தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Friday, December 10, 2021

சூதாடி -தாஸ்தயேவ்ஸ்கி (கடைசி அத்தியாயம்) ++++++++++++++++++ மொ பெ ரா.கிருஷ்ணையா ================

 சூதாடி -தாஸ்தயேவ்ஸ்கி (கடைசி அத்தியாயம்)

++++++++++++++++++
மொ பெ
ரா.கிருஷ்ணையா
================

பிளான்ஷ் மெய்யாகவே அழுதுவிட்டாள். ''நான் உன்னை அசடென்று நினைத்திருந்தேன்'' என்று அவள் முனகினாள், " நீயும் பார்ப்பதற்கு மூடனாகவே தோன்றினாய். ஆயினும் இது உன்னை மனத்துக்கு இனியவனாகவே செய்துள்ளது.'' இறுதியாய் என் கையை அழுத்திப் பிடித்து ''இரு , வந்து விட்டேன்!'' என்று கூவியவாறு தனது அறைக்குள் ஓடினாள். ஒரு நிமிடத்துக்கெல்லாம் இரண்டு ஆயிரம் - பிராங்க் நோட்டு களை எடுத்து வந்து என்னிடம் கொடுத்தாள். என் கண்களை யே என்னால் நம்ப முடியவில்லை! ''நேரத்தில் உனக்கு இது உதவியாய் இருக்கும். நீ படித்த ஆசிரியனே என்றாலும் அசட்டு ஆளாய் இருக்கிறாய். இரண்டாயிரத்துக்கு மேல் உனக்குத் தர மாட்டேல், ஏனென்றால் எவ்வளவு கொடுத் தாலும் நீ தொலைக்கவே போகிறாய். சரி, போய் வா! எப் பொழுதும் நாம் நண்பர்களாகவே இருப்போம். மீண்டும் நீ ஜெயிக்க நேர்ந்தால் நிச்சயம் என்னிடம் வர வேண்டும். உனக்கு அதிர்ஷ்ட ம் அடிக்கட்டும்!''
இன்னும் என்னிடம் ஐந்நூறு பிராங்க் சொந்தப் பணம் இருந்தது, இதன்றி ஆயிரம் பிராங்க் பெறுமானமுள்ள நல்ல கடிகாரம் ஒன்றும் வைரக் கைப் பொத்தான்களும் வேறு சிலவும் இருந்தன. ஆகவே நீண்ட காலத்துக்கு நான் கவலை பற்றவனாகவே வாழலாம். வேண்டுமென்றே தான் இந்தச் சிறிய ஊரில் வந்து தங்கினேன். யாவற்றையும் சிந்தித்துப் பார்க்க அவகாசம் கிடைக்கும் பொருட்டும், மிகவும் முக்கிய மாய் இங்கு மிஸ்டர் அஸ்ட்லே வருவார் என்று நான் எதிர் பார்த்ததாலும் இங்கு வந்தேன். வேலையாய் மிஸ்டர் அஸ்ட்லே இந்த ஊருக்கு வந்து, ஒரு நாளுக்குத் தங்குவார் என்பது எனக்குத் தெரிய வந்தது. அவரிடமிருந்து தெரிந்து கொள்ளக் கூடிய செய்திகள் அனைத்தையும் தெரிந்து கொள்வேன்.... பிறகு பிறகு நேரே ஹோம்பர்க் செல்வேன்! ருலெட்டன்பர்குக்குப் போக மாட்டேன், எப்படியும் அடுத்த ஆண்டுக்கு முன்ன தாய் அங்கே தலைகாட்ட மாட்டேன். ஒரே இடத்தில் தொடர்ந்து இரு முறை அதிர்ஷ்டத்தைச் சோதிக்கக் கூடாது என்று சொல்கிறார்கள். ஹோம்பர்குதான் சூதாட்டத்துக்குப் பெயர் பெற்ற தலைமையான இடமாம்.
434
அத்தியாயம் பதினேழு
இந்தக் குறிப்புகளை நான் எடுத்துப் பார்த்து ஓராண்டு எட்டு மாதங்களாகின்றன. இப்பொழுது மனச் சோர்வும் தொல்லையும் பொறுக்காமல் கவனத்தைச் சற்று நேரம் வேறு திசையில் திருப்பலாமென்று மீண்டும் இவற்றை எடுத் துப் பார்க்கிறேன். ஹோம்பர்குக்குப் போவதென்று நான் தீர்மானம் செய்த துடன் இக்குறிப்புகள் முடிவுற்றிருந்தன. அட ஆண்டவனே, எவ்வளவு மேம்போக்காய் அந்தக் கடைசி வரிகளை எழுதியிருந்தேன்! அதாவது, சரியாய்ச் சொல்வதெனில் மேம்போக்காயல்ல, எவ்வளவு தன் னம்பிக்கையோடும் அசைக்க முடியாத நிச்சயத்தோடும் அவற்றை எழுதியிருந்தேன்! துளியளவுங்கூட அப்பொழுது எனக்குச் சந்தேகம் இருக்கவில்லையே! ஆனால் ஒன்றரை ஆண் டுக்கும் சற்று அதிகமான காலம் கழிந்த பின் இப்பொழுது என் நிலை என்ன? பிச்சைக்காரனையும் விட கேடான நிலையில் அல்லவா இருக்கிறேன்! ஆனால் பிச்சைக்காரனுடைய நிலை என்ன , அவ்வளவு மோசமானதா? வறுமையைப் பற்றி நான் ஒன்றும் கவலைப்படவில்லை. என் வாழ்க்கையையே அல்லவா பாழாக்கிக் கொண்டுவிட்டேன்! என்னுடன் ஒப்பிடத்தக்க வர் யாரும் இல்லை, எனக்குக் கூறக் கூடிய புத்திமதியும் எதுவும் இல்லை. இது போன்ற ஒரு நேரத்தில் எனக்குப் புத்திமதி சொல்வதைக் காட்டிலும் நகைக்கத்தக்கது எது வும் இருக்க முடியுமா? சுயமனத் திருப்தி கொண்டவர்கள் இருக்கிறார்களே, என்னென்பது அவர்களை! எவ்வளவு ஆடம் பரமான சுய திருப்தியோடு இந்த வாய்ப்பேச்சு வீரர்கள் தமது புத்திமதிகளை எடுத்துரைக்க முன் வந்துவிடுகிறார்கள்! மிகவும் கேவலமான என்னுடைய தற்போதைய இழிநிலை யை நான் எவ்வளவு நன்றாய் உணர்கிறேன் என்பதை மட்டும் இவர்கள் அறிவார்களாயின், இவர்கள் என்னைத் தூற்ற இப் படி முன்வர மாட்டார்கள். ஏற்கனவே எனக்குத் தெரியாத எந்தப் புதிய விஷயத்தை இவர்கள் எனக்குச் சொல்லப் போகிறார்கள் என்று கேட்கிறேன். இங்குள்ள விவகாரம் தான் என்ன? விவகாரம் இதுதான்: சக்கரத்தின் ஒரேயொரு சுற்றால் யாவும் தலைகீழாய் மாறிவிடும்; எனக்கு இப்பொழுது
28
435
என்
|
புத்திமதி கூற வருகிறார்களே இதே ஆட்கள் அப்பொழுது எல்லோருக்கும் முதலாய் (இதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இங்க என்னிடம் ஓடி வந்து சிரித்து மகிழ்ந்து பேசுவார்கள், வாழ்த்துலரப்பா சன். இப்பொழுது செய்கிறார்களே அது போல அப்பொழுது யாரும் என்னைப் பார்த்ததும் தூர விககிச் செல்ல மாட்டார்கள். இவர்களை எல்லாம் ஒரு பொருட்டாய்க் கருதுகிறவனல்ல நான்! இப்பொழுது நான் பா. ஒரு பூஜ்யம்! நாளைக்கு நான் எப்படிப்பட்டவனாக முடியம். நாளைக்கு நான் மாஜி மனிதன் என்னும் நிலையி விருந்து மீண்டெழுந்து வந்து திரும்பவும் வாழத் தொடங்க முடியும். என் நெஞ்சில் உறையும் மனித ஆன்மா இன்னும் அறவே அழிந்துவிடவில்லை எனில் நாளைக்கு நான் அந்த -ஆன்மாவைத் தட்டியெழுப்பிச் செயல்பட வைக்க முடியும்.
