தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Thursday, January 07, 2021

விசாரணை - காஃப்கா ;; ஏழாவது அத்தியாயம் (கடைசி பகுதி) :: ஏ.வி. தனுஷ்கோடி-......, ....., ஓவியனுக்கு

 122 

காஃப்கா 

........................  பிறகு கூறினார் இதற்கு மிகவும் சுலபமான ஒரு வழி இருக்கிறது. நீங்கள் விரும்பினால் மானேஜருக்கு பதிலாக என்னுடன் நீங்கள் பேசலாம். உங்களுடைய விஷயம்களைப்பற்றி நிச்சயமாக உடனே பேசியாக வேண்டும். உங்களைப் போலவே நாங்களும் வியாபாரம் செய்பவர்கள். வியாபாரிகளின் நேரத்தைச் சரியாக மதிப்பிட எங்களுக்குத் தெரியும். நீங்கள் இப்படி உள்ளே வருகிறீர்களா? பிறகு தன் அலுவலகத்தின் முன் அறையின் கதவைத் திறந்தார். 

க. வேறு வழியின்றிச் செய்யாமல் விட்டுவிட்ட வேலையை உதவி இயக்குநர் எப்படித் தனதாக்கிக்கொள்ளத் தெரிந்துவைத்திருக்கிறார்? தேவைக்கு மீறிய அளவு க. விட்டுக்கொடுத்துவிட்டானா என்ன? சற்றும் நிச்சயமில்லாது அற்பமான நம்பிக்கையுடன் - அவன் அதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும் - முன்பின் தெரியாத ஒரு ஓவியனைப் பார்க்க அவன் ஓடிக்கொண்டிருக்கும் போது, இங்கே அவனுடைய மதிப்பு மீண்டும் சரிசெய்ய முடியாத அளவுக்கு பாதிப்புக்குள்ளாகிக்கொண்டிருக்கிறது. அவன் கம்பளிக்கோட்டை மறுபடி யும் கழற்றி விட்டு, அடுத்த அறையில் இன்னும் காத்துக்கொண்டிருக்கும் அந்த இரண்டு நபர்களையாவது தன் பக்கம் மீண்டும் இழுத்துக்கொள்ள முடிக் தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும். அவன் அறையில் அந்தச் சமயத்தில் அவனுடைய புத்தக அலமாரியில், தன் அலமாரியில் தேடுவதைப்போல் உதவி இயக்குநர் எதையோ தேடுவதை அவன் பார்த்திராவிட்டால் க. அப்படிச் செய்ய முயன்றிருப்பான். க. படபடப்புடன் கதவை அணுகியபோது அவர் உரக்கக் கூறினார், "அட, நீங்கள் இன்னும் போகவில்லை !" அவர் அவனைத் திரும்பிப் பார்த்தார். அவர் முகத்திலிருந்த அழுத்தமான மடிப்புகள், வயதிற்கு பதிலாக பலத்தைக் காண்பிப்பது போல் தோன்றின. அவர் உடனே மறுபடியும் தேடத் தொடங்கினார். "நான் ஒரு ஒப்பந்தத்தின் நகலைத் தேடிக்கொண்டி ருக்கிறேன்" என்றார் அவர், "அது உங்களிடம்தான் இருக்க வேண்டும் என்று கம்பெனியின் பிரதிநிதி கூறுகிறார். அதைத் தேட எனக்கு உதவி செய்வீர்களா?" க. ஒரு அடி எடுத்து வைத்தான், ஆனால், உதவி இயக்குநர், "நன்றி. அதைக் கண்டுபிடித்துவிட்டேன்" என்று கூறினார். பிறகு, பத்திரங்கள் அடங்கிய காகிதக் கட்டுடன் மறுபடியும் தன் அறைக்குள் சென்றார். அதில் ஒப்பந்தத்தின் நகல் மட்டுமல்லாமல், நிச்சயம் மற்ற காகிதங்களும் இருந்தன. 

"இப்போது அவருக்கு நான் ஈடுகொடுக்க முடியாமலிருக்கலாம்” என்று க. தனக்குள் சொல்லிக்கொண்டான். "ஆனால், என் சொந்தப் பிரச்சினைகள் தீர்ந்த பிறகு என்னிடம் என்ன பாடு படப்போகிறார் என்று அவர்தான் முதலில் உணருவார். அது நிச்சயம் கசப்பான அனுபவமாக இருக்கப்போகிறது.' இந்த எண்ணங்களால் சிறிது அமைதி அடைந்து, தான் வேலை விஷயமாகச் சென்றிருப்பதாக இயக்குநரிடம் முடிந்தபோது சொல் என்று ஏற்கனவே வெகுநேரமாகத் தனக்காக வராந்தாவிற்குச் செல்லும் கதவைத் திறந்துவைத்துக் கொண்டு நின்றிருந்த பணியாளிடம் சொல்லிவிட்டு, சற்று நேரம் முழுமை யாகத் தன் விஷயத்திற்காக ஒதுக்க முடியும் என்ற சிறிய மகிழ்ச்சியுடன் வங்கியை விட்டு வெளியே சென்றான். 

அவன் அப்போதே அந்த ஓவியனைப் பார்க்கச் சென்றான். அந்த ஓவியன் நீதிமன்ற அலுவலகங்கள் இருந்த புறநகருக்கு எதிர் திசையில் இருந்த மற்றொரு புறநகர்ப் பகுதியில் வசித்துவந்தான். அது நீதிமன்ற அலுவலகங்கள் இருந்த புறநகர்ப் பகுதியைவிட ஏழ்மையான பகுதி. அதில் வீடுகள் மேலும் இருளடைதிருந்தன. 

 விசாரணை 

123 

 சந்துகளிலெல்லாம் உருகி வழிந்து கொண்டிருந்த பனியின் மீது தூசியும் தும்பும் மெல்ல மிதந்து கொண்டிருந்தன. ஓவியன் வசித்த வீடு இருந்த கட்டடத்தின் பெரும் நுழைவாயில் கதவின் ஒரு பாதி மட்டும் திறந்திருந்தது; மற்ற பாதியில், கீழே சுவரில், ஒரு ஓட்டை போடப்பட்டிருந்தது. க. அதை நெருங்கிய போது அதிலிருந்து ஆவி கிளம்பிக்கொண்டிருந்த, சகிக்க முடியாத மஞ்சள் நிறமான குழம்பிய நீர் பீச்சியடித்துக்கொண்டிருந்தது. கீழே படிக் கட்டின் அருகே தரையில் ஒரு சிறு குழந்தை கவிழ்ந்து படுத்துக்கொண்டு அழுது கொண்டிருந்தது. ஆனால், வழியின் மறுபக்கத்திலிருந்த கொல்லன் பட்டறையிலிருந்து எல்லாவற்றையும் மூழ்கடித்துக்கொண்டு எழுந்த சத்தத்தினால் அதன் அழுகையை யாரும் கேட்க முடியவில்லை . பட்டறையின் கதவு திறந் திருந்தது. மூன்று பட்டறை ஆட்கள் ஒரு பொருளைச் சுற்றி அரைவட்டமாக நின்றுகொண்டு அதன்மீது சம்மட்டியால் அடித்துக்கொண்டிருந்தார்கள். சுவரில் தொங்கிக்கொண்டிருந்த ஒரு பெரிய தகரத் தகடு மங்கிய ஒளியை வீசிக் கொண்டிருந்தது. அது இரு ஆட்களிடையே ஊடுருவி அவர்களுடைய முகங் களையும் மேலங்கியையும் பிரகாசிக்கச் செய்தது. க. இவற்றையெல்லாம் ஒரு கணம் பார்த்தான். அவன் முடிந்தவரை சீக்கிரம் இங்கு வேலையை முடித்துக் கொள்ள விரும்பினான். ஓவியனுடன் ஒரு சில வார்த்தைகள் மட்டும் பேசி, அவனால் என்ன செய்ய முடியும் என்பதைத் தெரிந்து கொண்டு உடனே வங்கிக்குத் திரும்பிச் செல்ல விரும்பினான். அவனுக்கு இங்கு கிடைக்கும் வெற்றி சிறியதாக இருந்தாலும் அது வங்கியில் அவன் இன்று செய்யப்போகும் வேலைக்கு ஊக்கமளிக்கும். மூன்றாவது மாடியில் அவன் தன் நடையைச் சிறிது தளர்த்த வேண்டியிருந்தது, அவனுக்கு மிகவும் மூச்சுவாங்கியது, படி களும், அதே போல் மாடிகளும் அளவுக்கு மீறி உயரமாக இருந்தன. ஓவியன் எல்லா மாடிகளுக்கும் மேல், பரண் அறையில் வசித்து வந்ததாகக் கேள்வி. மேலும் அங்கு மிகவும் புழுக்கமாக இருந்தது. சுற்றிச் சுற்றிச் செல்லும் குறுக லான படிகள், இரு பக்கங்களும் சுவர்களால் மூடப்பட்டிருந்தன, அவற்றில் இங்குமங்குமாக மிகவும் உயரத்தில் சிறு ஜன்னல்கள் பொருத்தப்பட்டிருந்தன. க. சிறிது நேரம் நின்றபோதுதான் சில சிறுமிகள் ஒரு வீட்டிலிருந்து வெளியே ஓடிவந்து சிரித்துக்கொண்டே படிகளில் வேகமாக மேலே ஏறிச் சென்றார்கள். க. அவர்களை மெதுவாகப் பின்தொடர்ந்தான். அவர்களில் ஒருத்திக்குத் தடுக்கியதால், மற்றவர்களிலிருந்து அவள் பின்தங்கியபோது, அவளை அணுகி, அவளுடன் சேர்ந்து மேலே ஏறிய போது அவன் கேட்டான், "இங்கே டிட்டோரெல்லி என்ற ஓவியன் வசிக்கிறானா?” பதிமூன்று வயது கூட அடைந்திராத அந்தப் பெண், சற்றுக் கூன் போட்டவள், அப்போது முழங்கை யால் அவனை இடித்துவிட்டு அவனை நிமிர்ந்து ஓரக்கண்ணால் பார்த்தாள். அவளுடைய இளவயதோ, அல்லது அவள் உடல் ஊனமோ, அவள் ஏற்கனவே முழுவதும் தரங்கெட்டுப்போயிருந்ததைத் தடுத்திருக்க முடியவில்லை. அவள் புன்னகைக்கக்கூட இல்லை. ஆனால் க.வைத் தீவிரமாக, கூர்மையாக, அழைப்பு விடும் பார்வையுடன் பார்த்தாள். க. அவளுடைய நடத்தையைக் கவனிக் காதது போல் பாவனைசெய்து அவளைக் கேட்டான், "உனக்கு ஓவியன் டிட்டோரெல்லியைத் தெரியுமா?" அவள் தலையசைத்துவிட்டு பதிலுக்குக் கேட்டாள், "அவனிடம் உங்களுக்கு என்ன வேலை?" டிட்டோரெல்லியைப் பற்றி உடனே இன்னும் சிறிது தெரிந்துகொள்வது அனுகூலமானது என்று க. வுக்குத் தோன்றியது. "அவன் என்னை வரையப்போகிறான்." என்றான் அவன். "உங்களை வரையவா?" என்று அவள் கேட்டாள். அவன் ஏதோ அசாதாரணமாக ஆச்சரியப்படும்படியானதையோ அல்லது சொல்லக்கூடாததையோ

 

124 

காஃப்கா 

 சொல்லிவிட்டதைப் போல வாயை அளவுக்கு மீறித் திறந்து, தன் கையால் க. வை லேசாகத் தட்டிவிட்டு இரண்டு கைகளாலும் அவளுடைய மிகவும் குட்டையான பாவாடையைத் தூக்கிக்கொண்டு முடிந்தவரை வேக மாக மற்ற பெண்களின் பின்னால் ஓடினாள்; அவர்களுடைய கூச்சல் ஏற்கனவே தெளிவிழந்து மேலே மறைந்துவிட்டிருந்தது. ஆனால், படிகளின் அடுத்த திருப்பத்திலேயே க. மறுபடியும் எல்லாப் பெண்களையும் சந்தித்தான். அவர்கள் க. வின் நோக்கத்தைப்பற்றி, கூனியிடமிருந்து தெரிந்து கொண்டு அவனுக் காகக் காத்துக்கொண்டிருந்தார்கள் என்பது தெரிந்தது. அவர்கள் படிகளின் இருபுறங்களிலும் - க. அவர்களுக்கு நடுவே தாராளமாகச் செல்வதற்காக சுவர்களில் அழுந்தி நின்று கொண்டார்கள். கைகளால் தங்கள் ஏப்ரனை நீவி விட்டுக்கொண்டார்கள். அவர்களுடைய முகங்களும், இது போல் வரிசை யாக நின்றதும், அவர்களுடைய குழந்தைத்தனத்தையும் சீரழிவையும் வெளிப் படுத்தின. அவன் மேலே செல்லச் செல்ல அவன் பின்னால் சிரித்தவாறே ஒன்றாகச் சேர்ந்து கொண்ட பெண்களை நடத்திச் சென்ற கூனி, அவனுக்கு வழிகாட்டும் வேலையை ஏற்றுக்கொண்டாள். க. சரியான வழியைக் கண்டு பிடிப்பதற்கு அவளுக்குத்தான் நன்றி கூற வேண்டும். ஏனென்றால், அவன் நேராக மேலும் ஏறிச் செல்ல எண்ணியபோது, அவள்தான் அவன் டிட்டோ ரெல்லியிடம் செல்ல படிக்கட்டில் ஒரு திருப்பத்தில் செல்ல வேண்டும் என்று காட்டினாள். அங்கே சென்ற படிக்கட்டு மிகக் குறுகியதாகவும், நீண்டதாகவும், திருப்பம் இல்லாமலும், அதன் நீளம் முழுவதையும் பார்க்கக் கூடியதாகவும். டிட்டோரெல்லியின் கதவுக்கே சென்று முடிவதாகவும் இருந்தது. ஒரு கோணத்தில் கதவுக்குமேல் பொருத்தப்பட்டிருந்த ஜன்னலினால், அந்தக் கதவு, படிக்கட்டு களைவிடப் பிரகாசமாக இருந்தது. அது வர்ணம் பூசப்படாத பலகைகளினால் செய்யப்பட்டிருந்தது. அதன்மேல் டிட்டோரெல்லி என்ற பெயர் சிவப்பு வர்ணத்தால், அகலமான தூரிகைக் கோடுகளால், எழுதப்பட்டிருந்தது. க. தன்னைத் தொடர்ந்து வந்தவர்களுடன் படிகளின் மத்தியைக் கூட அடைந் திருக்க மாட்டான், அதற்குள் காலடிச் சத்தங்களினால் மேலே கதவு சிறிது திறந்து, வெறும் இரவு உடை மட்டுமோ என்னவோ அணிந்திருந்த மனிதன் ஒருவன் அதன் இடுக்கு வழியாகத் தோன்றினான். அந்தக் கும்பல் வருவதைப் பார்த்தவுடன், அவன் "ஓ!" என்று உரக்கக் கூறிவிட்டு மறைந்தான். கூனி சந்தோஷத்தால் கைகளைத் தட்டினாள். மற்ற பெண்கள் க. இன்னும் வேக மாக முன் செல்வதற்காகப் பின்னாலிருந்து நெருக்கினார்கள். 

