அரசு ஆய்வாளர் நகைச்சுவை நாடகம் (The Government Inspector In Tamil )
நிக்கலாய் கோகல்
ராதுகா பதிப்பகம் மாஸ்கோ
மொழிபெயர்ப்பாளர்: நா. முகம்மது செரீபு, எம். ஏ. ஒவியர்: செர்கேய் அலீமவ் பதிப்பாசிரியர்: இவ்கேனி கனவாலவ்
Nikolai Gogol
THE GOVERNMENT INSPECTOR’ Comedy
In Tamil
© தமிழ் மொழிபெயர்ப்பு, ராதுகா பதிப்பகம், 1989
(சோவியத் நாட்டில் அச்சிடப்பட்டது
ISBN 5-05-002326-2
முகம் கோணலாக இருந்தால்- ருஷ்யப் பழமொழி
கண்ணாடியைப் பழிக்கக் கூடாது.
நிக்கலாய் கோகல்
ஆசிரியரைப் பற்றிய முன்னுரை
உலக இலக்கியங்களில் ருஷ்யப் பேரிலக்கியங் கள் தனிச் சிறப்புப் பெற்றவை. பத்தொன்ப தாம் நூற்றாண்டையும் இருபதாம் நூற்றாண் டின் தொடக்கத்தையும் சேர்ந்த அலெக்சாந்தர் பூஷ்கின், இவான் துர்கேனெவ், அந்தோன் சே கவ், லேவ் தல்ஸ்தோய், மக்சீம் கோர்க்க, அலெக்சேய் தல்ஸ்கோய் போன்ற ருஷ்யப் பேரி லக்கய ஆசான்கள் குறிப்பிடத்தக்கவர்களாவர். இந்த வரிசையில் இடம் பெறுபவர் நிக்கலாய் கோகல்.
நிக்கலாய் வசீலியெவிச் கோகல் சிறிய நிலக்கிழார் குடும்பத்தில் 1809இல் பிறந்தவர். அவரது குழந்தைப் பருவமானது பரந்த உக்ரே னிய ஸ்டெப்பிக்கு மத்தியில் இருந்த வசீலியெவ் கா என்ற பண்ணையில் கழிந்தது. அவரது தந்தை நாட்டுப்புறப் பாடல்களை அடியொற்றி நகைச் சுவை நாடகங்களை ஓய்வுநேரத்தில் எழுதி வந்தார்.
கோகல் 1821இல் “உயர் விஞ்ஞானப் பள்ளி: மில் சேர்ந்தார். மாணவனாக இருந்த போது அரசு அலுவலில் சேர வேண்டும் என்று ஆசைப் பட்டார். எனவே படிப்பு முடிந்ததும் வேலை தேடி, தலைநகரமாஇய செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் சென்றார். மிகவும் சிரமப்பட்டே பணியில்
7
அமாந்தார். ஆனால் அலுவலகச் சடங்குகள், கைக்கூலி வாங்குதல் போன்ற காரணத்தால் வெறுத்து அதை விட்டூ வெளியேறினார். பின் னர் முழு நேரமும் இலக்கியத் துறையில் ஈடுபட் அப்த
1830இல், புகழ்பெற்ற கவிஞர் வசீலி ஜூக் கோவ்ஸ்கி, கவிஞரும் விமரிசகருமான பியோத் தர் பிலெத்நியோவ், கவிஞரும் வெளிமீட்டாள ருமான அந்தோன் டெல்லிக் ஆகயோரைச் சந் இத்தார். செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் வந்த நாளிலி ருந்தே பூஷ்கனைக் காண வேண்டும் என ஏங் இக் கொண்டிருந்த கோகலுக்கு இந்த நண்பர் கள் வாயிலாக அவரைச் சந்திக்கும் வாய்ப்புக் இடைத்தது. அறிவியலையும் இலக்கியத்தையும் நேசித்த இளம் உக்ரேனியனைப் பற்றி பூஷ் கனும் ஏற்கெனவே அறிந்து வைத்திருந்தார். மே 20, 1881ஆம் தேதி மாலைப் பொழுதிலே இருபத் திரண்டு வயது நிரம்பிய கோகல் புகழ் பெற்ற பூஷ்கினைச் சந்தித்தார்.
ருஷ்யக் கவிதையின் பிதாமகன் என்று பூஷ்்னை அழைப்பது போல ருஷ்ய உரை நடையின் பிதாமகன் என்று கோகல் அழைக் கப்பட வேண்டும் என்பார்கள். கோகலுக்கு பூஷ்னுடைய நட்புப் பெரும் உதவியாக இருந் த்து.
திகான்௧ா அருகிலிருந்த பண்ணையில் மாலை நேரங்கள் என்ற கோகலின் படைப்பு இரு தொகுதிகளில் வெளிவந்தது (1831-1832). உக்ரேனிய இயற்கையின் அருமையான வருண னை, சாதாரண மக்களின் பழக்க வழக்கங்
8
கள் பற்றிய அருமையான படப்பிடிப்பு வாசகர் களை ஈர்த்தன. இது குறித்து பதுப்பகத்தாருக்கு எழுதிய கடிதத்தில் பூஷ்சன் இவ்வாறு குறிப் பிட்டார்: “இப்போதுதான் திகான்கா ௮ரு கலிருந்த பண்ணையில் மாலை நேரங்களைப் படித்து முடித்தேன். மிகவும் பிரமித்துப் போ னேன். . இது உண்மையான மகழ்ச்சி. என்ன மாதிரியான கவிதை, என்ன உணர்ச்சி!”'
மேலும் கோகலுடைய கதைகளில் தராஸ் புல்பாவை வால்டர் ஸ்காட்டின் நாவல்களோடு பூஷ்கின் ஒப்பிட்டார். அதுதான் மேலை நாட்டு வாசகர்களுக்குச் சென்ற கோகலின் முதலாவது கதையாகும். இறந்த ஆன்மாக்கள் என்ற கோகலுடைய நவீனம் சிறந்த படைப்பாகக் கருதப்பட்டது. இது குறித்து எழுதும் போது “ருஷ்யா முழுமைக்கும் அதுிர்ச்சியூட்டியது”' என்று அலெக்சாந்தர் ஹெர்ஸன் குறிப்பிட்டார். நிலம் படைத்த மேற் குடியினரை-— பிறர் அறியாது திரைமறைவில் அட்டூழியங்கள் புரிந்த இவர்களை -— சிறு நிலப்பிரபுக்களின் ருஷ்யாவை இந்த நவீனம் மூலம் எல்லார் முன்னிலும் கொண்டு வந்து நிறுத்தினார் கோகல்.
தனது அன்புக்குப் பாத்திரமான பூஷ்சின் 1881இல் காலமான போது கோகல் பாரீசில் இருந்தார். ““என் வாழ்க்கையின் எல்லா இன் பங்களும் உயர்ந்த மூழ்ச்சிகளும் என்னை விட் டூப் பிரிந்து போய்விட்டன””' என்று பிலெத் நியோவுக்கு எழுதிய கடிதத்தில் கோகல் குறிப் பட்டார்:
அரசு ஆய்வாளர் என்ற இந்த நாடகத்தை
9
கோகல் நான்கு மாதங்களில் எழுதி முடித்தா லும் இதற்கு முழுமையான வடிவம் கொடுக்க அவருக்கு எட்டாண்டுகள் பிடித்தன. இந்த நா டகம் முதன் முதலாக 1836இல் பீட்டர்ஸ்பர்க் தல் மேடையேறியது ஒரு முக்கிய சமூக நிகழ்ச்சி யாக அமைந்தது.
அன்றைய ருஷ்யாவில் அதிகாரிகளும் அலு வலர்களும் என்ன மாதிரி வாழ்ந்தார்கள் என்பதையும் அன்றைய சமூகத்தில் நிலவிய மட்டமான போக்குகள் என்ன என்பதையும் தனது மிகச் சிறந்த நகைச்சுவையின் மூலம் கோகல் எடுத்துக் காட்டினார். சுரண்டுபவர்களும் கையூட்டுப் பெறுபவர்களும் அரசு அமைப்பில் எப்படி முழுமையாக இடம் பெற்றிருந்தார்கள் என்பது அற்புதமாகச் சித்திரிக்கப்பட்டி ருக்கிறது. மேயரது நிழலில் நாட்டின் தலைமை அலு வலரான ஜுர் முதலாம் நிக்கோலஸ் சுட்டிக் காட்டப்பட்டார். ஆகவேதான் அரசு ஆய்வாளர் நாடகத்தின் அரங்கேற்றத்தைப் பார்த்த ஜார் இப்படிக் குறிப்பிட்டார்: “என்ன நாடகம்! கண் டலில் ஒவ்வொருவருக்கும் பங்கு இருக்கிறது. பெரும் பகுதி எனக்குத்தான்”'.
இந்நாடகத்தில் வரும் மேயர் எத்தகைய ஆள்? போக்கரியா, மோசக்காரனா, பேதையா, கபடதாரியா, தன்னலவாதியா? எல்லாமும் தான். அதே சமயம் குடும்பத்தை, குழந்தை களை நேசித்தான். அருமையான பாத்திரப் படைப்பு. அரசு ஆய்வாளராக வரும் கிலெஸ்தக் கோவ் முக்கியப் பாத்திரம் என்று பலர் நினைக்கக் கூடும். அது உண்மையில்லை. அவன் ஆய்வாள
10
ராவது சந்தர்ப்பபசமே. அவனை அந்த நிலைக்கு ஆளாக்கியது யார்? மேயருடைய பயந் தான். மேயருடைய அச்சுறுத்தப்பட்ட கற்பனை யே ஆய்வாளனை உண்டாக்கியது. அது போல பிற பாத்திரங்களும் மிகச் சிறந்த முறையில் சித இரிக்கப்பட்டி ருக்கின்றன.
ருஷ்ய வாசகர்களால், சோவியத் வாசகர் களால் மிகவும் நேசிக்கப்படுபவர் கோகல். அது போலவே ருஷ்ய எழுத்தாளர்களில் எவராக இருந் தாலும் கோகலின் பாதிப்பை உணராதவர் களைக் குறிப்பிட்டுச் சொல்வது சிரமமானது.
கோகலினுடைய வாழ்நாளில் சில ஐரோப்பிய நாடுகளில் அவரது படைப்புகள் அறிமுகமாயின. அவை பெரும் ஆர்வத்தையும் துடிப்புள்ள லிமரிசனத்தையும் வெளிப்படுத் தின. அரசு ஆய் வாளரும், இறந்த ஆன்மாக்களும் உலகெங்க லும் பாராட்டைப் பெற்றன. காலப்போக்கில் அவ ரது எழுத்துகளில் உள்ள மனித நேயம் வெளிப் படலாயிற்று.
கவிஞர், கதாசிரியர், நாடக ஆசிரியர் என்ப கோடு கோகல் ஒரு மொழிபெயர்ப்பாளருங் கூட. அவருக்குப் பல மொழிகள் தெதரிந்திருந் தன. பிரெஞ்சிலும் இத்தாலியனிலும் மிகுந்த பாண்டித்தியம் பெற்றிருந்தார். புகழ்பெற்ற ஐரோப்பிய எழுத்தாளர்களின் நாடகங்களை மாஸ்கோ “மாலி தியேட்டரு' க்காக மொழி பெயர்த்தார். சேக்ஷ்பியருடைய நாடகத்தையும் மொழிபெயர் தூ திருக்கிறார்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் நாற்பது கள் முதல் அறுபதுகள் வரையுள்ள ருஷ்ய
11
எழுத்தாளர்களைப் பற்றிக் குறிப்பிட்ட தஸ்த யேவ்ஸ்கி, அவர்கள் எல்லாரும் கோகலின் மேல் கோட்டிலிருந்து வெளிவந்தர்கள் என்றார். இதை விட கோகலுக்குப் பெருமை சேர்ப்பது என்ன இருக்கிறது.
நா.முகம்மது செரீபு
நாடகப் பாத்திரங்கள்
அந்தோன் அந்தோனவிச் ஸ்குவஸ்னிக்- திமுகனோவ்ஸ்கி, மேயர் .
ஆன்னா அந்திரேயெவ்னா, அவரது மனைவி
மரியா அந்தோனவ்னா, அவரது மகள் லுக்கா லுக்கிச் ஹ்லோபவ், பள்ளி ஆய்வா ளார்
அவரது மனைவி அம்மோஸ்.ஃபியோதரவிச் லியாப்கின்- தியாப்இன், நீதிபதி
அர்கேமி ஃபிலிப்பொவிச் ஸெம்லியனீக் கா, கருமசாலை அதிகாரி
இவான் குஸ்மிச் ஷ்பேதன், அஞ்சலக அதி காரி
பியோத்தர் இவானவிச்
தோப்சின்ஸ்த உள்ளூர் பியோத்தர் இவானவிச் | நிலக்கிழார்கள் போப்சின்ஸ்தி
இவான் அலெலக்சாந்தரவிச் கிலெஸ்தக் கோவ், பீட்டர்ஸ்பர்க்கைச் சேர்ந்த அரசு அதி காரி
ஒசிப், அவருடைய வேலைக்காரன்
கிறிஸ் தியான் இவானவிச் ஹிப்னர், மா
வட்ட மருத்துவர்
ஃபியோதர் அந்திரே யெலிச் லுல்யுக்கோவ் இவான் லாஸரெரவிச் ஓய்வுபெற்ற அரசு
ரஸ்தகோவ்ஸ்கி ஊழியர்கள், ஸ்கெப்பான் இவானவிச்| மரியாதைக்குரிய கரோப்கின் குடிமக்கள் ஸ்தெப்பான் இலியீச் உகவேர்தவ், போ லீஸ் அதிகாரி
சுவிஸ்துனோவ்
பூகவித்ஸின் போலீஸ்காரர்கள் தெர்ஜிமோர்தா
அப்தூலின், கடைக்காரன் ஃபெவ்ரோன்யா பெத்ரோவ்னா பஷ் லியோப்தினா, கொல்லனின் மனைவி சார்ஜென்டின் விதவை
மீஷ்கா, மேயரின் வேலைக்காரன்
விடுதியின் பணியாள்
விருந்தினர்கள், கடைக்காரர்கள், நகரமக்கள், மனு தாரர்கள்
பாத்திரங்களும் உடைகளும்
நடிகர்களுக்கான குறிப்புகள்
மேயர், நீண்டநாள் பணியில் இருப்பவர், அவருக்கே உரித்தான புத்திகூர்மை உடையவர். இவர் லஞ்சம் பெறுபவர் என்றாலும், கெளரவ மாக நடந்து கொள்பவர்; தோற்றத்தில் ஒரளவு கண்டிப்பாக இருப்பவர், தத்துவ விசாரணையில் ஈடூபாட கொள்வதாகக் காட்டிக் கொள்பவர்; உரக்கவும் பேசமாட்டார் மெதுவாகவும் பேசமாட் டார், மிக அதிகமாகவும் இராது மிகக் குறை வாகவும் இராது. அவர் பேசும் ஒவ்வொரு வார்த் தையிலும் அருத்தம் இருக்கும். அடித்தளத் திலிருந்து உயர்ந்து வந்த எந்த மனிதனைப் போலவும் அவரது முகபாவனை கடுமையான தாகவும் குரூரமானதாகவும் இருக்கும். பயத் திலிருந்து மகழ்ச்சிக்கும் அடிமைப்புத் தியிலி ருந்து அகங்காரத்திற்கும் அவர் சுலபமாக மாறிக் கொள்வார். வழக்கமாக காலர் உள்ள சட்டை கொண்ட சீருடையில்தான் செல்வார், குதிமுள் பதித்த காலணி அணிவார். ஒட்ட வெட் டிய தலைமுடியோ நரைத்துக் கொண்டிருந்தது. ஆன்னா அந்திரேயெவ்னா, அவரது மனைவி, ஆண்களைக் கவரும் வகையில் நடப் பவள், நடுத்தர வயதின் ஆரம்பத்தில் இருந் தாள். காதல் நவீனங்களில் கருத்தைச் செலுத் துபவள், பணிப் பெண்கள் அறையிலும் உணவ கங்கள் நடத்துவதிலும் காலத்தைக் கழிப்பவள்.
15
மனச் சார்பும் தற்பெருமையும் கூடிய அலாதி யான ஆர்வங் கொண்டவள். அவர் தனக்குத் தக்க பதில் தர முடியாது என்பதற்காக அவ்வப் பொழுது கணவனையும் ஆட்டி வைப்பவள். ஆனால் இந்த ஆர்வத்தை அற்ப காரியங்களுக் குத்தான் பயன்படுத்துவாள். அதில் வசவும் இண்டலும் இருக்கும். இந்த நாடகத்தின் போது அவள் நான்கு முறை உடைமாற்றுகிறாள்.
தலெஸ்தக்கோவ், சுமார் இருபத்துமூன்று வயது இளைஞர், மெலிந்த உடல், மூளை கொஞ்சம் பலவீனமானது. அவர்கள் சொல்வது போல மேல்மாடி காலி. தங்களுடைய அலுவல கங்களில் மூளை காலியுள்ளவர்களாகக் கருதப் படுவோரில் ஒருவர். முன்யோசனையின்றி பேசு பவர், நடப்பவர். ஒரு குறிப்பிட்ட கருத்தில் தன் கவனத்தைச் செலுத்த முற்றிலும் இயலாதவர். அவரது பேச்சு ஆட்டங்கண்டது. வார்த்தைகள் முற்றிலும் எதிர்பாராமல் வாயினின்றும் தெ றிக்கும். எவ்வளவுக்குக் கபடமற்றவராகவும் சூதுவாதற்றவராகவும் நடிகர் காட்டிக் கொள் இறாரோ அவ்வளவுக்கு மேடையில் நடப்பு எடு படும். நாகரிகமாக உடையணிந்தவர்.
ஒசிப், அவரது வேலையாள், வயதில் மூத்த எல்லா வேலையாட்களையும் போல இருப்பான். கண்டிப்பான குரலில் பேசுபவன்; பார்வை பெரும்பாலும் க&ழ்நோக்கியே இருக்கும்; தன் எசமானரைப் பற்றி தனக்குத்தானே கண்டித்து முணுமுணுத்துக் கொண்டிருப்பான்; அது நன் னெறிப்படுத்த முயல்வது போல இருக்கும்.
16
அவனது குரல் அநேகமாக எப்போதுமே ஒரே சீரானது. ஆனால் எசமானரிடம் பேசும் போது காரசாரமாக இருக்கும். தன் எசமானரை விட புத்திகூர்மை உள்ளவன், ஆகவே அவரை விட விரைந்து புரிந்துகொள்ளக் கூடியவன். ஆனால் அதிகம் பேச விரும்புவதில்லை, அவன் அமை தியான .மோசக்காரன். சாம்பல் நிறம் அல்லது ஆழ்ந்த நீல நிற கோட் அணிவான். போப்சின்ஸ்கியும் தோப்சின்ஸ்கியும், இருவருமே சிறிய குட்டையான உருவத்தினர், அறியும் ஆவல் கொண்டவர்கள்; கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருப்பார்கள்; இருவருக்குமே சிறிய தொந்தி உண்டு; இருவரும் சரளமாகப் பேசக் கூடியவர்கள்; அதிகமான அங்க அசைவுகளு டன் தங்களை அலட்டிக் கொள்வார்கள். தோப் சின்ஸ்க, போப்சின்ஸ்தயைக் காட்டிலும் சற்று உயரமானவரும் கண்டிப்பானவரும் ஆவார், ஆனால் போப்சின்ஸ்டு தோப்சின்ஸ்கியை விட கட்டுப்பாடற்றவர், உயிர்த்துடிப்புடன் இருப்பவர்.
லியாப்கின்- தியாப்ஜன், நீதிபதி, ஐந்து அல்லது ஆறு புத்தகங்கள் படித்ததால் ஓரளவு சுயமாகச் சிந்திப்பவர். ஊகமாகக் கொள்வதில் ஆர்வமுள்ளவர், தான் சொல்லும் ஒவ்வொரு விஷயத்திற்கும் சிறப்பான அழுத்தம் கொடுப் பவர். இந்தப் பாத்திரத் தில் நடிப்பவர் கட்டாயம் எப்போதுமே தனது முகத்தில் ஒரு கம்பீரமான பாவனையைத் தக்க வைத்துக்கொள்ள வேண் டும். கட்டைக் குரலில் நீட்டியும் நெளித்தும், பழங்காலத்து கடிகாரம் மணியடிக்கும் முன்பு
17
இறீச் ஒலி எழுப்புவது போல எழுப்பிப் பேசுவார்.
ஸெம்லியனீக்கா, தருமசாலை அதிகாரி, அளவுக்கு மீறி கொழுத்த, மந்தமான, அசிங்க மான மனிதர். ஆனால் நயவஞ்சகர்; அளவுக்கு மிஞ்சிய பணிவும் பிறரைத் திருப்திப்படுத்தும் சுபாவமும் கொண்டவர்.
அஞ்சலக அதிகாரி, மிகவும் எளிமை யான இதயங்கொண்ட மனிதர்.
மற்ற பாத்திரங்களுக்கு சிறப்பான விளக்கம் தேவையில்லை. அவர்களது மாதிரிகளை அதே கமாக எங்கும் காண முடியும்.
நடிகர்கள் கடைசிக் காட்சிக்கு குறிப்பிட்ட கவ னம் செலுத்த வேண்டும். பேசக்கூடிய கடைசி வார்த்தை ஒவ்வொருவரிடத்திலும் உடனடியாக மின்சாரம் பாய்ந்தது போன்ற விளைவை ஏற் படுத்த வேண்டும். குழுவினர் முழுமையும் ஒரு நொடிக்குள்ளாகத் தங்களது தோரணைகளை மாற்றிக்கொள்ள வேண்டும். வியப்புக் குரல்கள் எல்லாப் பெண்களாலும், ஒரே குரல் போல, ஏக காலத்தில் வெளியிடப்பட வேண்டும். இந்தக் குறிப்புகள் பின்பற்றப்படவில்லை என்றால் எந்த உளப்பதிவுமே இல்லாமற் போய்விடும்.
முதலாம் அங்கம்
மேயரின் இல்லத்தில் ஓர் அறை.
் காட்சி 1
மேயர், தருமசாலை அதிகாரி, பள்ளி ஆய்
வாளர், நீதிபதி, போலீஸ் அதிகாரி, மாவட்ட மருத்துவர், இரு போலீஸ்காரர்கள்.
மேயர்: ஓயன்மீர், மிகவும் விரும்பத்தகாத செய்தி ஒன்றைத் தெரிவிக்க உங்களை நான் இங்கே அமழைத்திருக்கறேன்: அரசு ஆய்வா ளார் ஒருவர் நம்மிடம் வரப்போகிறார்.
நீதிபதி: அரசு ஆய்வாளரா?
கருமசாலை அதிகாரி: அரசு ஆய்வாள ரா?
மேயர்: பீட்டர்ஸ்பர்க் நகரிலிருந்து அரசு ஆய் வாளர் ஒருவர். மாறுவேடத்தில், இரகசிய உத்தரவுகளுடன் வரப்போகிறார்.
நீதிபதி: அப்படியா!
தருமசாலை அதிகாரி: என்ன வினையாக இருக்கறது!
பள்ளி ஆய்வாளர்: அட ஆண்டவனே! இரக சிய உத்தரவுகளுடனா வருகிறார்?
மேயர்: இது சம்பந்தமாக எனக்கு முன்பே ஒருவித உள்ளுணர்ச்சி தோன்றியது. நேற்றிரவு அசாத்தியமான இரு எலிகளை
19 2+
நான் கனவில் கண்டேன். அந்த மாதிரி இதற்கு முன்பு நான் பார்த்ததே இல்லை: கருப்பு ராட்சச முரட்டு எலிகள்! அவை என் பக்கமாக நெருங்கி நெருங்கி நகர்ந்தன. என் னை முகர்ந்தன... பிறகு போய்விட்டன. அப் புறம், இன்று காலையிலே கண் விழித் தால், இந்தக் கடிதம் அந்திரேய் இவா னலிச் சிமிக்கலிடமிருந்து வந்திருக்கிறது. அர்தேமி ஃபிலிப்பொவிச், உங்களுக்குத்தான் அவரைத் தெரியுமே. என்ன எழுதியிருக் கிறார் கேளுங்கள்: ““என் அன்பு நண்பரே, மைத்துனரே, தருமப் பிரபுவே... (மேலே படிக்காமல் வாய்க்குள் முணுமுணுக்கறார், வேகமாகக் கண்களால் சல வரிகளைத் தள்ளிப் போகறார்) உங்களை எச்சரிக்க...” ஆ! இதோ அந்த விஷயம்: “ “மற்ற விஷயங் களுக்கு இடையில் அவசரமாக உங்களை எச்சரிக்கறேன். இரகசிய உத்தரவுகளுடன் அரசு ஆய்வாளர் ஒருவா், மண்டலம் முழுவ தையும் மேற்பார்வையிட, குறிப்பாக நமது மாவட்டத்தைப் பார்வையிட இங்கே வந்தி ருக்கிறார் (குறிப்பிடும்படியாகத் தன் விரலை உயர்த்துகிறார்). நம்பகமான வட்டாரங்களிலி ருந்து இந்தத் தகவல் எனக்குக் கிடைத்தி ருக்கிறது. எனக்குத் தெரிந்தவரை அவர் சொந்தக்காரியமாக வருவதாகக் காட்டிக் கொள்கிறார். எனக்குத் தெரிந்த விஷயம், நீங் களும் எல்லாரையும் போல சின்னப் பா வங்களைச் செய்திருக்கறீர்கள் என்பதுதான்.
நீங்கள் ஒரு புத்திசாலி மனிதராக இருப்ப
20
தால், வாய்ப்புகளை நழுவவிட மாட்டீர்கள் என்று நினைக்கறேன்...” (சற்றே நிறுத்து கறார்), நல்லது. இங்கே இருக்கும் நாமெல் லாரும் நண்பர்கள்... “முன்னெச்சரிக்கை நட வடிக்கை எடுக்கும்படி உங்களுக்கு ஆலோ சனை கூறுகிறேன். அவர் எந்த நேரத்தி லும் வந்துவிடக் கூடும். ஒருவேளை, அவர் இப்போதே அங்கு வந்திருப்பாரானால், மாறுவேடத்தில் எங்காவது தங்கயிருந்தால்... நேற்று நான்...” அப்புறம் குடும்ப விஷயம் எழுதியிருக்கிறார்: “£...என் தங்கை ஆன் னா தன் கணவருடன் எங்களைப் பார்க்க வந் இருக்கிறாள். இவான் மிகவும் குண்டாகவிட் டான். இன்னும் பிடில் வாசித்துக் கொண்டு தான் இருக்கிறான்...” இப்படியே போய்க் கொண்டே இருக்கன்றன. சரி, நிலைமை எப்படிப்பட்டது என்பது இப்போது உங்களுக்கு விளங்கயிருக்கும்!
நீதிபதி: ஆமாம், இது முற்றிலும் அசாதா ரணமான நிலைமை. மிகமிக அசாதாரண மானது. இதற்கெல்லாம் பின்னால் ஏதோ இருக்கறது.
பள்ளி ஆய்வாளர்: ஆனால் அந்தோன் அந் தோனவிச்! இதெல்லாம் என்ன? இதற் கெல்லாம் என்ன அருத்தம்? அரசு ஆய் வாளர் நம்மிடம் என் அனுப்பப்படூகிறார்?
மேயர்: எனா? இதெல்லாம் விதியின் விளையாட்டு என்று நான் நினைக்கறேன்! (பெருமூச்சு விடூறார்.) இதற்கு முன்பு, ஆண்டவனுக்கு நன்றி, அவர்கள் வேறு
22
ஊர்களுக்குத்தான் சென்றார்கள்; இப்போது நமது முறை வந்திருக்கிறது.
நீதிபதி: அந்தோன் அந்தோனவிச்! நான் நினைக்கறேன், இதற்கெல்லாம் நுட்பமான ஓர் அரசியல் காரணம் இருக்கிறது. இதற்கு என்ன அருத்தமென்றால்: ரஷ்யா... ஆமாம், ரஷ்யா போரில் இறங்கப் போடறது. அதனால்தான், எதாவது துரோகிகள் இருக் கறார்களா என்று பார்க்க, அமைச்சரகம் அ தி காரியை அனுப்புகிறது.
மேயர்: எதைப் பற்றிப் பேசுகிறீர்கள் நீங்கள் புத்திசாலியாகக் கருதப்படிகறீர்கள்! நமது நகரத்தில் என்ன துரோகம் இருக்க முடி யும்? மூன்று ஆண்டு சவாரி செய்தால் கூட எந்த அந்நிய நாட்டையும் அடைய முடியா தே.
நீதிபதி: இருங்கள், நான் சொல்வதைக் கே ளுங்கள்... நீங்கள்... வந்து... இல்லை, அது சரிமில்லை... மேலதிகாரிகள் மிகவும் புத்தி சாலிகள்: அவர்கள் அதிகத் தொலைவில் இருக்கலாம், ஆனால் எல்லாவற்றையும் அறிவார்கள்.
மேயர்: அறிவார்களோ, அறியமாட்டார்களோ, ஐயன்மீர், ஆனால் நான் உங்களை எச்சரித் திருக்கறேன். என்னைப் பொருத்த வரை நான் சில உத்தரவுகளை இட்டிருக்கறேன். நீங்களும் அப்படியே செய்யுங்கள். குறிப்பாக நீங்கள், அர்தேமி ஃபிலிப்பொவிச்! அந்த அதிகாரி வந்தவுடன், சந்தேகமில்லாமல் நீங் கள் பொறுப்பிலுள்ள தருமசாலைகளைத்
23
தான் பார்வையிடப் போகிறார். ஆகவே, எல் லாம் ஒழுங்காக இருக்கிறதா என்று பார்த் துக்கொள்ளுங்கள்: அந்த இரவுக் குல்லாய் கள் சுத்தமாக இருக்கட்டும், நோயாளிகள் சுத்தமாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். அவர்கள் வழக்கமாகக் கொல் லர்களைப் போலத் தோற்றமளிக்கக் கூடாது.
தருமசாலை அதிகாரி: சரி, அது ஒன்றும் பிரச்சினை இல்லை. சுத்தமான இரவுக் குல்லாய்களைச் சுலபமாகக் கொடுத்துவிட முடியும்.
மேயர்: அதைச் செய்யுங்கள்! இன்னொரு விஷயம்: ஒவ்வொரு படுக்கையின் மீதும் சில குறிப்புகள் எழுத வேண்டும், லத்தீன் அல் லது அந்த மாதிரி எதாவடுதாரு மொழி மில். இறிஸ் தியன் இவானவிச், அது உங்கள் பிரிவு. நோயின் பெயர், நோய்யுற்ற தேது, திழமை... அப்புறம் நோயாளிகள் அந்த நாற்றம் பிடித்த புகையிலையைப் புகைக்கா மல் தடுத்து லிடுங்கள். கதவைத் திறந்து உள்ளே நுழைந்தால் மூச்சு முட்டூறது. சிலரை வெளியில் அடித்துத் துரத்திவிடுங் கள்: நெரிசல் அதிகம். நமது மேற்பார்வை யையோ மருத்துவரையோ தகுதியற்றது என அந்த ஆய்வாளர் நினைக்கக் கூடும்.
கருமசாலை அதிகாரி: இல்லையில்லை. டாக்டர் ஹிப்னரும் நானும் ஒரு வழிமுறை யைக் கண்டு பிடித்திருக்கறோம்: நாங்கள் லிலைமதிப்புள்ள மருந்துகளைப் பயன்
படுத்துவதே இல்லை-இயற்கையிடமே விட்டு
24
விடுகிறோம். சாதாரண மனிதன் ஓர் எளிய பிராணி: சாகிற நிலை வந்தால் அவன் செத் தே போதிறான்; பிழைக்க வேண்டியிருந்தால் பிழைத்துக் கொள்கிறான். மேலும் டாக்டர் ஹிப்னரால் கூட அவர்களுடன் பேச முடி யாது: அவருக்கு ருஷ்ய மொழி ஒரு வார்த் தையும் தெரியாதே.
மாவட்ட மருத்துவர் “ஈஈஈஹ்' என்பது போல
ஓர் ஒலியை எழுப்புகிறார்.
மேயர்: அப்புறம், உங்கள் விஷயம், அம்மோஸ் ஃபியோதரவிச்! பொது அலுவலகங்களின் மீது கவனம் செலுத்துமாறு உங்களுக்கு ஆலோசனை கூறுகிறேன். இரவுக் காவலர் கள் பார்வையாளர் அறையில் ஒரு வாத்துப் பண்ணையே நடத்துகிறார்கள். வருவோர் போவோர் கால்களுக்கடியில் வாத்துக் குஞ்சு கள் சிக்கி நசுங்குகன்றன. வளர்ப்பு மிருகங் களை நான் ஆதரிப்பவன்தான். காவல்காரன் அதைப் பின்பற்றலாமே! ஆனால் இந்த மா திரி இடம் அதற்கு லாயக்கில்லை... முன் பே இதை உங்களிடம் சொல்லலாம் என்று நினைத்தேன்; எப்படியோ எப்போதுமே மறந்து போய்லிடுதறது.
நீதிபதி: நான் அவற்றையெல்லாம் என் சமையல் கட்டுக்குக் கொண்டுபோகச் செய்து விடுகிறேன். இன்று இரவு விருந்துக்கு வரு இறீர்களா, அந்தோன் அந்தோனவிச்?
மேயர்: அதைத் தவிர, உங்கள் அறையில்
25
ஏதோ உதவாத பொருள்கள் காய்ந்துக் கொண்டிருப்பதை நான் விரும்பவில்லை. கோப்பு அலமாரிக்கு மேலாகத் தொங்கும் அந்தச் சவுக்கு--அது சரியில்லை. உங்களுக்கு வேட்டையில் விருப்பம் அதிகம் என்பது எனக் குத் தெரியும், ஆனால் அந்த அதிகாரி வந்து போதிறவரை, அவர் கண்ணில் படாமல் அந் குச் சவுக்கை மறைத்து வையுங்கள். அப்புறம் வேண்டுமானால், அதை மறுபடியும் அங்கே கொங்கவிடூங்கள். மேலும் உங்களது அந்த நீதித்துறை அதிகாரியைப் பற்றி... அவர் ரொம்பப் புத்திசாலி என்பது எனக்குத் தெ ரியும், ஆனால் சாராயத் தொழிற்சாலை போல நாறுதிறார். இது கூடாது. இதை முன்பே உங்களிடம் சொல்ல நினைத்தேன், எப்படியோ மறந்துவிட்டது. அவர் சொல்வது போல இந்த வாசனை அவருக்கு இயற்கை மணமாக இருந்தால், அதை மறைக்க ஏதா வது சாப்பிடலாம். அவரை வெங்காயம் சாப் பிடச் சொல்லுங்கள், அல்லது வெள்ளைப் பூண்டு அல்லது எதையாவது. அலலது, டாக டர் ஹிப்னர் அவருக்கு மருந்து கொடுத்து
உதவட்டும்.
மாவட்ட மருத்துவர் ஹிப்னர் அதே போல ஒலியை எழுப்புகிறார்.
நீதிபதி: அதை அவரால் ஒன்றும் செய்ய முடியாது என்று நினைக்கறேன். அவருடைய தாதி, அவர் குழந்தையாக இருந்தபோது,
26
அவரைக் கீழே பொட்டுலிட்டாளாம். அவர் சொல்வது போல அன்று முதல்தான் அவ ரிடம் அந்த வோட்கா வாசம்!
மேயர்: உங்களது கவனத்திற்குக் கொண்டு வர விரும்பியது மட்டுமே. என் தனிப்பட்ட ஏற்பாடுகள் பற்றியும் சிமிக்கவ் கடிதத்தில் சொன்ன அந்தச் “சின்னப் பாவங்கள்” பற்றி யும் என்னால் எதுவும் சொல்ல முடியாது. அப்படிச் சொல்வது விநோதமாக இருக்கும்: பாவங்களே இல்லாத மனிதனே இல்லை. வால்டேரைப் * பின்பற்றுவோர் என்னதான் சொன்னாலும், கடவுளின் வழி என்னவோ அப்படித்தான் அமைந்திருக்கிறது.
நீதிபதி: “சின்னப் பாவங்கள்” என்றால் நீங் கள் என்னவென்று நினைக்கிறீர்கள், அந் கோன் அந்தோனவிச்? பாவங்களுக்கடையே வித்தியாசம் உண்டு. நான் லஞ்சம் வாங்கு கிறேன் என்பதை ஒப்புக் கொள்கிறேன் -- ஆனால், எந்த மாதிரியான லஞ்சம்? வேட் டை நாய்க்குட்டிகள். அது முற்றிலும் வே றான விஷயம்.
மேயர்: இல்லையில்லை. வேட்டை நாய்க் குட்டிகள் அல்லது வேறு எதுவோ அவை லஞ்சம்தான், இல்லையா?
நீதிபதி: என்ன, அந்தோன் அந்தோனவிச்!
* வால்டேர் -- பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரெஞ்சு தத்துவஞானியும் எழுத்தாளரும் ஆவார்; தனது சுதந்திரமான சிந்தனைகளுக்காக அவர் புகழ்பெற்றவர்.
27
ஐந்நூறு ரூபிள் மென்மயிர் கோட்டோ, தன் மனைவிக்குக் கம்பளிச் சால்வையோ எற்றுக் கொள்வது பற்றி என்ன?
மேயர்: ரொம்ப நல்லது, நீங்கள் வேட்டை நாய்க்குட்டிகளை மட்டும் பெற்றுக் கொள்பவ ராகவே இருங்கள். ஆனால் நீங்கள் ஆண்ட வன் மீது நம்பிக்கை இல்லாதவர். நீங்கள் சர்ச்சுக்குப் போவதே இல்லை. நானோ எந்த வகையிலும் ஆழமான கடவுள் நம்பிக்கை கொண்டவன், சர்ச்சுக்கு ஒவ்வொரு ஞாயி றும் செல்கிறேன். ஆனால் நீங்கள்... உங்க ளைப் பற்றி எனக்கு எல்லாம் தெரியும்: நீங் கள் இந்த உலகப் படைப்பைப் பற்றிப் பேச ஆரம்பித்தால் மயிர்க்கால்களெல்லாம் குத் திட்டு நிற்கின்றன.
நீதிபதி: ஆனால் நான் சுயமாகவே அது பற்றிச் சிந்திக்கிறேன்.
மேயர்: சில சமயங்களில் இப்படியெல்லாம் அதிகப்படியாகச் சிந்திப்பதைக் காட்டிலும், சிந்தனையே இல்லாமலிருப்பது மேலானது. எப்படியானாலும் மாவட்ட வழக்குமன்றம் பற்றி சும்மா குறிப்பிட்டேன். யாரும் அதற் குள் நுழைய விரும்புவதே இல்லை என்பது நிச்சயம்: அது பொறாமைப்படத்தக்க இடம், தெய்வீகத் தன்மையால் பாதுகாக்கப்படுதறது. இனி உங்கள் விஷயம், லுக்கா லுக்கச், அந் தப் பள்ளி ஆசிரியர்கள் விஷயமாக நீங்கள் ஏதாவது செய்தாக வேண்டும். அவர்கள் படித்தவர்கள் தாம், பல கல்லூரிகளுக்குப் போ
னவர்கள் தாம். ஆனால், அவர்கள் நடந்து
28
கொள்வது மிகமிக விநோதமாக இருக்கிறது. இப்படிப் படித்தவர்களிடமிருந்து இதைத் தானே எதிர்பார்க்க முடியும். உதாரணமாக, அவர்களில் ஒருவர், அந்த விரிந்த மூஞ்சிக் காரர்... அவர் பெயர் நினைவில்லை, தம் மேசைக்குப் பின்னாலிருந்து லிகார முகமில் லாமல் அவரால் எழுந்திருக்க முடியாது, அப் படித்தான் (முகத்தைக் கோரமாக வைத்துக் காட்டுகறார்), அப்புறம் “டை'க்குப் பின்னாலி ருந்து தன் தாடியை இழுத்து இழுத்து விடுக றார். தம் மாணவர்களுக்கு முன்னால் முகத் தை இப்படிக் காட்டினால் நமக்குப் பிரச்சி னை இல்லை. ஒருவேளை அது தேவையா கக்கூட இருக்கலாம்; இந்த மாதிரி விஷயங் களை நான் எடை போடக் கூடியவனன்று. ஆனால் சிறிது கற்பனை செய்து பாருங் கள்: வருகிற ஒரு பார்வையாளர் முன்னால் இப்படிச் செய்தால், இதை அரசு ஆய்வாளர் தன்னையே அவமதித்ததாக எடுத்துக்கொள் ளக் கூடும். அதிலிருந்து என்ன வரும் என் பது சாத்தானுக்குத்தான் தெரியும்.
பள்ளி ஆய்வாளர்: சரி. நியாயமாக இப் போது அவரை நான் என்ன செய்வது? பல தடவை இதைப் பற்றி அவரிடம் சொல்லிவிட் டேன். என், அன்றைக்கு, மாவட்ட பிரபுக்கள் தலைவர் வகுப்பறைக்கு வந்திருந்த போது, அப்படித்தான் முகத்தை வைத்துக் கொண் டார். அவ்வளவு கடுகடுப்பான முகத்தை நான் அதற்கு முன் பார்த்ததே இல்லை. மனத்தில் பொங்கும் கருணையால் அப்படிச்
29
செய்வதாக நான் நினைக்கறேன். எனக்குக் கண்டனம் உண்டு: சுதந்திரச் சிந்தனைகள் மாணவர்கள் மண்டைகளில் என் நிரப்பப் படுன்றன.
மேயர்: அப்புறம் அந்த வரலாற்று ஆசிரியர் விவகாரம். அவருக்குத் தம் பாட விஷயம் தலைகீழாகத் தெரியும் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை, ஆனால் அவர் பாடம் நடத் தத் துவங்கினால் தன்னையே மறந்து எங்கே யோ போய்லிடூதிறார். ஒரு தடவை அவர் பாடம் நடத்தும் போது கேட்டேன்: அவர் அஸிரியர் களைப் பற்றியும் பாபிலோனியர்களைப் பற் றியும் சொல்வதெல்லாம் நன்றாகவே இருந் தது. ஆனால் மகா அலெக்சாந்தர் பற்றி ஆரம் பித்த அந்த விநாடியே அவருக்கு என்ன நேர்ந்தது என்பதை என்னால் சொல்ல முடி யாது. ஆண்டவனே! நெருப்பு பரவுவதாக எனக்குத் தோன்றியது. திடீரென மேசையின் பின்னாலிருந்து பாய்ந்து வந்து ஒரு நாற்கா லியை எடுத்து ஒங்கத் தரையில் அடித்தார். சரி, மகா அலெக்சாந்தர் என்னவோ பெரிய வீரன் தான். ஆனால் எதற்காக நாற்காலி களை உடைக்க வேண்டும்? இது கருவூலத் இற்கு நட்டந்தான்.
பள்ளி ஆய்வாளர்: ஆமாம், அவர் உற்சாக மான மனிதர்தான். முன்பே பலமுறை இதைப் பற்றி அவரிடம் சொல்லிவிட்டேன்... ஆனால், என்ன சொல்கிறார் தெரியுமா? “நீங்கள் சொல்வதைச் சொல்லிக் கொண்டு போங்கள், நான் விஞ்ஞானத்திற்காக என்
30
உயிரையும் கொடுக்கச் சித்தமாக இருக் தறேன்.”
மேயர்: அது விவரித்துச் சொல்ல முடியாத விதியின் சட்டம் எனத் தோன்றுஇறது: புத்தி சாலி ஒன்று குடிகாரனாக இருக்கிறான், அல் லது இப்படிக் கோரமாக முகம் கொண்டவ னாக இருக்கிறான்.
பள்ளி ஆய்வாளர்: கல்வித்துறையில் பணி புரிபவர்களைக் கடவுள் காப்பாற்றட்டும்! எல் லாவற்றையும் பற்றி பயப்பட வேண்டும்: எல் லாரும் தொந்தரவு செய்கிறார்கள், ஒவ்வொரு வனும் தன்னைக் கற்றவனாகக காட்டிக் கொள்ள முயல்கிறான்.
மேயர்: இந்தக் குழப்பமான மாறுவேடதாரி விவகாரம் இல்லாவிட்டால், இதெல்லாம் ஒன் றும் பெரிய விஷயமில்லைதான்! எந்த நேரத் திலும் அந்த மனிதர் இங்கே வரக் கூடும். ் ஆ! என் அன்புக்குரியவர்களே! இங்கே யார் நீதிபதியாக இருப்பது” என்பார். ““லியாப் தன்-தியாப்உன்.”” “உடனே, அழைத்து வா ருங்கள் லியாப்தின்- தியாப்கனை. யார் இங்கே தருமசாலை அதிகாரி” ““ஸெம்லியனீக்கா.”” “அப்படியா? அழைத்து வாருங்கள் ஸெம் லியனீக்காவை!”” இது தான் மோசமான விஷயம்!
31
காட்சி 2
அஞ்சலக அதிகாரி வருகிறார்.
அஞ்சலக அதிகாரி: கனவான்களே! எந்த அரசு அதிகாரி வருகிறார்?
மேயர்: என்ன, உங்களுக்குத் தெரியாதா?
அஞ்சலக அதிகாரி: பியோத்தர் இவானவிச் போப்சின்ஸ்கியிடமிருந்து கொஞ்சம் கேள்விப் பட்டேன். அஞ்சல் நிலையத்தில்.
