தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Tuesday, December 25, 2018

அம்மா ஏன் இப்படி ...? - விக்ரமாதித்யன் ::: சுபமங்களா 8 மார்ச் 1993

அம்மா ஏன் இப்படி ...? - விக்ரமாதித்யன்
நெடுங்கதை 

சத்தியமாய் இது மனநோய் தான்; மனநோயில்லாமல் வேறென்னவாம்; ஒருவிதமான மனநோய்; அம்மாவுக்கு மனநோய்தான். பக்கத்தில் இருக்கிற பெண்களையெல்லாம் தேவடியாளென்று சொல்வது என்னவாக இருக்கும். அம்மா பாவம் தான், 

அம்மா இந்த மாதிரியே இல்லை; அவள் ரொம்ப நல்ல மனுஷி; இயல்பும் எளிமையுமாய் இருந்தவள்; யாரையும் எதையும் பரமாகப் பார்ப்பவள்; விகற்பமாக நினைக்கத் தெரியாது. வித்தியாசமாகப் பேசத் தோன்றாது அவளுக்கு. எந்தக் காலத்தில் தப்பாக நினைத்தாள் அவள்? 

திருநெல்வேலியில் வளவுசேர்ந்த வீட்டில்தானே இருந்தது; எல்லோரிடமும் அக்கா, மதினி, சித்தி என்றுதானே பழகினாள்; யார் கூட வாவது சண்டை போட்டதுண்டா; யாரோடேயாவது மனத்தாங்கல் வந்ததுண்டா; எத்தனை வருஷமாய் ஒரே அளவில் சூரியநாராயண பிள்ளை வளவில் இருந்தபோது செட்டிப் பிள்ளைமார் தெருவில் இருந்து போது, கீழத்தெருவில் குடியிருந்தபோது எந்த இடத்திலாவது முணும் கென்று சொல்லியிருப்பாளா. 

இப்போதுதான் இப்படி ஆகி விட்டாள்; எல்லாம் அப்பாவா தான். கமலா சித்தி வைத்த தீ இது எவ்வளவு வெள்ளந்தியாய் இருந்தாள் அம்மா; இப்படி கிறுக்கசயாகி விட்டாளே! 

இவர்கள் எல்லோரும் மெட்ராஸில். இருந்தார்கள். 

அப்பாவும் கமலா சித்தியும் கொஞ்சகால சினிஃபீல்டில் எக்ஸ்ட்ராவாக இருந்து பார்த்துவிட்டு ஒன்றும் சரி படவில்லையென்று குற்றாலத்துக்கு வந்து விட்டார்கள். வந்து இரு இடத்தில் வரிசையாய் மூணு பிள்ளைகாளை அம்மை போட்டுத் தூக்கி கொடுத்துவிட்டாள். "நீங்க அக்கா. கூடவே போய் இருங்க... எனக் பயமாக இருக்கு... நானும் என் பிள்ளைகளும் ஊருக்கே போயிருந்தோம்" 

அப்பாவுக்கு விடமுடியவில்லை .  எல்லாம் காலியாகி கமலா சித்தி தளவாய் முதலியார் மகனோடு ஓடிப் போன பிறகுதான், மனசு வெறுத்து அம்மாவைத் தேடி வந்தார்கள். ராமலிங்கம்பிள்ளை பெரியப்பாவும் பாம்பேயில் சரக்கு எடுத்து கிட்டு வரும் வழியில் வந்து சொன்னார்கள், "அவன் திருந்திட்டாம்மா. வேற யார் இருக்கா அவனுக்குப் பொம்பளை பிள்ளைய வச்சிட்டு தனியா இருக்க வேண்டாம்மா. நாளைக்கு அந்த பிள்ளைக்கு ஒரு நல்ல இடமா பாத்துக் கட்டி குடுக்கவாவது அவன் இருக்கட்டும்மா. இனிமே ஒழுங்கா வீடு குடும்பம்னு இருப்பான். என்கிட்ட வந்து சொன்னான். 'அண்ணன், நீ வந்து சொலுண்ணேன்' என்கிறான். திரும்பவும் என்னவும் பண்ணினான்னா ஜன்மத்துக்கும் நடையேத்தாதே." 

அக்காவுக்காகத்தான் அம்மா வைராக்யமாக இருக்க முடியாமல் போயிருக்கும். மெட்ராஸில் இருந்து கொண்டு என்ன செய்ய. ஊர்ப்பக்கம் போனால்தான் மாப்பிள்ளை பார்க்க முடியும். எஸ்.எஸ்.எல்.சி. பாஸ் பண்ணி விட்டாள்; கல்லூரியில் சேர்த்துவிட வசதியில்லையென்று சும்மாதான் இருந்தாள். 

அப்பா காவலன்கோட்டை ஐமீன் செகரட்டரியாகச் சேர்ந்திருந்தார்கள். ராமலிங்கம் பிள்ளை பெரியப்பாவிடம்தான் இரண்டாயிரம் ரூபாய் கடன்வாங்கி, பழைய மாம்பலம் வீட்டு வாடகை பாக்கியைக் கொடுத்து, நாடார் கடைக்குக் கொடுக்க வேண்டியதை கொடுத்து, புடவைக்காரருக்கும் பணம் கொடுத்துவிட்டு, ரயில் செலவுக்கும் வைத்துக் கொண்டது. இவன் படிப்புக்காகவும், தம்பிகள் படிப்புக்காகவும், வீடு வசதிக்காகவும் வாசுதேவநல்லூரிலேயே இருந்து கொண்டார்கள். அப்பா சைக்கிளில் போய் வந்தார்கள். காலையில் போனால் ராத்திரி எட்டு மணியாகிவிடும் திரும்ப. குத்தகை வசூலிப்பது, பஞ்சாயத்து கணக்கு என்று எதாவது வேலை இருந்துகொண்டே இருக்கும். - இவன் பத்து படித்துக் கொண் டிருந்தான். பெரிய தம்பிக்கு பிரை.வேட்டாக டியூஷன் வைத்துச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தது. அடுத்த வருஷம்தான் ஆறாவதில் சேர்த்துவிட வேண்டும். காவலன் கோட்டை பஞ்சாயத்து ஸ்கூலில் அஞ்சு பாஸ் பண்ணியதாக சர்டிஃபிகேட் வாங்கிக் கொள்ளலாம். சின்னவன் நாலு போய்க் கொண்டிருந்தான். அக்கா தையல் கிளாஸில் சேர்ந்திருந்தாள். எல்லாம் நல்லபடி போய்க் கொண்டிருந்தது. ரொம்ப காலத்துக்குப் பிறகு இவர்கள் எல்லோரும் ஒன்றாய் சேர்ந்திருந்தார்கள். சாப்பாட்டுக்கு கஷ்டம் இல்லை. எந்த கஷ்டமும் இல்லை. 

முதன்முதலில் இந்த ஊருக்கு வந்ததும் முல்லைவனம் அழகப்பன் பிள்ளை வளவில்தான் குடியேறியது. அந்த மாமா, அப்பா வழியில் தூரத்துச் சொந்தம். மாமா சங்கராபுரம் கணக்குப்பிள்ளையாக இருந்தார்கள். கொஞ்சம் புஞ்சைக்காடு உண்டு; சாப்பாட்டுக்குப் போதும். மேல் செலவுக்குச் சம்பளம் வந்து விடும். சொந்த வீடு. வளவில் மூன்று வீடுகள். மாமா வீடு கழக கடைசியில், மத்தியில் லோகநாயகி அத்தை வீடு. கிழக்கு பார்த்தது இவர்களது. தெற்கு மூலையில் ஒரு குச்சு கிடந்தது. அதுதான் மாமாவுக்குக் கணக்கு எழுதக் காம் மாமாவுக்கும் அப்பாவுக்கும் நல்ல பழக்கம். அப்பா வீடு பார்த்து கொண்டிருந்தார்கள். மாமாவை பார்க்க வரப் போக இருக்கை வீடு காலியாக இருந்தது தெரிந்து அப்பா வீட்டு விஷயத்தை பிரஸ்தாபித்ததும் சாவி கொடுத்து விட்டார்கள். 

லோகநாயகி அத்தைப்பற்றி ஊர்பூரா தெரியும். மாமாதான் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அண்ணன் பொண்டாட்டி. அண்ணன் மண்டையைப் போட்டு விட்டார். அதுக்குப் பிறகுதான் இந்த இடைபாடா... முந்தியேவா என்று தெரியாது. இந்த விஷயத்திலெல்லாம் எப்படி சொல்ல முடியும். அத்தைக்கு முதல் இரண்டும் பெண்கள். அடுத்தது ராமு. இவன்கூடத்தான் படித்துக் கொண்டிருந்தான். கடைக் குட்டி செம்பாவுக்கு ஏழு வயசு இருக்கும். எப்படியோ அந்த மாதிரியாகி விட்டது. அண்ணன் குடும்பத்தைப் பராமரிக்கப் போய் லோகா அத்தையை வைத்துக்கொள்ளும்படி ஆயிற்று. அல்லது லோகா அத்தையை வைத்துக்கொண்டதால் அந்தக் குடும்பத்தைக் கவனிக்கும்படி இருந்தது. மாமாதான் சின்ன அத்தை குடும்பத்தைப் பார்த்துக் கொண்டார்கள். 


பிள்ளைகள் எல்லாரும் வெடியாஞ் சுட்டிகள். பெரியவள் பக்கத்து ஊரிலுள்ள மகளிர் கல்லூரி விடுதியில் எழுத்தர். அந்த மதினி நல்ல அழகு. அப்போதே ஆண் சிநேகம். கல்யாணத்துக்குப் பிறகும் விட முடியாமல் விவாகரத்து வரை ஆனது. நடுவுள்ளவள் பற்றியும் தப்பாகப் பேச்சு அடிபட்டது. மைனர் செயின் போட்ட உள்ளூர் ஆர்.ஐ. சாதாரணமாக வந்து போய்க் கொண்டிருந்தான். பிறகு மிலிட்டரிக்காரனுக்கு கல்யாணமாகி கூட்டிக்கொண்டு போய் விட்டான். ராமு ராஜபாளையம் திருநெல்வேலி போய் புது சினிமா பார்த்து விட்டு வருவான். சின்னவள் வளர்ந்து பெரிய மனுஷியான பிற்பாடு இவனுக்குக் கூடப் பேசினார்கள். அம்மாதான் வேண்டாமென்று சொல்லி விட்டாள். 

மாமா குடும்பம் கீழ் வீட்டில் பிள்ளைகள், இருந்தது. இரண்டே மூத்தது பெண். சுமாராக இருப்பாள். அடிக்கடி ஹிஸ்டீரியா மாதிரி வரும். சின்னவன் சுபாவி. ஏன் இப்படி என்று தெரியவில்லை. அந்த அத்தை ரொம்ப நல்ல மாதிரி. அமைதியான குணம். எல்லாவற்றி லிருந்தும் ஒதுங்கியே இருந்தாள். மாமாவிடமிருந்தும். மாமாவுக்குச் சின்ன அத்தை வீட்டில்தான் சாப்பாடெல்லாம். அத்தை வீட்டுக்கு எல்லாம் வாங்கிப்போட்டு விடுவார்கள். அத்தைக்கும் மாமாவுக்கும் பேச்சுக் கிடையாது. - வீட்டுக்கு ஏதாவது வேணுமென்றால் அத்தை சின்னவனிடம்தான் சொல்லி விடுவாள், அம்மைக்குப் பெரிய அத் தையைத்தான் பிடிக்கும். அந்திக்குப் பிறகு வீட்டுக் காரியங்களை முடித்து விட்டு இருக்கிற நேரத்தில் அந்த அத்தை வீட்டுத் திண்ணையில் இருந்து பேசிக் கொண்டிருப்பாள். 

சின்ன அத்தை தப்பானவளாக இருக்கலாம். ஆனால், அன்பான மனுஷி. தப்பான பெண்கள் எல்லோருமே பிரியமானவர்களாகத் தான் இருப்பார்கள் போல. பிரியமாக இருப்பதுதான் தப்புப் போல. கீரைக்காரி வந்தால் கூப்பிட்டுச் சொல்வாள். கோலப்பொடி தெருவில் போனால் வேணுமா என்று விசாரித்து விட்டுப் போவாள். காய்கறி வண்டி வரும்போது மெனக்கெட்டுச் சொல்லி விட்டுப் போவாள். அரிசிக்காரி வரட்டும், சீனிக் கிழங்கு வரட்டும், உப்பு வண்டி வரட்டும், எது ஒண்ணு என்றாலும் கேட்காமல் இருக்க மாட்டாள். ஆரம்பத்தில்தான் இப்படி. போகப் போகத்தான் வீடு தேடி வருவது அம்மைக்குப் பிடிக்கவில்லையென்று தெரிந்து ஒதுங்கியிருந்து கொண் டாள். 

இவ்வளவு தாராள மனசுக்காரி கொழுந்தனிடம் ஒப்புக்கொடுத்ததில் பிழைசொல்லி என்ன பிரயோஜனம்? ஆனால், உலகம் ஒத்துக் கொள்ளுமா? பழி சொல்லியது. பாவம் பாராட்டியது. அத்தைக்கு மட்டும் குற்ற உணர்வு இல்லாமலிருக்குமா என்ன... எல்லாம் விதி! 

அத்தை நடத்தை கெட்டவளாகவே இருக்கட்டும்... தீபாவளியன்று விடியற்காலையிலேயே பலகாரம் கொண்டு வருகிற மனசு? ஏன் எடுத்துக் கொண்டு வரவேண்டும். விடிய விடிய விழித்திருந்து எண்ணெய்ச் சட்டிமுன் இருந்து சுட்டு முதலில் இவர்களுக்குக் கொடுக்கத் தோன்று கிறதே! 

அப்பாவை அத்தை அண்ணாச்சி என்றுதான் கூப்பிட்டாள், அப்படித்தான் பாவித்தாள். அது போல ஒரு அண்ணனை அவள் வாழ்க்கையில் பார்த்திருக்க மாட்டாள்; அதுதான் பாசம். இதெல்லாம் அம்மாவுக்குப் புரியவில்லை ; விகற்பம் கற்பித்துப் பேசினாள். 

அத்தைக்கு என்ன வயசு? 47 என்ன உடம்பு? வாழ்க்கையில் அடி பட்டு நைந்து இற்றுப் போய் விட்டாள். படுக்கத் தோன்றுமா யாருக்கும்? அம்மா விசித்திரமா. கற்பனை செய்து கொள்கிறாள். அத்தை பாவம்... எப்போதோ பண்ணிய பாவத்துக்கு இப்போது பழி சுமக்கிறாள்! 

அத்தை இவனிடம் அன்பாக இருந்தாள்; அக்காவிடம் எவ்வளவு பிரியம் காட்டினாள்! தம்பிகளைத் தன் பிள்ளைகள் போலவே நடத் தினாள். சின்ன வயசில் செய்த தப்புக்கு இன்றைக்குச் செருப்பாலடிக்கலாமா.. 

அப்பா எல்லோரிடமும் சகஜமாகப் பழகுவார்கள்; சரளமாகப் பேசுவார்கள்; அப்பாவின் முகராசி, பழகும் விதம், பேச்சு சுவாரஸ்யம் எல்லோருக்கும் பிடித்துப் போகும்; வலிய வந்து பேசுவார்கள். இன்னொன்று... அப்பாவுக்கும் பெண்களிடம் பழகப் பேசப் பிடிக்கும். அதுக்காக ஊரில் உள்ள பெண்களையெல்லாம் அப்பாவோடு சேர்த்துப் பேசுவதென்பது வக்ரம்... 

அம்மா மனசு எல்லோருக்கும் தெரிந்து போயிற்று. மாமா மறுகிப் போனார்கள்; அத்தை கூனிக் குறுகிப் போனாள்; பிள்ளைகள் சங்கடப்பட்டார்கள். அப்பா கோபப்பட்டார்கள். பெரியத்தை ஒரு மாதிரி சந்தோஷப்பட்டாள் என்றுதான் சொல்ல வேண்டும். தன்னால் கழியாத வன்மம். பிறகென்ன... வேறு வீடு பார்க்கச் சொன்னாள் அம்மா. அப்பாவுக்குத் தலைவலி போனால் போதும் என்றாகிவிட்டது; வீடு மாறினார்கள், 


சீனியாபிள்ளை வீடு என்று விளங்கி வந்தாலும் அது நாராயணபிள்ளை பொறுப்பில்தான் இருந்து வந்தது; சீனியாபிள்ளையிடம் ஒத்தி பிடித்திருந்தார். நாராயணபிள்ளைக்குக் கொஞ்சம் வயல்காடு இருந்தது; சாப்பாட்டுக்கு நெல் வந்துவிடும். மேல் செலவுக்கு இட்லிக் கடை. முதல் தாரம் செத்துப் போய், இரண்டாம் தாரம் கட்டியிருந்தார். முதல் தாரத்துக்கு ஒரு பையன்; பன்னி ரெண்டு வயசு இருக்கும். இரண்டாம் தாரத்துக்கு இரண்டு பிள்ளைகள். பெரியவனுக்குப் பத்து வயசு இருக்கும்; சின்னவள் எட்டு வயசு? நாராயணபிள்ளைக்கு இட்லிக் கடையை விட்டால் வீடு 

மனைவி மக்கள்தான். காலையில் கடைக்கு வாங்கிப் போட்ட தினத்தந்தியை மத்யான சாப்பாட்டுக்குப் பிறகு படித்து விட்டு தூங்கி விடுவார். எப்போதாவது ராமகிருஷ்ணா டாக்கீஸ் போனால் உண்டு. வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி நாலு காசு சேர்த்து வைத்துத்தான் இந்த வீட்டை ஒத்தி பிடித்தது. 

இவர்கள் வீட்டுக்கு அடுத்தது  அவர்கள் வீடு; அங்கே பிள்ளைகள் சலித்துக் கொண்டிருந்தால் இங்கே கேட்கும்; முன்வாசல் திண்ணைப் பக்கம் ஒரு தட்டி மறிப்புத்தான், நாராயணபிள்ளையை விட அந்த அக்கா சற்றே மீர்க்கம்தான்; வயசு என் காரணமாக இருக்கும். நாராயணபிள்ளை எலும்பும் தோலுமாகத்தான் இருப்பார்; முகத்தில்  ஒரு கிழத்தனம் தெரியும்; உடம்புவாகா... வயசா என்று சொல்ல மடியவில்லை . அந்த அக்கா உடம்பு மேலெல்லாம் சிரங்கு வந்த மாதிரி இருக்கும்; முகம்கூட கொஞ்சம் வறண்டு காய்ந்திருக்கும். இவர்கள் அந்த வீட்டுக்குக் குடிபோன பிறகு ஒரு குழந்தை பிறந்தது. குழந்தை உண்டாயிருந்த சமயத்தில்தான் அவள் அழகாயிருந்தாற்போலப் பட்டாள். பாவம், அந்த அக்காவும் க ஷ்டப்பட்ட குடும்பம் அங்கப் போய்த் தானே ரெண்டாம் தாரமாக வாக்கப்பட்டிருப்பாள். உடம்பும் அழகும் வசதி சம்பந்தப்பட்டதும் கூடத் தானே கொஞ்சம் கொஞ்சம். இந்த வீட்டுக்கு வந்த பிற்பாடு எல்லாம் இயல்பாக மாறிவிட்டிருந்தது. அம்மா சுபாவமாக இருந்தாள்; ஒரு பிரச்சினையும் இல்லை . 

