தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Monday, January 20, 2025

 

சிருஷ்டி இயக்கம் - பிரமிள்

சிருஷ்டி இயக்கம் - பிரமிள்
எழுத்து 90, ஜூன் 1966.
வம்சி பதிப்பகம் வெளியிட்ட பிரமிளின் ‘வெயிலும் நிழலும்’ தொகுப்பிலிருந்து

எண்பத்தி நாலாவது எண் இதழில், படைப்பாளியின் மன நிலை பற்றிப் பிரஸ்தாபித்து எழுதியிருந்தேன். ஒருவகையில் அது மேலோட்டமான பேச்சுத்தான்; அவ்வழியில் அல்ல, இவ்வழியில் எப்படியோதான். என்று, சரியான வழி தெரியாநிலையிலும் தப்புவழியைப் பற்றி, அது தப்பான வழிதான் என்று நிச்சயத்துடன் சொல்கிறவன் பேச்சு. அத்தகைய வழிகாட்டுதலுக்கு எப்பவுமே மவுசு குறைவு. தெரிந்ததுதான்.ஆனாலும், இம்மாதிரிக்காரியத்தில் ஒரு ருசி இருக்கிறது வழி தெரியாதவனோடு வழிகாட்டியும் நின்று தடுமாறுவது...

அக்கட்டுரையில், சமநிறுவைபற்றி எதையோ சொல்லியிருக்கிறேன் ஆப்ஜெக்டிவ் அளவைகள் குறைபாடானவை என்று. இந்த ஆப்ஜெக்டிவ் ஆன, யாவருக்கும் பொதுவான அளவைக்கு அகப்படாத ஒன்றுதான், ஒரு கலைப்பொருளின் தாரதம்மியத்தை நிறுப்பது என்கிற ஒரு முடிவு காட்ட முயன்றிருந்தேன். சங்கதி என்னவென்றால், கடைசியில் அம்முயற்சி வெறும் புஸ்வானமாகிவிட்ட பிரமையளிக்கிறது: பொது அளவைக்கும் அகப்படாத ஒன்றுக்கு, படைக்கும்போது படைப்பாளி கொள்ளும் ஒருவித மனநிலை என்று மட்டும் லேபல் ஒட்டிவிட்டு ஒதுங்கிவிட்டேன். அந்த 'ஏதோ ஒன்று 'நன்றாயிருக் கிறது, ஆனால் ஏன் என்று- - தெரியவில்லை' என்று தடுமாறவைக்கிற புகையுருவம்; விமர்சனத்துறை பல்வேறு வகைகளில் செழித்துள்ள இன்றும் இல்லை, இவர்கள் இங்கு தீண்டவில்லை என்று, திரும்பவும் கலைப் பொருளுக்கே மனசைதிருப்பி விடுவது.

"The Milky way is like a silver river' என்ற கவி வரியிலோ, 'எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்' என்ற கதாசிரிய வரியிலோ, மனம் மெய்யனுபவத்தைத் தேடுகிறதே அங்கு விமர்சகன் ( தோல்வி யடைகிறான். உண்மையில் அந்தத் தோல்விதான் அவன் .வெற்றியும், வாசகப்பந்தை எகிற ஆசிரியனின் கைக்கே பிரதிபலித்துவிடும் சுவர்தானே அவன்

இந்தப் படைப்பு வரிகளின் மர்மம் படைப்பாளியின் சிருஷ்டி -மன நிலையில் தொக்கி நிற்கிறது எனறு எனககுத தோன்றுகிறது எனக்கு மேற்குறிப்பிட்ட இரண்டு வரிகளும், அடிக்கடி உள்ளூர ரீங்காரம் செய்வ துண்டு. ரஷ்யாவிலிருந்து தப்பித்துக்கொள்ளத் தற்கொலை செய்த மாயாக்காவ்ஸ்கி என்ற கவி, தற்கொலை செய்யுமுன் எழுதிவைத்த கவிதையின் ஒருவரி ஒன்று; மற்றது மௌனியின் அழியாச் சுடரில் ஒரு வசனம்.