மேயர்: அப்படியா, நீங்கள் என்ன நினைக் இறீர்கள் ?
அஞ்சலக அதிகாரி: நாம் துருக்கியுடன் போர் செய்யப் போகிறோம் என்று நினைக் தறேன்.
நீதிபதி: ரொம்பச் சரி! நான் சொல்லவில் லையா?
மேயர்: உங்கள் இருவரது ஊகமும் சரியாக இல்லை.
அஞ்சலக அதிகாரி: இல்லை. இது வெளிப் படையான உண்மை. குருக்கயுடன் போர் தான்--அது எல்லாம் பிரெஞ்சுக்காரர்களு டைய சதி.
மேயர்: அட ஆண்டவனே, துருக்கியருடன் போர்! கஷ்டப்படப் போவது நாம் தான், துருக்கியர் அல்லர். எனக்குக் கடிதம் வந்திருக் இறது.
அஞ்சலக அதிகாரி: ஆ, ஒரு கடிதம்! அப் படியானால் துருக்கியருடன் போரே இருக் காது.
32
மேயர்: இப்போது நீங்கள் என்ன சொல்தறீர் கள்?
அஞ்சலக அதிகாரி: நானா? விஷயத்தைப் பளிச்சென்று சொல்லிவிடவா, நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
மேயர்: நானா? எனக்கு அவ்வளவு பயமில் லை, ஏதோ ஓரளவுக்குத்தான். கடைக்காரர் களும் வியாபாரிகளும் எனக்குக் கொஞ்சம் தொல்லை கொடுத்திருக்கிறார்கள் என்பது உண்மைதான். அவர்களை நான் தெதொந் கரவு செய்வதாகக் குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால் நான் அவர்களிடமிருந்து விசேடமாக எதாவது வாங்கக்கொண்டால் அதைக் கெட்ட எண்ணம் இல்லாமல்தான் செய்கிறேன். சொல்லப் போனால், (அஞ்சலக அதிகாரியின் கரத்தைப் பிடித்து ஓர் ஒரமாக அழைத்துச் செல்றார்) யாரோ என்னைப் பற்றிக் கோள் சொல்லியிருக்கறார்களென்று எனக்கு ஒருவித அருவெறுப்புக் கூடத் தோன்று கிறது. இல்லாவிட்டால் அவர்கள் எதற்காக அரசு ஆய்வாளரை அனுப்ப வேண்டும்? கவனி யுங்கள், இவான் குஸ்மிச், எல்லாருடைய நன் மையையும் உத்தேசித்து உங்கள் அஞ்சலகம் வழியாகச் செல்லும் ஒவ்வொரு கடிதத்தை யும் திறந்து பார்த்துவிடூங்கள், நீராவியைக் கொண்டு எப்படித் திறப்பது என்பதுதான் உங் களுக்குத் தெரியுமே. அதில் எதாவது புகார் பற்றியா அல்லது வழக்கமான கடிதம்தானா என்று பார்த்துவிடூங்கள். ஒன்றும் தீங்கு இல் லை என்றால் திறந்தது தெரியாதபடி மூடி
33 3792
விடுங்கள். உண்மையில் மூடாமல் கூட நீங் கள் கடிதத்தைக் கொடுக்க முடியும்.
அஞ்சலக அதிகாரி: ஓஒ! அந்த வழியெல் லாம் எனக்குத் தெரியும்... நீங்கள் எனக்குச் சொல்ல வேண்டியதே இல்லை. எப்படியும் அதை நான் செய்துவிடுவேன், பாதுகாப்புக் காரணத்திற்காக அன்று... உண்மையாகவே ஓர் ஆவல் காரணமாக. உலகத்தில் . என்ன தான் நடக்கிறது என்பதை அறிவதில் எனக்கு ஒரு பேய்த்தனமான வெறி. ஒன்று சொல் தறேன், கடிதங்கள் படிப்பதற்கு எவ்வளவு ஆர்வமூட்டுவதாக இருக்கும், தெரியுமா? சில சமயம் “மாஸ்கோ செசட்டி'ல் வருகிற எந்த விஷயங்களை விடவும் சுவையாக இருக் கும்!
மேயர்: சரி, அப்படியானால், பீட்டர்ஸ்பர்க்கி லிருந்து அரசு அதிகாரி வருவது பற்றி ஏதா வது படித்தீர்களா?
அஞ்சலக அதிகாரி: இல்லை, பீட்டர்ஸ்பர்க் அதிகாரி பற்றி நான் எதுவும் படிக்கவில்லை. கொஸ்ட்ரமா, சராத்தவ் அதிகாரிகளைப் பற்றித்தான் நிறையப் படித்தேன். நீங்கள் இந்த மாதிரி கடிதங்களையெல்லாம் படிப்ப தில்லை என்பது பரிதாபம்: அருமையான இலக்கியப் பகுதிகளாக இருக்கும். சமீபத் தில் ஒரு லெப்டினெண்ட் தன் நண்பனுக்கு எழுதிய கடிதத்தில் நடன விருந்து பற்றி என்ன மாதிரி மனத்தைத் தொடும்படி எழுதியிருக்கறோன் தெரியுமா? மிக அருமை
யான வருணனை: ““எனது வாழ்க்கை, என்
34
அருமை நண்பரே, அவர்கள் சொல்கிறபடி, சொர்க்க உலகத்தில் நடக்கறது: கொடிகள் படபடக்கன்றன, இசை முழங்குகிறது, எத் தனை பெண்கள்... £ ஆமாம், உண்மை யான உணர்ச்சி பொங்க எழுதியிருக்கிறான். நான் அந்தக் கடிதத்தை எனக்காகவே வைத்துக்கொண்டேன். அதை உங்களுக்குப் படித்துக் காட்டட்டுமா?
மேயர்: இப்போது அதற்கெல்லாம் நேரமில் லை. எனக்கு ஓர் உதவி செய்யுங்கள், இவான் குஸ்மிச்: ஏதாவது ஒரு கடிதத்தில் குற்றச் சாட்டோ, புகாரோ இருந்தால், அதைத் தடுத்து நிறுத்தத் தயங்க வேண்டாம். தர்மநியாயத் திற்கு அவசியமில்லை.
அஞ்சலக அதிகாரி: மிகவும் சந்தோஷத் தோடு.
நீதிபதி: எச்சரிக்கையாக இருங்கள். இல் லா விட்டால் என்றாவது தண்டிக்கப் படூவீர் கள்.
அஞ்சலக அதிகாரி: ஆண்டவன் காப்பாற்று வாராக!
மேயர்: அதெல்லாமில்லை. நாம் அதை பதி ரங்கமாகச் செய்யப் போவதில்லை. மிகமிக ரகசியமாகத் தானே.
நீதிபதி: ஆம், கெட்ட நேரம் ஆரம்பித்துவிட் டது! சொல்லப் போனால், அந்தோன் அந் கோனவிச், நான் உங்களைப் பார்க்க ஒரு பரி சுப் பொருளுடன் வந்து கொண்டிருந்தேன்: ஒரு நாய்க்குட்டி. என்னிடமுள்ள அந்த நல்ல வேட்டை நாயின் பரம்பரை அது. உங்களுக்கு
35
அதைக் கெரியும். செப்டோவிச், வர்கவின் ஸ்கியின் மீது வழக்குத் தொடர்ந்திருப்பதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். எனக்கு மிக அருமையான நேரம்: அவர்கள் இருவரு டைய எஸ்டேட்டூகளிலும் நான் இஷ்டம் போல முயல் வேட்டையாடலாம்...
மேயர்: ஆண்டவனே, இப்போது உங்களுடைய முயல்களைப் பற்றி என்னால் அக்கறை காட்ட முடியவில்லை. இந்த மாறுவேடதாரி யை என் நினைவிலிருந்து நீக்கவே முடிய வில்லை. எந்த விநாடியும் கதவு திறக்கப் படலாம்--ஐயோ, இருங்கள்...
காட்சி 3
போப்சின்ஸ்கியும் தோப்சின்ஸ்கியும் நுழை கிறார்கள், பலமாக மூச்சுவிட்டபடி.
போப்சின்ஸ்தி: ஒர் அசாதாரணமான சம்ப வம்!
சோப்சின்ஸ்: கொஞ்சங்கூட எதிர்பாராத லிஷயம்!
எல்லாரும்: என்ன? என்ன அது?
தோப்சின்ஸ் த: கொஞ்சங்கூட எதிர்பாரா குது. நாங்கள் அந்த விடுதிக்குள் காலடி வை த்தோமோ இல்லையோ...
போப் சின் ஸ் 8 (இடைமறித்து): ஆமாமா, நான் பியோத்தர் இவானவிச்சுடன் விடுதிக்குள்
36
நுழைந்தேனா...
சோப்சின்ஸ்க (இடைமறித்து): தயவு செய்து, என்னைப் பேச லிடூங்கள், பியோத்தர் இவானவிச், நடந்த கதையை நான் சொல்கி றேன்.
போப்சின்ஸ்கி: இல்லை இல்லை. அதற்குப் பதிலாக என்னைப் பேச விடுங்கள்... உங் களுக்குக் கதையை முறையாகச் சொல்லத் கெரியாது.
சோப்சின்ஸ்கி: நீங்களோ எல்லாவற்றையும் குழப்பி விடுவீர்கள், முக்கயமானவற்றை மறந்தும் விடுவீர்கள்.
போப்சின்ஸ் க: இல்லை, நிச்சயமாக மறந்து விட மாட்டேன். கதையைச் சொல்லி முடிக் கும் வரை குறுக்கடாமலிருக்க உங்களைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். பெரியோர் களே, எனக்கு ஓர் உதவி செய்யுங்கள். இந்த பியோத்தர் இவானவிச்சை கொஞ்சம் குறுக் இடாமலிருக்கும்படி சொல்லுங்கள்.
மேயர்: என்ன இகெல்லாம்? அட ஆண்ட வனே! சொல்லித் தொலையுங்கள் --இதை என்னால் சகிக்க முடியவில்லை. ஐயன்மீர், எல்லாரும் தயவுசெய்து அமருங்கள்! பியோத் தர் இவானவிச், இப்படி, இந்த நாற்காலி மில் உட்காருங்கள்! (பியோத்தர் இவானவிச்சு கள் இருவரைச் சுற்றி எல்லாரும் அமர்கறார் கள்.) நல்லது, இப்போது சொல்லுங்கள்: இதெல்லாம் என்ன?
போப்சின்ஸ்க: என்னை அறுமதியுங்கள்: எல்லாவற்றையும் ஒழுங்காகச் சொல்லிவிடு
37
தறேன். அந்தத் தஇடுக்கட வைக்கும் கடிதம் வந்த பிறகு, இங்கிருந்து ஒருவழியாகப் புறப் பட்டேனா, உங்களுக்கெல்லாம் பிரிவு சொல் லிப் புறப்பட்டேனா... பியோத்தர் இவானவிச், குறுக்கிடாதே, எனக்கு எல்லாம் நினைவிருக் இறது... கரோப்கன் வீட்டுக்குப் போனேன், ஆனால் கரோப்இன் வீட்டில் இல்லை. அத னால் ரஸ்தகோவ்ஸ்ூ வீட்டுக்குப் போனேன். ஆனால் அவரும் வெளியே போயிருந்தார். ஆகவே, இவான் குஸ்மிச் வீட்டுக்குப் போய் உங்கள் தகவலைச் சொல்லிவிட்டுப் புறப்படும் போது பியோத்தர் இவானவிச்சின் மீது மோ இக் கொண்டேன்...
ோப்சின்ஸ்தி (இடைமறித்து): அந்த மாமி சப் பலகாரம் விற்கும் கடைக்கு அருகில்.
போப்சின்ஸ் 5; அந்த மாமிசப் பலகாரம் விற்கும் கடைக்கு அருகல். பியோத்தர் இவானவிச்சைப் பார்த்தவுடனே, ““அந்தோன் அந்தோனவிச்சுக்கு வந்த அந்தக் கடிதத் தில் உள்ள விஷயம்--நம்பகமான வட்டாரத் திலிருந்து இடைத்த செய்தி பற்றி-- கேள்விப் பட்டீர்களா?'” என்று கேட்டேன். ஆனால், பியோத்தர் இவானவிச்சுக்கு இந்த விஷயம், உங்கள் வீட்டு நிர்வாகி அவ்தோத்யாவிட மிருந்து தெரிந்திருந்தது. அப்போதுதான், அவள் பொச்சசூயெவ் கடைக்கு ஏதோ வாங்க அனுப்பப்பட்டாள்.
தோப்சின்ஸ்சி (இடைமறித்து): ஒரு போத் தல் பிரெஞ்சு பிராந்தி வாங்க.
பேோப்சின்ஸ் (தோப்சின்ஸ்கயின் கைகளைப்
38
புறந் தள்ளிவிட்டு): ஒரு போத்தல் பிரெஞ்சு பிராந்தி வாங்க. பிறகு பியோத்தர் இவான விச்சும் நானும் பொச்சிசூயெவ் கடைக்குப் போனோம்... பியோத்தர் இவானவிச், தயவு செய்து, குறுக்கட்டுப் பேசாதீர்கள்... என்ன!.. பொச்சிசூயெவ் கடைக்குப் போகும் வழியில் திடீரென்று பியோத்தர் இவானவிச் சொல் இறார்: ““இந்த விடுதிக்குள் போகலாம். காலை யிலிருந்து ஒன்றும் சாப்பிடவில்லை. வயிறு உறுமுகறது””.- அது பியோத்தர் இவான லிச்சன் வயிறு, பாருங்கள் -— “அங்கே புத் தம்புது சால்மன் மீன் கிடைக்கும், கொஞ் சம் சாப்பிடலாம்?” என்கிறார். நாங்கள் விடு திக்குள் நுழைந்ததுமே அந்த இளைஞர் உடனே...
தோப்சின்ஸ்தி (இடைமறித்து): முற்றிலும் அழகாக, சாதா உடையில்தான்.
போப்சின்ஸ்தி: முற்றிலும் அழகாக, சாதா உடையில்தான்... அறையின் குறுக்காக அப் படியே ஒரு நடை; சிந்தனையை முகத்தில் கேக்க... பாருங்கள், அப்படி ஒரு பாவனை... நடைமுறை... அங்கே நிச்சயமாக எராளம் இருக்கறது... (நெற்றிக்கு முன்னால் கையை அலைக்கறார்.) திடீரென்று எனக்குத் தோன் றியது, ஒரு வெளிப்பாடு போல, உடனே நான் பியோத்தர் இவானவிச்சைப் பார்த்து, “இங்கே எதோ விநோதமாகத் தோன்று இறது, இல்லையா?” என்றேன். பியோத்தர் இவானவிச், தன் கைவிரல்களைச் சொடுக்கி லிடுதிக்காரனை அழைத்தார். உங்களுக்குத்
39
தான் அந்த விலாசைத் தெரியுமே: அவர் மனைவி மூன்று வாரங்களுக்கு முன்னால் தான் குழந்தை பெற்றாள். நல்ல சுறுசுறுப் பான பயல், அந்த விடுதியை அவனே ஒரு கா லத்தில் தன் அப்பனைப் போலவே நடத்தப் போறான். அப்புறம், பியோத்தர் இவான விச் விலாசிடம், ““அந்த இளைஞர் யார்?”' என்று கேட்டார். விலாஸ் சொல்கிறார்: ““அந்த ஆளா?..”” பாருங்கள், பியோத்தர் இவான விச், குறுக்கடாதீர்கள் , தயவு செய்து குறுக்கே பேசாதீர்கள். உங்களால் கதையை ஒழுங்காகச் சொல்ல முடியாது, உங்களுக்கு வாய் குழ அம். இது உங்களுக்கே நன்றாகத் தெரியும். நீங்கள் பேசும் போது ஓட்டைப் பல் வழியே காற்று விசிலடிக்கும்... அப்புறம், ““அந்த இளைஞர் ஓர் அதிகாரி, பீட்டர்ஸ்பர்க்கலிருந்து வருகிறார். பெயர் இவான் அலெக்சாந்தரவிச் திலெஸ்தக்கோவ்”' என்று சொல்லி விட்டு, விலாஸ் தொடர்ந்தார்: ““இவர் சராத்தவ் மண்டலத்துற்குப் போகப் போகிறார். அங்கே என்னவோ மர்மம் இருக்கிறது” என்று சொல் லிவிட்டு, ““இரண்டு வார காலமாக இவர் இங் கேதான் இருக்கிறார். போவதற்கான அடை யாளமே இல்லை. எல்லாம் கடனில் நடக்கறது. ஒரு கோபெக் கூட எடுத்துக் கொடுத்ததில் லை”” என்றார். இதையெல்லாம் கேள்விப்பட் டவுடனே எனக்கு எல்லாம் வெட்ட வெளிச்ச மாதிவிட்டது. பியோத்தர் இவானவிச்சைப் பார்த்து நான் சொன்னேன்: ““ஆகா!?் கதோப்சின்ஸ்க: இல்லை, பியோத்தர் இவா
40
னவிச், “ “ஆகா!” என்று சொன்னது நானாக் ம்.
போப்சின்ஸ்தி: சரி, நீங்கள் முதலில் சொன் னீர்கள், பிறகு நான் சொன்னேன். ““ஆகா!:” என்று நாங்கள் சொன்னோம். சராத்தவ் போக வேண்டியவர் இங்கே தங்கிக்கொண்டு என்ன செய்கிறார்? ஒ! ஆமாம், அந்த ஆளே தான் அந்த ஆய்வாளர்.
மேயர்: யார்?
போப்சின்ஸ்க: உங்களுக்கு வந்த தகவல் படி அந்த அதிகாரிதான்.
மேயர் (பயத்துடன்): அட ஆண்டவனே, இல் லை! அது அவர் இல்லை!
கோப்சின்ஸ்க: அதே ஆள்தான். அவர் எதற்கும் பணம் கொடுப்பதில்லை. இடத்தை லிட்டு நகருவதாகவும் தெரியவில்லை. அது வேறு யாராக இருக்க முடியும்? சராத்தவ் போகக் குதிரைகளைப் பெறும் உத்தரவும் வைத்திருந்தார்.
போப்சின்ஸ்தி: ஓ! அதே ஆள் தான்... அவர் ஒரு கண் கொத்திப் பாம்பு. அவர் பார்வை யிலிருந்து எதுவும் தப்ப முடியாது. சால்மன் மீன் சாப்பிடுவதைப் பார்ததார்--முக்கிய மாக பியோத்தர் இவானவிச்சின் வயிற்றுக் காகத்தான்--ஆமாம். அப்புறம் அவர் எங்கள் அருகில் வந்து, எங்கள் தட்டுகளைப் பார்த் தார். அந்த மாதிரி கூர்மையான பார் வை. நான் பயந்து விறைத்துப் போய் விட் டேன்.
மேயர்: ஆண்டவனே, இந்தப் பாவிகள் மீது
41
கருணை காட்டும்! அவர் எந்த அறையில் தங்கயிருக்கறார்?
தோப்சின்ஸ்்5ி; 5ஆம் அறையில், மாடிப் படிகளுக்குக் கீழே.
போப்சின்ஸ்த: போன ஆண்டு அந்த இரா ணுவ அதிகாரிகள் சண்டை போட்டுக் கொண் டார்களே, அதே அறை.
மேயர்: அவர் எவ்வளவு காலமாக அங்கே தங்கியிருக்கிறார்?
தோப்சின்ஸ்்5ி: ஏற்கெனவே இரண்டு வா ரம் ஆதிவிட்டது. அவர் புனித வசீலி திரு நாளன்று வந்து சேர்ந்தார்.
மேயர்: இரண்டு வாரங்கள்! (ஒருபுறமாக.) தே வாதி தேவர்களே, தியாக தீபங்களே! கடந்த இரண்டு வாரங்களாக சார்ஜென்டின் விதவை சவுக்கடி பெற்றுவருகிறாள்! கைதிகள் தங் கள் உணவுப் பங்கீட்டைப் பெறவில்லை! வீதி யெல்லாம் குப்பை கூளம்! என்ன மானக்கேடு! (தன் தலையைக் கைகளால் பிடித்துக்கொள் ஐறார்.)
கருமசாலை அதிகாரி: விடுதிக்கு ஒரு தூதுக் குழுவை அனுப்பி வைக்கலாமா, அந் தோன் அந்தோனவிச்?
நீதிபதி: வேண்டாம், வேண்டாம். முதலில் இருந்த சமுதாயத்தின் தலைவர், அப்புறம் குருமார், அதற்கப்புறம் வியாபாரிகள்... “ஃபிரிமேசன்” கையேட்டில் சொல்லியிருக்கிற படி அதை நாம் செய்துவிடலாம்...
மேயர்: இல்லையில்லை, நானே செய்துகொள் தறேன். முன்னர் இந்த மாதிரி கஷ்ட காலங்
42
கள் வந்திருக்கன்றன. அவற்றை நாம் எப் படியோ சமாளித்தோம், மேலும் நன்றி களைப் பெற்றோம். கடவுள் அருளால் இப் போதும் நாம் சமாளிப்போம். (போப்சன்ஸ்க யிடம்.) அவர் இளைஞர் என்றா சொன்னீர் கள்?
போப்சின்ஸ்சி: ஒ,ஆமாம். இருபத்துமூன்று, இருபத்து நான்ூற்கு மேல் இருக்காது.
மேயர்: அது நல்லதாய்ப் போயிற்று. இளை ஞார்களை எடை போட்டுலிடூுவது சுலபம். அந்த ஆள் கிழட்டுப் பிசாசாக இருந்திருந்தால் தான் நமக்குத் தொல்லை. இந்த இளைஞர் கள் மிகவும் கபடமற்றவர்கள். சரி, பெரியோர் களே, நீங்கள் புறப்படுங்கள். போய், ஒவ் வொருவரும் உங்கள் துறைகளில் தயாராக இருங்கள். நானும் தோப்சின்ஸ்கயுடன் விடு திக்குப் போகிறேன், தனிப்பட்ட முறையில், பார்வையாளர்கள் நன்றாகக் கவனித்துக் கொள்ளப்படூகிறார்களா என்று கவனிப்பது போல. எய், சுவிஸ்துனோவ்!
சுவிஸ்துனோவ்: ஐயா?
மேயர்: ஓடிப்போய், போலீஸ் அதிகாரியை அமழைத்துவா-— வேண்டாம், இரு இரு!-- நீ இங்கே தேவைப்படுதிறாய்... போய் யாரை யாவது அனுப்பி அவரை அழைத்து வாச் சொல். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வ ளவு சீக்கிரம். சொல்லிவிட்டு உடனே ஓடிவா.
சுலிஸ்தனோவ் ஒடூதிறான்.
43
கருமசாலை அதிகாரி: சரி, நாம் புறப்படு வது நல்லது. இல்லாவிட்டால், அம்மோஸ் ஃபியோதரவிச், நாம் உண்மையாகவே வம் பில் மாட்டிக்கொள்வோம்.
நீதிபதி: உங்களுக்குக் கவலைப்பட என்ன இருக்கிறது? சுத்தமான இரவுக் குல்லாய் களை நோயாளிகளுக்கு லிநியோதித்து விட் டால் தீர்ந்தது. யாரும் உங்களைக் கேள்வி கேட்கப் போவதில்லை.
கருமசாலை அதிகாரி: என்ன குல்லாய் கள்! நோயாளிகளுக்கு மாமிசச் சூப்புக் கொ டுக்க வேண்டும். ஆனால் அங்கே முட்டைக் கோசு லீச்சம்தான் சகிக்கவில்லை. அந்த இடத்தில் நுழைந்தால் மூச்சைப் பிடிக்க வேண்டும்.
நீதிபதி: நல்லது. நானோ அதைப் பற்றி அமைதியாக இருக்கிறேன். மேலும், மாவட்ட நீதிமன்றத்தை யார் சோதனையிடப் போகி றார்? அங்கே இருக்கற காகிதங்களைப் படித் தால், அதற்காக அவர் மிகவும் கசந்து போய் வருந்த வேண்டிவரும். நான் பதினைந்து ஆண்டுகளாக அந்த நாற்காலியில் அமர்ந் திருக்கறேன். எந்த அறிக்கையை வகை பிரித்துத் தொகுக்க நான் முயன்ற போதெதல் லாம்--ஐயோ! கைவிட்டு விடுவேன். இதில் எது உண்மை, எது பொய் என்பதைக் கண்டு பிடித்து வகை பிரிக்க, மகா ஞானியாகிய சல மோன் வந்தால் கூட முடியாது.
நீதிபதி, தருமசாலை அதிகாரி, பள்ளி ஆய்வாளர்,
44
அஞ்சலக அதிகாரி ஆகியோர் வெளியேறும் போது, உள்ளே திரும்பும் போலீஸ்காரன் மீது மோதிக்
கொள்கிறார்கள்.
காட்டு 4
மேயர், தோப்சின்ஸ்௪, போப்சின்ஸ்கி மற்றும் போலீஸ்காரன்...
மேயர்: சரி, குதிரைவண்டி தயாரா?
சுவிஸ்துனோவ்: ஆமாம், ஐயா.
மேயர்: நல்லது. வெளியே போய்... வேண் டாம், பொறு! போய்க் கூப்பிடு... எல்லாம் எங் கே போய்த் தொலைந்தார்கள்? நீ ஒருவன் தான் இருக்கிறாயா? இங்கே இருக்க வேண்டு மென்று புரோகரவிடம் சொல்லியிருந்தே னே. எங்கே புரோகரவ்?
சுலிஸ்துனோவ்: அவன் போலீஸ் நிலையத் தில் இருக்கிறான், ஐயா. ஆனால் பணியில் வரமுடியாத நிலை.
மேயர்: என்ன விஷயம்?
சுவிஸ்துனோவ்: அது இப்படி நடந்து லிட் டது, ஐயா: இன்று காலை அவனைப் பயங் கரமான குடிவெறியில் தாக்கி வந்தார்கள். நாங்கள் இரண்டூ தொட்டி தண்ணீரை அவன் மீது கொட்டினோம். அப்படியும் போதை தெளியவில்லை.
மேயர் (தலையைப் பிடித்துக் கொண்டு): ஆண்டவனே! அப்புறம் என்ன? சரி, சீக்கரம் ஒடு வெளியே... வேண்டாம், இரு! என்
45
அறைக்கு ஒடு. என்ன கேட்கிறதா? என் வாளையும் புதிய தொப்பியையும் எடுத்துக் கொண்டு ஓடிவா. சரி, தோப்சின்ஸ்£, நாம் போகலாம்.
போப்சின்ஸ்க: நானும் வருகிறேன், அந் கோன் அந்தோனவிச்!
மேயர்: வேண்டாம், வேண்டாம். மன்னிக்க வும், பியோத்தர் இவானலிச், நீங்கள் வர முடியாது. வண்டியில் உங்களுக்கு இடமில் லை. ரொம்ப அசிங்கமாக இருக்கும்.
போப்சின்ஸ்த: பரவாயில்லை, நான் அங்கே வந்து விடுவேன். வண்டியின் பின்னால் ஓடி வந்தால் போதும். ஒரே ஒரு தடவை கதவு துவாரத்தின் வழியாக அவரைப் பார்த்துவிட ஆசை. அவர் நடையுடை பாவனையை...
மேயர் (வாளைப் பெற்றுக்கொண்டு போலீஸ் காரனிடம்): சீக்கரம் போய் மற்ற போலீஸ்கா ரர்களை எல்லாம் திரட்டி... அட, பார் இந்தக் கத்தியை--எத்தனை சிராய்ப்புகள்! அந்த நாசமாய்ப் போன கடைக்காரன் அப்தூலின் மேயரின் வாள் இருக்கும் நிலை தெரிந் திருந்தும் ஒரு புதிய வாளை அனுப்பிவைக்க வில்லை. எல்லாம் அயோக்கியர்களின் கும் பல்! இந்த அழுகுணி மோசடிக்காரர்கள் எனக்கு எதிராக மனு போட்டிருக்கிறார்கள் என்று நினைக்கறேன். சரி, எல்லாப் போலீஸ் காரர்களிடமும் சொல்: எல்லாரும் தெருவை எடுத்துக்கொண்டு விளக்குமாறு கூட்ட ஆரம் பித்துவிட வேண்டும்... நாசமாய்ப் போக! -— விளக்குமாறு எடுத்து தெருவைக் கூட்ட ஆரம்
46
பித்துவிட வேண்டும். அந்த விடுதி வரை. சுத் தமாகக் கூட்டும்படி பார்த்துக்கொள்... அப் புறம் கவனி, உன்னை எனக்குத் தெதரியும்: அரட்டை அடித்தபடியே வெள்ளிக் கரண்டி களைக் காலணிக்குள் போட்டுக் கொள்கிற ஆசாமியாயிற்றே நீ. என் கண்ணைக் கட்டி விடலாம் என்று மட்டும் மனப்பால் குடித்து விடாதே!.. நீ எப்படி வியாபாரி செர்னியா யெவை மோசடி செய்தாய் என்பதை மறந்து விட்டாயா? சீருடைக்காக அவன் இரண்டு கஜம் துணி உனக்குக் கொடுத்தான். ஆனால் நீ போய் அந்தச் சுருள் முழுவதையும் அப கரித்து விட்டாய்! ஜாக்கிரதை! உனது தரத் திற்கு எற்பின்றி எடுத்துக் கொள்கிறாய். போ
கலாம்!
காட்டு 5 போலீஸ் அதிகாரி வருகிறார். மேயர்: ஆ, ஸ்தெப்பான் இலிமயீச்! ஆண்ட
வனே, நீங்கள் எங்கேதான் போய்விட்டீர் கள்? என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர் கள்?
போலீஸ் அதிகாரி: நான் வெளிவாசலில் தான் இருந்தேன்.
மேயர்: நான் சொல்வதைக் கேளுங்கள், ஸ்தெப்பான் இலிமீச்! பீட்டர்ஸ்பர்க்கலிருந்த அரசு அதிகாரி ஏற்கெனவே நகருக்கு வந்து சேர்ந்துவிட்டார். இது விஷயமாக நீங்கள் என்னதான் செய்தீர்கள்?
47
போலீஸ் அதிகாரி: நீங்கள் உத்தரவிட்ட படி. போலீசை அனுப்பி, நடைபாதைகளைக் கூட்டச் சொல்லியிருக்கிறேன்.
மேயர்: கெர்ஜிமோர்தா எங்கே போனான்?
போலீஸ் அதிகாரி: அவன் தீயணைப்பு வண்டியில் போயிருக்கிறான்.
மேயர்: புரோகரவ் போதை தெதளியாமல் தான் இடக்கிறானா?
போலீஸ் அதிகாரி: அப்படித்தான்.
மேயர்: இதெல்லாம் நடக்கும்படி எப்படி அநுமதி த்தீர்கள்₹
போலீஸ் அதிகாரி: கடவுளுக்குத் தான் வெளிச்சம். நேற்று நகருக்கு வெளியே ஒரு கைகலப்பு அதைச் சரிப்படுத்தப் போன வன், அப்படிப் போகையோடு திரும்பியிருக் திறான்.
மேயர்: இப்போது கவனியுங்கள். நீங்கள் இப் படிச் செய்ய வேண்டும்: கான்ஸ்டேபிள் பூக வித்ஸின் ஒர் உயரமான பேர்வழி, வசதிக் காக அவனைப் பாலத்தில் போட வேண்டும். செருப்புக்கடைக்குப் பக்கத் இலிருக்கற பழைய வேலியை உடைத்து நொறுக்கித் தூண்க ளை மட்டுமே இருக்குமாறு செய்து, அது கட் டடம் கட்டும் மனை மாதிரி தோற்றமளிக்கச் செய்ய வேண்டும். எந்தளவுக்கு அதிகமாக நொறுக்குகறோமோ அந்தளவுக்கு நல்லது: நகரத் தந்தை சுறுசுறுப்பாக இருக்கிறார் என்பதை அது காட்டும். இல்லை, பொது வேலிக்குப் பின்னால் உள்ள குப்பை கூளங் களைப் பற்றி நான் மறந்து விட்டேன். குறைந்
48
தது நாற்பது வண்டிப் பாரமாவது இருக்கும். இது எவ்வளவு கீழ்த்தரமான நகரம்! ஒரு சலையையோ அல்லது வேலியையோ போட வேண்டியதுதான், எல்லாவகையான குப்பை களையும் அதற்குப் பின்னால் வந்து கொட்டு வார்கள். எங்கிருந்து கொண்டுவருகிறார்கள் என்பது சாத்தானுக்குத் தான் தெரியும்! (பெருமூச்சு விடூகறார்.) அப்புறம் இன்னொரு விஷயம், இந்த ஆய்வாளர் உங்களோட ஆட் களில் யாரிடமாவது ஏதாவது புகார் உண் டா என்று கேட்டால், “இல்லை, புகார்களே இல்லை, மேன்மை சான்றீர்!?” என்று அவர் கள் பதில் சொல்லுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அவர்களில் யாராவது புகார் செய் தால் புகார் செய்வதற்கு எதையாவது பிறகு நான் அவனுக்குக் கொடுப்பேன்... ஒ, அன் புள்ள ஆண்டவனே, நான் ஒரு பாவி, கடை கெட்ட பாலி... (தொப்பிக்குப் பதிலாகத் தொப்பி வைக்கும் பெட்டியைக் கையில் எடுக் ஒறார்.) ஆண்டவனே, இந்தத் தடவை மட்டும் நீங்கள் காப்பாற்றினால் இதுவரை நீங்கள் பார்க்காத அளவுக்கு மிகப் பெரிய மெழுகு வர்த்தியை ஏற்றி வைப்பேன் என்று சத்திய மாகச் சொல்கிறேன்: ஒரு நூறு பவுண்ட் எடை வருமளவுக்கு ஒவ்வொரு பேராசைக் கார வியாபாரியையும் நான் மெழுகு அளிக்க வைப்பேன். ஓ, என் ஆண்டவனே! நாம் போகலாம், பியோத்தர் இவானவிச்! (தனது தொப்பிக்குப் பதிலாகத் தொப்பி பெட்டியை வைத்துக் கொள்கிறார்.)
49 4-792
போலீஸ் அதிகாரி: அந்தோன் அந்தோன விச், அது பெட்டி, தொப்பியில்லை.
மேயர் (பெட்டியை எறிந்தவாறு): பெட்டி என்றால் பெட்டிதான், நாசமாகப் போக! மருத்துவமனையில் என் கோயில் கட்டவில் லை என்று அவர் கேட்டால்--ஐந்து ஆண்டு களுக்கு முன்னாலேயே நாம் மானியம் வாங் தவிட்டோம்--மறந்துவிட வேண்டாம்: அதைக் கட்ட ஆரம்பித்தோம், ஆனால் அது எரிந்து போய்விட்டது. அது பற்றி ஓர் அறிக்கையும் அனுப்பினேன். எந்த முட்டாளாவது அதை மறந்துவிட்டு அது ஆரம்பிக்கப்படவே இல் லை என்று சொல்லக் கூடும். தெர்ஜிமோர் தாவிடம் தனது கைமுட்டியைத் தாராளமாகப் பயன்படுத்த வேண்டாம் என்று சொல் லங்கள். ஒருவன் எதுவும் செய்தானா இல் லையா என்பதைப் பொருட்படுத்தாமல் சரி யாக உதைப்பதன் மூலம் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றுவதுதான் அவனது முறை. நாம் போகலாம்! (போய்விட்டூுத் திரும்ப உள்ளே வருறறார்.) தெருவில் திரியும் போது போர் வீரர்கள் முறையாக உடையணிய வேண்டும் என்பதைப் பார்த்துக் கொள்ளுங்கள். அந்த முட்டாள்கள் தங்களுடைய சீருடையில் மேல் பாதியை மட்டும் அணிந்து தெருவிற்கு ஒடிவரு
வார்கள்.
எல்லாரும் வெளியே போகிறார்கள்.
50
காட்சி 6
ஆன்னா அந்திரேயெவ்னாவும் மரியா அந்
தோனவ்னாவும் மேடைக்கு ஓடிவருகறார்கள்.
ஆன்னா அந்திரேயெவ்னா: எங்கே அவர்
கள்? அட ஆண்டவனே... (கதவைத் திறக்க றாள்.) அந்தோன்! அந்தோன்! (விரைவாகப் பேசுகறாள்.) இது எல்லாமே உன்னால்தான், எல்லாமே உன்னுடைய தவறுதான். இந்தக் குழப்பத்தை ஆரம்பித்தது நீ தான்: “எனக் குக் குண்டூசி வேண்டும், நாடா வேண்டும்”. (சன்னலுக்கு ஓடி அழைக்கறாள்.) அந்தோன், எங்கே போதறீர்கள்? என்ன? வந்துவிட்டா ரா? ஆய்வாளர்? அவருக்கு மீசை உண்டா? என்ன மாதிரியான மீசை?
மேயரின் குரல்: பிறகு பார்க்கலாம், அன்
பே!
ஆன்னா அந்திரேயெவ்னா: பிறகா?
என்ன சொல்கறீர்கள், பிறகா? உங்களுடைய பிறகை என்னிடம் சொல்ல வேண்டாம்! இதை மட்டும் எனக்குச் சொல்லுங்கள்: அவர் கர்னலா? ஹேய்! (இகழ்ச்சியுடன் .) அவர் போய் விட்டார்! இதற்கு நீ பதில் சொல்ல வேண் டும்! “ “அம்மா, அம்மா, என்னுடைய கழுத் துப் பட்டையைக் கட்டிக்கொள்கிற வரை பொ அங்கள், அதுக்கு ஒரு நொடி ஆகாது. '' இதோ உன்னுடைய நொடி! உன்னால் தான் எல் லாவற்றையும் இழந்துவிட்டோம்! சரசமாகப் பழகக் கூடியவள்! அஞ்சலக அதிகாரி இங்கே
51
வந்திருப்பதாகக் கேள்விப்பட்டால் போதும் கண்ணாடிக்கு முன்னே நின்று நன்கு ஒப் பனை செய்யவும் அழகு படுத்தவும் தொ டங்குவாள்: முதலில் இந்தப் பக்கம் பிறகு அந்தப் பக்கம்... அவர் உன்னிடத்தில் அக் கறை காட்டுகிறார் என்று நினைக்கிறாய், ஆனால் ஒவ்வொரு முறையும் உன் முதுகு திரும்பியதுமே உன்னைக் கோண வழிக் கிறார்.
மரியா அந்கோனவ்னா: ஓ அம்மா, குழப்ப வேண்டாம். எப்படியும் இன்னும் இரண்டு மணி நேரத்தில் எல்லாவற்றையும் பற்றி நமக்குத் தெரிந்து போகும்.
ஆன்னாஅந்திரேயெவ்னா: இரண்டுமணி நேரமா! மிக்க நன்றி! நிச்சயமாக ரொம்பக் கடமைப் பட்டிருக்கிறேன். என் ஒரு மாதம் என்று சொல்லக் கூடாது? அப்போது இன் னும் நன்றாகத் தெரிந்து கொள்ளலாம்! (சன்னலுக்கு வெளியே குனிகறாள்.) எய், அவ்தோத்யா, நீ ஏதாவது கண்டுபிடித்தா யாூ நீ கண்டுபிடிக்கவில்லை? முட்டாள் சிறுமி! உன்னை அவர் வெளியே போகச் சொல்லி கையை ஆட்டினாரா? நல்லது, ஆக அவர் அப் படிச் செய்தால் என்ன? எப்படியும் கண்டு பிடிக்க முடியாது? இதில் அதிசயம் இல்லை, எல்லா நேரமும் ஆண்களைக் தவிர வேறு எதையுமே நீ நினைப்பது இல்லை. என்? அவர்கள் வேகமாக விரட்டிவிட்டார்களா? அந்த வண்டிக்குப் பின்னாலேயே நீ ஓடியி ருப்பாய்! இப்போது போ, காதில் விழுகிறதா?
52
ஒடிப்போய் அவர்கள் எங்கே போயிருக்கிறார் கள் என்று கண்டுபிடி, வந்திருப்பவர் யார், எப்படிப்பட்ட ஆள் என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும்! அந்தச் சாவித் துவாரத்தின் வழி யாகக் கண்ணை விட்டு அவருடைய கண் நிறம் என்ன என்பதைப் பார். திரும்ப நே ராக இங்கே வா, கேட்கிறாயா? இப்போது ஒடு, வேகமாக ஒடு! (இரை விழும் வரை கத் இக் கொண்டே இருக்கறாள். சன்னலருகே நிற்கன்ற இருவரையும் இரை மறைக்கன் றது.)
இரண்டாம் அங்கம்
விடுதியில் சிறிய அறை. படுக்கை, மேசை, சூட்கேஸ், காலி பாட்டில், காலணிகள், பிரஷ், போன்றவை.
காட்சி 1
ஒசிப் தன் எசமானனின் படுக்கையில் படுத்திருக் இறான்.
அட, சனியனே! எனக்குப் பசி தாங்க முடியவில்லை. வயிறு பாண்ட் வாத் தியக்குழு வாசிப்பது மாதிரிசத்்தம்போடூகறது. வீட்டுக்கும் நாம் அண்மையில் போன பாடில்லை! என்ன கஷ்டம்! பீட்டர்ஸ்பர்க்கை விட்டு வெளியேறி
33
(இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன! எனது எசமான னோ பணத்தை வீதியில் வாரி இறைத்துவிட்டு கவட்டுக்குள்ளே முளைத்துப் போய் உட்கார்ந்தி ருக்கிறார். மொத்தப் பயணத்துக்கும் நிறையச் சேர்ந் திருக்கும். ஆனாலும் அதில், அவர் போகிற ஒவ்வொரு நகரத்திலேயும் ரொம்பப் பெரிதாக நடிக்க வேண்டி இருக்கறது. (அவரைக் கண்டல் செய்கறான்.) “ஏய், ஓசிப், எல்லா இடமும் சுற்றி இருப்பதனால் சிறந்த அறையாக எனக்குப் பார்க்க வேண்டும், செய்வாயா, உயர்தரமான சாப்பாடாக எனக்கு எற்பாடு செய். கண்டதை என்னால் சாப்பிட முடியாது. உயர்ந்ததைத் தவிர எதுவும் எனக்கு வேண்டாம்.” வேறு யா ராகவாவது இருந்தால் சரிதான், ஏதோ தூக்கப் போட்டு வந்த இளார்க். யாராக இருந்தாலும் சிநேகம் செய்கிறார், அவர்களுடன் சீட்டு விளை யாடுகறார். கடைசியில் இப்படி இருக்கிறார்! இந்த வாழ்க்கையே எனக்குச் சலித்துப் போய் விட்டது! உண்மையில் நாட்டூப் புறத்தில் எவ் வளவோ சந்தோஷமாக இருக்கலாம்-— பொது வாழ்வு இல்லை என்றாலும் அது ஒரு கவலை யற்ற வாழ்க்கை. ஒரு பெண்ணைச் சேர்த்துக் கொண்டு படுக்கையில் இருந்தவாறு கடலையைத் தின்னலாம். ஆமா... உண்மையைச் சொன் னால், பீட்டர்ஸ்பர்க் வாழ்க்கைதான் எல்லாவற் றிலும் சிறந்தது. நம்மிடத்தில் பணம் இருக்கற வரை நம்மால் நன்றாக வாழ முடியும்-- நாட கம், சர்க்கஸ், ஆட்டபாட்டம். எல்லாரும் மிகவும் மரியாதையாக, மதிப்பாகப் பழகுவார்கள், அவர்கள் பிரபுக்களாகக் கூட இருக்கலாம்.
