தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Saturday, July 28, 2018

பொம்மைகள் உடைபடும் நகரம், நவீனம் - -மதிப்புரை ::: ஜெயமோகன் :: சுபமங்களா, ஜூலை,1992

1) "பொம்மைகள் உடைபடும் நகரம் பதினைந்து கதைகள் - கோணங்கி - பக்கம் 180, விலை ரூ. 30, அன்னம் புத்தக மையம், மதுரை. 

2) நவீனம் - 14 கதைகள் - சுப்ரபாரதி மணியன், பக்கம் 138 - விலை ரூ.  18, அன்னம் புத்தக மையம், மதுரை.

தமிழ்ச் சூழலின் அடிப்படையில் எழுத்தாளர்களை பொதுவாக மூன்றாகப் பிரிக்கலாம். வணிக இதழ்களின் மேலோட்டமான வாசக இலட்சங்களுக்காக கேளிக்கை வடிவங்களை தேவைக்கேற்ப உற்பத்தி செய்து குவிக்கும் வணிக எழுத்தாளர்கள் முதல் வகை. வணிக இதழ்களிலும், இலக்கிய இதழ் களிலும் தொடர்ந்து எழுதும் குறைந்தபட்ச இலக்கியத் தகுதி உடையவர்கள் இரண்டாம் வகையினர். இலக்கியத்தரத்தை எவ்வகையிலும் சமரசம் செய்து கொள்ள மறுத்து, தரமான இலக்கிய இதழ்களில் மட்டும் தங்கள் எழுத்துகளை முன்வைத்து வரும் எழுத்துக்கலைஞர்கள் மூன்றாம் வகை. இவ்வகை பினர் பெரும்பாலும் மிகக் குறைவான வாசகர்கள் மட்டும் அறிந்திருப்பவர்கள்.

தற்போது தமிழ்ச் சிற்றிதழ்களில் ஏற்பட்டுள்ள தொய்வு தரமான படைப்பாளிகளைக்கூட பிரபல இதழ்களுக்காக சமரசம் செய்து கொள்ளச் செய் கிறது. கணையாழி, நிகழ் போன்ற ஒருசில சிற்றிதழ் களைத் தவிர பிறவற்றுக்குப் பக்கங்கள் இல்லை . எனவே சித்தரிப்பை (Naration) பாணியாக கொண்ட, நிறைய எழுதும் எழுத்தாளர்கள் பிரபல இதழ் களில் படைப்புகளை எளிமைப்படுத்தி எழுதுவது அல்னது சும்மா இருந்துவிடுவது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு விடுகிறார்கள். இதைத்தவிர புகழ், பணம், அதிகாரத்துடனான தொடர்பு ஆகியவற் நின் மீதான சபலம் எழுத்தாளர்களை வணிக எழுத்தை நோக்கி ஈர்க்கிறது. உத்வேகமான ஒரு படைப்புக் காலகட்டம் முடிந்து எழுதியவைகளையே மீண்டும் எழுதும் மூத்த படைப்பாளிகளும் வணிக இதழ்கள் தரும் பரபரப்பை விரும்பி சமரசம் செய்து கொள்கிறார்கள். ஆனால் எந்நிலையிலும் வணிக இதழ்களுக்குச் சென்றவர்களின் இலக்கியத் தகுதி களில் பெரும் சரிவுகள் ஏற்பட்டிருப்பதையே தமிழ் இலக்கிய உலகம் காட்டுகிறது. தன் எழுத்தில் பிடிவாதமான சமரசமின்மை என்பது ஒரு எழுத் தாளன் தன் ஆத்மாவை தக்க வைத்துக் கொள்ளும் முதன்மையான வழிமுறையாகும்.
முதல்வகையினரை விட்டுவிடலாம். வணிக எழுத்தாளர்களுக்கு இலக்கிய உலகில் மரியாதை தருவது அனேகமாக உலகில் தமிழ்மொழியில் மட்டுமே நடந்து வரும் அபத்தம். இளைய தலைமுறை படைப்பாளிகளில் இரண்டாம் வகையைச் சார்ந் தவர்களே அதிக கவனத்தை கவர்ந்து வருகிறார்கள். பாவண்ணன், சுப்ரபாரதிமணியன், எஸ். ராமகிருஷ்ணன், இரா. முருகன், எஸ். சங்கரநாராயணன், கார்த்திகா ராஜ்குமார் ஆகியோரை குறிப்பிடத்தக் கவர்களாக கூறலாம். ஆனால் இவர்களுக்குரிய இலக்கிய மதிப்பு குறைந்தபட்ச வரையறைக்கு உட் பட்டது. வணிக இதழ்களில் பிரசுமாகும் பல நூறு பெயர்களுள் ஒன்று மட்டுமே இவர்களுடைது

மூன்றாம் வகை படைப்பாளிகளில் கோணங்கி, சுரேஷ்குமார் இந்திரஜித், கோபி கிருஷ்ணன், சில்வியா (எம்.டி. முத்துகுமாரசாமி) ஜோசஃப் லூயிஸ் (தர்மராஜ்), கௌதம சித்தார்த்தன், கோலாகல ஸ்ரீனிவாஸ் ஆகியோரை குறிப்பிடலாம். இவர்களில் கோபிகிருஷ்ணன் முதலிய ஒருசிலர் சிலசமயம் தினமணி கதிர் முதலிய இதழ்களில் கட்டுரைகள் எழுதுவதுண்டு. பிறர் முற்றிலும் சிற்றிதழ் சார்ந்து செயல்படுபவர்கள். எனவே பிரபலம் பெறாதவர்கள். இவர்களில் தமிழ் எழுத்தின் தன்மைகளை தீர்மானிக்கும் வலிமை கொண்ட கலைஞர்கள் என்று கோணங்கியையும் சில்வியாவையும் குறிப்பிடலாம். நான் உட்பட உள்ள இந்த சிறு குழுவில் கோணங்கியே முதன்மையானவர். இவ் வகைப் பாடுகளைத் தவிர முற்போக்கு இலக்கியச் சூழலில் போப்பு, பவா. செல்லத்துரை, கமலாலயன் முதலிய படைப்பாளிகள் நேர்மை யாக செயல்பட்டு வருகிறார்கள். இவர்களில் போப்பு மிகவும் குறிப்பிடத்தக்கவர் என்று கருதுகிறேன்.

கோணங்கி, சுப்ரபாரதி மணியன் ஆகிய இரு இளம் படைப்பாளிகளின் இரு தொகுப் புகளையும் இந்த சூழலில் வைத்தே நாம் மதிப்பிட வேண்டும். இவற்றின் பொதுவான நிறைகுறைகளை தமிழ் நவீன இலக்கியச் சூழலின் நிறைகுறை களாகவும் கூற முடியும். சுப்ரபாரதி மணியன் முற் றிலும் சிற்றிதழ் சார்ந்து இயங்கி வந்தவர். குறிப் பிடத்தக்க இலக்கிய இதழான 'கனவு' பத்திரிகை ஆசிரியர். இவருடைய முதல் தொகுப்பான அப் பா'வின் பின் அட்டை சிற்றிதழ் சார்ந்த எழுதி தாளராக இவரை அறிமுகம் செய்கிறது. இவருடைய மூன்றாம் தொகுப்பாகிய 'நவீனம்' இரு தளங் களிலும் சிறப்பாக செயல்படுபவர் என்று சமாளிக்க முயல்கிறது. சமீபத்தில்தான் சுப்ரபாரதி மணியன் பிரபல இதழ்களில் எழுத ஆரம்பித்திருக்கிறார்: ஆனால் ஒரு பிரபல எழுத்தாளராகத் தடைகளாக இருப்பவை அவருடைய நெகிழ்ச்சிகள் அற்ற இலேசான கவிதைச்சாயல் உடைய, நவீனத்தமி' நடையும், சம்பவங்களை பரபரப்பானவையாக ஆக்கும் முயற்சியில்லாத இலக்கிய நேர்மையும். இவ்விரு 'தகுதி'களும் இல்லாத ஒருவர் பிரபல இதழ்களில் சகட்டுமேனிக்கு எழுதும்போது ஏறி படும் தீவிரமான அலுப்பு இப்போதே அக்கதைகளில் தெரிய ஆரம்பித்து விட்டிருக்கிறது. பதினான்கு கதைகள் அடங்கியுள்ள நவீனம் தொகுப் பில் 'எல்லையா' என்ற ஒரே ஒரு கதை மட்டுமே இலக்கிய ரீதியான மதிப்பை பெறத்தக்கது. 'பங்கீடு' சித்தரிப்பின் ஒருமை சிதைவதனால் வீழ்ச்சி பெற்ற ஒரு முயற்சி. பிற கதைகள் பரிபூரணமான தோல்விகள்.

கோணங்கியின் பொம்மைகள் உடைபடும் நகரம்' அவருடைய மூன்றாவது தொகுப்பு. கோணங்கி தன் எழுத்து வெளிப்பாடுக்கு, தான் நடத்தும் 'கல் குதிரை' சிற்றிதழையே பெரிதும் நம்பியிருக்கிறார். அது மிகமிகச் சிறிய சூழலில் மட்டுமே புழங் குகிறது, குறிப்பாக கோணங்கியின் நண்பர்கள் மத் தியில். இந்தத் தன்மை கதைகளில் ஒரு குறுகிய புழங்கும் தளம் உருவாக காரணமாக அமைகிறது. கோணங்கியின் முதல் தொகுப்பான 'மதினிமார்கள் கதை' தீவிரமும் கவித்துவமும் கொண்ட நான்கு கதைகளை உள்ளடக்கியதாக இருந்தது. இத்தொகுப் பில் நான்கு கதைகளை கோணங்கிக்கே உரிய தீவிரமான கவித்துவம் கொண்ட படைப்புகளாக கூற முடியும், 'கறுப்பன் போன பாதை' தொண் ணூறுகளில் தமிழில் எழுதப்பட்ட மிகச்சிறந்த கதைகளுள் ஒன்று. ஒரு இலக்கியச் சாதனை என்றே - சற்று மிகைப்படுத்தி - கூறிவிட முடியும். தச்சன் மகள், தையற்காரன் கதை, கறுத்தபசு' ஆகிய கதைகளும் குறிப்பிடத்தக்க இலக்கிய வெற்றிகள். பிறகதைகள் வெறும் வார்த்தைக் கூட்டங்கள். எத்தனை விசாலமாக நம் இலக்கிய அளவைகளை வைத்துக் கொண்டாலும்கூட இவற்றை நாம் இலக்கியப் படைப்புகளாகக் கொள்ள முடியாது.

இவ்விரு தொகுப்புகளிலும் பெரும்பான்மை படைப்புகளை சரிவுறச் செய்யும் இருவித பலவீனங்கள் உள்ளன. இவற்றைத் தமிழ்ச் சூழலுக்கு பொதுவாக பொருந்தும் பலவீனங்களாகக் கூறலாம். சுப்ரபாரதி மணியனின் எழுத்து பெரும்பாலும் புறஉலகம் சார்ந்தது (இதை அவரைப்போன்ற மற்ற எழுத்தாளர்களுக்கும் சொல்லலாம்) புற உலகின் சம்பவங்களை ஒரு ஒழுங்கமைவுக்குள் கொண்டுவந்தால் இலக்கியப் படைப்பாக ஆகிவிடும் என நம்புகிறார் அவர். எனவே அவருடைய பல கதைகள் அழுத்தமற்ற சம்பவங்களை பலவீனமாக அடுக்கப் பட்டிருப்பதாக தோற்றம் தருகின்றன. சித்தரிப்பின் தொழில்நுட்பம் தவிர வேறு விதத்தில் கலைஞனின் ஆளுமையும் அவற்றில் இல்லை. அலுப்பூட்டும் வெறுமையுடன் நம்மை அடைந்து, படித்து முடித்த உடனேயே உதிர்ந்து விடுகின்றன அவை.

கோணங்கி அக உலகின் வார்த்தை வடிவமே எழுத்து என்று நம்புகிறார். தங்குதடையின்றி மன ஓட்டத்தை வார்த்தைகளிலோ, படிமங்களிலோ பதிவு செய்துவிட்டால் வெற்றிகரமான கதையாகி விடுமென்று நம்புகிறார். "நான் வார்த்தைகளை ஒழுங்கு செய்யவில்லை பொருட்கள் கால - இட ரீதியான இடைவெளியில் வேறு தோற்றம் கொண்டன. முன் யோசிக்கப்படாத ஒரு கணம் கதையினை எழுதியது. கைகள் மட்டுமே கதையினை எழுதி போயின... " என்று கோணங்கி முன்குறிப்பில் குறிப்பிடுகிறார். படைப்பாக்கம் பற்றிய இந்தப் பிரமை, வார்த்தைகளை சிதறடிக்கும் ஒரு எந்திரமாக கலைஞனை மாற்றிவிட்டிருக்கிறது. இளம் தலைமுறையின் தலைசிறந்த கலைஞனிடமிருந்து சொற் குப்பைகளை கொட்டும்படிச் செய்கிறது.

அக உலகமற்ற புற உலகச் சித்தரிப்பு வெற்று விவரணை. புறஉலகின் பிடிமானமற்ற அகஉலகச் சித்தரிப்பு வெறும் வார்த்தைப்பிரவாகம் - படைப் பாளி தவிர வேறு எவருக்கும் எந்த அனுபவத் தையும் தராத ஒன்று. இவ்விரண்டும் முயங்கும் தருணங்களே மேலான எழுத்தை உண்டு பண் ணுகின்றன. மாபெரும் ருஷ்ய இலக்கிய மேதை களில் இவ்விரு உலகங்களும் தெளிவான இரு ஓட் டங்களாக பிரவாகமெடுப்பதையே காண்கிறோம். நவீன படைப்பாளிகளில் ஒன்றை நிர்ணயிக்கும் மவுன ஒழுங்காக இன்னொன்று இயங்குவதைக் காணலாம்.
இவ்விரு முடிவின்மைகளும் பிரபஞ்ச முடிவின் மையின் இரு முகங்கள். மனித இருப்பை அளவாக வைத்து நாம் உண்டு பண்ணுபவை. இவையிரண் டும் அவற்றின் இயல்பான ஒரு மாபெரும் ஒழுங் கின்மையைக் கொண்டுள்ளன. இந்த இயல்பான சிதறல் பிரமாண்டத்திலிருந்து ஒழுங்குகளையும், வடிவங்களையும் உண்டுபண்ணும் மானுட இனத் தின் எளிய முயற்சிகளே கலையும் தத்துவமும் இலக் கியமும் எல்லாம். எல்லா ஒழுங்கமைவுகளும் அடிப் படையில் ஒழுங்கின்மையை கொண்டிருப்பதனால் தான் அவை ஒருபோதும் பூரணமடைவதில்லை. எனவேதான் இருபதாயிரம் வருடங்களாக மானுட மனம் திரும்பத்திரும்ப ஒழுங்கமைவுகளை உண்டு பண்ணியபடியே வருகிறது. எனவே படைப்பின் ஆதி நோக்கமே ஒழுங்குதான்; மொழிக்கு தொடர்பு' போல. தன் ஆதி நோக்கங்களை முற்றிலும் மீறி எவ் வடிவமும் வளர்ச்சி' பெறுவது இல்லை என்று உறுதியாக கூறமுடியும்.

இலக்கிய வடிவாக்கத்தில் ஒருங்கிணைவுள்ள வடிவங்களும் ஒருங்கிணைவை உதறிய வடிவங் களும் மாறிமாறி காலம் நெடுக வந்துள்ளன. இலக் கியப் படைப்பின் சிதைவு என்பது உண்மையில் 'சிதைவொழுங்கு' தானேயொழிய சிதைவேயல்ல. அதாவது சிதைவு என்ற மனப்பிம்பத்தைத் தரும் ஒருவிதமான ஒழுங்கு. சிதைவே இலக்கியம் என்று கூறப்போனால் உலகின் கோடானுகோடி பித்தர் களின் அத்தனை பிதற்றல்களும் கலை வடிவங்களே. சாலையோரத்தில் அமர்ந்து அத்தனை நிகழ்ச்சி களையும் அப்படியே பதிவு செய்து வைப்பதும் கலையே. எந்த பிதற்றலிலும் சற்று கவிதை இருக் கும். எந்த சித்தரிப்பிலும் சற்று வேடிக்கை இருக்கும். அவை அந்த பதிவுகளை நியாயப்படுத்தப் போதுமானவை அல்ல. அவலகமோ புற உலகமோ ஒரு பிரக்ஞை வழியாக கடந்து வந்தேயாக வேண் டும் அப்பிரக்ஞைக்கே உரிய ஒழுங்கமைவை அது அடைந்தேயாக வேண்டும். அவ்வொழுங்கமைவை மொழி வடிவமாக ஆக்கும் கதைத் தொழில்நுட்பமும் மொழிப் பயிற்சியும் அவசியம் செயல்பட்டாக வேண்டும்.

இலக்கியம் என்பதை அகமனத்தின் ஒரு தீவிரச் செயல்பாடு என்று வரையறை செய்யலாம். எல்லா மேலான படைப்புகளும் அகமன உத்வேகங்களிலிருந்து உருவாகுபவையே. ஆனால் அதே சமயம் எந்தக் கலையும் அடிப்படையில் ஒரு தொழில்நுட் பமும் கூடத்தான். தொழில்நுட்பமும் அகமன வேகமும் சந்திக்கும் கணமே படைப்பின் கணம். கோணங்கியில் பல கதைகளில் அகமனம் தொழில் நுட்பத்தின் ஒருங்கமைவு இன்றி சிதறித் தெறிக் கிறது. சுப்ரபாரதி மணியனின் பல படைப்புகளில் அகமன உத்வேகமின்றி சித்தரிப்பின் கூரிய தொழில் நுட்பம் வீணாக இயங்குகிறது. இரண்டுமே சக்தி விரயங்கள்.
இவ்விருவர் படைப்புகளிலும் வெற்றிபெற்ற இருகதைகளை வைத்து இதை விளக்க முடியும். எல்லையா முடமானவன். தொழில் செய்து அந்தத் தொழில் நொடித்து பிச்சைக்காரன் ஆனவன். பிச் சைக்காரனுக்கேயுரிய கீழ்மைகளும், மன வரட்சியும் கைகூடப் பெற்றவன். அவன் புழங்கும் புறஉலகம் திறமையாக சித்தரிக்கப்படுகிறது. ஆனால் ஒரு இரும்பாணி கிடைத்ததும் மீண்டும் உழைப்புக்கு, அதன் வழியாக 'கலாச்சாரத்திற்கே', திரும்பிவர யத்தனிக்கிறான். இம்முடிவு கதையின்
________________
புறஉலகச் சித்தரிப்பை மிக மவுனமாக தொடர்ந்து
அத்தனை சித்தரிப்பையும் ஒழுங்கு செய்யும் அகமலகின் இருப்பை சட்டென்று வெளிக்காட் டுகிறது. எல்லையா பிச்சையெடுக்கும் போது கூட மீள வேண்டுமென்ற உத்வேகம் அவனுள் ஒளிக் திருக்கிறதா? அந்த உள்ளெழுச்சியுடன் அவனால் எப்படி அங்கு வாழ முடிந்தது? அவனுடைய அந்த கணம் வரையிலான செயல்பாடுகளை திரும்பிப் பார்க்கச் செய்கிறது இந்த முடிவு. கூறப்படாத எல் லையாவின் அகஉலகு கதை நெடுக தொக்கி நில் பதை காண்கிறோம். சம்பந்தமற்ற சித்திரங்களினா லான கதை முழு ஒருங்கமைவையும், கலை ஒழுங் கையும் பெற்றுவிடுகிறது. இவ்விரு உலகங்களும் பரஸ்பரம் அர்த்தம் தந்து நமக்கும் இலக்கிய அனுபவத்தை தருபவையாக ஆகின்றன.
கருப்பன் போனபாதை மனப்பிம்பங்களின் சிதறடிக்கப்பட்ட வடிவில் உள்ளது. பொட்டலில் நீண்டு போகும் பாதை, அனல் பொழியும் வெயில், தாகம், என்று புறஉலகச் சித்தரிப்பின் ஒரு தளம் அம் மன உணர்வுகளை ஒரு ஒழுங்கில் பொருத்துகிறது. கருப்பனின் சிறைவாசத்துக்கு காரணமான சம் பவமும், அதன் உத்வேகமான பிம்பங்களும் இந்த மனஉணர்வுகளை சீர்படுத்தி தீவிரமான ஒரு அனுபவத்தை ஏற்படுத்துகின்றன. (பூமணியின் வெக்கை கதையின் இன்னொரு வடிவம் இது) மொழியின் அகவயமான தன்மையையும் கதை சொல்லலின் சிதைவுத் தன்மையையும் முழுமை பெறச் செய்வது இந்த புறஉலகச் சித்தரிப்பு தான். அழுத்தமான சமூகப்பிரச்சினை; அதன் கலாச்சாரப் பின்னணி; அதன் மானுட உத்வேகம். ஒன்று மற் றொன்றை உருவாக்குவதன் மூலம் சிறப்பான ஒரு இலக்கிய வடிவம் உருவாகிறது. அதே சமயம் 'பொம்மைகள் உடைபடும் நகரம்' முதலிய கதைகள் அந்தரத்தில் நிற்கின்றன. எங்கும் ஒட்டாத படிமங் களும், சிதறிய சொற்களுமாக அனுபவம் தராது உதிர்கின்றன.)
சித்தரிப்பின் அழகை சுப்ரபாரதி மணியனின் வார்த்தைகள் அனாயசமாய் சாதிக்கின்றன. "ஸ்டேஷன் ரோடு பரபரத்துக் கொண்டிருந்தது. பெரும்பான்மையான ஜனங்கள் சப்தமற்று எங்கோ மனம் வைத்து நடந்து கொண்டிருந்தாலும் அவர்களின் அவலத்தை யாரோ உரக்கவும் ஒழுங்கின் றியும் கத்துவது போலத்தான் சப்தம் இருந்து கொண்டிருந்தது.” (எல்லையா)

