தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

Wednesday, July 13, 2016

பயணம் 3 - அம்பை

பயணம் - 3
https://archive.org/details/orr-11846_Payanam-3

வெய்யில் காலம் ஆரம்பமானதுமே மாரியம்மனுக்குப் பொங்கல் படையல் போடுவது பற்றி அம்மா யோசிக்க ஆரம்பித்து விடுவாள். "வெய்யில் சுட்டெரிக்கிறது. மாரியம்மனுக்குப் படையல் போடணும்என்று தினத்துக்கு இரண்டு தடவையாவது அவள் செய்தி அறிவிப்பு மாதிரி கூற ஆரம்பித்ததுமே மைதிலிக்கு உற்சாகம் பிறந்துவிடும். காரணம் அது ஒரு வருடந்திர குட்டிப் பயணம். பள்ளி விடுப்புத் தொடங்கியதும் அமைந்துவிடும் பயணம். அவர்கள் வீட்டில் வேலை செய்யும் மருதாயியும், அவள் மகள் மீனாட்சியும், மைதிலியும் மேற்கொள்ளும் சுற்றுலா.
மாரியம்மன் கோவில் மெஜஸ்டிக்கில் இருந்தது. படையலுக்கான முஸ்தீபுகளை அம்மா மேற்கொள்வாளே ஒழிய அம்மா கோவிலுக்கு வரமாட்டாள். அம்மை போன்ற வியாதிகள் வராமல் தடுக்கும் மாரியம்மனை இவர்களுக்காகத் தொழ மருதாயிதான் போக வேண்டும். "அது அவங்க சாமிஎன்று மைதிலியிடம் விளக்குவாள் அம்மா. மல்லேச்சுவரம் எட்டாவது க்ராஸில் இருந்த கன்னிகா பரமேச்வரி கோவிலுக்கு அம்மா போவாள். நவராத்திரி ஒன்பது நாட்களும் ஒன்பது அலங்காரங்கள் கன்னிகா பரமேச்வரிக்கு மஞ்சள், சந்தனம், குங்குமம், ஜவந்தி, மல்லிமொட்டு, ஆரஞ்சுச்சுளை, கதலி, கனகாம்பரம், பட்டுப்புடவை என்று தினம் ஒரு அலங்காரம். சாயங்கால பூசையில் கூட்டம் அலைமோதும். அம்மா மைதிலியையும் கூட்டிக்கொண்டு போவாள். திரையைத் திறந்து அலங்கரிக்கப்பட்ட அம்மனைக் கண்டதும் உருகிப்போவாள் அம்மா. கையைக் கூப்பிய படி "அம்பா நின்னு நெர நம்மிதி" என்று மெல்லப் பாட ஆரம்பித்து விடுவாள். இவ்வளவு அலங்காரங்களைப் பெறும் அந்த அம்பாளுக்கு அம்மை போன்ற வியாதிகளைத் தடுக்கும் சக்தி இல்லை போலும். செக்கச்செவேலென்ற துணி ஒன்றைச் சுற்றிக்கொண்டு, குங்குமத்தை அப்பிக்கொண்டு, உருட்டு விழிகளுடன் இருக்கும் மாரியம்மனுக்குத் தான் அந்தச் சக்தி இருந்தது. அந்த மாரியம்மனிடம் இவர்களுக்காகத் தூது போக ஒரு மருதாயி,
- 418 -- அம்பை
________________
"மருதாயி, இந்த மாசம் நீ தீட்டு குளிச்சிட்டியா?” என்ற கேள்வி யுடன் படையலுக்கான முஸ்தீபுகள் தொடங்கும்.