54
கடைத் தெருவில் உலாவலாம், கடைக்காரர்கள் உன்னை “ஐயா” என்று அழைப்பார்கள். ஆற் றைக் கடக்க ஒரு படகை எடுத்துக் கொண்டு ஓர் அரசு அதிகாரிக்குப் பக்கத்தில் உட்கார்ந்து வரலாம். கடைக்குக் கடை போய் வரும் போது ஒரு படை அதிகாரி அவருடைய முகாம்களைப் பற்றியும். நட்சத்திரங்களின் அருத்தம் பற்றியும் சொல்லிக் கொண்டே இருப்பார். எதோ அதி காரியின் விதவை உள்ளே வருவாள்; சிலவே ளை மேலிடத்துப் பணிப்பெண் வருவாள் — அவளைப் பார்த்தாக வேண்டும்... ஆகா! (குலை யை ஆட்டிக்கொண்டே சிரிக்கறான்..) அங்கே எல் லாருடைய நடத்தையும் மரியாதையாக இருக் கும். சனியனே, தரக்குறைவான வார்த்தையைக் கேட்க முடியாது! ஒவ்வொருவரும் “நீங்கள்” என்று அழைப்பார்கள். நடந்து கால் கடுத்ததா-- ஒரு சாரட் அமர்த்திக் கொள் ஓர் எசமான் மாதிரி; வாடகை கொடுக்க விரும்பா விட்டால் தொல்லையே இல்லை--ஒவ்வொரு வீட்டுக்கும் கொல்லைக் கதவும் உண்டு, அது வழியே வேக மாய்ப் போய்விடு, ஒரு பயல் உன்னைப் பிடிக்க முடியாது. ஒரு விஷயம் மட்டமானது: ஒருசம யம் வயிறு நிறையச் சாப்பிடலாம், மறுசமயம் ஒன்றும் இல்லாமல் பட்டினி இடக்கலாம், இன்று போல. அவரைத்தான் குற்றம் சொல்ல வேண்டும். அவரை என்ன செய்ய முடியும்? அவ ரது தந்ைத இவருக்குக் கொஞ்சம் பணம் அனுப் புகறார், சிக்கனமாகச் செலவழிப்பதற்குப் பதி லாக உடனே கண்டபடி செலவழிக்கத் தொடங்கு கிறார்: சாரட் எடுத்துக் கொண்டு சுற்றுவது, ஒவ்
$5
வொரு ராத்திரியும் நடனங்களுக்குப் போவது. வாரம் முடிந்ததும் அவருடைய புது சூட்டை மலிந்த விலைக்கு விற்று வர என்னை அனுப்பு வார். தனது ஜாக்கெட்டையும் ஒவர்கோட்டையும் தவிர எல்லாவற்றையும் மொத்தமாகத் தள்ளி விடுவார்... நல்ல இங்கிலீஷ் துணியில் நூற்றைம் பது ரூபிளுக்குக் கோட்டுத் தைப்பார். அதை இரு பது ரூபிளுக்கு விற்கவில்லை என்றால் என் னை என்னவென்று கேளு, அவருடைய காற் சட்டையை என்ன கொடுத்தும் வாங்கக் கொள்ள லாம்! ஏன்? ஏனென்றால் அவர் வேலை பார்ப் பதில்லை, அது தான். அவரை அலுவலகத்தில் பிடிக்க முடியாது, சாலையில் சுற்றிக் கொண் டிருப்பார், சீட்டு விளையாடிக் கொண்டூ இருப் பார். ஆகா, பெரிய எசமானராகய அவரது தந் தை இதைப் பற்றித் தெரிந்து கொண்டால்! உங் களை அரசு ஊழியர் என்று பார்க்காது, சட்டை யைக் கழற்றி வாரால் அடிப்பார். நான்கு நாள் களுக்கு உங்களது காயத்தைக் தடவிக் கொடுப் பார். வருவது வரட்டும், உனக்கென்று ஒரு வே லை இருந்தால் அதை நன்றாகப் பார்க்க வேண் டியதுதான். இது வரைக்கும் சாப்பிட்டதற்கான பில்லை கொடுக்காததால் எதுவுமே கொடுக்க முடியாதென்று விடுதிக்காரன் சொல்லிவிட்டான் சரி, நாம் கொடுக்காமல் இருந்தால்தான் என்ன? (பெருமூச்சு விடூகறான்.) அட, ஆண்ட வனே, ஒரு தட்டு முட்டைக்கோசு சூப் மட்டும் எனக்குச் சாப்பிடக் கடைத்தால்! இப்போது இருக் இற பசியில் ஒர் அண்டாச் சோறு சாப்பிடுவேன்! இது என்ன சத்தம்? யாரோ வருகிறார்
56
கள், எனது எசமானாகத்தான் இருக்க வேண்
டும். (படூக்கையிலிருந்து துள்ளிக்குஇக்கறான்.)
காட்சி 2 தஇலெஸ்தக்கோவ் நுழைூறார்.
கலைஸ்தக்கோவ்: இதோ--இதை எடுத்துக் கொள். (தனது தொப்பியையும் பிரம்பையும் ஓசிப்பிடம் கொடுக்கிறார்.) ஆக, என் படுக்கை மில் மறுபடியும் புரண்டிருக்கறோய், இல்லை யா?
ஒசிப்: நான் என் உங்களது படுக்கையில் புரள வேண்டும்? இதற்கு முன்னே நான் படுக்கையே பார்த்ததில்லையா?
தலெஸ்தக்கோவ்: போடா, பொய்சொல்லி! நீ புரண்டு இருக்கிறாய், பாரு: எல்லாம் துவண்டு போயிருக்கின்றன.
ஒசிப்: எனக்குப் படுக்கையே தேவையில்லை. படுக்கை என்றால் என்ன என்று எனக்குத் தெரியாதா? எனக்குக் கால் இருக்கிறது, நான் நின்றுகொள்ள முடியும். உங்களது படுக்கை எனக்கு எதற்கு?
திலெஸ்தக்கோவ் (முன்னும் பின்னும் நடந்துகொண்டு: பையில் ஏதாவது புகை மயிலை மிஞ்சி இருக்கிறதா என்று பாரு.
ஒசிப்: புகையிலையா! என்ன புகையிலை? அதுதான் மிச்சமிருந்த கடைசித் துணுக்கை மூன்று நாளைக்கு முன்னாலேயே ஊதித் தள்ளிவிட்டீர்களே.
57
கிலெஸ்தக்கோவ் (வாயை பலவிதமாகவும் கோணலாக்கக் கொண்டு மேலும் &ழும் நடக் றோர். கடைசியாக உரத்த தீர்மானமான குர லில் கூறுகிறார்): ஒ௫ூப்... இப்ப நான் சொல் வதைக் கவனி.
ஒசிப்; சரி, ம்... என்ன?
தலைஸ்தக்கோவ்: (உரத்த ஆனால் தர்மா னமற்ற குரலில்): கீழே போ.
ஒசிப்: கீழே எங்கே?
தஇலெஸ்தக்கோவ் (மிகவும் தீர்மானமற்ற, அநேகமாகக் கெஞ்சிய படி): சாப்பாட்டு அறைக்குப் போய்... அவர்களிடம் சொல்லு... எனக்குச் சாப்பாடு வேண்டும்!
ஒசிப்: கிடைக்காது. போவதில் அருத்தமே இல் லை.
திலெஸ்தக்கோவ்: என்னை எதிர்த்துப் பேச எவ்வளவு தைரியம் உனக்கு!
ஒசிப்: எப்படியிருந்தாலும் நான் போவதில் அருத்தமே இல்லை. உங்களுக்குச் சாப்பிட எதுவும் தர முடியாது என்று ஏற்கெனவே விடுதிக்காரன் சொல்லிவிட்டான்.
கஇலெஸ்தக்கோவ்: என்ன திமிர்! கொடுக் காமல் இருக்க என்ன தைரியம்!
ஒசிப்: அது மாத்திரம் இல்லை, அவன் மேய ரிடம் புகார் செய்யப் போதிறானாம். அவன் சொல்கிறான்: ““இரண்டு வாரமாக எதுவுமே கொடுக்காமல் இங்கே இருந்திருக்கிறீர்கள். நீயும் உன் எசமானும் சரியான மோசடி ஜோடி, உங்களை மாதிரி முன்னமேயே பார்த் திருக்கறோம்””.
58
திலெஸ்தக்கோவ்: இதைக் கேட்க உனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்திருக்கும்?! ஒசிப்: அது மாத்திரமா. “யாராவது இங்கு வந்து தங்கி, பணம் கொடுக்காமல் பாக்கி வைத்தால் நாங்கள் வெளியே அனுப்புவது இல்லை” என்று அவன் சொல்கிறான். ் இப்போது நேரடியாகச் சொல்கிறேன். நான் சொன்னபடி செய்கிறவன். நேரே மேயரிடம் போய் உங்கள் இரண்டு பேரையும் ஜெயிலில் போடச் சொல்லப் போகிறேன். ”” திலெஸ்தக்கோவ்: சரி, அது போதும்! இப் போது எனக்குச் சாப்பாடு வாங்கி வரச் சொல்லு. அத்தகைய இரக்கமில்லாத மிருகம்! ஒசிப்: நான் விடுதிக்கானை இங்கே வரச் சொல்கறேன். நீங்கள் பேசிக்கொள்ளுங்கள். திலெஸ்தக்கோவ்: அவனை எதற்காக நான் பார்க்க வேண்டும்? நீயே சொல்லிக் கொள். ஒசிப்: அதில் பயன் இல்லை... திலெஸ்தக்கோவ்: சனியனே! அவனை இங் கே கூட்டி வா.
ஒசிப் வெளியேறுகிறான். காட்சி 3
தனிமையில் இலெஸ்தக்கோவ்.
தாங்க முடியாமல் பசிக்கிறது. பசியை மறக் கக் கொஞ்சம் தூரம் நடந்து பார்த்தேன். ஓன்
59
றும் பயன் இல்லை, சனியன்! பென்ஸாவிலே சீட்டாடாமல் மட்டும் இருந்திருந்தால், வீட் டுக்குப் போவதற்காகக் கொஞ்சம் பணம் இருந்திருக்கும். அந்த காப்டன் பூராத்தை யும் உறிஞ்சிக் கொண்டு விட்டுவிட்டான். என்ன மாதிரி ஆடுகிறான், காலிப்பயல்! கால் மணி நேரந்தான் உட்கார்ந்தான், சுத்தமாக என்னைக் துடைத்து விட்டான். இருந்தாலும் அவனோடு இன்னொரு தட வை ஆட விரும்புறேன். அதற்கு வாய்ப் பே கிடையாது. இது என்ன நகரமா! குப்பை மேடு. ஒரு கடைக்காரனாவது கடனுக்குச் சா மான் கொடுக்க மாட்டேன் என்கிறான். மட்ட மான பயல்கள்! (ஏதோ ஒரு பாட்டை இட் டியடித்தபடி அங்குமிங்குமாக நடக்கிறார்.)
என் இன்னும் வரக் காணோம்?
காட்டு 4
ஒசிப்பும் பணியாளும் நுழைதிறார்கள்.
பணியாள்: உங்களுக்கு என்ன வேண்டும் என்று எசமானர் கேட்டு வரச் சொன்னார்.
திலெஸ்தக்கோவ்: வா, என்ன நலமா?
பணியாள்: நலந்தான். மிக்க நன்றி.
தலெஸ்தக்கோவ்: தொழில் எப்படி நடக் கிறது? எல்லாம் நன்றாக இருக்கறதா?
பணியாள்: ஆமாம், எல்லாம் நன்றாக இருக் இறது.
60
தஇலெஸ்தக்கோவ்: விருந்தினர்கள் நிறைய வா?
பணியாள்: ஆமாம். ரொம்பப் பேரைச் சமா ளிக்க வேண்டி இருக்கிறது.
தஇலெஸ்தக்கோவ்: இது வரைக்கும் எனக் குச் சாப்பாடே கொண்டு வரவில்லை. சாப்பாட் டுக்குப் பிறகு எனக்கு ரொம்ப முக்கியமான வேலை இருக்கறது. வேகமாக ஓடிப் போய் எனக்கு எதாவது கொண்டு வா.
பணியாள்: உங்களுக்கு எதுவுமே கொடுக்கக் கூடாதென்று எசமானர் சொல்கிறார். அது மாத்திரம் அன்று, மேயரிடம் உங்களைப் பற்றிப் புகார் செய்யப் போகிறாராம்.
தஇலைஸ்தக்கோவ்: புகாரா? உண்மையாக வா? எதைப் பற்றி? நான் சொல்வதைக் கேளு. ஒர் ஆள் என்று இருந்தால் சாப்பிட் டாக வேண்டும். இப்படி இருந்தால் உரு ஒன்றுமில்லாமல் போய்விடுவேன். உண்மை யிலேயே எனக்கு ரொம்பப் பசி.
பணியாள்: அது சரி, ஐயா... ஆனால் எசமா னர் என்ன சொல்கறார்: ““அவர் இதுவரை சாப்பிட்டதற்குக் கொடுக்காத போது ஒரு டம் ளர் தண்ணீர் கூட கொடுக்காதே''. இது தான அவரது வார்த்தைகள்.
கிலெஸ்தக்கோவ்: ஆனால் நீயாவது அவ ரிடம் இந்த விவரத்தைச் சொல்லக் கூடாதா?
பணியாள்: நான் என்ன விவரம் சொல் வது?
தஇலைஸ்தக்கோவ்: நான் கண்டிப்பாகச் சாப் பிட்டாக வேண்டும் என்பதை அவருக்குப் புரி
6]
யவை. பணத்தைப் பற்றி என் கவலைப்பட வேண்டும்? குடியானவனாகய தன்னால் ஒரு நாளைக்கு உணவு இல்லாமல் இருக்க முடியு மானால் மற்றவர்களாலேயும் முடியும் என்று நினைக்கிறார் போலிருக்கிறது. இதுவா செய்தி!
பணியாள்: சரி, நான் போய்ச் சொல்கிறேன்.
காட்டு 5
இலெஸ்தக்கோவ் தனிமையில்.
இல்லை என்று அவன் சொல்லிவிட்டால் நான் என்ன செய்வேன்? என் வாழ்க்கையில் இவ்வளவு பசியாக இருந்தது கிடையாது! வதா வது துணிமணியை விற்க வேண்டியதுதான். என் காற்சட்டையை? மாட்டேன். பட்டினி தடந்தா லும் திடப்பேனே தவிர பீட்டர்ஸ்பர்க்கல் தைத்த சூட்டில் வீடு திரும்புவேன். பீட்டர்ஸ்பர்க்கல் ஒரு கோச் வாடகைக்குப் பிடிக்காதது பரிதாபமா னது. பக்கத்துவீட்டுக்காரர் வீட்டு வாசலில் ஓர் அழகான கோச் வண்டியில் விளக்குகள் ஜொ லிக்க பின்னே டவாலியோட ஒசிப் இறங்க னால் எப்படி இருக்கும்! எல்லாக் இளர்ச்சிகளை யும் என்னால் கற்பனை செய்ய முடியும்: “:யார் அது? என்ன அது?'' என்று ஒரே பரபரப்பாக இருக்கும். தங்கவில்லையுள்ள டவாலியைப் போட்டபடி சேவகன் (தன்னைச் சேவகனைப் போல பாவித்துக் கொண்டு), “இவான் அலெக் சாந்தரவிச் திலெஸ்தக்கோவ் பீட்டர்ஸ்பர்க்கிலி
62
ருந்து வருகிறார், வரவேற்கத் தயாரா?'' என்று கூறுவான். காட்டான்கள், வரவேற்பு என்பதற்கு அர்த்தமே அவர்களுக்குத் தெரி யாது. எதாவது ஒரு நிலக்கிழார் அவர்களைப் பார்க்க வந்தால் வரவேற்பு அறைக்குள் கரடி மாதிரி நுழைவார். ஏதாவது அழகான பெண் ணிடம் போய், “மேடம், தங்களைச் சந்திப்பதில் நான்...” (கைகளைத் தேய்க்கறார், கால்களை உரசுகறார்.) தூ! (எச்சில் துப்புகறார்.) பசியில் காய்ச்சல் வந்துவிடும் போல் தெரிதிறது!
காட்சி 6
முதலில் ஒசிப்பும் பின்பு பணியாளும் நுழை
கின்றனர்.
திலெஸ்தக்கோவ்: என்ன? ஒசிப்: சாப்பாடு கொண்டு வருூறார்கள். இலெஸ்தக்கோவ் (கைகளைத் தட்டி, நாற்கா லியில் அமர்ந்த நிலையில் குதித்தபடி): சாப்பாடு கொண்டு வருகறார்கள்! ஆகா! பணியாள் (சாப்பாட்டுத் தட்டுகள், துடைப்பக்குட் டை முதலியவற்றுடன்): இதுதான் கடைசித் தடவை என்று எசமானர் சொல்கிறார். திலெஸ்தக்கோவ்: உன் எசமானர்... அவ னது மூஞ்சியிலேயே துப்ப வேண்டும். சரி, என்ன கொண்டு வந்திருக்கிறாய்? பணியாள்: சூப்பும் வறுவலும். இலெஸ்தக்கோவ்: என்ன, இந்த இரண்டு
தானா?
63
பணியாள்: அவ்வளவுதான்.
தஇிலெஸ்தக்கோவ்: இது முட்டாள் தனம்! நான் இதை ஒத்துக்கொள்ள மாட்டேன்! இது என்ன என்று அவனிடம் கேட்டுவா!.. இது எனக்குப் போதாது!
பணியாள்: இதுவே அதிகம் என்று எசமா னர் சொல்றார்.
இலெஸ்தக்கோவ்: குழம்பு இல்லையா?
பணியாள்: எதுவுமே இல்லை.
தஇலைஸ்தக்கோவ்: என்ன சொல்கிறாய், ஒன் றுமில்லையா₹2 நான் சமையல் அறைப் பக் கம் போனபோது அது கொதித்துக் கொண் டிருந்ததைப் பார்த்தேன். சால்மன் மீன் என்ன ஆயிற்று? காலையில் நான் சாப்பாட்டு அறை வழியாகப் போனபோது இரண்டு குட் டைப் பயல்கள் மீனையும் மற்றவைகளையும் விழுங்கக் கொண்டிருந்ததைப் பார்த்தேன்.
பணியாள்: ஆமாம். இருக்கிறது, அதே வே ளை இல்லாமலும் இருக்கிறது.
இலெைஸ்தக்கோவ்: என் இல்லாமல்?
பணியாள்: இல்லை, அப்படித்தான்.
திலெஸ்தக்கோவ்: மீன், கோலா, எதுவுமே இல்லையா?
பணியாள்: எல்லாம் இருக்கறது. ஆனால் அதெல்லாம் ஒழுங்கான வாடிக்கையாளர் களுக்குத்தான்.
கிலெஸ்தக்கோவ்: நீ ஒரு காட்டு மிராண்டி!
பணியாள்: ஆமாம், ஐயா.
திலெஸ்தக்கோவ்: போடா பன்றிக் குட்டி... என் அவர்களுக்கு மாத்திரம் உணவு கொ
04
டுக்க வேண்டும், எனக்குக் கிடையாது? நா னும் இந்த ஒட்டலினுடைய விருந்தாளிதான், இல்லையா?
பணியாள்: அது சரிதான். ஆனால் அவர்கள் வித் தியாசமானவர்கள்.
திலெஸ்தக்கோவ்: என்ன வித்தியாசம்?
பணியாள்: புரிந்து கொள்வது ரொம்பச் சுல பம்: அவர்கள் பணம் கொடுக்கிறார்கள்.
இலெஸ்தக்கோவ்: போடா முட்டாள், உன் னிடம் பேசி நேரத்தை வீணாக்க விரும்ப வில்லை. (சூப்பை அள்ளி அள்ளி ஊற்றிச் சாப் பிடூறார்.) என்ன இது? இது தான் சூப்பா? சும்மா வெந்நீரை ஒரு கோப்பையில் ஊற்றி யிருக்கிறாய். உப்பும் இல்லை சப்பும் இல்லை. ஒரே நாற்றம். எனக்கு வேண்டாம், தூக்கக் கொண்டு போ.
பணியாள்: சரி. உங்களுக்கு விருப்பமில்லை என்றால் சாப்பிடவே வேண்டாம் என்று எச மானர் சொல்கிறார்.
திலெஸ் தக்கோவ் (பணியாள் உணவை எடுத்து விடாதபடி கையினால் மறைத்துக் கொண்ட படி): இல்லையில்லை, எடுக்காதே, முட்டாள்! இப்படித் தான் மற்ற விருந்தினர்களை நடத்துகிறாய் போலிருக்கிறது. ஆனால் நான் அவர்களை விடக் கொஞ்சம் வித்தியாசமான வன். (சாப்பிடுகறார். அட ஆண்டவனே, என்ன சூப்பு! (தொடர்ந்து சாப்பிடூகறார்.) இந்த உலகத்தில் இவ்வளவு மட்டமானதை வேறு எவனாவது சாப்பிட்டிருக்கிறானா என்பது சந்தேகம். கொழுப்புக்குப் பதிலாக
65 5-792
இறகுகள் தான் மிதக்கின்றன. (சூப்பில் உள்ள கோழிக்கறியை நறுக்குகறார்.) ஐயோ, இது என்ன கோழியா! சரி, வறுவலைச் சாப் பிடவோம். ஒப், கொஞ்சம் சூப்பு மிச்சம் இருக்கறது, இதை எடுத்துக்கொள். (வறு வலை நறுக்குகறார்.) இது என்ன? வறுவல் இல்லை, நிச்சயம். பணியாள்: வேறு என்ன இது? தஇலைஸ்தக்கோவ்: சைத்தானுக்குத் தான் தெரியும். ஆனால் இது நிச்சயமாக இறைச்சி இல்லை. அரிவாள்மணையைக் தான் சமைத் இருப்பார்கள் போலிருக்கிறது. (சாப்பிடூ£றார்.) எனக்கு என்ன கொடுத்ததாக நினைக்கிறார் கள்? காலிப் பயல்கள், ஒரு வாய் சாப்பிட்டாலே தாடையெல்லாம் வலிக்கிறது. (விரலால் பல் லைக் குத்துகறார்.) திருட்டுப் பயல்கள்! மரப் பட்டையை வெட்டிப் போட்டது மாதிரி இருக் றது: பாரு! வெளியே வர மாட்டேன் என் இறது. பல்லே கருப்பாகப் போய்விடும் போல இருக்கிறது. கொள்ளைக்காரப் பயல்கள்! (துடைப்பக்குட்டையால் வாயைத் துடைத்துக் கொள்கறார்.) வேறு எதாவது இருக்கறதா? பணியாள்: ஒன்றும் இல்லை. திலெஸ்தக்கோவ்: என்ன! இது ரொம்ப மோசம்! குழம்புக் கறி எதுவுமே இல்லை. காலிப்பயல்கள்! ஆட்களிடமிருந்து பணத் தைப் பிடுங்குகிறீர்கள் அப்படித்தான்!
பாத்திரங்களை எடுத்துக்கொண்டு பணியாள் ஓசிப்புடன் வெளியேறுகிறான்.
66
காட்சி 7
இலெஸ்தக்கோவ், பிறகு ஒசிப்.
திலெஸ்தக்கோவ்: எனக்குச் சாப்பிட்ட மா
திரியாகவே இல்லை; என் பசியைத்தான் கிண்டி விட்டிருக்கிறது. என்னிடம் மாத்திரம் கொஞ்சம் பணம் இருந்தால் பன் வாங்கி வரச் சொல்லி இருக்கலாம்.
ஒசிப் (நுழைந்தபடி): மேயர் வந்திருக்கிறார்.
அவர் உங்களைப் பற்றிக் கேட்டு விசாரிக்
கறார்.
திலெஸ்தக்கோவ் (அச்சமுற்று): மேயரா?
5+
அட ஆண்டவனே! இந்தப் போக்கிரி விடுதிக்கா ரன் ஏற்கெனவே புகார் கொடுத்து விட்டான் போலிருக்கிறது! அவர் என்னை உண்மையி லேயே ஜெயிலில் தள்ளிவிட்டால் என்ன ஆவது? மரியாதையுடன் அதைச் செய்தார் களானால்... ஜெயிலா! முடியாது! ஐயோ, என்னைக் தெரிந்து கொள்வார்களே. வீதி மில் மக்களும் அதிகாரிகளும் இருப்பார்களே. அன்றைக்கு ஒரு நாள் நான் கண்ணடித்த கடைக்காரனின் மகள் வேறு இருப்பாள்... என்னால் ஜெயிலுக்குப் போக முடியாது. என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள்? நான் என்ன கூலிக்காரனா? வியாபாரியா? (தைரி யத்துடன் இருப்பது போலத் தன்னை நிமிர்த் திக்கொள்ஞஒறார்.) அவரது மூஞ்சியில் அடித் தது போலச் சொல்வேன்: ““என்ன தைரியம்
உங்களுக்கு...” (கதவுக் கைப்பிடி இரும்புக்
67
றது. கலெஸ்தக்கோவின் முகம் வெளுக்கறது, உடல் நடூங்குகறது.)
காட்டு 8
தோப்சின்ஸ்கியும் மேயரும் நுழைூறார்கள்.
மேயர் சிலை போல நிற்றொர்,. மேய ம் இ லஸ்தக்
கோவும் கண்கள் மிளிர ஒருவரையொருவர் சில
விநாடிகள் பயத்தினால் முறைத்துப் பார்த்துக் காள்கறார்கள்.
மேயர் (கொஞ்சம் நிலைக்கு வந்து விறைப்பாக நின்றபடி): வணக்கம், ஐயா.
தஇலைஸ்தக்கோவ் (வணங்கயபடிமே: நீங்கள் வந்தது பெருமையானது.
மேயர்: மன்னியுங்கள்...
தஇலைஸ்தக்கோவ்: பரவாயில்லை...
மேயர்: இந்த நகரத்தின் மேயர் என்ற முறை மில் இங்கு வருகை புரியும் எவருக்கும் எந்த விதமான சங்கடமும் வராதபடி பார்த்துக் கொள்ள வேண்டியது என் கடமை...
இலெஸ்தக்கோவ் (முதலில் கொஞ்சம் தடு மாறினாலும் இறுதியாக சற்று உரத்த குர லில்): நான்தான் என்ன செய்வேன்? இது என் தவறு அல்ல... நான் பணம் கட்டிவிட வேன். சத்தியமாகக் கொடுப்பேன்... வீட்டிலி ருந்து எப்படியும் எனக்குக் கொஞ்சம் பணம் அனுப்புவார்கள்.
போப்சின்ஸ்இ கதவு வழியாக உற்றுப் பார்க்கிறார்.
68
லிடுதிக்காரனைத் தான் குற்றம் சொல்ல வேண்டும்: அவன் கொடுக்கும் இறைச்சி பழைய செருப்பு மாதிரி இருக்கிறது, சூப்பு இருக்கிறதே... அதில் என்ன போடுகிறான் என்பது ஆண்டவனுக்குத்தான் தெரியும். நான் சன்னல் வழியாக அதை வீச வேண்டி இருக்கறது. நாள் கணக்கில் என்னைப் பட் டினி போடுகிறான்... தேநீர்! அந்த மாதிரி பிரமானதமான தேதநீர்! மீன் மாதிரி நாறு தறது. அப்போது நான் எதற்காக... யோசித் துப் பாருங்கள்!
மேயர் (கூச்சத்துடன்): தயவுசெய்து என்னை மன்னியுங்கள். உண்மையில் என்னைக் குற் றம் சொல்வதற்கு இல்லை. சந்தையில் எப் போதும் புத்தம் புதிதாக இறைச்சி இடைக் கிறது. கல்மகோரியைச் சேர்ந்த குடிக்காத, நல்ல பழக்கம் கொண்ட வியாபாரிகளால் அது கொண்டு வரப்படுகிறது. அத்தகைய இறைச்சி யை அவன் எங்கே வாங்குகிறான் என்று எனக்கு உண்மையிலே தெரியாது. ஆனால் இது உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால்... என்னுடன் நீங்கள் வேறு வீட்டுக்கு வரலா மே.
திலெஸ்தக்கோவ்: இல்லை, போக மாட் டேன்! வேறு லீடு என்று எதைச் சொல்கிறீர் கள் என்று எனக்குத் தெரியும்: அதாவது ஜெயிலுக்கு. உங்களுக்கு எந்த உரிமையும் இல் லை. என்ன தைரியம் உங்களுக்கு! நான்-- நான் பீட்டர்ஸ்பர்க்கிலிருந்து வந்திருக்கிற ஒர் அரசாங்க அதிகாரி! (பெருமையுள்ளவன்
70
போல்.) நான்... நான்...
மேயர் (ஒருபுறமாக): ஆண்டவனே, இவர் கோ பமாக இருக்கிறார் போலிருக்கிறது! அவருக்கு எல்லாம் தெரிந்து விட்டது. அந்த மோசக் காரக் கடைக்காரர்கள் செய்த வேலை!
தலெஸ்தக்கோவ் (தைரியத்தை வரவழைத் துக் கொண்டு): நீங்கள் ஒரு பட்டாளத்தையே கூட்டிக் கொண்டூ வாருங்கள், நான் அசைய மாட்டேன்! நான் அமைச்சரிடம் நேராகச் செல்வேன். (மேசையைக் குத்துகறார்.) என்ன நினைக்கிறீர்கள்... என் உங்களை...
மேயர் (உடல் நடுங்க, நேராக நின்றபடி): ஐயா, தயவுசெய்து மன்னியுங்கள்! என்னை மோசம் செய்து விடாதீர்கள். எனக்குப் பெண்டாட்டி பிள்ளைகள் எல்லாம் இருக்கிறார்கள்... நாங் கள் எல்லாரும் கெட்டுப் போவோம்.
இலெஸ்தக்கோவ்: நான் போகவே மாட் டேன்! நான் எதற்காகப் போக வேண்டும்? உங்களுக்குப் பெண்டாட்டி பிள்ளைகள் இருப் பதனால் நான் ஜெயிலுக்குப் போக வேண்டு
மா?
போப்சின்ஸ்கதி கதவு வழியாக உற்றுப் பார்த்து திகைப்புடன் பின்னுக்கு நகர்இறார்.
மிக்க நன்றி, நான் போக மாட்டேன். மேயர் (நடூங்கேபடி): எனக்கு அநுபவம் இல்
லாததுதான் காரணம். ஆண்டவன் அறிய,
அநுபவம் இல்லாததுதான் காரணம். அத்
7
[A
துடன் என்னுடைய குறைந்த சம்பளம்... நீங் களே தெரிந்து கொள்வீர்கள்: நான் சம்பள மாக வாங்குவது தேநீருக்கும் சர்க்கரைக்கும் காணாது. அவ்வப்பொழுது வாங்கும் லஞ்சம் ஒரு பெரிதில்லை: சாப்பாட்டிற்கு ஏதோ வாங்க, கோட்டுத் துணி வாங்க. மார்கெட்டில் ஒரு கடை வைத்திருக்கிற அந்த சார்ஜென்டி னுடைய விதவையைப் பற்றிய கதையோ, அதாவது அவளை நான் அடித்தேன் என்று சொல்கிறார்கள், ஆனால் அது அவதூறு, முழுப்பொய். எனக்குப் பிடிக்காதவர்கள் கட் டிய கதை! அப்படிப்பட்ட ஆட்கள் அவர்கள்! நீங்கள் அதை நம்பாதீர்கள்... என் வாழ்க் கையே ஆபத்தாகப் போய்விடும்.
இலெஸ்தக்கோவ்: அதனால் என்ன? இதற் கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. (சற்று யோசித்தபடி.) உங்கள் எதிரிகளைப் பற்றியும் ஏதோ சார்ஜென்டினுடைய வித வையைப் பற்றியும் என்னிடம் என் அளக்க றீர்கள்? சார்ஜென்டினுடைய விதவை--அது வேறு விஷயம்; என்னை அடிக்கலாம் என்று நினைக்காதீர்கள்! நல்ல யோசனை! நீங்கள் யார் என்று நினைக்கிறீர்கள் ?.. நான் எல் லாப் பணத்தையும் கட்டி விடுவேன்! பாக்க இல்லாமல் கட்டி விடுவேன்! இப்போதைக்கு என்னிடம் பணம் இல்லை. அதனால்தான் இந்த ஓட்டலில் தங்கியிருக்கறேன்.
மேயர் (ஒருபுறமாக): மகா சிக்கலான பேர் வழி! எதேதோ அளக்கறார். இதை எப்படி எடுத்துக் கொள்வது என்று புரியவில்லை.
72
சரி, தீர்மானமாக ஒன்று செய்ய வேண்டியது தான்.என்னநடக்குமோஅதுநடக்கும்.(உரத்த குரலில்.) ஐயா, இப்போதைக்கு உங்களுக்குப் பணமோ வேறு எதுவோ தேவை என்றால் சொல்லுங்கள், அதை உடனே செய்கிறேன். வருகிறவர்களுக்கு உதவி செய்ய வேண்டியது என்னுடைய கடமை.
கலெஸ்தக்கோவ்: கொடுங்கள், கடன் கொ டுங்கள், இப்போதே விடுதிக்காரனுக்குக் கொ டுக்க வேண்டியதைக் கொடுத்து விடுகிறேன். இருநூறு ரூபிள் அல்லது கொஞ்சம் குறை வாக, பரவாயில்லை.
மேயர் (நோட்டுகளாகத் தருகறார்): இதோ சரியாக இருநூறு ரூபிள் இருக்கறது. எண்ண வேண்டிய சிரமமே இல்லை.
இலெஸ்தக்கோவ்: மிக்க நன்றி. என்னு டைய எஸ்டேட்டுக்குப் போன உடனே இதை அனுப்பிவிடுவேன். நான் எப்போதுமே அவ் வப்பொழுது கடனைத் தீர்த்து விடுவேன்... நீங்கள் உண்மையிலேயே ஒரு பெரிய மனு சன். இப்போது விஷயமே இனி வேறுவித மாகப் போய்விடும்.
மேயர் (ஒருபுறமாக): ஆண்டவனுக்கு நன்றி சொல்ல வேண்டும்! பணத்தை வாங்கக் கொண்டார். இருநூறு ரூபிளுக்குப் பதிலாக நானூறு ரூபிளைச் சாமர்த்தியமாகக் கொ டூத்துவிட்டேன்.
இலைஸ்தக்கோவ்: ஓப்!
ஒசிப் நுழைகறான்.
73
அந்தப் பணியாளனை வரச் சொல். (மேயரை யும் தோப்சின்ஸ்கயையும் நோக்க.) என் நீங் கள் நிற்கிறீர்கள்? தயவுசெய்து உட்காருங் கள். (தோப்சின்ஸ்கயைப் பார்த்து.) உட்காருங் கள் தயவுசெய்து.
மேயர்: சிரமம் வேண்டாம். சும்மா நிற்கிறோம்.
இலைஸ்தக்கோவ்: தயவு செய்து உட்காருங் கள். நீங்கள் எவ்வளவு திறந்த மனமும் பெருந்தன்மையும் கொண்ட ஆட்கள் என்று இப்போது எனக்குத் தெரிகிறது; இதற்கு முன் னால் உங்களைப் பற்றி நான் என்ன நினைக் தேன் என்பதை எண்ணுகிற போது... (தோப் சின்ஸ்கயைப் பார்த்து.) தயவுசெய்து உட்காருங் கள்!
மேயரும் தோப்சின்ஸ்கயும் உட்கார, போப்சின்ஸ்த கதவு வழியாக உற்றுப்பார்த்துக் கேட்கிறார். மேயர் (ஒருபுறமாக): தைரியமாக இருக்க வேண்டும். யாருக்கும் தெரியாதபடி இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். சரி, அதே லிளையாட்டை நானும் ஆடலாம்: அவர் யார் என்று தெரியாத மாதிரி பாசாங்கு செய் வோம். (உரத்த குரலில்.) நாங்கள், அதாவது உள்ளார் நிலக்கிழார் பியோத்தர் இவானவிச் தோப்சின்ஸ்க்யும் நானும் சும்மா இப் படி யே காலாற நடந்து வந்த போது ஓட்டலுக் குள் நுழைந்தோம், வருகிறவர்களை எப் படி நடத்துறொர்கள் என்பதைத் தெரிந்து கொள்ள. பாருங்கள், எதுவும் எப்படியும்
போகட்டும் என்று விட்டூவிடுகிற மேயர் அல்ல
74
நான். கடமை உணர்வுக்காக மட்டுமில்லை, கிறிஸ்தவ ஒப்புரவு காரணமாக வந்து போகிற ஒவ்வொருவருக்கும் நல்ல வரவேற்புக் தடைத்தது என்பதை நிச்சயப்படுத்த விரும்பு தறேன். எனக்குப் பரிசு வழங்கப்பட்டது போல மகிழ்ச்சியான சந்திப்புக்கு ஒரு வாய்ப்புக் தட்டி யிருக்கிறது.
திலைஸ்தக்கோவ்: நானும் , மூழ்ச்சியடை கிறேன். நீங்கள் மட்டும் இல்லை என்றால் நான் இந்தப் பொந்துக்குள்ளேயே முடங்கிக் திடப்பதை ஒப்புக் கொண்டாக வேண்டும். ஒட்டல் பாக்கியை எப்படித் தீர்ப்பது என்று உண்மையிலேயே தெரியாமல் இருந்தேன்.
மேயர் (ஒருபுறமாக): அதைக் கேளுங்கள்! எப் படிப் பாக்கியைத் தீர்ப்பது என்று தெரியா தாம்! (உரக்க.) நீங்கள் எந்தப் பக்கமாகப் பய ணம் செய்யப் போஇறீர்கள் என்பதை நான் தெரிந்து கொள்ளலாமா?
கலெஸ்தக்கோவ்: என் எஸ்டேட் பக்கம். சராத்தவை நோக்க.
மேயர் (ஒருபுறமாக, கிண்டல் தொனியில்): சராத்தவா! முகம் வெளிறலில்லையே! அவ ரிடத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். (உரத்த குரலில்.) பயணம் என் பதே ஒரு நல்ல அறுபவம். ஆனாலும் ஒரு புறம் அடிக்கடி பயணக் குதிரைகளை மாற்று வ தில் கொஞ்சம் சிரமங்கள் இருக்கும். ஆனால் இன்னொரு புறம் பயணம் சிந்தனையைத் திசை திருப்புகிறது. நீங்கள் பயணம் செய்வது பெரும்பாலும் சொந்த மூழ்ச்சிக்காகத்தான்
ச் 75
என்று நினைக்கறேன்?
தலைஸ்தக்கோவ்: இல்லை, என் தகப்ப னார் வரச் சொல்லி இருக்கிறார். எனக்குப் பத வியில் உயர்வு இடைக்கவில்லை என்று அவர் கோபப்படுகிறார். பீட்டர்ஸ்பர்க்கற்கு வரக் கூடி யவர்களுக்குப் பதக்கங்கள் சுலபமாகக் தடைக் தின்றன என நினைக்கறார். அவரும் நாள் முழுக்க அலுவலகத்தில் ஓடியாடி வேலை பார்த்தால் தான் தெரியும்.
மேயர் (ஒருபுறமாக): எப்படியெல்லாம் விஷ யத்தை உருவாக்குகிறான்! இப்போது தகப்ப னாரைப் பற்றிப் பேசுகிறான்! (உரத்த குர லில்.) அங்கே எவ்வளவு காலத்திற்குத் தங் கப் போகிறீர்கள்?
திலெஸ்தக்கோவ்: எனக்குத் தெரியாது. அந்தக் கிழடு கோவேறுக்கழுதை மாதிரி பிடி வாதக்காரர். புத்தியும் அப்படித்தான். அவ ருக்கு நேரடியாகச் சொல்லப் போகிறேன்: நீங்கள் என்ன சொன்னாலும் சரி, பீட்டர்ஸ் பர்க்கைத் தலிர வேறு எங்கும் இருக்க முடி யாது. குடியானவர்களுக்கு மத்தியில் இருந்து கொண்டு நான் என் என் வாழ்க்கையை லீணாக்க வேண்டும்? இந்தக் காலத்தில் கேவைகள் வித்தியாசமானவை: நான் உல் லாசமாக இருக்க விரும்புகிறேன்.
மேயர் (ஒருபுறமாக): நன்றாக வலை வீசு கிறான்! அடுக்கடுக்காகப் பொய், ஆனால் எதி லும் அகப்பட்டுக் கொள்வதில்லை. அப்படி ஒன் றும் பெரிய ஆள் இல்லை: விரல் நகத்தினா லேயே பிழிந்து விடுவேன். எப்படியும் அவ
76
னை வசப்படுத்தி விடுவேன். (உரக்க.) நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. இந்தத் தொலை தூரப் பகுதியில் ஒருவன் என்னதான் செய்ய முடியும்? உதாரணமாக என்னை எடுத்துக் கொள்ளுங்கள்: நாள் பூரா தாய்நாட்டுக்காக உழைக்கிறேன். இரவு பகலாக ஓய்வு ஒழிச்சல் இல்லை. ஆனால் அதற்கு எங்கே வெகுமதி? (அறையைச் சுற்றிப் பார்க்கிறார்.) இந்த அறை ஈரமாக இருப்பது போலக் காணப்படூஇறது, இல்லையா?
திலெஸ்தக்கோவ்: இந்த அறை ஓர் அவமா னம். இங்கே உள்ள மூட்டைப்பூச்சிகள் நாய் மாதிரி கடிக்கன்றன.
மேயர்: அட ஆண்டவா! இத்தகைய கல்வி கற்ற விருந்தாளி என்ன கஷ்டப்படூகிறார்? மூட்டைப்பூச்சிகள்! அவை தோற்றுவிக்கப்பட் டிருக்கவே கூடாது. கொஞ்சம் இருட்டாகவும் இருக்கும் என்று நினைக்கறேன்?
திலெஸ்தக்கோவ்: நரகம் மாதிரி இருட்டாக இருக்கறது. மெழுகு வர்த்தியே கொடுக்கக் கூடாதென்று விடுதிக்காரன் ஒரு கொள்கை வைத்திருக்கிறான் போலிருக்கிறது. ஒரு புத் தகம் படிக்க வேண்டுமோ, எதாவது ஒன்று எழுத வேண்டுமோ, ஐயோ! என்னால் முடி யாது.
மேயர்: நான் ஒன்றை... ஆனால் இல்லை, நான் தகுதியில்லாதவன்...
தஇலெஸ்தக்கோவ்: என்ன?
மேயர்: இல்லையில்லை. கூடாது, நான் தகுதி யில்லாதவன்!
7
திலெஸ்தக்கோவ்: என்ன தகுதியில்லை என்று சொல்கிறீர்கள்?
மேயர்: இங்கே பாருங்கள்... என் வீட்டில் நல்ல வெளிச்சமான, அமைதியான ஓர் அறை இருக்கிறது... ஆனால் அது எனக்கு மிகப் பெரிய கெளரவம், தயவு செய்து கோ பித்துக் கொள்ளாதீர்கள். என் உள்ளத்தின் அடியிலிருந்து இதைச் சொல்றேன்.
திலெஸ்தக்கோவ்: மாறாக, அது எனக்கு ம௫ழ்ச்சியைத் தருகிறது. இந்தக் குப்பைத் தொட்டியில் இருப்பதை விட ஒரு தனியார் வீட்டில் இருப்பது நல்லது.
மேயர்: இதில் எனக்கும் மகழ்ச்சி! என் மனைவி மிகவும் சந்தோஷப்படுவாள்! சின்ன வய தில் இருந்தே விருந்தினர்களை உபசரித்து எனக்குப் பழகிப் போய்விட்டது. அதிலும் உங் கள் மாதிரி ஒர் அறிவாளி எனக்கு விருந் தாளியாக வந்தால் சொல்லவே வேண்டாம். ஏதோ நான் உங்களைப் புகழ்ந்து பேசுகிறேன் என்று மாத்திரம் நினைக்காதீர்கள். எப் போதுமே மனத்தில் உள்ளதை அப்படியே சொல்பவன்.
இலெஸ்தக்கோவ்: மிக்க நன்றி. நானும் உங்களை மாதிரிதான் — பாசாங்குக்காரர்களை எனக்குப் பிடிக்காது. உங்களுடைய அன்பும் திறந்த மனமும் எனக்கு ரொம்பப் பிடித்தி ருக்கிறது. நான் எதையும் எதிர்பார்க்கவில் லை, மரியாதை, ஈடுபாட்டைத் தவிர. வாழ்க் கையில் என்ன வேண்டும்: மரியாதையும் ஈடுபாடுந்தான்.
78
காட்டு 9
ஒசிப் உடன் வர பணியாள் நுழைதறான். போப் சின்ஸ்ட கதவு வழியாக உற்றுப்பார்க்கிறார்.
பணியாள்: கூப்பிட்டீர்களா, ஐயா?
தஇிலெஸ்தக்கோவ்: ஆமாம். அந்த பில்லைக் கொடு.
பணியாள்: நான் அன்றைக்கே கொடுத்தே னே. ்
திலெஸ்தக்கோவ்: இந்தக் குப்பைக் காஇதங் களைப் பற்றி மறந்து விட்டேன். தொகை எவ்வளவு என்று மட்டும் சொல்லு.
பணியாள்: முதல் நாள் உங்களுக்கு நல்ல மதிய உணவு. மறு நாள் நீங்கள் சால்மன் மீன் பொறியல் சாப்பிட்டீர்கள். அதற்குப் பிறகு நீங்கள் கேட்டதெல்லாம் கணக்கில் கொடுத்தார்கள்.
தஇலெஸ்தக்கோவ்: முட்டாள்! நான் என்ன சாப்பிட்டேன் என்றா கேட்டேன். பில்தானே கேட்டேன்.
மேயர்: தயவுசெய்து ஆத்திரப்பட வேண்டாம். அதற்கு ஒன்றும் அவசரமில்லை. (பணியா ளை நோக்க.) போ இங்கருந்து, பணம் வந்து சேரும்.
கிலெஸ்தக்கோவ்: ஆமாம், அது ஒரு நல்ல யோசனைதான். (பணத்தைப் பைக்குள் வைக்
ஒறார்.)
பணியாள் வெளியேறுகிறான். போப்சின்ஸ்தஇ கதவு வழியாக உற்றுப்பார்க்கறார்.
79
காட்டு 10 மேயர், இலெஸ்தக்கோவ், தோப்சின்ஸ்த.
மேயர்: நமது ஊரில் உள்ள அரசாங்க ஸ்தா பனங்களை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா, அதாவது தருமசாலைகளையம் மற்றவை களையும்?
திலெஸ்தக்கோவ்: அவற்றையெல்லாம் எதற் காக?
மேயர்: ஏன், நாங்கள் அவற்றை எப்படி நடத்துகிறோம், எங்களுடைய பொறுப்புகளை எப்படி நிறைவேற்றுகறோம் என்பதைப் பார்க்க...
திலெஸ்தக்கோவ்: ம்... மிகவும் மகழ்ச்சி யோடு.
போப்சின்ஸ் தலையைக் கதவு வழியாக நீட்டு கிறார்.
மேயர்: நீங்கள் இங்குள்ள மாவட்டப் பள் னிக்கு வருகை புரிந்து அறிவியலுக்காக நாங் கள் செய்ததெல்லாம் என்ன என்பதைத் தெரிந்து கொள்ளலாமே.
தஇலெஸ்தக்கோவ்: ரொம்ப சரி.