கோணங்கியின் மொழி, மன அவசத்தைப் பற்றும் தவிப்பில் அர்த்த ஒழுங்கை இழந்து, பலசமயம் கவித்துவ எழிலை அடைவது. கூர்மையும் ஆவேச் மும் ததும்புவது. கோணங்கியின் படிமங்களின் எழிலை தமிழின் சிறந்த கவிஞர்கள்கூட அபூர்வ மாகவே அடைந்திருக்கிறார்கள். குறிப்பாக தையல்காரன் மனைவியின் பிரசவத்தின் போது, 'இருளில் கண்கள் மினுங்க, ஓசையற்ற காலடிகளுட' அலையும் அந்த கரியபூனை. குடும்பனின் உதிரம் தோய்ந்த வேட்டி', (தையல்காரன் கதை, கறுப்பன் போன பாதை) படிமங்களைப் பின்னி கதையை தொடர்ந்து உருமாறும் நிழல்களின் விளையாட டாக மாற்றும் கோணங்கியின் திறமை தமிழுக்கு அபூர்வமான ஒன்று எனலாம்.
________________
இவ்விரு தொகுப்புகளையும் வைத்து நவ தமிழின் பலத்தையும் பலவீனத்தையும் அளவிட முடிகிறது. தமிழ் எழுத்தில் இருக்கும் வெவ்வேறு துருவங்களையும் காண முடிகிறது. சுப்ரபாரதி மணியன், கோணங்கி இருவர் படைப்புகளையும் சிதைக்கும் பலவீனங்கள் அவர்களுடைய முதல் தொகுப்பிலேயே தெரிய ஆரம்பித்துவிட்டிருந்தன. அவை வளர்ந்து வருவதையே இப்போதைய தொகுப்புகள் காட்டுகின்றன. வேறு புறக்காரணங் களுடன், இதற்கு முக்கியமான காரணங்களில், ஒன்று படைப்பாளியிடம் அவனுடைய அதிகபட்சத்தை கோரும் தீவிரமும், நுண்ணிய ரசனையும் உடைய வாசகர் வட்டம் இல்லாதது. இன்னொன்று ரசனை யேயில்லாமல் தவறான பாராட்டுதல் களையோ விமரிசனங்களையோ முன்வைத்த படியிருக்கும் 'சிந்தாந்த ' விமரிசகர்கள். ஆயினும் தமிழ்ச் சிறுகதைகளில் இப்போதும் சாதனைகள் உருவாக முடியும் என்ற எண்ணத்தையே தற் போதைய எழுத்துக்கள் தருகின்றன.
-ஜெயமோகன்

Wednesday, July 25, 2018

மரப்பாவைகள் - காரூர் நீலகண்ட பிள்ளை :: : எழுத்து பிப்ரவரி 1966

மலையாளக் கதை
மரப்பாவைகள் 
காரூர் நீலகண்ட பிள்ளை

வீட்டின் கதவு நம்பரை சரிபார்த்துக் கொண்டே கணக்கு எடுப்பவன் தனக்குள் சொல்லிக் கொண்டான் ; 312 ஆசாரி பரம்பில்'. ஒரு கூரைக் குடிசை சுவர்கள் கூட தென்னங் கீற்று களால் ஆனது. முகப்புக் கதவுக்கு அவன் வந்தான்.

'யாரும் இல்லையா?' அவன் பலக்க கேட்டான்.

'ஒரு பெண் குடிசைக்குள் இருந்து வெளியே வந்தாள்.

'உன் பெயர் உம்மிணியா?' என்று கேட்டான் கணக்கெடுப்பவன் தன் கையில் இருந்த காகிதங் களை பார்த்துக்கொண்டே

அந்த இளம் பெண்ணின் அகலவிரிந்த பெரிய கண்கள் இன்னும் விரிந்தன. அவள் பீதி அடைந்தாள். கேசு, போலீசு ஏதாவது இருக்குமோ?

நான் ஆட்களை கணக்கெடுக்கிறேன். சென்ஸஸ். இங்கே யாரெல்லாம் இருக்கிறார்கள்?'

'இப்போதைக்கு நான் மட்டும். அம்மா துறையின் மறுபக்கத்துக்கு நாணல் வெட்டி வரப் போயிருக்கிறாள். தம்பி வேலைக்குப் போயிருக்கிறான்.

'உம்மிணி என்கிறது யாரு?

என் அம்மா .' 'சரி, உம்மிணி', என்று எழுதிக்கொண்டே கேட்டான் 'ஆணா பெண்ணா?''

இதைக் கேட்டு அவள் லேசாக சிரித்தாள். எளப்பமாக இருந்தாலும் என்ன வசீகரமான புன்னகை!

'அம்மாவும் நானும் பெண்கள், என் தம்பி ஆண்.'

.. அப்பா இல்லையா?'

'இல்லை. இறந்துவிட்டார். '

'அப்போது, உம்மிணி விதவை இல்லையா?',

'இப்போ இருக்கிறதைத்தானே கேட்கிறீர்கள்? ஆமாம்.'

அவள் சேர்த்தாள். 'சென்ஸஸ் எடுக்கிற போது குடையை விரிக்க அனுமதி கிடையாது என்கிற மாதிரி படுகிறது. இந்த எரிக்கிற வெய்யிலில் நீங்கள் மனிதர்களை கணக்கெடுத்துக் கொண்டே போனால் சீக்கிரமே கணக்கெடுப்பிலே ஒரு ஆளை குறைத்துக்கொள்ளவேண்டி இருக்கும். இந்த பெஞ்சிமேலே நீங்கள் உட்கார்ந்துக்கலாம்.'

கணக்கெடுப்பவன் தாழ்வாரத்தில் ஏறி பெஞ்சிமேலே உட்கார்ந்து கொண்டான். தாழ்வாரம் ஒடுக்கமாக இருந்தாலும் சாணியாலே வழவழப்பாக மெழுகி கண்ணாடி போலே பளிச்சிட்டுக் கொண்டிருந்தது.

உம்மிணியை பற்றிய எல்லா தகவல்களையும் கேட்டு குறித்துக்கொண்டான் அவன்.

'உன் பெயர்?'

எழுது

நளினி', கொஞ்சம் வெட்கத்தோடு சொன்னாள். .

 வயது?

என்னைப் பார்த்து யூகிக்க முடியுமோ உங்களாலே?

'நான் எதுவும் யூகிக்கவில்லை'

அவள் லேசாக சிரித்தாள் .... -

'இருபத்தி மூன்று.'

கல்யாணம் ஆகிவிட்டதா?

 'ஆமாம்'

அப்போது, கணவனும் இருக்கிறார், இல் லையா?

அவள் தயங்கினாள்.

இப்போது, இங்கே இல்லை பதிமூன்றாவது மைலில் உள்ளவர்களை நீங்கள் கணக்கெடுத்தாச்சா?

'அதை வேறே யாராவது செய்வார்கள். ஆக, கணவன் இருக்கிறார். இல்லையா?

- ஆமாம், இல்லை ஏதாவது எழுதிக் கொள்ளுங்கள், உங்கள் இஷ்டப்படி ', என்றாள் அவள் அதைப் பற்றி கவலையே படாதவள் போல

ஆனால் ஆமாமுக்கும், இல்லைக்கும் ஒரே அர்த்தம் இல்லை, உனக்குத் தெரியுமோ?

'அப்போது, ஆமாம் என்று எழுதிக்கொள்ளுங்கள். ஆனால் தெளிவாக இல்லாமல் இருக்கட்டும்.'

ஒரு வேளை கல்யாணம் இப்போதுதான் நிச்சயமாகி இருக்கிறதோ? அப்படியானால் மணம் ஆகிவிட்டது' என்று எழுதமாட்டேன். 'மண மாகவில்லை என்று.

அப்படி இல்லை. எனக்கு மணம் ஆகி விட்டது.'

அவள் தன் பின் தலையை சொரிந்து கொண்டாள். அப்போது அவளுடைய செழிப்பான கூந்தல் அழிந்து விழுந்தது, அவளுடைய வசீகரமான உருவத்துக்கு ஒரு நேர்த்தியான பின் திரையாக அமைந்தது. -

'ஆமாம், கணவன்,

'ஆமாம், இல்லை . .

விட்டுட்டதாக, இருக்கலாமா?' 'அப்படியானால் கணவன் இல்லை.'

அந்த வார்த்தை வேடிக்கையாக இருக்கு, நீங்க அதை எழுதிக்கலாம்னு தான் நான் நினைக்கிறேன். என்ன சொன்னீர்கள்? இன்னொரு தரம் கேட்கிறேன். கணவன் இல்லாதவள். ஆமாம், ஏன் நிலைமை கொஞ்சம் குழம்பித்தான் இருக்கு. ஆனால் அவர் என்னை விலக்கவில்லை. அதுதான் அவர் செய்ததாக இருந்தால், வாராவாரம் அவர் ஏன் மத்தியஸ்தர்களை அனுப்புகிறார்?

'நீ அவரை விட்டுட்டதாக இருக்கலாம்?

1'

ந்து - 39'

சொல்லப்போனால் நான் அவர் பின்னாலே ஒருபோதும் போனதே இல்லை. பின்னாடி நான் அவரைவிட்டு விலகினேன் என்கிறதும் இல்லை. எது முறையானதோ அதை நீங்கள் எழுதிக் கொள்ளுங்கள், நீங்கள் எல்லாம் தெரிந்தவர் இல்லையா?''

'உன் கணவனைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியாதே. நீ சொல்கிறதை நான் அப்படியே எழுதிக்கிறேன். உனக்கு கணவன் இருக்கிறதாக.'

'அதுதான் தேவலை'.

'எது தேவலை, எது மோசம் என்கிறதை குறித்துக்கொள்ள இல்லை இந்த புஸ்தகம். இருக்கிறதை அப்படியே எழுதிக்கிறது.

'நான் இருக்கிறதைத்தானே சொன்னேன், என்று சொல்லிக்கொண்டே அவள் கூந்தலை முடிந்து கொண்டாள். அவசியம் இல்லாமல் அவன் அவளை கவனித்துக்கொண்டிருந்தான்.

'குழந்தைகள் ஏதாவது?'

'இல்லை, ஆணும் இல்லை, பெண்ணும் இல்லை!'

'அபார்ஷன் ஏதாவது உண்டா ?' '

ஓ ஆமாம் எத்தனையோ! எங்களுக்கு மண மாகி ஆறு மாதம் கூட முடியவில்லை ஆரம்பமாகி விட்டது. அதிலே இருந்து எங்களுக்குள்ளே ஒரு தகராறோ சண்டையோ இல்லாமல் ஒருநாள் கூட போனதில்லை.'

'என்ன சொல்கிறாய் நீ? தினமும் அபார்ஷனா?

'ஆமாம், அதனாலேதான் நான் இங்கே திரும்பி வந்துவிட்டேன்.'

'இது ரொம்ப மோசம். நான் கர்ப்பச் சிதைவு என்று சொன்னேன். அதாவது குறைப் பிரசவம் என்று அர்த்தம் இது ஏதாவது இருந்ததா?'

'நீங்கள் என்ன அசிங்கமான கேள்வி எல்லாம் கேட்கிறீர்கள்? நல்லவேளை என் கூடப் பிறந்தவன் இப்போதைக்கு இங்கே இல்லாமல் போனது.'

இதைக் கேட்டு அவனுக்கு கொஞ்சம் எரிச்சல் வந்தது

'உன் கூடப் பிறந்தவன் இருந்தால் மட்டும் என்ன? உன் சிற்றப்பாவுக்கு பாட்டனார் இருந்திருந்தால் கூட நான் இந்த கேள்வி எல்லாம் கேட்டே இருப்பேன். நீ எல்லாத்துக்கும் சரியாக பதில் சொல்லித்தான் ஆகவேண்டும். நீ சொல்லாவிட்டால் அது குற்றம் ஆகும். நீ சொல்கிற எதுவும் ரகசியமாகத்தான் வைத்துக்கொள்ளப்படும்.

'உங்களுக்கு ரொம்ப வெப்பமாக இருந்தால் நீங்கள் இதாலே விசிறிக்கலாம்' என்று நளினி பெஞ்சியின் ஒரு ஓரத்தில் ஒரு பனை விசிறியை வைத்தாள். 'இந்த கேள்விகளை என் சகோதரன் முன்னால் கேட்டிருந்தால் வெட்கப்பட்டிருப்பேன் என்ற அர்த்தத்திலாக்கும் சொன்னேன்.

'சரி?'

'இல்லை .'

என்ன இல்லை? பதில் சொல்ல மாட்டாய், அப்படித்தானே?

'இல்லை, இல்லை, இல்லை. கர்ப்பச் சிதைவு பற்றி நீங்கள் கேட்டீர்கள் இல்லையா? அதுக்கு எழுபதில் தான் இல்லை.

'உன் மாச வரும்படி எல்வளவு?'

'என் சகோதரனுக்கு ஒருநாள் வேலைக்கு மூணு ரூபாய் கிடைக்கிறது.'

'உன் சகோதரனைப் பற்றி நான் கேட்கவர வில்லை. உன் வரும்படி - '

'நான் எந்த வேலைக்கும் போகிறதில்லை.'

'ஆக உனக்கு வருமானம் இல்லை. ஒருவர் ஆதரவில் இருப்பவரை ..........

'நானா? யார் சொன்னது உனக்கு இதை? அந்த கதா இருக்காளே, தோணித்துறை பக்கத்தில் இருப்பவள், இதை எல்லாம் உன்னிடம் சொல்லி இருக்கணும். அவளைப்பற்றியும் எனக்கு கொஞ்சம் சொல்லத் தெரியும்.'

அவன் இந்த தமாஷை அனுபவித்தான்.

'கதாவா? அவள் சொன்னாளா. என்ன சொல்கிறே நீ? நான் சொன்னதை நீ சரியாக புரிந்துக்கவில்லை. ஒருவருக்கு வரும்படி இல்லையானால் அவனோ அவளோ சாப்பாட்டுக்கு இன்னொருவர் ஆதரவிலேதான் இருக்கவேண்டி இருக்கும். உனக்கோ வரும்படி இல்லை. இருந்தாலும் சாப்பாட்டுக்கும் உடைக்கும் மற்ற செலவுகளுக்கும் உனக்கு பணம் தேவை. இதெல்லாம் யார் உனக்கு தருகிறார்களோ, உன் அம்மாவானாலும் சரி, சகோதரன் ஆனாலும் சரி அவர்கள் ஆதரவில் தான் நீ இருக்கிறாய். நான் சொல்கிறது சரி தானே?

'கோர்ட்டில் அவர்கள் கேட்கிற கேள்வி மாதிரி இருக்கிறது?

கோர்ட்டிலே உன்னை கேள்வி கேட்கிறார்களா?'

'ஆமாம், அந்த சைத்தான் என்னை கோர்ட் டுக்கும் இழுத்தது!

'உன் புருஷனைத்தானே குறிப்பிடுகிறாய்?'

'அவன் என் புருஷன்? எனக்கு புருஷனே இல்லை என்று தயவு செய்து எழுதிக்கொள்ளுங் கள். அதுக்காக உங்களுக்கு ஏதாவது கொஞ்சம் கொடுக்கத் தயாராக இருக்கேன்.'

'அது இருக்கட்டும். உனக்கு வரும்படியே இல்லை, இல்லையா?'

'கொஞ்சம் வரும்படி வருது. நான் யாரையும் நம்பி இல்லை. குறைந்தது மாதம் பதினைந்து ரூபாய் சம்பாதிக்கிறேன்.'

'சரி, உன் தொழில் என்ன?'

இந்த சிர்கார் என்னெல்லாம் தெரிந்துக்க விரும்புகிறார்? எனக்கு ஒரு வேலை மட்டும் இல்லை, பல வேலை.'

'எல்லாத்தையும் நீ சொல்லலாம். இந்த கடுதாசியிலே போதுமான இடம் இருக்கு.'

'இந்த வீட்டிலே சமைக்கிறது நான் தான். தாழ்வாழத்தை மெழுகுவதும் நானேதான்.'

'என்ன பிரமாதமாக மெழுகி இருக்கு. கண்ணாடி மாதிரி பளிச்சென இருக்கே.'

என் பணிக்கன் -- அவன் எனக்கு ஒன்றுமே இல்லை இப்போது - ஒரு காலத்தில் என் கன்னங் கள் கண்ணாடி மாதிரி இருக்கு என்று சொல்வதுண்டு. அது மாதிரி இந்த தாழ்வாரம் என் கன்னம் மாதிரி இருக்கும். தமாஷுக்கு அவள் சிரித்தாள்.

அவனும் சிரித்தான். இதன் நடுவே பக்கத்து வீட்டு சிறுமி ஒருத்தி முற்றத்தில் வந்து நின்று கணக்கெடுப்பவரையே உறுத்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

'இந்த பெண்ணுக்கு வயது பத்துதான் ஆகிறது. அவள் உறுத்துப் பார்க்கிறதை பாருங்கள். இன்னும் இரண்டு வருஷம் போகட்டும். ஆண் பிள்ளைகள் இந்தப் பக்கமே நடமாடத் துணிய மாட்டார்கள்.'

சிறுமிக்கு கோபம் பெரிசாக வந்துவிட்டது. 'ஆமாம், நான் பார்த்துவிட்டால் இந்த பணிக்காத்திக்கு என்ன நஷ்டமாகப் போயிடுத்தாம். கடவுளே, நான் என் பாட்டுக்குப் போறேன்.' தனக்குள் ஏதோ முனகிக்கொண்டு அவள் விருட்டென்று போய்விட்டாள்'

நளினி சொன்னாள். 'பொங்கி, அலட்டிக் கொண்டு போகட்டுமே அவள். இப்படித்தான் யாராவது ஒருவர் வந்தால் போதும், முற்றத்துக்கு வந்து தலையை காட்டிவிடுவாள்.

கணக்கெடுப்பவனுக்கு அங்கே உட்கார்ந்திருப்பது கொஞ்சம் சங்கடமாக இருந்தது.

'ஆமாம், உன் தொழில் என்ன என்கிறதை நீ சொல்லவே இல்லையே.

'சொல்லவில்லையா? ஒரு வீட்டில் என்னெல்லாம் வேலை இருக்கோ அத்தனையையும் நான் செய்கிறேன்.'

'நான் தெரிந்துக்க விரும்புகிறது உனக்கு வரும்படி வரக்கூடிய வேலை என்ன என்கிறதைத் தான்.'

'வரும்படி வரக்கூடிய வேலை எதுவும் எனக்கு இல்லையானால் எனக்கு ஏதாவது வேலை நீங்கள் கொடுப்பீர்களா?'

'நீ என்னிடம் இதை கேட்டாயானால் - '

'கேட்டால் போதும் கொடுத்து விடுவீர்கள் இல்லையா?'

அவன் கொஞ்சம் குழப்பமடைந்து சுற்றி விழித்தான்.

அவள் சொன்னாள்: 'ஒரு வீட்டுக்கு யாராவது வந்தால் அவர்களுக்கு மரியாதை ..'

அவன் சடக்கென கேட்டான். நான் ஏதாவது மரியாதைக் குறைவாக சொல்லிவிட்டேனா?'

'நீங்கள் சொல்லவில்லை. நான் தான் மரியாதை காட்டவில்லை. நீங்கள் வெற்றிலை போட்டுக் கொள்வீர்கள் இல்லையா ?' அவள் உள்ளே சென்றாள். உள்ளே அவள் எதையோ தேடுவதை அவன் கவனித்தான்.

கொஞ்ச நேரத்தில் அவள் வெற்றிலையையும் மற்ற உபகரணங்களையும் கொணர்ந்தாள். அவன் தன் கவனத்தை அவை மீது திருப்பினான். இன்னொருதரம் அவள் உள்ளே சென்று மூன்று மரப் பொம்மைகளுடன் வந்தாள். அவள் சொன்னாள்: -

'இதுதான் என் தொழில் ஒரு பொம்மை செய்ய ஒரு நாளுக்கு மேல் ஆகாது

அவைகளை கையில் எடுத்துப் பார்த்தான் 'அவன். எல்லாம் பெண் உருவங்கள். ஆறு ஏழு அங்குல உயரம் இருக்கும் ரொம்ப நேர்த்தியாக செதுக்கப்பட்டவை. பளிச்சிடும் வர்ணம் தீட்டப் பட்டிருந்தது. வழவழப்பாயும் உருண்டு திரண்டும், அழகான அங்கங்கள், நல்ல வளைவுகள். அங்கப்பொருத்தமானவை. நிறைய தலைமயிர். வசீகரமான புன்சிரிப்பு. மொத்தத்தில் ரொம்ப கவரக்கூடிய, அழகிய கலைப்படைப்புகள். அவன் அவைகளை கூர்ந்து உற்றுப்பார்த்தான். அவன் அவளையும் பார்த்தான்.

