனரின் வீடு. கிளை பிரியும் பாதைகள் கூடுமிடமது. வீடென் றாலும் அதன் விஸ்தாரம் மிகப் பெரியது. அகன்ற கூடாரங்களும், சரவிளக்கு தொங்கும் தூண்களும் இதழுக்குள் இதழ் சொருகிய மலர் போல உள் அறைகளும், சப்தம் தெறித்து திரும்பும் மூலைகளும் கொண்ட அந்த வீடு உயரமாக கட்டப் பட்டிருந்தது. விசித்திரமான அந்த வீட்டின் அறைகளில் சில எப்போதும் குளிர்ச்சியும் சிலவற்றில் வெம்மையும் கூடியிருந்தன. குனிந்து செல்லும் கதவுகள் கொண்ட உள் அறைகளில் எதிலோ பசுக்களின் நடமாட்டச் சப்தத்தையும், மகுடி இசைப்பவர்களின் மெல்லிய ஓசையையும் தாழம்பூவின் வாசனையும் வெளிப்பட்டன. பிட்சாடனரின் வீட்டின் உள்ளே முப்பது படுக்கையறைகள் இருப்பதாகவும், நாளொன்றில் ஒரு சயனம் கொள்ளும் அவருக்கு இரண்டு மனைவிகள் இருந்ததாகவும் ஊரில் அறிந்திருந்தனர். எனினும் அவர் மனைவியரை நேரில் கண்டவரில்லை. வீட்டி னின்று வான்நோக்கி நீண்ட புகைப்போக்கியுண்டு எனினும் அங்கு சமையலறையோ, சமைப்பதோ கிடையாது. ஆயினும் தேடி வருபவர்களுக்கு அவ்வீட்டில் எந்நேரமும் இனிப்புவடிசலும் உப்பில்லாத சாதமும் உணவாக கிடைப்பது தொடர்ந்தது. வீட்டின் முன் பரந்த வெளியில் இருந்த கிணற்றடி அருகே பருத்த வேம்பு கிளைத்து நின்றது. அதனடியில் வயதானவள் ஒருத்தி வீட்டிற்கு வந்து போகிறவர்களைக் கண்டபடியிருப்பாள். பிட்சாடனாரை வெளியில் பார்ப்பது அரிது, என்றாவதுதான் வீட்டினின்று வெளியே தென்படக்கூடும்.

கருத்த உருவமும் மஞ்சள் ஒடிய கால்களும் வெடிப்புகொண்ட உதடுகளான அவர் தோற்றமே ஈர்ப்பு கொண்டது. எனினும் அவரை ஞாபகம் கொள்ளச் செய்வது சுருண்ட கேசமே. முதுகு வரை சுருள் விட்டு தொங்கும் கேசம் காற்றில் அலையாடி ரகசிய சப்தமிட்டு உரசும். எப்போதாவது அவர்தன் கேசசுருளில் இலையோடு கொய்த கொன்றை மலரை சூடியுமிருப்பார். அவரின் இடது தோளில் அமர்ந்தபடி வெண்கொண்டை கிளியொன்று உடன்பேசி வரும். பிட்சாடனரின் செய்கைகளும், குணமூர்க்கங்களும் எவராலும் புரிந்து கொள்ளப் பட்டதில்லை. என்றோ பகலில் அவர் வீதிகளின் சந்திப்பில் நின்றபடி மணலை வாறிவாறி தன் மீது கொட்டி குளித்ததையும், தாளாத கோடையில் அவரது உடலை ஸ்பரிசம் கொண்ட நாவிதன் உறை பனியின் குளிர்ச்சி போல தீண்ட முடியாத குளிர்ச்சி கொண்டதை உழறியதையோ, சவத்துணியை போர்த்திக் கொண்டு பதினாறு நாட்கள் வெடித்த கரிசல் வெளியின் கூந்தல் பனையடியில் உறங்கி கிடந்தபோது அவர் உடலில் ஒளி கசிந்ததாகவும் அறிந்தவர்கள் இதை இயல்பென்று சொல்லிக் கலைந்தனர்.