மருதாயியின் தீட்டு விவகாரங்கள் பற்றிய கலந்துரையாடல் முற்றுப்பெற்றதும் படையலுக்கான தேதி குறிக்கப்பட்டுவிடும். குறிப் பிட்ட நாளன்று விடிகாலையிலேயே வந்துவிடுவாள் மருதாயி. மளமளவென்று வீட்டு வேலைகளை முடித்துவிட்டு, கொல்லைப் புறத்துக் குழாயடியில் குளிப்பாள். அரளி, மருக்கொழுந்து, காசித் தும்பைச் செடிகள், மா, பலா, வாழை, பப்பாளி, முருங்கை மரங்கள் என்று நீண்ட கொல்லைப்புறத் தோட்டத்தில் இங்குமங்கும் ஒடிக் கொண்டிருக்கும் மீனாட்சியை, “ மீனாச்சி, வா இங்கிட்டு" என்று கூப்பிட்டு அவளையும் குளிப்பாட்டிவிடுவாள். சுருண்ட கூந்தல் மீனாட்சிக்கு பம்மென்று எழும்பித் தொங்கும். அதில் தண்ணிர் ஊற்றி, சீயக்காய் போட்டு வரட்டு வரட்டென்று தேய்ப்பாள் மருதாயி, மீனாட்சி அலற அலற, "வுடு ஆயா, வுடு" என்று திமி றும் அவளைத் தொடையில் இடுக்கிக்கொண்டு குளிப்பாட்டுவாள். கொல்லைப்புறக் கதவைத் திறந்து பார்த்துக்கொண்டு நிற்கும் மைதிலியையும் அழைத்துக் குளிப்பாட்டுவதுண்டு சிலசமயம்.
குளித்து முடித்துவிட்டு, காலியாய்க் கிடந்த கார்ஷெட்டில் புடவை மாற்றிக்கொள்ளப் போவாள். பித்தளை சரிகையோடிய பளிர்ப் பச்சை சின்னாளம்பட்டிப் புடவை, அடிக்க வரும் நீலத்தில் சிவப்புக் கரையிட்ட அம்மாவின் பழைய பட்டுப்புடவை, ஒளிர் மஞ்சளில் கறுப்புக் கட்டம் போட்ட கைத்தறிப்புடவை என்று சில புடவைகள் உண்டு மருதாயிடம் விசேட நாட்களில் உடுத்த அவற்றில் ஒன்றை உடுத்திக்கொண்டு, எல்லா புடவைகளுக்கும் பொதுவாக இருந்த கறுப்பில் சிவப்புப் புள்ளியிட்ட ரவிக்கை அணிந்துகொண்டு ஷெட்டிலிருந்து வெளியே வருவாள். மீனாட்சிக்குச் சிவப்பில் மஞ்சள் புள்ளி போட்ட பாவாடை அல்லது ஊதாவில் பச்சைத் தாரகைகள் போட்ட பாவாடை ஒன்றை இடுப்பில் கட்டியிருப்பாள் தொப்பி ளுக்குக் கீழே பாவாடைக்கு மேல் உள்ள ரவிக்கை இடுப்புக்குச் சற்று மேலேயே நிற்கும். ஈரக் கூந்தலுடன், மஞ்சள் பூசிய முகமும், பெரிதாகக் குங்குமம் இட்ட நெற்றியுமாய் மருதாயி மீனாட்சியின் கையைப் பிடித்தபடி ஷெட்டிலிருந்து வெளிப்படும் கணத்தை எதிர்நோக்கியபடி கொல்லைப் புறக் கதவருகில் மைதிலி பலமுறை நின்றதுண்டு. மாமரங்களும் செடிகளும் நிறைந்த கொல்லைப் புறத்தில், அப்போது தான் தகதகக்கத் தொடங்கியிருக்கும் சூரிய ஒளியில் ஒரு வனதேவதை மாதிரி தோற்றம் அளித்தபடி நிற்பாள் மருதாயி. பக்கத்தில், பம்மென்ற சுருண்ட கூந்தல் விரிய, தொப்பிள் தெரிய, ஒரு குட்டித் தேவதை.
பொங்கல் செய்யப் பானை. இன்னொரு பானையில் அரிசி, வெல்லம், தேங்காய், பழங்கள், வாழையிலை என்று தயாராக வைத்திருப்பாள் அம்மா. மைதிலிக்கும் அதற்குள் எண்ணெய் முழுக் காட்டு நடந்து அலங்காரங்கள் முடிந்திருக்கும். ஆற்றுக்கட்டு போட்ட
பயணம் -3 - 419 -
________________
கூந்தலுடன் இவளுக்குப் பிடித்த கிளிப்பச்சைப் பாவாடையும் கறுப்பு வெல்வெட் ரவிக்கையுமாய் அம்மாவின் பக்கத்தில் நிற்பாள். இவளு டையது பாடிப்பாவாடை இடுப்பு தெரியாதது. அது பற்றி ஏகக்குறை இவளுக்கு மீனாட்சி மாதிரி இடுப்பில் கட்டும் நாடாப் பாவாடை வேண்டும் என்று அம்மாவை நச்சரித்தப்படியே இருப்பாள்.