'இந்த நாலும் எவ்வளவு ஒரே மாதிரியாக இருக்கு ! என்ன அதிசயம் !'

இதிலே நிஜமான அதிசயம், மூன்று பொம்மைகளை பார்த்துவிட்டு ஒருவர் நாலு என்று எண்ணுவதுதான் என்றாள் அவள்.

அவன் பதில் எதுவும் சொல்லவில்லை. 'இதெல்லாம் அச்சில் வார்த்ததா?' 'நாங்கள் வெண்கல - வேலைக்காரர்கள் இல்லை.'

'கடைசல் பட்டறையில் செய்யப்பட்டதாக இருக்கலாம். பாற்கடலை அவர்கள் கடைந்தபோது கிடைத்த லஷ்மி மாதிரி இருக்கு.'

'அவர்கள் பாற்கடலை கடைந்தபோது நான் அவர்களோடு கூடச் சேரவில்லை. அதனாலே நான் லஷ்மியையும் பார்த்ததில்லை. என் தொழில் என்ன என்கிறதை உங்களுக்குக் காட்டினேன். அவ்வளவுதான் நல்லது. எப்படி நாலு என்கிறீர்கள்?

'உயிர் இல்லாத இந்த மூன்றையும் இவைகளை செய்யும் உயிருள்ள ஒருவரையும் சேர்த்து குறிப்பிட்டேன் இவை எல்லாம் ஒரே மாதிரியாக இருப்பது தான் ரொம்ப அதிசயம்!

'வேறுவிதமாக சொல்லப்போனால் உயிர் உள்ள ஒன்று இந்த உயிர் இல்லாதவைகள் மாதிரி இருக்கு, அதானே அதிசயம்? இதில் அதிசயப்பட எதுவும் இல்லை. அது என் தலைவிதி.'

அவள் கண்கள் பளீரிட்டன். அவள் மறுபடியும் உள்ளே சென்று திரும்பியபோது அவள் கன்னங்கள் செவந்திருந்தன. அவள் கையில் இன்னொரு சிறு சிலை இருந்தது. அதை அவன் பக்கத்தில் வைத்தாள். அவன் தன் கைகளில் அதை எடுத்தான்.

இது கிருஷ்ணனா. கம்ஸ்வதமா? அல்லது கிருஷ்ணன் மாதிரி உடை அணிவிக்கப்பட்ட கொள்ளைக்காரனா? இதுமட்டும் இதைவிட பெரிதாக இருக்குமானால் காய்கறித் தோட்டத்தில் சோளக்கொல்லை பொம்மையாக வைக்க உபயோகப்படும். இல்லை. இன்னும் சின்னதாக இருந்தால்....'

அவள் அவனை இடைமறித்தாள். 'இப்படித் தான் ஆச்சு. சுமார் ஐம்பது பொம்மைகள் நான் செய்தபிறகு இதேமாதிரியே வந்தது. முதலில் கிருஷ்ணன் உருவம் செய்தேன். பார்த்தவர்கள் எல்லாம் அவைகளையும் வாங்கினார்கள். ஒவ்வொன்றுக்கும் மூணு, நாலணா கிடைக்கும். போகப் போக உடுப்புகள் தான் கிருஷ்ணனுடைய தாக இருந்ததே தவிர உருவம் வேறு ஒரு கிருஷ்ணனாக ஆகிவிட்டது. அந்த வேறொரு கிருஷ்ணன், உங்களுக்குத் தெரியுமே, நான் ஒரு காலத்தில் கிருஷ்ணனாக கருதி இருந்த அதே ஆள்தான். அவனைப்பற்றி நினைக்கிறபோதெல்லாம் எனக்கு ஏகக் கோபம் வரும். நான் செய்கிற உருவம், என் கோபம் அதன் முகத்தில் பிரதிபலிக்க, அவனைப்போலவே தோன்ற ஆரம்பித்தது. போகப் போக ஜனங்கள் இந்த பொம்மைகளை வாங்குவதை நிறுத்திவிட்டார்கள். ஆண் உருவங்கள் செய்கிறதையே நான் நிறுத்திவிட்டேன். ஸ்ரீ பார்வதி உருவம் செய்ய ஆரம்பித்தேன். அதாவது பெண் உருவம் செய்து அதை ஸ்ரீபார்வதி என்று பெயர் வைத்தேன். நான் ஸ்ரீ பார்வதியை பார்த்ததே இல்லையே, பார்த்திருக்கேனா என்ன..? ஸ்ரீ பார்வதி சிவபெருமானுடன் ஆடினது மற்ற விஷயங்கள் எல்லாம் நான் கேள்விப்பட்டிருக் கேன். அதை சினிமாவிலேயும் பார்த்திருக்கேன். பார்வதியும் பரமேஸ்வரரும் சில சமயம் தங்களுக்குள்ளே சண்டைப்பிடித்துக் கொள்வதுண்டு என்கிறதும் தெரிந்தது. இதையெல்லாம் மனதில் கொண்டு நான் பார்வதி உருவம் செய்ய ஆரம்பித்தேன். என்னை கண்ணாடியில் பார்த்துக் கொண்டு பார்வதியின் முகபாவங்களை என் முகத்தில் தோன்றச் செய்து பிறகு மரக்கட்டைக்கு அவைகளை ஏற்றுவேன், நான்தான் பார்வதி என்று கற்பனை செய்துகொண்டு, முடிவில் எல்லா பார்வதி பொம்மைகளும் ஒரே மாதிரி ஆகி விட்ட து...'

அவள் தொடருமுன் அவன் சொன்னாள்: 'பார்வதியும் நீயும் ஓரே ஆளாகிவிட்டீர்கள்.'

'என்ன சொல்கிறீர்கள், பார்வதியும் நானும் ஓரே ஆளா? பாருங்கள். என் மாதிரினா பார்வதி ஆக ஏற்பட்டது. அவைகளை விற்க எனக்கு வெட்கமாக இருந்தது, என் உருவ பொம்மைகளை நானே விற்பது என்றால் .?

அவன் அவசரப்பட்டு சொன்னான், அவைகளை வாங்க பலபேர்கள் இருப்பார்களே''.

'நானே அதையெல்லாம் பார்த்தேனே . ஆனால் அவைகளை வாங்குகிறவர்கள்கூட என்னை நிந்திப்பார்கள், உருவங்கள் நன்றாக இருக்கின்றன, ஆனால் அதெல்லாம் ஆடம்பரமாக தன்னை காட்டிக்கவும் ஆண்களை வசீகரிக்கவும் தான் விற்கிறதாகவும் இது மாதிரி எல்லாம் பேச்சு. நான் கொஞ்சம் முந்தி சொன்னேனே அந்த கதா, நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் என் முகத்துக்கு நேரேயே இதெல்லாம் சொன்னாள். நான் சூடாக திருப்பிக் கொடுத்தது அவள் கண்களையே அநேகமாக குருடாக்கி இருக்கணும். அப்புறம் நான் நினைத்தேன் என் காதுலே விழாத இடத்திலே எல்லாம் அவள் இதெல்லாம் சொன்னால் நான் எப்படி அவளை திட்ட முடியும்? நான் செய்ததை வேறே ஒருத்தி செய்தால் கதா மாதிரியே தான் நானும் நடந்து கொண்டிருப்பேன்.'

''அது உண்மையாக இருக்கலாம், இருந்தாலும் தன்னைப் போலவே இப்படி இந்த மாதிரி செய்கிற திறமை உண்மையாகவே வியக்கத்தக் கதுதான்.'

அவள் சொன்னாள்: 'நீங்கள் என்னை முகஸ்துதி செய்கிறீர்கள். ஒரு உருவம் அதுமாதிரி செய்தால் அதிலிருந்து எத்தனையோ அதேமாதிரி செய்யலாம் இல்லையா ? ஒருவர் கண்ணாடியில் தன் உருவத்தை பார்த்துக் கொண்டு ஒன்றை செதுக்கணும், அவ்வளவுதான், அப்படி ஒன்றும் பிரமாதம் இல்லை.'

என'அது நிஜம்தான்', 'இந்த சுற்றுப்புறத்திலே இருக்கிற ஒவ்வொருத் தரும் நான் எதைச் சொன்னாலும் அது உண்மை தான் என்று சொன்ன காலம் உண்டு. அவர்களை எல்லாம் கண்டாலே எனக்கு பயம்'

'இப்போ நீ என்னைக் கண்டு பயப்படவில்லை என்று நினைக்கிறேன்.'

'இப்போ யார் கிட்டவும் எனக்கு பயம் இல்லை எனக்கு வெளியே யாரும் இருப்பதாகக் கூட நினைத்து நான் அலட்டிக்கிறதில்லை.'

. 'அநேக கலைஞர்கள் அப்படித்தான் இருக்கி றார்கள்.'

அதைத்தான் 'நான்' என்கிற உணர்வு என்று சொல்வது என்று அவன் தனக்குள் சொல்லிக் கொண்டான். அவள் உள்ளே போய் திரும்பி வந்தாள் ,

இன்னும் நாலு பொம்மைகளை அவன் முன் வைத்தாள். அவை எல்லாம் அவள் உருவங்கள் கருணை, கோபம், வியப்பு காமாவேசமான தோற்றங்களுடன்

இந்த நாலும் முதல் தரமான கலைப்படைப்புகள் என்று நான் சொன்னால் நான் வெறும் முகஸ் துதிக்காரன் என்றுதான் நீ நினைப்பாயா ?'

'அப்படி நினைக்காமல் இருக்க முயற்சிப்பேன் ஆனால் முதல் தரமானது என்றெல்லாம் ஏன் சொல்லுகிறீர்கள்? இப்போதெல்லாம் நான் இவைகளை விற்கிறதே இல்லை, பகல் நேர சலிப்பிலே இருந்து தப்பிக்கத்தான் நான் இதுகளை செய்கிறேன். ஒரு நாள் இதுகளுக்கு கிராக்கி இருக்கும் என்பது எனக்குத் தெரியும். என்னையே பார்க்காதவர்கள் கைகளுக்கு இவை கிடைக்கிற போது ஒரு விபசாரியின் சுயவிளம்பரம் என்று சொல்லி இவைகளை நிந்திக்க மாட்டார்கள் என்று எனக்குத் தெரியும்.

'ஒருவருக்கு நல்ல கைத்திறன் இருக்கு. உண்மையாக ஒரு நிபுணர். இருந்தாலும் அதைக் கொண்டு சம்பாதிக்க முடியவில்லை. ரொம்ப பரிதாபகரமானது. இந்த அவதூறுக்கெல்லாம் ஏன் பயப்படுகிறாய்? ஜனங்கள் தங்கள் நாக்கை ஆட்டிக் கொண்டு போகட்டுமே. நீ ஏன் அதை கவனிக்கிறாய்? ஒரு குருட்டுப் பயல் கூட இந்த சிற்ப பொம்மை ஒண்ணுக்கே ஒரு ரூபாய் தாராளமாக கொடுப்பானே, யாரையும் நம்பி இராமல் நீ வாழலாமே. தொழில் சிற்பி என்றுதான் நான் எழுதப் போகிறேன்.'

அவன் அதையே எழுதிக்கொண்டான். மற்ற விஷயங்களையும் கிறுக்கிக் கொண்டான். அவளும்  அவளுடைய சகோதரனைப் பற்றி விசாரித்து அந்த தகவலையும் குறித்துக் கொண்டான். இதுக்கிடையே அவள் ஒன்றைத் தவிர மற்ற எல்லாத்தையும் உள்ளே கொண்டுபோய் வைத்தாள். ஒன்றை கையில் வைத்துக்கொண்டிருந்தாள்.

இன்னொரு தரம் அவன் வெற்றிலை போட்டுக் கொண்டான். இதுகளில் எதையும் நீ விற்கமாட்டாய், அதானே சொல்கிறாய்?

'இதுகளை நான் தின்றுவிடுகிறதும் இல்லை, அல்லது நெருப்பிலே போட்டுவிடுகிறதும் இல்லை.

'இவை நிறைய வைத்திருக்கிறாயா நீ?'

நீங்கள் இப்போது எடுக்கிற சென்ஸஸ் கணக்கில் இந்த கேள்வியும் சேர்ந்ததா?'

"நல்லது, நான் இப்போது புறப்படுகிறேன், கணவனுடன் சண்டை - நீ சொன்னது...'

அவள் இடித்துப் பேசினாள். நான் உங்களுக்கு சொல்லவில்லை? நல்லது, கணவனைப் பற்றி அன்னியரிடமும் வழியில் போகிறவரிடமும் ஒருத்தி இன்னும் அதிகமாக என்ன சொல்ல முடியும்? அவன் ஒரு மிருகம். நிறைய குடிப்பான். குடிபோதையில் வெறி நாய் மாதிரி நடந்து கொள்வான். ரோட்டிலே போகிற யாரோடேயும் ஒவ்வொருத்தரோடேயும் வலுச் சண்டைக்குப் போவான். அப்புறம் சமத்தியாக அடியும் வாங்கிப்பான். நிதானம் வருகிறவரை அதாவது விடிகிறவரை ராத்திரி போலீஸ் ஸ்டேஷனில்தான் தூங்குவான். ஒரு நாள் ராத்திரி, அகாலமான பிறகு நான் போய் என் பணிக்கனை " ஜாமீனில் விடுதலை பெறச் சொல்லி ஒரு போலீஸ்காரர் மூலம் ஹெட் கான்ஸ்டபிள் சொல்லி அனுப்பினார். விடிந்த பிறகு அவனை விடுதலை செய்தால் போதும் என்று நான் அவரிடம் சொன்னேன். என் கணவன் இல்லாத போது யாராவது வீட்டுக்குள் நுழைந்து எதாவது வம்பு செய்தால் நான் புகார் செய்ய போலீஸ் ஸ்டேஷனுக்கு போகமுடியாது என்று போலீஸ்காரர் என்னை எச்சரித்தார். நான் சொன்னேன் அவருக்கு , யாராவது என் இடத்தில் வந்து வம்பு செய்தால் என் தலையணைக்கு அடியிலே கூர்மையான உளி வைத்திருக்கேன் என்று. அவர் போய் விட்டார். ஒரு மணி கழித்து என் கணவன் போதையில் தடுமாறிக் கொண்டுவந்தான். நான் எதுவும் பேசவில்லை; பகல் ஆனதும் நான் அவன் கிட்ட கொஞ்ச நாளைக்கு ஊருக்குப் போய் இருக்கப் போகிறேன் என்று சொன்னேன். அவன் கேட்டான், 'இப்போ போவானேன் ? நான் சொன்னேன், 'இனிமேல் நான் இங்கே தங்கினால் யாரையாவது நான் என் உளியாலே கொலை செய்ய அவசியம் ஏற்படும். அதனாலே தான் நான் போகிறேன். அவன் என்ன பதில் சொன்னான் தெரியுமா ? ; அந்த சமயம் என் கையும் சும்மா கட்டிக்கொண்டு இருக்காது. நினைவு இருக்கட்டும்.' என்றான் அந்த மிருகம் ! நீ மிருகம். உன் கூட நான் வாழத் தயாராக இல்லை என்று வீட்டை விட்டு வெளியேறி விட்டேன், ரோடுக்கு வந்தேன். பஸ் ஏறி நேரே இங்கு வந்து விட்டேன். அவனைப் பற்றி இது மாதிரி எத்தனையோ அருவருப்பான கதைகள் இருக்கு. அதை எல்லாம் நான் சொல்ல விரும்பவில்லை.'

அவள் நிறுத்தியதும் அவன் எழுந்தான் , 'உங்களுக்கு இஷ்டமானால் இதை நீங்கள் உங்களுக்கே வைத்துக் கொள்ளலாம் என்று சொல்லிக்கொண்டே தன் கையில் இருந்த மரஉருவத்தை அவன் முன் நீட்டினாள்.

அவன் சந்தோஷத்தோடு வாங்கிக்கொண்டு அதைப் பார்த்தான். ரௌத்ர பாவத்தில் அவள் உருவம் அது. அதைப் பார்த்ததும் அவன் முகம் விழுந்து விட்டது. இருந்தாலும் அவளுக்கு நன்றி சொல்லிவிட்டு பெஞ்சிமீது ஒரு காகிதத்தை வைத்து, "இதை கொஞ்சம் பாரு என்றான் அவன்.

அவள் பார்த்தாள். அதில் அவன் அவள் மாதிரியே - வரைந்திருந்தான்! அவள் இன்னும் கவனித்துப் பார்த்தாள்.

'நெடுகப் பேசிக்கொண்டே நீங்கள் இதை வரைய முடிந்தது அதிசயம். நான் கொடுத்த அந்த பொம்மையை தயவு செய்து என்னிடம் திருப்பித் தாருங்கள்.' அவள் உள்ளே சென்று பார்வதி தவம் செய்கிற மாதிரி இன்னும் கொஞ்சம் பெரிய பொம்மையுடன் வந்து கலைஞனிடம் அதை கொடுத்தாள். சந்தோஷமும் நன்றியும் குறிக்கும் முகபாவத்துடன் அவன் அந்த வெகுமதியை பெற்றுக் கொண்டான்.

'நல்லது, போய்வாருங்கள்' என்று அவள் சொல்லிக் கொண்டு வெளியே வந்தாள். அவன் அடுத்த வீட்டுக்கு வந்தான். அவன் நெஞ்சில் வீணைத்தந்திகள் நாதம் எழுந்து எதிரொலித்தது.

'ஸமீக்ஷா' பத்திரிகையின் அகில இந்திய எழுத்தாளர் மகாநாடு மலரில் வந்து இங்கிலீஷ் மொழி பெயர்ப்பிலிருந்து  தமிழாக்கப்பட்டது மலையாளத்திலிருந்து இங்கிலீஷில் மொழி பெயர் த்தவர் ஏ . என் நம்பியார்)
------ - ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

இன்றையத் தமிழ் இலக்கியத்தில்
சில போக்குகள் (32-ஆம் பக்கத் தொடர்ச்சி) ரிக்கர்களும் அடங்கிய உலகம் அது. அது மட்டும் மல்ல; மேலை நா களைப் பாதித்து மாற்றும் சக்தி பெற்று வருகிற இந்திய, சீன, ஜப்பானியக் கருத் துக்களையும் போக்குகளையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும். இன்றைத் தமிழ் இலக்கியத் தில் உலக நோக்கு மிகவும் அவசியமாகும். உலக இலக்கியத்தில் மற்ற இலக்கியங்களுடன் சரி சம் மாக தமிழ் இலக்கியமும் இடம் பெறவேண்டும் மானால் ஒரு உலக நோக்கு நமக்கு மிகவும் அவசிய மாகும். இது விமரிசகன் உண்டாக்கித் தரவேண் டிய ஒரு நோக்கு. இலக்கியத்தில் உலக நோக் கைச் சம்பாதித்துக் கொள்ளமுடியாத எவரும் இன்று விமர்சகனாக இருக்க இயலாது. ஒரே உல கம் என்கிற தத்துவம் அரயேல் பற்றி எப்படி யானாலும் இலக்கியம் பற்றிய வரையில் அவசியம், கைவந்த ஒரு கொள்கை என்றில்லாத விமர்சகன் தமிழில் மட்டுமல்ல, எந்த மொழியிலுமே நல்ல விமரிசகன் ஆகமாட்டான். இந்த இலக்கிய உலக நோக்கைக் காண ஒரு பயிற்சி, ஒரு தேர்ச்சி நமக்குத் தேவை. இன்று நமது இலக்கியாசிரியர் களும் வாசகர்களும் இலக்கியத்துக்கும் விமரிசனத் துக்கும் ஒரு பயிற்சி தேவை என்று உணராமலே இருப்பதைத் தான் மிகவும் சோகமான உண்மை யாகச் சொல்லவேண்டும். ஐ. ஏ. ரிச்சார்ட்ஸ், டி. எஸ். எலியட், எப். ஆர். லீவிஸ், எஸ்ரா பவுண்டு போன்றவர்களுடைய கருத்துக்களை மட் டும் இங்கு எடுத்து நட்டுவிட்டால் போதும் என்று நினைப்பது தவறு. அப்படி நினைத்துக் காரி யம் செய்பவர்களையும் நமது விமர்சகர்களிலே நாம் காண்கிறோம்; அது துயரம் தருகிற ஒரு சின்னமாகும்.
து - 43

Friday, July 13, 2018

பாழி - முன்னுரை :: கோணங்கி

சங்காரம்

பாழே முதலா வெழும்பயி ரவ்விடம்
பாழே யடங்கினும் பண்டைப்பா ழாகாவாம்
வாழாச் சங்காரத்தின் மாலயன் செய்தியாம்
பாழாம் பயிராயடங்குமப்    பாழிலே.
                                                                  திருமந்திரம்

‘காமப்பாழி கருவிளைகழனி
                                                                  பட்டினத்தார்


படிகவிசிறியாக நாவலின் உள்ளே மயங்கிவிரியும் பாழி எனும் இடமற்ற தனிவார்த்தை நிலமடிப்பில்பாலையாகித் திணைக்கொரு  கன்னி உருவம் வரைந்து முடிவுற்ற குறியாக நகர்ந்து மொழி அபிதானத்தின் மடக்கு ஒலைகளில் கோர்க்கப்பட்ட  முத்துவயல் குளித்த பலபொருளுடைய ஒரு சொல்தான் இந்நாவல்.