மேயர்: அப்புறம், ஜெயிலுக்குள்ளே ஒரு பார் வை. அங்குள்ள அறைகளை நோட்டம் விட்டு குற்றவாளிகளை நாங்கள் எப்படி வைத் திருக்கறோம் என்பதைக் தெரிந்து கொள்ள லாம்.
திலெஸ்தக்கோவ்: ஜெயிலுக்கு எதற்கு? 80
நான் தருமசாலைகளை மாத்திரம் பார்க் தறேன்.
மேயர்: மிகவும் நல்லது, நீங்கள் சொல் கிற படியே செய்யலாம். நீங்கள் உங்களது கோச் வண்டியில் வருகிறீர்களா, அல்லது என்னுடைய குதிரை வண்டியில் போகலா மா?
தலெஸ்தக்கோவ்: என், நான் உங்களுட னேயே வருகிறேன்.
மேயர் (தோப்சின்ஸ்கயிடம்): பிறகு உங்க ளுக்கு இடமில்லை, பியோத்தர் இவானவிச்.
கோப்சின்ஸ்கி: பரவாயில்லை.
மேயர் (தோப்சின்ஸ்கயிடம் தனியாக): நீங் கள் இப்போதே வேகமாக ஓட வேண்டும், மிக வும் வேகமாக. இரண்டு குறிப்புகளுடன், ஒன்று என் மனைவிக்கு, மற்றொன்று தரு மசாலையில் இருக்கும் ஸெம்லியனிக்காவுக்கு. (கலெஸ்தக்கோவிடம்.) எங்களுடைய சிறப்பு விருந்தாளியின் வருகைக்காகக் கொஞ்சம் ஏற்பாடு செய்யச் சொல்லி என் மனைவிக்கு ஒரிரண்டு வரிகள் எழுத உங்களது அநுமதி யைக் கேட்கிறேன்.
கிலெஸ்தக்கோவ்: என் தயங்குஇறீர்கள்?.. இதோ பேனா இருக்கிறது. காகிதம் தான் இல்லை... இந்த பில் போதுமா?
மேயர்: போதும். (தானே முணுமுணுத்துக் கொண்டு எழுதுகறார்.) நல்ல உணவும் பெரிய பாட்டிலில் ஓயினும் சாப்பிட்ட பிறகு விஷயங் கள் எப்படி என்று பார்ப்போம்! நாம் அவ
ருக்கு உள்ளூர் மடீர ஒமினைக் கொடுப்
61 6-792
போம்: தீங்கற்றதாகக் காணப்படும், ஆனால் ஒரு யானையையே விழுத்தாட்டிவிடும். அவன் எப்படிப்பட்ட ஆள் என்பதையும் எந்தள வுக்கு அவனுக்குப் பயப்பட வேண்டும் என் பதையும் நான் மட்டும் அறிய முடிந்தால்! (தோப்சின்ஸ்கயிடம் குறிப்பைக் கொடுக்கறார். அவர் கதவருகல் செல்லும் போது கதவுக் கொக்ககள் பிடூங்க கதவு கழே விழ, ஓட்டுக் கேட்டிருந்த போப்சின்ஸ்க அதன் மேல் விழு றார். எல்லாரும் இடூக்கட்டு ஆச்சரியப்படுூ றார்கள். போப்ரசின்ஸ்8 நிமிர்ந்து எழுக றார்.)
நஇலெஸ்தக்கோவ்: என்ன, எதேனும் காய மா?
போப்சின்ஸ் 5: இல்லையில்லை. ஒன்றுமில் லை. சிரமப்படூத்திக் கொள்ள வேண்டாம். மூக்கில் லேசான சிராய்ப்பு. டாக்டர் ஹிப்னரி டம் போய் ஒரு பிளாஸ்திரி போட்டுக் கொண் டால் சரியாய்ப் போய்விடும்.
மேயர் (போப்ஏிண்ஸ்கயை முறைத்துப் பார்க்க றார், கலெஸ்தக்கோவிடம்): இதை ஒன்றும் பொருட்படுத்த வேண்டாம். இது ஒன்றுமில் லை. மேன்மை சான்றீர், உங்களுடைய ஆள் உங்களது சாமான்களைக் தூக்கிக் கொண்டு வரலாம். (ஓசிப்பிடம்.) எல்லாவற்றையும் எனது வீட்டுக்குக் கொண்டு வந்து விடு. செய் வாயா? யாரைக் கேட்டாலும் வழி சொல்வார் கள். (இலெஸ்தக்கோவிடம்.) இல்லை, நீங்கள் முன்னுக்குப் போங்கள்! கலெஸ்தக்கோவை முன்னே போக விட்டு இவர் பின்னே செல்
82
ஹார், திரும்பிப் பார்த்து போப்சன்ஸ்கயைத் திட்டுகறார்.) என்டா! குப்புற விழுவதற்கு வேறு இடம் கிடைக்கவில்லையா? என்ன முட் டாள் தனம்! (வெளியேறுகறார்; போப்சின்ஸ்க அவர் பின்னே செல்ூறார்.)
திரை
மூன்றாம் அங்கம்
முதல் அங்கத்தின் அறை. காட்சி 1
ஆன்னா அந்திரேயெவ்னா, மரியா அந்தோ னவ்னா இருவரும் சன்னலருகே முன்னர் மாதிரி
யே நிற்கிறார்கள்.
ஆன்னா அந்திரேயெவ்னா: பார்த்தாயா, ஒரு மணி முழுக்க நாம் காத் திருக்க வேண்டி யதாயிற்று. எல்லாம் உன்னாலேயே. எற்கெ னவே உடுத்தியிருந்தும் நீட்டிக் கொண்டே இருக்கிறாய். நீ சொன்னதை நான் கேட்டி ருக்க வேண்டியதில்லை. பரிதாபம்! வீதியில் ஒரு ஆளைக் காணோம். ஊரே அடங்கப் போய் விட்டது.
மரியா அந்தோனவ்னா: அம்மா, ஒரு நிமி ஷத்தில் எல்லாம் தெரிந்து போகும். அவ் தோத்யா சீக்கரம் வந்து ஆக வேண்டும். (சன்னல் வழியே தலையை நீட்டிப் பார்த்துக்
83
கத்துகிறாள்.) அம்மா, பாருங்கள்! தெருக்கோ டியில் யாரோ வருகிறார்கள்.
ஆன்னாஅந்திரேயெவ்னா: எங்கே?நான் யாரையும் பார்க்கவில்லை. உனக்கு எப்போது மே கற்பனையாகத்தான் இருக்கும். ஆமாம், யாரோ வருகிறார்கள். யாரது? கட்டைக் குட் டையாக ஒரு கோட்டுப் போட்டுக்கொண்டு... யாராக இருக்கும்? பார்த்தாலே எரிச்சல் வரு திறது! அது யாராக இருக்கலாம்?
மரியா அந்தோனவ்னா: அது தோப் சின்ஸ்கி, அம்மா.
ஆன்னா அந்திரேயெவ்னா: தோப்சின்ஸ் தயா? நீ எப்போதும் எதையாவது கற்பனை செய்கிறாய்... அது தோப்சின்ஸ்க இல்லை. (கைக்குட்டையை ஆட்டூகறாள்.) எய், இங்கே வாருங்கள், சீக்கிரம்!
மரியா அந்தோனவ்னா: அது தேோப் சின்ஸ்கிதான், அம்மா.
ஆன்னா அந்திரேயெவ்னா: நிறுத்து, எதையாவது சொல்லி தகராறு செய்யாதே. அது தோப்சின்ஸ்கி இல்லை.
மரியா அந்தோனவ்னா: நன்றாகப் பா ருங்கள்! அது தோப்சின்ஸ்கி தெரியவில்லை யா?
ஆன்னா அந்திரேயெவ்னா: சரி, தோப் சின்ஸ்கயாக இருக்கலாம், இப்போது எனக் குத் தெரிகிறது. இதற்கு என் இவ்வளவு விவகாரம்? (சன்னலுக்கு வெளியே கத்து றாள்.) வாருங்கள், வாருங்கள்! கொஞ்சம் வேகமாக வரக் கூடாதா? அவர்கள் எல்லாம்
64
எங்கே? என்ன? சரி, அங்கேயிருந்து சொல் லுங்கள். என்ன? மிகவும் .கண்டிப்பானவரா? என்ன? என் கணவரா? (சன்னலை விட்டுச் சிறிது தள்ளி எரிச்சலுடன்.) இவர் ஒரு முட் டாள்: வீட்டுக்குள் வரும் வரை ஒன்றும் சொல்லமாட்டார்! ப
௬௯.
காட்சி 2 தோப்சின்ஸ்தி உள்ளே வருகிறார்.
ஆன்னா அந்திரேயெவ்னா: உங்களைப் பற்றி நீங்கள் வெட்கப்படவில்லையா, சொல் லுங்கள்? நான் உங்களை மிகவும் நாகரிக மானவர் என்று நினைத்தேன், பியோத்தர் இவானவிச். இப்போது அது இல்லை என்று தெரிதிறது: எல்லாரும் போதிறார்கள், நீங் களும் அவர்கள் பின்னே போதறீர்கள்! என்ன நடக்கிறது என்று எனக்குச் சொல்ல வேண்டும் என யாராவது நினைக்கிறீங்களா? வெட்கம்! இந்த லட்சணத்தில் உங்களது பிள்ளைகளுக்கு நான் ஞானத்தாயாக இருக் தறேன்.
தோப்சின்ஸ்தி; அம்மா, நான் இங்கே வர மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க ஒடி வந்தேன்.
வணக்கம், மரியா அந்தோனவ்னா!
மரியா அந்தோனவ்னா: வணக்கம், பியோத்தர் இவானவிச்! ஆன்னா அந்திரேயெவ்னா: என்ன?
அதைப் பற்றி எங்களுக்குச் சொல்லுங்கள்.
85
தோப்சின்ஸ்தி;: அந்தோன் அந்தோனவிச் உங்களுக்கு ஒரு குறிப்பை அனுப்பினார்.
ஆன்னா அந்திரேயெவ்னா: சரி, அவர் யார்? தளபதியா?
சதோப்சின்ஸ்கி: அவர் தளபதி இல்லை. ஆனால் அவர் அப்படிப் பட்டவர் என்று நினைப்பீர்கள்: அவ்வளவு நாகரிகமான நல்ல பழக்கவழக்கம் உள்ளவர்!
ஆன்னா அந்திரேயெவ்னா: அப்படியா னால், இந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள் எவர் அவராகத்தான் இருக்க வேண்டும்.
கோப்சின்ஸ்க: அவரே தான். அவர் இப் படிப்பட்டவர் என்று கண்டுபிடித்ததே நான் தான். நானும் பியோத்தர் இவானவிச்சும்.
ஆன்னா அந்திரேயெவ்னா: நடந்தது என்ன சொல்லுங்கள்.
தோப்சின்ஸ்் சி: ஆண்டவனுக்கு நன்றி, இது வரைக்கும் எல்லாம் நன்றாகத்தான் நடந்து கொண்டு இருக்கன்றன. ஆரம்பத்தில் அந் கோன் அந்தோனவிச்சைப் படாதபாடு படுத்தி லிட்டார். ரொம்பக் கோபப்பட்டார். ஒட்டலைப் பற்றி புகார் செய்தார். அவருடன் போக முடி யாது என்றும், அவருக்காக ஜெயிலுக்கு வர முடியாது என்றும் சொல்ல விட்டார். ஆனால் அப்புறம் அந்தோன் அந்தோனவிச் மேல் குற்றமில்லை என்று தெரிந்ததும் அவர் கோபமெல்லாம் ஆறிப் போய்விட்டது. இரண்டு பேரும் ரொம்ப சந்தோஷமாகப் பேசிக்கொண்டார்கள். இப்போது தருமசாலை களைப் பார்க்கப் போய்க் கொண்டு இருக்
66
கிறார்கள்... ஆரம்பத்தில் அவரைப் பற்றி யாரும் சொல்லிவிட்டார்களோ என்று மேயர் நினைத்தார். எனக்குமே கொஞ்சம் கலக்க மாகப் போய்விட்டது.
ஆன்னா அந்திரேயெவ்னா: நீங்கள்தான் பணியில் இல்லையே. உங்களுக்கு எதற்காகக் கலக்கம்?
தோப்சின்ஸ்த: அவர் மாதிரி பெரிய அதி காரியைப் பார்த்தால் பயம் ஏற்படும்.
ஆன்னா அந்திரேயெவ்னா: இந்தா... ஆனால் இது எல்லாமே முட்டாள்தனம். எல்லாவற்றையும் விவரமாகச் சொல்லுங்கள். அவர் எப்படி இருக்கிறார்? வயதானவரா இளைஞரா?
கோப்சின்ஸ்்கி: நல்ல இளைஞர். இருபத்து மூன்று தான் இருக்கும். ஆனால் வயதான வர் மாதிரிப் பேசுவார். அவர் சொல்வார்: “சரி, இந்தா இதைப் பார்ப்போம், இந்தா அதையுந்தான்.”' (கைகளை அங்குமிங்கும் ஆட்டுகறார்.) எல்லாம் நன்றாகத்தான் (இருக் தறது. ““நான் படிக்கவும் எழுதவும் விரும்பு தறேன். ஆனால் அறையிலோ வெளிச்சம் இல்லை”: என்பார்.
ஆன்னா அந்திரேயெவ்னா: ஆனால் அவர் எப்படி இருக்கிறார்? நான் கேட்பது தலைமுடி இளம் பொன்நிறமா கருப்பா?
கோப்சின்ஸ்க: நல்ல பழுப்பு நிறம், ஆனால் கழுகுப் பார்வை. திடீர் திடீரென்று அங்கு மிங்கும் திரும்பும். உங்களுக்குமே சங்கடமா கப் போய்விடும்.
87
ஆன்னா அந்திரேயெவ்னா: இந்தக் குறிப்பு எதைப் பற்றி? (படிக்கறாள்.) “ “அன் பே, நான் அவசரமாகத் தெதரியப்படுத்து தறேன். ஆரம்பத்தில் ஒரு பெரிய ஆபத் தில் மாட்டிக் கொண்டது போல இருந்தா லும் ஆண்டவனின் கருணையால் இரண்டு ஊறல் வெள்ளரிக்காய், பாதி அளவு காவி யர் ஒரு ரூபிள் இருபத்தைந்து கோபெக்...”” (நிறுத்துகறாள்.) எனக்கு ஒன்றுமே புரிய வில்லை: ஊறல் வெள்ளரிக்காயும் காவிய ரும் என்ன?
சோப்சின்ஸ்க: அவசரத்தில் அங்கே இடந்த சின்னத்தாளில் எழுதியிருப்பார். அது ஒட்டல் பில்லாக இருக்கும்.
ஆன்னா அந்திரேயெவ்னா: ஆமாம், ஒரு பில்தான். (தொடர்ந்து படிக்கறான் .) “ஆனால் ஆண்டவனின் கருணையால் எல்லாம் சரியாகி விடும். நம்முடைய சிறப்பு லிருந்த னருக்காக மஞசள் சுவர்த்தாள் ஒட்டப்பட்ட அந்தச் சுத்தமான அறையைத் தயார் செய். சாப்பாட்டைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். நாங்கள் தருமசாலையிலேயே சாப்பிடுகிறோம். ஆனால் முதல்தர ஒயின் நிறையச் சொல்லி வை; கடைக்காரன் அப்தூலினுக்கு உடனே ஆள் அனுப்பு. அவன் கொடுக்கவில்லை என் றால் அவன் கடைக்கு நானே சென்று நில வறையில் பார்ப்பேன் என்று சொல். அன் புடன் அந்தோன்.” அட ஆண்டவனே, எல் லாம் சீக்கிரமாகச் செய்ய வேண்டி இருக்க தே! எய், மீஷ்கா!
68
தோப்சின்ஸ்௪ி (கதவை நோக்க ஓடிக் கத்து ஐறார்): மீஷ்கா! மீஷ்கா! மீஷ்கா!
மீஷ்கா நுழைகிறான்.
ஆன்னாஅந்திரேயெவ்னா: கேட்டுக்கொள்: அப்தூலின் கடைக்கு ஒடு... பொறு, நான் ஒரு .குறிப்புத் தருகறேன்.... (உட்கார்ந்து பேசிக் கொண்டே எழுதுகறாள்.) இந்தக் குறிப்பைக் குதிரை வண்டிக்காரன் சீதரிடம் கொடுத்து அப்தூலின் கடைக்கு ஓடி.ப்போய் ஒயின் வாங்கிவரச் சொல்லு. நீ போய் ரொம்ப முக்கியமான விருந்தாளிக்காக அந்தத் தனி அறையை எற்பாடு செய். படுக்கை, கை கழு வத் கொட்டி எல்லாம் இருக்க வேண்டும்.
தோப்சின்ஸ்க: நான் போய். ஆய்வு எப்படி நடக்கறது என்று பார்த்துவிட்டுப் போறேன்.
ஆன்னா.அந்திரேயெவ்னா: நீங்கள் போ கலாம், நான் நிறுத்தி வைக்கவில்லை.
தோப்சின்ஸ்தி வெளியேறுகிறார்.
காட்டு 3
ஆன்னா அந்திரேயெவ்னாவும் மரியா அந் தானவ்னாவும்.
ஆன்னா அந்திரேயெவ்னா: மரியா, என்ன லிதமாக நாம் உடையணிய வேண்டும் என பது பற்றி யோசிக்க வேண்டும். அவரோ
69
தலைநகர வாசி: நம்மைப் பார்த்துக் கேலி செய்வது மாதிரி இருக்கக் கூடாது. உனக்கு நீல நிற ஆடை பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கறேன்.
மரியா அந்தேதோனவ்னா: போம்மா, எனக்கு அது வேண்டாம்! எனக்கு அது பிடிக் கவே இல்லை. திருமதி லியாப்சன்- தியாப் இன் அதே நிறத்தில் அணிதிறாள். ஸெம்லிய னீக்காவின் மகளும் நீல ஆடையில் தான் இருக்கிறாள். நான் அந்தப் பூப் போட்டதை உடுத்திக் கொள்கிறேன்.
ஆன்னா அந்திரேயெவ்னா: பூப் போட்ட உடை! நீ எப்போதுமே சரியில்லாததைத் தான் சொல்வாய். உனக்கு நீலந்தான் நன் றாக இருக்கும். ஏனென்றால் நான் செம்மஞ் சள் உடுத்தப் போகறேன். எனக்கு செம்மஞ் சள் நிறம் எவ்வளவு பிடிக்கும் என்பது உனக் குத் தெரியும்.
மரியா அந்தோனவ்னா: செம்மஞ்சள் நிறம் வேண்டாம்மா. அது உங்களுக்குப் பொருந்தாது!
ஆன்னா அந்திரேயெவ்னா: ஏன் பொ ருந்தாது, தெரிந்து கொள்ளலாமா?₹
மரியா அந்தோனவ்னா: எனென்றால், செம்மஞ்சள் நிறத்திற்கு கண் கருப்பாக இருக்க வேண்டும்.
ஆன்னா அந்திரேயெவ்னா: அதுவும் சரி தான்! எனக்குக் கருத்த கண் இல்லை என்று இவள் சொல்லப் பார்க்கிறாள்! என்ன பிதற் றல்! சீட்டுப் போட்டுக் குறிசொல்லும் போது
90
நான் எப்போதுமே இளாவர் ராணிதான் எடுப்பேன் என்பது அவளுக்குத் தெரியும்.
மரியா அந்தோனவ்னா: ஆனால், அம் மா, நீங்கள் ஆடுதன் ராணி மாதிரி இருக் இநீர்கள்.
ஆன்னா அந்திரேயெவ்னா: சும்மா உள றாதே.. நான் எப்போதுமே ஆடுதன் ராணி மாதிரி இருப்பதில்லை. (மகளுடன் வேகமாகப் போகறாள். திரைக்குப் பின்னே பேசிக் கொண் டிருக்கறாள் .) உண்மையாகவா? நான் என்ன ஆடுதன் ராணியா? அடுத்து என்னைப் பற்றி என்ன சொல்வாளோ?
அவர்கள் வெளியே போகும் போது கதவு திறக்கிறது.
மீஷ்கா குப்பையைப் பெருக்கித் தள்ளுகிறான். மற்
றொரு கதவு வழியாக ஒரு சூட்கேசைத் தலையில் சுமந்தபடி ஒசிப் நுழைகிறான்.
காட்சி 4
மீஷ்காவும் ஓஒசிப்பும்.
ஒசிப்: இதை எங்கே வைக்க வேண்டும்?
மீஷ்கா: இங்கே கொண்டு வாருங்கள், மாமா.
ஒசிப்: கொஞ்சம் பொறு. மூச்சு வாங்கிக்கொள் திறேன். என்ன நாய் மாதிரி வாழ்க்கை! வெறும் வயிற்றில் எந்தப் பாரமும் அதிகம் கனக்கிறது!
91
மீஷ்கா: மாமா, தளபதி சீக்கரம் வந்து விடு வாரா? ப
ஒசிப்: எந்தத் தளபதி?
மீஷ்கா: என், உங்களது எசமானர்தான்.
ஒசிப்: என் எசமானரா? அவர் தளபதியா எண்ன?
மீஷ்கா: அவர் தளபதி இல்லையா?
ஒசிப்: ஆமாம். அவர் தளபதிதான். அதற்கும் மேலே. ல் ப
மீஷ்கா: அப்படியானால் அவர் தளபதிக்கும் மேலான அதிகாரியா?
ஒசிப்: நீ பந்தயம், கட்டுகறாயா!
மீஷ்கா: அப்படியா! அதனால்தான் அவர் கள் அவரைப் பற்றி அப்படிக் குழப்பி விட் டார்கள்.
ஒசிப்: கொஞ்சம் பாரு; இளைஞனே. நீ சாது ரியமான ஆள் என்று .நினைக்கறேன். ஏதா வது சாப்பிடக் இடைக்குமா?
மீஷ்கா: இப்போதைக்கு உங்களுக்காக எது வுமே தயாராகவில்லை. உங்களுக்கு எதுவும் சாதாரணமானதைச் சாப்பிட முடியாது. உங்க ளது எசமானர் உண்ணப் போகும் போது அவருக்கு வைப்பது உங்களுக்கும் கடைக்கும்.
ஒசிப்: ஏதோ சாதாரணமானது என்று சொன் னாயே, அது என்ன?
மீஷ்கா: முட்டைக்கோசு சூப்பும் பொங்கலும் சமோசாவும். |
ஒசிப்: உடனே போய், சூப்பு பொங்கல் சமோ சா எல்லாம் கொண்டுவா! ஒரு மாறுதலுக் காக இப்போது சாதாரணமான்தைச் சாப்பிடு
22
வேன்! வா, இந்த சூட்கேசை எடுத்து வைப் போம். போவதற்கு வேறு பாதை இருக்கிற
தா? மீஷ்கா: ஆமாம்.
இருவருமாக சூட்கேசை பக்கத்து அறைக்குக் கொண்டு செல்கிறார்கள்.
காட்டு 5
இரட்டைக் கதவை போலீசார் திறக்கிறார்கள். திலெஸ்தக்கோவ் நுழைக£றார்; அவர் பின் வர மேயர், தருமசாலை அதிகாரி, பள்ளி ஆய் வாளர், தோப்சின்ஸ்கி, மூக்கில் பிளாஸ்திரியு டன் போப்சின்ஸ்த நுமைகறார்கள். தரையில் இடக்கும் ஒரு காகிதத் துண்டை மேயர் போலீசாருக் குச் சுட்டிக் காட்டூறார். இருவரும் திடீரெனப் பாய்ந்து உடனே எடுக்கிறார்கள், அவசரத்தில் ஒரு வரையொருவர் மோதிக் கொள்கிறார்கள்.
தஇலெஸ்தக்கோவ்: நல்ல தருமசாலைகள்! இந்த நகரத்தில் பார்வையாளர்களுக்கு நீங் கள் எல்லாவற்றையும் காட்டுவது எனக்குப் பிடித்திருக்கிறது. மற்ற ஊர்களில் எனக்கு ஒன்றையுமே காட்டமாட்டார்கள்.
மேயர்: நான் கொஞ்சம் விளங்கச் சொல் வதாக இருந்தால், மற்ற ஊர்களில் மேயர்க ளும் அதிகாரிகளும் தங்கள் பையை நிரப்புவ தில் தான் கவனமாக இருப்பார்கள். ஆனால் நாங்கள் உண்மையில் ஒரு முன் உதாரணத் தினாலேயும், சிறந்த கவனத்தினாலேயும்
93
எங்கள் மேலதிகாரிகளை எப்படித் திருப்திப் படுத்துவது என்பதிலேயே கவனமாக இருப் போம்.
கிலெஸ்தக்கோவ்: நல்ல சாப்பாடு. மூக்கு முட்டச் சாப்பிட்டு விட்டேன். நாள்தோறும் இப்படிப்பட்ட உணவுதான் சாப்பிடுவீர்களா?
மேயர்: அதெல்லாம் இல்லை. எங்களுடைய சிறப்பு விருந்தினருக்காகத் தனிக் கவனத் துடன் சமைக்கப்பட்டது.
திலெஸ்தக்கோவ்: சொல்லப் போனால் சாப் பிடுவதில் எனக்கு அலாதிப் பிரியம். வாழ்க் கையில் அப்புறம் என்னதான் இருக்கறது, இன்பத்தைச் சுவைக்கவில்லை என்றால். ருசியாக இருந்ததே அது என்ன மீன்?
தருமசாலை அதிகாரி: விரால், பிரபுவே.
திலெஸ்தக்கோவ்: அப்படியா? ரொம்ப ௬௫. மருத்துவமனையில் தானே சாப்பிட்டோம், இல்லையா?
தருமசாலை அதிகாரி: அப்படித் தான், ஐயா.
கிலெஸ்தக்கோவ்: ஆமாம், அங்கே சில படுக்கைகளைக்கூடப் பார்த்தேன். அதிகமான நோயாளிகளைக் காணோம். அவர்கள் குண மடைந்து விட்டார்களா?
கருமசாலை அதிகாரி: ஒரு டஜன் பேர் கங்கியிருக்கறார்கள். மீதிப் பேருக்குக் குண மாகவிட்டது. நாங்கள் அதை நடத்தும் வித மே அப்படித்தான். நான் நிர்வாகத்தை ஏற்றுக் கொண்ட உடனேயே நீங்கள் நம்பக் கூட மாட்டீர்கள் -— சீக்கிரமாகவே குணமடை
94
இறார்கள். ஒரு நோயாளி மருத்துவமனை யில் காலடி எடுத்து வைக்க வேண்டியதுதான் குணமடைூறான். மருந்துனாலேதான் என் பதை விட நல்ல ஒழுங்கனாலும் கவனிப்பி னாலும் என்பது உண்மை.
மேயர்: ஒரு மேயருடைய கடமைகளோடு ஒப் பிடும் போது இதெல்லாம் அற்பம். எவ்வளவு காரியங்கள் செய்ய வேண்டி இருக்கிறது: வீதிகளைச் சுத்தப்படுத்துவது, ப்முது திருத்து வது, புதுப்பிப்பது... சிறந்த அறிவாளியையே குழப்புவது மாதிரி அவ்வளவு பிரச்சினை. ஆண்டவனின் இருபையால் எல்லாம் ஒழுங் காக இருக்கறது. வேறு மேயர்கள் சொந்த நலத்தையே பெரிதாக நினைக்கறார்கள். ஆனால் நானோ, படுக்கப் போகும் போது ் ஆண்டவா, என் மேலதிகாரிகள் என் ஆர்வத் தைக் கண்டு என் மீது சந்தோஷப்படட்டும்! :” என்று பிரார்த்தனை செய்கிறேன். எனக்கு வெகுமதி கொடுக்கிறார்களா இல்லையா என் பது வேறு விஷயம். எப்படியும் நான் நிம் மதியாக இருப்பேன். நகரத்திலே ஒழுங்கு நிலவி, வீதிகள் பெருக்கப்பட்டு, கைதிகள் நன்கு கவனிக்கப்பட்டு, வெளியில் குடிகாரர் கள் அதிகமாக நடமாடாத படி பார்த்துக் கொள்ளப்பட்டால்... வேறு என்ன தான் எனக்கு வேண்டும்? வெறும் விருது எனக் குப் பிடிக்காது. சிலரைக் கவரும் என்பது எனக்குத் தெரியும். ஆனால் என்னைப் பொருத்த மட்டில் நல்லதுதான் பரிசு.
கருமசாலை அதிகாரி (ஒருபுறமாக): கேளுங்
95
கள் எப்படிப் பெருமையடிக்கிறார் என்று! வாய்வீச்சுக்காரன்!
திலெஸ்தக்கோவ்: உண்மை, உண்மை! நா னும் கொஞ்சம் மனோதத்துவ விசாரணை மில் ஈடுபடக் கூடியவன். ஒரளவு உரைநடை, ஒன்றிரெண்டு பாக்கள்... அதுதான் உங் களுக்குத் தெரியுமே.
போப்சின்ஸ்கி (தோப்சின்ஸ்கயிடம்): முழுக்க உண்மை, பியோத்தர் இவானவிச்! அவர் சொல்லும் விதம் அப்படி இருக்கறது... விஞ் ஞானத்தைக் கரைத்துக் குடித்தவர் என்று சொல்லலாம்?
திலெஸ்தக்கோவ்: இந்த ஊரில் பொழுது போக்குக்கு ஒன்றுமே இல்லையா? சீட்டாட் டத்திற்குக் கழகம் எதுவும் உண்டா?
மேயர் (ஒருபுறமாக): ஒகோ, நீ எதற்காக மோப் பம் பிடிக்கிறாய் என்பது எனக்குத் தெரியும்! (உரக்க.) அட, ஆண்டவா! அந்த மாதிரி எதுவும் இந்த நகரில் நடப்பதைப் பொறுத் துக் கொள்ள மாட்டேன்! என் வாழ்க்கையில் இந்தச் சீட்டுகளை த் தொட்டது கிடையாது. அப் படியே தொட்டிருந்தாலும் இந்தச் சீட்டுகளை என்ன செய்வது என்று தெரியாது. அமை தியாக அவற்றைப் பார்க்கவும் எனக்கு முடி யாது. எதாவது ஒரு டயமண்ட் ராஜாவைப் பார்த்துவிட்டேன் என்று வைத்துக் கொள் ளுங்கள், என் வயிறே வாய்க்கு வந்துவிடும். பிள்ளைகளுக்காக விளையாட்டுக்குச் சும்மா சீட்டுகளை வைத்து ஒரு வீடு கட்டினேன். அந்த ராத்திரி பூரா நாசமாய்ப்போன இந்தச்
96
சீட்டுகளைப் பற்றியே கனவு கண்டேன். மக் கள் தங்களுடைய அருமையான நேரத்தை எல்லாம் வீணாக்குவதை நினைக்கும் போது, அப்பப்பா!
பள்ளி ஆய்வாளர் (ஒருபுறமாக): காலிப் பயல், என்னிடமிருந்து நேற்று ராத்திரி நூறு ரூபிள் பிடுங்கினான்.
மேயர்: "என் நேரமெல்லாம் சமூக சேவைமி லேயே நன்றாகக் கழிகிறது. “
தலெஸ்தக்கோவ்: நீங்கள் அதைப் பற்றிச் சொல்வதெல்லாம் சரி என்று சொல்லமாட் டேன்... இருந்தாலும் ஒவ்வொருவரும் விஷ யத்தை ஒவ்வொரு கோணத்தில் பார்ப்பார் கள். ஆனால் ஒருவனுக்கு எப்படி ஆடுவது என்று தெரிந்தால்... கையில் உள்ள சட்டு களை வைத்தே எவ்வளவோ இன்பத்தை அ நுபவிக்கலாம்.
காட்டு 6
ஆன்னா அந்திரேயெவ்னாவும் மரியா அந் தோனவ்னாவும் நுழைதறார்கள்.
மேயர்: பிரபுவே, என் மனைவியையும் மக ளையும் உங்களுக்கு அறிமுகப்படுத்த அநு மதியுங்கள்.
திலைஸ்தக்கோவ் (தலைவணங்கி): அம்மை யீர்! நீங்கள் இங்கு இருக்கும் போது ஏற் படும் ஆனந்தத்தை நினைக்க என் மனம் களிப்படைகிறது.
97 7-79
ஆன்னா அந்திரேயெவ்னா: மிக முக்கிய மான ஒரு விருந்தினருடன் இருக்கிறோம் என்பதை எண்ணும் போது எங்களது மகழ்ச்சி இன்னும் அதிகமாகிறது.
திலெஸ்தக்கோவ் (மிகவும் பூரிப்புடன்): எல் லா மகழ்ச்சியுமே எனக்குத்தான், அம்மை (பீர்.
ஆன்னா அந்திரேயெவ்னா: உண்மையில் பாராட்டுக்காகச் சொல்கிறீர்கள். தயவுசெய்து உடகாருங்கள்.
திலெஸ்தக்கோவ்: உங்கள் பக்கத்தில் நிற் பதே எனக்குப் பேரின்பம். இருந்தாலும் நீங் கள் பிடிவாதம் செய்வதால் உட்காரு$றேன். (உட்கார்கறார்.) உங்கள் அருகில் அமர்வதே ஒர் இன்பம்.
ஆன்னா அந்திரேயெவ்னா: இல்லையில் லை, நீங்கள் உண்மை சொல்வதாக என் னால் நம்ப முடியவில்லை. பீட்டர்ஸ்பர்க்கில் இருந்து வந்ததில் டிரிப் மகழ்ச்சியற்று இருந் திருக்கும் என்று நம்புகிறேன்.
திலெஸ்தக்கோவ்: மிகவும் மகழ்ச்சியற்றது. ஹை சொளைட்டியில் இருந்து பழகிய நான் திடீரென்று இப்படி டிரிப் மேற்கொள்ள வேண்டியதாயிற்று: அழுக்கடைந்த விடுதி கள், கலாசாரப் பாலைவனம்... ஆனால் இந்த மகிழ்ச்சியான சந்திப்பு... (ஆன்னா அந் திரேயெவ்னாவைப் பார்த்துப் பூரித்து அவ ளைக் கவர முயல்கறார்) எல்லாவற்றையும் பயனுள்ளதாக்கவிட்டது. ...
ஆன்னா அந்திரேயெவ்னா: இருந்தா
98
லும் உங்களுக்கு இது மிகவும் விரும்பத் தகாததாகத்தான் இருக்க வேண்டும். இலெஸ்தக்கோவ்: அந்த விநாடியை, மேடம், மிகவும் விரும்புவதாகக் கருதுகிறேன். ஆன்னா அந்திரேயெவ்னா: நீங்கள் என் னை மிகவும் புகழ்கிறீர்கள். நான் அதற்குத் ககுதியானவள் அல்லள். இலெஸ்தக்கோவ்: ஏன் இல்லை? மேடம், நீங்கள் மிகவும் தகுதியானவர்தான். ஆன்னா அந்திரேயெவ்னா: ஆனால் நான் ஒரு நாட்டுப்புறத்தாள். திலெஸ்தக்கோவ்: ஆமாம், நாட்டுப் புறம்... குன்றுகளும் ஒடைகளும் உள்ள பகுதி... பீட்டர்ஸ்பர்க்குடன் இதை ஒப்பிட முடியாது என்பது உண்மை! ஓ, பீட்டர்ஸ்பர்க்! அதில் தான் வாழ்க்கையே இருக்கறது! நான் ஏதோ ஒரு சாதாரண எழுத்தன் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் நானும் எனது துறை மின் மேலதிகாரியும் நெருங்கிய நண்பர்கள். என் கோளில் ஒரு தட்டுத் தட்டி, “சாப்பிட வாப்பா!” என்று பிரியமாக அழைப்பார். இரண்டூ நிமிஷம் அலுவலகத்துக்குள் தலை யை நீட்டி, “ “அதை அப்படிச் செய், இதை இப்படிச் செய்!” என்று சொல்லிவிட்டு வந்து விடுவேன். பிறகு பிரதி எடுக்கும் எழுத்தன் எலி பிறாண்டுவது போல எழுதத் தொடங்கு வான். எனக்கு ஒரு சமயம் பதவி உயர்வு குர முன்வந்தார்கள். என்ன பயன் என்று நினைத்து மறுத்து விட்டேன். என்னைப் பிடிக்க காவல்காரன் பிரஷுடன் மாடிக்கு ஒடி
100
வருவான், ““சார், உங்க பூட்சுக்கு பாலிஷ் போட விடுங்க?” என்று. (மேயரை நோக்க.) நீங்கள் எல்லாம் என் நின்று கொண்டு இருக் இறீர்கள்? சும்மா உட்காருங்கள்!
மேயர்: இந்தப் பதவிக்கு நிற்கலாம்.
தருமசாலை அதிகாரி:நாங்கள் சும்மா நிற் தறோம்.
பள்ளி ஆய்வாளர்: நீங்கள் ஒன்றும் சிரமப் பட வேண்டாம்!
தஇலெஸ்தக்கோவ்: தயவு செய்து நீங்கள் உட்காரத்தான் வேண்டும்.
மேயரும் மற்றவர்களும் உட்கார்கிறார்கள்.
எனக்கு இந்தச் சடங்கெல்லாம் பிடிக்காது. அதற்கு மாறாக, நான யார் என்று காட்டிக் கொள்ளாமல் இருக்கத்தான் விரும்புகிறேன். ஆனால் அது முடியவில்லை. முடியவே முடி யாது! இப்படிப் போய்த் திரும்ப வேண்டியது தான், உடனே எல்லாருமாகச் சேர்ந்து “பா ருங்கள், அதோ இவான் அலெக்சாந்தரவிச்!”' என்று கத்துவார்கள். என்னை ஒரு சமயம் படைத் தளபதியாகக் கருதினார்கள். போர் வீரர்கள் திடீரென்று காவல் மனையிலிருந்து ஒடி வந்து என் முன்னால் நின்று மரியா தை செய்தார்கள். பிறகு அவர்களுடைய அது காரி- அவர் எனக்கு நெருங்கிய நண்பராக இருந்து விட்டதால் என்னைப் பார்த்துச் சொன்னார்: “பாரு, நண்பனே, நீதான் எங்களுடைய தளபதி என்று நாங்கள் அவ் வளவு நிச்சயமாக நம்பினோம்!”்
101
ஆன்னா அந்துிரேயெவ்னா: அப்படியா! திலெஸ்தக்கோவ்: ஆமாம், என்னை எல் லாரும் அறிவார்கள். எனக்கும் எல்லா அழ தய நடிகைகளையும் தெரியும். பலவிதமான பாடல்கள் கொண்ட நகைச்சுவை நாடகங்க ளை நான் எழுதுவேன்... எழுத்தாளர்களை அடிக்கடி சந்திப்பேன்... பூஷ்கனும் * நானும் நெருங்கிய தோழர்கள். அடிக்கடி அவரும் நானும் சந்தித்துக் கொள்வோம். “என்ன, நண்பனே, எப்படி இருக்கிறாய்?” என்று கேட்பேன். ““பரவாயில்லை, நண்பனே?” என் பார். பூஷ்கின் ஒரு ஜாலியான பேர்வழி. ஆன்னா அந்திரேயெவ்னா: அப்படியா னால் நீங்கள் ஒர் எழுத்தாளர் என்று சொல் லுங்கள். இவ்வளவு ஆற்றல் இருப்பது எவ் வளவு நேர்த்தியானது! நீங்கள் இலக்கய சஞ் சிகைகளுக்கு எழுதுகிறீர்களா? தஇலைஸ்தக்கோவ்: ஆமாம், இலக்கிய சஞ்சி கைகளில் கொஞ்சம் வெளியிட்டிருக்கிறேன். ஏற்கெனவே பல எழுதியிருக்கறேன்: ““பிகா சோவின் கல்யாணம்,” “சாத்தான் ரோ பார்ட்”, ““நோர்மா””. ** எல்லாப் பெயர்க
* அலெக்சாந்தர் பூஷ்கின் (1799-— 1837)-- மாபெ ரும் ருஷ்யக் கவிஞர், நவீன ருஷ்ய இலக்கியத்தின் பிதாமகன், ருஷ்ய இலக்கிய மொழியைத் தோற்று வித்தவர்.
** இவை அக்காலத்தில் புகழ்பெற்ற “ஒப்பரா' இசை நாடகங்கள்.
102
ளும் இப்போது எனக்கு நினைவு இல்லை. எல்லாமே சந்தாப்பவசமாக நடந்ததுதான். நான் எழுத விரும்பவில்லை, ஆனால் தியேட் டர் மானேஜர் என்று சொல்லி பெருமைய டித்துக் கொள்பவர்கள் என் பின்னாலேயே வந்து, “நண்பனே, எங்களுக்காக எதாவது எழுது”? என்று கேட்பார்கள். ““சரி, ஏதோ கொஞ்சம் பார்க்கலாம்” என்று நினைத் தேன். பாருங்கள், அன்றைக்குச் சாயங்காலமே உட்கார்ந்து அவ்வளவையும் எழுதி முடித்து விட்டேன். சிந்திப்பதற்கான வசதி எனக்கு முழுமையாக இருக்கிறது. பேரன் பிராம்பியஸ் எழுதியது, ““நம்பிக்கைப் போர்க்கப்பல்”, ்“ மாஸ்கோ டெலி௫ராப்”'... இதெல்லாம் உண் மையில் என்னுடையதுதான். ஆன்னா அந்திரேயெவ்னா: நீங்கள் தான் பேரன் பிராம்பியஸ் என்று சொல்லிக் கொள்ள விரும்பவில்லையா? கலெைஸ்தக்கோவ்: அவ்வப்பொழுது அவர் எழுதியதை நான் தான் திருத்திக் கொடுப் பேன். அதற்காக மட்டும் ஸ்மிர்தீன்* ஆண் டுக்கு நாற்பதனாயிரம் கொடுத்தார். ஆன்னா அந்திரேயெவ்னா: “யூரி மிலோஸ் லாவ்ஸ்கி””யும் உங்களுடையது தானோ? கலெஸ்தக்கோவ்: ஆமாம், என்னுடைவற் றில் அதுவும் ஒன்று.
* ௮. ஸ்மிர்கூன் (1795-—1857)-—ருஷ்யப் புத்தக 2 வளியீட்டாளரும் விற்பனையாளரும்.
103
ஆன்னா அந்திரேயெவ்னா: அப்படித்தான் இருக்க வேண்டும் என்று நினைத்தேன்.
மரியா அந்தோனவ்னா: அம்மா, ஆனால் அட்டையில் திரு. ஸகோஸ்கீன் எழுதியது என்று இருக்கறது.
ஆன்னா அந்திரேயெவ்னா: இதிலும் தக ராறுக்கு வந்துவிட்டாயா?
தலைஸ்தக்கோவ்: ஆமாம், அது உண்மை. அது ஸகோஸ்கினால் எழுதப்பட்டது தான். ஆனால் இன்னொரு “யூரி மிலோஸ்லாவ் ஸ்கி்் இருக்கறது. அதை எழுதியது நான் தான்.
ஆன்னா அந்திரேயெவ்னா: அப்படியா னால் நான் படித்தது நீங்கள் எழுதியது தான். அது எவ்வளவு அருமையாக எழுதப் பட்டு இருக்கறது.
தஇலெஸ்தக்கோவ்: நான் இலக்கயத் திற்காக வே வாழ்பவன். பீட்டர்ஸ்பர்க்கலேயே சிறந்த லீடு என்னுடையது. எல்லாருக்கும் தெரியும். ் அதுதான் இவான் அலெக்சாந்தரவிச்சினு டைய லீடு” என்று பேசிக் கொள்வார்கள். (எல்லாரையும் பார்த்து.) கனவான்களே, எப்போதாவது பீட்டர்ஸ்பர்க்கற்கு நீங்கள் வருவதாக இருந்தால் தயவுசெய்து என் வீட்டிற்கு வாருங்கள். நடன விருந்துகளும் கருவேன்.
ஆன்னா அந்திரேயெவ்னா: அதெல்லாம் எவ்வளவு சிறப்பாகவும் நேர்த்தியாகவும் இருக்கும் என்று நான் கற்பனை செய்துபார்க்
தறேன்.
104
கலெஸ்தக்கோவ்: அவை விவரிப்பதற்கு அப்பாற்பட்டவை. உதாரணமாக, வருகிறவர் களுக்கு முலாம்பழம் வழங்கனேன்--- அதற்கு எழு நூறு ரூபிள் செலவானது. பாரிசிலி ருந்து ஒரு பானை சூப்பு கப்பலில் கொண்டு வரப்பட்டது. மூடியைத் இறந்தவுடன் அடிக் கும்- வாசனையை எங்கேயுமே காண முடி யாது. நாள்தோறும் எங்கேயாவது நடன விருந்து ஒன்றில் கலந்து கொள்கிறேன். அல்லது யாராவது நான்கு பேருடன் சேர்ந்து சீட்டாடிக் கொண்டிருப்பேன்: வெளிநாட்டு அமைச்சர், பிரெஞ்சுத் தூதர், பிரிட்டீஷ் தூதர், ஜெர்மன் தூதர், நான். சில சமயங் களில் தூக்கம் வந்து சாய்கிற வரை விளை யாடிக் கொண்டிருப்போம். எனக்கு மட்டும் நான்காவது மாடி வரைக்கும் வேகமாகப் போவதற்கான பலம் உண்டு. சமையல் காரி யைப் பார்த்து “என் கோட்டை எடு, மாவ் ரூஷ்கா...”' என்பேன். ஆண்டவனே, நான் என்ன சொல்றேன் -- முதலாவது மாடியைக் குறிப்பிடுகிறேன். என், மாடிப்படியின் மதிப்பு மட்டும்... காலையில் நான் எழும் முன்பே எனது வரவேற்பு அறையில் கோமகன்களும் பிரபுக்களும் குழுமி இருப்பார்கள். தேனீக்கள் மாதிரி ரீங்காரம் செய்வார்கள்... சில சமயம்
பிரதம மந்திரியே வந்திருப்பார்.
