தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்து காலத்தால் அழிக்கமுடியாதவை சிலவற்றை இங்கே இந்த இடத்தில் தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (TShrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

Saturday, October 05, 2013

சூர்யன் தகித்த நிறம் - லட்சுமி கண்ணன் (காவேரி) தமிழில் : பிரமிள்

சூர்யன் தகித்த நிறம் 


லட்சுமி கண்ணன் (காவேரி)

மேலே சூர்யன்எரிந்து -
அமானுஷ்யமாக,
இருந்தும் இச்சூர்யனை 
ஆர்யன் என்கிறார்கள் -
முக்கியமான எல்லாமே 
விந்தியத்துக்கு அப்பால் வசிப்பவர்போல 
ஆர்யரான கதையாக!
வெளிறிய அவரது தங்க நிறத்தோல் 
உயரம் உச்சரிப்பு எல்லாம் 
எல்லாமே ஆர்யன்!
நாங்களோ நம்பிக்கை கொண்டு 
சூர்ய காந்தியின் ஈடுபாட்டுடன் 
முழு முகத்தையும் கொண்டு 
சூர்யனை நோக்கினோம் 
எரித்து வீழ்த்தப்பட்டோம்.
பின்பு கிடைத்தது கல்வி -
மன்னிப்புக்  கேட்கும் படிப்பினை -
உள்ளுறவுகள் கொண்டு பெருகியதற்காக;
பெருக்கிய முற்றத்தில் 
சிறுசிறு இருண்ட குழந்தைகளான  எங்களுக்கு 
நாட்டுக் கதைகளின் 
உப்புச் சுவை கலந்த சோறும் தயிரும் 
கம்பனும் கலந்து ஊட்டிய பாட்டிமார்களுக்காக.
இன்று அந்நிய உச்சரிப்புடன் பேசும் 
ஆபீஸ் காரர்களுக்கு  இடம்விட்டு 
பின்னடையும்படி கேட்டுக் கொள்ளப் படுகிறோம் -
அவர்கள், சூர்யனால் 
எரித்து வீழ்த்தபடாதவர்கள்.
ஆமாம், ஒரு ஆர்யனைப் பற்றிச் சொன்னேனே,
அவ்வப்போது ஆளுக்குப்  பண்பாடு கூட வருகிறது;
ஒருநாள் சொல்கிறான் மனிதன் :
ஒண்ணு தெரியுமா? நீ 
பார்க்கறதக்கு நல்லாத்தான் இருக்கே -
தெற்கேயிருந்து வந்தவளாய் இருந்தாலும் கூட.

தமிழில் :  பிரமிள் Burnt Brown by the Sun 
 By Lakshmi Kannan
From: Encounter, June, 1980

The Sun blazed above, impersonal
but we were told this Sun was Aryan
as everything important was Aryan-
little the people over the vindyas,
their skin a pale gold
their height, their syllables
were all, all Aryan
and we, who turned our full Dravidian face
to the Sun
with the complete trust of a Sunflower
were burnt brown.

And then we began to learn
to learn to apologise
for old in-breeding grandmothers
who led us as small brown children
sitting on clean-swept earth
fed us on cooked rice
laced with the salt of folk-tales
fed us on curds and Kamban
we are now asked to thrust behind
to accommodate the sibilant bureaucrats
who are not burnt brown by the Sun.

This Aryan l have been talking about,
He can be gracious at times
he said the other day:
“You know. you are quite an attractive woman
Even though you are from the South.”