நிகண்டு வடிவத்தைப் பின்பற்றி, பொருளில் ஒளித்து வைக்கப் பட்ட இயற்கைப் பரப்புகளில் எதிர்நிலைகளில் கூடுதல் பிரிவு என்பதின் மயக்க வெளியை நீட்சியாக்கும் அகக்கிளர்ச்சியின் தூண்டுதலில் படிக மொழி பின்னி நகரும் நிலத்தோற்றம் இது. பாழியெனும்  ஒற்றை வார்த்தையின் முடிவற்ற அகராதி நவீனப் படிகமாக மாறுவதற்கு மரபுப் பிரதிகளில் படர்ந்த திராட்சைத் தோட்டத்தில் கொடி வெட்டி தலைமுறையாகப் பதியம் போட்டு கால்நாட்டடி  மனிதஞாபகத்தின் அழுத்தமான ரூபிநிறக் கோப்பைகளில் தேவதாசிகளின் கோட்டுருவங்களைத் தீட்டும் திராட்சைநிற வயலின் வில் சிறகடிக்கப் பறந்த தாய்வழி இசைமரபை என் ரத்தஅலை ஸ்பரிசித்துத் தலை வணங்குகிறது.

கலை என்ற அதீதத்தின் நிஜப்பரிமாணம் பழஞ்சுவடிகளின் கீறலில் சுரந்த முலைகளில் ஒவ்வொரு சொட்டுக் கண்ணிமை பால் கோடுகளாய் பனுவலில் அசைந்து கூத்து நாடகம் போன்றவற்றில்  நிகழ்த்தப்படும் போதுதான் நாம் உணர்ந்தே இருக்கமுடியாத விதங்களில் பிரம்மாண்டமாக வெளிப்படுகிறது. சிலப்பதிகாரம் கூத்து இசை இயலின் முப்பரிமாணத்தில் இசை அகராதிகள் இலக்கணம்  கூத்துவகைகள் அனைத்தையும் உட்கொண்டு களஞ்சியமாய் படிவச் சுருளாய் மடிக்கப்பட்டிருக்கிறது. சீதள ஒலைகளில் பதமும் பாழியும் சொல்லும் பொருளும், தொல்காப்பியனிடம் தொடங்கியது. தெளிவின்மை அப்ஸ்க்கியூரிட்டி, வரலாற்றை உதறிக் கலைத்து மாற்றி அடுக்குதல், விவரிக்க இயலாத புதிர், கனவிலுள்ள தீப்பிழம்புகள், புலனுக்கு அப்பால் எரியும் கோடு, மெய்மைக்குப் பின்னால் அந்த உடல்கொண்ட மிருகம் எரியும் முழிகண்குருடர்களாய் ஊர்ந்து வருகிறது முட்டி பயமுறுத்தும் முளைகளுடன். சில அருவங்களைத் தொடடுணர்ந்த குருடர்கள் சொன்னவாக்கில் ஒவியனும்  சிற்பியும் பின் தொடர்கிறார்கள், கலைகள் யாவும் நுண்ணியவை மாத்திரமல்ல. இயற்கையால் கைவிடப்பட்டவர்களுக்கு அறிவாழத்தில்  குருடாயுள்ள கலையின் கண்ணாமூச்சி விளையாட்டு ...முழிகண் குருடுதான் போலும். நிலையிலாதோர் நிறத்துக்குள் ஒன்று கலந்துவிடுகிற பிரபஞ்சம் விரல்களிலுள்ள கலையின், இருண்ட ஊற்றுகளில் கரு மெழுகில் உருகும் சிலைகள் விரல்களாகிப் படர்கின்றன

இருண்ட நீரின் முக்கோணக் கணிதத்துக்குள் பாழி முடிவற்ற வார்த்தையாய் விரிவு கொள்ள முன்னும் நவீனம் படிகஎழுத்தில் விசை கொள்ளும் குருதியில் மறைந்துள்ள தொன்மத்தில் இறங்கும் பித்த நிலை திரவமொழிப்பரப்பாகிவிடும் தருணம். எனவே, கலையின் இடமற்று ஓடிக்கொண்டிருந்த உருவ தீவிர கதியின் ஒரு வார்த்தை மற்ற பாலை ஆழ்நிலையில் பிரபஞ்ச நுண்ணுணர்வு கொள்ளும் பாமி. இசையை மூச்சாக வாங்கி அகத் தூண்டுதலில் முதலாவது சுரம் விரல்களிலிருந்து, ஆன்மாவிலிருந்து ரத்தவேரின் கிளைகளில் பரவிச்சென்று மொழி விதையின் வெடிப்பில் பாழி முளைத்தாள். நிலங்களில் திரிந்து சூழும் திணைமயக்கம் இசையிலும் வரும். பருவ சக்கரத்தில் கோர்க்கப் பட்ட விதை வித்து நட்சத்திரம், ராசிமண்டலம் ஒருபுல் நுனியால் சுழற்றி கால-இட ரீதியான அலகுகளை ஏழடுக்குக் கூடுகளுக்குள் திணை இசையாக்கி நுண்பொருளாய் சுழலும் சிலப்பதிகாரத்தை ஆதார ஊற்றாய் கொண்டு நாவலைத் தொடர விரும்பினேன்.

ஆய்ச்சியர் குரவையில் ஏழு கன்னிகளை வட்டமாக நிறுத்தி முதலில் ஹரி காம்போதி பாடினாள் ஒருத்தி. அடுத்துக்குரலாக சட்ஜமாக நின்றவள் தன்னையடுத்து நின்ற கன்னியை ரிஷபமாக நின்றவளை நோக்கி முல்லைத்தீம்பாணி பாடுக என்று கூறி இதனால் ரிஷபத்தை சட்சமாகக் கொண்டு பாடத்தொடங்கினர். இதன் பயனாக நடை பைரவி தோன்றியது. இப்படியே ஏழு கன்னிகளும் மாறிமாறி சட்ஜஸ்தானத்தை மாற்றிப் பாடுவதால் ஏழு ராகங்கள் பிறந்தன சிலம்பில்...

நிலத்தின் மேல் முளைத்த நகரங்கள் பெரும்பாலும் முல்லையைச் சூழ்ந்ததால் புன்னாகவராலி ராகத்தின் உச்சத்தில் புல்லாங்குழலில் தீப்பற்றி இசை மூச்சு எரிந்து, செந்நாள் தோன்றிய மதுரை அழல்பட மொழிக்குள்தான் நகரம் இருக்கிறது. காண்பெரும் புலத்தில் நகரம் இல்லை. இசைக்குள் மதுரை மறைந்திருக்கிறது. புலப்படாத நகரமாக ஞாபக மயக்கத்திலுமில்லை. நகரங்கள் அழிந்து கடல்கோளில் பாயும் சிதிலங்களில் சூன்ய ரேகைகளை விருப்பு வெறுப்பற்ற நிர்வாணத்தில் உடல்மீது எழுதிக்கொண்ட நிர்கந்தரின் அறிவாழத்தில் அதிரும் ஒரு சொல்லின் உருப்பளிங்காகி கதிர்வீசும் கண்ணாடி வயல் இது.

கேட்கமுடிகிற குரல்கள் பாழிக்குள் தீட்டிய சித்திரச் சுவர்களில் வெளிப்பட்டவும் கிளம்ண்ட்டின் ஓவியப் பின்புலம் பீத்தோவனின் ஒன்பதாவது இசைக் கோலத்தில் இயங்க கண்கள் குருடான ஆழத்தில் விற்களுடன் புள்ளிகள் ஓடும் பாறை ஓவியக்காளைகளின் மூர்க்கத்தில் முடிந்தது சிம்பெனி, பீதோவனின் ஒன்பதாவது இசைக்கோலம் சிற்பங்களின் இருட்டில் உலகின் blindnessக்குள் பயணமானவேளை இயல்புநிலையின் பின்புலத்தை பிறழ்வுறச்செய்து உக்கிரப்படுத்தவும் எதார்த்தங்களைக் கீறி குருடான அவன் கண்கள் கனவுகளைத் திறந்து வெளியேறி புனைவு விளிம்புக்கு அப்பால் மூளையின் ரத்த நாளங்களிடையே பயணமாகிய சூன்யத்தில் நடுங்கும் இருப்பு நிர்மாணங்களின் சிதைவிலிருந்து உருவாகி சிம்பெனி உயிர்க்கிறது. இசை அல்லாத பாலைவனத்தில் மணல் காற்றை வெற்றுவெளிக்குள் சுழற்றி மிகத் தனிமையான மணல் ஒன்றின் விரக்தி நிலையை தீராத நாட்டியமாக இசையின் மாயத்திற்குள் நகரும் குருடர்களின் தனிமைத் தீவானான் பீத்தோவன். குருடரின் ஜீவரஸம் பூசிய ஸ்பரிச வெளி இசைப் பாலையில் தவிக்கிறது.

ஜப்பானிய ஸ்கிரீன் ஓவியத்தில் மாறும் நூல்கற்றைகளில் மறையும் நிறங்களின் கிராப்டில் உள்ள கண்ணாமூச்சி விளையாட்டில் கண்களைப்பறித்து மொழிப்பின்னலாக எம்ராய்ட் செய்து கொண்டிருந்தார் பிநோத் பிஹாரி முகர்ஜி பிரைலிஎழுத்தின் மேடு பள்ளங்கள் கிராப்டில் எம்ராய்ட் செய்து ஸ்பரிச வெளி ஓவியமாக்கினார். Inner eye படச்சுருளில் தன் விரல்களால் பார்வையாளர்களுக்குள் மறைந்துள்ள இருடடைக் கருப்புத் துணியாக மடித்து பிநோத் பிஹாரியின் ஞாபகக் குகைக்குள் மறைந்துள்ள அஜந்தாவை வெளிப்படுத்தினார் சத்யஜித்ரே. கண்வசத்தில் நரம்புப்புலம் சிதைந்து ஓடும் மின்னலின் ரேகைக்குள் அஜந்தாவின் அவலோகிதீஸ்வரர் உரு காதணிகளையும் முத்துக்களில் மறைந்துள்ள கண்களையும் ஒரு நீல அல்லியை கண் திரளாக ஏந்தியுள்ளார். மங்கிய அழுத்தமான வர்ணப்பூச்சில் இருளும் ஒளியும் மறைந்து நாகர் ஜாதகக் கதைகள் காதில் கேட்கின்றன பல குரல்களாய் உதிர்ந்தவாறு. கண் இருக்கும்போதுகூட ஒரு blindness இருக்கிறது. முழி கண் குருடனுக்குள் நிலையிலாதோர் நிறத்துக்குள் விரல்கள் அசைந்து தன்னம்பிக்கை நிச்சயம் தனித்துவம் கண்தெரியாதவர் விரல்களில் மொழி இடைவெளி நீங்கிய கலை.

- ஏழு நிலத்தோற்றங்களை ஒரே புஸ்தகமாக மடித்து பாடித் திரிந்த இலியட் ஒடிசி, ஹோமரின் கண் தெரியாத பரப்பில் நேரடி வரலாறு இல்லாத அக பரப்பில் இருள் பூசிய குருடனின் மொழிதான் கிரேக்க காவியம். பிறவிக் குருடனான சஞ்சையன் பார்த்துச் சொன்ன குருக்ஷேத்திர யுத்த கள வர்ணனை ஒடிந்த ஈட்டிகள் ரத்தமடுவில் எரியும் குதிரைக் கால்கள் வெண் சங்குகள் வியூகங்கள் எல்லாம் இரு குருடர்களுக்கு இடையில் போடப்பட்ட சொல்கதைகள் பிரியும் கிளை கிளையான கதைப் பரப்புகள் கொண்ட புராணம் தான் மகா பாரதம். வியாசவிப்ரவரின் அருவருப்பான தோற்றத்தை காண முடியாமல் இமைமூடி இருட்டிய வேளை அம்பிகாவின் புணர்பாகத்தில் திருதராஷ்டிரரின் கர்ப்ப இருளில் குருடாகவே ஜனித்தது பாரதம். இருட்டில் வரையப்பட்ட குருடரின் கண்ஏடு பாரதமாக இருக்கும். சங்கிலி எனும் தேவதாசியைப் பிரிந்தவேளை குருடான சுந்தரர் செல்லும் வழி இருட்டில் பாடிய தேவாரம், மதுரகவி இசை நாடக விதூஷிநி இரு கமலவேணிகளை கண்களாய் ஏந்திய சுதந்திர தாகம் அவர்களைப் பிரிந்ததும் கருப்பு இசைத்தட்டில் குருடான பாஸ்கரதாஸ் பாடல்கள் தீராமல் எரிகிறது வேட்கையில்.

பிரபஞ்சத்தின் இருள் தொடும் ஓவியங்களில் மறைந்துபோன பிநோத், பிஹாரியின் blindnessக்குள்தான் அஜந்தா இருக்கிறது. நிலத்தின் அகம்புதைந்த கருந்திராட்சைகளின் உருளல் கண்தெரியாதோரின் கோடுகளில் வந்தடைந்தது என்னை, ஏழு கோப்பைகள் தாங்கிய மார்பெலும்புகளின் ஒசையில் ஒரு சொட்டு ஒயின் விருந்துத் துளியாகப் பொங்கும் திராட்சைத் தோட்டத்துக்குள் குருடர்களுக்கான கோப்பைகளுடன் காத்திருக்கிறேன் இவ்வேளை.. பனித்திருக்கும் 31 டிசம்பர் 1999 பகல் முடிந்த கடைசி இரவிற்சொன்ன சேதி 'இந்தியாவின் blindnessக்குள்தான் அஜந்தா கர்ப்பப்பாழிகள் தீட்டப் பட்டிருந்தன. ஆபுமலைக்குன் கருவான தில்வாரா சிற்பக்குகையில் தழுவிய ஸ்பரிசவெளி இருளில் இருபத்தி நாலு தீர்த்தங்கரர்கள், ஸ்யாம் வர்ணத்தில் உயிரின் ரகஸியத்தை முணுமுணுத்தார்கள் என்னிடம். சமண உயிர் தத்துவம் சிலைகளில் அசையும் இருட்டு, அங்கிருந்து தப்பமுடியவில்லை என்னால். வஜ்ராசனத்தின் இருபக்கமும் இசை மகளிர் தொழுது நிற்க ஆசனத்தின் மேலே சக்கரம் சிற்பத்தின் கீழுள்ள எழுத்துக்கள் இது புத்தரைக் குறிக்கிறது' எனக் கூறுகின்றன. பூக்களின் பளுவால் வளைந்து நிற்கிறது சாலமரத்தின் கிளை, அதைப்பிடித்துக் கொண்டு நிற்கிறாள் மாயா. அருகில் பணிப்பெண்கள் நீண்ட துகில் சுற்றி கர்ப்பத்தை வட்டமான அறையாக மாற்றிவிடும் வேளை குருடர்களுக்கு படம் வரைந்து கொண்டிருந்தாள் விதிஷா. நயன இருள் ஓவியங்களில் பூசிய தைலவர்ணம் கையிலுள்ள வர்ணக்கத்திகளின் முனையிலுள்ள பார்வை பளபளக்கும் இருட்டடை ஸ்பரிசித்து ஊறி ஊறித்திறந்த இருளின் கால்களில் முளைத்த கண்கள் விண்ணுக் சடியிலுள்ள சிலைகளாசுப்புராணங்களில் உருண்டு வருகின்றன.

புத்த பூர்ணிமாவில் நிலவுச்சிலை உடைந்து போக்ரான் பாலைவனத்தில் தூக்கி எறியப்பட்டு கண்கள் குருடான விதிஷாவின் விரல்கள் அவள் விரல்முனை அளவுகள் பதிவுகள் வெளிகளுக்கு இடையினுள் நழுவும் இயக்கங்கள் எதேச்சையான விதிகளில் விரல்வழி இயங்கும் ஞாபகச்சிதறல்கள் ரேகைகளாகப் பதிந்துவிரியும் இருட்டுக் கூறிய ஒவியங்கள் அஜந்தா குகைகளாக இருக்கும். அவள் அழிவின் துர் கந்தத்தை சமணஉயிர் தத்துவம் விநாசமானதை முளைக்கசிவில் இரைச்சலிடும் வெள்ளை ரத்தப்பூச்சியின் நகர்வில் அலறினாள். பேஸ் நகரின் இடிபாடுகளுக்கிடையே மேற்குலகுக்கென தாரைவார்க்கப் பட்ட நர்மதை சாபர்மதி நதிகளின் ரசாயனக் கரைகள் அழுகிய நாற்றச் சக்தியால் கண்களில் பைத்தியரேகையோடிக் குருடான விதிஷா உடைந்து கொண்டிருந்தாள் சிலையாக, அவள் இமை மூடிய கண்வெளி இருட்டில் இயற்கையாகப்பீறிட்ட ஒவியம் இருண்மையில் துளைந்து கொண்டிருக்கும் கர்ப்பம். பொருட்களில் ஒட்டி வைக்கப்பட்ட புறநிகழ்வுகள் மறைந்து (சூன்யத்தில் தொட்டுணர்ந்த வார்த்தையின் ஆழத்தில் சித்திரக்கூடத்தில் நிறம் உதிர்ந்தவாறு உடைந்து கொண்டிருக்கிறாள் விதிஷா, கண் இழந்த சிசு அவள். கருவறையின் நுண்புலத்துக்குள் கதிர் ஊடுருவி அழிக்கும் அனுமனித நாகரீகங்களின் உயிர்நுனி அறுத்து நசுக்கும் வதைபடலம்.

மடித்த விரல்களுக்குள் தொடும் ரேகைகளின் உணர்பரப்பு பிரபஞ்ச நுண்வெளிதான் குழந்தையின் கரங்களும், விதிஷாவின் எழுச்சி கலைஞனின் கலைப்பயிற்சியையோ அறிவாழத்தையோ சார்ந்ததில்லை. அவள் தானாக சிலையாகிறாள். தானே நிகழ்ந்தது, மை இருட்டில் தடவி நடக்கிறாள் அழுக்கு நதிகளின் கரையோரம். விழிகள் உதிர்ந்த ஆழத்தில் நீரில் மறைந்திருக்கும் கண் ஏடு, தானே
இரவில் திறந்து நெளிகிறது. விதிஷா என் அருமைப் பெண்ணே மறைந்துள்ள பனி மூட்டத்தில் சமகாலத்துடன் வந்து உரையாடும் தோழியே அந்த கொடிய இரவு நடசத்திரங்கள் சூழ்ந்த பௌர்ணமி நொறுங்கி தூள் தூளாய் சிதறிய விஷ நெஞ்சங்களின் சதியில் சிக்கிய சமண உயிர்சிலையே நடந்த விநாடிகளுக்குள் ரத்தம் கசியும் உன் உடல் சீறல்களை துடைத்துக் கொண்டிருக்கிறேன். உதிரம் நிற்காமல் நகர்கிறது.
*****
சிற்பஏடுகள் குடைந்து 'சீரிய சிங்கம் அறிவுற்று; தீவிழித்து வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்த்துதறி மூரிநிமிர்ந்து முழங்கிப்புறப் பட்ட'நரசிம்ம ஸ்தம்பத்துக்குள் உலகின் எல்லா புராண அதி மிருகங்களும் உள்ஒடுங்சிமலைமுழைஞ்சில் கர்ஜிக்க ஆண்டாள் பாசுரத்தில் இழைத்த அளவுயாரும் நரசிம்மத்தின் புனை உருவை சிருஷ்டிக்க வில்லை என்பேன். புராணத்தில் ஆடும் ஆண்டாளின் ஆலிங்கன ஊஞ்சல் காமத்தின் அதீத கர்ஜளையில் அக்கினி ஆற்றின் குறுக்கே ஓடி. யுகாந்தகால நெருப்பை உமிழ சிருஷ்டியின் கதவுகளைத் திறந்தது சிங்கம், நகரங்களின் இறலில் சரித்திரத்தை உலுக்கி நிலம் பிளக்க எழுந்த நரசிம்மக் கல் ஸ்தம்பம் நிலைபெயர செந்நிறப் பிடறிகள் உனழிக், தால நெருப்பாய் சிவந்திருக்கும் நரசிம்மக்கூத்து மத்தளம் விம்மி லடசம்' தீப்பந்தங்கள் சுழற்றி ஓங்கி எழும் புராணமிருகங்களின் கற்சிலை உலகவிளிம்புகளில் படரும் இக்கோடு. உக்கிர நரசிம்மத்துக்குள் கம்பன் ஏடு திறந்து மொழி உதிரம் பத்துத்தலை கொண்ட ராவண உருவம். அரக்க இசை அழித்ததால் புலிகள் வலம் பாய்ந்து வர பின்தொடரும் பிரமஹத்தியிலிருந்து தப்பிக்க ராமாயண்யுத்த முடிவில் | சீதாவின் மணல்விரல்கள் அழிந்து அழிந்து இருகடல் கூடும் தனுஷ் | கோடி முனையில் கடல்களின் புணர்பாகம் அருவாய் உருவாய் கரு நின்று திரட்டிய மணல் லிங்கம் ராவணகர்ப்பம்தான். உள்ளே உரிப் | பொருளின் சூழ்நிலையில் கற்பகாலங்களை விழுங்கிய யாளிகளின் மூர்க்கம். கலையில் கூடி அடங்காத அறிவின் தெளிவை விலகி நழுவிப் போன கலைஞனுக்கு அடுத்த எட்டில் கால்வைத்துக் கொண்ட யாளி யாக உருமாறினார் மௌனி அவர் ஆண்டாளின் ஆலிங்கன ஊஞ்சலை தேவதாசிகளின் நரசிம்மகூரு என உணர்ந்த போது சற்றுவிலகி சாயை களில் பின்தொடர்ந்தார் கதைகளை. நெருங்க எரிந்துவிடும் நாட்டிய | நிருத்தத்தில் பிரபஞ்சத்தின் சமநிலை. தொன்மத்தின் ஆழத்தில் ருத்ர பூமியில் விதைத்த நவதானி யத்தின்மீது ஏர்காலில் சுழலும் பருவம் சக்கரம் தான் தேவதாசி நரம்புகளில் இளகிய இசையும் கால் - இட ரீதியான மயக்கமும் இலக்கணமென்றே கருதினார்கள். ஏடுகளின் ஆதார ஊற்றில் கணிகையின் தெரு. விரல்படக் கொதிக்கும் லாவா விருட்சம்.புராணத்தின் பிரவாஹத்தில் கணிகைவீட்டு மாடத்திலிருந்த பட்டுத் துகிலில் கத்தரிக்கப் பட்ட சித்திர இழைபின்னிய முத்துவயல் ஊடே நடந்து செல்ல பிரபஞ்சகானமென தனம்மாளின் விரல்கள் வீணைமீது அமர்ந்ததும் வெல்வெட்பூச்சிகளாக அசைவதை யாளிகளின் ஆங்காரம் என இருட்டில் சிறி எழுந்து புருவங்களை நெறித்து, ஏன்... எங்கே.., எனக் கடல். கோடு படர்ந்த கண்களின் ஆழத்தில் கேட்டாள் தேவதாசி. அது மெளனிக்கும் எட்டாத பிரபஞ்சகானம், தேவதாசியின் அக அமைதியின் நுண் இசை புல்வெளி படர்ந்து விரல்களாய் எழுந்து ஐந்து நிலங்களில் பிரிந்து ஒவ்வொரு நிலமும் ஓர் கன்னி உருவெடுத்து சிறகுடன் பறந்து ஏழுநிற இறகினால் வெளிப்பட்ட நாவலில் இசைக் குறிப்புகள் மயங்குகின்றன.

