தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்து காலத்தால் அழிக்கமுடியாதவை சிலவற்றை இங்கே இந்த இடத்தில் தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (TShrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

Wednesday, July 26, 2017

பாறைகள் - கிரேசி :: மலையாளச் சிறுகதை ஆங்கிலம் வழி தமிழில் ரவி இளங்கோவன்


பாறைகள்

 மலையாளச் சிறுகதை ஆங்கிலம் வழி தமிழில் ரவி இளங்கோவன்

நான்தான் எல்ஷிபா, பீட்டரின் மகள். நீயே பீட்டர் எனும் பாறை, இப் பாறையின் மீதே நான் என் தேவாலயத்தை எழுப்புவேன் என்று தேவன் அறிவிக்க வில்லை. இருப்பினும் என் தந்தை மிக எளிமையான முறையில் தேவாலயம் கட்ட தன் பங்களிப்பைச் செய்தார். தன் மூத்த மகள் தினம்மாவை பங்களிப் பாகக் கொடுத்தார். வயதுக்கு வந்து மணப் பருவத்தில் இருக்கும் நம் மகளைப் பற்றி ஒருபோதும் நீ சிந்திக்க மாட்டாயா ? என்ற என் தாயின் துக்கம் வெளிப் பட்டு எரிந்து எரிந்து ஜ சவாலைகளாக மாறி இறுதியில் வசவுகளில் மடியத் தொடங்கிய வேளையில்தான் தந்தை தினம்மாவை தேவனின் மணமகளாக்கி னார். அவர் அகம்பாவத்துடன் வலது கையை ஆகாயத்திற்கு உயர்த்தி சிறு விரலால் சிட்டிகையிட்டபடி என் தாயின் முகத்தில் ஒரு அசிங்கமான புன்ன கையை உமிழ்ந்தபடி வெளியேறினார். அவருடைய முதுகிற்குப் பின், தன் வெற்றியைக் கொண்டாட சாராயக் கடைக்குச் சென்ற பின், அம்மா வெறுப்பில் வெறுமனே காறித் துப்ப மட்டும் செய்யவில்லை. நீயெல்லாம் எதற்கு திருமணம் செய்து கொண்டு குழந்தைகளைப் பெற்றுக் கொண்டாய் ? என்ற கேள்வியை அவளுடைய பற்களைக் கடித்தபடி வெளிப்படுத்தி அவரைக் குத்தினாள். மூன்றாவது பெண் பிறந்த பின், அக்குழந்தை இறந்தபோதிலும், கிராம மருத்துவன் கூறியபடி முயல் இரத்தத்துடன் திருநீறைக் கலந்து அப்பா தந்ததைத் தின்று பிரசவத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது நல்லதாயிற்று என்று கூறி தன் மார்பில் அறைந்து அறைந்து தனக்குத் தானே ஆறுதல்படுத்திக் கொண் LTG)T.

தந்தையும் தாயும் நெருப்பையும் அமிலத்தையும் வீட்டின் மீது பொழிந்து கொண்டிருந்த வேளையில் என்னைக் காத்தது வார்த்தையல்ல. ஒரு கிளார்க்கம்-டைப்பிஸ்ட் வேலைதான். கான்வெண்டின் பெருஞ்சுவர்களின் உள்ளே தீனக்காளைச் சந்தித்து என் வேலையைப் பற்றிக் கூறச்சென்றேன். வெள்ளைஉடையில் தீனக்கா மேலும் வெளிறிப் போயிருந்தாள். அவளுடைய கனவுகள் அனைத்தும் மரணத்தில் மூழ்கி அவளது பெரிய கருத்த விழிகளில் மிதந்து கொண் டிருந்தன என்னைவிட மிக, மிக அழகான தீனக்கர்வின் விதியை எண்ணி என் கண்களில் ஊற்றெடுத்தது. தினக்கா, கண்ணிர் அலைகளினூடே நடந்து வந்து என்னைத் தொட்டாள். அவளுடைய விரல்கள் மரித்தவர்களுடையதைப் போல குளிர்ந்திருந்தன. என் நரம்புகளில் ரத்தம் உறைந்தது. எனது குழந் தைப் பருவ திக்கல் திரும்பி விட்டது. 'தீனக்கா, எனக்கு வேலை கிடைத்து
ட்டது' என்பதை திக்கித் திணறி சொல்லுவதற்குள் நான் வார்த்தைகளுக்குள் தடுமாறி விழுந்து விட்டேன்.
தினக்கா புன்னகைத்தாள். அவளுடைய புன்னகையின் சோகம் ஒரு பனிக் கத்தியைப் போல என் இதயத்தைக் கிழித்தது. குறைந்த பட்சம் நீயாவது தப்பித்தாய் என்று தினக்கா பெருமூச்செறிந்து சொல்கையில், பைத்தியம் பிடித் இது போல் நான் ஒடினேன். மூர்க்கமாகத் தள்ளி கதவைத் திறந்து விதியை நோக்கி விரையும் பொழுது யாரோ என்னைப் பின்னிருந்து பற்றி இழுப்பது போல், நான் திரும்பி ஒரு கணம் பின்னால் பார்த்தேன். முற்றத்தில் தீனக்கா ஒரு உப்புத் தானாக உறைந்திருந்தாள்.