அப்பொழுது நான் ஹோம்பர்குக்குத்தான் போனேன், ஆனால்... அதன்பின் அங்கிருந்து மீண்டும் ருலெட்டன்பர் குத்துச் சென்றேன், பிறகு ஸ்பாவுக்குப் போயிருந்தேன். டேன் - பேடனுக்கும் சென்றிருந்தேன், அங்கே நான் கவுன் சிகர் ஹின்ட்செவுக்குப் பணியாளாய்ச் சென்றிருந்தேன். இவர் ஒரு மோசடிக்காரர், இதற்கு முன்பே சிறிது காலம் இவரிடம் தான் வேலை செய்திருந்தேன். ஆம், ஐந்து மாதங் களுக்கு நான் பணியாளாய் வேலை செய்தேன்! நான் சிறைச் காலையை விட்டு வெளியே வந்ததும் இப்படி ஆயிற்று. (5டன்பட்டு நான் ருலெட்டன்பர்கில் சிறைச்சாலையில் அடைபட்டுவிட்டேன். என் சார்பில் யாரோ கடனை அடைத்து என்னைச் சிறைச்சாலையிலிருந்து விடுதலை பெறும்படிச் செய் தரர், பார் அது? மிஸ்டர் அஸ்ட்லேயா? பலீனாவா? தெரி பாது எனக்கு. ஆனால் நான் கொடுக்க வேண்டிய இருநூறு தாவெர் கடலும் அடைக்கப்பட்டுவிட்டது. நான் விடுதலை செய்யப்பட்டேன்.) அங்கிருந்து நான் எங்கே செல்வது? அந்த ஹின்ட்செயிடம் சென்றேன். அவர் இளைஞராகவும் அச.--ராகவும் சோம்பேறியாகவும் இருந்தவர். எனக்கு மூன்ர யொழிகள் எழுதவும் பேசவும் தெரியும். முதலில் அவர் பேன்னை ஒரு வகைச் செயலாளராய் அமர்த்திக் கொடுமாதத்துக்கு முப்பது கால்டின் கொடுத்து வந்தார். ஆகுல் முடிவில் நான் அவருடைய பணியாளாகிவிட்டேன்,
அவரால் செயலாளர் ஒருவரை வைத்துக் கொள்ள இயலா மற் போய் என்னுடைய சம்பளத்தைக் குறைத்துவிட்டார், எனக்கு வேறு எங்கும் செல்ல வழியின்றி அவரிடமே தங்கி படிப்படியாய் அவருடைய வேலைக்காரன் ஆனேன், அவரி டம் இருந்தபோது உண்ணவோ குடிக்கவோ நான் செலவிட வில்லை, ஐந்து மாதங்களில் எழுபது கூல்டின் வரை மிச்சப் படுத்திவிட்டேன். ஒரு நாள் மாலையில் பேடன் - பேடனில் நான் வேலையை விட்டு விலகுவதாய் அவரிடம் சொன்னேன், அதே மாலையில் ருலெட் ஆட்டக் கூடத்துக்குச் சென்றேன், என் நெஞ்சு எப்படி அடித்துக் கொண்டது தெரியுமா? பணத்தைப் போற்றும் ஆளல்ல நான்! அப்பொழுது நான் விரும்பிய தெல்லாம் அந்த ஹின்ட்செக்களும் பேடன்-பேடனின் தலைமைச் சேவகர்களும் நாகரிகச் சீமாட்டிகளும் நாளைக்கு என்னைப் பற்றி பேச வேண்டும், என் கதையைச் சொல்ல வேண்டும், என்னைப் பார்த்து வியந்து போற்ற வேண்டும், நான் புதிதாய் ஜெயிக்கும் பணத்துக்கு அடிபணிந்து நிற்க வேண்டும் என்பதுதான். இவை யாவும் சிறுபிள்ளைத்தன மான கனவுகள் தான், ஆசைகள்தான். ஆயினும்... யாருக்குத் தெரியும், நான் பலீனாவைச் சந்திக்க நேர்ந்து, யாவற்றையும் அவளிடம் கூறும்படி ஆகலாம், விதியின் விளையாட்டுகளை நான் சமாளித்ததை அவள் புரிந்து கொள்ளலாம். நான் நாடுவது பணம் அல்ல! பணத்தை நான் மீண்டும் எதாவது ஒரு பிளான் ஷிடம் கொடுத்து விரயம் தான் செய்திருப்பேன், பதி னாயிரம் பிராங்குக்கு வாங்கிய சொந்த குதிரைகள் பூட்டிய கோச்சில் மூன்று வாரங்களுக்குப் பாரிசில் மீண்டும் சவாரி செய்து தீர்த்திருப்பேன்--- இதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. நான் பணப் பித்து கொண்டவனல்ல என்பது எனக் குத் தெரியும். என்னை நான் 2வதாரியாகவே கருதுகிறேன், ஆயினும் நான் எத்தனை ஆவலுடனும் பீதியுடனும் நெஞ்சு படபடக்க ஆட்ட நிர்வாகியின் அறிவிப்புக்காகக் காத்திருக்கி றேன்---முப்பத்தொன்று, சிவப்பு, ஒற்றையும் மிகைப்பாடும், அல்லது நாற்பது, கறுப்பு, இரட்டையும் குறைபாடும் என்று அவா அறுவகைல எப நான் துடித்துப் போகிறேன்! லுயிதோர்களும் பத்து - கூல்டின்களும் தாலெர்களும் குவிந்து கிடக்கும் ஆட்ட மேஜையையும் ஆட்ட நிர்வாகிகளுடைய
437
அகப்பைகளிலிருந்து தகதகக்கும் குவியல்களில் சரிந்து விழும் பொற்காசுகளையும் சக்கரத்துக்கருகே இரண்டொரு அடி நீளமுள்ள தூண்களாய்க் கிடக்கும் வெள்ளியையும் எப்படி நான் கண் கொட்டாது பார்க்கிறேன் ! ஆட்டக் கூடங் களிலிருந்து இரண்டு அறைகளுக்கு அப்பால் வரும்போதே ஆட்ட மேஜையில் கொட்டப்படும் காசுகளின் கணீரொலி கேட்டு எப்படி நான் துடியாய்த் துடித்துப் போகிறேன்!