நாவல்வடிவம் ஏழுபுத்தகங்களின் மடிப்பில் பொருளுடைய குணத்தை கடினமான கலைக்கு அதிகபட்சமாக நெருங்கி புறத் தோற்றங்களை உதறி எறிகிறது மொழி. மூன்றும் ஏழுமாசி இரு வரியில் அடங்கிய உருவத்திலுள்ள வெற்றிடம்தான் நூதன கலை. மொழியின் ஆழத்துக்குக் குடைந்து பொருட்களை வெளியேற்றிப் படிக உடலாகி ஒளித்துவைக்கப்பட்ட வார்த்தையின் உப்பினுள் ரஸ் ஓட்டத்தை மொழியாக்கும் சித்தநிலை, ஏதுமில்லை வார்த்தைக்குள். சாயைகளின் கணிதார்த்த பரிமாணம். பொருளுமில்லை. உற் குடைந்த வெறுங்கோப்பைகளில் நிரம்பியுள்ள எடுக்கப்பட்டுவிட்ட வஸ்துவின் குணரூபம் மாறுபடும் இலைவாட்டத்தில் உயிர்களையும் மெய்யையொத்த உலகையும் உயிர்மெய்யொத்த உயிரோடு கூடிய உடலையும் நுதல்வியர்ப்பக் கூடலில் தோன்றிய உப்பாக்கி ஆருயிர் களின் அறிவு அனாதி மறைப்பை நீக்கி வினையறுத்த ஆயிரத்து முன்னூற்றிமுப்பது புறாக்களின் கால்களில் கட்டிய சீதள ஓலைகளில்
________________
தனித்தனியாய் கூறிய குந்தகுந்தரின் தர்க்கம் தூது ஓலைகளால் பறக்க | விட்ட அறிவின் சிறகு ஒளி திறந்த சிந்தனைச் சாளரங்களில் ஒளி இறகு பற்றி விடிவுக்கான வேளை, சங்கப்பலகைகளில் பின்னே அமர்ந்த | வெற்றிலைமென்ற கவிகள் பதறியோட அழைத்தது ஒளி விசிறி, 'உற்ற | நோய் நோற்றல் உயிர்க்குறுகண் செய்யாமை' கேட்டு நீலகேசி உரை வகுத்த சமயதிவாகரமுனி 'பொய்யும் வாய்மை இடத்த புரை தீர்த்ததை உயிர்காப்பு' என்றான்.

பிண்டிக்கொழுநிழல் இருந்த ஆதியின் தோற்றத்து அறிவனை ரிஷபரைக்கூறும் முதற்குறளில் 'பக' என்றால் யஸஸ், புகழ், தருமம், சுபாவாதிசயம், ஐஸ்வர்யம், முக்தி, வீர்யம் என ரிஷபரில் பதிந்த வார்த்தை பலபொருளாய் பரிமாணம் காட்டும். விஸ்வகோஸா நூலில் முதன்முதலில் எழுதும் கலை, எழுத்துக்கள், பிராமி வடிவத் தையும் கண்டுபிடித்தவர் ரிஷபரே எனச் சிந்துவெளிச் சிதைவுகளில் காளை உரு ஓடியது. தத்துவார்த்த சூத்திரத்திற்கு உரை எழுதிய அளகங்கர் கூற்றில் ஆதிசப்தம் அனேக பொருள்களையுடைய தெனவும் சில இடங்களில் முதல் என்னும் பொருள் பெற்றுவரும் என 'அகாராதயோ வர்ணா ரிஷபா தயஸ் தீர்த்தகராதி' சுலோகத்தின் எழுத்துக்கள் அகரத்தை முதலாக உடையன தீர்த்தங்கரர்கள் ரிஷபரை முதலாக உடையர் என்று காட்டும்.

அகர உயிர் போல் அறிவாகி எங்கும் சொல் விரிகிறது பொறி யாகச் சுழன்று. பூமிக்கு அடியில் ஓடும் கல் அடுக்குகளில் கிளைத்த நுரையீரல் திராட்சைக் கொத்தாகியிருந்தது. ரிவுபக்கூட்டத்தை மேய்த்தவாறு ஆபுமலையின் விருட்சத்தில் சாய்ந்து காலத்தை அளந்து இசைக்கருவிகளின் ஒலி அலகை சுரமண்டலமாக்கிய சமணர் நிலத் தடியில் கசியும் ஒவ்வொரு திராட்சைரஸத்தையும் எடுத்துக் கொடுத்த இரண்டாயிரம் வருஷ வாசனைகள் திறந்தபோது என் இதயம் தூள் தாளாகிச் சிதறி கோப்பைகளில் ரொம்ப வருஷங்களுக்கு முந்திய கொடி முந்திரியில் ஊறி ஊறி வயதான ரஸத்தின் வெளுப்பான நிறங்கள் அடங்கிய கோப்பைகள்தான் கலையாக இருக்கும். உற் குடைந்த வெறுங்கோப்பைகளை நெஞ்சுக் கூட்டில் பதித்தேன், ரத்தத்திலுள்ள தாவரங்கள் நிரம்பிவழிகிறது நாவலுக்குள். |.

கடுங்குளிரில் தனிமையில் பழுத்திருந்த கணம் ஒன்று காலத்தை விலகி நகர்கிறது. இவ்வேளை தில்வாரா ஸ்வேதாம்பரர் தனிக் கோடு களில் உயிர்க்கரு சூட்சுமக்கலை பொருந்திய ஒப்பற்ற இருட்டில் சிற்பங்களை நோக்க வியாபித்த புல்வெளியில் ரிஷபம் ஒன்று குனிந்து கண்களில் நீர் கசிய நிற்கிறது. மறதியில் ஓடும் சாபர்மதிரயில் தொடருக்குள் மான்கள்மேயும் ஆபுமலைகள் கருதுளைத்து ஊறும் நதி. ரயில் பெட்டிகளுக்குள் கண்ணாடிகள் மூடித் தனித்திருக்கிறேன். குளிரும் கண்ணாடி சுளில் பனித்திரை துடைத்து வெளிபார்த்த வேளை ஜன்னலுக்கு வெளியிலும் நான் இருந்து கொண்டிருக்கிறேன் அந்நியனாய். ஆபுரோடு ஸ்டேஷனுக்கு அருகில் மலைப்பான பாதை செங்குத்தாகச் செல்லும் வழி நீலம். பலவித உருவம் காட்டும் பாறைகளைக், கடல் தால் சூரிய அஸ்தமனக்கோடு.

அதிரும் கோடுகளில் தோன்றும் பிரக்ஞை புராணத்துள் ஈர்த்து ததீசி முனியின் சடையுடன் அசையும் முடி வற்ற ஆலமரம். சிதிலமான விழுதுகளில் கிருஷ்ணப்பருந்துகளின் விசில். சாபர்மதியோடு சந்திர பாகாந்திகலக்கும் இடத்தில் ஏழுநதிகளின் நீர் கொஞ்சங் கொஞ்ச மாய் காலமற்றுத் தனிமை கொண்டோடும் சப்தபேதங்கள் புராணங் களின் பக்கம் திரும்பும் மணல்பரப்பு. ஆதிவாசிகளின் நதிக்கதைகள் கோடு கொள்ள கிரிஜனங்களின் பாடல் மலைகளுக்குள். ஆபுமலைத் குள் சரியும் நதியின் கரையில் பசுக்கூட்டம் புல்மேய்ந்து திரியும். நீர் விளிம்பில் இதழ் வைத்துப்பருகும் தாகம். பிரவாஹத்தில் கற்கள் கூடிய தேய்வில் பல நிறங்கள் வழுக்கிப் பிரியும் சலவைக்கற்களின் உருனல் உச்சரித்த சப்தங்களில் நதியின் நாடித்துடிப்பென கல் நின்ற பாடில்லை. மணல்உரு சப்தத்தின் சுழியில் ஜனிக்கும். மலைகளில் உருண்ட கல்சிற்பங்களாய் வெட்டித்தாவும் நீச்சலில் வேறுபட்ட உருவங்கள் வரும். நீர்ப்பரப்பிற்குள் கூழாங்கற்களில் தழுவி நிற்கும் அலை. யோக வித்தையில் பிரகாசிக்கும் நீரும் கற்களும் கலந்து நிறம் மாறும் தோற்றம். மனதின் ரகளியங்களை ஆழ்ந்து கண்டறிய சுற் களை நீரடியில் தழுவி அவற்றை எடுக்காமல் சன்ன நீர்போர்வை யால் போர்த்தி ஓடுகிறாள் சாபர்மதி, யோகினிகளின் சிலைகள் சிதைந்து உருண்ட சாபர்மதியில் நின்றிருந்தேன் நனைந்த உடலில், நீர்வாள் வெட்டிய சிற்பங்கள் உருகி மெய் அழிகின்றன மெல்ல. அறுபத்திநான்கு யோகினிகளின் நீர் அரித்த முகங்களில் கண்கள் சிதிலமாசிக் குழிகளில் மணல் வடுபட்டகோடு, யாரோ படகில் நகரும் நிழல் நீரில் அசைகிறது. நீரில் சாய்வாகப் பறக்கும் பறவைக் கூட்டம் யோகினிகளுக்குத் தலைவணங்கிச் சிறகால் தொட சிற்பங்கள் உயிர்த் துடிப்பில் முலையறுந்து முகம் சிதைந்து திறக்கும் சிற்பஏடுகளில் பட்சிஇறகு காலத்தைக் கீறி நகர்கிறது அலையில்.

கற்பாளங்களின் வெண்கல் கூம்பு கூம்பாய் படி கசிகரங்களின் உச்சிவரை சமணஉயிர்ஒளி. அதைத்தொட கை நீள்கிறது. எட்டாத ஒளிவிளிம்பில் ஸ்பரிசத்தை தனிமையில் அடைந்த வேளை சாபர் மதியின் ரகஸிய ஆன்மாவைத் தொடநெருங்கித் திரும்பிவிட்ட காந்தியின் விடுதலைத்தாகம் மணலில் கரைந்த தடம். நீர்மடிப்பில் சலன மான பழைய மனிதர்கள் பொங்கிய புனலில் விடுதலையின் ரேகைகள் அழிந்தவாறு நீர்புலம்பிச் செல்கிறது அழுக்கு நகரங்களில் சுசியும் விஷமசகின் இருள்பூசி ஆயிரம் வகை நெல் பாரம்பரிய விதைக் காப்புகளை விலங்கிட்டு அந்நியருக்கு திருடி விற்ற போலி அஹிம்ஸைக்கு அடியில் நசுங்கிய சமணம் குகையை நாடிப்போய் மறைமுகத்தில ஒளிபடத் துவங்கும் ஓர் அதிகாலையில் ஜீவராசிகளோடு மோனத்தில் ஆழ்ந்து ஊறும் இயற்கையிலிருந்து எடுத்த தானிய லாரத்தை இலை களில் சேகரித்துக் கொடுத்த சமணர் மலைச்சாரலைக் கடந்து அடர்ந்த ஆபுமலைகளுக்குள் பிரவேசித்த போது. தவத்தில் எரியும் தாவரமாய் கல்லில் புகுந்து குடைந்து ஒடுங்கி ஸார ஸ்படசிகளாய் 'ஸாபர்' என்ற மான்கள் எந்த நதிக்கரையில் அனந்தமாக உலவித் திரிகின்றனவோ அங்கே மேகங்களோடு திரிந்து பசித்தவத்தில் மெலி வுக்கும் மெலிவான உயிர் ஓர்புல் இதழாய் பூமியைச் சூழ்ந்திருக்கிறது.

ரிஷபரின் பிரபைகாண சாபர்மதி வேகரயில் தொடரில் தனித் திருந்த குளிர்காலம். கர்ப்பவாசலைச் சூழ்ந்த பாறைகளின் கீழும் மேலும் கம்பங்களில் செதுக்கியப் பிரதிமைகள். கல்சிங்கத்தின் பிடரி முடி. நெளிந்தோடியது குகையில், ,

மூலநாயக ரிஷபர்காட்டில் காளை உருவில் தலைகுனிந்து புல் ஸ்பரிசித்த கணம் பூமியிலே ஆபுமலைகளின் உச்சிகளில் சமணரால் விதைக்கப்பட்ட ஒருபிடித் தானியம் அதிர்ந்து ஓடும் சமவசரமனத்திற் குள் ஓவியமானது. புல்லுக்குள் பூமி சுழன்று சாயும் விருட்சங்களின் நிழலில் சூரியனின் கற்பாளத்தில் செதுக்கியடித்த மணல் கற்சிலைகள் நிலத்தில் கசியும் சாறெடுத்து தீட்டிய சித்திரமேனிகளில் சிதிலம். சந்திர பாஷக்கல்லிலான பத்து யானைகளின் அசைவு. ஆபுமலையி லிருந்து தில்வாரா நோக்கிச் செல்லும் படிகளின் வலது பக்கத்தில் மிகப்பழமையான தானியக்குதிர்கள், சுவர்க்கீறலில் இசைவழிந்து கொண்டிருக்க என் கரங்களை உயரத்தூக்கி வெகு நேரம் தொட்டு நின்றுவிட்டேன் தானியச்சுவர்களில் கண்மூடி. ரிஷபத்தின் ஆழ்ந்த மூச்சு, அதன் கொம்புகளில் வளைந்த சூரியன் சரிந்து கொண்டிருந் தான். யானையின் மேல் ஏறிய நாபிராஜன் மருதேவியின் மூர்த்திகள் சிறியதாயினும் காலம் தாண்டி அழைத்தது என்னை. இதற்குப்பின் பக்கத்தில் சகஸ்திரகூட சைத்யாலயம். கோயிலுக்குப்பின் இறங்கு படிகளில் மாறிச்செல்லும் ஒருவேதியில் சாந்திநாத பிரபை,

மேலே நாற்பத்தெட்டு சிகரங்களின் மத்தியில் ரிவுபர் ஏழடி உயர தியானநிலை ஸ்யாமவர்ண பத்மாசனத்தில், தாதுபட்டத்தில் அநேகசிலைகளின் இடையில் ஓவியங்கள் சூழ்ந்துகொண்ட தில்வாரா கிராமம். உலக அதிசயங்களில் மறைந்திருக்கும் தில்வாரா. வரையப் பட்ட கல்பொடி களில் உதிரும் தாவரங்கள் தெருக்களில், எல்லா வீதி களிலும் சித்திரங்கள் மனித நுரையீரலில் பதிந்து சுவாசித்துக் கொண் டிருக்கின்றன. சமணரின் நாசித்துவாரங்களில் கரையும் தாவர மணம். உணரைச் சுற்றிப்படர்ந்த 'காரா' பூக்கள். ஆறு வருஷங்களுக்கு ஒரு முறை பூக்கும், காற்றில் பரவிய காராவின் நீலநிறம் நசிதலம் ஏரியில் நீர்நீலமாய் பிரதிகொள்ளும். நிச்சலனமான தில்வாரா வீடுகளுக்குத்

18
திரும்புகிறேன், இரண்டாயிரம் வருஷங்களின் கடுங்குளிரில் காது மடல் நடுங்கியது. மேலும் கீழும் ஒரே நீலப்பூவின் கண்திரள் அசைவு. நயனத்தில் உதிரும் ஒரு துளிக் கண்ணீரை விடாமல் விழுங்கி உள்ளே உவர்த்தேன், கண்ரெப்பை படபடத்த நீரின் உப்பில் வெளிறிய காலம். தொலைவைத் தாண்டி சரிந்து கிடக்கும் நட்சத்திரம் பிளவுபட்டும் உதிர்க்கும் நீலத்துகள்களில் பனிகலக்கும் மெலிவு.  இத்தன்மைக்குள் ஆழ்ந்த குளிரில் தில்வாரா ஓவியங்களில் வெளிப்பட்ட சமண உயிர் பனிக்குள் நுளைந்து கொண்டிருக்கிறது வெளியை, தெருவுக்குள் மங்கிய வெளிச்சத்தில் விதிஷா கண்திறவாமல்  கைநீட்டி ஸ்பரிசவெளி ஓவியங்களில் இன்னொரு உலகுக்கு நகர்ந்து கொண்டிருந்தாள். வெளியும் சித்திரச்சுவர்களும் பிரிக்கமுடியாமல் இணைந்திருந்த கணத்தில் காரா மலர்கள் வீசிய வாசனையில்  சமவசரணத்தில் எல்லா உயிர்களின் மோனம். சன்னமான வெண்மை கரைந்த நீலத்துள் ஒளிவடிவில் மலைச்சரிவு. ஆபுவனப்பிரதேசங்களின் ஊடே வளர்ந்த பனிக்குள் துயரமாய் படியும் விண்நீலம் பனியில் வரும் வெளிச்சம், நீலநிறக்கோடு சிலவேளை ஆரஞ்சு நிறத்திலும் இருக்கக்கூடும், சாபர்மதி ஆற்றுப் படுகையின் ஓரம் நதியைக் கடக்கும் பாவத்தின் மீது நின்றவாறு விதிஷா காத்திருக்கிறாள். மரத்தின் இலைவடிவங்களில் நெளிந்து வரையும் சூன்ய ஒளி அவளையும் ஊடுருவி வரைந்திருந்தது. தில்வாரா கிராமத்தை மூடுவதற்குக் கதவுகள் இல்லை . திசை சூழ் துகிலால் மூடியிருந்தார்  நிகம்பரர். குளிர்கால ஜன்னல்களைத் திறந்து உள்ளே இருளும் அறைகளில் அடுக்கிய கண்ணாடிகளில் பழுத்திருந்த ஆரஞ்சு, பறிக்கப்படாத இலைகளுடன் படர்கிறது ஆடிகளாய், ஒரு நீண்ட கரம்  விரல்களை அசைத்து மறையும். விதிஷா உடலிலிருந்து பழ வாசனை. அருகாமையில் செல்ல பயமாக இருக்கிறது. ஏனோ என் கைகளால் அவள் மூடிய இடை மீது தொட விரும்பினேன். மலைகள் சரிந்த  ஆற்றுப்படுகையில் விதவிதக் கண்ணாடிக் கற்களில் பதிந்த நயனம் அசையும். எங்கும் நீலம் ததும்பிய ஒரு நிமிஷம்! ஓவியங்கள் சுவாசிக்கும் நிமிஷம் கடந்து விடுவதில்லை. அந்தக் காற்று உறைந்து  விடாமல் சலனமடைகிறது. சமண உயிர் ஓவியத்திலிருந்து ஒளி வடிவில் தாக்கும் ஸ்பரிசம் நீலநிறவெளி, கண்களை மூடி இருட்டில் புகுந்து செல்லும் குருடரின் குகைப்பாறைகளில் விரல்முனைப்பதிவில் கீறிய சித்திரங்கள் மூழ்கியிருக்கக்கூடும். களைப்பு அதிகமாக இருந்தது. நாவரட்சியுடன் காய்ந்த உதடுகளை மடித்து தெருவில் நடந்தேன், சுடக்கும் போது ஓவியங்கள் கூடவே  தொடரும் தெரு, ஊடுருவிப் பார்க்கும் தாவரங்களைத் தழுவுகிறார்கள் குருடர்கள், நேத்திரங்களை இழந்தவர்களுக்கு அருகில் எல்லா ஒளி உருவங்களும் ஸ்பரிச வெளியில் சேர்கின்றன. விரல்முனையால் கலையின் ஜீவாதராஊற்றைத் தொடுகிறார்கள். அந்த தில்வாரா முழுவதும் இமை மூடிய சமண பிரதிமைகள் இருளில் எதைத்தேடுகின்றன. அவர்கள் விழித்துக். கொள்வதுமில்லை. உறக்கத்திலுமில்லை. ஓளிகழன்று மிக மெதுவாக தில்வாராவில் பனித் துகள்களாக மூடும் வெண்படலத்தில் மூழ்கி உருவற்றவனானேன். உள்ளே நீலவண்ண பிந்து பிரபஞ்ச நுண் தளத்தில் ஆழ்ந்த காரா பூவின் அரும்புகளில் உதிர்வு கொள்ளும். நசிதலம்  ஒளிப்பரிங்கில் வருஷங்கள் ஆறு அடுக்கிய வெற்றிடத்தில் வெற்றிட மே பூத்த சூன்ய இதழ்தான் நீலம். வெகு தூரம் மலையில் சரிந்து படர்ந்த காளாப்பூ விமலவுரும் தேஜபாலரும் சுட்டிய முதற் கோயில்,  உள்ளே அழகான சிற்பங்கள் கூரைக்கும் மட்ட வடிவத்தில் நடுவிலிருந்து தலைகீழாய் செதுக்குச் சிற்பங்கள் தொங்கட்டமாய் ஒரே கல்லில் தொங்குகின்றன. கோபுரத்தின் புறத்தில் இருபத்திநான்கு  தீர்த்தங்கரர்களுடைய உருவங்களில் காரா மலரின் வாசனை அலைகிறது. உள்ளடுக்கிய வட்டங்கள் நீரின் மைய அதிர்விலிருந்து இடை விடாமல் விரிகின்றன விந்தையான கலையில்,

