ஒரு குடும்பம் சிதைகிறது - பைரப்பா
ஒன்று
1
மைசூர் சமஸ்தானத்தின் தும்கூர் ஜில்லாவில் உள்ள தீப்டூர் தாலூகாவைச் சேர்ந்த கம்பனகெரே பிர்க்கா ராமஸந்திர கிராமத்தின் கணக்குப் பிள்ளை ராமண்ணா இறந்த பிறகு அவரது வீட்டில் இருந்தவர்கள் அவருடைய மனைவி கங்கம்மாவும் அவருடைய இரண்டு பிள்ளைகள் சென்னிகராயனும் அப்பண்ணய்யாவும்தான். ராமண்ணா இறந்து அப்போது ஆறு வருடங்களாகி விட்டன. அதாவது விஸ்வேஸ்வரய்யா திவான் பகதூர் பட்டம் பெற்றபோது அவர் இந்த உலகத்தை விட்டு மறைந்தார். அப்போது அவர் மனைவி கங்கம்மாவிற்கு இருபத்தைந்து வயது. மூத்தவன் சென்னிகராயனுக்கு ஒன்பது வயது. இளையவன் அப்பண்ணய்யாவுக்கு ஏழு வயது. ராமண்ணா இறந்ததிலிருந்து அவருடைய பரம்பரை கணக்குப்பிள்ளை வேலையை கிராம மணியக்காரர் கங்கே கவுடருடைய மைத்துனன் சிவலிங்கே கவுடன் பார்த்து வந்தான். இன்னும் மூன்று வருடங்களில் பதினெட்டு வயதாகி மேஜர் ஆனதும் சென்னிகராயன், தன் னுடைய அப்பாவின் வேலையை ஏற்றுக் கொள்ள வேண்டும். கணக்குப்பிள்ளை உத்தியோகம் பார்ப்பதென்றால் இலேசா? அதற்கு சரியான படிப்பு வேண்டும். 1ஜைமினியைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு வந்தால் சுவாதீனம், வசூல், விளைச்சல், ஜனத்தொகை கணக்குவழக்குகள் தெரியும். கிராமத்தின் 2 கூலிமடத்து ஆசிரியர் சாதாளிக்கரை சென்னகேசவய்யாவிடம் சென்னிகராயன் கல்வி கற்று வருகிறான்.
.
1. ஜைமினி : கன்னட மொழியில் மகாபாரதம் இயற்றியவர். இங்கு அவரது
நூலைக் குறிக்கிறது.
2.கூலிமடம்: கதை நடந்த காலத்தில் கிராமத்து மடத்தில் கல்வி கற்பிப்பது
வழக்கம்.
2
இரண்டாவது மகன் அப்பண்ணய்யாவுக்கு பதின்மூன்று வயதாகியும் மடத்துக்குப் போகவில்லை. மணலின் மேல் “ஸ்ரீ ஓம்'' என்று எழுதிப் பழக ஆரம்பிக்கவில்லை. "அப்பண்ணா, மடத்துக்குப் போறியா இல்லையா ?" என்று ஒரு நாள் தாய் கோபத்துடன் கேட்டாள். “போகாவிட்டா உனக்கென்னடி கழுதைமுண்டை"- மகன் சீறினான். “ஏண்டா என்னை முண்டைன்னா சொல்றே ? உன் வம்சமே அழிஞ்சு போகுதா இல்லையா பாருடா, தேவடியா மகனே?' என்று சபித்தாள் தாய். “உன் வம்சம்தான் அழிஞ்சு போகும்" என்று மகன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே வெளியிலிருந்து ' தண்ணீர்க்கார முத்தன் வந்தான். "என்னைக் கழுதைமுண்டைன்னு சொல்றான். இந்தக் கம்ம நாட்டிப் பயலைப் பிடித்துக் கொண்டு போய் சென்னகேசவய்யாவிடம் உட்கார்த்தி விட்டு வாடா, முத்தா” என்று கங்கம்மா உத்தரவிட்டாள். அதைக் கேட்டவுடனேயே அப்பண்ணய்யா வெளியே
வெளியே ஓடிப் போனான். ஆனால் முத்தன் பெரிய ஆள். பத்தே எட்டில் போய் அவனுடைய சிண்டைப் பிடித்து, "அய்யய்யோ" என்று அவன் கத்தியதைப் பொருட்படுத்தாமல் இழுத்து வந்து கங்கம்மாவின் முன்பு அவனை நிறுத்தினான். "இந்த தேவடியா மகனை ரெண்டு உதைத்து இழுத்துக் கொண்டு போ”-என்று அவள் கட்டளை யிட்டாள். ஆனால் பிராமணப் பையனை எப்படி உதைப்பது? அப்படி செய்தால் கால் புழுத்துப் போகும் என்பது முத்தனுக்குத் தெரியாதா? அவன் அப்பண்ணய்யாவின் தோளைப் பிடித்து இழுத்துக் கொண்டு போனான்.
