தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Wednesday, November 27, 2019

நுண்வெளிக் கிரகணங்கள் 1 --------. சு. வேணுகோபால்


- அறுதாள் அறுத்து பட்டேறிபோட்டும், போடாத காய்ந்த மஞ்சள்நிற நெல்வயல்களில் விழுந்தடித்து ஓடுகிறார்கள், உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு முந்தி ஓடுகிறார்கள். அறிந்த முகங்கள் அறியாத முகங்கள், லவுக்கை போடாத பாட்டிமார்கள், கனத்த மார்பகங்கள் குலுங்க இடுப்பில் ஒட்டியிருக்கும் கைக்குழந்தைக்காரர்கள், வாலிபர்கள், நடுக்கட்டு வயதுக்காரர்கள். குடுமிவைத்த தாத்தாக்கள், கடுக்கன் போட்டவர்கள், சட்டையில்லாது வேட்டியைச் சுருட்டி தார்பாய்ச்சி கட்டிய விவசாயிகள், தாவணி போடாத வயதுடைய பருவம் நெருங்கும் பெண்கள், சட்டையை அணியாமல் பாவாடையை மட்டும் ஓட்டத்தில் தடுக்காமல் இருக்க இடுப்பில் சொருகப் பட்டிருப்பவர்கள், அவிழும் சேலையை அந்த வேகத்திலேயே இரண்டு கைகளாலும் முடிச்சுப் போட்டுக் கொள்பவர்கள், எல்லாரும் நீ முந்து நான் முந்து என்று ஓடுகிறார்கள். ஓட்டம் பின்னிழுத்து குதிரைகளின் குளம்பொலிகள் முன்னைவிட நெருங்கிக் கொண்டுதான் வருகின்றன. ஆயிரக்கணக்காக ஓடுபவர்களில் தனகோபாலின் அப்பா ஓடுகிறார். அவனின் அம்மா, அத்தை, அக்கா, அண்ணன், பெரியப்பா, சித்தப்பா, ஜெயகரன், பத்மா, குஞ்சம்மா, பவானி, சரவணமாமா...... கூட்டத்தில் அங்கொருவர் இங்கொருவராக கண்ணிற்கு மறைந்து மறைந்து : ஓட்டத்தில் தெரிகிறார்கள். அவர்களுக்குப் பின்னால் பழக்கப்பட்ட ஆட்டுக்குட்டிகள், நாய்கள், பசுமாட்டு மந்தைகள் கெதிகலங்கி மிரண்டு. வருகின்றன. பின்னும் குளம்கொலிகள் மிக சமீபத்தில் கேட்க ஆரம்பித்துவிட்டன. ஓடுபவர்களிலே தகுனி தகுனியாக பிரிந்து வேறு திசைகளிலும் ஓடுகிறார்கள். அக்காவைக் காணோம். ஏதோ ஒரு தகுனியில் சேர்ந்து ஓடுவாள். புவனா எந்தத் தகுனியில் உள்ளிழுக்கப்பட்டாள் என்பது தனகோபாலுக்குத் தெரியவில்லை. பாட்டி டேய் கண்ணா இந்த நெலமையா' பதட்டமாக உளறிக்கொண்டு தவங்கித் தவங்கி மிதித்து வருகிறாள். ஒழவுக்காட்டில் புழுதியைக் கிளப்பிக்கொண்டு வருகிறார்கள். உழுதுகொண்டிருக்கும் ரம்பாடி மாடுகள் குதிங்காலில் கொழு குத்துவதும் பொருட்படுத்தாமல் புரண்டுவிழும் கலப்பையை இழுத்துக்கொண்டு கூட்டத்தோடு சேர்ந்து ஓடுகின்றன. மாட்டின் தலைகள் அவர்கள் பின்னால் சூறாவளியில் சுழலும் கிடுருகள் போல் சுழன்று பின்னால் வருகின்றன. பஞ்சாரங்கள் உருண்டு வருகின்றன. குழந்தை தூங்கும் தொட்டில்கள் ஆகாயத்தில் கயிறுகட்டி ஆட்டி விட்டதுகணக்கா வந்து கொண்டே இருக்கின்றன.

புழுதி கிளப்பும் குதிரைகளில் கன்னம் மழித்து கிருதா ஓரமாக ஒள்ளித்தாடி வைத்திருப்பவர்கள் கையில் கத்திகளோடு பின் தொடர்கிறார்கள். புழுதிப் படலங்களில் மங்கலாகக் கருப்பு பர்தா போட்ட பெண்கள் துரத்தி வருகிறார்கள். இனி ஒன்றும் ஆவதற்கில்லை. படுதாவைக் கழட்டி ---

திடுதிடு ஓசை உள்ளமுங்கி வரும் ஆற்றின் கீதம் கேட்கிறது. ஓடியவர்கள் அப்படியே ஆற்றில் குதிக்கிறார்கள். கோரைபுற்கள் நாணலோடு கரைகளில் வளர்ந்து உய்ய்யென்று காற்றோடு பேசுகின்றன. தனகோபாலின் அம்மாவை குதிரையில் இருந்த வண்ணம் அவிழ்ந்து தொங்கும் கூந்தலை ராவிப்பிடித்து நிறுத்துகிறான் சிவந்த உருவம் கொண்ட கோல்மூஞ்சிக்காரன். குதிரையிலிருந்து குதித்து நாணல் புதருக்குள் இழுத்துச்செல்கிறான். அவ்வா' என்று கத்திச் சென்ற தனகோபாலைப் பூனைக்கண் வாய்த்த மூவர் வாயைப் பொத்தி நாணலுக்குள் தள்ளுகின்றனர். பதறிச் சிதறுதேங்காயாக தெரித்து ஓடினாலும் பலர்மாட்டிக்கொண்டு நாணல் புதர்களுக்குள் அழுகிறார்கள். புரட்டி எறியும் ஆற்றுநீரில் உருவங்கள் மிதக்கின்றன ஆலமரத்தின் கிளை ஓடிந்து நீரில் மிதந்து செல்கிறது. அதனைப்பற்றிக் கொண்டு ஆற்றோடு போகிறார்கள். தனகோபாலின் மலப்புழை உறுப்பம் எடுக்கிறது. ரத்தத்தோடு பிசுபிசுவென்று ஊளையாக வழிகிறது. தனகோபாலின் அம்மாவின் வாயில் துணிப்பொட்டலம் திணித்து வைத்து கோல்மூஞ்சிக்காரன் வேர்க்க விருவிருக்க இயங்குகிறான். 'அவ்வா என்று கத்துகிறான். யாருக்கும் கேட்கவில்லை. அப்பா எதில் மறைந்தார் என்று தெரியவில்லை.

தனகோபாலுக்கு வேர்த்துக் கொட்டியது. பக்கத்தில் பாட்டி மாராப்பு விலக இன்னும் தூங்கிக்கொண்டு இருக்கிறாள். வேட்டியில் வடிந்த கஞ்சிப்படலம் கொலகொலவென்று 'மேப்பு' மாதிரி படர்ந்திருந்தது. இதற்குமுன் இப்படி ஆனதில்லை. தொடைகளில் ஒட்டியிருந்தது அவனுக்கு அசிங்கமாக இருந்தது. வேட்டியின் படாத பகுதியை நகட்டி துடைகளில் அழுந்த துடைத்தான். எழுந்து அழுக்குப்பொட்டியில் இருந்த ஒரு அழுக்குக் கைலிவேட்டியை எடுத்துக்கோர்த்து ஈரமான வேட்டியை எடுத்துக் கையை உள்வாக்கில் விட்டு விடுவித்தான்.

வெளியில் வந்தபோது அம்மா வாச தெளிக்க ஈயப்பாத்திரத்தில் சாணியைக் கரைத்துக்கொண்டு படியில் நின்றிருந்தாள். தொட்டியில் முகம் கழுவிக் கொண்டு மீண்டும் ஒரு முறை வேட்டியைச் சரிசெய்தான். அம்மாவைக் கண்கொட்டாமல் பார்த்தான். "என்னடா கோவாலு' “ஒண்ணுமில்லம்மா" "தோட்டத்துச்செவ போனயன்னா மொளகா நாத்த எட்டி பாத்திட்டுவா, எவனாச்சும் கை வச்சிருக்கானான்னு பாரு" பேசாமல் கேட்டைத்திறந்து ராஜபாட்டையில் காலை வைத்தான்.

எரும்புப்பொடி தூவியும் சுரட்டை விலகவில்லை . நுனிக்கருகல் அதிகம். மழைவிழுந்தால் ஒத்தத்தட்டு போட்டு வாய்க்கா நடவேண்டும் கிரைண்டர் வச்சு வெட்டினார் அப்பா. கரும்பாறை விழுந்துவிட்டது. வெட்டுச் செலவுக்குக் கூட வெள்ளாமை நிக்கவில்லை. கிணறுவெட்டு லோன்கடன் பெரியதொகை அப்படியே நின்றிருக்கிறது. கிணற்றை எட்டிப்பார்த்தபோது சுவர் ஓரத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நீர் சொட்டியது. தனகோபால் அஞ்சாங்கிளாஸ் படிக்கும்போது மூலவாங்கு படியிலிருந்து குதித்திருக்கிறான். இதே கிணற்றில்தான் சரவணமாமா சொரக்குடுக்கையை முதுகில்கட்டிவிட்டு நீச்ச பழக்கினார். சரவணமாமா செட்டுக்கள் தொட்டு விளையாடும்போது அலையடிக்கும். அவர் கல்யாணம் பண்ணிய சமயம் பழக்கிக்கொடுத்தது.

தண்ணிய குடிச்சுத் தத்தக்காபுத்தக்காவென்று நீச்ச பழகியது இந்தக். கிணற்றில்தான். பெரிய செட்டுக்கள் மேலிருந்து குதிக்கும்போது குழாயை இறுக பிடித்தால்தான் மனசுக்கு சரியாக இருக்கும். சிலசமயம் முங்கிவைக்க வருவார்கள். கைகாலை அசைத்து மேல்வரும்போதே லபலபவென்று அலறியது உண்டு. ஒருசமயம் சொரகுடுக்கை ஓட்டைவிழுந்து உள்ளே இழுத்துக்கொண்டு போய்விட்டது. "என்ன இங்க ஒரு விருட்டான் தவக்காய்கணக்கா நீஞ்சிக்கிட்டிருந்தான் ஆள்க்காணம்” என்று தெரிந்தே கிண்டலடிச்சிருக்கிறார் ராஜாங்கம் பாவா. அவர் முங்கி நெட்டுக்குத்தலாக நீரைக்கிழித்து போனபோது, வயிறுமுட்ட நீரைக் குடித்து ராஜாங்கத்தை ராவி பிடிக்க முற்பட, நாசூக்காக விலகி பிடறி மயிரை பிடித்து மேலே இழுத்து வந்தார்.* மயக்கம் தெளியவில்லை. மேலே கொண்டுவந்து கழுத்தில் ஆட்டுக்குட்டியை மடக்கி போடுவதுபோல் போட்டு கரகரவென்று சுற்ற நீர்வாந்தி வந்தது. தெளிச்சு வந்து அழுக 'உள்நீச்சியில் சூப்பரா போற" என்று டாவடித்தார்.

போக போக சம்பா சொரகுடுக்கையைக் கண்டாலே அலர்ஜி. இடுப்பில் கயிற்றைக்கட்டி சரவணமாமா பழக்கினார். ஐந்தாள் மட்ட நீரில் போட்டிபோட்டு கல் எடுப்பது; யார் அதிக நேரம் நீருக்குள் தம் பிடிப்பது என்று படியில் உக்கார்ந்து எண்ணியது இந்த கிணறுதான். பல்ட்டி, சொர்க்கம், கழல்பல்ட்டி, செங்குத்து சருக்கு, ஏசல் சொர்கம் வித்தைகள் பழகியதில் நீரலைகள் படியில் தப்-தப் அடித்திருக்கின்றன.

செங்குத்து சருக்கு அடிக்கிறேன் என்று பத்தடி ஏறி சதீஷ்குமார் பாவா தொப்பென்று விழுந்து.... நெஞ்சைப் பிடித்துக்கொண்டு இப்போது தூர்மண் விழுந்து மேவியிருக்கும் படியில் உக்கார்ந்திருந்தார். படிப்பில் கெட்டி அண்ணணோடுதான் சுற்றும் அமைதியாக இருப்பார். வீட்டில் அப்பாவிற்கு சதீஷைக் கண்டால் இளக்காரம். அவர்கள் தனி கரைபிரிவு என்பதாலாக இருக்கலாம். இப்போது திருச்சியில் வேலையில் இருப்பதாகச் செய்தி. நீர் ததும்பிய படிகளில் தூர்மண் மூனொதடு ரங்கு (மேல் உதட்டில் பிறவியிலேயே பிளந்து ஓரங்கள் குமிழ்ந்து மேல்நோக்கி திரும்பி இருக்கும். அதன் வழியே பற்கள் தெரியும். ஒரிஜினல் பெயர் ராஜாங்கம்) கமலைக் காலிலிருந்து குதிக்கும்போது காலை லேசாக மடக்கி கூட்டுக்கால் வைக்காமல் அகலவைத்து 'தொபக்கட்டீரென்று விழுந்தார். நான்கடி உயரம் நீர் எழும்பி விழுந்தது. குதிக்கும் போது இசைவோடு கையை மேலே பறக்க முயற்சிப்பதுபோல அசைத்தால் செங்குத்தாக நீரில் புதைந்து போகும் லாவகம் வரும். கையை அசைக்காமல் தொடையோடு ஒட்டிக்கொண்டு செங்குத்தாக குதித்தால் காற்று இழுத்துவிட்டு பக்கவாட்டில் போய் விழவைத்துவிடும். ரங்கு கையை சரியாக அசைத்தும் மடக்குக் கூட்டுக்கால் வைக்கவில்லை. நீர்க்குமிழிகள் பொறிந்து வெடித்தன. படியில் ஏறி பழையபெட்டில் நின்றார். விதைக்கொட்டை ஓதைப்புடுக்குகாரன் போல் சிவந்து வீங்கிவிட்டது. அன்றிலிருந்து கிணற்றுக்கு வந்தால் படியில் உட்கார்ந்து முதுகில் நீரள்ளிப்போட்டு தேய்த்துவிட்டு போய்விடுவார்.

நீண்டநாள் மோட்டார் அமர்ந்த பெட்டு அப்பளம் கணக்கா சீப்சிமெண்ட்படிமத்தை நான்கைந்து எரும்புகள் நகட்டுகின்றன. மோட்டார் கீழே போய்விட்டது. பாதம் முங்கும் நீருக்காக ஒரு மோட்டார்? கிரைண்டர் வைத்து தகர்த்தும் பாறை அசையவில்லை. அப்பா அசந்துபோய்விட்டார். பத்தடியில் முறிவுகிடைக்கும் என்றார்கள். பாதாளத்தில் முளைத்திருக்கும் பாறைக்கு எங்கே தேடுவது முறிவு! அந்தளவு விட்டுவிட்டார். தேவையில்லாமல் அறுபதினாயிரம் கிணற்றில் போட்ட கல். இருந்திருந்தால் அக்காவின் கல்யாணத்திற்கு உயிர் கொடுக்கும். பத்துகுழிநெலத்தை எப்படி சும்மா போடுவது என்று நீர்வரத்து குறைந்து கீழ்நோக்கிப்போகும் நீரை தேடிப்போய் அப்பா தோற்றுப்போய்விட்டார்.

 தலைகளை உதிர்த்து முண்டமாக நிற்கும் தென்னந்தோப்புக்குள் நுழைந்தான். சில தென்னை மரங்களுக்கு உயிர் குருத்தில் இன்னும் ஒட்டிக்கொண்டிருந்தது.. ஜட்டியை அவிழ்த்து தோளில் போட்டுக்கொண்டு வாய்க்கால் பள்ளத்தில் வேட்டியைத் தூக்கிவிட்டு உக்கார்ந்தான். காற்று கொண்டயம்பட்டியிலிருந்து துந்துபியின் நாதத்தை அள்ளிக் கொண்டு வந்தது. ஏதோ ஒரு மணமகனை உறுமி மணவறைக்கு அழைத்துக்கொண்டு போகிறது. - 
டட்டவிடட்டி டட்டவிடட்டி
டட்டவி டட்டி டட்டவிடட்டி ..

இப்படியொரு கனவு முன்பு வந்திருக்கிறதா? என்று நினைத்தபோது ஞாபகம் வரவில்லை. கல்லால் துடைத்துக்கொண்டு எழுந்தான். நீர் இல்லாத தொட்டிகளில் குழாய்கள் உண்டு. சில கிணறுகளுக்கு மின்சார சர்வீஸ் கட்டாகிவிட்டது. கவர்ண்மண்ட் பெட்டியை வயர்மேன் எடுத்துக்கொண்டு போய்விட்டான். அந்த கிணறுகளுக்கு இனி புதிய சர்வீஸ் தேவையில்லை. தொட்டியின் கீறல்கள் வழி அருகம்புல் நுழைந்து தலையாட்டுகிறது. கனவுபற்றி தாத்தியிடம் தான் கேட்கவேண்டும். வேப்பங்குச்சியை வாயில் மென்று தேய்க்க முற்பட்டபோது கசந்தது.

ரெங்கசாமிக்கு மன உளைச்சல் இல்லையென்றாலும் செத்தைசெதவலில் விழுந்திருக்கும் சுண்ணாம்பு ஒட்டிய சதுரக்கல்லை இருந்த இடத்தில் அப்பிப்பார்த்தும் நிற்காதது கஷ்டமாக இருந்தது. சித்தையன்கோட்டை காரவீட்டுக்காரரின் கைப்பிடிச்சுவர் கல் ஒன்று இன்றும் விழுந்தது. ஆதிகால சுண்ணாம்புக்கலவை. மண்பொறிந்துப் போனது. புயல்தாக்கி விழவில்லை. இந்த வேணாதிவெயிலில் புயல் எப்படி வந்திருக்க முடியும்? மாயாண்டித்தேவரின் வெள்ளாட்டுக்குட்டி பண்ணிய வேலை. கீழத்தெருவில் இருந்து கருவேல நெத்து திங்க வந்தது. ஆள் நெஞ்சுமட்டம் விடுவல் கொண்டு நிற்கும் இந்த சுவரில் ஏறி நடந்து தாண்டி பழக்கப்பட்டிருந்தது. அந்தப்புறம் எருமைகட்ட தாத்து கொளடர் அரக்கிவிட்ட ரெண்டு கருவேல மரங்கள் நிற்கின்றன.-- இதற்காக குட்டியின் காலை ஒடித்துவிட மனம் வரவில்லை. இரண்டு மூன்றுமுறை மாயாண்டியிடம் சொல்லிப்பார்த்தார். 'சரி' என்பார். குட்டியைக் கட்டுவதில்லை. பத்து நாளைக்கு முன் முதல்கல் விழந்தபோது வாலிபனுக்கு முதல்நரை கண்ணில் பட்டதும் ஏற்படும் . மனச்சங்கடம் ரெங்கசாமிக்கு. இதுமூன்றாவது கல். சங்கடம் சகஜமாகி வருகிறது., கல்லைத் தூக்கி வந்து கொட்டத்தின் மையத்தில் போட்டார். -
 தெருவில் நின்று சீரங்கு திம்மைய கௌடரை “ஏய் கெழவா வெளியவாடா, எங்க தாத்தா சொத்த கருட்டிக்கிடலாம்முன்னு பாக்கிறயா? எந்தக் கொம்பனாலும் முடியாதுப்பே. நோத்தாலோக்க ஒனக்குச் சாவு என்கையில தாண்டி" அப்பாவையும் தம்பி ரெங்கசாமியையும் திட்ட ஆரம்பித்தார். “கோழி கூப்புடுறதுக்குள்ள , தண்ணியப் போட்டுட்டு வந்திட்டான். வேலையெத்த நாயி. பொம்மக்கா மகனைத் திட்டினாள். ரெங்கசாமி "காலங்காத்தால வம்ப வெலைக்கி வாங்கலாமுன்னு இருக்கியா போ உள்ள" ரெங்கசாமி பதில் கொடுக்காமல் இருப்பதைப்பார்த்த தங்கம் "கையாலாகாத மனுசா" கையை நீட்டி சொல்லிவிட்டு உள்ளே போனாள்.

- 'இதுக்காக அவனோடு மல்லுக்கு நிக்கவா முடியும்? மொல்லமாறிபய ஊதி வாயில போட்டுட்டு வந்துட்டான் பேச்செழாமல் திட்டிக் கொண்டார். அவன் பாட்டுக்கு ஊழையிட்டுப் போறான். சடக்கென்று அந்தராத்மாவை குஞ்சம்மாள் நொரண்டியது கணக்கா இருந்தது. சீரங்கை தலைதூக்கிப் பார்க்காமல் உள்ளே போனார்.

என்னைக்குமில்லாத திருநாளா தலைவாசலில் பிளாஸ்டிக் டப்பாவில் தொங்கும் கெஞ்சலத்தை தொட்டுக்கொண்டிருக்கும் தட்டைக்குச்சியால் எடுத்து தலையைச் சுற்றிக் கொண்டான் தனகோபால். காயத்திரி பாவாடையை முழங்கால் தெரிய சுருட்டி இடுப்பில் சொருகி ஜலதாரியைச் சுத்தம் செய்தாள். மூத்தரவாடை கிளம்பும் நீர்த் தேக்கத்தை வௌக்குமாரை திருப்பிவைத்துக் கோதி, நீரை வெளியேற்றுவதில் இருந்தாள்.
தனகோபாலைவிட மூன்றுவயது மூத்தவள். +2 வகுப்பில் இங்கிலீஸ் போச்சு. அப்பா டுடோரியலுக்குப் போகச்சொன்னார். ஒரு பாடத்தை எழுதியிருந்தால் இந்த வருசம் காலேஜூக்குப் போயிருப்பாள். “ஆயிரம் மார்க் எடுத்திருவேன்பா. எப்படியும் மெடிக்கல் போகணும்பா” என்று கங்கணம்கட்டியது கலைந்து கொண்டது. கணக்கில் மட்டும் சொன்னபடி 198 மார்க். மற்றதில் குறைந்துவிட்டது. இயல்புகள் முன்தீர்மானங்களால் சிதைந்து போனது காயத்திரிக்கு அவமான மாகிவிட்டது. தன்னைவிடச் சுமாராக படித்தவர்கள் பாஸ் செய்து காலேஜூக்குப் போனபின் டுடோரியலுக்குப் போவது அசிங்கமாக இருந்தது

 சட்டென்று கமலா டீச்சர் ஞாபகம் வந்தது. ஒருவேளை சங்கீத கிளாசுக்கும் பரதகிளாசுக்கும் போகாது இருந்தால் பாஸ்செய்து இருக்கலாமோ? கூட்டுக்காரி ஸ்வாதிதான் வம்பா சேர்த்துவிட்டாள். கடைசியாக சேரும்போது ஏழாவது நபர். பள்ளிக் கூடத்திலேயே கர்நாடிக் சொல்லிக்கொடுக்க ஹெட்மிஸ் தனியாக ஹால் ஒதுக்கி இருந்தார். கமலா டீச்சர் ஸ்வரம் குறையா இருக்கப்படாதின்னு தெய்வம் அனுகிரகம் பண்ணியிருக்கார். ஸ்வரம் ஏழு கிடச்சிட்டது"ன்னு ஏழுபேரையும் ஏழு சுரங்களாக சட்டென்று எப்படி ஒப்பிட முடிஞ்சதன்னு காயத்திரிக்கு ஆச்சரியமாக இருந்தது. டீச்சருன்னா சும்மாவா. படிப்பைவிட சங்கீதத்தில் நாட்டம். அதுவும் அரைகுறையிலேயே நின்று விட்டது. சங்கீதத்துக்கின்னு அப்பா தனியா அனுப்பமாட்டார். பெயிலான எரிச்சலில் எந்தமண்ணும் வேணா மென்று விட்டுவிட்டாள். வீட்டில் போரடிக்க ஆரம்பிச்ச பின்னாடிதான் சங்கீதத்துக்காக விட்ட பாடத்தை எழுதிக் காலேஜ் 
* கோமியம் 
------------------- 
போயிருக்கலாமோ என்றுபட்டது. அப்பா சரியென்பார். டுட்டோரியலில் தன்னைப் பெயிலான பெண் என்று மற்றவர்கள் பார்க்கும் பார்வையை நினைத்தபோது அவமானமாக இருந்தது. அவள் காதுபட அது 'ஹெட்வெய்ட் கேஸ்' என்று திட்டுகிற கோஷ்டியும் ஸ்கூலில் இருந்தது. டீச்சர்களிடம் நல்லபேர். கமலா டீச்சரை ஒரு நாள் வீட்டுக்கு கூட்டி வந்திருந்தாள். வீட்டைப் பார்த்துவிட்டு அசந்து போய்விட்டார்.

"ஜமீந்தார் வீட்டு பிள்ளன்னு தெரியாதே" டைனிங் டேபிளைத் தொட்டுக்கொண்டு கேட்டாள். தங்கத்துக்கு சிரிப்பு. “பானை நல்ல பானைதான் வெறும் அகப்பையல்ல தூக்குனா வருது. இந்த வீட்டில இருக்கிறதே கஷ்டம்மா. எம் மக சொல்லுவா கலைக்க முடியாத ஒப்பனைகள்னு. அப்படித்தான் உலாவுறோம்". கமலா டீச்சருக்கு நெருடிவிட்டிருக்க வேண்டும். "ஸ்கூல்லையும் காயத்திரி காம் டைப்த்தான். ஆனா அசாத்தியமான வார்த்தைகள் அவளுக்கு எப்படியம்மா முளைக்குது மகளைப் பற்றிய உயர்வாகச் சொன்னபோது தங்கத்துக்குப் பெருமிதமாக இருந்தது. இதுக்கு என்ன சொல்வது? பாடப்புத்தகத்தைத் தொடாம வேற புத்தகங்களப் படிக்கிறதாலன்னு சொல்லலாமோ? "உங்களோடு சேர்ந்து காயத்திரி சைவமானதுதான் எங்களுக்கு வருத்தம்". தங்கம் வாய்விட்டுச் சிரித்தாள். “தேகத்துக்கு நல்லதின்னு அவ அப்பா சொல்றார் சாப்பிட மாட்டெங்கிறா'.