மேயரும் மற்றவர்களும் பயந்தபடியே எழுந்து நிற் இ
றார்கள்.
105
எனக்கு வரக் கூடிய கடிதங்களில் கூட “மாட்சி மை தங்கய”' என்று அடைமொழி இருக்கும். ஒரு சமயம் நான் ஒரு துறைக்குப் பொறுப் பாக இருந்தேன். அது ஒரு மாதிரியான பணி. டைரகடர் இடீரென்று மறைந்து போய்விட் டார். எங்கே என்று யாருக்கும் தெரியாது. ஆகவே, அவருடைய இடத்தில் யார் இருப்பது என்பது ஒரு பிரச்சினையானது. எல்லாவகை யான தளபதிகளும் போட்டி போட்டுக் கொண்டு முன் வந்தார்கள், ஆனால் பணி என்ன என்று தெரிந்த உடனே இது மிகவும் கஷ்டமானகெனப் போய் விட்டார்கள். மே லெழுந்த வாரியாகப் பார்த்தால் பணி சுலப மாகத் தெரியும். ஆனால் அருகில் போனால் தான் அதனுடைய கஷ்டம் தெரியும். கடைசி மில் அவர்கள் என்னைக் கூப்பிட வேண் டியதாயிற்று. நகரம் முழுவதும் எடுபிடியாட் கள், புலனறிபவர்கள், தூதர்கள் என்று பலரையும் அனுப்பிக் கொண்டிருந்தார்கள். எல்லாம் மொத்தமாக முப்பத்தைந்து ஆயி ரம் பேர் இருக்கும். “என்ன விஷயம்?” என்று கேட்டேன். ““இவான் அலெக்சாந்தர விச், வந்து துறையின் பொறுப்பை எற்றுக் கொள்ளுங்கள்!” என்றனர். எனக்கே தூக்கி வாரிப் போட்டது என்பதை ஒப்புக் கொண் டாக வேண்டும். நான் அப்போது இரவு உடை மில் இருந்தேன். அதை உதறித் தள்ளிவிட விரும்பினேன். ஆனாலும் அரசருடைய கா தில் விழுந்து எனது பெயருக்குக் கறை எற் படக் கூடாதே என்று நினைத்தேன்... ““சரி,
106
உங்கள் வற்புறுத்தலுக்காக நான் ஒப்புக்கொள் கறேன். ஆனால் எச்சரிக்கை செய்கிறேன்: யா ரும் இப்போது சோம்பலாக இருக்கக் கூடாது! எப்பொழுதும் கவனமாகவே இருக்க வேண் டும், இல்லை என்றால்...” நான் சொல்கிறேன். உங்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன்: அந்தத் துறைக்குள்ளாக எப்போது நுழைகறேனோ அப்போதே ஒரு பூகம்பம் உண்டானது போல இருக்கும். எல்லாருக்கும் உள்ளுக்குள்ளே ஒரே நடுக்கம்.
மேயரும் மற்றவர்களும் பயத்தினால் நடூங்குகறார் கள். இலெஸ்தக்கோவ் இன்னும் ஆத் திரமடைகறார்.
ஓ, நான் கேலியாகப் பேசவில்லை. அவர்களை எனக்குப் பயப்படும்படி செய்தேன். அமைச் சரவையே என்னைக் கண்டு மிரண்டது. நான் அப்படிப்பட்டவன்! எதுவும் முடியாது என்று பதில் வரக்கூடாது. அதைத்தான் நான் எல் லாருக்கும் சொல்கிறேன்: ““என்னைப் பற்றி எனக்குத் தெரியும். எனக்கு எங்கும் தடை யில்லை”. நாள்தோறும் அரண்மனைக்குப் போதிறேன். நாளை என்னை ஃபில்டுமார்ஷ லாக பதவி உயர்த்து... (வழுக்கி அப்படியே தரையில் பொத்தென்று விழுகிறார், ஆனால் அதிகாரிகள் அவரைப் பிடித்து மரியாதை யாக நிறுத்துகறார்கள் .)
மேயர் (முன்னால் அடி எடுத்து வைத்து, உச் சந்தலை முதல் உள்ளங்கால் வரை நடுங்க,
107
பேச முடியாது): மேன்... மேன்... திலெஸ்தக்கோவ் (வேகமாகவும் சுருக்கமாக வும்): என்ன இது? மேயர்: மேன்... மேன்... கிலெஸ்தக்கோவ்: ஒரு வார்த்தை கூட எனக்குப் புரியவில்லை. எல்லாம் உளறல். மேயர்: மேன்... மேன்மை சான்றீர்... ஒய்வு எடுக்க வேண்டுமா? அறை தயாராக இருக் கிறது. எல்லாம் தயாராக இருக்கறது. கலெஸ்தக்கோவ்: என்ன உளறல்! ஓய்வு தேவையில்லை... சரி, நீங்கள் விரும்பினால் ஓய்வு எடுக்கலாம்... நல்ல சாப்பாடு, கன வான்களே, நல்ல சாப்பாடு... எனக்குத் திருப்தி, எனக்குத் திருப்தி. (ஒப்பிக்கறார்.) விரால்! விரால்! (மேயர் தாங்கக் கொள்ள பக் கத்து அறைக்குள் தடுமாறிக் கொண்டு செல் கறார்.)
காட்சி 7
அதே ஆட்கள், கலெஸ்தக்கோவையும் மேயரையும் தலிர.
போப்சின்ஸ்த (தோப்சின்ஸ்கியிடம்): அது மனிதன்தான், பியோத்தர் இவானவிச்! அது தான் உண்மையான மனிதனுக்கு அருத்தம்! இப்படி ஒரு பெரிய மனிதனுக்கு முன்னால் நான் ஒருபோதும் நின்றது கிடையாது. பயத்தினால் செத்துப் போனேன். அவர் எந்
108
கப் பதவியைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று நினைக்கிறீர்கள்?
தோப்சின்ஸ் தி; அநேகமாக அவர் தளபதி யாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.
போப்சின்ஸ்க: தளபதி! அவரை எப்படி நீங்கள் தளபதியோடூ ஒப்பிடலாம்! குறைந் தது மகா தளபதி. அவர் என்ன செய்தார் என்று கேட்டீர்களா? நாம் இப்போதே ஓடிப் போய் லியாப்கின்- தியாப்ஜனிடமும் கரோப்இ னிடமும் சொல்வோம். போய் வருகிறோம், ஆன்னா அந்திரேயெவ்னா.
தோப்சின்ஸ்தி: போய் வருகிறோம், அம்மா!
தோப்சின்ஸ்தயும் போப்சின்ஸ்கயும் வெளியேறுகிறார் கள். தருமசாலை அதிகாரி (பள்ளி ஆய்வாள ரிடம்): நான் பயந்தே போனேன். அப்படி நடுங்கனேன். எதற்கு என்றே தெரியவில்லை. நாங்கள் சீருடைகளில் இல்லை. அவருக் குப் புத்தி தெளிந்து பீட்டர்ஸ்பர்க்கிற்கு அறிக் கை அனுப்பினால்? (பள்ளி ஆய்வாளருடன் வெளியேறுதறார்.) போய் வருகிறோம், அம்
மா.
109
காட்டு 8
ஆன்னா அந்திரேயெவ்னாவும் மரியா அந் கேோனவ்னாவும்.
ஆன்னா அந்திரேயெவ்னா: என்ன வசீ கரமான மனிதர்!
மரியா அந்தோனவ்னா: என்ன அருமை யான ஆள்!
ஆன்னா அந்திரேயெவ்னா: மிகவும் பண் பட்ட மனிதர்! இவர் தான் உண்மையில் பண்பட்டவர் என்று தெரிகிறது. தோரணை, பாவனை ஆகா மிக உயர்ந்தது! இத்தகைய இளைஞர்களைத்தான் நான் எப்போதும் புகழ்வேன்! என்னால் அடக்கவே முடியவில் லை. முக்கியமானது என்னவென்றால், என் னைப் பார்த்து அவர் அசந்து போய்விட்டார். என் மீது வைத்த கண்ணை எடுக்க முடிய வில்லை.
மரியா அந்தோனவ்னா: என்னைத்தான் அவர் பார்த்துக் கொண்டு இருந்தார், அம் மா.
ஆன்னா அந்திரேயெவ்னா: போதும், இன்றைக்கு உனது உளறல்களை எல்லாம் நிறுத்தி வைத்துக்கொள். அதற்கு எனக்கு நேரம் இல்லை.
மரியா அந்தோனவ்னா: இல்லை, அம்மா, உண்மையாகவே!
ஆன்னா அந்திரேயெவ்னா: அட, ஆண்ட வனே! சச்சரவு செய்யாமல் உன்னால் இருக்க
110
முடியாதா! எதற்காக அவர் உன்னைப் பார்த் துக் கொண்டு இருக்க வேண்டும்? அப்படிப் பார்ப்பதற்குத்தான் என்ன இருக்கறது?
மரியா அந்தோனவ்னா: அவர் என்னைக் தான் பார்த்தார் என்று சொல்கறேன். புத் தகங்களைப் பற்றிப் பேச ஆரம்பித்த போது என்னைத்தான் நேராகப் பார்த்தார். பிறகு தூதர்களிடம் சீட்டு ஆடுவது பற்றிச் சொன்ன போதும் என்னைத் தான் பார்த்துக் கொண் டே இருந்தார்.
ஆன்னா அந்திரேயெவ்னா: சரி, ஒரு மரி யாதைக்காக உன்னைப் பார்க்காமல் இருக்கக் கூடாதே என்பதற்காகப் பார்த்திருக்கலாம். “ஆகா”: தனக்குத்தானே கூறுகிறார். “அவ
ளை ஒரு பார்வை பார்க்கலாம்!
காட்சி 9 மேயர் ஓசையின்றி நுழைகறார்.
மேயர்: உஸ்! உஸ்!
ஆன்னா அந்திரேயெவ்னா!: ஏன்?
மேயர்: என், அவரைக் குடிக்க வைத்தது தவறாகப் போய்விட்டது. அவர் சொன்னவற் றில் பாதியாவது உண்மையாக இருந்ததால் எப்படி? (நினைக்கறார்.) என் அது உண்மை யாக இருக்கக் கூடாது? குடித் தவர்கள் ஒன்றை யும் மறைக்க முடியாது, உண்மை தானாக
வெளிவரும். நிச்சயமாக, கொஞ்சம் அழகு
111
படுத்தி இருக்கிறார்; இருந்தாலும் இந்தக் காலத்தில் யார்தான் பேச்சில் பொய்யைக் கலக்கவில்லை? மந்திரிகளுடன் சீட்டாட்டம், அரண்மனைக்குச் செல்லு தல். .. உண்மையில், அதை நினைக்க நினைக்க என் தலை சுற்று திறது. ஏதோ ஒரு கழு மரத்திலோ கோ புர உச்சியிலோ இருப்பது போன்ற பிரமை.
ஆன்னா அந்திரேயெவ்னா: எனக்கு அவ ரைப் பற்றி பயமே இல்லை; அவரை ஒரு பண்பட்ட உயர்ந்த மனிதனாகத்தான் பார்க் தறேன். அவரது பதவியைப் பற்றி எனக்கு அக்கறை இல்லை.
மேயர்: பெண்களே! இந்த ஒரு சொல்லே போதுமானது... பொருத்தம் இல்லாததைத் தான் உங்களால் நினைக்க முடியும். அடுத்து என்ன உளறுவீர்கள் என்பதே உங்களுக்குத் தெரியாது. என் தலைதான் உருளும், உங்க ளஞுடையது இல்லை! யாரோ ஒரு தோப்சின்ஸ் தயுடன் பேசுவது போல அவ்வளவு சுதந்திர மாகப் பேசுகிறீர்கள்!
ஆன்னா அந்திரேயெவ்னா: நீங்கள் இது சம்பந்தமாக ஒன்றும் கவலைப்பட வேண் டாம். எங்களுக்கு ஏதோ விஷயமானது தெதரி யும். (மகளைப் பார்க்கிறாள்.)
மேயர்: உங்களிடம் பேசுவதில் பயன் இல்லை! ஐயோ பாவம், இன்னமும் என்னால் பயத்தி னின்றும் விடுபட முடியவில்லை! (கதவைத் திறந்து அதன் வழியாகப் பேசுறார்.) மீஷ்கா, ஒடிப்போய் அந்த இரண்டு போலீஸ்காரர்களை யும் இங்கே கூட்டிவா: வெளிக்கதவுக்குப் பக்
112
கத்தில் எங்காவது இருப்பார்கள்! (கொஞ்சம் அமைதிக்குப் பின்.) இது விநோதமான உல கம்: பார்ப்பதற்குக் கூட அவருக்கு எதுவும் அ திகமில்லை. அவ்வளவு மெலிந்தும் ஒல்லி யாகவும் இருப்பதனால் அவர் யார் என்று உங்களால் ஊக்க முடியாது! அவர் இரா ணுவத்தில் இருந்தால் அவர் யார் என்று கண்டுபிடி த்திருப்பீர்கள். நீளமான கோட்டு அணியும்போது சிறகு வெட்டப்பட்ட ஈ மாதிரி இருக்கிறார். இன்றைக்குக் காலை விடுதியில் அவர் பிரமாதமாகத்தான் இருந்தார். அவ ரது மிடுக்கும் பார்வையும்--என்னால் எதை யுமே சமாளிக்க முடியவில்லை என்று நினைத்தேன். ஆனால் கடைசியாக வழிக்கு வந்து விட்டார். இந்த மாதிரி இளைஞர்கள் இப்படித்தான்.
காட்சி 10
ஒசிப் நுழைகிறான். அவனுக்கு முன்னே பாய்ந்து
அவனைக் கூப்பிடுகிறார்கள் .
ஆன்னா அந்திரேயெவ்னா: இங்கே வா.
மேயர்: உஸ்! அவர் தூங்குகிறாரா?
ஒசிப்: இன்னும் இல்லை. இப்போது தான் கொட்டாவி விட்டு நெளி௰றார்.
ஆன்னா அந்திரேயெவ்னா: உனதுபெயர் என்ன?
ஒசிப்: ஓசிப், அம்மா.
மேயர் (மனைவி, மகளிடம்): இப்போது இது
113 8-792
போதும்! (ஓூப்பிடம் நண்பனே, உன் னை நன்றாகக் கவனித்துக் கொண்டார்க ளா?
ஒசிப்: ஆமாம், ஐயா, மிக நன்றி. மிக நன் றாகக் கவனித்தார்கள்.
ஆன்னா அந்துரேயெவ்னா: என்னிடம் சொல்: அவர் வீட்டில் எப்போதுமே நிறையப் பிரபுக்களும் கோமகன்களும் இருப்பார்கள் என்று நினைக்கறேன், இல்லையா?
ஒசிப் (ஒருபுறமாக): நான் என்ன சொல்வது? நமக்கு விருந்தளித்த விதத்தைப் பார்த் தால் இன்னும் நன்றாகக் கவனிப்பார்கள் போல் தெரிஇறது. (உரக்க.) ஆமாம், அம்மா, பிரபுக்கள் கூட வருவார்கள்.
மரியா அந்தோனவ்னா: ஏம்பா, ஓசிப், உனது எசமானர் மிகவும் அழகாக இருக் இறார்!
ஆன்னா அந்திரேயெவ்னா: ஓப், இதை எனக்குச் சொல்: உன் எசமானர்...
மேயர்: போதும்! எதையாவது பேசிக்கொண்டு இருக்க வேண்டாம். அப்படி என்ன, நண் பனே?..
ஆன்னா அந்திரேயெவ்னா: உனது எச மானரின் பதவி என்ன?
ஒசிப்: பதவியா? வழக்கமான பதவிதான்.
மேயர்: நீயும் உன் முட்டாள்தனமான கேள் விகளும்! நாங்கள் எவ்வளவு முக்யமான விஷயங்களைப் பற்றிப் பேசுகறோம் என்று உங்களுக்குத் தெரியவில்லை? எனப்பா, உன் எசமானர் மிகவும் கண்டிப்பானவரா?
114
ஒசிப்: அவர் கட்டுப்பாட்டில் கவனமாக இருப் பார்.
மேயர்: எனக்கு உன்னைப் பிடித்திருக்கறது, நண்பனே, நீ பார்ப்பதற்கு மிகவும் நல்ல வனாகக் தெரிதறது. அதாவது...
ஆன்னா அந்திரேயெவ்னா: ஓூப், வீட்டி லும் உனது எசமானர் சீருடையில் தான் இருப்பாரா, அல்லது...
மேயர்: வாயை மூடுங்கள். இங்கே ஒரு மனி கனுடைய உயிரே ஆபத்தில் இருக்கறது... (ஓசிப்பிடம்.) நண்பனே, உண்மையிலேயே உன்னை எனக்கு மிகவும் பிடித்திருக்கறது. பயணத்தின் போது இந்தக் குளிருக்குக் கூட ஒரு கப் தேநீர் குடித்தால்தான் நல்லது. இதோ (இரண்டு ரூபிள்...
ஒசிப் (பணத்தைப் பெற்றுக் கொணடு): மிக்க நன்றி, ஐயா. ஓர் ஏழைக்கு உதவி செய்த தற்காக ஆண்டவன் உங்களுக்கு உதவுவார்.
மேயர்: ஆமாம், ஆமாம். உதவி செய்வதில் எப்போதுமே மகிழ்ச்சிதான். அதாவது...
ஆன்னா அந்துரேயெவ்னா: ஓப், என்ன விதமான கண்கள் உன் எசமானருக்குப் பிடிக்கும்?
மரியா அந்தோனவ்னா: எம்பா ஓூப், உன் எசமானருக்கு நல்ல அழகான சிறிய மூக்காக இருக்கறதா!
மேயர்: போதும், நிறுத்து!.. (ஓூப்பிடம்.) உன் எசமானர் எதில் அதிகக் கவனம் செ லுத்துவார்? பயணத்தின் போது அவருக்கு என்ன பிடிக்கும்?
115 $*
ஒசிப்: இதெல்லாம் அவர் கவனம் செலுத்தக் கூடியதைப் பொருத்தது. பெரும்பாலும் அவர் கன்னை நன்றாகக் கவனிக்க வேண்டும், உபசரிக்க வேண்டும் என்பதை விரும்பு வார்.
மேயர்: நன்றாகக் கவனிக்க வேண்டும், அவ் வளவுகானே?2
ஒசிப்: ஆமாம், அவர் அதை விரும்புகிறார். என்னை எடுத்துக் கொள்ளுங்கள், நான் ஒரு சேவகன்தான் இருந்தாலும் எனக்கு நல்ல லிதமாக கவனிப்பு இருந்ததா என்பதில் கவனமாக இருப்பார். சத்தியமாகச் சொல் கிறேன்! சில சமயம் நாங்கள் ஒர் இடத்தை விட்டுப் போகிற போது கேட்பார்: ““ஒசிப், உன்னை நன்றாகக் கவனித்துக் கொண்டார் களா?2?? “முகா மட்டம், பிரபு?” என்பேன். ் அப்படியா! மிகவும் மோசமான விருந்தளிப் பவர், ஓசிப். வீட்டுக்குப் போனதும் அவர் பெயரை எனக்கு நினைவுபடுத்து”” என்பார். “போகட்டும்!” என்று நானாக நினைத்துக் கொள்வேன் (கையை அலைத்து), “ “ஆண்ட வன் மன்னிக்கட்டும்! நான் சாதாரணமான வன்.”
மேயர்: நீ மிகவும் நல்லவன், ஒசிப், அருத்தத் கோடு பேசுகிறாய். உனக்குத் தேநீர் அருத்த பணம் கொடுத்தேன், இல்லையா? இதோ சுருள்பூரிக்காக...
ஒசிப்: நீங்கள் ரொம்பவும் பெருந்தன்மை யானவர், பிரபு. (பணத்தைப் பையில் போட் டுக் கொள்கறான்.) உங்களது நலத்திற்காக
116
அருந்துவேன்.
ஆன்னா அந்திரேயெவ்னா: என் அறைக்கு வா, ஓப். உனக்குக் கொடுக்க நா னும் ஒன்று வைத்திருக்கிறேன்.
மரியா அந்தோனவ்னா: ஏம்பா ஓூப், எனக்காக உன் எசமானருக்கு முத்தம்
கொடு. . பக்கத்து அறையிலிருந்து கிலெஸ்தக்கோவ் லேசாக இருமும் ஒசை கேட்டிறது.
மேயர்: உஸ்! (சப்தம் செய்யாமல் நடக்கறார். எல்லாரும் அரைக்குரலில் பேசுகறார்கள்.) ஒரு சப்தம் கேட்கக் கூடாது. போங்கள்! உங் களுக்கும் போதும்.
ஆன்னா அந்திரேயெவ்னா: வா, போக லாம், மரியா! நமது விருந்தினரைப் பற்றி நான் கவனித்த ஒன்றை உன்னிடம் சொல்ல வேண்டும். தனியாக இருக்கும் போதுதான் சொல்ல முடியும்.
மேயர்: ஓ, இப்போது அவர்கள் பேச ஆரம் பித்து விட்டார்கள்! அதைக் கேட்டால் காதைக் தான் பொத்திக் கொள்ள வேண்டும். (ஓூப் பக்கம் இரும்பி.) அதாவது, நண்பனே...
117
காட்சி 11
கெர்ஜிமோர்தாவும் சுவிஸ்துனோவும் நுழைகிறார்கள்.
மேயர்: உஸ்! காலணிகளால் கரடி மாதிரி ஒசை எழுப்புகிறீர்கள்! ஓட்டைப் பானைக்குள் நண்டு நுழைத்தது போல. உங்களை சனி யன் எங்கே கொண்டு போய் இருந்தது?
தெர்ஜிமோர்தா: உத்தரவுப்படி நடந்து கொண்டிருந்தேன்.
மேயர்: மூச்! (அவனது வாயை மூடூ£றார்.) காக் கை மாதிரி கரையாதே! (அவன் மாதிரியாகவே தண்டல் பேசுகறார்.) ““உத்தரவுப்படி நடந்து கொண்டிருந்தேன்! உன் வாயும் நீயும். (ஓசிப்பிடம்.) நண்பனே, நீ இப்போதே போய், உன் எசமானருக்குத் தேதேவையானதெதல்லாம் தயார் செய். வீட்டில் உனக்கு என்ன வேண் டுமோ அவற்றையெல்லாம் கேள்.
ஒசிப் போடறான்.
நீங்கள் இருவருமே, போய், அந்த முன் வாசல் கதவருகே நில்லுங்கள். துளியும் அசை யக் கூடாது! ஒருவனையும் உள்ளே விடக் கூடாது, குறிப்பாக வியாபாரிகளை. அவர் களில் ஒருவனையாவது உள்ளே விட்டால், நான்... யாராவது மனுக் கொண்டு வந்தா லும் சரி, அல்லது மனுக் கொண்டு வந்திருப் பது போலத் தெரிந்தாலும் சரி, அவன் கழுத்
118
தைப் பிடித்து காலால் மிதித்து வெளியே தள்ள வேண்டும். இப்படி! (உதைந்துக் காட்டு ஒறார்.) தெரிற தா? சரி, வெளியே போங்கள்! உஸ்... உஸ்... (போலீஸ்காரர்களுக்குப் பின் னாலேயே ஓசை செய்யாது அவரும் போ ஐறார்.)
நான்காம் அங்கம்
மேயருடைய வீட்டில் அதே அறை. காட்சி 1
ஓசையின்றி எச்சரிக்கையோடு நுழைகிறார்கள்: நீதி
பதி, தருமசாலை அதிகாரி, அஞ்சலக அதி
காரி, பள்ளி ஆய்வாளர், கதோப்சின்ஸ்க,
போப்சின்ஸ் 5; எல்லாரும் சீருடையில் இருக் இறார்கள்.
காட்சி முழுவதுமே அரைக்குரலில் பேசுகிறார்கள்.
நீதிபதி (எல்லாரையும் அரை வட்டமாக நிறுத்துறோர்): ஆண்டவனுக்காக, ஐயன் மீர், லிரைந்து வட்டமாக நில்லுங்கள்: நமக் குள் ஒழுங்கு தேவை! இந்த ஆள் மாளி கைக்குச் செல்பவரும் அமைச்சரவைக்கு உத்தரலிடக் கூடியவரும் ஆவார் என்பதை மறந்து விடாதீர்கள்! நமக்கு ராணுவ ஒழுங்கு தேவை! பியோத்தர் இவானவிச்,
நீங்கள் இந்தப் பக்கம் வாருங்கள், நீங்
119
களோ, பியோத்தர் இவானவிச், அங்கே
போங்கள்.
இரு பியோத்தர் இவானவிச்சுகளும் நுனிவிரலில் விரைூறார்கள்.
கருமசாலை அதிகாரி: அது உங்களைப் பொருத்தது, அம்மோஸ் ஃபியோதரவிச், ஆனால் நாம் எதாவது எற்பாடு செய்ய வேண்டும் என்று நினைக்கறேன்.
நீதிபதி: என்ன எற்பாடு செய்ய?
தருமசாலை அதிகாரி: நான் என்ன நினைக்கிறேன் என்பது உங்களுக்குத் தெரி யும்.
நீதிபதி: அவரைக் குளிப்பாட்டவா?
தருமசாலை அதிகாரி: ஆமாம், அவரைக் குளிப்பாட்டவும் தான்.
நீதிபதி: மிகவும் ஆபத்தானது! அவர் அரசு அதிகாரி: கூச்சல் இளப்புவார். நாம் அதை ஓரளவுக்கு மறைக்க முடிந்தாலும் எதோ பொது நினைவுச்சின்னத்துற்காக உள்ளூர் பிர புக்களிடமிருந்து இடைத்த நன்கொடை என்று சொல்லலாம்.
அஞ்சலக அதிகாரி: அல்லது நாம் இப்படிச் சொல்லலாம்: ““இது அஞ்சல் வழியாக வந்த பணம். இது யாருக்குச் சொந்தம் என்று எங்களுக்குத் தெரியாது”'.
தருமசாலை அதிகாரி: ஏதோ தொலை தூரப் பிராந்தியத்துக்கு அஞ்சல் வழியாக
உங்களை அவர் அனுப்பக் கூடும்! நன்கு
120
நடக்கக்கூடிய அரசில் இந்தக் காரியங்கள் அப் படிச் செய்யப்படுவதில்லை. நாம் எல்லா ரும் கூட்டமாக என் இங்கே இருக்கிறோம்? நாம் ஒருவர் பின் ஒருவராக மரியாதையைச் செலுத்த வேண்டும். இந்த முறையில் இருவர் மட்டுமே... யார் காதிலும் விழாது... நன்கு நடக்கக்கூடிய சமூகத்தில் இப்படித் தான் காரியங்கள் செய்யப்படு ன்றன! அம் மோஸ் ஃபியோதரவிச், நீங்கள் தான் முத ஸில் போக வேண்டும்.
நீதிபதி: நானா? நீங்கள் முதலில் இருக்க வேண்டும் என்று நினைக்கறேன்: உங்க ளது மருத்துவமனையில் தான் நமது சிறப்பு விருந்தினர் ருசிபார்த்தார்.
கருமசாலை அதிகாரி: அப்படியானால், லுக்கா லுக்கச்தான் மிகவும் பொருத்தமான வர், இளைஞர்களின் கல்வியாளர் போன்ற வர்.
பள்ளி ஆய்வாளர்: என்னால் முடியாது, ஐயன்மீர், உண்மையில் என்னால் முடியாது. நான் அந்த முறையில் வளர்ந்தவன். யாரா வது உயர் பதவியில் இருப்பவர் என்னிடம் பேசினால் என் கண் விழிகள் பிதுங்கிக் கொண்டு வெளியே வந்து விடும். நாக்கைக் கூட என்னால் அசைக்க முடியாது. என்னை மன்னிக்க வேண்டும். உண்மையிலேயே என் னால் முடியாது!
கருமசாலை அதிகாரி: நீங்கள் மட்டுமே எஞ்சி இருக்கிறீர்கள், அம்மோஸ் ஃபியோதர விச். நீங்கள் அலங்காரச் சொற்றொடரின் எச
121
மானர். சிசிரோ * தானாக நன்றாகச் செய்ய முடியாது.
நீதிபதி: இல்லை, இல்லை! சிசிரோ! அவர் கள் என்ன கற்பனை செய்கிறார்கள் என்று பார்! ஏனென்றால் எனது வேட்டை நாய் களைப் பற்றி பேசுகையில் சில சமயம் மெய் மறந்து போடறேன்!
எல்லாரும் (அவரை வலியுறுத்துகறார்கள்): இல்லை இல்லை, நாய்களைப் பற்றி மட்டும் இல்லை, பைபிளைப் பற்றிக் கூட... எங்க ளைக் கைவிட்டூ விடாதீர்கள், அம்மோஸ் ஃபி யோதரலிச், எங்களைத் தனிமைப்படுத்த வேண்டாம், எங்களது புரவலராக இருங்கள்! நீங்கள் முதலில் போங்கள்.
நீதிபதி: என்னை விட்டுவிடுங்கள், ஐயன் மீர்!
இந்தச் சமயத்தில் இலெஸ்தக்கோவ் அறையிலிருந்து காலடி ஓசைகளும் இருமலும் கேட்கின்றன. வெளி யேறுவதற்காக எல்லாருமே முண்டியடித்துக் கொண்டு கதவுக்கு விரைதிறார்கள். கூக்குரல்கள் அரைக்குரலில் கேட்கின்றன:
போப்சின்ஸ்கியினுடைய குரல்: ஓ, பியோத்
தர் இவானவிச், பியோத்தர் இவானவிச்! என் கால் மீது நிற்கிறீர்கள்!
* ஒரோ மார்க் துல்லி (106-43 8. மு.)--பண் டைய ரோமின் புகழ்பெற்ற பேச்சாளர், எழுத்தாளர், அரசியல்வாதி.
122
தருமசாலை அதிகாரியினுடைய குரல்: என்னைப் போகவிடுங்கள், ஐயன்மீர்! பெரிது படுத்த வேண்டாம், என்னை நெருக்குத£றீர்
கள்!
மேலும் சில கூக்குரல்கள் கேட்கின்றன, இறுதியாக எல்லாரும் வெளியேற, மேடை காலியாஇறது.
காட்சி 2
தலெஸ்தக்கோவ் நுழைகறார், தூக்கக் கலக்கத் துடன்.
உண்மையில் நீண்ட நேரம் நான் தூங்கயி ருக்க வேண்டும்! அந்த இறகு மெத்தையை அவர்கள் எங்கே பெற்றார்கள்? எனக்கு வியர்த்துக் கொட்டுகிறது. என் தலையோ மணி போல அடிக்கறது: காலையில் விருந்தின் போது எனக்கு ஏதாவது தந்தி ருப்பார்களோ என்று நினைக்கறேன். இங்கு முற்றிலும் மூழ்ச்சியாக இருக்க முடியும் என்பது போலத் தெரிகிறது. இந்த விருந்தோம்பலை நான் மிகவும் விரும்பு தறேன், குறிப்பாக மக்கள் இதயபூர்வமாக எற்பாடு செய்கின்ற போது எந்த ரகசியமான நோக்கமும் இல்லை. மேயருடைய மகள் மோசமில்லை, அல்லவா? அவளது அம்மா கூடப் பரவாயில்லை... எப்படியாவது, இந்த மாதிரி வாழ்க்கையை நான் ரசித்தேன்.
123
காட்சி 3
நீதிபதி நுழைகறார்.
நீதிபதி (நுழையும் போது நின்று கொண்டு தனக்குத் தானே பேசுகிறார்): ஆண்டவனே, என்னைக் காப்பாற்று, என் முழங்கால்கள் நடுங்குகின்றன. (உரக்க, தன்னை நிமிர்த்திக் கொண்டு, வாளில் கையை வைத்தவாறு.) என்னை அறிமுகப்படுத்திக் கொள்ள அறு மதியுங்கள்: மாவட்ட நீதிமன்ற நீதிபதி லியாப்இன்- தியாப்கன்.
திலெஸ்தக்கோவ்: தயவுசெய்து உட்காருங் கள். நீங்கள் தான் உள்ளூர் நீதிபதியா?
நீதிபதி: உள்ளூர் மேன்மக்களின் விருப்பப் படி மூன்றாண்டு காலத்திற்காக 1816இல் நியமிக்கப்பட்டேன். இன்றைக்கு வரைக்கும் அதிகாரத் தில் இருக்கிறேன்.
தலைஸ்தக்கோவ்: நீதிபதியாக இருப்பது லாபகரமான பணியா, சொல்லுங்கள்?
நீதிபதி: ஒன்பதாண்டு காலக் கடமைக்குப் பிறகு, அதிகாரிகளின் பாராட்டுதல்களுடன், செயிண்ட் விளதீமிர் நான்காம் வகுப்பு விருது வழங்கப்பட்டேன். (ஒருபுறமாக.) பணந்தான் நிலக்கரிக் கங்கு போலக் கையைத் துளை போட்டுக் கொண்டிருக் தறது.
கிலெஸ்தக்கோவ்: நான் விளதீமிர் விருதை விரும்புகிறேன், முன்றாம் வகுப்பு செயிண்ட்
124
ஆன்னாவைர் விட. நீங்கள் என்ன நினைக் இறீர்கள்?
நீதிபதி (தனது மூடிய முட்டியை சற்று முன் னுக்கு நீட்டியவாறு, ஒருபுறத்தில்: ஆண்ட வனே! நெருப்பில் உட்கார்ந்திருப்பது போல இருக்கறைது.
கலைஸ்தக்கோவ்: உங்கள் கையில் என்ன?
நீதிபதி (நடூங்கயவாறு பண நோட்டுகளைத் தரையில் போடுகிறார்): என்னவா? ஒன்று மில்லை!
கலைஸ்தக்கோவ்: ஒன்றுமில்லையா? ஏதோ நோட்டுகளைக் கீழே போட்டது மாதிரி இருந் துதே?
நீதிபதி (முற்றிலும் நடுங்கக் கொண்டு): இல்லை, ஐயா, ஒன்றும் இல்லை. (ஒரு புறமாக.) ஆண்டவனே, இங்கே வழக்கு மன்றத்தைச் சந்திக்க வேண்டி இருக் திறதே! சிறைச்சாலை வண்டியின் சத்தம் கேட்கிறதே!
கிலைஸ்தக்கோவ் (பணத்தைப் பொறுக்கக் கொண்டு): இது பணம், தெரியும் அல்ல வா?
நீதிபதி (ஒருபுறமாக): நான் தொலைந்தேன் இப்போது.
கிலைஸ்தக்கோவ்: உங்களுக்குத் தெரியுமா?
* மூன்றாம் வகுப்பு செயிண்ட் ஆன்னா-- ரஷ் யப் பேரரசின் உயர்ந்த விருதுகளில் ஒன்று; கழுத் தில் நாடாவுடன் அணியப்பட்டது.
125
இந்தப் பணத்தை நீங்கள் என் எனக்குக் கடனாகக் தரக்கூடாது?
நீதிபதி (அவசரமாக): என்... என்... நிச்சய மாக! மகிழ்ச்சியோடு! (ஒருபுறமாக.) மேரி மா தா, இதிலிருந்து என்னைக் காப்பாற்று!
தஇலெஸ்தக்கோவ்: நான் பயணத்தின்போது பணத்தைச் செலவுசெய்து விட்டேன். ஆனால் எனது எஸ்டேட்டை அடைந்த உடனேயே உங்களுக்கு இதை அனுப்பிவைப்பேன்.
நீதிபதி: மேன்மை சான்றீர்! அப்படியெல் லாம் நினைக்க வேண்டாம். எப்படியும் இது எனக்குப் பெருமைதான்... அதிகாரிகளுக்குச் சேவை செய்ய நான் எல்லா நேரமும் முயற்சி செய்கிறேன்... என்னால் முடிந்த அளவுக்கு, எப்படி இருந்தாலும்... (தனது இருக்கையி லிருந்து எழுந்து, நேராக நீற்கறோர்.) இதற்கு மேலும் இங்கே இருந்து உங்களுக்குத் தொல் லை தர விரும்பவில்லை. மேன்மை சான்றீர், வேறு அறிவுரைகள் எதாவது எனக்கு இருக் இறதா?
திலெஸ்தக்கோவ்: அறிவுரைகளா?
நீஇுப இ: மாவட்ட நீதிமன்றத்திற்கு?
திலெஸ்தக்கோவ்: எதற்காக? மாவட்ட நீதி மன்றம் இப்போது எனக்குத் தேவையில் லை.
நீதிபதி (குனிந்து வணங்கி வெளியேறி, ஒரு புறமாக): அப்பாடா! இன்றைக்குத் தப்பித் தேன்!
தலைஸ்தக்கோவ் (நீதிபதி போனதும்): அருமையான ஆள், அந்த நீதிபதி!
126
காட்டு 4
தனது வாளைப் பற்றியவாறு சீருடையில் விறைப் பாக நுழைகிறார் அஞ்சலக அதிகாரி.
அஞ்சலக அதிகாரி: என்னை அறிமுகப்படுத் திக் கொள்ள அறுமதியுங்கள்: - நான்தான் அஞ்சலக அதிகாரி ஷ்பே௫ன். தலைஸ்தக்கோவ்: உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. நல்ல தோழமையை நான் மிக வும் விரும்புகிறேன். உட்காருங்கள். உங்களது வாழ்நாள் முழுக்க இங்கு தான் வ௫க்கறீர் களா? அஞ்சலக அதிகாரி: ஆமாம், ஐயா. தலைஸ்தக்கோவ்: உங்கள் நகரம் எனக்குப் பிடி த்திருக்கறது. உண்மையில் இது தலைநக ரம் இல்லை. அப்படியானால் என்ன? இது தலைநகரம் இல்லை, அப்படித் தானே? அஞ்சலக அதிகாரி: அப்படித்தான், ஐயா. தலைஸ்தக்கோவ்: தலைநகரத்தில் மட்டுமே நல்ல பண்புகளைக் காண முடியும். அப்படித் தானே? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ? அஞ்சலக அதிகாரி: முற்றிலும் சரிதான், ஐயா. (ஒருபுறமாக.) பெரியவராகவும் வலிய வராகவும் இல்லை. எல்லாவற்றைப் பற்றியும் எனது கருத்தைக் கேட்டுறார். தஇலெஸ்தக்கோவ்: ஆனாலும், சிறிய நகரத் தில் கூட ஒருவரால் மகிழ்ச்சியாக வாழ முடி யும். அப்படித்தானே?
127
அஞ்சலக அதிகாரி: ஆமாம், ஐயா. முற்றி லும் சரி.
தஇலைஸ்தக்கோவ்: எனதுகருத்துப்படி, எது முக்கியமானது? மரியாதை செய்யப்படுவதும் உண்மையாக நேசிக்கப்படுவதுந்தான் முக்கிய மானவை, இல்லையா?
அஞ்சலக அதிகாரி: என்னுடைய சொந்தக் கருத்தும் அதுதான், ஐயா.
கிலெஸ்தக்கோவ்: என் கருத்தை ஒப்புக் கொள்வதற்காக நான் மகழ்ச்சியடைகறேன் என்பதைச் சொல்லித்தான் ஆக வேண்டும். நான் வித்தியாசமானவன் என்று அழைக் கப்படலாம், ஆனால் நான் அப்படித்தான். (அவரது கண்களைப் பார்க்கறார், தனக்குத் தானே.) இவர்களிடம் என் கொஞ்சம் கடன் கேட்கக் கூடாது? (உரக்க.) இங்கு வரும் வழியில் ஒன்றும் இல்லாமல் துடைத்துவிட் டேன் என்பது மிகவும் வித்தியாசமான விஷ யம். உங்களால் எப்படியாவது முந்நூறு ரூபிள் கடனாக எனக்குக் கொடுக்க முடியு மா?
அஞ்சலக அதிகாரி: என், பெரு மகழ்ச்சி யுடன் தருவேன். இதோ, ஐயா. உங்களுக்கு உதவுவதில் மிகவும் மகிழ்கிறேன்.
திலெஸ்தக்கோவ்: மிகவும் நன்றி. பய ணம் செய்யும்போது எதையும் மறுப்பதை வெறுக்கிறேன் என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். எதற்காக? நீங்கள் ஒப்புக் கொள் இறீர்களா?
அஞ்சலக அதிகாரி: நிச்சயமாக, ஓயா.
128
(நேராக நின்று வாளில் தனது கையை வைக் கறார்.) இதற்கு மேலும் இங்கு இருந்து உங் களுக்குத் தொல்லை தர நான் விரும்பவில் லை. அஞ்சல் துறைக்குத் தெரிவிக்க வேண் டிய அறிவிக்க வேண்டிய அறிவுரைகள் ஏதே னும் உள்ளதா, மேன்மை சான்நீர்?
கிலெஸ்தக்-கோவ்: இல்லை, இல்லை, ஒன் றும் இல்லை. -
அஞ்சலக அதிகாரி குனிந்து வணங்கி விடைபெறு கறார்.
(௬ருட்டைப் பற்றவைத்துக் கொண்டு.) இந்த அஞ்சலக அதிகாரியும் மிக அருமையான ஆள் தான்... எல்லாவகையிலும் உதவக் கூடிய வன். இந்த மாதிரியான ஆட்களைத்தான் நான் விரும்புகிறேன்.
காட்சி 5
பள்ளி ஆய்வாளர் இட்டத்தட்ட அறைக்குள்ளாகத் கள்ளப்படுதிறார். அவருக்குப் பின்னே ஒரு குரல் 8சு இசுக்கறது: “ “உள்ளே போ, கோழையே!”
பள்ளி ஆய்வாளர் (குன்னை நிமிர்த்திக் கொண்டு, நடூங்கயவாறு, வாளைப் பற்றி நிற் இறார்): என்னை அறிமுகப்படுத் திக் கொள்ள அ நுமதியுங்கள்: பள்ளி ஆய்வாளர் ஹ்லோபவ்.
தலெஸ்தக்கோவ்: மகழ்ச்சி! உட்காருங்கள்.
129 9-792
சுருட்டுப் புகைப்பீர்களா, இதோ. (ஒரு சுருட்டுக் கொடுூக்கறார்.)
பள்ளி ஆய்வாளர் (குனக்குள் முடிவு எடுக் காது): அட கடவுளே! இதை எதிர்பார்க்கவே இல்லை! எடுத்துக் கொள்ளவா வேண்டா மா?
இிலெஸ்தக்கோவ்: எடுத்துக் கொள்ளுங்கள். இது மட்டமான சருட்டு அல்ல. உண்மையில், பீட்டர்ஸ்பர்க்கல் வாங்கியது அல்ல. எனக்காக நூற்றுக்கு இருபத்தைந்து ரூபிள் கொடுக்க றேன். ஒன்று புகைத்தீர்கள் என்றால் உங்கள் கைகளை முத்தமிட விரும்புவீர்கள். இதோ, பற்றவைய்யுங்கள். (ஒரு மெழுகுவர்த்தியைக் கொடுக்கறார்.)
பள்ளி ஆய்வாளர் அதைப் பற்றவைக்க முயன்று நடுங்கத் தொடங்குகிறார்.
அது பின் பகுதி!
பள்ளி ஆய்வாளர் (பயத்தில் சுருட்டைக் கழே போட்டுவிட்டு, துப்பிக்கொண்டு கையை அலைத் தவாறு தனக்குத்தானே): சனியனே, மறு படியும் அந்தப் பாழாய்ப்போன வெட்கம்! எல்லாவற்றையும் பாழாக்கிவிட்டது!
கலெஸ்தக்கோவ்: சருட்டுகளில் நீங்கள் நிபு ணர் இல்லை என்பது எனக்குத் தெரியும். ஆனால் அது என்னுடைய பலவீனங்களில் ஒன்று. அதுவும் பெண்களும். அழகிய பெண் ணை என்னால் மறுக்க முடியாது. நீங்கள்
130
எப்படி? எதை விரும்புகிறீர்கள்: பொன்னிற மான முடியையா, கருநிறமானதையா?
பள்ளி ஆய்வாளர் என்ன பேசுவது என்று தெதரி யாது இருக்கிறார்.
எது உங்களுக்கு விருப்பம்: பொன்னிறமான தா, கருநிறமானதா?
பள்ளி ஆய்வாளர்: எனக்குத் தெரியாது, ஐயா.
திலெஸ்தக்கோவ்: இல்லை, இல்லை. விஷ யத்தை விட்டூ நழுவாதீர்கள்! உங்களது விருப் பத்தைத் தெரிந்து கொள்வதில் ஆர்வமாக இருக்கிறேன்.
பள்ளி ஆய்வாளர்: ஜயா... நான் பணி வுடன் சொல்வது... ஒருபுறமாக.) ஆண்ட வனே, நான் என்ன சொல்வது!
இலெஸ்தக்கோவ்: ஆகா! நீங்கள் சொல்ல விரும்பவில்லை. ஏதோ கரு நிறமுடிக்காரி யுடன் உங்களுக்குப் பிடிப்பு இருக்கறது. அது சரி, அப்படி த்தானே? ஒப்புக்கொள்ளுங்கள்.