மீனாட்சியும் மைதிலியும் கூட இருப்பதால் பஸ் பயணம் வேண் டாம் என்பாள் அம்மா. போக வர ஜட்கா வண்டிச் சத்தம் தந்து விடுவாள். போகவர பனிரெண்டனா, ஒரு ரூபாய், ஒன்றேகால் ரூபாய் என்று ஒவ்வொரு வருடமும் ஏறிக்கொண்டே போன சத்தம் கடைசியாக அவர்கள் போனபோது இரண்டு ரூபாயாக உயர்ந்து விட்டிருந்தது, வண்டிச்சத்தத்துடன் கூடக் கொஞ்சம் சில்லறை தருவாள் அம்மா, மீனாட்சியும் இவளும் மிட்டாய் வாங்கித் தின்க. ஒவ்வொரு முறையும் மருதாயியிடம், "மருதாயி, குழந்தையை அந்தப் பக்கமெல்லாம் கூட்டிட்டுப் போயிடாதே" என்பாள், அந்தப் பக்கத்தைச் சற்று அழுத்தி. குழந்தை என்பது மைதிலியைக் குறிப்பது. இன்னொரு குழந்தையான மீனாட்சி, அம்மா அழுத்திக் குறிப்பிடும் அந்தப் பக்கம் போகலாம் போலும்.
"அதெல்லாம் மாட்டேம்மாஎன்பாள் மருதாயி. 'அந்தப் பக்கம் சுவாரசியமான இடம். கொஞ்சம் பயத்தையும் கிளர்ச்சியையும் உண்டாக்கும் இடம். குரல் புரளப்புரளக் கூக்குரலிடும் கோழிகள், அடித் தொண்டையில் 'மே' என்று கத்தி இழுக்க இழுக்கப் பின்னால் போகும் ஆடுகள் - இவை பலி போடப்பட்டு, நொடியில் உரிக்கப்பட்டு, சமைக்கப்படும் இடம். மீனாட்சியும் இவளும் கை கோர்த்தபடி கண்கள் விரிய, வாய் பிளக்க நிற்கும் இடம். வலி, ரத்தம், சாவு பற்றி இருவரும் ஒருவரையொருவர் வினவியபடி வளையவரும் இடம். சில சமயம், லவங்கப்பட்டை, மிளகு, சீரகம் போடப்பட்டு, கோழி இறைச்சித் துண்டுகளுடன் குழைய வெந்திருக்கும் கோழிச் சோறு தையல் இலையில் கிடைக்கும் சுடச்சுட நாக்கில் நீர் ஊற, ஊதி ஊதிச் சாப்பிடுவார்கள் இருவரும்.