- இந்த ஊருக்கு வந்த மறு வருஷமே அக்காவுக்கு கல்யாணமாயிற்று. பெரியம்மைதான் முன் கையெடுத்து எல்லாம் செய்தாள்; வயசாகுதே என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தவள் - தென்காசி, கடையநல்லூர் என்று அலைந்து திரிந்து மாப்பிள்ளை பார்த்தாள், கல்கத்தாவில் தூர தொலைவு என்று எல்லோரும் பெண் கொடுக்க யோசித்துக் கொண்டிருந்தபோது. அதெல்லாம் பார்க்க வேண்டாம் என்று சொல்லி சம்மதிக்க வைத்தாள். கையில் பணம் இல்லையே என்று அப்பா மலைத்து நின்ற போது சுபகாரியத்துக்குத் தன்னால் வரும்... முகூர்த்தத்துக்கு நாள் பாருங்க என்றாள். எல்லாம் நல்லபடி முடிந்தது; இப்போது நினைத்தாலும் மாயம் மாதிரிதான் இருக்கிறது அக்கா எப்போதுமே அதிர்ஷ்டக் காரிதான். அவள் நல்ல மனசுக்கு தேவதைகளின் ஆசீர்வாதம் கிடைத்துக் கொண்டே இருக்கிறது. 

எஸ்.எஸ்.எல்.சி. முடித்து திருவையாறு அரசர் கல்லூரியில் சேர்ந்து புலவர் படித்து விடலாம், தமிழாசிரியராவதுதான் இவன் லட்சியம். அரசர் கல்லூரியில் இலவச விடுதியும் இருக்கிறது... கவலையில்லை இவன் பட்ட கஷ்டத்துக்கெல்லாம் விடிவு பிறந்துவிடும்; அம்மாவை கண்கலங்காமல் பார்த்துக்குவான். இன்னும் அஞ்சு வரும் இப்படியே போனால் போதும்! * எல்லாம் நேராகி விடும். 

இடம் 

அம்மா மறுபடியும் ஆரம்பித்து விட்டாள். முழுசாக மூணு மாசம் கூட ஆகியிராது... அதுக்குள் பழையபடி புகார் சொல்லத் தொடங்கிவிட்டாள். அப்பா முன் வாசல் திண்ணைப் பக்கம் வந்து நின்று ஷ - போடும் போது புருபுருப்பாள்; அப்பாவுக்கு குரல் கொஞ்சம் பெரிசுதான்; சத்தமாகப் பேசுவதே அவள் கேட்கத்தான் என்பாள்; அப்பா இதையும் கேலியாக சமாதானம் செய்து பார்த்தார்கள்; அம்மா இதில் மட்டும் என்ன சொன்னாலும் நம்பத் தயாரில்லை . 

வரவர அம்மா சத்தம் போடுவது கூடிக் கொண்டே வந்தது; முன் வாசல் திண்ணையை ஒட்டி ஒரு அங்கணக்குழி இருந்தது; அதில் அப்பா குளிப்பது கொள்வது. அப்பா மெளனமாகத்தான் குளித்து விட்டு வந்துவிட வேண்டும்; இல்லை அவளுக்குத் தெரிய வேண்டும் என்று நடிக்கிறார். 

அம்மா பாவம்... ஆனால், அவள் செய்கிற பாவம்... நாராயண பிள்ளை வீட்டுக்காரி ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அப்பாவைப் பார்த்திருக்கலாம்; ஆசைப்பட்டுக் கூட இருக்கலாம். பிள்ளைமாரில் ஆணழகும் குறைச்சல், பெண்ணழகும் கம்பி; தப்பித் தவறி அழகாயிருக்கிற ஆணைப் பார்த்து பெண்கள் பிரமித்து நிற்பது இயல்புதான்; பிள்ளைமார்ப் பெண் கண்ணுக்குக் குளிர்ச்சியாக இருந்தால் ஆற்றில், குளத்தில் கல்யாண வீட்டில் பார்ப்பதில்லையா ஆண்கள்; அந்த மாதிரி தான் இதுவும்... இதுக்கு மேல் இதில் ஒன்றுமில்லை ... ஆசைப்படுவதென்றால் படுத்துக் கொள்ள என்று அர்த்தப்படுத்திக் கொள்ளக் கூடாது. மனித மன ரகசிய அறைகளில் தோண்டித் துருவி ஆராய்ந்து கொண்டிருந்தால் எப்படி... நிறைய விஷயங்கள் நொறுங்கிப் போகும். அம்மாவின் மனச்சுளுக்கு இப்படி நொறுக்கிக் கொண்டே இருந்தது. அப்பா ஏதாவது மறுத்துப் பேசினால் போதும், பிசாசாகி விடுவாள்; பேயாக மாறிவிடுவாள். 

வாசுதேவ நல்லூர் வந்ததிலிருந்து அம்மா சினிமா பார்ப்பது அதிகரித்தது. அம்மா அத்தையோடுதான். சினிமாவுக்குப் போயிருந்தாள். சின்ன தம்பி டியூஷன் போயிருந்தான்; பெரியவன் ரத வீதியில் எங்காவது நின்று கொண்டிருப்பான்; இவன் மட்டும்தான் வீட்டில் இருந்தான்; பொம்மை புரட்டிக் கொண்டிருந்தான். திருநெல்வேலி போயிருந்த அப்பா வருவார்கள் என்றுதான் இவனை வீட்டில் இருக்கச் சொல்லி யிருந்தது. 

எட்டரை மணி வாக்கில் அப்பா வந்தார்கள்; வீட்டுக்குள் நுழையக்கூட இல்லை; சட்டையைக் கழட்டிக் கொடியில் போட்டுவிட்டு அப்படியே பேண்டோடு முன் வாசலில் ஒட்டுத் திண்ணையில் படுத்து விட்டார்கள். இந்த ஒட்டுத் திண்ணை தெருவையொட்டி இருக்கிறது: தெருவில் நிற்கும் வேப்ப மரக் காற்று வீசும்; சிமெண்ட் தரைக் குளிர்ச்சி சுகமாக இருக்கும்; நன்றாத் தூக்கம் வரும்... ஒட்டுத் திண்ணை ஒரு சொர்க்கம். 

சினிமா விட்டு அம்மா வந்தாள்; அப்பா படுத்துக் கிடப்பதைப் பார்த்து விசாரித்தாள்; 'இங்கென்ன படுக்களை... உள்ளே போயி நொடக்க வேண்டியதுதான் என்றபடி வீட்டனுள் போனாள். "அப்பாவ எழுப்பி, உள்ள வந்து படுக்கச் சொல்றா" இவன் எழுப்பினான்; . அப்பா எரிச்சல் பட்டார்கள்; தூக்கக்கலக்கம் மாறவில்லை . 

அம்மா அடுப்பில் தோசைக் கல் போட்டிருந்தாள்; தம்பியை எழுப்பிச் சாப்பிட வைத்தது, பெரிய தம்பி அதுக்குள் வந்திருந்தான்; அவன் சாப்பிட்டான பிறகு இவன் சாப்பிட உட்கார்ந்திருந்தான். "ஏய்... நீ தின்னுட்டு அப்பா எழுப்பு... சாப்பிட வறாளா என்னன்னு கேளு... நான் கல்ல இறக்கிப் போடணும்” 

இவன் போய் எழுப்பினான்; எழுந்திருந்து திண்ணையிலேயே உட்கார்ந்திருந்தார்கள்;'ராஜு கைலி எடு" என்று கேட்டுக் கொண்டே பேண்டைக் கழட்டிக் கொண்டிருந்தார்கள்; இவன் கைலி. எடுத்து வந்து கொடுத்தான். அம்மா கூடவே வந்தாள்; அப்படியே நின்றாள்; அப்பாவை பார்த்தபடியே கத்த ஆரம் பித்தாள். 

"என்ன... அந்த தேவிடியா கூப்பிட்டு விட்டாளாக்கும்... போயி அழகு காட்டிட்டு நிக்கேரு... போரும்... அவ கூடப் போரும் வயசாக ஆக சின்னப் பிள்ளையளா தேடு தாக்கும். அவ அங்க நின்னு ஜாட காட்டுத்தும்... நீரு இங்க நின்னு சைக பண்ணுததும் தெரியாமலா நா இருக்கேன்... நா என்ன முட்டா சிறுக்கியா.. நீரு என்ன திருந்துவீரா இல்ல, உம்ம கட்டயில கொண்டு போயி வக்கிறவரைக்கும் இந்த வரத்துத்தான் வருவாரோ..." 

"லட்சுமி... நீ என்ன சொல்த... நா அசதில அப்படியே படுத்திட்டேன்... கேளு... நீ சினிமா போயிருக்கேன்னான் இவன்... வரட்டும்னு செத்த கண்ணசந்துட்டேன். நீ என்ன டான்னா லொட லொடங்க...' 

தெரியும்வே ... உம்மத் தெரியும். சண்டாளப் பாவி... இல்லேன்னா அன்னிக்கு எங்களை அப்படி. விட்டுட்டுப் போவேரா..." 

பொலபொலவென்று அழுது 

பம்பியபடி முன் வராந்தா நடையில் உட்கார்ந்து கொண்டாள். அப்பா சடென்று தாங்கிப் பிடித்தபடி தாளைத் தட்டி அமர்த்தினார்கள். லட்சுமி... இது என்ன கற்பனை... வ பாவம், வங்கொரங்கு கணக்காருக்கா, அவளப் போயி என்னோட இணச்சுப் பேசுதிய... அசிங்கமாருக்கு. சரி... இன்னும் சாப்பிடலல்லா ... வா, சாப்பிடுவோம்.... என்ன சினிமாவுக்குப் போன... Tு, போயி பழமும் சிகரெட்டும் வாங்கிட்டு வா... சட்டைப் பையில காசு எடுத்துட்டுப் போ". - இந்த அரவத்தில் சின்னவன் கழித்து எழுந்து மலங்க மலங்க பார்த்துக் கொண்டிருந்தான்; இவன் பாய் அவனைத் தூங்கப் பண்ணினான், 

இரண்டு புலிகள் ஆக்ரோஷமாய் கொஞ்சி விளையாடிக் கொண்டிருக்கிற மாதிரி ஒரு காட்சி மண்ணில் பட்டு இவன் தூக்கம் கெட்டு யோசித்துக் கொண்டிருக்கையில் ஏனோ தோன்றியது. இந்த வாழ்க்கை, இந்த மனிதர்கள், இந்த உலகம் எதுவும் சரியில்லை ...' தலையணையில் முகம் புதைத்து ரகசியமாய் அழுதபடி தூங்கிப் போனான். 

குழந்தையண்ணன் வீட்டு மதினி வெகுளி ; தள்ளி நின்று பேசத் தெரியாது; சகஜமாகத்தான் பழகுவாள்; இரண்டு பிள்ளைகள் பிறந்த பிற்பாடும் சுபாவத்தை மாற்றித் கொள்ளத் தோணவில்லை அவளுக்கு; பொதுவாகப் பிள்ளைமார் வீட்டுப் பெண்கள் இப்படி இருப்பதில்லை; ரொம்ப அடக்க ஒடுக்கமாக இருக்கும்படியே வளர்த்து விட்டிருப்பார்கள். மதினி - தாய் தகப்பன் இல்லாமல் ஆச்சி வளர்ப்பு; புளியங் குடி ஊரில் பிள்ளைமார் குடும்பங் களும் அதிகம் இல்லை ; அதிகம் படித்தவளும் இல்லை. எப்படியோ இந்த மாதிரி கள்ளங்கபடி.ல்லாமல் வளர்ந்து விட்டிருந்தாள். பெரியம்மை கூட இருந்திருந்தால் இந்தக் குணம் அழிந்து போயிருக்கும். மாமியாருக்கும் மருமகளுக்கும் ஆரம்பத்திலேயே ஒத்துப் போக வில்லை; - பெரியம்மை சின்ன மகனுக்குப் பொங்கிப் போட வந்து விட்டாள். அண்ணனும் தூத்துக்குடி. ராமநாதபுரம் இப்படி வேலையாக இருந்தான், மதினிக்குப் பிள்ளை மார்ப் பெண் குணம் படியவே இல்லை . 

அக்கா மறுவீட்டுக்கு வந்திருந்தவள் பெண்கள் பந்திக்குப் பரி மாறிக் கொண்டிருந்தபோதே அம்மா முகம் மாறிவிட்டது: சிடுசிடுத்துக் கொண்டிருந்தாள் இவர்களிடம். பாயாசம் இருக்கா அத்த என்ற கேட்டு வந்தவளிடம் ஆக்குப்பறையில போயிப் பாரு என்று வெடுக்கென்று சொல்லி அனுப்பி விட்டாள். மதினிக்கு அப்போது கூட புரியவில்லை. சாப்பிட வர்றீஹளாத்த என்று கூப்பிட்டு கொண்டு வந்து நின்றாள்; எனத்தல்லாம் ஒழிச்சுப் போடனும், நீ போயி சாப்பிடு என்று சொல்லி விட்டாள் அம்மை. 

அப்பா அந்தப் பக்கமாக வந்திருந்தார்கள். மறுவீடு சுருக்கமாக வச்சா போதும்னுதான் சொல்லிருந்தது... எதுக்கு இவங்கள்லாம் அக்குஸா அழைச்சிக. யார் யாருக்குப் பத்திரிகை அனுப்பிதேன்னு சொன்னீ ஹளா... இந்த திருட்டுப்புத்தி தான போமாட்டேங்கு... பெரியவன் கூப்பிட வேண்டியதுதான்... இவன் எந்த நாள்ல வீடு தேடி வந்தான். கையில இருந்தாத்தான் உங்களைப் பிடிக்க முடியாதே". 

சாப்பிடாமல் அடுக்களையில் போய்ப் படுத்துக் கொண்டாள்; அப்பாதான் தாங்கித் தடுக்கிச் சாப்பிட வைத்தார்கள். மாப்பிள வீட்டுக்காரங்களுக்கு முன்னால கேவலப்படுத்திராத லெட்சுமி... எதுன்னாலும் பிறகு பேசிக்கலாம் என்று பச்சைப் பிள்ளைக்குச் சொல்வது போலச் சொல்லித் தணித்தார்கள். 

பங்குனி உத்ரத்துக்குக் குற்றாலம் போய் கருப்பசாமிக்குப் பொங்கலிட்டு வீட்டுத் திரும்புகையில் நன்றாக இருட்டி. விட்டது. பெரிய அண்ணாச்சி குடும்பத்துக்குக் குல தெய்வம் சங்கிலிபூதத்தான்; அண்ணாச்சி வீட்டில் முன்னமேயே வந்திருந்தார்கள், நேரத்தோடு திரும்பி விட்டார்கள். கருப்பையா அண்ணன், அண்ணாச்சி கூடயே போய் விட்டான். குழந்தையண்ணன் சித்தி சித்தி என்று இவர்களோடேயே இருந்து விட்டான். அன்றைக்குப் பார்க்க பஸ்ஸில் சரியான கூட்டம். இரண்டு, 

மூணு பஸ்ஸை பார்த்து விட்டு அப்பா டாக்ஸி பேசி அமர்த்திக் கொண்டு வந்தார்கள். தென்காசி வந்து - ஷெகண்ட் ஷோ - கந்தன் கருணை பார்த்துவிட்டு, மதினிக்குச் சொந்தக் காரர்களான டாக்டர் பிள்ளை வீட்டுக்கு வந்து படுத்துக் கொண்டார்கள்; முன்பே சொல்லி வைத்து விட்டுப் போயிருந்தது. 

பொங்கலிட்டுச் சாப்பிடவே நாலு நாலரையாகி விட்டிருந்தது; ராத்திரி யாருக்குமே ஒன்றும் வேண்டியதிருக்கவில்லை. சினிமா விட்டு வரும்போது அப்பா லாலாக் கடை போய் அல்வா வாங்கிக் கொண்டு வந்தார்கள். மதினிதான் எல்லோருக்கும் எடுத்துக் கொடுத்தாள். 

விடியக் கருக்கலில் எழுந்து பஸ் ஸ்டாண்ட் வந்து காபி குடித்து விட்டு வாசுதேவநல்லூர் பஸ்ஸில் ஏறினார்கள். அண்ணனும் மதினியும் புளியங்குடியில் இறங்கிக் கொண்டார்கள். 

எப்போது வெளியூர் போய்விட்டு வந்தாலும் அம்மா வழக்கத்தை விட வேகமாக வீட்டுக் காரியங்களைப் பார்ப்பாள். 

அன்றைக்கு வீடு வந்து சேர்ந்ததுமே ஒரு மாதிரி இருந்தாள்; எந்த - வேலையும் செய்ய ஆரம்பிக்கவில்லை, இவன் போய் காபி போடலியாம்மா என்று கேட்டான். உங்கப் பாட்ட போய் கேளு... கடையில வாங்கி சப்ளை பண்ணுவாரு என்றாள். இவனுக்குப் பட்டுவிட்டது இன்றைக்குத் தீபாவளிதான். | அப்பா ஜமுக்காளத்தில் காலாட்டிக் கொண்டு படுத்துக் கிடந்தார்கள்; பெரியதம்பி பல் தேய்த்துக் கொண்டிருந்தான்; சின்னவன் வெளிக்குப் போய் விட்டு வந்து கால் கழுவத் தண்ணீர் ஊற்றச் சொல்லிக் கொண்டிருந்தான். அம்மா நேரே வந்து அப்பா மார்புப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டாள்; அப்பா என்ன என்பது போலப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். 

"என்ன... அந்த சிலுப்பட்டக் காரிய நினைச்சுகிட்டு படுத்திருக்கேரா... நேத்து அவ்வளவு செலவு செஞ்சு சினிமாவுக்குக் கூட்டிட்டு போனேரே... என்னிக்கு வே அல்வா வாங்கிட்டு வந்திரு... அந்த ஆளய பார்த்ததும் வாங்கச் சொல்லுதாக்கும் உமக்கு... மருமகளா காரியமா இல்ல உமக்கு: மாமனார்னு ஒதுங்கி நடக்கத் தெரியல அவளுக்கு... நீரு புளியங்குடி போறப்பல்லாம் அவன் வீட்டுக்குப் போய் வர்றது எதுக்குன்னு எனக்கு நேத்திக்கில்லா தெரிஞ்சுது... எவ்வளவு காலமா இப்டி ... அவ மாமா மாமான்னு இளிக்கதும், நீரு எம்மா எம்மாங்கதும் நாடகம்  மாதிரில்லா இருக்கு..." 

அப்பா உக்கி போய் விட்டார்கள். படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்து கொண்டார்கள், லெட்சுமி. என்ன பேசுதந... எதுக்கும் ஒரு முறையிருக்கு. அந்தப் பிள்ளையாரு... மகன் பொண்டாட்டி... மக மாதிரி..." - "ஆமா... பெரிசா விண்ணானம் கொழிக்காதேரும்... ரொம்ப யோக்கியம் உங்க பரம்பரை... கணபதியா பிள்ளை கதயல்லாம் தெரியாதாக்கும் எனக்கு... இந்த வெளிப் பேச்செல்லாம் எதுக்கு..." 