சிறியவன் போன பிறகு கங்கம்மாவுடைய பார்வை வீட்டிலிருந்த பெரிய மகன் மீது திரும்பியது. 'டேய், சென்னி ஹொன்னவள்ளிக்குப் போய் சீதாராமையாவிடம் கணக்குப் படின்னு எத்தனை தடவை அடிச்சுக்கிறது? நாளைக்குப் போறியா? இல்லை தடி எடுத்து உன்னை ரெண்டு தட்டு தட்டவா?'' "என் விவகாரத்துக்கு வந்தா அம்பட்டன் ருத்ரனைக் கூட்டி வந்து உன் தலையை மொட்டையடிக்கிறேன்'' - தூண் மறைவிலிருந்த பெரிய மகன் உறுமினான். "உன் அப்பன் செத்துப் போன போதே என் தலையை மொட்டை அடிச்சாச்சு. பெத்த அம்மாவை இப்படிச் சொன்னா உன் நாக்குப் புழுத்துப் போகும் முண்டைப் பயலே''.
ஹான்னவள்ளி, ராமஸந்திர கிராமத்திலிருந்து பதினெட்டு மைல் தூரத்திலுள்ள கிராமம். இரண்டும் ஒரே தாலூக்காவைச் சேர்ந்தவையென்றாலும் பிர்க்கா வேறு, வேறு. ராமஸந்திர, கம்பனகெரே பிர்க்காவிலிருந்தாலும் ஹொன்னவள்ளி முக்கிய
3. தண்ணீர்க்காதன்: வயலில் நீர் பாய்ச்சுவது போன்று எடுபிடி வேலை செய்பவன்.
ஒன்று
3
மான இடம். முன்பு தாலூகாபீஸ் இருந்த இடம். ஹொன்னவள்ளி தாலூகாவானதிலிருந்து சீதாராமையா கஸ்பா கணக்குப்பிள்ளை யாக இருக்கிறார். கணக்கு வழக்கில் கெட்டிக்காரர் மட்டுமல்ல, அதிகாரிகளையே ஆட்டி வைப்பார். அவரிடம் கணக்குப் படித்த எவனும் கணக்குப்பிள்ளைத் தொழிலை ஜமாய்த்து விடலாம். இப்படித்தான் அரிசிகெரே, கண்டசி, ஜாவகல்லு முதலிய ஊர் மணியக்காரர், கணக்குப்பிள்ளைகள் சொல்லிக் கொண்டிருந்தனர். ஆனால் சீதாராமையாவின் கீழ் பாடுபட்டுப் படிப்பது என்றால்
சாதாரணமல்ல. பாராவுக்குத் தலைப்பெழுதி சிவப்பு மையில் கோடு போடுவதைத் தெரிந்து கொள்வதற்குள்ளாக அவருடைய ரூல்தடியால் நூறு அடி வாங்க வேண்டும். ஆயிரம் உளி அடி விழாமல் சிலை எப்படி வரும்? என்று வாத்தியாரைப் போல அவரும் சொல்கிறார்.