எனது எழுபது கூல்டின்களை ஆட்ட மேஜைக்கு எடுத்துச் சென்றேனே, அந்த மாலையை எந்நாளும் என்னால் மறக்கவே முடியாது! மீண்டும் 'மிகைப்பாட்டில் பத்து கூல்டின்களை வைத்து என் ஆட்டத்தை ஆரம்பித்தேன். இத்த 'மிகைப் பாட்டிடம் எனக்கு ஒருவகை மூடபக்தி இருந்து வருகிறது. வைத்த காசை இழந்துவிட்டேன். மீதி என்னிடம் வெள்ளி யில் அறுபது கூல்டின் இருந்தது. சற்று நேரம் சிந்தித்துப் பூஜ்யத்தைத் தேர்வு செய்து கொண்டேன். பூஜ்யத்தில் ஒவ் வொரு தடவையும் ஐந்து கூல்டின் வைத்து வந்தேன். மூன்றா வது சுற்றில் பூஜ்யம் வந்தது. நூற்று எழுபத்தைந்து கூல்டின் தரப்பட்டதும் பூரிப்பால் எனக்கு மூச்சே நின்றுவிடும் போலிருந்தது. முன்பு நான் ஒரு லட்சம் கூல்டின் ஜெயித்த போதுகூட அப்படி ஆனந்தப்பட்டிருக்க மாட்டேன். உடனே சிவப்பில் நூறு கூல்டினை வைத்தேன் - சிவப்பு வெற்றி பெற்றது. அப்படியே இரு நூற்றையும் மீண்டும் சிவப்பில் வைத்தேன் - மீண்டும் சிவப்பே வென்றது. நானூற்றையும் கறுப்பில் வைத்து வெற்றி பெற்றேன். எண்ணூறு அனைத் தையும் குறைபாட்டில் வைத்தேன், அது வென்றது. ஆடத் தொடங்கியபோது வைத்திருந்த தொகையையும் சேர்த்து இப்பொழுது எனக்கு ஆயிரத்து எழுநூறு கூல்டின் கிடைத்து விட்டது. ஐந்து நிமிடத்துக்கும் குறைவான நேரத்தில் இப்படி ஒரு மாற்றம்! ஆம், இம்மாதிரியான தருணங்கள் உங்களுடைய முந்திய தோல்விகளை எல்லாம் மறக்கடித்து விடும்! என் உயிரையே பணயமாய் வைத்து அல்லவா நான் இந்த வெற்றியைப் பெற வேண்டியிருந்தது! துணிந்து ஆபத்தில் இறங்கினேன்--இப்பொழுது மீண்டும் மனித குலத்தைச் சேர்ந்தவன் ஆனேன்!
உடனே ஓர் அறையை வாடகைக்கு எடுத்துக் கதவைத்
438
தாளிட்டுக் கொண்டேன். காலை மூன்று வரையில் என்னு டைய பணத்தை எண்ணிப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந் தேன். மறுநாள் காலையில் நான் விழித்தெழுந்த போது, பணி யாளாய் இருக்கவில்லை. அன்றே புறப்பட்டு ஹோம்பர்க் போவதென்று முடிவு செய்தேன். அங்கே நான் பணியாளாய் இருந்ததில்லை; சிறையில் தள்ளப்பட்டதும் இல்லை. ரயில் புறப்படுவதற்கு அரை மணி நேரம் முன்ன தாய் இரண்டே இரண்டு பணயம் வைத்துப் பார்ப்பதென்று சென்ற நான் ஆயிரத்து ஐந்நூறு ஃபிளோரினை இழந்துவிட்டேன் . அப்படியும் நான் ஹோம்பர்க் சென்றேன், ஒரு மாதமாய் இங்கு தான் இருந்து வருகிறேன் .....
எந்நேரமும் என்ன ஆகுமோ என்ற பீதி உணர்வு ஓயா மல் வருத்தும் நிலையில் தான் வாழ்ந்து வருகிறேன். சின்னஞ் சிறு பணயங்கள் வைத்து ஆடுகிறேன், ஏதேனும் நிகழு மென்று காத்திருக்கிறேன். கணக்குகள் போட்டுப் பார்க்கி றேன். நாட்கணக்காய் ஆட்டமேஜை அருகே நின்று ஆட்டத் தைக் கவனித்து வருகிறேன். இரவில் ஆடப் போவதாகக்கூட கனவு காண்கிறேன். ஆனால் நான் கல்லாய் மாறிவிட்டது போல், சகதிக் குழியில் சிக்கிக் கொண்டு விட்டது போல் எந்நேரமும் என்னுள் ஓர் உணர்ச்சி உருத்திக் கொண் டிருக்கிறது. மிஸ்டர் அஸ்ட்லேயின் மனதில் நான் தோன்றச் செய்துவிட்ட அந்த மனப் பதிவைக் கொண்டு பார்க்கை யில் இப்படிப்பட்ட ஒரு முடிவுக்கே நான் வரவேண்டியிருக் கிறது. நாங்கள் இருவரும் அந்த பழைய நாட்களுக்குப் பிற்பாடு இப்பொழுதுதான் முதல் முறையாய் ஒருவரை யொருவர் சந்தித்தோம். அது எப்படி நடைபெற்றது என்று கூறுகிறேன் : இப்பொழுது நான் திரும்பவும் காசு இல்லாத வனாகிவிட்டேன், இருந்தாலும் இன்னமும் என்னிடம் ஐம்பது கூல்டின் இருந்தது, ஹோட்டலில் நான் இருந்து வரும் சிற்றறைக்குத் தர வேண்டிய முழுப் பணத்தையும் நேற்று முன் தினம் கட்டி விட்டேன் என்பதாய் என்னுள் கூறியவாறு பூங்காவில் நடந்து கொண்டிருந்தேன். இன்னும் ஒரு தரம் ஆட்ட மேஜையில் முயன்று பார்ப்பதற்குப் போதிய பணம் கையில் இருக்கிறது, எதாவது ஜெயித்தேனாயின் தொடர்ந்து ஆடிச் செல்லலாம், தோல்வி ஏற்படின் மீண்டும் பணியாளாக
வேண்டியதுதான். இங்கே ஆசிரியன் தேவைப்படும் ருஷ்யர் கள் யாரையாவது காண முடிந்தாலொழிய வேறு வழி ஏதும் இல்லை. இப்படிச் சிந்தனையில் ஆழ்ந்து போய் நான் எனது அன்றாட வழக்கம் போல் பூங்காவில் நடந்து சென்று தோப் பைக் கடந்து பக்கத்து சிற்றரசு ஒன்றுக்குப் போய்விட்டுத் திரும்பினேன். சிலசமயம் இப்படி நான் தொடர்ந்து நான்கு மணி நேரம் நடந்து களைத்துப் போய் பசியுடன் ஹோம்பர்க் திரும்புவேன். தோப்பிலிருந்து நான் பூங்காவுக்குள் பிரவே சித்ததும் ஒரு பெஞ்சில் மிஸ்டர் அஸ்ட்லே அமர்ந்திருக்கக் கண்டேன். இதற்கு முன்பே என்னைப் பார்த்துவிட்ட அவர் என் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டார். நான் அவர் பக்கத் தில் வந்தமர்ந்தேன். அவரைப் பார்த்ததும் எனக்கு அளவிலா மகிழ்ச்சி ஏற்பட்டது என்றாலும், அவர் கொஞ்சம் விறைப்பாய் இருப்பதைக் கவனித்த நான் எனது ஆனந்த பரவசத்தை மட்டுப்படுத்திக் கொண்டேன். -- ' 'நல்லது, இங்கே தானே இருக்கிறீர் ! உம்மைச் சந்திக்க முடியும் என்றுதான் நினைத்திருந்தேன்'' என்றார் அவர். ''நீர் எந்த விளக்கமும் அளிக்கத் தேவையில்லை. எல்லாம், ஆம், எல்லாம் எனக்குத் தெரியும். கடந்த இந்த ஓராண்டு எட்டு மாதக் காலமாய் நீர் வாழ்ந்து வந்திருக்கும் வாழ்வின் முழு விவரங்களையும் நான் அறிவேன்.''
