தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Thursday, February 27, 2025

சந்திப்பு - தர்மூ சிவராமூ

 சந்திப்பு
தர்மூ சிவராமூ
எனது நண்பனை நான் வரச்சொல்லியிருந் தேன். அவனை நான் சந்திப்பதாகக் குறிப்பிட்ட நேரத்துக்கு இன்னும் ஒரு மணித்தியாலமாவது ஆகும்; இப்பதானே ஆறரை?
இவ்வூருக்கு வந்தது பரீட்சை எழுத. ஆனால் அம்மா ஓரிரு உறவினர்களையும் - நான் முன்பின் சந்தித்தே இராத உறவினர்களையும் கண்டு தொடர்பு வைத்துக் கொண்டு வரும்படி சொல்லி யிருந்தாள். அவளுடைய கருத்திலும் பொதுவாக மற்றவர்கள் கருத்திலும் இந்தவகை விஷயத்தில் நான் கொஞ்சம் மந்தம். ஆனால் ஒரே பிள்ளை; உறவு கிறவு என்றிருப்பது பேருக்கென்றாலும் வேணும் என்பது அம்மாவின் கரிசனையில் பிறந் தது. வேண்டா வெறுப்பாக அவளுக்காக ஒருப் பட்டுவிட்டேன், இப்போது நண்பனை சொல்லிவிட்டுப் போவதில், அவனைக் காணும் ஆதாங்கம், என் திறமைக்கு மீறிய சம்பிரதாய மூறையிலன்றி, ஒரு உத்வேகத்துடனேயே அவர் களிடமிருந்து சீக்கிரம் என்னை விடுவிக்கும் என நினைத்தேன்.
வரச்
முதல்நாளே பரீட்சை எழுதிவிட்டபடியால் தலைநகரில் வந்து மாட்டிக் கொண்ட நண்பர்களு டன் அளவளாவுவதற்கு மனம் பறந்தது. பரீட்சை எழுதுவதுதான் என்ன, கதை எழுதுவதுபோல் தான் என் விஷயத்தில். 'மூ:ட்' சரியாக இருப்ப தைப் பொறுத்தது. பரீட்சிப்பவர்களும் விமர் சகரைப்போல் தான்; எனது 'மூஃட்' இருளில் தடு மாறி அகப்பட்டதைச் சுருட்டி வந்து அவர்க ளிடம் பிடிபட்ட என் திருட்டுச் சொற்கள் போலவே பரீட்சைத் தாள்களும் பரீட்சிப்பவர் களிடம் அகப்பட்டு முழிக்கப் போகின்றன... எண் ணங்களின் டிசைன்கள் விசித்திரமாகின்றன என்று தென்பட்டதும் என்னை நானே வியந்து கொண்டேன்.. விந்தையான நினைவுகள் இவை எப்படி ஒருவித முன்னேற்பாடுமின்றி பிறக்க முடி கிறது? இதே நினைவுகள் மீண்டும் சுற்றி வந்து என் நண்பனுடன் பேசப்போகிற விஷயங்களுடன் சேர்ந்துகொண்டன. இவற்றோடு-இக் கண நேர நினைவுகளோடு இன்னும் எவ்வளவோ அவ னைத் திணறவைக்க ஏற்கெனவே இருக்கிறது. இப் போது அவனுக்குச் சொல்ல இருப்பவை மண மேடையில் தம்மைத்தாமே ஒத்திகை பார்க்கத் துவங்குகின்றன...அவ் ஒத்திகையின் அடியில் அவனை அவனுக்காகவன்றி நான் சொல்ல இருப் பவைக்காகவே சந்திக்கவேணுமென்ற ஆசை ஒரு நிர்ப்பந்தமாகிக் கொண்டிருக்கிறது.
நான் நினைவுகளில் தடுமாறி எங்கேயெல் லாமோ போய்க்கொண்டிருந்தேன். சில நினைவு கள் திகைப்பூண்டு போன்றவை, அவற்றில் மனம் பதித்தால் இக்கணம் - நிதர்சனம் - மங்கிவிடு கிறது. கானகத்துள் வழி தடுமாறியவனை நோக்கி வரும் அறிமுகமற்ற மரங்கள்போல் எண்ணங்கள் மட்டுமே எதிர்ப்பட்டுக் கொண்டிருக்கும் குறிப் பிட்ட விலாசத்தில் சிதறலாக மனிதர்கள் கூட் டம், அழுகுரல், என் அடையாளத்தை தடுமாறி சொல்லியபடி உரியவர்களிடம் அழைத்துக் செல் லப்பட்டது யாவுமே அளவற்ற மனோவேகத்தில் அள்ளுண்டு செல்லும் எனக்கு 'ஹோ'வெனச் சோனாமாரியாகப் பெய்யும் மழையூடே புலப் படும் ஒரு மங்கிய உலகில் நடப்பவையாயின் அது ஒரு மரணச்சடங்கு என்பதை நான் அறிந்தபோது நான் ஏன் ஒருவித விசித்திரத்தை யும் என் வருகையில் உணரவில்லை. நான் அங்கு அந் நிகழ்ச்சியில் கலக்கவே உத்தேசித்து வந்த ஒரு சாமானிய உணர்வுதான். என்னையறியாமலே இதை