அவர்கள் இன்னும் மேலே வந்து சேரக்கூட இல்லை. அதற்குள் அந்த ஓவியன் கதவைச் சட்டென முழுவதும் திறந்துவிட்டு, நன்கு குனிந்து வணங்கி க. வை உள்ளே வருமாறு அழைத்தான். ஆனால், அந்தப் பெண்களையோ அவன் தடுத்து நிறுத்தினான். அவர்கள் எவ்வளவு கெஞ்சியும், அவன் விருப்பத்திற்கு மாறாக உள்ளே நுழைய அவர்கள் எவ்வளவு முயற்சிசெய்தும், அவர்களில் எவரையும் உள்ளே விடவில்லை. நீட்டியிருந்த அவனுடைய கைகளுக்கடியில் நழுவ அந்தக் கூனியால்தான் முடிந்தது. ஆனால், ஓவியன் அவளைத் துரத்தி அவளைப் பாவாடையுடன் சேர்த்துப் பற்றி, தூக்கி, சுழற்றி, கதவுக்கு முன்னால் மற்ற பெண்களுடன் அவளையும் நிறுத்தினான். அந்தப் பெண்கள், ஓவியன் தன் இடத்தை விட்டு நகர்ந்திருந்தபோதும் வாசற்படியைத் தாண்டத் துணிய வில்லை. க. வுக்கு இதையெல்லாம் எப்படி எடுத்துக்கொள்வது என்று தெரிய வில்லை. எல்லாம் அவர்களுக்குள்ளிருந்த ஒரு பரஸ்பர நட்புணர்வால் நடந்ததாக அவனுக்குத் தோன்றியது. கதவுக்கு அருகில் இருந்த பெண்கள் 

 

125 

விசாரணை 

ஒருவர்பின் ஒருவராகக் கழுத்தை உயர்த்தி கேலி கலந்த பலவித வார்த்தைகளால் ஓவியனை நோக்கிக் கத்தினார்கள். அவ்வார்த்தைகளைக் க. வினால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஓவியனும் சிரித்துக்கொண்டே அந்தக் கூனியை மற்றொரு முறை சுழற்றினான். பிறகு கதவைச் சாத்திவிட்டு, திரும்பவும் க. வின்முன் குனிந்து அவன் கையைக் குலுக்கித் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் வகையில் கூறினான், "ஓவியன் டிட்டோரெல்லி." க. கதவைச் சுட்டிக்காட்டி - அதற்குப் பின்னால் பெண்கள் கிசுகிசுத்துக்கொண்டிருந்தனர் - "உங்களை இங்கு எல்லோரும் மிகவும் விரும்புவது போல் தெரிகிறது." என்றான். "ஆ, இந்தச் சிறுக்கிகள்!” என்று ஓவியன் கூறிவிட்டு, தன் இரவு உடையின் கழுத்துப் பித்தானைப் போட முடியாமல் தவித்தான். அவன் காலணியில்லாமல், வெறும் ஒரு அகலமான மஞ்சள் நிற லினன் கால்சட்டையை அணிந்திருந்தான். அது ஒரு கயிற்றினால் அவன் இடுப்பில் இறுக்கப்பட்டிருந்தது. அதன் நீண்ட முனை தானாக இப்படியும் அப்படியும் ஆடியது. இந்தச் சிறுக்கி களால் எனக்கு உண்மையில் தொல்லைதான்” என்று அவன் தொடர்ந்து கூறிக் கொண்டே, தன் இரவு உடையைக் கழற்றிவிட்டு - அதன் கடைசிப் பித்தான் இப்போது பிய்ந்துவிட்டது - ஒரு நாற்காலியை எடுத்துப்போட்டு க. வை அமரும்படி கேட்டுக்கொண்டான். "அவர்களில் ஒருத்தியை - அவள் இன்று இங்கு இல்லை - ஒருமுறை நான் வரைந்தேன். அப்போதிலிருந்து அவர் களெல்லாம் என் பின்னால் வந்து கொண்டேயிருக்கிறார்கள். நான் தனியாக இருக்கும் போது, நான் அனுமதித்தால் மட்டுமே அவர்கள் உள்ளே வருவார் கள். நான் வெளியே சென்றிருந்தாலும் ஒருத்தியாவது எப்போதும் இங்கே இருப்பாள். அவர்கள் என் கதவுக்கு ஒரு சாவியைத் தயாரித்துத் தங்களுக்குள் அதைக் கொடுத்து வாங்கிக் கொள்கிறார்கள். அது எவ்வளவு தொல்லையாக இருக்கிறது என்று கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாது. உதாரணத்துக்கு நான் வரைய வேண்டிய ஒரு பெண்ணுடன் வீட்டுக்கு வந்து என் சாவியைக் கொண்டு கதவைத் திறந்தால், இந்தக் கூனியோ அல்லது வேறு ஒருத்தியோ, மேஜையருகில் அமர்ந்து தூரிகையினால் தங்கள் உதடுகளைச் சிகப்பாக்கிக் கொண்டிருப்பார்கள் அல்லது, நேற்று நடந்தது போல், நான் இரவு நேரங் கழித்து வீட்டுக்கு வருவேன் - என் நிலையையும் அறையின் அலங்கோலத்தை யும் எண்ணி என்னை மன்னிக்க வேண்டும் - அப்போது நான் இரவு நேரங் கழித்து வீட்டுக்கு வந்து படுக்கப்போகும்போது, என் காலை ஏதோ ஒன்று சீண்டும், நான் கட்டிலின் அடியில் பார்த்து, அங்கிருக்கும் இந்தச் சனியன் களில் ஒன்றை வெளியே இழுத்துப் போடுவேன். ஏன் அவர்கள் இப்படி என் மேல் வந்து விழுகிறார்கள் என்று தெரியவில்லை. அவர்களை எந்த விதத்திலும் ஊக்குவிப்பதில்லை என்பதை நீங்கள் பார்த்தீர்கள் அல்லவா? அதனால் என்னுடைய வேலை நிச்சயம் கெட்டுப்போகிறது. இந்த ஸ்டூடியோவை எனக்கு வாடகையில்லாமல் கொடுத்திருக்காவிட்டால், நான் எப்போதோ இதைக் காலி செய்திருப்பேன்." அப்போது கதவுக்குப் பின் ஒரு சிறு குரல் மென்மையாகவும், பயத்துடனும் கூவியது. "டிட்டோரெல்லி, நாங்கள் வரலாமா?" "கூடாது" என்று ஓவியன் பதிலளித்தான். "நான்கூடவா?" என்று அது மறு படியும் கேட்டது. "நீகூடத்தான்” என்றான் ஓவியன். கதவை நோக்கிச் சென்று அதைத் தாளிட்டான். 

இதற்கிடையில் க. அறையை நோட்டம்விட்டான். இந்த ஏழ்மையான சிறு அறையை ஸ்டூடியோ என்று சொல்ல முடியும் என்று அவனால் நினைக்கவே முடியவில்லை. குறுக்கிலும், நெடுக்கிலும் இங்கு இரண்டடிக்கு மேல் எடுத்து 

 

காஃப்கா 

126 

வைக்கவே முடியாது. தரை, சுவர்கள், அறையின் கூரை, எல்லாம் மார் செய்யப்பட்டவை. பலகைகளுக்கு இடையே சின்ன வெடிப்புகளைப் பார் முடிந்தது. க. வின் எதிரே, சுவரை ஒட்டிக் கட்டில் இருந்தது. அதன் மேல் பல நிறங்களாலான படுக்கை விரிப்புகள் குவிந்திருந்தன. அறையின் நடுவில்லை ஸ்டாண்டின் மேல் ஒரு படம் இருந்தது. அது ஒரு சட்டையால் மூடப்பட்டிருந்தது. அந்தச் சட்டையின் கைகள் தரைவரை தொங்கி ஆடிக்கொண்டிருந்தன.. வின் பின்னால் ஜன்னல். அதன் வழியே பனியால் மூடப்பட்டிருந்த அடுத்த வீட்டுக் கூரையைத் தாண்டிப் பார்க்க முடியவில்லை. 

பூட்டில் சாவி திரும்பியது க. விரைவில் போய்விடவேண்டுமென்பதை நினைவுபடுத்தியது. அதனால் அவன் தொழிலதிபரின் கடிதத்தை மேஜையி லிருந்து எடுத்து ஓவியனிடம் நீட்டிக் கூறினான், "உங்களுக்குத் தெரிந்த இந்த நபரிடமிருந்து உங்களைப்பற்றி அறிந்து கொண்டேன். அவருடைய ஆலோசனையைக் கேட்டுத்தான் இங்கு வந்திருக்கிறேன்." ஓவியன் கடிதத்தை மேலெழுந்தவாரியாகப் படித்துவிட்டு அதைப் படுக்கைமீது எறிந்தான். டிட்டோரெல்லி தனக்கு அறிமுகமானவன், ஏழ்மையானவன், தன்னிடம் பண உதவிக்கு வந்தவன் என்று தொழிலதிபர் திட்டவட்டமாகக் கூறியிருக்கா விட்டால், டிட்டோரெல்லிக்குத் தொழிலதிபரைத் தெரியாது அல்லது குறைந்த பட்சம் அவர் அவன் நினைவுக்கு வரவில்லை என்று இப்போது உண்மையில் நம்பியிருக்கக் கூடும். மேலும், இப்போது ஓவியன் கேட்டான். "நீங்கள் படங்கள் வாங்க விரும்புகிறீர்களா? அல்லது நான் உங்களை ஓவியம் தீட்ட வேண்டும் என்று விரும்புகிறீர்களா?" க. ஓவியனை ஆச்சரியத்துடன் பார்த்தான். கடிதத்தில் உண்மையில் என்னதான் இருந்தது? க. இங்கு தன் வழக்கைப்பற்றித் தெரிந்து கொள்வதைத் தவிர வேறு எதையும் விரும்பவில்லையென்று தொழிலதிபர் கடிதத்தில் ஓவியனுக்குக் கூறியிருப்பார் என்றுதான் க. எண்ணியிருந்தான். அவன் அவசரப்பட்டு யோசித்துப் பார்க்காமல் அல்லவா இங்கே ஓடிவந்திருக் கிறான்! ஆனால், அவன் ஓவியனுக்கு இப்போது எப்படியாவது பதில் கூறி யாக வேண்டும். படம் இருந்த ஸ்டாண்டைப் பார்த்துக்கொண்டே கூறினான், "நீங்கள் இப்போது ஒரு படம் வரைந்துகொண்டிருக்கிறீர்களா?" "ஆமாம்" என்று ஓவியன் கூறிவிட்டு ஸ்டாண்டின் மீது தொங்கிக்கொண்டிருந்த சட்டையை எடுத்து, கடிதத்திற்கு அருகில், படுக்கையின் மீது எறிந்தான். "இது ஒரு உருவப்படம். ஒரு நல்ல வேலைப்பாடு; ஆனால், இன்னும் முழு வதும் வரைந்து முடிக்கவில்லை." இந்த அகஸ்மாத்தான நிகழ்ச்சி க. வுக்கு அனுகூலமாக இருந்தது. நீதிமன்றத்தைப்பற்றிப் பேசுவதற்கான சந்தர்ப்பம் அவனுக்கு மிக அழகாக அளிக்கப்பட்டது. ஏனென்றால் அந்த உருவப்படம் நிச்சயமாக ஒரு நீதிபதியினுடையதுதான். மேலும் வக்கீலின் அலுவலக அறையிலிருந்த படத்தின் சாயல் அதற்கு நன்றாக இருந்தது. ஆனால், இதுவோ முற்றிலும் வேறு ஒரு நீதிபதியின் படம். அவர் பருமனாக இருந்தார். இரண்டு பக்கங்களிலும் கன்னங்களின் மேல்பாகங்கள் வரை, கருமையான அடர்த்தியான தாடி வைத்திருந்தார். மேலும் வக்கீலின் வீட்டில் பார்த்த படம் எண்ணெய் வர்ணத்தாலானது. இதுவோ பேஸ்டல் வர்ணங்களால் லேசாகவும், தெளிவில்லாமலும் வரையப்பட்டிருந்தது. ஆனால், மற்றவை எல்லாம் ஒத்திருந்தன. ஏனென்றால் இந்தப் படத்திலும் நீதிபதி தன்னுடைய சிம்மாசன நாற்காலியிலிருந்து அதன் கைகளை இறுகப் பிடித்துக்கொண்டு அச்சுறுத்தும் பாவனையில் எழுந்திருக்க விரும்பியது போலிருந்தார். "இவர் ஒரு நீதிபதி" என்று க. உடனே கூற விரும்பினான்; ஆனால், தற்சமயத்திற்குத் 

 