பிட்சாடனருக்கு நண்பர்களேயில்லை. தேடி வருபவர்கள் பெரிதும் வாத்தியக்காரர்களாகவே இருந்தனர். எங்கிருந்தோ இசைக் கருவிகளுடன் திறந்த மார்பும் விபூதியிட்ட நெற்றியுமாக சந்தன வாசனை வீச இசைஞர்கள் வந்து சேருவார்கள். அகன்ற இசை கூடத்தில் தாளக் கருவிகளின் சப்தம் சுழலும், மறைவான அறைகளில் இருந்து எவரோ அதைகேட்டுக் கொண்டிருப்பார்கள். பிட்சாடனர் தூணில் சாய்ந்தபடி இசையைக் கேட்டுக் கொண்டிருப்பார். அவரின் இசைக் கூடத்தில் மயக்கமான நிசப்தம் கூடியிருந்தது. எவரும் வராத நாட்களில் தனித்து பரமபதம் ஆடிக்கொண்டு இருக்கவும் பழகியிருந்தார். நள்ளிரவில் என்றாவது இனம்புரியாத இருள் படர்ந்த ஊரின் புறவெளியில் பிட்சாடனர் நடமாடும்போது நாங்கள் அவர் காலைச்சுற்றி கொஞ்சி அலைவதை ஆந்தைகள் கண்டு கொண்டிருக்கும். அவரது முகத்தில் சலனமேயிருக்காது. ரகசியத்தின் உருப்போல அலைந்து திரிந்தார் பிட்சாடனர்.

பிட்சாடனரின் கிளிக்கு பாஷைகள் பலவும், தத்ததுவ சாஸ்திர பழக்கமும் உண்டென்பார்கள். அக்கிளி உதயத்தின் முன்பாக வீட்டின் தென் கோடிமூலையின்று பாய்ந்து வானின் அதி உயரத்தில் பறந்து பார்வை வெளியின் கடைசிப் புள்ளியில் சுழன்று நடனமாடுவதையும் பின்பு ஒளியின் ரேகைகளுடன் வீடு திரும்புவதும் நாளாக நடந்தேறுகிறது. போகத்தில் மிதந்த எதோவொரு யவனின் உயிர்தான் கிளியாக இருக்கிறதென்றும் அந்த யவனன் கல் தச்சனின் மனைவியை மோகித்து காமம் பீறிட்ட உடலும், குழறிய பாஷையுமாக கல்தச்சனின் மனைவியை ஸ்பரித்து மீள முடியாத இறுக்கத்தில் உடலில் பல் புதைய இருந்த போது குறுக்கிட்டு கள்வன்! கள்வனென கத்திய கிளியின் சிரசை துண்டித்து விட் மோகம் விலக்கிய ஸ்திரி தன் கையில் கிளியின் சிரசை ஏந்திக்கொண்டு கற்பூரம் காய்ந்த நாணல் கொண்டு ஊரைவலம் வந்து துயரம் பீறிட எதையோ முணுத்து அருகாமை குன்றின் அதிஉயரத்திலிருந்து காற்றில் மிதந்து குதிக்க கிளியின் கபாலம் ஒரு எரிநட்சத்திரம் போல வானில் சுழன்று பதுங்கிய விசித்திரம் தொடர போகித்த யவனின் உடலில் உள்ள இறகோட்டம் போல நிற வரிசைகள் தோன்றத் துவங்க, அவன் வேதனையில் சப்தமிட்டே தன் வாழ்நாளில் அரற்றி ஓய்ந்து பின்பு மறுவாழ்க்கையில் கிளியாகியிருக்கிறான் என்றும் பிட்சாடனர்தான் கல்தச்சனின் மனைவியாக இருந்தவர் என்றும் சோழிகளை உருட்டி கணிக்கும் பண்டாரம் சொன்னதும் சிலர் நினைவுகளில் ஒடிக் கொண்டுதானிருந்தது. கிளியோடு பிட்சாடனர் தணிவான குரலில் எதையாவது பேசிக்கொண்டே இருப்பதை இசைத்து முடித்து தூண்களின் ஊடே உறங்கும் வாத்தியக்காரர்கள் கனவில் கேட்பது போல செவியுறு வதும் மூடப்படாத வீட்டின் முன் வாசற்கதவு வழியே நிலா தயங்கி தயங்கி உள்ளே வந்து எட்டிப் பார்த்துப் போவதையும் அறிந்திருந் தனர். விசித்திரம் நடமாடி அலையும் வீடாகவேயிருந்தது.