கடைசி பஸ்ஸைத் தவறவிடாமல் தொற்றிச்செல்லும் மலைப் பாதையில் சிலைகளின் கோடு. கையில் விரல்களுக்கிடையில் நடுங்கும் நீலப்பூ இமை படபடக்கிறது, மார்பில் சாய்த்து உடைபடாமல்  மலையிலிருந்து கீழே கொண்டு வருகிறேன். இந்தக் கணம் உட்பட நீலப்பூவின் கண்திரளில் கடந்து கொண்டிருக்கக் கூடும். நிகழ்வன இருக்கிறவைகளை நோக்கி அனைத்தையும் இப்பூவின் ஆறு இதழ்களில் மூடியுள்ளேன், முன்னோக்கிச் செல்லும் பாதையில் இப்போது கணங்களையும் வாடிய நிலையில் - உணர்கிறேன். நானும் நிலத்தில் கரைந்துவிட்ட கடும்பனிக்குள் ஒற்றை சாரா இமைக்குள் தனித்திருந்த ஆபுரோடு ரயில் நிலையத்தில் இரவு போர்த்திய துகில் நழுவிய நிர்வாணம்.பின்னோக்கிச் சென்று ஆறுவருஷங்களுக்கு முந்தயமலைத் தாவரத்தில் இப்பூ ஒட்டிக்கொள்ளும் குழப்பத்தில்  பூவாசனையை நுகர்ந்த நாய் ஆழ்ந்து காளையிட்டது இருட்டில், இந்த நாளையின் சன்னமானகோடு தில்வாரா கிராமத்தின் கோடியிலிருந்து கேட்கிறதா? எனக்குத் தெரியவில்லை. தொன்னூற்று ஆறு வகை மோப்பத்தில் ஆபுமலைகளின் இருளில் திரியும் உருவத்த நாய் இருள் கோடுகளில் ஊர்ந்து செல்கிறது. மூடிய ரயில் பெட்டிக்குள் இராமாந்தர விவசாயி காரியா தப்பா சுட்டியகூட்டத்துக்குமார் தயாரித்திருந்ததும் நசர்வபு நாயின்களை நீள்கிறது. நாடோடியாக எங்கெங்கோ அலைந்து திரியும் தாயை இழந்தவேளை இல்வாரா சிகரத்தின் உச்சியை அடை கையில் நட்சத்திரம் ஒன்று வடிந்து பதிகிறது உள்ளே, உச்சியிலிருந்து ஆழத்தை நோக்கிச் சரியும் மெல்லிய நீர் இழைகளில் சாபர்மதியின் வீழ்ச்சி, ஆழமான மௌனத்தில் இருண்டிருக்கிறது உயரமான ஆபு பாறைகளுடன் பிளந்து. தூக்கக் கலக்கத்தில் எரியும் டியூம் விளக்கில் மயங்கிய பயணிகளோடு ஆனந்த் வரை போகிறேன நோக்கமற்று. தீய ஞாபகங்கள் நீங்கிய உவர்ந்த வெளிக்குள் கொர உருவங்கள் ஆடுகின்றன, தப்ப முடியாது எதிலிருந்தும். ஏராளமான மலைகளின் உச்சிகளிலிருந்து சூரியனோடு ஒரே சமயத்தில் இறங்கிக் கொண்டி,-19ருந்தேன். சமவெளியில் நீண்டு சலித்த பயண அலுப்பில் தூங்கி வழியும் தூரங்கள். ஆடுகள் மேய்த்தவாறு கருங்களியில் சாய்ந்து நாடோடி மறைந்த புல்லசைந்த வெளிமேல் மிதந்த காற்றில் சித்திரம் தீராக தில்வாரா நாணலில் வரைந்த மிருகக் கூட்டத்தை ஓடைகளில் உலவும் விதிஷாவின் துகில் படர்ந்தவெளி கூடவேஸ்பரிசிக்கிறது பயணத்தை. ' பிரிண்ட் போட்ட மேற்கு ஓவியர்களின் புஸ்தகங்களுக்கிடையே அடைபட்டு அஜந்தாவை கண்களால் ஜெராக்ஸ் எடுக்கும் அந்நிய தேச யாத்ரிகர்களின் கேமரா ஒளி சிதைத்த கபாலச் சந்துகளில் விழுந்து கிடந்த ஓவியப்பள்ளியில் கீழ்திசை ஓவியம் சிறையிடப்பட்டு பூட்டிய அறைகளுக்குள் மறுபிரதி எடுக்கும் நகல்பெருக்கத்தை ஜஹாங்கீர் | ஆர்ட் கேலரிகளில் கடைவிரித்த ஓவியர்களின் தாடியிலிருந்து வெகு தூரம் தள்ளி விடுபட்டிருந்த்து அஜந்தாவின் இருட்டு. 1999 டிசம்பர் 31 இரவில் எல்லோரா சமத்பாத்ரா சமணவிடுதியின் சமையலறையில் சுடப்பட்ட உலர்ந்த ரொட்டிகளுடன் பரிமாறப்பட்ட கடுந்தேனீரில் அடர்ந்த பார்சுவநாதரின் அகஇலைகளை ஸ்பரிசித்தேன் நடுவானில். சமண பௌத்த வெப்பம் தொட்ட இரவு எல்லோரா குகைகள் முப்பத்திரெண்டில் நடந்து கொண்டிருந்த சிற்பங்களுக்கிடையில் இருட்டுக்குள் சிக்கியிருந்த என்னை கொரியப் பெண்கள் ஆறுபேர் உள்ளங்கை அசைத்து வெளிப்பட்ட விரல்களில் ஒளி நீண்டு தொட்ட புத்தரின் அகம் திறந்து காட்டினார்கள் ஓவியங்களில் உதிரும் ஜாதக மாலாவை. சிற்பங்களின் நாசியில் சுவாசித்தேன் இன்று. கொரிய யுவதிகள் ஈரமான பனியில் ஆரஞ்சு வாசனைகள் மிக்க இலைகளுடன் என்னை அழைத்த வேளை பிரிந்து விட்டோம் இருட்டில். தனிமையில் ஆழ்ந்து கனிந்த ஆயிரம் வருஷங்களின் முடிவில் கொரியப்பெண் விரல் முனை விளிம்பில் வரையப்பட்ட சாஞ்சி இமை மூடியிருந்தது. ஜனவரி முதல் நாளில் இரண்டாயிரம் மூடிய கார்க்கை திறந்து குடித்த அற்புத ஒயின் விதிஷாவின் வாசனையில் திராட்சை விளைச்சலின் மோசமான குளிரில் அத்தனை யுத்தங்களின் அழிவுக்கும் ஈடாக பூமி - வழங்கியிருந்த திராட்சைத் தோட்டங்கள் உயிர்ச்சூழல் மாசுபடிந்த நதிகளைத் துடைத்துக் கொண்டிருந்தாள் விதிஷா, ரொம்ப நாள் வைத்திருந்து திறவாத பாட்டிலுக்குள் கருந்தோட்டத்தில் சாட்டன்ஸ் வரலாற்றுப் பூர்வமாகத் திறந்த சிமிழ்களில் இந்நாள் வழிகிறது. -

துயர உணர்வுகள் மேலோங்கி இசையில் கூடும் இச்சை ஜீவ ராசிகளின் மோகப்புயலாய் மாறுகிறது. அது புலனைவிட்டுத் தனித்து சுழன்று இசைப்புலத்துள் இச்சையின் அளவும் தன்மையும் ஜீவனின் உன்னதநோக்கங்களாசி பூதங்களோடு பூதமாக மாறிவிடும் ராவண இசையாகிறது. தேவதாசிகளிடமுள்ள உள்ளுணர்ச்சி இசையின் பாற் பட்ட சமுத்திரம். அது தன்வசத்தில் இயங்கி இசைச் சாகரத்தில் -கட்டுக்கதைகளைப் போலவே சிருஷ்டிபூர்வமான விடுதலை. சமைய லறைகளில் அடைபட்டுப்போன புயல் இருட்டில் ஸ்பரிசவெளி  ஓவியங்களாக உருமாறி பிரைடாவின் வலிமிக்ககோடுகள் உலகைச் சூழ்கிறது இன்று. பூகம்பங்கள் புதிய நீர்சுனைகளை வெளிப்படுத்தும் போது பெண்மொழி ஒரு சகாப்தத்தை வெளிக்கொணரும் வருகைக் கான நேரமிது. நெஞ்சுக் கூட்டில் வரைந்த நிஜத்தேயிலைகளின் வாசனை பரவ கோப்பைகள் ஏந்திக் கிழக்கிலிருந்து வருகிறாள் ஹிரோஷிமா. கோப்பைகளில் சிறிய மான் மற்றும் சாலமரங்களின் கிளை நீரை வாஞ்சிக்கும் பட்சிகள் இலைகளில் இளைத்த நரம்பு களோடு ஒவியத் தாவரங்கள் பொம்மைகளின் செம்மண் மோனத்தில் நிறம்கசியும் தேனீர் சடங்கில் அமர்ந்திருந்த ஹிரோஷிமா கைகளை விரித்து விண் நோக்கி அலறுகிறாள். அழிவுகள் இப்படியாகத்தான் இருக்குமா? விநாசமான தெருக்களில் வடுமுகங்கள் கயாவரை நீளும் ரயில் வண்டித்தொடரில் அவள் முகம் சூரியரேகைகளுடன் மறைவதை பீஹார் ரயில்நிலையம் ஒன்றில் காத்திருந்த வேளை பனிரெண்டு வருஷங்கள் ஓடி இவ்வேளை மன்மாட் ஸ்டேஷன் பிளாட்பாரத் தூணில் சாய்ந்திருக்கும் வேளை கடந்து கொண்டிருக்கும் தபோவன் ரயிலில் அவள் முகம் திரும்ப எட்டிப்பார்த்தது ஜன்னலிலிருந்து என்னை. கோரத் தழும்புகளுடன் இதயத்தை முள்கிளைகளாய் கீறி நிர்கதியில் பிரிந்து செல்கிறது.

பௌத்த வெப்பப்பாழி தொட்ட இரவு எல்லோரா குகைக்குள் கொரிய யுவதிகளின் அகவெளிச்சத்தில் அவலோகிதீஸ்வரரின் இமைகள் மூடிய நெல்கீறலில் மெலிகிறார்கள் இருட்டில். அஜந்தாக் குகைத் தொடரில் உன்னதமடைந்த 1, 2, 16, 17, 19 குகைகளில் புத்தரின் வாழ்க்கைச் சம்பவங்கள் ஜாதகக்கதைகளையும் இசை மகளிர் கூந்தல் அமைப்பில் வெகுநேரம் சுவாசித்துக் கொண்டிருந்துவிட்டேன். கணங்கள்சூழ உயிரும் விந்தையும் கொண்டு கையிலே தாமரை மலர் பிடித்து அமைதியில் உருகும் அவலோகிதர். மகளிர்புடைசூழ விண் பறக்கும் கந்தர்வர்களின் நிறம் தைலமாய் பிரபை கொள்ளும்.பதினா றாவது குகையில் புத்தரின் சரித்திரத் தோற்றம் ஜாதகக் கணிப்பு, பள்ளிவாசம், தவம், ராஜகிருஹத்துக்குச் செல்லும் வழி, நளகிரியென்ற மதயானையைப் புத்தர் அடக்கும் தோற்றம். வர்ணங்களை வீசும் தந்தங்கள் கொண்டு யானைகளின் தலைவனான அந்த யானை பிடிக்கும் வேடர் முயற்சி பலிக்கவில்லை. அடுத்த யானை சுவரில் ஆறு தந்தங்களுடைய சதந்தன் போது சாத்தவரே. வேடர்களின் நிலை கண்டு வருந்தி அது அவர்களுக்காக முன்வந்து தந்தங்களைத் தானே கொடுத்தது. அதனால் யானையும் மாண்டு வீழ்ந்தது. செய்தியை அரசிக்கு அறிவித்தனர் வேடர்கள். வெறிகொண்ட மனம் மறைந்தது, தன் முற்பிறப்பின் கணவனான யானை மாண்ட செய்தி இவளை மாளாத்துயரத்தில் ஆழ்த்தியது. கைகள் சோர்ந்து வீழ்ந்தாள். அருகிருப் போர் நிறங்களாக வந்து தாங்க உடல் சோர்ந்து துவண்டு வீழ்ந்தாள் சித்திரத்தில். சதந்த ஜாதகம் எனும் இக்கதை அபூர்வ நிறம் பகிர்ந்து 22இருட்டில் தத்தளிக்க துவண்டு வீழ்ந்த அரசாணியின் ஓவியம் கூடவே வருகிறது. மளம் குலையும் தாவரங்களின் வாட்டம். சம்பத்துகளை யெல்லாம் தாளமிட்ட வஸந்தரவின் சரித்திர ஓவியம், கையில் கல் ஆடி கொண்டு ஒருகாளை வளைந்து ஒயிலாக நின்று தன்னை அலங் கரித்து நிற்கும் யுவதியின் தரத்தில் வெற்றிடமாக விரியும் நிறங்கள், ஞானம் பெற்று புத்தராகத் திரும்பிவிடும் தன் தந்தையிடம் ராகுலன் தன் பங்கு கேட்கும் ஓவியம், எல்லா நிறங்களுக்கும் அப்பால் கசிந்து பொங்கிய இருட்டு ஓவியக் குகைத்தொடரில். மெல்லிய வெண் சுதை பூசிய ஈரத்தில் நிறங்கள் வீசி எழுந்த உடபாறைகளுக்கிடையில் விரியும் ஓவியஏடு தானே திறந்து புரள்கிறது. ம் அஜந்தாவின் கர்ப்பப்பாழிகளுக்குள் தேவதாசி ஒருத்தி குழந்தை சித்தார்த்தி நாவில் சேனைவைத்த விரல்ரேகையும் சித்திரம் கொள்ள குழந்தையின் முடியவிரல்களும் இசைமாரின் விரல்களும் சேர்ந்து இசையில் கலக்கம்கொண்ட பெண் ரேகை சிசு ரேகையில் பின்னிப் படர்ந்த கரு இருட்டில் வரைந்த நிமிஷம் சரும நிறங்கள் பூசிய ஈரத்தில் பிசுபிசுக்கும் சைத்ரிகரின் விரல்ஓவியத்திலிருந்து விடுபடவில்லை இன்னும், அதுபிக்குவின் கரம்போல தளிராய் தோன்றும். புத்தரின் கைபோல கிழக்கே நீளும். உலராத நிறங்களில் விரல்முனைப்பதிவுகள். விளிம்பில் நசுக்கண்களில் ஓடும் உதிரலரி.

மொழியின் சாத்தியத்தை அதன் விளிம்புவரை சென்று பொருளின் அர்த்தத்தை விலகி பகுப்பாய்விலிருந்து பூமியே விடுபட்டு விட்டது. இப்புவி பல பிதிர்களையுடைய புராவஸ்து அதை கருத்துருவத்துள் அடக்கி அறிவுத்திமிழ்மீது சுழற்றி மனிதன் கக்கத்தில் இடுக்கிக் கொள் ளாமல் மனிதனிடமிருந்தே பூமியை விடுவிக்க வேண்டியுள்ளது. மூளை ரசாயனக் கழிவில் மேற்குலகுக்குள் அடமானம் வைக்கப்பட்ட நதிகளை உருவி சுருள் வாளாகத் தீட்டும் தூயநீர் பளபளத்து நெஞ்சுக்குள் இறங்கும் ஏக்கம் அதிகமாகிவிட்டது இவ்வேளை. ஸ்பரி சவெளியின் உருமாற்றம் மொழியின் இருட்டில் ஓவியங்களாகத் தீட்டும் புனை பரப்பாக கர்ப்ப இருள் மூடியிருந்தது என்னை, சூல்விட்டு வெளிவர முடியாது இனி, சரித்திர நகல்காட்டில் வெட்டிய கலாச்சார அசு அழிப்பு இலக்கிய சூழலாகிவிட்டிருக்கும் மீடியாவின் பன்முக கிரேன் களால் புல்டோஸ் செய்யப்பட்டு மீடியாநகரமாக உலகம் மாறி வருகிறது. எல்லா நகரங்களையும் பாழிசூழ்கிறது. இனிமீடியா தான்.

ஏனோ கலைஞனை இயற்கை எப்போதும் கைவிட்டதில்லை. பின்தொடரும் வரலாற்று அச்சு எந்திரப் புலன்வெளி காண்திரையாக மாற்றப்பட்டுவிட்ட நூதன சூழலில் விண்வலையால் மூடப்பட்ட போதும் அவற்றின் சுண்ணிகளை விண்ணிலேயே அறுத்து காண்கண் களைக்கீறி இருட்டின் ஜனனவெளியில் ஓவியங்களின் ஸ்பரிசவாச னைகளை அஜந்தா இருளில் மொழிருபமாக்குவேன். கலையின் நுண் அலகுகள் வார்த்தையிலிருந்து உதிர அது உடைந்து நொறுங்கி குறுந் திரைகளின் செதில் செதிலாய் அந்தரத்தில் நீந்தி உயிரற்ற பாழியாகிறது. கண்வசமாகிவிடும் தொலைக்காட்சியாகி விட்டது எல்லாம். பிம்பக் கசிவின் கருமசகு நகரங்களைப் பூசியுள்ளது. என் அருமை விதிஷா மட்டும் கண்கள் படபடக்க இருட்டில் சிதறிய கலைகளைத் தேடுகிறாள். கண்ணீரின் வெப்பம். அருகே அவளைத் தொடநெருங்குகிறது. ஞாபக மடிப்புக்குள் ஓடி ஓடிக் கலைத்து வீழ்கிறாள் அந்தப் பாலை வனத்தில்.

