தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்து காலத்தால் அழிக்கமுடியாதவை சிலவற்றை இங்கே இந்த இடத்தில் தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (TShrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

Tuesday, October 17, 2017

ராக் தர்பாரி’ (தர்பாரி ராகம்) - ஸ்ரீலால் சுக்லா:முன்னுரை - கங்கா பிரசாத் விமல், அத்தியாயம் 1

ராக் தர்பாரி’ (தர்பாரி ராகம்) - ஸ்ரீலால் சுக்லா:முன்னுரை - கங்கா பிரசாத் விமல், 

முன்னுரை

பத்தொன்பதாம் நூற்ருண்டின் இறுதிக் காலகட்டக் தான் இந்தி நாவல்களின் துவக்கம் என்ருலும், ஆழமான, வளம் நிறைந்த, கம்பீரமிக்கதொரு பரம்பரையின் துவக்கம் பிரேம் சந்திலிருந்துதான் ஆரம்பமாகிறது. இருபதாம் நூற்ருண்டின் துவக்கக் காலத்திலேயே மேலே நாடுகளில் நாவல் இலக்கிய மானது தனது வளர்ச்சியின் உச்சகட்டத்தை எட்டியிருந்த சமயம், இந்தி நாவல் இலக்கியமானது தனது இளம் பருவத் துப் பேதைமை, கற்பனை மிகுந்த பாத்திரப் படைப்பு, அளப்பு ஆகியவற்றிலிருந்து விடுபட முயற்சி செய்து கொண்டிருந்த தென்ப்து வியப்பிற்குரிய விஷயமாக இருக்கலாம். ஆனல் சில ஆண்டுகளுக்குள்ளாகவே பிரேம்சந்தின் படைப்புக்கள், நாவல் இலக்கியத்தில் புதியதொரு பாணியைத் தோற்றுவித்தன அத்துடன், இந்தி நாவல் இலக்கியத்திற்குப் புத்துயிரளித்து, மேன்மையுறச் செய்து, சிறந்த நாவல்களின் வரிசையிலே அதற்கொரு தனியிடமும் அளித்துவிட்டன.

இந்த இருபதாம் நூற்ருண்டு, தனது அரசியல் கிளர்ச்சிகள், கலாசார மாற்றங்கள், மோதல்கள் ஆகியவற்றின் மூலம் நியதிக்குட்பட்ட மனித வாழ்வின் முன் ஒரு பெரும் கேள்விக் குறியை எழுப்பும் நூற்ருண்டாகும். விஞ்ஞான அறிவியல் துறை, தொழில் நுட்ப வளர்ச்சி ஆகியவற்றின் முன் னேற்றம், பண்பாடு, நுண் கலேகள் போன்றவைகளே அர்த்த மற்றவை என நிரூபிப்பதற்குரிய சான்றுகளே இந்த யுகம் திரட்டி வருவது மட்டுமன்றி, கலேகள் ஒரு கடினமான சவாலே எதிர்நோக்கும் படியும் செய்துள்ளன.

அறிவியல், தொழில்நுட்ப அறிவின் அறைகூவலுக்குமுன் நாவலும் இதே கிலேயில்தான் நிற்கின்றது. நாவலின் அதீத கற்பனைகளே விஞ்ஞானம் உருவாக்கிக் காட்டியுள்ளது எனி னும் மனித உள்ளத்தின் ஆசைகளும், எதிர்பார்ப்புகளும் குன்ருத , குறையாத பொக்கிஷமாகவே இன்றளவும் இருந்து வருகின்றன. தொழில்நுட்ப அறிவிற்குமுன் சிறுமைப்பட்டு விடும் மனித உணர்வுகளே, அவற்றுடைய விகாரங்களுடன் காவல் சித்திரிக்கின்றது. நம்முடைய இன்றைய சமூக, தனிப் பட்ட வாழ்வின் அகப்புற நிலகளின் நரகத்தையும் அதேν முன்னுரை

தீவிர முனைப்புடன் இன்றைய நாவல்கள், தமக்குரிய விஷய மாகவும் எடுத்துக்கொண் டிருக்கின்றன. இந்தி நாவல் இலக் கியம் பற்றிக் கூறும் இந்தச் சந்தர்ப்பத்தில் சிறந்ததொரு மொழியின் மகத்தான பேறு எனக் கணிக்கப்படும் மனித வாழ்வின் பல்வேறு கிலே களேப்பற்றிய படைப்புகளே இந்தி நாவல் இலக்கியம் பெற்றுள்ளது எனக் கூறுவது மிகை யாகாது. இந்தி நாவல் இலக்கியத்தின் வரலாறு மிகப் பழமையானது, தொன்மையானது என்ற நிலை இல்லா விடினும், அது அடைந்துள்ள முன்னேற்றமும், ஆதாயமும் குறிப்பிடத் தக்கனவாகும்

பிரேம் சந்திற்கு முற்பட்ட காலத்தின்_நாவல்கள், இந்திர ஜாலங்களும், அற்புதங்களும், சரித்திர காலக் கற்பனைகளும் நிறைந்ததாக இருந்தன. அவை, தங்களது சுவடுக ஃா இலக்கியத் தடத்தில் பதிக்காமல் சென்றிருப்பதே அவற் றின் முக்கியத்துவமற்ற தன்மைக்கு ஒரு சான் ருகும். மொழி நடை, கலேத்தன்மை என்ற நிலையிலிருந்து கணிக்கும் போதும் கூட இங் நாவல்கள், இந்தி நாவல் இலக்கியத்திற்கு எதையும் அளித்துள்ளன என்று மதிப்பிட முடியாமல் இருக் கிறது. பிரேம்சந்த் முதல் முறையாகச் சமுதாய விழிப் புணர்வுடன், சமூக மாற்றங்கள், சுதந்தரம், சிதிலமாகி அழிந்துகொண்டிருந்த மதிப்பீடுகள், மரபுகள் ஆகியவற்றின் அமைப்பை எதிர்த்து, மற்றப் பல்வேறு பிரச்னைகளுக்கும் தீர்வு காணும் முயற்சியில் ஈடுபட்டார் என்பது தெளிவு. பிரேம்சந்தின் நாவலான "கோதானம் ஒரு மை ல் கல்லா கும்; இங்கிருந்துதான் இந்தி நாவல்களின் புதிய சகாப்தம் தொடங்குகிறது.

கோதானத்தில் ஒரு விவசாயி, கூலியாக மாறவேண்டி யிருந்த நிர்ப்பந்தம், சோக வரலாருகச் சித்திரிக்கப்பட்டுள் ளது. இந்தச் சித்திரத்தின் மூலம் பிரேம்சந்த், முதலாளித்துவ அன்மப்பைத் தாக்க விரும்பினர். மேலும் ஒரு விவசாயி கூலியாக மாறவேண்டிய அவல நிலையானது நகர்ப்புற நாகரிகப் பாதிப்பின் பயங்கரமான முன்னே டி என்பதை யும் உணர்த்த விரும்பினர். நகரம், கிராமம் எனும் வெவ் வேறுபட்ட இரு புள்ளிகளேத் தொட்டுச் செல்லும் இக்கதை யானது ந ம் மு ைட ய இன்றைய வாழ்வின் சரித்திர பூர்வமான இலக்கிய த ஸ்தா வே ஐ" ஆகும். பிரேம்சந்தும்முன்னுரை vii

அவரது சமகாலத்து எழுத்தாளர்களில் பெரும்பாலோரும், சமூக யதார்த்த வாதத்தைத்தான் தங்களுக்கு விஷய மாக்கிக் கொண்டிருந்தனர். வாழ்வின் பல்வேறு அம்சங் கஃளயும் தன்னகத்தே கொண்டிருந்த அக்காலத்து நாவல் களில், பண்பாட்டின் வளர்ச்சிக்குரிய அம்சங்கள் யாவும் நிறைந்திருந்தன.

அடி மைத் த ஃளயிலிருந்து விடுபடவேண்டுமென்ற துடிப்பு, குடி யானவர்களின் , தொழிலாளர்களின் பொருளாதார நிலை உயர அவர்களது போராட்டங்கள், இந்திய சமூகத்தில் நியாய பூர்வமான அடிப்படையில் சமத்துவத்தைக் கொண்டு வர வேண்டுமென்ற உறுதி ஆகியவை தீவிர முனைப்புடன் சித்திரிக்கப்பட்டுள்ளன.

உலகம் முழுவதிலும் விரவி நின்ற .பாசிஸம், உலகப் போரின் கெடுபிடி, முடியாட்சியாளர்களின் மனப்போக்கு ஆகியவை எத்தகைய அச்சமூட்டும் சூழலைத் தோற்றுவித்திருந் தன என்பதை இந்தி நாவல்களில் சுதந்தரப் போராட்டத்தின் சம்பவங்களிடையே இன்றும் தேட முடியும். மக்களின் எழுச்சி யெ னும் யதார்த்த கிலேயிலிருந்து தோன்றிய தேசீய மனுேபா வத்தை அடிப்படையாகக் கொண்டிருந்த நாவலானது இரண் டாம் உலகப் போருக்குப் பின் 'மனிதனை நிலைக் களஞகக் கொண்டு, தனி மனிதனின் அகவயப்பட்ட, உள் மன உலகத் தின் உணர்வுகளே ச் சித்திரிக்கும் நாவலாக எப்படி மாறியது என்பது சுவையான விஷயமாக இருக்கக் கூடும். ஆனல், சமூக உணர்வுகளுக்குப் பின், தனி மனிதனின் அகவயப்பட்ட உலகத்தின் சித்திரிப்பு என்பது தற்செயலாய் நிகழ்ந்து விட்டது அல்ல என்பதில் சந்தேகத்திற்கு இடமே யில்லை. உண்மையில், தனி மனிதனே க் கூறு போட்டு ஆாாயும் இந்தப் போக்கு, தனி மனித ஆராய்ச்சியின் போக்குத்தான். அக் ஞேய், ஜைனேந்திரர், இலா சந்திர ஜோஷி, பகவதி சரண் வர்மா ஆகியோரின் நாவல்களுடன், யஷ் பால், அஷ்க், அமிருதலால் நாகர், விருந்தாவன் லால் வர்மா போன்ற நாவலாசிரியர்களின் படைப்புக்களும் சரியான அர்த்தத்தில், இந்திய வாழ்வின் பல்வேறு மொழி பண்பாட்டுத் துறையைச் சார்ந்தவர்களின் கதைகளே நம் முன் வைத்துள்ளன.

சுதந்தரம் என்பது உறுதியான புள்ளியாகும். இதை ஆதார மாகக் கொண்டு, சுதந்தரத்திற்கு முற்பட்ட, பிற்பட்டviii முன்னுரை

காவல்களில் 'சமூக யதார்த்த வாதம், மனே தத்துவம்" என்ற பிரயோகங்களுக்குப் பின்னர், முற்றும் புதியதொரு போக் கைப் பற்றிய உணர்வு, நாட்டின் விடுதலைக்குப் பின் படைக் கப்பட்ட நாவல்களிலே காணப்படுகிறது. புதிய தலைமுறைப் படைப்பாளர்கள் இந்திய அரசியல், மற்றும் விடுதலைக்குப் பின்னுள்ள பாரத நாட்டின் யதார்த்த நிலையை அதன் உண்மையான நிலைகளில் கண்டு சித்திரிப்பதில் வெற்றி யடைந்துள்ளனர். மோகன் ராகேஷ், பணிஷ்வர் நாத் ரேணு, கிருஷ்ண பலதேவ் வைத், நாகார் ஜான், பைரவ பிரசாத் குப்தா, கமலேஷ்வர், ராஜேந்திர யாதவ், ராங்கேய ராகவ், நரேஷ் மேஹ்தா போன்ற நாவலாசிரியர்களின் படைப்புக் களில் இதைக் கான முடியும். ரேணுவின் ‘மை லா அஞ்சல்", காகார் ஜானனின் 'பல்சன் ம்ா’ ஆகிய இரண்டு நாவல்களும் பிரேம்சந்த் காலத்துச் சமூக யதார்த்தவாதத்தின் மறு மலர்ச்சி பெற்ற மனுேநிலையைச் சித்திரித்துக் காட்டு கின்றன. மேலும் உணர்வின் வெளிப்பாடு என்ற அடிப் படையில் இன்றைய பாரத மக்களின் உணர்வை வெளிப் படுத்தியுள்ளன. இக்கால கட்டத்து நாவல்களில் பல இன்றைய "கிளாஸிக்" நாவல்களாக இடம் பெற்றுள்ளன. இதில் வியப்பிற்குள்ளாக்கும் விஷயம் என்ன வென்ரு ல், இன்றைய படைப்புகளே இன்றைய யுகத்தின் "கிளாஸிக்" படைப்புகளாகும் தகுதி பெற்றுள்ளன. ஆனல், கதைக் கரு என்ற நோக்கில் மட்டுமின்றிக், கலேத்தன்மை, உணர்ச்சிகளின் வெளிப்பாடு என்ற நோக்கில் கூடச் சுதந்தரத்திற்குப் பின் படைக்கப்பட்டுள்ள பல நாவல்கள், நாவல் எனும் உருவகத் துக்கு மீண்டும் விளக்கம் கூறும் முயற்சியாக உள்ளன என்பதையும் மறுப்பதற்கில்லே.

விடுத&லக்குச் சில வருடங்களுக்குப் பின்னர், புதிய தலே முறையைச் சார்ந்த எழுத்தாளர்கள் பலர் தோன்றியுள்ளனர். இவர்களில் சிலர் சிறந்த நாவல்களே எழுதியுள்ளனர். உருவ அளவில் இவை சிறியனவையாக இருந்தபோதிலும், இன்றைய யதார்த்தத்தைப் புரிந்துகொள்ள இவை தம்மள விலேயே ஒருவிதப் பிரமாணங்களாக அமைந்துள்ளன. பூரீ காத்தவர்மா, பூரீலால் சுக்லா, ரமேஷ் பக்ஷி, மகேந்திர பல்லா போன்ற எழுத்தாளர்களின் படைப்புகள், தங்கள் சமகாலத்து வாழ்வை, அதன் முழு அவலத்துடன் சித்திரித்முன்னுரை ix

துக் காட்டியுள்ளன. நமது சமூக வாழ்வில் உள்ளவற்றை, கலேத் தன்மையுடன் விவரிப்பது என்பது எந்த வொரு சாதனத்தின் மூலமும் சாத்திய மன்று. ஏனெனில் இன்று இருப்பவை எல்லாமே, ஒரு கடுமையான வகையைச் சேர்ந்த வம்ச அழிவின் பகுதியேயாகும். தனி மனிதன், குடும்பம், ஜாதி, அமைப்பு, ஸ்தாபனம்; நம்பிக்கை, எதிர் காலத்தைப் பற்றிய கணிப்பு ஆகியவற்றின் பால் வளர்ந் துள்ள கண்ணுேட்டத்தை பார்வையை, வெறிகொண்ட தென் ருே, புரட்சிகர மனதென் ருே, நிராசையானது ’பைத் தியக்காரத்தனமானது என்ருே வார்த்தைகளால் சிறைப் பிடித்து அறுதியிட்டுக் கூறிவிட முடியாது. இது ஒரு கொள் கைப் பிடிவாத மற்ற நிலே. இது அழிக்கப்பட வேண்டும் என்று தான் கூறமுடியும். உண்மையில் சில காவல்கள் இதை அழிப்பதற்குரிய கருத்துக்களேச் சித்தாங் த ரீதியாக ஏற்றுக் கொண்டுள்ளன.

விடுதலே க்குப் பின்னர், ஜனநாயகத்தை அமலாக்குவதில் ஈடுபட்டுள்ள அரசியல், எந்த அளவு வரை நமது கலாசாரத் தில் ஏற்பட்டு வரும் மாற்றங்களே அதிக நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது என்பது ஒரு விசித்திரமான, ஆணுல், அச்சமூட்டும் கதையாகும். சமகாலத்து நாவலாசிரியர்கள், இந்தத் திகிலூட்டும் நெருக்கடியைத் தமது நாவல்களின் குறிக்கோள்களாக்கிக் கொண்டிருக்கின்றனர். சுதந்தரத் துக்கு முற்பட்ட நாவலாசிரியன் எந்த அளவிற்குச் சமூகம், மனிதன் ஆகிய இரண்டின் அக புற வாழ்வின் பிரச்னைகளே வேதனையுடன் சித் திரித்தானுே, அந்த முறையைத் துறந்து விட்டு, ஒதுங்கி நின்று சித்திரிக்காமல், புதிய த லே முறை எழுத்தாளன், தன்னைத்தானே அச் சமூக நிலையில் கிலேநிறுத் திக் கொண்டு, சமூகத்திலிருந்து செத்து மடிந்துகொண் டிருக் கும் கம்பிக்கைகளின் போர்வையை விலக்கிக் காட்டியுள் ளான். "ஜஹாஜ்-கா-பஞ்ச்சியை "அங் தேரே பந்த் கம்ரே? யுடன் ஒப்பிட முடியாது. எந்த இரு நாவல்களேயும், எந்த வொரு கிலேயினின்றும் ஒப்பு நோக்க இயலாமல் போகலாம். செளகரியத்துக்காக வேண்டுமானல், இரு காவல்களும் வெவ் வேறு கண்ணுேட்டத்தைக் கொண்டுள்ளன எனக் கூறலாம். இந்தப் பார்வை அல்லது மனுேபாவமே ஒரு விதத்தில் காவலின் மூலாதாரத்தின் அமைப்பாகும். இதனுல், சுதந்தரத்). முன்னுரை

துக்குப் பின்னல் எழுதப்பட்டிருந்தாலும், இரு நாவல்களின் சமுதாயப் பார்வையில் வேறுபாடுகள் இருக்கமுடியும். இதனுல்தான், ஒரு நாவலில் மனித கிலேயில் நின்று காட்டப்படும் தனி மனிதனின் உள் மன உலகத்தைக் காண் கின்ருேம். இன்னுெரு காவலில், நமது யதார்த்த கிலேயை கேரிடையாகக் காணவும், அச்சுறுத்தும் அதன் மனித உருவைப் பார்க்கவும் நேரிடும் கிலேயில், இவ்விரண்டு பார்வை யிலுமுள்ள வேறுபாட்டின் சூத்திரத்தைத் தேடி எடுத்து விடுகிருேம். அது இன்றைய நாவல்களே, முந்திய நாவல் களிலிருந்து வேறுபடுத்தி இனம் கண்டுகொள்ள நமக்கு உதவுகிறது.

*கோதானத்திலிருந்து - ‘ராக் தர்பாரி’ (தர்பாரி ராகம்) வரையிலுள்ள நீண்ட யாத்திரையினிடையே இப்படிப்பட்ட எண்ணற்ற சிறந்த படைப்புகள் உள்ளன. ஒரு "கிளாஸிக்'குக் குரிய சிறப்புகளுடன் கூடியவையாகவும் உள்ளன. மேலும் இன்றைய நாவல்களில், சோதனை முயற்சி'களான நாவல் களும் உள்ளன. ‘கோதானமும், ராக் தர்பாரியும் நிச்சயம் இரு துருவங்கள்தான். இவ்விரண்டிற்குமிடையே, படைப் பாற்றல் என்ற முறையில் எவ்வித ஒற்றுமையிருந்தாலும் இல்லாவிடினும், இந்திய வாழ்க்கையின் இரு முக்கியமான புள்ளிகள். இரு கலாசாரப் பார்வையின் உயிர்த் தத்துவம் இரு நாவல்களிலும் உள்ளது.

பிரேம்சந்த் பெரும் புகழ் பெற்ற நாவலாசிரியர். இலக்கிய உலகில் அவருக்குள்ள மதிப்பும் இடமும், ‘ராக் தர்பாரி’யின் ஆசிரியரை விட முற்றும் வேறுபட்டது. தமது சோதனை பூர்வமான எழுத்துக்கள் மூலம் இலக்கியத்தில் தமக்கென இடம் வகுத்துக்கொண்ட புதிய த லே முறை எழுத்தாளர்களில் பூரீ லால் சுக்லாவும் ஒருவர். ராக் தர்பாரிக்கு முன் பூரீலால் சுக்லா, நையாண்டி, அங்கத எழுத்தாளர் என்ற முறையில் இந்தி இலக்கியத்தில் புகழ் பெற்றிருந்தார். திடீரென ‘ராக் தர்பாரி” நாவலின் மூலம், அவர் சிறந்த நாவலாசிரியர் வரிசை யில் இடம் பெற்றுவிட்டார்.