மெஜஸ்டிக் போக அத்தனை பேருந்துகள் இருக்கும்போது ஜட்கா வண்டியில் போவது மருதாயிக்குச் சரியாகப் படவில்லை. தம்பிப் பாப்பாவுடன் நிற்கும் அம்மாவுக்கு டாட்டா சொல்லிவிட்டு வெளியே வந்ததும், "பஸ்ஸுல போயிடலாமா மைதிலி?” என்று கேட்டாள் இவளிடம் முதல் முறை. அதன் பிறகு அதுவே வாடிக்கையாகி விட்டது. பிள்ளையார் கோவிலை நோக்கிப் போகும் வீதியில் மூவரும் நடக்கத் தொடங்குவார்கள். கோவிலை எட்டும்முன் உள்ள பிரதான வீதியில்தான் பேருந்துகள் வரும். கணேஷ் பட்டர் ஸ்டோர்ஸ் என்ற பலகை தொங்கும் வெண்ணெய்க் கடை எதிரேதான் பேருந்து நிறுத்தம். கடை உரிமையாளர் சில சமயம் உட்கார்ந்திருப்பார். அத்தனை வெண்ணையையும் அவரே தின்றவர் போலிருப்பார். திருச்சூரிலிருக்கும் அவள் அத்தை இங்கு வரும்போது சின்னப் பாட்டுக்கள் கற்றுத் தருவாள். ஆடவும் சொல்லித் தருவாள். "ஆனத்
<- 420 <> அம்பை
________________
தலையொளம் வெண்ண தராமடா ஆனத்த ரீகிருஷ்ணா வாய் முடுக்குஎன்று ஒரு பாட்டுச் சொல்லித் தந்திருந்தாள். யானைத் தலையளவு வெண்ணெய் தின்ற ஒரு நபரை நினைக்கும் போதெல் லாம் கணேஷ் ஸ்டோர்ஸ் உரிமையாளர் ஊதுகுழலுடன் மனத்தில் தோன்றுவார். "ஆனத்தலையொளம்..” என்றபடி தும்பிக்கை போல் கையை ஆட்டியபடி பக்கவாட்டிலிருந்து ஆடிக்கொண்டு வரும் தாளகதி வந்து விடும் நடையில். நிறுத்தத்தை எட்டும்போது. இவர் களைப் பார்த்ததும், "மாரியம்மன் கோவிலுக்கா?"என்பார்.
ஆணத்தலையொளம், ஆனத்தலையொளம் என்ற பாட்டும் தாளமும் மனத்தில் ஒடிக்கொண்டிருக்க, "ஆமாம்என்பாள்.
"இங்க வா' என்பார். ஆணத்தலையொளம், ஆணத்தலையொளம். அருகில் போவாள் மீனாட்சியுடன்.
சிறு வெண்ணெய்ப் பொட்டலங்கள் இரண்டு எடுத்து இருவருக் கும் தருவார் சாப்பிட
ஆணத்தலையொளம், ஆணத்தலையொளம். "தாங்ஸ் மாமா." பேருந்துக்குக் காத்தபடி இருவரும் வெண்ணையை நக்குவார்கள். பேருந்து வரும்வரை மனதில் ஆனத்தலையொளம், ஆனத்தலை யொளம் . . .
பேருந்தில் போகும்போது மைதிலி சன்னல் பக்கத்தில், வரும்போது மீனாட்சிக்கு சன்னல் என்று உடன்பாடு செய்து கொண்டிருந்தார்கள். கோவிலை எட்டியதும், கல்லை வைத்து அடுப்பு மூட்டிப் பொங்கல் செய்ய ஆரம்பித்து விடுவாள் மருதாயி. இவர்கள் இருவருமாகக் கை கோர்த்தபடி, அவ்வப்போது மாரியம்மனைப் பார்த்தபடி, அங்கு மிங்கும் அலைவார்கள். படையல் முடிந்து, இவர்கள் சிறிது உண்டு, மற்றவற்றை வினியோகித்து விட்டுக் கிளம்புவார்கள். குங்குமப் பிரசாதம் கொண்டு வந்தால் போதும் என்பது அம்மாவின் உத்தரவு. ஜட்காவில் வராமல் பேருந்தில் வந்து மீதமாக்கிய பணம் அதற்கப் புறம்தான் செலவாகும். மஞ்சளும் மிளகாயும் அரைத்துத் தடவிப் பொறித்த காரக்கடலை, இலந்தைப் பழம், புளிப்பழம், கிளிமூக்கு மாங்காய், கடலை உருண்டை எல்லாம் கொட்டிக் கிடக்கும் கோவிலுக்கு வெளியே பரப்பிய கடைகளில், அத்தனையும் போகும் வயிற்றுக்குள். பிறகு ஜவ்வு மிட்டாய். மிட்டாயை ஒரு கம்பில் சுற்றிக்கொண்டு நிற்பான் மிட்டாய்க்காரன். யானை, பூனை, மயில், முயல், மான் என்று எது வேண்டுமானாலும் மிட்டாயில் செய்து தருவான். ரோஸ்நிற மிட்டாய். நக்கநக்க இனிக்கும் மிட்டாய். சில சமயம் கண்ணாடி வளையல்களை வாங்கிப் போட்டுக் கொள்வார் கள். மிட்டாயை நக்கும்போது வளையல்களும் கூடவே சிலுங்சிலுங் கென்று. பிறகு வீட்டுக்குத் திரும்பும் பயணம். பேருந்திலிருந்து இறங்கியதும் மூலைக் கடையில் ஐஸ்கட்டிகள் மிதக்கும் எலுமிச்சம் பழ சர்பத். வீட்டுக்கு வந்தவுடன் அம்மாவிடம் குங்குமப் பிரசாதம் தரப்படும்.