பிட்சாடனரின் செய்கைகள் என்றும் விபரீதமானவை என ஊரார் அறிந்தேயிருந்தனர். அவர் ஒருநாள் பெரு மழையின் ஊடாக நடந்து சென்ற போது அவரது கேசத்தில் ஒரு துளி மழைக்கூட பெய்யவில்லை என்பதோடு அவர் மழையின் ஊடாகவே மழைபெய்யாத வெளியை கண்டபடி நடந்து அலைந்தார் என்பதும் மழை அவரது நடமாட்டத்திற்கு வழி தந்து பெய்து கொண்டிருந்தும் நடந்தது. காற்று மழையைக் கலைக்கும் வரை நடந்து திரிந்தார். இதற்கு மாறாக கோடையில் வெக்கை பீடித்த வீதிகளில் பெண்கள் ரணமேறிய முகத்துடன் உக்கிரம் கொண்ட நாளில் தெருவில் எதிர்பட்ட பிட்சாடனரின் கேசத்தின் ஒவ்வொரு கற்றைச் சுருளும் விடாது மழையை கொட்டியதையும் காற்று அவர் தலையைக் கடக்கும்போது சாரல் தெறிப்பதைக் கண்ட அவர் பெண்கள் வியந்து நின்ற போது குழந்தையைப் போல கேசத்தை தன் விரல்களால் சிலிப்பி அடித்தபோது அதனின்று ஒரு கற்றை மழை தெரித்து பெய்ததையும் விரல் சிடுக்கிய மயிரின்று மின்னல் ஒன்று வெடித்து வானில் பாய்ந்து மறைந்ததையும் கண்டவர் இப்போது மிருக்கிறார்கள்.

தனியனாக வந்து இசைத்துவிட்டு பிட்சாடனரின் வீட்டில் உறங்கும் ஒரு மனிதன் வீட்டில் உறங்காத படுக்கை அறைகளில் நரிகளின் சல்லாபம் நடக்கிறதென்றும் அதன் சிரிப்பொலியைக் கேட்பது நகங்களைக்கூட நடுக்கம் கொள்ள செய்வதாகவும் சொல்லிப் போனதின்பின் பலராலும் அவ்வீடு ரகசியங்களின் இழைகளால் புனைவுகொள்ளப்பட்டு ஊரின்று மிதந்து கொண்டிருந்தது.

பிட்சாடனர் ஒருநாள் வாசலில் நின்றபடி தெருவைப் பார்த்துக் கொண்டிருந்தார். மங்கிய பகலில் ஒரு ஜோடி மாடுகள் தொலைவில் அசையாமல் நின்றன. இலை அசையாத மயக்கம், மரத்தடியில்இருந்த வயதானவள் கண்களைத் திறந்தபடி உறங்கிக் கொண்டிருந்தாள். அசதியும் மயக்கமும் கொண்டதான நாளில் துரத்தில் இரண்டு துந்தனா வாசித்துப் பாடுபவர்கள் இசைத்தபடி வருவதைக் கேட்டார். அவர் தோளில் அமர்ந்த கிளி இசைஞர்களை கூட்டிவர முன் பறந்தது. இமைகளை மூடுவதும் பற்களைக் கடித்துக் கொள்வதுமாகயிருந்த பிட்சாடனர் வாசலில் இறங்கி தன் வீட்டையே யாருடையதோ போல பார்த்துக்கொண்டிருந்தார். வாத்தியக்காரர்கள் மெலிந்த திரேகிகளாகயிருந்தனர். அவர்கள் வீட்டிற்குள் வந்த பிறகு எதையோ நினைத்தவர் போல முணுமுணுத்துக் கொண்டார்.