''ஓகோ! உம்முடைய பழைய நண்பர்களை மிகவும் உன்னிப்பாகத்தான் கவனித்து வருகிறீரெனச் சொல்லும்!'' என்று நான் பதிலளித்தேன். ''அவர்களை மறக்காமல் நினைவில் வைத்திருப்பது உமக்கு அளவிலாச் சிறப்பு அளிக்கிறது ....... கொஞ்சம் இரும் சொல்கிறேன், எனக்கு ஒன்று நினைவுக்கு வருகிறது ...... இருநூறு கூல்டின் கடன்பட்டு நான் ருலெட்டன்பர்க் சிறையிலே இருந்த போது என்னை வெளியே கொண்டுவந்தது நீர் தானா? அது யாரோ தெரியாது, என் கடனை அடைத்து எனக்கு விடுதலை கிடைக்கச் செய்தார்.''
"இல்லை, அது நானல்ல. கடன்பட்டு ருலெட்டன்பர்க் சிறையில் இருந்த உம்மை வெளியே கொண்டு வந்தது நானல்ல. ஆனால் இரு நூறு கூல்டின் கடனுக்காக நீர் சிறை யில் இருந்தது எனக்குத் தெரியும்.''
440
''அப்படியானால், என்னை வெளியே கொண்டுவந்தது யார் என்பதும் உமக்குத் தெரிந்திருக்க வேண்டுமே.''
'' எனக்குத் தெரியாது, உம்மை வெளியே கொண்டு வந்தது யாரென்று எனக்குத் தெரியாது.''
''வேடிக்கை தான். இங்குள்ள ருஷ்யர்கள் யாருக்கும் என்னைப் பற்றி தெரியாது. அவர்கள் எனக்காகக் கடனை அடைத்து என்னை வெளியே கொண்டுவருவார்களென நான் நினைக்கவில்லை. ருஷ்யர்கள் ருஷ்யாவில் தான் ஒருவருக்கொரு வர் உதவிக் கொள்வது வழக்கம். இதுகாறும் நான் வெறும் கிறுக்குத்தனம் காரணமாய் யாரோ ஆங்கிலேயக் கிறுக்கர் தான் என்னை வெளியே கொண்டு வந்திருக்க வேண்டு மென்று நினைத்திருந்தேன்.''
ஓரளவு வியப்புடன் மிஸ்டர் அஸ்ட்லே நான் சொன்னது முழுவதையும் கவனமாய்க் கேட்டார். நான் நலிவுற்று மனம் சோர்ந்து போயிருப்பேன் என்று அவர் நினைத்திருந் தார் போலும்.
''நீர் உமது ஆன்மிக சுதந்திர உணர்ச்சியையும், உமது உற்சாகத்தையும் கூட இழந்து விடாமல் முன்பு போலவே இருப்பதைக் கண்டு மனம் மகிழ்கிறேன்'' என்று அவர் தமது குரலில் கொஞ்சம் கசப்புணர்ச்சி தொனிக்கக் கூறினார்.
''ஓகோ , நான் ஒடுக்கப்பட்டு விடாமலும் மனம் முறிந்து விடாமலும் இருப்பதைக் கண்டு உள்ளுக்குள் ஆத்திரப்படுகிறீர் , அப்படித்தானே'' என்று சொல்லிச் சிரித்துக் கொண்டேன் நான்.
இதை அவர் உடனே புரிந்து கொள்ளவில்லை, ஆனால் சில கணங்களில் புரிந்து கொண்டதும் அவர் முகத்தில் புன்னகை தோன்றியது.
''உம்முடைய பேச்சு எப்பொழுதுமே சுவையான தெனக் கருதி மகிழ்ந்து வந்துள்ளவன் நான். உமது இந்தப் பேச்சில் எனது பழைய நண்பரை, விவேகமும் உற்சாகமும் மிக்கவராயினும் அதேபோதில் மனக்கசப்புக் கொண்டவரான எனது பழைய நண்பரை நான் அடையாளம் காண முடி கிறது. ருஷ்யர்களால் மட்டும் தாம் இப்படி ஒன்றுக்கொன்று முரண்படும் இத்தனைக் கூறுகளை ஒருங்கே தம்முள் இணைத்துக் கொள்ள முடியும். எவரும் தமது சிறந்த நண்பரை
441
இழிவுற்று நலிந்த நிலையிலே காண விரும்புவார் என்பது மெய்தான். இழிவுற்று நலிந்த நிலையிலிருந்து தான் நட்பு மலர் கிறது. ஞானிகள் அறிந்த பழம் பெரும் உண்மை இது. ஆயினும் இந்தச் சந்தர்ப்பத்தில் நான் உள்ளப்பூர்வமாகவே மகிழ்கிறேன், நீர் மனச்சோர்வுற்றுவிடாமல் உற்சாகமாய் இருப்பதைக் கண்டு மகிழ்கிறேன். சரி, சூதாட்டத்தை நீர் விட்டொழிக்கவே போவதில்லையா?'' -
"நாசமாய்ப் போக! இக்கணமே நான் அதை விட்டொழித்துவிடுவேன், ஆனால்.......''
''ஆனால் நீர் இதுவரை தோற்றதை ஜெயித்துக்கொண்டு விட வேண்டும் என்று தானே சொல்கிறீர்? நானும் அப்படித் தான் நினைத்தேன். போதும், மேலும் எனக்கு இது பற்றி சொல்லத் தேவையில்லை. அகஸ்மாத்தாய் உம் வாயிலிருந்து வெளிப்பட்ட சொற்களாதலால், இவை உண்மையை உரைப் பவை. சரி, சூதாடுவதைத் தவிர வேறு ஒன்றும் செய்வ தில்லையா?"
“இல்லை .''
என்னைத் துருவி ஆராயும் கேள்விகளைக் கேட்டுச் சென்றார். எனக்கு எதைப்பற்றியும் தெரியாது. பத்திரிகைகள் படிப்பதில்லை நான். புத்தகத்தைப் புரட்டிப் பார்த்து எவ் வளவோ காலமாகிறது.
"உயிரோட்டம் இழந்து மரக்கட்டையாகிவிட்டீர்'' என்றார் அவர். ''வாழ்க்கையையும், தனி வாழ்வுக்கும் பொது வாழ்வுக்கு முரிய நாட்டங்களையும், குடிமகனாகவும் மற்றும் மனிதனாகவும் உமக்குள்ள கடமைகளையும், உமது நண்பர்களையும் (உமக்கு நண்பர்கள் சிலர் இருந்தார்கள், இல்லையா?) நீர் நிராகரித்தது மட்டுமல்ல, சூதாடி ஜெயிப்ப தைத் தவிர வேறு எல்லா நோக்கங்களையும் நிராகரித்தது மட்டுமல்ல, உம்முடைய பழைய நினைவுகளையுங்கூட அல்லவா நிராகரித்துவிட்டீர். உமது வாழ்வின் ஆர்வமிக்க, உணர்ச்சி வளம் வாய்ந்த ஒரு கட்டத்தில் உம்மை நான் நினைத்துப் பார்க்கிறேன். ஆனால் அக்காலத்தைப் பற்றிய உமது சிறந்த அனுபவங்களையும் உணர்ச்சிகளையும் அடியோடு மறந்திருப்
442
பீர் என்றுதான் நினைக்கிறேன். இன்று நீர் காணும் கனவு களும் அன்றாட நடைமுறை விருப்பங்களும் ஒற்றை-இரட்டை, சிவப்பு - கறுப்பு, பன்னிரண்டு மத்திய எண்கள் இத்தியாதி விவகாரங்களுக்கு அப்பால் செல்ல மாட்டா என்பதாகவே தோன்றுகிறது எனக்கு.''