 எதிர்பார்த்திருந்தேனோ? எப்படியானாலும் நான் என்னால் சமாளிக்க முடியாத ஒரு சமூக நிர்ப்பந்ததத்துள் அகப்பட்டுவிட்டேன். என் வருகை பொருட்டற்றதாக ஆரம்பித்து வியாபிக் கும் ஒரு புள்ளிபோல் வட்டம் விரியத் துவங்கி யது.
இம் மனிதர்கள்-இவர்களுள் ஒருவருடம் நான்முன்னுறவு கொள்ளவில்லை எனவே இவர்கள் ஒவ்வொருவரும் ஒரு புதிர். அவர்களது பார்வை கள் கணம் என் பார்வையைச் சந்தித்து, தடுமாறி என் முகத்தைத் துளாவிவிட்டு என்னுள் நுழை யும் பாதை புலப்படாது சறுக்கி விழுந்து அகலும் போது, அகலுமுன், அக் கணநேர கண் சந்திப்பில் அவர்களூடே ஒரு இருள் உலகாகவே அவர்கள் எல்லையற்று, அடத்தனமற்றுச் செல்கிறார்கள். ஒவ்வொரு முகமும் ஒரு பூமிபோல் கண்கள் குகை களாக இருண்டு உள்ளுருவற்றன. பூமியைத் துளையிட்ட குகைகள் திரும்பி வரமுடியாத பெரு வெளியில் பாய்வனபோல் அடையாளமற்ற அமானுஷ்யமாயின. ஒருவனை நாம் இன்னானெனக் காண்பதன் அசட்டுத்தனம் அறிமுகமற்றவன் முன்தான் புலப்படுகிறது. இன்னான் இத்தகைய வனென்று, அடையாளமற்றவனாயினும் பழகிய வனென்பதற்காகவேதானே கொள்கிறோம்? பழக் கமற்றவன் எப்படி தன்னை என் முன் காப்பாற்றி தன் அடையாள மின்மையை மட்டுமே காண் பிக்கிறான்!... நமது இறந்த காலம் என்ற ஒரே உறுதியையும் குலைக்கிறான்!
அவர்களிடையே நான் என்ன சொன்னேன், எவ்விதமாக என்னை அறிமுகப்படுத்தினேன் - இவ் விதமாகச் சொல்லியிருக்க வேண்டியது - இந்த - வார்த்தை - இவ்வகை இங்கிதம் என்பனவெல் கோமாளித்தனமானவைதான்
லாம்
எனத் தோன்றும்படி சூழல் மாறாட்டமாயிற்று? அங்கு ஒன்றுகூடிய மனிதர்கள் யாவரும் ஒரு குடும்ப மென, ஒரே உலகென கொள்வது வெறும் இறந்த காலமென்கிற உறுதியில்தான். அவர் களுடன் அவ்விறந்தகால உறவற்ற எனக்கோ, நானும் அவர்களுள் ஒவ்வொருவனும் ஒவ்வொருத் தியும் அநாதரவாய் தனித்து அறிமுகமற்ற பிற மனிதர்கள் தழைத்திருக்கும் கானகத்துள் வழி தடுமாறுபவர்களாயினோம். தம் பேச்சால் விசா ரணையால் இவ்வகையில் இன்னார் வழியில் என என்னுடனும் உறவு கொள்ள அவர்கள் முயல்வது தலையில் இரு இருள் குழிகளோடு, என்னை அங்கு மிங்கும் கைநீட்டித் தேடி, என்னையும், நான் நிற் குமிடம் தெரியாது வெறும் வெளியையும் தடவுவ தாய்த் தோன்றிற்று. சிலர், நான் நிற்குமிடத் தையும் தாண்டி கைகளை முன் நீட்டி உதடுகளற்ற கபாலச் சிரிப்புடன் வெளியைத் துளாவுவது நிம் மதியாகத்தான் இருக்கிறது. ஆனால் என்னைத் தம் விசாரணையினால் தடவிக் கண்டுகொண்டவர் களின் உறவுச் சொற்கள் என்மீது என்மீது புரள்வது பாம்புகள்போல்தான் அருவருத்தது.