இந்தப் பையன்களின் போக்கைப் பார்த்து கங்கம்மாவின் மனம் குமுறியது. அழுகை வருவது போல் ஆகி கண்களில் உள்ள நீரைத் துடைத்துக் கொண்டாள். “அக்கம்பக்கத்து வீட்டுப் பசங்க அம்மாவைக் கண்டா எப்படிப் பதறுது ? இந்த முண்டங் களுக்கு வரக்கூடாத ரோகம் என்ன வந்திருக்கு? என் தலையெழுத்து” என்று ஒருமுறை அழுதாள். எழுந்து நேராக சமையலறைக்குள் சென்று இரும்புத்துண்டை அடுப்புக்குள் வைத்தாள். மதியத்துக்கு மேல் மூன்று மணியாகி விட்டதால் அடுப்பில் தணல் இருக்கவில்லை. எரிந்து போன தேங்காய் மட்டை சாம்பலாகும் நிலைக்கு வந்திருந்தது. அம்மா தனக்கு சூடு போடு வதற்குத்தான் இரும்புத்துண்டை சூடாக்குகிறாள் என்பது பதினைந்து வயது மகனுக்குத் தெரிந்தது. அவன் ஒரு முறை கழுதைமுண்டை, மொட்டைமுண்டை,” என்று ஒரே மூச்சில் கத்தி விட்டு வீட்டை விட்டு வெளியே ஓடிப் போனான். இனிமேல் அவனைப் பிடிப்பது முடியாது என்று கங்கம்மாவுக்குத் தெரியும். ஆனால், அவள் தன்னுடைய தோல்வியை ஒப்புக் கொள்ள மாட்டாள். 'இந்தக் கம்மனாட்டிப் பயல்களை ஒரு கட்டுக்குள் எப்படிக் கொண்டு வருவது” என்று யோசித்துக் கொண்டே உட்கார்ந்திருந்தாள். இரும்புத் துண்டு அடங்கிப் போன தணலுக்குள்ளேயே சிறிது சிறிதாகச் சூடேறிக் கொண்டு இருந்தது.
"
போது
திருமணமாகி கங்கம்மா அந்த வீட்டுக்கு வந்த பதின்மூன்று வயதுப் பெண். கணவனுக்கு நாற்பத்தைந்து வயது. முதல் மனைவிக்கு இரண்டு குழந்தைகள் பிறந்து இறந்து விட்டன. கடைசியில் அவளும் இறந்தாள். முதல் தாரம்
தாரம் கங்கம்மா
4
-
பக்கத்துப் பெண்தான் - அதாவது ஜாவகல்லு கிராமத்தைச் சேர்ந்தவள். அந்தத் தொடர்பினால்தான் ராமண்ணாவுக்கு கங்கம்மாவைக் கொடுத்தார்கள். ராமஸந்திர கிராமத்தையும் சேர்த்து மூன்று கிராமத்துக் கணக்குப்பிள்ளை வேலை. ஆறு ஏக்கர் நன்செய் வயல், எட்டு ஏக்கர் புன்செய் பூமி, முன்னூறு தென்னைமரம், வீட்டில் பாத்திரம் பண்டம், தங்கம் வெள்ளி— இத்தனை உள்ள அவருக்கு யார்தான் பெண் கொடுத்திருக்க மாட்டார்கள்? முதலில் இருந்தே ராமண்ணா சாதுவான ஆள் என்று ஊர்க்காரர்கள் சொல்கிறார்கள். பசுவைப் போல சாது. இளங்கன்றைப் போல
சாது. ஆனால் கங்கம்மா பெண்புலி- என்று ஜனங்கள் சொல்வதுண்டு. இது காதில் விழுந்தபோது
“இந்த ஜனங்களை செருப்பால் அடிக்க வேணும்” என்று அவள் சொல்வதுண்டு. ஆனால் இந்த“மொட்டச்சிப் பிள்ளைகளுக்கு புத்தி வர வைக்க வேணும், இல்லாவிட்டா நான் ஜாவகல்லுப் பெண்ணே அல்ல. இந்த இரும்புத்துண்டு இங்கேயே இருந்து சூடாகட்டும். சாயங்காலம் பலகாரம் சாப்பிட எப்படியும் வர வேணுமே! அப்போது கால் மேலே, கன்றுக் குட்டிக்கு இழுத்தாற் போல் ரெண்டு இழுக்கிறேன். கன்றுக் குட்டிக்கு சூடு இழுக்கா விட்டா எங்கே சொன்ன பேச்சு கேக்குது? மாட்டுக்கார பேலூரான் சூடு போடாவிட்டா மாட்டுக்கு ஜன்னி வரும்னு சொல்றான். அதெல்லாம் பொய். சொன்ன பேச்சு கேக்க வேணும். இல்லாவிட்டா சூடு இழுக்கலாம்” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டே சூடான இரும்புத்துண்டு பிடியை தன்னுடைய சிவப்பு முந்தானையால் ஒரு முறை புரட்டி மறுபடியும் சூடான தணலில் தள்ளினாள்.