127 

விசாரணை 

னைக் கட்டுப்படுத்திக்கொண்டு, படத்தின் எல்லா அம்சங்களையும் ஆராய விரும்பியது போல் அதை அணுகினான். சிம்மாசன நாற்காலியின் முதுகின்பின், நடுவில் நின்றுகொண்டிருந்த ஒரு உயரமான உருவம் யார் என்று அவனுக்குத் தெரியவில்லை. ஓவியனிடம் அதைப்பற்றி விசாரித்தான். அதை மேலும் சற்று வரைய வேண்டியிருக்கிறது என்று ஓவியன் பதிலளித்தான். ஒரு சிறு மேஜையின் மேலிருந்து ஒரு வர்ண மெழுகுத் துண்டை எடுத்து அதைக் கொண்டு அந்த உருவத்தின் ஓரங்களில் சிறிது தேய்த்தான். ஆனால், அதனால் க. வுக்கு அந்த உருவம் தெளிவாகவில்லை . "அது நீதி தேவதை' என்று இறுதியில் ஒவியன் கூறினான். "இப்போது எனக்கு அவளை அடையாளம் தெரிந்து விட்டது.” என்றான் க. "இதோ கண்களைக் கட்டியிருக்கும் துணி, இதோ தராசு. ஆனால், குதிகாலில் இறக்கைகள் இருக்கின்றனவே, மேலும் அவள் பறக்கும் நிலையில் இருக்கிறாளல்லவா?" "ஆமாம்" என்றான் ஓவியன், "ஒப்பந்தத்தின்படி நான் இப்படித்தான் வரைய வேண்டும், இது உண்மையில் நீதியும், வெற்றி தேவதையும் ஒருங்கிணைந்தது." "அது ஒரு சிறந்த சேர்க்கை யாகத் தோன்றவில்லையே?" என்று க. புன்சிரிப்புடன் கூறினான், "நீதி அசை யாமல் இருக்க வேண்டும்; இல்லாவிட்டால் தராசு ஆடிக்கொண்டிருக்கும், அதனால் நேர்மையான தீர்ப்புக்கு ஏது இருக்காது.' 'எனக்கு இந்த வேலையைக் கொடுத்தவரின் விருப்பத்திற்கு நான் இசைந்தாக வேண்டும்” என்றான் ஓவியன். "நிச்சயமாக” என்றான் க., தன் பேச்சினால் அவன் யாரையும் புண்படுத்த விரும்பவில்லை. "சிம்மாசன நாற்காலியின்மீது உண்மையில் எவ்வளவு பொருத்தமாக இருக்க வேண்டுமோ அவ்வளவு பொருத்தமாக நீங்கள் இந்த உருவத்தைத் தீட்டியிருக்கிறீர்கள்." "இல்லை" என்றான் ஓவியன், “நான் அந்த உருவத்தையோ அல்லது சிம்மாசன நாற்காலியையோ பார்த்ததில்லை. அவையெல்லாம் கற்பனை, நான் எதை வரைய வேண்டும் என்று எனக்குப் பணிக்கப்பட்டிருந்ததோ அதைத்தான் வரைந்திருக்கிறேன்." "எப்படி?" என்று க. கேட்டான். வேண்டுமென்றே ஓவியனை முழுவதும் புரிந்து கொள்ளாதது போல் அவன் பாவனை செய்தான். "நீதியின் நாற்காலியில் உட்கார்ந்திருப்பது நீதிபதிதானே?" "ஆமாம்” என்றான் ஓவியன், ஆனால், அவர் ஒரு உயர்நீதிபதி அல்ல, அதனால் இது போன்ற ஒரு சிம்மாசன நாற் காலியில் ஒருபோதும் அவர் அமர்ந்திருந்ததில்லை." "இருந்தும் தன்னை இது போன்ற தோரணையாகத் தீட்டிக்கொண்டிருக்கிறாரே? ஒரு நீதிமன்றத் தலைவரைப் போலல்லவா உட்கார்ந்து கொண்டிருக்கிறார்?" "ஆமாம், அவர்கள் தற்பெருமைக்காரர்கள்" என்றான் ஓவியன். "ஆனால், தங்களை அப்படித் தீட்டிக்கொள்ள மேலிடத்திலிருந்து அவர்களுக்கு அனுமதி கொடுக்கப் பட்டிருக்கிறது. எவ்வாறு தன்னைத் தீட்டிக்கொள்ளலாம் என்று ஒவ்வொரு வருக்கும் தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த ஓவியத்தி லிருந்து உடை, இருக்கை ஆகியவற்றின் ஒவ்வொரு அம்சத்தைப்பற்றியும் எந்த முடிவுக்கும் வர முடியாது." "வர்ண மெழுகுத் துண்டு கொண்டு இதைத் தீட்டியிருப்பது ஆச்சரியந்தான்." "நீதிபதி அதைத்தான் விரும்பினார்" என்றான் ஓவியன். "இது ஒரு பெண்ணுக்காக வரையப்பட்டிருக்கிறது.'' ஓவியத்தைப் பார்த்ததும் அவனுக்குத் தொடர்ந்து அதை வரைய வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது போல் தோன்றியது. அவன் சட்டையின் கைகளை மேலே மடித்துவிட்டுக்கொண்டு சில வர்ண மெழுகுத் துண்டுகளைக் கையில் எடுத்துக்கொண்டான். எவ்வாறு அந்தத் துண்டுகளின் நடுங்கும் முனைகளின் கீழ் ஒருவழியாக நீதிபதியின் தலையின் சிவப்பு நிற நிழல் உருவாகியது என்று க. கவனித்தான். அது ஒளிக்கதிரின் வடிவத்தில் படத்தின் விளிம்பை 

 

128 

காஃப்கா 

நோக்கிச் சென்று மறைந்தது. சிறிது சிறிதாக இந்த ஒளி நிழற்கோலம் தலையைச் சுற்றி ஒரு அணிகலன் போல் அல்லது ஓர் உயர் விருதுக்கான பதக்கம் போல் இருந்தது. எனினும் நீதி தேவதையின் தலையைச் சுற்றி, அவ்வளவாகக் கவனிக்கப்பட முடியாத மங்கலான ஒரு பகுதியைத் தவிர, மற்ற பகுதிகள் பிரகாசமாக இருந்தன. இந்த ஒளியில் அந்த உருவம் ஒரு உத்வேகத்துடன் முன்னே வருவது போல் தோன்றியது. அது இப்போது நீதி தேவதையாகத் தோன்றவில்லை. வெற்றி தேவதையாகவும் தோன்றவில்லை. அது, இன்னும் சரியாகச் சொன்னால் ஒரு வேட்டைத் தெய்வம் போன்று தோற்றம் அளித்தது. ஓவியன் வேலை செய்த விதம், க. விரும்பியதற்கு மாறாக அவனை அதிக மாகக் கவர்ந்தது. இறுதியில் ஏற்கனவே தான் இங்கே இவ்வளவு நேரம் தங்கி விட்டதற்கும், தன் விஷயத்தைப்பற்றி இதுவரை முக்கியமாக எதுவும் செய் யாமல் இருந்ததற்கும் தன்னையே கடிந்து கொள்ளத்தான் செய்தான். "இந்த நீதிபதியின் பெயரென்ன?" என்று அவன் திடீரென்று கேட்டான். "அதை நான் சொல்லக்கூடாது" என்று ஓவியன் பதிலளித்தான். அவன் படத்தின்மீது நன்றாகக் கவிழ்ந்து கொண்டிருந்தான். முதலில் மிகவும் அக்கறையுடன் வரவேற்ற விருந்தாளியை இப்போது சந்தேகமில்லாமல் புறக்கணித்தான். க. அதை ஒரு கிறுக்குத்தனம் என்று எடுத்துக்கொண்டு, தன்னுடைய நேரம் அதனால் வீணாவதற்காக எரிச்சலடைந்தான். "நீங்கள் நீதிமன்றத்துக்கு மிகவும் வேண்டியவர் அல்லவா?” என்று கேட்டான். ஓவியன் உடனே வர்ண மெழுகுத் துண்டுகளைக் கீழே வைத்துவிட்டு, எழுந்து நின்று, இரண்டு கைகளையும் ஒன்றோடொன்று தேய்த்துக்கொண்டே க. வைப் புன்சிரிப்புடன் பார்த்தான். "உம், உண்மையைக் கூறிவிடுங்கள்" என்றான் அவன். "உங்கள் சிபாரிசுக் கடிதத்தில் இருப்பது போல் நீங்கள் நீதிமன்றத்தைப்பற்றி ஏதோ தெரிந்து கொள்ள விரும்புகிறீர்கள். அதனால் என்னைக் கவர்வதற்காக முதலில் என் படங்களைப்பற்றிப் பேசினீர்கள். அதை நான் தவறாக எடுத்துக் கொள்ள வில்லை. அது என்னிடம் பலிக்காது என்று உங்களுக்குத் தெரிந்திருக்கவே முடியாது. பரவாயில்லை, ஒன்றும் கூறத் தேவை இல்லை!" என்று, ஏதோ மறுப்புக் கூற முனைந்த க. வை வெடுக்கென்று தடுத்தான். பிறகு மேலும் கூறினான், "மற்றபடி நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை . நான் நீதிமன்றத் திற்கு மிகவும் வேண்டியவன்தான்." இந்த விவரத்தை க. ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும் என்பதற்கு நேரம் கொடுப்பது போல் அவன் சற்று மௌன மாக இருந்தான். இப்போது கதவுக்குப்பின் மறுபடியும் பெண்களின் சத்தத்தைக் கேட்க முடிந்தது. உண்மையில், அவர்கள் சாவித் துவாரத்தைச் சுற்றி நெருக்கி யடித்துக்கொண்டிருந்தார்களோ என்னவோ, ஒருவேளை பலகைகளின் விரிசல்கள் வழியாக அறையினுள் பார்க்க முடிந்ததோ என்னவோ. க. மன்னிப்புக் கேட்க வேண்டாம் என்று விட்டுவிட்டான். ஏனென்றால், அவன் ஓவியனின் கவனத்தைத் திருப்ப விரும்பவில்லை; எல்லாவற்றுக்கும் மேலாக, ஓவியன் தன்னை மிக உயர்ந்தவனாக எண்ணிக்கொண்டு அந்த வகையில் ஓரளவுக்கு அணுக முடி யாதவனாகத் தன்னை ஆக்கிக்கொள்ளுமாறு விட அவன் விரும்பவில்லை. அதனால் அவன் கேட்டான், "உங்கள் பதவி அதிகாரபூர்வமானதா?" "இல்லை " என்று ஓவியன் சுருக்கமாகக் கூறினான், அதனால் மேற் கொண்டு பேசுவதற்கு இயலாதது போல். ஆனால், க. அவனை மௌன மாக இருக்கவிட விரும்பாமல் கூறினான், "இருந்தாலும் இது போன்ற அதிகாரபூர்வமற்ற பதவிகள் அதிகாரபூர்வமானவற்றைவிடப் பெரும்பாலும் செல்வாக்கு மிக்கவை." "என்னுடைய விஷயத்திலும் அப்படியேதான்” என்று ஓவியன் கூறிவிட்டு நெற்றியைச் சுருக்கிக்கொண்டு தலையை அசைத் 

 

விசாரணை 

தான். "தொழிலதிபர் நேற்று உங்கள் விஷயத்தைப்பற்றிப் பேசினார். உங்களுக்கு உதவி செய்ய எனக்கு விருப்பமா என்று என்னைக் கேட்டார். நான் சொன்னேன், அந்த மனிதர்தான் என்னிடம் ஒரு நடை வரட்டுமே என்று. நீங்கள் இவ்வளவு சீக்கிரம் வந்தது பற்றி எனக்கு மகிழ்ச்சி. இந்த விஷயத்தைப் பற்றி நீங்கள் மிகவும் கவலைப்படுவது போல் தோன்றுகிறது. அதைப்பற்றி நான் ஆச்சரியப்படவேயில்லை. நீங்கள் முதலில் உங்கள் கோட்டைக் கழற்றி விடலாமே?" அங்கு மிகச் சிறிது நேரமே தங்க க. எண்ணியிருந்தாலும், ஓவியனின் வேண்டுகோள் அவனுக்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்தது. அறையின் புழுக்கம் ஏற்கனவே அவனை மூச்சுத் திணறடித்துக்கொண்டிருந்தது. அறையின் ஒரு மூலையில் இருந்த, மூடப்படாத ஒரு சிறு இரும்புக் கணப்படுப்பை ஆச்சரி யத்துடன் ஏற்கனவே ஒருமுறை கவனித்திருந்தான். அறையிலிருந்த புழுக்கத் திற்குக் காரணம் தெரியவில்லை. அவன் கம்பளி மேல்கோட்டைக் கழற்றிக் கீழே வைத்துவிட்டு, உள்கோட்டின் பித்தான்களைக் கழற்றிக்கொண்டிருந்த போது, ஓவியன் மன்னிப்புக் கோரும் தொனியில் கூறினான், எனக்குக் கதகதப்புத் தேவையாக இருக்கிறது. இது மிகவும் இதமாக இருக்கிறதல்லவா? அந்த வகையில் இந்த அறை மிகவும் வசதியான இடத்தில் இருக்கிறது." க. அதற்கு ஒன்றும் கூறவில்லை. ஆனால், உண்மையில் அவனை அசௌகரியத்துக்கு உள்ளாக்கியது உஷ்ணம் அல்ல; அதைவிட மூச்சுத் திணறடிக்கும்படியான அங்கிருந்த புழுக்கமான காற்றுதான். காற்றோட்டமாக இருக்க அந்த அறையைத் திறந்துவைத்து வெகுகாலமாகிவிட்டிருக்க வேண்டும். ஓவியன் க.வைக் கட்டிலின்மீது உட்காரும்படி கேட்டுக்கொண்டு, தான் பட ஸ்டாண்டின் எதிரில், அறையிலிருந்த ஒரே நாற்காலி மீது உட்கார்ந்து கொண்டது க.வின் சங்கடத்தை அதிகரித்தது. மேலும், க. கட்டிலின் விளிம்பில் மட்டும் உட்கார்ந்து கொண்டது ஓவியனுக்குத் தவறாகப் பட்டது போல் தோன்றியது. க. தயங்கியதால், தானே அவனிடம் சென்று அவன் படுக்கை தலையணைகளின்மீது நன்றாக உள்ளே தள்ளி உட்காரும்படி செய்தான். பிறகு தன் ஸ்டூலுக்குத் திரும்பிச் சென்று, இறுதியில், க. மற்ற எல்லாவற்றையும் மறக்கும் விதத்தில், முக்கியமான முதலாவது கேள்வியைக் கேட்டான். "நீங்கள் நிரபராதியா?" "ஆமாம்” என்றான் க. இந்தக் கேள்விக்குக் கூறிய பதில் க.வுக்கு மகிழ்ச்சியை அளித்தது. குறிப்பாக, அது ஒரு சாதாரண மனிதனிடம் ஒரு பொறுப்பும் இல்லாமல் கூறியதால், இதுவரை எவரும் இவ்வளவு வெளிப்படையாக அவனைக் கேட்டதில்லை. இந்த மகிழ்ச் சியை இன்னும் முழுவதும் அனுபவிக்க, அவன் மேலும் கூறினான். "நான் முற்றிலும் நிரபராதி." "அப்படியா?" என்றான் ஓவியன். தலையைக் குனிந்து கொண்டு யோசிப்பது போல் தோன்றினான். திடீரென்று தலையை மறுபடியும் உயர்த்திக் கூறினான், "நீங்கள் நிரபராதி என்றால், இந்த விஷயம் நிச்சயம் மிகவும் எளிதானது." க.வின் பார்வை இறுகியது. நீதிமன்றத்துக்கு மிகவும் வேண்டியவன் என்று கூறப்படும் இவன் ஒன்றும் அறியாத குழந்தை போல் பேசுகிறான். "நான் நிரபராதி என்பதால் இந்த விஷயம் சுலபமாகிவிடாது" என்று சொன்னபோதிலும் க. புன்சிரிப்புடன் மெதுவாகத் தலையை அசைத் தான். "அது நுணுக்கமான பல விஷயங்களைப் பொறுத்திருக்கிறது. நீதிமன்றம் அவற்றில் தன்னை இழந்து விடுகிறது. ஆயினும், இறுதியில், எங்கிருந்தோ முதலில் ஒன்றுமே இருந்திருக்காத ஏதோ ஒரு இடத்திலிருந்து ஒரு பெரும் குற்றத்தை வெளியே இழுக்கிறது." தன் எண்ண ஓட்டத்தைக் தேவையில்லாத வகையில் க. தடைசெய்வது போல் "ஆமாம், ஆமாம். உண்மைதான்" என்று ஓவியன் கூறினான். "ஆனால் நீங்கள் நிரபராதிதானே?" "நிச்சயமாக” என்றான் க. "அதுதான் முக்கியமான விஷயம்” என்றான் ஓவியன். எதிர்வாதங்களினால் 