'அடைத்து சாத்தப்பட்டது கதவு இனி திறக்காது'

தனியாளாக அந்த வீட்டின் முன் வாசல் கதவை மூட அவர் எத்தனித்தபோது பல காலமாக அடைக்கப்படாத அக்கதவின் பின்புறமிருந்த குருவிகளும் வண்டுகளும் பயந்து சிறகடித்துப் பறந்தன. இரட்டைப்பூட்டுக் கொண்ட அக்கதவு மூடிய சப்தம் கேட்டு கிழவி விழித்தபோது அடைக்கப்பட்டிருந்தது கதவு. துந்தனாக்காரர்களுடன் உள்ளே போன பிட்சாடனர் பின்பு கதவைத் திறக்கவேயில்லை. வேம்பு பூக்கும் காலம் வரை போனபோதும் பூட்டிய கதவு சலனமற்று மூடியிருந்தது. எங்கிருந்தோ தேடிவரும் வாத்தியக்காரர்களும், காண வந்தவர்களும் கதவின் முன் நின்றபடி உள்ளே ஏதேனும் சத்தம் கேட்கிறதா எனக் கேட்டனர். ஏதோ ஒரு அறையில் நதியொன்று ஓடுவதுபோல் சப்தம் வருவதாகச் சொன்னான் ஒருவன். இன்னமும் இசை முடியவில்லை என சொல்லிக் கலைந்தனர் பெண்கள். ஆனால் வாசலடி வேம்பின் கீழ் இருந்த கிழவி சொன்னாள்:

'வீடு திறந்துதானேயிருக்கிறது. முன்பு வீட்டிற்கு ஒரேயொரு கதவு. இப்போதோ எல்லாபக்கமும் கதவாகி விட்டது. உள்ளே நடப்பது தெரியவில்லையா என்றாள். அவள் பேச்சிற்கு எவரும் செவிகொடுக்கவில்லை. வயதான மனிதன் கதவில் காதை கொடுத்து கேட்டுச் சொன்னான்'

'சம்போகத்தில் ஆர்வம் கொண்டவன் பிட்சாடனன். நிமிஷ இடைவெளியின்றி இருமனைவி யோடும் சுகித்திருக்க கூடும். இந்திரிய வாசம் முற்றி அடிக்கிறது. ரோகியாக என்றாவது வெளியே வருவான் பாருங்கள்'

மூடப்பட்ட பின்பு அந்த வீட்டின் இருப்பு ஊரையே பயம் கொள்ளச்செய்தது. அங்கு இரவிலும் சுவரில் காதை வைத்து கேட்டும் மனிதர்கள் உலவினர். வீட்டின் சுவர்களின் நதியின் சுழல் போல நீரோட்டம் தெரிவதையும் ஊறுமி அலையும் புலியின் நடமாட்டம் சுற்றுக் கற்களின் ஊடே மறைவதாகவும் அவர்கள் சொன்னார்கள்.

கிழவி இடைவிடாது உளறத்துவங்கினாள். வீட்டின் நீண்ட புகை போக்கியின் வழியே நட்சத் திரங்களும், மேகங்களும் உள் இறங்கி பிட்சாடனரின் மனைவியிருக்கும் அறையில் செல்கின்றன என்றும் அங்கு சுவர்களில் மேகங்கள் திட்டுதிட்டாக படிவதையும், நட்சத்திரங்கள் அதில் பல்லிகள் போல ஒடித்திரிவதையும் தான் கண்டதாக முணங்கினாள். எவரோ பசுக்களின் நடமாட்டம் ஒய்ந்துவிட்டதென்றும் அச்சப்தம் நின்றுபோனதால்தான் வீடு இருந்த அளவிற்கு வானம் எப்போதும் வெளிறி நிசப்தித்து இருப்பதாகச் சொன்னார்கள். இனி எவராவது அந்த வீட்டின் உட்புறங்களை காணவேண்டுமானால் குழி எலி போல துளைத்து மண்ணில் முண்டி பார்த்து வரவேண்டியதுதான் என்றார்கள்.