அங்கத எழுத்தாளர் என்ற முறையில் அவரது கட்டுரை களில், நையாண்டியின் எத்தகைய தீவிரத்தைப்பற்றி விமர் சிக்கப்பட்ட தேர் (குறிப்பாக ‘அங்கதனின் கால்’ என்ற கட்டுரைத் தொகுப்புப்பற்றி) அதே தீவிர முஃன ப்பை அவரதுமுன்னுரை Χί

நாவலிலும் காண்கிருேம், ‘ராக் தர்பாரி” நையாண்டிக் கட்டுரைகளின் தொகுப்புதான் எனச் சில விமரிசகர்கள் கருத்து வெளியிட்டிருக்கும் போதும், அவரது நாவலில் பரிகாசத் தின் கடுமையை உணர்கின் ருேம். இதனுல் உண்மையில் எழுத்தாளர்களின் தீவிரத் தன்மையைப் பொறுத்தவரையில், கோதானமும், ராக் தர்பாரியும் ஒன்றுதான். இவ்விரு எழுத் தாளர்களின் படைப்பாற்றலைப்பற்றிச் சந்தேகப்படுவதற் கில்லே. இதில் ஒரு சுவையான விஷயம் என்னவென்ருல் *கோதானத்தில் கிராமத்திலிருந் து நகரத்தின் கதை வெளிப் படுத்தப்பட்டுள்ளது; அதாவது நகர்ப்புற நாகரிகத்தின் எதிர்விளைவுகளின் பயங்கரமான அச்சுறுத்தும் உண்மை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ‘ராக் தர்பாரி’யிலோ, பிரயாணம் நகரத்திலிருந்து கி ரா ம த் ைத நோக்கிச் செல்லுகிறது. விடுதலைக்கு முன் நகர்ப்புற நாகரிகத்தின் மாயையை நோக்கி விரைந்த கண்மூடித்தனமான ஓட்டத்தில் நகரத்துக்கு மகத் துவம் இருந்தது. இன்றும் அதன் மகத்துவமும், முக்கியத்துவ மும் குறையவில்லை எனினும், அரசியல் புரட்டுகளிலிருந்து தப்ப வேண்டி, நகரத்தின் மற்றப் பாதிப்புகளிலிருந்து விடு படுவதற்காக, “கிராமத்தை நோக்கிச் செல்’ என்று கூறப்படும் வாசகம் இருக்கிறதே அது இன்றைய பாரதத்தின் உண்மை யான நிலையை, நிஜமான சித்திரத்தைத் திறந்து காட்டிக் கொண்டே செல்லுகிறது.

கிராமமும், நகரமும் இந்திய மக்களின் விழிப்பு, அதாவது எழுச்சி அல்லது வீழ்ச்சியின் இரு கலாசாரக் கேந்திரங் களாகும். இங்கு வாழ்க்கையின் துடிப்பில், அதன் கதியில் எல்லாவிதமான வேற்றுமைகளும் உள்ளன. ஆனல் ஜன நாயகமானது இவர்களுக்கு அளித்துள்ள முன்னேற்ற வாய்ப்பு ஒன்றே தான். ஒரு சிறிய கிராமம் போன்ற ஊரும், பெரிய நகரங்களிலும், தலைநகரங்களேப் போலவே இங்கும் கிராமீய வாழ்வின் சந்தடிகளும், குழப்பங்களும், இனம், ஜாதி ஆகியவற்றின் பாதிப்புகளிலிருந்து தப்பமுடியவில்லே. இதே போல் அரசியல் மாற்றங்களிலிருந்தும், போக்குகளிலிருந்தும் தங்களே விலக்கிக்கொண்டு வாழ இயலவில்லை. ‘ராக் தர்பாரி' யிலுள்ள இந்த உண்மை அதன் தலைப்பிலேயே எதிரொலிக் கிறது. சிறிய கிராமங்களிலும், மாநகரங்களிலும் அரசியல் அமைப்பானது எந்தவொரு புதிய மன இயல்புகளைத் தோற்றுxii முன்னுரை

வித்து வளர்த்துக்கொண்டு வருகிறதோ, அது பல்வேறு மட்டங்களிலும் புதியதொரு பிரபுத்துவ முறையின் செயற் பாட்டை மலரச் செய்துகொண் டிருக்கிறது. ‘ராக் தர்பாரி"யி லுள்ள கிண்டலும், அங்கதமும், நையாண்டியும் அமானுஷிய மானது மட்டுமல்ல; மிகவும் அசிங்கமான, குரூரமான, அரு வருக்கத்தக்க, சகிக்க முடியாத செயல்முறையைக் கடுமையா கத் தாக்கி விமரிசிக்கின்றன.

கதையில் பல்வேறு உத்திகளைத் தாராளமாகக் கைய்ாண் டிருப்பதாலும், சரளமான, இனிய நடையினுலும் இந் நாவல் ஒரு 'கிளாஸிக்’கிற்கு எந்த விதத்திலும் குறைந்ததல்ல. ஆனல் ஒரு மிகச் சாதாரணமான 'கிளாஸிக்’ எனக் கூறுவது பொருங் தாது. இது, இன்றைய அச்சுறுத்தக்கூடிய கிலேயை உணர்த் தும் அர்த்த முள்ள கிண்டலாகும். இந்த அமைப்புக்குள்ளே, இதன் விக்ாயாட்டுகளுக்குள்ளே இருந்துகொண்டே ஒரு விதத் தில் அதை மறுப்பதாகும் இது. தான் இருந்துகொண்டே, தன் இருக்கையை அழிப்பதென்பது நல்லதொரு படைப்பாற்ற லின் லட்சியமாக இருக்கவும் கூடும். ஆனல் இங்கு 'ராக் தர்பாரி'யிலுள்ள சிறப்புக்களே, நல்ல அம்சங்களே ஒவ்வொன் ருக எண்ணுவது என் உத்தேசம் அல்ல. கலைத்தன்மை என்ற நோக்குடன் பார்க்க, எந்த விதமான முக்கிய ஆதாரங்களும் இல்லை. (வரையறுக்கப்பட்ட கலேத்தன்மை என்னும் நோக் குடன் பார்க்கும் போது, அது இல்லாத கிலேயிலும், கலேத் தன்மையற்ற படைப்பு சிறந்ததாக விளங்க முடியும்.) மற்ற ஆதாரங்களின் படியும், ‘ராக் தர்பாரி’ சிற் சில இடங்களில் பலவீனமானதாக இருக்கலாம். ஆணுல் தன்னுணர்வின் வெளிப்பாடு என்ற அடிப்படையில், இது ஒரு நேர்மையான முயற்சியாகும். நமது சமூகத்தின் அயோக்கியத்தனம், மோசடி, நாணய மற்ற போக்கு, குழ்ச்சி, த கிடுதத்தங்களே அப்படியே அப்பட்டமாகக் காட்டும் ஒரு நேர்மையான முயற்சி இது.

விமரிசகர் ஒருவர் ‘ராக் தர்பாரி'யை வட்டார காவல்களில் கடைசியான படைப்பு எனக் கூறியுள்ளார். வட்டார காவல் களின் துவக்கம் எங்கிருந்து ஆரம்பிக்கிறது என அவர் கினேக்கிருரரென்பது எனக்குத் தெரியாது. ஆனல், ஒன்று மட்டும் கூறமுடியும். "ராக் தர்பாரி' பயனுள்ள, கிண்டல் எழுத்தின் ஆரம்பம் என்பது உறுதி. இதில் சில அசிங்கமானமுன்னுரை Χiii

அங்கதப் பிரயோகங்களும் உள்ளன. ஆஞல் ஒவ்வோர் அங்கதமும், நையாண்டியும் மேலெழுந்த வாரியான அர்த்தத் தில் விகாரமானவைதான். ஒவ்வோர் அடியும், தாக்குதலும், தர்க்க மெனும் ஆயுதத்தின் மூலந்தான் தாக்குகின்றது. ஒவ் வொரு தாக்குதலும், குருதியில் தோய்ந்த குரூரத்துடன் தான் தொடங்குகின்றது. இன்றைய மொழியில் எதைப் புரட்சி, அல்லது கிளர்ச்சியெனக் கூறுகிருேமோ, அதையே அங்கத மானது தனது மொழியில் ஒப்புதல் எனக் கூறி, அதன் உள்ளர்த்தங்களின், சுய நலங்களின் அடிப்படையையே கலங்க் அடித்து, ஒளிவு மறைவு இன்றி அதனை, அதனுட்ைய சரியான அர்த்தத்தில் வெளிச்சம் போட்டுக் காட்டி, உணர்த்திப் புரிய வைக்க முயற்சி செய்கிறது. ஒர் அங்கத நாவல் என்ற முறையில் ‘ராக் தர்பாரி’யின் வெற்றி சர்ச்சைக்குரியதாக இருக்கலாம். ஆனல் சந்தேகத்துக்கு இடமின்றி இது ஒர் அங்கத நாவல்தான். இதற்குத் தனக்கென ஒரு தனிப் பார்வை இருக்கிறது. அதைப் புரிந்துகொள்ள வேறு வழியும் இருக்கும் எனக் கூறவும் முடியும். அதைப் படைப்பின் போக்கு என்று பார்க்கவும் வாய்ப்புள்ள காவல் இது. இதனுல்தானே என்னவோ, இது நாவலாகவும் அங்கதமாகவும் உள்ளது. இன்றைய அமைப்பின் குரூரமான முகத்தை, அரசியலின் அருவருப்பூட்டும் செயல்களே, அட்டகாசங்களே நம் முன்னே கொணர்ந்து நிறுத்தும் செயலேப் பத்திரிகைகளினலும் சாதிக்க முடியும். இந்த நோக்கில் பார்த்தால் ‘ராக் தர்பாரி”க்கும் பத்திரிகைக்கும் வேற்றுமை உண்டு. பத்திரிகை கலேப் படைப் பாக முடியாது. "ராக் தர்பாரி'யோ ஒரு கலேப்படைப்பாகும். அது கலத்தன்மை கொண்ட படைப்பு என்பதற்கு முதல் கிபந்தனேயே, அது எல்லாவிதச் சந்தேகங்களும் நிறைந்த தாக, சர்ச்சைக்குரியதாக இருக்கவேண்டும் என்பதுதான். ‘ராக் தர்பாரி சர்ச்சைக்குரியது மட்டும் அல்ல, சக்தேகத் துக்கும் மையமானது என்பதில் வியப்பேதும் இல்க்ல.

- கங்கா பிரசாத் விமல்

அத்தியாயம் 1

நகரத்தின் எல்லை இது. இங்கிருந்து தொடங்குவதுதான் இந்தி யக் கிராமமெனும் பெருங் கடல்.

அங்கே ஒரு டிரக் கின்றுகொண் டிருந்தது. அதைப் பார்த் ததுமே பாதைகளேப் பலவந்த மாய் மிதித்துச் செல்வதற் கென்றே இது பிறந்திருக்கிறதென்ற உறுதி ஏற்பட்டுவிடும். சத்தியம், அதாவது மெய்யைப் போலவே இதற்கும் பல தோற்றங்கள் இருந்தன. போலீஸ்காரன், தான் நின்ற இடத்தி லிருந்து பார்த்தால் இந்த டிரக் கட்ட நடுப் பாதையில்தான் நிற்கிறது எனச் சாதிக்க முடியும். இன்னுெரு புறத்திலிருந்து டிரைவர், இது பாதையின் ஓரத்தில்தான் கிற்கிறது என நிரூபிக் கவும் முடியும். இன்றைய நாகரிகத்தின்படி டிரைவர், டிரக்கின் வலது புற த் துக் கதவை, இறக்கையைப் போல் நன்ருய்த் திறந்து வைத்திருந்தது அதற்கு மேலும் அழகூட்டியது என லாம். இது மட்டுமா? இது இங்கே கிற்கும் சமயத்தில் இன் னுெரு வாகனம் இதைக் கடந்து சென்றுவிடும் என்ற ஆபத் துக்கும் இடமில்லாமல் இருந்ததும் குறிப்பிடத் தக்கது.

பாதையின் ஒருபுறத்தில் பெட்ரோல் பங்க் ஒன்று இருந்தது. மற்றெரு புறத்தில் கூரை வேய்க்த கடைகள். மரக் கட்டை, ஒடிங் துபோன தகரத் துண்டுகள், மற்றும் அங்கே கிடைக்கக் கூடிய தட்டுமுட்டுச் சாமான்களேக் கொண்டு கிறுவிய கடைகள் வரிசையாக கின்றன. அவற்றைப் பார்த்ததுமே இக்தக் கடை களே எண்ணிவிடமுடியாது என்பது புரிக்குவிடும். பெரும்2 தர்பாரி ராகம்

பாலான கடைகளில் மக்கள் விரும்பிப் பருகும் பானம் இருந்தது. அங்கு விரவி கின்ற தூசி, எண்ணெய்ச் சிக்கு, பல முறை உபயோகித்த தேயிலைத் தூள், கொதிக்கின்ற தண்ணிர் ஆகியவற்றின் உதவி கொண்டு தயாரித்த அவ்வினிய பானம் தாராளமாய்க் கிடைத்தது. இரவு, பகல், காற்று, மழை, ஈ, கொசு போன்றவற்றின் இடைவிடாத தாக்குதல்களேத் தீரத் துடன் எதிர்த்துப் போராடிக்கொண் டிருக்கும் இனிப்புப் பலகாரங்களும் அங்கே இருந்தன. நம் நாட்டுக் கைவினைக் க&லஞர்களின் கைத் திறமைக்கும், விஞ்ஞான நுட்ப அறிவுக் கும் அவை ஒரு சான்ருக விளங்கின. எங்களுக்கு ஒரு நல்ல கூடிவர பிளேடு தயாரிக்கும் நுட்ப அறிவு தெரியாமல் இருந் தாலும், மட்டமான சாமான்களே ருசி மிக்க உணவுப் பண்டங் களாக மாற்றுவது எப்படி என்ற உபாயம் இந்த உலக முழுவதிலும் எங்களுக்கு மட்டுந்தான் தெரியும் என்பதை அவை பறைசாற்றின.

டிரக்கின் டிரைவரும், கிளினரும் ஒரு கடையின் எதிரே நின்று தேநீர் பருகிக்கொண் டிருந்தனர்.

தூரத்திலிருந்தே ரங்கநாத் டிரக்கைப் பார்த்துவிட்டான். பார்த்ததுமே கடையில் வேகம் பிறந்துவிட்டது.

இன்று ரெயில் அவனை ஏமாற்றிவிட்டது. தினமும்போல் லோக்கல் பாசஞ்ஜர் வண்டி இரண்டு மணி நேரம் தாமதித்து வரும் என நினைத்தே அவன் வீட்டிலிருந்து புறப்பட்டான். ஆனல் அது ஒன்னரை மணி நேரம் மட்டும் தாமதித்து வந்து விட்டுப் போய்விட்டது. புகார்ப் புத்தகமெனும் சரித்திர ஏட்டில் தன் பங்கு வரலாற்றையும் பதித்துவிட்டு, ரெயில்வே அதிகாரி களின் கேலிக்குப் பாத்திரமான கிலேயில் அவன் ஸ்டேஷனே விட்டு வெளியேறினன். சாலைக்கு வந்ததும் டிரக் கண்ணிலே பட்டது; அவ்வளவுதான். அவன் மகிழ்ச்சிக்கு எல்லேயே இல்லே. அவன் டிரக்கை நெருங்கியபோது, டிரைவரும், கிளினரும் தேநீரின் கடைசித் துளிகளே ருசித்துக்கொண்டிருக்தனர். இங்கு மங்கும் பார்வையை அ&லயவிட்ட ரங்க காத் இயன்றவரையில் தன் மகிழ்ச்சியை மறைத்துக்கொண்டு, "டிரைவர் 1 இக் த டிரக் சிவபால் கஞ்ச் பக்கம் போகுமா?" என்று வினவினுன்.

டிரைவருக்கு காவால் சுவைக்க இன்னும் தேநீரும், கண்ணுல் பருகக் கடைக்காரியும் இருந்ததனுல் அவன் அலட்சியமாகப் பதிலுரைத்தான் “போகும்.”அத்தியாயம் ஒன்று 3.

'என்னே அழைத்துப் போவாயா? பதினேந்தாவது மைலில் இறங்கிவிடுவேன். நான் சிவபால் கஞ்ச் போகவேண்டும்.”

எதிரே அமர்ந்திருந்த கடைக்காரியிடம் தான் காண விரும் பியதை யெல்லாம் ஒரே பார்வையில் அளந்துவிட்ட டிரைவர் தனது பார்வையை ரங்கநாத்தின் பால் திருப்பினன். ஆகா ! என்ன தோற்றம் ! கதர்ப் பைஜாமா, தலையில் கதர்த் தொப்பி, சதர்ச் சட்டை, தோளிலிருந்து தொங்கும் பெரிய ஜோல்ரூ பை, கையில் தோல் பெட்டி டிரைவர் பார்த்துக் கொண்டே நின்றன். இமைக்கக்கூட இல்லை. பின்னர் ஏதோ யோசித்தவன் போல், 'உட்கா ருங்க ஐயா ! இதோ புறப்பட வேண்டியதுதான்’ என்ருன்.

கடா புடா ஓசையுடன் டிரக் புறப்பட்டது. நகரத்தின் கோணல் மாணலான வ&ளவுகளிலிருந்து விடுபட்டதும் சற்றுத் தூரத்தில் நேரான, சீரான, சந்தடியற்ற பாதை வந்துவிட்டது. இங்கே தான் டிரைவர் முதல் முறையாக டாப் கியரைப் பிரயோகித்தான். ஆணுல் அது நழுவி நழுவி நியூட்ரலில் விழ லாயிற்று. நூறு கஜ தூரம் செல்வதற்குள் கியர் நழுவிவிடும். ஆக்ஸிலேட்டரை மிதித்ததும் டிரக்கின் கர்புர் ஒசை அதிகரித்து, வேகம் குறைந்துவிடும். இதையெல்லாம் பார்த்துக்கொண்டே யிருந்த ரங்கநாத், "டிரைவர் சார் ! உங்க கியர் நம்ம நாட்டு அரசாங்கம்போல்தான் இருக்கிறது” என்ருன்.

டிரைவர் சிரித்துக்கொண்டே இந்தப் பாராட்டுப் பத்திரத்தை ஏற்றுக்கொண்டான். ரங்கநாத் தான் கூற வந்ததை மேலும் தெளிவாக்க விரும்புபவன் போல் தொடர்ந்தான்: ‘'எத்தனை முறை டாப் கியரில் போட்டாலும், அது இரண்டு கஜ தூரம் சென்றதுமே நழுவி, தன் பழைய இருப்பிடத்துக்கு வந்து விடுகிறதே.”

டிரைவர் சிரித்தபடி, 'ஐயா ! ரொம்பப் பிர மாதமாய் ச் சொல் லிட்டீங்க!” என்ருன்.

இந்த முறை கியரை டாப்பில் போட்டதும் ஒரு காலை 90° டி கிரி கோணத்தில் உயர்த்திக் கியரைத் துடையின் கீழே அழுத்திக்கொண்டான். அரசாங்கத்தை நடத்தவும் இந்த நுட்பங்தான் தேவை எனச் சொல்ல விரும்பிய ரங்கநாத், விஷயம் கொஞ்சம் பிர மாதமாகப் போய்விடப் போகிறதே என்று அஞ்சியவன் போல் மெளனமாகிவிட்டான்.4. தர்பாரி ராகம்

டிரைவர் தன் துடையைக் கியரிலிருந்து நகர்த்திப் பழைய இருக்கைக்குக் கொணர்ந்துவிட்டான். இம்முறை அவன் கியரில் ஒரு நீண்ட மரக்கட்டையை முட்டுக் கொடுத்து நிறுத்தி ஞன். கட்டையின் ஒரு முனையைப் பேனலின் கீழே செருகி விட்டான். அவ்வளவுதான். டிரக் விரைந்தது. முழு வேகத்துடன் விரைந்த அதைத் தொஃலவில் கண்டதுமே, சைக்கிள் காரன், வண்டியோட்டி, பாதசாரி என்று யாவருமே பயந்து போய்ப் பாதையை விட்டு ஒதுங்கிவிட்டனர். அவர்கள் அஞ்சி ஒடிய வேகத்தைப் பார்த்தால் அவர்களேத் துரத்திக்கொண்டு வரு வது ஒரு சாதாரண டிரக் அல்ல, காட்டுத் தீயின் ஜ்வாலேயோ, வங்கக் குடாக் கடலில் எ மு க் த தொ ரு கடற் புயலோ, மக்களின் மீது ஏவிய, கண்டபடி வசை பாடும் ஊழியனுே, அல்லது கொள்ளக்கூட்டத்தினரோ என்று தோன்றியது. மக்களே, உங்கள் ஆடு மாடுகளே, குழந்தை குட்டிகளே வீ ட் டி ற் குள் ளே பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள். நகரத்தி லிருந்து இப்பொழுதுதான் ஒரு டிரக் புறப்பட்டிருக்கிறது’ என்று முன்னரே அறிவித்திருக்க வேண்டுமென நினைத்தான் ரங்கநாத்,

இதற்குள் டிரைவர், “சொல்லுங்க, ஐயா, என்ன விஷ யம்? ரொம்ப நாட்களுக்குப் பிறகு கிராமத்துப் பக்கம் போகி ருப்போல இருக்குது" என்ருன் . ரங்க நாத் தன் புன்னகை யினுல் இந்த கூேடி மகல விசார&ணயை ஊக்குவிக்கவே டிரைவர் தொடர்ந்தான். "ஐயா! இப்பொழுது என்ன செய்துகொண்டு இருக்கிறீர்கள்?"