''போதும் மிஸ்டர் அஸ்ட்லே ! அவற்றை எல்லாம் எனக்கு நினைவுபடுத்த வேண்டாம்!'' என்று நான் எரிச்சலாய், ஆத்திரம் பொங்கும் குரலில் பலக்கக் கூறினேன். ''எதையும் நான் மறந்துவிடவில்லை என்பதை உமக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். தற்காலிகமாய் அவற்றை நான் என் மனதில் தோன்றாதபடி விலக்கி வைத்திருக்கிறேன்; என்னுடைய பழைய நினைவுகளையுங்கூட இதே போல ஒதுக்கி வைத்திருக் கிறேன் - எனது நிலைமையை நான் மேம்படுத்திக் கொள்ளும் வரையில் அவை என்னுள் தலைகாட்டாதபடி தற்காலிய மாய் ஒதுக்கி வைத்திருக்கிறேன். என் நிலைமை உயர்ந்ததும் மீண்டும் நான் உயிர் பெற்று எழுவதைக் காண்பீர்!''
"பத்தாண்டுகளுக்குப் பிற்பாடும் நீர் இங்குதான் இருக் கப் போகிறீர்'' என்றார் அவர். 'இன்றிலிருந்து பத்தாண்டு கள் கழிந்ததும், நான் உயிருடன் இருந்தால் இங்கே, இதே பெஞ்சில் வந்தமர்ந்து இவற்றை எல்லாம் பற்றி உமக்கு நினைவு படுத்துவேன் என்று பந்தயம் கட்டவும் நான் தயார்.''
''போதும் நிறுத்தும்!'' என்று பொறுமையிழந்து நான் இடைமறித்துக் கூறினேன். ''கடந்த காலத்தை ஒன்றும் நான் மறந்துவிடவில்லை என்பதை உமக்குக் காட்டுவதற்காக நான் இதைக் கேட்கிறேன் : மிஸ் பலீனா இப்பொழுது எங்கிருக்கிறாள்? சிறையிலிருந்து என்னை விடுதலை பெற வைத்தது நீர் இல்லையானால், நிச்சயம் அவள் தான் அதைச் செய்திருக்க வேண்டும். இவ்வளவு காலமாய் அவளைப் பற்றி நான் எந்தத் தகவலும் தெரிந்து கொள்ள முடியவில்லை.''
''அவளல்ல, உம்மை சிறையிலிருந்து அவள் விடுதலை பெற வைத்ததாய் நான் நினைக்கவில்லை. இப்பொழுது அவள் சுவிட்ஜர்லந்தில் இருக்கிறாள். மிஸ் பலீனாவைப் பற்றி நீர் என்னிடம் கேள்வி கேட்காமல் இருப்பது தான் நல்லது'' என்று உறுதியாய், கொஞ்சம் கோபமாகவே சொன்னார் அவர். - ''அப்படியானால் அவள் உமது மனத்தை வெகுவாய்ப்
443
கா
புண்படுத்திவிட்டாளென்று தெரிகிறது'' என்று நான் என்னையும் அறியாமல் சிரித்துக் கொண்டேன்.
"மிஸ் பலீனா உலகில் வாழும் சிறந்தவர்களிலே மிக வும் சிறந்தவள். ஆனால் திரும்பவும் சொல்கிறேன், மிஸ் பலீனாவைப் பற்றி நீர் என்னிடம் எதுவும் கேட்க வேண்டாம். எந்நாளும் நீர் அவளைச் சரிவரத் தெரிந்து கொள்ளவில்லை. உம்முடைய வாயால் அவளுடைய பெயரை உச்சரித்து எனது புனித உணர்ச்சியை அவமதிக்க வேண்டாம்.''
''நல்லாயிருக்கே இது! நீர் சொல்வது சரியல்ல. அதோடு, இதைப் பற்றி நான் பேசக் கூடாது என்றால் உம்முடன் வேறு பேச என்ன இருக்கிறது, சொல்லும். நம்முடைய நினைவுகள் எல்லாம் இது ஒன்றைத்தானே மைய மாய்க் கொண்டுள்ளன. ஆனால் நீர் கலவரமடைய வேண்டாம், உம்முடைய அந்தரங்க விவகாரங்களைப் பற்றிய தகவல்கள் எனக்குத் தேவையில்லை ....... மிஸ் பலீனாவின் புற வாழ்வை யும் வெளி நிலைமைகளையும் பற்றிதான் நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். சுருக்கமாய் ஒரு சில சொற்களில் நீர் இவற்றைக் கூறலாம்.''
''சரி, இந்த ஒரு சில சொற்களுக்கு மேல் இந்தப் பேச்சு செல்லாதெனில், எனக்கு ஆட்சேபம் இல்லை, சொல்கிறேன். மிஸ் பலீனா நீண்ட பல நாட்களுக்கு உடல் நலமின்றி இருந் தாள். இப்பொழுதும் நலமின்றியே இருந்து வருகிறாள், சிறிது காலம் வட இங்கிலாந்தில் எனது தாயுடனும் சகோ தரியுடனும் இருந்தாள். ஆறு மாதங்களுக்கு முன்பு அவ ளுடைய பாட்டி-உமக்கு ஞாபகமிருக்கும் வயது முதிர்ந்த அந்தப் பைத்தியக்கார அன்னையை- இறந்துவிட்டார், அவர் தமது பேத்திக்கு ஏழாயிரம் பவுன் எழுதி வைத்திருந்தார். இப்பொழுது மணம் புரிந்து கொண்டுவிட்ட எனது சகோதரி யின் குடும்பத்துடன் சேர்ந்து மிஸ் பலீனா சுற்றுப் பயணம் செய்து வருகிறாள். அவளுடைய சின்னஞ்சிறு தம்பிக்கும் தங்கைக்கும் பாட்டி தமது உயிலில் தக்கபடி ஏற்பாடு செய் திருந்தார். இப்பொழுது அவர்கள் இருவரும் லண்டனில் படிக் கின்றனர். மிஸ் பலீனாவின் சிறிய தகப்பனாரான ஜெனரல் ஒரு மாதத்துக்குமுன் பாரிசில் திடீரென மாரடைப்பால் இறந்துவிட்டார். மத்மா சேல் பிளான்ஷ் அவரை நல்லபடி
யாகவே நடத்தி வந்தாள், ஆனால் பாட்டியிடமிருந்து அவருக்குக் கிடைத்த சொத்துக்களைக் கைப்பற்றிக் கொண்டு விட்டாள்....... அவ்வளவு தான் நான் கூறக் கூடியது.''
''தெ கிரியே? அவரும் ஸ்விட்ஜர்லந்தில் தான் சுற்றுப் பயணம் செய்து கொண்டிருக்கிறாரா?''
''இல்லை, தெகிரியே ஸ்விட்ஜர்லந்தில் சுற்றுப் பயணம் செய்து கொண்டிருக்கவில்லை. அவர் எங்கே இருக்கிறாரோ, தெரியாது எனக்கு. முடிவாய் நான் எச்சரிக்கிறேன் : மறை முகமான இந்தக் குறிப்புகளையும் இழிவான ஊகங்களையும் விட்டொழிக்கும்படி எச்சரிக்கிறேன். இல்லையேல் நான் சும்மா விட மாட்டேன்.'' ''என்ன, நமது பழைய நட்பினையும் கருதாமலா?''
ஆம், நமது பழைய நட்பினையும் கருதாமல் தான்.'' "மிஸ்டர் அஸ்ட்லே , என்னை மன்னித்தருள வேண்டும். ஆனால் நான் கூறியதில் கெளரவக் குறைவானதோ, இழி வானதோ எதுவும் இல்லை. மிஸ் பலீனாவைப் பற்றி நான் குறையாய் எதுவும் சொல்லவில்லை. தவிரவும், மிஸ்டர் அஸ்ட்லே , பொதுவாய் ஒரு பிரெஞ்சுக்காரரும் ஒரு ருஷ்ய நங்கையும் என்னும் இந்த இணைவு இருக்கிறதே, அது நீரும் நானும் தீர்க்கமாய்ப் புரிந்து கொண்டுவிடக் கூடியதல்ல.'