மழைக்காலம் துவங்கியது. பகலில் ஊர் முழுவதும் மறந்து போயிருந்தனர். பிட்சாடனரின் வீட்டையும் அதன் மூடிய கதவையும். பழுத்த இலைகளையும் நத்தைகளையும் கொண்டு வந்து சேர்த்தது மழை. அதிகாலையில் பெய்யும் வேகமழை தன்விரல்களால் பிட்சாடனரின் மூடிய கதவுகளைத் தட்டி ஒய்ந்தது. நிசப்தம் மட்டுமே நடமாடி கலையும் வீடாகியது. எவருமில்லை! எவருமில்லை! என மழை தானே முணுமுணுத்துக் கொண்டு திரும்பியது. என்றோ துந்தனாவுடன் புறப்பட்டு போன தங்கள் கணவனைக் காணாது அவர்களின் மனைவி, குழந்தைகள் ஈரம் சொட்டும் தலையும், மெலிந்த உடலுமாக பிட்சாடனரின் வீட்டின் முன் நின்று அழுதனர். சமாதானம் செய்துவைக்கவோ தேற்றவோ கூட எவரும் வரவில்லை. மழை மட்டுமே அவர்களோடு இருந்தது. ஈர விரலால் மழையைத் தடவியபடி விசும்பும் அவர்களின் துயரம் தாளாது மழை ஊரை விலக்கி வெற்றுவெளியில் ருத்ரமாகி துந்தனாக் காரர்களே எங்கிருக்கிறீர்கள் என புலம்பி வீசிப் பெய்தது. வெளிறிய கண்கள் கொண்ட சிறுமிகள் இருவர் அடைத்த கதவில் முகம் பதிய கண்டபோது உள்ளே தங்கள் தகப்பன் இமை மூடிப் பாடிக்கொண்டிருப்பதையும், எதிரே தங்க நாணயங்கள் சிதறிக்கிடப்பதையும் கண்டு தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டனர். துந்தனாகாரர்களின் மனைவிகள் கதவில் காதை வைத்தபோது காகங்களின் கரைப்பு மட்டுமே அவர்களுக்கு கேட்டது._ செய்வதறியாது வேம்படியில் காத்துக்கிடந்தனர். கிழவி மழையால் வீட்டின் சுவர்கள் மெல்லிய படலம் போலாகி வருவதாகவும் உள்ளே எவருமே இல்லை என்பது பார்வையிலே தெரிகிறதா என்றாள். வேம்பினடியில் உறக்கம் கொள்ளாது வைக்கோலில் முகம் புதைத்து விசும்பும் பெண்களுக்காக சீரான மழை. வேம்பின் வேர்கள் மண்ணடியிலே ஊர்ந்து வீட்டின் அடிஆழங்களில் துந்தனாகாரர்களைத் தேடின. மழை ஒய்ந்த மாலையில் பிட்சாடனரின் கிளி வீட்டின் புகைக் கூண்டில் தோன்றியதையும் அது வானில் பறக்க எத்தனிக்கும் போது உடன் அறுபத்திநான்கு கிளிக்குஞ்சுகள் பறந்தது கண்டு மனசமாதானம் கொண்டவராக அந்தப் பெண்கள் ஊர் திரும்பிய போது வேம்படிக்கிழவி சொன்னாள்.

'வீட்டிலிருந்த பசுக்கள் யாவும கிளிகளாக பறந்துவிட்டன'

மூன்று கோடைக் காலங்கள் கடந்து போயின. எவர் நடமாட்டமும் வெளிப்படவில்லை. ரகசியத்தின் மீது விருப்பமற்றவர்களாக ஊரார் அவ்வீடை ஞாபகத்தினின்று விலக்கினர். வீட்டின் இருப்பு ஊரினின்று துண்டிக்கப்பட்டது. ஒருவன் மட்டும் அதிகாலையொன்றில் துர்சொப்பன பயத்தில் வீட்டினின்று ஒடி பிட்சாடனர் வீட்டு வாசலை பார்ததுவிட்டு தெருவில் கத்தினான்.

'வீட்டின் படிகள் முன் நகர்ந்துவருகின்றன. வீடு வேறிடம் நோக்கி முன் செல்கிறது'