*சும்மா, திண்ணேயைத் தேய்த்துக் கொண்டிருக்கிறேன்!” டிரைவர் சிரித்தான். எதிர்பாராமல் ஒரு விபத்தே நேர்ந் திருக்கும். நல்ல வே&ள, தப்பியது. சுமார் பத்துப் பன்னி ரண்டு வயதிருக்கும்; கோவனூண்டியான ஒரு பையன் டிரக் கின் சக்கரத்திலிருந்து மயிரிழையில் தப்பினன். எ கிறிக் குதித்துப் பல்லியைப் போல் பாலத்தின் மீது போய் விழுங் தான். டிரைவர் இதனுல் பாதிக்கப்பட்டதாகவே தெரிய வில்லே. ஆக்ஸிலேடரை ஒரு மிதி மிதித்தவன் சிரித்துக் கொண்டே, 'என்ன சொன்னிங்க? கொஞ்சம் விளக்கமாய் ச் சொல்லுங்க” என்ருன்,

"சொன்னேனே, திண்னேயைத் தேய்க்கிறேன் என்று! இங்கிலீஷிலே இதைத்தான் ரிஸர்ச் என்று சொல்லுகிருர்கள்.அத்தியாயம் ஒன்று 5

போன வருடம் எம். ஏ. முடித்தேன். இந்த வருடம் ரிஸர்ச் செய்யத் தொடங்கி யிருக்கிறேன்.”

ஏதோ அலிவ்லேலா கதையைச் சுவாரசியமாய்க் கேட்டுக் கொண்டிருப்பவன் போல் புன்னகை தவழ டிரைவர் வினவி ஞன்: "ஐயா! சிவபால் கஞ்சுக்கு என்ன விஷயமாய்ப் போநீங்க?"

"அங்கே என் மாமா இருக்கிருர், எனக்கு உடம்பு சரி யில்லாமல் இருந்தது. கிராமத்தில் கொஞ்ச நாட்களிருந்து உடம்பைத் தேற்றிக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.”

இம் முறை டிரைவர் வெகு நேரம் சிரித்துக் கொண்டிருந் தான். பின்னர், “நல்லாக் கதை அளக்க நீங்க ஐயா’ என்ருன்,

ரங்கநாத் அ வ ஃன ச் சந்தேகத்துடன் பார்த்தவாறே, “இதில் க்தை அளக்க என்ன இருக்கிறது?’ என்ருன்.

ஒன்றுமே அறியாதது போன்ற இந்தப் பாவத்தைக் கண்ட அவனுடைய சிரிப்பு பின்னும் அதிகமாகிவிட்டது. சிசிப்புக் கிடையே, ‘நல்லாச் சொன்னிங்க, போங்க! சரி, இது கிடக் கட்டும். மித்தல் சாகப் எப்படி இருக்கிருர்? சொல்லுங்க! ரிமாண்டிலிருந்தவன் கொலே விஷயம் என்ன ஆயிற்று” என்று வினவியதும் ரங்க காத்தின் ரத்தமே உறைந்துவிட்டது. தழுதழுத்த குரலில், “எனக் கென்ன தெரியும் இதெல்லாம்? அந்த மித்தல் என்பவன் யார்?’ என்று கேட்டான்.

டிரைவரின் சிரிப்பு ப்ரேக் போட்டதுபோல் நின்றுவிட்டது. டிரக்கின் வேகமும் சற்றுக் குறைந்துவிட்டது. ரங்கநாத்தை உற்றுப் பார்த்தவாறே கேட்டான்: 'உங்களுக்கு மித்தல் சாகப்பைத் தெரியாதா?”

‘தெரியாது.” *ஜயின் சாகப்பை?” *தெரியாது.” டிரைவர் ஜன்னல் வழியே காறி உமிழ்ந்து விட்டுத் தெளி வான குரலில் கேட்டான். 'தாங்கள் சி. ஐ. டி. யில் தானே வேலே பார்க்கிறீங்க?"

ரங்க காத்துக்கு எரிச்சலாக வந்தது. “சி. ஐ. டி யா? அப் படீன்னு என்ன?’ நீண்ட பெருமூச்சொன்றை வெளியேற்றிய டிரைவரின் பார்வை, கண்முன்னே நீண்டு கிடந்த பாதையில் படிந்தது. சில மாட்டு வண்டிகள் ஊர்ந்துகொண் டிருந்தன.6 தர்பாரி ராகம்

எப்பொழுது, எங்கே சந்தர்ப்பம் கிடைக்கிறதோ, அங்கே காலே நீட்டிப் படுத்துவிடவேண்டியதுதான் என்ற பொதுப் படையான சித்தாந்தத்தை நிறைவேற்றுபவர்களாய் வண்டிக் காரர்கள் காலே நீட்டிப் படுத்து, முக த்தைத் துணியால் மூடிய வண்ணம் உறங்கிக்கொண் டிருந்தார்கள். மாடுகள் தங்கள் திறமையினல் அல்லது பழக்கத்தினுல் தம் பாட்டில் வண்டியை இழுத்துச் சென்று கொண் டிருந்தன. இதுவும் கூட ‘மக்கள்’, *மகேசன்’ என்று பேசக்கூடிய விஷயங் தான். ஆனல் ரங்க நாத்துக்கு எதையும் பேசக் கூடிய துணிவு இல்லே இப்பொழுது. அந்தச் சி. ஐ. டி. என்ற வார்த்தைகளே அவனை ஒரு கலக்குக் கலக்கி விட்டிருந்தன. டிரைவர் முதலில் ரப்பர் ஹார்னே அழுத் தினன். பின்னர் ஆரோகண அவரோகண ஸ்வரங்களில் ஒலிக்கும் ஹார்னே அழுத்தினன். நாரா சமாயிருந்தது அந்த ஒலி. ஆணு ல் வண்டிகள் நகரவில்லே. தன் வழியே மெல்ல மெல்ல அசைந்து கொண்டிருந்தன. டிரக்கை வெகு வேகமாய் ஒட்டிக் கொண்டு வந்த டிரைவர், மாட்டு வண்டி கஃாக் கடந்து செல்லவே விரும்பினுன். ஆனல் வண்டிகளே நெருங்கியதுமே, தான் செலுத்திக்கொண்டிருப்பது டிரக் தான், ஹெலிகாப்டர் அல்ல என்பது தெரிந்துவிட்டது போலும். சட்டெனப் பிரேக்கைப் போட்டான். பேனலில் செருகி வைத் திருந்த கட்டையைக் கீழே தள்ளினன். கியரை மாற்றியவன், வண்டி களே உராய்வதுபோல் அவற்றைக் கடந்து விர்ரெனச் சென்று விட்டான். சற்றுத் தூரம் சென்றதும் வெறுப்பு நிறைந்த குரலில் கேட்டான்: ‘சி. ஐ. டி. இல்லையென் ருல் இந்தக் கத ரெல்லாம் ஏன் போட்டுக்கொண் டிருக்கிறீங்க நீங்க?”

ரங்கநாத் இந்தத் தாக்குதலில் பின்னும் சற்று வெலவெலத் துப் போய்விட்டான். இருந்தாலும் சகஜமான விசாரிப்பாகக் கருதுபவன் போல், “இந்தக் காலத்தில் எல்லாருங் தானே கதர் போடுகிறர்கள்” என்ருன் நிதானமாக

* சாதாரண ஆசாமி எவனும் கட்டுவதில்லையே!’ என்ற டிரைவர் மீண்டும் ஒரு முறை காறி உமிழ்ந்தவன் கியரை டாப் பில் போட்டான்.

டிரக்கின் பின்புறமிருந்து வெகு நேரமாய் ஒரு ஹார்ன் ஒலித்துக்கொண்டே இருந்தது. ரங்கநாத் அதைக் கேட்டுக் கொண்டிருந்தான். டிரைவரோ கேட்டும் கேளாதவன் போல் பாவித்தான். சற் று நேரத்திற்கெல்லாம் பின்னலிருந்தஅத்தியாயம் ஒன்று 7

கிளினர் தொங்கிக் கொண்டே நகர்ந்து, டிரைவரின் காதரு கிலே இருந்த ஜன்னலில் டிக் டிக்கெனத் தட்டி ஓசை எழுப்பிய தும் டிரக்கின் வேகம் குறைந்துவிட்டது. பாதையின் இடது புறத்துக்கு டிரைவர் டிரக்கை மாற்றி விட்டான்.

ஹார்னின் ஒலி ஒரு ஸ்டேஷன் வாகனிலிருந்துதான் வந்து கொண்டிருந்தது. வலது புறமாக முன்னேறி வந்த அதன் வேகம் குறைய, வண்டியினுள்ளே இருந்து நீண்ட கரம் ஒன்று டிரக்கை நிற்கும் படி சைகை காட்டவே, இரண்டுமே நின்று விட்டன.

ஸ்டேஷன் வாகனிலிருந்து அதிகா ரிபோன்ற தோரனேயுடன் ஒரு பியூனும், பியூன் போலிருந்த ஓர் அதிகாரியும் இறங்கினர். கூடவே காக்கி உடை அணிந்த இரு போலீஸ்காரர்களும் இறங் கினர். அவ்வளவுதான். பிண்டா ரிகள் போல் இழுத்துப் பறிக் கும் சோதனை ஆரம்பமாகிவிட்டது. ஒருவன் டிரைவரின் டிரைவிங் லே சென் ஸைப் பிடுங்கினன். ரிஜிஸ்ட்ரேஷன் கார்டை இன்னெருத்தான் பறிமுத்ல் செய்தான். ஒருவன் டிரைவர் எமீட்டின் முன் ைலிருந்த கண்ணடியைத் தட்டிப் பார்த் தான். ஹார்னே அழுத்தினன். ஒருத்தன் ப்ரேக்கைச் சோதித் தான். புட்போர்டை ஆட்டிப் பார்த்தான். விளக் கைப் போட் டான். மணியை அடித்துச் சோதித்தான். அவர்கள் எதைப் பார்த்தாலும், எதில் கை வைத்தாலும் அது மோசமாய் இருந் தது. எதைத் தொட்டாலும் அது வேலே செய்ய மறுத்தது. நான்கு நிமிஷத்திற்குள் அந்த நான்கு பேரும் டிரக் கில் 40 குறைகளேப் பரிசோதித்து அறிந்துவிட்டனர். சோதனை முடிங் ததும் இறங்கிச் சென்று ஒரு மரத்தினடியில் கூடி நின்று விவாதிக்கலாயினர். விவாதத்தின் விஷயம்? எதிரியிடம் எந்த விதமாய் நடந்து கொள்ள வேண்டும் என்பது தான்.

ரங்க நாத் சற்றுத் தள்ளி வேருெரு மரத்தின் அடி யிலே போய் நின் முன், டிரை வருக்கும் "செக் கிங்’ குழுவினருக்கு மிடையே டிரக்கின் ஒவ்வொரு பகுதியைப் பற்றியும் விவாதம் நடந்துகொண் டிருந்தது. பின்னர் மெல்ல மெல்ல டிரக்கின் கருவிகளே விட்டு நழுவிய விவாதம் நாட்டின் கிலே, மோசமான பொருளாதாரம் பற்றிய விஷயத்துக்கு வந்துவிட்டது. சற் றைக்கெல்லாம் அங்குக் கூடியிருந்தவர்கள் தனித்தனிக் குழு வாகப் பிரிந்தனர். குறிப்பிட்ட ஒரு விஷயத்தில் நிபுணர் போல் தனித்தனியே ஒரு மரத்தின் கீழே நின்று ஒவ்வொரு விஷயத்8 தர்பாரி ராகம்

தைப் பற்றியும் சிந்திக்கலாயினர். நெடு நேர விவாதம். சிந் தனேக்குப் பின்னர் ஒரு மரத்தின் அடியிலே மீண்டும் திறந்த வெளி அரங்கம் கூடியது. சற்றைக்கெல்லாம் விவாதம் ஒரு முடிவுக்கு வந்து விட்டது எனத் தோன்றியது.

கடைசியில் அதிகாரியின் வரட்டுக் குரல் ரங்கநாத்தின் காதில் விழுந்தது: "என்ன? அஷ் பாக்மியான் ! என்ன சொல் லுகிருய்? மன்னித்து விடலாமா?"

“வேறு என்ன செய்ய முடியும் சாகப்? ஏதாவது ஒரு விஷயம் மோசமாயிருக்கிற தென் ருல் சார்ஜ் செய்யலாம்; எது எதுக்கென்று சார்ஜ் செய்வது?" சில நிமிஷம் ஏதேதோ பேசிய அதிகாரி முடிவில் கூறினர் 'சரி, பன்டா சிங்! நீ போகலாம். உன்னை மன்னித்துவிட்டேன்.”

'ஐயா ஒருவரால்தான் இப்படி நடந்துக்க முடியும்’ என்று முக ஸ்துதி பாடினன் டிரைவர்.

மரத்தடியில் நின்றுகொண் டிருந்த ரங்க காத்தை அந்த அதிகாரி நெடு நேரமாய்க் கவனித்துக் கொண்டே இருந்தார். இப்பொழுது சிகரெட்டைப் புகைத்தவாறே அவனே நோக்கி வந்தவர், அவனே நெருங்கியதும், 'நீங்களும் இந்த டிரக்கில் பிரயாணம் செய்கிறீர்களா?" என வினவினர்.

"ஆமாம்’ என்ருன் ரங்கநாத், 'உங்களிடம் சார்ஜ் எதுவும் இவன் வாங்கிக்கொள்ள at 6ial GL?' 'இல்லை." 'உங்கள் உடையைப் பார்த்ததுமே இது தெரிந்துவிட்டது. ஆனல் விசாரிப்பது என் கடமையல்லவா?”

அவரைக் கிண்டல் செய்ய விரும்பிய ரங்கநாத் சொன்னுன் 'இது அசல் கதர் அல்ல, மில் கதர்.”

'அரே சாகப் ! இதனுல் என்ன? கதர் என்ருல் கதர்தான்; இதில் அசலாவது, நகலாவது?” \ என்ருர் மரியாதையுடன்,

அதிகாரி அவ்விடம் விட்டகன் றதும் டிரை வரும், பியூனும் ரங்கநாத்திடம் வந்தனர். 'சார் இரண்டு ரூபாய் கொடுங்க” என்ருன் டிரைவர். r

முக த்தைத் திருப்பிக் கொண்ட ரங்கநாத் கடுமை தொனிக்க, 'ஏன்? நான் எதுக்காக ரூபாய் கொடுக்கணும்?” என்ருன்.

டிரைவர் பியூனின் கரத்தைப் பற்றி, "வாங்க, நீங்க வாங்க என் கூட” என்றவன், போகும்போது ரங்கநாத்தை நோக்கி,-அத்தியாயம் ஒன்று 9

'உன்னுல்தான் இன்ஃனக்கிச் செக்கிங் நடந்தது. நீயே கஷ்ட காலத்தில் என்னிடம் இப்படிப் பேசுகிருயே! இதுதான் நீ படித்த படிப்பா?” என்று கேட்டுக்கொண்டே சென்ருன் ,

தற்காலக் கல்வி இருக்கிறதே அது வழியில் படுத்துக் கிடக்கும் நாய் மாதிரிதான். யார் வேண்டுமானலும் அதை எட்டி உதைக்கலாம். இந்த டிரைவர் கூட அப்படித்தான். கடந்து கொண்டே அதை எட்டி ஓர் உதை உதைத்துவிட்டுப் பியூனுடன் டிரக்கை நோக்கிச் சென்றுவிட்டான்.

ரங்கநாத் பார்த்தான். மாலைப் பொழுது இறங்கிக்கொண் டிருக்கிறது. அவனுடைய தோற்பெட்டியோ டிரக்கில் இருக் கிறது. சிவபால் கஞ்ச் இங்கிருந்து குறைந்த பட்சம் 5 மைலா வது இருக்கும். இவர்களுடைய நல்லெண்ணமும் ஒத்துழைப் பும் மிகத் தேவை என்பதை உணர்ந்ததும் அவன் கால்கள் டிரக்கை நோக்கி எட்டி நடை போட்டன.

ஸ்டேஷன் வாகனின் டிரைவர் ஹார்னே அடித்து அடித்துப் பியூனே அழைத்துக்கொண் டிருந்தான். ரங்கநாத் இரண்டு ரூபாயை டிரை வருக்குக் கொடுக்க விரும்பியதும் அவன் அலட்சியமாகக் கூறினன்: ‘'இப்பக் கொடுக்கிறதா இருந்தா பியூனுக்குக் கொடுங்க. எனக்கு எதுக்கு ரூபாய்?”

இதைக் கூறும் பொழுதே அவன் குரலில் காசைக் கரத்தால் தீண்டாத, "உன் காசு எனக்குத் தூசுக்குச் சமானம்’ எனக் கூறும் சாதுக்களின் தொணி வந்துவிட்டது. ரூபாயைப் பையில் போட்டுக்கொண்ட பியூன் பீடியைக் கடைசியாக இழுத்துப் புகை த்த பின், பாதி எரிந்த பீடித் துண்டை ரங்கநாத்தின் பைஜாமாவின் மீது வீசிவிட்டு ஸ்டேஷன் வாகனே கோக்கி நடந்துவிட்டான். அவர்கள் புறப்பட்ட பின், டிரைவர் டிரக்கை ஒட்டினன். இம்முறை கியரை டாப்பில் போட்டுவிட்டு ரங்க நாத்தின் கரத்தில் கொடுத்துவிட்டான்.

வண்டி ஓடியது. சற்று நேரத்துக்கெல்லாம் அக்தி வே&ளயின் மங்கலான ஒளியில் பாதையின் இருபுறமும் உருட்டிவிட்ட மூட்டைகள் மாதிரி தெரிந்தன. அவை முட்டைகள் அல்ல; பெண்கள்தாம் இப்படி வரிசையாக உட்கார்ந்திருக்கின்றனர் என்பது தெரிய வங்தது. மிகவும் சாவகாசமாய் அரட்ட்ை அடித்தவாறு காற்று வாங்கிக்கொண் டிருந்த அவர்கள் அதே சமயத்தில் மல, மூத்திரமும் கழித்துக்கொண் டிருந்தார்கள்.10 தர்பாரி ராகம்

பாதை ஒரத்தில் குப்பைக் கூளங்கள் நிறைந்து கிடந்தன போலும், மாலை நேரத்திய மென் காற்று, அந்த முடை நாற்றத்தின் சுமையால் கர்ப்பிணிப் பெண் னே ப் போல் தளர் நடை போட்டுக்கொண் டிருந்தது.

தொலேவிலே நாய்கள் குரைத்தன. கண்களுக்கெதிரே புகை மண்டலம் மேலே எழும்பிச் செல்வது தென் பட்டது. அவர்கள் ஒரு கிராமத்தை நெருங்கிக்கொண் டிருக்கின்றனர் என்பதை எவரும் மறுக்க முடியாது.

இதுதான் சிவபால் கஞ்ச்.


Wednesday, September 20, 2017

சதுரச் சிறகு - பிரமிள்

very sorry for errors

சதுரச் சிறகு

ரயில் ஜன்னல் இப்போது பாறைச் சுவர்களைக் கடந்து பறந்து கொண்டிருந்தது. ரயில்வே ஸ்டேஷன்களின் பெயர்களை அவள் படிக்க வேண்டுமானால் ரயில் நின்றால்தான் உண்டு. இப்போது ஒரிரு எழுத்துக்கள்தான் அவள் மனதில் தைத்தன. அவளால் வேகமாகப் படிக்க முடியாது. அவன் எழுதிய கடிதங்களை வெகு சிரமத்தோடு படித்து அவற்றின் கசப்பையும் அசிரத்தையையும் தன்னுள் எங்கோ கேட்கும் ஊளையாக புரிந்து கொண்டிருக்கிறாள். அவளைப் படிக்கச் சொல்லி அவளது பெற்றோர் கேட்டனர். அவர்கள் புரிந்து கொண்டு அவளையும் விதியையும் கடிந்தனர். அவன் எழுதிய கடிதங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அவையும் ஒரு கனவன் மனைவிக்கு எழுதியவை யாகவோ ஒர் ஆண் ஒரு பெண்ணுக்கு எழுதியவையாகவோ கூடத் தொனிக்கவில்லை. அவளுக்கென்று எழுதப்பட்டவை என்றும் சொல்ல முடியாது. அவளை ஊடுருவி பெற்றோரிடம் சென்றன. பணம் கேட்டு லேசாக மிரட்டின. உறவில் தீயிட்டு விட்டு, பற்றி எரிகையில் பிடுங்கியது லாபம் என அவன் எழுதிய கடிதங்கள் அவை.

முதலில் பணத்தையும் பிறகு அவளையும் அனுப்பினர். அவளது தகப்பனார் இந்த இரண்டு காரியங்களையும் அங்கீகரிக்காமலேதான் செய்தார். மகளை ஐந்நூறு மைல் தூரத்திலிருந்த நகரில், அன்று காலை அவன் வீட்டில் கொண்டு போய் தனியே இருந்த அவனிடத்தில் விட்டு விட்டு ஒரு கனமும் தரிக்க மனம் கொள்ளாமல் திரும்பி விட்டார். அவன் ஒன்றும் பேசவில்லை. கதவோரத்திலேயே பையுடன் நின்றிருந் 5 Gussisi a sir Gsi sujj Ga Tsis GyuÁlsösenst).