ஜன்னலைத் தங்கம் திறந்து விட்டாள். காம்பௌண்டு சுவருக்குள் களம். களத்தின் மத்தியில் கட்டிடக்கலையின் கம்பீரம். ஈசான மூலை எப்போதோ கிராதி கொணை உடைந்து பூசாமல் செங்கல் தெரிகிறது. எந்த அறையில் நின்று பார்த்தாலும் பூக்கள் குலுங்கும் ரம்மியம். பதக்க செயின் கழுத்தில் அமர்ந்தது மாதிரி. சவுக்குமரங்கள் களத்தைச் சூழும் மல்லிகை மணங்கள்.

“வீட்டுக்கு வேலக்காரங்க இருக்காங்களா' --- 

 “வீட்டுக்கா' 

தங்கம் எதோ சொல்ல வாய்திறக்க முன்னாடி கமலா டீச்சர்,  “காயத்திரிய பாக்க எனக்குச் சந்தோஷமா இருக்கு. இதுல பொறந்திட்டு எதையும் காட்டிக்காம இருக்க முடியுதேன்னு" - -

"உண்மையில சொல்லப்போனா ஆஸ்தியில்லாத வீட்டில நாங்க வெறும் கூலியாட்களா நடமாடுறோம். வாடகை வீடுமாதிரி. வாடகை வீடுன்னு சொல்லக்கூடாது. இந்த வீட்ட முடிஞ்சவரைக்கும் பராமருச்சுக்கோன்னு யாரோ வாடக இல்லாம எனாமா விட்டிட்டிருக்கிறது மாதிரி இருக்கு".
- அம்மா இப்படிப் பேசுவது காயத்திரிக்கி என்னமோபோல் இருந்தது. அந்தஸ்தை தேவையில்லாமல் கூறுபோட்டு சதையில்லாத வரட்டித் தோலை பிளந்து காட்டுவது கணக்கா இருந்தது. காட்டிக்காமல் அம்மா கொஞ்சம் டாம்பீகமாகவே நடந்திருக்கலாம். |

 'எவ்வளவு படிச்சிருக்கீங்க" -

'டீச்சர், அந்த காலத்து எஸ்.எஸ்.எல்.சி. என்று கண்சிமிட்டினாள் காயத்திரி

'எல்லோரும் அவங்கவங்க வீட்ட காலி செஞ்சிட்டு போகத்தானே போறோம்"

 "சரிதான். ஆனா கஷ்ட்டம்மன்னா கூரைக்கி கீழ மட்டும் இல்ல. பொய்யான எங்க வாழ்க்கைக்குள்ளயும் இருக்கலாமில்லையா? பொய்யா வாழ்ந்திட்டு நாங்க ஒவ்வொருத்தரா எடத்த காலிபண்ணிக்கிறதில்ல என்ன அர்த்தமிருக்கு? நிஜமா வாழ இந்த வீடு பெரிய தடையின்னுதான் சொல்லுவேன். அதுக்காக இதத் தூக்கி எறிஞ்சிட்டும் எங்க போயிட முடியும்? ஏதோ கொஞ்சம் தோட்டந்தொரவு இருக்கு. இதுல இருந்து கிட்டுத்தான் வாழ வேண்டியிருக்கு'

. " அம்மா தொனியே தனி. சின்னபிள்ளகிட்ட சின்னப்பிள்ளையா பேசும். செல்லத்தாயிகிட்ட விவசாய நுணுக்கத்த சொல்லி சண்ட போடும். அப்பாவ பாத்தா அதிகம் பேசாது. ஒரு புன்முறுவல். அது அப்பாவுக்காக அம்மா வைத்திருக்கும் சிரிப்பு. என்கிட்ட, அண்ணா , தம்பி, பத்மாகிட்ட மண்டையில எதும்மில்லாது மாதிரி சின்னபிள்ளையாட்டமா பேசும். சிரிக்கும். அதுதான் எல்லா தாய்க்குமா? முக்கியமான ஆளுகிட்ட ஒக்காந்து பேசும்போது தினுசே மாறிடுது. இதையெல்லாம் அம்மா எப்படி கத்துக்கிட்டது?

கமலா டீச்சர் வீட்டையெல்லாம் சுத்திப்பார்த்தார். சின்ன வயசில் தங்கம் 'குப் கைவைத்த சட்டையில் பிடித்த போட்டோ டீச்சருக்கு பிடித்துவிட்டது. அந்தகாலத்துப் பேசன். இப்ப இருக்க காயத்திரி மாதிரியென்னு சொல்லலாம். ஒற்றை நாமம் போட்டதைப் போட்டோவில்தான் பார்த்திருக்கிறாள். இப்போது எல்லாம் வட்டக் குங்குமம்

அதுக்கப்பறம் கமலா டீச்சர் இரண்டுமுறை மெனக்கெட்டு அவர்கள் ஊரிலிருந்து வந்துபோனார். சங்கீதகிளாசில் ஆரம்ப நாளில் காயத்திரியிடம் பேசியது தலைகீழானது. தோழிபோல நெருக்கமா பழகினதால் படிக்காமல் சங்கீதம் அது இதுன்னு பரிட்சையில் கோட்டையா? கமலா டீச்சர் தன் வீட்டுக்கு அழைத்துப் போனதிலி ருந்தா? அந்த புத்தகத் தட்டுக்கள்! இப்படியாக்கி விட்டதா? டீச்சரின் ஒல்லியான அப்பா கமலா மேடத்துக்கு கிரியா ஊக்கி. இவளுக்கு டீச்சரா? அப்படியென்றால் பெயிலாகி இருக்கக்கூடாதே! 

எப்படியிருந்தாலும் பெயில் பெயில்தான். டோட்டல் மார்க் 886, எடுத்த விரல்கள் ஜலதாரியைச் சுத்தம் செய்கின்றன. காயத்திரி சின்னவளாக இருந்தபோது வீட்டு வேலைகள் செய்ய ஒரு உருவம் வரும் மங்கலான நினைவு.
* * *

பெரியவன் அசோக்குமார் எம்ளாய்மெண்டில் பதிந்துவிட்டு ஒரு வருசமாக ஊரைச் சுற்றி கொண்டு இருக்கிறான். தனகோபால் சுதார்ப்புத்தான் என்றாலும் பத்தாம் வகுப்பு பாஸ் செய்யணுமே பிட்டை நம்பலாமா? தரிசாகிடுமா? என்பதில் தயக்கம். இன்னும் சரியான பயிற்சி வரவில்லை. மரியாதையா கடம் போட்டுர்ரருது நல்லது என்று தோன்றும். சைக்கிளை இறக்கி ஸ்டாண்ட்போட்டான். சீரங்கு பெரியப்பா தெருவில் இல்லை. வீட்டுக்குப் பின் உள்ள கொட்டா சுற்று கைப்பிடிச்சுவருக்குள் நுழைந்தான். தீவனம் போட வந்ததாக நினைத்து மாடுகள் எழுந்துநின்று சாணி போட்டன. வாயைக் கொப்புளிக்க தொட்டியில் நீர் அள்ளி 'கொலகொல கொலகொல' ஆகாயத்தைப் பார்த்து வாயில் ஒலியெழுப்பி துப்பினான். தாத்தி சேலையை அலாக்காத் தூக்கி நின்றவண்ணம் முன்சாய்ந்து ஒண்ணுக்கு அடித்தாள். காலை எவ்வளவு அகட்டி வைத்திருந்தாலும் காலில் மூத்தரம் சரிந்துபோனது. பொம்மக்கா பேரனைப் பார்க்கவில்லை. பெல் அடித்துப்பார்த்ததும் தனகோபால்சைக்கிள் ஸ்கூலுக்கு ஆயத்தமானது. டொக் டொக் டொக் மூன்று முறை பெடலை அடித்து பூமியை உந்தி வலதுகாலைத் தூக்கிப் போட்டான்.
****


. சௌடம்மா மரக்காலில் தவிட்டை பசுவுக்கு அள்ளிக் கொண்டிருந்தாள். திம்மைய கௌடர் நினைவு வந்ததும் மரக்காலை வைத்துவிட்டு சாப்பாட்டுத் தட்டை (வெங்கல தாம்பாளத்தில்தான் சாப்பிடுவது) எடுத்துக்கொண்டு வெளிவராந்தா நாகக்கல்தூணில் சாய்ந்திருப்பவருக்கு கொண்டுபோய் வைத்தாள். ரெங்கசாமியைப் பார்த்ததும் ஞாபகம் வந்தவளாய், "அண்ணா யாரோ விக்னேஷ்னு மதுரையிலிருந்து லெட்டர் வந்ததே பதில் போட்டீங்களா போடணும்' என்று மட்டும் சொல்லிவிட்டு சாப்பிட்டார். பொம்மக்கா பாட்டி படியில் அமர்ந்து கையுரலில் வெத்தலை இடித்தாள்.

- உள்ளே அசோக்குமார் ஐந்து ரூபாய் கேட்டுக்கொண்டு இருந்தான். தங்கம் "நீ இருந்தா கொடுடா" என்றாள். ரெங்கசாமி உள் வராந்தாவைத்தாண்டி நுழைந்ததும், அசோக் காம்ராரூம்புக்கு அடுத்த ரூம்புக்கு வந்தான். ரஜினி பிறந்தநாள் விழாவுக்கு பெனேசன் எழுதியது உறுத்தியது. காசில்லையென்றால் கோஷ்டிக விடமாட்டேனென்று "மொதல்ல எழுது. அப்புறமா கொடு" என்று. மடக்கிவிட்டார்கள். . எழுதும்போதே "காரவீட்டுக்காரன் அதெல்லாம் இருபதுரூபா எழுதுவாண்டா" சூழ்ந்துகொண்டு சொல்லியபோது பத்துரூபாய் எழுதலாம் என்றுதான் தோன்றியது. எழுதிவிட்டு பிறந்தநாள் முடியுந்தண்டியும் ஒழிந்து ஓடனும். கை ஐந்தையே எழுதிவிட்டது. சௌடம்மா அத்தை நெரக்கையைக் குஞ்சமாக்கி நோண்டியவண்ணம் நின்றான். அப்பா இருப்பதை ஜாடைகாட்டி “அப்பறமா வாடா” என்றாள். ஒரு தொல்லைவிட்டது கணக்காதான். அத்தை சொன்னால் பேச்சுமாறாது.

-- தெருவில் இறங்கியதும் எதுத்தவீட்டு கூரையில் காகத்தின் கால்களுக்கிடையில் குச்குச் சென்று கோழிகுஞ்சு போராடியது. எதிர்த்துத்தாக்க முடியாது பரிதாபகரமான மரணத்தில் ஜீவிக்க கெஞ்சும் இரங்கல். கோழி பத்தடிபறந்து அந்தளவு திரும்பி மீதி குஞ்சுகளை அணைக்க ஓடியிருக்கும். இந்த நினைப்பே இல்லாமல் எங்கோ குப்பைமேட்டில் கிளறிகொண்டிருக்கும். அசோக் 'ஹோய்' என்று கல் எறிவதுபோல் வெறுங்கையால் அமட்டினான். 'இந்த ஏச்சுக் கெல்லாம் வேற ஆளப்பாரு' என்பதுபோல் கொத்தி ரணப்படுத்தியது. கல்லைத்தேடி ரெண்டு எட்டுவைத்து எடுத்து எறியப்போனான். குஞ்சுதலை கூரையிலிருந்து உருண்டுவந்து விழுந்தது. முண்டத்தை கவ்விக்கொண்டு பறந்தது. தப்பித்திருந்தால் கோழியாகவோ சேவலாகவோ நடமாடும். செத்தையைக் காற்று உருட்டிக்கொண்டு நகர்த்தியது.

ஊர் எல்லையைத்தாண்டி அலங்கோலமாக வேட்டி ஒதுங்கி சாக்கடை பக்கத்தில் சீரங்கு மல்லாக்கப்படுத்திருந்தார். வாந்தி எடுத்ததில் கணங்கை, சட்டையெல்லாம் ஆயிவிட்டிருந்தது. ஜீரணிக்காத சோற்றுப் பருக்கைகளில் ஈக்கள் மொய்த்தன. சாக்கடைவாடையும், சாராயவாடையும் சீரங்குக்கு சொகமாக இருக்கும் போல். குரட்டை ஒலி கிளம்பியது, ராஜாங்கம் வீட்டுச் செவலைநாய் பொத்தினாப்பில் தொங்கோட்டமாய் வந்தது. பின்னங்கால்கள் மணலைபறித்து எறிந்து காலைத்தூக்கியது. செல்லத்தாயி குடத்தை வைத்துவிட்டு சே! சே! அமட்டியபோதே சொருக் சொருக் பீச்சிவிட்டது. "அந்தஸ்த்தான குடும்பத்தில் பொறந்து இப்படியா? இன்னாச்சிரம் புத்தி வருமா' நாயை விரட்டினாள். கொர்' என்று சொல்லிவிட்டுப்போனது. சீரங்கு அலங்க மலங்க கண்ணைத் திறந்து “இந்த மழைக்கெல்லாம் ஏமாறமாட்டேன்" மேல பார்த்து சொல்லிவிட்டு கண்ணை மூடி 'உப்புமழை தூ துப்பினார்.

5 செல்லத்தாயிடம் கேள்விப்பட்டு அசோக் போய்ப்பார்த்தான். தூக்கி நிறுத்த முடியவில்லை. ஜவுக்குலாக தொங்கினார் சீரங்கு. எத்தனை பேர்? எத்தனை நாள்? தொடரும் பழக்கம் முடியாமல் போகிறது.ஆரம்பத்தில் தோட்டத்துச்செவ குடித்துவிட்டு படுத்திருப்பவரை அனுதாபப்பட்டு வீட்டுக்குக் கொண்டுவந்தனர். எரிச்சல் மேலிட அங்கன அங்கன - பார்த்தாலும் விட்டுவிட்டு வந்து விடுகின்றனர். மிகப் பெரிய 
* பின்கோசம்
-------------------

ஆலமரத்தின் ஒவ்வொரு விழுதுகளும் ஒவ்வொரு விதம். தரையைத் தொடாமல் சில அந்தரத்திலே சுருண்டு கொண்டவை. அடிமரத்தின் தொடர்பறுந்து விழுதில் நிற்கும் கிளைமரம். இப்படியாகிப்போயின.

வீருமாரம்மாள் கோயில் வீதிவழியே தாங்கிக்கொண்டுபோவதில் சங்கடம். நித்தியா பார்க்காமல் இருக்கவேண்டும். அதே தெருவில் அசோக்கின் சிநேகிதன் முரளி வருகிறான். நித்தியா வீட்டைக் கடந்ததும் சலனம் விட்டது. அவள் இந்த நேரத்தில் பார்க்காதது கௌரவ குறைச்சல் தவிர்க்கப்பட்டதாக மேலெழும்பியது. முச்சைத் திரும்பியதும் வடக்குப்பார்த்த மொதவீடு சீரங்குபெரியப்பா வீடு. பொதுசுவருக்கு அடுத்து மூத்தபெரியப்பா போரைய கௌடர். அவரை மட்டுமே ஜாதி பெயரை ஊரார் சேர்த்துச் சொல்கின்றனர். அசோக் அப்பாவையும், சீரங்குபெரியப்பாவையும் பெயர் சொல்லி அழைத்தாலும் காரவீட்டு வளசல் என்ற பெயர் இன்னமும் மக்களிடம் நிலைக்கிறது. கால மாற்றத்தில் பெயரில் வாலாகத்தொங்கும் ஜாதி, குரங்கின் உருமாற்றத்தில் உதிர்ந்து மனிதக்குரங்காக இருக்கிறது, காரவீட்டு வாசலில் கிழடுகளின் காலம் வரைக்கும் உச்சரிக்கப்படும். வாலிப் பட்டாளங்களுக்கு அசோக் வீடு என்றால்தான் புரியும்.

+ முக்கைத் திரும்பியதும் முரளி நின்று கொண்டிருப்பது தெரிந்தது. கைகோர்த்துக்கொண்டனர். சீரங்கு என்றால் புதுவை வைத்திலிங்கம் சாயல். வைத்தியலிங்கத்தைவிட சற்று உயரம். குடித்து குடித்து வயிறு வக்கி மிக லேசாக கூன் விழுந்ததுபோல் தோற்றம். சித்திரை வந்தால் ஐம்பத்துநாலு நிறைவு. கடவாய்ப்பற்கள் இரண்டு பக்கமும் விழுந்துவிட்டன. பொம்மக்கா தாத்தி "எங்கள சீரழிக்கவே சித்திரையில பொறந்திருக்கான்" என்று பிறப்பின் அனுகூலங்கள் மேல் பாரத்தைப்போடுவாள். வயதில் திம்மைய கௌடருக்கு சீரங்குதான் காரியக்காரன் என்று அனுமானம் இருந்தது. மூத்தவன் போரையா மதிலைத்தாண்டுவதில் பொறுப்பில்லாமல் அலைந்தவன். இவர்கள் விசயத்தில் திம்மைய கௌடரின் அனுமானம் தலைகீழாக தொங்குகிறது. சீரங்கு ஒருவர்தான் அந்தக்காலத்தில் பியூசி. வரை போனவர். ஊருக்குள் முதல் ஆளாக காலேஜ்படியை மிதித்தவன். வெளியில் கடுப்பேற்றினாலும் உள்ளுக்குள் சீரங்கு பற்றிய இளமையின் பசுமை அவருக்குள் அசைந்துகொண்டிருக்கும் தென்றல். காய்ந்து சருகாகிப் போனது. அவருக்கு மட்டும் கனவு போலத்தான் இன்னமும் தோற்றம் தருகிறது.

Sunday, November 24, 2019

தைலமண் சீலைப் பதுமைகள் - கோணங்கி

நன்றி :: சிலேட் சிறற்றிதழ்
________________

கோணங்கி தைலமண் சீலைப் பதுமைகள்
[வெளிவரவிருக்கும் கோணங்கியின் மூன்றாவது நாவலான, 'தீ நீர்' இலிருந்து சில பக்கங்கள் )________________

பென்சில் கால்களால் காகிதத்தில் சுவர்களில் வட்டம் போடுவான். சிறு வயதிலிருந்தே பழக்கப்பட்டிருந்த அவனுக்காகச் சீக்கிரமாக அப்பாவின் ஸ்பின்னர் வேலையில் கிடைத்த காடாவைக் கிழிக்கத் தொடங்கினார்.

 வரையாததை வைப்பது நடந்திருக்கிறது, வரைவதில் இயற்கை இருக்கிறதா. குசவர் வீட்டு முற்றத்தில் குத்துக்கால் வைத்து திகிரி சுழல்வதை அமர்ந்துப் பார்ப்பான். நடு மையத்தில் பிசைந்த களிமண் பாண்டமாக மாறும் தருணத்தில் சீலைத்துணியால் வருடுவார். ஈரமும் சேர்க்களியும் ஊறியத் துணியைத் திருடி வந்து பதுமை ஒன்றைப் படைத்துவிட்டான். அதைக் காண வந்த தெருக்காரர்கள் அதிசயித்தார்கள். பள்ளி ஆசிரியர் இதைக் கண்டு உருப்படாத வேலை, ஒழுங்காகப் படி என்றார். 

வரைவதைத் தொடர்வதில் மாறிவரும் பதுமைகள் சாயலில் மாறவில்லை. வரைந்து கொண்டு இருப்பதில் இருந்து மெல்ல முடிவுக்கு வரும்பொழுது தோல்வியின் வழியாகக் கலை கூடிவராத அவஸ்தையில் தடுமாறி நிற்கும் காலத்தில் அப்பாவின் கை முறிந்ததை ஒட்ட வைத்துவிட்ட மருத்துவரின் சிகிச்சையில் இருந்து வரையப்பட்ட ஓவியத்தில் சமநிலையாகிவிடும் தன்மையிருப்பதில்லை 

முந்திய கேன்வாஸின் நிறங்கள் எல்லாம் தலை கீழாய்க் கவிழ்ந்துவிட்ட அப்பாவின் முகத்தில் உள்ள திகிலும் நம்பிக்கையின்மையும் மெல்ல தைல ஓவியத்தில் புகுந்துவிட்டதில் வரைந்து கொண்டிருப்பதை நிறுத்தினான். 

டை கட்டி சூட் அணிந்த தொழில்நுட்பத்திற்குக் காலம் தொலைவு செயல் குறித்த அட்டவணைகள் நரித்தடத்தில் அமைக்கப்பட்டிருக்கின்றன. அந்தப் பக்கமும் அவனுக்கு இந்த வயதும் பிளவுண்டிருந்தது. நிராயுதபாணியாய்க் காட்டில் அலைந்தபோது பாடும் காதல் அங்கு நிறங்களாக விரிந்து கிடந்தது. அதன் ரகஸிய இருளில் ஒளிந்தான். ஆதலால் ஆக்ரோஷமாக ஒரு பெரும் அதீதப்பசுமையால் விரட்டப்பட்டபோதும் அவனைச் சூழ்ந்துகொண்ட பட்சிகளின் ஒலிக்கலவையில் வறண்ட நிற மண் ஓடியது. 

எல்லாச் சர்ப்பங்களின் புன்னகையைக் கொண்டிருந்த சாரையின் முத்தத்தில் புதிர் அடைந்தான். சாரையின் மோனத்தை மண்சீலைப் பதுமையாக்கினான். தூக்கத்தை இழந்த இரவுகள் அவை. நறுக்கிய துணித் துண்டுகளால் தைக்கப்பட்ட உடல் சாரையின் மிதமிஞ்சிய இச்சைக்குள் காட்டு இலைகளை ஒட்டி வைத்தான். காஞ்சரங் கிளைகளை ஒடித்து உடலைக் கிழித்து உள் உறுப்புகளைப் பொருத்தினான். சில நேரம் மண்சீலையைச் சகதியில் நனைத்து கீறல் விடும் சிலையை ஒட்டினான். இரவில் அவள் வெப்ப ரத்தப் பிறவியாகி வெளியில் அலைகிறாள். பாம்புகளின் சுருள் மூச்சைத் தேடி நள்ளிரவு நேரத்தில் படுக்கையிலிருந்த சிலை விசும்பி எழுவதைக் கண்டான். சிலையின் முகம் மட்டிச் சாயத்தால் மெழுகப்பட்டிருந்தது. அவன் அறைக்குள் வந்தவர்கள் மேஜை மேல் நிற்கும் சாரையை உச்சபட்சக்கலை இதுவென நோக்கி ஏங்கினர். அவளைப் பற்றி நினைத்துக்கொண்டே சென்றவர்களைப் பீடிக்கிறாள் கனவாக கோடை காலத்தில் மண்உடல் கீறல் விடத் தொடங்கியது. வெப்பக் காடுகளை இருப்பிடமாகக் கொள்ளும் சாரையின் இயற்கையில் ஆழ்ந்திருந்தான். அவளைத் தொடும்போது சிலையில் ஏதோ சப்தம். அவனில்லாத அறைக்கு வரும் அப்பாவின் காதலியாக அவளிருப்பதை உணரவில்லை அவன். உள்மாடிக்கு ஏறிப் போகிற படிகளில் அமர்ந்து இருட்டில் சமைந்திருக்கிறாள். 

நிறங்கள் ஏதும் கைக்கு வரவில்லை. 'சீலே'யிடம் ஈர்க்கப்பட்ட அசைவுகள் அவனைக் கவிழ்த்தும் பொழுது கேன்வாஸிலிருந்து வெளியேறினான். உருவங்களை அகற்ற முடியவில்லை. உருவற்ற கேன்வாஸில் அமைந்திருக்கும் ஓவியத்தைத் தொடுவதற்கு முன் வரையத் தொடங்குகிறான். நிறங்களை உறுப்புகள் இயக்கமாக ஈர்த்துக்கொள்ளாத வரை நரம்புகள் உருவப்பட்ட நடுக்கத்தில் செயல் இழந்த கை விரல்கள் பச்சை நிறம் பூசுவதற்குள் வரையப்படாத ஓவியம் கேன்வாஸில் இருக்கிறது. பருத்தித் துணி மிகை உற்பத்தியான மில்லில் அப்பாவின் கை சுரணையற்று இயங்கிக்கொண்டிருந்தது. 

ஸ்மரணை இழந்தபோது அவனும் ஓவியத்தில் இருந்து வீழ்ந்திருந்தான். சேன்வாஸால் சுற்றப்பட்ட அப்பாவின் கை நசுங்கி ரத்த நாளங்களில் உறைந்த ரத்தம் திடீர் என்று ஓடத் தொடங்கிய கணம் வரையப்படாத ஓவியம் அவனைக் கடந்து செல்கிறது. அறையை விட்டு வெளியேற முடியவில்லை . 

பச்சை நரசிங்கத்தின் வெடிப்பில் இருந்து ஒரு கணம் தோன்ற அதனுள் அகப்படாத கரும்பச்சை அகம் நீர்ப்பாசி கடல் நிற உடலிகள் சுவர் ஓட்டிப் பாசைத் தாவரங்களில் இருந்து எழுந்த சிங்க உருவம் அது. எதிலிருந்தும் காணாத பாசை நிறம் வரையப்படாத ஓவியத்தில் கீழே பேலட்டில் நிறங்களின் நடனம் ஒன்றைக் கரைத்து இன்னொன்றாய் மாறும் வெண்ணிற ஆவி நிறங்களை விரட்டும் தூரத்தில் எதுவும் வரையப்படவில்லை. பச்சை ஆங்காரம் செதில் மணலாய் பேய்மை உருக்கொண்டு அண்ணாந்து பார்க்க வெளிர் பசும் அதிமிருகம் கூந்தலில் மறைந்திருக்கும் தேவதையை நிர்வாணி வரைந்து கொண்டிருந்தான். செந்நிற நிர்வாணம் செடிகள் அடர்ந்து பௌத்திரத்தின் முன் கீறலில் வெளிவந்த பச்சை அரவுகள் மேல் நழுவி ஏறி கருநிறத்தில் உச்சி வகிட்டைப் பிளந்து வேற்று கிரகத்துக்குச் செல்லும் வழி. 