' இருள்வரி ஓடும் ஒற்றை வார்த்தைக்கு சுயேச்சையான பல பொருள் வடிவங்கள் (மாறி உருகும் கற்சிலைகளில் பாழி அலைகிறது சிநிலத்தில். நிலைபெயர்ந்த கற்கோளமாய் உருண்டு வட்டமாய் அந் தரத்தில் மிதந்து சுழல்கிறாள் பாழி. மொழியின் பிரபஞ்ச நுண் நுணர்வில் மெலிந்து எடையற்று கிரக நிலையடைகிறாள். குரங்குப் பாலத்தில் அகதி நிழல் அசைகிறது. மஹாவம்சரின் கொடும்பகை எரித்த மடிப்பு ஏடுகளின் நேௗாலைகள் லிபியுடன் தீக்கொழுவிசார் நாலில் விஷம் ஏற்றி, 'ஆழித்தேரவன் அரக்கரை அழல் எழநோக்கி ஏழுக்கு ஏழ் என அடுக்கிய உலகங்கள் எரியும் ஊழிக்காலம் வந்து உற்றதோ? பாழித்தீச்சுட வெந்தது என் நகர் என பகர்ந்தாள் கவி சேரனும். இன்று மஹாவம்சர் பௌத்தப்பாழிகளில் தொல் நால் எரித்த சாம்பல் பூசிய ஊழிக்காற்று அரித்தஉடல்கள் மறைந்து சூலிச் சிசு அறுத்தார் மனித நாகரீகத்தின் பேரால், ஈயரவைகள் துளைத்த எலும்புகளின் குமுறல். ஊழிக்கடை முடிவில் மஹாவம்சர் கொம் தினர்.பாழிப்பறத்தலை எழுந்தது. பார்த்தோள் நெடும் படைக்கலம் பதாதியின் பகுதி. பாழிவன்கிரிகள் எலாம் பறித்து எழுந்து ஒன்றோடு ஒன்று பூமியில் உதிர விண்ணில் புடைத்து உறக்கிளர்ந்து பொங்கி ஆழியும் உலகும் ஒன்றாய் அழிதரமுழுதும் வீசம் ஊழி வெங்காற்று இது. பாழிவன் தடத்திசை சுமந்து ஓங்கிய பனைக்சுை. பாழி நல்நெடுங் கிடங்கு எனப் பகர்வரேல் பல்பேர் ஊழிக்காலம் நின்று உலகுஎலாம் சல்லினும் உலவாது ஆழிவெஞ்சினத்து அரக்கனை அஞ்சி ஆழ் கடல்கள் ஏழும் இந்நகர் சூழ்ந்தன. அயன்படையால் ராவணன் உயிர் குடித்தல் இன்று. பாழிமாசுடலும் வெளிப்பாய்ந்ததால் ஊழிஞாயிறு மின்மினி ஒப்புறவாழி வெஞ்சுடர் பேர் இருள்வாரலே பாழி.

மொழிப்பின்னலைப் படிகஉடலாகப் பார்வைக்கு அப்பால் இருட்டில் நகரும் பெண்களின் உள்நோக்கிய கண்தூளில் ஓடிக் கொண்டிருக்கும் நிகழ்காலங்கள் நாவலில் இடம்மாறி பலாட பெண்குலில் வார்த்தைக் கூடு பிறரூபங்களை எடுத்து கதையாகும் ஜனனம். சூலினுள் உருளும் நீர்சிப்பிதான் வார்த்தை . கலை என்ற சூல்வாய் பிளந்து மணல் துகள் விரக்தியால் உலகை சூன்யமாக்கும் சுக்கில வெளி சுழற்சியில் சூலோடு சுற்றி இசைகொடுக்கும் முத்தாக மாறுகிறது வார்த்தை, மயங்கும்பாலை உருஆகிவியர்க்கத் தோன்றிய உப்பு மூன்றாவது அகப்பரப்பாகி கருக்கில் பூச்சி உரு ஆன பாழி மூடிய இருசுழிக் கோடு. குழந்தையின் கால்கள் கர்ப்பத்தில் புறளும் பிறவா  முன்மைக்குள் தவழ்கிறாள் பாழி. நாவலில் மறைத்துவைக்கப்பட்ட ஏழ்கடல் ஏழிசை ஏழுகன்யா ஏழ்பாலை ஏழும் ஏழுமாய் ஈரேழு மேல் கீழ் அடுக்கிய புனைவு உலகங்களின் மரபுநில வெளிதான் சமணம், என புராணத் திலிருந்து கதையின் புரா வஸ்துகளின் மறைபொருள் ரூபத்திலிருந்து எடுக்கப்பட்டபின் அவற்றின் கணிதம் தான் வார்த்தையாகியிருக்கக் கூடும், புவர்லோகம் அரவு புனை நிழல்கள் ஆடும் நாகஉலா ஓர் கற்பனை நகரமாக நாவலில் அபூர்வ இணைப்புகள் கொண்ட வார்த்தை நாகரம். நத்தைக்கூடு மாதிரியோ ஒர்கிரகத்தின் மிதத்தல் மாதிரியோ ஒர் இலை நரம்பின் கிளைத்தல் மாதிரியோ நாகரம் எனும் தனித்தீவைச் சூழ்ந்த இசைத்தாவரங்கள் ரத்தத்திலிருந்து மண்டிப் பரவிமொழிவசத்தில் இயங்கிக் கொண்டிருக்கும்.

அ-ரூபம் கொண்ட சொல்வனத்திலே வேட்டையாடி நீரை வாஞ்சித்து இந்த ஏழு ஏடுகளுக்குள் பிளந்து ஓடும் ஓடைகளுக்கு வந்திருக்கும் வேட வாசகா!

உருவற்ற மிருகங்கள் மொழி உருவெடுத்து கர்ஜிப்பதால் நாவலின் பிறர் வனத்தில் புராதனமான வாசகன் ஒருவனே ஏடுகளுக்கு முந்திய காலத்திலிருந்தே தொடருகிறான் என்னை, கதையை  வாஞ்சித்துக் கதறும் மான்களை விட்டுவிடு. தனி உலகமாக நாவலின் புராவஸ்துகள் புனைவுகளில் இயங்கி பிதிர்கோடு வரையும் கலைமடிப்பில் வெளி மேல் வெளி அடுக்கிய புஸ்தகம். இந்தப்பக்கங்கள் எந்த வெளியில் நிழல்விழ நகரும் மறுகோடு குறுக்குவெட்டில் உணரும்வேறு உருவம். முரண் மடிப்பில் கலை கொள்ளும் வெற்றிடம் அறிவின் நோக்கமான பிடியிலிருந்து வெளியேறி  இருளில் புதைகிறது. கண் தெரியாதோர் வரைந்த தொடும் வெளி நகைத்தொடராய் இருக்கக்கூடு, பள்ள சாயைகள் படிந்த ஓவியங்களில் உதிரும் நிறங்கள் கலையின் தொடு முனையில் மொழி அதிர்வுகொள்ளும். மயக்கம் மேலோங்கிய கருப் பொருளில் நிலங்கள் யாவும் சாய்ந்து கிடக்கும் மோனம். என் கைகளில் வடித்த மொழியில் படிக்கக் கிண்ணங்களை ஏந்தி காலவெளியில் காத்திருக்கிறேன் வாசகருக்காக. அவனோடு உதிரத்தில் பாயும் என் விதிஷாவை அவள் கூந்தல் வாசனைமிக்க இந்நாவலை ஒர் இலை நுனியில் திளைத்த நரம்பென இந்தயுகத்தின் அபூர்வ சிறுமியை  வாசக வெளியில் விட்டுப்பிரிகிறேன் கண் இமைத்துக் காண்போர் பழித்தாலும்.

சாஞ்சி: 
விதிஷா 4. 1. 2000                                                                                      கோணங்கி

Monday, July 09, 2018

மெளனி :: மனக்கோலம் :::: - சி. சு. செல்லப்பா -4

மனக்கோலம் சி. சு. செல்லப்பா
http___tamildigitallibrary.in_admin_assets_periodicals_TVA_PRL_0000793_எழுத்து_1961_03-25.pdf
மெளனி வேடிக்கையாகவும் எழுத முடியும் என்பது ஒருபுறம் இருக்க, மெளனி கதாபாத்திரங்கள் நடமாட்ட உலகமே ஒரு வேடிக்கை உலகம் என்பதை இது வரை ஆராய்ந்த பன்னிரெண்டு கதைகளில் பெரும்பாலனதில் பார்த்தோம். அழியாச் சுடர் தொகுப்பில் மீந்துள்ள கதைகள் மூன்றும் இந்த விசித்திர, வேடிக்கை உலகப் பரப்பை இன்னும் விளக்கிக் காட்டுபவை. நினைவுச் சுழல், மனக் கோலம், நினைவுச் சுவடு ஆகிய மூன்றின் தலைப்பும் பொதுப் போக்காக, ஒரு சிந்தனை ஓட்ட நிலையை குறிப்பதானாலும் சிந்தனைப் போக்கின் தன்மையில், வீச்சில், சாயல் வேறுபாடு கொண்டவை. நான் ஏற்கெனவே குறிப்பிட்டது போல சுவட்டின் ஒரு வழிப்போக்கும் சுழலின் ஒரு வட்ட இயங்கலும் கோலத்தின் கணக்கற்ற நானாவித வரைதலும் வெவ்வேறு பாதையும் எல்லையும் கொண்டவை.

நினைவுச்சுழல் கதை இது தான். மாமன் மகன் அத்தை மகள் உறவுள்ள, சிறு வயதில் சேர்ந்து விளையாடின சேகரனும் கமலாவும்-சமீபமாக அதிகம் பார்த்திராதவர்கள் எதிர்பாராதவிதமாக சந்திக்கிறபோது கமலா அவன் குடிகாரனாயும் பிடில் வாசிப்பில் சாதகம் உள்ளவனாயும் இருப்பதைக்கண்டு, முன்னதுக்கு வெறுப்பும் பின்னதுக்கு திருப்தியும் கொண்டு தன் கல்லூரி விழாவில் தன் கச்சேரிக்கு பிடில் வாசிக்கும்படி கேட்கிறாள். தாமதமானாலும் சேகரன் சமயத்துக்கு வந்து விடுகிறான். அவன் வாசிப்பில் தனக்கு ஏதாவது அது சமாசாரம் சொல்லுகிறதா என்று நினைக்கத் தோன்றியது அவனுக்கு. இறந்த காலத்தின் எதிரொலி இடைவிடாது அசரீரியாகக் கூப்பிடுவதாக எண்ணினான். 'யாவராலும் தொடர முடியாத அங்கே போகிறேன்' என்று அவன் பிடில் சொல்லிக்கொண்டிருந்ததாக உணர்ந்தாள். கச்சேரி முடிந்து அவன் வந்தவாறே வெளியேறிவிட்டான். மனது நிதானம் இழந்த அவன் நிதானம் பெற மீண்டும் குடித்து விட்டு தன் அறையில் பிடில் வாசிக்கிறான். 'உலகிலே ஒளிக்கப்பட்டவனே போன்று இருத்தலை மிக வேண்டினான் .' மறு நாள் மாலை கமலா சேகரனை காணச் சென்றபோது அவன் போய்விட்டான். முதல் தடவை அவனைப் பார்த்ததும் 'ஏதோ காணாமற்போன வஸ்துவைத் தேடி எடுக்க முயற்சிக்கும் சிரமத்தை அனுபவித்த கமலா, 'அவனைப் பால்யமுதல் தான் அறிந்த ஒவ்வொன்றையும் கிளறிப்பார்த்த கமலா எதற்காக அவன் இப்படிப் போய்விட்டான் என்பது புரியாது திகைத்தவள் - 'அவன் கானம் தனக்கு ஏதாவது செய்தி கொண்டதா' என்று அறிய அவதிப்பட்டு, ''எங்கேயோ இருந்து, ஒளிந்ததைத் தேடித்தருவித்து அழைத்ததை அது மறைந்தும் சஞ்சலம் கொடுப்பதற்குக் காரணம் புரியாமல் தவித்து, 'சேகரன் எங்கு சென்றான் என்பது தெரியாததனாலா இவ்வளவு மனச் சஞ்சலம் அல்லது அவனிடம் ஏதாவது ரகசி யம் அவளால் பகரப்பட்டதாக நினைத்து அவன் இழப்பல் சஞ்சலமா' என்றெல்லாம் மனம் உழன்று, யோசிக்க முடியாமல், நினைவுச் சுழல் மாறி நினைவுச் சுழலில் சிக்கினவளாக நிலை அடிபட்டுப்போனவள் ஆகிறாள். தன் பெண்மையே. வீழ்ச்சி உற்றதாக அவளுக்கு ஒரு உணர்வு ஏற்படுகிறது.

இந்த கதையின் உள்ளடக்கம் ஒரு நிச்சயம் கொண்டிராதது போலவும் வழுக்கிப்போகிற மாதி ரியும் மேலுக்குத் தோன்றுகிறது. உண்மையில் மற்ற கதைகளைவிட இதில் தான், அவர்களிடையே உள்ள உறவு என்ன, என்ன உறவில் எத்தகைய மோதல் (கான்ஃப்ளிக்ட்) காட்டப்பட்டு, வளைவு தெரிவிக்கப்பட்டிருக்கிறது என்பதை பார்க்க கொஞ்சம் சிரமப்பட வேண்டி இருக்கிறது. இந்த கதையில் வருகிற துறவுகோல் வாக்கியம் இது. 'தன் மனதில் புரியாது புறம்பாக மறைந்து நின்ற ஒரு உணர்ச்சி எழுப்பப்பட்டதுதான் இவ்வகை மனக்கிளர்ச்சிக்கு ஆதாரம்போலும். என்ன எண்ணம், அறியாத வகையில் ரகசியமெனக்கருதிய எண்ணம், அவரோடு பகிர்ந்து கொண்டேன்? வெளியே தெளியத் தோன்ற முடியாதது உள்ளே இருந்ததா?' இந்த வாக்கியத்தைக் கொண்டு நாம் கதையை முழுக்கப் பார்க்கப் போனால் முழுக்கதை மிகத் தெளிவாகிவிடும். சிறு வயதில் சேர்ந்து விளையாடின அத்தங்காள் அம்மான் சேய் உறவுள்ள அவர்கள் சந்தர்ப்பத்தால் அதிகம் சந்திப்பது நின்று போயும் ஒருவரையொருவர் மனதில் போட்டுக்கொண்டவர்கள், நெஞ்சுக்குள் நசுக்கிவிடப்பட்ட (ரிப்பரஸ்டு) நினைப்புகள் இருவர் வாழ்விலும் மூடிக்கிடந்துவிட்டன, அவன் ' நீ எங்கே இருக்கிறாய் என்பது தெரிய வில்லை. உன்னைப்பார்க்க - ' என்கிற போதும், அவள் அவனை பால்யமுதல் தான் அறிந்தவிதம் ஒவ்வொன்றையும் கிளறிப்பார்க்கிற போதும், அவை ஞாபகங்களாக மேல் எழும்பி 'ஏன்'னிலும் 'அழியாச் சுடரிலும் போல தாக்கி பாதிக்கின்றன. ஆனால் அவைகளின் பாதிப்பு தோரணையிலிருந்து இது மாறுபட்டது. ஒருவர் மற்றவருக்காக அல்ல என்பது இருவருக்கும் நிச்சயமாகி விட்டது. அவர்கள் சந்திப்பே இருவரையும் திடுக்கிட'வைக்கிறது. அவர்கள் எதிர்பார்க்கவேயில்லை. ஆனால் யதேச்சையாக பார்த்துவிட்டபிறகு கமலா பின்தொடர்ந்து அவனை அறையில் சந்திக்கிறாள். மதுக் குப்பியை பார்த்து வீட்டு 'அதை கொட்டப் போகிறேன். நீ யாரென உனக்குத் தெரிகிறதா? மாமா இருந்தால் இப்படி இருப்பாயா?' என்கிற போது பழைய உறவை அதனால் உள்ள உரிமையை வலியுறுத்துபவளாகிவிடுகிறாள் - சேகரனும் 'இனி' இல்லை, இதுமட்டும்' என்று மன்றாடுபவன்போல் பேசும்போது அந்த உரிமையை வழங்குபவனாக ஆகிவிடுகிறான். குடிகாரனான அவனை வெறுக்கும் அவள் கலைஞனான அவனை விரும்புகிறாள். பக்கவாத்தியம் வாசிக்க அழைக்கிறாள். ஆனால் அவன் சரி என்று சொல்லியது அவளுக்கு பிடிக்கவில்லை. அதே சமயம் தான் எதற்காக அழைத்தோம் என்றும் அவளுக்கு யோசனை எழுந்தது. அந்த இடத்தைவிட்டுப் போகவே அவசரப்படுகிறான். ஆக அவர்கள் வைக்கப்பட்டுள்ள நிலை சிக்கலானதாக ஆகிவிடுகிறது.


ஆனால், அவர்கள் ஒருவரை ஒருவர் முன்பு காதலித்தார்களா, இல்லை இப்போதைய நிலையில் காதலிக்கிறார்களா? இது வெகு சூசனையாகத்தான் உணர்த்தப்பட்டிருக்கிறது. 'சிறு வயதில் இருவரும் சேர்ந்தே சகோதர சகோதரியாக விளையாடினார்களானாலும்' என்கிற வாக்கியத்தை நாம் பொருட்படுத்தினாலும் பொருட்படுத்தாவிட்டாலும் குழந்தைகளாக, சிறுவர்களாக அவர்களிடையே இருந்த அபிமானம் வளர்ந்து வந்திருப்பதும் சந்தர்ப்பத்தால் அது நிறைவேற்றலுக்கு இடம் இல்லாது போய்விட்டதும் தெரிகிறது. அந்தஸ்து வித்யாசத்தாலோ அல்லது வேறு எந்த வேறுபாடாலோ அவர்கள் ஒன்றுபட ஏது இல்லாமல் இருந்திருக்கக்கூடும். அது எது என்பதைப்பற்றி நமக்கு கவலை இல்லை, ஆனால் கச்சேரியில் அவர்கள் சேர்ந்து வாசித்த போது அவர்கள் இருவரும் ஒன்றாகிவிடுகிறார்கள். 'இரவின் இருள் வெளியில் பயந்த இரு குழந்தைகளின் மெளனமான பிணைப்புப்போல இருந்தது அந்த சேர்ந்த வாசிப்பு' என்கிறதில் அந்த ஒன்றிப்பை, அவர்கள் இருவரிடையேயும் இறுகிய பந்தத்தை, அவன் அவளுக்கு ஏதோ செய்தி தெரிவித்ததாகவும், அவனிடம் தன்னால் ஏதோ ரகசியம் கொடுக்கப்பட்டதாகவும் நினைக்கத் தோன்றுகிற ஒரு உறவை அவர்கள் அந்த கணங்களில் பெற்று, சாச்வதமானதாக ஆக்கிவிட்டார்கள் என்பது தெளிவாகிறது. அதற்குப்பின் அவன் எங்கு போனால் என்ன ? அவள் எந்த மற்றொரு சுழலில் தடு மாறினால் என்ன ? அந்த ஒரு சுழல் போதும் அவர்களுக்கு. அவன் மறைந்துவிட்டான். அவள் தன் 'பெண்மையின் வீழ்ச்சியை' நன்கு உணர்ந்து கொண்டாள். இந்த பெண்மையின் வீழ்ச்சி கமலாவுக்கு ஞானோதயமாக வருகிறது. குடிப்பழக்கத்துக்காக அவனை வெறுத்தாலும் கச்சேரிக்கு மறு நாள் அவனை காணப்போனாள் கமலா. அவனை தனக்குள்ளிருந்து அகற்றமுடியாதவளாக-அவனைக் காணாமல் மனம் சஞ்சலப்பட்டு 'என்ன எண்ணம், அறியாத வகையில் ரகசியமெனக் கருதிய எண்ணம், அவனோடு பகிர்ந்துகொண்டேன்' என்கிறபோது தன் பெண்மையின் வீழ்ச்சி அவளுக்கு படுகிறது. இந்த பெண்மையின் வீழ்ச்சியைக் கொண்டு முன் பார்க்கிற போது சேகரனைப்பற்றிய கமலாவின் நினைப்புப் போக்கு எப்படி எல்லாம் இருந்திருக்கக்கூடும் என்று அநுமானிக்க முடிகிறது. மேலாக, அவர்கள் உறவு சரித்திரமே நம் கண் முன் விரிகிறது. 'கொ ஞ்சநேரம்' ல் அவனுக்கும் ரோஸ்ஸுக்கும் உள்ள உறவைவிட மென்மையானது, நுண்மையானது, சிக்கலானது கமலா-சேகரன் உறவு. 'வெளியே தெரியத் தோன்றமுடியாதது உள்ளே இருந்ததா? இந்த புரியாத அமைதிக்கு காரணம்? என்று கமலா தன்னைக் கேட்டுக் கொள்கிறபடி, பிரக்ஞை நிலைக்கும்  அடியில் உள்ள ஒரு உணர்வு நிலையில் இருவரிடையேயும் இருந்து வந்திருக்கிற உறவு அது. 'சப்கான்ஷஸ்' என்கிற, தான் அறிய இயலாத ஒரு மங்கலான பிரக்ஞையாக, நம் கவனத்துக்கு வராத ஒரு நிலையில் இருந்து, ஏற்பட்ட ஒரு உணர்ச்சிக் கொதிப்பில், மேலெழும்பி வந்தது. அந்த நிலையை மெளனி வெற்றிகரமாக கையாண்டிருக்கிறார். கதையை படித்து முடித்ததும் ஒரு முழுமையை நமக்குள் உணரமுடிகிறது.