உள்ளிருந்து மற்றவள் வந்தாள். போயிட்டாரா என்று அவளது தகப்பனாலரப் பற்றி விசாரித்தாள். இந்தக் கேள்வியின் அலட்சியம், கேட்டவளின் திடீர் பிரசன்னத்தை ஒரு இயல்பாக்கியது. பூமாவின் கண்களில் ஏளனமும் கண்லரும் ஒருமித்து மடை திறந்தன. மற்றவள் பரிகாசமாக அவளைத் தேற்றுவதைப் பார்த்தபடி ஒரு சிகரெட்டை எடுத்துப் புகைக்க ஆரம்பித்தான் மற்றவளின் பரிவு ஒரு நீண்ட பரிகாசத்தின் ஆரம்பமாக அவள் மீது விழுந்து வெறுப்பூட்டிற்று. செயலற்று வேடிக்கை பார்க்கும் தனது கணவனை பூமா ஏறெடுத்து நோக்கினாள் அந்தக் கணம், தனது பார்வை அவனைத் தீண்டாது திரும்பியதில் 5STS531/பிரமிள் படைப்புகள்நிலைமையை மட்டுமே பூமா சந்தித்தாள். அவளது கண்கள் சுயாதீன கொண்டு வெட்கத்தையும் களங்கத்தையும் நீத்தன. மற்றவளையும் தன் கணவனையும் "சீ என நோக்கினாள். தனது ஒரு பகுதி பொடியாக்கிக் கொண்டிருக்கையிலேயே அவளது இன்னொரு பகுதி வியது பூண்டெழுந்தது. அவள் மனதில் ஒரு முதிர்ச்சி தனது தனிமையை கன மெளனத்தில் நோக்கி உணர்ந்து ஒரு முட்பூவைப் போல மலர்ந்தது

அவள் மனதில் நெளிந்த வசவுகள் உச்சரிக்கப்படாத ஒரு பெரிய சாபமாகியிருக்கலாம். அவளது முதிர்ச்சியும் அவளே உணராது அவளிட மிருந்து பிறந்த சாபமும் மற்றவளைப் பின்னடையச் செய்தன. பூமா சிந்திய கண்ணிர்கூட அவளது இந்த அந்தரங்கத்தின் முன்னால் வீர்ய மற்றுத்தான் வழிந்தது. தாவணியை இழுத்து இடையைச் சுற்றி வரிந்து இடுப்பில் முந்தானையைச் செருகிக் கொண்டாள். பளுவான தண்ணிர்க் குடத்தைத் தூக்குமுன் அவள் செய்து கொள்ளும் பூர்வாங்கம் இது. ஆனால் அவள் கொண்டு வந்த மாற்றுப் புடவைப் பை ஒன்றும் பளுவானதல்ல. பேச்சற்று அதைத் தூக்கி வெளியே நடந்தாள். தகப்பனார் கொடுத்த பனம் இருந்தது, வீடு போய்ச் சேர அது போதும், பிறகு? அழுகை, வசவுகள், விவாகரத்து, ஜீவனாம்சம், ஒரு நீண்ட காலத்தினுள் பின் வாங்கிச் செல்லும் நடையும் ஒட்டமும், ரயிலும் பின் வாங்கிக் கொண்டு தான் இருந்தது. முன்னால் இழுத்து வந்த எஞ்சினை அவள் காணத் தவறி விட்டாள். பின்னாடியிருந்து ஒரு எஞ்சின் வண்டியைத் தள்ளிக் கொண்டு வந்தது. தனது பயணத்தில் எங்கோ இடையில் நேர்ந்து விட்ட ஒரு தண்டவாள மாற்றத்தைச் சரி செய்ய வேண்டி இந்த ரயில் கண வேகமாக வந்த வழியிலேயே ஆயிரக்கணக்கான மைல்கள் பின் வாங்கிக் கொண்டிருப்பதாக நினைத்து வண்டியேறினாள் ஜன்னல்களில் நிரம்பி, எரிந்து விழத் தயாராகச் சிரிப்பற்று, தமது நோக்கங்களையும் கெளரவங்களையும் பர்ஸையும் உறுதியாகப் பாதுகாப்பவர்களின் முகங்கள் நடுவே உட்கார்ந்தாள்,

ஜன்னலின் சதுரம் வெளியேயும் உள்ளேயும் ஒரே சமயத்தில் பார்த்துக் கொண்டிருந்தது. ரயில் புறப்படும் சமயத்தில் அவனைப் போன்ற ஒருவன் எனத்தோன்றி ஒரு உருவம் ஓடி வந்து, அவளது பெட்டியில் தொற்றிக் கொண்டு அவனாகி, கதவருகே நின்றது. கதவை முடித் திறந்து அவளைப் புன்னகையற்று நோக்கிவிட்டு முதுகைக் காட்டி நின்று கொண்டது, ரயில் அவன் நிற்கும் இடத்திலிருந்து அவனைப் பின்னே நகர்த்த முயன்று நகர்ந்து, அவறும் தொடர, பொறுமையிழந்து ஓட ஆரம்பித்தது.

எதிரே ஒரு சீக்கியன் ரயிலின் முரட்டுத்தாலாட்டில் கொண்டதூக்கத்தை அதே தாலாட்டினால் இழந்து எழுந்து உட்கார்ந்தான். தன் மனைவியிடம் புரியாத பாஷையில் ஒரு கசப்போடும் உருக்குலையும் சலிப்புடறும் பேரியபடி தாடியைக் கோதினான். பிரித்தெடுத்து உதறினான். பிறகு பழகிய சடங்கைச் செய்யும் அனாயாசத்தோடு தாடையின் கீழே முடிந்து

பிரமிள் படைப்புகள்/92

கொண்டான். பூமா அவனது இந்தச் சடங்கை நேர்நோக்காக உற்றுப் பார்த்திருக்க வேண்டும், பிற ஆண்களை அப்படி அவள் அதுவரை சிரத்தையாகப் பார்த்ததில்லை. ரத்தியனின் மனைவி பூமாவை பதிலுக்குப் பார்த்தது போல் தோன்றவே, பூமாதிரும்பிஜன்னல் வெளியே பார்த்தாள். பூமி பறந்து கொண்டிருந்தது. தன்னாடி ஜன்னலினூடே தோன்றிய வெளிப்புறத்தின் மீது உட் புறம் பிறந்து, ஒடும் பகைப்புலத்தில் ஓடாது சமைந்து நின்றது. அங்கே ஒரு சக்தியன் தனது தலையைப் பிடரி யிலிருந்து மேல் நோக்திவாரி, உச்சிமுடிச்சின் அடியில் சிப்பைச் சாவதானமாகச் சொருகியபடி, தன் பிரமாண்டமான அழகிய கன்களினால் தனது மனைவியின் பேச்சொழுகும் வாயை ஒரு திருட்டு வெறுப்போடு பார்த்தான், பூமா ஜன்னல் கண்ணாடியைத் தூக்கி வெளிப்புறத்தை மட்டும் பார்க்க நினைத்தவள் மனதை மாற்றிக் G) Ji TaTi Tair.

அவன் கதவருகே நின்று அவள் திடுக்கிடத் திரும்புகிறோம் аталай,

தன்னைப்பற்றியே வியந்தவன் போல் அடிக்கடி அவளைத் திரும்பிப் பார்த்தான். இன்னொருவனும் மூக்குக் கண்ணாடியூடே தூரத்தில் எதிரிருந்து சாவதானமாகத் தொடர்ந்து பார்த்தபடியிருந்தான். நேற்றும் அதற்கு முந்திய நாட்களினூடும் யார் யாரோ முகமற்ற ஆண்கள் அவளைப் பார்த்தனர். பார்க்கும் அவர்கள் கதவோரத்தில் நிற்கும் அவனாகி கூச்சமின்றி அவளைத் தாண்டும் போதும், அவள் முன் வேறு விவகாரங்களினிமித்தம் நிற்கும்போதும் அற்ப பவிஷ-களைப் பற்களா யணிந்து சிரித்து, பேயாகி இரங்கி, அவளைப் பார்க்காதிருப்பதை மட்டும் மறுத்துச் சென்றனர். சம்பிரதாயமான கொள்கையில் குறுகிய இளமை நீண்டு தொடர்ந்தது. தன்னை நாடும் கண்களினூடே உடல் கூசும் அருவருப்புகள் மங்கி வந்துநின்று வயசாக மாறிக்கொண்டிருந்தன. அவள் கிழவியாகக் காத்திருந்தாள் ரயில் பாலத்தின் மீது போகிறது. எங்கோ தேக்கப்பட்ட ஒரு ஆற்றின் பாலை போன்ற படுகையில் அங்கங்கே குளமாக நின்ற தண்ணிரில் சின்னஞ்சிறு மனிதர்கள் குளித்தனர். வெகு சமீபத்தில் கரையேறி ஈரப் புடவைகளோடு எலும்புகளின் மேல் தொங்கும் திரைத்த தோல்களைக் காட்டியபடி நின்றனர் மூன்று கிழவிகள். நின்று, நீயும் நாங்கதாண்டி என்று அவளைக் காணாதே சொல்லினர். ஆமாமாமா என்று ரயில் அவர்களைக் கடந்து சென்று கொண்டிருந்தது. கதவருகே நின்றவன்

த்திற்கு நேரே வரும் கனத்தில் அவள் அவர்களாகி அவனை

அவர்களி நோக்கிப் பொக்கை வாயினால் பயங்காட்டிச் சிரித்தாள். ஆனால் அவள் வாய் திறந்ததும் பருவம் அவளது உதட்டிற்கு வந்து மொய்த்து, உடலா யிற்று. உள்ளுறுத்தும் பிரமையாயிற்று. அவள் பார்வையை மாற்றி ஜன்னலின் அசைவற்ற சவத்திரையில் ஒரு சிக்கியன் தலைப்பாதை கட்டிக் கொள்ளச் செய்யும் ஆயத்தங்களைப் பார்த்தாள்.

கதவருகே நின்றவன் அவளை மீண்டும் திரும்பிப் பார்த்தான் கதவு அன்று, வெளியே தாளிடப்பட்டதும் அவள் கதவருகேதான்

33/பிரமிள் படைப்புகள்SSSSSSL


நின்றிருந்தாள். இன்று போலவே அன்றும் அவன் அழைக்கவில்லை. உள்ளே வருவதும் வராததும் அவ அவள் மீது அவளே புரிந்து கொள்ளத் தயாரில்லாத ஒரு *யாதீனத் ஏற்றி விட்டவன் போல் கட்டிலில் உட்கார்ந்திருந்தான் இணக்கம் அவனுக்கு ஒரு ஆண் இன்னொரு ஆணிடம் எதிர்பா: வியவகாரப் பொறுப்பாகத்தான் இருந்திருக்க வேண்டும். தான் அறிந் பெண்களிடம் இருந்ததைப் போன்ற ஒரு சுயாதீனத்துடன் ဒ၇၈'ခြား நடந்திருக்கவேண்டும். நகரத்தில் அவனைக் கவர்ந்த சூழல்கள் இத்தகைய திடீர்த்தத்துவங்களுக்குக் காரணமாயிருந்திருக்கலாம்.

ஆனால் பூமாவின் கூச்சம் அவளது மோகத்தை புதிர் ԼD Ամ ԼDՈ 3:6)լ இயற்கையின் வித்தை, மெளனம் ஒரு சமிக்ஞையாவது போல் திசையின் கூச்சமும் அவளிடத்தில் ஒரு சமிக்ஞையாயிற்று. ஆனால், இயற்கையின் வீர்யத்தை இழந்த அவன் மனம் இந்தக் கவர்ச்சிகளை 2-57 Saltஉருவாக்கிற்று. என்றும்போல் இச்சம்பிரதாயங்கள் வாழ்வின் மீது படிந்து உறிஞ்சும் பிரம்மராக்ஷஸாயிற்று. அவனது பார்வையில் மோகம் இல்லை. பார்வையும் புறத்தே வந்து விழுந்து விடவில்லை. உள்ளே திரும்பும் வீர்யமும் அற்று பிரமை படர்ந்த நிச்சலனத்தோடு அவன் அவளைப் பார்த்தான்.

அவனுக்கு நகரத்தில் ஒருத்தி இருக்கிறாள் என்று ஊர்ஜிதமற்ற செய்தி எங்கோ கேட்டு இப்போது பூதாகாரமாகி வந்து நின்றது. லேசாக அவனை ஒரக்கண்ணால் பார்த்தவளின் பயங்கள் இந்த வதந்தியின் ஞாபகத்தில் நீர்த்து விட்டன. மேஜையின் அலாரத்திலிருந்து கடிகாரக் காலம் எவரை என்றில்லாமல் நெடுநேரமாகக் கண்டித்து, ‘சே, சே என்று சொல்லியபடியிருந்தது. அவளுக்குத்தான் என்ன செய்ய வேண்டும் என்பது தெரியவில்லை.

அவளது கை, திடீரென ஒரு குருட்டு முடிவுக்கு வந்து கதவுக் குமிழைப் பயனற்றுத் திருகிற்று. வெளியே தாழிடப்பட்டிருந்த பூட்டின் உள் ஒலிகள் அருவருப்பைத் தரும்படி விரசமாகக்களுக்கிட்டன. அவன் முகத்தில் ஒரு புன்னகை. ஏளனமோ? அவள் குரல் தேய்ந்து வெறுத்து எதிரொலித்தது. "சே" என்றாள். துணிந்து முகஞ்சுளித்தாள். ஒரு ஆபாச் ஸ்திதியிலிருந்து திடீரென விழித்தவள் போலக் கையைக் கதவுப் பூட்டின் திருகிலிருந்து வெடுக்கென்று எடுத்தாள். அவன் முகம் கடுத்தது. எங்கோ அவனுள் தோன்றிய மோகம் குலைவு பெற்றிருக்க வேண்டும். ‘த்ச என்று படுக்க ஆயத்தமாகிறான். படுத்தான். தூங்கிவிட்டான்.

அவள் அவனுடன் தனித்திருந்தது அவ்வளவுதான். அவனைக் *" அவனது அழகில் அவள் கொண்ட பிரமிப்பு இப்போது ﷽l@Jo”ማ தனிமைக்கு ஒதுக்கிற்று. இப்போது அவன் முதுகு, பாவமற்று

பிரமிள் படைப்புகள்/34

முகமற்று, அங்கங்களின் பிதுக்கமற்று ஒரு வெற்று நிலமாக துரங்கிக் கொண்டிரு ந்தது. அவள் கால் மடிந்து மூடிய கதவோடு சாய்ந்து உட் கார்ந்து விட்டாள். மென்மையாக அழுதாள். அவனது முதுகின் வெறுமை, தாண்ட முடியாத அரணாக அவளை வேவு பார்த்துக் கொண்டிருந்தது. மனைவியாகவிட்ட ஒரு சிறு கால எல்லையினுள்ளேயே கணவனின் முதுகு கூடத் தன்னை வேவு பார்க்கத் தொடங்கிவிட்டதா? இருந்த படியே கதவில் சரிந்து தூங்கினாள். திடீர் திடீரென விழித்தாள். அவனது முதுகைப் பார்த்து எங்கிருக்கிறோம் என உணர்ந்தாள். ஒரு முதுகின் பாலை மீது அவள் நடந்து கொண்டிருந்தாள். அவளது பாதத்தின் கீழ், அருவருப்பையும் பயத்தையும் உண்டாக்கி, ஜீவன் மடிந்தபடி மூச்செடுத்துக் கொண்டிருந்தது நிலம், கால் சுட்டது. பயங்கர நா வறட்சி யுடன் தண்ணீர் தேடி பாலையில் சுற்றி நடந்தாள். ஒரு கானல் உருப் பெற்றது. தனது பாலையைச் சுற்றி ஒரு நதி ஆரம்பம் முடிவு அற்று ஓடுவதைக் கண்டாள். அந்த நதியில் ஆயிரக்கணக்கான முதுகுகள் கொண்ட ஒருவன் குளித்துக் கொண்டிருந்தான். ஒவ்வொரு முதுகும் அவளை நோக்கி நீர் பூத்து அழுதது. அவள் பரிவுடன் அவற்றை ஒவ்வொன்றாக தடவி விட்டாள். அவள் தொட்டதும் அவை கொண்ட தினவைத் தேய்த்துக் கழுவித் தீர்த்தபடி இருந்த அவளது கைகள் வலியெடுக்க ஆரம்பித்தன. ஒய்வெடுக்க நினைத்துப் பின்வாங்கித் திரும்பியபோது முதுகுகள் தன்னை வளைத்து நிற்பதைக் கண்டாள். ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி அவை தன்னை உயிருடன் சமாதி வைக்கும் சவ அறையாக நின்றன. அவள் அவற்றுக்கு உரியவனின் முகத்தைக் கெஞ்சிக்கேட்கத் தேடினாள். காணோம். ஒரு பிரமாண்டமான பூட்டின்  யந்திரஉள்ளீடுகளைப் போன்று ஒவ்வொரு முதுகின் உள்ளிருந்தும் விரசமான 'களுக் ஒலிகள் கிளம்பி அவளை நச்சரித்தன. அவள் பயந்து அழஆரம்பித்தாள். முதுகுகள் பாறைகளாகச் சரிய ஆரம்பித்தன.

பாறைகள், கற்குவியல்கள், மண் திடல்கள். திடீரென ஜன்னலில் வெளியே வயல் வெளிகள். இடையிட்டு முளைத்து, பெருவெளிகளின் தூரத்தில் பெருமரங்கள் குச்சிகள் போல வியர்த்தமாய்த் தோன்றின. எப்போதாவது அபூர்வமாய் மனிதர்கள் தோன்றினர். கண்ணுக்கெட்டிய தூரம் தரை, குடில்கள் கூட அற்ற ஒரு அமானுஷ்யத்தில் இவர்கள், தாம் தோன்றிய இடத்திலேயே மறைந்து குடி கொள்பவர்களாகக் கவலை யற்று நடந்து ஒன்றினர். தன்னை ஏமாற்றும் மனப் பிரமைகளிலிருந்து வெளிக்குதித்து உலவும் தோற்றங்களோ இவை என, அவற்றை தொடர்ந்து நோக்கி அவற்றின் உண்மையான ஸ்திதியை விசாரிப்பவளாக ஜன்னல் கண்ணாடியோடு தலையை ஒட்டி ரயில் அவர்களைத் தாண்டி விலகி அகலும் வரை பார்த்தாள். அவளது கண்கள் தங்கள் மீது பட்டுள்ள வரை மறைய மறுத்து அவர்கள் தோன்றி நிலைத்தனர். புதிதாக மீண்டும் தோன்றிப் பின் அகன்றனர். கறுத்து, ஒல்லியாகி, பயந்து வியர்த்த ஒரு நாடு ஆதரவு தேடி ஒடும் காற்றாக அலறியபடி சதுரமான பாலை35/பிரமிள் படைப்புகள்

ஒன்றின் மீது பிறந்து கொண்டிருந்தது. ரயிலோரத்திலிருந்து திடீரென மேடிட்டு எழுந்த ஒரு அகாரணமான வரப்பின் மீது குப்பையா, மாறிக் கொண்டிருக்கும் வைக்கோல் சுமைகளுடன் மனிதர்கள் பிறந்த ரயில் அவர்களைக் கடக்கும்வரை மறைய மறுத்து நிலைத்து (b1 ју, алi. விவசாயிகளாயினர். தலைகுனிந்து வெய்யிலை உதாசீனம் செய்தபடி உடலோடு ஒட்டி வாழ்ந்தனர். தாழ்வைக்கூட இழந்து உழைக்கும் நிர்பந்தத்தில் வறுமை கொண்டனர். விளைவும் காரணமும் «ՓԱԳծl o)ւմ)/a»)լը தோள் மீது குடி கொள்ள வெறிச்சிட்ட ஒரு சதுர உலகின் மீது குனிந்து, ரயிலின் வேகம் நிர்ணயித்த ஒரு சிறுகால எல்லையில் வாழ்ந்து மறைந் தனர். சேலை தரித்துப் பெண்களாகி வெறித்து நோக்கினர். அவள் தன் மீது சரியும் முதுகுப் பாறைகளை ஒதுக்கி ஊடுருவிக் கொண்டிருந்தாள். 