பாசி ஒளிர் பூனை சிரிக்கவில்லை வரையப்படாததை கேன்வாஸில் இருக்கிறார்கள். விரல்களைப் பற்றி இருந்த தூரிகை நுனியில் அணில் ஒன்று சீலைப் பதுமை உடலில் கனியைக் கரும்பும் கணம் தவற விட்டவன் வரைந்துகொண்டு இருக்கிறான். ஒரு மரக்கிளை முறிந்த வேகத்தில் அப்பாவின் கை பச்சையாகி நிறங்களைக் கக்கும் போது உள்ளே தவழ்ந்து கொண்டிருந்தான். அவனது முடிவும் அங்கு இருந்தது. வரைவதை நிறுத்திக்கொண்ட பின் எல்லாம் இருண்டு வர ஒரு புள்ளி வெளிச்சத்தில் உருவங்கள் அற்ற கேன்வாஸில் அது நகர்ந்துகொண்டிருப்பதைப் பார்ப்பான். 

நிறம் அற்ற ஒன்று வெளிறிய முளைப்பாரிப் பசுமையில் ஒலியுடன் அந்த நிறம் அற்ற ஒன்று மணல் வடிவம் என்பதைக் கையை விட்டுக் கடந்து கொண்டு இருப்பதை உணர்கிறான். இயக்கம் இழந்த அவனது ஒரு கை முழுவதும் மணல் ஆக மெதுவாய் அலையும் சிறகுகளைக் கொண்டு இருப்பதை ஜன்னலில் பார்த்தான். ஒரு சிறகில் இருந்து மறு சிறகு தோன்றுவதற்குள் வரையப்படாத ஓவியம் இருக்கிறது. புரியாத வளைவுகள் துக்கத்தின் இமை மடிப்புகள் அரவுகளின் மூச்சில் அசையும் வளைவின் பார்வை கொண்ட விலங்கின் துக்கம் கருப்பு மை இருபாசியாய் வெண்கலச் சிலையின் விழிகளைத் திறக்க பேலட்டில் நிறம் பகிரும் விழிச்சுடரில் மணலாகவும் அலையலையாய் மடிந்து வருவது யார். 

காற்றுக்குள் பச்சை விநோத மிருகம் கேன்வாஸைப் பிளந்து இறங்கியது. வயலட் பூ ஒன்று அப்பாவின் கை பட்டு நடுங்குகிறது. அப்பாவின் விரல்களுக்கிடையில் நடுங்கும் சிகரெட் சுற்றிப் பரவிய புகை அரவினால் சுற்றப்பட்ட அப்பாவின் உடல். 

பஞ்சு மில்லில் திணிக்கப்பட்டு அப்பாவின் கை வெண்ணிற இழைகளாய் எங்கே செல்கிறது. அந்தி மயங்கிவரும் சாயந்திரத்தில் அவ்விழைகள் மறைகின்றன. அவர் விரல்களில் உள்ள வெளிச்சம் இழைகளைப் பார்த்துவிடும் நூல் அதிர்வில் ஒரு கேன்வாஸை நெய்துகொண்டு இருந்த கணம் அந்த மிருகம் தன்னை வரைந்து கொண்டதும் கேன்வாஸை அப்பாவின் உடம்பில் இருந்து உரித்துக்கொண்டிருந்தான். அவர் மீதே வரையுமாறு சொல்லிவிட்டு வெளியே போய்விட்டார். அப்பாவின் உடம்பில் ஒரு பருத்தித் துணி எம்போரியமே கட்டப்பட்டிருந்தது. உரிக்கப்பட்ட தந்தையின் உடலைப் பவளப்பூச்சிகள் குடைந்து அவன் விரல்களைச் சுற்றிக்கெயாள சீல் மீன்களின் நச்சுப்பைகளில் பவளநிறத்தை வெட்டி முகம் பூசிய காதலி அவன் நிர்வாணத்தில் மறைகிறாள். அவள் கூந்தலுடன் தேரிமணலைப் பூசுகிறான். மணல் மகுடியில் மேடுகள் அவள் உடலாக இயக்கம் கொள்ள கருப்பும் செந்நிறத்தில் புகுந்து உரசும் மணல் நாடகம். 

கந்தலாக்கப்பட்ட வயலட் கோட் மறுபக்கம் இல்லாதது. இன்னொரு பக்கம் நிர்வாண ஒவியன் வரையப்படாததின் மீது வேப்பங்குச்சியால் தொடும்போது காணாமல் போன இலைகள் கேன்வாஸில் உதிர்ந்ததும் பழங்குடிப் பெண்ணின் கண்வடிவம் பெற்றன வேம்பின் இலைகள். 

பசுமைச்சாறு கசிய நாக்கால் வளைத்து உதடுகளை நெளித்து மெல்லும் ரஸத்தை வரையப்படாத சிலையில் சக்கிப் பூசுகிறாள். நாக்கில் காதர் காக்கும் பரப்பில் வரையப்படாத சித்திரத்தில் சடங்கியல் கோடுகளை சுவரில் விடுகிறாள் மழைத் திவலைகள் வடுக்களாய், அவள் கோடுகளில் இறங்கி பற்றிவிடும். மண் சீலையெங்கும் நாக்கால் நக்கிச் சுடரும் பதுமையில் மந்திரிக்கப்பட்ட நாயின் பிலாக்கணம். இரவு வருகிறது குலவை ஒலி. வட்டம் உருள்கிற தீ வளையம். காலால் மிதித்தழித்த கட்டங்களுக்குள் கரை உடைந்த கிளித்தட்டில் ஒடும் பாடல், சலங்கைகள் ஒலிக்க தூக்கிய கோணி சுற்றும் உருவங்களின் சாயல் வெளிச்சம் பட்டு எழுகின்றன. மெல்ல காற்று ஊத களிமண் பூசிய படுதாவில் சுண்ணாம்பால் வரைந்த ஆதிமுகங்கள். 

மறுபக்கம் இல்லாத அப்பாவின் கோட்டில் நிர்வாண ஓவியன் பயந்துகொண்டு இருந்ததை நிறுத்தினான். வயலட் பரப்பில் கரப்பான் பூச்சிகளின் சந்திப்பு தேனீர் பருகும் சடங்கு அறை மூலைகளில் அங்கும் இங்கும் பதுங்கியுள்ள குட்டிக் கதைகளாக இவை ஊர்ந்து வரும். கரப்பான் பூச்சியின் நிழல் உள்ள அறையில் செல்வம் கூடிவரும் என்பது முதிய வாக்கு அவை சேன்வாஸில் பரவிய மீசையை அசைத்து வெட்டும் உருவம் சித்திரமாகி வரும். அதற்கு அடிமைப்பட்ட வீடுகளில் இருட்டும் நிலா வெளிச்சமும் அபூர்வமானவை. ஓட்டடுக்கு வீடுகளாய் இருந்து விட்டால் குழந்தைகள் அஞ்சினாலும் மிக முதிய கனவை அடைவார்கள். 

கரப்பான் பூச்சி வருவது ஓவியத்தில் தோன்றிவிடும். அதன் ஈச்சம்பழ நிறமும் இருட்டும் அவ்வீட்டை தனிமையில் ஆழ்த்துகின்றன. அடுப்படியில் அவன் பதுக்கி வைத்த ஆரம்பகால ஆல்பத்தை அம்மா சொல்லியும் கேட்காமல் கரப்பான் பூச்சி இருப்புக்கும் சந்ததிகளுக்கும் விட்டுவைத்தான். 

மின்னல் பொழுதில் இப்பூச்சியைக் கண்ட ஓவியம் அங்கு படிகிறது ஒரு கணமாக வெகுநேரம் பதுங்கியுள்ள மின்னல் அடியில் வரையப்படாத ஓவியம்தான் தூரிகை. காலம் ஊடுருவி நிறங்களை மாற்றும் பாதையில் ஓவியனின் மண்சீலைப் பதுமைகளின் நகரம் சிதைந்துகொண்டு இருந்தது. ஒவ்வொரு வீடாகக் கரப்பான் பூச்சியாகத் தப்பிச் செல்கிறான். தற்கொலை செய்துகொண்டவனின் அறையின் மூலைகளில் களிம்பு டப்பிகள், சைபால், தூக்க மாத்திரைகள், தைல வர்ண ட்யூப்கள் நெளிந்து பிதுங்கி சுவர்களில் கசிந்து கொண்டிருந்த பரப்பில் கரப்பானின் கால்கள் வரைந்த சித்திரத்தினை இவன் பூர்த்தி செய்கிறான். 

வெப்பத்தில் பதுங்கி வாடிக்கொண்டிருந்த கோடை காலத்தில் தவித்து நோயின் இருட்டுப் படிந்த ஓவியம் அவன் உடலிலிருந்து உரிக்கப்பட்டு இருந்தது. வட்டமும் நீளமும் வேறு உறுப்புகளுமாகத் திரிந்துகொண்டிருக்கும் வரையப்படாத கேன்வாஸில் அவன் அறையில் இருப்பதில் மறைவதற்கான கணம் அவன் விரல்கள் இயங்கிக்கொண்டிருப்பதில் சாவின் நிழல் படாத ஓவியம் அவன் என்பதில் சந்தேகம் இல்லை | 

ஆனால் அவன் மதுக்கோப்பை அடியில் விஷம் தங்கியிருந்தது. அதைப் பருகாமலே கேன்வாசில் நகர்ந்த நிறத்தில், விஷம் பருகியவனின் உருவத்தை வரைந்து விட்டான். உடல் நீலம் பாரித்து விழிகள் சொருகிவிட்டன. கழுத்தின் அடியில் கயிறு பட்ட இடம் மெல்லிய தொலி உரிந்து தானே நழுவி அலையாக சுற்றி துணிச் சிற்பம் எனவும் அவன் இல்லாதபொழுது அறைக்கு வருகிற இன்னொரு அவனாகத் துணிச்சிற்பம் திரித்துக்கொண்டு இருந்தது. 

துணிச்சிற்பம் கால ஓட்டத்தில் பெயர் அற்றவனாகிவிடுகிறது. உப்பு விடுதியில் இருந்த அம்மாவைப் பார்க்க பெயரற்றவன் வருகிறான். அவள் விரல்களால் தழுவும் போது வடிவம் அடைந்த ஒளி வருடங்கள் சரியும் சிலையாகிவிடுகிறான். 

அவனுக்கு அடியில் புதைந்து கொண்டிருக்கும் நகரத்தில் பாலிய பருவத்தை உரித்துக் கொண்ட ஸ்நேகிதி சாரை வயலட் சிறுத்தை மீது வருகிறாள். நிறங்களின் மூலமே காமத்தை நுகர்பவன். அவன் துணிச்சிற்பம் செல்லும் இடங்களுக்கு வந்து சேருகிறாள். 

மரச்சட்டகங்களில் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட தைல ஓவியங்களைச் சமையல் அறையில் வைத்து அவளையும் பூட்டியிருந்தான். அவளுக்குத் தெரியாமல் நகரத்தில் இருந்த மற்ற அறைகளில் அவளது சிநேகிதனை மறைத்து இருந்தான். கேன்வாஸில் வரையப்படாதது அவள் சினேகிதனிடம் அந்தரங்கம் கொள்வதில் இச்சை கொள்கிறான். மூவருக்குமான நகர்வில் மண் சீலையை உடம்பில் சுற்றி சேத்தாண்டி வேடமிட்டு களிமண் ஓவியமாகிறார்கள் ஒரு படைப்பில். அவள் அவன் இவன் விரல்கள் முக்கூட்டாய் தங்கள் மீதே கதையும் கண்ணுக்குள் வட்டமாகச் செல்லும் சினேகிதியும் வேறு காலத்தில் தோன்றி மறை கிறார்கள் இருப்பை விட்டு. வரையப்படாத சிநேகிதனின் வெளி நிறமற்றதாகிவிடும். வந்துவிடுகிறாள் அவன் சாயையில் நகரும் பூச்சியில் ஸ்பரிசப்படும் மண்சீலையில் பெண்மையின் தேகவெளி. 

வரையப்படாதவனின் வெற்றிடத்தில் இருவர் தோளிலும் சாய்ந்திருக்கும் வெளியைத் தொடும் போது குருதிக்குள் நகரும் வயலட் சிறுத்தையில் சுரோணிதக் கல் பொருந்திய பிறப்பிடத்தில் சூல் கொண்ட சிசு மறைந்திருக்கிறது. . 

ஸ்திரீபாவம் கண்ணாடியில் இருப்பதில் எதிர்நிற்கிறான். இவன் சருமத்துக்குள் வளைந்த ஆடிகள் குறுக்கிட்டுச் சேர அவள் அவன் உரு படிகிறது. இருவர் இல்லாமல் மூவராகும் உரையாடல் கோப்பைகளில் 2 தநீர் ஆவி பறக்க ஒரு கோப்பை மூவர் 2 உதடுகளில் சென்று வெவ்வேறு ஒலிகளில் ருசிக்கிறார்கள். இச்சையின் ஜன்னல் குடும்பத்தின் வடிவத்திலிருந்து வெளியில் உளவு பார்க்கும் கண்களை மறைத்தவாறு பெயர்ந்து உள்ளே வருகிறது. 

இச்சையின் சருகிலை உதிர்கிறது மெல்லப் பறந்து ஜன்னலில் நுழைந்ததும் கண்ணாடித் தளத்தில் மிதக்கிறது. வயலட் சிறுத்தையின் சுரோணிதக் கல்லை அவ்விலை மூடி ஒளிர்கிறது யுகங்களில் பட்டு. பலபக்க யோனியுடன் மரமாகிவிடும் அவனுக்குள் உரிக்கப்பட்டிருந்த தைல ஓவியம் பார்வையாளரின் விழிகளால் கடத்திச் செல்லப்பட்டிருக்கும் 

சயன அறையில் உள்ள இரவுகள் கலவி கொள்ளும் நாய்களின் அசைவில் அதிரும் கண் விதைகளின் பிரவாகம். நாய்களின் இச்சாவெளியைப் பழத்தோட்டமாக வரைந்தவாறு இருந்த மண்சீலையில் அவ்வூர் இருக்கிறது. நாய் மூக்கால் வீடுகளின் பின்னிரவுத் தெரு ஊளை படிகிறது. காற்றில் சுருங்கி மறைந்த ஆவிகளின் வெளுத்த விரல்கள்  நாயின் இச்சையில் நுழைகின்றது. கையும் பச்சையாகிவிடும் பாறைகள் சங்கிலித் தொடராய்க் கருத்து வளைத்துக்கொள்ள தப்பிக்க முடியாத கனவு. 

பாறைகளில் மோதி அண்ணாந்த ஊளைகளில் குகையை எட்டுகிறாள். வெற்றுவெளி ஊளைகளால் புதையுண்ட ஊர் இவ்விரவின் சாயைகளோடு கடந்து கொண்டிருக்கிறது. எல்லா நாளையும் நாட்களின் தெருவில் திரிந்துகொண்டிருக்கும் துணிச்சிற்பத்தில் வரையப்படாதவர்களும் வேசைகளும் குற்றவாளிகளும் பட்சிகளின் கிளை மயக்கம் கொண்டார்கள். அலகுகளை சிறகுள் புதைத்து எரிமலையின் உள்பிளந்த உருக்கள் பல்வேறு நான்களாய்ச் சிதறுகின்றன. 

யார் எவர் என அறிய முடியாத புதிரில் துணிச்சிற்பம் தெருவைக் கடக்கிறது. நாய்கள் அதில் சுருண்டுகொள்ள வட்டமான பச்சை வரையாமல் இருப்பது

வரைவது கோணமாணியால் புள்ளி வைத்த காகிதத்தில் நாய்கள் அறிந்த பச்சை வருவதில்லை அந்த நாடகத் துணிக்குள் மணலாக ஓடும் அலையில் வட்டமிடும் நாய் ஒன்று சாவைப் பின்தொடர்ந்து வருகிறது. 'டெகாசின் கை நகரும் பாதையில் கேன்வாஸில் நாய் ஓடி பச்சையாய் வட்டமிடும். நகர்வில் பச்சை உள் அடுக்கி அரும்பும் நிற மடிப்புகள். பச்சையத்தின் தாவர வட்டமாகக் கணிதம் பெற்ற நாய் மோப்பத்தில் அன்று அறையில் மறைந்தவனின் உடல் அருகில் ஒட்டிப் படர்ந்த நாயின் சாயல். அதன் கண்கள் அருந்திய பளுத்த சிகப்பு ஊளையில் சுற்றப்பட்ட வரையப்படாத அவன் உருவம் இல்லாமல் இருக்கிறது. அறையை விட்டுத்தானே திறந்து நகர் மேல் மிதக்கும் தலைகீழ் கண்ணாடிதான் துணிச்சிற்பம். வரையப்படாத சிறு தவறு தூரிகையில் துணிச்சிற்பம் ஆகிறது. ஒருத்தியின் சாயலை இவர்கள் இருவரும் அடைந்ததில் நிறங்களை மற்றவன், வேறு சிலர், இன்னொரு இருப்பு என அறிந்து கொள்கிறான். நனவிலியில் இறங்கிய கோடு சுவர்களைக் கடந்து வர்ணச் சாற்றில் புரண்டு பைத்திய வேடமிட்டு கேன்வாஸில் திரியும் விரல்களைக் கரைத்திருக்கும். 

அவன் முன் இவள் அவனைக் காண்பதில் நறுக்கப்பட்ட மூன்று தனிமையும் ஒரு துணிச்சிற்பம். அவன் மறைந்தபின் இவளும் இவனும் சந்திக்கவில்லை . பெயர் சுற்ற உருவில் நாடகப் படுதா வரைகிறார்கள். இவனும் இவளும் துணியில் இருந்து இச்சையின் கனியைப் பறிப்பதற்குள் அதே சீலையால் தலைகளை மூடி முத்தம் இடுகிறார்கள். இச்சை வெளியாக மறைந்தவன் செதுக்கப்படுகிறான். 

இறுதியில் நாய்ப் பல்லை அடைந்த விளம்பரகர்த்தா ரயில் வருவதற்கான பச்சைக் கொடியாக மாறினான். 

அவன் அறைகள், கடந்து செல்லும் ரயில் பெட்டியாக இருந்தது. இறந்தவனின் கற்பித நகருக்குச் செல்லும் கரி எஞ்சின் தனுஷ்கோடி ஓசையில் தூரத்தை அழைத்தது. பனைநார் கோரைகளால் நெய்யப்பட்ட கோணியுருவங்களைத் துணித் துண்டு கந்தல்களுமாய் வெட்டித் தைத்த புழுதிமண் சிலைகளை வடித்து வந்தான். சிருஷ்டி முடிந்ததும் அவற்றை உருச்சிதைப்பதில் ஈடுபட்ட கணத்தில் நிறங்களின் இழைகள் தைலமாய் ஊடுருவுகின்றன. கனவும் நனவிலியும் குழம்பிய விரல்கள். - 

சர்ப்பம் எழும்பி வெளியேறுவதைப் போல் சீலைப்பதுமை வெளிச்செல்கிறாள். அவளதின் வலிமையெல்லாம் சிருஷ்டியில் இருக்கிறது. அவன் மட்டுமே இளமை உப்பின் அதீத உணர்வெழுச்சிக்கு ஆளானவள். அதீத உணர்ச்சி கொள்வது உப்பின் தொன்மம் காமத்தின் தனி முழுமை இருளின் ஏடு அதில் இடது பக்கமாக உப்பைத் தடவினால் கீறப்பட்ட பாஷையில் சீதள ஓலைச் சுவடிகள் திறக்கின்றன. சாரையின் ஓட்டம் கொள்ளும் கயிற்றரவைப் புனைந்திருந்தாள் சுற்றிப் படர்ந்த உப்பின் சுவர்க்கத்தில் பனிஇரவாகக் கதைகள் விடுதி கொள்கின்றன. போய்ச்சேர உயிரை மறந்து காடுகளில் அலைந்தவர்கள் நெருங்குகிறார்கள். கானல் வெயிலெனினும் மயக்கமான சூரியனிடம் உப்புப்பாறை தன் உலர்தன்மையை இழந்து வருவதைப் போலத்தான் அதிலிருந்த விடுதி உதிர் கொள்ளும் காரைச் சுவர்களுடன் சதா நொறுங்கி வரும். சுவர்களின் நீரூற்றாகத் தாரைகள் உருவங்களை வரைந்திருந்தன. வெப்பத்தைக் கக்கும் செங்குழவிகள் ராகத்தில் மிதக்கின்றன மதியத்தில் பேய்களின் உப்பைத் திருடிவந்த ரஸ்கோல்நிகாவ் அறைக்குள் நேச மானவை எனினும் மேஜை மீதுள்ள கனிகள் சுவைக்க சாவும் சாம்பலுமாய் இருக்கின்றன. ரஸ்கோல்நிகாவின் வலது தோளில் உப்பைத் தடவியவன் கிழக் குமாஸ்தாவின் முதல் மனைவியின் மகள் ஸோனியாதான். எனவே அவள் உப்புநிற விடுதிக்குள் அழைத்ததும் எளிதில் பிடிப்பட்டுவிடுகிறான் மனசாட்சியிடம். சீலைப்பதுமை கீறல் விடும் போது ஸோனியா உப்பை அதன் மீதும் பூசினாள். பதுமையின் சிருஷ்டியில், மனசாட்சி எனும் கதாபாத்திரத் தொந்தரவுகள் இருப்பதில்லை. மனித நாகரீகங்களின் மனசாட்சியே சீலைப்பதுமை எனும் கவித்துவ சிருஷ்டி, சீரழிக்கப்பட்ட தேவதை விரல்களின் சிருஷ்டிகரம் 

செடிகளின் அடியில் பதுங்கிய கண்கள், கருங்கோடுகளில் செல்லும் தனுஷ்கோடி ரயில் தொடரில் நெளிந்து வரும் அறைகளுடன் இம்மூவரும் ஒரே இருக்கையில் அமர்ந்திருக்கிறார்கள் எதிர் திசையில் கடந்தவாறு இவர்களைச் சுற்றி மற்ற காலியிடங்கள் மயக்கும் பிரிவாய் தனுஷ்கோடி ரயில் பாம்பன் பாலத்தைக் கடக்கிறது. 

இவர்கள் இல்லாமலும் ரயில் ஊர்ந்து எழும்பிய காலை மறையும் பனிமூட்டத்தில் கலைந்துள்ள அறைகள் ஒவ்வொரு கடலாய்க் கடந்து பாக் ஜலசந்தியில் நகரும். பிரிந்த பின் தீவுகளைக் கடக்கும் எதிரொலி. வறண்ட உப்புத் தரவையில் கரையும் வெயில், பால்ய பருவம் ஒன்றில் சிவந்திருந்த ரயில் சர்ப்பம் கிளம்பி நெளியும் புதிர்நிழல் கூட்டத்தில் அவர்களின்றிச் செல்கிறது. வெளிறிய ஜன்னல் மூடிகள் உயருகின்றன. உள்ளே பலரும், அதிசய இருப்பில் அவனைத் தெரியாத பலரும் தெரிந்த அசைவில் நோக்கிய அவனைத் தொடுவதற்காக ரயிலும் கிட்டத்தில் அதிர வரும். அதன் புகை வாடை சிமிழ்களில் மண்டும் புகை மேல் கண்ணாடி உருவங்கள். கரி அடைந்த சில்லின் நடுவில் ஹெட்லைட் மயங்கிய வெளிச்சம் எதிரில் வரும் இருட்டை ஊடறுத்த பலகை அடைத்த ரயில் பெட்டிகள். கரப்பான் பூச்சிகள் நடமாடும் குமட்டும் கக்கூஸ் ஈயநிற வாஷ்பேசினும் கண்ணாடியும் அந்தரத்தில் அசையப் பயணத்தை பார்க்கிறான். அந்த உப்பு அறைகள் எங்கோ தூரப் புள்ளிகளை கடக்கின்றன. காலத்தைக் கடப்பதில்லை ரயில் பெட்டிகள். சுருங்கிக்கொண்டே பின்னால் ஒரு மெல்லிய கருங்கோடு மட்டும் ரயில் ஆகிறது. காலம் என்பது இல்லையாகும். அதில் அவன் இவள் அவனும் இல்லாமல் போகிய அறைகள். சிறு ஸ்டேஷனில் மூச்சு விடுகிறது. அம்மரங்களைக் கடக்கும்போது கரி எஞ்சினில் ஒரு வித அமானுஷ்ய ஓசை. மை வரையை அழைக்கிறதா. திடும் திடும் மென அழைக்கும் பாறைகளில் அழுகிறான். வளர்ந்த ரயில் கற்றாலைகள், அவற்றின் பச்சையும் சாம்பல் முட்களும் குத்திக் கிழித்த பயணவெளி சூன்யத்தில் இருக்கிறது. அதன் தத்தளிப்பு, தனிமை. அவன் போன அதில் பிறகு போகாமலே அந்தச் சூன்யத்தில் இருக்கிறான். அந்த ரயில் அறையில் அம்மாவும் இவர்களும் பல அறைகள் கொண்ட ரயிலில் ஓடும் உப்புவிடுதியின் கதவுகள் எல்லாம் அடைபட்டபின் அவன் இராமேஸ்வரக் காகத்தின் குரலைக் கேட்டு அழத் தொடங்கினான். சற்றி வரும் மரங்களில் கிளைகள் இவர்களைத் தொடுவதில் பொழுதும் அசையும் ரயில் பெட்டியில் நிறங்களைப் பூசுகிறார்கள். ஓடும் ஜன்னல்கள் நிறங்களாகச் சிதறும் பாம்பன் தூக்கு பாலம் பயணித்த இருட்டு அமானுஷ்யம், மிதக்கும் சூன்யம், இருப்பு எனக் குயில்களின் இருட்டைத் துளைத்து கங்குகள் பறக்கும் கரி எஞ்சின். அவர்கள் இல்லாத உரையாடல். அசையும் ரயில் பெட்டியில் பெயர் அற்றவன் தனுஷ்கோடியில் இறங்குகிறான். கால் தடுக்கிய கூழாங்கல்லில் சுருளும் நிறக்கோளம். மணல் உதிர அவன் விரல்களைக் கோர்க்க மணலில் படைக்கும் வடிவம். 