எவரும் அதனை பொருட்படுத்தவில்லை. துர்சொப்பனக்காரரின் பயமோ வீடு மெல்ல நகர்ந்து வேறு ஊரின் முகப்பில் சென்று நடக்ககூடுமென்றான். இப்பயம் தொற்றிய பண்டுவச்சி அவ்வீடு மெல்ல உயர்ந்து தரையை விட்டு மேலாகி வானத்திற்கும் மண்ணிற்கும் நடுவே மிதந்து கொண்டிருப்பதாகச் சொன்னாள். நிலத்தில் கால்பதியாதது அவ்வீடு என வேம்படி கிழவியும் சொல்லிய மறுதினம் தன்னால் கதவை திறந்துவிட முடியுமென வந்த செம்சடை கொண்ட தலையும், கல்முகமும் கொண்ட சாமியாடி கதவின் துவாரத்தில் தச்சுக்கருவியால் நுட்பமிட்டு திறந்து உள்ளே காலை வைத்தபோது அவன் வீட்டின் உட்புறம் போகாமல் முன்வாசலில் நிற்பதே நடந்தது. அவன் மிரட்சியுற்று உட்பக்கம் என்றோ இல்லாத வீடிது என கத்தி பிரிந்தான். துர் சொப்பனக்காரன் கனவில் யாவர் வீடுகளும் மூதாதையர்களின் கபாலங்களிலும், புதைத்த எருதுகளின் விரிந்த கொம்புகளின் நடுவிலும், ஓடிக் கொண்டிருக்கும் ஆற்றின் கற்படுகையிலும், எவரெவர் எலும்புகளின் நீள்வரிசையிலும் கட்டப்பட்டிருந்தன. வேம்பு பூப்பதும் காய்ப்பது மாகயிருந்தது. மூடிய வீட்டின் கதவுகள் நாட்கணக்குகளை அழித்து நீண்டன. அடைத்த வாசற்கதவில் தவளைகள் அமர்ந்து உறங்கின. எங்கும் கருமை படியத் தொடங்கியது. பகலின் ஒளி வீட்டின் சுவர்களில் படவேயில்லை. முகப்பில் செடிகள் கிளைவிட்டன. சந்தையிலிருந்து வாங்கிய பசுவை தனித்த மலைப்பாதையில் ஒட்டிக் கொண்டு வந்த தரகன் பாறையொன்றின் மீது பிட்சாடனர் படுத்துக் கொண்டிருந்ததையும், உறக்கத்திலும் அவர் கால் பெருவிரல் அசைந்து கொண்டிருப்பதையும் கண்ட நாளில் அவர் கேசம் பாறையை விட்டு ஊர்ந்து தனியே பூக்களை முகர்ந்து கொண்டிருந்ததின் திகைப்பு மேலிட ஊர் திரும்பி சொல்லிப் போனான்.

பிறகொரு நாள் வணிகவீதியில் பிட்சாடனர் தனது அறுபத்திநான்கு கிளிகள் தலைக்கு மேலாக வட்டமிட தனியே மத்தளம் வாசித்துக் கொண்டிருந்ததைக் கண்டதாகவும், ஒரு சமயம் அவர் மூன்று கணிகைகளின் வீட்டு வாசலைப் பற்றிக் கொண்டு மூன்று பேராக ஒரே நேரத்தில் நிற்பதாக சொன்னார்கள். அருஞ்சுனை சாமி கும்பிட காட்டு குன்றுகளின் மீதேறி நடந்துபோன மூன்று _ குடும்பங்கள் பாறைவெளியில் அமர்ந்திருந்த போது வெவ்வேறு வயதில் ஒரே நேரத்தில் பிட்சாடனர் உலவியதாகவும் அவர்கள் வீடு திரும்பும்போது ஓரிடத்தில் இரு துந்தனாக்காரர்கள் இசைத்து பாட கேட்டுக் கொண்டிருந்தார் பிட்சாடனர். அவர்கள் பெயர் விளித்து கூப்பிடவே மூவரும் கலைந்து ஒன்றையொன்று பிணைந்த மூன்று மரங்களாகி நின்றதாகவும், அந்த மரத்தின் கிளைகள் பிட்சாடனரின் கேசத்தின் சுருள் போல இருந்ததாகவும் அதனுள் கிளிகள் ஒளிந்திருந்தன என ஊர் வந்து சொன்னார்கள். பின்பு இதுபோல் ஒற்றைச்சுடர் போல அவர் தனியே மிதப்ப தாகவும், இலை பறிக்க போகின்றவர் ஒரு வாழை இலையின் மடிப்பில் முகம் தோன்றி மறைந்த தாகவும், இறப்பிற்காக காத்துக்கொண்டிருந்த நெசவாளியொருவன் படுக்கையில் வந்து அவர் அமர்ந்து நெற்றிதடவி அவன் உடலில் சக்கர மிட்டு சுற்றியதாகவும் சொல்லினர். அவன் தன் கைகளைநீட்டி பிட்சாடனரை பற்றிக் கொள்ள எத்தனித்து மரணத்தின் தாழியில் வீழ்ந்தான் என்றார்கள்.