அடுத்த கதை 'மனக்கோலம்.' 'வாழ்க்கை லக்ஷ்யம் என்பது என்ன வென்றே புரியாத கேசவன், 'நிலைகொள்ளாது இச்சைகள் மன விரிவில் விரிந்து கொண்டே போனால் மதிப்பிற்கான துரத்துதலில் தானாகவா இச்சைகள் பூர்த்தியாகின்றன? பிடிக்க முடியாதெனத் தோன்றும் எண்ணத்தில் இந்த துரத்திப் பிடிக்கும் பயனிலா விளையாட்டு எவ்வளவு மதியீனமாகபபடுகிறது' என்று சொல்லிக்கொள்ளும் கேசவன், கெளரியின் கண்களை ஒருநாள் சந்தித்த வாய்ப்பில், அவளை 'அகலாத லக்ஷியமாக' அவள் வேறு ஒருவரது மனைவி என்பதையும் ஏற்க மறுத்து இச்சை விரிப்பு கொள்கிறான். அதன் வேகம் அவனை வெகு தொலைக்கும் உந்திவிட்ட நிலையில் ஒரு பயங்கர கனவு போன்ற பிரமை உணர்வு நிலையில் பதறி விழிப்புக்கொள்கிறான். அவன் மனது அதன் பின் காலைகாண ஆரம்பித்தது, தெளிகிறது. மெளனியின் மற்ற காதல் கதைகளுக்கு மாறாக 'இச்சைக்கு அர்த்தம் கொடுக்கப்பட்டுள்ள கதை. கு. ப.ரா, வைப்போல காதலுக்கு ஒரு புனித அர்த்தம் கொடுத்திராத புதுமைப்பித்தன் 'இயற்கையின் தேவை' என்ற நோக்கில் தன் கட்டுக்கதை ஆண்பெண் உறவு உலகத்தை நடத்தி இருப்பவர். மெளனி இந்த கதையில், 'கையால் ஆகாதவன் கணவன் ஆகிறான். பசிக்குப் பிச்சை கேட்க யாரிடமும் என்னேரமும் முடிகிறதா? தனக்கென்று ஒரு மனைவி. தன் பலவீனத்தை உணர்ந்ததில் தான் மனைவி என்கிற பாத்தியம் கொண்டாட இடமேற்படுகிறது ஆண்களுக்கு. பெண்ணோ எனில் தன் பலத்தை மறக்க, மறைக்கத்தான் மனைவியாகிறாள்' என்று கேசவனின் இச்சை விரிப்புக்கு ஆதாரமான வரிகள் மூலம் 'உள்ளுற உறைத்து தடித்ததொரு, உணர்ச்சி வேகம் அவனை வெகு தூரம் உந்தித் தள்ளிவிட்ட, 'அகத்தில் பிளவுபட்ட ஒரு நிலையை எடுத்துக் காட்டி இருக்கிறார். ஆனால் புதுமைப்பித்தனது 'இயற்கையின் தேவை' அடிப்படைக் கதைகளில்" உள்ள ஒரு வலுசத்து இந்த கதையில் ஏறவில்லை, அவனுடைய இச்சை விரிப்பு வெகு சாமான்யமாக எழுச்சி கொள்கிறது. அவனுடைய விழிப்பும் வெகு மந்தமாக விழுந்திருக்கிறது. கேசவன் சிந்தனைகளிலே காலத்தை கழித்தமாதிரி கதையும் சிந்தனைகளாகவே நிரம்பிக் காண்கிறதே தவிர உச்சநிலைக்கு உதவக் கூடிய (உச்ச நிலையே சப்பையாக வந்திருக்கிறபோது) வகையில் தீவிரம், பொருத்தம், தேவையளவு கொள்ளவில்லை. அர்த்த புஷ்டியான தலைப்புக்குத் தக்க கதையாக உருவாகாமல் திறமைக்குறி காட்டுகிறது, ஆனால் சாதனை காட்டாத ஒரு இளம் கையின் படைப்பாகவே தோன்றுகிறது.

அழியாச் சுடர் தொகுப்பில் பாக்கி உள்ள கதை நினைவுச்சுவடு. கடற்கரையில் எதிர்பாராத சந்திப்பில், தன் நண்பனுடன் இருந்த சேகரன் தனக்கு சற்று தள்ளி உட்கார்ந்திருந்த பெண்களில் ஒருத்தியை வீடு திரும்புகையில் தொடர்ந்து சென்று அவள் நுழைந்த வீட்டிலிருந்து சேகரா' என்றுவந்த அழைப்பின் பின் நண்பனுடன் நுழைந்து, தான் அங்கு கண்ட சுசீலா முன்பு தனக்கு உறவு இருந்த ஒரு தாசியாயும் தான் தொடர்ந்து வந்த பெண் காந்தா தன் மகளாயும் இருக்க காண்கிறான். காந்தாவை உச்சி மோந்துவிட்டு, அப்பா.... அம்மாவுக்காக இல்லாவிடினும் எனக்காக இருக்கமாட்டீர்களா?' என்று அவள் ஏங்கிக் கேட்கையிலேயே வாசலை நோ க்கிப் போய்க்கொண்டிருந்தான். இந்த கதையின் உள் ளடக்கம் மெளனியத்தன்மை வாய்ந்ததாக இருந்தா லும், 'பிரபஞ்சகானம்' 'அழியாச்சுடர்,' 'மாறுதல்,' 'மாபெருங்காவியம்' போல, சிந்தனைச் சுழற்சியும் சிக்கலும் காணப்படாத, கதையம்சத்தை குடைந்து பார்க்க சிரமப்படுத்தாத, சொல் முறையில் மனோ தத்துவ வெளியீட்டுக்கு காட்டப்பட்டிருக்கிறதை விட வர்த்தமான வெளியீட்டுக்கு அதிகம் அக்கறை செலுத்தப்பட்டு, இந்த கதை சொல்லலும் கலைக் குறை காணாமல் அளவான ரசப்பாங்குடன் வந்திருக் கிறது.

'அழியாச் சுடர்' தொகுப்பு கதைகள் பதினைந்தையும் நாம் பார்த்தாகிவிட்டது. முழுமொத்தமான மதிப்பீட்டை செய்யுமுன் இதில் சேராத சமீபத்திய 'குடை நிழல்' (1959 அக்டோபர்) 'பிரக்ஞை வெளி யில்' (1960 அக்) கதைகளையும் தனியாக பார்த்து விடலாம்.

அதற்கு முன் ஒரு தகவல். தேடின மூன்று மெளனி கதைகளில் ஒன்று எதிர்பாராமல் கிடைத்திருக்கிறது, 'சரஸ்வதி' ஆசிரியர் விஜயபாஸ்கரன் முயற்சியால், சமயத்துக்கு அவர் கதையை என்னிடம் தந்திருக்கிறார். அவருக்கு என் நன்றி. 'மாறாட்டம்' (1938) என்ற அந்த கதை மெளனி வேடிக்கையாக எழுதக்கூடும் என்பதற்கு மற்றொரு உதாரணம். அன்று, முப்பதுக்களில், தேசிய வேஷம் போட்டுக்கொள்ளும் ஒரு மனப்பாங்குள்ளவர்கள் இருந்ததை கிண்டல் செய்தது. வழக்கமாக சில்க் ஷர்ட்டும் விசிறி மடிப்பு அங்கவஸ்திரமும் அணிகிற; மேடையில் ஆசனங்களில் உட்கார அந்தஸ்துள்ள ஒருவர், அன்று கதர் ஜிப்பாவும் காந்தி குல்லாவுமாக மாறி விட, தற்செயலாக அவரது வழக்க உடை போல வேறு ஒருவர் அன்று போட்டுக்கொள்ள, அதனால் அவர்தான் இவர் என்று கருத இடம் ஏற்பட்டதைப் பற்றியது. லேசுக்கதை, மெளனி 'ஸ்பெஷல்' களில் ஒன்றல்ல.

- 'குடை நிழல்' கதையும் நினைவுச்சுவடு' போல சிக்கல் இல்லாத கதை. ஆனால் மனோதத்துவமும் கதை சொல்லலும் இழைந்துவிட்ட ஒரு வெளியீட்டுத்தன்மை கொண்டதாக இருக்கிறது. முந்தின கதைக்கும் இதற்கும் உள்ள ஒரு வித்யாசத்தைக் காட்டுவதற்காக இது சொல்லப்படுகிறதே தவிர ஏதோ ஒரு குறிப்பிடத்தக்க ஒரு தனி விசேஷ குணம் என்பதற்காக சொல்லப்படவில்லை. கதைப் படைப்பில் இந்த இரண்டும் இயல்பாக திறம்பட கையாளப்பட்டிருப்பது தான் முறை. கதை இது. மழையில் நனைந்து இருந்த அழகிய ஜோன்ஸை பஸ் ஸ்டாண்டில் சந்தித்த சுந்தரம்; ஏற்பட்ட அறிமுகத்தில், தன் குடையில், அவள் போகவேண்டிய இடத்துக்கு இட்டுச் செல்ல முன் வந்து, அவளது விரும்பியும் விரும்பாமலுமான அநுமதியுடன் வீட்டுக்குப் போகிறான். தான் 'யார் என்று சொல்லவேண்டிய அவசியம் இல்லாமலே அநேக ஆடவர்கள் அறிந்து கொண்டு இருக்க, அவனால் தெரிந்து கொள்ள இயலாதது மட்டுமின்றி, 'சொன்னாலும் நீங்கள் தெரிந்து அறிந்து கொள்ளமுடியுமோ.'என்று சந்தேகப்பட்டதுடன் 'முடிந்தாலும், உங்களுக்கு நன்மையானதா' என தான் சந்தேகப்பட்டதாக அவனிடமே கூறும் ஜோன்ஸ் அவனை ஒரு கணத்தில் நன்றாக அறிந்து கொண்டவளாகிறாள். இவ்வளவுக்குப்பிறகு அவனுக்கு கொஞ்சம் புரிகிறது. அவளிடம் அது தாபம் தோ ன்றுகிறது. அவனை புரிந்து கொண்ட அவள், 'உங்களைப் பெண்ணுடையில் பெண்ணாக்கி என் சினேகிதியாக என் பக்கத்திலேயே, ஏன்-என் உள்ளேயே வைத்துக்கொள்ள ஆசையாக இருப்பதாகக் கூறிய அவள், தன் வாடிக்கைக்காரர்களிலிருந்து விலக்கானவனாக இருந்த அவனது குடும்பத்தைப்பற்றி அவனிடமிருந்தே அறிந்து கொண்டிருந்த அவள், 'இப்போது நீங்கள் வேண்டா விருந்தினன் போல வந்திருக்கிறீர்கள். பிரிவு உபசாரம் தான் உங்களுக்கு நான் செய்கிறேன். உங்களைப் பிடிக்காது வெளியனுப்பத்தான் என் மனம் உங்களிடம் இவ்வளவு ஆசை கொள்கிறது' என்று 'அத்தகைய ஒருத்தியிலிருந்து வந்த 'விலக்கான' வார்த்தைக்க ளுடன் அனுப்பிவிடுகிறபோது, அநுதாபம் கொண்ட அவன் ஐந்து ரூபாய்களை வைத்துவிட்டுப் போய்விடுகிறான். ஜோன்ஸ் சிரித்துக் கொள்கிறாள். ஆனால் மறுநாள் அவள் எதிர்பார்த்து இராதநிலையில் அவன் திரும்பி வரவும் அவனது அநுதாபத்தை விரும்பாத அவள், 'உங்களால் ஒன்று செய்ய முடியாததினால் தான் உங்களிடம் நான் பிரியம் கொண்டிருக்கிறேன்' என்று சூசனையாக தனக்கும் அவனுக்கும் இடையே இருக்கிற, இருக்கவேண்டிய நிலையை உணர்த்துகிறாள். மூன்றாம் தடவை சுந்தரம், ஜோன்ஸ் எதிர் பாராது வந்த போது, ஆச்சர்யம் அடைந்த அவள், 'என்னை, உன்னைப்பற்றிய வரையில் என்னை, நீ இன்னும் அறிந்து கொள்ளவில்லை என்று தோன்றுகிறது. உன்னையும் நான் சரியாகத் தெரிந்து கொள்ள வில்லை என்று நினைக்கிறேன். இல்லாவிட்டால், நீ எனக்கு இப்படி வருத்தம் கொடுக்கமாட்டாய்,' என்று கூறி தடை விதித்தவள், நான்காம் தடவை அவன் வருகையை எதிர்பார்த்து அவன் பாதையிலிருந்தே விலகிவிடுகிறாள். நான்காம் தடவை போன சுந்தரம் ஜோன்ஸ் இடத்தில் வேறொருவளைக் காண 'ஒருக்கால் இவ்வூருக்கு வராமல் இருந்தாலும் இருக்கலாம்' என்று ஜோன்ஸைப் பற்றி அவள் தகவல் சொன்னதுடன், அவள் கொடுக்கச்சொன்னதாக ஐந்து ரூபாயை கொடுக்கிறாள். 'நீயே வைத்துக்கொள்' என்ற சுந்தரம் வீழ்ந்தவனாக திரும்பு கிறான். கதை உள்ளடக்கம் ஏதோ தனிப்பட்டது, என்று சொல்லத்தக்காவிட்டாலும் சொல்முறையில் ஒரு நேர்த்தி இருக்கிறது. மெளனியின் இந்த கதை நீண்ட இடைக்காலத்துக்குப் பின் வெளிவந்தது. மெளனியின் நடையிலே இயல்பாக உள்ள இறுக்கம் இதில் சற்று தளர்ந்தும்: சூசனை உணர்த்தல் (ஸஜஸ்டிவிட்டி) மென்மை குறைந்தும் இருப்பதும் தெரிகிறது. பல வாக்கியங்கள் அவ்வளவு அப்பட்டமாக (ஆப்வியஸ்) இருக்கின்றன. அதே சமயம் மனோதத்துவ தாத்பரியம் சந்தேகத்துக்கு இடமின்றியும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஒரு கதையைக் கொண்டு மெளனியின் இன்றைய எழுத்துப் போக்கில் மாறுதல் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறதாக திடீர் முடிவுக்கு வந்து விடுவதற்கில்லை.

ஏனெனில், அவரது இருபதாவது கதையான 'பிரக்ஞைவெளியில்' (அக்டோபர் 60) கதையில் வேதாளம் திரும்ப முருங்க மரம் ஏறிச்கொண்டதாக மெளனி உள்ளடக்கத்திலும், சரி சொல் வழியிலும் சரி தன் பழைய நிலையை எடுத்துக்கொண்டு விட்டது தெரிகிறது. முதலில் கதையை பார்த்து விடு வோம். கடற்கரையில் நண்பனுடன் நடந்து சென்ற சேகரன் சற்று தள்ளி உட்கார்ந்து இருந்த மூன்று பெண்களில் ஒருத்தி மீது விழுந்த தன் கவனத்தில், நண்பனிடம், சமீப காலமாக சுசீலா (கிராமத்தில் இருக்கும் அவன் மனைவி)வைப் பார்க்கும் தோற்றம், பார்த்தால் தோன்றும் நினைப்புகள் எழுவதாகச் சொல்கிறான். மறுநாள் சேகரனுக்கும் அந்த பெண்ணுக்கும் ஏற்பட்ட யதேச்சை சந்திப்பில் அறிமுக மாகிறார்கள். மாலையில் கடற்கரையில் அவளையும் மற்றவர்களையும் சந்தித்து அறிமுகம் ஏற்பட்டு அந்த கோஷ்டியில் ஒருவராக ஆகிறான். ஒருவர் பெயரை மற்றவர் கேட்காமலேயே அவர்கள் தினம் பழகி வருகையில், ஒரு நாள் தன் மனைவி பெயரும் அந்த பெண் பெயரும் ஒன்றாக இருப்பதை அறிந்த வியப்பில் 'முன்பு தான் ஒரு உருவை வைத்துக் கொண்டு இருவராகக் கண்டு ஆட்டினேன் போலும். இப்போதோவெனில் ஒரு பெயரை வைத்து இருவராக ஆட்டுகிறேன் போலும்' என்று 'சுவாதீனமாக' பேசி அந்த விநோதத்தை மனதில் எண்ணிப் பார்க்கிறான். நாட்கள் ஆக, மறுநாள் ஊருக்குப் போவதாக அந்த பெண்களிடம் சொல்லி, தினமும் தள்ளிக் கொடுத்துக்கொண்டிருக்கிறான். ஒருநாள் அவர்களை சந்திக்கும் பதைப்பில் சென்றபோது அவன் 'கல்சட்டிக்கார' பிரயாணத்தை மற்ற இரு பெண்களும் சுட்டி பரிகசிக்கையில், சுசீலா மட்டும் அவனைப்பற்றி ஆழ்ந்து சிந்திக்கிறாள். காத்திருக்கும் மனைவியைப் பார்க்க அவன் ஊர் திரும்பாது இருப்பது தவறாகப்பட, அதற்கு காரணம் தான் தானா தன்னிடம் பழகுவதில் அவன் ஒருவகை இன்பம் கண்ட பிரமையலா, அப்படியானால் ஒரு கணவனை மனைவியிடமிருந்து பிரிப்பது குரூரம் அல்லவா, தான் தானறியாமல் அதைச் செய்கிறாளா, என்று தெளிவு படாத நிலையில் உழல்கிறாள். 'சேகரனை தான் ஒரு பெண்ணாக மதித்துத் தான் பழகுவது போன்ற ஒரு உணர்ச்சி தனக்கு இருந்து வருவது போலவும் ஒரு வேளை தன் பெயர் கொண்ட மனைவி அவனுக்கு இருப்பதால் தான் அவளை இவனிடம் பார்ப்பது போலவும் உணர்வு நிலையை தன் சினேகிதர்களிடம் வெளிக்காட்டிக் கொண்டவள், அவளை ஊரடையாது தடுப்பதைத்தான் தான் செய்வதாகவும் அவ்வித எண்ணம் தனக்கும் ஒரு இடமளிப்பதாகவும் தனக்கு அதில் திருப்தி ஏற்படுவது போலவும் தோன்றுவதாகவும் உணர்கிறாள். கடற்கரையில் பேசிவிட்டு அவர்கள் திரும்புகையில், சேகரனை பிரியும் இடத்தில், இரண்டு சுசீலாக்களுக்கு நடுவே நிதானிக்க முடியாமல் முன் பின் போவது தெரியாமல் தவித்தது போலவே சேகரன் நடுத்தெருவில் வந்த மோட்டாரை சமாளிக்க முடியாமல் காரடிபட்டு 'சாவு' பிடித்துக்கொள்ள கீழே விழுகிறான், தன் மனதிற்குள் இதை நிச்சயம் செய்து கொண்ட சுசீலா'ஒரு கணத்தில் தான் நின்ற இடம் மறுபடி சூன்யமானதென' உணர்வு பெற்று 'கணவனுக்கும் மனைவிக்கும் குறுக்காகத் தடுத்து நின்றதென்பதில் தான் பெற்றி ருந்ததாக கருதும் இடத்தை மரணம் தட்டிக் கொண்டு போய்விட, இனி எவ்விடம் தன்னிடமாகக் - காண்பது என்ற மனத்தடுமாற்றத்தில் அறை திரும்புகிறாள். சுசீலாவின் நினைப்போட்டத்தில், 'பெயரென தன்னைக் களைந்து கண்டதில் சேகரன் மனைவி சுசீலா என வா மனதில் உருக்கொண்டாள்' என்று கேட்டுக் கொள்ள ஆரம்பித்து, தானாக வேண்டி எதிலும் தன்னைக் காணத் தேடுவதுபோல, கன்னியான தான் சேகரன் மனைவி சுசீலாவை மனதில் கண்டதில், அவளாகத் தன்னையும் கண்டுகொண்டுவிட்டாள் போலும்' என்று, கணவன் வருகைக்காக எதிர்பார்த்து காதல் கொண்ட மனைவியாக தன் மாடி ஜன்னலடியில் நிற்பதான ஒரு உணர்வு எழ 'அப்படியாயின் ஒருவகையில் தான், 'காதல்' கண்ட பெண், கலியாணமாகாத கைம்பெண் தானே' என்ற ஒரு உலுக்கும் நினைப்பு உச்சத்தை எட்டுகிறாள்.

இந்த கதைச் சுருக்கம் போதாது இந்த கதை யின் தனிச்சிறப்பை அறிய, படிக்கிறபோது உணர்வதிலே தான் இந்த கதை உருவாகிறது, முழுமை பெறுகிறது. சுசீலா வருகிற அதிர்ச்சி நினைவு முடிவுக்கு, மெளனி, கதை ஆரம்பத்திலிருந்து செய்கிற வகைநேர்த்தியானது. நடுவில் தொய்வோ,விலகலோ பராக்கோ இல்லாமலும், ஆரம்பத்தில் இப்படி முடியக்கூடும் என்பதற்கும் எதிர் பார்ப்பு கொடுக்காமல், முடிவில் இப்படி நடக்காது என்பதற்கும் வழி இல்லாமல், உணர்ச்சிப் பெருக்கிலும் மனவோட்டத்தின் தர்க்க நியாயப் போக்கின் வழியே நியாயம் வீழ அது எத்தகைய பிடிக்காத விஷயமானாலும் சரி, அது வேறு விஷயம் - செய்திருக்கிறார். விவரம் காட்ட முடியாத இனம் அறிய முடியாத அடிமனதின் ஒரு ஓட்ட நிலையில், பிரமை என்று வெளித்தெரிய நாம் அபிப்பிராயம் சொல்லக்கூடிய நிலையில் உள்ள ஒரு மனப்போக்கை வெகு நுண்மையாக கையாண்டிருக் கிறார் மெளனி,

ஆக, இந்த நான்கு கட்டுரைகளிலும் மெளனிக்கு ஒரு வாசக வழிகாட்டியாகத் (ரீடர்ஸ் கைட்) தான் கதைகளை தனித்தனியேயும் தேவைப்பட்ட சந்தர்ப்பங்களில் ஒப்பிட்டும் பார்த்திருக்கிறேன் மெளனி விஷயத்தில் மற்றவர்களைவிட அது தேவை என்பதால் . அடுத்த பகுதியில் பொதுக்குணங்களை ஆராய உத்தேசித்திருக்கிறேன்,