ஜன்னலில் வெளியே பாறைகள் பறந்து கொண்டிருந்தன. கதவருகே நின்றவன் கதவைப் பூட்டினான். கதவில் கை வைத்தபடி அவளைப் பார்த்தான். அவளது திசையில் அவனது நீண்ட நடை ஆரம்பித்தது போலிருந்தது. சீக்கியன் தலைப்பாகை கட்டிக் கொண்டிருந்தான். வெளியே தோற்றங்கள் ரயிலின் வேகத்தில் மங்கி புகைச் சீறல்களாகப் பறந்த படியிருந்தன. அவன் நடந்து வர ஆரம்பித்தான். வேண்டாத ஒரு சிதைவு, உயிர்விட மறுத்து ஆடி உருக்குலைந்து உருப்பெற்றுப் பெற்று வெளி யேயும் உள்ளேயும் தோன்றி மறுக்க முடியாத ஒரு தந்திரமான பிரமை யாகப் பிறந்து கொண்டிருந்தது. அவள், தன் மனசின் கடுமையைப் பிடிவாதமாக்கி, தன்மீது விழும் சவ அறை, உள்ளிருந்து வெளியாகி, ஒரே திசையில் விழும் சாபங்களாவதைப் பார்த்தபடி வாளாவிருந்தாள். சீக்கியன் துணியை, தலையிலிருந்து பிறந்த ரத்த மயமான பெரிய குடல் ஒன்றை இழுத்தெடுப்பவன் போல் பிடித்தபடியே, வெகு வெகு சாவதானமாக ஒரு கையின் விரல்களால் தலையைச் சுற்றி விழும் துணியின் பவித்திரச் சுருக்கங்களை ஸ்பரிசித்துத் திருத்தியபடி தலைப்பாகை கட்டிக் கொண்டிருந்தான். ரயிலின் வீறிட்டேகும் வேகத்தில் குறுகிய தன் வாழ்நாளை உருக்குலைத்துத் தலையைச் சுற்றிக் கட்டுவதிலேயே வாழ்ந்து கொண்டிருப்பவனாகத் தோன்றினான். தலை ஒரு ரோஸ் நிறத்துணி குழ்ந்து கரடுமுரடான ஒரு லிங்க முனையாகிக் கொண் டிருந்தது. அவனுக்கும் அவனது மனைவிக்குமிடையே ரகசியமான வெறுப்புகள் உறுமிக் கொண்டிருந்தன. இருவரும் பேச்சுக்கு பேச்சு குடும்ப உணர்வுகளின் கொடுக்கல் வாங்கல்களை சம ாளித்தபடியிருந்தனர். அந்த சிக்கிய பெண்ணின் முகத்தில் தேஜஸ் உள்வாங்கி அவளது கடுகடுப் பையும் ஊடுருவிய ஒரு திருப்தியாகப் பூத்திருந்தது என்பதனால்தான் போலும் பூமாவுக்கு அவள் ஒரு கர்ப்பிணியாகத் தோன்றினாள். 

வந்து கொண்டிருந்தவன் இடையறாது தடுமாறி, பூமாவைத் தன் பார்வையால் மோதி தன்னையே நிறுத்தி நிறுத்தி, பார்வையால் ரயிலில் உள்ளவர்களின் தோற்றங்களை அளவிட்டபடி வந்து கொண்டிருந்தான். பின்னே கழியும் சாபத்தோற்றங்களின் போராட்டம் பிரதிLit JEDI Lorral ஒரு உலகாகி, தலைப்பாதையைக் கட் டுவதும், கர்ப்பம் தரித்துக் கடுகடுப்பதுமாக இழந்து உறைந்தபடி இருந்தது.அவன் அவள் முன் நின்றான். 

இடையறாது பின்வாங்கிக்கொண்டிருந்த ரயில் நிற்பதற்கு வேகம் தணிந்துகொண்டிருந்தது. அவன் அவள் முன்திடீரென்று காலியான எபீட்டில் சாவதானமாக உட் கார்ந்து விட்டான். ரயில் நின்றது. Fih 616) I J air yuyan) av ut unaow கட்டி முடித்து விட்டான். 

பூமாவுக்கு திடீரென தான் என்ன செய்ய வேண்டும் என்பது இன்னும் தான் தெரியவில்லை என்ற உணர்வு தோன்றிற்று தான் அவனிடம் என்ன சொல்ல வேண்டும் என்று தெரியவில்லை. 

அவன் அவளைப் பார்த்தபடியே ஒரு சிகரெட்டை எடுத்து உதடுகளில் இடுக்கிப் பிடித்தபடி சீக்கியனிடம் தீப்பெட்டி ஒன்றை வாங்கிக் கொண்டிருந்தான்.

ஞானரதம், அக்டோபர் 1973
37/பிரமிள் படைப்புகள்

Friday, September 15, 2017

சதுரங்க ஆட்டக்காரர் - பிரேம்சந்த்

google-ocr 

pdf : ?

சதுரங்க ஆட்டக்காரர் - பிரேம்சந்த்

வர்ஜித் அலி ஷா ஆண்டுகொண்டிருந்த காலம். தலைநகர் லக்னுே உல்லாஸக் கேளிக்கையில் மூழ்கிக் கிடந்தது. ஏழைஒமான், அறிவிலி-அறிவாளி எல்லாத் தரப்பாரும் சுகடோக மான சொகுசு வாழ்க்கையில் லயித்திருந்தார்கள், எல்லா வாழ்க்கை மட்டத்திலும் கேளிக்கை-கொம்மாளங்களுக்கே சமூக மதிப்பும் கவர்ச்சியும் மேலோங்கியிருந்தன. ஆட்சித்துறை, இலக்கிய வட்டாரம், சமூக நிறுவனம், கலைத்துறை, தொழில் துறை, நடையுடைபாவனை, எங்குமே உல்லாசப்போக்கு செல் வாக்குப் பெற்றிருந்தது. அரசாங்க அலுவலர்கள் காமக் கேளிக்கைகளில் இறங்கினுர்கள் இலக்கியப் படைப்பா எரிகள் காதல், பிரிவுத்துயர், ஏக்கம், இன்பம் என்றே சுழன்ருர்கள்; தொழிலாளர்கள் அழகுப் பண்டங்களை உருவாக்கிஞர்கள்; வியாபாரிகள் கண் மை, அத்தர், வாசனைத் தூள், தாதுவிருத்தி மருந்துகள், கேளிக்கைப் பண்டங்கள்-இவைகளையே மானுவாரி யாக வியாபாரம் செய்தார்கள்.

எல்லார் கண்களிலும் சிற்றின்பக் கிறக்கம் பளிச்சிடும். உலக நடப்பைப்பற்றி எவருக்குமே கவலை இல்லை. கெளதாரி, காடை களின் சண்டைப் போட்டிகள்; சொக்கட்டான், சதுரங்க விளை யாட்டு; பொழுதுபோக்கு-மனமகிழ் ஆட்டப்போட்டிகள்அரசர் முதல் ஆண்டிவரைக்கும் இதே கிறக்கம். பிச்சைக் காரர்கள், பக்கிரிமார்கள்கூட யாசகத்தில் கிடைக்கும் காசுகளை உணவுக்குச் செலவழிக்காமல், போதை-போட்டி இனங் களுக்கே முன்னுரிமை கொடுத்தார்கள். சூதாட்டங்களால் அறிவுத்திறன் வளர்கிறது; சிந்தணுசக்தி கூர்மையாகிறது, சிக்கல் க3ளத் தீர்க்கும் திறன் அதிகரிக்கிறது என்றெல்லாம் நியாயம் கற்பிக்கப்பட்டது. (இத்தகைய நியாயவாதிகள் இப்போதும் இருக்கவே செய்கிருர்கள்.)

ஆகையினுல்தான், ஜாகீர்தார்களான மிர்ஜா ஸஜ்ஜாத் அலி, மீர்ரோஷன் அலி இருவரும் தம் புத்தி சக்தியை மேதாவிலாஸ் மாக வளர்த்துக்கொள்ளவே பெரும் பொழுதைச் செலவழிக்க லாஞர்கள்-இதில் குறை காண என்ன இருக்கிறது? விவரம்

________________

சதுரங்க ஆட்டக்காரர் 239

தெரிந்த பெரியவர்கள் ஏன் குறைகாணவேண்டும்? இருவருக்கும் பரம்பரைச் சொத்தாக ஜாகீர் மானியம் இருந்தது, வாழ்க்கைச் செலவுக்குக் கவலை இல்லை. மனமகிழ் மன்றமாக வீட்டைக் கருதியதில் என்ன தவரும்?

காலையிலேயே இரு அன்பர்களும் சிற்றுண்டியைப் பலமாக முடித்துக்கொண்டு, ஜமுக்காளத்தை விரித்து அமர்வார்கள். சதுரங்கக் கட்டமும், காய்களும் வரவேற்கும் படு உளக்கத்துடன் ஆட்டத்தில் முனைவார்கள். பிறகு நேரம்போவதே தெரியாது. மதியம், பிற்பகல், மாலை, அந்திப்போது-மளமளவென நேரம் விரையும். வீட்டுக்குள்ளேயிருந்து தாக்கீதுகள் வந்துகொண் டிருக்கும். இங்கிருந்து வரும் பதில்: "இதோ வருகிறேன், போ! தட்டைப்போடு வருகிறேன். '

சமையல்காரன் அலுத்துப்போய், சாப்பாட்டை ஆட்டக் களத்திற்கே கொண்டுவந்து வைத்துவிடுவான். சாப்பாடு, ஆட்டம் இரண்டும் சேர்ந்தே நடக்கும்.

மிர்ஜா ஸஜ்ஜாத் அலி இல்லத்தில் பெரியவர் எவரும் இல்லை. கண்டிப்பு-கேள்விக்கு இடமில்லை. அவர் வீட்டு முன்கூடத்தில் ஆட்டம் நிகழும். வீட்டிலுள்ளவர்களுக்கு இது பிடிக்கத்தான் இல்லை. ஏச்சுப் பேச்சுகள் ஒலித்துக்கொண்டுதான் இருந்தன. அக்கம்பக்கத்தார், வீட்டு வேலைக்காரர்கள் கூடக் குறை கூறி ஞர்கள் "மகா மோசமான விளையாட்டு இது, வீட்டையே குட்டிச்சுவராக்கிவிடும். இந்த மாதிரி பித்து எதிரிக்குக்கூட வரவேண்டாம். நல்லது-பொல்லாதுகளுக்கு லாயக்கில்லாமல் ஆக்கிவிடுகிறது. மனிதனை உதவாக் கரையாக்கிவிடும் இந்தச் சூதாட்டம். மோசமான தொத்து வியாதி."

மிர்ஜாவின் மனைவிக்கு அடங்கா வெறுப்பு. வாய்ப்புக் கிட்டும் போதெல்லாம் ஏசிவிடுவாள். இதற்காக மனைவியைச் சந்திப் பதையே மிர்ஜா வெகுவாகத் தவிர்த்து வந்தார். அவர் படுக்கச் செல்லும்போது பேகம் உறங்கிக் கொண்டிருப்பாள். காலையில் பேகம் எழும்போது, கணவர் எழுந்திருக்கமாட்டார். பேகம் இந்தக் கோபத்தையெல்லாம் பணியாட்களிடம் காட்டுவாள். சூதாட்டக் களத்திலிருந்து தேவைக் கோரிக்கைகள் வரும்போ தெல்லாம் பேகம் எரிந்துவிழுவாள்,

"என்ன? வெத்திலே பாக்கு வேணுமாமா? வந்து எடுத்துக் கிட்டுப் போகச் சொல்லு!"

________________

240 பிரேம்சந்த் சிறுகதைகள்

“வந்து சாப்பிட நேரமில்லையாமா? சாப்பாட்டைக் கொண்டு போய் அவங்க தலையிலே கொட்டு, வேணும்னுத் திங்கட்டும், இல்லாட்டி நாய்க்காவது போடட்டும்."

ஆனல் இதையெல்லாம் நேரே களத்திலேயே போய் தெரி விக்கப் பேகம் இன்னும் துணியவில்லை. தன் கணவரைவிட எதிர் ஆட்டக்காரர் மீர்ரோஷன் அலியிடம் ஆத்திரம் அதிகம். காரணம், பேகம் ஆத்திரப்படும்போதெல்லாம், மிர்ஜா குற்றத் திற்கு மீர்ரோஷனையே பொறுப்பாளியாக்கித் தப்பித்துக் கொள்வது வழக்கம். இதனுல் மீர் சாயபுக்கு அந்த அம்மணி "மீர் விடியா மூஞ்சி' என்று பெயர் சூட்டியிருந்தார்.

ஒருநாள் பே க மி ற் குத் தலைவலி. வேலைக்காரியிடம், "அய்யாவைக் கூட்டி வா! வைத்தியர் வீட்டுக்குப்போய் மருந்து வாங்கி வரணும். ஒடு, சீக்கிரம் வா!' என்று சொல்லி அனுப்பிஞள்

பணிப் பெண் வந்து சொன்னபோது, "போ, இதோ வரு கிறேன்." என்று வழக்கம்போல் மிர்ஜா சொல்லி அனுப்பினுர்,

பேகம் அம்மாளுக்கு ஆத்திரம், "எனக்குத் தலைவலி மண்டை யைப் பிளக்கிறது. இவர் வெளியே சதுரங்கம் ஆடிக்கொண் டிருக்கிறதாவது முகம் சிவந்தது. பணிப் பெண்ணைத் திரும் பவும் அனுப்பி, ‘போய்ச் சொல்லு! இப்பவே எழுந்து வாருங் களா, இல்லை, நானே வைத்தியர் வீட்டுக்குப் போகட்டுமா? என்று கேட்டுவரச் சொன்னுள்.

மிர்ஜா மிக சுவாரசியமாக விளையாடிக்கொண்டிருந்தார். இரண்டே ஆட்டத்தில் எதிராளி தோற்கப்போகிருர், இந்த வெற்றித் தருணத்தில் எழுந்திருக்கலாகுமா? எரிந்து விழுந்தார், "அப்படி என்ன உயிரா போய்விடும்? கொஞ்சம் பொறுத்திருக்க கூடாதா?”

மீர்சாகப் சமாதானப்படுத்தினர், "போய்த்தான் பார்த்து விட்டு வாருமே, பெண்களுக்கு மென்மையான சுபாவம்."

"சரிதாங்காணும்! ஏன் போகச் சொல்லமாட்டிரு? இரண்டே ஆட்டத்திலே ஐயா தோற்கப்போகிழுரில்லையா? அதுதான் கரி சனப்படுகிருரு!"

"ஐயா! இந்த இறுமாப்பு வேளும். நானும் நல்லா யோசிச்சு வைச்சிருக்கேன். என் ஆட்டத்திலே புதுத்திருப்பம் வரும். நீர் சரிஞ்சிடுவீரு. எதுக்கும் போய் பார்த்திட்டுவாரும். ஏன் வீனுக்கு அவங்க மனசை வருத்தப்படுத்துறியம்??

அப்படியா? உம்மைத் தோற்கடிச்சிட்டே போகிறேன்."

________________

சதுரங்க ஆட்டக்காரர் 罗金及

"நான் காயைத் தொடமாட்டேன். நீர் உள்ளே போப் விசாரிச்சிட்டு வாரும்."

அட, நீர் ஒண்ணு! வைத்தியர் வீட்டுக்குப் போயாகணுங் காணும். தலைவலியும் இல்லை; என்னைத் தொந்தரவு பண்ணியா கனும், அதுக்கு ஒரு சாக்குப்போக்கு. "

* எப்படி இருந்தாலும் அவங்களே சமாதானப்படுத்தணு மில்லே "

"சரி, இந்த ஒரு ஆட்டம் ஆகட்டும்.

* தொடமாட்டேன். நீர் உள்ளே போய் அவங்களைப் பார்த்து விசாரித்துவிட்டு வருகிற வரைக்கும் நான் காயிலே கை வைக்க மாட்டேன். '

மிர்ஜா வேண்டாவெறுப்பாக, உள்ளே எழுந்து போனுர், பேகம் அம்மா கோபாவேசத்தில் இருந்தார். முனகியவாறே, * உங்களுக்கு இந்த எளவெடுத்த ஆட்டம் இத்தினி ஆசையாயி டிச்சு. இங்கே உசிரே டோனுலும் எழுந்திருக்கமாட்டிக. சேச்சே! உங்கமாதிரி ஆண்பிள்ளை எவரும் இருக்கமாட்டாங்க, ” என்று சாடினுள்.

*நான் என்ன செய்ய? மீர் சாகப் விடமாட்டேங்கருரு. ரொம்பச் சொல்லி, சிரமப்பட்டு எழுந்து வந்தேங்கறேன்.”

"அவரு ஒரு 2.கவாக்கரை விடியா மூஞ்சி, தன்னைப்போலவே எல்லாரையும் நிஃனச்சிருக்கிருரு, அவருக்குப் பெண்டாட்டி பிள்ளைகள் இருக்கிழுங்களா இல்லை, எல்லாரையும் விழுங்கிட் டாராங்கிறேன்?"

மிர்ஜா தாம் நல்லவர்போல், "ரொம்ப மோசம், சூதாடின்ன வெறிபிடிச்ச சூதாடிங்கறேன். வீடேறி வந்திட்டப்புறம் முடி யாது, போன்னு எப்படிச் சொல்றது?’ என்ருர்,

'திட்டித் திருப்பி அனுப்புறது!"

"நீ ஒண்ணு. சம அந்தஸ்திலே இருக்கிறவரு. மதிச்சுத்தானே ஆகணும்.'

Ffi, 5T Gar Gi fru ஏசிவிட்டு வர்றேன். கோவிச்சுக்கிட்டா லும் பரவாயில்லை. அவுக தயவிலேயா நாம்ட வாழருேம்? . . . இத்தாடி ஹிரியா! போய் சதுரங்கப் பலகை, காய்ங்க எல்லாத் தையும் எடுத்துக்கிட்டு வந்திடு. மீர் சாகப் கிட்டேபோப், எசமான் இனிமேலே விளையாட வரமாட்டாங்களாம், நீங்க வீட்டுக்குப் போகலாமாம்னு! சொல்லிட்டு வாடீ!

16۔۔۔۔۔۔۔۔.{g.8

________________

密4易 பிரேம்சந் த் சிறுகதைகள்

மிர்ஜா துணுக்குற்ருர், "இந்தா, இந்தா! இப்படியெல்லாம் போய்ச் சொல்லிவைக்காதே. வம்பாகிப்போகும். ஏய் ஹிரியா! ாங்கே கிளம்பிவிட்டே. நில்லு! போகவேனும்."

"ஏன் தடுக்கிறீங்க? என் இரத்தத்தைக் குடிச்சமாதிரி இவளைத் தடுத்தீங்கள்ஞ. சரி, இவளைத்தானே தடுப்பீங்க. நானே போகிறேன்; என்னைத் தடுங்களேன் பார்க்கலாம்!"

பேகம் ஆத்திரத்துடன் வெளிக்கூடத்திற்கு வந்தாள். மிர்ஜா தவித்தார். பேகமை நைச்சியம் செய்தார்:

"ஆண்டவன் பேராலே வேண்டிக்கிறேன். போகாதே! ஹஜரத் ஹாலேன் மேலே ஆணை என் மானத்தை வாங்காதே, நில்லு!" பேகம் பொருட்படுத்தவில்லை. வெளிக்கூடத்தின் கதவு வரைக்கும் சென்ருள், சட்டென்று பிற மனிதர் எதிரே போகக் கூச்சமாக இருந்தது. கால்கள் எழும்பவில்லை. எட்டிப் பார்த் தாள். நல்ல காலம், மீர் சாகப் இல்லை. அவர் முன்பே ஓரிரு காய்களைத் தமக்குச் சாதகமாக இடம் மாற்றிவைத்துவிட்டு, நல்ல பிள்ளைபோல் வெளியேபோய் உலாத்திக்கொண்டிருந்தார். கேட்டால் காரணம் சொல்லலாமே.

பேகம் உள்ளே வந்தாள், சதுரங்கப் பலகையை ஒதுக்கித் தள்ளிஞள். காய்களைத் தூக்கி வெளியே எறிந்தாள். வெளிக் கூடத்தின் கதவைச் சாத்தி உள்புறம் தாளிட்டாள். தரை அதிர நடந்து உள்ளே போஞள்.

மீர்ரோஷன் அலி வெளியே கதவுப்பக்கம் நின்றுகொண்டிருந் தார், கை வளைகள் ஒலிப்பதையும், காலடியோசை அதிர் வதையும் கேட்டார். சதுரங்கக் காய்கள் வெளியே வந்து விழுவதைக் கண்டார். புரிந்துகொண்டார். ஒசைப்படாமல் வீடு திரும்பிவிட்டார்.

மிர்ஜா பேகமிடம் சிணுங்கிஞர், "மகா அநியாயம் இது." "இனிமே அந்த மீர் துக்கிரி இங்கே வரட்டும். மூஞ்சிக்கு நேரேயே ஏசி விரட்டிவிடுறேன். இவ்வளவு மும்முரம் தொழு கையிலே காட்டினல், பெரிய மகாஞயிடலாம். நீங்க பாட்டுக் குச் சதுரங்கம் ஆடிக்கொண்டிருப்பீங்க, நான் அடுப்படியிலே கிடந்து வேகனும்? வைத்தியர் வீட்டுக்குப் போகிறீங்களா, இன்னும் சால்சாப்பு இருக்கா? −

மிர்ஜா வீட்டைவிட்டுக் கிளம்பினர். நேரே மீர்ரோஷன் வீட்டிற்குச் சென்ருர், நடந்ததைக் கூறி வருத்தம் தெரிவித் தார். மீர் சொன்னர், "காய்கள் வெளியே வந்து விழுந்ததுமே

________________

சதுரங்க ஆட்டக்காரர் 24总

புரிந்துகொண்டேன். ரொம்பக் கோடக்காரிங்கறேன். நீர் இப்படித் தலையிலே தூக்கிவைத்திருக்கக்கூடாது. நீர் வெளி யிலே என்ன செய்தால் அவங்களுக்கென்ன? வீட்டு வேலைகளைக் கவனித்துக்கொள்வது அவங்க பொறுப்பு. மீதி சமாசாரங்களைப் பற்றி அவங்களுக்கென்ன?”