பிட்சாடனரின் வீடு ஆளற்று மயங்கியிருந்தது. வேம்படியிலிருந்த கிழவி பனிகால இரவில் உறக்கம் கொள்ளாமல் கிணற்றின் உள்ளே எட்டிப் பார்க்க தண்ணீரின் உள்ளே பரமபதம் ஆடும் மூவரையும், பரமபத பலகையே உயிருள்ளதாகி ஸ்ர்ப்பங்கள் நீண்டு அலைவதையும் கண்டு திக்கித்து ராட்டு உருளையைவிடவே வீழ்ந்த ஒசையால் உருவம் கலைந்து சிதறின. அன்றிரவெல்லாம் கிழவி தனியே நடுங்கிக் கொண்டிருந்தாள்.

காற்றுக் காலத்தில் பிட்சாடனரின் வீடு கடற்சங்கு போல அகன்று இருந்தது. காற்று வீட்டின் சுருள்களுக்குள் சென்று மோதி பூம்|பூம்! என்ற ஒசையை பெருக்கியது. எனினும் அந்த ஒசைக்கு பழகிய எவரும் அதைக் கவனம் கொள்ள வேயில்லை. கோடை முடிந்ததும் வெக்கை குறையவில்லை என்பதால் காற்று உக்கிரமாக அலைந்தது. எங்கிருந்தோ கிங்கிணி வாத்தியத்துடன் வந்த வயசாளியொருவன் தவளைகள் உறங்கும் அந்த வீட்டையும் அதன் பேரோசை யையும் கேட்டு வாசல் முன் நின்று மூடிய கதவைத் தள்ள தானே திறந்து கொண்டது. உள்ளே நடந்து போனான். எல்லா அறைகளிலும் நிசப்தம். சுற்றி சுழலும் வழிகளின் வழியே உள்ளே போனபோது வெண்பட்டு துணி மூன்று தரையில் அமர்வதற்காக விரிக்கப்பட்டு கலையாது கிடந்தது. அறைகளில் எதுவுமே இல்லை. மூடிய படுக்கையறைகளை திறந்து பார்த்தபோது நரியின் ரோமங்கள் உதிர்ந்து இருந்தன. பெண்கள் அந்த வீட்டில் வாழ்ந்த தற்கான அடையாளம் எதுவுமில்லை. அறைகளுக்குள் சுற்றி மீளமுடியாது திரும்பும் அறையினின்று அறை என அலைந்த கிங்கிணிக்காரன் எப்படி வீட்டின்று வெளியே வருவதற்கான வழியற்று போனான். எல்லா வாசல்களும் இன்னொரு அறைக்கே கூட்டிப்போயின. ஒரு அறையின் வாசலை தள்ளித் திறந்த போது ஓசையோடும் சீறி பாயும் கடல் விரிந்து கிடந்தது. சுவர்களில்லை. நீலம் நுரைக்கும் நீர்வெளி எல்லையற்றுயிருந்தது. மூடவும் பயந்து எதிர்ப் பக்கம் கடந்து மற்றொரு அறைக்கதவை திறந்தபோது அறையின் கடைசி சுவர் உடைந்து அருகில் குன்றின் சரிவும் மேய்ந்து கொண்டிருக்கும் ஆடுகளும் தென்பட்டன. அவன் குழப்பத்திற்கு உட்பட்டவனாக இவையாவும் தோற்றங்கள்தானா என கலக்கமுற்றான். அறைகளில் திறக்க திறக்க மாறிக்கொண்டேயிருந்தன உருவங்கள். இந்த வீட்டின் சுற்றுபுறம் எங்கே முடிகிறது எனத் தெரியாமலேயே நடந்து முன் சென்றான். அவன் கூப்பிடும் தொலைவில் மேய்ச்சல் மாடுகளை ஒட்டிக்கொண்டு சிலர் வந்து கொண்டிருந்தனர். அவர்களை கைத்தட்டி கூப்பிட்டபோது அவர்கள் திகைத்து ஒசை வந்த திசையை வணங்கி கடந்துபோயினர் அவன் கூப்பிட்டபடியே ஒடியபோது மேய்ச்சல்காரர்கள் நாணலில் மறைந்தனர். முன்நடந்து சென்று ஒரு கற்பாறை மீதேறினின்று