பள்ளி ஆய்வாளர் பேசாது இருக்கிறார்.
ஆகா! கன்னம் சிவக்கிறது! என்னிடம் என் நீங்கள் சொல்லக் கூடாது?
பள்ளி ஆய்வாளர்: நான் பயந்து போ னேன், மேன்மை சான்றீர்... மாண்புமிகு...
மாட்சிமை தங்கிய... (ஒருபுறமாக.) என்னு
131 g*
டைய நாசமாய்ப் போன நாக்கு மறுபடியும் என்னைக் கவிழ்த்துவிட்டது!
திலெஸ்தக்கோவ்: பயந்து போனீர்களா? ஆமாம். என் கண்ணில் ஏதோ ஒன்று மக்க ஞடைய இதயங்களில் பயத்தை எற்படுத்து நெது. குறைந்தது, எந்தப் பெண்ணும் அவற் றை மறுக்க முடியாது என்ற உண்மை எனக்குத் தெரியும். நீங்கள் ஒப்புக் கொள் தஇறீர்களா?
பள்ளி ஆய்வாளர்: நிச்சயமாக, ஐயா.
தலைஸ்தக்கோவ்: அது மிகவும் விசித்திர மான விஷயம், உங்களுக்குத் தெரியுமா? பய ணத்தில் என் பணமெல்லாம் செலவாக விட் டது. உங்களால் எனக்கு முந்நூறு ரூபிள் கடன் தர முடியுமா?
பள்ளி ஆய்வாளர் (குனது பைகளுக்குள் ளாகத் துழாவிவிட்டு தனக்குத்தானே): எங் கே அது? அதை நான் தொலைத்து விட் டேன், அதை நான் தொலைத்து விட்டேன்! ஓ, நல்ல காலம், இதோ இருக்கிறது. (நோட்டு களை வெளியே எடுத்து அவற்றை ஒப்படைத்து விட்டு, நடூங்குகறார்.)
திலெஸ்தக்கோவ்: உங்களுக்குப் பெரிதும் கடன் பட்டி க்கிறேன்.
பள்ளி ஆய்வாளர் (நிமிர்ந்து நின்று வாளில் கையை வைக்கிறார்): நான் இங்கு இருந்து இனிமேலும் உங்களுக்குத் தொல்லை தர விரும்பவில்லை.
திலெஸ்தக்கோவ்: சரி, போய்வாருங்கள்.
பள்ளி ஆய்வாளர் ௫ட்டத்தட்ட ஓடியவாறு,
132
ஒருபுறமாக): அப்பாடா! ஆண்டவனுக்கு நன்றி! இப்போது அவர் வகுப்பறைகளைப் பார்வையிட விரும்ப மாட்டார் என்று நம்ப லாம்.
காட்சி 6
தருமசாலை அதிகாரி விறைப்பாக, வாளைப்
பற்றியவாறு நுழைகறார்.
தருமசாலை அதிகாரி: மேன்மை சான் நீர்! என்னை அறிமுகம் செய்து கொள்ள அ நுமதியுங்கள். நான் தருமசாலை அதிகாரி ஸெம்லியனீக்கா.
திலெஸ்கக்கோவ்: எப்படி இருக்கிறீர்கள்? தயவுசெய்து உட்காருங்கள்.
கருமசாலை அதிகாரி: எனது பொறுப்பில் உள்ள தருமசாலைகளில் நேரடியாக உங்களை வரவேற்கும் பேறு சமீபத்தில் எனக்குக் கட்டி யது.
தஇலைஸ்தக்கோவ்: ஆமாம்! எனக்கு நினை விருக்கறது. மிக அருமையான விருந்து எங் களுக்கு அளித்தீர்கள்.
கருமசாலை அதிகாரி: நாட்டுப் பணிக்கா கத் தன்னை ஈடுபடுத்திக் கொள்வது மிகவும் பெருமைக்குரியது.
தலைஸ்தக்கோவ்: நல்ல உணவை நான்பெ ரிதும் விரும்பக் கூடியவன் என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். நேற்று நீங்கள் சற்று குள்ளமாக, இல்லை?
134
தருமசாலை அதிகாரி: பெரும்பாலும். (சற்று அமைதி.) எனது கடமையைச் செய்ய நான் ஒருபோதும் தயங்கியது இல்லை. (தனது இருக்கையை நெருக்கமாக இழுத்துக் கொண்டு அரைக்குரலில் பேசுகறார்.) ஆனால் உள்ளூர் அஞ்சலக அதிகாரி முற்றிலும் எது வுமே செய்வதில்லை: அஞ்சல் பணியில் மிக வும் பயங்கரமான சுணக்கம் உண்டு... அதை நீங்களே சோதித்துக் கொள்ளலாம். எனக்குச் சற்று முன்னர் இருந்த நீதிபதி கூட, தனது நேரம் முழுவதையும் முயல் வேட்டையி லும், நீதிமன்றத்தில் நாய்களை வளர்ப்பதி லும் செலவிடுகிறார். அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையோ, உங்களது முன்னிலையில் அத்தகைய விஷயங்களைக் குறிப்பிட அஞ்சி னாலும்-— உண்மையில் நாட்டிற்காக நான் சொல்லித்தான் ஆக வேண்டும், அவர் எனது நண்பராகவும் உறவினராகவும் இருந்தும்-- அவரது தனிப்பட்ட வாழ்க்கை வெறுமனே மானக்கேடானது. இங்கே ஒரு நிலக்கிழார் இருக்கிறார் -—தோப்சின்ஸ்கி என்று பெயர். மேன்மை சான்றீர், அவரை நீங்கள் சந்தித் இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். தோப் சின்ஸ்தி தன் வீட்டை விட்டுப் புறப்பட்ட அக் கணமே நீதிபதி அவரது மனைவியைப் பார்க்க நுழைகிறார். இது உண்மை, சத்தியமாகச் சொல்கறேன்... குழந்தைகளை நீங்கள் பார்க்க வேண்டும்; அவர்களில் ஒருவர் கூட கதோப்சின்ஸ்கி மாதிரி காணப்ப்டவில்லை; அவர்கள் எல்லாரும், சிறுமி உள்பட, நீதி
135
பதியின் அச்சுப் போலவே இருக்கிறார்கள்.
திலெஸ்தக்கோவ்: உண்மையாகவா? அதை என்னால் நம்ப முடியவில்லை!
த்ருமசாலை அதிகாரி: நமது பள்ளி ஆய் வாளரைப் பொருத்த மட்டில்... அதிகாரிகள் அவரை எப்படி நியமித்திருக்க முடியும் என் பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில் லை. ஜக்கோபியனை * விட மோசமானவர். நமது இளைஞர்களுடைய மூளைகளில் சந் தேகக்கக்கூடிய கருத்துகளை நிரப்புகிறார். உங் களிடம் அவை பற்றிச் சொல்ல நானே வந்தி ருக்கக் கூடாது! ஒருவேளை அவற்றை நான் எழுதித்தர வேண்டும் என விரும்புகிறீர் களா?
இலைஸ்தக்கோவ்: ஆமாம், அதைச் செய் யுங்கள். மிகவும் அருமையாக இருக்கும். எனக்குச் சலிப்பு ஏற்படும் போது படிக்க எதாவது வேடிக்கையானதாக நான் விரும்பு இறேன்... திரும்பவும் உங்கள் பெயரைச் சொல் லங்கள். என்னுடைய நினைவாற்றல், பாருங் கள்...
கருமசாலை அதிகாரி: ஸெம்லியனீக்கா.
திலெஸ்தக்கோவ்: ஓ, ஆமாம்! ஸெம்லி யனீக்கா. உங்களுக்குக் குழந்தைகள் உண்
டா?
* ஐக்கோபியன்-- பிரெஞ்சுப் புரட்சியின் போது (1789) புரட்சிகரக் கட்சியின் மிகவும் முற்போக்கு, ஜன நாயகக் குழுவின் பிரதிநிதி. இங்கே: சுயசிந்தனையா
னின்.
136
தருமசாலை அதிகாரி: ஆமாம், ஐந்து, மேன்மை சான்றீர், ஏற்கெனவே இரண்டு பேர் வளர்ந்துவிட்டார்கள்.
கஇலைஸ்தக்கோவ்: அப்படியா! அவர்கள் என்ன?..
கருமசாலை அதிகாரி: அவர்களுடைய பெ யர்களைக் கேட்இறீர்களா?
தலெஸ்தக்கோவ்: ஆமாம். அவர்கள் பெயர் என்ன? :
தருமசாலை அதிகாரி: நிக்கலாய், இவான், எலிஸவெத்தா, மரியா, பெரிபெதுயா.
கிலெஸ்தக்கோவ்: மிகவும் அருமையாக இருக்கின்றன.
கருமசாலை அதிகாரி: இனிமேலும் இங்கு இருந்து உங்களுக்குத் தொல்லை தரவும் புனிதக் கடமைகளுக்காக ஒதுக்கப்பட்ட நேரத் தை எடுத்துக் கொள்ளவும் விரும்பவில்லை. (தலை குனிந்து வணங்க வெளியேறுகிறார்.)
தலெஸ்தக்கோவ் (அவரைத் தொடர்ந்த வாறு): இல்லை, இல்லை, அப்படியில்லை. நீங்கள் சொன்னது மிகவும் வேடிக்கையாக உள்ளது. தயவுசெய்து மற்றொரு முறை வாருங்கள்... நான் மஇூழ்ச்சியடைவேன்... (திரும்பி கதவைத் திறந்து அவரை அழைக் கறார்.) உங்களைத்தான்! உங்கள் பெயர் என்னவென்று சொன்னீர்கள்? உங்கள் இயற் பெயரை மறந்துவிட்டேன்.
கருமசாலை அதிகாரி: அர்தேமி ஃபிலிப் பொலிச்.
தஇலெஸ்தக்கோவ்: இங்கே பாருங்கள், அர்
137
கேமி ஃபிலிப்பொலிச். இதை நீங்கள் நம்பக் கூட மாட்டீர்கள், ஆனால் பயணத்தின் போது எனது கைப்பணம் பூராவுமே செலவாஃிவிட் டது. ஒரு கோபெக் கூட மிச்சம் இல்லை. கொஞ்சம் கடனாகக் கொடுக்க முடியுமா, நானூறு ரூபிள்?
தருமசாலை அதிகாரி: முடியும். இதோ!
இலைஸ்தக்கோவ்: இப்போது அதிருஷ்டம் அடித்தது மாதிரிதான்! உங்களுக்கு மிகவும் கடமைப்பட்டி ருக்கிறேன்.
தருமசாலை அதிகாரி வெளியேறுகிறார்.
காட்சி 7
போப்சின்ஸ்கியும் தோப்சின்ஸ்தியும் நுழை கிறார்கள்.
போப்சின்ஸ்தி: உங்களிடம் என்னை அறி முகப்படூத்தக் கொள்ள அறுமதியுங்கள்: பியோத்தர் இவானவிச் போப்சின்ஸ்க, உள் ஞர் வாசி.
தோப்சின்ஸ்த: நிலக்கிழார் பியோத்தர் இவா னவிச் தோப்சின்ஸ்க.
தலெஸ்தக்கோவ்: ஒ, ஆமாம், உங்களை முன்னரே. நான் பார்த்திருக்கறேன். கீழே விழுந்தது நீங்கள்தானே? உங்களுடைய மூக்கு எப்படி இருக்கறது₹
போப்சின்ஸ்் 5: தயவு செய்து, எனக்காக நீங்கள் சிரமப்பட வேண்டாம். கடவுளுக்கு
138
நன்றி! இப்போது நன்றாக ஆறிப்போய் விட் டது.
திலெஸ்தக்கோவ்: ஆறிவிட்டதா? நல்லது... (திடீரென்று.) உங்களிடம் பணம் இருக்கிற தா?
போப்சின்ஸ்இ: பணமா? என்ன பணம்?
தஇலெஸ்தக்கோவ் (விரைவாகவும் உரக்கவும்): கடனாக. ஓர் ஆயிரம் ரூபிள் அளவுக்கு.
போப்சின்ஸ்க: ஆண்டவனுக்கு நேர்மை யாக, அந்தளவுக்கு என்னிடம் பணம் இல் லை. உங்களிடம் உண்டா, பியோத்தர் இவா னவிச்?
தோரப்சின்ஸ்ச: என்னிடமும் இல்லை. எனென்றால், மேன்மை சான்றீர், அந்தளவு ஆர்வமாக இருந்தால் சொல்கிறேன், என் னுடைய பணம் தருமசாலைகளின் குழுவிடம் இருக்கறது.
திலெஸ்தக்கோவ்: சரி, உங்களிடம் ஆயிரம் இல்லை என்றால், ஒரு நூறாவது எனக்குக் கொடுக்கலாம்.
பபோப்சின்ஸ்கி (தனது பைகளைத் துழாவிய வாறு): உங்களிடம் நூறு இருக்கிறதா, பியோத்தர் இவானவிச்? என்னிடம் உள்ள தெல்லாம் நாற்பது ரூபிளுக்கு நோட்டு களே.
தோரப்சின்ஸ்ச (தனது பணப்பையைத் துழா வியபடி): இருபத்தைந்து ரூபிள் அதிகத் கொகை.
போப்சின்ஸ்் 5; இன்னும் கவனமாக நீங் கள் தேடுவது நல்லது, பியோத்தர் இவான
139
லிச்! உங்களது வலது சட்டைப்பையில் ஓர் ஓட் டை இருப்பது எனக்குக் தெரியும். ஒரத்தில் எதாவது நழுவி இருக்கக்கூடும்.
சோப்சின்ஸ் த (பார்த்தவாறு): உண்மையாக வே இல்லை. அதிலும் ஒன்றும் இல்லை.
திலெஸ்தக்கோவ்: பரவாயில்லை. உங்க னிடம் உள்ளதைக் கொண்டு சமாளிப்பேன். அந்த அறுபத்தைந்து ரூபிளை எனக்குக் கொடுங்கள். (பணத்தை எடுூக்கறார்.)
தோப்சின்ஸ்5: ஒருவகையில் நுட்பமான விஷயம் குறித்து உங்களுடைய உதவியைக் கேட்கலாமா?
தஇலெஸ்தக்கோவ்: எதைப் பற்றி?
கோப்சின்ஸ்தி: உண்மையில் மிகவும் நுட்ப மான விஷயம், மேன்மை சான்றீர்: என்னு டைய மூத்த மகன், இப்படிச் சொல்வதற்கு மன்னிக்க வேண்டும், திருமணம் ஆகாமலே யே பிறந்தவன்.
தஇலெஸ்தக்கோவ்: அப்படியா?
ோ£ப்சின்ஸ்க: சொல்லப் போனால் அப் படித்தான். எனது அருத்தத்தை நீங்கள் புரிந்து கொண்டால், திருமணமாகி எனக்குப் பிறந்தவன் மாதிரிதான். பிறகு முறைப்படி திருமணம் செய்து கொண்டேன். ஆகவே இப் போது, அவனை நான் முற்றிலும் சட்டபூர்வ மகனாக எற்றுக் கொள்ள விரும்புவதையும், தோப்சின்ஸ்கி என்ற என் பெயரால் அழைக் கப்பட விரும்புவதையும் புரிந்திருப்பீர்கள்.
திலெஸ்தக்கோவ்: அருமை, அப்படியே அமழைக்கப்பட்டடும். சாத்தியமானது!
140
தோப்சின்ஸ்தி: நான் உங்களுக்குத் தொல் லை தந்திருக்க மாட்டேன், ஆனால் அவன் மிகவும் புத்திசாலிப் பையன். ஏற்கெனவே அவனுக்குக் கவிதை ஒப்பிக்க முடியும், ஒரு மடக்குக்கத்தி கிடைத்தால் வித்தைக்கார னைப் போல ஒரு சிறிய குதிரையும் வண்டி யும் அவனால் செதுக்க முடியும்! பியோத் தர் இவானவிச்சுக்கும் இது தெரியும்!
போப்சின்ஸ்த: ஆமாம், அவன் திறமை யான பையன்!
திலைஸ்தக்கோவ்: அருமை! அருமை! என் னால் முடிந்ததை நான் செய்வேன். நான்... பேசுகிறேன், நான்... முயல்கிறேன்... நான் எல்லாவற்றையும் செய்வேன், ஆமாம்... (போப்ரசின்ஸ்8 பக்கமாகத் திரும்பி.) என்னி டம் வேறு எதாவது சொல்ல வேண்டுமா?
போப்சின்ஸ்த: ஆமாம், உண்மையில் ஒரு வேண்டுகோள் உண்டு, பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
தஇலெஸ்தக்கோவ்: என்ன அது?
போப்சின்ஸ்க: நீங்கள் பீட்டர்ஸ்பர்க் திரும் பியதும் அங்குள்ள பெரிய மனிதர்களிடம், செனட்டர்களிடம், அட்மிரல்களிடம் இப்படிச் சொல்லுமாறு பணிவுடன் கேட்டுக் கொள் தறேன்: “மேன்மை சான்றீர், அல்லது மாட்சிமை சான்றீர் அல்லது எதுவாக இருந் தாலும்... மேற்படி நகரத்தில் பியோத்தர் இவானவிச் போப்சின்ஸ்கி என்ற மனிதன் வாழ்கிறான்” என்று. அவர்களிடம் இப்படிச் சொல்லுங்கள்: ““பியோத்தர் இவானவிச்
141
போப்சின்ஸ்த என்ற மனிதன் அங்கே வசிக் கிறான்”.
திலலெஸ்தக்கோவ்: மிகவும் நல்லது.
போப்சின்ஸ்த: மாண்புமிகு மன்னரைச் சந் திக்க நேர்ந்தால், அவரிடம் இப்படிச் சொல் லுங்கள்: ““மாட்சிமிகு சக்கரவர்த்தி அவர் களே, மேற்படி நகரத்தில் பியோத்தர் இவா னவிச் போப்சின்ஸ்கி என்ற மனிதன் வசிக் திறான்””.
திலெஸ்தக்கோவ்: மிகவும் நல்லது.
தகோப்சின்ஸ்கி: நாங்கள் வந்து தொல்லை கந்ததற்காக எங்களை மன்னிக்க வேண்டும்.
போப்சின்ஸ்கி: நாங்கள் வந்து தொல்லை தந்ததற்காக எங்களை மன்னிக்க வேண்டும்.
இலெஸ்தக்கோவ்: அப்படி ஒன்றுமில்லை! மிக்க மகழ்ச்சி. (அவர்களை வெளியே போ கக் காட்டூகறார்.)
காட் 8
இலெஸ்தக்கோவ் தனிமையில்.
இங்கு எராளமான அதிகாரிகள் இருக் இறார்கள். என்னை ஏதோ உயர் அரசாங்க அதிகாரியாகக் கருதிவிட்டது போலத் தெரி இறது. நேற்று அவர்கள் முகத்தில் கரியைப் பூசினேன். எத்தனை முட்டாள்கள்! இது பற்றி பீட்டர்ஸ்பர்க்கல் உள்ள திரியபிச்னுக்கு எழுதவும் சொல்லவும் வேண்டும்: அத்தகைய கட்டுரைகளை அவன் எழுதுகிறான். என்ன
142
என்பதை அவர்களுக்குக் காட்டட்டும். எய், ஒசிப்! கொஞ்சம் தாளும் மையும் எனக்குக்
கொண்டுவா.
ஒசிப் கதவு வழியாகத் தலையை விட்டூ ““உடனே'' என்று சொல்றான்.
ஒரு சமயம் திரியபீச்சன் யாரையோ சரியாகப் பிடித்து சுக்கு நூறாகக் கிறித்துவிடுவான். நல்ல சிரிப்புக்காக தன் சொந்த அப்பாவைக் கூட விட்டு வைக்க மாட்டான், பணத்தையும் விரும்புகிறான். உண்மையில் அந்த அதி காரிகள் நல்லவர்கள். அவர்கள் கடன் தந்து உதவியது நல்ல அமிசம். எவ்வளவு திடைத்திருக்கிறது என்று பார்க்கலாம். நீதி பதிமிடமிருந்து முந்நூறு, அஞ்சலக அதிகாரியிடமிருந்து முந்நூறு, அறுநூறு, எழுநூறு, எண்ணூறு...ஆகா!என்னஅழுக்குப் பிடித்த நோட்டு! தொள்ளாயிரம்... ஓ, எற்கெனவே ஆயிரத்துக்கு மேலே! இப்போது நான் வஞ்சகம் செய்யும் அந்த காப்டனைச் சந்தித்தால் யார் ஜெயிப்பது என்பதைப் பார்க்கலாம். காட்சி 9 தாள், மையுடன் ஓசிப் நுழைகறான். நஇலெஸ்தக்கோவ்: ஓசிப்,பார்த்தாயா! என்ன மாதிரியான வரவேற்பு அவர்கள் எனக்குக்
கொடுக்கிறார்கள் என்று. (எழுதத் தொடங்கு கறார்.)
143
ஒசிப்: ஆமாம், ஆண்டவனுக்கு நன்றி! ஆனால் ஒரு விஷயம், இவான் அலெக்சாந் காரலிச்.
திலெஸ்தக்கோவ்: என்ன அது?
ஒசிப்: நாம் தப்பிப் போய் விடலாம். நாம் புறப்பட்டுப் போக இதுதான் நேரம்!
இகஇலெஸ்தக்கோவ்: முட்டாள்தனம்! என்?
ஒசிப்: நாம் போய் விட வேண்டும் என்று நினைக்கறேன். அவ்வளவுதான். கடந்த இரண்டு நாள்களாக நல்ல ஆரவாரம் நடந் குது. அது போதுமானது. நாம் எதற்காக இனிமேலும் இங்கு சுற்றிக் கொண்டிருக்க வேண்டும்? அவர்கள் நாசமாய்ப் போக! நமது அதிருஷ்டம் மாறிப் போய் எந்த நிமிடத்தி லும் யாராவது வரலாம்... ஆண்டவனுக்காக, இவான் அலெக்சாந்தரவிச்! (இங்கே அவர்கள் அருமையான குதிரைகள் வைத்திருக்கிறார் கள். மின்னல் வேகத்தில் நாம் போய்விட முடியும்!
தகிலெஸ்தக்கோவ் (எழுதியவாறு): வேண் டாம், இன்னும் கொஞ்சம் தங்கியிருக்க விரும்புகிறேன். ஒருவேளை நாளைக்குப் போ கலாம்.
ஒசிப்: நாளைக்கு வேண்டாம்! இப்போதே நாம் புறப்படுவோம், இவான் அலெக்சாந்தர விச்! இப்போது அவர்கள் உங்களுக்காகச் சிவப் புக் கம்பளம் விரித்துக் கொண்டிருக்கலாம். ஆனால் நாம் சீக்ரரமாகப் போய்விடுவது நல் லது. இதற்குக் காரணம் அவர்கள் உங்களை யாரோ என்று நினைக்கிறார்கள்... நாம் தா
144
மதமாகப் போனால் உங்கள் அப்பா கோபப் படுவார். இங்கே அவர்களிடம் அருமையான குதிரைகள் இருக்கின்றன, சிட்டாய்ப் பறந்து போகும்.
தஇலெஸ்தக்கோவ் (எழுதியவாறு): நல்லது. ஆனால் முதலில் இந்தக் கடிதத்தை எடுத் துச் செல். அதே நேரத்தில் குதிரைகளுக்கும் சொல்லி வை. நல்ல குதிரைகளாக இருக்கு மாறு பார்த்துக் கொள். பாட்டுப்பாடியவாறு காற்றைப் போல விரைந்து சென்றால் வண் டிக்காரர்களுக்கு ஒரு ரூபிள் தனித்தனியாகக் கொடுப்பேன் என்று சொல்! (தொடர்ந்து எழுதியவாறு.) இந்தக் கடிதத்தை திரியடீச் இன் படிக்கும் போது வயிறு வலிக்கச் சிரிப் பான்...
ஒசிப்: அதை யார் மூலமாவது கொடுத்து விடு தறேன், ஐயா. நேரத்தை வீணாக்காமல், நான் மூட்டை கட்டுகிறேன்.
திலெஸ்தக்கோவ் (எழுதியவாறு): மிகவும் நல்லது. எனக்கு ஒரு மெழுகுவர்த்தி தா.
ஒசிப் (வெளியேறிச் சென்று திரைக்குப் பின்னி ருந்தவாறு): நண்பா, உன்னைத் தான்! இந்தக் கடிதம் தயாராக இருந்தால் அதை அஞ்சலகத்துக்கு எடுத்துப் போ, பணம் இல் லாமல் எடுத்துக் கொள்ளும்படி அஞ்சலக அதிகாரியிடம் சொல். சிறந்த மூன்று குதி ரை வண்டியை அனுப்பும்படி அவர்களிடம் சொல். அதற்கு எசமானர் பணம் தர மாட் டார்: இது அலுவல் சம்பந்தமானது பொதுச் செலவில் என்று சொல். சீக்கரமாகச் செய்,
145 10--792
இல்லாவிட்டால் எசமானர் கோபப்படுவார். பொறு, கடிதம் இன்னமும் முடியவில்லை.
திலெஸ்தக்கோவ் (இன்னமும் எழுதிய வாறு): இப்போது அவன் எங்கே வசிக்கிறான் என்று தெரியவில்லை அஞ்சலகத் தெருவி லா கரோகவாயாவிலா? அடிக்கடி தன் முக வரியை மாற்றிக்கொள்ள விரும்புகிறான், எந்த வாடகையும் தராமல். அஞ்சலகத் தெரு வுக்கே எழுதுகறேன்.(மடித்து அதில் முகவரி யை எழுதுகிறார்.)
ஒசிப் மெழுகுவர்த்தி கொண்டுவருகிறான். இலெஸ் தக்கோவ் கடி தீதற்கு முத்திரை வைக்கிறார். அதே நேரம் தொலி! 51 ன் குரல் கேட்கிறது: ““எங் கே போதிறாய், தாடிக்காரா? யாரையும் அநுமதிக்க வேண்டாம் என்று உத்தரவு பெற்றிருக்கறேன்””.
தஇலெஸ்தக்கோவ் (ஓப்பிடம் கடிதத்தைக் கொடுத்து): இதோ, வாங்கிக் கொள்.
கடைக்காரர்களின் குரல்கள்: நாங்கள் உள்ளே வருகிறோம், ஐயா! நாங்கள் காரிய மாக வந்திருக்கறோம். நாங்கள் உள்ளே போக வேண்டும்!
தெர்ஜிமோர்தாவின் குரல்: போங்கள் வெளியே! அவர் உங்களைப் பார்க்க மாட் டார், தூங்குகிறார்.
இரைச்சல் அதிகரிக்கிறது. கிலெஸ்தக்கோவ்: என்ன இரைச்சல், ஓசிப்?
அது என்ன என்று பார். ஒசிப் (சன்னல் வழியாகப் பார்த்தபடி): யா
146
ரோ சில வியாபாரிகள் உள்ளே வர விரும்பு கிறார்கள். போலீஸ்காரன் அவர்களை விட வில்லை. காகிதங்களை ஆட்டுதிறார்கள். உங் களைப் பார்க்க விரும்புவது போலத் தெதரி இறது.
தலெைஸ்தக்கோவ் (சன்னலருகே சென்று):
நண்பர்களே, உங்களுக்கு என்ன வேண் டும்?
கடைக்காரர்களின் குரல்கள்: பெருமக
னார் அவர்களே, மனுக் கொடுக்க எங்களை
அ நுமதிக்கும்படி வேண்டுகிறோம்.
திலைஸ்தக்கோவ்: அவர்களை உள்ளே
10*
விடுங்கள், அவர்களை உள்ளே விடுங்கள்! ஒசிப், அவர்கள் உள்ளே வரலாம் என்று சொல்.
ஒசிப் வெளியேறுகிறான்.
(சன்னல் வழியாக மனுக்களைப் பெற்றுக் கொண்டு, அவற்றில் ஒன்றைப் பிரித்துப் படிக்கறார்:) ““கடைக்காரன் அப்தூலினிடமி ருந்து... மிகவும் மாட்சிமை தங்கிய பெருமக னார் உயர் நிதிக்காரர் அவர்களுக்கு...” அது என்னவென்று சாத்தானுக்குத்தான் தெரி யும்: இந்த மாதிரிப் பட்டமே இல்லை!
147
காட்சி 10
வியாபாரிகள் ஒயின் கூடையுடனும் ஜீனிக் கட்டி களுடனும் நுழைூறார்கள்.
தஇலெஸ்தக்கோவ்: நண்பர்களே, உங்களுக்கு என்ன வேண்டும்?
கடைக்காரர்கள்: உங்களது தயவைப் பணி வுடன் வேண்டுகிறோம்!
தலலெஸ்தக்கோவ்: சரி, என்ன பிரச்சினை?
கடைக்காரர்கள்: எங்களைப் பாழாக்கவிடா தீர்கள், ஐயா! நியாயமற்ற அடக்குமுறைப் பிடியிலிருந்து எங்களை விடுவியுங்கள்.
தஇலைஸ்தக்கோவ்: யார் உங்களை அடக்கு வது?
கடைக்காரர்களில் ஒருவன்: எல்லாமே மேயர் செய்வது, ஐயா. அவரைப் போல ஒரு மேயர் ஒருபோதும் இருந்ததில்லை. அவரால் செய்யப்பட்ட தவறான காரியங்களைப் பற்றி கேட்டால், நீங்கள் நம்ப மாட்டீர்கள். போர்வீரர் களை எங்களிடம் தங்கவைத்து எங்களை நாசப்படுத்துகிறார். * அவர் எங்களை நடத்து றே முறை! தாடியைப் பிடித்து இழுத்து “நீ யா, தார்த்தாரே!'' என்று அழைக்கிறார். சத் தியமாகச் சொல்கிறேன்! நாங்கள் ஒழுங்காக
* நகரத்தில் இருக்கக் கூடிய போர்வீரர்களுக்கு இலவசமாக தங்கும் வசதி அளிக்கும் பொறுப்பை வியாபாரிகளிடம் ஒப்படைக்கிறார் என்பதைக் குறிக் இறது.
148
மரியாதை காட்டாதது போல! ஆனால் எப்போ துமே எங்களது கடமையைச் செய்கிறோம்: அவருடைய மனைவிக்கும் மகளுக்கும் உடைக் காக சிறிதளவு துணிதான்--அதற்கு எங் களுக்கு மறுப்பு ஏதும் கிடையாது. ஆனால் அது அவருக்குப் போதுமானது இல்லை. அப் படித்தான், கடைக்குள்ளாக வந்து அவர் கண்ணில் முதலாவதாகப் படும் பொருளை எடுக்கிறார்: ““ஓ, தம்பி, இது அருமையான துணி. இதை எனக்கு அனுப்புவாயா?2”” அவ் வாறே அனுப்புகிறோம், அந்தச் சுருளில் ஐம்பது கஜமாவது இருக்கும். இலைஸ்தக்கோவ்: என்ன அயோக்கியன்! கடைக்காரர்கள்: அயோக்கயன்தான் பொ ருத்தமானது! அவர் கடைக்குள் வரும் போது எல்லாவற்றையும் மறைத்து வைக்க வேண் டியிருக்கறது. எதிலும் அவர் குறிப்பாக இல் லை, எந்தப் பழைய குப்டையாக இருந்தா லும் எடுப்பார்! எழு ஆண்டுகளாகப் பீப்பா யில் இருக்கும் உலர்ந்த முந்திரிகளை என் கடையாள் கூட தொட்டதில்லை. அவரோ கை நிறைய எடுத்துத் தின்கறார். அவரது பெய ருக்குரிய புனித அந்தோனினுடைய திருத் தகைப் புனிதர் திரு நாளில் அவருக்கு எல் லாவகையான பரிசுகளும் கொடுக்கறோம். ஆனால் அத்துடன் அவர் திருப்தியடையாது புனித ஒனூபிரியினுடைய திரு நாளில் மற் றொன்று வருவதாக எங்களிடம் கூறுவார். அதன் பொருள் மேலும் பரிசுகள் என்பதா
கும்.
149
திலெஸ்தக்கோவ்: அசல் வழிப்பறிக்கொள் ளைக்காரன்!
கடைக்காரர்கள்: உண்மைதான்! எதிராக நாம் ஒரு வார்த்தை சொன்னால் முழு ரெஜி மென்டையே நம்மிடம் தங்கவைத்து விடுவார். அல்லது தனது சொந்த வீட்டிலேயே நம் மைப் பூட்டிவைப்பார். “உன்னை என்னால் கசையடி கொடுக்க முடியாது?” என்பார், “உன்னை என்னால் சித்திரவதை செய்ய முடியாது--அது சட்டத்திற்குப் புறம்பானது. ஆனால், நண்பனே, உப்பு ஹெர்ரிங் மீனை உண்ண வைப்பேன்!”
கலெைஸ்தக்கோவ்: அவன் ஒரு ராஸ்கல்! இதற்காக அவன் சைபீரியாவுக்கு அனுப்பப் படுவான்!
கடைக்காரர்கள்: சைபீரியா அல்லது அதற் கும் அப்பால்-— அவரை அனுப்ப எந்த இடத் கையும் நீங்கள் தேர்ந்கெடுக்கலாம். எங்க ளிடமிருந்து எந்தளவு அதிகத் தொலைவு இருக்கிறதோ அங்கே. மேன்மை சான்றீர், எங்களது விருந்தோம்பலின் அடையாளமாக கொஞ்சம் ஜீனியும் ஓயினும் தயவுசெய்து ஏற்றுக் கொள்ளுங்கள்.
தஇலைஸ்தக்கோவ்: ஆண்டவனுக்காக வேண் டாம்! அது போல நீங்கள் நினைக்க வேண் டாம்: நான் லஞ்சம் வாங்குவதே இல்லை. ஆனால் நீங்கள் எனக்கு முந்நூறு ரூபிள் கடனாகத் தந்தால் அது முற்றிலும் வே றான விஷயம். கடன் என்னால் பெற்றுக் கொள்ள முடியும்.
150
கடைக்காரர்கள்: நிச்சயமாக, ஐயா! (அவர் கள் பணத்தை வெளியே எடுக்கிறார்கள்.) ஆனால் முந்நூறு எதற்காக? ஐந். நூறை எடுத்துக் கொள்வது நல்லது, எங்களுக்கு உத லியாக இருக்கும் என்றால்.
தஇலெஸ்தக்கோவ்: நீங்கள் வற்புறுத்துவதா னால். ஏற் ததத வவ எப்படியும் அது கடன் தான்..
கடைக்காரர்கள் (வெள்ளித் தட்டில் வைத்து பணத்தை அளித்தவாறு): இந்தத் தட்டை யும் எடுத்துக் கொள்ள மாட்டீர்களா?
திலெஸ்தக்கோவ்: சரி, தட்டையும் எடுத்துக் கொள்கிறேன்.
கடைக்காரர்கள் (குனிந்து): கொஞ்சம் ஜீனி யையும் தயவுசெய்து எடுத்துக் கொள்ளுங் கள்.
திலெஸ்தக்கோவ்: வேண்டாம். நான் லஞ் சம் வாங்குவதே இல்லை...
ஒசிப்: மேன்மை சான்றிீர்! அதை எதற்காகப் பெற்றுக் கொள்ளவில்லை? எடுத்துக்கொள் ஞங்கள்! பயணத்தின் போது எல்லாமே பயன்படும். சரி, அந்த ஜீனிக் கட்டிகளை யும் பொட்டலத்தையும் கொடுங்கள்! எல்லா வற்றையும் கொடுங்கள்! எல்லாமே உதவக் கூடும். அங்கே என்ன? கயிறா? அதையும் கொடுங்கள் — பயணத்தில் கயிறு கூட உதவி செய்யும்: வண்டி உடைந்து போனாலோ அல் லது வேறு ஏதேனும் நடந்தாலோ, இதைக் கொண்டு திரும்பக் கட்டலாம்.
கடைக்காரர்கள்: ஓயா, அருள் கூர்ந்து எங்
151
களது கோரிக்கையைக் கவனியுங்கள். நீங்கள் எங்களுக்கு உதவவில்லை என்றால், என்ன செய்வது என்று எங்களுக்குத் தெரியாது. அந்த நிலை ஏற்பட்டால் தற்கொலை செய் வதைக் தவிர வேறு வழியில்லை. திலெஸ்தக்கோவ்: நிச்சயமாக! என்னால்
முடிந்த எல்லாவற்றையும் செய்வேன்.
கடைக்காரர்கள் வெளியேறுகிறார்கள் . பெண்ணுடைய
குரல் கேட்கிறது: ““என்னைத் தடுத்து நிறுத்த
உனக்கு உரிமையில்லை! உனக்கு எதிராகப் புகார் செய்வேன். என்னைத் தள்ளுவதை நிறுத்து, நீ புண்படுத்துகிறாய்!””
யார் அது? (சன்னலுக்குச் செல்கிறார்.) என்ன விஷயம், அம்மா?
இரு பெண்களின் குரல்கள்: கருணை காட்டுங்கள், ஐயா, உங்களைக் கெஞ்சுகிறேன்! மேன்மை சான்றீர், என்னுடைய கோரிக்கை யைக் கேளுங்கள்!
இலைஸ்தக்கோவ்: அவளை உள்ளே விடுங் கள்.
காட்சி 11 கொல்லனின் மனைவியும் சார்ஜென்டின்
விதவையும் நுமைூறார்கள்.
கொல்லனின் மனைவி (முழங்கால் வரை பணிந்து): எங்கள் மீது கருணை காட்டுங் கள்...
152
சார்ஜென்டின் விதவை: எங்கள் மீது ௧௫௬ ணை காட்டுங்கள்...
இலெஸ்தக்கோவ்: நல்லது, நீங்கள் யார்?
சார்ஜென்டின் விதவை: இவானோவா, சார்ஜென்ட் இவானோவின் விதவை.
கொல்லனின் மனைவி: பஷ்லியோப்இனா, கொல்லன் பஷ்லியோப்கினின் மனைவி...
இலெஸ்தக்கோவ்: பொறுங்கள்! ஒவ்வொரு வராக. என்ன பிரச்சினை?
கொல்லனின் மனைவி: கருணை காட்டுங் கள், ஐயா: மேயருக்கு எதிராக புகார் கொண்டு வந்திருக்கிறேன்! அவர் நாசமாய்ப் போகட்டும்! அவருடைய குழந்தைகள், திரு டனாதிய அவர், அவருடைய மாமாக்கள் அத்தைகள் எல்லாரும் பாழாய்ப் போகட் டும்!
கிலெஸ்தக்கோவ்: அவர் என்ன செய் தார்?
கொல்லனின் மனைவி: என் கணவருக்கு முறை வராத நிலையில் அவரைக் கட்டாயப் படைப் பணியில் சேர்த்து விட்டார், மோசக் காரர்! சட்டப்படி அவரை அழைக்க முடியாது, எனெனில் அவர் மணமானவர்.
தஇலெஸ்தக்கோவ்: அப்படியானால், எப்படி அவரால் செய்ய முடிந்தது?
கொல்லனின் மனைவி: அவரால் செய்ய முடியும், மோசடிக்காரர், செய்து விட்டார்-- ஆண்டவன் அவரை நரகத்தில் தள்ளட்டும்! அவரும் அவருடைய அத்தையும் நாசமாய்ப் போகட்டும். அவரது அப்பா இன்னமும் உயி
153
ரோடு இருந்தால் பிணமாகத் தொலையட்டும் அல்லது தொண்டையில் சிக்கிச் சாகட்டும். தை யல்காரனுடைய மகனைத்தான் அவர் சேர்த் துக் கொண்டிருக்க வேண்டும், அவனும் ஒரு குடிகாரன். ஆனால் அவனது பெற்றோர்கள் அவருக்கு விலையுயர்ந்த பரிசு கொடுத்தார் கள். ஆகவே கடைக்காரி பந்தெலேயெவா வுடைய மகனை அனுப்ப முடிவு செய்தார். பந் தெலேயெவா அவருடைய மனைவிக்கு மூன்று சுருள் துணி அனுப்பினாள். ஆகவே அவர் என் பக்கம் திரும்பிவிட்டார். “ “உன் கணவன் உனக்கு எதற்காகத் தேவை?”” என்று கேட் கறார், “அவனால் உனக்குப் பயன் இல்லை.” அதைச் சொல்ல வேண்டியது நான் தான், அவரால் எதுவும் பயன் உண்டா இல்லையா என்பதை, மோசடிக்காரன்! “ “அவன் ஒரு திரு டன்” என்கிறார், ““இது வரைக்கும் அவன் திருடவில்லை, ஆனால் இப்போதோ பிறகோ திருடுவான், அடுத்த ஆண்டு எப்படியும் கட்டா யப் படைப்பணியில் சேர்த்துக் கொள்ளப்படு வான்.” ஆனால் என் கணவன் இல்லாமல் என்னால் எப்படிச் சமாளிக்க முடியும்? நான் பலவீனமானவள், போக்கிரி! அவர் குடும்பத் இல் யாரும் நாளைக் காலையில் இல்லாமல் போகட்டூம்! அவருக்கு மாமியார் இருந்தால், அந்த மாமியாரும்...
திலெஸ்தக்கோவ்: சரி, சரி. உனக்கு என்ன? (கொல்லனின் மனைவியை வெளியே தள்ளு ஐறார்.)
கொல்லனின் மனைவி (வெளியேறிய
154
வாறு): தயவுசெய்து மறந்து விடாதீர்கள்! கருணை காட்டுங்கள், ஐயா!
சார்ஜென்டின் விதவை: மேயரைப் பற்றி, ஐயா...
தஇிலெஸ்தக்கோவ்: சரி, என்ன அது? என் னை எதற்குப் பார்க்க வந்தாய்? சுருக்கமாகச் சொல்.
சார்ஜென்டின் விதவை: என்னைச் சாட்டை யால் அடித்தார், ஆண்டவன்தான் எனக்கு சாட்சி.
இலெஸ்தக்கோவ்: எப்படி நடந்த்து?
சார்ஜென்டின் விதவை: எல்லாம் ஒரு தவறினால் தான், ஐயா! யாரோ பெண்கள் சந்தையில் சண்டை போட்டுக் கொண்டிருந் தார்கள். அது முடிகறவரை போலீஸ் அங்கே வரவில்லை. யாரையாவது அவர்கள் கைது செய்ய வேண்டியிருந்தது. ஆகவே என்னைப் பிடித்துக் கொண்டார்கள். மேயர் என்ை னச் சாட்டையால் அடிக்க வைத்தார். இரண்டு நாள்களுக்கு என்னால் உட்கார முடியவில் லை.
தஇிலெஸ்தக்கோவ்: சரி, இது பற்றி என்ன செய்ய வேண்டும்?
சார்ஜென்டின் விதவை: இப்போது எது வும் அது பற்றிச் செய்ய முடியாது. ஆனால் அவரை எனக்கு ஏதாவது நட்ட ஈடூ கொடுக்கு மாறு செய்ய உங்களால் முடியும். பணம் வந்து கொட்டட்டும் என்று பரிசுக் குதிரை யின் வாயைப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடிய பெண் இல்லை நான்...
155
கிலைஸ்தக்கோவ்: சரி, சரி, அது பற்றி கவ னிக்கறேன். இப்போது புறப்படு.
சார்ஜென்டின் விதவை வெளியேறுகிறாள். மனுக்க ளைப் பிடித்துக் கொண்டிருந்த கைகள் சன்னலுக் குள்ளாகச் த சல்ளைறன.
என்ன சனியன் நடக்கிறது இப்போது? (சண் னலுக்குச் செல்றோர்.) அதை நான் விரும்ப வில்லை! வேண்டாம், வேண்டாம்! (அப்பால் நகர்கறார்.) எனக்கு அவர்களை சலித்துப் போய்விட்டது! அவர்களை உள்ளே விட வேண் டாம், ஒசிப்!
ஒசிப் (சன்னல் வழியாகக் கத்துகிறான்): போங் கள் அப்பால்! இன்றைக்கு போதுமானது! நா மைக்கு வாங்க!
க ன் திறக்க, சொரசொரப்பான கம்பளிக் கோட்டு
அணிந்து, முகம் வழிக்காது, வீங்கிய உதட்டுடன், கட்டுப்
போடப்பட்ட கன்னத்துடன் ஒரு மனிதன் நிற்கிறான்.
அவனுக்குப் பின்னே பார்வையில் படுமாறு மற்றவர் கள் நிற்கிறார்கள்.
போ இங்கிருந்து! உனக்கு என்ன வேண்டும்? (முதல் ஆளை அவனது வயிற்றைப் பிடித்
துப் பின்னுக்குத் தள்ளுகறான். அவனோடு வெளியேறி கதவைச் சாத்துகறான்.)
156
காட்சி 12 மரியா அந்தோனவ்னா நுழைகிறாள்.
மரியா அந்தோனவ்னா: ஓ!
தலெஸ்தக்கோவ்: செல்வி! எதேனும் உங் களை அச்சுறுத்தி விட்டதா?
மரியா அந்தோனவ்னா: ஒன்றுமில்லை.
தலைஸ்தக்கோவ் (குன்னை உயர்வாகக் காட்டியபடி): என்னை நீங்கள் ஒரு மாதிரி யான ஆள் என்று எண்ணியது கண்டு பெரு மைப்படுதறேன்... நீங்கள் எங்கே போதறீர் கள் என்று நான் கேட்கலாமா?
மரியா அந்தோனவ்னா: உண்மையில் நான் எங்கும் போகவில்லை.
