மெய்ப்பு பார்க்க இயலவில்லை. மன்னிக்கவும்
Automated Google OCR
Sri Lankavin Deseeya - Th - Thatkolai by Birumit Dharmoth Jeevarami. Copyright Author Published By Parivardhana Publishers 4A, Directors Colony. Kodambakkam, Madras - 600 024. Sri Rajeswary
Printing Works, Madras-5.
இந்தப் புத்தகம் வெளிவர உதவிய நண்பர்களுக்கும் அபிமானிகளுக்கும் நன்றி.
ஸ்ரீலங்காவின் தேசீயத் தற்கொலை பிருமிள் தர்மோத் ஜீவராமு
FIRST EDITION DECEMBER 1984
அபாரிவர்த்தனா பப்ளிஷர்ஸ்Sri Lankavin Deseeya - Th - Thatkolai by Birumil Dharmoth Jeevaramu, Copyright Author Published By Parivardhana Publishers 4A, Directors Colony, Kodambakkam, Madras - 600 024, Sri Rajeswary Printing Works, Madras-5.
ஸ்ரீலங்காவின் தேசீயத் தற்கொலை
பிருமிள் தர்மோத் ஜீவராமு
யோகருக்கு
இலங்கைக்குப் பிழைக்கப் போன தமிழர்கள் அங்கே தனி நாடு கேட்கிறார்கள். இது இந்தியாவில் மெத்தனமான ஒரு சாராரின் அபிப்ராயம். இவர்களது இந்த அபிப்ராயத் துக்கு ஆதாரமே இல்லை. முதலாவதாக இலங்கைவாழ் தமிழினம் இலங்கைக்குப் பிழைக்கப் போன ஒரு இனமல்ல. இலங்கையிலுள்ள 'இலங்கைத் தமிழர்கள் விஷயத்தில் மட்டுமல்லாமல் அங்குள்ள 'இந்திய வம்சாவழித் தமிழர்கள் விஷயத்திலும் இது பொருந்தும். இலங்கைத் தமிழர்களுக்கு அவர்கள் வாழும் பகுதிகள் மீது பூர்விக உரிமை உண்டு. இலங்கையில் வழங்கும் தமிழ் இடப் பெயர்களின் தொன்மை முதலியன இதற்கு சாட்சியமாகும். அங்குள்ள சிங்களவர்களையும்விட த் தொன்மையான தொடர்புக்கான சாட்சியங்கள் இவை. அடுத்து இந்திய வம்சாவழித் தமிழர்கள் இலங்கைக்குப் 'பிழைக்கப் போனவர்கள் அல்ல. இலங்கையின் சிங்கள மலையகங்களில் இருந்த காபித் தோட்டங்களில் ஒரு கொடுமையான அடிமை முறையிலே உழைக்க பிரிட்டிஷாரால் 1840க்கும் 1850க்குமிடையில் ஏறத்தாழ பலவந்தமாக திருநெல்வேலி மதுரை ஜில்லாக்களிலிருந்து ஜனத்தொகைக் கடத்தல் (Mass Deportation) செய்யப்பட்ட பாமரத் தமிழர்கள் இவர்கள். இவர்களை இலங்கைக்குப் பிழைக்கப் போனதாகக் கூறுவது ஒரு ஆதிக்கமுறையின் சரித்திர சாட்சியம் வாய்ந்த கொடூரத்தைப் பற்றிக் கண்மூடித்தனமாகப் பேசும் மனோபாவமாகும்; அறியாமை ஆகும். இலங்கைக்குப் பிழைக்கப் போன இந்தியர்கள் இருக்கிறார்கள். இவர்கள் -எந்த அளவு சதவிகிதத்திலும் அடங்குவதில்லை. இவர்கள் வசதியுள்ள தொழிலதிபர்களிலிருந்து கள்ளத்தோணியில்
சென்று பிடி பட்டு இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்படும் வகையினர் வரை உள்ள வர்கள். இவர்கள் ஒன்றும் மலையகங்களிலுள்ள தோட்டங்களில் உழைத்து தங்கள் உழைப்பை இலங்கையில் அன் றிருந்து சுரண்டிய பிரிட்டிஷாருக்கும் பின்பு இலங்கை அரசின் கஜானாவுக்கும் தானமாக வழங்கியவர்களல்ல. (பிழைக்கப் போன? விஷயம் இவ்விதம் அடி பட்டால் அடுத்து இலங்கைத் தமிழர்களின் 'தனி நாட்டுக் கோரிக்கை.!
1948ல் இலங்கைக்கு பிரிட்டிஷ் அரசிடமிருந்து, சுதந்திரம் கிடைத்த நாளிலிருந்து சிங்களப் பெரும் பான்மையினர் இலங்கைத் தமிழர்களை இலங்கை யினுள்ளேயே தனிமைப்படுத்தத் துவங்கினர். இது தமிழர் களது ஜீவாதார உரிமைகளை கொஞ்சம் கொஞ்சமாக ராஜீயத் தளத்தில் பறிக்கும் முறையில் ஆரம்பித்து தமிழ்க் குடிமக்கள் மீது தாக்குதல் செய்கிற முறைவரை செயல் படுத்தப்பட்டு வந்து ள் ள து. இதன் ஒரு சரித்திர விளைவே தமிழர்களின் தனிநாட்டுக் கோரிக்கை. ஒரு குறிப்பிட்ட அரசியல் திருப்பு முனையிலிருந்து தொடர்ந்து, இலங்கை காசே தன து ராஜீயக் கருவிகளான போலீஸ்-ராணுவம் ஆகியவற்றின் மூலம் தமிழ்ப் பொதுமக்களைத் தாக்க ஆரம் பித்திருக்கிறது. பதவிகளுக்கும் கல்விக் கோட்டங்களுக்கும் செல்வதற்கு தமிழர்களுக்கு முட்டுக்கட்டை இடுதல், தமிழர்கள் வாழும் பகுதிகளிலேயே அவர்களைச் சிறு. பான்மையாக்கும் வகையில் சிங்களவரைக் குடியேற்றுதல் முதலிய தந்திரங்களில் ஆரம்பித்த அடக்குமுறை போலீஸையும் ராணுவத்தையுமே தமிழருக்கு எதிராகப் பிரயோகிக்கத் துவங்குகிறது. இது சிங்கள அரசின் மூலமே தமிழர்களைத் தனிமைப்படுத்திய தேசீயப் பிளவு. தென் அரசியல் பிரக்ஞை வடிவமே தமிழரது தனிநாட்டுக் கோரிக்கை. இக்கோரிக்கையின் நியாயம், தமிழரைத் தனிமைப் படுத்திய சிங்கள அரசாங்க இயக்கங்களிடமே ஜனிக்கிறது. எனவே தமிழரது தனி நாட்டுக் கோரிக்கையை எளிமையாக விமர்சிப்பது குருட்டுத்தனமாகும். ஆனால்-அது. விமர்சனத்துக்கு உரிய து என்பது மறுக்கப்பட முடியாதது. இதை நாம் உரிய முறையில் செய்ய வேண்டு பகமானால் தமிழ், சிங்களக் கேந்திரங்கள் இரண்டையுமே தீர விசாரிக்க வேண்டும்.
சிங்கள மொழி பேசும் பௌத்தர்கள் பெரும்பான்மை யாகவும் தமிழ் மொழி பேசும் சைவ ஹிந்துக்கள் சிறு பான்மையாகவும் வாழ்கிற ஒரு தீவு இலங்கை. பல்வேறு வகையான இனக்குடிப் பழக்கங்களையும் பதினெட்டு மொழி வேறுபாடுகளையும் கொண்ட இந்தியத் துணைக் கண்டத் துக்கும் இலங்கைக்கும் இன்றைய பிரச்னை சம்பந்தமாக வித்யாசங்கள் உள்ளன. இதை மேம்போக்கான அவ. தானிகள் உணரவில்லை.)
| சமீபத்தில் இந்திய அரசு சீக்கிய தீவிரவாதிகளின் தனி நாட்டுக் கோரிக்கையை ராணுவத்தின் மூலம் சந்தித்து ஒடுக்கியுள்ள து. இதற்கும் இது சம்பந்தமாக இந்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைக்கும் உள்ள குணங்கள் இலங்கைவாழ் தமிழரின் கோரிக்கை, 28 அதை ஒடுக்க, இலங்கை ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கை ஆகிய வற்றில் இல்லை. சீக்கிய தீவிரவாதிகள் கோரிய தனிநாடு, சீக்கியர்கள் இந்திய ஆட்சியால் எவ்விதத் திலும் பாதிக்கப்பட்டமையால் எழுந்த ஒன்றல்ல, ராஜீயக் கருவி மூலம் ஒடுக்கப்பட்டமையால் எழுந்தது மல்ல. பதவிகளுக்கும் கல்விக் - கோட்டங்களுக்கும் செல்ல விடப்படாமலும் திறன் வளர இடம் விடப்படாமலும் அதிகார அமைப்பு வேலை செய்ததன் விளைவு அல்ல. எனவே சீக்கிய கோரிக்கை நியாயமற்றது. மேலுள்ள வகையான சகல ஒடுக்குமுறைகளின் மூலமும் மட்டுமல்ல, இந்த ஒடுக்கு முறைக்கு இலங்கைத் தமிழர் காட்டிய சாத்விக எதிர்ப்புக் கும்கூட இலங்கை அரசு காட்டிய எதிர்வினை இலங்கைப் பிரச்னையை இந்திய பிரச்னையிலிருந்து வேறுபடுத்து கிற து . சீக்கிய தீவிரவாதிகளை எதிர்கொண்ட இந்திய ராணுவம்சீக்கிய தீவிரவாதத்தின் புகலிடமான பொற்கோயிலைக். காப்பதற்காகவும் தீவிரவாதத்தில் சம்பந்தப்படாதவர்களைப் பாதிக்காமலிருப்பதற்காகவும் பலத்த சுய இழப்புகளை மேற் கொண்டுள்ளது. தமிழ்த் தீவிரவாதிகளைக் தேடிப் பிடிக்கும் திறன் கூட அற்ற இலங்கை அரசு தனது ராணுவத்தை தமிழ்க் குடிமைகள் மீது கட்டவிழ்த்து விட்டுள்ளமை இதனுடன் ஒப்பிடமுடியாததாகும். இலங்கைத் தமிழ்த் தீவிர வாதிகளின் இயக்கத்தை ஒடுக்குவதற்குப் பதிலாக, தமிழ் இளைஞர்கள் எவரையுமே விட்டு வைக்கக்கூடாது என்ற காட்டுமிராண்டி ராஜரீகம்தான் அங்கே செயல் படுகிறது.. இத்தகைய மனோபாவம் இலங்கை அரசின் முதிர்ச்சியற்ற காட்டாள் தனத்தைக் காட்டினால், இதற்கு எதிர்வினை தரும் இலங்கைத் தமிழ் தலைமைகளும் குறைபாடுகளைக் காட்ட த், தவறவில்லை.