சரிவினை கண்டபோது அதில் மான்கள் துள்ளி விரைந்தன. மூன்று வில் வேட்டையாளர்கள் துரத்தினர். அதில் ஒருவனின் கேசம் சுருள் கொண்டு முதுகுவரை அலை யாடியது. அவன் சப்தமாக பிட்சாடனா என கூப்பிடவே வில்லில் தெறித்த அம்பு திசை மாறி நின்றிருந்த விருட்சங்களை துளைத்து எதோ விலங்கின் தாடையில் புகுந்த வீரிடல் கேட்டது. வில்லாளன் திரும்பவில்லை. கலையும் உருவங்களும் வெளிகளும் வசீகரித்து, விலக்கி குழப்பமாக்கி கிங்கிணிக்காரனை திகைக்க செய்தன. அவன் ஊடாக நடந்து இரவின் நெடிய பாதைக்குள் வந்தான். வெளவால்களின் இரைச்சலும் மாமிசமணமும் நிரம்பிய இரவிது. உள்ளே நுழைந்தபோது இரு கற்களுக்கு ஊடாக நெருப்பு எரிந்துகொண்டிருந்தது. குனிந்த தலையோடு ஒருவன் கைகளை உயர்த்திக் கொண்டிருந்தான். கோரை மயிர் கொண்ட முகம். உக்கிரமான கண்கள். உடம்பெல்லாம் மயிர் வளர்ந்து இருந்தன. நெருப்பின் முன்'அச்சமில்லை’ கிங் கினிக்காரன் அமர்ந்தவுடன் எதிரில் இருந்தவன் எதிர்முகமாக தெரிந்தான். அவன் அருகாமைக்குவர நெருங்கி எத்தனிக்க தானே எதிர்ப்பக்கம் மாறிக்கொண்டது விசித்திரமாக இருந்தது. நடுவில் எரியும் நெருப்பின் இருபுறமும் இருவர் கூர்ந்து அக்கண்களைக் கண்ட கிங் கிணிக்காரன் திரும்பவும் குரல் கொடுத்தான் பிட்சாடனா பிட்சாடனா ஜவாலை உயர்ந்து வளர்ந்து முகம் தெரியாமல் செய்தது. குரலற்று நெருப்பை காட்டியபடியிருந்த எதிர் மனிதன் சட்டென விலகிப்போனான். பின் நடந்த போது கிங்கிணிக்காரன் பிட்சாடனர் வீட்டின் பின் அறையொன்றிலிருந்து வெளிப்பட்டான். புலனழிந்த நிலையில் அவன் கண்கள் நடந்தன. இரு தூண்களுக்கு கீழே அமர்ந்து கொண்டான். அவ்வீடு எதில் தகைவு கொண்டிருக்கிறது என அறியமுடியவேயில்லை. வெளியேறும் பாதைகளுமில்லை. இரவும் பகலும் சுழன்றன. ஒரு அறையில் பகலும் ஒரு அறையில் இரவும் ஒரே நேரத்திலிருந்தன. அவன் நடமாட மனமற்று தூண்களின் அடியிலே இருந்தான். அவனயறியாது இமைகள் மூடின பிரிந்தன. ஒரு பகலில் துண்களுக்கு ஊடாக இரு ஈரச்சுவடுகள் தெரிந்தன. குளித்து திரும்பிய மனிதனின் பாதமென தோணியது. அப்போது தான் கடந்து போயிருக்க வேண்டும். எழுந்து கொண்ட எதிர் அறையில் சுகந்த வாசம் பரவியது. அறையை எட்டிப் பார்த்தப்போது கண்ணாடி பார்த்துக் கொண்டு நிற்கும் பிட்சாடனரின் உருவம் தெரிந்தது. மெளனமாக பார்த்துக் கொண்டிருந்த போது இமை தானே முடி ஒரு கூடிணம் கடந்து திறக்க எதிரே பிட்சாடனரில்லை. பதிலாக கண்ணாடியுள் தாடை பருத்த குரங்கின் முகம் வெளியே பார்த்துக் கொண்டு இருந்தது. பின் அதுவும் அவனுக்கு முதுகு காட்டி ஒடத் துவங்கி விட்டது.