 

130 

காஃப்கா 

அவன் மனத்தை மாற்ற முடியாது. அவன் ஒரு முடிவுக்குவந்திருந்தாலும், நிச்சய மான நம்பிக்கையினாலா அல்லது அலட்சியத்தால் அப்படிப் பேசினானா என்று தெளிவாகத் தெரியவில்லை. அதை முதலில் நிச்சயம் செய்து கொள்ள க. எண்ணி அதனால் கூறினான், "எனக்குத் தெரிந்ததை விட உங்களுக்கு நீதி மன்றத்தைப்பற்றி நிச்சயம் மிகவும் நன்றாகத் தெரிந்திருக்கிறது. பலவிதமான நபர்களிடமிருந்து நான் கேள்விப்பட்டதைக் காட்டிலும் எனக்கு ஒன்றும் அதிகம் தெரியாது. வேடிக்கைக்காகக் குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்படுவதில்லை என்றும், நீதிமன்றம் ஒருமுறை குற்றம்சாட்டினால் குற்றம்சாட்டப்பட்டவரின் குற்றத்தைப்பற்றி நிச்சயமான நம்பிக்கையில்தான் அப்படிச் செய்யும் என்றும், அந்த நம்பிக்கையிலிருந்து அதை மாற்றுவது மிகவும் கஷ்டம் என்றும் எல்லோரும் ஒருமுகமாக ஒப்புக்கொள்கிறார்கள்." "கஷ்டமா?” என்று ஓவியன் ஒரு கையை உயர்த்திக் கேட்டுவிட்டு, "நீதிமன்றத்தை ஒருபோதும் அதன் போக்கிலிருந்து மாற்ற முடியாது. நான் இங்கு எல்லா நீதிபதிகளையும் அரு கருகில் ஒரு கான்வாஸில் தீட்டினால், நீங்கள் அந்தக் கான்வாஸின் முன்பு உங்கள் பிரதிவாதத்தை எடுத்துச் சொன்னால் உண்மையான நீதிமன்றத்தின் முன்பு உங்களுக்குக் கிடைப்பதைவிட இங்கு உங்களுக்கு அதிக வெற்றி கிடைக்கும்." "ஆமாம்" என்று க. தனக்கே கூறிக்கொண்டபோது, ஓவியனிட மிருந்து தகவல்களைப் பெறுவதற்காக மட்டும்தான் இங்கு வந்தோம் என்பதை மறந்துவிட்டிருந்தான். 

மறுபடியும் கதவுக்குப் பின்னால் ஒரு பெண் கேட்டாள், "டிட்டோரெல்லி, அவர் சீக்கிரம் போகமாட்டாரா?" "சும்மா இரு!" என்று ஓவியன் கதவை நோக்கிக் கத்தினான். "நான் இவருடன் பேசிக்கொண்டிருப்பது உங்களுக்குத் தெரியவில்லை?" ஆனால், அந்தப் பெண் திருப்தியடையாமல் கேட்டாள், "நீ அவரை வரையப் போகிறாயா?” ஓவியன் பதில் கூறாமலிருக்கவே அவள் மேலும் கூறினாள், "தயவுசெய்து, இவ்வளவு அசிங்கமான மனிதரை வரைய வேண்டாம்." ஒரு குழப்பமான, புரிந்து கொள்ள முடியாத, ஆமோதிக்கும் சத்தம் அதை அடுத்துக் கேட்டது. ஓவியன் கதவை நோக்கித் தாவி அதை ஒரு சிறிதளவே திறந்து - அவனைக் கெஞ்சியபடி நின்ற பெண்களின் கூப்பிய கரங்களைப் பார்க்க முடிந்தது - கூறினான், "நீங்கள் சத்தம் போட்டால் உங்களையெல்லாம் படிக்கட்டில் கீழே தள்ளிவிடுவேன். இங்கே படிக்கட்டில் உட்கார்ந்துகொண்டு அமைதியாக இருங்கள்." உண்மையில் அவர்கள் அவன் கூறியபடி உடனே செய்யாததால், அவன் அதட்ட வேண்டியதாயிற்று. "படிக் கட்டில் உட்காருங்கள்!" அப்போதுதான் அமைதி நிலவியது. 

"மன்னிக்கவும்" என்று ஓவியன் க.விடம் திரும்பி வந்தவுடன் கூறினான். க. கதவின் திசையில் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. ஓவியன் தன்னைக் காப்பாற்றப் போகிறானா, எவ்வாறு காப்பாற்றப்போகிறான் என்பதை ஓவியனிடமே முழுவதும் விட்டுவிட்டான். இப்போது ஓவியன் தாழக் குனிந்து வெளியில் கேட்காதவண்ணம் அவன் காதில், "இந்தப் பெண்களும் நீதிமன்றத்தைச் சேர்ந் தவர்கள்தான்" என்று கிசுகிசுத்தபோதும்கூட அவன் அசையவேயில்லை. "எப்படி” என்று க. கேட்டுவிட்டுத் தலையைப் பக்கவாட்டில் சாய்த்து ஓவியனைப் பார்த்தான். அவனோ மறுபடியும் தன் நாற்காலிமீது உட்கார்ந்துகொண்டு பாதி வேடிக்கையாகவும், பாதி விளக்கும் வகையிலும் கூறினான், "எல்லாமே நீதி மன்றத்தைச் சேர்ந்ததுதான்.” "அதைத்தான் நான் இன்னும் புரிந்து கொள்ள 

 

131 

முடியவில்லை " என்று க. சுருக்கமாகக் கூறினாலும், இப்படி ஓவியன் பொதுப் படையாகக் கூறியது, அவன் முதலில் அந்தப் பெண்களைப்பற்றிக் கூறியதிலிருந்த மனத்தைப் பாதிக்கும்படியான விஷயங்கள் எல்லாவற்றையும் அகற்றிவிட்டது. இருந்தாலும் க. சிறிது நேரம் கதவைப் பார்த்துக்கொண்டிருந்தான். அதற்குப் பின்னால் இப்போது அந்தப் பெண்கள் அமைதியாக உட்கார்ந்து இருந்தார்கள். அவர்களில் ஒருத்தி மட்டும் ஒரு வைக்கோலை மரப்பலகைகளிலிருந்த ஒரு பிளவு வழியாக நுழைத்து மெதுவாக அதை மேலும் கீழும் அசைத்தாள். 

"உங்களுக்கு இன்னும் நீதிமன்றத்தைப்பற்றி முழுவதும் தெரியவில்லை போலிருக்கிறது" என்றான் ஓவியன். அவன் கால்களை அகட்டி நீட்டி வைத்துக் கொண்டு ஷூவின் நுனியால் தரையைத் தட்டிக்கொண்டிருந்தான். ஆனால், நீங்கள் நிரபராதியாக இருப்பதால் அப்படித் தெரிந்துவைத்துக்கொள்வது உங்களுக்குத் தேவையில்லை. நானே உங்களை மீட்கிறேன்." "நீங்கள் அதை எப்படிச் செய்யப்போகிறீர்கள்?" என்று க. கேட்டான், “இப்போதுதானே நீங்கள் கூறினீர்கள், நீதிமன்றம் வாதங்களை ஏற்றுக்கொள்வதில்லையென்று." "நீதிமன்றத்திற்குமுன் கொண்டுவரும் வாதங்களைத்தான் ஏற்றுக்கொள்வதில்லை' என்று ஓவியன் கூறிவிட்டுத் தன் ஆள்காட்டி விரலை, க. ஒரு நுண்ணிய வித்தி யாசத்தைக் கவனிக்காதது போல், உயர்த்தினான். "இந்த வகையில் நீதி மன்றத்துக்கு வெளியே, அல்லது ஆலோசனை அறையில், அல்லது வராந்தாவில், அல்லது இங்கே இந்த ஸ்டூடியோவிலேயே அதற்கான முயற்சிகள் எடுத்தால் நீதிமன்றம் வேறு மாதிரி நடந்து கொள்ளும். இப்போது ஓவியன் கூறியது க.வுக்கு அவ்வளவு நம்பத்தகுந்ததாகத் தெரியவில்லை . மற்றவர்களிடமிருந்து க. கேள்விப்பட்டதற்கும் இதற்கும் எவ்வளவோ ஒற்றுமை இருந்தது. ஆமாம், அது மிகவும் நம்பிக்கையூட்டுவதாகவும் இருந்தது. வக்கீல் கூறியிருந்ததைப் போல், நெருங்கிய தனிப்பட்ட தொடர்புகளினால் நீதிபதிகளை உண்மையில் அவ்வளவு சுலபமாக மாற்ற முடியுமென்றால், தற்பெருமை கொண்ட நீதிபதி களுடன் ஓவியனுக்கு இருக்கும் உறவுகள் குறிப்பாக முக்கியமானவை. மேலும், எப்படியிருந்தாலும், எந்த வகையிலும் குறைத்து மதிப்பிட முடியாதவை. ஏனென்றால், க. மெல்லமெல்லத் தன்னைச் சுற்றிச் சேர்த்துக்கொண்டுவந்த உதவியாளர் வட்டத்தில் இந்த ஓவியன் மிகவும் நன்றாகப் பொருந்தினான். வங்கியில் ஒருமுறை க.வின் நிர்வாகத் திறமையைப் புகழ்ந்திருக்கிறார்கள். இப்போது தனியாகவே எல்லாவற்றையும் செய்ய வேண்டிய நிலையில், அந்தத் திறமையை இறுதிவரை சோதித்துப்பார்ப்பதற்கு ஒரு நல்ல வாய்ப்பு ஏற் பட்டிருக்கிறது. ஓவியன் தன்னுடைய விளக்கம் க.விடம் தாக்கம் ஏற்படுத்தி யிருந்ததைக் கவனித்துவிட்டு, பிறகு ஒருவிதமான தயக்கத்துடன் கூறினான், "நான் கிட்டத்தட்ட ஒரு வக்கீல் போல் பேசுவதாக உங்களுக்குத் தோன்றவில்லை? நீதிமன்ற நண்பர்களுடன் நான் இடைவிடாமல் உறவாடிக்கொண்டிருப்பது தான் என்னை இப்படி பாதித்திருக்கிறது. அதனால் நிச்சயமாக எனக்குப் பெரும் லாபம்தான். ஆனால், என் கலையார்வத்தின் பெரும் பகுதியை அதனால் இழந்து விடுகிறேன்." "முதல் முறையாக நீதிபதிகளுடன் உங்களுக்கு எப்படித் தொடர்பு ஏற்பட்டது?" என்று க. கேட்டான். அவன் ஓவியனைத் தன் பணியில் ஈடுபடுத்துவதற்கு முன், முதலில் அவனுடைய நம்பிக்கையைப் பெற விரும்பினான். "அது ஒரு சாதாரண விஷயம்" என்றான் ஓவியன். "இந்தத் தொடர்பு எனக்கு வழிவழியாக வந்திருக்கிறது. என் தந்தை நீதிமன்ற ஓவியராக இருந்திருக்கிறார். இந்த ஸ்தானம் எப்போதும் வழிவழியாக வருவது. அதற்குப் 

 

132 

புது நபர்கள் வாயக்கில்லை. உதாரணத்திற்கு, பலதரப்பட்ட பதவிகளிலிருக்கும் அலுவலர்களை வரைவதற்கு மிகவும் வித்தியாசமான, பலவிதமான, எல்லா வற்றுக்கும் மேலாக, ரகசியமான விதிமுறைகள் வகுக்கப்பட்டிருப்பதால் அவை குறிப்பிட்ட குடும்பங்களுக்கு அப்பாற்பட்டவர்களுக்குத் தெரிவதில்லை. அதோ அங்கே அறைகளில், உதாரணத்திற்கு, என்னுடைய தந்தையின் குறிப்புகள் இருக்கின்றன. அவற்றை நான் ஒருவருக்கும் காண்பிப்பதில்லை. ஆனால், அவற்றையெல்லாம் அறிந்தவன்தான் நீதிபதிகளை ஓவியமாகத் தீட்டும் தகுதியுடையவன். அப்படி அவற்றை நான் தொலைத்துவிட்டாலும், நான் மட்டும் அறிந்த பல விதிமுறைகள் என் நினைவில் இருப்பதால் ஒருவரும் என் இடத்துக்குப் போட்டி போட முடியாது. ஏனென்றால், ஒவ்வொரு நீதிபதியும் முன்பிருந்த புகழ்பெற்ற நீதிபதிகள் தீட்டப்பட்டிருப்பது போலவே தாங்களும் தீட்டப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள். அப்படித் தீட்ட என்னால் மட்டும்தான் முடியும்.' 'உங்களைப் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது" என்றான் க... வங்கியில் தன் ஸ்தானத்தைப்பற்றி யோசித்துக்கொண்டே. "அப்படியானால் உங்கள் ஸ்தானத்தை அசைக்க முடியாது?" "ஆமாம். அசைக்க முடியாது" என்று ஓவியன் கூறிவிட்டு, பெருமையுடன் தோள்களைக் குலுக்கினான், "அதனால்தான் பாவம், வழக்கில் மாட்டிக்கொண்டிருக்கும் துரதிருஷ்டசாலிகளுக்கு அவ்வப்போது உதவ நான் துணிய முடிகிறது." "அதை எப்படிச் செய்கிறீர்கள்?" ஓவியன் துரதிருஷ்டசாலி என்று கூறியது தன்னை அல்ல என்பது போல் க. கேட்டான். ஆனால், ஓவியன் தன் எண்ணங் களைத் திசைதிருப்பவிடாமல் கூறினான். 'உதாரணத்திற்கு, நீங்கள் முற்றிலும் நிரபராதியாக இருப்பதால், உங்கள் விஷயத்தில் நான் இப்படிச் செய்யப் போகிறேன்." தான் நிரபராதி என்று திரும்பத்திரும்பக் கூறியது க.வுக்கு எரிச் சலாக இருந்தது. அப்படிக் கூறுவதால் சு.வின் வழக்கு அனுகூலமாக முடியும் என்ற அனுமானத்தின் பேரில்தான் ஓவியன் தனக்கு உதவி செய்ய முன்வருகிறான் என்று க. நினைத்தான். அப்படியானால் அவன் உதவி அர்த்தமற்றதாகவே இருக்கும். இப்படி அவன் சந்தேகப்பட்டாலும் க. ஓவியனின் பேச்சில் குறுக்கி டாமல் தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டான். ஓவியனின் உதவியைப் புறக் கணிக்க அவன் விரும்பவில்லை; அந்த முடிவுக்கு அவன் நிச்சயமாக வந்திருந்தான்; அனால் வக்கீலின் உதவியைப் போல் இதுவும் சந்தேகத்துக்குரியதாக இருந்தது. க. மொத்தத்தில் ஓவியனின் உதவியையே விரும்பினான். ஏனென்றால், அது தீங்கில்லாததாகவும் ஒளிவுமறைவு இல்லாமல் அளிக்கப்பட்டதாகவும் இருந்தது. 