அப்பா ஒன்றும் பேசவில்லை... சட்டையை மாட்டினார்கள்; சைத்கிளை எடுத்தார்கள்; புறப்பட்டு போய்விட்டார்கள். 

அம்மாவுக்கு யார் மீது கோபம் அப்பா மேலா... கமலா சித்தியிடமா... சரி அதை யாரிடம் காண்பிப்பது... இப்படியா அக்கா இங்கே வீட்டில் இருந்தவரைக்கும் மெளனமாக இருந்து கொண்டாள். அவள் என்றைக்குத்தான் உதாரமாகப் பேசினாள். தம்பிகளுக்கு எதுவும் விளங்கவில்லை. இவனுக்குத்தான் கோபம் கோபமாக வரும்... அப்பா கூட எப்படியோ அமைதியாகவே இருந்து கொண்டிருந்தார்கள்; பண்ணிய பாவம் சும்மா போகுமா. அண்டை வீடுகளில் என்ன நினைத்துக் கொள்வார்கள்... 

- இவனும் ஒவ்வொரு தடவையும் சொல்லிப் பார்த்து விட்டான்... மாமா வளவில் குடியிருந்தபோதே சொன்னான். "லோகநாயகியத்த பாவம்... அவளல்லாம் இந்த மாதிரி சொல்லாதம்மா" அம்மா இவன் வாயை அடைத்து விடுவாள், "நீ எல்லாம் கண்டவன்... சும்மா கி சீனியா பிள்ளை வீட்டில் இருந்த சமயம் எரிச்சல் பட்டு பேசியிருக்கிறான்: "ஏம்மா என்ன இது..' எல்லாரையும் தேவடியாளன்னுட்டி ருக்க... உனக்கென்ன ஆச்சு..' "உனக்கு என்னடா தெரியும். அவ இங்க வந்து நின்னுட்டுத்தான் சேல மாத்துதா... வேற இடம் இல்லையாக்கும் 

"நீயென்ன பேசுதன்னு தெரிஞ்சு தான் பேசுதியாம்மா... அன்சி சித்தி சித்தின்னு வந்திட்டிருக்கா? உன் குணம் தெரிஞ்சுது. நொந்து போயிருவான்". "அவன் பொண்டாட்டி வர்ற வரத்து அவனுக்கு தெரியாம அலையுதான்.. மாமனார் முன்னாடி என்ன  - பேச்சும் வேண்டிக் கிடக்கு அவளத" 

இவனுடைய மண்டைக் குடைச்சி தீராது என்றுதான் பட்டது. 

இந்த வளவுக்கு வந்து மாதம் போலாகிறது. எதிர் வீட்டில் என்ன சிரிப்பும் 

"இது மூணு 

லீலா மதினி இயல்பாக வந்து பேசுவாள். அம்மா வயசுக்குப் பார்த்தால் தங்கச்சியாகக் கூட இருக்க மாட்டாள். அக்காவை விட நாலைந்து வயசு கூட இருக்கும். ஆறு வயசில் ஒரு பையன் இருக்கிறான்; அது கூட ஒன்றிரண்டு வருஷம் பிந்திப் பிறந்ததுதானாம். பதினெட்டு வயசில் கல்யாணம் ஆகியிருக்குமா. அவள் வீட்டுக்காரர் குமாரபுரம் கிராம முன்சீப். அப்படி யொரு அப்பாவி மனுஷன். அந்த வேலை அண்ணாச்சியுடைய திறமையில் கிடைத்தது இல்லை. தாத்தா செல்லையா பிள்ளைக்குப் பிறகு, அப்பா சங்கரன் பிள்ளைக்குப் பிறகு இவருக்கு வந்தது. 

செல்லையாபிள்ளையும் சங்கரன் பிள்ளையும் இந்த கிராம முன்சீப் வேலையில் சம்பாதித்துதான் ரெண்டு கோட்டை விதப்பாடும் வாங்கி, இந்த வீடும் கட்டி வைத்து விட்டு போனார்கள். முத்தையா பிள்ளை அண்ணாச்சிக்கு வீட்டு வாடகை இல்லை; சாப்பாட்டுக்குக் கவலையில்லை ; நெல் வந்து விடும்; மேல் செலவுக்கு சம்பளப் பணம் இருக்கவே இருக்கிறது. தாத்தாவைப் போலவோ அப்பாவைப் போலவோ அண்ணாச்சிக்கு விவகார ஞானம் போதாது. ஆனாலும் எப்படியோ வருமானம் வந்து கொண்டுதான் இருந்தது. 

அண்ணாச்சி ஒத்தை ஒரு பிள்ளை; சின்ன வயசிலேயே அம்மா செத்துப் போய்விட்டாள்; அப்பா தான் வளர்த்தது; கூடமாட கிராமத் துக்குப் போக வர இருந்தும் தொழில் பிடிபடவில்லை ... அண்ணாச்சி அவ்வளவு எளிய சுபாவம் உள்ளவர்; கணக்கு வழக்குக்கு லாயக்கில்லாதவர்; காசு பணம் பத்திரப்படுத்த முடியாதவர்; வம்சாவளியாக கிராம முன்சீப் வேலை. சங்கரன் பிள்ளை தங்கச்சி, மகள்தான் லீலா மதினி. வீட்டுக்கு வந்த மகா லட்சுமி. 

லீலா மதினிக்கு திருநெல்வேலி டவுண்; தெக்குப் புதுத் தெரு: எல்லா திருநெல்வேலிப் பிள்ளைமார் பெண்களைப் போலவும் மதினி ரொம்ப நாகரிகம்; அவள் தழையத் தழைய சேலை உடுத்தியிருக்கிறளா கரண்டைக் காலைத் தொடுகிறார் போல கட்டியிருக்கிறாளா என்று சொல்வது கஷ்டம்; சரோஜாதேவி நீள ஜாக்கெட் போடுகிற காலத்தில் மதினியும் நீள ஜாக்கெட்தான் போட்டிருப்பாள்; வெண்ணிற ஆடை நிர்மலா அம்மைத் தழும்பு தெரிய சோளி போட்டிருக்கிற நேரத்தில் மதனியும் அப்படித்தான் போடுவாள். மகனுக்கு ஆம் வயசாகிறபோதுகூட மதினி ஜிமிக்கு போட்டிருந்தாள், இந்த வளவுக்கு வந்த புதிதில் நத்து போட்டிருந்தாள்; இப்போதும் கொலுசு என்றாலே லீலா மதினியின் சிவந்த பாதம்தான் ஞாபகத்துக்கு வருகிறது. இவனுக்கு விவரம் தெரிந்து மிக அழகாகக் கண்மை பூசியிருந்தது லீலா மதினிதான். பிருஷ்டம் தொடுகிற - கூந்தல்; கோணல் வகிடுதான் எடுத்துச் சீவியிருப்பாள்; மிதந்த விழிகள் மிதந்தபடி அலைபுரளும். 

வளவில் அஞ்சு வீடுகள்; சுகுணா இல்லம்; அதையொட்டி இவர்கள் வீடு; அதற்கு அடுத்தது கண்ணாடி வாத்தியார் வீடு; இந்த மூணும் வடக்கு பார்த்தது, எதிரே இடது புறம் சின்ன குச்சு சும்மா கிடந்தது; பிறகு * மதினி வீடு. 

வீடு பார்த்து பால் காய்ச்சிக் குடி வந்ததும் முதன் முதலாக மதினிதான் யார் வந்திருக்கா என்று கேட்டுக் கொண்டே வந்தாள். அன்றைக்கு மதினி ரொம்பவும் அழகாக இருந்தாள்; நீல வண்ணப் புடவையில் நட்சத்திரம் போட்டிருந்தது. அப்பா, அம்மா சேகர், ஆறுமுகம், அக்கா இவன் எல்லோரும் இருந்தார்கள். அக்கா முகத்தில் ஒரு சின்ன வானவில். சென்னையிலிருந்து இங்கு வந்ததிலிருந்து அவளுக்கு சிநேகிதியே கிடையாது; அப்பா ஏறெடுத்துப் பார்த்துவிட்டுத் தலையைக் கவிழ்த்துக் கொண்டார்கள்; இவன் நிமிர்ந்து பார்த்து பார்த்தபடி நின்றான்; பிள்ளைமார் பெண்ணில் இவ்வளவு அழகா... அம்மாகூட சிரித்த முகத் தோடு வாம்மா என்று சொல்லி ஒரு தம்ளரில் பால் ஊற்றிக் கொடுத்தாள். 

மதினி அதுக்கு அப்புறம் தன் போக்காய் வந்து கொண்டிருந்தாள்; அக்கா தையல் கிளாஸ் போய்க் கொண்டிருந்தாள்; அப்படி ஒரு ஸ்கூல் இருக்கிறது என்பதையே மதினி தான் தெரிவித்தாள். மகனுக்குப் பிறந்த நாள் வந்தபோது சர்க்கரைப் பொங்கல் எடுத்துக் கொண்டு வந்தாள். திருநெவேலிக்குப் போய்விட்டு வந்தால் ரத்னா டாக்கீஸிலும். ராயல் டாக்கிஸிலும், பாபுலர் தியேட்டரிலும் பார்த்த சினிமாக் கதைகள் ஒன்றுவிடாமல் அந்திக்குப் பிறகு முன்னிரவில் திண்ணையில்உட் கார்ந்து சொல்வாள். 

தலையாரி கொண்டு வருகிற பணத்தை பீரோவில் வாங்கி வைப்பாள்; அண்ணாச்சி வேலையில் சரத்தில்லாமல் இருந்தால் இப்படி இருக்கக் கூடாதுய்யா என்று உஷார்படுத்து வாள், 

அம்மா ஒரு தடவை கருப்பையா  அண்ணன் கல்யாணத்துக்குப் போக வேண்டி வந்தபோது இவனுக்கு அரை பரீட்சை ... இவனை மதினி வீட்டில் விட்டு விட்டுப் போனாள். எந்த நாளும் நாளும் காலையில் சுடச் சுட இட்லி எடுத்து வைத்தாள்; பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் சுடு சோறு பரிமாறுவாள்; ராத்திரிக்கு தோசை ஊத்தட்டுமா என்று கேட்டு தோசை சுட்டு போடுவாள்; சொந்த மதினி போலவே பார்த்துக் கொண் டாள். 

மதினிக்கு வீட்டு வேலை அதிகம் இல்லை . வயதான மாமனாருக்குக் கஞ்சி இட்லி, குழைந்த சோறு போதும்; , பையன் இரண்டு படித்துக் கொண்டிருந்தான்; இதுதான் வேண்டும் என்பதில்லை; அண்ணாச்சி வெளியே வேலையாகப் போனால் சாப்பிட்டு விட்டு வந்து விடுவார்கள்; சாப்பாட்டில் சுவனம் இல்லா மனுஷனும் கூட மதினி என்ன சமைக்கிறாள் என்றே தெரியாது. ஒரு வேளை சில பெண்களைப் போல படபடவென்று எல்லாவற்றையும் முடித்து விடுவாளாக இருக்கலாம்; எப்படியோ நிறைய நேரம் இருந்தது; காலையில் ஒரு முறை வந்து விட்டு போவாள்; மத்தியான சாப்பாட்டுக்குப் பிறகு ஒரு முறை; சாயங்கால வேளை ஒரு முறை, ராத்திரி ஒரு முறை கண்டிப்பாக. 

அம்மைக்கு மதினி இப்படி அடிக்கடி வந்து போவது பிடிக்காமல் போக ஆரம்பித்தது: எதிர் எதிர் வீடு; நினைத்த நேரமெல்லாம் வருவாள்; போவாள். காலையில் அப்பா இருப்பார்கள். ராத்திரி அப்பா வருகிறபோது இவர்கள் மாநாடு முடிகிற கூட்டத்தில் இருக்கும். அப்பாவுக்காக வருவதாக அம்மா நினைத்துக் கொண்டாள். கல்யாணமாகி எட்டு வருஷமாகி, ஒரு பிள்ளையும் பெற்ற மனுஷி அப்படியா ஒரு அந்நிய மனுஷனை தேடி வருவாள். மதினி அன்பான மனிதர்களைத் தேடித்தான் வந்தது. அக்காவும் - இவனும் தம்பிகளும் அம்மாவும் அப்பாவும் பிரியமானவர்களாக இருப்பதாக உணர்ந்திருக் கிறாள் போல. 

இவன் எதிர்பார்த்துக் கொண் டிருக்கிறான்; இல்லை : பயந்து கொண்டு... அது அப்படியே நேர்ந்தது... "அந்த சிறுக்கிக்கும் உமக்கும் என்ன; உன்னைத் தேடிக்கிட்டுத்தான் அந்த தேவடியா வர்றா... அவளை யார் அழைச்சுது. நீ இருக்கும்போது வர்றா... அவ கூடவே போயிரும்." 

அம்மைக்குப் பழையபடி ஹிஸ்டீரியா... எவ்வளவு அசிங்கமாக பேசுகிறாள். இதைக் குணப்படுத்தவே முடியாதா... பாவமாக இருக்கிறது அவளைப் பார்த்தாள். கோபமாகவும் இருக்கிறது... இந்த கொடுமைக்கு என்ன செய்ய... கடவுள்தான் அவளைக் காப்பாற்ற வேண்டும். 

லீலா மதினி திருநெல்வேலிக்கு அம்மை வீட்டுக்குப் போவதும் அப்பா கலெக்டர் ஆபீசுக்குப் புறப்படுவதும் சமயங்களில் ஏக காலத்தில் தான் நிகழ்கிறது... அதுக்காக இரண்டு பேரையும் சேர்த்துப் பேசுவது பைத்தியக்காரத்தனம். 

அப்பா யாரையும் வளைத்துப் போடக் கூடியவர்களாக இருக்கலாம்... ஆனால், அம்மா மதினியைப் பேசுவது பாவம்! அப்பாவுக்கு ஜமீன் செகரட்டரி என்ற அந்தஸ்து இருந்தது; ஒரு நடிகனுக்குரிய உடம்பும் அழகும் எல்லோரையும் நின்று பார்க்க வைத்தது: நாப்பத்திச் சில்வானம் வயசு என்றால் யாரும் நம்ப மாட்டார்கள்; ஆச்சி போட்ட சாப்பாடு; தாத்தா சம்பாத்தியத்தில் பாதி அப்பா உடம்புதான். அந்த உயரமும் கம்பீரமும் உரமும் பிள்ளைமாரில் அபூர்வம்... திருநெல்வேலிப் பிள்ளைமார்க்கான எல்லா கல்யாண குணங்களும் அப்பாவுக்கு உண்டுதான்; ஆனால், அம்மா வீணாய்க் கற்பனை செய்து கொள்கிறாள். மதினி சிவாஜிகணேசன் படத்துக்குத் திரும்பத் திரும்பப் போகிற மாதிரி இவர்கள் வீட்டுக்கும் வருகிறார்கள்; இதில் என்ன தப்பு. அப்பா சிவாஜிகணேசன் மாதிரி தான் இருந்தார்கள்; இவ்வளவு கஷ்டத்துக்குப் பிறகும் ஒரு வாட்டம் இல்லை ... ஜமீன் பழக்கத்தில் மான் கறி, மிளாக் கறி, முயல் கறியெல் ஒலாம் சாப்பிட்டுச் சாப்பிட்டு விஸ்கியும் பிராந்தியும் மண்டைராமையத்தேவர் வடிசரக்கும் குடித்து குடித்து தேவமாராகவே ஆகிவிட் டிடருந்தார்கள்; பேச்சு, பழக்க வழக்கம் எல்லாவற்றிலும், பெண்கள் ஆசைப்படத்தான் செய்வார்கள். மதினி அப்படி இல்லையென்று எப் படிச் சொல்ல முடியும்... அம்மாவுக்கு யுக்தியான மனசு. எப்படியோ கண்டுபிடித்து விடுகிறாள்... கண்டு பிடித்து சண்டை போடுகிறாள். 

இந்தப் பத்து வருஷத்தில் அம்மை சன்னமாக ஒடுங்கி விட்டாள்; கல்லிடைக்குறிச்சியில் அப்பளமாய் போட்டுத் தேய்ந்த உடம்பு... பட்டணத்தில் ஐயர் வீடுகளில் பத்துப் பாத்திரம் விளக்கிப் பிள்ளைகளை வளர்த்து இற்றுப் போனாள்... எண்ணெய்ச் சட்டி முன் இருந்து நைந்து விட்டிருக்கிறாள். மனசும் திரிந்து போயிற்று; இயல்பிலேயே கொஞ்சம் கோபக்காரி ; பட்டுப்பட்டு, பாடு தொலைத்து சுபாவமே மாறிவிட்டது. அநியாயத்துக்குச் சிடுசிடுப்பு வந்து சேர்ந்திருக்கிறது; எதற்கெடுத்தாலும் எரிச்சல்படுகிறாள்; வார்த்தைகள் தீக்கங்குகளாகத் தெறிக்ககின்றன. எப்போதும் இப்படியில்லை; திடீர் திடீர் என்றுதான். அக்காவுக்கு கல்யாணமாகிற வரை அவளோடு சண்டை போட்டு அழ அழ வைத்துக் கொண்டிருந்தாள்; அவள் கல்யாணமாகிப் போன பிறகு வீட்டில் மாட்டிக் கொண்டது அப்பாதான்; இவன்மேல் ஒரு பிரியம் வைத்திருந்தாள் சண்டை வராது: தம்பிகள் சின்னவர்கள்; தப்பித் தவறி இவனோடு சண்டை வந்தாலும் பெரிசுபடுத்த மாட்டாள். அப்பாவைப் பழிவாங்குகிறாளா என்ன..." 

இப்போதெல்லாம் லீலா மதினி இவர்கள் வீட்டுக்கே வருவதில்லை; பேச்சு வார்த்தையும் அற்றுப் போயிற்று. ராசியாக இருந்த நாள்களில் கொல்லைப்புறம் இருக்கும் சிவப்புக் கனகாம்பரம் - பறித்துத் தொடுத்து அக்காவுக்கும் கொடுத்து மதினியும் சூடிக் கொள்வாள்; சினிமாவுக்குப் போகலாமா என்று கூப்பிட்டு வருவாள்; செவ்வாய்க் கிழமை மாரியம்மன் கோயில் போகையில் சித்தி என்று தேடி வருவாள்; கிராமத்திலிருந்து யாரும் கத்திரி, வெண்டை , புடலை, பீர்க்கை , பூசனியென்று கொடுத்து விட் டால் பங்கு பிரித்து கொடுப்பது போல எடுத்துக் கொண்டு வருவாள். அம்மையும் வஞ்சகமில்லாமல் செய்வாள். கூட்டாஞ்சோறு பொங்கினால் கூட கொடுத்து விடுவாள்; முறுக்கு சுட்டால், சீடை போட்டால், களி கிண்டினால், இடியாப்பம் பிழிந்தால், அடைக்குப் போட்டால், கொழுக்கட்டை அவித்தால் மதினி வீட்டுக்குத் தனியே எடுத்து வைத்துக் கொடுத்து விடுவாள். 