திலெஸ்தக்கோவ்: என்ன குறிப்பிட்ட நோக் கத்திற்காக எங்கும் போகாமல் இருக்கிறீர் கள்?
மரியா அந்தோனவ்னா: என் அம்மா இங்கே இருக்கக் கூடும் என்று நினைக் தேன்.
தலைஸ்தக்கோவ்: இல்லை, நீங்கள் எங்கு மே போகாமல் இருப்பதற்கான காரணத்தை அறிய ஆவலாக இருக்கிறேன்.
மரியா அந்தோனவ்னா: நான் உங்களை தொல்லைப்படுத் தனேன். நீங்கள் முக்கிய மான விவகாரங்களைச் செய்யட்டும் என்று இருந்தேன்.
கஇலைஸ்தக்கோவ் (குன்னை உயர்வாகக்
காட்டியபடி): எந்த முக்கிய விவகாரத்தை
157
விடவும் உங்களது கண்கள் மேலானவை. நீங்கள் தொல்லையா? நீங்கள் தொல்லை யாகவே இருக்க முடியாது... மாறாக, நீங் கள் எனக்கு மகிழ்ச்சியைத் தர முடியும்.
மரியா அந்தோனவ்னா: பீட்டர்ஸ்பர்க்கில் பேசக் கூடிய முறை இது.
தஇலைஸ்தக்கோவ்: உங்களை மாதிரி அழ கிய பெண்ணுக்கு வேறு என்ன மாதிரியான பேச்சுப் பொருத்தமானது? உங்களுக்கு ஒரு நாற்காலி தருவதன் மூலம் நான் மகழ்ச்சி அடையலாமா? நான் என்ன சொல்கிறேன் ₹ உங்களுக்குத் தகுதியானது சிம்மாசனம்.
மரியா அந்தோனவ்னா: உண்மையில் எனக்குத் தெரியவில்லை. போயிருக்க வேண் டும்... (உட்கார்கறாள்.)
திலெஸ்தக்கோவ்: என்ன அருமையான ஸ்கார்ப் அணிந்திருக்கிறீர்கள்.
மரியா அந்தோனவ்னா: ஐயோ! நக ரத்து ஆட்களாஇய நீங்கள் எப்போதுமே மா காண வாசிகளாஇய எங்களைக் கேலி செய்வீர் கள்.
திலெஸ்தக்கோவ்: நான் மட்டும் அந்த ஸ்கார்பாக இருந்தால் லில்லி போன்ற உங் களது வெண்ணிறக் கழுத்தைச் சுற்றி நெருக் கமாகப் பின்னிக்கடப்பேன்.
மரியா அந்தோனவ்னா: நீங்கள் எதைப் பற்றிப் பேசுகிறீர்கள் என்றே எனக்குத் தெரி யவில்லை. ஸ்கார்பா2.. இன்றைக்கு என்ன அசாதாரணமான தட்பநிலை!
திலெஸ்தக்கோவ்: செல்வியே, உங்களது
158
உதடூகள் எந்தத் தட்பவெப்ப நிலையை விட வும் மிகவும் மேலானவை.
மரியா அந்தோனவ்னா: ஓ, அந்த மாதிரி விஷயங்களைப் பேசுகிறீர்களா! என்னுடைய ஆல்பத்தில் உங்களைச் சில கவிதைகள் எழு தச் சொல்ல விரும்புகிறேன். உங்களுக்கு நிறையக் கவிதைகள் தெரியும், இல்லையா?
திலெஸ்தக்கோவ்: உங்களது விருப்பம் எனது கட்டளை. என்ன மாதிரியான கவிதை களை விரும்புகறீர்கள்?
மரியா அந்தோனவ்னா: ஓ எதுவாக இருந்தாலும், ஏதோ நல்லதாகவும் புதிய தாகவும்.
இலெஸ்தக்கோவ்: ஆமாம், கலிதைகள்! எனக்கு நிறையத் தெரியும்.
மரியா அந்தோனவ்னா: எனக்காக எதை எழுதப் போஇறீர்கள் என்று சொல்லுங்கள்.
தஇலெஸ்தக்கோவ்: கவலை ஏன்? ஒப்பிக் காமலேயே என்னால் அவற்றை நினைவில் வைக்க முடியும்.
மரியா அந்தோனவ்னா: கவிதை நான் மிகவும் விரும்புகிறேன்.
தலெஸ்தக்கோவ்: பல வித்தியாசமான வகைகள் எனக்குக் தெரியும். சரி, நீங்கள் வற் புறுத்தினால்... இது எப்படி இருக்கறது: “ஓ, மனிதனே, தொல்லை என்றால் தொலைத்து எடுக்கறாய் கடவுளை!..'”* இது என்னுடை * புகழ்பெற்ற ருஷ்ய எழுத்தாளரும் விஞ்ஞானி
யுமான மிகயீல் லொமனோசவின் (1711-1765)
கவிதை வரிகள்.
159
யது. இன்னும் நிறைய இருக்கின்றன. இப் போது என்னால் அவற்றை நினைவு கூர முடியாது... எப்படிப் பார்த்தாலும் இதில் ஒன்றுமில்லை. உங்களிடம் நான் சொல்ல விரும்புவது என்ன என்றால், உங்களது கண் களைப் பார்க்கன்ற போது, எனது காதல்... (தனது நாற்காலியை நெருக்கமாக நகர்த்து இறார்.)
மரியா அந்தோனவ்னா: காதலா! இது என்னவென்று எனக்குப் புரியவில்லை... காதல் என்பதன் அருத்தம் எனக்குத் கெரி யவே இல்லை... (தனது நாற்காலியை அப் பால் நகர்த்துகிறாள்.)
கஇலைஸ்தக்கோவ் (நாற்காலியை நெருக்கமாக நகர்த்தியவாறு): என் அப்பால் நகர்த்து கிறீர்கள்? சேர்ந்து நெருக்கமாக உட்கார்வது மிகவும் வசதியாக இருக்கறது.
மரியா அந்தோனவ்னா (அப்பால் நகர்ந்த வாறு): நாம் என் நெருங்கயே உட்கார வேண்டும், கள்ளி உட்கார்ந்தாலும் தவறு ஒன்றுமில்லையே?
கலெைஸ்தக்கோவ் (நெருக்கமாக நகர்ந்து): என் தள்ளி இருக்க வேண்டும், சேர்ந்து உட் காரும் போது அதுதானே?
மரியா அந்தோனவ்னா (அப்பால் நகர்ந்த வாறு): ஆனால் இப்படி செய்வது ஏனென்று தான் எனக்குப் புரியவில்லை.
திலெஸ்தக்கோவ் (நெருக்கமாக நகர்ந்து): எல்லாமே உங்களது மனத்தில்தான். நாம் நெருக்கமாக இருக்கிறோம் என்று மட்டும்
160
நினைக்கிறீர்கள். ஆனால் நாம் தள்ளி இருப் பதாகச் சற்று எண்ணிப் பாருங்கள். என்ன பேரானந்தம், உங்களை எனது கரங்களால் சுற்றி வளைத்து என்னோடு சேர்த்துக் கொண்டால்!
மரியா அந்தோனவ்னா (சன்னலுக்கு வெளியே பார்த்துக் கொண்டு): சற்று முன் னர் பறந்து சென்ற பறவை எது? காக்கை யா? ர
திலெஸ்தக்கோவ் (அவளது தோளில் முத்த மிட்டு சண்னலுக்கு வெளியே பார்த்து): காக் கைதான்.
மரியா அந்தோனவ்னா (சீற்றத்துடன் தாவி எழுந்தவாறு): இது உண்மையாகவே அளவுக்கு மீறி! என்ன தைரியம்!..
தலெஸ்தக்கோவ் (அவளைத் கடுத்து): என்னை மன்னியுங்கள், செல்வியே! அது காதல், தூய்மையான காதல் அவ்வாறு என் னைச் செய்ய வைத்துவிட்டது.
மரியா அந்தோனவ்னா: என்னை உண் மையான இராமவாசியாக நீங்கள் கருதிவிட் டர்கள் போலிருக்கிறது... (வெளியேற முயல் றாள்.)
தஇலெஸ்தக்கோவ் (அவளைத் தொடர்ந்து தடுக்க முயன்றவாறு): அது காதல், நான் சத்தியம் செய்கிறேன். வேடிக்கையாக மட்டு மே கருதினேன். மன்னியுங்கள், மரியா அந் கோனவ்னா, தயவுசெய்து என்னை மன்னி யுங்கள். உங்கள் மன்னிப்பை வேண்டி முழங் காலிட்டூ நிற்கவும் தயார். (முழங்காலிட்டூ நிற்
161 11-792
இறார்.) மன்னிக்கும்படி வேண்டூகறேன்! பாருங்கள், முழங்காலிட்டு நிற்கிறேன்.
காட்சி 13 ஆன்னா அந்திரேயெவ்னா நுழைகறாள்.
ஆன்னா அந்திரேயெவ்னா (இலெஸ்தக் கோவ் முழங்காலிட்டு நிற்பதைப்பார்த்து): அட ஆண்டவனே!
திலெஸ் தக்கோவ் (எழுந்தவாறு): சனியனே!
ஆன்னா அந்திரேயெவ்னா (குன் மகளி டம்): இதற்கு என்ன அருத்தம்? என்ன மாதிரியான நடத்தை இது?
மரியா அந்ததோனவ்னா: அம்மா, நான்...
ஆன்னா அந்திரேயெவ்னா: அறையை லிட்டு வெளியேறு, இப்போதே! காதில் விழு திறதா? திரும்பவும் உன் முகத்தை இங்கே
காட்ட வராதே.
மரியா அந்தோனவ்னா கண்ணீர் மல்க வெளியேறு கிறாள்.
எனக்கு ஒரே ஆச்சரியம், மேன்மை சான் Is
தஇலைஸ்தக்கோவ் (ஒருபுறமாக): சுவையான கவளம் அவள்... மோசம் இல்லை. (முழங் காலிட்டு நின்றவாறு.) மேடம், எனக்குக் காதல் வேட்கை எற்பட்டு விட்டதை நீங்கள் அறிய வேண்டும்.
162
ஆன்னா அந்திரேயெவ்னா: முழங்கா லிட்டு என்ன செய்இறீர்கள்? தயவு செய்து எழுந்திருங்கள். தரை அவ்வளவு சுத்தமாக இல்லை!
இலைஸ்தக்கோவ்: நான் முழங்காலிட்டு... நான் முழங்காலிட்டு நிற்க வேண்டும்! எனது விதி என்னவாகும் என்பதை நான் அறிந்து கொள்ள வேண்டும்: வாழ்வா சாவா.
ஆன்னா அந்திரேயெவ்னா: என்னை மன்னியுங்கள். உங்களது பேச்சின் அருத்தத் தை என்னால் முற்றிலும் புரிந்து கொள்ள முடியவில்லை. என் மகளைப் பற்றி ஏதே னும் அறிவிப்புச் செய்கிறீர்களா?
திலெஸ்தக்கோவ்: இல்லை, இல்லை, உங் களைத்தான், உங்களைக் காதலிக்கிறேன். எனது வாழ்க்கை ஒரு நூலில் தொங்குகிறது. எனது சாகாத காதல் உங்களுக்குத் தேவை மில்லை என்றால், பூமியில் வாழவே நான் அருகதை இல்லாதவன் ஆவேன். அழன்று எரியும் எனது இதயத்துடன் உங்களது ஒப்பு தலைக் கேட்கிறேன்.
ஆன்னா அந்திரேயெவ்னா: ஆனால் பா ருங்கள்... நான் ஓரளவுக்கு... திருமணம் ஆனவள்.
திலைஸ்தக்கோவ்: அதுவன்று விஷயம்! உண்மைக் காதலுக்கு எல்லையே கிடையாது. எங்காவது கண் காணாத இடத்திற்குப் போய் விடலாம். உங்கள் ஒப்புதலை வேண்டுகிறேன்!
163
காட்டு 14
மரியா அந்தோனவ்னா திடீரென்று உள்ளே நுழைகிறாள்.
மரியா அந்தோனவ்னா: அம்மா, அப்பா சொல்கிறார் நீங்கள்... (கலெஸ்தக்கோவ் முழங்காலிட்டு நிற்பதைப் பார்த்தவாறு.) அட ஆண்டவனே!
ஆன்னா அந்திரேயெவ்னா: நீ என்... எதற்காக? நீ என்ன செய்வதாக நினைக் கிறாய்? சூடுபட்ட பூனை மாதிரி உள்ளே ஒடி வருகிறாய்! எதைப் பற்றி அவ்வளவு வியப்படை கிறாய்? உன் மண்டைக்குள் என்ன முட்டாள் தனம் இருக்கறது? உனக்குப் பதினெட்டு வயது என்று யாரும் நினைக்க மாட்டார்கள். மூன்று வயதுக் குழந்தை மாதிரி இருக்கிறாய். எப்போது அறிவைக் கற்றுக்கொள்ளப் போ கிறாய், வளர்ந்த பெண் போல எப்போது முறையாக நடக்க ஆரம்பிக்கப் போறாய்? நல்ல நடத்தைகளை எப்போது கற்றுக்கொள் ளப் போகிறாய்?
மரியா அந்தோனவ்னா (கண்ணீருடன்): அம்மா, உண்மையாகவே எனக்குத் தெரி யாது...
ஆன்னா அந்திரேயெவ்னா: உனது மண் டை காலியாகவா போயிற்று. அந்த லியாப் தன்-தியாப்கனுடைய குமாரத்திகளைப் பார்த் துச் செய்கிறாய். அவர்களை என் பார்க் கிறாய்? நீ அவர்களைப் பார்க்கக்கூடாது.
164
நல்ல மாதிரிகளை நீ பின்பற்ற வேண்டும், உதாரணமாக உன் அம்மாவை எடுத்துக் கொள்.
திலைஸ்தக்கோவ் (மரியாவுடைய கையைப் பற்றியபடி): ஆன்னா அந்திரேயெவ்னா, எங் களது மகழ்ச்சியில் குறுக்கட வேண்டாம் என்று கெஞ்சிக் கேட்டுக்கொள்கறேன். எங் களது காதலை ஆசிர்வதியுங்கள்.
ஆன்னா அந்திரேயெவ்னா (இகைப்புற்ற படி): அவளையா சொல்கிறீர்கள்?
திலெஸ்தக்கோவ்: தீர்மானியுங்கள்: வாழ் வா சாவா?
ஆன்னா அந்திரேயெவ்னா: நீ என்ன செய்திருக்கறாய் என்பதைப் பார், முட்டாளே. எல்லாமே உன்னால்தான், மதிகெட்டவளே, நமது மதிப்பிற்குரிய விருந்தினர் எனக்கு முன்னால் மண்டியிட்டு நிற்கும் போது நீ யோ கிறுக்குப் பிடித்தது போல ஒடி வரு திறாய். உன்னைக் தண்டிப்பதற்காக நான் முடியாது என்று சொல்ல வேண்டும். இத் தகைய மகழ்ச்சிக்கு நீ அருகதை இல்லாத வள்.
மரியாஅந்ததோனவ்னா: நான் திரும்பவும் செய்யவே மாட்டேன், அம்மா, கண்டிப்பாக மாட்டேன்.
165
காட்சி 15 மேயர் திணறியவாறு உள்ளே நுழைகதறார்.
மேயர்: கருணை காட்டுங்கள், மாட்சிமை சான்றீர்! என்னைப் பாழாக்கி லிடாதர்கள்!
கிலெஸ்தக்கோவ்: என்ன ஆயிற்று உங் களுக்கு?
மேயர்: கடைக்காரர்கள் உங்களிடம் புகார் செய்தார்கள், மேன்மை சான்றீர். அவர்கள் சொல்வதில் பாதி கூட உண்மையில்லை, நான் சத்தியமாகச் சொல்கறேன்! அவர்களே மக்களை ஏமாற்றுகிறார்கள், நிறுவையில் கள்ளத்தனம் செய்கிறார்கள். நான் அவளைச் சாட்டையால் அடித்ததாக சார்ஜென்டினு டைய விதவை உங்களிடம் சொன்னாள். அவ ளும் பொய் சொல்ூறாள். கடவுள் சத்தியமாக, அது பொய். அவளே தன்னை அடித்துக் கொண்டாள்.
நஇலைஸ்தக்கோவ்: சார்ஜென்டினுடைய வித வை நாசமாகப் போகட்டும்-- அவளைப் பற்றி எனக்கென்ன அக்கறை!
மேயர்: அவர்களை நம்பாதீர்கள், மேன்மை சான்றீர்! அவர்கள் பொய்யர்களின் கூட்டம்... எந்தக் குழந்தையும் நம்பாது. அவர்கள் கூட்டுக் களவானி என்பது இந்த நகரம் முழு மைக்குமே தெரியும். மோசடி செய்தது பற்றி ஒன்றைச் சொல்லிக் கொள்ள அநுமதியுங் கள்: அத்தகைய மோசடிக்காரர்களை உலகம்
பார்த்ததே இல்லை.
166
ஆன்னா அந்திரேயெவ்னா: மதிப்பிற்கு ரிய இவான் அலெக்சாந்தரலிச் என்ன மரியா தை கொடுத்தார் என்பது உங்களுக்குத் தெரி யுமா? நம் மகளைத் திருமணம் செய்து தரச் சொல்கிறார்.
மேயர்: என்ன? உனக்கு மூளை கோளாறாக விட்டதா? நீ என்ன சொல்கிறாய் என்று உனக்குத் தெரியவில்லை. தயவுசெய்து கோபப் பட வேண்டாம், மேன்மை சான்றீர்: அவள் சற்று இறுக்க, அவள் அம்மாவைப் போல வே.
திலெஸ்தக்கோவ்: ஆனால் அது உண்மை தான். அவளை நான் காதலிக்கறேன்.
மேயர்: மேன்மை சான்றீர், என்னால் நம்ப முடியவில்லை.
ஆன்னா அந்திரேயெவ்னா: ஆனால் அவர் உங்களிடத்தில் சொல்கிறாரே.
இலைஸ்தக்கோவ்: நான் கிண்டல் செய்ய வில்லை... அவள் மீதான என் காதல் என் னைப் பைத் தியமாக்கிவிடும்.
மேயர்: என்னால் நம்ப முடியவில்லை. அத் தகைய மரியாதைக்கு நான் அருகதையற்ற வன்.
திலெஸ்தக்கோவ்: ஆனால் நீங்கள் சம்ம தம் தரவில்லை என்றால் நான் என்ன செய் வேன் என்று எனக்கே தெரியாது...
மேயர்: என்னால் அதை நம்ப முடியவில் லை. மேன்மை சான்றீர், கண்டல் செய்தறீர் களா?
ஆன்னா அந்திரேயெவ்னா: நீங்கள் மிக
167
வும் அருவருப்பானவர்! அந்தப் பெரிய மனி தர் என்ன சொல்கிறார் என்பதை நீங்கள் கேட்கவில்லையா?
மேயர்: என்னால் அதை நம்ப முடியவில் லை.
திலெஸ்தக்கோவ்: உங்களுடைய ஒப்புதல், உங்களுடைய ஒப்புதல்! நான் துணிச்சலான ஆள்! எதையும் செய்வேன்: என்னை நானே சுட்டுக் கொண்டால் நீங்கள் வழக்கு மன்றத் திற்கு அனுப்பப்படுவீர்கள்.
மேயர்: ஒ, ஆண்டவனே! நான் அப்பாவி, உடலாலும் உள்ளத்தாலும் அப்பாவி. தயவு செய்து கோபப்பட வேண்டாம்! மேன்மை சான் நீர், உங்கள் விருப்பம் போலச் செய்யலாம் என்று பணிவுடன் சொல்கறேன். எனது தலையில்... என்ன நடக்கிறது என்று எனக் குத் தெரியவில்லை. இந்த மாதிரி முட்டாள் ஆனது முன்னர் எப்போதும் இல்லை.
ஆன்னா அந்திரேயெவ்னா: சரி, உங்களது வாழ்த்துகளைச் சொல்லுங்கள்!
தலெஸ்தக்கோவ் மரியா அந்தோனவ்னாவுடன் மேயரிடம் வருகிறார்.
மேயர்: உங்கள் இருவரையும் ஆண்டவன் ஆசிர்வதிப்பானாகவும், ஆனால் இது என் குற்றமல்ல.
திலெஸ்தக்கோவ் மரியா அந்தோனவ்னாவை முத்த மிடுகிறார். மேயர் அவர்களைக் கவனிக்கிறார்.
168
என்ன சனியன்? உண்மையாகவே! (கண்க ளைத் தேய்க்கறார்.) அவர்கள் ஒருவரையொ ருவர் முத்தமிடுகறார்கள்! அன்பான ஆண்ட வனே, அவர்கள் ஒருவரையொருவர் முத்தமிடு கிறார்கள்! அது உண்மை, அவர்கள் நிச்சயிக் கப்பட்டு விட்டார்கள்! (ம&ழ்ச்சியால் கறீச்சிடவும் குதிக்கவும் செய்றார்.) ஆகா, அந்தோன்! ஆகா, அந்தோன்! இன்று உனக்கு அ திருஷ்ட
நாள்!
காட்சி 16
ஓசிப் நுழைகறான்.
ஒசிப்: குதிரைகள் தயாராக இருக்கின்றன.
திலெஸ்தக்கோவ்: நல்லது... இப்போதே.
மேயர்: மேன்மை சான்றீர், புறப்படூகறீர்களா?
தஇிலெஸ்தக்கோவ்: ஆமாம், புறப்படுகிறேன்.
மேயர்: ஆனால், மேன்மை சான்றீர், திரும ணத்தைப் பற்றி எதுவுமே சொல்லவில்லை யே?
திலெஸ்தக்கோவ்: ஒ, அதுவா, ஆமாம்... வயதான என் மாமாவைப் பார்க்கப் போ தறேன், ஓரிரு நாள் ஆகும்-— அவர் பணக் காரக் இழவர்... நாளைத் திரும்புவேன்.
மேயர்: உங்களைத் தாமதம் செய்ய முடி யாது; பத்திரமாகத் திரும்ப வேண்டுமென்று நினைக்கிறோம்.
தஇலைஸ்தக்கோவ்: ஆமாம், அப்படித்தான்.
169
உடனே திரும்பி விடுவேன். போய் வரு தறேன்... என் அருமை... வார்த்தைகள் வர வில்லை! போய் வருகிறேன், என் அன்பே! (அவளது கையை முத்தமிடூகறார்.)
மேயர்: பயணத்திற்கு எதேனும் உங்களுக் குத் தேவைப்படுமா? மேன்மை சான்றீர், உங் களிடம் பணம் இல்லாதது போல இருந்த த?
தஇலைஸ்தக்கோவ்: இல்லை, அது எதற் காக? (கணநேரம் யோசித்து.) சரி, கொஞ்சம் கொடுங்கள்.
மேயர்: உங்களுக்கு எவ்வளவு தேவைப் படும்?
திலெஸ்தக்கோவ்: அப்போது நீங்கள் இரு நூறு கொடுத்தீர்கள், அதாவது நானூறு. உங்கள் தவறில் நான் ஆதாயம் தேட விரும்ப வில்லை. இப்போது அதே தொகை கொடுத் தால், சரியாக எண்ணூறு வரும்.
மேயர்: நிச்சயமாக! (பணப்பையிலிருந்து பணத்தை வெளியே எடூத்தவாறு.) எல்லா மே புத்தம் புது நோட்டுகள்.
திலெஸ்தக்கோவ்: ஆமாம். (நோட்டுகளை எடுத்துப் பார்த்தவாறு.) அருமை. புதிய நோட்டுகள் புதிய அதிருஷ்டத்தைக் கொண்டு வரும் என்று சொல்வார்கள், இல்லையா?
மேயர்: உண்மைதான்.
கிலெஸ்தக்கோவ்: போய் வருகிறேன், அந் கோன் அந்தோனவிச்! உங்களது விருந்தோம் பல் எல்லாவற்றுக்கும் மிக்க நன்றி. என் மனதாரச் சொல்கறேன்: இதற்கு முன்பு இது
170
போல ஒரு சிறந்த வரவேற்பை நான் பெற்ற தே இல்லை. போய் வருகிறேன், ஆன்னா அந்திரேயெவ்னா! போய் வருகிறேன், என் அன்பே, மரியா அந்தோனவ்னா!
மேடையிலிருந்து செல்கிறார்கள். குரல்கள் கேட் ் இன்றன.
திலெஸ்தக்கோவ்: போய் வருகிறேன், என் தேவதையே, மரியா அந்தோனவ்னா!
மேயர்: என்ன இதெல்லாம்? நீங்கள் வாட கை வண்டியில் பயணம் செய்யவில்லையா?
இலைஸ்தக்கோவ்: ஆமாம். இது போலத் தான் எப்போதும் பயணம் செய்கிறேன்.
வண்டிக்காரன்: ஹோ!
மேயர்: இருக்கையின் மீது குறைந்தது ஏதா வது விரித்துக் கொள்ளுங்கள். நீங்கள் விரும் பினால் ஒரு கம்பளம் கொண்டுவருகிறேன்.
தஇலைஸ்தக்கோவ்: வேண்டாம், எதற்காக? தேவையில்லை. ஆயினும் கம்பளம் கொடுங் கள்.
மேயர்: எய், அவ்தோத்யா! சாமான் அறைக் குப் போய் ஒரு சிறந்த கம்பளம் எடுத்து வா. நீல நிறத்தில் பாரசீகக் கம்பளமாக. ஒடு!
வண்டிக்காரன்: ஹோ!
மேயர்: மேன்மை சான்றீர், உங்களை நாங் கள் எப்போது எதிர்பார்க்கலாம்?
தஇலெஸ்தக்கோவ்: நாளைக்கு அல்லது நா ளை மறுநாள்.
ஒசிப்: இதுதான் கம்பளமா? இங்கே, இது
171
மாதிரி போடு! அந்தப் பக்கத்தில் கொஞ்சம் உலர்புல்லை வைத்துக் கொள்ளலாம்.
வண்டிக்காரன்: ஹோ!
ஒசிப்: இல்லை, இந்தப் பக்கம்! இங்கே இன் னும் கொஞ்சம் அதிகமாக! நல்லது! அது அரு மையானது! (கம்பளத்தைத் தட்டூகறான்.) இப்போது, மேன்மை சான்றீர், நீங்கள் உட் காரலாம்!
திலெஸ்தக்கோவ்: போய் வருகிறேன், அந் கோன் அந்தோனவிச்!
மேயர்: போய் வாருங்கள், மேன்மை சான் நீர்!
பெண்கள்: போய்வாருங்கள், இவான் அலெக் சாந்தரவிச்!
திலெஸ்தக்கோவ்: வருகறேன், அம்மா!
வண்டிக்காரன்: புறப்படு! புறப்படு!
திரை.
ஐந்தாம் அங்கம்
அதே அறையில். காட்டு 1
மேயர், ஆன்னா அந்திரேயெவ்னா, மரியா அந்தோனவ்னா.
மேயர்: சரி, ஆன்னா அந்திரேயெவ்னா, அது
172
எப்படி இருக்கிறது? அதைப் பற்றி நீ எதை யும் நினைத்துப் பார்த்ததே இல்லையா? சனியனே! அத்தகைய பெரிய பரிசு! உனது கனவுகளுக்கு அப்பாற்பட்டது, இல்லையா? கண நேரம் நீ ஒரு மேயருடைய மனைவி, பிறகு--எல்லாம் நாசமாகப் போகட்டும்!-- அந்த அழகான இளம் சாத்தானுக்கு நீ மா மியார்...
ஆன்னா அந்திரேயெவ்னா: வேறு மா இரியாக; அது எனக்கு முன்னமேயே தெதரி யும். அது உங்களுக்கு நம்ப முடியாததாகத் கோன்றலாம், ஏனென்றால் நீங்கள் வெறு மனே ஓர் எளிமையான ஆள் தான். நாகரிக மான ஆட்களோடூ முன்னர் ஒருபோதும் பழ தியதே கிடையாது.
மேயர்: என்னைப் பொருத்த மட்டில் நான் நாகரிகமானவன். அது உனக்குத் தெரியும். ஆனால் சற்று யோசித்துப் பார், ஆன்னா அந்திரேயெவ்னா! நாம் ராஜாளிகளாத விட் டோம் இப்போது, இல்லையா? உயரமாகப் பறக்கும் பறவைகள் நாம், என்ன சனியன்! கொஞ்சம் பொறு. தங்களது மனுக்களுடனும் புகார்களுடனும் புல்லில் நிற்கும் அந்தத் தேரைகளுக்காகவும் பாம்புகளுக்காகவும் ஒரு பொறி வைக்கறேன் பார்! ஏய், யாரங்கே?
சுலிஸ்துனோவ் நுழைகிறான்.
சுவிஸ்துனோவ், நீயா! அந்த கடைக்காரர் களை இங்கே வரச் சொல். அந்த யூதக் கூட்டத்
173
திற்கு நான் கற்பிக்கறேன்! என்னைப் பற் றிப் புகார் செய்வதற்கு அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கறேன்! இந்த முறை, அருமை நண் பர்களே, புகார் செய்ய உங்களுக்கு எதாவது கடைக்கும். இதுவரை உங்களது இருதாவை மட்டுமே பிடித் திருக்கறேன், உங்களது தாடி களை நான் பிடிக்கின்ற வரை சற்று பொறுங்் கள்! என்னைப் பற்றி புகார் செய்ய வந்த ஒவ்வொரு ஆளின் பெயரையும் மனுக்களை எழுதிய அந்த கிறுக்கன்ற எலிகளின் பெயர் களையும் நான் அறிய விரும்புகிறேன். நகரம் முழுமையும், ஒவ்வொரு மனிதனும் சிறப்புச் செய்ய ஆண்டவன் என்னைக் தேர்ந்தெடுத் திருக்கிறார் என்பதை அறியுமாறு செய்: என் மகளை சாதாரண ஆளுக்கு நான் மணம் செய்து கொடுக்கவில்லை; ஆனால் உலகம் இதுவரை கண்டிராத ஓர் ஆளுக்கு, எதையும் செய்யக்கூடிய ஒரு மனிதருக்குக் கொடுக்கப் போகிறேன். ஆமாம், எதையும் செய்யக்கூடி யவர்! வீட்டின் உச்சியிலிருந்து கத்து, ஒடிந்து போகும் வரை மணிகளை அடி. இன்று உன் மேயருடைய மகத்தான நாள்! சுலிஸ்துனோவ் வெளியேறுகிறான். ஆக, என்ன நினைக்கிறாய், ஆன்னா அந்தி ரேயெவ்னா? எங்கு வசிக்கப் போகிறோம்? இங்கேயா அல்லது பீட்டர்ஸ்பர்க்கலா?₹ ஆன்னா அந்திரேயெவ்னா: நிச்சயமாக, பீட்டர்ஸ்பர்க்கல் தான்! இங்கே தங்கியிருக்க எப்படி முடியும்?
174
மேயர்: நீ பீட்டர்ஸ்பர்க்கல் என்றால் அங்கே இருக்கலாம். ஆனால் இங்கேயும் நன்றாகத் தான் இருக்கும். அப்போது நான் மேயர் பத வியைத் தூக்கி எறிவேன் என்று நினைக் றாயா, என்ன ஆன்னா அந்திரேயெவ் னா?
ஆன்னா அந்துரேயெவ்னா: இயல்பாக வே! மேயர் விஷயம் என்ன ஆவது?
மேயர்: எய், ஆன்னா அந்திரேயெவ்னா, டீட் டர்ஸ்பர்க்கல் உயர்ந்த பதவியைப் பெற முடி யும் என்று நினைக்கிறாயா? எல்லா அமைச் சர்களும் அவருக்கு நெருங்கிய தோழர்கள் என்பதாலும், அவர் மாளிகைக்குப் போவதா லும் நான் ஒரு தளபதி ஆக முடியும். அதைப் பற்றி என்ன, ஆன்னா அந்திரேயெவ்னா? நான் தளபதி ஆக முடியும் என்று நினைக் இறாயா?
ஆன்னா அந்திரேயெவ்னா: நிச்சயமாக!
மேயர்: சனியனே! நான் தளபதி! எனது மார் பின் குறுக்கே ஒரு பட்டிகை* அணிவிப்பார் கள். என்ன பட்டிகை உனக்குப் பிடிக்கும், ஆன்னா அந்திரேயெவ்னா: சிவப்பா அல் லது நீலமா?
* ரஷ்யப் பேரரசின் விருதுகள் அளிக்கும் போது பட்டிகை அணிவிப்பதை இது குறிக்கிறது. செயிண்ட் ஸ்தனிஸ்லாவ் மற்றும் செயிண்ட் ஆன்னா விருது களின் சின்னமான சிவப்புப் பட்டிகை, செயிண்ட் அந்திரேய் விருதின் சின்னமான நீலப் பட்டிகை.
175
ஆன்னா அந்திரேயெவ்னா: நிச்சயமாக, நீலந்தான்.
மேயர்: ஆகா, அப்படிச் சொல்! சிவப்பு என் றால் நல்லதுதான்! ஒரு தளபதி ஆவது பற் றிய பெரிய விஷயம் உனக்குத் தெரியுமா? எங் காவது பயணம் செய்ய வேண்டியிருந்தால், இராணுவ உதவியாட்கள் முன்னே குதிரையில் செல்வார்கள்: ' “சிறந்த குதிரைகள் கிடைக்கும்! இதோ தளபதி வருகறார்!'” குதிரை வண்டி நிலையங்களில் எல்லா கவுன்சிலர்களும் காப்டன்களும் மேயர்களும் குதிரைகளுக்காகக் காத்துக் கொண்டே இருப்பார்கள். அதைப் பற்றி நாம் கவலைப்படாமல் செல்லலாம். ஆளுநரோடூ விருந்துண்ணும் போது யாரே னும் மேயர் பார்த்தால் எழுந்து நிற்பார்-- ஹா-ஹா-ஹா! (வயிறு வலிக்கச் சரிக் கறார்.) அதுதான் குறிப்பிட வேண்டிய பெ ரிய விஷயம்!
ஆன்னா அந்திரேயெவ்னா: எப்போதுமே அநாகரிகமான விஷயங்கள்தான் உங்களுக் குப் பிடிக்கும். நமது வாழ்க்கை இப்போது முற்றிலும் மாறுபடப் போகிறது என்பதை நீங்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும். உங்களுக்குப் பல்வேறு விதமான நண்பர்கள் அப்போது இருப்பார்கள். உங்களுடன் வேட் டைக்குப் போக நாய் ஆசை பிடித்த நீதிபதி கள் அல்லது ஸெம்லியனீக்காக்கள் இருக்க மாட்டார்கள். பிரபுக்கள் மற்றும் உயர்சமூக மக்களுடன் நீங்கள் ஒன்று சேரப் போகிறீர்
கள்... உங்களிடத்தில் உண்மையைச் சொன்
176
னால், நீங்கள் எப்படிச் சமாளிக்கப் போகிறீர் கள் என்று எனக்குத் தெரியவில்லை. சில நேரங்களில் நாகரிகச் சமுதாயத்தில் கேட் டிருக்காத வார்த்தையை நீங்கள் பேச நேர லாம்.
மேயர்: என்ன? வார்த்தை எந்தத் தீங்கும் செய்யாது.
ஆன்னா அந்திரேயெவ்னா: ஆமாம், நீங் கள் மேயராக இருக்கின்ற வரை விஷயங்கள் ஒழுங்காக இருக்கும். ஆனால் அங்கே வாழ்க் கை முற்றிலும் வித்தியாசமானது.
மேயர்: நிச்சயமாகத்தான்! இரண்டு மீன் வகைகளை அங்கே வைத்திருக்கறார்களாம் --எரால் குழம்பும் நெய்மீன் கருவாடும்-- அவற்றைப் பார்த்ததுமே நாக்கலே நீர் ஊறும்.
ஆன்னா அந்திரேயெவ்னா: மீன்!அதைப் பற்றித் தான் கவலை எல்லாம்! ஆனால் தலைநகரத்தில் மிகச் சிறந்த லீடு வைத்தி ருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். என் னுடைய அறைக்குள்ளாக வரும் போது அங் கே அடிக்கும் அருமையான வாசனையால் கண்ணை இறுக்கி மூடிக்கொள்ள வேண் டும். கண்ணைச் சுருக்கக் கொண்டு மோப்பம் பிடிக்கிறாள்.) அது அற்புதமானது!
177 12792
காட்சி 2 கடைக்காரர்கள் நுழைகறார்கள்.
மேயர்: ஆகா, வந்து விட்டீர்களா! வணக்கம், அருமை நண்பர்களே!
கடைக்காரர்கள் (பணிந்து): உங்களுக்கு நல மும் மகிழ்ச்சியும் ஏற்படட்டும், மதிப்பிற்குரிய ஐயா.
மேயர்: ஆக, நண்பர்களே! எப்படி இருக்கிறீர் கள்? வியாபாரம் எப்படி இருக்கிறது? எல்லாப் பித்தலாட்டங்களும் செய்யும் வியாபாரிகளா தய நீங்கள் என்னைப் பற்றிப் புகார் செய்தீர் கள், இல்லையா? மோசமான எமாற்றுக்கா ரர்களும் மோசடிக்காரப் போக்கிரிகளும் என் மீது புகார் செய்யத் தீர்மானித்தீர்கள்? இப் போது என்ன ஆயிற்று? என்னை மாட்டி விடலாம் என்று நினைத்தீர்கள், முடிந்ததா உங்களால்? உங்களுடைய நாற்றமெடுத்த ஆன்மாவை சாத்தான் நரகத்துக்குக் கொண்டு போகட்டும்...
ஆன்னா அந்திரேயெவ்னா: அந்தோன்! உண்மையாகவே, என்ன பேசுகிறீர்கள்!
மேயர் (அதிருப்தியுடன்): நான் பேசுவதைப் பற்றிப் பரவாயில்லை! உங்களுக்கு ஒரு செய்தி வைத்திருக்கிறேன்: நீங்கள் புலம்பிக்கொண்டு ஓடினீர்களே அந்த அரசு ஆய்வாளர், என் மகளை மணக்கப் போகிறார் எப்படி? இப் போது என்ன சொல்கறீர்கள்? இப்போது நான்... உங்கள் மீது கை வைக்கும் வரை
178
பொறுங்கள்! அப்பாவி மக்களை மோசடி செய்கறீர்கள்... அரசாங்கத்துடன் ஒப்பந்தத் தைச் செய்து கொண்டு, கந்தலான பழைய துணி கொடுத்து நூறு ஆயிரத்தை எமாற்றி எடுத்துக் கொண்டாய். பிறகு தாராள நன் கொடை வழங்குகறாய், பதினைந்து கஜம், அதற்காக விருது எதிர்பார்க்கிறாய்? அவர்கள் எப்போதாவது கண்டுபிடித்துவிட்டால், அதற் காக உனக்கு... இப்போது வயிற்றைத் தள் ளிக் கொண்டு வருகிறாய்: ““நான் ஒரு வியா பாரி, உங்களால் என்னைக் தொட முடியாது. எந்த உயர் குடிமகனையும் போல நல்லவ னாக இருக்கிறேன்”'. என், உயர்குடிமகன்-- என்ன சப்பை மூஞ்சி!--பெரியமனிதன் விஞ் ஞானம் படிக்கறான்; பள்ளியில் ஒருவேளை அவனைச் சவுக்கால் அடிக்கலாம், ஆனால் குறைந்தது கொஞ்சம் பயனுள்ள விஷயங் களைக் கற்றுக் கொள்கிறான். ஆனால் நீ! நீ பிறவித் திருடன், உனது எசமானன் உன் னை அடிவாங்குகறான், எனென்றால் உன் னால் முறையாக ஏமாற்றத் தெரியாது. ஆண் டவனை வேண்டிக் கொள்ளக் கற்பதற்கு முன்னரேயே சரியான சில்லறை கொடுப்பதில் லை; உன்னுடைய வயிறு நிறைந்த உடனே, பைகள் உப்பிய உடனே நீ தான் வெளிச்சம் போட நினைக்கிறாய்; காரணம் ஒரே நாளில் பதினாறு சமவார் தே.நீரை உங்களால் பருக முடியம். உனது தலையிலும் பகட்டிலும் காரித்துப்புவேன்!
கடைக்காரர்கள் (பணிந்து): நாங்கள் மிகவும்
179
வருந்துறோம், அந்தோன் அந்தோனவிச்.
மேயர்: என்னைப் பற்றி புகார் செய்ய முடி யுமா? பாலத்திற்கான மரம் நூறு ரூபிளுக் கும் குறைவாக இருக்கையில் உனக்கு இரு பதினாயிரம் பெற அநுமதித்தது யார்? நான், இல்லையா, வெள்ளாட்டுத் தாடியே? மறந்து விட்டாயா, நீ£ நான் ஒரு வார்த்தை சொல்ல வேண்டியதுதான், சைபீரியாவுக்கு * அனுப்பப்படுவாய். கேட்கிறதா?
கடைக்காரர்களில் ஒருவன்: ஆண்டவனுக் காக, அந்தோன் அந்தோனவிச். சாத்தான் எங்களைத் தவறான வழியில் நடத்தி விட் டான், மேன்மை சான்றீர். திரும்பவும் புகார் செய்ய மாட்டோம் என்று சத்தியம் செய் தறோம். தயவுசெய்து எங்கள் மீது கோபப் பட வேண்டாம். நீங்கள் சொல்லும் எதுவாக இருந்தாலும் செய்கிறோம்.
மேயர்: ஆமாம், “ “எங்கள் மீது கோபப்பட வேண்டாம்: என்று இப்போது சொல்கிறாய், இல்லையா? இப்போது எனது காலைத் தொத்திக் கொண்டிருக்கிறாய், என்? ஏனென் றால் நான் உச்சியில் இருக்கிறேன். ஆனால் விஷயம் உங்கள் வழியில் சற்று நடந்திருக்கு மேயானால், என் முகத்தைச் சேற்றில் மிதித் இருப்பாய், பன்றியே, என்மீது அடிமரத் தைத் தூக்கப் போடுறாய்.
* நாடு கடத்தப்படுவதற்கும் கடுங்காவல் கைதி களை அனுப்புவதற்கும் சைபீரியா பயன்பட்டது.
160
கடைக்காரர்கள் (மிகவும் பணிந்து): எங் களை நாசமாக்கி விடாதீர்கள், அந்தோன் அந்தோனவிச்!
மேயர்: ஆமாம், ““எங்களை நாசமாக்கி விடா தீர்கள்” என்று இப்போது சொல்கறீர்கள், ஆனால் முன்பு என்ன சொன்னீர்கள்? உங் கள் எல்லாரையும்... (தனது கையை அலைத் தவாறு.) சரி, ஆண்டவன் உங்களை மன்னிப் பார்! போதும்! உங்கள் அதிருஷ்டம் நான் பழிவாங்கக் கூடிய ஆள் இல்லை. ஆனால் இப்போதிருந்து கவனித்துக்கொண்டு வாருங் கள்! என் மகளை சாதாரணப் பிரபு யாருக் கும் நான் கொடுக்கவில்லை. நாகரிகமான திருமணப் பரிசுகள் இருக்க வேண்டும்... கேட் இறீர்களா? உங்களுடைய வழக்கமான உப் பிட்ட மீனையும் ஜீனி கட்டியையும் கொடுத்து விட்டப் போகலாம் என்று நினைக்காதீர் கள்... இப்போது போங்கள்.
கடைக்காரர்கள் வெளியேறுகிறார்கள்.
காட்சி 3 நீதிபதியும் தருமசாலை அதிகாரியும் நுழை இன்றனர். நீதிபதி (இன்னமும் கதவருகே நின்றபடி): அந்தோன் அந்தோனவிச், நாங்கள் கேள்விப்
பட்ட வதந்தி உண்மையா? அது உங்களுக்குக்
181
கிடைத்த அசாதாரணமான அதிருஷ்டம்?
கருமசாலை அதிகாரி: உங்களுக்கு அசாதார ணமான அதிருஷ்டம் கடைத் ததைப் பாராட்ட அ நுமதியுங்கள். செய்தியைக் கேள்விப்பட்ட போது உண்மையிலேயே பெருமகழ்ச்சியுற் றேன். (ஆன்னா அந்திரேயெவ்னாவின் கை யை முத்தமிட்டு.) ஆன்னா அந்திரேயெவ்னா! (மரியா அந்தோனவ்னாவின் கையை முத்த மிட்டு.) மரியா அந்தோனவ்னா!
ரஸ்தகோவ்ஸ்தி நுழைதறார்.
ர்ஸ்தகோவ்ஸ்தகி: வாழ்த்துகள், அந்தோன் அந்தோனவிச்! உங்களுக்கும் மக£ழ்ச்சிமிக்க ஜோடிக்கும் நீண்ட ஆயுளையும் பேரக் குழந் தைகளையும் கொள்ளுப் பேரக் குழந்தை களையும் தந்து உங்கள் சந்ததியாரை ஆண் டவன் ஆசிர்வதிப்பாராக! ஆன்னா அந்திரே யெவ்னா! (ஆன்னா அந்திரேயெவ்னாவின் கையை முத்தமிடூகறார்.) மரியா அந்தோனவ் னா! (மரியா அந்தோனவ்னாவின் கையை
முத்தமிடூ£றார்.) காட்சி 4
கரோப்கின், அவர் மனைவி மற்றும் லுல்யுக் கோவ் நுமழைகறார்கள்.