''தெ கிரியே என்னும் பெயரை நீர் இன்னொரு பெய ருடன் இணைத்துச் சொல்வதில்லையென வாக்களிப்பீரானால், 'ஒரு பிரெஞ்சுக்காரரும் ஒரு ருஷ்ய நங்கையும்' என்பதன் மூலம் நீர் குறிப்பிடுவது என்னவென்று விளக்கும்படிக் கேட்க விரும்புகிறேன். இந்த 'இணைவு' எப்படிப்பட்டது என்கிறீர்? ஏன் பிரெஞ்சுக்காரரும் ருஷ்ய நங்கையும் என்று குறிப்பிட்டுச் சொல்கிறீர்?''
''பார்த்தீரா, உமக்கும் இதில் அக்கறை இருக்கிறது, பார்த்தீரா! ஆனால், மிஸ்டர் அஸ்ட்லே , அது நீண்டதொரு கதை. இதற்குப் பீடிகையாய் அமைந்த பலவற்றையும் தெரிந்து கொண்டாக வேண்டும். மேம்போக்காய் முதலில் பார்க்கையில் அபத்தமாய்த் தோன்றினாலுங்கூட இது முக்கியமான ஒரு பிரச்சினையாகும். மிஸ்டர் அஸ்ட்லே , பிரெஞ்சுக்காரர் இருக்கிறாரே அவர் வடிவத்தில் பூரணத் துவம் கொண்ட நேர்த்தியான வார்ப்பு. பிரிட்டிஷ்காரர்
445
என்ற முறையில் நீர் இதை ஒத்துக் கொள்ள மாட்டீர்; ரூஷ்பன் என்ற முறையில் நானும் இதை ஒத்துக் கொள்ள மாட்டேன் -- இதற்குக் காரணம் பொச்செரிப்புதான். ஆனால் நமது இனம் பெண்கள் வேறு விதமாய் நினைக்கிறார்கள். ரசின்* எழுதிய புத்தகங்கள் உமக்குப் பகட்டு ஜோடனைகளாகவும் சஇக்கவொண்ணுதலையாகவும் - 'செண்டு' இடப்படவை பாகவும் தோன்றலாம். அவற்றை நீர் படிக்க மாட்டே. செனச் சொன்னாலும் சொல்வீர். எனக்கும் கூட இவ்வாசிரி பர் வெறும் பகட்டாகவும் 'செண்டு' இடப்பட்டவராகவும் தான் தோன்றுகினர்; ஒருவகையில் இவர் நகைக்கத் தக்கவ ராவார் என்றே சொல்வேன். ஆயினும் இவர் நேர்த்தியான - ஆசிரியர், உமக்கும் எனக்கும் பிடித்தாலும் பிடிக்காவிட்டா ஓம் பாவற்றுக்கும் முதலாய் ஒரு பெருங்கவிஞர். பிரெஞ்சுக் காரரின், அதாவது பாரிஸ்காரரின், தேசிய வடிவம் நாம் எல்லோரும் கரடிகளைப் போன்றோராய் இருந்த காலத்தி லேயே நாகசிக நயம் வாய்ந்ததாய் வார்க்கப்பட்டுவிட்டது. புரட்சியானது பிரபுக் குலத்தோரிடமிருந்து இந்த வடிவத் தைச் சுவீகரித்துக் கொண்டது. இன்று சர்வசாதாரண பிரெஞ்சுக்காரருங்கூட-இந்த வடிவம் உருவானதில் அவரு டைய சொந்த முன்முயற்சிக்கோ, இதயத்துக்கோ , ஆன்மா ஷக்கோ எந்தப் பங்கும் இல்லாமலே--நாகரிக நயம் வாய்ந்த பாவனைகளையும் சாதுர்யங்களையும் பேச்சு முறைகளையும் மற்றும் கருத்துக்களையுங்கூட பெற்றுவிட முடிகிறது. இவை பாவும் பரபுரிமையாய் அவருக்குக் கிடைத்து விடுகின்றன. அதேபோதில் அவர் போலியிலும் போலியான. இழிவிலும் இழிவான நபராகவே இருக்கலாம். மிஸ்டர் அஸ்ட்லே . இன்றே விவரத்தையும் இங்கு நான் கூற வேண்டும். நற் தனமும் கர்மதியும் கொண்டு அதிக அளவுக்குப் பகட்டோ மீனுக்கோ இல்லாத நஷ்ய நங்கையைக் காட்டிலும் கள்ளங் ச.படமத்த. எதையும் எளிதில் நம்பக்கூடிய ஜீவன் உலகில் வேறு எதுவும் இல்லை. வேடம் பூண்டு தக்கபடி நடிக்கும் எந்த ஒரு தெ கிரியேயும் காளிதில் அவளுடைய உள்ளத்தைக்
ரான் (1439-99)-பிரெஞ்சு நாடக ஆசிரியர்.-- (பதிப்பாசிரியர்,)
கொள்ளை கொண்டுவிட முடியும். நயமான, நேர்த்தியான வடிவம் அந்த ஆளுக்குக் கைவந்த கலையாகும். இந்த நங்கை இவ்வடிவத்தை அவருடைய ஆன்மாவாய்க் கருதிக் கொண்டுவிடுகிறாள். மரபுரிமையாய் அவருக்கு விட்டுச் செல்லப்பட்ட அங்கியாய்க் கொள்ளாமல், அவருடைய இதயத்தின், ஆன்மாவின் இயற்கையான உருவாய் அவள் இந்த வடிவத்தைக் கொண்டுவிடுகிறாள். இதைக் கேட்பதற்கு உமக்கு எரிச்சலாகத்தான் இருக்கும், ஆயினும் ஆங்கிலேயர் கள் பெரும்பாலும் நடைநயமற்றோராய், நயநாகரிகம் போ தாதவர்களாய் இருக்கிறார்கள் என்பதை நான் குறிப் பிட்டாக வேண்டும். அதேபோதில் ருஷ்யர்கள் சடுதியில் நயநாகரிகத்தையும் நடைநயத்தையும் அடையாளங் கண்டு கொண்டுவிடுகிறார்கள், இவற்றிடம் அளவு மீறிய பற்று கொண்டுவிடுகிறார்கள். ஆன்மாவின் எழிலையும் சிந்தையின் சுயச்சிறப்பையும் கண்டறிந்து கொள்வதற்கு நமது பெண்கள் பெற்றிருப்பதைக் காட்டிலும், இன்னும் முக்கியமாய் நமது நங்கையர் பெற்றிருப்பதைக் காட்டிலும் மிகப் பன்மடங்கு கூடுதலான அகச் சுதந்திரமும் சுயேச்சையும் தேவைப் படுகின்றன; நிச்சயமாய் மிகவும் கூடுதலான அனுபவம் தே வைப்படுகிறது. மிஸ் பலீனா - என்னை மன்னிக்க வேண்டும், வாய் தவறிப் பெயரைச் சொல்லிவிட்டேன்-அந்த எத்தன் தெ கிரியேயைவிட நீர் மேலானவர் என்று தீர்மானிப்பதற்கு மிக நெடுங் காலம் அல்லவா வேண்டியிருக்கிறது? அவள் உம்மைப் போற்றலாம், உம்பால் நட்பு கொள்ளலாம், தனது உள்ளத்தில் இருப்பதை மறைக்காமல் உம்மிடம் சொல்ல லாம், ஆயினும் அந்தக் கேடுகெட்ட எத்தன், வெறுக்கத் தக்க வட்டிக்கார அற்பன் தெ கிரியே இனியும் தொடர்ந்து அவள் இதயத்தில் கோலோச்சலாம். பிடிவாதமும் கர்வமுமே இதற்குக் காரணமாயிருக்கும் - எப்படியென்ஈவ் முன்பு இந்த தெ கிரியே எழிலார்ந்த மார்க் விசாய், நம்பி மோசம் போன மிதவாதியாய்த் தோன்றியவர்: அவளுடைய குடும்பத்தையும் புத்தி கெட்ட ஜெனரலையும் காப்பாற்ற முன் வந்து தமது சொத்துக்களைப் பறி கொடுத்தவராய்த் தம்மை அவளுக்குச் சித்தரித்துக் கொண்டவர். இந்தப் பொய்க் கூற்றுக்கள் யாவும் பிற்பாடு அம்பலமாகிவிட்டன.