அதற்குள் வீட்டின் ஓட்டு மேலே யாரோ மெதுவாக திருட்டுத்தனமாக நடப்பது போல் தோன்றியது. 'இந்தப் பட்டப் பகலில் திருட்டுப் பயலுக ஏன் வர்றானுக? குரங்கு திம்மண்ணன் வந்திருப்பான். தோட்டத்து இளநீரை விட்டு ஊருக்குள் வர தைரியம் வந்திட்டதா? இந்த முண்டச்சிப் பயலுக்கு'-என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே காலடிகள் அவளுடைய தலைக்கு நேராக வருவது போலத் தோன்றியது.
“உன் வீடு பாழாய்ப் போகட்டும்” என்று சொல்வதற்கு வாயெடுத்தவள், "அய்யோ, ஆஞ்சனேய சாமியின் சொரூபம் அல்லவா. கெட்ட பேச்சு பேசினா சாபம் கிடைக்கும்" என்று உடனே நாக்கைக் கடித்துக் கொண்டு தலையைத் தூக்கி மேலே பார்த்தாள். யாரோ மேலேயிருந்து ஒரே சமயத்தில் இரண்டு தடிகளால் ஓடுகளை அடித்து உடைப்பது போல் இருந்தது.
பதினைந்து இருபது ஓடுகள் உடைந்து சுக்கு நூறாகி அவளுடைய தலை மேலும், முகத்தின் மேலும் விழுந்தன. இதுகளோட வீடு பாழாய்ப் போகட்டும்” என்று அவள் சத்தம் போட்டதும், ‘அதோ இருக்கா ! இன்னுமொரு நாலு தடவை போட்டு விளாசு அப்பண்ணய்யா” என்று சென்னிகராயன் மேலிருந்து சொன்னது கேட்டது. அண்ணன் தம்பி இருவரும் கையில் இருந்த உலக்கையினால் அவளுடைய தலைக்கு மேலிருந்த ஒடுகளின் மேல் தங்களுடைய கைவரிசையைக் காட்டினார்கள் "தேவடியாப் பிள்ளைகளா ! மணியக்காரர் சிவே கவுடரிடம் சொல்லி உங்களைத் தொலைச்சுக் கட்டறேன்” என்று சொல்லிக் கொண்டே வீட்டை விட்டு வெளியே ஓடினாள்.
·
“சிவே கவுடரைக் கூப்பிட்டு வர்றாளாம் சென்னையா,' என்று அப்பண்ணய்யா அண்ணனை எச்சரித்தான். இருவரும் உலக்கைகளை அப்படியே போட்டு விட்டு கூரையின் பிற்பகுதி வரை ஓடிப் போய் அங்கிருந்து சாக்கடையைத் தாண்டிக் குதித்து ஓட்டம் பிடித்தனர்.