பொதுவாகவே சிங்கள, தமிழ் இனங்களைப் பிரிப்பது: மொழிமட்டுமல்ல என்பது முதலில் காணப்பட வேண்டும், சிங்கள மொழியின் ஆரியச்சாயல் அவர்களை ஆரியர் களாக்கி, திராவிட மொழி பேசும் தமிழரிடமிருந்து இனரீதியாக அவர்களைப் பிரித்து விடுகிறது. இந்தப் பிரிவினை யை வலுவிழக்க வைக்கிற இந்து மதரீதி கயான ஆரிய-திராவிட உடன்பாடு இந்தியாவில் உண்டு. ஆனால் சிங்களவர்கள் பௌத்தர்கள், அதிலும் இந்தியாவில்
ஹிந்துக்களினால் கொடுமைக்கு ஆட்படுத்தப்பட்ட பிக்ஷ= பரம்பரை ஒன்று இலங்கைக்குப் போய் ஹிந்துக்களுக்கு எதி ரான ஒரு ஆழ்ந்த பகைமையை பௌ த்தத்துடன் சேர்த்து.) சிங்களவருக்குப்புகட்டி யிருக்கிறது . இப்பகைமை விவேகாநந். தரது சமகாலத்து இலங்கை பிக்ஷுவான அநகாரிக தர்ம பாலாவின் பேச்சுகளிலும் எழுத்துக்களிலும் சாட்சியம் பெறு! கிற து. இது இலங்கையின் பிரிவினையுணர்வுக்கு மிகவும் தனித்த முகத்தைத் தருகிறது. இந்தியாவுக்கும் இலங்கைக்கு மிடையே உள்ள இந்த வேறுபாடு முக்கியமானதாகும்.
இது இலங்கையை இன்று போர்க்காலத்தின் தீவிர நிலைக்குத் தள் ளியுள்ள து. சிங்கள வரின் மனிதாய சச் தி.களும் இலங்கைத் தமிழரின் மனிதார்த்தங்களும் இந்தத் தீவிர நிலையை அறிவுசான்ற தளத்துக்குக் கொண்டு செல்ல முடி யாதவாறு நிலைமை ஆக்கப்பட்டு விட்டது. இந்நிலை தவிர்க்க முடியாதவாறு நிகழ்ந்த ஒன்று தானா? இதற்கு இரு பிரிவினருள் ஒருவர் மட்டும்தான் பொறுப்பாளியா? இத்தகைய கேள்விகளின் சலனங்களைக்கூட எழவிட மூடி போத தீவிர நிலைதான் இன்றுள்ள து, என உணர்கிற போதே இக்கேள்விகள் கேட்டாக வேண்டியவை என் பதையும் நாம் கண்டு கொள்வது மிக அவசியம்.
சமூகப் பிரிவுகளை கணக்கில் எடுப்போமேயானால் இலங்கைத் தமிழரிடையே அவர்களது சைவஹிந்துத்வத் தின் ஜாதீய உள்ப்பிரிவுகள் ஒருபுறமிருக்க, பிராந்திய ரீதி யான பிரிவினை மனோபாவங்களும் இருந்திருக்கின்றன. ஒரு பிராந்தியத்தினர் மற்றைய பிராந்தியகாரரின் ஜன மூலங்களைப்பற்றி இழிவாகக் கதை திரிக்கும் போக்குகளும் சகஜமானவை.
1840க்கும் 1850க்குமிடையில் பிரிட்டிஷ் வர்த்தக அரசினால் தமிழகத்திலிருந்து இலங்கையின் சிங்களப் பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்ட சுமார் பத்து லட்சம் பாமரத் தமிழ்த் தொழிலாள வர்க்கத்துடன் இலங்கைத் தமிழினம் தன்னை ஐக்யப்படுத்திக் கண்டு கொண்டதில்லை. இது எல்லாத் தரப்பினரும் அறிந்த உண்மை என்பதுடன் மூக்ய கவனத்துக்கும் உரியது. ஜாதீய உள்ப்பிரிவு, பிராந்தியமனோபாவம் என்ற குணங்களை விட இந்திய வம்சாவழியினரான மலையகத் தமிழருக்கும் இலங்கைத் தமிழருக்குமிடையே இருந்த பிரிவினை முக்யமானது. இன்று விஸ்வரூபமெடுத்துள்ள பிரச்னைக்கு மனிதாபிமான மற்ற இந்தப் பிரிவினையுணர்வு ஒரு வித்து.
- ஜாதீய, பிராந்தியப் பிரிவினை சிங்கள மகாஜனத்திடம் கூட உள்ள ஒன்றுதான். செய்தொழில், குடிமை ஆகிய வ ற்றால் நிர்ணயிக்கப்பட்ட சிங்கள ஜாதீயப் பகுப்புக்கு சிங்கள வரது பௌத்தம் காரியாலய ரீதியாக முத்திரைவழங்கியதில்லை. ஆனால் ஒருவன் புத்தபிக்ஷாவாக மாறிய நிலையில் கூட அவனது ஜாதீய மூலகம் கவனிக்கப்படு கிறது. இது - வியப்புக்குரிய ஒன்றல்ல; ஏனெனில் சிங்களவர் இனரீதியாகவும் மொழிரீதியாகவும் பூர்விகத்தில் ஒரு ஹிந்துமரபைச் சார்ந்தவர்களே யாவர். இவர்கள் இந்தியாவின் வங்கப் பகுதியிலிருந்து அல்லது வட புறப் பகுதியிலிருந்து இலங்கைக்கு ஒரு சரித்திர கதியினால் உந்தப்பட்டவர்களாகச் சொல்ல ப்படுகிறது. இதைப் புராணரீதியில் பதிவுசெய்துள்ள து சிங்கள வரின் சரித்திர இதிகாசமான "மகாவம்ச' என்ற பாளி நூல். இந்நூல் வங்கத்திலிருந்து நாடுகடத்தப்பட்ட விஜயன் என்ற இள வர சனையும் அவனது இரு நூறு தோழர்களையும் இந்த சரித்திர கதிக்கு ஆட்பட்ட மூதாதைகளாக இனம் காட்ட முயற்சிக் கிறது. வங்கத்தில் ஒரு இளவரசிக்கு சிம்மம் ஒன்றன் மூலம் பிறந்தவன் இந்த விஜயன் என்ற உள் விபரம் சிம்மத்தை வாகனமாகக் கொண்ட காளி வழிபாட்டைக் குறிக்கலாகும். ஆனால் இலங்கைக்கு கடலில் அலைக் கழிந்து வந்து ஒதுக்கப்பட்ட பின்பு விஜயனின் தோழர்கள் ஒரு நாயைப் பின் தொடர்ந்து குவேனி என்ற மிஷியில் சிறைப்பட்டமையும் விஜயனைக் கண்டு அவள் மோகித் தமையும், கிரேக்க இதிகாஸமான ஹோமரின் ஓடிஸ்ஸியில் வரும். ஸர்ஸ் என்ற சூன்யக் காரியை ஒடிஸ்ஸியஸ் சந்தித்த கதையாகும். மகாநாம் என்ற புத்தபிக்ஷவால் எழுதப் பட்டது "மகாவம்ச'. இவர் ஏற்கெனவே இலங்கை யிலிருந்த கர்ணபரம்பரைக் கதையைத்தான் எழுதியிருக் கிறார் என்றால் ஸர்ஸ், குவேனியான விஷயத்துக்கு விளக்கம் இல்லை- கிரேக்க யாத்ரீகர்களை இவர் சந்தித்திருக்கலாம் என்பதைத் தவிர.
- ஒரு ஆரிய இளவரசன், இலங்கையில் ஒரு காட்டு மிராண்டிப் பெண்ணை மணந்தான் என்ற விஷயத்துக்கு முலாம் போடவே ஸர்ஸ் கதையை மகாநாம உபயோகித் துள்ளார். அவர் கதையில் தனது நண்பர்களை விடுவிக்கும் பெருநோக்கத்துடன் விஜயன் குவேனியை மணக்கிறான்.- ஆய்வுரீதியாகப் பார்த்தால் இக்கதையில் தேறு வது இன்றும் வங்கத்தில் நிலவும் காளி வழிபாடு தான். சிங்க வாகனியான காளியை வழிபட்ட ஒரு இந்திய இனம் ஆரியச் சொற்களடங்கிய ஒரு மொழியுடன் இலங்கையினுள் வாழ வந்து அங்கே ஏற்கனவே இருந்த பூர்வகுடியுடன் கலந்திருக்கிறது -என்பது பெறுபேறு. இந்த இனத்தில் ஆண்கள் மட்டுமே இருந்தார்கள் என்பதும், விஜயனும் தோழர்களுமாகச் சேர்ந்து இவர்கள் 201 பேர்வழிகள் என்பதும் சுவாரஸ்யமான விவரங்கள். இவனும் தோழர் களும் கொள்ளை அடித்ததனால் நாடு கடத்தப்பட் டுள்ளார்கள். இவன் இளவரசன் என்பதற்கு இதில் சாட்சிய மில்லை-இவனே திரித்து விட்டிருக்கக் கூடிய கதையைத் தவிர. அதாவது மகா நாமனது கதையின் கர்த்தா நாடு கடத்தப்பட்ட ஒரு கொள்ளைக் கூட்டத் தலைவனாகும். இவனது கற்பனையில் தான் சிங்கவாகனியான காளிக்கும் சிங்கத்துக்கும் இவன் - பிறந்தவனாக இருக்க முடியும். அடுத்து, எண்ணிகை 201 என்பது இந்திய மரபான தாந்ரீகத்தின் ஆளுமையைக் காட்டுகிறது. மகா நாம னிடமே இதன் தாத்பர்யம் ஜனித்திருக்க முடியும்: பெளத்த பிக்ஷக்களிடமும் இந்திய தாந்ரீகம் ஆட்சி செலுத்தி உள்ளது. 201 என்ற எண்ணின் பூஜ்யத்தை நீக்கினால் கிடைப்பது 21. இந்த எண் மணிமகுடத்தைக் குறிக்கிறது. விஜயனுக்கு தாந்ரீக ரீதியாகவே ஒரு ராஜீய சக்தியைக் கொடுக்க இந்த எண் (மகாவம்ச'வில் உபயோகிக்கப்பட் டிருக்கலாம். விஜயனே இந்த எண்ணை உபயோகித்திருக் கவும் கூடும்.
சிங்கத்தின் பரம்பரை' என்பதே ( சிங்கள” என்ற இனக்குடிப் பெயராகவும் மொழியின் பெயராகவும் ஆகிறது, சிங்கள மொழியில் வடமொழியினதை விடவும் தென்னகத் துத் திராவிட இலக்கணக் கட்டுமானம் மேலதிக ஆதிக்கம் செலுத்துவதைக் காணலாம். வங்காள மொழி விஷயத் திலும் இதுதான். வங்காளி, ஆர்ய வார்த்தைக ள் திராவிட10
இலக்கண அமைப்பில் கொண்ட மொழி என்பர் மொழி வல்லுனர். இதுவே சிங்கள மொழிக்கும் பொருந்துகிறது.