அதனால் என்ன? இன்னமும் அவள் அந்தப் பழைய தெ கிரி யேயுக்காகத்தானே ஏங்கிக் கொண்டிருக்கிறாள்---அவளுக்கு வேண்டியது அந்தப் பழைய தெ இரியேதானே! தற்போதைய தெ இரியேயை எவ்வளவுக்கு எவ்வளவு அவள் வெறுக் இரளோ அவ்வளவுக்கு அவ்வளவு அதிகமாய் அந்தப் பழைய தெ இரியேயுக்காக, அவள் கற்பனையில் தவிர உண்மையில் எக்காலத்திலும் இருத்திராத அந்தப் பழைய தெ கிரியேயுக் காக ஏங்குகிருள். மிஸ்டர் அஸ்ட்லே நீர் சர்க்கரை ஆலை உடமையாளர் இல்லையா?''
''ஆம், பெயர் பெற்ற சர்க்கரை ஆலைக் கம்பெனியான 'லொவெல் அண்டு கோ'வைச் சேர்ந்தவன்.''
"நீரே பாரும். ஒருபுறம் நீர் சர்க்கரை ஆலை முதலாளி, மறுபுறம் அப்பொலோ பெல்வதெர். இரண்டும் ஒன்றோ டொன்று இணைந்து பொருந்தக் கூடியவை அல்லவே. ஆனால் நான் சர்க்கரை ஆலை முதலாளிகூட அல்ல. துக்கடா ருலெட் சூதாடி நான். பணியாளாகவுங்கூட வேலை செய்திருக்கிறேன். மில் பலீனாவுக்கு அது நிச்சயம் தெரிந்திருக்கும், ஏனெனில் திறமை வாய்ந்த போலீஸ் படை ஒன்று அவளுக்காக வேலை செய்வதாய்த் தெரிகிறது.''
“நீர் மனக் கசப்புற்று இப்படி அபத்தமாய்ப் பேசுகிறீர்''-சற்று நேரம் சிந்தனை செய்துவிட்டு அமைதி குலையாது கூறினார் மிஸ்டர் அஸ்ட்லே . '' மேலும் நீர் சொல்வதில் சுய சிந்தனையோ கற்பனையோ கிஞ்சித்தும் இருப்பதாய்த் தெரியவில்லை.''
''சரி, ஒத்துக் கொள்கிறேன். எனது அரிய நண்பரே, அதஞல்தானே இது இவ்வளவு பயங்கரமாய் இருக்கிறது நான் சொல்வது எவ்வளவு தான் பழஞ் சரக்காய், கொச்சை பாய், கேலிக் கூத்தாய் இருந்தாலும், இதுதானே உண்மை . எப்படியும் உமக்கும் எனக்கும் ஆதாயம் எதுவும் இல்லையே.''
"இதெல்லாம் இழிவான அசட்டுப் பேச்சு... ஏனென் முல்... ஏனென்றால்... நடந்ததைச் சொல்கிறேன், கேளும்'' என்து குரல் நடுங்க, கண்கள் ஜொலிக்கக் கூறினார் மிஸ்டர் அட்மே , 'நன்றிகெட்ட, அற்பத்தனமான, துர்பாக்கிய மனிதரே, சொல்கிறேன் கேளும். அவள் வேண்டிக் கொண்
448
-
-
-
--
டதன் பேரில் தான் உம்மைப் பார்த்துச் செல்வதற்காக ஹோம்பர்குக்கு வந்தேன், உம்முடன் அத்யந்த முறையில் பேசுவதற்காக, உமது உணர்ச்சிகள், சிந்தனைகள், நம்பிக்கைகள்... மற்றும் உமது நினைவுகள் ஆகிய இவை யாவுங் குறித்து தெரிந்து சென்று அவளிடம் சொல்வதற் காக இங்கே வந்தேன்.''
''அப்படியா? மெய்தானா?'' என்று கூவினேன். என் கண் களிலிருந்து தாரையாய்க் கண்ணீர் கொட்டிற்று. அதை நான் தடுக்க முடியவில்லை, இம்மாதிரி இதன் முன் என்றும் நடைபெற்றதில்லை.
''ஆம், பரிதாபத்துக்குரியவரே, அவள் உம்மைக் காத லித்தாள். நீர் அறவே சீரழிந்துவிட்டதால் தைரியமாய் இதை நான் உம்மிடம் சொல்லலாம். இப்பொழுதும் அவள் உம்மைக் காதலிப்பதாய் நான் உம்மிடம் சொன்னாலுங்கூட நீர் இங்கேயே தான் இருப்பீர் என்பது எனக்குத் தெரியும். உம் வாழ்க்கையைப் பாழாக்கிக்கொண்டுவிட்டீர். உமக்குச் சில ஆற்றல்கள் உண்டு. சுறுசுறுப்பான கூர்மதி படைத்தவர் நீர். முன்னொரு காலத்தில் நீர் அப்படி ஒன்றும் மோச மான ஆளாய் இல்லை. உமது தாயகத்துக்கு நீர் பயனுள்ள பணியுங்கூட ஆற்றியிருப்பீர். இத்தகையோர் உமது தாயகத் துக்கு நிறைய தேவைப்படுகிறார்கள். ஆனால் நீர் இங்கே இருந்து வருகிறீர், உமது வாழ்வு பாழாகிவிட்டது. உம்மை நான் குற்றம் சொல்லிப் பயனில்லை. எனக்குத் தெரிந்த வரை எல்லா ருஷ்யர்களும் இப்படித்தான் இருக்கிறார்கள், அல்லது இப்படி இருக்கக்கூடிய சுபாவமுடையோராய் இருக்கிறார்கள். ருலெட் ஆட்டம் இல்லையேல் அதையொத்த வேசென்றில் வாழ்க்கை வீணாக்குகின்றனர். விதிவிலக்காய் இருப்போர் மிகச் சொற்பம். உழைப்பின் சிறப்பைப் புரிந்து கொள் ளாதது நீர் மட்டுமல்ல. (இப்பொழுது நான் சொல்வது உம் நாட்டு மக்களைப் பற்றி அல்ல.) ருலெட் பிரதானமாய் ருஷ்யர்களால் ஆதரிக்கப்படும் ஆட்டமாகும். இது வரை நீர் நேர்மையுடன் இருந்து வந்திருக்கிறீர், திருடுவதற்குப் பதில் பணியாளாய் இருப்பது மேலெனக் கருதி வந்திருக்கிறீர். ஆனால் வருங் காலத்தில் உமது நிலை என்னவாகும் என்று நினைக்கும்போது எனக்குப் பயங்கரமாய் இருக்கிறது.