ஓவியன் தன் இருக்கையைக் கட்டிலுக்கு அருகில் இழுத்துப்போட்டுக்கொண்டு, தாழ்ந்த குரலில் மேலும் கூறினான், "நீங்கள் எந்த விதமான விடுதலையை விரும்புகிறீர்கள் என்று முதலில் உங்களைக் கேட்க மறந்துவிட்டேன். மூன்று வித வழிகள் இருக்கின்றன: திட்டவட்டமான விடுதலை, பெயரளவில் விடுதலை. முடிவில்லாமல் ஒத்திப்போட்டுக்கொண்டேபோவது. நிச்சயமாக, திட்டவட்ட மான விடுதலைதான் மிகவும் சிறந்தது. ஆனால், அந்த விதமான முடிவு காண எனக்குச் சிறிதளவும் செல்வாக்கு இல்லை. என் அபிப்பிராயப்படி, திட்டவட்ட மான விடுதலை வாங்கிக்கொடுக்கும் அளவுக்குச் செல்வாக்கு உள்ளவர் எவரும் கிடையாது. குற்றம்சாட்டப்பட்டவர் நிரபராதியாக இருக்கும் பட்சத்தில் அதுதான் உண்மையில் முக்கியமானது. நீங்கள் நிரபராதியாக இருப்பதால், நீங்கள் உண்மையில் அதை நம்பியே இருந்துவிடலாம். அப்போது உங்களுக்கு என்னுடைய உதவியோ அல்லது மற்றவரின் உதவியோ தேவையில்லை. இவ்வாறு ஒழுங்குபடுத்திக் கூறியது க.வை முதலில் வியப்படையவைத்தாலும் 

 

பாயாரணை 

133 அவனும் ஓவியனைப் போலவே தாழ்ந்த குரலில் கூறினான், "நீங்கள் முரணாகப் பேசுகிறீர்கள்." "எப்படி?" என்று ஓவியன் பொறுமையாகக் கேட்டுவிட்டுப் புன்சிரிப்புடன் பின்னால் சாய்ந்து கொண்டான். ஓவியனின் வார்த்தைகளில் அல்லாமல் நீதிமன்றம் இயங்கும் முறையிலேயே க. முரண்பாடு காண்பது போல் இருந்ததாக க.வின் மனத்தில் எண்ணத்தை எழுப்பியது ஓவியனின் புன்சிரிப்பு. இருந்தாலும் அவன் பின்வாங்காமல் கூறினான். "நீதிமன்றம் விவாதங்களினால் மசியாது என்று நீங்கள் முதலில் கூறினீர்கள். பிறகு பகிரங்க மாக நடத்தப்படும் வழக்குகளில்தான் அப்படிச் செய்ய முடியாது என்று கூறினீர்கள். இறுதியில், இப்போது, நிரபராதிகளை நீதிமன்றத்திலிருந்து மீட்க உதவியே தேவையில்லை என்றும் கூறுகிறீர்கள். அங்கேயே முரண்பாடு இருக் கிறது. மேலும், நீதிபதிகளின் கருத்தை ஒருவர் தன் செல்வாக்கினால் மாற்ற முடியும் என்று முதலில் கூறினீர்கள், ஆனால், இப்போது அதை மறுத்து நீங்கள் சொன்னீர்களே, அந்தத் திட்டவட்டமான விடுதலையைத் தனிப்பட்ட செல் வாக்கினால் அடையவே முடியாது என்றும் கூறுகிறீர்கள். அங்கேதான் இரண்டாவது முரண்பாடு இருக்கிறது." "இந்த முரண்பாடுகளைச் சுலபமாக விளக்கிவிடலாம்” என்றான் ஓவியன். "நாம் இப்போது இரண்டு வெவ்வேறு விஷயங்களைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம். ஒன்று சட்டத்தில் இருப்பது; மற்றொன்று நானே அனுபவத்தில் தெரிந்து கொண்டது. இவை இரண்டையும் நீங்கள் குழப்பிக் கொள்ளக்கூடாது. சட்டத்தில் - அதை நான் படித்ததில்லை தான் - நிரபராதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று நிச்சயம் இருக்கிறது. அதே சமயம் நீதிபதிகளின் மனத்தை மாற்ற முடியும் என்று அதில் சொல்லப் படவில்லை . ஆனால், எனக்கோ அதற்கு மாறுபட்ட அனுபவம் இருந்திருக்கிறது. திட்டவட்டமான விடுதலையைப்பற்றி நான் கேள்விப்பட்டதில்லை. ஆனால், நிச்சயம் செல்வாக்கு வேலை செய்வதைப்பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன். எனக்கு மட்டும் தெரிந்த வழக்குகளில் நிரபராதிகளே இல்லாமல் இருந்திருக் கலாம். ஆனால், அது உண்மையாக இருக்க முடியுமா? இவ்வளவு வழக்குகளில் ஒரு நிரபராதிகூட இல்லாமலிருக்க முடியுமா? நான் குழந்தையாக இருந்த போதே என் தந்தை, வீட்டில் வழக்குகளைப்பற்றிக் கூறும்போது கவனமாகக் கேட்டிருக்கிறேன். என் தந்தையின் ஸ்டூடியோவுக்கு வரும் நீதிபதிகளும் நீதி மன்றத்தைப்பற்றிக் கூறுவதைக் கேட்டிருக்கிறேன். எங்கள் வட்டத்தில் வேறு எதைப்பற்றியும் பேசுவதேயில்லை; நீதிமன்றத்துக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தால் போதும். அதை உபயோகப்படுத்திக்கொள்ளத் தவறமாட்டேன். கணக்கில்லாத வழக்குகளை முக்கியமான கட்டங்களில் காதால் கேட்டிருக்கிறேன். அவற்றை முடிந்தவரை புரிந்துகொண்டு தொடர்ந்து கவனித்துவந்திருக்கிறேன். ஆனால், திட்டவட்டமான தீர்ப்பு ஒன்றைக்கூட என் அனுபவத்தில் பார்த் ததில்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்." "ஆனால், திட்டவட்டமான விடுதலைத் தீர்ப்பு ஒன்றுகூடக் கிடையாதா?" என்று தனக்குத்தானேயும் தன்னுடைய நம்பிக்கையிடமும் பேசிக்கொள்வது போல் க. கூறினான். "ஆனால், அது, நான் நீதிமன்றத்தைப்பற்றி ஏற்கனவே கொண்டுள்ள அபிப் பிராயத்தை உறுதிப்படுத்துகிறது. அப்போது அது இந்த வகையிலும் அர்த்த மில்லாமல் இருக்கிறது. இந்த நீதிமன்றம் முழுவதற்கும் பதிலாகத் தூக்கிலிடு பவன் ஒருவன் மட்டும் போதுமே." "நீங்கள் பொதுப்படையாகப் பேசக் கூடாது" என்று ஓவியன் திருப்தியில்லாமல் கூறினான். "நான் என்னுடைய அனுபவங்களைப் பற்றித்தான் கூறினேன்." "அது போதுமே" என்றான் க. "அல்லது முன்பெல்லாம் திட்டவட்டமான விடுதலைத் தீர்ப்பு இருந்திருக்கிறது என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?" "அது போன்ற விடுதலைத் தீர்ப்புகள் 

 

134 

காஃப்கா 

நிச்சயம் இருந்திருக்க வேண்டும்" என்றான் ஓவியன். "ஆனால், அதை நிச்சய மாகக் கூறுவதுதான் மிகவும் கஷ்டம். நீதிமன்றத்தின் இறுதியான தீர்ப்புகள் வெளியிடப்படுவதில்லை, நீதிபதிகளுக்குக்கூட அவை கிடைப்பதில்லை. அதன் விளைவாகப் பழைய வழக்குகளைப்பற்றி வெறும் கதைகள்தான் இருக் கின்றன. இக்கதைகளில் நிச்சயமாகப் பெரும்பாலானவை திட்டவட்டமான விடுதலைத் தீர்ப்புகள்தான். அவற்றை ஒருவர் நம்பலாம், ஆனால், நிரூபிக்க முடியாது. இருந்தாலும் அவற்றை முழுவதும் புறக்கணித்துவிடக் கூடாது. அவற்றில் நிச்சயம் ஒருவகை உண்மையிருக்கிறது. அவை மிகவும் அழகானவை கூட, நானே இது போன்ற கதைகளைக் கொண்ட சில படங்களை வரைந்திருக் கிறேன். "வெறும் கதைகள் என் அபிப்பிராயத்தை மாற்றாது" என்றான் க., "நீதிமன்றத்தில் இந்தக் கதைகளைச் சாட்சியமாகக் காட்ட முடியாதல்லவா? ஓவியன் சிரித்தான், "இல்லை. அப்படிச் செய்ய முடியாதுதான்" என்றான் அவன். "அப்படியானால் அவற்றைப்பற்றிப் பேசுவதில் பயனில்லை" என்றான் க.. ஓவியனின் அபிப்பிராயங்கள் உண்மையானவை அல்ல என்று அவன் எண்ணினாலும், அவை மற்றவர்கள் கூறியதிலிருந்து முரண்பட்டிருந்தாலும், தற்சமயத்துக்கு க., ஓவியனின் எல்லா அபிப்பிராயங்களையும் மறுபேச்சின்றி ஏற்றுக்கொள்ள விரும்பினான். ஓவியன் கூறுவது எல்லாம் உண்மையா என்று பரிசோதிப்பதற்கோ அல்லது மறுப்பதற்கோ அவனுக்கு இப்போது நேரமில்லை. முக்கியமான வகையில் இல்லாவிட்டாலும், எந்த வகையிலாவது தனக்கு உதவி செய்யும்படி ஓவியனைச் செய்துவிட்டால், அதுவே பெரும் சாதனையாகி விடும். அதனால் அவன் கூறினான். "அப்போது திட்டவட்டமான விடுதலைத் தீர்ப்பை நாம் மறந்துவிடுவோம். நீங்கள் இன்னும் மற்ற இரண்டு வழிகளைக் குறிப்பிட்டீர்கள்." "பெயரளவுக்கு விடுதலையும், ஒத்திப்போடுவதும்தான். அவை மட்டுமே இப்போது முக்கியம்" என்றான் ஓவியன், ஆனால், அவற்றைப் பற்றி நாம் பேசுமுன் நீங்கள் உங்கள் கோட்டைக் கழற்றப்போவதில்லையா? உங்களுக்கு நிச்சயம் புழுக்கமாக இருக்குமே." "ஆமாம்" என்றான் க. அவன் இதுவரை ஓவியனின் விளக்கங்களைத் தவிர, வேறு எதையும் கவனிக்கவில்லை. ஆனால், இப்போது வெப்பத்தைப்பற்றி நினைவுப்படுத்திவிட்டதால், அவனுக்கு நெற்றியில் அதிகமாக வியர்க்க ஆரம்பித்துவிட்டது. "தாங்க முடியவில்லை." க.வின் அசௌகரியத்தை மிகவும் நன்றாகப் புரிந்து கொண்டது போல் ஓவியன் தலையசைத்தான். "அந்த ஜன்னலைத் திறக்க முடியாதா?" என்று க. கேட்டான். "முடியாது" என்றான் ஓவியன், "அது அப்படியே நன்றாகப் பதிக்கப்பட்ட வெறும் கண்ணாடி. அதைத் திறக்க முடியாது." ஓவியனோ அல்லது தானோ திடீரென்று ஜன்னலிடம் போய் அதைப் படாரென்று திறக்கமாட்டோமா என்று இத்தனை நேரமும் எதிர்பார்த்துக்கொண்டிருந்ததை க. இப்போதுதான் உணர்ந்தான். பனிக்காற்றைத் திறந்த வாயுடன் சுவாசிக்க அவன் தயாராக இருந்தான். இங்கே காற்றுப் புகாதவாறு முழுவதும் மூடப்பட்டிருந்த அறையிலிருந்தது போன்ற உணர்வு அவனுக்குத் தலைச்சுற்றலை உண்டாக்கியது. தனக்கு அருகிலிருந்த இறகுகளாலான மெத்தையைக் கையால் லேசாகத் தட்டிய படி அவன் பலஹீனமான குரலில் கூறினான், "இது நிச்சயம் அசௌகரிய மானது, மேலும் ஆரோக்கியத்துக்கு உகந்ததல்ல." "அப்படியொன்றுமில்லை" என்று ஓவியன் தன் ஜன்னலின் சார்பாகப் பேசினான். "வழக்கமான சாதாரண கண்ணாடி ஜன்னலைவிட இது வெப்பத்தை நன்றாகத் தக்கவைக்கிறது. மரப் பலகைகளில் இருக்கும் இடைவெளிகளின் வழியே காற்று வருவதால் அறை யைக் காற்றாட விடுவது மிகவும் அத்தியாவசியம் இல்லையென்றாலும் வேண்டுமென்றால் இந்தக் கதவையோ அல்லது மற்றதையோ திறக்கலாம்." 