குவேனியுடன் பிறந்த சம்பந்தம் இலங்கையின் பூர்விகக் குடி ஒன்றுடன் விஜயனுக்கும் அவனது தோழர்களுக்கும் ஏற்பட்ட சம்பந்தம் தான். இதுவே இயற்கையான து. மாகும். இலங்கையில் தங்களை உறுதிப்படுத்திய பின்பு விஜயனும் தோழர்களும் தமிழகத்துப் பாண்டிய அரச பரம்பரையிடமிருந்து பெண் கொண்டதாக மகாவம்ச கூறுகிறது. குவேனியை மணந்த விஜயன் அவளைப் பிரஷ்டம் செய்தே இலங்கையில் தனது ஸ்தானத்தினை உறுதிப் படுத்தியுள்ளான் என்பது கவனிக்கத்தக்கது. ஒரு கொள்ளைக்காரனை இளவரசனாகச் சித்தரித்து முலாம் பூசிய மகாநாம, குவேனியைப் பிரஷ்டித்த இடத்தில் ஒரு அதர்மத்தையே ஸ்தாபிக்கிறார் என்பதும், சிங்களவரது ராஜீயக் கோளாறுகளுக்கு இது ஒரு 'வழிகாட்டியான கலாசார உதாரணமாகிறது என்பதும் துரதிர்ஷ்ட மானவை. பார்க்கப்போனால் ஒரு பூர்வகுடி மக்களின் உரிமையான இலங்கையை தந்திரமாக ஒரு கொள்ளைக் கூட்டம் அபகரித்த கதைதான் விஜயனின் வரலாறு.. பூர்வகுடிகளுடன் ரத்தபந்தம் கொண்டு அவர்களுடன் உரிமையைப் பகிர்ந்து கொள்ள விஜயன் விரும்பவில்லை.. தனக்கும் குவேனிக்கும் பிறந்த வாரிசுகளைக்கூட கானகங் களினுள் அவன் பிரஷ்டித்து விடுகிறான். சிங்கள இனம், இலங்கையைத் தன து உடைமையாகப் பாராட்டுவதன் அடி யிலுள்ள இதிகாஸ லட்சணம் இது. இந்த உரிமையில் திவ்யமோ தர்மமோ பிறந்து தேசீய உணர்வுக்கு வழிகாட்ட வில்லை. இதற்கு அடுத்து விஜயன் பாண்டிய அரச பரம்பரையிடமிருந்து தனக்கும் தோழர்களுக்கும் மணப் பெண்களை இறக்குமதி செய்த விபரம் இயற்கைக்குப் பொருந்தாத ஒன்றாகும். ஏனெனில் பாண்டிய அரச பரம்பரை ஸ்திரமான அத்திவாரங்களையும் ஒரு நாகரிகத் தையும் பேணி நிலைத்திருந்த ஒன்று. அது ஒரு திடீர் ராஜ ரீகத்தின் லட்சணங்களை எளிதில் இனம் காணக் கூடிய.11
ராஜீய சூட்சுமம் கொண்டதாகவே இருந்திருக்கும்... என வே பாண்டிய நாட்டுடன் ஏற்பட்டதாகக் கூறப்படும் மணவினைத் தொடர்பு தமிழகத்திலிருந்து இலங்கைக்கு வாழப் போகுமளவு பின் தங்கிய ஒரு கீழ் நிலையிலிருந்தவர் களுடன் விஜயனும் தோழர்களும் கொண்ட தொடர்பு என்றே காணலாம்.
இந்தப் 'பாண்டிய படலத்தின்படி, விஜயனின் வழி வந்த சிங்களவர் அசல் ஆரியராக இடமும் இல்லை. குவேனி சம்பந்தம் ஒருபுறமானால், தமிழகத்துச் சம்பந்தம் சிங்கள வரை திராவிடக் கலப்பு உள்ளவர்களாகவே ஆக்கி விடுகிறது. இது மகாவம்சவின் உபாசக பாரம்பரியத்தின ரால் மழுப்பப்படுகிற விஷயம். இவர்கள் சிங்களவரை. ஒரு ஆரிய இனம் என்றே பிரச்சாரம் செய்து வந்துள்ளனர். இதற்கு எதிரான விபரங்களைத் தந்தபடியே இந்த பிரச்சாரத்தை ஆரம்பித்த மகாவம்ச ஒரு புத்த பிக்ஷுவான மகா நாமனால் அதுவும் சிங்களவரிடையே பௌத்தம் அதிகாரவேர் ஊன்றுகிறபோது எழுதப்பட்டது என்பது இதை விளக்கும். தங்களது மதத்தை ஏற்றுக் கொண்ட வர்களை இனரீதியாகவே இலங்கையிலிருந்த ஹிந்துக்களிட மிருந்து பிரித்து உயர்த்திப் பிடித்த திரிபு இது. இதற்கு வசதியாக இலங்கையிலிருந்த ஹிந்துக்கள் திராவிட மொழி யான தமிழை உபயோகித்தனர். எனவே இலங்கையின் சிங்கள பௌத்தர்கள் ஆரிய இனமாகவும், தமிழ் ஹிந்துக்கள் திராவிட இனமாகவும் பிக்ஷக்களினால் பிரித்துக் காட்டப்பட்டனர். மொழியும் மதமும் வேறு பட்டாலும், இருவருமே ஒரே திராவிட இனம் தான். சிங்கள வர து (ஆரிய ரத்தம் தமிழர்களின் 'திராவிட ரத்தத் துடன்' மகாவம்சவிலேயே கலந்து காட்டப்பட்ட ஒரே ரத்தம் என்பது இன்று உடனடியாக உணரப்பட வேண்டும்.. இந்த உணர்வு ஏற்பட முடியாதவாறு சிங்களப் பிராந்தி யங்கள் முழுவதிலும் ஊடுருவிய பிக்ஷு பரம்பரையின் பிரச் சாரம் காலம் காலமாக நடந்து வந்துள்ள து. இது தமிழ்ப் பிராந்தியத்துக்குள் புத்தர் பிரானின் செய்தியைக்கொணர்ந்து,12.
புகட்டிய - சரித்திரமே கிடையாது - இதற்குக் காரணம் ஒன்று பொருளாதார ராஜீய ரீதியான து. சிங்கள வர்கள து பிராந்தியங்களில் - செழிப்பும், ஆள் பலமும் அ - கம்... அடுத்தது இந்தியாவின் ஹிந்துத்துவ இயக்கங்களினால் இம்சைக்கும் பிரஷ்டத்துக்கும் ஆட்படுத்தப்பட்டவர்கள் புத்த பிக்ஷுக்கள். இது ஹிந்துக்களான தமிழர்கள் மீது இலங்கை பிஷகேந்திரத்தின் இடையறா த வைரம் பாய்ந்து பகைமையாகத் தொடர்ந்திருக்கிறது.
| விஜயன் இலங்கைக்கு வந்த காலம், கி. மு. 500, பௌத்தம் அதிகாரரீதியாக இலங்கையில் வேரூன்றிய காலம் கி. மு. 200, அதாவது விஜயனுக்கு முன்னூறு வருஷங்கள் பிந்தய து பௌத்தத்தின் வருகை.
இந்திய சக்கரவர்த்தி அசோகன் கி.மு. 200ல் வாழ்ந் தவன். இவனது மகன் மகிந்தனும் மகள் சங்கமித்ராவுபே! பௌத்தத்தை இலங்கைக்குக் கொண்டு வந்தனர் என் கிற து மகாவம்ச. இவர்கள் இலங்கையில் சந்தித்த அரசனின் பெயர் தேவு நம்பிய திஸ்ஸ, இது அப்பட்டமான ஒரு ஹிந்துப் பெயர். இவனது தலைநகரின் பெயர் பொல்லன் நறுவை. அரசன், தலை நகர் இரண்டிலும் தமிழ் விளையாடக் காணலாம்.தேவ என் பது ஹிந்துத்வ வேத மரபைக் காட்டுக் கிறது. திஸ்ஸ என்பது தீர்த்த என் பதன் மரூஉ.தேவநம்பிய திஸ்ஸவில் உள்ள நம் பி பாண்டிய நாட்டு பிராமணனைக் குறிக்கிறது. கேரள (சோ) நாட்டில் இன்றும் இப்பெயர் நம்பூதிரி, நம்பியார் என்ற பெயர்களில் வழங்கப்படுகிறது. பொல்லன் நறு வ என்று சிங்களத்திலும் பொலநறுவை என்று தமிழிலும் இன்று வழங்கப்படுவது தேவ நம்பி திஸ்ஸ இருந்து அரசாண்ட முதலாவது சிங்களத் தலை நகர். இது முற்றிலும் ஒரு தமிழ்ப் பெயராகும்.
பொல்லாதவன்' என்ற சொல் வடிவம் தமிழ் நாட்டி, லுண்டு. - "பொல்லன்' என்பது இலங்கைத் தமிழில் -கபொல்லு', அதாவது 'கோல் கொண்டவன் என்றாகும்,13
இலங்கையின் பூர்வகுடியினரான. வேடுவரின் மொழியில் ஆண் குறிக்கு (சந்தானம் பொல்லு' என்ற பதம் உண்டு. எபொல்லன்' என்பது இங்கே திராவிடரின் பூர்விகமான லிங்கக் கடவுளையும் குறிக்கிறது. மேலும் பொல்லு? அதாவது (கோல் செங்கோலாகும். 'நறு அவை' என்றால் நல்ல சபை. எனவே சிங்களவரின் முதலாவது தலைநகர மான பொல்லன் நறுவை என்ற பெயரே ஒரு பூர்விகமான தமிழ் அத்திவாரத்தைக் காட்டு கிறது. பொல்லன் நறுவை யின் ஸ்தாபகர்களே தமிழர்கள் என்பதைத்தான் இது. குறிக்கும்,
மேலும் ஒன்று. இது பிரச்னைக்குரிய தெனினும் குறிப் பிடப்பட வேண்டியது. இலங்கையின் வேடர்களை குவேனியின் வழித்தோன்றல்களாகக் கூறுவதுண்டு. இவர்களது மேற்படி பதத்தில் ஒரு திராவிட மரபு பிரதிபலிப் பதையும், அது சிங்களவரது முதல் தலைநகரத்தினது தமிழ்ப் பெயரில் அமைவதையும் கவனிக்க வேண்டும். இது மட்டு மல்ல; இலங்கையில் தெற்கே உள்ள கதிர்காமம் பாரம் பரியமாக வேடர்களினாலேயே பூ சிக்கப்பட்டு வந்த ஒரு ஸ்தலம். இதன் பூஜைமுறையைப் பின்னாடி ஆராய் வோம்.