"அது போகட்டும். இனிமேல் எந்த இடத்திலே உட்கார லாம்?--மிர்ஜா.

"நம் வீட்டிலேயே போடலாமே. " "ஆஞல் வீட்டுக்காரிக்கு என்ன சமாதானம் சொல்லுவேன்? வீட்டிலேயே இருந்துவந்ததாலே அவ்வளவாகக் கோவிக்கிற தில்லை. இங்கே உட்கார்ந்து ஆட்டம்போடுகிறேனென்று தெரிந் தால் சும்மா விடமாட்டாங்க. '

"கத்திட்டுப் போகட்டுமே இரண்டு மூணு நாளானல் தானே சரியாயிடும். ஆணுல் ஒண்ணு, இன்னேயிலேயிருந்து நீர்கொஞ்சம் விறைப்பாகவே இருக்கணுங்காணும்"--மீர்ரோஷன்,

2

மீரோஷன் அலியின் டேகம் (மனைவி) ஏதோ காரணத்துக் காகக் கணவர் வீட்டைவிட்டு ஒதுங்கியிருப்பதே நல்லதென்று நினைத்திருந்தாள். இதனுலேயே அவருடைய சூதாட்டப்பித்தை குறைகூறியதே இல்லை. சில சமயம் நேரம் அதிகமாகிவிட்டால் ஆளை அனுப்பி நினைவுபடுத்துவாள். இதஞல் மீர்சாகப் நிக்னத் துக்கொண்டார், தம் பேகம் மிக அடக்கமானவள், பொறுமை சாலி என்று. ஆளுல் இந்தப் புது ஏற்பாடு பேகமிற்குச் சங்கட மளித்தது. பகல் முழுவதும் வீட்டு முன் கூடத்திலேயே முகா மிட்டிருப்பது, அவள் சுதந்திரத்திற்கு இடைஞ்சலாகியது. அடிக்கடி வாசல் பக்கம் எட்டி எட்டிப் பார்த்து ஏங்கித் தவித் தாள்.

வேலைக்காரர்களும் முகம் சுளித்தார்கள். இதுவரைக்கும் வேலை ஏதும் இல்லாமல் விசிராந்தியாக இருந்தார்கள், வீட்டிற்கு எவர் வருகிருர், போகிருர் என்கிற கவனிப்பே இல்லாமல் முடங்கிக்கிடந்தார்கள். இப்போது பகல் பூராவும் கைகட்டிச் சேவகம் செய்தாகவேண்டியிருக்கிறது. அடிக்கடி கூப்பாடு, அகிலச்சல், வெத்திலேடாக்கு, பட்சணம்-பலகாரம், ஹ"க்கா

________________

24 பிரேம்சந்த் சிறுகதைகள்

தயாரிப்பு, என்று-ஓயாத ஒழியாத தொந்தரவு. வேலைக் காரர்கள் பேகமிடம் முறையிட்டார்கள், "அம்மணி இந்த எளவெடுத்த ஆட்டம் எங்க உயிரைவாங்குதம்மா! காலெல்லாம் கொப்புளிச்சுப் போச்சுங்க. இதென்னங்க ஆட்டம்? காலையிலே குந்திஞங்கன்ஞ, மாலை மயங்கியும் எளிந்திருக்க மனசு வரமாட்

டேங்குதே. ஒரு மணி, இரண்டு மணி பொழுதுபோக்காய் ஆடு

வாங்க, பார்த்திருக்கோம், போவட்டும், எங்களுக்க்ென்னம்மா வந்தது? வேலை செய்ய வந்தவனுக, சொன்ன வேலையைச் செய்யருேம். ஆனல், இந்த ஆட்டம் மகா மோசமானது.

இதிலே சிக்கியவங்க முன்னுக்கே வரமுடியாது. வீடு குட்டிச்

சுவராயிடும். கஷ்டத்திற்கு மேலே கஷ்டம் வரும். இந்த வீட்டோடு நிற்காது, தெருவுக்கும் பரவும், பேட்டைக்குப் பரவும். பிறகு ஊரே இதுக்குப் பலியாகும். அக்கம் பக்கமெல் லாம் இதே பேச்சுதாங்க அம்மா! எசமான் வீட்டு உப்பைத் திங்கருேம்; எசமானுக்கு ஏற்படுகிற தலைக்குனிவை எங்களாலே பொறுத்துக்க முடியல்லீங்க. கேட்கவே சங்கடமாயிருக்குது. என்ன செய்வோம் நாங்க?"

இவ்வளவையும் கேட்டுவிட்டு பேகம் சொன்னுள், "எனக்கும் இது கட்டோடு பிடிக்கத்தான் இல்லை. சொன்னல் கேட்டாத் தானே?"

அப்பேட்டையில் சில பெரியவர்கள் இந்த ஓயாத சூதாட்டக் கச்சேரியை விமரிசித்து எச்சரித்தார்கள். "இனிக் கேடுகாலம் தான். நம்மையெல்லாம் பாதுகாக்க வேண்டிய சீமான்களே இந்த நிலைக்கு வந்துவிட்டபிறகு, அல்லாதான் நம்மையெல்லாம் காப்பாற்றவேண்டும். பாதுஷா ஆட்சியே இதஞலே அழிந்து போகும். தீய குறிகளெல்லாம் தென்படுகின்றன."

நாட்டில் அராஜகம் தலைவிரித்தாடியது. பகல் கொள்ளைகள் மலிந்தன. கேள்வி முறை இல்லை. கிராமப்புறத்துச் செல்வ மெல்லாம் தலைநகர் லக்னேவிற்கு வரவழைக்கப்பட்டன. அங்கு கிேளிக்கை, கொம்மாளம், உல்லாச போகங்களில் விரயமாயின. கிழக்கிந்தியக் கம்பெனியிடமிருந்து கடன் சுமையை அதிகரித்துக் கொண்டேபோஞர் பாதுஷா, நாட்டில் நல்லாட்சி இல்லாத தால் வரிவசூல் குறைந்தது. ஆங்கிலேய ரெஜிடெண்ட் அடிக்கடி தாக்துே, எச்சரிக்கை விடுத்துக்கொண்டிருந்தது. இங்குதான் அடிமுதல் முடிவரையிலும் உல்லாசக் கேளிக்கைகளில் கிறங்கிக் கிடந்தார்களே. வரப்போகும் ஆபத்தை எவரும் உணரவில்லை.

________________

சதுரங்க ஆட்டக்காரர் 24 5

ஜாகீர்தார் மீர் ரோஷன் அலி அவர்களின் மாளிகையின் வரவேற்புக் கூடத்தில் சதுரங்கப்போர் துவங்கிப் பல நாட்களாகி விட்டன. தினமும் புதுப்புதுத் திட்டத்துடன் படையெடுப்பு, மோதல், வெற்றி-தோல்வி, வீராவேசம். இறுதியில் இரு தளபதிகளும் பகைமை யொழித்து நண்பர்களாகி விடுவார்கள். சில நாட்கள் மனத்தாபம் எழும்; சதுரங்கத்தைக் கலைத்துவிட்டு கோபதாபத்துடன் மிர்ஜா தம் மாளிகைக்குப் புறப்பட்டு விடுவார்; டமீர்ரோஷன் தம் அந்தப்புரத்திற்குச் செல்வார். இரவு தூங்கியெழுந்ததும் கோபதாபமெல்லாம் மறைந்து நேச பாவத்துடன் சதுரங்கமாடக் கூடுவார்கள்.

ஒருநாள் மும்முரமாக ஆடிக்கொண்டிருந்தார்கள். ஒரு குதிரை வீரர் வந்துசேர்த்தார். பாதுஷாவின் தூதுவர். மீர் ரோஷனே அழைத்தார். மீர்ரோஷனுக்கு வெலவெலத்தது. ஏதோ புது விடத்து வந்திருக்கிறது, சிக்கலாகாது. வேலைக்காரர் களிடம், எசமான் வீட்டிலே இல்லைன்னு சொல்லிடுங்க!” GTGü7Gyrf.

குதிரைவீரர் வேலைக்காரர்களை மிரட்டிஞர் வி ட் டி லே இல்லாமல் எங்கே போஞர்?"

* தெரியாதுங்களே! அவங்களிடத்திலே தகவலைச் சொல்விடு ருேம். என்ன விஷயம்?"

"உங்களிடத்திலே சொல்லி என்ன லாபம்? பாதுஷா தாக்கீது அனுப்பியிருக்கிருங்க. படைக்கு ஆட்களை அனுப்பவேண்டி யிருக்கும். அவரும் வரவேண்டியிருக்கும். ஜாசீர்தார் என்ருல் கம்மாவா? எத்திலே பிழைக்க முடியாதுன்னு சொல்லிவிடு!”

* சரிங்க! வந்ததும் சொல்லிவிடுகிருேம். ' "சொன்னுப் போதாது. நான் நாளைக்கு வந்து கையோடு கூட்டிப்போகனும், தயாராய் இருக்கச் சொல்! பாதுஷா உத்தரவு."

குதிரை வீரர் போய்ச் சேர்ந்தார். தகவலறித்ததும் மீர்ரோஷ னுக்குக் கதிகலங்கியது. மிர்ஜாவிடம் யோசனை கேட்டார்: "என்னைய்யா, செய்யறது?’

"ரொம்ப ஆபத்துதான். என்னையும் தேடுவாங்க. ' "இழவெடுத்தவன் நாளைக்கு வருவதாகச் சொல்லிப்போயிருக் கிருன்ே.

"பேராபத்து சண்டைக்குப் போகணும். அநாதையாகச் சாகனும். மிர்ஜா இடிந்துபோஞர்."

________________

246 பிரேம்சந்த் சிறுகதைகள்

மீர்ரோஷன், "இதுக்கு ஒரே வழி வீட்டிலேயே இருக்கக் கூடாது. கோமதி நதிக்கரையைத் தாண்டி அப்பாலே போயிட ணும். கண்காணுத இடம். குதிரை சவாரி வந்து ஏமாந்து போகும்" என்ருர்,

"வாஹ், வாஹ்! நல்ல யோசனை. வேறே வழியே இல்லை. காதும் காதும் வைத்தமாதிரிக் கிளம்பிப் போயிடனும் மிர்ஜா பாராட்டிஞர்.

மறுநாள் குதிரை வீரரை எதிர்கொண்டழைத்துச் சென்ற பேகம், "நீங்க நல்ல தந்திரம் செய்தீங்க! நல்லாப் பயமுறுத்தி விரட்டிவிட்டீங்க!" என்று சிலாகித்தாள் அந்தப்புரத்தில் நுழைந்தவாறு.

குதிரைவீரர், "இந்த உதவாக்கரைகளை இப்படித்தான் விரட்டணும். சூதாட்டம் இவனுக புத்தியையே அரிச்சிடுத்தே! இனிமே இந்த வீட்டுப் பக்கம் பகலிலே வரமாட்டானுக" என்று கூறி நிம்மதியாக மகிழ்ந்தார்.

3

Dறுநாள் இரு நண்பர்களும் விடிகாலையிலேயே கிளம்பிவிட்டார் கள். சாப்பாடு, சதுரங்க சாதனங்கள், படுக்கை, சமேதராக, கோமதி நதியைக் கடந்து, காட்டுப்பகுதியில் பாழடைந்திருந்த ம குதிக் குள் புகுந்துகொண்டார்கள். நவாப் ஆஸ்ஃப் உத்தெளலா கட்டிய பழைய மசூதி, வழியில் புகையிலை, சிலம் (புகைத்தூள்), தீக்குச்சி எல்லாம் வாங்கிக்கொண்டார்கள். மசூதிக்குள் விரிப்பைப்போட்டு, ஹ"க்காவைப் பற்றவைத்துக் கொண்டு, சதுரங்கமாடத் தொடங்கிவிட்டார்கள். பிறகு உலக நிலவரமே நினைவிலிருந்து மறைந்தது. ஆட்டம் பற்றிய சில சொற்களைத் தவிர வேறு பேச்சு இல்லை. தவயோகிகட இவ்வளவு லயிப்புடன் யோக சாதனையில் ஈடுபட்டிருக்க முடியாது. பகல் போது ஏறியபின், பசி எடுத்ததும், இருவரும் பலகாரக் கடைக்குச் சென்று, சாப்பிட்டுவிட்டு, ஹ"க்கா-சிலம் குடித்து கொஞ்சம் மணக்களிப்பை ஏற்படுத்திக்கொண்டு, மறுபடியும் சதுரங்கப் போர்க்களத்தில் பிரவேசித்தார்கள். சில நாட்கள் சாப்பாட்டு நினைவுகூட ஏற்படுவதில்லை.

________________

சதுரங்க ஆட்டக்காரர் 247

நாட்டில் அரசியல் நிலவரம் மிக மோசமாகிக்கொண்டிருந்தது. கும்பனிப் படைகள் லக்ஞேவை நோக்கி முன்னேறின. நாடு நகரமெல்லாம் அல்லோலப்பட்டன. நகர மக்கள் கிராமத்தை நோக்கி விரைந்தார்கள். இந்நிலையிலும் நம் சதுரங்க சூரர்கள் களத்தைவிட்டு ஓடவில்லை. வெளிநடப்பைக் குறித்துக் கவலையே இல்லை. வீட்டிலிருந்து காலையில் சந்து பொந்துகள் வழியாக எல்லையைக் கடப்பார்கள். சாலைவழியாக வந்தால் ஆபத்து, பாதுஷாவின் அதிகாரி எவனுவது கண்டுவிட்டால்? அப்படியே இழுத்துக்கொண்டு போய்விடுவார்களே. ஆயிரக்கணக்கான ரூபாய்கள் வருடாந்தர வருமானமுள்ள ஜாகீர் வசதியை எத்துப் பிழைப்பாகவே அநுபவித்துவர விரும்பினர்கள்.

ஒருநாள் இரு நண்பர்களும், அதே மசூதிக்குள் வழக்கம்போல் ஆடிக்கொண்டிருந்தார்கள், மிர்ஜாவிற்குத் தோல்வி முகம். மீர்ரோஷன் வெட்டுமேல் வெட்டாக வெற்றி கண்டுகொண் டிருந்தார். இந்நேரத்தில் வெள்ளைக்காரக் கும்பனிப் படைகள் வருவது தெரிந்தது. லக்னேவைக் கைப்பற்ற வருகிறது. மீர் சொன்னர், "இங்கிலீஷ்காரன் படை வருகிறது. அல்லாவே ரட்சி!"

மிர்ஜா, "வரட்டும். நீர் ஆட்டத்தைக் கவனியும். இதோ செக் உம்ம பாதுஷாவுக்கு ஆபத்து.'

அட நீர் ஒண்ணு? வெள்ளைக்காரப் படைகளைக் கொஞ்சம் பார்க்கலாமே. மறைவிலே நின்னு பார்க்கலாம். மீர் ஒதுங்கப் பார்த்தார்.

"பார்த்துக்கலாம், என்ன அவசரம். இதோ இன்னுெரு செக்!"

"பீரங்கியெல்லாம் இருக்கும். ஐயாயிரம் சோல்ஜர்கள் இருப்பார்கள். என்ன வாட்ட சாட்டங்கறேன்! வெள்ளைச் சிவப்பு நிறம். செங்குரங்குகள் அணிவகுத்து வருகிற மாதிரி இருக்குதையா! பார்த்தாலேயே பயமெடுக்குதய்யா!"

மிர்ஜா சினந்தார், "ஜனுப்! சால்சாப்பு வேண்டாம். இதெல் லாம் வேறே எங்கியாவது வைத்துக்கொள்ளும். இதோ செக்" "நீர் நல்ல மனுசனையா ஊருக்கே ஆபத்து வந்திருக்கு. உமக்கு செக்கும் வெட்டும் பெரிசாப்போச்சா ஊரை முற்றுகை பிட்டாங்கன்ஞ வீட்டுக்கு எப்படிப் போய்ச்சேருவோம்? இதை யோசித்தீரா? மீர் குறைகூறிஞர்.

________________

248 பிரேம்சந்த் சிறுகதைகள்

"வீட்டுக்குப்போகிற நேரம் வருகிறபோது பார்த்துக்கொள்ள லாம். ஆட்டத்தைப் பாரும்! இதோ ஒரு வெட்டு அடுத்த ஆட்டம் ஐயா ஜயிக்கிருரு'-மிர்ஜா.

கும்பனிப்படை கடந்துசென்றது. காலை பத்துமணி இருக்கும். இருவரும் மறுபடியும் ஆட அமர்ந்தார்கள். புது ஆட்டம்.

மிர்ஜா கேட்டார், "இன்னக்குச் சாப்பாட்டுக்கு என்ன செய்வது?"

"இன்னக்கு உபவாசங்காணும். உமக்குப்பசி எடுத்திடிச்சோ ?” -மீர்,

"இல்லைய்யா! ஊர்க்கதி என்ன ஆ கி யிருக்கு மே 1ா, தெரியல்லையே."

மீர் அலட்சியமாக, "ஊரிலே ஒண்ணும் ஆகியிருக்காது. ஜனங்க சாப்பிட்டுவிட்டுச் சுகமாகப் படுத்துக்கிட்டிருப்பாங்க. நம்ப நவாப் ஸாஹாப்கூட மஜாவாகத்தான் இருப்பாரு" என்ருர், இந்த முறை ஆட்டம் விறுவிறுப்படைந்தபோது பிற்பகல் மூன்று மணி. மிர்ஜா பக்கம் தோல்வி முகம். நாலு மணி யடித்தது. கும்பனிப் பட்டாளம் திரும்பிவரும் சந்தடி கேட்டது. நவாப் வாஜித் அலி சிறை பிடிக்கப்பட்டார். கும்பனிப் படை அவரை எங்கோ கொண்டுபோகிறது. திரும்புவது சந்தேகம். ஊரிலே எந்த உபத்திரவமுமில்லை. எதிர்ப்பில்லை; ரத்தக் களரியுமில்லை. இதுகாறும், ஒரு சுதந்தர மன்னரின் தோல்வி இவ்வளவு அமைதியாக, எதிர்ப்பே இல்லாமல் ஏற்பட்டிருக்க முடியாது. இது தேவர்கள் போற்றும் கொல்லாமைப் பண்பு காரணமாக இல்லை. கோழைகளும் பயங்கொள்ளிகளும்கூடக் கண்ணிர் வடிக்கத்தக்க படுமோசமான கோழைத்தனம், பரந்த, பெருமைமிக்க அவத் ராஜ்யத்தின் நவாபு பூஞ்சைக் குற்றவாளி போல் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்படுகிறார். அவருடைய தலைநகரம் லக்னே உல்லாசக் கேளிக்கையில் மூழ்கிக் கிடக்கிறது! இது அரசியல் தரக்கேடான, படுமோசமான சமூக வீட்சியின் இறுதி எல்லை.

மிர்ஜா சொன்னுர்: "நம் நவாபு அவர்களைக் கும்பெனிக் கொடியவர்கள் சிறைப்பிடித்து இழுத்துப்போகிருர்களப்யா!"

"போகட்டும். இதோ பாரும், ஒரு வெட்டு!--மீர் ரோஷன். "கொஞ்சம் பொறுமைப்யா! இப்போது மனசு சரியில்லையா! இந்தச் சமயத்திலே நம் நவாபு ரத்தக் கண்ணிர்விட்டு அழுது கொண்டிருப்பார்"--மிர்ஜா.

________________

சதுரங்க ஆட்டக்காரர் 2A9

"அழுதுதானே ஆகணும், இங்கே இருந்த சுகபோகமெல்லாம் அங்கே கிடைக்குமா? இதோ பாரும், செக்!"

"எவருக்கும் வாழ்வு ஒரே மாதிரி இருக்காதய்யா! எவ்வளவு

பரிதாபமான நிலைமை! த்சொ! த்சொ! . . . மிர்ஜா நொந்து விசனித்தார்.

"அது சரி. என்ன செய்யறது? . . . இதோ செக்! இனிமே

நீர் தப்பமுடியாதுங்காணும்!"-மீர்ரோஷன்.

"ஆண்டவன் ஆணை, நீர் மகா கல்நெஞ்சுக்காரரைய்யா! இவ்வளவு பயங்கரமான கொடுமையைப் பார்த்தபிறகும் உமக்கு வருத்தம் ஏற்படவில்லையே! ஐயோ, பாவம் நம் நவாபு வாஜித் அலிஷாஹ்!!--மீர்ஜா.

"ஒய்! முதலிலே உம் பாதுஷாவைக் காப்பாற்றும் . பிறகு நவாபுக்குக் கண்ணிர் உகுக்கலாம். இதோ பாரும், இதோ வெட்டு ஆட்டம் முடிந்தது. கைகொடும்! மீர்ரோஷன் எக்காள மிட்டார்.