 

வாசாரணை 

135 

க. இந்த விளக்கத்தால் சிறிது சமாதானமடைந்து. இரண்டாவது கதவைக் கண்டுபிடிப்பதற்காகச் சுற்றுமுற்றும் பார்த்தான். அதை ஓவியன் கவனித்துவிட்டுக் கூறினான், "அது உங்களுக்குப் பின்னால் இருக்கிறது. அதை நான் படுக் கையினால் மறைக்க வேண்டியிருந்தது. இப்போதுதான் க. சுவரில் இருந்த அந்தச் சிறு கதவைப் பார்த்தான். "இங்கே இருக்கும் எல்லாமே ஒரு ஸ்டூடி யோவிற்குப் பொருத்தமில்லாமல் மிகச் சிறியவை" என்று க. குறைசொல்லப் போவதை முன்னமே அறிந்தது போல் ஓவியன் கூறினான், "எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு நான் இங்கே வசதி செய்து கொள்ள வேண்டியிருக் கிறது. கதவுக்கு முன்னால் இருக்கும் படுக்கை மிகவும் தவறான இடத்தில்தான் இருக்கிறது. உதாரணத்திற்கு, நான் இப்போது வரைந்து கொண்டிருக்கும் நீதி பதி எப்போதும் படுக்கையை ஒட்டியிருக்கும் கதவின் வழியாகத்தான் வரு வார். நான் இங்கு வீட்டில் இல்லாது போனாலும், எனக்காக இங்கே அவர் காத்துக்கொண்டிருக்கும் வகையில் அவரிடம் இந்தக் கதவின் சாவி ஒன்றைக் கொடுத்துமிருக்கிறேன்; அவரோ வழக்கமாக அதிகாலையில், நான் இன்னும் தாங்கிக்கொண்டிருக்கும் சமயமாக வருகிறார். படுக்கைக்கு அருகிலிருக்கும் கதவு திறந்து கொண்டால், நிச்சயம் அது என்னை ஆழ்ந்த தூக்கத்திலிருந்து உலுக்கி எழுப்பிவிடுகிறது. அவர் அதிகாலையில் என் கட்டிலின் மேல் ஏறும்போது நான் வசைமொழிகளால் அவரை வரவேற்பதை நீங்கள் கேட்டால் நீதிபதி களிடம் உங்களுக்கிருக்கும் மரியாதையெல்லாம் பறந்து விடும். அவரிடம் இருக்கும் சாவியை நான் திரும்பவும் வாங்கிக்கொள்ளலாம்தான். ஆனால், அதனால் வெறும் மனக்கசப்புதான் மிஞ்சும். இங்கே உள்ள எல்லாக் கதவு களையும் மிகச் சுலபமாக அவற்றின் கீல்களிலிருந்து பிடுங்கிவிடலாம். இந்தச் சொற்பொழிவு நடந்து கொண்டிருக்கும் போது க. தன்னுடைய கோட்டைக் கழற்ற வேண்டுமா என்று யோசித்துக்கொண்டிருந்தான். இறுதியில் அவன் அப்படிச் செய்யாவிட்டால், அவனால் இன்னும் இங்கு இருக்க முடியாது என்று உணர்ந்தான். அதனால், கோட்டைக் கழற்றி, போகும்போது மறுபடியும் போட்டுக்கொள்ள ஏற்றவாறு அதை மடியின் மீது வைத்துக்கொண்டான். அவன் கோட்டைக் கழற்றிய உடனே அந்தப் பெண்களில் ஒருத்தி கத்தினாள், "அவர் கோட்டைக் கழற்றிவிட்டார். ஒவ்வொருவரும் உள்ளே நடக்கும் காட்சி யைக் காண்பதற்காக எப்படி பலகைகளின் ஒவ்வொரு விரிசலுக்கு அருகிலும் நெருக்கியடித்துக் கொண்டிருந்தனர் என்று உணர முடிந்தது. நான் உங்களை ஓவியமாகத் தீட்டப்போகிறேன் என்றும் அதனால் நீங்கள் கழற்றியிருக்கிறீர்கள் என்றும் அந்தப் பெண்கள் நினைக்கிறார்கள்" என்றான் ஓவியன். அப்படியா" என்று சிறிது உற்சாகமற்றுத்தான் கூறினான் க. ஏனென்றால் வெறும் சட்டை யுடன் அவன் இப்போது அங்கு உட்கார்ந்திருந்தாலும், முன்னைவிட ஒன்றும் 

. ஏறக்குறைய சிடுசிடுப் அதிக சௌகரியமாக இருப்பதாக அவன் உணரவில்லை புடன் அவன் கேட்டான், "மற்ற இரண்டு வழிகளும் என்ன என்று கூறினீர்கள்?" அவன் அந்த வார்த்தைகளை ஏற்கனவே மறுபடியும் மறந்துவிட்டிருந்தான். "பெயரளவில் விடுதலையும் முடிவில்லாமல் ஒத்திப்போடுவதும்தான்' என்றான் ஓவியன், "அவற்றில் எதை நீங்கள் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்பது உங்களைப் பொறுத்திருக்கிறது. இரண்டையும் என் உதவியினால் சாதிக்கலாம், ஆனால். அவ்வளவு எளிதாக அல்ல. இந்த வகையில் இவற்றிடையே வித்தியாசம் என்ன வென்றால், பெயரளவில் விடுதலைக்கு அவ்வப்போது மட்டும் சக்தியையும் கவனத்தையும் ஒன்றுதிரட்ட வேண்டியிருக்கும். ஒத்திப்போடுவதில், தேவைப் படும் சக்தி குறைவாக இருந்தாலும், அது நீண்டகாலம் சுமையாக இருக்கும் 

என்பதுதான் சரி. முதலில் பெயரளவு விடுதலை. இதை நீங்கள் விரும்பினால், 

 

காஃப்கா 

136 

நங்கள் நிரபராதி என்ற உறுதிமொழிப் பத்திரத்தைத் தயாரிக்கிறேன். அது போன்ற உறுதிமொழியின் வாசகத்தை என் தந்தையிடமிருந்து நான் பெற்றிருக கிறேன். சற்றும் அசைக்க முடியாதது. இந்த உறுதிமொழியுடன் எனக்குத் தெரிந்த நீதிபதிகளையெல்லாம் ஒரு நடை சென்று பார்ப்பேன். நான் இப்போது வரைந்து கொண்டிருக்கும் நீதிபதி இன்று மாலை ஓவிய அமர்வுக்கு வரும போது, இந்த உறுதிமொழியை அவர்முன் வைத்து, நீங்கள் நிரபராதி என்று அவருக்கு விளக்கிக்கூறி, அதற்கான உத்திரவாதத்தைத் தருவேன். ஆனால், அது வெறும் ஒப்புக்காக அல்லாத, உண்மையில் என்னைக் கட்டுப்படுத்தும் உத்திரவாதம். இந்த உத்திரவாதம் என்ற சுமையை க. தன்மீது வைக்க விரும் பினான் என்று ஓவியன் எண்ணியதாலோ என்னவோ, ஓவியனின் கண்டனம் அவன் பார்வையில் தெரிந்தது. "அது ஒரு பெரிய உதவி" என்றான் க., "பிறகு நீதிபதி உங்களை நம்பினாலும் எனக்குத் திட்டவட்டமான விடுதலை அளிக்க மாட்டாரா?" "நான் ஏற்கனவே கூறியது போல்தான்" என்று பதிலளித்தான் ஓவியன், "மேலும், ஒவ்வொருவரும் என்னை நம்புவார்கள் என்பது முழுவதும் நிச்சயமில்லை . உதாரணத்திற்குப் பல நீதிபதிகள் உங்களை அவர்களிடம் அழைத்துவரும்படி கூறுவார்கள். அப்போது நீங்கள் என்னுடன் வந்தாக வேண்டும். நீங்கள் எவ்வாறு அந்த நீதிபதிகளிடம் நடந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பாக உங்களுக்கு நான் முன்கூட்டியே தெளிவாகக் கற்றுக்கொடுத்து விட்டிருப்பேனாதலால், இந்த மாதிரியான வழக்கு ஏற்கனவே பாதி வென்று விட்டது போல்தான். முதலிலிருந்தே என்னை அணுகவிடாத நீதிபதிகளிடம் தான் - அப்படியும் நடக்கத்தான் செய்யும் - பிரச்சினை. நான் பலமுறை முயற்சி செய்தும் பலிக்காவிட்டால் அவர்களை நாம் விட்டுவிட வேண்டியது தான். நாம் அப்படிச் செய்யத்தான் வேண்டும். ஏனென்றால் தனிப்பட்ட முறையில் நீதிபதிகள் வழக்கின் முடிவை நிர்ணயிக்க முடியாது. இந்த உறுதி மொழிப் பத்திரத்தில் தேவையான எண்ணிக்கையில் நீதிபதிகளிடமிருந்து கையெழுத்து வாங்கிய பிறகு, உங்களுடைய வழக்கை இப்போது நடத்தும் நீதிபதியிடம் அதை எடுத்துச் செல்வேன். முடிந்தால் அவருடைய கையெழுத் தையும் வாங்கிவிடுவேன். பிறகு, வழக்கத்தைவிட எல்லாம் துரிதமாக நடக்கும். பொதுவாக, அதற்குப் பிறகு அதிகமான தடங்கல்கள் இருக்கவே இருக்காது. குற்றம்சாட்டப்பட்டவருக்கு அது ஒரு நல்ல நம்பிக்கையூட்டும் காலம். இது ஒரு ஆச்சரியம். ஆனால், திட்டவட்டமான விடுதலைத் தீர்ப்புக்குப் பிறகு இருப்பதைவிட இந்தச் சமயத்தில் அவர்கள் அதிக நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். இனிமேல், கூடுதலான முயற்சி ஒன்றும் தேவையிருக்காது. பத்திரத்தில் பல நீதிபதிகளின் உத்திரவாதம் இருப்பதால் அந்த நீதிபதி உங்களை விடுதலை செய்துவிடலாம். இவ்வாறு பலவித நடவடிக்கைகளுக்குப் பிறகு அவர் செய்வது நிச்சயம் எனக்கும் மற்ற தெரிந்தவர்களுக்கும் செய்யும் உபகாரமாகத்தான் இருக்கும். நீங்களோ நீதிமன்றத்திலிருந்து விடுதலை பெற்று வெளியே வரலாம். பிறகு சுதந்திர மனிதராக இருக்கலாம்." 'அப்படியானால் நான் சுதந்திர மனிதன்" என்றான் க. தயக்கத்துடன். "ஆமாம்" என்றான் ஓவியன், "ஆனால், வெறும் ஒப்புக்குத்தான் சுதந்திரம், அல்லது இன்னும் சரியாகக் கூறப்போனால் தற் காலிக சுதந்திரம்தான். எல்லாவற்றுக்கும் கீழ்ப்படியிலிருக்கும் நீதிபதிகளுக்கு - எனக்குத் தெரிந்தவர்களெல்லாம் இவர்கள்தான் - இறுதியாக விடுதலை யளிக்கும் உரிமை கிடையாது. அந்த உரிமை உங்களுக்கும் எனக்கும், நம் எல் லோருக்கும் எட்டாத, எல்லாவற்றிற்கும் மேலான நீதிமன்றத்துக்குத்தான் இருக்கிறது. அங்கு எப்படி இருக்கிறது என்று எனக்குத் தெரியாது, சொல்லப் போனால், நாம் தெரிந்து கொள்ளவும் விரும்பவில்லை. குற்றச்சாட்டிலிருந்து 

 

விசாரணை 

137 

குற்றம்சாட்டப்பட்டவரை விடுவிக்கும் பெரும் உரிமை நம் நீதிபதிகளுக்குக் கிடையாது. ஆனால் குற்றச்சாட்டிலிருந்து ஒதுக்கிவைக்கும் உரிமை அவர களுக்கு நிச்சயம் இருக்கிறது. அந்த அர்த்தம் என்னவென்றால், இந்த வகையில் நீங்கள் விடுதலை செய்யப்பட்ட பிறகு, தற்காலிகமாக நீங்கள் குற்றச் சாட்டிலிருந்து விடுவிக்கப்படுகிறீர்கள். ஆனால், அது இன்னும் தொடர்ந்து உங்கள் தலைக்குமேல் ஊசலாடிக்கொண்டிருக்கும். மேலிடத்திலிருந்து கட்டளை வந்தவுடன் வேலை செய்யத் தொடங்கும். நீதிமன்றத்துடன் எனக்கு நல்ல உறவு இருப்பதால், நீதி மன்ற அலுவலகங்களின் விதிமுறைகளில் திட்டவட்டமான விடுதலைக்கும் பெயரளவு விடுதலைக்கும் உள்ள வித்தியாசம் எப்படி வெளிப் படுகிறது என்று என்னால் கூற முடியும். திட்டவட்டமான விடுதலைத் தீர்ப்பில் வழக்குக் கோப்புகள் முழுவதும் அப்புறப்படுத்தப்பட்டுவிடும். அவை முற்றிலும் மறைந்துவிடும். குற்றச்சாட்டு மட்டுமல்ல, வழக்கும், விடுதலைத் தீர்ப்பும் அழிக்கப்பட்டுவிடும். எல்லாம் அழிக்கப்பட்டுவிடும். பெயரளவு விடுதலைத் தீர்ப்பில் விஷயம் வேறு. குற்றமற்றதன்மை என்று உறுதிப்படுத்தப் படுவது, விடுதலைத் தீர்ப்பு, விடுதலைத் தீர்ப்பின் காரணங்கள், இவை சேர்க் கப்படுவதைத் தவிர கோப்புகளில் மேலும் வேறு எந்த மாற்றமும் செய்யப் படமாட்டாது. மற்றபடி அது புழக்கத்தில் இருக்கும். நீதிமன்ற அலுவலகத்தின் தடங்கலில்லாத வேலைக்கேற்ப உயர்மட்டத்திலிருந்து கீழ்மட்டத்திற்கும் அல்லது இடைப்பட்ட மட்டங்களிலேயே மேலும் கீழும் ஊசலாடிக்கொண் டிருக்கும், அவ்வப்போது அங்கங்கே நீண்ட நாட்களுக்கோ அல்லது சில நாட் களுக்கோ தடைப்பட்டு நிற்கவும் செய்யும், இந்த வழிகளை நாம் முன்கூட்டி அறிந்துகொள்ள முடியாது. வெளியிலிருந்து பார்த்தால் எல்லாம் எப்போதோ மறந்து போனது போலவும், கோப்புத் தொலைந்து போனது போலவும், விடுதலைத் தீர்ப்பு மிகவும் தீர்மானமானது போலவும் சில சமயங்களில் தோன்றலாம். விஷயம் தெரிந்தவன் இதை நம்பமாட்டான். நீதிமன்றத்தில் ஒரு கோப்பும் தொலைந்து போகாது, எதையும் மறந்துவிடமாட்டார்கள். ஒரு நாள் - யாரும் அதை எதிர்பாராமல் - யாராவது ஒரு நீதிபதி கோப்பை மிகவும் ஜாக்கிரதையாகக் கையிலெடுத்து இந்த வழக்கு இன்னும் உயிருடன் இருக்கிறது என்று உணர்ந்து உடனே குற்றம்சாட்டப்பட்டவரைக் கைது செய்ய ஏற்பாடுகள் செய்வார். பெயரளவு விடுதலைத் தீர்ப்புக்கும் மறுபடியும் கைது செய்யப்படுவதற்கும் இடையே வெகு காலம் கழிந்துவிடும் என்று இங்கு நான் எடுத்துக்கொண்டிருக்கிறேன். அப்படியும் நடக்கும், அது போன்ற சம் பவங்கள் எனக்குத் தெரியும். ஆனால், அதே போல் விடுதலை செய்யப் பட்டவன் வீட்டுக்கு வந்தால் அங்கே அவனை மறுபடியும் கைது செய்யப் பணிக்கப்பட்டவர்கள் ஏற்கனவே காத்துக்கொண்டிருக்கலாம். அப்போது சுதந்திர வாழ்க்கை ஒரு முடிவுக்கு வந்துதான்விடும். பிறகு, வழக்கு முதலிலிருந்து தொடங்குமா?" என்று க. நம்பாமல் கேட்டான். "நிச்சயமாக” என்றான் ஓவியன். "வழக்கு முதலிலிருந்து தொடங்கும். ஆனால், முன் போல் மறுபடியும் பெயரளவில் விடுதலைக்காக முயற்சி செய்ய ஏது இருக்கிறது. மறுபடியும், எல்லாச் சக்திகளையும் ஒன்றுதிரட்ட வேண்டும்." க. சிறிது சோர்வடைந்து போயிருந்ததைக் கண்டு ஓவியன் கடைசி வார்த்தைகளைக்கூறியிருக்க வேண்டும். இப்போது ஓவியன் வெளிப்படையாகக் கூறப்போகும் ஏதோ ஒன்றை முன் கூட்டியே அறிந்தது போல் க. கேட்டான். "முதல் முறையைவிட இரண்டாவது முறை விடுதலைத் தீர்ப்பைப் பெறுவது இன்னும் கஷ்டம் அல்லவா?" "இந்த விஷயத்தில் என்று ஓவியன் பதில் கூறினான், நிச்சயமாக ஒன்றும் கூற முடியாது. இரண்டாவது முறையாகக் கைது செய்யப்படுவதால், 'நீதிபதிகள் தீர்ப்பளிக்கும் 