பதினாறு தீவுகளைப் பெற்றவனின் தடம் பதிகிறது. சிதறிய கூழாங்கல் ஓடையில் நெறுநெறுந்த கால்கள். வர்ணக் கற்களின் சுழற்சி நடுவில் உடைகளைக் களைகிறான். கற்களின் ஊளை உருவற்ற நாய்களின் கபாலம் எரிந்துகொண்டிருந்த ஜுவாலையில் சிலைகள் பரவின. பெயரற்றவனின் ரயில் நழுவி வந்து தனுஷ்கோடியில் நிற்கிறது. அதன் மூச்சில் சுவாசிக்கிறான்.
'...
.

Friday, November 22, 2019

9. மௌனி என்று ஒரு சாதனை, 10. ஆர். கே. நாராயண் - க.நா.சு ::::: இலக்கிய சாதனையாளர்கள்

9. மௌனி என்று ஒரு சாதனை - க.நா.சு ::::: இலக்கிய சாதனையாளர்கள்
- 9. மௌனி என்று ஒரு சாதனை ,
o
இன்று மௌனி என்கிற சிறு கதாசிரியரின் பெயர் பரவலாகப் பேசப்படுகிறது. அண்மையில் அவர் இறந்ததை யொட்டிப் பலபேர் பேசுகிற அளவுக்கு அவர் சாதனை பிராபல்யம் அடைந்துள்ளது. இது சாத்தியமானதை தமிழில் புது இலக்கிய விமரிசனத்தின் வெற்றிகளில் ஒன்றாகச் சொல்லவேண்டும். '1958-ல் அவருடைய அழியாச்சுடர் தொகுப்பு வெளி வரும் வரையில் மௌனியின் கதைகள் முப்பதுகளில் வெளி வந்த சிறு பத்திரிகைகளிலேயே புதைந்து கிடந்தன. 1950-க்குப் பிறகு அவர் பெயரை ஒரு இலக்கிய சிகரமாகச் சொல்லிச் சொல்லி நூல் வெளிவந்த பிறகு அவருடைய எழுத்துக்கள் புதிய தலைமுறை எழுத்தாளர்கள் சிலரைப் பாதித்தன.
1958-க்கு முன் இருந்த மௌனி வேறு. 1958-க்குப் பிறகு இலக்கிய அந்தஸ்தும் புகழும் பெற்றுவிட்ட பிறகு இருந்த மௌனி வேறு. இரு மௌனிகளையும் நான் நன்றாக அறிந்தவன். ஓரளவுக்கு அவர் பெயரும், சாதனையும் பிரசித்தமாவதற்கும் உதவியவன் நான் என்று பெருமையாகவே சொல்லிக் கொள்ளலாம்.
முதல் முதலாக அவர் சாதனையைப் பற்றி நான் புதுமைப்பித்தன் மூலம் தான் அறிந்து கொண்டேன். புதுமைப்பித்தனுக்கு (மௌனிக்குப் போலவே) யாருடைய எழுத்தும் அவ்வளவாகத் திருப்தியளிக்காது. சுலபமாக எந்த சக தமிழ் இலக்கியாசிரியனையும் புகழ்ந்துவிட மாட்டார். அவர் மௌனியைப் புகழந்து சொன்னது போலவே சில இடங்களில் எழுதியும் வைத்திருக்கிறார்.
* 'மிகவும் சுவாரசியமான மனிதர். கும்பகோணத்தில் வசித்து வருகிறார். அவர் சென்னையில் வசிக்கவில்லையே அவருடன் அடிக்கடிப் பேசி சம்பாஷிக்க இயலவில்லையே என்று எனக்கும் வருத்தம்தான்'' என்றார் புதுமைப் பித்தன். மௌனியின் அப்போது வெளிவந்த கதைகளை நானும் படித்திருந்தேன். எனினும் எனக்கு அவைபற்றி அப்போது பிரமாதமான அபிப்பிராயம் ஏதுமில்லை. ஆனால் புதுமைப்பித்தனே, சொல்லுகிறபோது...என்று 1938-ல் முதல் தடவையாக மௌனியை அவர் அப்போது - தங்கியிருந்த கும்பகோணம் காமாக்ஷி ஜோசியர் தெருவில் (இப்போது அத்தெருவுக்கு என்ன பெயரோ?) போய் சந்தித்தேன்.
முதல் சந்திப்பிலிருந்து முக்கியமாக மூன்று விஷயங்கள் எனக்கு இன்னும் நினைவிருக்கின்றன. மௌனி என்று தான் புனைபெயரே தவிர, அவருக்கு பேச அதிகமாக, மிக அதிகமாகவே பிடிக்கும்'' என்பது ஒன்று. இந்தப் புனை பெயர் - வேறு ஒருவர் - சற்றுக் கேலியாகவே அவருக்கு அளித்தது என்று பின்னர் தெரிந்து கொண்டேன். இரண்டாவது விஷயம், சிறுகதைகள் எழுதுவதை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டு அப்போது பிரபலமாகிக் கொண்டிருந்த இரு கும்பகோணம் எழுத்தாளர்களை (கு.ப. ரா.- பிச்சமூர்த்தி) விட நன்றாகத் தன்னால் எழுத முடியும் என்று தனக்கும் உலகுக்கும் நிரூபிக்க ஒரு மாதத்தில் சேர்ந்தாப்போல எழுதப்பட்டவை தான் அவர் கதைகள் எல்லாமும். மூன்றாவது விஷயம் அவருடைய படிப்பு, கவனம் எல்லாம் இலக்கியம் என்று சாதாரணமாக நாம் ஏற்றுக்கொள்கிற கவிதை, நாவல், கதை என்பதில் இல்லை. பெளத்த தத்துவ விவாதங்கள், தரும் விசாரணை, லௌகீகப் போக்குகளில் ஈடுபாட்டுடன் படிப் பவர் என்பது. என் படிப்பும் இந்தத் துறைகளில் சற்று விரிவானது தான் என்பதனால் எங்கள் பேச்சு- இரவு மூன்றுமணி வரை- தொடர்ந்தது. மறுநாளும் தொடர்ந்தது.
49
|
-
48
எனக்கு அவரைப் பிடித்திருந்தது போலவே அவருக்கும் என்னைப் பிடித்திருந்தது என்கிற நினைப்புடன் நான் சிதம்பரம் திரும்பினேன்.
சிதம்பரத்துக்கு அவர் வந்து குடியேறிய பிறகு எங்கள் சந்திப்புகள் பத்து ஆண்டுகளுக்கு அநேகமாகத் தினசரிக் காரியம் என்றுதான் சொல்லவேண்டும். ஒரு சமயம் என் மூன்று வயதுப் பெண் ஏதோ என்னிடம் சொல்ல வந்த போது மௌனி என்னிடம் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்து விட்டு ''மாமா, வீட்டுக்குப் போங்களேன். எனக்கு என் அப்பாவோடு பேசவேண்டும்!'' என்று அவரை விரட்டியது நினைவில் இருக்கிறது. எங்கள் பேச்சு அறிவு பூர்வமான உலகில் பல இடங்களில் சுற்றி வரும். ஆனால் இருவருமே எங்கள் எழுத்துக்களைப்பற்றி - அதிகம் பேச மாட்டோம். , ''அவை நடந்து விட்ட விஷயங்கள். அவற்றைப்பற்றி எதுவும் பேசுவதானால் பிறர்தான் பேச வேண்டும்'' என்கிற நினைப்பு அப்போது மௌனிக்கு உண்டு. பின்னர் அவர் மாறிவிட்டார். 1960-க்குப்பின்
அவரைச் சந்தித்தவர்கள் என்னிடம் தன் எழுத்துக் களைப் பற்றித் தவிர வேறு எதுவும் பற்றிப் பேசமாட்டேன் என்கிறாரே!'' என்று கூறியதுண்டு.
என்று பலவிதமான பிரிவுகளுடன் இந்தக் காதல் 'வேகம் அவர் கதைகள் பலவற்றிலும் காணக் கிடக்கின்றன. பல ரொமாண்டிக் ஆசிரியர்களின் எழுத்துக்களில் அவர் களும் அறியாமலே கிண்டலும் கேலியுமாகிவிடுகிற இந்தக் காதல் மௌனியின் கதைகளில் ஒரு சிறப்பான அடிநாத மாக அமைகிறது. மூன்றாவது விசேஷம் அவருடைய தனி மனித மனோ தத்துவத் தேடல். சில கதைகளில் இந்தத் தேடல் அதிகமாகிவிடுகிறது என்பது என் நினைப்பு; ஆனால் அதனாலேயே பலருக்கு அந்தக் கதைகள் சிறப்பாகத் தோன்றுவதும் எனக்குத் தெரியும். இன்னும் பல சரடுகள் அவர் எழுத்தில் பிரித்துக் காண இயலும். அதனால் தான் அவரை இலக்கியாசிரியர்களுக்கு உதவக் கூடிய இலக்கியாசிரியன் என்று சொல்லவேண்டியதாக இருக்கிறது.
ஒருவரிடம் இருந்து மற்றவர் எதுவும் எதிர்பார்க் காமலே எங்கள் நட்பு ஒரு ஐம்பது ஆண்டுக் காலம் நீடித்தது. நான் அவரிடம் பிற்காலத்தில் பேசும்போது சக தமிழ் எழுத்தாளர்களையோ, மற்ற இலக்கிய விஷயங் களையோ பேசமாட்டேன். பொதுவாக மனித வாழ்வின் நோக்கம், போக்கு, இவற்றில் மத சிந்தனைகளின் ஆதிக்கம் இவற்றைப் பற்றிப் பேசுவேன்.
மௌனியின் - எழுத்துக்களில் - அவை இருநூற்றுச் சொச்சம் பக்கங்களில் அடங்கிவிடும் - அநேகமாகச் சிறு கதைகள் தான் - நாலைந்து விஷயங்கள் பின்னிக் கிடந்தன. ஒரு அதீதமான உருவ அமைதி; புதுமைப்பித்தனில் கூடக் காண முடியாத உருவ அமைதி; இது ஆங்கிலத்தில் கிடைத்த காதரின் மான்ஸ்ஃபீல்டு போன்ற சிறு கதாசிரியர் களைப் படித்து ஏற்பட்ட உருவப்பிரக்ஞை. இரண்டாவது அம்சம் ஒரு ரொமாண்டிக் தத்துவம். இது ஆங்கிலக் கவிகளைப் படித்து ஏற்பட்டதல்ல. காதல் - நிறை வேறியது, நிறைவேறாதது, மானஸீகமானது, உடல் சம்பந்தப்பட்டது, நினைவில் நிற்பது, இன்று நடப்பது
இலக்கியப் புகழ் வந்த பிறகு அவர் சற்று குழந்தை மனப்பான்மை பெற்றவர் போல ஆகிவிட்டார். அந்தப் புகழை தான் இழந்து விடக்கூடாது என்றும், அருமையாகக் கிடைத்த விஷயம் என்றும் நினைத்துச் சில சமயம் பேசுவார் என்பதும் தெரிந்தாலும், அவர் எழுத்து என்கிற சாதனை மிகமிக அருமையானது, பெருமை தரக்கூடியது என்று இன்று அவர் கதைகளை மறுபடியும் எடுத்துப் படிக்கும்போதும் எனக்குத் தோன்றுகிறது. அவர் புதுமைப் பித்தன் சொன்னது போல சுவாரசியமான மனிதர். அவர் கதைகள் அமர இலக்கியத் தன்மை பெற்றவை.
50

1959-60 வாக்கில் இப்படி ஒரு மனிதர் , மௌனி என்பவர் நிஜமாகவே உயிருடன் இருக்கிறாரா என்கிற சந்தேகத்தை நிவர்த்தித்துக்கொள்வதற்காக ஈழத்தி லிருந்து ஒரு இலக்கியத் தூதுகோஷ்டி சிதம்பரம் வந்து திரும்பியது. அவரே அவருடைய எழுத்துக்களில் ஒன்று தானோ என்கிற சந்தேகம் நியாயமானதுதான்! -
அவர் இறப்பதற்கு ஒரு மாத முன், அவரைப் படுத்த படுக்கையாகக் கண் திறந்து பேசவும் முடியாமல், என்னை யார் என்று கஷ்டப்பட்டுத் தெரிந்து கொள்ள வேண்டிய நிலையிலும் பார்த்தபோது, எனக்கு ஒரு சகாப்தம், ஒரு யுகம் முடிந்துவிட்டது என்றுதான் தோன்றிற்று. பேசாத ஒரு மௌனியுடன் இருக்க எனக்குப் பிடிக்கவேயில்லை. ஆனால் இனிமேல் அவர் பேசமாட்டார், அவர் கதைகள் மட்டுமே பேசும் என்பது ஆறுதல் அளிக்கிற விஷயம்தான்!

10. ஆர். கே. நாராயண்

ஆர். கே. நாராயண் என்பவர் இன்று உலகப் பிரசித்தி பெற்ற ஆங்கில நாவலாசிரியர். அவருடைய நாவல்கள் எல்லாவற்றையும் பெங்குவின் ஸ்தாபனம் கொண்டு வந்திருக்கிறது. இப்படிப் பிரசுரிக்கப்பட்டிருக்கிற ஒரே இந்திய நாவலாசிரியர் ஆர். கே. நாராயண்.

புகழோ, பாராட்டோ நாராயணின் தலைக்கனத்தை அதிகரிக்கச் செய்யவில்லை என்பது அவரைப் பற்றி எல்லோருக்கும் முதலில் தெரிய வருகிற விஷயம். பழகு வதற்கு மிகவும் சாதாரணமாக, எளியவராக, அதிக
ஆடம்பரமில்லாமல் இருக்கிறார்.

கருத்தரங்குகள், விமரிசனப் பார்வைகள் என்றால் அவருக்கு மிக மிக அதிக அல்லெர்ஜி.'' ''என்னைப் பற்றி எழுதப்படுகிற விமரிசனங்களையோ மதிப்புரைகளையோ கூட நான் படிப்பதில்லை'' என்று அவர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அது பூரணமாக உண்மையாக இருக்க மூடியாது. இலக்கியமாக இல்லாவிட்டாலும் எழுத்தாக வெற்றி கண்டுவிட்ட நாவலாசிரியர் தன்னைப் பற்றி எழுதப்படுகிற புகழுரைகளைப் படிக்காமல் இருப்பாரா? படிப்பார். ஆனால் அவரை அவை ஓரளவுக்கு மேல் பாதிக்க விடுவதில்லை என்று சொல்ல வேண்டும்.

என்னவெல்லாமோ சொல்கிறார்களே, சுப்ரமண்யம், இதெல்லாம் உனக்குப் புரிகிறதா? புரிந்தால் சரி. எனக்குத் தலை வலிக்கிறது. நான் வீட்டுக்குப் போகிறேன்'' என்று கருத்தரங்குகளில் பாதியில் அவர் வெளியேறி விடுவதை. நான் பார்த்திருக்கிறேன். எனக்கும் சில சமயங்களில் கருத்தரங்குகளில் பேசப்படுகிற விஷயங்களில் சில அவ்வளவாகப் புரிவதில்லை தான். ஆனால் விமரிசகனாகச் செயல்பட விரும்புகிற நான் அதை வெளியே சொல்ல முடியாது. நாராயண் சொல்லிவிடுகிறார். அவருக்கு.இலக்கிய விமரிசனம் என்று சொல்லப்படுவதிலும் செய்யப் படுவதிலும் அவ்வளவாக நம்பிக்கை கிடையாது.
விமரிசனத்தைப் பற்றி அவர் ஒரு தடவை என்னிடம் சொன்னார்: ''பட்டணத்தில் மழை பெய்தபின் சாக்கடை நீரை சல்லடை போட்டு சலித்து ஏதாவது பொன் கிடைக் கிறதா என்று பார்த்துக்கொண்டு சிலர் இருப்பதைப் பார்த்திருக்கிறாயா? அந்த மாதிரிதான் விமரிசனம் என்பதும். சாக்கடையில் சல்லடை போட்டு, பொன்னைத் தேடுகிற விஷயம்தான். சில சமயம் ஒரு காணாமற்போன தங்கத் திருகாணி கிடைக்கும். சில சமயம் ஏதாவது ஒரு சகுந்தலையின் காணாமற்போன மோதிரம் கூடக் கிடைக்கலாம். ஆனால் அநேகமாக ஒன்றும் கிடைக்காது. மிகவும் வியர்த்தமான காரியம் இது!'' ஓரளவுக்கு உண்மை தான். என்றாலும் விமரிசனம் தேவைப்படுகிறதே!

ஆர். கே. நாராயணே ஓரளவுக்கு விமரிசனத்தினால் உண்டாக்கப்பட்டவர்தான். அதாவது காமன்வெல்த் இலக்கியப் பேராசிரியர்கள் அவருடைய இலக்கியத் தரத்தையும் ஸ்தானத்தையும் உண்டாக்கியிருக்கிறார்கள் என்று சொல்ல வேண்டும். அவர்கள் ஆர். கே. நாராயணைப் பற்றி எழுதியிருப்பதைப் படிக்கும்போது “உண்மையிலேயே ஆர். கே. நாராயணில் இத்தனை விஷயம் இருக்கிறதா!'' என்று நமக்குப் பிரமிப்பு ஏற்படுகிறது. நாம் படிக்கும் போது நம்மில் பலருக்கு மிகவும் சாதாரணமான இலக்கிய நாவலாசிரியராகத் தோன்றுகிறார் அவர்; ஒரு சிலருக்கு இது இலக்கியத்தரமேயில்லாத, தங்கள் மொழியில் வருகிற இரண்டாந்தர மூன்றாந்தர எழுத்துக்களைப் போலத் 'தோன்றுவதாக எழுதியிருக்கிறார்கள். மேலை நாட்டவர்கள் நாராயணில் செக்காவின் irony, கேலி பாவத்தைக் கண்டு வியக்கிறார்கள்.

. நான் முதன் முதலில் நாராயணை மைசூரில் நடந்த ஒரு PEN மகாநாட்டில் சந்தித்தேன். பெரிய மனிதர்கள், -பிரசித்தமானவர்கள் என்று யாராவது தென்பட்டால் அவர்களை மேடையேற்றி அவர்கள் பேசுகிற அர்த்தமற்ற பல விஷயங்களை ரசித்து ஆர்ப்பரிப்பது நம்முடைய ஸ்தாபன ரீதியாகும். அதுபோல ஆர். கே. நாராயணையும் மேடையேற்றி விட்டார்கள் PEN காரர்கள். மேடையில் ஏறு முன்னரே எனக்குச் சொல்ல விஷயம் ஒன்றுமில்லை'' என்று மறுத்துப் பார்த்தார் அவர். மேடை ஏறி இரண்டு முழு நிமிஷங்கள், நெற்றி ஓரத்தில் கைவிரல் வைத்துக் கொண்டு நின்றார். பிறகு நிமிர்ந்து எனக்குச் சொல்ல ஒரு விஷயமும் இல்லை!'' என்று சொல்லிவிட்டு இறங்கி விட்டார். இப்படி மேடையேறி, ஒன்றும் சொல்லாமலே இறங்கிவிட்டவர் ஆர். கே. நாராயணைத் தவிர வேறு. யாருமாக இந்தியாவில் இருக்க முடியாது.

இப்படி அவர் செய்ததை அவருக்கு நான் நினைவூட்டிய போது “ அப்படியா செய்தேன்? எனக்குக் கூடியிருந்த எழுத்தாளர்களை அவமதிக்கிற எண்ணமில்லை. உண்மை யிலேயே பேச எனக்கு ஒரு விஷயமும் இருந்திராது. மனம் என்ன குழாயா, திறந்தவுடன் வார்த்தைத் தண்ணியாகக் கொட்ட'' என்று கேட்டார்.

- ஆர். கே. நாராயண் தமிழர். தமிழ் இலக்கியத்துக்கும் மிகவும் சம்பந்தப்பட்ட குடும்பத்தில் பிறந்தவர், கம்ப நிலையத்தில் உதித்தவர். கம்பராமாயணத்தை , அவர் அறிந்துகொண்ட வரையில், ஆங்கில வசனத்தில் எழுதிப் பார்த்திருக்கிறார்.

எனக்கும் அவருக்கும் ஒரு ஒற்றுமையுண்டு. அவரும் காபிப் பிரியர். முன்னெல்லாம் இந்தியாவில் பல இடங் களில் காபி கிடைப்பது அரிதாக இருந்தபோது, அவர் காபிக்காகக் கையாண்ட ஒரு உத்தியை எனக்குச் சொல்லித் தந்தார். அப்போதெல்லாம் இப்போதுள்ளது போல பல இன்ஸ்டண்ட் காபி பவுடர்கள் கிடையாது. Stanes. கம்பெனி மட்டும் instant காபி என்று ஒரு பவுடர் தயாரித்துத் தரும். காபி கிடைக்காத இடங்களில் டீ ஒரு. கிளாஸ் தருவித்து அதில் இரண்டு ஸ்பூன் ஸ்டேன்ஸ் பவுடரைப் போட்டு ஸ்பெஷல் காபியாகச் சாப்பிட்டு விடுவது அவர் பழக்கம். அதை நானும் செய்து பார்த் திருக்கிறேன். -

"ஆங்கிலேயர்களுக்குத் தங்கள் மொழியில் பற்றுதல் மிகவும் உண்டு. தங்கள் மொழியை நன்றாக உபயோகப் படுத்துகிற அந்நியர்களிடம் அலாதியான ஈடுபாடு. ஓரளவுக்கு அதனால் தான் நன்றாக ஆங்கிலம் பேசு கிறவர்கள், எழுதுகிறவர்கள் உள்ள இந்தியாவை விட்டுவிட அவர்களுக்கு மனமில்லாமல் இருந்தது'' என்று அவர் ஆங்கில சாம்ராஜ்ய ஆசைக்கு ஒரு புது வியாக்கியானம் தந்தது நினைவிருக்கிறது. மற்றப்படி அவர் அரசியல் பேசி நான் பார்த்ததில்லை. இதுவும் நாலைந்து பேர்வழிகளுடன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது சொன்ன லேசான விஷயம்தான்.

"உங்களுக்கு இந்த ஆண்டு நோபல் பரிசு கிடைத்து •விடும் என்று சொல்லுகிறார்களே!'' என்று ஒரு சமயம் கேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான்: எழுதுகிறவன் எவனும் தனக்கு நோபல் பரிசு வருவதாகக் கனவு காண்பதில் தவறில்லை . அந்தப் பரிசுக்கு ஒரு உலக வியாபகம் இருக்கிறது. ஆனால் கனவு நிஜமாகிற வரையில் அதைப் பற்றிப் பேசாதிருப்பது நல்லது!''

தமிழில் வருகிற ஒரு பத்திரிகையைக் குறிப்பிட்டு “ அதில் வருகிற எழுத்துக்கள் நல்ல எழுத்து என்று எண்ணிக் கொண்டிருந்தேன். இந்த அபிப்பிராயம் தி. ஜானகி ராமனைச் சந்தித்த பிறகுதான் மாறிற்று'' என்றார். ஜானகிராமனைப் பற்றியும் அவருடைய மரப்பசுவைப் படித்தபிறகு தன் அபிப்பிராயம் மாறிவிட்டதாக ஒரு தரம் என்னிடம் சொன்னார்.

காசு பணம் விஷயத்தில் மிகவும் கண்டிப்பானவர். ஒரு சிறுகதைத் தொகுப்புக்காக அவர் கதை ஒன்றை உபயோகித்துக் கொள்ள அனுமதி கேட்டபோது தனக்கு இத்தனை பணமாவது குறைந்தபட்சம் கொடுத்தால் தான் - கதையை உபயோகித்துக் கொள்ளலாம் என்று எழுதி விட்டார். பிரசுராலயத்தார் ஒத்துக்கொள்ளாததால் அவர் கதையில்லாமலே தான் என் தொகுப்பு வெளிவந்தது.

டெல்லியில் ஒரு கூட்டத்தில் சந்தித்தபோது ஒரு பெண்மணியை அறிமுகம் செய்து வைத்தார். நான் அந்தப் பெண்மணியின் முக்கியத்தைப் பற்றித் தவறாக நினைத்து விடப் போகிறேனே என்று அவர் போனபின் .
அவர் ஒரு பத்திரிகை நடத்துகிறார். எதற்காக நடத்து கிறார் என்று எனக்குத் தெரியாது. அவருக்கும் தெரியாது என்றுதான் எண்ணுகிறேன்!'' என்றார்.

டால்ஸ்டாயின் போரும் அமைதியும் என்கிற நாவலில் ஐம்பது பக்கங்களுக்கு மேல் தன்னால் படிக்க முடியவில்லை என்று ஒரு தரம் ஏதோ ஒரு பேட்டியில் கூறியிருந்தார். நான் அதற்குச் சில வாரங்களுக்குப் பின்னர் மைசூர் போய் அவர் வீட்டில் அவரைச் சந்தித்தேன். மேஜை மேல் போரும் அமைதியும் நூல் இருந்தது. புஸ்தகம் மிகவும் மோசமாக அச்சிடப்பட்டிருந்தது. இந்த நூலில் தான் முதல் 50 பக்கங்களுக்கு மேல் உங்களால் படிக்க முடிய வில்லையா?'' என்று கேட்டேன். சிரித்துக் கொண்டே புஸ்தகத்தை வாங்கி அலமாரியில் வைத்து விட்டார்.