அவத் பாதுஷாவை (நவாப் வாஜித் அலிஷாஹ்) சிறைப் படுத்திக்கொண்டு, ஆங்கிலேயர் படை அந்தப் பக்கமாகத்தான் திரும்பிச் சென்றது. படையணிகள் அப்பால் கடந்ததும், மிர்ஜா மறுபடியும் ஆட்டம் தொடங்கினர். தோல்வியின் வலி இலேசானதல்ல. மீர்ரோஷன் அழைத்தார், "வாருமைய்யா! நம் நவாப் அவர்களுக்காகத் துக்கம் தெரிவித்து ஒரு 'மர்ஸியா' ஒதுவோம்.'

மிர்ஜாவுக்கிருந்த ராஜபக்தி இந்தத் தோல்வித் துயரத்தில் கரைந்துவிட்டது. இப்போது அவர் தோல்விக்குப் பழிவாங்கத் துடித்துக்கொண்டிருந்தார்.

4

Dலை மயங்கியது. பாழ்மண்டபத்தில் வெளவால்கள் அலறத் தொடங்கின. பறவைகள் வந்து தம் கூடுகளில் ஒடுங்கின. அப்போதும், இரு வீரர்களும் களத்தில் பொருதிக்கொண்டிருந் தார்கள்-இரு வெஞ்சின வீரர்கள் உயிர்ப் பணயத்துடன் உக்கிரமாகப் போரிடுவதைப்போல. மிர் ஜா தொடர்ந்து மூன்று ஆட்டங்களில் தோற்றுவிட்டார். இந்த நாலாவது ஆட்டமும் வெற்றிமுகமில்லை. ஒவ்வொரு முறையும் முஸ்தீபுடன்

________________

250 பிரேம்சந்த் சிறுகதைகள்

வெல்லவேண்டுமென்று முனைகிருர், இருந்து ம் நடுநடுவே தடுமாறித் தவறிவிடுகிருர், ஒவ்வொரு முறையும் தோல்வி மனப்பான்மை பழிதீர்க்கும் வெறி ையக் கிளர்த்தியது. மீர்ரோஷன் வெற்றி மிதப்பில் "கஜல்" பாடத்தொடங்கினர்; சிட்டிகை கொட்டித் தாளம் போட்டார். எரிச்சலூட்டும் களிப்புப் பிரதிபலிப்பு. ஏதோ புதையல் கிடைத்தமாதிரி பேருவகை. மீர்ஜாவுக்கு உள்ளூர எரிச்சல் குமைந்தது. வெளிக்கு அவரைப் பாராட்டிஞர். போகப்போக தோல்விக்கான வாய்ப்பு தான் அதிகரித்தது. கைதடுமாறியது, நகர்த்தின காயைத் தவிர்த்து வேறு காயை நகர்த்தலாஞர்.

மீர் கடிந்தார், "நகர்த்துவதை யோசித்து ஒரே தடவையாக நகர்த்துமைய்யா! மறுபடியும் கைவைக்கலாகாது. சரியாகத் தோணுதவரையில் காய்மேலே கை வைக்கவேண்டாம். ஒரு காயை நகர்த்த அரைமணியாகிறது. அப்படியும் இந்தத் தடுமாற்றமா? இனிமேலே ஐந்து நிமிடத்திற்குமேலே ஆளுல் அந்த ஆட்டம் போச்சு. இப்போது ஆட்டத்தை மாத்துறிர். பேசாமல் காயை முந்தின இடத்திலேயே வையும்."

இந்நிலையில் மீர்ரோஷனின் மந்திரி வெட்டுக்கு இருந்தது. மீர் அதைத் தவிர்க்கக் காய் நகர்த்தலாஞர். மிர்ஜா ஆட்சே பித்தபோது, "நான் இன்னும் காயே நகர்த்தவில்லையே? என்ருர் மீர்.

"நீர் நகர்த்தியாகிவிட்டது. காயை இந்த இடத்திலேயே வையும். நான் வெட்டப்போகிறேன். மீர்ஜா எதிர்த்தார்.

"இப்போது எதுக்காக வைப்பேன். நான் காயை இன்னும் வைக்கவே இல்லையே."

"நீர், சாகிறவரைக்கும் காயை வைக்கமாட்டீர்; அதுக்காக ஆட்டம் நின்னுடுமா? மந்திரி வெட்டுப்படுகிறதைப் பார்த்ததும் பேத்துமாத்தா செய்கிறீர்?"-மீர்ஜா.

மீர் சினந்தார், பேத்துமாத்து நீர் செய்கிறீர். வெற்றி தோல்வி தலையெழுத்துப்படி நடக் கி றது. பேத்துமாத்து செய்யறதஞலே பிரயோஜனமில்லை."

"இந்த ஆட்டத்திலே உமக்குத்தான் தோல்வி." "எப்படியாம்?" "காயை முதலிலே இருந்த இடத்திலேயே வையும் மீர்ஜா கத்தினுர்,

"ஏன் வைப்பேன்? வைக்கமாட்டேன்."

________________

சதுரங்க ஆட்டக்காரர் 25

"வைக்கமாட்டீரா? ஏனும்? வைத்தா கணும். ' வ1 க்குவதப் முற்றியது. இருவரும் தத்தம் நிலையில் பிடிவாத ம. க இருந்தார்கள். மீர்ஜா ஆத்திரத்துடன், ! உங்க பரம்பரை யிலேயே எவராவது சதுரங்கம் ஆடியிருந்தால்தானே சட்ட திட்டம் தெரியப்போகிறது. புல் செதுக்கிக்கொண்டிருந்தவங்க தானே. இவரு வந்துவிட்டாரு ஆட! ஜாகீர் கிடைச்சுட்டத ணுலேயே எவனும் பெரிய மனிசனுயிட முடியாது’ என்ருர் .

மீர் வெகுண்டார் , " உங்க அப்பா புல்செதுக்கியிருப்பார் . இங்கே பரம்பரை பரம்பரையாய் சதுரங்கமTடித் தேர்ந்தவங்க ளாக்கும் , '

"சரித்தான் டோங்காணும். காஜி உத்தீன் ஹைதரிடத்திலே சமையல் காரணுயிருந்து வந்தவங்க, இப்பேAது பெரிய மனுசனு யிட்டாங்க, பெரிய மனுசாயிருக்கிறது விளையாட்டா என்ன?"

அது உங்கள் அப்பன்-பாட்டன் சமா சாரம். அவங்களை ஏன் இழுக்கனும்? இங்கே நாங்கள் பாதுஷாவோடு உட்கார்ந்து ச11ப்பிட்டுவந்தவங்கதான்."

மிர்ஜா ஏசுவசனத்தில் திட்டிஞர், மீர் ஆத்திரத்துடன் எச்சரித்தார் . நாவை அடக்கிப் பேசும், இல்லை, ஏடாகூடமாயிடும். இந்த மாதிரிப் பேச்செல்லடம் கேட்டுப் பழக்கமில்லை. முறைச்சுப் பார்த்தால் கண்களைத் தே எண்டியெடுத்திடறவன் நான் தெரிஞ்சுக்கும்!" அப் டியா! வ: , ஒரு கைபார்த்து விடலாம்." இதுக்கெல்லாம் அஞ்சுகிற ஆளில்லை நான். ' இருவரும் வாஃா உருவிக்கொ ண்டு 11ாய்ந்தார்கள். இருவரும் உல்ல!! சப்பிரியர்கள்; ஆல்ை கோழைகளில்லை. நவாபுகள் ஆண்ட காலம் எப்போதும் இடுப்பில் கச்சை, வாள், கட்டாரி, உரை எல்லாம் இருக்கும். மக்களிடையே, பெரிய அதிகாரி களிடையே அரசியல் தரக்கேடு வேர் விட்டிருந்தது. ராஜ விசுவாசம் அற்றுவிட்டது. பாதுஷாவுக்காக நாம் ஏன் உயிர் துறக்கவேண்டுமென்கிற அலட்சியப் போக்கு பரவியிருந்தது. ப, துஷா பதவிக்கும் இதே நிலைதான். எனினும் தனிப்பட்ட வீர உணர்வு மங்கிவிடவில்லை.

இருவரும் வீராவேசத்துன் போரிட்டார்கள். இருவரும் வ ஸ்வீச்சுக்களுக்கு இலக்காகி, படுகாயமடைந்து தரையில் சாய்ந்தார்கள். துடிதுடித்து மடிந்தார்கள். தம் பாதுஷா சிறைபிடிக்கப்பட்டு இட்டுச் செல்லப்படும்போது வருந்தாத

________________

252 பிரேம்சந்த் சிறுகதைகள்

வர்கள், சதுரங்கக் காய்களில் ஒன்ருன மந்திரிக் காய்க்காகத் தம் உயிரையே துறந்தார்கள்!

இருட்டு கவிந்தது. தரையில் சதுரங்கக் கட்டத் துணியும், காய்களும் சிதறிக்கிடந்தன. சதுரங்க பாதுஷாக்கள் (காப்கள்) தம் தம் சிங்காசனத்தில் அமர்ந்து உயிர் துறந்த இரு வீரர்களுக் காகக் கண்ணிர் வடித்தார்கள்.

சுற்றுப்புறம் அமைதியில் மூழ்கியது. இடிபாடான நிலைவாயில் வளைவுகளும், குட்டிச்சுவர்களும், புழுதி படிந்து பழுதுபட்ட மீஞர்களும் இரு ஜாகீர்தார்களின் சவங்களைக் கண்டு வேதனைப் பட்டுக்கொண்டிருந்தன.

Tuesday, September 05, 2017

கரையாத நிழல்கள் - கே.வி. ராஜேந்திரன்,

நன்றி : கனவு  24


www.padippkam.com
WWW.tamilarangam.net

கரையாத நிழல்கள் - கே.வி. ராஜேந்திரன்,

நகரும் நிழலை  
மிதிக்க முடியாமல் பாதம் தள்ளாடுகிறது
மனசோ நிஜத்தை
நையாண்டி செய்து தாறுமாறாய் சிரிக்கிறது,.
நிஜமாகவே
நேசத்துடனான புரிதலை புரிந்து கொள் நிழலே என
பாதம் மேலும் போராடுகிறது.
இப்படியே
இருள் வந்து சேர்ந்தது.
களைத்துப்போன கால்கள்
சம்மணமிட்டு உட்கார்ந்தது.
நிழல் சொன்னது
நான் உன்னிலிருந்து தொடங்கி
உன்னிலேயே முடிகிறேன்
என்னை வேறொன்றாய் நினைத்து
தொட முயன்றால் விடுவேனா?
நேசம் என்பது எப்போதும்
கரையாத நிழல்கள்.

Monday, September 04, 2017

சா.கந்தசாமியின் 'இரணிய வதம்'

https://ia902601.us.archive.org/24/items/IraniyaVadham/Iraniya-Vadham.pdf

சா.கந்தசாமியின் 'இரணிய வதம்'

சின்ன கருப்பு ராஜவாய்க்கால் மதகின் மேலே உட்கார்ந்து கால்களை ஆட்டிக்கொண்டிருந்தார். கால்களுக்குக் கீழே பழைய செருப்பு. காது அறுந்த பழைய செருப்பைச் சற்றே முன்னே சாய்ந்து வலக்காலால் நகர்த்திப் போட்டுவிட்டு - பெல்ட்டில் இருந்து பொடி டப்பாவை எடுத்து இரண்டு மூக்கிலும் பொடியை ஏற்றிக் கொண்டு கையை உதறியபடி தலை நிமிர்ந்தார். ஒரு சாரைப்பாம்பு தண்ணர் பக்கம் ஊர்ந்து சென்றது. சின்னகருப்பு மதகின் மேலே இருந்து இறங்கி இடுப்பு பெல்ட்டைத் தூக்கிவிட்டுக் கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தார்.

ராஜாராமன் தென்னந்தோப்பில் வருவது அரையுங் குறையுமாகத் தெரிந்தது. கொக்கு கூட்டமாகத் தலைக்கு மேலாகப் பறந்து சென்றது. அவர் அவசர அவசரமாக மதகின் மேலே தாவியேறி உட்கார்ந்தார். ராஜாராமன் முன்னே வந்து மடித்துக் கட்டியிருந்த வேட்டியை அவிழ்த்து விட்டான்.

அவர் திரும்பி இப்போதுதான் அவனைப் பார்ப்பது போல ஒரு பார்வை பார்த்துத் தலையசைத்தார். பறந்த வேட்டிய இழுத்துப் பிடித்து, "இப்படி குந்து ராஜா” என்று மதகு சுவரில் உட்கார அவனுக்கு இடம் காட்டினார்.

70 % “இருக்கட்டுங்க” பின்னால் நகர்ந்த அவன், “நேத்தி சாயந்தரம் வீட்டுக்குத் தேடிக்கிட்டு வந்திருந்தீங்களாம். பாப்பா சொல்லுச்சி” என்றான்.

“ஒண்ணும் விசேஷம் இல்ல, ஆக்கூர் பக்கிரிகிட்ட நரசிம்ம வேஷம் கட்டிக்கிட்டு ஆடுற புலி நெகம் இருக்கு. அதெ வாங்கிக்கிட்டு வந்தா - ஜெர்மனியில இருந்து வர்றவங்களுக்கு ஆடிக்காட்ட நல்லா இருக்கு மேன்னு தோணுச்சி, அதச் சொல்லத்தான் வந்தேன். நீ வீட்டுல இல்ல”

'நீடூரில ஒரு சாவு”

“எங்க தாத்தா காலத்து நெகம். நீ அதெப் போட்டுக்கிட்டு ஆடினா ஜோரா இருக்கும்.”

“இப்பப் போய் வாங்கிட்டு வந்துடறேன்.”

“பொழுது சாஞ்சிடுச்சி. இருக்கறத வச்சிக்கிட்டு நாளைக்கு கூத்த நடத்திடுவோம். ஜெர்மனிக்காரவங்க வர்றதுக்கு இன்னும் நாளு இருக்கு” அவர் மதகின் மேலே இருந்து கீழே குதித்தார்,

“அதெப் போட்டுப் பழகிக் கொள்ளலாம் இல்ல”

"ஆமாம். ஆமாம், ஆனா, அதுக்கு அம்மாந்து ரம் போவணுமே”

“ஒண்ணு பூட்டிக்கிட்டா - கூத்துக்கு அது நல்லா இருக்குமென்னா அதுக்காக எம்மாந்துTரம் வேணுமென்னாலும் போகலாம்.

"அசல் கூத்துக்காரன் மாதிரியே பேசற.”

அவன் அடக்கத்தோடு தலையசைத்தான்.

“பக்கிரி வீட்டில் இல்லாவிட்டா அவன் பொண்டாட்டிக் கிட்ட என் பேரச்சொல்லு”

“சரி”

“அந்தப் புலி நெகத்தை நீ போட்டுக்கிட்டு ஆடினா ரொம்ப நல்லா இருக்கும். எனக்கு கூட அதெப் போட்டுக்கிட்டு ஆடணுமென்னு ரொம்ப ஆசை. ஆனா, அதுக்கு வேஷம் மாத்தணும்.

சா. கந்தசாமி * 71“இரணியந்தான் உங்க வேஷம்.”

சின்ன கருப்பு பெரிதாக ஒரு சிரிப்பு சிரித்தார். அந்தச் சிரிப்பு, செடி கொடிகளைத் தாண்டிப் புல்லில் படர்ந்து தண்ணிருக்குத் தாவி, மேலே எழுந்து நாலாப் பக்கமும் எதிரொலித்தது. பூவரசு மரத்தில் உட்கார்ந்து இருந்த நீலநிற மீன் கொத்திக் குருவி சரேலென்று தாவிப் பறந்தோடியது.

“வா”சின்ன கருப்பு அவன் தோளில் கை வைத்தார். அவர் கூடவே ஒவ்வோர் அடியாக எடுத்து வைத்துச் சென்றான்.

"நம்ம பக்கிரி நல்லாதான் ஆடிக்கிட்டு இருந்தான். ரெண்டு மூணு வருசத்துல பெரிய ஆளா வந்துடுவான்னு இருந்தேன்.ஆனா, பொண்டாட்டி வந்ததும் அவகிட்ட ஆடுறதே போதுமுன்னு நின்னுட்டான்”சின்ன கருப்பு நடந்து கொண்டே எட்டி வரப்பில் வளர்ந்திருந்ததுவரை செடியில் இருந்து ஒரு கிளையை முறித்தார். துவரைக் காய்களை உருவிப் போட்டுக் கொண்டு ஒரு நடை நடந்தார். நளினமும், அகங்காரமும் கொண்ட நடை - பூமியில் நடப்பது மாதிரியே இல்லை,

அந்த நடைதான் அவருக்கு அழகு. அப்புறம் அவரின் கம்பீரம். அது அவர் நடையிலும், குரலிலும், கை அசைவிலும், கண் வீச்சிலும் பளிச்சென்று ஜொலித்தது. ஒவ்வொரு கூத்திலும் இன்னும் இன்னுமொன்று பிரகாசித்துக் கொண்டு வந்தார்.

அவன் அம்மா, சின்ன கருப்பு கூத்து ஒன்றைப் பார்த்து விட்டு, “ராட்சஷன் வேஷம் அச்சா பொருந்திப் போவுது. இன்னக்கி நேத்தியா வேஷம், மூணு தலைமுறையா இல்ல.” என்றாள். அவள் சொன்னதை அவரின் ஒவ்வோர் அசைவும் மெய்ப்பித்துக் கொண்டு இருந்தது.

சின்ன கருப்புக்கு முன்னால் அவர் அப்பா இரணிய கசிபு வேஷம் கட்டிக்கொண்டு ஆடினார். அதற்கு முன்னால் அவர் அப்பா - இவன் தாத்தா - அவர்தான் முதன்முதலாக மூஞ்சியில் சாயம் பூசிக்கொண்டு இரணிய கசிபுவாக ஆடினார். அவர் ஆடும்போது இரணியனே பூமிக்கு வந்து அதம் பண்ணுவது போல இருக்கும். ஆனால், அவர் கூத்தாடி வம்சம் இல்லை, அவருக்குப் பத்துப் பன்னிரென்டு வயது இருக்கும்போது-தன் அப்பாவை ஒரு

72 * கொலை வழக்கில் போலீஸ் பிடித்துக் கொண்டு போய் தூக்கில் போட்டது. அப்பா போனதும் அம்மாவை விட்டுவிட்டு உசிலம்பட்டியில் இருந்து மதுரைக்கு ஓடிவந்தார்.

தமுக்கம் மைதானத்தில் ஒரு கூத்து. முதல் வரிசையில் குந்தி இரவு முழுவதும் கூத்து பார்த்தார். பொழுது விடிந்ததும் கூத்தாடிகளுக்கு எடுபிடி வேலை செய்தார். அப்படியே அவர்களோடு ஒட்டிக்கொண்டு ஊர் ஊராகச் சுற்றினார். சின்னச் சின்ன வேஷமெல்லாம் போட்டு ஆடினார். ஆறேழு வருஷத்திற்கு அப்புறம் ஒரு பெரிய வேஷம் - இரணியன் வேஷம் - கிடைத்தது. கிடைத்ததை சட்டென்று அவர் பற்றிக் கொண்டார். கற்றதையும் கேட்டதையும் பார்த்ததையும் மனதில் இறுத்தி, பாட்டாலும் மெருகூட்டினார். அதனால் கூத்துக்கு கூட்டம் கூடியது. ஊர் முழுவதும் அவர் பேச்சாகியது.

"சின்ன கருப்பு இரணியன் ஸ்பெஷல்' என்று மதுரைக்கு ரயில் வந்தது.

தாத்தாவிடம் காணப்பட்ட நளினமும் பாவமும் இளைய சின்ன கருப்புவிடம் அபரிமிதமாகக் குடிகொண்டு உள்ளதாக கிருஷ்ண ஐயர், டைம்ஸ் ஆஃப் இந்தியா’ பத்திரிகை வாராந்தரப் பதிப்புக்குப் படங்களோடு ஒரு கட்டுரை எழுதினார். ஆத்திரத்திலும் அதட்டலிலும் அகங்காரம் கொண்ட மனித ஆத்மாவை இளைய சின்ன கருப்பு துல்லியமாகச் சித்திரிப்பதாக எழுதியது - நாடு முழுவதுக்கும் அவரைத் தெரிந்தவர் ஆக்கியது.

அதனால் பலரும் சின்ன கருப்புவைத் தேடிக் கொண்டு வந்தார்கள். தன்னைக் காண வந்தவர்களுக்கெல்லாம் அவர் ஆடிக் காட்டினார். ஆட்டத்தில் அவருக்கு வஞ்சனையே இல்லை. ஆடு என்றால் உடனேயே ஆடுவார். அதுவும் பெண்களாக இருந்துவிட்டால் கேட்கவே வேண்டாம். அவர்கள் கண்ணசைவும், தலையசைப்பும், குறுஞ்சிரிப்புங்கூட ஆட வைத்துவிடும்.

வரப்பு சாலையில் ஏறியது. சின்னகருப்புதுவரைச் செடியை வயலில் வீசியெறிந்து விட்டுத் திரும்பினார், ராஜாராமன் கருநொச்சிக் கிளையைத் தள்ளிக் கொண்டு முன்னே சென்றான்.