ஒரு பழைய தோள்பையை எடுத்து அதன் தூசியைத் தட்டியபடி நான் அறி வித்தேன் "இப்பொழுது நான் எனக்கென ஒரு பாதையில் செல்கிறேன்."

நான்_எவது தந்தையின் விரல்கள், பணப்பையின் முடிச்சைத் தளர்த்தியபடி, நடுங்கி, நடுங்கி இறுதியில் அசைவற்றுப் போவதைப் பார்த்தேன். தனிமையின் ஊசி முனை மீது என் தாயின் புகை படிந்த விழிகள் எழுதுவதை நான் பார்த் தேன். இக் காட்சிகள் அனைத்தையும் என் புறங்கையால் ஒதுக்கியபடி நான்
வீட்டை விட்டு வெளியேறினேன்.

அலுவலகத்தில் என்னுடன் பணியாற்றும் பெண் தன்னை மிருதுளா என்று அறிமுகப்படுத்திக்கொண்டாள். அவள் தன் கழுத்தில் தொங்கும் தாயத்தை பயபக்தியுடன் வருடியபடி, அவளுடைய தந்தை அவளது இதயம் மிகவும் மென்மையானது என்பதால் அன்புடன் அவ்வாறு பெயரிட்டதாகக் குறிப்பிட்ட வுடன் எனக்கு மிகுந்த கோபம் வந்தது. மேலும் அவர் பாசமும் நேசமும் மிக்க ஒழுக்கமான மனிதர் என்றும் விளக்கினாள். அவளுடைய தந்தைதான் குழந்தையாக இருக்கையில் அவளைக் குளிப்பாட்டி, ரசநாதி சூரணத்தை தலை யில் சூடு பறக்கத் தேய்த்து, தலையை சீவி பின்னலிட்டு அதில் மல்லிகை மலர் களைச் சூடி விடுவார் என்று தேவையின்றி பேசப் பேச என் இதயம் பொறாமை யால் எரியத் தொடங்கியது. தான் உண்மையில் வளர விரும்பவில்லை யென்றும் சந்தர்ப்பம் கிடைத்தால் மீண்டும் குழந்தைப் பருவத்திற்கே செல்ல விரும்புவதாகவும் அறிவித்தபடி, அவள் என் அந்தரங்கத்தை உள்ளாடைகளைக் களைவதைப் போல் களைந்து விட்டாள்.
நான் விதியில் நடக்கும்பொழுது என் முன்னே செல்லும் எவரையாவது தேர்ந்தெடுத்துக் கொள்வேன். என் வலது காலை அவனது வலதுகால் தடத்தில்
________________
பதிப்பேன். என் இடது காலை அவன் எங்கு பதித்தானோ அங்கு பதிப்பேன். வழக்கமாக, என் வலது காலை முன் வைத்து இந்த ஆட்டத்தைத் தொடங்கு வேன். இந்த ஆட்டம் வேகம் பெற்று பின் மடிந்து விடும். இப்படி, அவனுடைய காலடித்தடங்களைப் பின்பற்றியபடி மற்ற அனைத்தையும் மறந்து நான் இன் குழந்தைப் பருவத்து அறியாமையின் ப்டிக்கட்டுகளின் மீது ஏறுவேன். அங்கே தினக்காவும் நானும் எதிர்காலத்தை முற்றாக ஒதுக்கியபடி கிள்ளித்தட்டு விளுை யாடுவோம் அல்லது தீனக்கா முழங்கால் வரையுள்ள பாவாடையை உயர்த்திக் கட்டி ஒரு குச்சியை வாயில் வைத்து புகை பிடிப்பது போல பாவனை செய்வாள். நான் ஒரு தென்னம்பிள்ளையை என் இடுப்பில் வைத்து, ஒரு துண்டை தாவணி போல சுற்றி ஒரு மனைவியாகவும் தாயாகவும் ஆவேன். இந்த உலகிலிருந்து வெகு வெகு தொலைவில் ஆகாயத்தின் உச்சியில் தொங்கும் எங்கள் குழந்தை இல்லத்தில் இந்த பூமிக்கு அப்பாற்பட்ட ஒரு பிரகாசம் பரவுகிறது.