நான் அவ்வீட்டின் அந்நிகழ்ச்சியின் மைய அச்சாகினேன். என்னைச் சூழ்ந்து ஒரு உலகு, மனிதச் சுழல் ஓயாது சுற்றுவதுபோல் அடிக்கடி பிரமை எழுந்தது. கண்ணில் என் வெறிப் பார் வைக்கு நேரே ஒரு முகம் வெளிறிச் சாம்பல் பூத்து உறைந்த பனிச் சிரிப்போடு நின்றது நின்றது தான். அச்சிரிப்பில் என் சுபாவ பயத்தின் எல் லையை நானே மீறிவிட்டேன் போலும், யாருமற்ற ஒரு இருள் வழியில்போல அச்சிரிப்பு, உருவற்ற ஒரு குளிர் காற்றாய் என்மீது மோதி என்னூடே வழிகண்டு ஓடி உள்ளுறைந்தது.
கொள்ளிவைக்கும் உறவு நெருக்கம் அதுக்கு நான் வரும்வரை இல்லை. நான் அங்கு அந்நிகழ்ச் சிக்கு என்றே உடல்கொண்டவனானேன். ஆம், உறைந்து கிடக்கும் அச்சிரிப்பு, நான் வைக்கும் தழலில்தான் உருகி ஓடவேண்டும்... எவ்வளவு காலம்... இதெல்லாம் எவ்வளவு காலம் கடந்தது? இதன் நிகழ்ச்சித் தொடரென்ன? என்பதெல் லாம், நிகழ்ச்சிக்கு அவசியமான தர்க்கப்புலம் இதற்கு இல்லாததால் தடுமாறி, என்றோ, எப் போதோ, தாறுமாறாக முன்பின் மாறி நிகழ்வ தாயின.
சிதையில் நெருப்பை மூட்டிவிட்டு அவர்கள் சொன்னபடி திரும்பிப் பார்க்காமலே கெளர வித்து விலகும் மனிதர்களூடே நான் வந்துக் கொண்டிருக்கிறேன். ஆம், நான் சுடுகாட்டி னூடே நடந்து கொண்டிருக்கிறேன். அந்தரங்க மாக மனம் சிக்கிக்கொண்டது, வெளிப்படையில் நான் அச்சமூக நிர்ப்பந்தத்திலிருந்து விடுபட்டா லும்... அந்தச் சிரிப்பு, என் தழலில் உருகிவிட் டாதா? உருகத் துவங்குகிறதா?... உருகி ஓடியது என் இதயத்தைச் சுற்றிய சர்ப்பமாகிவிட் டதா?... நான் சிக்கிக் கொண்டேன்
பூரணையை அணுகிவிட்ட சுக்கில பக்ஷத்து நிலவில் பூமிமீது அடர்ந்த செழிப்பான பசும்புல் சாம்பல் பூத்தது. விருட்சங்களிலிருந்து உதிர்ந்து காற்றில் அள்ளுண்டு வழியில் திட்டுத் திட்டாக கிடப்படை சாம்பல் பூத்த பிண உதடுகளாக நிலத்தில் பூத்திருக்கின்றன. அவற்றில் உள்ளங் கால்கள் பட்டதும் என் மிதியில் நசிந்து நெளியும் தசைகளாயின. உடலூடே எனக்கு உணர்வு குளிர்ந்தது. அருவருப்புடனேயே ஒவ்வொரு காலடியையும் நிலத்திலிருந்து எடுத்தேன். என் னுள் உருகிய சிரிப்புக்களின் ஊளை ஓட்டம்... எதிரே நிலத்தில் இப் பிண உதடுகளிலிருந்து ஓயாது பாயும் மௌன ஊளையை பொத்தி மறைக்க என் பாதச் சுவடுதானா? ஏன் இப்பாதங் கள் பூமியிலிருந்து பெயர்ந்து எதிரே நீண்டதும் அப்படியே வெறும் வெளியில் என்னை ஏற்றிச் செல்லலாகாது? வெறும் வெளியில் பார்வைக்குப் புலனாகாது படிக்கட்டுகள் இருக்கின்றன. அதில் மிதித்து ஏறி ''ஊ' வென்று குவிந்த உதடுகளை மிதிக்காது தப்பித்துவிடுவேனென காலை வைப் பேன். ஆனால், படிக்கட்டு இல்லை. அது இனித் தான். இப்போது-இந்த-இது! பாதங்களை ஊடுருவி உடலூடே ஒரு கூக்குரல் பாய்கிறது. உறவு. அந்த அதன் உறவு .. ஆம் ஒவ்வொரு அடிச்சுவட்டினூடேயும் சுடுகாட்டில் தன் லையை வந்தடைந்த இச் சவம் என் தழலில் உரு கிய பனிச் சிரிப்பை இவ் ஊளையில் சேதி சொல் லியபடியே இருக்கிறது. எதிரே மிதிப்பது இன் னொரு தடவை கேட்கவேதான்... படிக்கட்டில்லை, தப்பு தலில்லை...எதிர் காலம்-எதிர் கணம்-படிக் கட்டு தப்புதல் ஒளியைத் தேடி மரத்தைத் துறந்த, பறவைகள்போல் இருளில் நினைவுகள் குறியற்றுப் பறந்தன. நான் நடந்தேன்.