இப்போது ஒரு வெறுமை கவிந்திருந்தது: மதினி இவர்கள் வீட்டில் யாரைப் பார்த்தாலும் முகத்தை திருப்பிக் கொள்கிறாள்; பாராதது மாதிரி போய்விடுகிறாள். ஒரு வளவுக்குள் எத்தும் எதிருமாக இருந்து கொண்டு இப்படியிருப்பது கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஆனால், அண்ணாச்சி எப்போதும் போலக் தான் இருக்கின்றார்கள்; லேசாய் உதடு பிரிகிற சிரிப்பு என்றைக்கும் போல் இன்றைக்கும் மாறாதிருக்கிறது... என்ன என்பது போல ஒரு பார்வை எப்போதும் போலிருக் கிறது... அண்ணாச்சிதான் சரி போல; மதினி போலப் பழகவும் வேண்டாம். ஒதுங்கவும் வேண்-டாம். 

- சேகர் படிக்கானா என்று சகலமாகக் கேட்பார்கள் அண்ணாச்சி; எங்கே அப்பா ஊரில் இல்லையா என்று விசாரிப்பார்கள்; அத்தான் வந்திருக்காஹளா என்று கேட்டுவிட்டுப் போவார்கள்; யாரு வந்திருக்கா என்று கேட்பார்கள். எப்படி முடிகிறது அண்ணாச்சிக்கு. அம்மை பேசுவது தெரியும்; மதினிக்கும் இவர்கள் வீட்டுக்கும் பிடிக்காமல் போனது புரியும். இவ்வளவுக்கும் பிறகும் அப்பா கருப்பையா கடையில் நின்று சிகரெட் பிடித்துக் கொண்டிருக்கையிலோ, பஸ்ஸுக்கு நிற்கையிலோ அந்தப் பக்கமாக வந்து விட்டால் பார்க்காமல் பேசாமல் போகமாட்டார்கள். அண்ணாச்சி அபூர்வமான மனுஷன்தான். 

லீலா மதினி சின்னத் தங்கச்சிக்கு கல்யாணமென்று அன்றைக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தாள்; அண்ணாச்சி வசூலுக்குக் கிராமத் துக்குப் போய் விட்டிருந்தார் காலையிலேயே. மதினிக்கு திருநெல்வேலி கிளம்பினாலே சிறகுகள் முளைத்து விடும்; தனி குதூகலம் வந்து விடும்; முகமெல்லாம் பூரிப்பு கூடி விடும்; வளவையே கலக்கி விடுவாள், அன்றைக்கும் அப்படித்தான்... 

அப்பா குஞ்சு ராஜாவுக்கு ஆஸ்டல் பணம் கட்டவேண்டுமென்பது முதல் நாளே சொல்லியிருந்தார்கள். காலையில் இட்லி சாப்பிட்டு காப்பி குடித்ததும் சிகரெட் பிடித்தபடி அம்மையிடம் வந்து பணம் எடுத்துக் கொடுத்தார்கள்; "லட்சுமி இந்த அம்பத ரேஷனுக்கு வச்சுக்கோ: கோதுமையும் வாங்கிடு; மைதா, | ரவை போட்டான்னா வாங்கிக்கோ. டோபி வந்தார் இருபது ரூபா கொடுத்திரு. பிறகு கணக்குப் பாத்தி தர்றேன்னு சொல்லு. சுப்பையபிள்ளை கடைக்கு முந்நூறு  கொடுத்து விட்டிரு: லிஸ்ட் போட்டு பெரியவன்ட்ட கொடுத்து வாங்க நா அப்படியே ராஜபாை போயி பங்களா குத்தகை வாங்கிட்டு புதங் கிழமதான் வருவேன்" ஏர்-பேக்கில் பேண்ட் வு எடுத்து வைத்தார்கள்; பேள் பிரஷ், சோப் டப்பா, ஷேவிங் ஷெட் எல்லாம் எடுத்துதார்கள், 

''ஜபாளையம் அடுப்பில் இட்லித் தட்டை எடுத்துக் கொண்டிருந்த அம்மா ஆவேசமாக எழுந்து வந்தாள்; ஏர்பேக்கை எடுத்து விட்டெறிந்தாள்; அப்பா கால்மாட்டில் விழுந்து முட்டி முட்டி அழுதாள்: "நீரு போகக் கூடாது ... அந்த தேவிடியா குண்டியத் திருப்பினதும் நீரும் புறப்படுதிரு. எனக்கு ஒண்ணும் தெரியாதுன்னா நினைச்சிட்டிருக்கீங்க... பாம்போட காலு பாம்பறியும். அவ திண்ணையில நின்னுட்டு, கண் ஜாட காட்டுதா... நீரு இங்க இருந்துட்டு தலையாட்டுதீரு என்ன நினைச்சிட்டு அலையும் தீங்க மனசுக்குள்ள... ரெண்டு பேரும் திருநெல்வேலி போயி கும்மாளம் போடுத்து எனக்குத் தெரியாதாக்கும். போ வேண்டாம் இன்னிக்கு நீரு: போனா இருக்கு.” 

அப்பா ஏந்தி எடுத்துக் கொண்டு தேற்றினார்கள்; மடியில் போட்டுக் கொண்டார்கள்: "இல்ல லட்சுமி இல்ல... சொன்னா கேளு. இல்லாததும் பொல்லாததும் நினைச்சுக் கற்பன பண்ணிட்டு இருக்க நீ. நா வேணா போல... இந்த மாரில்லாம் பேசாத, அவ புருஷன் காதுக்குக் கேட்டா பாவம்..." 

“எனக்குத் தெரியும்... எல்லாப் தெரியும்... அவளும் நீரும் ஒரே நாள்ல தான் போணுமா... அந்த முண்ட விளங்க மாட்டா... நா உம்ம நம்பமாட்டேன்". 

அப்பா பேண்டைக் கழட்டிவிட்டு கைலியை உடுத்திக் கொண்டு ஜமுக்காளத்தை எடுத்து படுத்தி காலாட்டிக் கொண்டு கிடந்தார்கள் அக்கா சாப்பிடாமலே தையா கிளாஸ் போனாள்; சின்னத்தம்பி பள்ளிக்கூடம் புறப்பட்டு போனான் சேகர் டியூஷனுக்குக் கிளம்பினான் அவர்கள் ரெண்டு பேரும் அப்போ சாப்பிட்டு விட்டிருந்தார்கள் இவனுக்குப் பசித்தது; பம்பு செட்டி இவ்வளவு நேரம் நின்று குளித்த தப்பு. 

"ஒழுங்கா இருந்தா இருக்கணும் 2ர் மேல போனா அப்படிே போணும். உமக்குல்லாம் எதுக் குடும்பம் பொண்டாட்டி பிள்ளைகள் அந்த மலையாளத்துத் தே யாளக் கூட்டிட்டு அலை மாதிரியே இன்னமும் அலையலாம் பாக்கேரு... சுட்டுக் கொல பறத்திருவேன் உம்ம. நீரு மனுஷன் வே..." படுத்திருந்தவள் எழுந்து உட்கார்ந்து கொண்டாள். 

அப்பா எழுந்து தண்ணீர் குடித்து விட்டு சிகரெட் பற்ற வைத்தார்கள்; பக்கத்தில் கிடந்த ஆனந்தவிகடனை எடுத்துப் புரட்டிப் பார்த்தார்கள்; இடது கையால் தலை கோதிவிட்டுக் கொண்டார்கள் சிகரெட்டை அணைத்துப் போட விட்டு வலது கை விரல் நகத்தைக் கடித்துத் துப்பிக் கொண்டிருந் தார்கள். 

"என்ன முழிச்சுப் பாக்கேரு... போமுடியலேன்னா.. அவ பஸ் ஸ்டாண்டில் காத்துக்கிட்டு நிப்பா, என்ன... அந்த வளவில் இருந்த வரைக்கும் அந்த சொறி பிடிச்ச முண்ட கீழ வளவில அறுதலி ... இங்க இவளா... நா விடுவனா ... அவங்க கூடயே போயி இருக்க வேண்டியது தான. எங்கூட இருந்தா ஒழுங்கா இருக்கணும். இல்லேன்னா போயிரனும்... எங்குடியக் கெடுத்த சண்டாளா... இன்னும் அலையுதேரே இப்ப டி ..." 

அப்பா எழுந்து நின்று கொண்டார்கள்; என்னவோ அருள் வந்த மாதிரி சுவரில் முட்டிக் கொண்டார்கள்: "லட்சுமி... ரொம்ப பேசுத... நா அன்னிக்கு செஞ்சதுக்கு இன்னும் எவ்வளவு காலம் அனுப்விக்கணும்... ஏழுமலையானே, என்ன சீக்கிரமே கொண்டு போயிறேன்... தாங்க முடியலியப்பா... நா இருக்கக் கூடாது.. செத்தாத்தான் நம்புவியா நீ..." 

அம்மா அதிர்ச்சியில் ஒன்றும் பேசவில்லை ; ஒரு ஓரமாக சுவரில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டாள். எடுத்து வைத்த இட்லியில் ஈக்கள் அரித்துக் கொண்டிருந்தன, இவன் போய் தட்டெடுத்து மூடி வைத்து விட்டு, அடுப்புத் தீயை இறக்கி வைத்துவிட்டு வந்தான். 

பசியும் மனசுக் கஷ்டமான வேகத்தில் இவன் கத்தினான்... "நீங்கள்லாம் சாவுங்க... செத்துத் தொலைங்க... உங்களோட இதே இழவா போச்சே... பொழுது விடிஞ்ச பொழுது அடைஞ்சா.. நீல்லாம் காட்லதான் போய் இருக்கணும்... யாரைப் பார்த்தாலும் தேவடியாங்கே... பக்கத்தில் பொம்பிளையே இருந்துரப்படாது உனக்கு, சக்களத்தியாக்கிருவியே முண்ட... நீ சாவு; செத்துத் தொல... உன் புருஷன் மம்முத ராஜா... ஊர்ல உள்ளவல்லும் அலையுதா, உனக்கென்ன கோட்டி பிடிச்சிருச்சா.. பெத்த பிள்ளையக் கூட சந்தேகப்படுவியே நீ... அந்த மனுஷன் என்னைக்கோ கூத்தியார் வச்சிருந்தான்னா அதுக்கு இப்படியா.. நீல்லாம் என்ன பொம்பளையா... பிசாசு. அப்படிப் போனாத்தான் போறாரு... என்ன குடிமுழுகிப் போகுது... ஏன் இப்டி ஆடுத... ராக்ஷஸி" 

இவனைப் பார்த்து சத்தமி டாள்; "என் கைச்சோந்த தின்னுட்டு பேசுவடா... நா போட்டம் பாரு... என் கைய முறிச்சு அடுப்பிலதான் வைக்கணும். உங்களைல்லாம் கைப் பாடுபட்டு வளத்ததுக்கு எனக்கு வேணும்; நீல்லாம் நல்லா இருப் யோ ..." 

"நல்லா ஒண்ணும் இருக்க வேண்டாம்; நாசமாகவே போறேன் போ; உங்க வயித்துல பிறந்துட்டு எப்படி நல்லா இருக்க முடியும். நீ போட்ட துல்லாம் போதும்; செருப்பாலடிச்சு சோறு போடுற ஜாதி நீங்க அக்கா தங்கச்சில்லாம்" 

"நா பொங்கி வச்ச சோத்த திங்காதடா நீ மனுஷன்னா ; போயிடு... போக்கழிஞ்சு போயிடு; என் மூஞ்சில முழிக்கக் கூடாது.” 

"உனக்கு கோட்டிதான் பிடிச்சிருக்கு, நானும் பாத்துட்டுத்தான் இருக்கேன்; நீ ஏன் இப்படி வர்றே...” 

"என்ன பேச்சு பேசுதான் பாருங்க.. அவன் இந்த வீட்ல இருக்கக் கூடாது; அவன் இருந்தா நா இருக்க மாட்டேன் இங்க..." 

அம்மை விருட்டென்று எழுந்து புற வாசல் பக்கம் போனாள்; இவன் வெளியே புறப்பட்டு வந்தான்; அப்பா கவரிலேயே சாய்ந்த மேனிக்கு காலை நீட்டியபடி ஓய்ந்து போயிருந்தார்கள். 

இரண்டு நாளாய் அம்மா சோறெடுத்து வைக்கவில்லை; தானே எடுத்து வைத்துச் சாப்பிடுவது சாப்பிட்ட மாதிரியே இல்லை; அம்மை தான் சொல்வாள்: "தான், வயித்துக்குத் திங்கக் கூட அளவு தெரிய லையே...” இவன் சாப்பிட வந்ததுமே பாட்டாளைக்குப் போய் இருந்து கொள்வாள். - மூன்றாவது நாள்; வருஷப் பிறப்பு. அப்பாவுக்கு இலை போடு கையில் இவனையும் கூப்பிட்டு விட்டார்கள்; பிறகு சாப்பிடுதேன் என்று சொல்லிப் பார்த்தேன்; சும்மா வாடா என்று அப்பா அழுத்திச் சொன்னார்கள்; இவன் போய் உட்கார்ந்தான்; அம்மை எப்போதும் போல பரிமாறினாள், 

சாப்பிட்டு, ரொம்ப நேரம் கழித்தும் வேப்பம்பூ பச்சடியின் தனி ருசி. நாவில் தங்கியிருந்தது. அம்மாவை அப்படிப் பேசியிருக்க வேண்டாம் என்று தோன்றிக் கொண்டே இருக்கிறது. 


ய1னை ரோமம் - வைக்கம் முகம்மது பஷீர் ::: மொ. பெ - எஸ். ராமகிருஷ்ணன்


இந்தக் கதை ஒரு திருட்டைப் பற்றியது. அதுவும் இரண்டு மாவுத்தர்களை சுருட்டி காலில் போட்டு மிதித்துக் கொன்ற, பெரிய தந்தங்கள் உள்ள கொம்பானையின் வாலில் இருந்து மயிர் திருடுவதை பற்றியது. இது எவருக்கும் அறியாமல் நடக்க வேண்டும். உம்மாவிற்கோ, வாப்பாவிற்கோ கூட தெரியாமல், மாவுத்தனுக்கும் கூட தெரியாமல் நடக்க வேண்டும். யானை வாலில் இருந்து மயிரைக் கடித்து எடுக்க வேண்டும். 

ஒரு யானையல்ல, மூன்று யானைகள் அங்கேயிருந்தது. இரண்டு பெண் யானைகளுக்கு ஊடே அந்த கொம்பானை இருந்தது. அதன் வாலில் இருந்துதான் முடி தேவையிருந்தது. எனக்காகக்கூட இல்லை ராதாமணிக்காக. அவள் என்னோடு படிப்பவள். எக்ஸைஸ் இன்ஸ்பெக்டரின் மகள். புத்தகத்திற்குள் வைத்துக் கொள்ள மயிலிறகு கொடுத்தவள். 

என்னை எல்லோரும் 'யானை ரோமம்' என்றார்கள். என்னோடு படிப்பவர்கள் என்னிடமே கேட்டார்கள், 

"யானை ரோமம்... ஏன் தள்ளிப் போய் உக்காந்திருக்கே?"-அல்லது 

"யானை ரோமம் செய்த கணக்கு தப்பு... ஜீரோ மார்க்தான்..." - என்னை அவர்கள் யானை வால் ரோமம் எனக் கூப்பிட்டார்கள். யானை ரோமம்! இது ரொம்ப வருடங்களுக்கு முன் நடந்தது. அப்போது எனக்கு எட்டு அல்லது ஒன்பது வயசிருக்கும். 

என் தம்பி அப்துல்காதர் என்னைவிட ஒரு வயது சிறியவன். அவன்தான் வீட்டின் செல்லம். பல கோவில்கள் சுற்றி, தவம் கிடந்து நான் பிறந்ததாக சொன்னபோதும், நான் யாருக்கும் செல்லமானவனாக இருக்கவில்லை. அப்துல்காதருக்கு சூம்பிப்போன கால்கள். அதனால் வீட்டில் எல்லோருக்கும் அவன்மேல் இரக்கம். அவன் நியாயத்தின் வடிவம் போல நடந்துகொள்வான். தப்பே செய்யாதவன் போல. எல்லா கலாட்டாக்களுக்கும் நான் பதில் சொல்லவேண்டும். 

நான் செய்யாத தவறுக்குக்கூட எனக்கு தண்டனை கிடைக்கும். நான் கட்டுமஸ்தான உடம்போடு இருந்தேன். அதற்காக குதிப்பது, ஓடுவது, நீந்துவது, மரமேறுவது எல்லாம் செய்வேன். நான் விசில் அடிப்பதில் கில்லாடி. இரண்டு விரல் வைத்து அடிப்பேன். ஏன் ஒரு விரல் வைத்து கூட விசிலடிப்பேன்.. சப்தமான விசில் அடிப்பேன். அப்துல்காதருக்கு இது போன்ற அரிய கலைகள் எதுவும் தெரியாது. இருந்தும் என்னைவிட படிப்பில் கொஞ்சம் கெட்டிக்காரன், அவன்கூட என்னை 'யானை முடி' எனக் கூப்பிட்டான். 

அந்தக் காலத்தில், நடந்து போகும் யானைகளை பார்ப்பதே வசீகரமாயிருக்கும் எங்களுக்கு. என்னுடைய அப்பா ஒரு மரவியாபாரி யாக இருந்தார். அவர் கடையத்தூர் மலைகளில் இருந்து மரங்களை வெட்டி, ஆற்றில் உருட்டி எடுத்து வருவார். மரக்கட்டைகளை எடுத்து வந்து வீட்டிற்கு பக்கமிருந்த காம்பவுண்டில் அடுக்க யானைகள் வேண்டியிருந்தது. யானைகள் கட்ட மற்றொரு காம்பவுண்ட் வீட்டுப் பக்கமேயிருந்தது. நான்தான் யானைகளுக்கு தேங்காய், பனங்குருத்து ஓலைகள் போடுவதை பார்த்துக் கொள்பவன். அதாவது நான், அங்கு நின்று அவர்கள் போடுவதை பார்த்துக் கொள்வேன். 

யானைகளுக்கு எல்லாம் சொந்தக்காரனாகவும், மாஸ்டராகவும் இருந்ததால் நிறைய வேடிக்கைகள் செய்வேன். சகதியை பெயர்த்து பெரிய துண்டாக எடுத்து யானையின் வயிற்றில் எறிவேன். அதைச் செய்யச் செய்ய திரும்பச் செய்யுமாறு தூண்டிக்கொண்டேயிருக்கும். சில சமயம் நண்பர்கள் யாராவது இப்படி எறியும்போது பார்த்துக் கொண்டேயிருப்பேன். ஒரு தடவை அந்த 'ஆந்தை தாமு' எறிவதற்குக் கூட அனுமதி தந்தேன். அவன் கொம்பானையின் மீதே பெரிய சகதியை தூக்கி எறிந்தான். வயிற்றில் விழுந்தது. இதற்காக அவன் சின்ன மாம்பழம் கொடுத்தான், எனக்கு. 