- பௌத்த கேந்திரம் புத்தரின் அன்பு நெறியை இலங்கையில் குழிதோண்டிப் புதைத்து விட்டு மகா வம்சவின் வக்ரமான மரபினை சிங்களவரின் மனோபாவமாகப் பேணி வந்துள்ள து. வங்கத்திலிருந்து வந்த விஜயன் என்ற கொள்ளைக்காரனின் வாயிலிருந்து பிறந்தே இம்மரபு பரவி இருக்கவேண்டும் என்பதை எந்த இலங்கை (அறிஞரும் ஊகிக்க முன் வருவதில்லை. நாடுகடத்தப்பட்ட கொள்ளைக் காரன் ஒருவன் இலங்கையில் அப்போதிருந்த குவேனி என்ற பூர்வகுடி ராணியுடன் தொடர்பு கொள்கிறான். அவள் ராணி என்பதைக் கொண்டு தன்னையும் அரச பரம்பரைக்காரனாக்கு வதற்கு அவன் ஒரு கதையைப் புனைந்திருக்கிறான்,14
இக்கதையில் மூன்று அடிப்படை வக்ரங்கள் உள் ள ன. 1. வங்கத்து இளவரசியை ஒரு சிம்மம் கடத்திச் சென்று கர்ப்பிணியாக்கியமை. 2. இதனால் பிறந்த குழந்தையுட... இளவரசி. தப்பித்து நகருக்குத் திரும்பி வந்து குழந்தை பெரியவனான பின் ஊருக்குள் புகுந்து அழிவு களைச் செய்த தனது தந்தையாரையே இவன் கொன்றமை. 3. பிறகு இவனே கொள்ளைக்காரனாகி இதன் விளைவாக இவனும் இவன து 200 சகாக்களும் சுக்கான் இல்லாத கப்பல் ஒன்றில் ஏற்றப்பட்டு கடலில் அலையும்படி விடப்பட்டமை. இந்த மூன்றுமே இதிகாஸ் மனோபாவத்துக்கு அவசியமான தெய் விகத்தன்மை எதையும் பிரதிபலிக்கவில்லை. ஒரு இளவரச னின் ஆரம்பப் பருவம் விஜயனுக்கு இருந்திருந்தால் அவன து ஜனனத்தைப் பற்றி ஒரு தெய்வீகக் கதையைப் புனை கிற விதமாகத்தான் அவனது மனோபாவமே வேலை செய் திருக்கும். அன்றைய அரசவைக் கல்விகள் அத் தகையவை. ஆனால் கான கங்களில் சகமனிதர்கள து ராஜீய சக்திக்குப் பயந்து ஒளித்து வாழ்பவன் அவர்கள் மீது தனக்கு அச்சம் வரக்கூடாது என்பதுக்காக அவர்கள் எதைக் கண்டு பயப்படுவார்களோ அதற்குப் பிறந்தவனே 'இந்த விஜயன்' என்று கதைகட்டிக் கொள்ள இடமுண்டு: அதாவ து விஜயனின் மூளை ஒரு இளவரசனின் மூளையாக வேலை செய்யவில்லை. கொள்ளைக்காரனின் மூளையாகவே வேலை செய்திருக்கிறது. இதற்கு ஆதாரம் அவன் தனது ஜன ன த்தைப் பற்றி அளந்த கதை.
தந்தையைக் கொல்வது ஒரு பூர்விக ராஜரீக மரபும் கூட. கொள்ளைக் கூட்டத் தலைமைக்காகவும் தந்தையைக் கொன்றால்தான் உண்டு. விஜயனின் மூளை வேலை செய்த நியதியில்கூட அவன் தனது தந்தையைக் கொன்று விட்டு அவன் செய்த வேலையையே செய்தமை துல்யமாகத் தெரிகிறது. இதை இவ்வளவு தூரம் ஊடுருவாமல் இதே லைனைப் பிடித்த மகாவம்ச ஆசிரியரான மகாநாம, விஜய னுக்கும் குவேனிக்குமிடையே இருந்த உறவைக்கூட அதர் என்மத்தில் முடிக்கிறார். இதை நியாயப்படுத்த உலகின்15
இன்னொரு வகை நாகரிகத்தின் ஒடிஸ்ஸு கதையைத் திருடி இருக்கிறார். இக்கதையின் ஒடிஸ்ஸியஸின் தோழர்கள் ஒவ்வொருவராக ஒரு நாயைப் பின் தொடர்ந்து போய் ஸர்ஸ் என்ற சூன் யக்காரியின் மாந்ரீகத்தினால், மிருகங்களாக மாற்றப்படுகின்றனர். இறுதியாகச் சென்ற ஒடிஸ்ஸீயஸைக் கண்டு ஸர்ஸ் மோகிக்கிறாள். இதைப் பயன்படுத்திய ஒடிஸ்ஸியஸ் நண்பர்களை விடுவிப்பதுக்காக அவளை மணந்து, அவர்கள் விடுபட்ட பின்பு அவளை நிர்மூலமாக்குகிறான். ஸர்ஸிற்கு இது வேண்டியது தான். ஆனால் கடலில் அலைக் கழிந்து குற்றுயிரும் குலை உயிருமாகக் கரைக்கு ஒதுக்கப் பட்ட விஜயன் கோஷ்டியினரின் கதை நிச்சயம் வேறு வகையான தாகத்தான் இருந்திருக்க வேண்டும். அதில் நாயைப் பின் தொடர்ந்த அபத்தங்களைவிட, குவேனியும் அவளது குடி மையும் மனிதத்தன்மையுடன் விஜயனையும் அவன து கும்பலையும் கடல் தந்திருக்கக் கூடிய உப்பு ரணங் களிலும் நோயிலும் பசியிலுமிருந்து காப்பாற்றி இருக்கிறது. இந்தக் குவேனியிடம் தன்னை நாடுகடத்தப்பட்ட இளவரசன் -என்று கதை அளந்துள் ளான் விஜயன். அவளையும் அவள் து
குடிமையையும் இருபகுதியினரது சம்பந்தத்தினால் பிறந்த குழந்தைகளையும் தருணம் பார்த்து கானகங்களுள் துரத்தி, கொலை செய்யப்படவேண்டியவர்களைக் கொன்றும் இருக் கிறான். இதை நியாயப்படுத்தவே மகாநாம, குவேனியை சூன்யக்காரி ஸர்ஸின் மறுபதிப்பாக்கி உள்ளார். இத்தகைய மனோபாவம் உள்ள இவர் ஒரு புத்த பிக்ஷ என்பது புத்தர் பிரானைப்பற்றி அறிந்தவர்களது தலைகளைக் குழப்பும்!
தமிழில், கு = குவிக்கப்பட்ட, வேணி = கூந்தல் என்று கண்டால், குவேனி என்ற பெயரில் மகாவம்ச குறிப்பிடுவது ஒரு பூர்வ திராவிட மகளைத்தான் என்று கூற இடமுண்டு. இவளது மொழி பண்டைய தமிழின் ஒரு வடிவமாகக்கூட இருந்திருக்கலாம். பொதுவாகப் பார்த்தால், விஜயன் வந்த காலமான கி.மு. 500க்கும் முந்தியது கடல் கொண்ட குமரிக்கண்டமும் அதன் முதற்சங்கமும். ஒரு கொள்ளைக்காரன் சொன்னதையும் கிரேக்க யாத்ரீகர்களிடமிருந்து திருடியதையும் சேர்த்துப் பிசைந்து பண்ணப்பட்ட மகாவம்சவின் கதையை விட குமரிக் கண்டத்தைப்பற்றிய விபரங்களுக்கு உள்ள தமிழ்க் கவித்துவ ஆதாரங்கள் ஆழமானவை. இந்த குமரிக்கண்டம் கன்யாகுமரியின் - நிலத்தொடராகவே இருந்திருக்கிற து. அவ்விதமானால் அது இலங்கையினை இந்தியாவுடன் இணைத்த ஒரு நிலப்பரப்பாகவே இருந்திருக்க லாகும். இத னூடே “பஃறுளி' (பல துளிகள்) என்ற ஆறு ஓடிய குறிப்புகளும் உள்ளன. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடைப்பட்ட கடல் பகுதி ஒரு குறிப்பிட்ட இடத்தில் இன்றும் மனத்துணிவுள்ளவர்களினால் சில இடங்களில் நீந்தியும் சில இடங்களில் நடந்தும் கடக்கத்தக்க அமைப் பினைக் கொண்டுள் ளது.
குமரிக்கண்டம் என்ற நிலப்பரப்பு மறைந்தபோது நடந்திருக்கக்கூடிய இயற்கையான விஷயம் இலங்கைப்பகுதியில் முதற்சங்க காலத்துத் தமிழர் தனிமைப்படுத்தப் பட்டிருக் கலாம் என்பதே. இவர்களுள் தேய்வடைந்தவர்கள் வேடர் களாகவும் மற்றைய வர்கள் தமிழ்ப்பகுதியின் பூர்வகர்த்தாக் களாகவும் இருக்கலாம். கீழ்க்கரையோரமாக உள்ளே போகப் போக பண்டைத் தமிழ்ப்பதங்கள் நிலவுவது இதை அநுசரிக்கும். இத்தொடர்பு சிங்கள த் தொடர்பினைவிட மிக மிகத் தொன்மையான து.
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு முதலில் போனவர் களின் பரம்பரையே சிங்கள இனம் என்பது சிங்களவர்களின் கட்சி. அங்கே அவர்கள் சந்தித்த பூர்வ குடி யாருடைய து. என்பதை எவரும் ஆராயவில்லை. இதன் காரணம் இன்னும். அங்கே கானகப்பகுதிகளில் வாழும் வேடர் இனமாக இது இருக்கலாகும் என்பதுதான். இவர்களைத் தங்கள் உறவின ராகப் பாராட்ட எவருக்கும் ஆர்வமில்லை. இது விஷயம் இப்போதைக்கு நிற்க, சிங்களவர் விஜயனின் வழிவந்த ஒரு சின்னஞ் சிறுபான்மையிலிருந்து பெருகியவர்கள் மட்டுமல்ல,- 17
இதுதான் உண்மையெனில் இவர்களது நாட்டுக்கலைகள் ஆடை முதலியவற்றில் ஒரு தனித்துவம் இருக்கும். ஆனால் சிங்கள வரது நாட்டுக்கலைகள், ஆடைமுறை யாவுமே கேரளத்தையும் தமிழரையும் எதிரொலிப்பவை என்பது மிகப் பிரசித்தமான விஷயம். முதலாவதாக ஒரு குறிப்பிட்ட பூர்விக சிங்கள ஆடல்முறை தமிழர்களின் டப்பாங்கூத்தை அப்படியே பிரதிபலிக்கிறது. இதன் சிங்களப் பெயரே 'பைலா'. அடுத்து சிங்களப் பெண்களின் ஆடைமுறை நூற்றுவிகித கேரள முறையாகும். கீழ்மட்டப் பெண்கள் இடையில் முண்டும் மாரில் ரவிக்கையுமாக இருப்பதில் மட்டுமல்ல, மேல்மட்டத்தின் தாவணிப்புடவைக் கட்டுகூட கேரளப் பாணிதான். கேரளத்துக் கதகளிக்கும் சிங்களவரின் கண்டி நடனத்துக்கும் உள்ள பெரிய ஒற்றுமை மிகவும் முக்யமான து. வெகு அருகில், அதுவும் தங்களது பிராந்தியத்துடன் ஒற்றுமையுள்ள தென்னை முதலிய வளங்களுள்ள இலங்கைப் பிராந்தியத்தினுள் கொஞ்சம் கொஞ்சமாகச் சென்று புகுந்து கலந்து சிங்கள மொழியைச் சுவீகரித்து சிங்களவராகவே கேரள மக்கள் ஆகி இருக்க முடியும். விஜயன் வந்த கதையை விட இது இயற்கையானதுமாகும். கேரள மக்களுக்கு உள்ள கலைப்பாங்கான ஆர்வங்கள், அவற்றைப் பொதுமக்களிடம் கொண்டு செல்லுகிற விழிப்புணர்வு, முக்யமாக நாடகந் துறையிலுள்ள - கவனிப்பு-அவ்வளவையும் இன்றுகூட சிங்களவரிடையே காணமுடிகிறது. மலையாளப் பதங்களைக் கூட சிங்கள மொழியில் காணலாம். ஆனால் சிங்களவரின் மொழியில் பௌத்தத்தின் ஆதிக்கத்தினால் பௌத்த மொழியான பாளி மேலதிகமானது.
- இவ்விடத்தில் நாம் கவனிக்க வேண்டியது, கேரள மக்கள் ஆரியரல்ல திராவிடர் என்பதையாகும். இவர்கள் பூர்விகத்தில் சேரர் என்றழைக்கப்பட்ட தமிழர்களே என்பது மட்டுமல்ல, மலையாளிகளின் காவ்யகால மொழி இன்றைக்கும் தமிழ்தான். தமிழின் சிகர காப்பியமான
-2சிலப்பதிகார ஆசிரியரான இளங்கோ இன்று (மலையாளி? என்றழைக்கத்தக்க ஒரு சேரர். எனவே சிங்கள வர் உண்மையில் மலையாளிகளே எனும்போது இனரீதியாக அவர்களை திராவிடர் என்று மட்டுமல்ல தமிழர் என்றுகூடக் கூற இடமுண்டாகிறது.
இலங்கைத் தமிழர்களின் பக்கம் திரும்பினால் அவர் களது யாழ்ப்பாணத் தமிழ் உச்சரிப்பு இந்தியத் தென்கரை யோர கன்யாகுமரித் தமிழ், கேரளக் கரையோர மலையாளம் ஆகியவற்றின் உச்சரிப்பை அப்படியே பிரதிபலிக்கக் காண லாம். எனவே, பெருமளவுக்கு இலங்கையில் சென்று சிங்கள வர்-தமிழர் என மாறியவர்கள் இந்தியத் தென்புற மலையாளிகளும் தமிழருமாவர். இது அண்மைப்புற நாட்டு டன் அதுவும் கட்டுக்காவல்கள் இல்லாத அன்றைய காலங் களில் இயல்பாக இடைவிடாது நடந்திருக்கக் கூடிய மிக இயற்கையான குடிபெயர்வு. இதில் சிங்களவரே (முதலில்) இலங்கைக்குப் போனதாகச் சாதித்துக் கொண்டிருப்பது பொதுப்புத்திக்கே ஒவ்வாத விஷயமாகும்.
சிங்களவரின் முதலாவது தலைநகராகக் கொள்ளப் படும் பொல்லன் நறுவை தமிழ்ப்பிராந்தியத்தின் கிழக்குப் பகுதியை ஒட்டியே அமைந்திருக்கிறது. சிங்கள இனம் தமிழ்ப்பிராந்தியத்தின் அண்மையிலிருந்தே நகரியல் முதலிய தன்மைகளைச் சுவீகரித்ததை இது உணர்த்தும். கண்டி சார்ந்த மலையகப்பகுதி அன்று ஊடுருவப்பட்டிருக்க இடமில்லை. ஆனால் தெற்குப் பகுதி கீழ்க்கரையோரமாக அணுகத்தக்கது. இந்த தெற்குப் பிராந்தியத்தில்தான் (வேடர்கள்' பூஜிக்கிற புராதனமான முருகன் கோவில் ஒன்று உள்ளது.
(கதிர்காமம்' என்ற இதன் பெயர் 'கதிர் கமம்' என்ற பழைய தமிழ்ப் பெயரின் புனர் வடிவம். இதில் (கமம்* என்பது இலங்கைத் தமிழில் இன்றும் வழங்குகிற நன்செய் நிலத்துக்கான பதமாகும். இது 'கம்' என்று சிங்களத்தில் மருவி, (நன்செய் நிலம்சார்ந்த) கிராமத்தினைக் குறிக்கிற19
பதமாகி உள்ளது. இதன் வழியில் கதிர்காமம் சிங்களத்தில் கெதிரகம்' என்று வழங்கப்படுகிறது. சிங்களவருடையது என்று பாராட்டப்படுகிற தெற்கில் உள்ள இந்தக் கதிர் காமத்துக்கு சிங்களப் பெயர் என்று ஏதுமில்லை. மேலும் வழிபடப்படுகிற முருகன் அசல் பூர்வதிராவிடக் கடவுளாவான். இக்கடவுளைப் பரம்பரை பரம்பரையாகப் உஜிப்பவர்கள் வேடர்கள். இதன் தாத்பர்யத்தை எவரும் ஆராய முன்வரவில்லை. காரணம், இவர்களுடன் பாத்தியதை கொண்டாட எவருக்கும் எவ்வித ஆர்வமும் இல்லை என்பது
தான்.
ஏற்கெனவே நாம் ஆராய்ந்த பொல்லன் நறுவை என்ற பெயரிலுள்ள பொல்லு வேடுவர் மொழியிலே லிங்க மாவ து ஒரு திராவிட தமிழ்த் தொடர்பை மொழி வாயிலாக வும் ஐதீக வாயிலாகவும் காட்டி இருக்கிறது. இதன் வழியில் பொல்லன் நறுவை என்பது வெறும் அரச சபையாக மட்டு மல்லாமல், ஆதியில் ஒரு சிவஸ்தலமாகவே ஆரம்பித்திருக்க முடி யும். அதுவும் மிகப் பூர்வகாலத்து லிங்கவழிபாட்டின் தொடர் நிலையமாக. கதிர்காமத்து முருகனை வழிபட்ட வேடர்களின் பூஜைமுறையை இவ்விடத்தில் ஆராய்வதும் திராவிடத் தொடர்பைக் காட்டும்.
இந்தப் பூஜையை நடத்து கிற பூசாரி வாயைத் துணி யால் கட்டிக் கொள் வான். தீபாராதனை கிடையாது. மூலக்ரகம் என்று கருதத்தக்க இடம் எப்போதும் திரையிடப் பபட்டே இருக்கும். வாயைக் கட்டிக் கொண்டு பூஜை செய்யும் முறை மௌனத்தை-பேசாமையை வழிபாடாக்கிய ஒரு ஆழ்ந்த நெறியைக் காட்டுகிறது. காட்டுமிராண்டிகள் என்று ஒதுக்கப்படுகிற வேடர் இனத்தின் பாரம்பரியப் பூஜைமுறை இது என்பது மிக வியப்புக்குரியது. உண்மை யில் ஒரு பூர்வகாலத்தில் இதே வேடர் ஆழ்ந்த தர்சிகளின் நெறியைச் சார்ந்த உயர்குடியினராக இருந்திருக்கலாகும் என் ப துக்கான தடயம் இந்தப் பூஜை முறை. காட்டு மிராண்டிகளின் பூஜைமுறை சப்தங்களையே அனுசரிக்கும்..20
ஆழ்ந்த விவேகிகளே மௌனத்தை அனுசரிப்பவராவர். இந்த மௌனத்தைத் தமிழின் மொழிக் கூற்றியல் மூலம் அணுகினால் வேடரை இனம் காண இடமுண்டு..
'தமிழ்' என்ற பெயர்ச்சொல்லை எடுத்தால், இதை த= தம்முடைய, மிழ் = பேச்சு என்று பிரித்துப் பொருள் படுத்து தலாம். மெளனம் அல்லது பேசாமை என்பது இதே வழியில் (அமிழ்' என்ற பதமாகிறது. அ = அல்ல, மிழ்= பேச்சு, நீரினுள் முங்குவதற்கே 'அமிழ்' என்பதனை இன்று உபயோகிக்கிறோம். நீரினுள் பேச்சு எழாது என்பதே இந்தப் பொருள் இருமைக்குக் காரணம். 'அமிழ்து' என்பது நீர் 'என்ற பொருளை இதே வழியில் பெறுகிறது. பேச ாமை என்பது ஒரு நெறியாகும்போது கிடைப்பது மர ண மிலாப் பெரு வாழ்வு; எனவேதான் மர ணமின்மைக்கு மருந்தாக (அமிர்தம்' குறியீடாகிறது. உண்மையில் இது வெறும் உணவு அல்ல. கடைப்பிடிக்க வேண்டிய (பேசாமை' என்ற நெறி: 'சும்மா இருக்கும் திறன் ''; 'வாழ்வு' என்ற பதத்தின் மூலம் குறிப்பிடப்படுவது மரணமின்மையே ஆகும். இதனைப் பிரித்தால், வ = வலிமையுடன், ஆழ்வு - உட்செல்லல் என்றாகும். இது தியான நிலையில் ஒரு தர்சி தன் னுள் ஆழ்ந்து நிலைத்த பெரு நிலையைக் குறிக்கிறது.. சம்ஸ்கிருதத்திலுள் ள 'அம்ருதவின் பொருள் அ = அல்ல, மிருத்= மரணம் என்ற அள வுடன் நின்று விடும், அமிழ்தம் என் ற பதத்திலோ மரணமின்மைக்கு உபாயம் மௌ னம் என்ற விரிவு உண்டு.
இவ்வளவுக்கு மொழியினூடேயே அமைந்துள்ள ஒரு தர்சனத்தினைத்தான் கதிர்காமத்து வேடர்குலப் பூசாரி அனுஷ்டான மாக்கி இருக்கிறான். கேரளத்தில்கூட வாயைத் துணியால் கட்டிக்கொண்டு பூஜை செய்யப் படும் முறை உண்டு. தமிழகத்து பிராமணரல்லாத பூசாரி
களிடமும் இதே முறையை அங்கங்கே இன்றும் காணலாம். பிராமணரல்லாதவர் மந்திரம் சொல்லக் கூடாது என்ற பொருளில் இப்படி வாயைக் கட்டிக் கொள் வதாக ஒரு,-அர்த்தம் உண்டு. மேலுள்ள தமிழ் மொழிக்கூற்றியல் உண்மையில் இதை ஒரு திராவிட பாரம்பரியப் பழக்கம் என்றே காட்டும். கடவுள் முன் மெளனித்து நிற்பதே உண்மையான வழிபாடு என்ற மிக உயரிய தர்சன உபாயம்
இது.