இத்தகைய மாபெரும் பயணத்தின் ஊடே ஒரு முறை நடுத்தர வயதான ஒரு மனிதனைப் பின் தொடர்ந்து அவனது வீட்டின் முன்புறத்தை அடைந்தேன். காலடிகள் உள்ளே மறைந்த உடன், யாரோ என் திகைப்புற்ற முகத்தின் முன்னே கதவை அறைந்து சாத்தினார்கள். நான் திரும்பினேன். ஒரு மெல்லிய புன்னகை யில் என் அதிர்ச்சியை மறைத்தபடி.

எப்படியோ, மிருதுளா என்னோடு பேசிய பின்னர், விடுதியிலிருந்து அலு வலகம் செல்லும் வழியில் யாருடைய காலடிகளையும் என்னால் தொடர முடிய வில்லை. அதற்கு மாறாக மிகுந்த உறுதியோடும் வேகத்தோடும் அவற்றைக் கடந்து செல்வேன். அலுவலகத்தை அடைந்தவுடன் இருக்கையில் வியர்த்து மூச்சிரைக்கச் சாய்ந்தபடி, உச்சியிலிருந்து உள்ளங்கால் வரை நான் எரியத் தொடங்குவேன். இந்த எரிதலில் ஒரு மாற்றத்தின் இடி முழக்கத்தை நான்
கேட்டேன். நான் உக்கிரமாக, ஆத்திரத்துடன் தட்டச்சு இயந்திர எழுத்துக் களைக் குத்தினேன்.

திடீரென மிருதுளாவுக்குத் திருமணமானது. ஒரு மாத விடுமுறைக்குப் பின் அவள் அலுவலகம் திரும்பினாள். அவளது விழிகள் உறக்கமற்ற இரவுகளால் நிறைந்திருந்தது. அவளது உதடுகள் சந்தோஷத்தின் முழுமையில் களைத் திருந்தன. அவளுடைய வளைவுகள் ஒரு பயனற்ற சோர்வில் பொதிந்திருந்தன. சில நேரங்களில் புடவைக்குப் பின்னிருந்து, அவளுடைய இடது மார்பு, புதிதாக அடைந்த முழுமையின் துடிப்பில் வெளியே குதித்து ஆண்கள் பெண்களின்
ழிகளை சிறைப்படுத்தியது. நான் எனது தட்டையான, குறிப்பிட்டுச் சொல்ல இயலாத மார்பைக் குறித்து அதிக அவமானமடைவதை உணர்ந்தேன். அதிக கவனம் எடுத்து, யாரும் அதை கவனிக்காத வகையில் கனத்த பருத்திப் LGOG) யால் மறைத்துக் கொண்டேன்.
மிருதுளா யாருடனும் அதிகமாக பேச மறுத்ததைக் கண்டு திருப்தியாக இருந்தது. ஆனால் நான்கைந்து நாட்களுக்குப் பிறகு, அவளது வாயிலிருந்து வார்த்தைகள் மேடையின் மீது மோதிக் கொள்ளும் ஒரு கதாபாத்திரத்தைப்