'ஆந்தை தாமு'விற்கு என் வயது தான். ஒரே வகுப்பில்தான் படித்தோம். ஆந்தை தாமுவிற்கு பெரிய வட்டமான சுழலும் கண்கள். அவன் முழுப்பெயர் தாமோதரன். அவனுடைய அப்பா சங்கரன்குட்டி என் அப்பாவின் மேனேஜர். சங்கரன்குட்டியின் அம்மா நஞ்சலி எங்கள் வீட்டின் சமையல்காரி, அத்தோடு அம்மாவிற்கு செகரட்டரி போல. ஒரு நாள் ஆந்தை தாமு என்னை 'யானை முடி' என்று கூப்பிட்டான். அதற்காக நஞ்சலி அவனை வீடு முழுவதும் விரட்டினாள். அவனைப் பிடிப்பதற்கு நான்கூட உதவினேன். அவன் அடிவாங்கும்பொது நான் பார்த்துக் கொண்டிருந்தேன். 

அதற்குப் பிறகு அவன் கேட்டான், "நீ மட்டும் என்னை 'ஆந்தை தாமு'ன்னு ஏன் கூப்பிடுறே?" "இனிமே கூப்பிடமாட்டேன்" "அப்படின்னா ... பழுத்த வாழைப் பழம் ஒண்ணு எனக்குதா... இல்லேன்னா... நான் மாவுத்தனிடம் போய் யானைமேல் களிமண் எறிவதை சொல்லிவிடுவேன்." 

"நீயும்தான எறிந்தே ..." 

"ஒரு அழகான பழுத்த மாம் பழம் வாங்கிக்கொண்டு, எனக்கு எறிய அனுமதிச்சது யாரு?" 

நான், அதற்கு பிறகு வீட்டில் இருந்து பழுத்த வாழைப்பழமாக சில திருடி எடுத்து வந்தேன். ஒன்றை ஆந்தை தாமுவிற்கும், இன்னொன்றை அப்துல்காதருக்கும் கொடுத்து விட்டு நான் ஒன்றைத் தின்றேன். மிச்சம் மிகுந்தததை மாவுத்தர்களுக்குக் கொடுத்தேன். 

நான் மாவுத்தர்களோடே எப்போதும் இருந்து வந்தேன். அவர்கள் தேவைகள் எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டேன். அவர்கள் 

எல்லாம் ஹிந்து. இந்த உலகத்திலே நான் மதிக்கும், வணங்கும் மனிதர் யார் என்றால், யார் இப்படி யானைகளைப் பார்த்துக்கொண்டு. சொல்லும் கட்டளைகளுக்கு யானைகளை படிய செய்யும் சூப்பர்மேன் மாவுத்தர்களைத்தான். ஒரு மாவுத்தனாக மாறுவதே என் லட்சியமாக இருந்தது. 

அந்த மந்திர வார்த்தையான 'செட்டியானா' அவர்கள் மூக்கில் இருந்து வருவது போலவே கேட்கும். அந்த கட்டளை வார்த்தை கேட்டதும் யானைகள் நடக்க ஆரம்பிக்கும். நான்கூட மூக்கால் இதை சொல்லப் பழகிவந்தேன். கொஞ்சம் எதிரொலிக்கும் சப்தம்கூட வந்தது இதில்... 'செட்டியானா... 'மாவுத்தர்கள் வைத்திருந்த அங்குசத்தை நான் கூர்மைபடுத்திக் கொண்டேன், அதை வைத்துதான் யானையின் பெரிய காதை குத்துவார்கள். அதை பத்திரமாக வைத்திருந்தேன். வீட்டில் இருந்த எவரையும் அதைத் தொட அனுமதிப்பதில்லை நான். 

மாவுத்தர்களுக்கு தேவையானதெல்லாம் நான் வாங்கிக் கொடுத்தேன். வெற்றிலை போட்டுக்கொள்ள நல்ல வெற்றிலைகள், பழுத்த பாக்கு, உயர் ரக புகையிலை எல்லாம் வாங்கிக் கொடுத்தேன். அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது கேட்டுக் கொண்டிருப்பேன். ஓ... நான் மட்டும் மாவுத்தனாகிவிட்டால்! 

அதெல்லாம் இனிமையான நாட்கள். எவ்வளவு வித்தியாசமானவை அவை. அந்த நாட்களில் சூரியன் பிரகாசமாக இருந்தது. நிலவொளி எங்கும் பரந்து சந்தோஷப்படுத்தியது. மலர்கள் நிறைய வண்ணங்களோடும், இனிமையான சுகந்தத்தோடுமிருந்தன. பறவைகள் இன்னிசை ஒலி எழுப்பிக்கொண் டிருந்தன. ஆற்றின் நீர் ஸ்படிகம் போல் ஓடியது. சுவையான மீன்கள் அதில் நீந்திக்கொண்டிருந்தன. ஓ... நாங்கள் பறவைகளுக்கும், மலர்களுக்கும் இடையே துள்ளிக்கொண்டு திரிந்தோம். எங்களைச் சுற்றிய உலகம் இனிமையாக இருந்தது. நாங்கள், எட்டுவயது பையன்கள் இந்த உலகத்தின் வாழ்வாக, ஆன்மாவாக இருந்தோம். எங்கள் வயதைவிட மூத்தவர்களை பற்றிய நினைவே இல்லாது போனோம். எங்களைவிட வயது குறைந்தவர்கள் எல்லாம் குழந்தைகளாக, ஆதிஉலகின் பகுதி களாக இருந்தார்கள். நாங்கள் பதினாறு வயது நிரம்பியவர்களை எல்லாம் வயதானவர்கள் என்றோம், ஆனால் ஒரு விஷயம். நாங்கள் வயதானவர்களை மதித்தோம். 

அந்த நாட்களில் நேரம் ரொம்பவும் முக்கியமானது. கைக்கடிகாரங்கள் அரிதானவை. பாக்கெட் வாட்சுகள்தான் நிறைய இருந்தது. என் அப்பாவிடம் இருந்தது ஒரு பெரிய பாக்கெட் வாட்ச். அப்பா கடிகாரத்தில் இருந்து நேரம் பார்ப்பதே ஒரு மாயமான வித்தைதான். அவர், ஆட்கள் அவரிடம் நேரம் கேட் பதை விரும்புவார். அவர்கள் கேட்ட பின்பு, லேசான சிரிப்போடு, பாக்கெட்டிலிருந்து கடிகாரத்தை வெளியே எடுப்பார். எடுத்த உடனே நேரம் சொல்லிவிடமாட்டார். முதலில் ஒருபக்கத்தை திறப்பார். அதற்கு பிறகும்கூட உடனடியாக சொல்ல மாட்டார். அது எப்படி செய்யப்பட்டிருக்கிறது என வியந்து கொண்டிருப்பார். பின் சொல்வார். நாங்கள் ஆச்சரியப்படுவோம். முடிவற்ற, எப்போதும் இருக்கும் காலம் வாட்ச் என்னும் இயந்திரத்திற்குள் சிறைப்பட்டிருப்பதாகத் தோன்றும். யார் இதை செய்திருப்பார்கள். எங்களுக்கு அதை பற்றிய ஐடியா இல்லை. அந்த வயதான மனிதரிடம் இதைப்பற்றிச் சொல்ல நிறைய இருந்தது. 

நாங்கள் கேட்டுக்கொண்டிருப்போம், ஆனாலும் நாங்கள் நம்ப மாட்டோம். அதற்காக எதிர்க்கவும் மாட்டோம். அமைதியாக இருப்போம், நேரத்தை கணக்கிட சூரியன் தான் எங்களுக்குத் துணை. சூரியன் தான் எங்கள் கடிகாரம். நாங்கள் எங்கள் நிழல்களை கொண்டு நேரத்தை அறிந்தோம். 

பொதுவாக, மற்றவர்களிடம் பாக்கெட் வாட்சுகள் கூட இருப்பதில்லை. எங்களிடம் வாட்ச் வைக்கும் பாக்கெட் இருந்தது. சட்டையில் இருந்த பைக்கு பக்கமாக வாட்ச் வைக்கும் பை. அப்துல்காதரும், நானும் வாட்ச் வைக்கும் பை உள்ள சட்டை வைத்திருந்தோம். எங்களிடம் தொப்பிகூட இருந்தது. நாங்கள் மலையாள பள்ளிக்கூடத்தில் படித்தோம். இங்கிலீஷ் ஸ்கூலுக்கு போகிறவர்கள்தான் கோட் போட்டு, தொப்பி வைத்துப் போனார்கள். இங்கிலீஷ் ஸ்கூல், அஞ்சாறு மைல் தள்ளியிருந்தது. இங்கிலீஷ் ஸ்கூலின் மாணவர்கள் ஒழுங்காக நடந்து போவார்கள். கோட் போட்டபடி, தொப்பி அணிந்து இங்கிலீஷில் பேசியபடி போவார்கள். நாங்கள் அதை ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருப்போம். 

நானும், அப்துல்காதரும் அராபிக் படித்தோம். நாங்கள் இங்கிலீஷ் கூட படித்தோம். அப்பா எங்களுக்கு வாக்கு அளித்திருந்தார். மலையாள ஸ்கூலில் நாலாம் வகுப்பு முடிந் தபிறகு அஞ்சாம் வகுப்பு இங்கிலீஷ் ஸ்கூலில் சேர்ப்பதாக. அதற்காக நாங்கள் கஷ்டப்பட்டு படிக்க வேண் டும் என்றார். புடசேரி நாராயணன் பிள்ளை சார் மிகுந்த உற்சாகத்தோடு எங்களுக்கு சொல்லித்தந்தார். சிலநேரம் எங்களுக்கு அடி கொடுப்பார். இருந்தாலும் நாங்கள் அவரை விரும்பினோம். அவரை மதித்தோம்... 

அந்தக் காலத்தில் ஸ்டிரைக் கிடையாது. ' வாத்தியார்களோ, மாணவர்களோ எவரும் ஸ்டிரைக் பண்ணுவது கிடையாது. நாங்கள் ஒழுக்கத்தோடு இருந்தோம். இல்லாவிட்டால் தண்டிக்கப்பட்டோம். சிலசமயம் தண்டனையோடு அடியும் கிடைக்கும். அதுபோதாவிட்டால், அந்தப் பையனை வகுப்பைவிட்டு வெளியேறச் சொல்லி வாசலில் நிற்கச் சொல்வார்கள். நான் பெஞ்சு மேல் ஏறி நின்றிருக்கிறேன். வகுப்பிற்கு வெளியேகூட நின்றிருக்கிறேன். 

நாங்கள் அந்த நாட்களில் படிக்கும்போது 'விசுவாசம்' என்ற தனி பாடமேயிருந்தது. அப்போது தேசத்தை மகாராஜா ஆண்டுகொண்டிருந்தார். எங்களின் அன்பான ஆட்சியாளர், திருவிதாங்கூர் மகாராஜா. கொச்சினுக்கு தனி மகாராஜா வேறு இருந்தார். மலபார் பற்றி நாங்கள் அப்போது கேள்விபட்டது வியப்புதான். அப்போது கேரளம் என்ற ஒன்றில்லை. திருவாங்கூர், கொச்சின், மலபார் எல்லாம் மலையாளம் பேசும் பகுதிகள். மலபாரை ஒரு கவர்னர் ஆண்டுவந்தார். அவர் நண்பர்களை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் சந்திக்கலாம். ஆனால் விரோதிகளை நீங்கள் எங்கும் சந்திக்க முடியாது ஏனென்றால் அவர்களை நீங்கள் உண்டு பண்ணினால்தான் முடியும். 

யாரோ ஒரு தீவின் அரசருடைய பிரதிநிதியாக அதை ஆண்டு கொண்டிருந்தார். அந்த அரசர்தான் இந்தியாவிற்கே அரசர். அதைபற்றி எல்லாம் எனக்கு அதிகம் தெரியாது. எனக்கு தெரிந்ததெல்லாம் அரசருக்கு விசுவாசமாக இருப்பதுதான். மகாராஜாதான் எங்களுக்கு கடவுள். மகாராஜா சாதாரணமாக பேசுபவரல்ல. அவர் மக்கள் விரும்பும் அரசர். மரியாதைக்கு உரியவர். நாங்கள் மகாராஜாவின் ஆட்சி நீடிக்கும் மாறு கடவுளிடம் பிரார்த்தனை செய்து வந்தோம். எல்லா நாளும் வகுப்பு ஆரம்பிக்கும் முன்பு மாணவர்கள், ஆசிரியர்கள் கைகளை நீட்டியபடி உறுதி எடுத்து, கைமடக்கி மாநில கீதம் இசைப்போம். அதன் பெயர் 'வன்ஷேச மங்களம்'- வஞ்சி நாட்டின் அரசரை கடவுள் அருள் பாலிக்க பாடும் பாட்டு அது. திருவாங்கூரின் இன்னொரு பெயர் அது. அது அவர் வெற்றியும் குறிக்கும். 

நாங்கள் மாளிகையின் வழியாக நடந்துதான் பள்ளிக்கூடம் போனோம். அப்போது பஸ், கார்கள் கிடையாது. ரோடெங்கும் சிவப்பு பொடி போல மரங்களாக நிறைந்திருக்கும். அதை ராஜபாதை என்றார்கள். சிலர் அதில் மாட்டுவண்டி ஒட்டிப்போவார்கள். சிலர் நடந்து போவார்கள். வரி செலுத்துபவர்கள் மட்டுமே நாட்டின் எல்லா உரிமையும் பெற்ற குடிமக்கள். அவர்கள் மட்டுமே ஓட்டுப் போட முடியும். அப்பாகூட நிலவரி கட்டுபவர்தான். 

மரங்கள் வெட்டும் இடத்திற்கு அப்பா நடந்தே மலையேறி போவார். வேலை நடக்கும் இடத்திற்கு போக இரண்டு நாட்கள் ஆகும். மலை வழியாகவும், காடு வழியாகவும் கடந்து போவார். உடன் ஆந்தை தாமுவின் அப்பா சங்கரன் குட்டி யும் போவார். வழியில் சாப்பிட சாப்பாடு பொட்டலம் கொண்டு போவார்கள். அந்த சாப்பாடு சாப்பிடவே எனக்கு ரொம்பவும் பிடிக்கும். அதனால் சங்கரன் குட்டி வீட்டில் ஒரு பொட்டலம் கொடுத்துப் போவார். அப்துல்காதர், ஆந்தை தாமு, நான் மூவரும் அதைச் சாப்பிடுவோம். 

அப்போதெல்லாம் எங்களுக்கு பசி அதிகமாக இருக்கும், தாகமும் தான். சாப்பிடுவதற்கும், குடிப்பதற்கும் நிறைய கிடைத்தது அப்போது. இருந்தாலும் அது எல்லாம் பற்றாமலேதான் இருந்தது எங்களுக்கு. கைக்கு கிடைத்ததெல்லாம் சாப்பிட்டோம். தண்ணீர் நிறையவும் குடித்தோம். பெரிய வயிற்றோடு, எங்காவது படுத்து உறங்கினோம். உம்மாவோ, நஞ்சலியோ யாராவது ஒருவர் உறங்கும் எங்களை இரவில் படுக்கைக்கு தூக்கிப் போவார்கள், படுக்கை அழகான பாயில் நிறைய படங்கள் எம்பிராய்டரி போல போட்டு, இலை உருவங்கள் பதித்தது. நானும், அப்துல்காதரும் அப்பாவின் பெட்டில் படுத்துக்கொள் வோம். பெரிய கட்டில் அது. நான், அப்துல்காதர், அப்பா மூவரும் ஒரே கட்டிலில், மற்றொரு கட்டிலில் உம்மா. நல்ல வசதியான படுக்கைகள் அது. 

ஒருநாள் பயங்கரமான சம்பவம் ஒன்று நடந்தது. நீதி, நியாயம் எல் வாம் கொஞ்சமும் கருணையின்றி கொல்லப்பட்டது போலானது. உலகத்தின் அழிவிற்கான வழி திறந்தது போலானது. விஷயம் வேறொன்று மில்லை , மூத்திரம், யாரோ ஒருவர்; படுக்கையில் இரவில் மூத்திரம் பெய்ததுதான். 

யார் அது? அப்துல்காதரா? அல்லது நானா? 

ஒரு அடையாளமும் தெரியவில்லை, யாரை தண்டிப்பது. அப்பாவும், உம்மாவும் ரொம்பவும் கவலைப்பட்டார்கள். அவர்களால் எந்த முடிவிற்கும் வரமுடியவில்லை . 

அதற்குபின் உண்மை , நியாயம், நீதி தூண்டப்பட்டது. அந்த மோசமான சம்பவம் ஒரு மாலையில் நடந்தது. சூரியன் மறையக்கூட இல்லை . வீட்டின் மேற்குபக்க கதவு வழியாக தென்னை மரத்தின் கீற்றிருந்தது. அதன் வழியாக கடந்து சூரியன் வந்து கொண்டிருந்தது. வேறு யாருமல்ல, சூரியனே அதற்கு சாட்சி. நான் ரொம்பவும் அவமானப்பட்டேன். முதல் தடவையாக இந்த உலகத்தின் முன் நான் தலை கவிழ்ந்து நின்றிருந்தேன். 

இப்போதும் அந்த காட்சி நினைவில் இருக்கிறது. எப்படி மறையும்? 

எங்கள் வீட்டின் முற்றத்தில் வெண்மணல் நிறைந்திருக்கும். அங்கேதான் அந்த நீதிபதிகள் வந்து உட்கார்ந்து கொண்டார்கள். எல்லோரும் வந்து விட்டார்கள். வாப்பாவும், அவருடைய நண்பர்களான மாதவா நாயர், கிருஷ்ணன், சேப் மாப்ளர், அபகரன் குட்டி இன்னும் அந்த பரவுத்தர்கள் எல்லாரும்தான். இது மட்டுமின்றி வாப்பாவுக்கு பிடித்து பான், என் மாமா பல சோரி முகமது அம் கூட வந்திருந்தார். விருது பால் உடற்கட்டா. அவருடய மடியில் அப்துல்காதர் பட இருந்தான். பெரியவர்கள் ஸ்ட்ராங் * குடித்துக்கொண்டு, பாலும், சர்க்ரயும் கலக்கிக் கலக்கி குடித்தபடி வெத்திலை போட்டுக்கொண்டார்கள், அப்துல்காதர் - கிளாஸில் இருந்து 18 யை ஆடித்தபடியிருந்தான். வாப்பா என்னை அந்த கூட்டத்தில் காதர் மாமாளின் இருந்து டீயை உறிஞ்சிக் தின் நடுவில் கூப்பிட்டார். நான் அவர்கள் முன் போய் நின்றேன். எதற்கு என எனக்கு தெரியாதுதான். வாப்பா அவருக்குப் பக்கத்தில் எனை நிற்க சொன்னார். என் வேஷ்டியை உருவிவிட்டு நிர்வாணமாக நிற்கச் செய்தார். என் இடுப்பில் ஒரு வெள்ளிக்கொடியும், வெள்ளி இலையுமிருக்கும். அவை இப்போது பொலிவு இழந்து போயிருந்தது. வாப்பா கூட்டத்தைப் பார்த்துச் சொன்னார், 

"பாத்தீங்களா... இந்த வெள்ளி கறுத்து, தன் தன்மைபோய் கிடக்கு" 

இத்தோடு பரவாயில்லை. இதை தொடர்ந்து வாப்பா உலகின் நியாயத்தை. உண்மையை, நீதியை உயிரோடு கொல்லுமாறான வார்த்தை களை பேசினார். அதாவது,  எடுங்க பையன் ராத்ரி வேளையில் படுக்கையிலே மூத்திரம் போய் விடுகிறான்" 

இதை கேட்டும் வானம் இடிந்து விடவில்லை . ஒரு இடிகூட இடிக்கவில்லை. சொல்லப்போனால் - லேசாக வெயில் மங்கியது எனலாம். மாதவன் நாயர் சொன்னார், "ராக் காச்சலாக இருக்கும்." 