- விஜயன் இலங்கைக்கு வருமுன் அங்கே இருந்தவர்கள் யார் என்ற கேள்விக்கு எல்லாத் தரப்பினரும் தலையைச் சொறிந்து கொண்டு முணு முணுக்கும் பதில் (வேடர் என்பது தான். விஜயன் கொண்ட முதல் தொடர்பு இவர் களுடனே தான் என்பதையும் இவர்கள் ஒப்புக் கொள்வர். இந்த வேடர் குலமக்கள், சிங்களப்பகுதிகளிலுள்ள கானகங் களில் வாழ்ந்து சிங்களவராகியதே இன்றைய ஜனத் தொகைப் பெருக்க காலங்களில் தான். உண்மையில் இவர் களை நாம் இனவாரியாக ஆதித்திராவிடர் என்று பகுப்பதே பொருத்தமாகும். ஆக, ஒருபுறம் விஜயனுடன் ஏற்பட்ட சம்பந்தத்தின் மூலம் இந்த ஆதித்திராவிடரது ரத்தம் சிங்கள ரத்தமாகினால், மறுபுறம் தமிழரின் திராவிட ரத்தமும் இவர்களுடையதே.
இன்று இலங்கையில் தமிழருக்கும் சிங்களவருக்கு மிடையே உள்ள பிரச்னையை இனப்பிரச்னை (Ethnic problem) என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண் டிேருப்பது எப்பேர்ப்பட்ட அபத்தம் என்பதனை இவ்வளவு தூரமும் நாம் செய்துள்ள ஆய்வு காட்டக்கூடும். இனம் -என்று பார்த்தால் இலங்கையில் உள்ள சிங்களர்-தமிழர்
யாவருமே ஒரே திராவிட இனத்தினராவர்.
- தாதுசேனன் என்ற சிங்கள பௌத்த அரசன் இலங்கை யில் கி. பி. 433ல் அரசாண்டவன். சிங்கள-தமிழ் கலப்பு 1.மணங்களை இவன் ஒரு பிரச்னையாக்கி. மலையாளத்தி - லிருந்து வந்து கலந்து கொள்பவர்களை ஊக்கு வித்தமை சரித்திரமாகும். இதன் அடியில் உண்மை நிகழ்ச்சி இந்த சரித்திர விபரத்தை விடவும் பெரிய அளவினதாகவே இருந்திருக்க வேண்டும்.22
கண்டி அரசு உருவான து தமிழகத்தில் திருஞான சம்பந்தரின் இயக்கத்தினால் பிரஷ்டிக்கப்பட்ட ஒரு பௌத்த குடும்பத்திலிருந்து என்பதை மெக்கன் ஸிச் சுவடி. (Mackenzie's manuscripts) கூறுகிறது. இப்ப குதி
அச்சேறாதது. Dr. N. சஞ்சீவியும் M. ராஜேந்ரனும். 22-9-1983 அன்று University of Madras - Marina Campus, Oriental Research Institute வெள்ளிவிழாவில் படித்த கட்டுரையில் கிடைப்பது. இந்தக் கண்டி அரசபரம்பரையின் ஆரம்பகாலம் திருஞானசம்பந்தர து தமிழ் நாட்டுச் (சமயப் பொற்காலம்'. இப்பரம்பரை தமிழகத்து அரசபரம்பரையிடம் பெண் கொள் ளப்போய் நிராகரிக்கப்பட்டு சாமான்யமான ஏழைத் தமிழ்க் குடும்பம் ஒன்றிடம் மணவினைத் தொடர்பு கொண்டதை மெக்கன் ஸிச் சுவடி கூறுகிறது. இதன் இயற்கைத் தன்மையை யே விஜயனின் 'பாண்டிய மணவினைத் தொடர்புக்கும் பொருத்திப் பார்க்க வேண்டும். - சரித்திர அடிப்படை யில் 1739க்கும் 1800க்கும் இடைப் பட்ட கண்டி அரச பரம்பரை நாயக்கர் காலம் என வழங்கப் படுகிறது. பௌத்தத்தைத் தழுவியவர்களெனினும் நாயக்கர் களது அரசவைச் சூழல்களிலும் அதிகார வர்த்தமானங்" களிலும் தமிழ் முக்யத்வம் வகித்துள்ளது. இவர்களுக்கு முன்பிருந்தே தமிழ் இத்தகைய முக்கியத்துவத்தைப் பெற்றி ருந்த சான்றுகள் உள்ளன. அறிவு நூல்கள் அன்று இலங்கையில் தமிழ், சம்ஸ்கிருதம் மூலமே கிடைத்தன., மலையகச் சிங்களவர்கள் இன்றும் தமிழை அதன் முறையான உச்சரிப்புடன் பேசக் கூடியவர்கள். இவர்கள் கரையோர சிங்களவரைவிட தங்களை உயர்குடியினராகப் பாராட்டும். மனோபாவமும் கவனத்துக் குரியது. கரையோரச் சிங்கள வரை விடவும் மலையகச் சிங்களவர் சாதுக்கள். ஏன்,. தமிழர்களை விடவும் இவர்கள் சாதுக்கள் எனலாம்.
மகாவம்சவில் இலங்கை தமிழ் அரசர்களின் ஆட்சிக் குட்பட்ட சந்தர்ப்பங்கள் சித்தரிக்கப்படுகின்றன. இதன்23
விளைவான பகையும் நட்பும் சரித்திர இயல்புகள். ஆனால் தமிழ் அரசர்கள் பெருந்தன்மையுடன் நடந்துள்ளனர் என்பதற்கான சான்றுகளை சிங்களப் பதிவுகளே கூறு கின்றன. பன்னீராயிரம் சிங்கள வரை தமிழகத்து நீரணைத் திட்டத்தில் வேலை செய்யக் கொணர்ந்த ஒரு சோழ அரசன் இலங்கையிலிருந்து தன் தளபதி நீலனுடன் மட்டும் வந்த கஜபாகுவிடம் அவர்களைத் திரும்ப ஒப்படைத்துள்ளான். இதை மகாவம்ச கூறுகிறபோது நீலன் இரண்டு யானைகளை வெறும் கையால் கொன்றதற்கும், கஜபாகு இரும்பைப் பிழிந்து தண்ணீர் வரவழைத்ததற்கும் அஞ்சினான் சோழன் என் று புராணம் பண்ணி இருக்கிறது. எல்லாள சோழனின் விஷயத்தில் இந்த புராணம் கிடையாது. இலங்கையி லிருந்தே அரசாண்ட போது இவனை எதிர்த்து ஒரு சிறு படையுடன் வந்த துட்டகைமுனு என்ற சிங்கள இளவரசன் மீது தர்ம இரக்கம் காட்டினான் வயோதிபனான எல்லாளன். இது இலங்கைச் சரித்திரத்தின் ஒரு திருப்பு முனை என்று கருதப்படுகிறது. தனது பெரிய படையை உபயோகித்து துட்டகைமுனுவை முறியடிக்க விரும்பாமல் யானை யேறி தனிமனிதர்களாக இருவரும் மோத எல்லாளன் கைமுனுவை அழைத்ததும், இதில் கைமுனுவின் யானை எல்லாளனுடையதை விட உயரமாக இருந்ததும், கைமுனு வின் கீழ் வேல்வீச்சிற்கு எல்லாளனை லகுவில் இலக்காக் கிற்று. இதை சரித்திர விபத்து என்றே கணிக்க வேண்டும்.
சிங்களப் பகுதிகளில் தமிழகத்துக் கட்டடக்கலையின் புராதனச் சுவடுகளும், பௌத்தத்தைத் தமிழரசர்கள் அனுசரித்த அடையாளங்களும் உள்ளன. இலங்கைக்கு உள்ள பழைய பெயர்களுள் முக்யமான து 'தப்ரோபேனி' இப்பெயரினாலேயே கிரேக்க யாத்ரீகர்கள் இலங்கையைக் குறித்துள் ளனர். இப்பெயர் திருநெல்வேலியினூடே ஓடும் (தாமிரவர் ணி' என்ற பெயரின் மறுபதிப்பாகும். இது இலங்கையுடன் தமிழர்களுக்கு இருந்த பழைய உறவின்
ஆ ழத் தைக் காட்டுகிறது.மேற்கத்தைய வர்த்தக, காலனி, ஆதிக்கம் பதினாறாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் போர்த்துக்கீஸரின் வருகை யோடு ஆரம்பிக்கிறது. அவர்கள் கண்ட இலங்கையின் வடகீழ்ப் பகுதிகள் தமிழரது அரசாகவும், மத்திய தென் மேற்குப் பகுதிகள் சிங்கள அரசாகவும் தனித்து இருந்திருக் கின்றன. 1619ல் போர்த்துக்கீஸர் தமிழ்ப்பகுதியைக் கைப்பற்றி யாழ்ப்பாணத்தில் அரசாண்ட சங்கிலிகுமாரன் என்ற தமிழரசனைத் தூக்கிலிட்டனர். போர்த்துக்கீஸரும், பின்னாடி வந்த டச்சுக்காரரும், தமிழ்-சிங்களப் பகுதிகள் இரண்டையுமே கைப்பற்றி இருந்தும் அவை இரண்டையும் இணைக்காமல் தனித்தனியே அரசாண்டிருக்கிறார்கள்" 1833ல், பிரிட்டிஷ்காரரின் ஆட்சியிலேயே தமிழ்-சிங்களப் பகுதிகள் ஒரே ராஜீய அமைப்பினுள் அடக்கப்பட்டன.