 

138 


போது குற்றம்சாட்டப்பட்டவருக்குப் பாதகமான மனநிலை கொண்டிருப் பார்கள்' என்றுதானே நீங்கள் எண்ணுகிறீர்கள்? அது அப்படியல்ல. விடுதலைத் தீர்ப்புக் கூறும்போதே நீதிபதிகள், இப்படிக் கைது செய்யப்போவதை முன்கூட்டியே அறிந்திருப்பார்கள். இந்த நிலை எதையும் பாதிக்கவே பாதிக் காது. ஆனால், மற்ற கணக்கில்லாத காரணங்களினால் நீதிபதிகளின் மன நிலையும் இந்த வழக்கில் அவர்களுடைய நேர்மையான தீர்ப்பும் நிச்சயம் மாறுபட்டிருக்கலாம், அதனால் இரண்டாவது விடுதலைக்கான முயற்சிகளை மாறிவிட்ட சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு அமைத்துக்கொள்ள வேண்டும். மேலும், மொத்தத்தில் முதல் விடுதலைக்கு எடுத்துக்கொண்டதைப் போல் அதே அளவு தீவிரம் வாய்ந்ததாக இருக்க வேண்டும்." "ஆனால், இந்த இரண்டாவது விடுதலைத் தீர்ப்பும் முடிவானதல்ல, அல்லவா?" என்று க. கூறி விட்டு ஓவியன் கூறியதைப் புறக்கணித்துத் தலையைத் திருப்பிக்கொண் டான். "அல்லதான்" என்றான் ஓவியன், "இரண்டாவது விடுதலைத் தீர்ப்பை மூன்றாவது கைது தொடரும், மூன்றாவது விடுதலைத் தீர்ப்பை நான்காவது கைது தொடரும். மேலும், இப்படியே போகும். பெயரளவு விடுதலைத் தீர்ப்பின் அர்த்தத்தில் அது ஏற்கனவே அடங்கியிருக்கிறது." க. மௌனமாக இருந்தான். "பெயரளவு விடுதலை உங்களுக்கு அனுகூலமாக இல்லை என்பது போல் தெரிகிறது" என்றான் ஓவியன். "ஒருவேளை, ஒத்திப் போடுவது உங்களுக்கு மிகவும் உகந்ததாக இருக்குமோ? காலதாமதம் செய்வதன் மையக்கருத்தை நான் உங்களுக்கு விளக்க வேண்டுமா?" க. தலையசைத்தான். ஓவியன் தன் நாற்காலியில் சாய்ந்து கைகால்களைப் பரப்பி உட்கார்ந்து கொண்டான். இரவு உடை அகலத் திறந்திருந்தது. அதனுள்ளே ஒரு கையை நுழைத்துக்கொண்டு மார்பையும் விலாப்பக்கங்களையும் தடவிக்கொண்டான். ஒத்திப்போடுவது" என்று ஓவியன் கூறிவிட்டு, முழுவதும் ஏற்ற ஒரு விளக்கத்தைத் தேடுவது போல் ஒரு வினாடி வெறித்துப் பார்த்தான். "ஒத்திப்போடுவது என்பது வழக்கை எப்போதும் எல்லாவற்றிற்கும் கீழான நிலையில் வைத்திருப்பது. அப்படிச் செய்ய, குற்றம்சாட்டப்பட்டவரும் அவருக்கு உதவி செய்பவரும், குறிப்பாக உதவி செய்பவர் எப்போதும் நீதிமன்றத்துடன் நெருங்கிய தொடர்பு மூலம் அதன் நாடியை விடாமல் கவனித்துக் கொண்டிருப்பது அவசியம். நான் திரும் பவும் கூறுகிறேன். பெயரளவு விடுதலைக்காகத் தேவைப்படும் அளவு முயற்சியை இதற்காகச் செலவு செய்ய வேண்டியதில்லை. ஆனால், அதைவிட அதிகமான கவனம் தேவை. வழக்கின் மீது எப்போதும் ஒரு கண் வைத்திருக்க வேண்டும். அடிக்கடியும் தொடர்ந்தும், மேலும் முக்கியமான சந்தர்ப்பங்களிலும் சம்பந் தப்பட்ட நீதிபதியைச் சென்று, பார்த்து, அவரைக் குஷிப்படுத்தி வைத்துக் கொள்ள முயல வேண்டும். நீதிபதியை நேரடியாகத் தெரிந்திராவிட்டால், அதனால் நேரடியாகச் சந்திப்பது சாத்தியமில்லை என்று விட்டுவிடாமல், அறிமுகமான நீதிபதியின் மூலம் அந்த நீதிபதியின் மனத்தைக் கவர வேண்டும். இந்த விஷயத்தில் எதையும் தவறவிடாமல் இருந்தால், வழக்கு முதல் கட்டத்தைத் தாண்டிச் செல்லாது என்று போதுமான அளவு உறுதியுடன் சொல்லலாம். வழக்கு நின்றுவிடாதுதான், ஆனால் குற்றம்சாட்டப்பட்டவர் தண்டனை யிலிருந்து தப்பித்து, சுதந்திர மனிதன் எப்படியிருப்பானோ அப்படி சுதந்திரமாக இருப்பார். பெயரளவு விடுதலையைவிட ஒத்திப்போடுவதில் உள்ள அனுகூலம் என்னவென்றால், இதில், குற்றம்சாட்டப்பட்டவரின் எதிர்காலம் குறைந்த அளவே நிச்சயமற்று இருக்கிறது என்பதுதான். திடீரென்று கைது செய்யப் படுவதால் ஏற்படும் அதிர்ச்சியிலிருந்து அவர் பாதுகாக்கப்படுவார். மேலும், பெயரளவு விடுதலையுடன் பிணைந்திருக்கும் கஷ்டங்களையும், எரிச்சல்களையும் 

 

விசாரணை 

139 

 அதுவும் அவருடைய சூழ்நிலை அவ்வளவாக அனுகூலமாக இல்லாத நேரத்தில், ஏற்றுக்கொள்ள வேண்டிவரும் என்று பயப்படத் தேவையில்லை. இருந்தாலும் ஒத்திப்போடுவதில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஒருசில பிரத 

இருக்கத்தான் செய்கின்றன. அதை ஒருவர் குறைத்து மதிப்பிடக் கூடாது. குற்றம்சாட்டப்பட்டவர் ஒருபோதும் சுதந்திரமாக இல்லை என்பதை இங்கு நான் குறிப்பிடவில்லை. பெயரளவு விடுதலையிலும் உண்மையில், அவர அப்படியில்லை . மேலும் சில பிரதிகூலங்கள் இருக்கின்றன. குறைந்த பட்சம், மேலெழுந்தவாரியான காரணங்கள் என்று எதுவுமில்லாமல் வழக்கு நடக்காமல் நிற்காது. அதனால் வழக்குக்கு வெளியே ஏதாவது நடந்தாக வேண்டும். அதனால் அவ்வப்போது பலவிதமான ஏற்பாடுகள் செய்தாக வேண்டும், குற்றம்சாட்டப்பட்டவர் விசாரிக்கப்பட வேண்டும்; விசாரணை ஆரம்பிக்கப்பட வேண்டும். செயற்கையாக வரையறுக்கப்பட்டுவிட்ட ஒரு சிறு வட்டத்திற்குள் வழக்கு எப்போதும் உழன்றுகொண்டிருக்க வேண்டும். அதனால் குற்றம்சாட்டப்பட்டவருக்கு நிச்சயம் சங்கடங்களை அது ஏற்படுத்தும், ஆனால், அவை மிகவும் மோசமானவை என்று கற்பனை செய்து கொள்ளத் தேவையில்லை. இவையெல்லாம் வெறும் ஒப்புக்குத்தான், உதாரணத்திற்கு, விசாரணைகள் மிகவும் சுருக்கமாக இருக்கும். விசாரணைக்குச் செல்ல நேரமோ அல்லது மனமோ இல்லாவிட்டால் வர இயலவில்லை என்று கூறி விடலாம். கூறப்போனால், குறிப்பிட்ட நீதிபதிகளுடன் முன்பே கலந்துபேசி நீண்டகால இடைவெளிக்கான ஏற்பாடுகளைச் செய்து கொள்ளலாம். முக்கியமானது என்னவென்றால், குற்றம்சாட்டப்பட்டவர் என்பதால் அவ்வப்போது அவர் தான் நீதிபதியைச் சென்று பார்க்க வேண்டும்" என்று ஓவியன் சொல்லிக் கொண்டிருந்தபோதே க. கோட்டைக் கைமேல் போட்டுக்கொண்டு எழுந்து நின்றான். அவர் எழுந்துவிட்டார்!" என்று உடனே கதவுக்கு வெளியே கத்தல் கேட்டது. "நீங்கள் அதற்குள் போக வேண்டுமா?" என்று எழுந்து நின்ற ஓவி யன் கேட்டான், "நிச்சயம் இந்தக் காற்றுதான் உங்களை இங்கிருந்து விரட்டுகிறது. எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. நான் உங்களுக்கு இன்னும் நிறையச் சொல்லியிருப்பேன். நான் மிகவும் சுருக்கமாகச் சொல்ல வேண்டியிருந்தது. நான் சொன்னதெல்லாம் புரியும்படி இருந்திருக்கும் என்று நம்புகிறேன்." "நிச்சயமாக” என்றான் க. ஓவியன் கூறியதைக் கேட்பதற்காகத் தன்னைக் கட்டாயப்படுத்திக் கொண்ட கஷ்டத்தால் அவனுக்குத் தலைவலித்தது. இப்படி அவன் உறுதியாகக் கூறியபோதும் அவனுக்குச் சற்று மனநிம்மதியைத் தரும் வகையில் ஓவியன் தான் கூறிய எல்லாவற்றையும் மீண்டும் சுருக்கமாகச் சொன்னான், "இரண்டு வழி களுக்கும் பொதுவானதென்னவென்றால் குற்றம்சாட்டப்பட்டவருக்குத் தண்டனையளிப்பதைத் தடுப்பதுதான்." "ஆனால், இவை உண்மையான விடுதலையையும் தடைசெய்கின்றன” என்றான் க.மெதுவாக, அதைத் தெரிந்து கொண்டதற்கு வெட்கப்பட்டதைப் போல். "நீங்கள் இந்த விஷயத்தின் உட் கருத்தைப் புரிந்து கொண்டீர்கள்” என்று ஓவியன் உடனே கூறினான். க. தன் கையைக் கம்பளிக்கோட்டின்மீது வைத்தான். ஆனால், கோட்டை அணிந்து கொள்ள முடிவு செய்ய முடியவில்லை. எல்லாவற்றையும் ஒன்றாகச் சுருட்டி எடுத்துக்கொண்டு அதோடு குளிர்ந்த காற்றை நோக்கி மகிழ்ச்சியுடன் ஓடி யிருப்பான். அவன் கோட்டை அணிந்து கொள்கிறான் என்று அந்தப் பெண்கள் ஒருவரிடம் ஒருவர் அவசரப்பட்டுச் சத்தமாகச் சொல்லிக்கொண்டாலும், அவர்களாலும் அவன் தன் கோட்டை அணிந்துகொள்ளச்செய்ய முடியவில்லை. க.வின் மனநிலையை எந்த வகையிலாவது தெளிவாகத் தெரிந்து கொள்வது ஓவியனுக்கு முக்கியமாகப்பட்டது. அதனால் அவன் கூறினான், "நான் கூறும் 

 