நண்பனைச் சந்திக்க மனம் விரும்பவில்லை; குறியற்று தெருக்களிலேயே இரவு வெகு நேரம் திரிந்தேன்... இரவு மடிந்துவிடவில்லை. அதனூடே குரல்களும் மடியவில்லை. இரவு எட்டி, எட்டி, பூமியை வளைத்து ஒண்டுகிறது, ஒளிகிறது. சந்திர ஒளி ஒரு புலம்பலைப்போல உலகின்மீது படர் கிறது. விட்டுவிட்டுக் கேட்கும் தெரு நாய்க் குரைப்பு நிசப்தமான இரவுக் குளத்தின்மீது ஏறி யப்பட்ட கற்களைப்போல் விழுந்து, ஓய்வதற்காக விரியும் சப்த அலைகளாயின. குளிரான குளிரான காற்று தென்னங் கீற்றுகளூடே மழைத்துளிகள் உதிர் வது போன்ற ஒரு ஒலியை எழுப்பியபடி தன் போக்கில் இயற்கையுடன் தொடர்பற்று இயங் கும் தோரணையில் ஒரு பழக்கத்துக்குக் கட்டுப் பட்டு ஊர்ந்து ஊர்ந்து இலைகளை அசைத்துவிட்டு தெருக்களில் திசையற்று நுழைந்து மறைகிறது. புதிய காற்று, தூரத்தில் அணுகும் பெருவெள்ளம் போல் கேட்டுக்கொண்டே இருக்கிறது. அணு யதும் வேகமிழந்து ஊர்ந்தே செல்கிறது. அடிக் கடி வெகு வெகு தூரத்தில், இரவுக்கும் அப்பால், வான எல்லையில், அமானுஷ்யமான கையொன்றால் உருவப்பட்டு மின்னல்கள் தோன்றி மறைந் தன, நிசப்தமாக.