இந்த இரண்டு வரிகளும் என் மனசை வட்டமிடுவதன் காரணத்தை ஆராய்வதன் மூலம், நான் போனதடவை ஏனோதானோ என்று தொட்டுப் பார்த்துவிட்டு நகர்ந்த, சிருஷ்டி மனநிலை பற்றி ஏதும் சொல்லலாம் என ஒரு சபலம். ஆனால், அக்கட்டுரையிலேயே சொல்லியிருக்கிறேன்; சிருஷ்டி மனநிலை பற்றி நான் ஏதும் சொல்ல முயல்வதே. அதை ஒரு பொது நிறுவைக்கு வசப்படுத்த செய்யும் அபத்தமான யத்தனமாகும் என்று. ஆகவே, வாசகர் என் எல்லையை ஞாபகத்தில் கொள்ள வேணும். நான் இங்கு, அந்தச் சிருஷ்டி மனநிலை இதுதான் என்று கட்ட முயலவில்லை. அது முடியாது என்பது என் அபிப்ராயம். ஆனால் அதுபற்றி, அல்லது அது மேற்குறிப்பிட்ட வரிகளிலிருந்து என்னைத் தொற்றும் வகை பற்றிச் சொல்ல முயற்சிக்கிறேன். இதன் உத்தேசம் ஒன்றே ஒன்று தான். அதாவது, சிருஷ்டி மனநிலை என்கிற ஒன்று இருக்கிறது என்று ஸ்தாபித்தல். இதைச் செய்யாதுவிட்டால், என் முன்கட்டுரை அஸ்திவாரமற்றதாகும் எனப் பயப்படுகிறேன்.

The Milky Way என்பது நமது நக்ஷத்ர மண்டலத்தின் பெயர். இதைப் போய் ஒரு வெள்ளி நதிக்கு ஒப்பிட்டதில் என்ன கவிதை இருக்கிறது பிரமாதமாக, என்று கம்பனின் கவிவரியில் ஒரு உவமை பழகை ஒருவர் காட்டி வம்பு பண்ணலாம். நமது தமிழ் சமூகத்தின் கலாச்சாரச் சீரழிவின் வெளி விளக்கம் தான், அத்தகைய ஒருவர் பேச்சாகும். அவர் கம்பன் கவியையும் சரி, இந்த ரஷ்யக் கவி வரியையும் சரி, உணராதவர் என வேண்டும். அதாவது, அவர்  மனநிலையை உணரவில்லை. அதனால் பாதிப்புப் பெறவில்லை என்கிறேன். ஒரு கவிதையின் நிரந்தரத்வம், அந்த சாகா, இயற்கைநிலையில் இருக்கிறது; கம்பனின் உவமைச் சிறப்பு ரஷ்யக் கவியின் சாமான்ய உவமை என்கிற சில மேல்தோ: அம்சங்களுக்கும் அடியில், படிமங்களின் இயக்க சக்தியில் உள்ளது அந்த இயக்க சக்தி என்ன செய்கிறது நமக்கு? The Milky Way is like silver river என்ற வரியைப் படித்ததும் எனக்கு நடந்தது என்ன? ஒரு பிரமிப்பு

இவ்வளவுதான்! ஆனால், இந்தப் பிரமிப்பு வெறும் அறிவு பூர்வமான அதிர்ச்சியல்ல. உவமையின் சிறப்பில், கெட்டிக்கார தனம், வித்தை, இல்லையோவெனும் இடை' என்னும் அதீத தன்மைகளில் இல்லை - நம் பண்டித அளவுகோல்களின்படி உவமைச் சிறப்பு அதன் அதீதத் (இயற்கையை விட்டு தூர விலகி போகிற) தன்மையில் உள்ளது. அவ்வகை உவமை வெறும் அறிவு பூர்வமான அதிர்ச்சியையேதரும். கெட்டித்தனமாகப்படும். ஆனால் பிரமிப்புத் தராது, உணர்வைத் தீண்டாது
.
மெளனியின் “அழியாச்சுடர்"ரும் “பிரபஞ்சகானம்'மும்தான் சிறந்தவை என க.நா.சு.வுக்குப்படுவதன் காரணம், அவ்விரண்டிலும்தான் இந்த பிரமிக்கவைக்கும் கவித்வம் இருக்கிறது என்பதாலோ என நினைக்கிறேன். இவ்விடத்தில் வாசகர், அழியாச்சுடர் கதையில், கதாநாயகன் இரண்டாவது தடவையாக கோயிலுக்கு போகும் இடத்தில், கர்ப்பகிருக வர்ணனையைப் படித்துப் பார்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். தமிழ் இலக்கியத்தி பொறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டிய வரிகளுள் சில அவை காரணம் அந்த பிரமிப்பு "உலகின் கடைசி மனிதன், அந்தத்திலும் அவியாத ஒளியை" என்று வரும் வரிகளுள், எந்தச் சொல்லின் சொற்களில் ரகசியம் இருக்கிறது?  மெளனி யினாலேயே அந் விஷயத்தைப்பற்றி ஒன்றும் சொல்ல முடிவதில்லை.

“எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்?' என்ற மெளனியின் கேள்வி அங்கும் இந்தப் பிரமிப்புத்தான். இந்த பிரமிப்பை ஆசிரியன் நமக்கு ஊட்டுவது எவ்வகையில் பண்டித அளவுகோல்களின் படி, அதாவது நமது விமர்சன அளவுகோல் - 'நமது விமர்சன் அளவுகோல் என்று உதட்டளவில், விஷயம் அறிந்த க.நா.சு போன்றவர் வரை சொல்லிக்கொள்கிறார்களே- அந்த நமது அளவுகோல்களின் படிக்குப் பார்த்தால், நம்மை நிழல்களுக்கு ஒப்பிடுவதிலோ மில்க்கிவேயை வெள்ளிநதிக்கு ஒப்பிடுவதிலோ, உவமை நயம் (நமது அளவுகோல்களிடையே ஒரு பிரயோகம்) பிரமாதமாக இல்லை.

மேல்நாட்டுமுறைகள், கவியின் தீண்டமுடியாத அம்சங்கள் வரை ரசிகனை இட்டுச் செல்ல முயன்றிருக்கின்றன. எவ்வளவுக்கு எவ்வளவு தேடி அடைய முயல்கிறோமோ, அவ்வளவுக்கு அவ் வளவு நம் தேடுதலுள் அகப்படாத மர்ம அம்சங்கள்தான், கவியின் பெருமைக்கு உரியவை என்ற ஸ்திர உணர்வு கிடைக்கும்; கவியில் ஒருமண இழப்பு நேரும். இந்த மன இழப்பின் வசப்பட்டுத்தான், நான் ஆரம்பத்தில் சொன்ன வரிகள், என்மனசில் எதிரொலித்திருக்க வேண்டும். ஆக,

'உவமை நயம் அல்ல நான் எடுத்துக் கொண்ட வரிகள் என்னைப் பிரமிக்க வைத்ததின் ரகசியம். ஒன்றும் பிரமாத (அதாவது அதீத) உவமைகள் அல்ல அவை.

இவற்றை, வேறுவகை அளவை கொண்டு பார்த்தால், சிறந்த படிமங்கள் (images) எனலாம். 'பொய்த்தேவு” நாவல் முழுவதுமே ஒரு படிமம். நான் படித்துப் பத்து வருஷத்துக்கு மேலிருக்கலாம். ஆனால், வரண்ட பாலைவன வெக்கை, ஒரு கோடைகாலத்து மத்தியான உஷ்ணம், என் நினைவில் இன்னும் அந்த நாவலின் ஞாபகமாக நிற்கிறது. நாவலை மறந்து விட்டேன். ஆனால் அதன் படிமம் நிற்கிறது. எத்தனையோ நாவல்கள், கதைகளிடையே இது வேறு வகையாக, ஒரு கசப்பான தோல்வியின் ஞாபகம்போல் நிலைத்துவிட்டது. இந்த நிலைபேற்றின் காரணம், நாவலின் படிம சக்தி, இமேஜரி. என் மனசில் இப்ப நிலை நிற்பது அந்த நாவலின் 'கதை அல்ல. கதையின் பெரும் பாகம் மறந்து போய்விட்டது.

இவ்விடத்தில், வாசகர் என்னுடன் ஒத்துழைத்தால்தான் நான் சொல்ல முயல்வதை அறியலாம். சுரணையுள்ள எந்த வாசகருக்கும், மனசில் சில குறிப்பான ஆசிரியர்கள் - அந்த டாஸ்டாவ்ஸ்கி மாதிரியானவர்கள் தைத்து விட்ட முள்ளுகள் இருக்கும். படித்தது முழுக்க நினைவில்லா விட்டாலும், காஃப்கா - அல்லது சில  புதுமைப்பித்தன் கதைகள், அவரது துன்பக்கேணி- ஆமாம் வாசகருக்கும் அப்படி அனுபவங்கள் இருக்கின்றன. இந்த மாதிரி- படிமசக்தி ·"The Milky way is like a silver river' என்ற வரியில், 'எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம், என்ற வரியில் இருக்கிறது.

அவ்வரி எனக்கு பிரமிப்புக் கொடுத்ததின் காரணம், கலைஞனின் மனப்பண்பு அதாவது அவனைப் பாதித்த சில வேகங்களின் விளைவு அவ்வரியில் வெளியாவதுதான். தெளிந்த இரவில் நீங்கள் 'மில்க்கிவே'யைப் பார்க்க முயன்றிருப்பீர்களோ என்னவோ, அது பிரபஞ்சத்தின் மெளனமான எல்லையின்மையைக் கண்களுக்குச் கோடிட்டுக் காட்டுவது. தற்கொலை செய்யப் போகிறவனுக்கும், சாவை நோக்கித் தன்னையே உருட்டி விடுகிற போது, தனது தூசித் தன்மையின் முன்னிலையில் ஒரு அகண்டத்தின் பிரக்ஞை எழுகிறது. சுமார் பத்துப் பதினைந்து வரிகளேயுள்ள அக்கவிதை யில், இந்த ஒருவரிதான் கவியின் தற்கொலை எண்ணத்தை ஒரு பொருட்டு விஷயமாக ஒதுக்கிவிட வைப்பது. இருப்பும் இன்மையும் இந்த அகண்டத்தின் முன் ஒன்றுதான் என..

ஆம், பிரபஞ்ச வெளியின் முன் என் தூசித் தன்மையை அவ்வரி எனக்குப் புலப்படுத்தி யிருக்கிறது. அதுதான் என் பிரமிப்பின் காரணம். இப்பவும் ஞாபகம் இருக்கிறது. ஒரு நண்பரும் நானும் அக்கவிதையைப் படித்துவிட்டு, வெளியேவந்து வானை அண்ணாந்து பார்த்து மெளனமாக நின்ற வினாடிகள்.
'நாம் சாயைகள்தாமா? எவற்றின் நடமாடுகள் நிழல்கள் நாம் நாம் சுவாதீனமான வியக்திகள் அல்ல, சுவாதீன சக்தியோடு இயக்கும் வேறு எவற்றையோ பின்தொடரும் நிழல்களா நாம்? ஆமாம், எந்தத் தீவிர நிலைமையில், நாம் நமது புத்தியின் இசைவுக்கு நடந்திருக்கிறோம். யாவற்றுக்கும் மேலாக, நாம் எமது இசைவுடனாபிறந்திருக்கிறோம். அல்லது முடிவெய்துகிறோம். சங்கிலி போல் தொடரும் ஆழ்ந்த வாழ்க்கைப் பிரச்னைகளை எழுப்பி விடுகிறது இந்த மெளனிவரி. இந்த ஆழ்ந்த பிரச்னைகளின் வேகம் தான் இங்கே பிரமிப்புத் தருவது.

இவ்வரிகளின் அடியில் இயங்குவதுதான் சிருஷ்டி கர்த்தாவின் மனநிலை. இம் மனநிலையை, அவன் வாழ்க்கையைப் புரிந்து கொண்ட வகை என்று பச்சையாகச் சொல்லலாம்.

ஆனால், வாழ்க்கையைப் புரிந்துகொண்டா எழுத வேண்டும்: புரிந்து கொள்ளாமல் கலை பண்ணை முடியாதா என்று கேட்கலாம்.

வாழ்க்கையைப் புரிந்து கொள்ளாமல். வெறும் பயிற்சி எழுத்தாகத்தான் எவ்வகை எழுத்தும்! இருக்கும். இல்லாத இடை. போன்ற அதீத உவமைகள் பிறக்கும். அதாவது வாழ்வை விட்டு; கற்பனை தனித்தியங்கும். வாழ்க்கையைப் புரிந்துகொள்ளல் எனும்போதும் இதுதான் வாழ்வின் அர்த்தம்  புரிந்து கொள்ளப்படுவதற்கு என்று தொனிக்கிறது. அப்படியல்ல. சுரனையுள்ள இதயம், சிருஷ்டி சக்தியுள்ள இதயம் வாழ்வினால் பாதிக்கப்பட வேண்டு. என அர்த்தம் கொள்ளுங்கள். இப்பாதிப்புத்தான் முக்யம். ஆனால், அவனவனின் மன ஆழம் விஸ்தரிப்பு, அறிவின் பகைப்புலம், தீட்சண்யம், யாவற்றுக்கும் மேலாக விருப்புபெறுப்பு - இவற்றுக்கேற்ப இப்பாதிப்பு ஒரொரு வகையில் கலையுள்ளத்தில் சமைகிறது. தனந்த வாழ்வை, அவன் புரிந்துகொண்ட அளவிலான வாழ்வாகக் கொள்கிறோம். அது கலைப் படைப்பில் வெளிப்படும்போது பலவித அளவைகட்கும் தத்துவ, மனவியல், சமூக அளவை களுக்கு உட்பட்டு, ஆசிரியனின் தீட்சண்யம், முதிர்ச்சிபற்றி நிதானிக்க உதவுகிறது.

இப்படி ஒருத்தன் புரிந்துகொண்ட வாழ்க்கைதான். அவனுக்குப் படைப்பு வேகத்தை அளிக்கமுடியும், அவ-; சிருஷ்டி இயக்கத் இற்கு உட்படுத்த முடிவு, எழுத வேண்டியது. தவிர்க்க முடியாத ஓர் காரியமாக இயல்பின் வசப்பட்டுப் பிறப்பது அப்போதுதான். இந்நிலையில்தான் தன்முனைப்பை மீறின வகையாகக் கவி இயங்கு அது அவனே அறியாமல், அவனை வெளியிட்டு சக்திகள் இயக்குவது.

வெளியிட்டு சக்தியினால் இயக்கப்படும் மனசுக்கு கிடைக்கிற உந்நத நிலை, வாழ்வின் பரிச்சயம் அளித்த முதிர்ச்சி , அவனை எழுதவைக்கிற போது, அவனது வெளிடு இயக்கம் தனித்த சிலதன்மைகள் பெறுகின்றன. இதை அவன் எழுத்தில் உணர்ந்து பரவசப்படுகிறோம் - கனவு அல்ல ‘அந்தத் தன்மை’

 ஆனால் மனசின் சபலங்கள் யாவற்றையும் மூச்சடக்கி விடுகிற வாழ்வின் நிதர்சனசக்தி என வேண்டும். சிறுபிள்ளைத் தனமான சபலங்களுள் தப்பித்துக்கொள்ளவிடாமல் மனசை ஈர்த்து, ஒரு தவிர்க்க முடியாமையை வாழ்வின் அம்சங்களுள் உணர்த்துவது. இதைத்தான் படைப்பாளியின் மனநிலை எனவேண்டும்; அதாவது  படைப்போடு அவன் சம்பந்தப்பட்ட அளவுக்கு. மனிதப்பிராணியாக அல்ல.

மனிதப்பிராணியாக, அவன் கொஞ்சம் சபலபுத்திக்காரன், ... முடியாதவற்றை, நிதர்சனத்துக்குப் புறம்பானதை அங்கிகரிப்பவன் என்பது தவறல்ல. ஆனால், அவனது இயல்பான நொய்மை இருக்கிறது. அதே நொய்மையினால்தான் அவன், வாழ்வின் நிதர்சனம் எவ்வளவு ஆக்ரோஷமானது என, பூரணமாக அதால் பாதிக்கப்பட்டு உணரவும் முடிகிறது.

இவ்வளவும் அறுவை வேலை. இந்த அளவோடு நிறுத்திக் கொள்கிறேன். இதுதான் என்று சிருஷ்டி மனநிலையை நான் சுட்டி விடாமல், வேறு வகைகளிலேயே அதுபற்றிச்சொல்ல முயன்றிருக்கிறேன். கலைஞனால் பிரமிப்படைய முடிகிறது; அதிசயிக்க முடிகிறது; கேள்விபோட முடிகிறது. அதிசயிப்பு, கேள்விபோடல் - இவைதான் கலையின் உந்நதமான காரியம் என நினைக்கிறேன். இந்த பிரமிப்பு, அதிசயம், கேள்விகள் என்பவற்றின் இயக்கம்தான், படைப்பு மனநிலை.

எழுத்து 90, ஜூன் 1966.
*********************************************
மெளனியின் “அழியாச்சுடர்” லிருந்து ஒரு பகுதி.
.............
`தியானத்தினின்றும் விடுபட்டு என் பக்கம் அவள் திரும்பிய போது ஒரு பரவசம் கொண்டவனேபோல என்னையும் அறியாதே `உனக்காக நான் எது செய்யவும் காத்து இருக்கிறேன்; எதையும் செய்ய முடியும்’ என்று சொல்லி விட்டேன்! நீயும், அவளுடன் வந்தவர்களும் சிறிது எட்டி நின்றிருந்தீர்கள். உங்கள் காதுகளில் அவ்வார்த்தைகள் விழவில்லை. ஆனால் அவள் காதில் விழுந்தன என்பது நிச்சயம். அவள் சிரித்தாள்.

`அவளுக்கு மட்டுந்தானா நான் சொன்னது கேட்டது என்பதில் எனக்கு அப்போதே சந்தேகம். உள்ளிருந்த விக்கிரகம் எதிர்த் தூணில் ஒன்றி நின்ற யாளி அவையும் கேட்டு நின்றன என்று எண்ணினேன். எதிரே லிங்கத்தைப் பார்த்தபோது கீற்றுக்குமேலே சந்தனப் பொட்டுடன் விபூதி அணிந்த அந்த விக்கிரகம், உருக்கொண்டு புருவஞ் சுழித்துச் சினங்கொண்டது. தூணில் ஒன்றி நின்ற யாளியும் மிகமருண்டு பயந்து கோபித்து முகம் சுழித்தது; பின்கால்களில் எழுந்து நின்று பயமூட்டியது. அவளைப் பார்த்தேன். அவள் மறுபக்கம் திரும்பி இருந்தாள். பின்னிய ஜடை பின்தொங்க, மெதுவாகத் தன்னோடு வந்தவர்களுடன் சென்றாள். நான் அவளைச் சிறிது தொடர்ந்து நோக்கி நின்றேன். ஆழ்ந்து அமுங்கிய உலக நிசப்தத்தைக் குலைக்க அவளுடைய சதங்கைகள் ஒலிக்கும் ஒலி அவசியம் போலும்! வந்தவர்களுடன் குதூகலமாகப் பேசி, வார்த்தைகளாடிக்-கொண்டே கால் சதங்கைகள் கணீரென்று ஒலிக்கப்போய் விட்டாள். சந்நிதியின் மௌனம் அவளால் உண்டான சப்தத்தின் எதிரொலியில் சிதைவுற்றது. வௌவால்கள் கிரீச்சிட்டுக் கொண்டு குறுக்கும் நெடுக்குமாகப் பறந்தன.’

என் நண்பன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே என் மனம் ஓடியது. அது கட்டுக்கடங்காமல் சித்திரம் வரைய ஆரம்பித்தது _ கோவில், சந்நிதானம், ஆம். பகலிலும் பறக்கும் வௌவால்கள் பகலென்பதையே அறியாதுதான் கோவிலில் உலாவுகின்றன.

பகல் ஒளி பாதிக்குமேல் உட்புகத் தயங்கும். உள்ளே, இரவின் மங்கிய வெளிச்சத்தில் சிலைகள் ஜீவ களைகொண்டு நிற்கின்றன. ஆழ்ந்த அனுபவத்திலும் அந்தரங்கத்திலும் மௌனமாகக் கொள்ளும் கூடமான பேரின்ப உணர்ச்சியை வளர்க்கச் சிறப்பித்ததுதானா கோவில்? கொத்து விளக்குகள் எரிந்து கொண்டிருக்கும். அதன் பிரகாசத்தில் நடமாடும் பக்தர்களுக்கும், அவர்கள் நிழலுக்கும் வித்தியாசம் காணக்கூடாத திகைப்பைக் கொடுக்கும். அச்சந்நிதானம் எந்த உண்மையை உணர்த்த ஏற்பட்டது? நாம் சாயைகள்தாமா.....? எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்?_என்பன போன்ற பிரச்னைகளை என் மனம் எழுப்பியபோது, ஒரு தரம் என் தேகம் முழுவதும் மயிர்க்கூச்செறிந்தது.

என் நண்பனின் பார்வை மகத்தானதாக இருந்தது. ஏதோ ஒரு வகையில், ஒரு ரகசியத்தை உணர்ந்த அவன் பேச்சுக்கள் உன்னதமாக என் காதில் ஒலித்துக்-கொண்டிருந்தன. பேச்சினால் தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியாது என நினைக்கும்போது அவன் சிறிது தயங்கி நிற்பான். அப்போது அவன் கண்கள் பிரகாசத்தோடு ஜொலிக்கும்.
....................
http://www.csee.umbc.edu/~stephens/POEMS/mayakovsky.html

SHE loves me...she loves me not.
I tear my hands, scatter the broken fingers...loves me not
As we scatter the random riddling heads of daisies
Tumbling through summer.

Though I adopt the smooth chin and greying hair,
The silver, tinkling out the change of years,
I hope, I know that age will never bring
The final shame of prudent commonsense.

It's after one and you must be asleep.
The milky way is like a silver river.
I'm in no hurry. There's no need
To wake you or disturb you with telegrams or thunder.

It's what they call the end of the affair.
Love's gondola has struck the rocks of fact.
We're quits--no point in totting up
Our score of troubles, miseries, and wrongs.

See how much peace the world can give.
The sky is wrapped in stars, the gift of night.
At such a time you rise, and find you speak
To all the years, the future, and the world.

It's after one and you must be asleep.
Or maybe you can feel the night as well.
I'm in no hurry. There's no need
To wake you or disturb you with telegrams or thunder.

suicide note of V. V. Mayakovsky
translated from the Russian by Erik Korn
 


Vladimir Mayakovsky 1930

Past One O’Clock ...

Source: The Bedbug and selected poetry, translated by Max Hayward and George Reavey. Meridian Books, New York, 1960;
Transcribed: by Mitch Abidor.

This poem was found among Mayakovsky’s papers after his suicide on April 14, 1930. He had used the middle section, with slight changes, as an epilogue to his suicide note.