140 

காஃப்கா 

யோசனைகளை வைத்து நீங்கள் இன்னும் ஒரு முடிவும் எடுக்கவில்லை. அப்படியே இருக்கட்டும். உடனே முடிவெடுக்க வேண்டாமென்று நானே உங்களுக்கு ஆலோசனை கூறியிருப்பேன். அனுகூலங்களும் பிரதிகூலங்களும் மயிரிழையில் தான் மாறுபடுகின்றன. எல்லாவற்றையும் ஒருவர் மிகச் சரியாக மதிப்பிட வேண்டும். இருந்தாலும் அதிகக் காலதாமதம் செய்யக்கூடாது. "நான் சீக்கிரமே மறுபடியும் வருகிறேன் என்றான் க. அவன் சட்டென்று ஒரு முடிவுடன் கோட்டை மாட்டிக்கொண்டு, மேல்கோட்டைத் தோளின் மேல் போட்டுக்கொண்டு கதவை நோக்கி விரைந்தான். அதன் பின்னிருந்த பெண்கள் இப்போது கூச்சல் போடத் தொடங்கினார்கள். கத்திக்கொண்டிருந்த பெண்களைக் கதவின் ஊடே பார்த்தது போல் க.வுக்குத் தோன்றியது. "நீங்கள் உங்கள் சொல்படி நடக்க வேண்டும். இல்லாவிட்டால் விசாரிப்பதற்காக நானே வங்கிக்கு வரு வேன் என்றான் ஓவியன், அவனைப் பின்தொடராமலேயே. கதவைத் தாளிட்டுக் கொள்ளுங்கள்" என்று க. கூறிவிட்டுத் தாழ்ப்பாளின் பிடியைப் பிடித்து இழுத்தான். அவன் உணர்ந்த எதிர்ச் சக்தியிலிருந்து வெளியில் பெண்கள் 

பிடித்துக்கொண்டிருந்தார்கள் என்று தெரிந்து கொண்டான். "இந்தப் பெண்களுடன் எதற்குத் தொந்தரவு?" என்று ஓவியன் கேட்டான். "அதைவிட இந்த வழியாகப் போங்கள்" என்று கட்டிலின் பின்னால் இருந்த கதவைச் சுட்டிக்காட்டினான். ஆனால், கதவை அங்கிருந்தே திறப்பதற்கு பதிலாக ஓவியன் கட்டிலின் கீழே தவழ்ந்து சென்று அடியிலிருந்தபடி கேட்டான், "ஒரு நிமிஷம், நீங்கள் வாங்க நினைக்கும் ஒன்றிரண்டு படங்களைப் பார்க்க விரும்பவில்லையா?" க. மரியாதைக் குறைவாக நடக்க விரும்பவில்லை . ஓவியன், உண்மையில் அவன் விஷயத்தில் அக்கறை எடுத்துக்கொண்டு மேலும் அவனுக்கு உதவி செய்வதாக வாக்களித்திருந்தான். மேலும், க.வின் மறதி காரணமாக உதவிக்கு பதிலுதவிபற்றி இதுவரை பேச்சு ஒன்றும் எழவேயில்லை . அதனால் க. ஸ்டூடியோவிலிருந்து வெளியே செல்லப் பொறுமையில்லாமல் துடித்துக் கொண்டிருந்தாலும், அவனைத் தட்டிக்கழிக்க முடியாமல் படங்களைப் பார்க்க நின்றான். ஓவியன் கட்டிலுக்கு அடியிலிருந்து சட்டம் போடாத படங்களின் குவியல் ஒன்றை வெளியில் இழுத்தான். அவற்றில் பெருமளவிற்குத் தூசு படிந்திருந்ததால், அதை ஓவியன் ஊதியபோது எல்லாவற்றிற்கும் மேலிருந்த படத்திலிருந்து தூசுப்படலம் வெகுநேரம் மூச்சுமுட்டும்படி க. வின் கண் ணெதிரே சுழன்றது. "ஒரு சதுப்பு நிலத்தின் படம்” என்று ஓவியன் கூறிவிட்டு அதைக் க.விடம் நீட்டினான். அது ஒரு இருண்ட புல்தரையில் செழுமை குன்றிய இரண்டு மரங்கள் ஒன்றிலிருந்து ஒன்று மிகவும் விலகி நின்றுகொண்டிருந்ததைக் காட்டியது. அவற்றுக்குப் பின்னால் பல வண்ணங்களுடன் சூரியாஸ்தமனம் தெரிந்தது. "அழகாக இருக்கிறது, நான் அதை எடுத்துக்கொள்கிறேன்" என்றான் க. யோசிக்காமல். அதனால், ஓவியன் அதைத் தவறாக எடுத்துக்கொள்ளாமல் இரண்டாவது படத்தைத் தரையிலிருந்து எடுத்தபோது அவன் சந்தோஷ மடைந்தான். "இது இந்தப் படத்திற்கு நேர்மாறானது" என்றான் ஓவியன். அது நேர்மாறானது என்று நினைத்து வரையப்பட்டிருக்கலாம். ஆனால் அதற்கும் முதல் படத்திற்கும் சிறிதளவுகூட வித்தியாசம் இருப்பதாகத் தெரிய வில்லை. ஒன்றில் மரங்களும் புல்வெளியும். மற்றதில் சூரியாஸ்தமனம். ஆனால், அது க.வுக்கு ஒரு பொருட்டாகப் படவில்லை . இன மிகவும் அழகான இயற்கைக் காட்சிகள்" என்றான் அவன், "இரண்டையுமே வாங்கி என் அலுவல கத்தில் மாட்டப்போகிறேன்." "இந்த வகைப் படங்கள் உங்களுக்குப் பிடித் திருக்கிறது போலிருக்கிறது" என்று சொல்லிக்கொண்டே ஓவியன் மூன்றாவது படத்தை எடுத்தான். "இவை போன்ற இன்னொரு படம் இங்கிருப்பது மிகவும் 

 

விசாரணை 

141 

நல்லதாயிற்று." என்றான் 

ஆனால், அது மற்றவற்றைப் போன்ற படமல்ல. அது முழுக்க முழுக்க அதே சதுப்புநிலக் காட்சி. பழைய படங்களை விற்பதற்கு ஓவியன் இந்தச் சந்தர்ப்பத்தை நன்றாகப் பயன்படுத்திக்கொண்டான். இதையும் நான் எடுத்துக்கொள்கிறேன்" என்றான் க. "இந்த மூன்றுக்கும் என்ன விலை?" "து ஓவியன். "இப்போது நீங்கள் - அதைப்பற்றி நாம் அடுத்தமுறை பேசுவோம்” என்றான் 

இப்போது நீங்கள் அவசரமாகப் போக வேண்டும். நாம்தான் அடிக்கடி தொடர்பு வைத்துக்கொள்வோமே. மேலும், உங்களுக்கு இந்தப் படங்கள் பிடித்திருப்பது எனக்குச் சந்தோஷம். இதற்கடியில் நான் வைத்திருக்கும் எல்லாப் படங்களையும் உங்களுக்கு இப்படியே கொடுத்துவிடுவேன். இவையெல்லாம் வெறும் சதுப்புநிலக் காட்சிகள், நான் நிறைய சதுப்புநிலக் காட்சிகளை வரைந்திருக்கிறேன். இவை மூட்டம் நிறைந்து இருப்பதால், பலர் இது போன்ற படங்களை ஒதுக்கிவிடுகிறார்கள். ஆனால், மற்றவர்கள் - அவர்களில் நீங்களும் ஒருவர் - மட்டமான படங்களைத்தான் விரும்பு கிறார்கள். ஆனால், க. இப்போது இந்தப் பிச்சைக்கார ஓவியனின் தொழில் அனுபவங்களைக் கேட்கும் நிலையில் இல்லை. "எல்லாப் படங்களையும் கட் டிவையுங்கள்" என்று ஓவியனின் பேச்சில் குறுக்கிட்டுச் சத்தமாகக் கூறினான், "நாளைக்கு என் வேலையாள் வந்து அவற்றை எடுத்துச்செல்வான்." "அது தேவையில்லை" என்றான் ஓவியன், இப்போதே உங்களுக்காக ஒரு கூலியாளை ஏற்பாடு செய்ய முடியும் என்று நினைக்கிறேன். இறுதியில் அவன் கட்டிலின் மீது குனிந்து கதவைத் திறந்தான். "வெட்கப்படாமல் கட்டிலின்மீது ஏறுங்கள்” என்றான் ஓவியன். "இங்கு வரும் ஒவ்வொருவரும் அப்படித்தான் செய்கிறார்கள்.' இந்தத் தூண்டுதல் இல்லாமலேயே க. அவ்வாறு செய்யத் தயங்கியிருக்க மாட்டான். ஏற்கனவே அவன் ஒரு காலை மறுபடியும் பின்னுக்கு வைத்து விட்டிருந்தான். "அது என்னது?" என்று ஓவியனைக் கேட்டான். "எதைக் கண்டு திடுக்கிடுகிறீர்கள்?" என்று அவனும் வியப்படைந்து கேட்டான். "அவை நீதிமன்ற அலுவலகங்கள். இங்கு நீதிமன்ற அலுவலகங்கள் இருக்கின்றன என்று உங்களுக்குத் தெரியாதா? நீதிமன்ற அலுவலங்கள் கிட்டத்தட்ட எல்லாக் கூரைகளுக்கும் கீழ் இருக்கத்தான் செய்கின்றன. இங்கு மட்டும் ஏன் இருக்கக் கூடாது? என்னுடைய ஸ்டூடியோவும் உண்மையில் நீதி மன்ற அலு வலகங்களைச் சேர்ந்ததுதான். ஆனால், நீதிமன்றம் நான் இதை உபயோகப்படுத்தக் கொடுத்திருக்கிறது." தான் இங்கும் நீதி மன்ற அலுவலகங்கள் இருந்ததைக் 

. முக்கியமாக அவன் தன் கண்டதற்காக க. அவ்வளவாகத் திடுக்கிடவில்லை னைக் குறித்தும் நீதிமன்ற விவகாரங்களில் தன் அறியாமையைக் குறித்தும் எண்ணியே திடுக்கிட்டான். குற்றம்சாட்டப்பட்டவன் என்ற முறையில் அவன் சில அடிப்படை விதிமுறைகளை ஏற்றுக்கொண்டிருந்தான். எப்போதும் தயாராக இருக்க வேண்டும்; தான் ஆச்சரியப்படும்படி விட்டுவிடக்கூடாது; இடது புறம் நீதிபதி நின்றுகொண்டிருக்கும் போது அதையறியாமல் வலது புறம் பார்க்கக்கூடாது. குறிப்பாக, இது போன்ற அடிப்படை விதிமுறைகளைத்தான் அவன் திரும்பத்திரும்ப மீறினான். அவனுக்குமுன் ஒரு நீண்ட வராந்தா சென்றது. 

அதிலிருந்து காற்று வீசியது. அதனுடன் ஒப்பிட்டுப்பார்த்தால் ஸ்டூடியோ விலிருந்த காற்று புத்துணர்ச்சி ஊட்டுவதாக இருந்தது. க.வின் வழக்குக்குப் பொறுப்பான அலுவலகத்தைப் போலவே வராந்தாவின் இரு பக்கங்களிலும் பெஞ்சுகள் போடப்பட்டிருந்தன. அலுவலகங்களில் என்னென்ன எவ்வாறு இருக்க வேண்டும் என்று தெளிவாக விதிமுறைகள் இருப்பது போன்று தோன்றியது. அந்த நேரத்தில் கட்சிக்காரர்களின் நடமாட்டம் மிக அதிகமாக இல்லை. அங்கே ஒருவன் சாய்வாகப் படுத்திருந்தான். முகத்தைப் பெஞ்சின் 

 

142 

காஃப்கா 

மீது இருந்த தன் கரங்களில் புதைத்தவாறு தூங்கிக்கொண்டிருப்பது போல் காணப்பட்டான். மற்றொருவன் அரை இருளில் வராந்தாவின் கடைசியில் நின்று கொண்டிருந்தான். இப்போது க. கட்டிலின் மேல் ஏறினான், ஓவியன் படங்களுடன் அவனைத் தொடர்ந்தான். விரைவில் அவர்கள் நீதி மன்றப் பணியாள் ஒருவனைச் சந்தித்தார்கள் - க. இப்போது எல்லா நீதிமன்றப் வேலையாட்களையும் அவர்களுடைய சிவில் கோட்டின் பித்தான்களுக்கடியில் அணிந்திருந்த தங்கநிறப் பித்தான்களை வைத்து அடையாளம் கண்டுகொண்டான் -படங்களுடன் க. வுடன் செல்லுமாறு ஓவியன் அவனைப் பணித்தான். க. நடந்து சென்றபோது முன்னைவிட இன்னும் அதிமாகத் தடுமாறினான், கைக்குட்டையை வாயின்மீது அழுத்திப் பிடித்துக்கொண்டான். அவர்கள் வெளிவாயிலுக்கு அருகில் வந்துவிட்டார்கள். அப்போது அந்தப் பெண்கள் அவர்களை நோக்கி ஓடிவந்தார்கள். க. அவர்களிடமிருந்து தப்ப முடியவில்லை. சந்தேகமில்லாமல், ஸ்டூடியோவின் இரண்டாவது கதவு திறந்திருந்ததை அவர்கள் பார்த்துவிட்டு, இந்தப் பக்கத்திலிருந்து உள்ளே நுழைவதற்காகச் சுற்றுவழியாக வந்திருந்தார்கள். "இனிமேல் உங்களுடன் என் இயலாது" என்று பெண்களின் நெருக்கலுக்கிடையில் ஓவியன் சிரித்துக்கொண்டே கத்தினான். "போய்வாருங்கள்! ரொம்பவும் யோசிக்க வேண்டாம்!" க. பின்னால் திரும்பிப் பார்க்கவே இல்லை. சந்தை அடைந்தபோது கண்ணில் தென்பட்ட முதல் வண்டியில் ஏறிக்கொண்டான். பணியாளைத் தவிர்ப்பது அவனுக்கு உண்மையிலேயே மிகவும் முக்கியமாக இருந்தது. உண்மையில், அவனுடைய தங்கநிறப் பித்தான் வேறு யார் கண்ணிலும் படாவிட்டாலும், இடைவிடாமல் க.வின் கண்களை உறுத்தியது. க.வுக்குப் பணிவிடை செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் பணியாள் கோச் ஓட்டுபவன் அருகில் உட்கார முனைந்தான். ஆனால், க. அவனை விரட்டிவிட்டான். க. வங்கியை அடைந்தபோது, நேரம் நடுப்பகலைத் தாண்டிவிட்டிருந்தது. படங்களை வண்டியிலேயே அவன் மகிழ்ச்சியுடன் விட்டிருப்பான். ஆனால், ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் தன்னிடம் இருக்கின்றன என்று ஓவியனுக்கு நிரூபிக்க வேண்டிய தேவை ஏற்படுமோ என்று அஞ்சினான். அதனால் அவற்றைத் தன் அலுவலக அறைக்குக் கொண்டுவரச் சொல்லி, குறைந்த பட்சம் அடுத்த சில நாட்கள் உதவி இயக்குநரின் கண்களில் அவை படாதவாறு தன் மேஜையின் கீழ் அறையில் வைத்துப் பூட்டினான். 


1 comment: