தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Friday, June 10, 2016

ரத வீதி - வண்ணதாசன்

ரத வீதி - வண்ணதாசன்

வண்ணதாசன் wordpress


"கொஞ்சம் சிவக்க பானு மாதிரி இருக்கு சைக்கிள் கேரியரில் உட்கார்ந்து கொண்டு முருகேசனிடம் நான் சொன்னேன்.

நிறுத்துவதற்குள் பத்தடி முன்னால், இந்த எலிமெண்டரி பாடசாலைப் பக்கம் போய் விட்டோம்.

'அவதான்ப்பா. முருகேசன் சைக்கிளைச் சாய்த்துக் காலை ஊன்றிக் கொண்டு நின்றான். கேரியரில் இருந்து குதித்து இறங்கின நான் தலையில் கட்டியிருந்த கைக்குட்டையை அவிழ்த்துக் கொண்டேன். இன்னும் முடிவளரவில்லை. பதினாறு முடிந்து மூன்று வாரம்தான் கழித்திருக்கிறது. அப்பா இருந்தால் மட்டும் என்ன ஆகியிருக்கப் போகிறது.

மறுபடியும் கைக்குட்டையைக் கட்டிக் கொள்ளலாம் என்று தீர்மானிப்பதற்குள் பானுமதி முகம் தெரிகிற தூரத்தில் வந்து விட்டாள். பளிர் என்று அடிக்கிற வெயிலுக்குள் கனிந்தது போல அவள் நடந்து வருவதும், ஒரு மஞ்சள் தேங்காய்ப்பூதுண்டு போட்டுத் தோளில் சாத்திய நிலையில் அவளுடைய குழந்தை இருப்பதும் பார்க்கப் பார்க்க நன்றாக இருந்தது.

இதுபோன்ற இளம் நீலத்தில் அவள் இன்னம் எத்தனை சேலைதான் வைத்திருப்பாளோ தெரியவில்லை. இன்றைக்கும் கட்டம் கட்டமாகப் போட்ட ஒரு லீம் புடவைதான். அடர் நீலத்தில் வளைவு வளைவாகக் கீழ்ப் பக்கத்துச் சட்டைக் கையில் கருப்பு நூலும். மஞ்சள் நூலும் வைத்துத் தைத்திருந்த இடது புஜத்தில் - - மூடிக்குழந்தைதுங்கிக்கொண்டு இருந்தது. பெண் குழந்தை போல. காலில் வெள்ளித் தண்டையும் கையில் வெள்ளிக் காப்பும் கன்னத்தில் திருஷ்டிப் பொட்டுமாக இந்தக் கைக் குழந்தைகள்தான் எவ்வளவு அழகாக இருக்கின்றன.

________________

அண்ணன் விரும்பியபடி பானுவுக்கும் அண்ணனுக்கும் கல்யாணம் ஆகியிருந்தது என்றால், ஒருவேளை அண்ணன் இந்தக் குழந்தைக்கு நிச்சயமாக அப்பா பெயரைத்தான் விட்டிருப்பான். பரமகல்யாணி என்ற பெயரை ஸ்டைலாக "பரமா என்று விட்டிருக்கலாம். எனக்குப் பரமா என்று கூப்பிட்டு அதைக் கொஞ்ச வேண்டும் போல இருந்தது.

முருகேசனைத்தான் பானு முதலில் பார்த்தாள். முருகேசனை அவள் ஒன்றுமே கேட்கவில்லை. என்றாலும் முருகேசன் முந்திக் கொண்டு, 'ரெண்டு பேரும் சினிமாவுக்குப் போயிட்டு வந்துக்கிட்டு இருக்கோம் என்றான். -

நான், 'நல்லா இருக்கீங்களா?' என்று கேட்டுக் கொண்டே பானுவின் தோளில் கிடந்த குழந்தையின் கன்னத்தைச்சுட்டுவிரலால் தட்டினேன். தொங்கின. அதன் கன்னத்தில் விரல் புதைவது சந்தோஷமாக இருந்தது.

'நல்ல காய்ச்சல்-பானு மிகுந்த சோர்வுடனும் துக்கத்துடனும் சொன்னாள். கிட்டத்தட்ட ஏழெட்டுமாதங்களுக்குப்பிறகு பானுவை இப்போதுதான் பார்க்கிறோம். இவ்வளவு காலத்திற்குப் பிறகு பார்க்கிறபோது, மற்ற சந்தர்ப்பங்களில் எல்லாம் என்ன என்ன பேசத் தோன்றும்."

'காய்ச்சல் விடவே மாட்டேங்கு சுந்தரம்'- பானு மறுபடியும் குழந்தையைப் பற்றி அதே வருத்தத்துடன் பேசினாள் என்றாலும் பானு என் பெயரைச் சொல்லியது சந்தோஷமாக இருந்தது.

'சுந்தரத்துக்கு அப்பா தவறிப் போச்சு'-மறுபடியும் முருகேசன் பேசினான். மொட்டை போட்டிருப்பதைப் பார்த்தாலே அவளுக்குத் தெரியாமலா இருக்கும். அப்படியே சொல்ல வேண்டும் என்றாலும் பானு கேட்ட பிறகு சொன்னால் போதாதா?

முருகேசன் இப்போது மாத்திரமில்லை. அண்ணனும் பானுவும் ஒருத்தரை ஒருத்தர் விருப்பப்பட்டுப் பழகிக்கொண்டிருக்கிறபோதும் முருகேசன்பானுவைப்பற்றித்தான் பேசிக் கொண்டிருப்பான். தப்பித் தவறிக் கூட பானு என்று பெயரைச் சொல்ல மாட்டான். ஒரு சமயம் 'அது' என்பான். அண்ணன் பேச்சோடு பானுவைப் பற்றிப்பேசினால் அவங்க' என்பான்.

"என்ன இருந்தாலும் உங்க அண்ணனுக்குத் தைரியம் பத்தாது.டா. உங்க அண்ணனும் டீச்சர். அவுங்களும் டீச்சர். அப்பா கல்யாணத் துக்குச் சம்மதிக்கலைன்னாசரின்னு அப்படியே விட்டு விடுகிறதா?"

________________

அப்பா கூட அண்ணன் எவ்வளவு சண்டை போட்டிருப்பான் தெரியுமா?"

"சண்டை போட்டு என்ன பிரயோஜனம் ஜெயிக்கலையே." 'சில விஷயத்துல சண்டைதான் போடலாம். சண்டை போடுகிறதே பாதி ஜெயிச்சமாதிரிதான்."

"பாதி ஜெயிச்சு என்ன புண்ணியம்-முருகேசன் என்னிடம் இப்படிக் கேட்டானே தவிர, 'சண்டை போடுகிறதே பாதி ஜெயித்த மாதிரிதான்னு சுந்தரம் சொல்லுதான் என்று என் அண்ணனிடம் போய்ச்சொல்லியிருக்கிறான். அண்ணன் என்னிடம் வந்து, 'அப்படிச் சொன்னியாமே முருகேசுகிட்டே' என்றான். கையைக் கொடுத்துக் குலுக்கினான். இதில் கைகுலுக்கிப் பாராட்ட என்ன இருந்தது என்று எனக்குத் தெரியவில்லை.

அண்ணன் வேலை பார்த்த ஸ்கூலில் இருந்துவேறொரு ஸ்கூலுக்கு மாற்றல் கிடைத்து பானு போன பிறகு கூட முருகேசன்தான் ஏதாவது வந்து சொல்லிக் கொண்டிருப்பான். சயின்ஸ் செண்டருக்கு ஸ்கூல் பசங்களை எல்லாம் கூட்டிக்கிட்டு எக்ஸ்கர்ஷன் வந்திருந்ததுடாஅது என்பான். அதுவேறே யாரையோகல்யாணம் செய்துக்கப் போகிறது என்று தெரிந்தபிறகும் அசையாமல் இருக்கிற கல்லுளிமங்கன் உங்க அண்ணன் ஒருத்தர்தான் என்று சொல்வான்.

பானுவுக்குக் கல்யாணம் ஆன தேதியில் இருந்து, ஒரு வார்த்தை கூட அண்ணன் அப்பாவுடன் பேசுவதில்லை என்பது வீட்டுக்குள் எங்களுக்கு மட்டும்தான் தெரியும். 'என்ன இருந்தாலும் உன்னைப் பெத்த அப்பாடா என்று அம்மா கெஞ்சியும் கூட அண்ணன் கடைசி வரை அப்படியேதான் இருந்தான். தூக்கிக் கொண்டு போகிற போது கூட கரகரவென்று அழுதானே தவிர, அப்பா என்று ஒரு வார்த்தை கதறவில்லை. மொட்டை போட்டுக் கொள்ளவும் இல்லை.

முருகேசனையும் என்னையும் இப்படிப் பார்ப்பதற்குப் பதிலாக, பானுவையும், குழந்தையையும், இப்படிப் பாத்திமா பேக்கரி ரொட்டிக்கடை வாசனைக்கு மத்தியில், வாகையடிஅம்மன் கோவில் மணி கணார் கணார் என்று விம்மி முச்சந்தியில் உருளுகிற ஒலிக்கிடையே அண்ணன் பார்த்திருந்தால் எப்படி இருந்திருக்கும்.

அண்ணன் எங்களைப் போல இப்படி சைக்கிளை நிறுத்தியிருக்கவும் மாட்டான். பேசியிருக்கவும் மாட்டான் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. பானுவைக்கல்யாணம் பண்ணிக் கொள்வது சாத்தியமில்லை என்று தெரிந்த உடனேயே அண்ணன் கதவை முழுதாகச் சாத்திக் கொண்டான். தென்காசியில் வைத்துக்

________________

கல்யாணம் என்று முன்பே தெரியும், பையன் யார் என்று தெரியும். பத்திரிகையைக் கூட இன்னொரு ஆசிரியை மூலம் பானு கொடுத்துவிட்டிருந்தாள்.

முருகேசன் அந்தப்பத்திரிகையை வாங்கிப்பார்த்தான். படித்தான். மேல்விலாசம் எழுதப்படாத அழைப்பிதழ் உறையைக் சுண்டிக் கொண்டு சிரித்தான்.

'அது எவ்வளவு ஜாக்கிரதையா இருக்குது பாரு. அதுக்கு உன் அண்ணன் பெயருக்கு என்ன ஸ்பெல்லிங்குன்னு தெரியாதா? எவ்வளவு கவனமாப் பெயர் எழுதாமல் கொடுத்துவிட்டிருக்கு பாரு. பயங்கரமான ஆளுப்பா. நம்பவே முடியாது. இந்த மாதிரி கோஷ்டியை?"

'முருகேசன் என்னதான் சொன்னாலும் பானுவுடைய கல்யாணத்திற்கு அண்ணன் போவதுதான் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. ஒருத்தரை ஒருத்தர் விரும்புகிறோம். பழகுகிறோம். ஏதோ ஒன்று நடக்கிறது. ஒன்று நடக்காமல் போகிறது. அதற்காக அப்படியே எல்லாவற்றையும் கரும்பலகையை அழிக்கிறது போல அழித்துவிடுகிறதா? கூழாங்கற்களோ, பாறைகளோ, சத்தமில்லாமல் அல்லது சிறு முனு முனுப்புடன் அவற்றையெல்லாம் தாண்டித் தண்ணீர் ஒடிக் கொண்டே இருப்பது நன்றாகத்தானே இருக்கிறது.

முருகேசனிடம், 'முருகேசு, அண்ணன் போகாவிட்டால் என்ன? நாம் ரெண்டு பேரும் பானு கல்யாணத்திற்குப் போய்விட்டு வருவோமா?" என்று கேட்டேன். -

தென்காசியில் கல்யாணம். அப்படியே பக்கத்தில் அருவிகள் என்று ஒரு சிறு திட்டம் கூட மனத்திற்குள் போட்டுக்கொண்டேன். என்னையே அண்ணன் மாதிரி கற்பனை பண்ணிக் கொண்டேன். பானுவின்கல்யாணத்திற்கு ஒரு கவிதைப் புத்தகம் பரிசளிப்பது என்று எனக்குள் முடிவாகி விட்டது. எந்த அப்பா இந்தக் கல்யாணத்தை நடக்கவிட மாட்டேன் என்று அண்ணனுக்குத் தடை போட்டாரோ, அதே அப்பாவின் கல்யாணத்திற்குப் பரிசளிக்கப்பட்ட 'குடும்ப விளக்கு பிரதியையே கொடுத்துவிட வேண்டும். பழுப்படித்து அலமாரிப் புழுக்கம் அடிக்கிற அந்தப் புத்தகத்தைப் போன்ற சரியான குறியீடு வேறு இருக்க முடியாது.

நானே அண்ணனாகப் போய் பானுவுக்கு அதைப் பரிசளித்துவிட்டு அப்படியே ஒவ்வொரு அருவியாகத்தாவித்தாவிமேலே போகிறேன். பொங்கிப் புகையாக வழிகிறேன். ஆறாவது அருவி' என்று மறுநாள் செய்தித் தாள்களில் படத்துடன் செய்தி வருகிறது. அருவிக்கு அண்ணன் ஜாடை

________________

முருகேசன் உடனடியாக மறுத்தான். 'சீச்சீ. உங்க அண்ணனே போகலை. அப்புறம் உனக்கும் எனக்கும் என்னடா வந்துது? இப்படி நீ சொன்னேங்கிறது உங்க அண்ணன் காதில விழுந்தால் கூட அவரு வருத்தப்படுவாரு" என்று சொன்னான். இப்படிச்சொன்னானே தவிர, இவனே அண்ணனிடம் போய் இதைச் சொல்லியும் விட்டிருக்க வேண்டும்.

நான் குளித்துவிட்டு வெளியே வருகிறதற்கு முன்பு, எனக்குப் பின்னே வருகிறவர்கள் குளிக்கட்டும் என வாளியை நிரப்பிக் கொண்டிருந்தேன். குழாயிலிருந்து தண்ணீர் விழுகிற சப்தம் அவ்வளவு இதமானது இல்லை. எனினும் தண்ணீர் நிரம்பி வழிதல் என்ற செயலின் அழகுக்காக அப்படிச்செய்வது பிடித்துப் போயிற்று. ஒரு அகன்ற பிளாஸ்டிக் தொட்டி தளதளவென்று நிரம்பி விளிம்பு வட்டத்தினைத் தாண்டிச் சட்டென்று வழிகிற நேரம் அண்ணன் குளியல் அறைக்குள் வந்தார். ஒரு இளம்பச்சைத் தேங்காய்ப் பூத்துண்டு கழுத்தும் பிடரியும் முங்கக்கிடந்தது.

'முருகேசுவும் நீயும் கல்யாணத்திற்குத் தென்காசிக்குப்போயிட்டு வந்திருக்கலாமே என்று எனக்கு மட்டும் கேட்கிற மாதிரி சொன்னார். அண்ணனைப் பார்த்தேன். அண்ணன் நிரம்பி வழிந்து அழகாக இருந்தார்.

பானுவையும் குழந்தையையும் பார்க்கும்போது கூட அழகாகத்தான் இருக்கிறது.

'என்ன வெயில் அடிக்குது, ஒரு குடையை வச்சுக்கிட்டு வந்திருக்கலாமே. நான் பானுவின் முதுகுப் பக்கம் போய்க் குழந்தையின் விரல்களைப் பிடிக்க முனைந்தேன். சிறு கூர்மையுள்ள நகங்களுடைய அந்த விரல்கள் நம் விரல்களைப் பற்றுகிற விதத்திற்கு ஏங்கினேன்.

'இவ்வளவு இருக்கும்னு நினைக்கலை-பானு சாதாரணமாகவே இதைச் சொன்னாள். யாரும் வெயிலைப் பற்றிச் சொல்கிற வார்த்தைகள் தான் இவை. ஆனால் அதையும் மீறி என்ன என்ன அர்த்தங்களை எல்லாமோ அது சொல்வது போலிருந்தது. எதுதான் நினைத்தபடி இருக்கிறது. நினைத்தபடி அமைகிறது?

“டாக்டர் வீட்டுக்குத்தான் போய்க்கிட்டு இருக்கேன்" இப்படிப் பானு சொன்னதும் அவளுடன் ஏதாவது மீண்டும் பேசவேண்டும் என முருகேசுக்குத் தோன்றியிருக்குமோ என்னவோ. "எந்த டாக்டர்கிட்டே காண்பிக்கிறீங்க?" என்று கேட்டான்.

பானு பதில் சொன்னாள்.

________________

'சின்னத்தேர் பக்கத்தில் இருக்கிறாரே அவரா?' என்று கேட்டதற்குப் பானு ஒப்புதலாகத் தலை அசைத்ததும், முருகேசு மறுபடியும், ''ராசியான ஆளு" என்று சொன்னான். ஏதோ தினசரி நான்கு கைப்பிள்ளைகளை அவன் அவரிடம் காட்டி வருவது போலவும், அவன் குறிப்பிடுகிற அந்தச் சின்னத் தேரடி டாக்டர் தொட்டதும் உடனுக்குடன் குணமாகிவிட்டது போலவும் அவன் முகம் இருந்தது. இப்படிப் பாவலா பண்ணுவதுதான் முருகேசனிடம் எனக்குப்பிடிப்பதில்லை.