Past one o’clock. You must have gone to bed.
The Milky Way streams silver through the night.
I’m in no hurry; with lightning telegrams
I have no cause to wake or trouble you.
And, as they say, the incident is closed.
Love’s boat has smashed against the daily grind.
Now you and I are quits. Why bother then
To balance mutual sorrows, pains, and hurts.
Behold what quiet settles on the world.
Night wraps the sky in tribute from the stars.
In hours like these, one rises to address
The ages, history, and all creation.

Thanks http://www.marxists.org/subject/art/literature/mayakovsky/1930/past-one-o-clock.htm

























Past One O'Clock from allpoetry.org

1

She loves me-loves me not.
My hands I pick
and having broken my fingers
fling away.
So the first daisy-heads
one happens to flick
are plucked,
and guessing,
scattered into May.
Let a cut and shave
reveal my grey hairs.
Let the silver of the years
ring out endlessly !
Shameful common sense -
I hope, I swear -
Will never come
to me.

2

It's already two.
No doubt, you've gone to sleep.
In the night
The Milky Way
with silver filigrees.
I don't hurry,
and there is no point in me
waking and disturbing you
with express telegrams.

3

The sea goes to weep.
The sea goes to sleep.
As they say,
the incident has petered out.
The love boat of life
has crashed on philistine reefs
You and I
are quits.
No need to reiterate
mutual injuries,
troubles
and griefs.

4

D'you see,
In the world what a quiet sleeps.
Night tributes the sky
with silver constellations.
In such an hour as this,
one rises and speaks
to eras,
history,
and world creation.

5

I know the power of words, I know words' tocsin.
They're not the kind applauded by the boxes.
From words like these coffins burst from the earth
and on their own four oaken legs stride forth.
It happens they reject you, unpublished, unprinted.
But saddle-girths tightening words gallop ahead.
See how the centuries ring and trains crawl
to lick poetry's calloused hands.
I know the power of words. Seeming trifles that fall
like petals beneath the heel-taps of dance.
But man with his soul, his lips, his bones.







நேச மித்ரன்

 December 23 at 11:16pm ·2015









மணி ஒன்றை கடந்து விட்டது
------------------------------------------+----
மணி ஒன்றை கடந்து விட்டது
நீ உறங்கி இருக்கக் கூடும்
இரா முழுவதும் வெள்ளி ஓடையென
பால்வீதி
மின்னல்தந்தி சேதிகளோடு நானும்
எவ்வித துரிதத்திலுமில்லை
உன்னை எழுப்பி ஊறு செய்யும் காரணங்களேதுமில்லை
மேலும் அவர்கள் சொல்வது போல்
நிகழ்வு முற்று பெற்றுவிட்டது
அன்றாடத்தின் பற்சக்கரங்களில்
மோதி பொடிந்து விட்டது காதலின் படகு
இப்போது நீயும் நானும் கைவிடப் பட்டவர்கள்
பிறகேன் வருந்த வேண்டும்
பரஸ்பரதுயரங்களுக்கு,வலிகளுக்கும்
காயங்களுக்கும்
பிரபஞ்சத்தை மௌனம் ஆற்றுப் படுத்துவதை
கைக்கொள்

இரவு நட்சத்திரங்களின் நினைவாஞ்சலியாக
ஆகாயத்தை தழுவுகிறது இது போன்ற பொழுதுகளில்
ஒருவன்
நேற்றின் காலங்களை,வரலாற்றினை
படைப்புகளைப் பற்றி பேச எழுகிறான்

- மாயகோவ்ஸ்கி-யின் தற்கொலைக் குறிப்பிலுள்ள வரிகள்
தமிழில் : நேசமித்ரன்
குறிப்பு :
பொது புத்தியின் கன்னத்தில் ஓர் அறை , கால்சராயுள் மேகங்கள் போன்றவை மாயகோவ்ஸ்கியின் குறிப்பிடத்தகுந்த தொகுப்புகள். மார்க்ஸியக் கவியின் காலம் 1893 -1930