பயணம் - 3 <- 421 -
________________
"மாரியம்மா காப்பத்துடிம்மாஎன்றபடி அம்மா மூவருக்கும் குங்குமம் இட்டுவிடுவாள்.
"ஜட்கா எங்க கிடைச்சுது?" என்ற கேள்வியுடன் விசாரணைப் படலம் துவங்கும்.
கணேஷ் பட்டர் உரிமையாளர் அவர்களைப் பார்த்துவிட்ட தினங்களில் "பஸ்ஸுல மல்லேச்புரம் சர்க்கிள் போய் அங்க பிடிச் சோம்மா ஜட்காவை' என்பாள் மருதாயி, மற்ற தினங்களில் எட்டாவது மெயின் ரோடு முனையில் அல்லது அடுத்த தெருவில் கிடைத்ததாகச் சொல்வாள். ஒவ்வொரு முறையும் திரும்பும் வழியில் கிடைக்கும் ஜட்கா வண்டிக்காரனுக்கு எட்டாவது மெயின்ரோடில் வண்டியைத் திருப்ப நேரம் இருக்காது. தெரு முனையிலேயே இறக்கிவிட்டுப் போய்விடும் அவசரக்காரன் அவன். இப்படியும் வண்டிக்காரர்களா என்று பிரலாபிப்பாள் மருதாயி.
"மிட்டாய் தவிர கண்டதையும் சாப்பிடலையே?’ என்பாள் அம்மா. இவளும் மீனாட்சியும் வேகமாகத் தலையை அசைத்து மறுப்பார் கள். சில சமயம் மறுக்கும்போதே வயிற்றுக்குள் களேபரமாய் இருக்கும். காரக்கடலையும், புளிப்பழமும், ஜவ்வு மிட்டாயும் மோதிக் கொள்ளும். எலுமிச்சம்பழ சர்பத் ஏப்பம் விட்டபடி இவளும் மீனாட்சியும் கொல்லைப்புறத் தோட்டத்திலிருந்த கழிவறையை நோக்கி ஓடுவார்கள். அப்படியாக முடியும் மாரியம்மன் கோவில் பயணம் ஒவ்வொரு முறையும்.
தம்பிக்கு நான்கு வயதானதும் தானும் வருவேன் என்று அடம் பிடித்தான். அந்த முறை கையில் சுளையாக மூன்று ரூபாய் தந் தாள் அம்மா. கோவிலுக்கு வெளியே வந்ததும் ஜவ்வு மிட்டாய் வாங்கித் தந்துவிட்டு, யானை, முயல், மான் மூன்றையும் இவர்கள் நக்கிக்கொண்டிருந்தபோது, "மைதிலி, ஸென்ட்ரல் டாக்கீசுல தமிள் சினிமா ஓடுது. போவலாமா?” என்றாள் மருதாயி.
-
'உம்' என்றாள் மைதிலி.
வீட்டுக்குத் திரும்பியதும் அம்மாவிடம் என்ன பதில் சொல்ல வேண்டும் என்பதைத் தம்பிக்குச் சொல்லித் தந்தாகிவிட்டது. அவனும் தந்தி பாஷையில் சரியாகச் சொன்னான்.
"கோவிலுக்கு எப்படிப் போனே?”
"ஜட்கால.”
'கோவில்ல என்ன பாத்தே ?”
լքորոf գորլհ.”
"என்ன சாப்பிட்ட ?”
"பொங்கல்.”
"அப்புறம் ?”
"ஆரஞ்சு முட்டாய்.”