ஆங்கிலத்தில் பேசுவதைவிடத் தமிழில் தமிழ் 'தெரிந்தவர்களுடன் பேசுகிற இந்த ஆங்கில நாவலாசிரியரின் நூல்கள் பல தமிழிலும், ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் சினிமாவாகியிருக்கின்றன. அதைப் பற்றி மட்டும் கேட்காதீர்கள். நான் ஏமாந்துவிட்ட ஒரே இடம் சினிமா உலகம் தான்'' என்று ஒரு தடவை சொன்னார். தன் நாவல்களைத் தானே பிரசுரித்து நூல் வெளியீட்டாளர் களுக்கு விற்கக் கொடுக்கிறார். அதில் மிகவும் கண்டிப்பானவர் என்றும் தெரிகிறது. ,
நாவலாசிரியராகபலருக்கு மிகவும் சாது. நாம் படிக்க 

Thursday, November 21, 2019

சிறந்த பத்து இந்திய நாவல்கள் 10:: நீலபத்மநாபன் - தலைமுறைகள் --- க.நா.சு - தமிழில் தேவகி குருநாத்

நீலபத்மநாபன் - 
தலைமுறைகள் 
திரு. நீல பத்மநாபனின் தமிழ் நாவல் 'தலை முறைகளின் மூன்றாவது பதிப்பு 1980 டிசம்பரில், முத்துப் பதிப்பகம், "மாதவி'', 7/332, ஆழ்வார் நகர், மதுரை-625019 நிறுவனத்தினரால் வெளியிடப்பட்டிருக்கிறது. விலை ரூ. 17.00; பக்கங்கள்: 474. 

நீல பத்மநாபனின் 
தலைமுறைகள் 
எழுபதுகளில் தமிழ்மொழியில் வெளிவந்த மகத்தான படைப்பு என்ற பாராட்டுப் பெற்று, (என்னால்) 'தி ஜெனரேஷன்ஸ்' (The Generations) என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு 'ஹின்ட் பாக்கெட் புக்ஸ்' (Hind Pocket Books) வெளியீட்டாளர்களால் பதிப்பிக்கப்பட்ட நீல பத்மநாபனின் 'தலைமுறைகள்' தனக்கே உரிய தனித்தன்மையுடன் விளங்குவதோடு, தமிழ்மொழியின் மிகச் சிறந்த நாவல்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. 
இந்தியச் சூழலிலும், தமிழ்ச் சூழலிலும் மிகச்சிறந்த நாவல்கள் என்று கருதத்தக்க மற்றபல நாவல்களும் தமிழில் வெளிவந்திருக்கின்றன. ஆனால் அவற்றில் ஒன்று கூட ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படவில்லை, அவ்வாறு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருத்தலை ஒரு 'அடிப்படை அளவீடாக' இந்தக் கட்டுரைகளுக்கு நான் எடுத்துக்கொண்டிருப்பதால், இந்த வரிசையில் இந்த நாவலைக் குறித்துப் பேசுகிறேன். 
விபூதி பூஷன் பானர்ஜியின் முதல் நாவலான 'பதேர் பாஞ்சாலி' அவரது சிறந்த நாவலாக அமைந்ததைப் போல, நீல பத்மநாபன் தனது மற்ற நாவல்களினால் புகழ் பெற்றிருந்த போதிலும், ' தலைமுறைகள்' அவரது முதல் நாவலாகவும், இன்றுவரை மிகச் சிறந்த நாவலுமாகவும் விளங்குகிறது. (ஆனால், இது என் நான்காவது நாவல்; புத்தக வடிவில் பிரசுரமாகும் இரண்டாவது நாவல்.' என்று 'தலை முறைகள்' முன்னுரையில் திரு. நீல பத்மநாபன் குறிப்பிட்டுள்ளார்-தே. குரு.) உதாரணமாக, அவரது இரண்டாவது நாவலான 'பள்ளி கொண்டபுரம்' நேஷனல் புக் ட்ரஸ்ட்டினால் (NBT) தேர்வு செய்யப்பெற்று, பிற இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. அவரது மூன்றாவது நாவலான 'உறவுகள்' சிறந்த படைப்பிலக்கியத்திற்கான, ராஜா சர் பரிசைப் பெற்றது. 'பள்ளி கொண்டபுரம்' ஒரு நகரத்தைப் பற்றியதான, தனித்தன்மை கொண்ட நாவல். அந்த நகரம் திருவனந்தபுரம். மலையாள விமரிசகர் டாக்டர் குப்தன் நாயர் அந்த நாவலைக் குறித்து, ''ஒரு நகரத்தைக் கதாநாயகனாகக் கொண்டு எந்த மலையாள நாவலும் படைக்கப்படவில்லை; அந்தத் தனிச் சிறப்பு நீல பத்மநாபனுக்கே உரியது” என்று குறிப்பிட்டுள்ளார். 
சோழ தேசத்திலிருந்து கேரளத்திற்குக் குடிபெயர்ந்து நிலைகொண்ட ஒரு தமிழ்க் குடும்பத்தைப் பற்றிய கதையானதால், 'தலைமுறைகளின்' மொழி நடையும் பாணியும் தமிழ், மலையாளம் ஆகிய இரு கலாசாரங்களின் முரண்பாட்டு மோதல்களினால் வளமை பெற்றிருக்கிறது. வேற்றிடத்தில் சென்று குடியேறியதைப் பற்றிய கதை, நாவல் பின்புலத்தின் ஒரு பகுதியாக அமைகிறது. பத்மநாபனுக்கே சொந்தமான ஒரு தனித்த பாணியில், அது நாவலுக்கு உத்தியையும் ஆழத்தையும் கொடுக்கிறது. வயது முதிர்ந்த படிப்பறிவில்லாத ஆச்சிக்கும், வளர்ந்து வருகிற பேரனுக்குமிடையே நிகழும் கருத்துப் பரிமாற்றங்களை, நாவலின் கதாநாயகனான திரவியின் மனத்தில், பாரம்பரியமாக நிலவிவருகிற பழக்க வழக்கங்களின் முக்கியத்துவத்தை ஆழப்பதிய வைக்கும் கருவிகளாக நீலபத்மநாபன் உபயோகப்படுத்தியுள்ளார். 
மூன்று தலைமுறைகளைப் பற்றிய நாவலாகவும், சமுதாய மாற்றங்களும் சூழ்நிலை மாற்றங்களும் அந்தத்தலை முறைகளைப் பாதிக்கிற விதத்தைச் சுட்டிக்காட்டுகிற நாவலாகவும், இந்த வரிசையில் ஏற்கனவே எடுத்துக் கொள்ளப்பட்ட கே. எஸ். காரந்த்தின் நாவலோடு பத்மநாபனின் நாவலும் கருதப்படக்கூடியது. இவ்விரு நாவல்களும், தற்போதைய சூழ்நிலையில் முழுமையான கட்டமைப்புடன் உருவாக்கப்பட்ட பிரக்ஞைபூர்வமான நாவல்கள் என்பதைவிடவும், பிரக்ஞைபூர்வமான கற்பனைப் படைப்பை உருவாக்குவதற்கான சாத்தியக் கூறுகள் நிறைந்தவை என்று கருதப்படக்கூடியவை. ஆனால் இவற்றில் அவை சார்ந்த மண்ணின் உறை விடங்கள், பெயர்கள், பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள், எண்ணங்கள் இவற்றை உண்மையான தன்மையோடு கையாண்டிருப்பதானது, இந்த நாவல்களைத் தனித்தன்மையுடன் கூடிய சிறந்த நாவல்களாக ஆக்குகிறது. விமரிசகர்கள் எதை வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் ஒரு கற்பனைப் படைப்போ, கவிதையோ விமரிசகர்களின் அளவுகோல்களுக்கு உட்பட்டோ , இலக்கணவாதிகளின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டோ நிச்சயமாக எழுதப்படுவதில்லை. ஹென்றி ஃபீல்டிங் அல்லது லாரன்ஸ் ஸ்டெர்னை நாம் உதாரணத்திற்கு எடுத்துக்கொண்டால், நாவல் எழுதுவதில் ஏற்கனவே நிலவிவந்த கட்டுப்பாடுகளுக்கு அந் நாவலாசிரியர்கள் இணங்கிப் போகாமலிருப்பதுதான் நாம் அவர்களைப் பிரத்தியேகமாகப் பாராட்டுவதற்குக் காரணமாக அமைகிறது. இந்தியாவில் அப்படி எந்தக் கட்டுப்பாடுகளும் நிலவுவதாகச் சொல்லமுடியாத ரீதியில் தான் சூழ்நிலைகள் இருக்கின்றன. இந்தியச் சூழ்நிலையில், விமரிசன நோக்கில், சிறந்த நாவல்கள் என்று நாம் கருதுகிற அப்படிப்பட்ட நாவல் படைப்புக் கலையைப் புரிந்து வருகிறவர்களிடமிருந்துதான், கட்டுத் திட்டங்களை நாம் வகுக்க வேண்டும். 
நேரடியான கதை 
"தலைமுறைகள்' மத நம்பிக்கைகளைக் கட்டிக் காப்பதற்கும், தலைமுறை தலைமுறையாக அந்தக் குடும்பத்துக்குள்ளே வழிவழியாக வந்த பாரம்பரியத் தன்மைகளைக் காப்பாற்றுவதற்கும் போராடுகிற ஒரு குடும்பத்தின் நேரடியான கதை. அதோடு, பொருளாதார ரீதியான இந்த உலகத்தில், படிப்படியாக மோசமாகிக் கொண்டு வருகிற சூழ்நிலைகளை எதிர்கொண்டு தைரியமாக எதிர்த்து நிற்க முயல்கிற ஒரு குடும்பத்தைப் பற்றிய கதையுமாகும். சூழ்நிலைகளை நன்கு அறிந்தவராயிருந்தும், அந்தக் குடும்பத்தின் தந்தை அவற்றை எதிர்த்துச் சமாளிக்க முடியாதவராயிருக்கிறார். அவருடைய மகன் நடைமுறை மரபுகளை அலட்சியம் செய்துவிட்டு, பிரச்சினைகள் குறித்துத் தீவிரமாக ஒருபடி முன்னோக்கிச் செயல்படுவதற்குமுன் மிகுந்த தயக்கம் கொள்ளவேண்டியவனாயிருக்கிறான். அவன் மேற்கொண்ட ஒரு தைரியமான நடவடிக்கை, கணவனால் குழந்தைபெறத் தகுதியற்றவள் என்று ஒதுக்கிவைக்கப்பட்ட பெண்ணுக்கு மறு மணம் செய்து வைக்க முயன்றதாகும். இதில் உண்மை யென்னவென்றால், அந்தக் கணவன் தான் ஆண்மையற்றவன். 
இந்த உண்மையை ஒரு பெண் டாக்டர் மூலம் உறுதிப் படுத்திக்கொண்ட திரவி- ஒரு பெண்ணை ஒரு பெண் டாக்டரிடம் பரிசோதனைக்கு அனுப்ப அந்தக் குடும்பத்தில் ஒத்துக்கொண்டதே நடைமுறை மரபு மீறிய ஒரு நடவடிக்கைதான் - அந்த உண்மையைக் கொண்டு அவளின் கணவனைச் சந்தித்து, அவளை மீண்டும் மனைவியாக ஏற்றுக்கொள்ளும்படி செய்ய முயல்கிறான். கணவன் அவளை ஏற்றுக்கொள்ள மறுத்தபோது, அவளை மறுமணம் செய்துகொள்ள விரும்புகிற ஒருவனுக்கு அவளைக் கொடுக்க அவன் தயாராகிறான். மிக வும் தைரியமான புரட்சிகரமான ஒரு நடவடிக்கை இது. 
மறுமணம் செய வவன் தயாராகிறதை இது. 

ஆனால் திரவி அதில் வெற்றிபெறவில்லை. அவளை மறுமணம் செய்துகொள்ள விரும்புகிற அந்த இளைஞன் இறந்துபோகிறான். அதன்பிறகு அந்தக் குடும்பம் வேற்றிடத்திற்குக் குடிபெயரத் தீர்மானிக்கிறது. இந்தத் தீர்மானமே ஒரு புரட்சிகரமான முடிவுதான். 
'தலைமுறைகள்' நாவலின் கதை, திரவியின் கதை; அவன் சகோதரி நாகுவின் கதை; யானைக்கால் வியாதியால் ஒரு கால் பாதிக்கப்பட்ட ஆச்சியின் கதை; கடந்த காலப் பெருமைகளின் நினைவுகளால் நிறைந்த அவள் மனத்தைப் பற்றிய கதை. ஆனால் நாவல் பெரும்பாலும் ஆச்சியின் பார்வை வழியாகவும், இளைஞன் திரவியின் விழிப்புடன் கூடிய மனம், பார்வை வழியாகவும், நமக்குக் காணக்கிடைக்கும் வாழ்க்கையின் தத்ரூபமான பாத்திரங்களால் நிரம்பியது. அண்டை வீட்டுக்காரர்களும், உறவினர்களும் நாவலின் ஒவ்வொரு காட்சியிலும் குவிந்து, ஒவ்வொருவரும் வாழ்க்கையின் கவர்ச்சிகரமான ஒரு அம்சத்தின் தோற்றத்தைத் தருகின்றனர்.

நாவலின் தொடக்கம் கதாநாயகியை நமக்கு அறிமுகப் படுத்துகிறது:
சிங்க விநாயக தேவஸ்தானத்துப் பிள்ளையார் கோயில் நிர்மால்யப் பூஜையின் தீபாராதனையில் எழும்பிய மணியோசைச் சிதறல்கள் மார்கழி மாத வைகறைக் குளிரின் ஊடே கன்னங்கரு இருளில் பிரவகித்துக் கிழக்கு நோக்கி நின்ற கோவிலைச் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி, கிழக்கு மேற்கில் கிடந்த நெடுந்தெரு முனையில் சென்று சேருகையில், ஆன்மீகத்தின் அடக்கத்தொனி மட்டுமே மிஞ்சியிருந்தது. 
தெருவில் எதிரும் புதிருமாய் நின்ற வீடுகளில் அதிகமும், பழைய காலத்துச் சின்ன வீடுகள் தான். இடை இடையே ஒருசில வீடுகளில் நாகரிகம் அழமாட்டாக் குறையாகத்தான் கைவண்ணத்தைக் காட்டி விட்டுச் சென்றிருந்தபோதிலும், மின்சாரம் போன்ற வசதிகள் அந்தத் தெருவினுள் நுழையவில்லை. 
தெருமுனையில் வடக்குப் பார்த்து ஒரு சின்னப் பழங்கால வீடு. காலப் பழக்கத்தினால் கறுத்துச் செல்லரித்துவிட்ட ஒற்றை வெளிக்கதவு, உள்ளே கதவைத் தாண்டி வெளிமுற்றத்திற்குப் போகும் வழிபோக இரு பக்கங்களிலும் படிப்புரை, அதாவது ஒட்டுத் திண்ணை - இடப்புறம் ஒரு ஒட்டுத் திண்ணை , வலப்புறம் சாணி மெழுகி விஸ்தாரமாகக் கிடந்த ஒரு வெளித் திண்ணை ... அதில் ஒருக்களித்துப் படுத்திருந்த உண்ணாமலை ஆச்சி, கோவில் மணியோசையின் அடக்க அரவத்தில் வழக்கம் போல் விழித்துக்கொண்டு, 
"ஆண்டவனே... எம்பெருமானே ... சிங்கவி நாயகா...', என்றெல்லாம் தன் சோம்பல் முறிப்பு, அடுக்கடுக்கான கொட்டாவி இவைகளின் கூடச் சொல்லிவிட்டு எழுந்து இரண்டு கால்களையும் தரையில் நீட்டிக்கொண்டு உட்கார்ந்து கொண்டாள். 
வீட்டின் பின்பக்கக் களத்தில் காலூன்றி இன்னும் வெளிச்சம் வராத திறந்த முற்றத்தின் மேலே தெரிந்த கருமையான ஆகாசப் பின்னணியில் பூதாகரமான, தலையை மட்டும் எட்டிக் காட்டும் தென்னை மர ஓலைப் பீலிகளை மறக்காமல் இரு கண்களையும் நன்றாகத் திறந்துவைத்துப் பார்த்துக்கொண்டாள். காலையில் ஏதாவது தரித்திரத்தின் முகத்தில் விழித்து, அனர்த்தங்களை வரவழைக்க அவளுக்குச் சம்மதமில்லை . 
"தெங்கு கற்பக விருட்சமல்லவா? காலம்பரக் கண் விழிக்க அதைவிட ஐசுவரியமானது வேறே என்னத்தெ இருக்கமுடியும்?'' என்பதுதான் உண்ணாமலை ஆச்சியின் திடமான நம்பிக்கை. குளிரால் விறைத்துப் போய்க் கிடந்தது கால். இடது காலில், "சின்னப் புள்ளையில் வள்ளியாற்றில் குளிச்சதில் கிடைச்ச சம்பாத்தியம்'' என்று ஆச்சி பெருமைப்பட்டுக் கொள்ளும் 'மந்து'-அதாவது யானைக்கால் வியாதி. மாசமொரு முறை வரும் 'வாதப் பனி'யால் அது விருத்தியாகி, நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாகப் பெருகி விட்டிருந்தது. ஆச்சியின் சிகப்பு நிறத்தாலும் இடை விடாத எண்ணெய் அபிஷேகத்தாலும் அது மினுமினு -வென்றிருந்தது. 
இன்றுவரை இடைவெளியில்லாது தொடர்ந்து கொண்டிருக்கும் அசுர உழைப்பின் தீட்சண்யத்தில், தள்ளாமை காரணமாக வாதத்தின் தொல்லையும் தன் பங்குக் கடனைச் செய்துகொண்டிருந்ததால் சுள்சுள் என்று உளைந்து கொண்டிருந்த கால்களை ஒன்று மாற்றி ஒன்றாக, இருந்த இருப்பிலேயே, பெருவிரல் நுனிமுதல், ஒரு காலத்தில் இரட்டை நாடியாக வாட்ட சாட்டமாக இருந்து ஆட்சிபுரிந்து, இப்போது குச்சி போலாகிவிட்டபோதிலும், கொஞ்சம் நஞ்சம் சதையின் அம்சம் மீதியிருந்த தொடைவரை தடவிவிடத் தொடங்கினாள். ஆச்சி உறங்கினாள் என்றால், உறங்கின ஆச்சி விழித்தாள் என்றால், வழக்கமான இந்த ஆசன அப்பியாசமும் தவறாமல் நடைபெற்றிருக்கும் என்று அர்த்த ம்....! 
ஆச்சியின் பக்கத்தில் போர்வைக்குள் முடங்கிக் கிடந்தவாறு குளிரோடு மல்லிட்டுக் கதகதப்புச் சுகத்தை அனுபவித்துக் கொண்டிருந்த ஆச்சியின் அருமாந்தப் பேரன் திரவியம், “ஆச்சி.... அதுக்கிடேலே மணி அஞ்சாயிட்டா?'' என்று போர்வையில் வாய்வரை மட்டும் இடைவெளி கொடுத்துக் குளிரில் உறைந்த சத்தத்தை வெளியேற்றினான். 
நிதானமான நடை 
பெரும்பாலான வெற்றிகரமான இந்திய நாவல்களில் அமைந்திருப்பதைப் போல, நாவலின் தொடக்கம் சாவதானமானதாகவும், மெதுவாகவும் அமைந்து நாவல் முழுமைக்கும், நாவலின் நடையை ஒழுங்கமைத்துக் கொடுக்கிறது. கற்பனை நாவலாசிரியன் மனத்தில் கொள்ளவேண்டிய முக்கியமான விஷயம், நாவலின் நடை, இந்தியாவில் வாழ்க்கை மிகவும் நிதானமானதாகும். இங்கு பெரும்பாலானவர்களுக்கு என்ன செய்வது என்று புரியாமலிருக்கிற அளவிற்கு அதிக நேரம் இருக்கிறது. மேலும், யதார்த்த வாழ்க்கையையும், யதார்த்தமான குணச்சித்திரங்களையும் உண்மையாகச் சித்தரிப்பதற்கு விவரங்களைச் சாவதானமாக அமைப்பது இந்திய நாவலாசிரியனின் வலுவான அம்சங்களில் ஒன்றாகும். ஒரு நாவலை நகரம் சார்ந்ததாகவோ அல்லது வேறு நாகரீகமான அமைப்பைச் சார்ந்ததாகவோ படைக்கும்போது இந்தச் சாவதானமான போக்கு மறைந்துவிட வேண்டும். ஆனால் நமது பாரம் பரிய நாவல்கள் பலவற்றில் காணப்படுவதைப் போல அல்ல. 