நான் வேகமாகச் சொன்னேன் "படுக்கையில் மூத்திரம் போவது நானில்லை. அது அப்துல்காதர்." 

அப்துல்காதர் சொன்னான், "அது இக்காக்கா (அண்ணன்) நானில்லை" 

மூன்று பேர் படுக்கையில் படுக்கிறோம். காலையில் படுக்கை நனைந்து போயிருக்கிறது. யாரோ ஒருவர் மூத்திரம் பெய்து விடுகிறார், யார் அது? அதுதான் கேள்வி. நான் தான் அது என்பதற்கு என்ன சாட்சி. நான் உறுதியாகச் சொன்னேன் "நானில்லை " 

ஆனால் இந்த உலகம் ஒத்துக் கொள்ளவில்லை. நான் படுக்கையை நனைப்பவன் என முத்திரை குத்தப் பட்டேன். நான் சூரியனை நிமிர்ந்து பார்த்தேன். அது நகராமலிருந்தது பால தெரிந்தது. நான் உம்மாவைக் ப்பிட்டேன். அவளிடமிருந்து எந்த பதிலும் இல்லை . இந்த உலகம் என்னை புறக்கணித்தது. 

அவர்கள் எல்லோரும் சேர்ந்து காண்டு நியாயத்தை நிலைநாட்டினார்கள். ஒரே ஒரு வழிதான் இருக்றது. இதைப்போல படுக்கையில் மூத்திரம் போவதை நிறுத்த, அதை நான் செய்யவேண்டும் என்றார்கள். அது என்னவென்றால் - 'நான் கொம்பானையின் கால்களுக்கு ஊடே தவழ்ந்து போக வேண்டும்" என்பதுதான். 

தீர்ப்பு முடிந்ததும், கூட்டம் கலைந்தது. இந்த காரியத்தைப் பற்றி இன்னும் நினைத்துக்கூட பார்க்க வில்லை. நான் திரும்பிப் பார்த்த போது கொம்பானை தன் உடம்பெல்லாம் மண்ணை வாரிப் போட்டுக் கொண்டிருந்தது. தந்தம் பெரியதாய், அழகாயிருந்தது. அந்தக் கண்கள் இடுக்கிக்கொண்டு இரக்கத்தோடு தெரிந்தது. 

நான் உம்மாவிடம் போய் பயந்து போன குரலில் சொன்னேன், உம்மா... இதை கேட்டாய்தானே.... நான் கொம்பானையின் கால்களுக்கு இடையில் தவழ்ந்து போக வேண்டுமாம்." 

" அது நீ படுக்கையில் மூத்திரம் போவதற்காக கிடைத்தது..." என்றாள். 

நஞ்சலி என்னை ஆறுதல்படுத்தினாள். உனக்கு ராக்காச்சல் இருக்கு அதான்" 

அப்பா சொன்னார் "படுக்கையில் மூத்திரம் நீ போவதை நிறுத்த வேண்டுமானால் நீ கொம்பானை கால்களுக்கு ஊடே தவழ்ந்து போகத் தான் வேண்டும்." 

"அது சரி... நான் அந்த பெண் யானை கால்களுக்கு ஊடே வேண்டும்மானால் தவழ்கிறேன்." 

"முடியாது. நீ கொம்பானையின் கால்களுக்குள் தான் தவழவேண்டும். நீ ஒரு ஆம்பளை 

அவர்கள் தீர்ப்பைச் சொல்லி விட்டார்கள். நான்தான் படுக்கையில் மூத்திரம் போகிறவன். நான்தான் கொம்பானையின் கால்களுக்குள் புகவேண்டும். அது அப்படிதான். கருப்வ களை யானை எனை மிதித்து கொன்று போட்டால்! அவர்கள் சந்தோஷப்படுவார்கள். 'நான் ஒரு தியாகியாகி விடுவேன்' நான் என் முன்னே திறந்திருக்கும் பலிபீடம் பற்றி யோசிக்காமல் அங்கிருந்து நகர்ந்தேன். நான் இது போன்ற செய்திகளை காது கொடுத்து கேட்காமல் அமைதியாக, என் காரியத்தைச் செய்ய விரும்பினேன். 

அப்துல்காதர் பள்ளிக்கூடத்திலிருந்த ஒவ்வொருவரிடமும் சொல்லி விட்டான். 

பானையின் கால்களுக்கு ஊடே தவழப்போகிறான். படுக்கையில் மூத்திரம் போவதை நிறுத்தத்தான் இது. ராக்காச்சல் அவனுக்கு, அதான் படுக்கையிலே மூத்திரம் போகிறான்." அந்த காரியத்தை எங்கும் ஒலிபரப்பு ஆந்தை தாமுதான் அப்துல்காதருக்கு உதவி, 

இப்போது அப்துல் காதரின் இணைபிரியாத நண்பனாகி விட் டான் ஆந்தை தாமு. என் நண்பனாக இருந்தவன், அவன் பக்கம் மாறி அவனுக்கு விசுவாசியாக இருந்தான். இதற்காக அப்துல்காதர் கொஞ்சம் பொருட்களை தாமுவிற்கு வெகுமதியாக கொடுக்கவே நேர்ந்தது. என் பக்கம் இருந்த போது நான்கூட நிறைய கொடுத்திருக்கிறேன் தாமுவிற்கு. ஹல்வா... இனிப்பு மாமிசம் இன்னும் எத்தனை... நன்றி கெட்டவன். இந்த உலகத்திலே "நன்றி' அழிந்து கொண்டே வருகிறது. இந்த ஆந்தை தாமுதான் அதற்கு முழுக் காரணம்.

"படுக்கையை நனைப்பவன்" அவர்கள் என்னைப் பார்த்து கத்தினார்கள். ஒரு பையனல்ல... மொத்தக் கூட்டமும் சுத்தியது, படுக்கையை 

நான் அவர்களின் மனடே புகுந்து போர்முனையை சென்று அடைந்தேன். சிலரை எத்தித் தள்ளினேன், சிலரால் எத்தப்பட்டேன். சிலரை அடிக்கவும் செய்தேன். இது முடியும் போது எதிரில் புதுசேரி நாராயணப் பிள்ளைசார், கையில் குச்சியுடன் நின்றார். ஆந்தை தாமுவும், நானும் அடித்துக் கொண்டதற்காக சாட்சி அப்துல் காதர். 

இந்த அப்துல்காதர் கால்வாயை கடந்து போகும் தென்னைக்கட்டை பாலத்தில் இருந்து தவறி விழுந்த பொது காப்பாற்றியவன் நான். ஆற்றில் மூழ்கி வாய் நிறைய தண்ணீர் குடித்து பழகியபோது காப்பாற்றியவன் நான். இதை விடவும் நான் அவனின் மூத்த சகோதரன். இத்தனையிருந்தது. அவன் எனக்கு  எதிராக சாட்சி சொன்னான். இந்த உலகம் தீவினைகளால் அழிகிறது என்பதற்கு இதைவிட சாட்சி வேண்டுமா என்ன! நான் அமைதியாக இருந்தேன் 

ஆந்தைதாமுவும், அப்துல்காதரும் நான் செய்த காரியத்தை விதவிதமாக சொல்லிக்கொண்டிருந்தார்கள், நான் ஒவ்வொருவரையும் மிதித்ததாக, எனக்கு ராக்காச்சல் இருப்பதாக, படுக்கையில் மூத்திரம் பெய்வதாக... கொம்பானை கால்களுக்கு கீழே தவழப் போவதாக. 

புதுசேரி நாராயணப்பிள்ளை சார் கேட்டார். "யார் இவன் படுக்கையில் மூத்திரம் போவதாகச் சொன்னது?" 

அப்துல்காதர் சொன்னான், "அவன் படுக்கையில் மூத்திரம் போகிறான் சார்" 

அவர் சொன்னார், "அதை கேட்க வில்லை நான்" 

புதுசேரி நாராயணன் சார் என்னிடம் திரும்பிக் கேட்டார், 

"நீதானே... பொறித்த மீன் துண்டுகளை வாங்கிக்கொண்டு கணக்கு காட்ட முடியாது என சொன்னது?" 

அது நிஜம்தான். அதற்கும், இப்போதைய சம்பவத்திற்கும் என்ன சம்பந்தம்? 

அப்துல்காதருக்கும். எனக்கும் கணக்கு அவ்வளவாக வராது. அதற்காக தினமும் அடி வாங்குவோம். கொஞ்சம் முன்பு ஒருநாளில் அப்துல்காதர் கணக்கு தப்பாக போட்டதற்காக அடி வாங்கினான். என் பக்கத்தில் உட்கார்ந்து இருந்த ஒரு முஸ்லிம் பெண்பிள்ளைதான் எனக்கு கணக்கிற்கு விடை காட்டினாள். நான் இதனால் கிடைத்த புகழில் சந்தோஷமடைந்தேன். 

ஒரு இரவில் நாங்கள் சாப்பிடும் போது அப்துல்காதரின் சாதத்தின் மீது பொறித்த மீன் துண்டு இருந்தது. நான் என் பங்கிற்காக மீன் சாப்பிட்டு விட்டேன். அந்த மீன் துண்டை நான் எடுத்துவிடலாமா என யோசித்தேன். அப்துல்காதர் வேகமாக சாதம் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். 

"நீ அந்த மீன் துண்டை கொடுடா... உனக்கு கணக்கு காட்டுகிறேன்" என்றேன். 

கணக்கு தப்பாக போட்டு வாங்கிய அடிகளை மனதில் கொண்டு அப்துல்காதர் மீன் துண்டில் கொஞ்சம் பிய்த்து எனக்குக் கொடுத்தான். அதை நான் சாப்பிட்டேன். 

அதை அத்தோடு மறந்தாயிற்று. அது எப்படி தெரிந்தது. நான் என் கணக்கை எல்லாம் பக்கத்தில் இருந்தவளைப் பார்த்து சரியாகச் செய்தேன். இதை எப்படிப் போய் நான் உலகறியச் சொல்ல முடியும்? 

அடுத்த நாளும் நான் முன் போலவே அவளைப் பார்த்து கணக்குப் போட்டுவிட்டு அமைதியாக பிருந்தேன். அப்துல்காதர் கணக்கு இன்னும் செய்யவில்லை. அவனுக்கு எப்படி நான் கணக்கு காட்ட முடியும்? அப்படியே அவனுக்கு விடை காட்டினாலும் மொத்த வகுப்பே அதைப் பார்த்துக் கொண்டிருக்கும். நாராயணபிள்ளைசார் வேறு பார்த்துக் கொண்டிருப்பார். அந்த மீன் துண்டிற்காக நான் நன்றியுடையவன்தான். ஆனால் இப் போது என்ன செய்வது? 

கணக்கு செய்து முடிக்காதவர்களை எழுந்து நிற்கச் சொன்னார்கள். அப்துல்காதர் எழுந்து நின்றான். அவன் பதினோறாவது ஆள். எனக்குப் பின்னால் இருப்பவன். நாராயண பிள்ளைசார் ஒவ்வொருவராக பிரம்பை எடுத்து அடித்து வந்தார். அப்துல்காதர் இடத்திற்கு வருவதற்கு முன்பே சப்தமாக அழுதுவிட்டான். 

வாத்தியார் கேட்பார்... "அப்துல் காதர் எதற்கு அழுகிறாய்?" 

அப்துல்காதர் சொன்னான். நான் என் பொறித்த மீனையும் இழந்து இப்போது அடியும் -- வாங்க 'வேண்டியிருக்கிறது." 

"என்ன விஷயம்? என்ன நடந்தது? "எங்க அண்ணன் கணக்கு காட்டு வதாகச் சொல்லி மீன் துண்டை சாப்பிட்டுவிட்டு இப்போது கணக்கு காட்டமாட்டேன் என்கிறான். நான் எப்படி அடிவாங்குவது?" 

இனத எல்லாம் சப்தமாகச் சொன்னான். ஒண்ணாம் வகுப்பு மட்டுமல்ல, ரெண்டாம் வகுப்பு வரை இது கேட்டது. நான் இதற்காக வெட்கப்பட்டேன். என் கையை நீட்டச் சொல்லி இரண்டு அடி கொடுத்த தார் வாத்தியார். இது எதற்காக நான் அவனிடமிருந்து மீன் வாங்கி தின்றதற்காகவா, அல்லது அப்துல்காதருக்கு கணக்கு காட்டாதற்காகவா? எனக்குத் தெரியவில்லை . வாத்தியார்கள் இப்படி பையன்களை அடிக்கும்போது அதற்கான காரணத்தை கட்டாயமாக சொல்லி வேண்டும். அது நடக்கமாட்டேன் என்கிறது. 

நான் சொன்னது போல், இந்த உலகத்தில் நீதி, நியாயம் எல்லாம் அழிந்துதான் போய்விட்டது. இதை எதற்கு நாராயணபிள்ளைசார் இப்போது கிளப்புகிறார். இப்போதைய பிரச்சினை என்னை அவர்கள் கிண்டல் செய்து நான் அதற்கு சண்டை போட்டதுதானே. எப்படியிருந்த போதும், நான்தானே கொம்பானையின் கால்களுக்கு கீழே தவழப் போகிறவன். நான் எல்லாவற்றை யம் விளக்கமாகச் சொன்னபோதும் நாராயணபிள்ளை சார் புரிய வில்லை என்றார். 

அங்கிருந்த ஒவ்வொருவருக்கும் ஒரு அடி கொடுத்தார். எனக்கு இரண்டு அறை. அதில் ஏதாவது நியாயம் இருக்கிறதா...? இருந்த போதும் உலகம் இப்படித்தானிருக்கிறது, நான் சொல்லவில்லை உங்களிடம். இந்த உலகத்தைவிட்டு நீதி, நியாயம், உண்மை எல்லாம் பறந்து போய்விட்டது என்று. 

அதை அத்தோடு மறந்தாயிற்று. அது எப்படி தெரிந்தது? நான் என் கணக்கை எல்லாம் பக்கத்தில் இருந்தவளைப் பார்த்து சரியாகச் செய்தேன். இதை எப்படிப் போய் நான் உலகறியச் சொல்ல முடியும்? 

அடுத்த நாளும் நான் முன் போலவே அவளைப் பார்த்து கணக்குப் போட்டுவிட்டு அமைதியாக இருந்தேன். அப்துல்காதர் கணக்கு இன்னும் செய்யவில்லை. அவனுக்கு எப்படி நான் கணக்கு காட்ட முடியும்? அப்படியே அவனுக்கு விடை காட்டினாலும் மொத்த வகுப்பே அதைப் பார்த்துக் கொண்டிருக்கும். நாராயணபிள்ளைசார் வேறு பார்த்துக் கொண்டிருப்பார். அந்த மீன் துண்டிற்காக நான் நன்றியுடையவன்தான். ஆனால் இப்போது என்ன செய்வது? 

கணக்கு செய்து முடிக்காதவர்களை எழுந்து நிற்கச் சொன்னார்கள். அப்துல்காதர் எழுந்து நின்றான். அவன் பதினோறாவது ஆள். எனக் குப் பின்னால் இருப்பவன். நாராயண பிள்ளைசார் ஒவ்வொருவராக பிரம்பை எடுத்து அடித்து வந்தார். அப்துல்காதர் இடத்திற்கு வருவதற்கு முன்பே சப்தமாக அழுதுவிட்டான். 

வாத்தியார் கேட்டார்... 'அப்துல் காதர் எதற்கு அழுகிறாய்?" 

அப்துல்காதர் சொன்னான். "நான் என் பொறித்த மீனையும் இழந்து இப்போது அடியும் வாங்க வேண்டியிருக்கிறது." 

“என்ன விஷயம்? என்ன நடந்தது?" “எங்க அண்ணன் கணக்கு காட்டு வதாகச் சொல்லி மீன் துண்டை சாப்பிட்டுவிட்டு இப்போது கணக்கு காட்டமாட்டேன் என்கிறான். நான் எப்படி அடிவாங்குவது?" 

இதை எல்லாம் சப்தமாகச் சொன்னான். ஒண்ணாம் வகுப்பு மட்டுமல்ல, இரண்டாம் வகுப்பு வரை இது கேட்டது. நான் இதற்காக வெட்கப்பட்டேன். என் கையை நீட்டச் சொல்லி இரண்டு அடி கொடுத் தார் வாத்தியார். இது எதற்காக? நான் அவனிடமிருந்து மீன் வாங்கி தின்றதற்காகவா, அல்லது அப்துல் காதருக்கு கணக்கு காட்டாதற் காகவா? எனக்குத் தெரியவில்லை . வாத்தியார்கள் இப்படி பையன் களை அடிக்கும்போது அதற்கான காரணத்தை கட்டாயமாக சொல்ல வேண்டும். அது நடக்கமாட்டேன் என்கிறது. 

நான் சொன்னது போல, இந்த உலகத்தில் நீதி, நியாயம் எல்லாம் அழிந்துதான் போய்விட்டது. இதை எதற்கு நாராயணபிள்ளைசார் இப் போது கிளப்புகிறார். இப்போதைய பிரச்சினை என்னை அவர்கள் கிண்டல் செய்து நான் அதற்கு சண்டை போட்டதுதானே. எப்படி யிருந்த போதும். நான்தானே கொம் பானையின் கால்களுக்கு கீழே தவழப் போகிறவன். தான் எல்லாவற்றை யும் விளக்கமாகச் சொன்னபோதும் நாராயணபிள்ளை சார் புரிய வில்லை என்றார். 

அங்கிருந்த ஒவ்வொருவருக்கும் ஒரு அடி கொடுத்தார். எனக்கு இரண்டு அறை, அதில் ஏதாவது நியாயம் இருக்கிறதா...? இருந்த போதும் உலகம் இப்படித்தானிருக் கிறது. நான் சொல்லவில்லை உங்களிடம். இந்த உலகத்தைவிட்டு நீதி, நியாயம், உண்மை எல்லாம் பறந்து போய்விட்டது என்று. 

பள்ளிக்கூடத்தில் இருந்து திரும்பி வரும்போது அப்துல்காதர் சொன்னான் முணுமுணுத்த குரலில்... 'படுக்கையை நனைக்கிறவன்... 