சென்ட்ரல் டாக்கீசில் மத்தியான ஆட்டத்துக்குப் பெண்கள் கூட்டம் ஏகத்துக்கு மருதாயி ஆறணா பெஞ்சு டிக்கெட் எடுத்து விட்டு,
-- 422 <> அம்பை
________________
இவர்களைக் கழிவறைக்குக் கூட்டிச் சென்று பிறகு இவர்கள் உள். நுழைந்ததுமே படம் தொடங்கி விட்டது. திரைக்கு வெகு அருகே அமர்ந்திருந்ததால் கழுத்தைத் துக்கிதுக்கிப் பார்த்தார்கள். பெரிய பெரிய முகங்களாகத் தெரிந்தன. கொஞ்ச நேரத்திலேயே கதாநாயகன் ஏதோ தப்புச் செய்கிறான் என்பது புரிந்து போயிற்று.
"கட்டேல போறவனே' என்று அருகிலிருந்த மாமி சபித்தாள். "உனக்குக் கேடுகாலம் வந்திடுச்சுடா. உன் பெண்டாட்டி பத்தினிடா பத்தினிஎன்றாள் இன்னொரு பெண்மணி. "உன் மூஞ்சியும் முவரக்கட்டையும். நீ நாசமாப் போவஎன்று நெட்டி முறித்தாள் மருதாயி இடைவேளையில் ஐஸ்குச்சி சாப்பிட்டபின் படம் ஆரம்பித் ததும் தம்பி "மூச்சாஎன்று சிணுங்க ஆரம்பித்தான். மருதாயி அவனை வெளியே அழைத்துப்போனாள். அவசரமாகத் திரும்பி வந்து, "என்ன மாமி ஆச்சுது?” என்றாள்.
"இந்தக் கம்மனாட்டி அந்தத் தேவிடியா முண்டகிட்ட மயங்கிக் கிடக்கறாங்கறேன்என்றாள் அவள்.
"அந்தத் தட்டுவாணிச் சிறுக்கி பல்லக் காட்டுறதைப் பாருங்க. அவ வாயும் பெரிசு சூத்தும் பெரிசுஎன்றாள் மருதாயி.
"அப்படி வா வழிக்கு" என்று பலரும் முழங்க, தப்புச் செய்தவன் திரும்பி வந்தான் மனைவியிடம் கடைசியில்.
வெளியே வந்து பேருந்தைப் பிடித்து வீடு வந்து சேர்ந்தனர். குங்குமம் இட்டுவிட்டு, அம்மா வழக்கம் போல, "ஜட்கா எங்க கிடைச்சுது போற போது' என்று ஆரம்பித்தாள்.
திடீரென்று கீச்சுக்குரலில், "அம்மா, நாங்க சினிமா பாத்தோம்என்று அறிவித்தான் தம்பி. தொடர்ந்து, "ஒரு கம்மனாட்டி தேவிடியா முண்டகிட்ட போனான். அந்த தட்டுவாணிச் சிறுக்கியோட வாயும் பெரிசு சூத்தும் பெரிசுஎன்றான் அழுத்தந்திருத்தமாக.
அதன்பின் மாரியம்மன் கோவில் பயணம் நின்று போயிற்று. மாரியம்மனுக்காக மஞ்சள் துணியில் பணம் முடிந்து வைக்க ஆரம்பித்தாள் அம்மா. அமரிக்கையான கன்னிகா பரமேச்வரியிடம் அப்பணம் போவதை மாரியம்மன் பொருட்படுத்தக் கூடாது, கோபப்படாமல் இருக்க வேண்டும் என்ற முறையீடுகளுடன் கன்னிகா பரமேச்வரி கோவில் உண்டியலுக்கு அப்பணம் போகலாயிற்று.
சித்தப்பா, பெரியப்பா, அத்தை, மாமாக்கள் வந்தபோது அவர் களுடன் குணசுந்தரி, கணவனே கண்கண்ட தெய்வம், தூக்குத்துக்கி, மனோகரா என்று பல படங்களைப் பார்க்க முடிந்தது. ஆனால் மருதாயி மற்றும் மற்றப் பெண்களின் சிறப்பு நேர்முக வர்ணனை இல்லாமல் எதிலும் மனம் ஒன்றவில்லை.
சதங்கை', ஜூலை - செப்டம்பர் 2000

பயணம் - 3 * 423 ->