நாவல் முடிவுறும் தறுவாயில், கடைசிச் சம்பவத்தில் ஒரு மிகை நாடகச் சம்பவத்தைச் சித்தரிப்பதற்காக இந்தச் சாவதானமான நடையை ஆசிரியர் கைவிடுகிறார். இந்த முழு நாவலிலும் உள்ள மிகவும் பலவீனமான கட்டங்களில் (எழுத்தில் அது இருக்கிறது) அதுவும் ஒன்றாகும். இருந்தபோதிலும், உண்மையான கூர்ந்த நோக்கு, நுட்பமாக விளக்குவதில் பொறுப்புடன் கூடிய தன்மை, நம்மில் பெரும்பாலோருக்குப் பரிச்சய மான பெரும்பான்மையான மனித தருணங்களைக் கூர்ந்து நோக்கிய உள் நோக்கு, விதியின்மீதோ அல்லது எந்தக் கடவுள்களின் மீதோ (அந்தக் கடவுள்கள் யாராக இருந்தாலும்) பாரத்தைப்போட்டுவிட்டு, 'எல்லாம் விதிப் படி நடக்கும்; எல்லாம் அவன் செயல்' என்ற ரீதியில் எதிலும் ஒட்டாமல் இருக்கும் பரந்துபட்ட தன்மை ஆகிய, நாவலின் சிறப்பியல்புகளை அது கெடுத்துவிட வில்லை. ஆனால் நாவலாசிரியர் அறிந்தோ அறியாமலோ தனது கடைசிப் பத்தியின் மூலம் மிகை நாடகத் தன்மைக்காக இவ்வாறு இடங்கொடுத்து விடுகிறார். அது நாவலின் முதல் பத்திகளுக்குத் தனித்த சிறப்பு ஏற்படுத்தித் தரும் விதத்தில், குறைசொல்லி முணு முணுக்கும்படி செய்து விடுகிறது. உண்ணாமலை ஆச்சி மட்டும்தான் இந்தச் சம்பவத்தின் போது இல்லை. குடும்பச் சூழ்நிலையில் புரட்சிகரமான மாறுதல்கள் - நிகழுவதற்கு முன்பே அவள் இவ்வுலகை விட்டுப் போய் விட்டாள்: 
"கனவில் நடப்பதைப்போல் அப்பா, அம்மா, நாகு அக்கா, - திரவி ஆகியோர்கள் தெருவைவிட்டு வெளியேறிக் கொண்டிருந்தார்கள் ........ 
" நடைப் பிணங்களாகப் பஸ்ஸில் ஏறி உட்கார்ந்ததும், அனந்தகோடி எண்ணப் பிரவாகங்கள் நெஞ்சில் குமிழியிட்டுக் கொந்தளித்து எழும்ப , கண்ணீர்த் திரையால் மங்கலாய்த் தெரிந்த கீழத் தெருவை அவர்கள் கடைசி - முறையாகப் பார்த்துக்கொண்டார்கள் ..... 
கீழத்தெரு சிங்கவி நாயக தேவஸ்தானத்துப் பிள் ளையார் கோயில் மணியோசைச் சிதறல்கள் காற்றில் நீந்தி அங்கே வந்து சேர்ந்தபோது, ஆலயமிருந்த திசையைப் பார்த்து, மனமொன்றிக் கரங்கூப்பித் தொழ அப்பா மறக்கவில்லை .......'' 
நாவலின் - தொடக்கப் பத்திகளுக்கும் இறுதிப் பத்தி களுக்குமிடையில் நல்ல வசதியாகவுமில்லாமல், ஏழ்மைத் துயரிலும் வாடாமல் வாழ்ந்த ஒரு குடும்பத்தைப் பற்றிய கதை விரிகிறது. ஆனால் சந்தோஷமும் துன்பமும் இரண்டும் கலந்துமோ கலக்காமலோ-அந்தக் குடும்பத்தில் எப்போதும் நிறைந்திருந்தன. அது ஒரு பெரிய குடும்பம். பெரும்பாலான இந்தியக் குடும்பங்களைப்போல அந்தக் குடும்பமும் பலதிறப்பட்ட உறவினர்களையும், உயர்ந்த அனுபவங்களையும் கொண்டிருந்த பேறுபெற்ற குடும்பமாகத் திகழ்ந்தது. மலையாளம் பேசும் பகுதியில் வாழ்கிற தமிழர்களால் இந்த நாவலில் அந்த அனுபவங்கள் வளமையடைந்திருக்கின்றன. அந்த வளமையை வாழ்க்கையின் உள்ளடக்கத்திலும், மொழியின் உள்ளடக்கத்திலும் நம்மால் காணமுடிகிறது. மலையாளம் கலந்த தமிழ்மொழியை நாவலில் நீல பத்மநாபன் தொடர்ந்து நிறைய உபயோகப்படுத்தியிருக்கிறார். இந்த நாவலில் மட்டுமல்ல; தொடர்ந்து வெளி வந்த அவரது பிற நாவல்களிலும் கையாளப்பட்டிருக்கிற இந்த மலையாளம் கலந்த தமிழ், மதுரைப் பல் கலைக் கழகத்தில் டாக்டர் பட்டத்துக்கான ஆராய்ச்சிக்கு ஒரு பொருளாக மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. 
ஆற்றல்வாய்ந்த உத்தி 
குடும்பத்தின் பழைய பெருமைகளைக் குறித்து, தனது சொந்தக் கண்ணோட்டத்தில் ஒரு பாட்டி கதை சொல்வது, இயற்கையானவொரு உத்தியாக இருக்க வேண்டும். அநேக நாவலாசிரியர்கள் அதை மிகவும் வலுவாகப் பயன்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் எப்படியோ அது உண்மையின்பாற்பட்ட விஷயம் என்பதாக உணரப்படவில்லை. பாட்டியிடமிருந்து கடந்தகாலக் கதைகளைக் கேட்டுப் பேரன் மனத்தில் ஈர்த்துக் கொள்கிற உத்தியைக் கொண்ட வேறு ஒரு நாவலை நான் இதுவரை பார்த்ததில்லை. கடந்தகால விஷயங்கள் இந்த நாவலில் வெற்றிகரமாகக் கையாளப்பட்டிருப்பதைப்போல வேறு எதிலும் கையாளப்படவில்லை. . அந்தக் குடும்பத்தின் தந்தை மிகவும் கண்டிப்பானவர். அவர் அதிகம் படித்தவரில்லையெனினும், தன் பையன் பள்ளிப் பாடங்களை ஒழுங்காகப் படிக்கவேண்டும் என்று வற்புறுத்துகிறார். ஆனால் பையனோ ஆச்சியின் கதைகளில் மிகுந்த சுவாரஸ்யம் காண்கிறான். மற்றவர்கள் அந்தக் கதைகளைக் கேட்டு அலுத்துப் போயிருக்கக் கூடும். ஆனால் அவன் அலுத்துப் போகவில்லை. நாவலின் முதல் காற்பகுதியின் கதையாக்கத்தை ஆச்சி தான் முழுதாக ஆக்கிரமித்துக் கொள்கிறாள் - உண்மையில் அவள் இறக்கும் வரையிலும். அவளது மரணத்திற்குப் பிறகுகூட, நாவலில் அவளது பிரசன்னம் வெகுவாக நிறைந்திருக்கிறது. பையன் வளர்ந்து வருகிறான்; பள்ளிக்குப் போகிறான்; இந்த உலகத்தைப் பற்றிய அறிவு அவனுக்குச் சிறிது சிறிதாகப் புலர்கிறது. இதற்கு முக்கியக் காரணமாக அமைவது, பாட்டியுடன் அவன் பேசும் பேச்சுக்கள். நீண்ட நாளைக்கு முன்பு நடந்த, கதையில் வருகிற ஒரு சம்பவத்தை இங்கு குறிப்பிடுகிறேன். உண்மையில் அவர்கள் இப்போது வசிக்கிற இடத்துக்கும் அது நடந்த இடத்துக்குமிடையில் உள்ள தூரம் மிகவும் நெடியது. 
பாட்டி சொல்ல ஆரம்பித்தாள் :--
“ரொம்ப ரொம்ப பளைய காலத்திலே இங்கேயிருந்து ரொம்ப வடக்கே காவேரிப்பூம்பட்டணமுண்ணு ஒரு பட்டணம்! அங்கே ஒரே ஒரு ராசா ராச்சியம் ஆண்டு வந்தாரு..........
"அப்படியிரிக்கையிலே ஒரு நாளைக்கு இந்த ராசாவுக்கு ஒரு அசலூரு ராசாகிட்டேயிருந்து வெலை மதிக்க முடி யாத கொஞ்சம் பவிளங்க (பவளம்) கிடைச்சுது...'' 
இரண்டு வீடு தள்ளி தெரு நடையைப் பெருக்கிக் கொண்டிருந்த தலையாட்டிக் கிழவி, உண்ணாமலை ஆச்சியிடம் ஏதோ கேட்டதால் பாட்டியின் கதையில் தடை ஏற்பட்டது. ஆனால் குழந்தைகள் பாட்டியை வற்புறுத்தவே அவள் மீண்டும் சொல்ல ஆரம்பிக் கிறாள். “உம்...எதுவரை சொன்னேன்?” "ராசாவுக்கு பவிளம் கிடைச்சுது.” . 
"ஆமா...மக்கா.... பவளம் கெடச்சு. பொடீ பவளம்! அதுக்க வெளிச்சத்திலே கண்ணெல்லாம் கூசீட்டு! அதைக் கொருத்து மகாராணி களுத்திலே போடணூம்ண்ணு ராசாவுக்கு இன்னமட்டூண்ணு இல்லே கொதி! ஆனா... அதுலே ஓட்டையே இல்லை...! 
“பாவம்...ராசாவுக்கு ஓட்டையில்லாத சப்பட்டை பவளத்தைக் கொடுத்து பத்திச்சுட்டானா?'' என்று சாலம் அனுதாபப்பட்டாள். 
"சலம்பாமெ கெடட்டீ? எடைலே கெடந்து பெரிய ஆளுபோல பொரியாதெ! உம்... கடைசீலே....?" என்று சாலத்தை அடக்கிவிட்டு ஆச்சியைத் தூண்டினான், திரவி. “கடைசீலே என்னா ...? கொட்டாரத்து பெரிய பெரிய தட்டான்மாரெல்லாம் வந்து பாத்தான், பாத்தான் படிச்ச வித்தை பதினெட்டும் பாத்தான்...ம்ஹூம்... இம் புடுபோல கடுகு மாதிரி இருந்த பவளத்திலே தோரம் போட ஊசி கீசி எதையாவது மொரட்டுத்தனமா உபயோகிச்சா விலைமதிப்பில்லாத அந்த பவளமே ஒடைஞ்சு போனால்....? ஆராலையும் முடியல்லே. இவ்வளவு வெலை மதிப்பில்லா பவளம் கையிலே கெடைச்சும் ராசாத்தி களுத்திலே கொருத்துப் போட்டு அளகு பாக்க முடியாமெ ஆயிட்டேண்ணு ராசாவுக்கு ஆத்தாமை சொல்லி முடியாது...?
"மக்கா... அகத்தெப் போய் அந்தக் கோலப்பொடி டப்பாவை சித்தே எடுத்தூ ட்டு வா.... என் கண்ணுல்லே...!” என்று பாட்டி கதையை முறித்து ஒரு குறுக்கீட்டை ஏற்படுத்தினாள்.. 
இந்தச் சமயத்தில் எங்கோ போய்விட்டு அவசரம் அவசரமாய்த் திரும்பிக் கொண்டிருந்த ஏக்கிமாடன் பிள்ளையின் மனைவி குழந்தை பெற்றுவிட்டாளா என்பதைப் பாட்டி விசாரிக்க, அவர் பதில் சொல்ல... பொறுமையிழந்து அண்ணனும் தங்கையும் கதையின் முடிவுக்காகக் காத்திருந்தனர். “எப்படியாச்சி அந்த பவளத்துலே தோரம் போட்டாரு...?" என்று நிகழ்காலத்திலிருந்து நூற்றாண்டு களுக்கு முந்திய சென்றகாலத்துக்கு வலுக்கட்டாய மாக ஆச்சியை இழுத்தான் திரவி. பாட்டி தொடர்ந் தாள்: | 
“கடைசியிலே ஒருத்தராலையும் முடியாதூண்ணு ஆனப்பம் கொட்டாரத்திலே இருந்த பேருகேட்ட செட்டியாரைக் கூப்பிட்டு, “ஓய் செட்டியாரு! நீரு என்னத்தைச் செய்வீரோ! எதைச் செய்வீரோ, எனக்குத் தெரியாது. நாளைக்கு விடியுமுன்னே இந்த பவளங்க அம்பாடையும் கொருத்து இங்கணெ கொண்டுவந்துவிட வேண்டியது. இல்லாட்டெ ஒன் தலை போயிடும்” அப்படிண்ணு ராசா உத்தரவு போட் டாரு." 
"அட முடிவானே! பாவம். செட்டியாரு என்னே வாரு? மகா சீத்துவம் கெட்ட ராசாதான், இல்லையா ஆச்சி?'' என்று ராஜாவின் அநீதியில் ஆர்ப்பரித்த சாலத்தை, 
“ஒனக்கு எனுத்தெட்டீ தெரியும்? ராசா வச்சதுதான் சட்டம், அவரு சொன்னா சொன்னதுதான், இல்லையா ஆச்சி?'' என்று சாலத்தை மடக்கிய திரவி ஆச்சியைத் துரிதப்படுத்தினான். 
“பவளத்தை வாங்கீட்டு வீட்டுக்கு வந்தாரு செட்டியாரு. அவருக்கு கையும் ஓடல்லே, காலும் ஓடல்லே ...! அவருக்கு தங்கம்மெ, தாயம்மேண்ணு ரண்டு பொம்பளைப் புள்ளைங்க; ரண்டு பேரும் கொமரிக! பாக்க அசல் ரம்பைபோல இருக்கும். ரொம்ப புத்தியுள்ள பொண்ணுக. ஐயா வெசனமா இருப்பதைப் பாத்தூட்டு, ஏன்ண்ணு கேட்டா ரண்டு பேரும்! இவரு சொன்னப் பம் பவளத்தை இப்படி தாருமுண்ணு கேட்டுதாம்... இவரும் எடுத்து கொடுத்தாரு...! 'ஐயா போய் சொக மாட்டு ஒறங்கட்டும்... நாங்க கொருத்து வச்சிருக்கோம்' முண்ணு சொல்லீட்டு வந்து குட்டியிரண்டும் ஆலோ சிச்சு பாத்தது. நல்லபுத்தி உள்ளதுக இல்லையா? எறும்பு புற்றுக்க கிட்டே எல்லா பவளத்தையும் வரிசையாட்டு வச்சிட்டு, எல்லா பவளத்தின் ரண்டு பக்கத்தில் ஓட்டை போடவேண்டிய இடத்தில் மட்டும் ஒரு ஊசிலெ கருப் பட்டித் தண்ணியெத் தொட்டு வச்சுது. இதுக்ககூடெ 
ஒரு பட்டு நூலுக்கத் தும்பிலை யும் கருப்பட்டித் தண்ணியைத் தொட்டு வச்சுது. காலம்பரைப் போய்ப் பாத்தா , வரிசையாப் போயிட்டிருந்த சிற்றெறும்புக இந்த நூலையும் எடுத்துக்கிட்டு, இனிப்பு இருந்ததினாலெ ஒவ்வொரு பவளமா அரிச்சு அரிச்சு ஊர்ந்து, கடைசீலே இருந்த பவளம் வரையிலும் குடைஞ்சு ஓட்டை போட்டூட்டே வெளியில் வந்துட்டதினாலே, நூலும் எல்லா பவளத்திலேயும் கணக்காட்டு கொருக்கப்பட்டிருந்தது!'' 
ஒரு சரியான பாட்டி கதை. ஆமாம்; ஆனால் அதன் தொடர்பான பின்விளைவுகள், செட்டியாரின் புத்தி சாலித்தனமும் அழகும் நிறைந்த இரண்டு பெண்களுக்கும் செட்டியார் சமூகத்துக்கும் பாதகமாக அமைந்தன. செட்டியார் தன் பெண்களின் கெட்டிக்காரத் தனத்தை ராஜாவிடம் சொன்னதும், . 
'இப்படிப்பட்ட புத்தியுள்ள பொம்பளைக இருக்க வேண்டிய இடம் ஒரு செட்டிக்க வீடல்ல, ராசா கொட்டாரம் தான்.... ரண்டு பேரையும் உடனேயே எனக்குக் கெட்டித் தா'ண்ணு ராசா ஆசைப்பட்டு உத்தரவு போட்டு விட்டான். ஆனால் செட்டியாருக்கும் அவரது சமூகத்திற்கும் அதில் உடன்பாடில்லை. அவர்கள் தங்கள் ஜாதிப் பெண்களை, தங்கள் ஜாதிக்கு வெளியே வேறுயாருக்கும் திருமணம் செய்துவைக்க இசைய மாட்டார்கள். தங்கள் ஜாதியைவிட்டு வேற்று ஜாதியில் திருமணம் செய்விப்பதைவிடச் சாவே மேல் என்று கருதிய செட்டியார், தன் இரு பெண்களையும் அழைத்து வீட்டிலிருந்த நிலவறைக்குள் போகச்சொல்லி மேலே மண்ணை வாரி நிறைக்கச் செய்து நிலவறையை மூடிவிட்டார். புத்திசாலிகளான அந்தப் பெண்கள் தப்பித்துக் கொண்டிருக்கக்கூடும்; ஆனால் பாரம்பரியத்தைக் காப்பாற்ற வேண்டிய இன்றியமையாமையினால், அவர்கள் கடமையுணர்வுடன் தம் தந்தையின் சொல்லுக்குக் கீழ்ப்படிந்தனர். ஏமாற்றமுற்ற அரசன் தங்களைப் பழிவாங்குவான் என்று அஞ்சிய செட்டியாரும் அந்த நிலவறையில் புகுந்து மண்மூடி இறந்துபோனார். அவரது இனத்தார் அனைவரும் இரவோடிரவாகக் காவேரிப்பூம்பட்டணத்தை விட்டு நீங்கிப் பல்வேறு கஷ்டங்கள், தொல்லைகள், துன்பங் களை அனுபவித்து, பிறகு கேரளத்தில் உள்ள ஒரு கிராமத்தை அடைந்தார்கள். அவர்கள் தான் திரவியின் முன்னோர். 
புதிய விஷயங்கள் 
ஆச்சியின் கதைகள் கடந்த காலத்தைப் பற்றிச் சொல்வதோடு, நிகழ்காலத்தில், உலக நடப்புகளையும் சொல்லிச் சிறுவன் திரவிக்கு அறிவுறுத்துவனவாக அமைந்தன. பற்பல உறவுமுறைகள் பற்றி அவள் அவனுக்குத் தெளிவு படுத்தினாள். அவற்றின் தொடர்பான, எல்லோருக்கும் நன்கு தெரிந்த பாரம்பரியப் பின்விளைவுகளைப் பற்றியும் அவள் விளக்கினாள். வளர்ந்து வருகிற அந்தச் சிறுவனின் உணர்வை முள்ளாகத் தைத்த விஷயம், அந்தத் தெருவிலுள்ள ஆண்கள் தம் மனைவியருக்கு உண்மை யானவர்களாக இல்லாமலிருந்ததாகும். 
பாரம்பரியக் குணங்களை ஆச்சி அவன் மனத்தினுள் நிறையப் புகட்டியிருந்தபோதிலும், தனது சகோதரியின் நிலைமையை எதிர்கொண்டபோது அவன் புதிய விஷயங்களுக்குத் திரும்பினான். அவளுடைய திருமணத்தில் அவன் பங்கு கொள்ளும்போது அவன் சிறு பையனாக இருந்தான். அவள் குழந்தை பெறும் தகுதியற்றவள் என்று கணவனால் ஒதுக்கி வைக்கப்பட்ட சம்பவத்தைக் 'காணும்போது அவன் பள்ளி மாணவனாக இருந்தான். என்னதான் முயற்சி செய்தும், அவன் சகோதரிக்கு இழைக்கப்பட்ட கொடுமையைக் கிராமப் பஞ்சாயத்தினரால் சரிசெய்ய முடியவில்லை , 
“நாகு அக்காளை மாப்பிள்ளை வீட்டிலிருந்து விரட்டி விட்ட சம்பவத்தின் திடீர் அதிர்ச்சி ஒடுங்கி, தொடர்ந்து கொண்டிருக்கும் ஒரு அன்றாட யதார்த்த நிலைமை ஆகிவிட்டது. 
"காலம் எல்லாவற்றையும் ஆற்றிவிடும். பழையபடி வீட்டு விஷயங்கள் நடந்து கொண்டிருந்தன ... நாகு அக்கா எல்லோருடைய மனசிலும் உறுத்திக் கொண் டிருந்தாள். ஆனால் அவள் இப்போது எழுந்திரிச்சு வீட்டு வேலைகளையெல்லாம் வலிய வந்து செய்யத் தொடங்கினாள்....... என்ன நினைத்துக் கொள்வாளோ, திடீரிண்ணு வாரியலை எடுத்துக்கிட்டுப் போய் களம் முழுதையும் பெருக்கத் தொடங்கி விடுவாள் ...பிறகு கிணற்றிலிருந்து தண்ணீரை இறைச்சு இறைச்சுத் தொட்டி நிறைஞ்சு வடிவதுகூடத் தெரியாமல் விட்டுக் கொண்டே இருப்பாள். ஒண்ணும் கிடைக்காவிட்டால் கொஞ்சம் நெல்லைக் காயப்போட்டுக் குத்தத் தொடங்கி விடுவாள். 
“இப்படி எப்போ பாத்தாலும் ஏதாவது வேலை செய்து கிட்டே இருக்கணுமென்ற ஒரு போக்கில் போய்க் கொண்டிருந்தாள். உம்... அப்படியாவது தன் கவலையை * மறந்துவிடப் பாடுபடுகிறாளோ என்று திரவிக்குக் தோன்றும்.” 
அவனுடைய தந்தையைப் பொறுத்தவரையில் எதிலும் மாற்றமில்லை. படிப்பை முடித்து ஒரு வேலையில் அமர்வதற்கு முன்னால், தான் பெரியவனாகவும் விஷயம் தெரிந்தவனாகவும் ஆகிவிட்டதாகவோ, தன்னுடனேயே சேர்ந்து வளர்ந்துவந்த பிரச்சினைகளைச் சமாளிக்கத் தகுதியுடையவனாக உருவாக்கிவிட்டதாக உணர்வதற்கோ திரவியால் முடியாது; செயல்படவும் முடியாது. திரவியைப் பற்றிய இந்தக் கோணம் ஆசிரியரால் மிக இயல்பாகவும், கலாபூர்வமாகவும், முழு நிறைவாகவும், -திற்மையாகவும் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. தன் 
சகோதரி நாகுவைக் குறித்து, அவன் தன் அத்தானை நிதானமாக எதிர்கொண்டு பேசுகிறான். அவளை அவர் ஏற்றுக்கொள்ள மறுத்தபோது, ஒரு பெண் டாக்டரிடம் அவளைக் கூட்டிக்கொண்டு போய்ப் பரிசோதனை செய்யும் அடுத்த தீவிரமான ஒரு முயற்சியில் இறங்குகிறான்; ஆனால் அவன் அதைச் செயல் படுத்தும்வரை வீட்டில் யாரிடமும் சொல்லவில்லை. மருத்துவப் பரிசோதனை முடிந்தபிறகு வீட்டில் அதைப் பற்றி அவன் சொல்கிறான்; அந்தப் பரிசோதனையில் அவள் குழந்தை பெறும் தகுதியுடையவள் என்று நிரூபிக்கப்பட்டதைக்கொண்டு அவளுடைய கணவனை -- அவன் மறுபடியும் சந்தித்து அவளை ஏற்றுக்கொள்ளும் படி வாதாடுகிறான். அதன் பிறகும் அவர் அவளை ஏற்றுக்கொள்ள விரும்பாமல் போகவே, அவளை வேறொருவனுக்குத் திருமணம் செய்விக்கும் மிகத் தீவிரமான முயற்சியில் இறங்குகிறான்; ஆனால் அந்த முயற்சி துக்ககரமானதாக முடிந்துவிடுகிறது. 

இந்தியச் சூழ்நிலையில் விமரிசனப் பரீட்சைகளை எதிர் கொண்டு நிற்கக்கூடிய ஓரிரு டஜன் நாவல்களில் 'தலை முறைகளும் ஒன்று. சிறப்பு வாய்ந்த திறமையான ஒரு கற்பனை முயற்சி. உத்திபூர்வமாகவும் சிறந்த படைப்பு. நாவலின் பல பகுதிகளில் ஆசிரியர் கையாண்டிருக்கும் உத்திகள் பெரும்பாலும் உணர்வுபூர்வமற்றிருந்த போதிலும், மானுட யதார்த்தத்துக்கும் அனுபவத்துக்கும் அவை நெருங்கிய தொடர்பு கொண்டவை. 

Monday, November 18, 2019

யானையின் சாவு - சார்வாகன்


யானையின் சாவு - சார்வாகன்

ரங்கநாதனுக்குக் கோபமும் எரிச்சலும் அத்துமீறிக் கொண்டு வந்தது. குழந்தையின் முதுகில் அங்கேயே ஓர் அறை வைக்கக் கையை ஓங்கி விட்டான். ஒருவரையொருவர் இடிச்சு மோதிக்கொண்டு வேர்வை நெடியும் தூசியும் பல்வேறு அழுகல் கறிகாய் வாசனைகளும் நிறைந்த நட்டநடு கடைத்தெருவில் செல்லுலாயிடு பிளாஸ்டிக் பொம்மைகளைப் பரப்பி வைத்திருந்த அந்தக் கிழவனை விட்டு நகர மாட்டேன் என்று சத்யாக்கிரகம் செய்து கொண்டிருந்த குழந்தையின் கையை ஆத்திரத்துடன் அமுக்கிப் பிடித்தான். அகத்திலே உடைப்பெடுத்துவரும் கோபத்தினால் கண்களைச் சுருக்கி 'புஸ் புஸ்' ஸென்று மூச்சு விட்டுக்கொண்டு "நீ வரயா இல்லை நான் ஒன்னை இங்கியே விட்டுட்டு போடட்டுமா?" என்று சீறினான். குழந்தை அவனை நிமிர்ந்து பார்த்தது. தும்பியின் சிறகைப் போலிருந்த அதன் கண்கள் பளபளத்தன. ஈனக் குரலில் எனக்கு யானை வேணும்பா என்று கெஞ்சியது.

அவன் காஞ்சிபுரம் கோவிலில் குழந்தைக்கு யானை காட்டினதிலேயிருந்து இரவும் பகலும் இதே பல்லவிதான். 'எனக்கு யானை வேணும்... எனக்கு வேணும்ப்பா.' தன் பொருளாதார நிலையில் யானையைக் கட்டித் தீனி போட்டு மாளாது என்று குழந்தையைப் புரிந்துகொள்ள வைக்க அவனுக்கு ரெண்டு வாரங்கள் ஆச்சு. நாலு நாளாய்த்தான் யானையை மறந்திருந்தான். இப்போ மறுபடி பிடிச்சுக் கொண்டது.

நடைபாதையோரத்தில் வியாபாரம் செய்யும் கிழவனை வெறுப்போடு பார்த்துவிட்டு, “இங்கே யானை இல்லை, வா வீட்டுக்குப் போகலாம்" என்று குழந்தையின் கையை இழுத்தான். "அதோ இருக்கே" - குழந்தை கையை நீட்டி ஒரு மூலையைக் காண்பித்தது. அது காட்டிய இடத்தில் நிசமாகவே ஒரு யானை இருந்தது. கிளிப்பச்சை நிறத்தில் உடம்பு, முதுகில் தங்க வர்ணத்தில் வேலைப்பாடுகளும், ரோஸ் நிற வாயும், நல்ல எலுமிச்சை மஞ்சளில் தந்தமும் கொண்டு தும்பிக்கையின் ரோஸ் நிறமான பின்பாகம் தெரியத் தூக்கி சலாம் போடும் நிலையில் நின்று கொண்டிருந்தது அந்த யானை. அத்தனை குப்பை சாமான்களுக்கிடையேயும் அதைக் கண்டுபிடித்துவிட்ட குழந்தையின் கண் கூர்மையை மனசில் சபித்துக் கொண்டே அதை வாங்கி விடலாம் என்று ஜேபியில் கைவிட்டான். மறுபடியும் அவன் பார்வை அந்த யானைமேல் பாய்ந்தது. அழகுணர்ச்சி மிக்க அவனுக்கு - அழகுணர்ச்சி தன்னிடம் நிறைய இருக்கிறது என்று பெருமைப்பட்டுக் கொண்டிருந்த அவனுக்கு அந்தப் பிளாஸ்டிக் யானை துதிக்கையைத் தூக்கி ரோஸ் வாயைக் காட்டி அவனை ஏளனம் செய்வது போலிருந்தது. யானைக் குலத்தையே, ஐராவதம் முதல் வரதர்கோவில் யானைவரை இதுவரை உலகத்தில் இருந்த, இனிமேல் இருக்கப் போகிற அத்தனை யானைகளையும், அதோடு தன்னையும் பரிகாசம் செய்வது போலிருந்த அந்தப் பச்சை யானை மேல் அவனுக்குத் திடீரென்று அளவுக்கு மிஞ்சின கோபமும் ஆத்திரமும் பொங்கிக் கொண்டு வந்தது.

"சீ இது வாணாம் அசிங்கம், யானை எங்கியாவது பச்சையாவா இருக்கும்? நான் உனக்கு நல்ல கருப்பு யானை வாங்கித் தாரேன், இப்போ வீட்டுக்குப் போலாம் வா" என்று மறுபடியும் குழந்தையை இழுத்தான். குழந்தை நிமிர்ந்து கண்களை அகல விரித்துக் கொண்டு அவனைப் பார்த்தது. "நெஜம்மா? "நெஜம்மாத்தான், நீயே பாரு!" அவன் வாக்குக் கொடுத்தபின் இருவரும் வீட்டைப் பார்க்க நடந்தனர்.

அவன் யானையை மறந்தாலும் அவனை மறக்கவிடவில்லை அந்தக் குழந்தை, "எங்கே யானை, எங்கே யானை, வாங்கித் தரேன்னியே" என்று அவனை அரிச்சு எடுத்துவிட்டது. " இந்த ஊர்லே நல்லதாக் காணும், நான் வெளியூர் போய் வரப்போ வாங்கி வரேன், ப்ராமிஸ் என்று சத்தியம் செய்தபின் அதன் துளைச்சல் நின்றது.

சொன்ன வாக்கை அவன் நிறைவேற்றியும் விட்டான். அது மர யானை. அப்படியொண்ணும் பிரமாதக் கலாசிருஷ்டியாக பிரமிப்பூட்டும் வகையில் இல்லாது போனாலும் கருப்பாக, கிட்டத்தட்ட கருப்பாக இருந்தது. தும்பிக்கை இருந்தது. வெள்ளைத் தந்தமும் இருந்தது, ரோஸ் வாய் இல்லை. யானைக் குலத்தையும் அவனையும் ஏளனம் செய்யவில்லை ,

அதை வாங்கி வந்தது முதல் வேறொரு விபரீதம். குழந்தை எப்போ பார்த்தாலும் யானையோடேதான். சாப்பிடும்போது அதுக்கும் சோறு வைக்க வேணும். அது தூங்கினப்புறந்தான் குழந்தை தூங்க முடியும். அந்த யானையின் விருப்பு வெறுப்புகளும் பிடிவாதமும் கோபமும் விளையாட்டும் அந்த வீட்டின் நடைமுறை வாழ்க்கையையே உலுக்கிவிட்டது.