சதுரம் D 3


போல வெளிப்பட்டன. ஒரு சில வார்த்தைகள் கர்ஜித்தபடி, வந்தன. அவை என்னைச் சுற் வந்து இகரத்திக் கிழித்தன. - மிருதுளா தன் தந்தையின் உருவத்தை வேரோடு பறித்தெடுத்து அந்த இடத்தில் கணவனைப் பதித்து விட்டாள். அதைப்பாாதது நான் கசபபுடன புன்னகைத்தேன். அவளு மீது அவளுடைய கணவன் கொண்டுள்ள காதலும் அவர்களுடைய படுக்கையறை ரகசியங்களும் என்னை எரித்தன. இவ்வாறாக என் இரவுகளில் உறக்கத்தின் வசந்தங்கள் த்தினுள் இழுக்கப்பட்டுவிட்டன. நான் கண்களை மூடியவுட னேயே ஒரு நேசமற்ற குடிகாரக் கணவன், விங்கிய விழிகளுடன் வசவான வார்த்தைகளுடன் கண்ணுக்குத் தெரியாத எதிர்கால சமவெளியிலிருந்து என் மீது வந்து மோதினான். (ஒவ்வொரு காலையிலும் என் இதயத்தின் மீதான எடை, சுமை, அதிகரித்துக்கொண்டே இருந்தது. குறைந்த பட்சம், ஒரு மருத்து வரை, நிபுணரை சந்தித்து ஆலோசனை பெறத் தீர்மானித்தேன்.

அந்த மருத்துவர் ஒரு கறுத்த காளை, அவருடைய உருண்டை விழிகள், குறுகிய நெற்றி, அடர்த்தியான முடி எனக்கு ஒரு காட்டெருமையை நினைவு படுத்தின. இன்னும் நெருக்கமாக நான் அவரை ஆராயத் தொடங்குவதற்குள் என் மார்பின் மீது ஸ்டெதாஸ்கோப்பை அழுத்தமாக வைத்தார். நான் சில முறை ஆழமாக மூச்சை உள்ளிழுத்தேன். பரிசோதனை முடிந்த பின், அவரது தல்ை ஒரு ஊசலைப் போல ஆடத் தொடங்கியது. பின், ஒரு முக்கலையும் முனகலையும் வெளிப்படுத்தியபடி அவர் ஒரு பொருத்தமற்ற பறவைக் குரலில் பேசினார், "இதயத்திற்குப் பதில் உனக்குள் ஒரு பாறை இருக்கிறது. அது இறுக்கமடைந்து கொண்டிருக்கிறது."

எனக்கு அதிர்ச்சியாக இல்லை. எவ்வாறு அதிர்ச்சியடைவது என்பதை நான் மறக்கத் தொடங்கி விட்டேன். என் வற்றி உலர்ந்த மார்பகங்களை வெறித்தபடி அவர் தொடர்ந்தார் : 'உனக்குள் இருந்த மென்மையின் கடைசித் துளிகள் வறண்டு கொண்டிருக்கின்றன.'

எவ்வித பாதிப்புமின்றி மருத்துவமனையை விட்டு வெளியே வந்த நான், இதுதான் வேதத்தின் பின் இணைப்பு என்பதை உணர்ந்தேன். வெளியே சுட்டெரிக்கும் சூரியனில், நான் ஆகாயத்தை நோக்கி என் முகத்தை உயர்த்தி னேன். இந்தப் பாறையின் மீது எதைக் கட்ட நீ உத்தேசித்திருக்கிறாய் ? பதிலாக, என் விழிகளை இருள் நிறைத்தது.
*
(கிரேசியின் முதல் சிறுகதைத் தொகுப்பு '' படியிறங்கிப் போன பார்வதி ' சமீபத்தில் வெளியாகி மலையாள இலக்கிய உலகில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச்சிறுகதையை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தவர் வி. சி. ஹாரிஸ். இது "Indian Literature மே-ஜூன் 1993 இதழில் வெளியாகி யுள்ளது.)