'ராசியோ என்னவோ. அவர்கிட்டே காண்பிக்கிறதுதான் கட்டுப்படியாகிறது' என்று பானு சொன்னாள். பானுவும் இவ்வளவு தீவிரமான பதில்களை எல்லாம் சொல்ல வேண்டியதில்லை என்றே எனக்குத் தோன்றிற்று.

'இன்னும் ரொம்ப தூரம் நடக்க வேண்டி இருக்கிறதே" என்று நான் சொன்னேன்.

"என்ன பண்ணுகிறது? கொஞ்சம் தூரம் தான்' என்று பானுவும் சொன்னாள். அந்த மஞ்சள் துண்டைச் சரிசெய்து குழந்தையின் தலையில் வெயில்படாமல் இருக்கும்படி இழுத்துவிட்டாள். துண்டின் நூலிழை பட்ட கூச்சத்தில் குழந்தை தன் முகத்தைப் பானுவின் தோளில் உருட்டிக் கொண்டது.

'சைக்கிள் காரியரிலே வேணும்னா உட்காருகிறீங்களா? நான் பானுவிடம் கேட்டேன். காலை ஊன்றிச் சரித்துக் கொண்டிருந்த சைக்கிளை உடனடியாக நிமிர்த்திக் கொண்ட முருகேசன், "உட்காருங்க. கொண்டு போய் விட்டு விடுகிறேன்' என்று அவசரப்பட்டான். பானுவுக்கு வெயிலில் குழந்தையுடன் நடந்து வருவது நிஜமாகவே கஷ்டமாக இருந்திருக்க வேண்டும்.

"சிரமம் இல்லையே?' என்று என்னைப் பார்த்து பானு கேட்டாள்.

"அதெல்லாம் ஒண்னுமில்லை?'முருகேசு பானுவைப் பார்த்துச் சொன்னான்.



'இவளைக் கொஞ்சம் வச்சுக்கோ, நான் உட்கார்ந்துக்கிட்ட பிறகு வாங்கிக்கிடுதேன்"- பானு குழந்தையை என்னிடம் தந்தாள். காய்ச்சல் உஷ்ணத்துடன் மெத்தென்று குழந்தையின் மூச்சுப்பட்டது. புடைவைத் தலைப்பை இடுப்பில் செருகின பின்பு, சற்று உந்திச் சைக்கிளின் பின்னால் ஏறிக்கொண்டாள். என் கையில் இருந்த குழந்தையை வாங்கித் தோளில் சார்த்திக் கொண்டு உச்சியில் முத்தினாள்.

________________

'போகலாமா?" என்று சைக்கிள் பெடலைச் சரியான நிலையில் வைத்துக் கொண்டு முருகேசன் கேட்டான். முருகேசன் முகம் ரொம்பச்சந்தோஷமாக இருந்தது.

'நீ நடந்து போயிக்கிட்டே இரு. இவங்களை டாக்டர்கிட்டே விட்டுட்டு நான் வந்திடுதேன்' என்று ஒரு கையை அசைத்தான்.

'பார்த்துப் போ' என்று முருகேசன் தோளில் கை வைத்தேன். பானுவும் தலையைச் சாய்த்துச் சிரித்தது மாதிரியிருந்தது. கிணுங் என்று மணியடித்தது. மணல் சரசரத்தது.

'வந்திருதேன் முருகேசன் சைக்கிளை மிதிக்க, சைக்கிள் சப்பாத்தி விலாஸ், ஜெயின் கோவில், கோவாப்டெக்ஸ் எல்லாம் தாண்டிப் போனது. இங்கிருந்து பார்க்கப் பார்க்க சின்னத்தேர் நெருங்கிக் கொண்டிருந்தது.

சின்னத் தேர் என்ன, பெரிய தேர் என்ன?

எல்லாவற்றிற்கும் சேர்த்துத்தானே ரதவீதி இருக்கிறது.

கல்கி - தீபாவளி மலர் 1997