பிரிட்டிஷ் அரசின் போது தான் நாம் ஏற்கெனவே குறிப்பிட்டபடி 1840க்கும் 1850க்குமிடையில் மலையகத்தில் ஆரம்பிக்கப்பட்ட காபித் தோட்டங்களில் உழைக்கத் தமிழகத்திலிருந்து பாமரத் தமிழர்களை பிரிட்டிஷார் ஜனத் தொகைக் கடத்தல் செய்திருக்கிறார்கள். ராமேஸ்வரத் துக்கும் தலைமன்னாருக்குமிடையில் படகு வசதி தவிர, மற்றப்படி, மதுரை, திருநெல்வேலி ஜில்லாக்களிலே திரட்டப்பட்ட இவர்களது பயணம் கால் நடைப் பயணம் தான். இதன் விளைவாக வழிதோறும் வியாதி, இயலாமை ஆகியவற்றின் காரணமாக இவர்களுள் மரணித்தவர்களும் உண்டு. மலையகத்துத் தோட்டங்களில் 1870 வரை காயி, பின்பு, கர்பித் தோட்டம் ஒரு தாவர வியாதியால் அழிந்த பின் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்த இவர்களுக்கு எவ்வித உரிமையும் சுதந்திரமும் வழங்கப்படவில்லை. சூழ. வாழ்ந்த சிங்களவருடன் கலக்கவோ, கிடைத்த ஊதியத்தில் உறைவிடம், நிலம் எதையும் வாங்கவோகூட இவர்கள் அனுமதிக்கப் படவில்லை. உலகின் மிகக்கொடூரமான அடிமை. முறைகளுள் ஒன்றுக்கே இவர்களை பிரிட்டிஷார் ஆட்படுத்தி வேலை வாங்கி இருக்கின்றனர். இவர்களது உழைப்பு பிரிட்டிஷாரின் பணப்பைகளுடன், சிங்கள25
நிலச்சுவான்தாரர்களது பணப்பைகளையும் நிரப்பி இருக் கிறது. சிங்கள வரினுள் ளும், இலங்கைத் தமிழரினுள்ளும் இருந்து பிரிட்டிஷ் அரச கருமங்களுக்காக ஆங்கிலக் கல்வி மூலம் உருவாக்கப்பட்ட ஒரு வகுப்பு இவர்கள் மத்தியில் தோன்ற இடம் தரப்படவில்லை. இது இவர்களைக் குரலற்றே ராக்கிற்று. இவர்கள் தமிழர்களாயிருந்தும் இலங்கைத் தமிழரின் கண்களில் இவர்கள் சிங்களவரை விடவும் அன்னியமானவர்களாகவே தென்பட்டார்கள் என்பது ஒரு பயங்கர உண்மை . இதற்குக் காரணம், இவர்கள் 'கீழ் ஜாதியினர் என்றும் பொமரர்' என்றும் இலங்கைத் தமிழரால் கணிக்கப்பட்டமைதான்,
1948 வரை இலங்கையை ஆண்ட பிரிட்டிஷ் அரசு இவர்களுக்கு இயற்கையாகக் கிடைத்திருக்க வேண்டிய பிரஜா உரிமைக்கான அத்திவாரங்களுக்கே இடம் விட வில்லை. சுமார் நூறு வருஷங்களாக இலங்கையில் வாழ்ந்தது மட்டுமல்லாமல் இலங்கைக்காகவே உழைத்த இவர் களுக்குச் செய்யப்பட்ட இந்த அநீதி பிரிட்டிஷ் அரசியல் சாசனத்திற்கே விரோதமானதாகும். 1948ல் பிரிட்டிஷார் நீங்கிய பிறகு நடந்த இலங்கையின் முதலாவது பொதுத் தேர்தலில் மட்டும் இவர்கள் வாக்குரிமை பெற்றிருக் கிறார்கள். இதன் விளைவாக பத்து லட்சம் இந்திய வம்சத் தொழிலாளிகள் ஏழு பிரதிநிதிகளை பாராளுமன்றத்துக்கு அனுப்பி இருக்கின்றனர். இந்த அரசியல் விழிப்பு இலங்கைச் சிங்களத் தலைமைக்கு கலக்கம் தந்திருக்கிறது. அடுத்த பொதுத் தேர்தலில் பத்து லட்சத்தில் ஒருவர்கூட வோட்டிட முடியாதபடி இவர்களுடைய வாக்குரிமை பூஜ்யமாக்கப்பட்டது.*
இந்தக் கணம்தான் இலங்கையின் இன்றைய தலைவிதி யையே நிர்ணயித்த கணமாகும். மேற்படி முடிவை எதிர்த்து எவ்விதமான கொந்தளிப்பும் இலங்கைத் தமிழ்த்
* மிகப்பின்னாடி இந்தப் பத்து லட்சத்தில் ஓரு லட்சத்தினரே வோட்டுரிமை பெற்றுள்ளனர்.26
தலைமையிடமிருந்து கிளம்பவில்லை - ஒரு சில வாதப்ரதிவாதங் களைத் தவிர. இதற்கு முழுப்பொறுப்பும் இலங்கைத் தமிழ்த் தலைமையின் குருட்டுத்தனம் தான். அவர்கள் ஜன நாயக சக்தியின் கேந்திரம் எது என்பதை உணராமல் வர்க்க ரீதியில் சிந்தித்தமையே இந்தக் குருட்டுத்தன, மாகும்.
இந்தக் குருட்டுத்தனத்தினால் இலங்கையில் உதாசீனம் செய்யப்பட்ட இதே இந்திய வம்சாவழியினரைத்தான் தென்னாபிரிக்காவில் மோகன்தாஸ் காந்தி தமது சாத்வீகப் போராட்டத்தின் அணியாகத் திரட்டினார். அதுவும் பிரித்தானிய சாம்ராஜ்யத்துக்கு எதிராக. காந்தியும் அவரைச் சூழ்ந்த இதர அறிஞர்களும் இந்து-முஸ்லிம் குறுகல், வர்க்கபேதம், ஜாதீயம் ஆகியவற்றை மீறியே மண்ணோடு மண்ணாகக் கிடந்தவர்களை ஜனசக்தியாகத் திரட்டினார்கள். இதன் அடியில் பூர்ஷவாத்தனமான சுலபவழிகளை மீறிப் பரந்து பாய்ந்த புரட்சிகரம் செயல்பட் டிருக்கிறது. லகுவாக தனக்கும் தனது வர்க்கத் தளத்தில் உள்ளவர்களுக்கும் கொஞ்ச நஞ்சம் கிடைத்தால் போதும் என்ற சந்தர்ப்ப லாபங்களை உதறி எழுந்த புரட்சிகரம் அது. ஆனால் இலங்கையின் தமிழ்த் தலைமை குறுகிய வர்க்க மனோபாவங்களிலிருந்து பிறந்து அவற்றையே பிரதிநிதித்வப்படுத்துகிற ஒரு பூர்ஷவாத் தலைமையாகும். தன் னை எவ்வித இக்கட்டுக்கும் ஆட்படுத்த விரும்பாதபடி செளகர்ய மார்க்கங்களே பூர்ஷுவா இயக்கங்களினால் அனுசரிக்கப்படும். மேலும் அது அடிமட்ட நிலையில் உள்ள வர்களுக்கு தீவிரமோ சுய உணர்வோ பிறப்பதைச் சகித். துக் கொள்ளாது.
இந்த மனோபாவத்தினால் இலங்கைத் தமிழ்ச் சமூகம் பீடிக்கப்பட்டிருந்ததை உணர்ந்து கொண்ட வர்கள் சிங்களத் தலைவர்கள். இதனால் தான் சிங்கள ராஜ்யசக்திகளினால் தமிழரது உரிமைகளை கொஞ்சம் கொஞ்சமாகப் பிடுங்க முடிந்திருக்கிறது. தமிழ்த் தலைவர்களுக்கு பிரத்யேக27
லாபங்களைக் கொடுத்து விட்டு தமிழ் ஜனங்களின் உரிமை களை சிங்கள அரசுகள் பிடுங்கியுள்ளன. இதற்கு உடந்தை யாக 1983 ஜூலை வரை தமிழ்த் தலைமை நடந்திருக் கிறது.
சிங்களப் பெரும்பான்மையினரின் வோட்டுகளுக் காகப் போட்டியிட்ட சிங்களத் தலைவர்கள் தேசீய ஒன்றிணைப்பைச் சீர் குலைக்கும் சூதாட்டமாக சிங்கள வருக்கு தமிழின த் துவேஷத்தை எழுப்பினார்கள். சிங்களப் பிராந்தியங்களில் பிறந்த எதிரெதிர் சிங்களத் தலைமைகள், ஒருவரை மற்றவர் கவிழ்ப்பதுக்காக உருவாக்கிய துவேஷம் இந்த தமிழ்த்துவேஷம். 'துவேஷத்துக்குரிய தமிழரை ஒழித்துக்கட்டும் கொள்கை எங்களுடையது மட்டுமே என்ற பிரச்சாரத்துக்கு இத்துவேஷமே உதவிற்று.
தேசீய ஒன்றிணைப்பு உரிமைகளில் வேரூன்றிய ஒன்றா கும். தனது இன, மொழி அடையாளங்கள் து வேஷிக்கப்படுவது மட்டுமல்லாமல், அவற்றின் அடிப்படை யில் தனது மனைவி, குழந்தைகள் போன்ற பந்தங்கள் கண் ணெதிரே குதறப்படுமளவு தாக்குதல் நடக்கிறபோது தேசீயரீதியான ஒருமையுணர்வுடன் தாக்குகிறவர்களைப் பார்க்க முடியாது. இவ்விதம் இலங்கைத் தமிழரின் தேசீய ஒருமையுணர்வு சிதறும்படி சிங்களசமூகத்தின் மிருகார்த் தங்களே சிங்கள அரசியல்வாதிகளால் தூண்டி வலுப். படுத்தப்பட்டன.
படிப்படியாக ஜீவாதார உரிமைகள் பறிக்கப்பட்ட. சமயங்களில் தமிழ்த் தலைமை காட்டிய எதிர்ப்புகளை முகாந் தரமாக்கி, இன வெறி கொண்ட சிங்களக் காலிப்படைகளை சிங்கள அரசியல்வாதிகளே ஏவிவிட்டார்கள். கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளில் இதற்கான சான்றுகள் ஏராளமானவை. குடிமைக்கு அவசியமான சாத்விக மனோ பாவங்கள், சிங்கள இனத்தை தமிழருக்கு அடிமையாக்கிவிடும் என்ற சித்தாந்தத்தைக்கூட சிங்கள அரசியல்வாதிகள் பரப்பி இருக்கிறார்கள். இதனால் சிங்கள சமூகத்தின் மனிதார்த்தம்28
சக்திகள் செயல் பெற முடியாதவாறு ஒடுக்கப்பட்டன. இன வெறியும் மிருக தந்திரமும் ராஜீயசக்திகளை நிர்ணயிக்கத் துவங்கின, எனவே சிங்கள இனம் இன்று தனது குடிமையின் சுபாவ இயல்பான மனிதார்த்தவாதிகளினாலன்றி அத்தகைய மனிதர்களை ஒடுக்கும் மிருகவாதிகளினால் ஆளப்படுகிறது
தமிழர்களை தேசிய ஒருமைப்பாட்டிலிருந்து அந்நியப் படுத்திய சிங்கள இன வாதம் சிங்கள சமூகத்தினுள் மேலுள்ளவாறு பிளவுகொண்டுதான் இதைச் செய்துள்ளது. தீர்க்கமுடியாத பொருளாதாரப் பிரச்னையிலிருந்து நாட்டின் விமர்சன சக்திகளைத் திசைதிருப்புவதுடன், ராணுவரீதி யான தயார் நிலை, அவசர நிலை ஆகிய ஹேதுக்களின் மூலம் தன் னைப் பதவியில் உறுதிப்படுத்திக்கொள்ள சிங்கள ஆட்சி 4யாளர்கள் இன்று தமிழர்களது பிரச்னையை உபயோகிக் கிறார்கள். இது சிங்கள ஆட்சி எவ்வளவு தூரம் தனது இனத் தின் ஜீவாதாரங்களை யே உதாசீனப்படுத்துகிறது என்பதுக்கான சான்றாகும், அரசியல் பதவிக்காக தமிழரை தேசீய உணர் விலிருந்து அன்னியப்படுத்திய அதே திசையில் தவிர்க்க முடியாதவாறு தனது இனத்தையே அரசியல் சக்தியின் ருந்து தனிமைப்படுத்துகிற நிலை இது. இந்நிலையில் ஜன நாயகம் பிணமாகிறது. ராணுவத் தயார் நிலை அதை எவ் விதமாகவும் எவர் மீதும் உபயோகிக்கும் அதிகார துஷ், பிரயோகத்துக்கான ராஜீய ஒழுங்கீனம் ஆகியன தலை தூக்குகின்றன. தனது பதவிக்காக வேறு ஒரு இனத்தை ஒடுக்க வேண்டும் என்ற அரசியல் சிந்தனை தனது இனத்தையே ராஜீய யந்திரத்திலிருந்து அன்னியப்படுத்து கிற திசையில் போய்க்கொண்டிருக்கிற து.