Sunday, February 02, 2025


முதல் முகத்தின் தங்கைக்கு

பிரமிள்


துடித்து
அன்று விழுந்த பகலை மீண்டும்
மிதித்து நடப்பவளே
கொலுசு சூழாத நிசப்தத்தில் நின்
வெண்பாதச் சதைகள் மெத்திட்ட
புல்தரையைக் கவனி
உன்முன் சென்றவள் என்னை
உதறிச் சிந்திய சுவடுகள்
அழுதழுது வரளும் என்
மன வெறுமையிலே
ஏழுவண்ணப் புதிர்கள்
அவிழ எனவா நின்
ஒருதுளிப் பார்வை?
அல்ல
தோற்றழியும் என் தவிப்பை
என் உடலின் இலைநரம்புகள்
உள்ளுரப் பரிகசித்துச்
சிரிக்க என் முகம்தேடி
பார்க்க நிமிர்ந்தனையோ?
உயர்ந்து வளர்ந்த சின்னவளே
அண்ணாந்து
என் மாடியைப் பார்ப்பதேன்?
அழியத் துணிந்தும்
அழியாது தடுமாறி
எரிந்தெழுந்து
சாம்பல் புழுதியில்
உயிர் உடலாகத் திரண்டு
மீண்டும் நிலைத்த நிழல் நான்.
உன் முன்னவளின்
ஜால மருந்து தொடுத்த
பார்வைமழை நுனிகளை
எதிர்பார்த்து மறுப்பின்
குரூர நுனிகள் தைக்க
துடித்திறக்கும் எனது நாட்களை
மீண்டும் நிகழ்விக்கவா
என் வாசலில் நின்று
முகம் திரும்பினை?
கவனி-
என் மாடி உப்பரிகையல்ல
உச்சியில் ஒருகுடில்
என்னுள் கவிதையின்
காலதீதச் சழலெனினும்
நாசியில்-
உன் நாசியிலும் தான்-
நம்மிருவர் தெருவின்
எல்லையில் குடிகொண்டு
வாழ்வின் மறுப்புக்கணை பாய
இறந்து வீழ்ந்த
இதயங்களைச் சூழ்ந்து
பிழம்பு வளர்க்கும்
சுடலையின் வீச்சம்.
எனவே,
விளையாடாதே!
என் இதயத்தை வளைக்கும்
இருள் முடிச்சு
உன் புன்னகை விரல்களில்
அவிழ்ந்து
கருநிற மெத்தைகளாய்
சிதறிச் சிரிக்க
மன நடு இரவு
பூ முகம் கொள்ளுமெனில்
சொல்,
சொல்லை இதயத்தின்
சொல்லற்ற சுனைதர
பேசு.
அது இன்றி
விளையாடினாயெனில்
ஹோம குண்டங்கள் கூட
வெற்றுப் புகைமுடிச்சாய் மண்ட
வேதனை மீண்டும்
அக்னியை உரிமைகொள்ளும்.
To the Sister of the First Face
https://chat.deepseek.com/a/chat/s/ea87e945-d178-41c7-865e-09f4e21af2c0


(Translated Interpretation)

You, who tread again on the sunlight
that fell that day, quivering—
in the silence where no anklet hums,
your pale feet press into the grassy earth.
Notice it.

The traces you shook loose from me,
the one who walked ahead of you,
now weep and swell in my hollow heart—
a void where seven-colored riddles unravel
at the flicker of your glance.

Or is it my longing, withering,
that my veins mock in whispers?
Did you rise to meet my gaze,
smiling? Little sister, grown tall,
why crane your neck to stare at my terrace?

I, a shadow solidified from ash and dust,
a phoenix stumbling, burning, refusing to die—
do you return to my threshold to reignite
the days I bled, waiting for the cruel tips
of your predecessor’s enchanted rain?

Beware—
my terrace is no tower, but a hut atop a peak.
Inside me, poetry’s ancient fire smolders.
In your nostrils, too—
on the street where we dwell at the edge of life’s denial—
the pyre’s flames grow, feeding on hearts
pierced by refusal, fallen dead.

So, do not play!
The knot of darkness bending my heart
might loosen under your smile’s fingers,
scattering into black cushions, laughing,
as midnight blooms into a floral face.
Speak—
let your words rise from the wordless spring
of the heart.

If you play instead,
even funeral pyres will choke on empty smoke,
and agony will reclaim the fire.