அவனுக்கென்னமோ இது விபரீதமாகத்தான் பட்டது. என்னதான் குழந்தையென்றாலும் ஆறு வயசாச்சே. அந்தப் பொம்மை யானை ஓர் உயிருள்ள யானை மாதிரி, அதுவும் செல்லம் கொடுத்து கெட்டுப் போன ஒரு குழந்தை யானை மாதிரி வீட்டில் லூட்டியடிப்பது அவனுக்குச் சரியானதாகப் படவில்லை. "அது பொம்மை, மரம்; கல்கண்டு சாப்பிடாது, ஹார்லிக்ஸ் குடிக்காது, வேர்க்கடலையும் கரும்பும் கேட்காது" என்று ஒண்ணுக்குப் பத்துத் தரமாகச் சொல்லிப் பார்த்தான். "இது யானைதான். பொம்மையில்லை" என்று ஒரு நாள் பூராவும் குழந்தை அழுது ஆர்ப்பாட்டம் செய்தது. மறுநாள் குழந்தையும் யானையும் அவனோடு பேசவில்லை.

அவனுக்கு மனது ரொம்பவும் கஷ்டமாகப் போய்விட்டது. மூணாவது நாள் அவன் குழந்தையைக் கூப்பிட்டு "இது நெஜ யானைதான், நான்தான் இதுக்கு முன்னாலே சரியாப் பாக்கலை என்று மன்னிப்புக் கேட்கும் முறையில்
சொன்னவுடன், பார்க்க வேணுமே குழந்தையின் உற்சாகத்தை! "பாத்தியா நான் சொன்னா தெரியலியே, தும்பிக்கை இருக்கு, தந்தம் இருக்கு, காதைப் பாரு மொறமாட்டம், கருப்பு உடம்பு; இதைப் போயி ஆனை இல்லையின்னா? - ஆனைக்கி ஓம் மேலே ரொம்ப ஆசையாம், எப்படித் தடவிக் குடுக்க வரது பார்த்தியா?" என்று அடுக்கிக் கொண்டே போனது.

அன்று முதல் அந்த யானைக்கு ரெண்டு விளையாட்டுத் தோழர். குழந்தையும் ரங்கநாதனும் அதைக் குளிப்பாட்டுவார்கள். அதற்குச் சோறு போடுவார்கள். அதோடு காட்டில் வேட்டைக்குப் போவார்கள். காயம் பட்டால் கட்டுக் கட்டி விடுவார்கள். கோபம் வந்து அடிப்பார்கள். சோறு போடாமல் தண்டனை கொடுப்பார்கள். செய்த தப்புக்கு அது வருந்தி கெஞ்சி மன்னிப்புக் கேட்க வரும்போது அதற்குப் புத்தி சொல்வார்கள். அதுக்குக் கோபம் வரும்போது அதன் கையில் அகப்படாது ஒளிந்து கொள்வார்கள். அது சுமுகமாய் இருக்கும் போது சர்க்கஸ் வித்தைகள் கற்றுக் கொடுப்பார்கள். இப்படியாக எல்லாம் இருவரும் சேர்ந்தே செய்து வந்ததன் பலனாக ரங்கநாதனுக்கு அந்த யானை ரொம்ப ரொம்பப் பழக்கமாகிவிட்டது. அதனுடைய மனநிலைகள், விருப்பு வெறுப்புகள் எல்லாம் அவனுக்கு அத்துப்படியாகிவிட்டன. சில சமயம் குழந்தை இல்லாதபோதுகூட அந்த யானை அவனோடு விளையாட வரும் அல்லது முரண்டிக்கொண்டு நிற்கும்.

மறுபடி அவன் வேலை நிமித்தமாக வெளியூர் போக வேண்டியிருந்தது. திரும்பி வரும் போது வழிநெடுக அவனுக்குக் குழந்தை யானை ஞாபகம்தான். புது விளையாட்டு ஒன்றைக்கூட கற்பனை செய்து வைத்திருந்தான். யானையை மீன் பிடிக்க வைக்கவேணும். சேற்றிலிருந்து அசரை மீனை அது தும்பிக்கையால் துழாவித் துழாவி எடுத்துக் கொடுக்க வேணும். பிறகு அது பெரிய மடுக் கரையில் உட்கார்ந்தபடி தூண்டிலுக்குப் பதில் தும்பிக்கையில் புழுவை வைத்துப் பிடிக்கவேணும்.... இன்னும் எத்தனையோ.

ரயில்வே ஸ்டேஷனிலிருந்து வீடுபோய்ச் சேர்ந்தபோது குழந்தையையும் காணோம், யானையையும் காணோம். வெளியே எங்கோ விளையாடப் போயிருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டான். சாயங்காலம் அவன் வெளியே போய்விட்டு வந்தபோது நேரம் அதிகம் ஆய்விட்டிருந்தது. குழந்தையும் தூங்கப் போய்விட்டிருந்தது. புது விளையாட்டை நாளைக்குக் கற்றுக் கொடுக்கலாம் என்று ஆறுதல் சொல்லிக் கொண்டான்!

மறுநாள் காலை ரங்கநாதன் குழந்தையைப் பார்த்தவுடன் அவன் கேட்ட முதல் கேள்வி 'யானை எங்கே? தான். ஏனென்றால் அதன் கையில் யானையைக் காணோம். அது எங்கயோ என்று அசுவாரசியமாக பதில் சொன்னது குழந்தை. அவனுக்கு ஒண்ணும் புரியவில்லை. ஏமாற்றமும் கோபமுமாக வந்தன.

"காணாம போக்கிட்டியா, இல்லே காட்டுக்கு ஓடிப்போயிடுச்சா?" என்று கேட்டான். அவன் காதுக்கு அது சாதாரணக் கேள்வி போல் தொனிக்கவில்லை. அதட்டலா? அழுகையா?

“ஊகும், இங்கேதான் எங்கியாவது கெடக்கும்” என்று சொல்லிக் கொண்டே குழந்தை பல் தேய்க்கப் போய்விட்டது.

"ஏய், புது யானை வெளையாட்டு கண்டு பிடிச்சிருக்கிறேன், மீன் பிடிக்கிற வெளையாட்டு” என்று சொன்னபடியே ரங்கநாதன் குழந்தையைப் பின்தொடர்ந்தான்.

மூலையில் அழுக்குத் துணிகளிடையே யானை கேட்பாரற்றுக் கிடந்ததைக் கண்டான்.

“ஐயோ பாவம், ஒடம்பு சரியில்லை போலிருக்கே, காச்சல் வந்துட்டுதோ, ஆஸ்பத்திரிக்குப் போலாமா, மருந்து குடுக்கலாமா? ஏய், இதோ இங்கே இருக்கு பாரு யானை” எனப் பரிவுடன் சொல்லிக் கொண்டே யானையை எடுக்கக் குனிந்தவன் குழந்தையின் பதிலைக் கேட்டுச் சடேரென்று நிமிர்ந்தான்.

“நீ என்னப்பா, அதுக்கு ஒண்ணும் வராது. அது என்ன நெஜ யானையா? பொம்மைக்குப் போயி காச்சலும் பேதியும் வருமா" என்று சொல்லிவிட்டுக் குழந்தை அலமாரியைத் திறந்து, "அப்பா, நீ இதைப் பாத்தியா, நெஜ டயரு போட்டிருக்கே, எப்பிடி ஓடுது பாக்கறியா", என்று சொன்னபடியே சிவப்பு நிறமான, குட்டி டயர் போட்ட தகரக் கார் ஒன்றை எடுத்து வெற்றிகரமாக அவனுக்குக் காண்பித்து, "நான் தரமாட்டேன், எதிர் வீட்டம்மா எனக்குத்தானே குடுத்தாங்க" என்று பெருமை பேசியது குழந்தை,

அவனுக்கு ஒண்ணும் புரியவில்லை, குழந்தையைப் பார்த்தான். குறும்புச் சிரிப்போடு பின்னம்புறம் ஒளிக்க முயன்று கொண்டிருந்த அதன் கையிலிருந்து கார் எட்டிப் பார்த்து, பளபளவென்று மின்னும் பல்லைக் காட்டி இவனை ஏமாளி செய்து கொண்டிருந்தது.

தலையைத் திருப்பிக் கீழே பார்த்தான், செத்துப்போன யானையின் சடலம், “நான் வெறும் மரம், யானையில்லை” என்று முனகிவிட்டு மறுபடியும் செத்துப்போச்சு. அவனுக்கு ஒண்ணும் புரியவில்லை.

“என்னப்பா சொல்றே?" என்று காரைத் தரையில் தேய்த்துக் கொண்டே கேட்டது குழந்தை,

அவனுக்கு ஒண்ணும் புரியவில்லை.

Saturday, November 16, 2019

ஸரஸாவின் பொம்மை - சி.சு.செல்லப்பா :::: முகவுரை - ந. சிதம்பர சுப்ரமண்யன்

ஸரஸாவின் பொம்மை 
முப்பதுகளையும் நாற்பதுகளையும் சிறுகதைகளின் காலம் என்று சொல்லலாம். எல்லாப் பத்திரிகைகளும் போட்டி வைத்து சிறுகதைகளைப் பிரசுரித்தன. அந்தக் காலகட்டத்தில் சிறுகதை எழுத ஆரம்பித்தவர்தான் சி.சு.செல்லப்பா. அவரின் இந்தச் சிறுகதைகளை ஒருசேரப் படிக்கும்போது செல்லப்பா பல துறைகளிலும் சாதனை செய்திருக்கிறார் என்று தெரிகிறது. 1940களின் வாழ்க்கை குறித்த செறிவான இலக்கிய சாட்சியமாக இக்கதைகள் விளங்குகின்றன என்பதில் சந்தேகமே இல்லை.
சி.சு. செல்லப்பாவின் சிறுகதைகள் மொத்தமும் ஸீரோ டிகிரி பப்ளிஷிங்கின் எழுத்து பிரசுரம் மூலம் தொகுப்பாக வந்துள்ளது. இதை ஒவ்வொரு தமிழரும் வாங்க வேண்டியது இந்தத் தொன்மையான மொழியைப் பேச வாய்த்திருக்கும் நம் அனைவருடைய கடமை. சி.சு. செல்லப்பா உயிரோடு இருந்தவரை அவரை சரியாகப் படிக்காமல், அவரோடு வெட்டிச் சண்டை போட்டிருக்கிறேன். அவர் இறந்த பிறகுதான் அவரைப் படித்து அவன் என் அப்பன் என்பதைப் புரிந்து கொண்டேன். பழகுவதற்கு இனிமையற்ற ஆள். க.நா.சு.தான் பழக இனிமையான ஆள். ஆனால் சி.சு. செல்லப்பாதான் நவீன இலக்கியத்தின் பிதாமகர். அவருடைய எழுத்து பத்திரிகை இல்லாவிட்டால் (தம்பிங்களா, பத்திரிக்கை என்று எழுதாதீர்கள்) இன்று நவீன இலக்கியமே இல்லை. பாரதி ஆரம்பித்ததை நீர் ஊற்றி ஏர் போட்டுப் பயிர் பண்ணினவர் செல்லப்பா. ஏதோ ப்ரமோஷனுக்காக இதை நான் எழுதவில்லை. நீங்கள் படிக்கிறீர்களோ இல்லையோ செல்லப்பாவின் சிறுகதைத் தொகுதி உங்கள் இல்லத்தில் இருந்தால் அங்கே தமிழ் வீற்றிருக்கிறது என்று பொருள். ஏன் படிக்கிறீர்களோ இல்லையோ என்று சொன்னேன் என்றால், உங்கள் வாழ்நாளில் ஏதோ ஒரு சமயத்திலாவது அவருடைய ஒரு கதை உங்கள் உள்ளே செல்லும்.
செல்லப்பாவின் சரசாவின் பொம்மை என்ற கதை உலகின் அதியற்புதமான கதை. மௌனி கதைகள் மொத்தத்தையும் அந்த ஒரு கதை வீழ்த்தி விடும். முதலில் ஏதோ அது ஒரு குழந்தைக் கதை என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அல்ல. அது ஒரு Freudian கதை. படித்துப் பாருங்கள். மேலும், தமிழின் முதல் தலித் கதையை எழுதியவர் பாரதி. அதற்கு அடுத்த தலித் கதையை எழுதியவர் செல்லப்பா. அதுவும் இந்தத் தொகுப்பில் உள்ளது.
நண்பர்கள் இந்தப் பதிவை முடிந்த வரை அதிக அளவில் ஷேர் செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.
புத்தகம் வாங்குவதற்கு இணைப்பு:
வழக்கம்போலக் கலாசாலை விட்டதும், ஸரஸாவைப் பார்த்துவிட்டுப் போவதற்காக மாமா வீட்டிற்குள் நுழைந்தேன். அப்பொழுது மாமி சமையலறைக்கு அடுத்தாற்போல் ஒரு வெள்ளிக் கும்பாவில் சாதம் பிசைந்து கொண்டிருந்தாள். ஆனால் யாருக்காக அதைப் பிசைந்து கொண் டிருந்தாளோ அந்த நபர் மட்டும் அருகே காணப்படவில்லை. ''ஸரஸா ! சாப்பிடவறயா, இல்லையா? அப்புறம் நான் சாதத்தை வெள்ளைக்குப் போட்டுடுவேன் தெரியுமோ? பேசாமே வந்துடு' என்று கோபக்குரலில் அம்மாமி கூறிக்கொண்டிருந்தது மட்டும் என் காதில் விழுந்தது. 

நான் கூடத்திற்கு வரவும், என் காலடிச் சப்தம் கேட்கவே, அம்மாமி என் பக்கம் திரும்பி , "வாடாப்பா, சமய சஞ்சீவி ! உனக்கு நூறு வயசு ; இந்த இரண்டு வாய்ச் சோறு உன் அம்மங்காள் சாப்பிடறத்துக்குள்ளே என் பிராணனை வாங்கிடறாளப்பா. இனிமே என்னாலே இவளோடே பிராணனைக் கொடுத்துக்க முடியாது. இன்னும் 5, 6 வருஷங் கழித்து நீ இவளைக் கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு , உனக்குப் புண்ணியம் உண்டு, இப்போதே கல்யாணம் பண்ணிக் கூட்டிண்டு போயிடு. உபத்திரவம் விட்டு துன்னாவது இருக்கும்" என்று கோபம் ஒரு புறமும், பரிகாசம் ஒரு புறமும் ததும்பும் முகத்தோற்றத்துடனே , சரேலென்று எழுந்து தோட்டப் பக்கம் கையலம்பி வரச் சென்றாள். போகும் பொழுதே உரத்த குரலில், ''ஸரஸா ! இதோ கூடத்திலே உன் அத்தான் வந்திருக்கான் பார் - இந்த அழகியைப் பார்க்கிறதுக்கு - அழுகுணியை!'' என்று சொல்லிக் கொண்டே சென்றாள். 

நான் இதையெல்லாம் கேட்டுக்கொண்டே, வந்த சிறுநகைப்பையும் அடக்கியபடியே சமையலறையை நோக்கிச் சென்றேன். ஸரஸாவின் கோபத்திற்கு ஆளாவதற்குத் தாங்கள் செய்த குற்றம் இன்னதென்று அறியாமல், சிதறி உருண்டோடிக்கொண்டிருக்கும் பாத்திரங்களையும், கைகளில் கிழிபட்டுக் கொண் டிருக்கும் பழைய காலண்டரையும், அவள் வாய் முணு முணுப்பையும், கண்களில் நீர் மல்கி இருந்ததையும் பார்த்த உடனே மாமி அங்கலாய்த்துக்கொண்டதில் ஒரு சிறிதும் தப்பி தமில்லையே என்று என் மனத்திற் பட்டது. 

"ஸரஸா! என்ன இது? இப்படி இன்னிக்கு அசடு மாதிரி; பார்த்தியா, ஐய ஐயே... இங்கே வா" என்று மிருதுவாக அழைத்தேன். நான் வந்திருப்பதாக அம்மாமி கூறியதும், நான், ''ஸரஸா!'' என்று அழைத்ததுமாகிய இரண்டும் ஏககாலத்தில் ஸரஸாவின் காதுகளில் ஒலிக்கவே, சரேலென்று சுருட்டி மடக்கி எழுந்து, 'கௌனி'ன் ஓரத்தால் கன்னங்களில் வழிந் தோடிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, மெதுவாக அடி மேல் அடியெடுத்து வைத்து என்னை நோக்கி வந்தாள். அழுகையும் கோபமும் வீம்பும் பறந்து போன இடம் தெரியவில்லை. 

ஸரஸாவின் பொம்மை ஸாஸாவை அப்படியே அணைத்துக்கொண்டு அவள் கண்ணீரைத் துடைத்துத் தேற்றி, பிரிந்து கலைந்திருந்த தலையைக் கோதி, "ஸரஸா ! சாப்பிடறதுக்கு இப்படியா முரண்டு பண்ணுவா? அட அசடே ! ....... உட்கார்ந்து சாப்பிடு ! சமத்தோல்லியோ?" என்று சமாதானப் படுத்திக் கும்பாவிற்கு நேராக உட்கார வைத்தேன். இதற்குள் கூடத்திற்குத் திரும்பி வந்த அம்மாமி, ''ஆமடாப்பா, உன் அம்மங்கா அசடு இல்லாமே 

ரொம்பச் சமத்தோ இல்லியோ? கோயில்லே வச்சுத் தான் கும்பிடணும். ஐய! கட்டினவன் கடைத்தேறிப் போவான்!'' எனக் கூறிக்கொண்டே ஜாடையாக ஸரஸாவைக் கோபங்கொள்வது போன்ற பாவனை யாகப் பார்த்தாள். 

"போ அம்மா ! நான் அசடுன்னா இருக்கட்டும். போ'' என்றாள் ஸரஸா , பதிலுக்கு விட்டுக் கொடுக்காமல் . 

"இதாவது வேண்டாமோ? குறைச்சல் இல்லை!'' என்று உதட்டைப் பிதுக்கிக்கொண்டு அம்மாமி அப்புறம் போய்விட்டாள் 

சாந்த குண ஸரஸா சாப்பிட ஆரம்பித்தாள். ஆனால் ஒரு வாய்க்கு நாலு பருக்கைக்கு மேல் எடுக்கவே இல்லை. அதிலும் பாதி திரும்பக் கும்பாவிற்கு வந்து விடும். இந்த லக்ஷணத்தில் ஒரு வாய்க்கும், மற்றொரு வாய்க்கும் இடையே எத்தனை கேள்விகள் ! என்ன பேச்சு ! ஒன்றுக்கொன்று சம்பந்தம் சிறிதாவது இருக்க வேண்டுமே? குழந்தைகள் பேச்செல்லாமே அப்படித் தானே! 

''அம்மாமி! உங்களுக்கெல்லாம் ஸரஸாவை அழ விடத்தான் தெரியும். சமாதானப்படுத்தவே தெரி யாது'' என்றேன். 

"நீ ஒருத்தன் - அருமை அத்தான் இருக்கயே. போராதோ?'' என்றாள், அம்மாமி சிரித்துக்கொண்டு ; "அதற்குத்தான் அவளை நீயே கல்யாணம் பண்ணிண்டுடுன்னு சொல்றது . ஏண்டி ஸாஸா , இந்த அத்தானையே கல்யாணம் பண்ணிண்டுடறியா?" என்றாள். 

''ஸரஸா , என்னைக் கல்யாணம் பண்ணிண்டு டறியா?" என்று நானும் சிரித்துக்கொண்டே ஸரஸாவைப் பார்த்துக் கேட்டேன். 

ஸரஸா குனிந்த தலை நிமிராமலே, "நான் உன்னைத் தான் கல்யாணம் பண்ணிக்குவேன் போ; வேறே ஒத்தரையும் கல்யாணம் பண்ணிக்கமாட்டேன் போ' என்று கொஞ்சும் மழலைக் குரலில் பதில் கூறினாள். 

"ரொம்பச் சரியாய்ப் போயிடுத்தே ! அம்மாமி, மாப்பிள்ளை தேடவேண்டிய கவலை இன்னமே உங்களுக்கு வேண்டாம். ஒரு நிமிஷத்திலே சம்பாதித்தாகி விட்டது" என்று சொல்லிச் சிரித்தேன். 

"பின்னே என்ன போ!'' என்று நிர்விசாரமாகக் கூறிய அம்மாமி தணிவான குரலில், "வயசு வித்தியாசம் ரொம்பக் கொஞ்சந்தான்'' என்று சொல்லிச் சிரித்தாள். எனக்கு வயது இருபத்திரண்டுக்குமேல் ! ஸரஸாவுக்கோ இன்னும் ஆறு நிரம்பிய பாடில்லை : அவள் என்னைத் தான் கல்யாணம் செய்து கொள்ளுவேன் என்று மூர்க்கமாகக் கூறினால் சிரிப்பு வராமல் என்ன செய்யும்? இருந்தாலும் அதை ஸாஸாவிடம் சொல்லமுடியுமா? 

ஸரஸா விரைவில் சாப்பிடுவதாகக் காணோம். எனக்கோ அறைக்குப் போக நேரமாகிக்கொண்டிருந்தது. "சரி , அம்மாமி. நான் போய்விட்டு நாளைக்கு வருகிறேன்'' என்று சொல்லி எழுந்து புறப்படத் தயாரானேன். அரைகுறையாகச் சாப்பிட்டுக்கொண்டிருந்த ஸரஸாவும் கூட எழுந்துவிட்டாள். நான் திடுக்கிட்டு , "ஸரஸா , நீ சாப்பிடு. நான் 'ரூமுக்குப் போயிட்டு அப்புறம் வறேன்" என்று உட்காரச் சொன்னேன். அதையெல்லாம் அவள் காதுகளில் போட்டுக்கொள்ளவில்லை. 'நீ இப்போ போகக் கூடாது. இங்கேதான் இருக்கணும் போ" என்று சிணுங்க ஆரம்பித்தாள். இன்னும் ஓர் ஆவர்த்தத்திற்கு அவள் அடிபோடுகிறாள் என்பதை ஊகித்த அம்மாமி, "அப்பா, இருந்தது இருந்தே; அவள் சாப்பிட்டு எழுந்திருக்கிறவரைக்கும் இருந்துட்டுப் போயிடு. உனக்குப் புண்ணியம் உண்டு" என்று வேண்டிக் கொண்டாள். வேறு வழி ஒன்றும் இல்லாமையால், "ஸரஸா, போகல்லே; சட்டுனு சாப்பிடு" என்று சொல்லி உட்கார்ந்தேன். 

ஸரஸா சாப்பிட்டான பின்பு, மறு நாள் கட்டாயம் சீக்கிரம் வந்து விடுகிறேன் என அவளுக்கு வாக்குக் கொடுத்துவிட்டு, அறைக்குத் திரும்புவதற்குள் தப்பித் தால் போதுமென்றாகிவிட்டது. 

அன்றுவரை குழந்தை ஸரஸா என் கண்ணிற்கும் மனத்திற்கும், இதரக் குழந்தைகள் போலவே தான் தோற்றினாள். ஆறு வயது நிரம்பப் பெறாத ஸரஸாவின் உருண்ட முகமும், உப்பிய கன்னங்களும், நெற்றியும், எடுப்பான மூக்கும், சூக்ஷமப் பார்வை பொலியும் ஸரஸாவின் பொம்மை கண்களும், தோள்களிலும் நெற்றியிலும் விழுந்து புரண்டு கொண் டிருக்கும் கரிய சுருண்ட மயிரும், கொன்னிப் பேசும் மழலைச் சொற்களும் அன்று முதல் அதுவரை எனக்குக் கொடுத்திராத ஒருவகை இன்பத்தை அளித்துப் பரவசப்படுத்திவிட்டன. அவளது மோஹனப் பேச்சும், சுந்தர வடிவமும், மனோஹர நடத்தையும் என்னை அப்படியே கவ்வி விட்டன. என் மனம் பூரணமாக அவளிடத்தில் சென்று லயித்துவிட்டது. 

ஊரில் இருக்கும்வரை நாள் தவறாது நான் ஸரஸாவைப் போய்ப் பார்த்து வருவதுண்டு. அநேக ஸமயங்களில் அவளது முரணும், பிடிவாதமும் முன் வந்து வீட்டில் இருப்பவருக்கு வெகு சிரமத்தைக் கொடுத்து விடும். ஆனால் அதற்கெல்லாம் ஒரே மருந்து என்னிடம் இருந்தது . அவசியமானபோதெல்லாம் அதைக்கொண்டு ஒரு விநாடியில் அவளைப் பழைய ஸரஸ்ாவாக ஆக்கி விடுவேன். "ஸரஸா , நீ இப்படி முரண்டு பண்ணினால் அப்புறம் நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்க .......'' என்று இழுத்து முடிப் பதற்குள், ''ஆட்டும், ஆட்டும். இனிமே இல்லை" என்று பலத்துக் கூவித் தன்னைத் தேற்றிக்கொண்டு கட்டின கன்றாகி விடுவாள். இந்த மருந்தினால், நான் வீட்டிற்கு வராத சமயங்களிலும் குணம் ஏற்படுகிறது என்பதையும் அம்மாமியிடமிருந்து தெரிந்து கொண்டேன். 

நாளாக நாளாக எங்கள் இருவரிடையேயும் அன்பும், பாசமும், நட்பும் வளர்ந்து கொண்டே வந்தன. ஸரஸாவைக் காணாவிட்டால் எனக்குப் பொழுதே போகாது. ஸரஸாவுக்கும் அப்படியே, என்னைக் கண்டு விட்டால் இதர வேலைகள் எல்லாம் அவளுக்கு அலக்ஷிய மாகப் போய்விடும். போட்டது போட்ட வாக்கில் தான். குடும்பத்திலேயே எங்கள் நட்பைக் கண்டு வியப்புறாதவர் களும் பொறாமைப்படாதவர்களும் இல்லை. 

அதே வருஷம் எனக்கு மணம் நடை பெற்றது. அந்தச் சமயம் நிகழ்ந்த சம்பவங்களும் காட்சிகளும் இன்னும் என் மனக்கண் முன் அப்படியே தோன்றிப் பிரதிபிம்பிக்கின்றன. நான் மணப் பலகையில் உட்கார்ந்து கொண்டிருந்தேன். அருகே என் புது மனைவி உட்கார்ந்திருந்தாள். அவளை அதற்கு முன் நான் பார்த்ததே இல்லை. எனது அப்போதைய எண்ணங்களும் நினைவுகளும் அவளைப்பற்றியனவாகவே இருந்தன. 