-
---18:32)
449
போதும், போய் வருகிறேன்! உமக்குப் பணம் வேண்டும், இல்லையா? என்னிடமிருந்து இந்தப் பத்து லுயிதோரைப் பெற்றுக் கொள்ளும். இதற்கு மேல் தர மாட்டேன், ஏனெ னில் எப்படியும் நீர் இதைச் சூதாடி இழக்கவே போகிறீர். இதை வாங்கிக் கொள்ளும், போய் வருகிறேன் ! வாங்கிக் கொள்ளும்!"
'மிஸ்டர் அஸ்ட்லே , வேண்டாம், நீர் இவ்வளவு பேச்சு பேசியபின் .......''
''பெற்றுக் கொள்ளும்'' என்று கூச்சலிட்டார். ''இன்ன மும் உம்மிடம் நல்லுணர்வு கொஞ்சம் எஞ்சியிருக்கும் என்று நான் நம்புகிறேன். மெய் நண்பனாய் நான் உமக்கு இந்தப் பணத்தைத் தருகிறேன். சூதாட்டத்தை விட் டொழித்துவிட்டு ஹோம்பர்கிலிருந்து வெளியேறி உமது தாயகத்துப் போவீர் என்று என்னால் நம்ப முடியுமாயின், புது வாழ்வு தொடங்குவதற்காக உடனே உமக்கு ஆயிரம் பவுன் தருவேன். ஆனால் இப்பொழுது உமக்கு நான் ஆயிரம் பவுன் தரவில்லை, பத்து லுயிதோரே தருகிறேன். ஏனெனில் ஆயிரம் பவுனாயினும் பத்து லுயிதோராயினும் இப்பொழுது உமக்கு 'ஒன்றே தான். அனைத்தையும் ஆடித் தொலைத்து விடுவீர். இந்தாரும், வாங்கிக் கொள்ளும் - போய் வருகிறேன்.''
''உம்மை நான் கட்டித் தழுவி விடையளிப்பதற்கு அனுமதிப்பீரானால், நான் இந்தப் பணத்தை ஏற்றுக் கொள்வேன்.''
''அதற்கென்ன, மகிழ்ச்சியுடன் அனுமதிக்கிறேன்!''
இருவரும் மனமுவந்து ஒருவரையொருவர் கட்டித் தழுவிக் கொண்டோம். பிறகு மிஸ்டர் அஸ்ட்லே போய்ச் சேர்ந்தார்.
இல்லை, அவர் சொன்னது சரியல்ல! பலீனாவையும் தெ கிரியேயையும் பற்றி நான் மிதமிஞ்சிக் கடுமையாகவும் அசட்டுத்தனமாகவும் பேசினேன் என்றால், ருஷ்யர்களைப் பற்றி முடிவு செய்வதில் அவர் மிதமிஞ்சிக் கடுமையாகவும் அவசரக்காரராகவும் இருந்தார். என்னைப்பற்றி நான் ஒன்றும் சொல்லவில்லை, ஆயினும்... ஆயினும்..... இவை யாவும் சொற்கள், வெறும் சொற்கள் ! நமக்கு வேண்டியவை
W
450
-
-
செயல்கள். ஸ்விட்ஜர்லந்து இப்பொழுது எனக்கு மகத்தான முக்கியத்துவம் வாய்ந்ததாகிவிட்டது! ஆனால் நாளைக்கு, ஓ நான் புறப்பட்டு அங்கே போக முடிந்தால் எவ்வளவு நன்றாய் இருக்கும்! மீண்டும் உயிர் பெற்றெழுவேன், புதுப் பிறவி எடுப்பேன். அவர்களுக்குக் காட்டியாக வேண்டும்..... இன்னமும் நான் மனிதன் தான் என்பதைப் பலீனா தெரிந்து கொள்ளட்டும். ஒன்றே ஒன்று மட்டும் தான் வேண்டும்... இன்று நேரமாகிவிட்டது, ஆனால் நாளைக்கு .... எனக்கு ஒரு முன்னுணர்வு ஏற்படுகிறது, ஆம், அப்படியன்றி வேறு எப் படியும் நிகழ முடியாது! இப்பொழுது என்னிடம் பதினைந்து லுயிதோர் இருக்கிறது. சில சந்தர்ப்பங்களில் பதினைந்து கூல்டினுடன் தொடங்கியிருக்கிறேனே. கவனமாய் ஆட்டத் தைத் தொடங்கினேன் என்றால் .... நான் சிறுபிள்ளை அல்லவே! நான் போண்டியான மனிதன் என்பதை ஒரு போதும் மறக்க மாட்டேன்! ஆனால் - ஏன் நான் உயிர் பெற்றெழ முடியாது? என் வாழ்வில் ஒரேயொரு தடவையேனும் நான் எச்சரிக்கை யுடன், பொறுமையுடன் நடந்து கொள்ள வேண்டும் -அவ் வளவு தான் நான் செய்ய வேண்டியது! ஒரேயொரு தரம் நான் உறுதியாக இருந்தால் போதும், ஒரே மணி நேரத்தில் என் எதிர்காலத்தை மாற்றிக் கொண்டுவிடுவேன். பிரதான மானது நெஞ்சழுத்தம். ஏழு மாதங்களுக்கு முன்பு ருலெட் டன்பர்கில், இறுதிக் குலைவு ஏற்படுமுன் நடைபெற்றதை நான் நினைத்துப் பார்த்தாலே போதுமே. ஓ, நெஞ்சு உறு திக்கு அது எவ்வளவு சிறப்பான ஓர் எடுத்துக்காட்டு! நான் அனைத்தையும் இழுந்துவிட்டேன், ஆம், அனைத்தையும்...... காஸினோவை விட்டுப் புறப்பட்டு வெளியே போய்க் கொண் டிருந்தேன். அப்பொழுது என் மார்புக் கோட்டின் பையில் எதோ நகர்வது போல இருந்தது, இன்னும் என்னிடம் ஒரு கூல்டின் எஞ்சியிருந்தது என்பதைத் திடுமெனக் கண்டேன்.
• இரவு சாப்பிடலாம், கவலை இல்லை'' என்று என்னுள் கூறிக் கொண்டேன். ஆனால் நூறு அடி நடந்து செல்வதற்குள் என் எண்ணம் மாறிவிடவே, உடனே திரும்பினேன். அந்த ஒரு கூல்டினைக் 'குறைபாட்'டில் பணயமாய் வைத்தேன் (அப் பொழுது 'குறைபாட்'டில் தான் வைக்க வேண்டுமென்று தோன்றிற்று எனக்கு). தாயகத்தையும் நண்பர்களையும்
SU
451
விட்டுப் பிரிந்து அந்நிய நாட்டில் தனியே இருக்கிறோம், அன்று இரவு சாப்பிட என்ன கிடைக்கும் என்பது கூட தெரியாத நிலையில் இருந்து கொண்டு கையிலிருக்கும் கடைசி கூல்டினைப் பணயமாய் வைக்கிறோம் என்னும் அந்த உணர்வ இருக்கிறதே அதை என்னென்பது! நான் வெற்றி பெற்றேன். இருபது நிமிடங்களுக்குப் பிற்பாடு பாக்கெட்டில் நூற்றெழு பது கூல்டின்களுடன் காணீனோவிலிருந்து வெளியே சென்றேன். ஆம், உண்மை அது! கடைசியில் எஞ்சும் கூல்டினைக் கொண்டு என்னவெல்லாம் செய்யலாம் என்பதற்கு அது ஓர் எடுத்துக் காட்டு! அப்பொழுது நான் தைரிய மிழந்து இம்முயற்சியில் இறங்காது இருந்திருந்தால் ...... - நாளைக்கு, நாளைக்குப் பார்க்கலாம்!


-