நீங்கள் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். அவன் தன் சொந்த அண்ணனை கிண்டல் செய்கிறான். அவன் தண்டிக்கப்பட வேண்டாமா? நான் அவனுக்கு ஒரு அறை கொடுத்தேன். அழுதபடியே ஓடிப் போய் மாமாவிடமும், வாப்பா விடமும் சொன்னான். அவர்கள் இருவரும் தலையில் ஒரு கொட்டு கொட்டி, காதைப் பிடித்துத் திருகி நல்வழிக்கு போகச் செய்தார்கள்! இதில் ஏதாவது நியாயம் இருக் கிறதா..! எனக்கு எதுவும் தெரிய வில்னல. 

இப்படித்தான் வாழ்க்கை போகிறது. எங்கும் அநீதிதான் நிறைந்து போயிருக்கிறது. ஆனால் நான் இதற்காகக் கவலைப்படப் போவதில்லை , கொம்பானையின் கால்களுக்கு ஊடே நான் தவழும் நேரம் வந்தது. அது ஒரு அரிய மரியாதை தான். இதுவரை இங்கிருந்த எவரும் செய்வதறியா காரியம் அது. அதை நான் செய்யப் போகிறேன், என் வகுப்பில் உள்ளவர்கள் எனை பொறாமையோடு பார்த்தார்கள். நான் சந்தோஷமடைந்தேன். என் நடை, உடை, பேச்செல்லாம் கூட மாற்றிக் கொண்டேன். இந்த உலகத்தை துச்சமாகக் கருதி நான் சுற்றினேன். குறிப்பிட்ட நாள் வந்து கொண்டிருந்தது . என் பயத்தில் சில மோசமான செயல்கள் சுட செய்தேன். ஒரு வேளை யானை எனை மிதித்துக் கொன்று விடுமோ?. எங்கோ ஒரு இடத்தில் கொம்பானை மாவுத்தனை மிதித்துக் கொன்றதைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். 

நான் கால்களுக்கு இடையே தவழப்போகும் அந்த கொம்பானை முரட்டு யானையாக இருந்தது ஒரு காலத்தில் அடர்ந்த காட்டிற்குள் மூர்க்கமாக பிளறியபடி திரிந்தது. பிடிபட்டு பழக்கப்படுத்தப்பட்டது. சரியாக பழக்கப்படுத்த படவில்லை . இடது பக்கம் திரும்பச் சொல்லி மாவுத்தன் சொன்னால் அது வலது பக்கம் திரும்பியது. அல்லது திரும்பாமல் நின்று கொண்டிருக்கும். மாவுத்தன் அங்குசத்தால் காதில் குத்தும் போது பலத்த சப்தமிடும். அப் போதிருந்து நான் அதன் பின்னாடியே இருக்கிறேன், மாவுத்தன் அதை அனுமதித்தான். மாவுத்தன் நான் பயத்தில் யானையின் பின்புறத் இதில் மண்ணுக்கிருந்ததாகச் சொன்னான் அது சுத்தப் பொய். அது பாசனைக்கும் கேட்டிருக்கும். ஒரு வேளை யானை அதற்கு எதிராக எதாவது செய்யத் துணிந்தால். 

கடைசியாக நான் யானையின் கால்களுக்கு உள்ளே தவழும் நாள் வந்தது. கொம்பானையை குளிக்கச் செய்து காம்பவுண்டிற்குள் கூட்டி வந்தார்கள். நானும் குளித்தேன். சொல்லப்போனால், நானும் அந்த யானையும் ஒரே ஆற்றில்தான் குளித்தோம். நான் புது வேஷ்டி சட்டை தொப்பி அணிந்து கொண்டேன். சட்டையில் இருந்த வாட்ச் வைக்கும் பாக்கெட்டில் ஒரு மாங்காய் வைத்திருந்தேன். அதை திங்க நேரமில்லை. அதற்குத் தொட்டுக் கொள்ள உப்பு வேண்டும். அதற்காக காத்திருந்தேன், அதாவது யானை பின் கால்களுக்கு ஊடே தவழ்ந்து வந்த பின்பு சாப்பிடலாம், 

நான் அந்த யானையை நன்றாகப் பார்த்தேன். அது கருப்பாக இருந்தது. கிரைனைட் கல் மலை போல இருந்தது. பெரிய தூண்கள் போல - நாலு கால்கள். பகுத்த வயிறு. சுட்டையான வால். கூர்மையான தந்தம். 

அதன் கண்களில் வில்லத்தனமும், குரூரமும் இருந்தது. எனக்கு மூச்சடைத்துப் போனால்? யானை ஒரு வேளை எனை மிதித்துக் கொன்று விட்டால்... அல்லது தும்பிக்கையால் எனை வளைத்துத் தூக்கி வாயில் போட்டு மென்று விட்டால், நான் வீட்டை விட்டு ஓடி விடலாமா என நினைத்தேன், எங்கே போவது? எப்படிப் போவது? 

இப்போது எல்லா பக்கமும் தெரிந்த ஆட்கள் இருக்கிறார்கள். ஒரு பக்கம் என்னோடு படித்தவர்கள். ஆண், பெண் பிள்ளைகள். இந்த கூட்டத்தோடு எனக்கு ரகசியமாக கணக்கு காட்டும் அந்த முஸ்லிம் பெண்ணும் கூட நின்றிருந்தாள். ராதாமணிகூட இருந்தாள். பின்னொரு பக்கம், யானைக்கு அந்தப் பக்கம், என் வாப்பா, மாமா, மாதவன் நாயர், சங்கரன் குட்டி கிருஷ்ணன், ஓசேப் மாப்ள...எல்லோரும் தென்னை மர நிழலில் உட்கார்ந்துகொண்டு பழுத்த வாழைப் பழமாக சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள், வழக்கம் போலவே அப்துல் காதர் மாமாவின் மடியில் உட் கார்ந்து இருந்தான். அவன் ஒரு வாழைப்பழத்தை தின்றுகொண்டிருந்தான். இன்னொரு வாழைப்பழம் கையில் இருந்தது. 

வாப்பா, நல்ல பழுத்த வாழைப் பழத் தாராக வாங்கி வந்து, அதை மூன்றாக பிரித்து, யானைக்கு, மாவுத்தர்களுக்கும், மற்றவர்களுக்கும் கொடுத்தார். எனக்கு எதுவும் கொடுக்கவில்லை. அப்துல்காதருக்கு பக்கத்தில் ஒருபாதி குலை வாழைப் பழம் கிடந்தது. 

நான் கத்தினேன்... "வாப்பா... எனக்கு வாழைப்பழம் கொடுக்கலை 

"நான் உனக்காக வைத்திருக்கிறேன்... யானைக்கு கீழே தவழ்ந்து வந்து வாங்கிக்கொள்" 

என் பக்கம் பெண்களாக இருந்தார்கள். என் உம்மா, அவளுடைய தங்கைகள், உம்மாவின் உம்மா, அத்தை, நஞ்சலி, ஓசேப்மாப்ளாவின் மனைவி, சங்கரன்குட்டி, கிருஷ்ணன் இவர்கள் மனைவி எல்லோருமிருந்தார்கள். இவர்களின் ஊடே ஆந்தை தாமுவும் நின்றிருந்தான். அவன் ஒரு முழு வாழைப்பழத்தை சாப்பிட்ட படியே எனக்கு அறிவுரை சொன்னான், 

"போ... யானைக்கு அடியில் வேகமாக போ... பயப்படாதே... நான் இங்கேயில்லையா... தைரியமாகப் போ..." 

இவன்தான் எப்போதும் சைடு மாறிக்கொண்டே இருப்பவன். இப்போது எதிரியின் சைடில், எப்படி யிருந்த போதும். ஒருவன் தன்னுடைய விரோதியையும் நேசிக்க வேண்டும் என்பார் சார், நான் என் பாக்கெட்டில் இருந்த மாங்காயை எடுத்து தாமுவிடம் கொடுத்தேன். 

"யானை எனை மிதித்துக் கொல்லக்கூடும். இந்த மாங்காயை நீயே தின்னு... நிறைய உப்பு சேர்த்துக்கோ ... ருசியாக இருக்கும்." என்று உம்மா சொன்னாள். 

"பயப்படாதே. அயோக்கியப் பயலே." 

பயத்தை விடவும், நான் வாழைப் பழத்தை இழந்ததற்காக வருத்தப் பட்டேன். 

நான் பெண்களோடு நின்று கொண்டிருந்தேன். இந்த பக்கம் யானையும் நின்று கொண்டிருந்தது, எனக்கு வாழைப்பழத்தை நினைத்து வாயெல்லாம் எச்சில் ஊறியது. ஆனாலும் நான் பயப்பட்டேன், கால்கள் பூமியால் விழுங்கப்பட்டது போலத் தோன்றியது. கால்கள் நகர மறுத்தன, என் வாய் உலர்ந்து போனது. உடம்பெல்லாம் வியர்த்து வழிந்தது. எனக்கு ஒண்ணுக்குப் போக வேண்டும் போல் இருந்தது. என் உடம்பே கொதித்தது. நான் மயக்கமடையப் போகிறேனா? என் கண்கள் பார்க்கும் சக்தியை இழந்து விட்டதா? இல்லை ... நான் தான் வாப்பா, மற்றும் எல்லோரையும் பார்த்தேன் யானையின் கால்கள் கறுப்புக் கதவு திறந்து கிடப்பது போலத் தெரிந்தது. அப்துல்காதர் கையில் வைத்திருந்த வாழைப் பழத்தையும் தின்று முடித்து விட்டான்' அதற்குப் பிறகு தரையில் கிடந்த பழக்குலை யில் இருந்த வேறு ஒரு பழம் பியித் துக் கொண்டான்.. 

நான் கத்தினேன். "வாப்பா அவனே இந்த பழக்குலை முழுவதையும் தின்றுவிடுவான்." 

வாப்பா, பழக்குலை நான் பார்க்காத பக்கம் எடுத்துப் போனார், மாமா பலத்த சப்தத்தில் ஆணை யிட்டார். | 

"உள்ளே புகுந்து வா... குட்டி சாத்தானே" நான் நகராமலிருந்தேன். கிருஷ்ணனின் மனைவி 'சாக்கி' சொன்னான். "போ... யானையின் கால்களுக்கு ஊடாக போய் வா. நீயென்ன குழந்தையா வெட்கப் படுவதற்கு. கல்யாணம் சுட்டும் வயசாகி விட்டது. இன்னும் படுக்கையில் மூத்திரம் பெய்கிறாய்." 

"அது நான் இல்லை . அப்துல் காதர்" என்றேன், 

"இல்லை . நீதான்" என் உம்மா சொன்னாள். 

உடனே திருப்பிக் கேட்டேன். "உனக்கு எப்படித் தெரியும்?" 

"உன்னை இந்த உலகத்திற்குக் கொண்டு வந்தவள் நான்தானே. அப்துல்காதர் பிறந்த பின்பும் கூட நீ இந்த மடியில் படுத்தபடி என்னிடம் பால் குடிக்கவில்லையா என்ன?" 

"நான் உன் மடியில் படுத்தி பால் குடிக்கவேயில்லை" 

"நீ, உன் அத்தை . ஏன் மாதவிக் குட்டியிடம் பால் குடித்தவன்தான் ஆந்தை தாமு சொன்னான். 

நீ என் அம்மாவிடம் பால் குடித்தாயா... அப்ப அதானே பார்த்தேன். வேறு சாதாரணமான பையன் எவனும் என்ன விரட்டிப் பிடிக்க முடியாதே... உனை தவிர என்று அவன் அம்மாவைப் பார்த்துக் கேட்டான், எவ்வளவு துணிச்சல் இருந்தால், இப்படி வெளியாட்களுக்கு எல்' லாம் பால் கொடுத்திருப்பாய்." 

நான் சொன்னேன், "நான் எவரிடமும் பால் குடிக்கவில்லை " 

உம்மா கேட்டாள், "நான் உனை பெறக்கூட இல்லை என்கிறாயா 

அப்ப 

?" 

"யாரும் எனை பெறவில்லை" "பின்னே ?" "நானாகத்தான் வந்தேன்." ஆதாம் 'அல்லாவால் படைக்கப் பட்டான். ஆதாம், உலகத்தின் முதல் மனிதன். அவனுக்கு உம்மாவோ, வாப்பாவோ கிடையாது. அவன் யாரிடமும் பால் குடிக்கவில்லை . எனக்கு இந்த விஷயம் எல்லாம் தெரியும் 

உம்மா சொன்னாள் "நான் உன்னை ஒன்பது மாதம் சுமந்து இருந்தேன். நீ பிறந்தபோது மெலிந்த குழந்தையாயிருந்ததால், இந்த மார்பில் பால் கொடுத்து உனை வளர்த் தேன். இப்படி வளரும் வரை நான் தான் உன்னைப் பார்த்துக்கொண் டேன். இப்போது நீ... நான் உனை பெறவே இல்லை என்கிறாய்." "இதற்கு என்ன சாட்சி?" "உன் வாப்பா" "எப்படியிருந்த போதும் நான் - படுக்கையில் மூத்திரம் போகிறவனில்லை " 

"நீதான்" "நானில்லை ... எனை யானை மிதித்துக் கொல்லட்டும்." நஞ்சலி சொன்னாள். "மகனே பயப்படாதே. மாவுத்தர்கள் இருக்கிறார்கள்." 

"ஆந்தை தாமு சொன்னான், 'ஏன் பயப்படுகிறாய்? நான் இருக்கிறேன்" நான் அவன் குரல்வளையைப் பிடித்து நிறுத்த விரும்பினேன். 

"மகனே போ... அல்லாவின் பேரால் உள்ளே தவழ்ந்து வா" 

நான் குரானின் ஒவ்வொரு பகுதியாக, இந்த உலகினை அன் போடும், கருணையோடும் காக்கும் அல்லாவின் பெயரை உச்சரித்துக் கொண்டிருந்தேன். நான் வாப்பா வாழைக் குலையோடு நிற்பதைப் பார்த்தேன், அந்த வாழைப் பழங்களுக்காக பேராசைப்பட்டேன். அதேநேரம் யானையை கண்டு பயப்பட்டேன். அப்துல்காதர் இவ்வொன்றாக பிய்த்துத் தின்றுகொண்டிருந்தான் அங்கே நான் கனவில் பார்ப்பது போல உணர்ந்துபோனான், யானையின் மேலிருந்து திரை பாங்கியது. யானையின் கால்களுக்கு ஊடே கடந்தேன். இருட்டிய குகைபோல அடுத்தப் பக்கம் தெரிந்தது. யானை என்மேல் மூத்திரம் பெய்ய முயன்றது, எந்த எச்சரிக்கியும் இன்றி யானை மூத்திரம் பெய்தது, அது என் தலையில் பெய்யாமல் தப்பித்துக் கொண்டேன், "காத்துக் கொண்டிருப்பவர்கள் "அதட்டினார்கள். வாப்பா எனை அவர்களுக்குள் சேர்த்துக் கொண்டார், நான் அவர் கையிலிருந்து விடுபட்டு, பழக்குலையை நோக்கி ஓடினேன். 'அப்துல் காதர் கையில் லிருந்த பழங்களைப் பிடுங்கினேன் . என் வகுப்பில் படிக்கும் பையன்களுக்கு பழங்களை பிய்த்துக் கொடுத்தேன். அந்த முஸ்லிம் பெண் ணிற்கு மட்டும் இரண்டு பழம் கொடுத்தேன், அவள்தான் எனக்கு கணக்கு காட்டுபவள். ராதாமணிக்கும் கொடுத்தேன். | ஆந்தை தாமு கைகளை நீட்டியபடி கேட்டான், எனக்கில்லையா, நான் நிலவரி தரவில்லையா என்ன ?" 

நான் அவனுக்கும் ஒரு வாழைப்பழம் கொடுத்தேன். எல்லா வாழைப்பழத் தோல்களையும் நாங்கள் சேகரித்து யானைக்குப் போட் டோம். மாவுத்தன் அவற்றை யானைகளுக்குக் கொடுத்தான். 

நான்தான் யானையின் கால்களுக்கு ஊடே ஊர்ந்து வெளிவந்த வீரன். அது பெரிய காரியம்தான். அதற்கு பிறகு நாங்கள் சந்தோஷமாக இருந்தோம். அதன் பிறகு நான் படுக்கையில் மூத்திரம் பெய்யவே யில்லை. இதில் உண்மை என்ன வென்றால் நான் வாப்பாவோடு படுத்துக் கொள்வதில்லை. உம்மாவோடே படுத்துக் கொண்டேன், எல்லாம் நல்லபடியாக நடந்தது. 

அதன் பிறகு ஒருநாள் இரவு ஒரு அலறல் சப்தம் கேட்டது. வாப்பா அப்துல்காதருக்கு வலது கன்னம், இடது கன்னம் என மாறி மாறி அறைந்து கொண்டிருந்தார். உம்மா தீப்பெட்டியை உரசி, விளக்கை பொருத்தி எடுத்து வந்தபோது பார்த்தோம். அப்துல் காதர் படுக்கையில் மூத்திரம் போயிருந்தான். 

வாப்பாவின் படுக்கையில் இப்படி ஒண்ணுக்கிருந்து வெட்கம் கெட்டு நிற்பவன் யார் என இப்போது கெரிகிறதா? இப்போது அப்பாவி யார் இதற்காக பழி சுமந்தார்கள் எனத் தெரிகிறதா? இப்படித்தான் உலகம் இருக்கிறது. அப்துல்காதர் அல்லவா யானையின் கால்களுக்கு அடே தவழ்ந்து வரவேண்டியவன்? அப்துல்காதர் அறைபட்ட கன்னத்தில் கை வைத்தவாறே சொன்னான், 

"நானில்லை... அண்ணன்தான் இங்கு வந்து படுத்து, மூத்திரம் போயிருக்க வேண்டும்" 

இதைச் சொல்ல அவனுக்கு கூசவேயில்லை .) 

உம்மா சொன்னாள், "அப்படியும் இருக்கக்கூடும்" 

இந்த உலகம் எவ்வளவு அநியாயமானது. அப்பாவிகள் தண்டிக்கப்படுகிறார்கள். நான் இதற்காக குற்றம் புரிந்தவன் போலாக வேண்டியுள்ளது. படுக்கையில் கேலன், கேலனாக அப்துல்காதர் மூத்திரம் பெய்தாலும் அவன்தான் நல்ல பிள்ளை . 

எப்படி இருந்தபோதும். யார் இதைச் செய்தார்கள் என ஒரு அறிகுறியும் கிடைக்கவில்லை . 

வாப்பாவிற்கும், உம்மாவிற்கும் கொஞ்சம் சந்தேகம் இருந்தது. இருந்தும் யார் குற்றம் புரிந்தது அப்துல் காதரா. நானா என அவர்களாலும் முடிவு செய்ய முடியவில்லை . கடைசியில் இந்த உலகம் இரண்டாக பிரிந்தது. பள்ளிக்கூடத்தில் அப்துல் காதர் நிறைய பையன்களையும், பெண்களையும் வஞ்சம் கொடுத்து எனக்கு எதிராக தன் பக்கம் திருப்பிக் கொண்டான். ஆந்தை தாமு நடு நிலை வகிக்கும் கூட்டத்தின் தலைவன். அவன் நானோ, அப்துல் காதரோ இதைச் செய்யவில்லை, இதைச் செய்வது வாப்பா என்று கொள்கையை வைத்திருந்தான். 