"கூட நானும் வரட்டுமா ராஜா ?”

சா. கந்தசாமி * 73“எதுக்கு? நானே போயிட்டு வந்துடுறேன்.” “இப்பவே இருட்டிடுச்சி. போயிட்டு சீக்கிரமா வந்திடு” “சரி”ராஜாராமன் இலுப்பைத் தோப்பிற்குள் நுழைந்தான்.”

ஒரு பஸ், புழுதியைக் கிளப்பிக்கொண்டு சென்றது. சின்னகருப்பு அவன் போவதையே பார்த்துக் கொண்டு நின்றார்.

இலுப்பை மரங்களுக்குள் அவன் மறைய ஆரம்பித்தான். சின்னகருப்பு தலையை அசைத்தபடி ஒரு சிரிப்புச் சிரித்தார்.

ஆக்கூர் சாலை மேட்டிலிருந்து கீழே இறங்கியது.மண் சாலை. மண்ணில் கால் புதைந்தது. கையை வீசிக் கூத்துப் பாட்டுப் பாடிக்கொண்டு ராஜாராமன் நடந்தான். நடக்கையில் கூத்துக் கற்றுக்கொள்ள ஆரம்பித்து ஆறேழு வருஷம் இருக்குமா என்று கேட்டுக் கொண்டான். இருக்கும் போலத்தான் பட்டது.

பர்கூரில் சின்ன கருப்பு இரணியன் வேஷம் புனைந் தாடியதை அத்தை வீட்டிற்குச் சென்றிருந்த அவன் முதன் முதலாகப் பார்த்தான். கூத்து ஆசை மனதில் பற்றிக்கொண்டது.

அப்புறம் ஒரு வருஷம் கழித்து ஒரு கூத்து. அரசூரில் பார்த்தான். அதுவும் சின்னகருப்பு கூத்துத்தான். விடிய விடிய நடந்தது. அவன் கண் மூடாமல் பார்த்தான். கூத்து கற்றுக் கொள்ள வேண்டுமென்று துளிர்த்த ஆசை விருட்சமாகியது. எப்படியாவது சின்னகருப்புவை மடக்கிப் பிடிக்க வேண்டுமென்று ஐந்தாறு நாள்கள் யோசித்தப்படியே இருந்தான்.

ஒரு மாலைப்பொழுது, ராஜ வாய்க்கால் மதகுமேல் சின்னகருப்பு குத்துக்கால் வைத்துக் குந்தியிருந்தார். அவன் வாய்க்காலில் முகம் அலம்பிக்கொண்டு எதிரே போய் நின்றான்.

“ஆரு? என்ன வேணும்?” “உங்ககிட்ட கூத்து கத்தக்கணும்.”

அவர் பார்வையில் இவன் மேல் ஆச்சரியமாக இறங்கியது. "நீ உக்கடை தேவர் வீட்டுப் பையன் இல்ல ?יי

ராஜாராமன் தலையசைத்தான்.

74 * - - 92 “கூத்தெல்லாம் உனக்கு சரிப்பட்டுவருமா?

ad 99

வரும

99 வருமா? எப்படிச் சொல்லுற?

66 99. ஆசையாயிருக்கு.

சின்னகருப்பு மதகு மேலிருந்து கீழே குதித்தார். அவன் தோள்மீது கைவைத்து இரண்டு முறை தட்டிக் கொடுத்தார்.

“அது சரி, நாளைக்கு மாந்தோப்புக்கு வா. கூத்து ஆரம்பிச்சிடலாம்.”

அடுத்தநாள் அவன் மாந்தோப்பிற்குச் சென்றான். பூத்திருந்த மாமரத்தின் கீழே ஐந்தாறு பையன்கள் கூத்தாடிக் கொண்டிருந் தார்கள். அவன் ஒரு பக்கமாக ஒதுங்கி நின்றான்.

சின்ன கருப்பு பொடியை உறிஞ்சிக் கொண்டு வந்தார். பையன்களில் கூத்து நின்றது. அவனைக் கையை நீட்டி முன்னே கூப்பிட்டார். பக்கத்தில் உட்கார வைத்துக் கதையைச் சொன்னார். சொல்லிக்கொண்டே வந்தவர் திடீரென்று எழுந்து ஆடினார் - இரணியனாகவும், பிரகலாதனாகவும் - நரசிம்மராகவும். அவன் மண்டியிட்டு உட்கார்ந்து அவரின் ஒவ்வொர் அசைவையும் மனதில் இருத்திக் கொண்டான். ஆடி முடிந்ததும் அவன் அருகில் வந்துநின்று “பார்த்துக்கிட்டியா?” என்று கேட்டார், அவன் தலையசைத்தான்.

“எங்க நீ ஆடு. நான்தான் இரணியன். நீதான் நரசிம்மம் என்னப் பிடிச்சி மடியிலே போட்டு நெஞ்சைக் கிழிச்சிக் கொல்லுற. உம். ஆடு”

ராஜாராமன் வேட்டியை மடித்துக் கட்டிகொண்டு காலை எடுத்து வைத்து ஆடினான். கொஞ்ச நேரத்தின்பிறகு கண்டது எல்லாம் மறந்து போய்விட்டது. கால் முன்னே போகவில்லை. ஏதோ கட்டிப் போட்டது மாதிரி சிக்கிக் கொண்டது. திகைத்து நிற்பதைக் கண்டு ஒரு பையன் களுக்கென்று சிரித்தான்.

சின்னகருப்பு சிரிப்பு வந்ததிக்கைத் திரும்பிப் பார்த்தார்.ஒரு பையன் சிரித்துக்கொண்டே இருந்தான்.கையை நீட்டி அவனைக் கூப்பிட்டார். சந்தோஷமாக அவர் முன்னே வந்தான். கன்னத்தில்

சா. கந்தசாமி & 75பளிரென்று ஒர் அறை விழுந்தது. அவன் ஐயோ’ என்று கத்தினான். அது தனக்கே வலிப்பது மாதிரி இருந்தது.

ராஜாராமன் திரும்பி சின்ன கருப்பை ஒரு பார்வை பார்த்தான்.

“நீ பயப்படாம ஆடு” என்றார் வாஞ்சையுடன்,

அவன் பயந்துகொண்டே ஆடினான். கண்டதையும் கேட்டதையும் கால்களில் வழியாகவும், கண்களின் மூலமாகவும் காட்சிப்படுத்தினான்.

“பலே. பலே. நீ தேறிட்ட” சின்னகருப்பு எழுந்து வந்து அவன் தோளில் தட்டிக் கொடுத்தார்,

மூன்று மாதங்கள் சென்றதும் சின்ன கருப்பு பழைய நரசிம்மத்தைக் கழித்துக் கட்டிவிட்டு அந்த இடத்தில் ராஜாராமனைப் போட்டார். தைரியமான சோதனைதான். ஆனால் அவன் அதில் பிரமாதமாக ஜொலித்தான்.

புதிய நரசிம்மத்தின் வரவால் இரணிய கசிபு நாடகம் புது மெருகும் புத்துயிரும் பெற்றது! என மைதிலி ஐயங்கார் டைம்ஸ் ஆஃப் இந்தியா'ஞாயிறு இதழில் குறிப்பிட்டு எழுதினார். கூடவே கலர் கலரான படங்கள். ஏழு படங்களில் இரண்டு படத்தை வெட்டி எடுத்து ராஜாராமன் மனைவி சுவரில் ஒட்டி இருந்தாள். கல்யாணமான புதிது. அவன் மாப்பிள்ளையாக இல்லாமல் - வெள்ளை தாடியும் மீசையுமாக - சிங்க மூஞ்சியோடு கோரமாக இளித்துக் கொண்டு இருந்தான்.

“பயமா இல்லை?” படுக்கைக்கு எதிரே இருந்த படத்தைப் பார்த்துக்கொண்டே கேட்டான்.

அவள் தலையசைத்து சிரித்தாள். "நிஜமா ?יי

அவள் படுக்கையில் இருந்து எழுந்து அவனைக் கட்டியணைத்துக் கொண்டாள். அவனுக்கு மூச்சுத் திணறுவது மாதிரி இருந்தது. அவள் பிடி இன்னும் இன்னமென்று இறுகியது. தன் முழுபலத்தையும் கொண்டு அவளைக் கீழே உருட்டித் தள்ளினான். அவள் எழுந்து நின்று ஒரு சிரிப்பு சிரித்தாள்.

76 * “இன்னம கூத்துக்குப் போக வேணாம்."

o' ஏன!

לל . “போக வேணாம்.

“சரி

ஆனால் அவன் சின்னகருப்போடு ஊர் ஊராகச் சென்றான் ஒவ்வோர் ஊரிலும் மெச்சும்படியாக ஆடினான். சன்மானம், பூமாலை சால்வையெல்லாம் கிடைத்தன.

ராஜாராமன் ஆக்கூர் பக்கிரியிடம் இருந்து புலி நகத்தை வாங்கிக்கொண்டு காவேரி ஆற்றுப் பாலத்தைத் தாண்டி ஊருக்கு வந்தான். தலைக்கு மேலே நிலவு வந்துவிட்டது. ரொம்ப நேரம் ஆகிவிட்டதை உணர்ந்தான். வேகமாக நடந்து வீடு வந்தான். வீட்டுக்கதவைத் தட்டினான்.

“யார் அது?” இரண்டு முறை அவன் மனைவி கேட்டாள். அவனுக்கு அது வழக்கம் இல்லாத பழக்கமாகக் கேட்டது.

“நான்தான்” என்றான்.

அவள் விளக்கைத் தூண்டி விட்டுவிட்டு வந்து கதவைத் திறந்தாள். அவளை நிமிர்ந்து பார்த்தான், முகம் தெரியவில்லை. தலையை அவிழ்த்தபடி இருந்தாள். அவள் கையைப் பிடித்து அழைத்துப் போய் கட்டிலில் உட்கார்ந்து நிமிர்ந்து பார்த்தான். முகம் வீங்கி இருந்தது. நெடு நேரமாக அழுது கொண்டிருப்பது போல பட்டது.

“பாப்பா’ அவள் தோளைப் பற்றினான். அவனைக் கட்டியணைத்துக் கொண்டு சப்தம் இல்லாமல் குலுங்கிக் குலுங்கி அழுதாள்.

“பாப்பா. என்ன சொல்லு?”

அவள் நிமிர்ந்து அவனை ஒரு பார்வை பார்த்தாள்.

“சொல்லு பாப்பா. இன்னக்கியும் வந்தானா?”

அவள் தலையசைந்தது.

"அதுக்குத்தான் ஆக்கூருக்கு அனுப்பி இருக்கான்” அவனை அடிப்பது போல கைகளைக் காற்றில் வீசினான். அவள் முன்னே சா. கந்தசாமி * 77நகர்ந்த அவன் தோளைப் பற்றினான், தோளில் தலை சாய்த்து அழ ஆரம்பித்தாள். வெகு நேரம் வரையில் அவள் அழுகை ஒயவே இல்லை. அவள் முதுகில் மெல்ல மெல்லத் தட்டிக்கொடுத்தான். அழுது ஒய்ந்து தூங்கிப் போனதும் அவளைக் கட்டிலில் படுக்க வைத்துவிட்டு எழுந்து நின்றான்.

கை இடுப்பு வேட்டியைத் தடவியது. முடிச்சில் புலிநகங்கள். இரண்டு புலி நகங்களை எடுத்துக்கொண்டு லாந்தர் விளக்கைத் தூண்டி விட்டான். வெளிச்சம் எங்கும் பரவியது. பாப்பா புரண்டு படுத்தாள். அவசர அவசரமாகத் திரியை இறக்கி வெளிச்சத்தைக் குறைத்தான். அவள் கால்களை நீட்டிப் படுத்தாள்.

அவன் விளக்கை எடுத்துக்கொண்டு கொல்லைப்பக்கம் சென்றான். கள்ளிப் பெட்டியைக் கீழே சாய்த்து ஓர் அரத்தைக் கையில் எடுத்தான். விரலால் தடவிப் பார்த்தான். சுணை இருப்பது மாதிரிதான் இருந்தது. மடியில் இருந்த - புலி நகத்தைக் கையில் மாட்டிக்கொண்டு கண்களுக்கு நேரே வைத்துப் பார்த்தான். விளக்கு வெளிச்சத்தில் இரும்பு நகத்தின் கூர் பளிச்சென்று மின்னியது.

"ஆஹா, ஆஹா.” பயங்கரமாகச் சிரித்துக்கொண்டு அவன் இரண்டு கைகளையும் மாறி மாறிக் காற்றில் வீசினான்.

- - “என்ன, என்ன ஆச்சுங்க? அவன் மனைவி கேட்டாள்.

அவன் அவளை ஒரு பார்வை பார்த்தான். கீழே சாய்ந்தது. புலிநகங்களில் இரண்டு கீழே விழுந்தன. கைகளிலும் கண்களிலும் ஏறி இருந்த கோபம் இறங்குவது மாதிரி இருந்தது. அவன் கையைப் பற்றி இழுத்து வந்து கட்டிலில் உட்கார வைத்தாள். எண்ணெய் இல்லாத விளக்கு மங்கி அணைந்தது. அவனைக் கட்டியணைத்துக் கொண்டு பாப்பா படுக்கையில் சாய்ந்தாள்.

அடுத்த நாள், வெள்ளிக் கிழமை பொழுது புலர்ந்தது. அவன் எழுந்து குளித்துவிட்டு வெளியில் சென்றான். அவள் சமைத்து வைத்துவிட்டு காத்துக்கொண்டு இருந்தாள். வெகுநேரங் கழித்துச் சாப்பிட வந்தான். சாப்பிடும்போது “ராத்திரிக்கி கூத்துப் பார்க்க வர்ற” என்றான். அவள் ஆச்சரியப்பட்டாள். சாதாரணமாகக் கூத்துப் பார்க்கக் கூப்பிடும் ஆள் இல்லை அவன்.

78 * கல்யாணமாகியதில் இருந்து இரண்டு கூத்தோ மூன்று கூத்தோதான் பார்த்திருக்கிறாள்.

கூத்து சப்தம் காதில் விழுந்த பிறகு அவள் பக்கத்து வீட்டு அஞ்சலையைக் கூப்பிட்டுக்கொண்டு மாரியம்மன் கோயில் பக்கம் சென்றாள். பெரிய கூட்டம். முன் வரிசையில் இரண்டு வெள்ளைக் காரப் பெண்கள் போட்டோ பிடித்துக்கொண்டு உட்கார்ந்து இருந்தார்கள். ஒரு தாடிக்காரன் நின்று கொண்டிருந்தான். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் விழிப்பிலும் தூக்கத்திலுமாய்க் கூத்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவள் மாமரத்துக்குப் பின்னால் மறைந்தும் மறையாமலும் உட்கார்ந்தான்.

சின்னகருப்பு சலங்கை கட்டிய கால்களைத் தரையில் உதைத்து ஜில் ஜில் என்று சப்தம் எழுப்பியபடி வந்து திடீரென்று நின்றார். பார்வை இப்படியும் அப்படியும் அலைபாய்ந்தது. முகத்தில் ஆணவம், கண்களில் கர்வம், இகழ்ச்சியாக ஒரு சிரிப்புச் சிரித்தபடி இந்தக் கோடியில் இருந்து அந்தக் கோடிக்கும் - அந்தக் கோடியில் இருந்து இந்தக் கோடிக்கும் மாறி மாறி ஓடியவர், சட்டென்று பிரகலாதன் முன்னே நின்றார். பெரிய மீசையைத் திருகியபடி, "உன் ஹரியானவர் இந்தத்தூணில் இருக்கின்றாரா ,י என்று ராகம் போட்டு இழுத்தார்.

"ஆமாம். இந்தத் தூணில் இருக்கிறார்.” “இந்தத் தூணில்?’துள்ளிப் பாய்ந்து மேலே எழுப்பிக் கீழே குதித்தார்.

“இந்தத் தூணிலும் இருக்கிறார்.”

கால் சலங்கை சப்தமிட ஓர் ஓட்டம் ஒடி நின்றார். “இதில், இந்தத்தூணில்.” “என் ஹரியானவர் இந்தத் தூணிலும், துரும்பிலுங்கூட இருக்கிறார்”

சின்னகருப்பு எகத்தாளமாக ஒரு சிரிப்புச் சிரித்து கூட்டத்தை ஒரு பார்வை பார்த்தார். பாப்பா பார்வையில் தட்டுப்பட்டாள்.

இன்னும் ஓர் அடியெடுத்து வைத்தார். அவள் புடைவையை இழுத்துப் போர்த்திக்கொண்டு மாமரத்தில் மறைந்தாள். ஆனால்

சா. கந்தசாமி & 79அவர் மனதில் முழுமையாக நிறைந்திருந்தாள். அவள் தனக்காகவே கூத்துப் பார்க்க வந்திருப்பது மாதிரி பட்டது. குதுரகலமும் பெருமிதமும் கொண்டார்.

தலையைச் சொடுக்கிச் சொடுக்கி எட்ட எட்டக் கால் வைத்து ராஜநடை போட்டு, “இந்தத்தூணிலுமா?” என்று கேட்டு எட்டி ஓர் உதைவிட்டார்.

சலங்கையும், மத்தளமும், ஹார்மோனியமும் சேர்ந் தொலித்தன.தூணுக்குப் பின்னால் இருந்து வெண் மயிரும் சிங்க முகமும் புலிநகத்தோடு நரசிம்மம் வெளிப்பட்டது. விசித்திரமான உருவத்தை இரணியன் ஒரு பார்வை பார்த்தார். கோரமாகச் சிரித்துக்கொண்டு நரசிம்மம் எட்டி அவர் நெஞ்சில் ஓர் அடி அடித்தது. பழக்கமில்லாத அடி தாங்க முடியவில்லை. இரணியன் தடுமாறிக் கீழே விழுந்தான்.

ஒரு பெரிய நாற்காலி வந்தது. நரசிம்மம் கீழே கிடந்த இரணியனைத் தூக்கிக் கொண்டு நாற்காலியில் உட்கார்ந்தது. கால்களைப் பரப்பி மடியில் போட்டுக் கொண்டு தலையைச் சிலுப்பி நெஞ்சில் இரண்டு அடி அடித்தது. "ஐயோ” - இரணியன் அலறினான்.

நரசிம்மம் ஒரு சிரிப்பு சிரித்தது. அந்தச் சிரிப்பும் கொடுத்த அடியும் புதுசாக இருந்தது.

இரணியன் திமிறினான். மேலும் இரண்டு அடி விழுந்தது. கூத்துப் பார்த்துக் கொண்டிருந்த கூட்டம் பயந்து மெளனம் காத்தது. மாறி மாறி விழுந்த அடியைத் தாங்க முடியாமல் இரணியன் பெரிதாகக் கத்த ஆரம்பித்தான்.

நரசிம்மம் தலையைக் குலுக்கிப் பல்லை இளித்தது. போலிப் பல்லும் பொய் முகமும் இரணியனை அச்சம் கொள்ள வைத்தன. “அற்பப் பதரே. அக்ரமமா புரியறே?” நரசிம்மம் அவன் நெஞ்சில் அடித்து மார்பில் இருந்த துணிகளைக் கிழித்து நாலாப்பக்கமும் வீசியது. இரணியன் திமிறினான். “உம்”நெஞ்சில்

இன்னோர் அடி விழுந்தது. இரத்தமும் சதையும் புலி நகத்தில் சிக்கியது. இரணியன் காலைப் படபடவென்று உதறினான்.

80 * ஆனால், நரசிம்மம் விடவில்லை. ஒரு காலை மேலே தூக்கிப் போட்டு அமுக்கி இரண்டு கை புலி நகத்தாலும் இரணியன் மார்பைக் கிழித்து இரத்தத்தையும் சதையையும் நாலாப்பக்கமும வாரி இறைத்தது.

"ஐயோ. ஐயோ.” இரணியன் அலறினான். அவன் அலற அலறக் கூட்டம் பின்னே இருந்து முன்னே வந்தது.

துடியாய்த் துடித்த இரணியன் கையும் காலும் நின்றது. உயிரற்ற உடலைக் கீழே தள்ளிவிட்டு நரசிம்மம் எழுந்து நின்றது. தலையைச் சிலுப்பிக் கொண்டு கூட்டத்தை நோட்டமிட்டது. புலி நகத்தில் இருந்து இரத்தம் கொட்டியது.

பாப்பா கூட்டத்தைத் தள்ளிக்கொண்டு முன்னே வந்தாள். அவள் முகத்தில் எல்லையற்ற சந்தோஷம். அவளைக் கண்டதும் நரசிம்மம் குதூகலம் கொண்டது. தாடியையும் மீசையையும் பிடுங்கிப் போட்டுக்கொண்டு “அவனை அதம் பண்ணிட்டேன்’ என்று கூட்டத்தில் இறங்கியது.

அவள் இன்னும் இன்னுமென்று சந்தோஷத்தோடு முன்னே வந்து கொண்டிருந்தாள்.

O

சா. கந்தசாமி * 81