திடீரென்று என் அருகில் ஒரு சிறுகுரல் சிணுங்கி அழும் சப்தம் கேட்கவே, தலை நிமிர்ந்து பார்த்தேன். அம்மாமி இடுப்பில் ஸாஸாவுடன் எனக்குச் சமீபமாக நின்று கொண் டிருந்தாள். ஸரஸாவின் கண்களிலிருந்து நீர் வழிந்துகொண் டிருந்தது. 

"அம்மாமி , ஏன் ஸரஸா இப்படி அழுகிறாள்?'' என்று ஸரஸாவின் பக்கம் கையை நீட்டியவண்ணம் சிறிது பதற்றத்துடன் கேட்டேன். 

''எதுக்கு அழுவாள்? நீ தான் அவளையே நேரிலே கேளேன்' என்று அம்மாமி சிரித்துக்கொண்டே கூறினாள். அருகில் இருந்தவர்கள் எல்லோரும் சிரித்தார்கள். 

அம்மாமி ஸரஸாவைக் கீழே இறக்கி விட்டாள். ஸரஸாவை என் அருகே அழைத்துக்கொண்டு, 

ஸரஸாவின் பொம்மை "ஸரஸா, எதுக்கு அழறே? உனக்கு என்ன வேணும் ?" என்று கேட்டேன். 

விம்மல் - விக்கல் - தேம்பு தல்- அழுகை. வேறு பதிலே இல்லை. அம்மாமியின் முகத்தைப் பார்த்தேன். 

"இன்னும் ஒருதரம் கேளேன் நீதான்" என்றாள் அம்மாமி மறுபடியும். பொறுமையை இழந்து விடாமல் மறுபடியும் கேட்டேன். கொஞ்சங் கொஞ்சமாக ரொம்ப மந்தஸ்தாயியிலேயே பதில் வந்தது. காதோடு காது வைத்துத்தான் கேட்க வேண்டியிருந்தது. 

''நான் - உன்னைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன் போ'' என்று இழுத்து இழுத்து விக்கல் விம்மல்களுக்கு இடையே சொல்லிவிட்டு , ஸரஸா கண்ணைக் கசக்கிக்கொண்டு தேம்பினாள். அவள் அதைச் சொல்லி முடிக்கும் வரை சிரிப்பை அடக்கிக்கொண்டிருந்த நாங்கள் எல்லோரும், சொல்லி முடிக்கவும் கொல்லென்று வாய்விட்டுச் சிரித்துவிட்டோம். நான் மட்டும் சட்டென்று சிரிப்பை அடக்கிக்கொண்டு, "இதுக்குத் தானா பிரமாதம்? நான் உன்னைத்தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன். அழாதே, அழாதே' என்று தேறுதல் மொழிகள் பல கூறி என் மடியில் உட்கார வைத்துக்கொண்டேன். ஸரஸாவின் அழுகை நின்று விட்டது. அவள் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவம் ஆடியது. கூடி இருந்தவர் செய்யும் கேலியையெல்லாம் அவள் சிறிதும் பொருட்படுத்தவே இல்லை. பேதைக் குழந்தை ! கல்யாணம் என்றால் இன்னதென்று தெரியாத குழந்தை ! தான் விரும்பிய அத்தானைக் கல்யாணம் செய்து கொண்டுவிட்டோம் என்ற ஆனந்த சாகரத்திலே மூழ்கிக் கிடந்தாள். 

கல்யாணம் ஐந்து தினங்களிலும் ஸரஸா என்னை விட்டு அப்புறம் இப்புறம் நகரவே இல்லை. மணப் பலகையில் என் புது மனைவியுடன் நான் உட்கார்ந்து கொண்டிருக்கும் பொழுதெல்லாம், அவளும் அருகில் உட்கார்ந்து கொண்டிருப்பாள் - நலங்கு, ஊஞ்சல், எப்பொழுதும். எல்லோருக்கும் இது வெறும் வேடிக் கையாக மட்டும் இல்லாமல் மிகுந்த மகிழ்ச்சியையும் அளித்தது. என் மனைவிக்கு நலங்கு இடும் பொழுது அவளுக்கும் இடவேண்டும். இல்லாவிட்டால் அவளுக்கு வந்துவிடும் கோபம்! 

இப்படியாகக் கல்யாணம் வெகு குதூகலமாக நடந்த பின்பு, அவரவர்கள் தத்தம் ஊர்களுக்குத் திரும்பி விட்டார்கள். ஸரஸாவுக்குச் சாக்குப் போக்குச் சொல்லிப் பெற்றோருடன் அவளை அனுப்பி வைப்ப தற்குள் நான் பட்ட பாடு போதுமென்று ஆகிவிட்டது. குழந்தை உள்ளத்தில் பதிந்துபோன அன்புருவத்தை அழித்துவிடுவது முடியக்கூடிய காரியமல்ல என்பது அப்பொழுது தான் நிதர்சனமாயிற்று. 

மேற்கூறிய சம்பவங்கள் நிகழ்ந்ததற்கப்பால் ஐந்தாறு வருஷங்கள் கழிந்து போய்விட்டன. ஐந்தாறு வருஷங்கள் மனித வாழ்க்கையிலே சாதாரணமான அளவுக்காலம் அல்ல. அதற்குள்ளாகவே, மலைக்கும் மடுவுக்கும் உள்ள எத்தனையோ பெருத்த மாறுதல் களும் நிகழ்ச்சிகளும் ஏற்பட்டு நிலைமையைத் தலை கீழாய்ப் புரட்டி விடுகின்றன. சற்றேனும் எதிர்பாராத சம்பவங்களைக் காலம் நம் முன் கொணர்ந்து நடத்திக் காண்பித்துச் சென்று விடுகிறது. ஸரஸ்ாவைப் பொறுத்த மட்டில் முன்போல், "அத்தான், உன்னைத்  தான் கல்யாணம் செய்து கொள்வேன்' என்று முரணும் குழந்தை ஸரஸ்ாவாக இல்லை. கல்யாணத்தைப்பற்றிய விவரம் முழுதும் அறிந்த ஸரஸாவாகி விட்டாள். 

இந்த மாறுதலை அவள் ஒரே நாளில் திடீரென்று அடைந்து விடவில்லை. சிறிது சிறிதாக இடையே கழிந்து போன ஆறுவருஷங்களில் ! அத்தானுக்கு மணமாகி விட்டபடியால், 'அவனைத்தான் கல்யாணம் செய்து கொள்வேன்' என்பது வெறும் கேலிப் பேச்சேயன்றிச் சாத்தியமாகக் கூடியதல்ல வென்றும், பிறர் நகைத்துப் பரிகசிக்க இடமே யொழிய வேறொன்றும் இல்லை யென்றும் அறிந்து கொண்டாள். நான் ஸ்ரஸாவைச் சந்திக்கும்போதெல்லாம் , " ஸரஸா , என்னைக் கல்யாணம் செய்து கொள்கிறாயா?'' என்று கேட்டால், ''போ, அத்தான் , கேலி பண்ணிண்டு!'' என்று வலிப்புக் காட்டி விட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டு போய்விடுவாள். 

என்னைப்போலவே, அவளும் முன் பின் பார்த்திராத ஒருவனுடன் தன் வாழ்க்கையைப் பிணைத்துக் கொள்ள விரைந்து கொண் டிருந்தாள் ! 

இந்த இடைக்காலத்தில் என் வாழ்க்கையிலும் அசாதாரணமான மாறுதல்கள் ஏற்படவில்லை. என் மனைவி வீட்டிற்கு வந்து விட்டாள். நான் இப்போது ஒரு கிருஹஸ்தன். இந்த ஆறு வருஷத்திலே எங்களுக்கு ஆணும் பெண்ணுமாக இரண்டு குழந்தைகள். குடும்பச் சக்கரம் ரொம்ப ஒய்யாரமாகச் சுழன்று கொண்டிருந்தது. 

அடுத்த வருஷம் ஸரஸாவுக்குக் கல்யாணம் நடந்தது. பக்கத்து ஜில்லாவிலிருந்து வந்து சேர்ந்தான் அவளுக்குக் கணவன். அப்போது நான் குடும்பச்சுமையைத் தூக்கிக்கொண்டு ஸரஸாவிடமிருந்து நெடுந் தூரத்தில் வேறு ஊரில் இருந்தேன். அவள் கல்யாணத்திற்குக் குடும்பத்துடன் போய் விட்டு வந்தேன். 

அதற்கு அடுத்த தடவை நான் ஸரஸாவைப் பார்க்க நேர்ந்தபொழுது அவள் பழைய ஸரஸாவாக இல்லை. முற்றும் மாறிப் போயிருந்தாள். உருவத்திலும் தேக வளர்ச்சியிலும் மட்டுமல்ல; மனவளர்ச்சியில் தான் அதிகமாக முன்னெல்லாம் என்னோடு கை தொட்டு விளையாடினவள் இந்தத் தடவை என் முன் நின்று ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. நான் வலிய வழிமறித்து ஏதாவது கேட்டாலும் ஒன்றிரண்டு வார்த்தைகளில் சுருக்கமாகப் பதில் சொல்லிவிட்டுத் தப்பித்துக்கொண்டு ஓடி விடப் பார்ப்பாள். அவளுடைய இந்த நடத்தை எனக்கு ஒருமாதிரி விநோதமாகத்தான் இருந்தது. 

முன்னெல்லாம் , "உன்னைத்தான், அத்தான், நான் கல்யாணம் பண்ணிக்குவேன்" என்று முரணின ஸரஸாவா இவள் என்று எனக்கே ஆச்சரியமாக இருந்தது. அவள் மனத்திலும் உருவத்திலும் காலச் சக்கரம் உண்டாக்கி விட்ட மாறுதலைக் கண்டு அதிசயப் பட்டேன். 

அன்று சாப்பாடு முடிந்த பிறகு வீட்டுக் கூடத்தில் எல்லாரும் உட்கார்ந்து பேசிக்கொண் டிருந்தோம். அம்மாமி இருந்தாள். ஸாஸாவும் கூட இருந்தாள். 

"அம்மாமி ! ஏது, ஸரஸா நான் கூப்பிட்டால் கூடப் பேசமாட்டேன் என்கிறாள் ! யாரோ முன்பின் பார்த்திராத ஒருவனை விரட்டுவதுபோல விரட்டு கிறாளே" என்றேன் விளையாட்டாக .  

"ஆமாம்; உன்னைக் கல்யாணம் பண்ணிக்கப் போறாளோ இல்லையோ? அதனால் தான் வெட்கப் படறாள்'' என்று கணீரெனச் சொல்லிச் சிரித்தாள் அம்மாமி. கூட இருந்தவர்களும் கொல்லென்று சிரித்தார்கள். 

ஸரஸாவுக்கு இந்தக் கேலி தாங்க முடியவில்லை. சரேலென்று எழுந்து நின்று, என்னையும் மாமியையும் ஒரு தடவை வெருட்டிப் பார்த்து, உதட்டைச் சொடுக்கி வலிப்புக் காட்டி விட்டு உள்ளே ஓடிப்போய்விட்டாள். 

அப்பொழுது தான் என் மனத்தில் ஒளி பிறந்தது என்றே சொல்ல வேண்டும். குழந்தை ஸரஸாவுக்கும் இந்த ஸரஸாவுக்கும் எவ்வித ஸம்பந்தமும் இல்லை. ஆனால் குழந்தை ஸரஸாவுக்கும் எனக்கும் இடையில் இருந்த உறவை உணர்ந்தவுடன் தான் என் மனத்தில் திடுக்கென்றது. அவ்வளவு வருஷங்களாக நான் ஸரஸாவின் ஒரு விளையாட்டுப் பொம்மையாகவே இருந்திருக்கிறேன்! அப்படித்தான் அவள் கருதி என்னிடம் நடந்து வந்திருக்கிறாள். எத்தனையோ பொம்மைகள் இல்லையா : யானை, குதிரை, வண்டி முதலியவை? அவற்றோடு நானும் ஒரு பொம்மை ; ஆம்படையான் பொம்மை ! 

குழந்தை ஸரஸாவின் பொம்மையாக இருந்ததில் எனக்குப் பரம திருப்திதான். ஆனால் அதைப்பற்றி நினைக்கும் போது என் அந்தரங்கத்தில் கொஞ்சம் ஏமாற்றம் கலந்த ஓர் உணர்ச்சி எழாமல் இருப்பதில்லை.

முகவுரை - ந. சிதம்பர சுப்ரமண்யன் 

"ஒரு பிராமணன் ஒரு வீட்டில் பிச்சை கேட்டான். அந்த வீட்டு ஸ்திரீ அவனுக்கு அன்னம் இட்டாள். அதைத் தொன்னையில் வாங்கிக்கொண்டு ஒரு மரத்தடியில் வைத்துவிட்டுக் குளிக்கப் போனான். அப்பொழுது மரத்தின் மேலிருந்த கருடன், ஒரு நாகத்தைப் பிடித்துக் கொத்திக் கொண்டிருந்தது. நாகம் வலி பொறுக்க முடியாமல் விஷத்தைக் கக்க, அது பிராமணன் அன்னத்தில் விழ, குளித்து வந்த பிராமணன் அதைச் சாப்பிட , அவன் உயிர் துறந்தான். இந்தப் பாவம் யாரைச் சாரும்?' என்று வேதாளம் விக்ரமாதித்தனைக் கேட்டது. 

தத்துவ ஞானியான வேதாளம் விக்ரமாதித்தனை இருபத்து நாலு கேள்விகளே கேட்டது. ஆனால். வாழ்க்கை இப்படிப் போடும் விடுகதைகள் அனந்தம். லக்ஷக்கணக்கான புதிர்களுக்கு விக்ரமாதித்தனைப் போலப் பதில் சொல்ல முயலுகிறது கலை. மயக்கம் தரும் மாயைகளைப் பிளந்து கொண்டு உண்மையைத் தேடிக் கொண்டு செல்கிறான் கலைஞனும் கவிஞனும். நிரந்தரமான பிரச்னைகள், நிரந்தரமான போராட்டங்கள். இவைகளை ஊடுருவிப் பார்ப்பதுவே இலக்கியம். மகாபாரதமாயினும் சரி, சிறுகதையாயினும் சரி, இவைகளை விஸ்தரிக்கும் பொழுது உயர்ந்த இலக்கியம் ஆகிவிடுகிறது. மேலெழுந்த வாரியாகப் பார்க்காமல் சமூகம், தேசம், பாஷை, மதம் இவைகளைக் கடந்து மனித ஹ்ருதயத்தின் ஆழத்தைக் கண்டு, அந்த அனுபவத்தை பிறருக்கும் பங்கிட்டுக் கொடுப்பதே ஆசிரியன் வேலை. மின்னல் போல விநாடிக்கு விநாடி தோன்றி மறையும் அனுபவங்களை நிரந்தரமாக்குகிறது கலை. 

பிறப்பும் இறப்பும் வாழ்க்கையின் எல்லைக் கோடுகளாக இருக்கின்றன. விருப்பு வெறுப்புக்களும், ஆசாபாசங்களும் மனித உள்ளத்தில் புயலடித்துக்கொண்டிருக்கின்றன. இதற்குட்பட்ட வாழ்க்கையில் முக்குளித்து வரும் மனிதன் கதையை, ஆதிகாலந்தொட்டு எழுதிவந்திருக்கிறார்கள் அறிஞர்கள். ஆனால், மனிதன் கதை முடிவில்லாததொரு பழங்கதை. இந்தப் பழங்கதையைப் புது முறையில் சொல்லுவதே ஆசிரியன் திறனைக் காட்டுகிறது. 

ஸ்ரீ செல்லப்பா எப்படி வாழ்க்கையின் வினோதங்களைப் பார்த்திருக்கிறார்? வாழ்வின் பலவித சூக்ஷமங்களுக்கு எவ்வித அர்த்தங்களைக் கண்டு பிடித்திருக்கிறார் ? பழமையான மனிதன் கதையில் என்ன புதுமையை அவர் கண்டார்? 

வாழ்க்கையில் அவர் கண்ட் பல்வேறு அனுபவங்களும், அவர் கண்ட புதுமைகளுமே, 'ஸரஸாவின் பொம்மை' யாக உருப்பெற்றிருக்கின்றன. 

சோகத்தையும் அதன் சோபையையும் கண்டு அனுபவிக்க ரஸனை வேண்டும்; துன்பத்தின் பல்வேறு சாயைகளிலும் இருக்கும் ஒருமையைக் கண்டு கொள்ள அன்பு பரந்த கவியுள்ளம் வேண்டும். ஸ்ரீ செல்லப்பாவிடம் குருவிக் குஞ்சு முதற்கொண்டு நொண்டிக் குழந்தை வரையில் சகல ஜீவராசிகளையும் பற்றிக்கொள்ளும் பரந்த அன்பு இருக்கிறது. வாழ்க்கையிலிருந்து தப்ப முடியாதபடி, விதியின் விளையாட்டுக்களினால் ஏற்படும் துன்பங்களைக் கண்டு வேதனைப்படும் உள்ளக்கனிவு இருக்கிறது. வாழ்க்கையின் சில விபரீதங்களை எட்டி நின்று பார்க்கும் பற்றின்மை - இருக்கிறது. இக்குணங்கள் ஆசிரியனின் எழுத்தை உயர்ந்ததாகச் செய்கின்றன. பொதுவாக எல்லாக் கதைகளிலும், கதாபாத்திரங்களின் மனம் போகிற போக்கை நுட்பமாகப் பின் தொடர்ந்து சென்றிருக்கிறார். சம்பாஷணைகள் இயற்கையாகவும் பொருத்தமாகவும் இருக்கின்றன. சுற்றுணர்ச்சி நன்கு அமைந்திருக்கிறது. கதாபாத்திரங்களும் தெளிவான உருவம் பெற்றிருக்கிறார்கள். 

ஸரஸாவைப் பொம்மையாக வைத்து விளையாடி வந்தான் அவன். ஆனால், அவன் தான் ஸரஸாவின் பொம்மையாக இருந்தான். அந்த உண்மை தெரிந்த போது ஏற்பட்ட திகைப்பும் திருப்தியும் ஏமாற்றமும் 'ஸரஸாவின் பொம்மையில் வெகு அழகாகச் செதுக்கப் பெற்றிருக்கின்றன.

குழந்தை ராதா , சந்திரனுக்கு இறந்துபோன தங்கையின் ஞாபகார்த்தமாக இருக்கிறாள். ராதாவோ தனக்குக் கிடைத்திருக்கும் புதிய தாயாரைக்  காட்டிப் பெருமை கொள்கிறாள். விளையாட்டுக் குழந்தைக்கு மாமாவின் மனத்தில் எழும் துன்ப அலைகளைப் பற்றி ஒன்றும் தெரியாது. இப்படியே தாயிடமிருந்து பிரிந்து வந்திருக்கும் 'குருவிக்குஞ்சின் க்ஷேமத்திற்குத் தவிக்கும் நெஞ்சம் ; புக்ககத்திற்குத் தங்கையைக் கொண்டுவிடப்போகும் பொழுது அண்ணனுக்கு ஏற்படும் மனநிலை; தான் நொண்டியாக. இருந்தாலும் மாயக் கண்ணனைப் போலப் பல ரூபங்கள் பெற்று எல்லாக் குழந்தைகள் விளையாட்டிலும் ஈடுபட்டுக் கலந்து கொள்ளும் 'நொண்டிக் குழந்தை', உறவினர்கள் அழுதுவிட்டுத் திரும்பிப் போக மறுநாள் சாம்பலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்போகும், மயானம் காக்கும் இருஜீவன்களிடமிருந்து வரும் ஆனந்த கீதத்தின் மூலம் புலப் படும் வாழ்க்கை 'யின் விசித்திரம் ; சிறியதொரு சிறையிலிருந்து வெளிப்பட்டாலும் பெரியதொரு சிறை 'மூடியிருந்தது' என்று ஏங்கும் உள்ளம் முதலிய உள்ள நெகிழ்ச்சிகள், சந்தர்ப்பங்கள் போன்றவைகளை ரஸம் குன்றாமல் அழகாகச் சித்திரித்திருக்கிறார். 

'நான்' என்று சொல்லி வருகிற கதைகளில் இவர் விசேஷமான வெற்றி பெற்றிருக்கிறார். சிறுகதை ஒரு ரஸத்துணுக்கு. அதை எவ்வளவு தீவிரமாகவும், எவ்வளவு சக்தியுள்ளதாகவும் எழுத முடிகிறதோ அதில்தான் வெற்றி இருக்கிறது. சொந்த அனுபவங்களைப்போல், நேருக்கு நேராகச் சொல்வதில் ஆசிரியருக்கும் வாசகருக்கும் உறவு நெருக்கமாக ஏற்படுகிறது; மனத்தை விண்டு காட்ட முடிகிறது. அவ்விதம் எழுதுவதில் ஒருவித நேர்மை ஏற்படுகிறது. சிறுகதைக்கு நேர்மையும் (honesty), அந்தரங்க சுத்தியுந் (sincerity) தான் அவசியம். 

இக் கதைகளில், சம்பவங்கள் அதிகம் இல்லை. ஒன்றுக்கொன்று பொருந்தாத சம்பவக் குவியல்களில் பிறக்கும் கதைகள் அல்ல இவை. ஒரு சிறு ஞாபகம் எழுப்பும் சிந்தனை அலைகள், ஒரு நொடிப் பொழுதில் உதயமாகும் எண்ணம் போன்றவைகள் தாம் இவர் கதைகள் கட்டி எழுப்புவதற்கேற்பட்ட அஸ்திவாரங்கள். சிறுகதைக்கு ஏற்பட்ட விஷயங்களும் இத்தன்மை கொண்டனவாகத்தான் இருக்க வேண்டும். சிறிதைப் பெரிதாக்குவதும், நிமிஷத்தை நித்தியமாக்குவதுந் தான் சிறுகதையின் வேலை. 

சிறுகதைக்கு முக்கியமாக வேண்டியது பாவம். பாவசித்திரம் நன்கு அமைந்திருப்பதே கதையின் சிறப்புக்கு அடிப்படை. குண சித்திரங்களுக்குச் சிறுகதைகளில் அதிகமான வேலை இல்லை. பல்வேறு சந்தர்ப்பங்களில் ஏற்படும் குணவேறுபாடுகளைத் தீட்ட முயலும் போது சிறுகதையின் அளவை மீறி நாவலாகிவிடுகிறது. செல்லப்பா அறிமுகப்படுத்தும் சில குணசித்திரங்களும் நன்கு தீட்டப்பட்டிருக்கின்றன. கள் நாற்றத்தோடு கம்பீரமாக வரும் வீரன் குண்டான், அழுக்கேறிய பாவாடையுடன் தோன்றிக் குண்டான் வீரத்திற்குத் தன் காதலை அர்ப்பணம் செய்யும் காபூலிக்காரி, கஜப் போக்கிரி மகுடித்தேவன் போன்றவர்களையும் நமக்குக் காட்டுகிறார். 

குழந்தைகளின் போக்கு மிகவும் கவர்ச்சி நிறைந்தது. இனிமையும், அழகும் கலந்த கல்மிஷமற்ற அவர்கள் ஹ்ருதயம் ஆசிரியர் மனத்தைக் கொள்ளை கொண்டிருக்கிறது. குழந்தைகளின் மனோ தத்துவத்தையும், குழந்தைகளினால் பெரியவர்களுக்கு ஏற்படும் மனோபாவங்களையும் சில கதைகள் ஆராய்கின்றன. 

வாழ்க்கை நமக்குப் போதிக்கும் நீதிகள் அனேகம். சிந்தித்துப் பார்க்கச் சிந்தனை மட்டும் இருந்தால், நாம்  அறிந்து கொள்ள வேண்டிய படிப்பினைகள் ஏராளம். 'வாழ்க்கையில் கண்ட விசித்திரம் மூளையைத் தூண்டுகிறது. இப்பொழுது தோன்றுகிறது : "காதலுக்கும் சாதலுக்கும், இயற்கை ஒரு விதமான பாரபக்ஷமும் காட்டுவதில்லை. அதன் அணைப்பிலதான் காதல் பிறக்கிறது. நிலவும், தென்றலும், மணமும் குளுமையும் காதல் போதையைச் சிருஷ்டிக்கின்றன. சாவுக்கும் இயற்கைதான் தாய். மூச்சு நிற்றலும், காற்றுப் போக்கின் சக்தியின் ஓய்வும், சாதல் மயக்கத்தைச் சிருஷ்டிக்கின்றன. இந்தத் தென்னந்தோப்பில், காதல் கூவும் பக்ஷி ; எதிர் மேட்டிலே சாதல் ஓலமிடுகிறது. எல்லாம் இயற்கையின் பகைப் புலத்திலே. ஆனால், சாவின் எதிரில் காதலை நினைக்கவே முடியவில்லை"  என்கிறார். 

நடை இலக்கியத்தின் மூச்சு. அந்த அந்தக் கதைகளுக்கேற்ற நடையை இவர் கையாண்டிருக்கிறார் 

ஆனால் சில கதைகளில், மேல் நாட்டு மோஸ்தரில் சொற்றொடர்களும், பாணிகளும் வந்து விழுந்திருக்கின்றன. மேல் நாட்டு இலக்கியத்திலே ஊறி வந்திருக்கிற தற்காலத் தமிழ் எழுத்தாளர்களிடம் பெரும்பாலும் இந்தக் குறை இருந்துதான் தீரும். ஆனால், இம்மாதிரி நடைகளெல்லாம், அனேக எண்ணங்களை வெளியிட முடியாமல் ஊமையாயிருக்கிற தமிழன் வாயைத் திறக்க ஹேதுவாயிருக்கலாம். எல்லாம் போகப் போகத்தான் தெரியும். 

ஸரஸாவிற்குப் பொம்மை தேவை. மனிதனுக்கு இலக்கியம் தேவை. அந்தத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு முயலும் எந்த முயற்சியையும் உலகம் வரவேற்க வேண்டும். 

காரைக்குடி, 30- 6-42 

ந. சிதம்பர சுப்ரமண்யன்