இதைப் பற்றி கேள்விபட்டதால், சங்கரன் குட்டியும், நஞ்சலியும் தாமுவை அடிப்பதற்காக விரட்டினார்கள். ராதாமணி அப்துல் காதர் கேம்பில் இருந்து என் பக்கம் வந்து விட்டாள். அப்துல் காதர் அவளுக்கு ஒரு மிட்டாய் கொடுத்ததும் திரும்பவும் அவன் பக்கமே போய் விட்டாள். இப்படி விசுவாசத்தை கேவலம் ஒரு மிட்டாய்க்காக மாற்றுவது சரியா சொல்லுங்கள். நான் அவருக்கு சில வறுத்த முந்திரி பருப்பு கொடுத்த பின்பு அவள் என் பக்கம் வந்துவிட்டாள். அத்தோடு மட்டுமல்ல அவள் சொன் னாள், "அப்துல் காதர்தான் படுக்கையில் மூத்திரம் போகிறவன்." 

நான் சந்தோஷமடைந்தேன். ராதாமணிக்கு ஒரு ஆசை இருந்தது. அதை அவள் ரகசியமாக என்னிடம் சொன்னாள், "எனக்கு யானை வாலில் இருந்து ஒரு முடி வேண்டும்... எனக்காக அதை கொண்டு வந்து கொடுக்க முடியுமா உன்னால்?" 

நான் அவளிடம் சொன்னேன், "என்னிடம் மட்டும் ஒரு யானை இருந்தால்... அந்த யானையே உனக்காக கொடுப்பேன்." 

அவள் சொன்னாள், "எனக்கு யானை எல்லாம் வேண்டாம். அதன் வாலில் இருந்து ஒரு முடி போதும்." 

"நான் உனக்கு கொண்டு வந்து தருகிறேன்" இதை ஆந்தை தாமு, அப்துல் காதர் எதிரில் வைத்தே சொன்னேன். நான் பார்த்திருக்கிறேன் வாப்பாவின் இந்து நண்பர்கள் யானை வால் முடியை பிடுங் கிப் போவதை. அவர்கள் இதை மோதிரத்தில் சுற்றி விரலில் போட்டுக் கொள்வார்கள். சிலர் கையில் கூட கட்டிக் கொள்வார்கள். யானை முடி அதிசயமான பொருள் போல அவர்களுக்குத் தெரியும். 

நான் சுலபமாக யானை வாலிலிருந்து முடியைப் பிடுங்க முடியும். மாவுத்தர்கள் என் நண்பர்கள்தான். அதனால் நான் வாப்பாவிடமும், உம்மாவிடமும் அனுமதி கேட்டேன். அவர்கள் மறுத்துச் சொன்னார்கள். 

"உனக்கு யானை முடி தேவையில்லாதது." 

இதை மாவுத்தர்கள் முன்னிலையில் சொன்னார்கள். நான் அவர்கள் மாறியதை கவனிக்கவில்லை. 

ஆந்தை தாமுவும், அப்துல் காதரும் என்னைப் பற்றிய கதையை மாவுத்தர்களிடம் சொன்னார்கள். இதை விடவும் அவர்கள் மாவுத்தர்களுக்கு வறுத்த முந்திரி ஒரு சிரட்டை நிறைய கொடுத்தார்கள். 

நான் மாவுத்தர்களிடம் போய் கேட்டேன், "எனக்கு ஒரு யானை வால் வேண்டும்.” 

மாவுத்தர்கள் என்னைப் பார்த்து சிரித்தபடி சொன்னார்கள், "யானைக்கு ஒரே ஒரு வால்தான் இருக்கு. அதையும் உனக்கு வெட்டிக் கொடுத்து விட்டால்... யானை என்ன செய்யும் பின்னே ." 

நான் சொன்னேன் "முழு வாலும் வேண்டியதில்லை. ஒரே ஒரு முடி போதும். ஒரு சிறு ரோமம் போதும்." 

மாவுத்தர்கள் சிரித்தார்கள். 'யானை ரோமம்.... இதென்ன செம்மறியாடா ரோமத்திற்கு பிடுங்க." 

நான் அவர்களிடம் கெஞ்சிக் கேட்டேன், "ஒரு யானை முடி கொடேன்." மாவுத்தர்கள் தர் முடியாது என்றார்கள். வளைந்த கால் அப்துல் காதர், ஆந்தை தாமு எதிராக அவர்கள் எனக்கு கொடுத்து விடுவார்களா என்ன, நான் அவர்களுக்கு கொடுத்ததெல்லாம் வாழைப் பழம், புகையிலை, - ஹல்வா, வெற்றிலை பாக்குதானே. நான் வாப்பா பிடிக்கும் சிகரெட்டில் இருந்து ஒன்றை எடுத்து வந்து கொடுத்ததை மறந்து போனார்களா என்ன ? 

ஏன் இந்த மாவுத்தர்கள் இப்படி நன்றியேயில்லாமல் இருக்கிறார்கள். நான் கேட்பதெல்லாம் யானையிடமிருந்து ஒரே ஒரு முடி. அதை கூட தரமறுக்கிறார்கள். நான் வளர்ந்த பின்பு ஒரு போதும் இனி மாவுத்தனாக மாறமாட்டேன். இனிமேல் மாவுத்தர்களின் இனம் என்னைப் போல திறமையானவர்கள் சேராது போகட்டும். நான் எப்படி யானை முடியை  திருடுவது. 

எப்படி? இதைப் பற்றி பகல், இரவெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தேன். கொம்பானை விழித்துக் கொண்டிருக்கும் போது எப்படி ஒரு மயிரை பிடுங்குவது. இதைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன். 

"யானை ரோமம்" பள்ளியில் பலரும் என்னை இப்படியே கூப்பிட்டடார்கள். 

"யானை ரோமம் இந்த வார்த்தை மங்கி ஒலித்தது எங்கும். அந்த ஆந்தையும் அப்துலும் ஒரு பக்கம். நான் தனி. ராதாமணி கூட எதிரிகள் வரிசைக்குப் போய் விட்டாள். ஒவ்வொருவரும் என்னைப் பார்த்து கத்தினார்கள். "யானை ரோமம்", 'படுக்கையில் மூத்திரம் போகிறவன்." சில சண்டைகள் நடந்து நான் நாராயணபிள்ளை சாரிடம் அடியும் வாங்கினேன். 

இரவில் படுக்கையில் இருந்த படியே கூட அப்துல் காதர் சொல்வான், "யானை ரோமம்", "படுக்கையை நனைப்பவன்." 

நான் அவர்களை எல்லாம் பார்த்துக் கொண்டேன், என் மனத்திற்குள்ளாகவே முடிவு செய்து கொண்டேன். எப்படி யானை மயிரை திருடுவது. எது சுலபமான வழி? 

நாட்கள் கடந்தது. ஒரு நாள் காலை நான் வகுப்பிற்குள் வெற்றி பெற்ற வீரன் போல நடந்து போனேன். அங்கிருந்த ஒவ்வொரு வரையும் கூப்பிட்டேன். நண்பர்கள், விரோதிகள் எல்லோரையும்தான். நான் அந்த ஆந்தை தாமு. அப்துல் காதர் இருவரையும் பார்த்தபடி ராதாமணியிடம் கேட்டேன், 

எப்போதாவது யானை மயிர் பார்த்திருக்கிறீர்களா - எப்போதாவெது அதை தொட்டு பார்த்திருக்கிறீர்களா." 

யாரும் பதில் பேசவில்லை . அமைதியாக இருந்தார்கள். நான் ராதாமணியிடம் ஒரு நீளமான யானை முடியை எடுத்துக் கொடுத்து விட்டு பார்த்துக் கொண்டிருந்தவர்களிடம் சொன்னேன், "பார்த்துக்கோ ...." 

நான் எப்படி யானை முடினய "பாறேன் என தெரிந்து கொள்ள விரும்பினார்கள், குறிப்பாக ஆந்தை தாமுவும், அப்துல் காதரும் எப்படி இதைப் பிடுங்கினேன் என தெரிந்து கொள்ள விரும்பினார்கள். பலமுறை என்னிடமே கேட்டார்கள். நான் "த ரகசியத்தை வெளியிடவேயில்லை, இந்த கதையை ரொம்ப காலம்  யாரிடமும் சொல்லவே யில்லை, அதை இப்போது சொல்கிறேன்...! 

எப்படி ஒருவன் இப்படியான கொம்பனையிடம் இருந்து ஒரு ரோமத்தை திருடுவது. யானை மரக் கட்டையை தூக்கி வரும்போது ஒரு முடியை திருடி விட்டால்? ஒரு வேளை அது மரக்கட்டையோடு சுற்றி தூக்கி எறிந்தால் என்ன ஆவது. இதை பற்றி இரவு பகலாக யோசித்துக் கொண்டிருந்தேன். கடைசியாக ஒரு சுலபமான திட்டத்தைத் தயாரித்தேன். யானை, மற்றும் அனைவருமே ஆற்றில்தான் குளிக்கவேண்டும். நான் பல தடவை மாவுத்தர்களோடு சேர்ந்து கொண்டு யானை உடம்பை கிரனைட் கல் வைத்து மெதுவாகத் தேய்த்து விட்டிருக்கிறேன். எல்லா ஆட்களும் ஆற்றில் தான் குளிப்பார்கள். 

அந்த ஆறு பெரியது. தண்ணீர் ஸ்படிகமாக ஓடும். வெள்ளை மணல்கள் இருப்பதை ஒடும் தண்ணீரிலும் பார்க்க முடியும். சகதி இல்லாத இடம் இது. ஆற்றின் இன்னொரு கரையில் கள்ளுக்கடை இருந்தது. நீந்திக் குளிப்பவர்கள் கள்ளுக்கடையில் போய் குடிப்பதும். குளிப்பதுமாக இருப்பார்கள். ஆற்றின் கரை ஒரமாக மூன்று யானைகளும் தண்ணீரில் படுத்துக் கிடக்கும். 

கொம்பானை பெண் யானைகளுக்கு ஊடே படுத்துக் கிடக்கும். அதன் வாலில் இருந்துதான் ஒரு முடியை பிடுங்க வேண்டும். 

நிறைய ஆட்கள் குளித்துக் கொண்டிருந்தார்கள். சிலர் அந்தக்கரைக்கும் இங்குமாக நீந்திக் கொண்டி ருந்தார்கள். வாப்பா. மாமா, சங்கரன்குட்டி, கிருஷ்ணன், பத்மநாபன் நாயர் எல்லாரும் குளித்துக் கொண்டி இருந்தார்கள். ஆந்தை தாமுவும், நானும் ஆற்றில் வேஷ்டியை துவைத்துக் கொண்டிருந்தோம். 

ஆந்தை தாமு அப்பாவின் சகதியான வேஷ்டியை துவைத்துக் கொண்டிருந்தான். ஆற்றின் கரையில் விளையாடும் முன்பு நன்றாக குளிக்க வேண்டும் என வாப்பா சொன்னார். நான் டைவ் அடித்து மூழ் கினேன் தண்ணீருக்குள். வெளியே வந்தபோது கரை தெரிந்தது. யாரும் என்னைப் பார்க்கவில்லை. இது தான் சரியான நேரம். நான் திரும் பவும் மூழ்கி யானையிருந்த பக்கம் போனேன். கொம்பானையின் வால் இருந்த இடத்தை அடைந்தேன். வால் கடினமாக இருந்தது. வாலைக் கடித்து முடியை எடுக்கலாம் என நினைத்தேன். அதை கடித்தேன். பல் லில் சரியாக பிடி கிடைக்கவில்லை . நான் பலமாக கடித்து இழுத்தேன். அதுதான் நான் கடைசியாக செய் தது. அதன் பின்பு எங்கும் களேபரமானது. 

யானை எழுந்து பயங்கரமாக பிளிறியது. நான் வாலை விட்டு தரையோடு ஒட்டிக் கொண்டேன். அது திரும்பி எனைப் பார்த்தது. நான் மூழ்கி வேகமாக தண்ணீருக்கு அடியிலே நீந்தினேன். எனக்கும் யானைக்கும் இடையே எவ்வளவு தூரம் அதிகம் போக வேண்டுமோ அவ்வளவு நீந்தினேன். எனக்கு மூச்சு முட்டியது. தண்ணீருக்குள் நீந்த முடியாமல் போனது. ஆற்றின் இருண்ட பகுதிக்கு சென்று எழுந்தேன். அங்கிருந்த இலவம் பஞ்சு மரக்கிளையை பற்றி நின்றேன். அது தண்ணீர் சேகரிக்கும் இடத்திற்குக் கிட்டத்தில் இருந்தது. நான் திரும்பிப் பார்த்தேன். கொம்பானை எழுந்து நின்று, தும்பிக்கையை உயர்த்தி நின்றது. தந்தங்கள் உயரே பார்த்தபடியிருந்தது. அது பயங்கரமான சப்தம் உண்டாக் கியது. மற்ற இரண்டு யானைகளும் எழுந்து நின்று பலமாக சப்தமிட்டன. மக்கள் கலவரப்பட்டு ஓடினார்கள். நான் நிர்வாணமாக இருந்தேன். கரையேறி அங்கிருந்த மர தில் ஏறிக்கொண்டேன். பெரிய சிவப்பு எறும்புகள் என் மேல் ஏறிக்கடித்தார். என்னால் முடிந்தவரை அவற்றைத் தள்ளினான். நான் பயத்தில் தொங்கிக் கொண்டிருந்தேன். எவ்வளவு நேரம் நான் அங்கேயிருந்தேன் என எனக்கே தெரியாது. 

கொஞ்ச நேரத்திற்கு பிறகு யானையின் சப்தமும், மக்கள் ஓடும் சப்தமும் குசரந்தது. மோசமான கனவைப் போல தெரிந்தது அது. என்ன நடந்தது என தெரியவில்லை . என் உடம்பில் இருந்த ஈரம் உலர்ந்து போனது .கடிஎறும்பு கடித்த வலியோடு இருந்தேன். அப்போது வாப்பாவின் குரல் கேட்டது. அவர் என் பெயரைச் சொல்லி கூப்பிட்டார். நான் திரும்பக் கூப்பிட்டேன். 

மரத்திலிருந்து மெதுவாக இறங்கினேன். வாப்பா எனக்கு ஒரு துண்டை போர்த்து நிர்வாணமாக இருப்பதை மறைத்தார், என் மேல் இன்னமும் உணர்ந்து கொண்டிருந்த எறும்புகளை எடுத்து எறிந்தார். அவர் லேசாக என் உடம்பெங்கும் தடவிக் கொடுத்து என் தலையில் கை னவத்துக் கொண்டார். 

நாங்கள் வீட்டுக்குப் போனோம். நான் உம்மாவிடம் சொன்னேன், 

"உம்மா... நான் என் வேஷ்டியை தொலைத்து விட்டேன்." 

உம்மா அமைதியாக சொன்னாள். "ஒவ்வொருவர் அவரவர் துணிகளை தொலைத்துதான் விட்ட டார்கள்." 

யானை பிளிறியதும் ஒவ்வொருவரும் உயிருக்கு பயந்து ஓடும் போது தங்கள் வேஷ்டி, அண்டர் வேர் கூட விட்டு விட்டு ஓடிப் போனார்கள். இதில் துணியை போட்டு விட்டு ஓடியவர்கள், வாப்பா, மாமா, பத்மநாப நாயர் கிருஷ்ணன், சங்கரன் குட்டி ஆந்னத தாமு. மற்றும் ஒசேப் மாப்ளே. 

அவர்கள் நடைப்பாதை வழியாக ஒடி வீட்டிற்குள் போனார்கள். கொம்பானை, பெண் யானைகளில் ஒன்றைக் குத்திக் காயமாக்கியது. மாவுத்தர்கள் யானையை கஷ்டப் பட்டு அடக்கினார்கள். அவர்கள் கொம்பானைக்கு பைத்தியம் பிடித்து விட்டது என்றார்கள். 

அது உண்மையில்லைதான். நான் தான் அதற்குக் காரணம். நான் எப்படி உண்மையைச் சொல்வது? ஒரயேனள வாப்பாவிற்கே தெரிந்து பொய் டிரன்3ன கட்டி தொங்க விட்டு விட்டால், 

நானே சொன்னேன். "வாப்பா கொம்பானைக்கு பைத்தியமில்லை." 

"நான்தான் அதை கடித்தேன்." "நீ கொம்பானையை கடித்தாயா?' ஆமா... தண்ணீருக்கு அடியில் நீந்திப் போய் அதன் வாலில் இருந்து ஒரு மயிரைக் கடித்தேன்." 

வாப்பா சிரித்தார். சப்தமாக, ரொம்ப நேரம் வரை சிரித்தார். பின் அவர் என்னிடமே கேட்டார். - "உனக்கு எதற்கு யானை முடி?" நான் சொன்னேன், "வாப்பா... உங்கள் நண்பர். அந்த எக்ஸைஸ் இன்ஸ்பெக்டர் இருக்கிறாரே அவருடைய மகள் ராதாமணிதான் யானை மூடி கேட்டாள்." 

அதற்கு பிறகு உம்மாவும் சேர்ந்து சிரித்தாள். உம்மா சொன்னாள், "என் அருமை மகனே... உன்னை அல்லாதான் பெரிய ஆபத்திலிருந்து காப்பாற்றினார்? அவள் வாப்பா விடம் திரும்பி சொன்னாள், "அவனுக்க ஒரு கொத்து யானை மயிர் பிடுங்கிக் கொடுத்து விடுங்கள். இல்லை யென்றால் இப்படிப் போய் கொம்பானையை கடித்துக் கொண்டி ருப்பான். பாவம் அது." 

வாப்பா சொன்னார், 'அயோக்கிய பயலே... அதற்காக யானையை கடிப்பதா?" 

"நான் அதை கடிக்கவில்லை . பல்லை வைத்து முடியை கடித்து இழுக்கப் பார்த்தேன். அவ்வளவுதான், 

"சரி வா என்னோடு... இதை யாரிடமும் சொல்லக் கூடாது.... சரியா ?" 

யானைகளின் கொட்டடிக்கு என்னை வாப்பா அழைத்துப் போனார். ஒரு பெண் யானைக்கு முன் காலில் சிறிய காயம் இருந்தது. அதில் மாவுத்தர்கள் எதையோ அறைத்து மருந்தாக போட்டிருந்தார்கள். இன்னமும் ரத்தம் வந்த படியேதானிருந்தது. 

வாப்பா மாவுத்தர்களிடம் கொம்பானையிடமிருந்து ஒரு கொத்து மயிர் வெட்டித் தரச் சொன்னார். அவர்களும் தந்தார்கள்.கொம்பானை என்னை பார்த்தது கோபத் தோடு, அதனிடம் பரிகாசம் இல்லை இப்போது. யானையின் வயிற்றுக்குள் சில "புட் புட்" சப்தம் கேட்டது. அது - எனை பார்த்தபடியே சொல்வது போலிருந்தது. 

"நீதானே என் வாலில் இருந்து மயிர திருடுவதற்காக கடித்து வைத்த தந்திரமான திருடன்" என்று .