கோரப்கின்: இனிய வாழ்த்துகள், அந்தோன் அந்தோனவிச்! ஆன்னா அந்திரேயெவ்னா!
182
(ஆன்னா அந்திரேயெவ்னாவின் கையை முத்தமிடூ£றார்.) மரியா அந்தோனவ்னா! (மரியா அந்தோனவ்னாவின் கையை முத்த மிடூகறார்.)
கரோப்கனுடைய மனைவி: உங்களுடைய இந்தப் புதிய மகிழ்ச்சிக்கு எனது இனிய வாழ்த்துகள், ஆன்னா அந்திரேயெவ்னா.
லுல்யுக்கோவ்: வாழ்த்துகள், ஆன்னா அந் திரேயெவ்னா! (ஆன்னா அந்திரேயெவ்னா வின் கையை முத்தமிடூகறார். பிறகு பார்வை யாளர்கள் பக்கமாகத் இரும்பி கோமாளித்தன மாக நாக்கால் சப்புக்கொட்டுகறார்.) மரியா அந்தோனவ்னா! எனது பாராட்டுகள்! (அவ ளது கையை முத்தமிட்டு முன்னர் பார்த்தது போலவே பார்வையாளர்கள் பக்கம் இரும்பு
ஐறார்.) காட்சி 5
தொடர்ச்சியாகப் பெரும் எண்ணிக்கையில் விருந்
தினர்கள் நுழைகிறார்கள்; முதலில் ஆன்னா
அந்திரேயெவ்னாவின் கையை முத்தமிட்டு “ “ஆன்
னா அந்திரேயெவ்னா!?” என்று சொல்லியும்
பிறகு மரியா அந்தோனவ்னாவின் கையை முத்த
மிட்டு “மரியா அந்தோனவ்னா!”” என்றும் சொல் கிறார்கள்.
போப்சின்ஸ்தியும் தோப்சின்ஸ்கியும் கதவு வழியாக இடித்துக் கொண்டு நுழைகிறார்கள்.
போப்சின்ஸ்கி: இதயபூர்வமான வாழ்த்து தறேன்!
183
கோப்சின்ஸ்க: அந்தோன் அந்தோனவிச்! இதயபூர்வமான வாழ்த்துகிறேன்.
போப்்சின்ஸ்தி: மிகவும் அருமையான அதி ருஷ்டம்!
தோப்சின்ஸ்தி: ஆன்னா அந்திரேயெவ்னா!
போப்சின்ஸ்ி: ஆன்னா அந்திரேயெவ்னா!
அவர்கள் இருவரும் ஒருசேர ஆன்னா அந்திரேயெவ் னாவின் கைக்குக் குனிய நெற்றிகளை மோதிக்கொள்
இறார்கள்.
சகோப்சின்ஸ்தி: மரியா அந்தோனவ்னா! (அவ ளது கையை முத்தமிடூகறார்.) இதயபூர்வ மான வாழ்த்துகிறேன்! வருணிக்க முடியாத அளவுக்கு மகிழ்ச்சியாக இருப்பீர்கள். தங்கத் தாலும் வெள்ளியாலும் ஆன உடைய ணிந்து மிதப்பீர்கள், பரவசமூட்டும் சாறு பருகு வீர்கள், உங்கள் நேரத்தை மிகவும் மகழ்ச்சி யாகச் செலவிடுூவீர்கள்.
போப்சின்ஸ்தி (குறுக்கட்டு: வாழ்த்த அநு மதிக்க வேண்டும், மரியா அந்தோனவ்னா! அளவிட முடியாத செல்வத்தில் நீங்கள் புரள வேண்டும் என்றும் இதை விடப் பெரிதாக இல்லாமல் ஒரு குட்டிப் பையனையும் (கை யில் அளவு காட்டூகறார்)பெற வேண்டும் என் றும் வாழ்த்துகிறேன். உங்களது உள்ளங் கையில் அவன் உட்காருவான்! அவனுக்கு ஆரோக்கியமான குரல் இருக்கும்— குவா! குவா! குவா!
184
காட்டு 6
மேலும் சில விருந்தினர்கள் நுழைந்து இரு பெண்களுடைய கைகளையும் முத்தமிடூறோர்கள், பள்ளி ஆய்வாளரும் அவர் மனைவியும்.
பள்ளி ஆய்வாளர்: வாழ்த்துவதற்கு... அவர் மனைவி (அவருக்கு முன்னே சென்று): என் வாழ்த்தினைத் தெரிவித்துக் கொள் தறேன், ஆன்னா அந்திரேயெவ்னா! (அவர் கள் முத்தமிடூறார்கள்.) எனக்கு அளவிட முடியாத ஆனந்தம். “ “ஆன்னா அந்திரேயெவ் னாவின் மகளுக்கு நிச்சயித்து விட்டதாக”' அவர்கள் சொன்னார்கள். “அற்புதம்!” என்று நினைத்தேன். நான் மிகவும் உணர்ச்சி வயப்பட்டு என் கணவரிடம் சொன்னேன்: “ஆன்னா அந்திரேயெவ்னாவுக்குக் திட்டிய அதிருஷ்டத்தைக் கேள்விப் பட்டீர்களா?”' “ஆண்டவனுக்கு நன்றி!” என்று நினைத் கேன். அவரிடம் சொன்னேன்: ““நான் மிக வும் உணர்ச்சிவயப்பட்டுப் போனேன். ஆன் னா அந்திரேயெவ்னாவைப் பார்க்க என் னால் வெறுமனே காத்துக் கொண்டிருக்க முடியாது.” ““ஆண்டவனே!”' என்று நினைத் தேன். “தன் மகளுக்கு நல்ல வரன் இடைக் கும் என்ற நம்பிக்கையில் ஆன்னா அந்தி ரேயெவ்னா இருக்கிறாள். அவள் விருப்பம் போலவே இப்போது நடந்து விட்டது”. அன் பே, நாம் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதால் என்னால் பேச முடியவில்லை. அழுதேன்,
185
முகத்தில் கண்ணீர்ப் பெருக்கெடுத்து ஓடியது. லுக்கா லுக்கச்சும் சொல்கிறார்: ““எதற்காக அழுகிறாய்?” “அன்பே, எனக்கு உண்மையி லேயே தெரியாது” என்றேன், ““கண்ணீர் தா ரையாக ஒடூகறது.””
மேயர்: தயவுசெய்து உட்காருங்கள், பெரியோர் களே, தாய்மார்களே! எய், மீஷ்கா, இன்
னும் கொஞ்சம் நாற்காலிகள் கொண்டுவா.
விருந்தினர்கள் அமர்கிறார்கள். காட்சி 7
போலீஸ் அதிகாரியும் போலீஸ்காரர்களும் ுமைூறார்கள்.
போலீஸ் அதிகாரி: மேன்மை சான்றீர், உங் களை வாழ்த்த அநுமதியுங்கள்! பல்லாண்டு கள் நீங்கள் வளமோடு வாழ வாழ்த்து தறேன்.
மேயர்: நன்றி, மிக்க நன்றி! தயவுசெய்து
அமருங்கள், பெரியோர்களே! விருந்தினர்கள் அமர்கிறார்கள். நீதிபதி: எப்படி இது நடந்தது என்பதை எங் களுக்குச் சொல்ல மாட்டீர்களா, அந்தோன் அந்தோனவிச்? நிகழ்ந்ததை விவரித்துச் சொல்லுங்கள். மேயர்: அது அசாதாரணமான நிகழ்ச்சி:
166
மாண்புமிக்க அவர் தானாகவே இந்த எற் பாட்டைச் செய்து கொண்டார்.
ஆன்னா அந்துரேயெவ்னா: எல்லாவற் றையும் மிகவும் கவர்ச்சியான நளினமான முறையில் செய்தார். அவர் சொன்ன முறை யை நீங்கள் கேட்டிருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ““ஆன்னாஅந்தஇிரேயெவ்னா”' என்றார், ““உங்களது சீரிய பண்பு காரணமா கத்தான் மிகுந்த மரியாதை காட்டூகறேன்.”' அத்தகைய அருமையான பண்பாளர், உயர்ந்த கொள்கைகள் கொண்டவர்! “ஆன்னா அந்தி ரேயெவ்னா, என் வாழ்க்கை ஒரு கோப்பெக் கூடப் பெறாது. உங்களது அரிய பண்புகளுக் காக மட்டுமே இதைச் செய்கிறேன். ””
மரியா அந்ததோனவ்னா: ஓஅம்மா, அதை அவர் என்னிடத்தில் சொன்னார், தெரியு மா?
ஆன்னா அந்துிரேயெவ்னா: நிறுத்து, உனக்கு ஒன்றும் தெரியாது. உன் வேலை யைப் பார்! “ஆன்னா அந்திரேயெவ்னா?் என்றார், “ஆச்சரியத்தால் திகைத்துப்போ னேன்”:... ஒ, இத்தகைய புகழ்ச்சி வார்த்தை களால் என்னைப் பாராட்டினார். ““ஆனால் இத்தகைய மரியாதையைப் பெறுவோம் என நாங்கள் நினைக்கவில்லை”: என்று நான் சொல்லவிருந்த போது, எனக்கு முன்னால் திடீரென்று முழங்காலிட்டு நின்று மிகவும் கெளரவமான முறையில் சொன்னார்: ““ஆன் னா அந்திரேயெவ்னா, எனது உணர்வுகளை பரிமாறிக் கொள்வதாகச் சொல்கிறீர்களா
187
அல்லது என் வாழ்க்கைக்கு நான் முடிவைக் தேடிக் கொள்ள வேண்டிவரும்”.
மரியாஅந்தோனவ்னா: உண்மையாகவா, அம்மா, அதை அவர் என்னைப் பற்றி அல் லவா சொல்லிக் கொண்டிருந்தார்.
ஆன்னா அந்திரேயெவ்னா: ஒருவேளை அது உன்னைப் பற்றியும் இருக்கலாம். அப் படி இல்லை என்று நான் சொல்லவே இல் லையே.
மேயர்: அவர் உண்மையாகவே எங்களை பய முறுத்தி விட்டார், தெரியுமா? தன்னைத்தா னே சுட்டுக் கொள்ளப் போவதாகச் சொன் னார். “ “என்னையே சுட்டுக்கொள்ளப் போ தறேன், என்னையே சுட்டுக்கொள்ளப் போ இறேன்!:” என்றார்.
விருந்தினர்களில் பலர்: அப்படியும் முடி யுமா?
நீதிபதி: அப்படியா!
பள்ளி ஆய்வாளர்: அதுதான் விதியின் உண்மையான போக்கு!
தருமசாலை அதிகாரி: விதியா! அது விதியல்ல--அவரது உழைப்பினால் எற்பட்ட தகுதிகள். (ஒருபுறமாக.) தனித் தொட்டிக்கு முதலாவது செல்லும் மிகப்பெரிய பன்றி!
நீதிபதி: நீங்கள் முன்னர் விசாரித்துக் கொண் டிருந்த அந்த நாய்க் குட்டியை உங்களுக்கு விற்கத் தயாராக இருக்கறேன், அந்தோன் அந்தோனவிச்.
மேயர்: இப்போது எனக்கு நாய்க் குட்டிகள் தேவையில்லை.
168
நீதிபதி: அதை நீங்கள் விரும்பவில்லை என்றால் ஒருவேளை வேறு எதையேனும் தெரிந்தெடுக்க விரும்பலாம்.
கரோப்தனுடைய மனைவி: என்னருமை ஆன்னா அந்திரேயெவ்னா, உங்களுக்காக நான் மிகவும் மகழ்ச்சியடைகிறேன்! அதை உங்களால் கற்பனை செய்ய முடியாது.
கரோப்இன்: நமது மதிப்பிற்குரிய லிருந்த னர் இப்போது எங்கே என்று நான் கேட்க லாமா? நகரை விட்டப் போய் விட்டார் என்று கேள்விப்பட்டேன்.
மேயர்: ஆமாம். மிக முக்யமான சில வே லை காரணமாக ஒருநாளைக்குப் போயிருக் இறார்.
ஆன்னா அந்திரேயெவ்னா: தன் மாமா வின் ஆசியைப் பெறப் போயிருக்கிறார்.
மேயர்: ஆமாம், அவரது ஆசியைப் பெறப் போயிருக்கிறார்; ஆனால் நாளைக்கு அவர்... (தும்முகறார்.)
““ நாறுவயசு'” என்று உரத்த சப்தம்.
நன்றி! ஆனால் அவர் திரும்பி... (தும்மு றார்.)
வாழ்த்து ஆரவாரம். பொதுவான இரைச்சலுக்கு மேலாகப் பல்வேறு குரல்கள் கேட்கின்றன:
போலீஸ் அதிகாரி: தீர்க்காயுசு உங்களுக்கு,
மேன்மை சான்றீர்!
189
போப்சின்ஸ்க: நூறு வயசு பொன்னோடும் பொருளோடும் வாழ்வீர்கள்!
ேோப்சின்ஸ்கி; பல்லாண்டு பல்லாயிரத் தாண்டு நீங்கள் வாழ்வீர்கள்!
தருமசாலை அதிகாரி: நாசமாய்ப் போக!
கரோப்கனுடைய மனைவி: உன்னைச் சனியன் கொண்டு போக!
மேயர்: நன்றி, மிக்க நன்றி! உங்கள் எல்லா ரையும் இதுபோல வாழ்த்துகிறேன்.
ஆன்னா அந்திரேயெவ்னா: இப்போது நாங்கள் பீட்டர்ஸ்பர்க்கற்குப் போகப் போகி றோம். இங்கே, உங்களுக்கே தெரியும், காற்று மிகவும்... நான் அதைச் சொல்லியாக வேண் டும்... அந்தளவு கிராமப்புறம் சார்ந்தது... உண்மையில் மிகவும் ஏற்க முடியாதது. என் கணவர்... நிச்சயமாக... அங்கே அவ ருக்குத் தளபதி பதவி கிடைக்கும்.
மேயர்: ஆமாம், ஐயன்மீர், நான் தளபதி ஆகத்தான் மிகவும் விரும்புகிறேன் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.
கருமசாலை அதிகாரி: ஆண்டவன் உங்க ளுக்கு உதவட்டும்!
ரஸ்தகோவ்ஸ்5: ஆண்டவனுக்கு எல்லாமே சாத்தியந்தான்.
நீதிபதி: பெரிய ஆளுக்கு பெரிய பதவி!
தருமசாலை அதிகாரி: தகுதிகளுக்கு ஏற்ற மரியாதை!
நீதிபதி (ஒருபுறமாக): இவனைக் தளபதி ஆக்குவது பசுவிற்கு சேணம் பூட்டுவது மா இரி! நீ போக வேண்டியது இன்னும் அதிக
190
தூரமிருக்கறது, நண்பனே. உன்னை விடச் சிறந்த ஆட்கள் சிலர் இருக்கிறார்கள். அவர் கள் இன்னமும் தளபதிகள் ஆகவில்லை.
கருமசாலை அதிகாரி (ஒருபுறமாக): பா ருங்கள், தன்னையே தளபதியாக நியமித்துக் கொண்டு! யாருக்கும் தெரியாமல், அப்படியே நுழைந்து விடுவார். பகட்டுப் பேர்வழி, அது நிச்சயம். (மேயர் பக்கம் திரும்பி.) அப்போது எங்களை மறந்து விட மாட்டீர்கள், இல்லை யா, அந்தோன் அந்தோனவிச்?
நீதிபதி: இங்கே எந்த வகையான குழப்பம் இருந்தாலும், எங்களைப் பாதுகாப்பீர்கள், இல்லையா?
கரோப்தின்: அரசுப் பணியில் நுழைப்பதற் காக அடுத்த ஆண்டு என் பையனை பீட்டர்ஸ் பர்க்கற்குக் கூட்டிக் கொண்டு வருவேன். அவனுக்கு உதவுவீர்கள் என்று நம்பலாமா, அப்பாவி அநாகைக்குத் தந்தையாக இருந்து உதவுவீர்களா?
மேயர்: என் அதிகாரத்திற்கு உள்பட்ட அனைத்தையும் செய்வேன்.
ஆன்னா அந்திரேயெவ்னா: வாக்குறுதி கொடுக்க நீங்கள் எப்போதுமே தயாராக இருக் இறீர்கள், அந்தோன். அந்த மாதிரியான விஷயத்திற்கு உங்களுக்கு நேரமே இருக் காது. எப்படியும், அந்த மாதிரி வாக்குறுதி களால் எதற்கு உங்களையே சிரமப்படுத்திக் கொள்கிறீர்கள்?
மேயர்: என் முடியாது, என் அன்பே? அவ்வப் போது எனக்கு நேரம் கிடைக்கலாம்.
191
ஆன்னா அந்திரேயெவ்னா: அப்படியே நீங்கள் செய்தாலும் கருப்பன், சுப்பனுக்கெல் லாம் உதவ முடியாது. ப
கரோப்கனுடைய மனைவி: நம்மை எப் படிக் கேவலப்படுத்துகறாள் கேட்டீர்களா?
பெண் விருந்தாளி: அவள் எப்போதுமே அப்படித்தான். நாயைக் குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்தாலும் அது குரைக்கவே செய் யும்...
காட்சி 8
ரி ப் பி வா ச்சுத்திணறிய
எள் எனா எண்மர் தணனாம்"
அஞ்சலக அதிகாரி: ஐயன்மீர், என்ன ஆச் சரியமான விஷயம்! அரசு ஆய்வாளர் என்று நாம் நினைத்த மனிதன் அரசு ஆய்வாளர் அல்ல.
எல்லாரும்: எப்படி அரசு ஆய்வாளர் அல்ல என்று சொல்தறீர்கள்?₹
அஞ்சலக அதிகாரி: அவர் அரசு ஆய்வாள ரே அல்ல என்பது இந்தக் கடிதத்தில் வெ ளிச்சமாத விட்டது.
மேயர்: என்ன? என்ன சொல்கிறீர்கள்? என்ன கடிதம்?
அஞ்சலக அதிகாரி: இந்தக் கடிதம். அவ ரே எழுதியது. நடந்தது இதுதான்: ஒரு கடி தம் அஞ்சலகத்திற்குக் கொண்டுவரப்பட்டது. நான் முகவரியைப் பார்த்தேன். “அஞ்சலகத் தெருவுக்கு என்று இருந்தது. நான் பிரமித்
192
துப் போனேன். எங்களது அஞ்சல் துறையில் எதேனும் தவறு கண்டிருக்க வேண்டும். ஆகவே அறிக்கை அனுப்பிவிட்டார். அதை எடுத்துப் பிரித்தேன்.
மேயர்: அதை உங்களால் எப்படிச் செய்ய முடிந்தது?
அஞ்சலக அதிகாரி: உண்மையில் எனக்கே தெரியாது. ஏதோ இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தியால் நான் உந்தப்பட்டேன். அதைச் சிறப்பு விரைவுத் தபால் மூலமாக அனுப்புவ தற்கு ஒர் ஆளை அழைக்க எண்ணிக்கொண் டிருந்தேன், ஆனால் முன்னர் நான் எப்போ தும் உணர்ந்திராத ஒருவித ஆர்வத்தால் ஆட் கொள்ளப்பட்டேன். என்னால் தடுக்க முடிய லில்லை. என் ஒரு காதில் இம்மாதிரி சொல் லியது: ““அதைப் பிரிக்க வேண்டாம்--அது மிக ஆபத்தானது!””; மற்றொரு காதில் சாத் தான் இந்த மாதிரி இசுகசுத்துக்கொண்டிருந் தான்: “பிரி, பிரித்துப் பார்!” முத்திரை அரக்கும் நெருப்பு மாதிரி என் கையில் துளை போட்டு விட்டது. ஆனால் அதை நான் பிரித்த போது--ஆண்டவனுக்குப் பொதுவாகச் சொல் கிறேன்! -- நடுநடுங்கிப் போனேன். என் கைகள் நடுங்கின, என் தலை சுழலத் தொடங்கியது.
மேயர்: மிகவும் சக்திவாய்ந்த, முக்கியமான மனிதரின் கடிதத்தைப் பிரிக்க எப்படித் துணிந்தீர்கள்?
அஞ்சலக அதிகாரி: அதுதான் முக்கியமா னது! அவர் சக்திவாய்ந்தவரோ முக்கியமான வரோ இல்லை. ஒரு பிரமுகர் கூட இல்லை!
193 13-792
மேயர்: சரி, பிறகு யார் தான் அவர்?
அஞ்சலக அதிகாரி: யாருமே இல்லை... அற்பமானவன, அவ்வளவுதான்.
மேயர் (கோபத்துடன்): யாருமே இல்லை, அற்பமானவன் என்று சொல்ல என்ன துணிச்சல்? நான் உங்களைக் கைது செய்ய வைப்பேன்.
அஞ்சலக அதிகாரி: யார், நீங்களா?
மேயர்: ஆமாம், நான்தான்!
அஞ்சலக அதிகாரி: உங்கள் அதிகாரம் அந் களவு நீளாது.
மேயர்: அவர் என் மகளை மணக்கப் போ இறார் என்பது உங்களுக்குத் தெரியுமா? அத னால் நான் பெரிய மனிதன் ஆவேன். உங் களை சைமீரியாவுக்கு மூட்டைகட்டி அனுப்பு வேன்!
அஞ்சலக அதிகாரி: நான் உங்களிடத்தில் இருந்தால் சைபீரியாவைப் பற்றி மறந்து விடு வேன், அந்தோன் அந்தோனவிச். சைபீரியா இங்கருந்து அதிகத் தொலைவு! அந்தக் கடி குத்தை உங்களுக்குப் படித்துக் காட்டுவது நல்லது. ஐயன்மீர், அந்தக் கடிதத்தை நான் படிக்கவா?
எல்லாரும்: ஆமாம், படியுங்கள்!
அஞ்சலக அதிகாரி (படித்தபடி): “இனிய நண்பன் திரியபீச்கன், எனக்கு நேர்ந்திருக் இன்ற நம்ப முடியாத விஷயங்களைப் பற்றி உனக்கு அவசியம் எழுதித் தெரிவிக்க வேண் டும். இங்கு வருகின்ற வழியில் ஒரு காலாட் படை காப்டன் என்னிடமிருந்து முற்றாக அப
194
கரித்து விட்டான். ஆகவே செலவுக்குப் பணம் இன்றி தவித்துப் போனேன். எனவே விடு திக்காரனால் ஜெயிலுக்குத் தூக்கி எறியப்பட இருந்த நிலையில், திடீரென்று, எனது பீட் டர்ஸ்பர்க் உடை மற்றும் தோற்றம் காரண மாக, நகரம் முழுமையுமே என்னை கவர் னர்-ஜெனாலாகக் கருதத் தொடங்கிவிட்டது. இங்கே மேயருடைய வீட்டில், சகல வசதிகளு டனும், அவரது மனைவியுடனும் மகளுடனும் சரசமிட்டக் கொண்டு இருக்கிறேன் -— ஒரே சிக்கல் என்னவெனில் யாரிடத்தில் முதலில் போவது என்பதை என்னால் தீர்மானிக்க முடியவில்லை. ஒருகால் தாயாரிடம் தொடங்க வேண்டும், ஏனெனில் அவள் தழுலிச் செல் லக் கூடியவளாகத் தோன்றுதிறாள். நாம் இரண்டு பேருமே அதிருஷ்டம் இல்லாமல் இருந்த போது அந்தக் கடைக்காரன் என் சட் டையைப் பிடித்துத் தள்ளிவிட்டான், ஏனெ னில் நான் இங்கிலாந்து அரசர் கணக்கில் எழு கச் சொன்னேன், நினைவிருக்கிறதா? இங்கு முற்றிலும் வித்தியாசமான சூழ்நிலை! நான் விரும்பிய அளவுக்கு அவர்கள் எல்லாருமே எனக்குக் கடன் கொடுத்தார்கள். உங்களுக்குச் சிரித்து வயிறு புண்ணாடிவிடும், அந்தளவுக்கு அறிவுகெட்ட கூட்டம். நீ கட்டுரைகள் எழுது வது எனக்குத் தெரியும். இவர்களைப் பற்றி யும் எழுது. முதலாவதாக: மேயர்--அறிவு
கெட்ட முண்டம்...”்
மேயர்: அபத்தம்! அப்படி அதில் இல்லை. அஞ்சலக அதிகாரி (கடிதத்தைக் காட்டு):
13*
195
அப்படியானால் நீங்களே இதைப் படியுங் கள்.
மேயர் (படித்தபடி): “:...அறிவுகெட்ட முண் டம்.” இருக்கவே முடியாது! இதை நீங்க ளாகவே எழுதியிருக்கிறீர்கள்.
அஞ்சலக அதிகாரி: நான் எழுதியிருக்க முடியும் என்று எப்படி நினைக்கிறீர்கள்?
கருமசாலை அதிகாரி: படியுங்கள்!
பள்ளி ஆய்வாளர்: ஆமாம், படியுங்கள்!
அஞ்சலக அதிகாரி (தொடர்ந்தவாறு): “மேயர்--அறிவுகெட்ட முண்டம்...”
மேயர்: நீங்கள் அதைத் திரும்பப் படிக்க வேண்டியதில்லை. முதற் தடவையாக இது மகா மட்டமானது.
அஞ்சலக Oo £ரி (தொடர்ந்தவாறு): ம்... Ja a டம்: அஞ்சலக அதிகாரியும் நல்ல ஆள்தான்...” (படிப்பதை நிறுத்திய படி.) என்னைப் ஏதோ முரட்டுத் தனமாகச் சொல்கிறான்.
மேயர்: மேலே படியுங்கள்!
அஞ்சலக அதிகாரி: நான் என் படிக்க வேண்டும்?
மேயர்: ஏனென்றால், படிக்க வேண்டும் என்று மட்டமான யோசனை சொன்னது நீங் கள். ஆகவேதான்! முழுக்கப் படியுங்கள்!
தருமசாலை அதிகாரி: இங்கே கொடுங்கள். நான் படிக்கிறேன். (கண்ணாடியை மாட்டிக் கொண்டு படிக்கறார்.) “நமது அலுவலக இர வுக் காவல்காரன் மிஹேயெவின் சரியான பிரதிபிம்பம் அஞ்சலக அதிகாரி. அவரும்
6௦
196
பெருங்குடியர் என்று நினைக்கறேன், போக் இரி.””
அஞ்சலக அதிகாரி (பார்வையாளர்களிடம்): பொடிப்பயல்! அவனைச் சாட்டையால் விளாச வேண்டும்!
தருமசாலை அதிகாரி (படிப்பதைத் தொ டர்ந்தவாறு): ““தருமசாலைக் கண்காணிப் பாளர், லெம்லியனீக்கா...'”. (இணறுறார்.)
கரோப்இன்: என் நிறுத்தி விட்டீர்கள்?
தருமசாலை அதிகாரி: அதாவது... கை யெழுத்து படிக்கச் சிரமமாக இருக்கறது... எப்படியும் அவன் முழுப் போக்கிரி என்பது முற்றிலும் தெளிவாக விட்டது.
கரோப்இன்: நான் அதைப் படிக்கிறேன். உங் களை விட என் கண்கள் நன்றாக இருக்கன் றன. (கடிதத்தைப் பற்றுஜறார்.)
தருமசாலை அதிகாரி (கடிதத்தைப் பிடித் துக் கொண்டு: இல்லை இல்லை, இதை லிட்டு சற்று தள்ளிப் போகலாம். கீழே திரும் பவும் தெளிவாக இருக்கறது.
கரோப்இன்: கொடுங்கள், நான் படிக்கிறேன்.
தருமசாலை அதிகாரி: வேண்டாம், நான் படிக்கறேன்; கீழே முற்றிலும் தெளிவாக இருக்கறது.
அஞ்சலக அதிகாரி: இல்லை, முழுமையா கப் படியுங்கள்! இதுவரை நாம் அதை முழு மையாகப் படித்து விட்டோம்.
எல்லாரும்: அர்தேமி ஃபிலிப்பொலவிச், கடி தத்தை அவரிடம் கொடுங்கள்! (கரோப்8னி டம்.) அதைப் படியுங்கள்!
197
தருமசாலை அதிகாரி: சரி. (கடிதத்தை அவரிடம் கொடூக்கறார்.) இதோ. (கடிதத்தின் ஒரு பகுதியை விரலால் மறைத்துக் கொள் றார்.) இங்கிருந்து படியுங்கள்.
எல்லாரும் சுற்றி நிற்கிறார்கள்.
அஞ்சலக அதிகாரி: படியுங்கள்! அது முட் டாள் தனம், எல்லாவற்றையும் படியுங்கள்!
கோப்கின் (படித்தவாறு): ““தருமசாலைக் கண்காணிப்பாளர், ஸெம்லியனீக்கா என்று பெயர், தொப்பி வைத்திருக்கிற பன்றிதான்.””
தருமசாலை அதிகாரி (பார்வையாளர்களி டம்): அது இண்டலாகக்கூட இல்லை! தொப்பி வைத்திருக்கற பன்றி! தொப்பி வைத்திருக் இற பன்றியைப் பற்றி யாராவது கேள்விப்பட் டிருக்கறீர்களா₹
கரோப்ன் (தொடர்ந்தவாறு): “பள்ளி ஆய் வாளரோ காலையிலிருந்து மாலை வரை பூண்டின் துர்நாற்றத்தைக் கிளப்புகிறார்.”
பள்ளி ஆய்வாளர் (பார்வையாளர்களிடம்): என்ன முட்டாள்தனம்! என் வாழ்க்கையில் ஒருபோதும் நான் வெள்ளைப் பூண்டே சாப் பிட்டது இல்லை!
நீதிபதி (ஒருபுறமாக): நல்ல காலம், என் னைப் பற்றி எந்த மாதிரியும் சொல்லவில் லை.
கரோப்ன் (படித்தவாறு): ““நீதிபதி...”'
நீதிபதி: பாழாய்ப் போக! (உரக்க.) கனவான்
களே, இந்தக் கடிதம் மிகவும் நீண்டது என்று
198
நினைக்கறேன். இந்தக் குப்பையைக் கேட்டு சலித்துப் போய்விட்டது.
பள்ளி ஆய்வாளர்: இல்லை, இல்லை!
அஞ்சலக அதிகாரி: இல்லை, படியுங்கள்!
தருமசாலை அதிகாரி: தொடர்ந்து படியுங் கள்!
கரேோப்தன் (தொடர்ந்தவாறு): “நீதிபதி லியாப்கன்- தியாப்ன் உயர்ந்த அளவு... மொவேகோன் *...”” (நிறுத்துகிறார்.) அது பிரெஞ்சுச் சொல்லாகத்தான் இருக்க வேண் டும்.
நீதிபதி: ஆனால் சனியன், அதற்கு என்ன அருத்தம்? வஞ்சகன் என்று அழைக்கப்படு வது மோசம், ஆனால் அது ஏதோ மட்ட மான அருத்தமாக இருக்கக் கூடும்!
கரோப்கின் (படிப்பதைத் தொடர்ந்தவாறு): “ ஆனால் மொத்தத்தில் அவர்கள் மட்டமான வர்கள் அல்ல, விருந்தோம்புபவர்கள் கூட. இப்போதைக்கு, திரியபீச்கன், வணக்கம். உன் னுடைய முன்மாதிரியைப் பின்பற்றி இலக் இயத்தில் ஈடுபாடு காட்டத் தீர்மானித்து விட் டேன். இது போல வாழ்வது உண்மையில் சலிப்பானது, இதிலிருந்து மீள வழியில்லை. ஆன்மாவிற்கும் ஏதாவது உணவு கொடுத் தாக வேண்டுமே. ஒருவன் உயர்வான பொ ருள்களுடன் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டி இருக்கறது. எனக்குச் சராத்தவ் மா
* Mauvais ton (பிரெஞ்சு)-- தீய பழக்கவழக்கங்கள் கொண்டவன், அநாகரீகமானவன்.
199
வட்டம், போத்கதீலொவ்கா இராமத்திற்கு எழுது. (கடிதத்தை மடித்து முகவரியைப் படிக்கறார்.) மதிப்பிற்குரிய இவான் வசீலி யெவிச் திரியபீச்கனுக்கு, எண். 97, மூன்றா வது மாடி, அஞ்சலகத் தெரு, செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்.”
பெண்களில் ஒருத்தி: என்ன எதிர்பாராத திருப்பம்!
மேயர்: ஐயோ, நான் தொலைந்தேன்! என் னால் எதையும் பார்க்க முடியவில்லை! முகங் களுக்குப் பதிலாக பன்றி மூஞ்சிகளாகத்தான் எனக்குத் தெரிதறது... அவனைக் கூட்டி வா ருங்கள்! அவனைக் கூட்டி வாருங்கள்! (கை யை வீசுகறார்.)
அஞ்சலக அதிகாரி: வழியே இல்லை! விஷ யத்தை இன்னும் குழப்ப, நம்மிடம் உள்ளன வற்றில் விரைவான குதிரைகளாகக் கொடுக் கும்படி லாயக்காரனிடம் சொன்னேன். அது போதாது என்று முன்னுரிமை அறுமதி வேறு வழங்கனேன்.
கரோப்கனுடைய மனைவி: என்ன தொல் லை!
நீதிபதி: ஐயன்மீர், பாழாய்ப் போக! அவ னுக்கு முந்நூறு ரூபிள் கடன் கொடுத்தேன்.
தருமசாலை அதிகாரி: நானும் முந்நூறு ரூபிள் கொடுத்தேன்.
அஞ்சலக அதிகாரி (பெருமூச்சு விட்டு: ஆ! நானும் முந்நூறு ரூபிள் கொடுத்தேன்.
போப்்சின்ஸ்த: பியோத்தர் இவானவிச்சும் நானும் அறுபத்தைந்து ரூபிளை நோட்டு
200
களாகக் கொடுத்தோம்.
நீதிபதி (திகைப்புடன் கைகளை விரித்து): ஆனால் இது எப்படி நேர்ந்தது? அதைத்தான் நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். நாமாகவே எப்படி நம்மை முட்டாள்களாக்கிக் கொண்டோம்?
மேயர் (துன் நெற்றியைச் சுண்டியவாறு): இந்தளவு முட்டாளாக எப்படி இருந்தேன்? என் மூளையில் எதேனும் ஏற்பட்டிருக்க வேண்டும்!.. முப்பது ஆண்டுகளாகப் பணியில் இருக்கிறேன். ஒரு கடைக்காரனோ அல்லது ஒப்பந்தக்காரனோ என்னை ஜெயித்தது இடை யாது. பயங்கரமான ஏஎமாற்றுக்காரர்களை நான் சமாளித்தேன், மனித இனம் முழுவ திற்கும் கெடுதல் செய்ய இருந்த மோசடிக்கா ரர்களை நான் கொக்கி போட்டு இழுத்தேன். மூன்று ஆளுநர்களை, ஆமாம், ஆளுநர்களை மோசம் செய்திருக்கிறேன். (வெறுப்புடன்.) இதெல்லாம் பாதிகூட இல்லை...
ஆன்னா அந்திரேயெவ்னா: ஆனால் இது முடியாது, அந்தோன். அவரை நம் மரியா வுக்கு நிச்சயித்திருக்கறோம்...
மேயர் (கோபத்துடன்): நிச்சயித்திருக்கறோம்! உன் நிச்சயதார்த்தத்திற்குக் கைமுட்டிதான்! (கோயாவேசத்தில்.) இதோ, என்னைப் பாருங் கள், உலகம் பூராவுமே, நீங்கள் எல்லாருமே, மேயரைப் பாருங்கள்! தன்னைத்தானே முட் டாளாக்கக் கொண்டதைப் பாருங்கள்! முட் டாள்! கிறுக்கன்! (தன்னை நோக்க முட்டி யை ஆட்டியவாறு.) மடையன்! இலாயக்கில்
201
லாதவனை, கந்தல் பொறுக்கியை ஒரு முக் கியமான நபராகக் கருதிவிட்டேன்! இப்போது ஊர் முழுக்க டமாரம் அடித்துச் சொல்வ தைப் பாருங்கள்! உலகத்தின் நான்கு மூலைக் கும் இந்தக் கதையைப் பரப்புவான்! நான் நாட்டின் கேலிப் பொருளாவேன். அத்துடன் யாராவது அரைகுறை எழுத்தாளன் எங்களை அவனது நகைச்சுவை நாடகக் கதாநாயகர் களாக ஆக்குவான்! இதை என்னால் பொறுத் துக் கொள்ள முடியாது! அவர்கள் எதையும் லிட்டு வைக்க மாட்டார்கள்! பதவியையோ நற்பெயரையோ பார்ப்பதில்லை. எல்லாமே கேலிக் கூத்தாக விடும்! எதற்காகச் சிரிக்கறீர் கள்? உங்களைப் பார்த்தே நீங்கள் சிரிக்கிறீர் கள், அவ்வளவுதான்!.. ஆமாம்! (கோபத்து டன் காலை மிதிக்கறார்.) அந்த எழுத்தாளர் கள் மீது கைவைக்கும் வரை பொறுங்கள்! கதாசிரியர்கள்! அழுக்குப்பிடித்த மிதவாதி கள்! பச்சைப் பாம்புகள்! உங்கள் எல்லாரையும் தூளாக்கி காற்றில் பரத்தி விடுவேன்! (மூட்டி யால் பலமாக அடிக்கறார், தனது குதிகாலால் தரையை அரைக்கறார். சற்று நேர மெளனத் திற்குப் பிறகு.) என்னால் இப்போதும் ஒரு நிலைக்கு வர முடியவில்லை. ஆண்டவன் ஒருவனைத் தண்டிக்க விரும்பினால், முத லில் அவனது அறிவைப் போக்கி விடுவதாகத் தெரிகிறது. அரசு ஆய்வாளரை ஒத்திருக்கக் கூடிய எதுவும் அந்த உதவாக்கரையைப் பற்றி உண்டா? இல்லை! சுண்டு விரல் கூட இல்லை! திடீரென்று ““அரசு ஆய்வாளர்!”
202
் அரசு ஆய்வாளர்!” அவன் அரசு ஆய்வாளர் என்று முதலில் நினைத்தது யார்? அதைச் சொல்லுங்கள் எனக்கு!
தருமசாலை அதிகாரி (கைகளை விரித்த படி): அது எப்படி நடந்தது என்று என் னால் சொல்லவே முடியாது. ஏதோ குழப் பம் நமது மண்டைகளுக்குள்ளாகப் புகுந்து விட்டது போலத் தெரிதறது.
நீதிபதி: அதை யார் ஆரம்பித்தது என்று நான் சொல்கிறேன்! அவர்கள்தான் அதை ஆரம்பித்தார்கள், அந்த ஆசாமிகளே! (தோப் சன்ஸ்கயையும் போப்சின்ஸ்கயையும் சுட்டிக் காட்டூகறார்.)
போப்சின்ஸ்க: இல்லை, நான் இல்லை! நான் அதைக் கனவு கூடக் காணவில்லை...
கோப்சின்ஸ்க: நான் எதுவுமே சொன்ன தில்லை!..
தருமசாலை அதிகாரி: அவர்கள் தாம்! உண்மையில் அவர்களேகாம்.
பள்ளி ஆய்வாளர்: நிச்சயமாக, அவர்கள் தாம். இறுக்கர்களைப் போலச் சத்தம் போட் டுக் கொண்டு விடுதியிலிருந்து குதியாட்டமிட்ட படி இங்கு வந்தார்கள்: ““அவர் வந்துவிட் டார், ஏற்கெனவே அவர் வந்துவிட்டார். எந் தப் பணமும் அவர் செல்வழிக்கவில்லை!” ராஜாளியைக் கண்டுபிடி த்தீர்கள்!
மேயர்: நீங்கள்தான், இல்லையா? நகரத்து வதந்திபரப்புபவர்களும் மோசடிக்காரர் களும்!
தருமசாலை அதிகாரி: நீங்கள் இருவரும்
204
நாசமாய்ப் போக! உங்கள் ஆய்வாளரும் உங் களோடூ போகட்டும்!
மேயர்: எல்லா நேரமும் நகரத்தைச் சுற்றி ஒடி வந்து எல்லாருக்கும் பீதி ஏற்படுத்திக் கொண்டு, உளறல் பேர்வழிகள்!
நீதிபதி: பிதற்றல் குரங்குகள்!
பள்ளி ஆய்வாளர்: அறிவு கெட்டவர்கள்!
தருமசாலை அதிகாரி: தொப்பைவயிற்றுப் பிராணிகள்!
எல்லாரும் சுற்றிலும் கூடுகிறார்கள்.
போப்்சின்ஸ்கி: ஆண்டவன் சாட்சியாக, அது நான் இல்லை. அது பியோத்தர் இவானவிச்.
தோப்சின்ஸ்த: திடையாது, பியோத்தர் இவா னவிச், நீங்கள்தான் அதை ஆரம்பித்தீர்கள்.
போப்சின்ஸ்த: இல்லை இல்லை, நீங்கள் தான். முதலில் சொன்னது நீங்கள்தான்.
இறுதிக் காட்சி
ஒரு போலீஸ்காரன் நுழைஜறான். போலீஸ்காரன்: செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் லிருந்து ஜாரின் உத்தரவுடன் ஓர் அரசு ஆய் வாளர் வந்திருக்கிறார். அவரை உடனடியாக விடுதியில் வந்து சந்திக்கும் படி சொல்திறார். இத்த வார்த்தைகளைக் கேட்டு ஒவ்வொருவரும் பிர த்துப் போகிறார்கள். பெண்கள் அனைவரும் ஒரே
205
நேரத்தில் வியப்பு ஒலி எழுப்புகிறார்கள். குழுவினர் முழுமையும் உடனடியாகத் தங்கள் நிலைகளை மாற்றி அசைவற்று நிற்கிறார்கள்.
ஊமைக் காட்சி
மத்தியில் மேயர். ஒரு தூண் போல நிற் கறார். அவரது கைகள் நீட்டிக் கொண்டிருக்கின் றன, தலை பின்னுக்குத் தள்ளிக் கொண்டு இருக் இறது. அவருக்கு வலப்பக்கத்தில் அவரது மனை வியும் மகளும் அவரை நோக்கிச் செல்வது போல நிற்கிறார்கள்; அடுத்து அஞ்சலக அதிகாரி கேள் விக்குறி போல முறுக்கிக் கொண்டு பார்வையா ளர்களைப் பார்த்து நிற்கிறார்; அடுத்து வருப வர் கபடமற்ற திகைப்பைக் காட்டும் தோற்றத்து டன் பள்ளி ஆய்வாளர்; மேடையின் கடைக் கோ டியில் தங்களது .முகங்களில் மேயரது குடும்பத் தைப் பற்றித் தெளிவாகக் கேலி உணர்வைக் காட்டியவாறு ஒருத்தி மீது ஒருத்தி சாய்ந்த வாறு மூன்று பெண்கள் நிற்கிறார்கள். மேய ருக்கு இடப்புறத்தில் தருமசாலை அதிகாரி நிற் கிறார், எதையோ கேட்பது போல அவரது தலை ஒருபுறமாகச் சாய்ந்து இருக்கறது; அவருக்கு அடுத்து இருப்பவர் நீதிபதி, கைகளை அகல விரித்துக் கொண்டு, தரையில் குந்தி உட்கார்ந்த தைப் போல இருக்கிறார். சீட்டியடிப்பது போல அல்லது ““ஆமாம்! பெருஞ் சிக்கல்!” என்று சொல்வது போல அவரது உதடுகள் குவிந்திருக் தின்றன; அவரையடுத்து பார்வையாளர்களை நோக்கியவாறு கரோப்டன் நிற்கிறார், கண்ணைச் சுருக்கக் கொண்டும் மேயர் மீது முகத்தில் வெ
206
அப்பைக் காட்டிக்கொண்டும் நிற்கிறார்; மேடை யின் கடைக்கோடியில் போப்சின்ஸ்கயும் தோப் சின்ஸ்கயும் நிற்கிறார்கள், அவர்களுடைய கை கள் ஒருவரையொருவர் நோக்கி நீண்டிருக்கின் றன, ஒருவரை நோக்கி ஒருவர் கண்கள் பிதுங்க இருக்கின்றன. மற்ற விருந்தினர்கள் தூண்கள் போல நிற்கிறார்கள். பிரமிப்பில் ஆழ்ந்த குழு இந்தத்“ தோற்றத்தை ஒன்றரை நிமிடங்களுக்கு அப்படியே வைத்திருக்கறது. “
திரை.
வாசக நண்பர்களுக்கு
இந்தப் புத்தகத்தைப் பற்றியும் இதன்
தயாரிப்பைப் பற்றியும் தங்கள் கருத்தை
அறியவும், அடுத்துவரும் வெளியீடுகள் சம்
பந்தமாகத் தங்கள் ஆலோசனைகளை வர
வேற்கவும் ராதுகா பதிப்பகம் மகிழ்வுடன்
காத்திருக்கிறது. கடிதங்களை தயைசெய்து கீழ்வரும் முகவரிக்கு அனுப்புங்கள் : Raduga Publishers, 17, Zubovsky Boulevard,
Moscow, 119859, USSR.
“ஒருவர் இரிக்க விரும்பினால் சிரிக்கக் கூடுய விஷயம் பற்றி உரக்கச் சிரிப்பது நல்லது. “அரசு ஆய்வாளர்” நாடகத்தில், ருஷ்யாவில் மோ மான எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து, எனக்குத் தெரிந்த எல்லாவற்றையும் ஒரே குவியலாகச் சேர்த்து, அதைப் பார்த்துக் திரிக்க
விரும்பினே நட்டம்
ம் நிக்கலாய் கோகல்