இவ்வளவுக்கும் சமயசந்தர்ப்பங்களைப் பயன்படுத்து - கிற அரசியல்வாதிகளை மட்டுமே சிங்கள வரும் தமிழரும் பெற்றிருந்தனர். மக்களின் ஜீவாதாரத் தேவைகளையும் அவற்றுக்குத் தடையாக காலதேச வரம்புகளை மீறி ஜனிக் கிறவற்றையும் தன்னலமின்மையுடன் கண்டுணர்ந்துசெயல்படுகிறவன் சமய சந்தர்ப்பங்களை மீறியே பார்வை செலுத்தக்கூடியவன். இவன் வெற்று அரசியல்வாதியை மீறி, 'தலைவன்' என்ற தகுதிக்கு இலக்கானவன். இத் தகைய லட்சணங்களுள்ள எவரையும், சிங்களவரோ இலங்கைத் தமிழரோ பெறவில்லை. இதன் காரணக்கை. ஆராய இங்கே இடமில்லை.
இத்தகைய ஒரு தலைவன் தலைவனாவது இனவாதத்தின் மூலமல்ல. தன து இனத்தை நசுக்கும் எதிர் இனவாதி யின து மனச்சாட்சியையே விழிப்படைய வைப்பது இவனது அடிப்படை வலுவாகும். எனவே இன விரோதத் தினை மீறிய ஒரு ஆழ்ந்த பொது உணர்வு இவனது சிந்தனை" யிலும் செயலிலும் வெளிப்படும். இத்தகைய தலைமையைப் பெறாத எந்த சமூகமும், ஆழமான, ஸ்திரமான ஒரு அரசியல்.. முடிவைச் சாதித்ததில்லை.
இந்த அடிப்படைக்கு நேரெதிரானது இலங்கையின் அரசியல். சிங்கள அரசியல்வாதிகள் பதவிக்கு வர உதவிய சுலோகங்கள் தமிழையும் தமிழினத்தையும் ஒழித்துக் கட்டுகிற பிரச்சாரத்தையே கொண்டிருந்தன. இதனை மிகக் குரூபமான சுலோகமாக்கி SWRD பண்டாரநாயக்க - 1955ல் உபயோகித்தது தான் ''இருபத்தி நாலு மணி நேரத் தில் சிங்களம் மட்டுமே அரசகரும மொழி.> இது அரசியல் சாசனத்தை நிராகரிப்பது. இருந்தும் இந்த சுலோகத்தின் சக்தி மூலம் மட்டுமே பதவிக்கு வந்தமையால் இவர் இதைச் செயல்படுத்த வேண்டியவரானார். இதன் விளைவாக சிங்களவர் மட்டுமே அரசாங்கக் கருமங்களுக்கு லாயக்கான வர் களாகிற அடிப்படை பிறப்பதை உணர்ந்த தமிழ்த் தலைமை ஜூன் 5ம் தேதி, 1956ல் பாராளுமன்றக் கட்ட டத்திற்கு முன் சாத்வீக ரீதியில் ஒரு எதிர்ப்பைக் காட் டிற்று. இது காந்தியின் அஹிம்சாமுறையாகப் பிரகடனமும் செய்யப்பட்டது.
ஏற்கெனவே நாம் குறிப்பிட்டபடி, காந்தி திரட்டிய ஜனசக்தியின் அம்சங்கள் எதுவும் இந்த இயக்கத்தில்30
இருக்கவில்லை. அஹிம்சா யுத்தத்தின் தீவிர நிலைக்கு இவர்கள் தயார் செய்யப் படாதவர்களுமாவர். பெருமள வுக்கு அரசகருமங்களில் ஈடுபட்டிருந்த ஒரு பூர்ஷுவா அணி இது. திடீரென எழுந்து நின்ற அப்போதைய பிரச்னையை அன்றைய சரித்திர கட்டத்தில் கெளரவிக்கப் பட்ட அஹிம்சைக் கருவி மூலம் சந்தித்த திடீர் எதிர்வினை மட்டுமே இந்த இயக்கத்தில் தெரிந்தது. எனவே சிங்கள இனவாதக் கருவியாகத் திரண்டு வந்த காலிப்பட்டா ௗத்தின் தாக்குதலை இந்த 'அஹிம்சைப் போராளிகள்: தாங்கி ஸ்தலத்திலேயே காயங்களுடனோ பிணங்க ளாகவோ வீழ்ந்துகிடக்க முடியாத பலஹீனர்களாக தங்களைக் காட்டிக்கொண்டார்கள். சிதறி ஓடினார்கள். இது ஒரு பகுதியினரால் அஹிம்சா ஆயுதத்தின் தோல்வி யாகக் குறிப்பிடப்படுவதை ஒட்டி இங்கே விபரம் பெறு கிறது. உண்மையில் இது உட்கார்ந்து தெரிவிக்கும் எதிர்ப்பு (Sit-in) முறை மட்டுமே ஆகும்.
அஹிம்சை என்பது காந்தீய இயக்க சரித்திரத்திலும், சித்தாந்தத்திலும் வெறுமே உட்கார்ந்து தெரிவிக்கும் எதிர்ப்பு அல்ல. அஹிம்ஸைக்கு ஒரு அதிவேக (Dynamic) குணமுண்டு. இந்த அதிவேக குணம், எவ்விதமான சரீரஉபாதையையும் பூரணமான மெளனத்துடன் தாங்குவ தாகும். இத்தகைய அஹிம்ஸைப் போராளிகளை காந்தீய இயக்க சரித்திரத்தில் நாம் சந்திக்கவே செய்கிறோம். சரீரத்தளத்தில், உபாதையைத் தாங்குவது மரணத்தை வாழ்விலிருந்து பிரிக்காத விவேகத்தைப் பிரதிபலிப்பது. வாழ்வு என்பது மரணத்தை ஊடுருவி ஜீவிதம் கொள்கிற இயக்கம் என்பதை உணராதவன் அஹிம்ஸா வாதி யாக முடியாது. ஆனால் 'அஹிம்சை கௌரவத்துக்கு துக்கு உரிய ஆயுதம். அஹிம்ஸாவாதியை யாரும் சீண்ட மாட்டார்கள்' என்ற குருட்டு நம்பிக்கையில் நடக்கும் இயக்கம், அஹிம்ஸையை கற்பனா தீத (ரொமான்டிக்) கண் மூலம் கண்டதன் விளைவு. இத்தகையவர்கள் காலிப்31
பட்டாளத்தின் அடியைத் தாங்காமல் ஓடிப்போய் நின்று, 4'நாகரிகமற்ற இவர்களுக்கு அஹிம்ஸையின் அருமை தெரியவில்லை' என்று கூறுவது அதைவிட அபத்தம். அஹிம்ஸைப் போராளி சாவை நோக்கி மட்டுமே நிற்கிறான். சாவு நாகரிகமான துமல்ல, அநாகரிகமானதுமல்ல. சாவும் உபாதையும் எவரால் நிகழ்கின்றனவோ அவரை நிந்தனை கூடச் செய்யாமைதான் அஹிம்ஸையாகும்.
பாமரரான இந்திய வம்சத் தொழிலாளிகளுக்கு நடந்த ஓட்டுரிமைப் பறிப்பின்போது கிளர்ச்சி பெற்றிராதவர்கள் தங்களுடைய கெளரவமான மத்தியதர வர்க்க வாழ்வின் உபாயம் பறிக்கப்பட்டபோது மட்டுமே கிளர்ச்சி பெற்றனர் என்று தான் நாம் மேலே நிகழ்ந்த அஹிம்ஸைப் போரைக் கணிக்க முடிகிறது. இவ்வித கணிப்பின் மூலம் நாம் இந்த இரண்டாம் கட்ட பறிமுதலை நியாயப்படுத்தவில்லை. ஒவ்வொரு பறிமுதலுக்கும் எதிராகச் செய்யப்பட்ட கிளர்ச்சி களின் வலுவின்மை ஆரம்ப கட்டத்திலிருந்தே தர்க்கபூர்வ மாகத் தொடர்வதைக் காட்டவே இதனைக் குறிப்பிடு கிறோம்.
முதல் பறிமுதல் நிகழ்ந்தபோதே கிளர்ந்திருக்க வேண்டிய இந்தியவம்சத் தொழிலாளர்கள் ஏன் சும்மா இருந்தார்கள் என்று கேட்பது அரசியல் விழிப்புக்குரிய மனோபாவங்களை உணராத கேள் வியாகும். முதன்மையாக அவர்கள் இயக்கரீதியாகத் திரள்கிற சகல பாதைகளும் அடைக்கப்பட்ட நிலையிலிருந்தவர்களாவர். இத்தகைய வர்கள் எழுச்சிபெற்றால் சாவை நோக்கி பிசகாமல் நடக்கக் கூடியவர்களாகி விடுவர். இந்தரகஸியம் காந்திக்கு வசப்பட்டிருந்தமையால் தான், தமது ஆடை முதற்கொண்டு சகல அடையாளங்களையும் அவர்களது அடையாளங் களுடன் ஐக்யப்படுத்தினார். இதன் நேரடி விளைவாக அவரது தலைமை அவர்களினால் உணரப்பட்டது; அவரது இயக்க சக்தியின் தொடர் நிலையாக அவர் கள் ஆயினர். எனவே அடிகட்ட மனிதர்களின் எழுச்சியினைத் தூண்டி32
ஒருமுகப்படுத்த உயரிய தலைமைப்பண்பு வேண்டும் - வெற்றுக் கிளர்ச்சி சிதறி அழிக்கப்பட்டுவிடும். -
இலங்கையில் அரசியல் தலைமைக்கு எப்போதுமே ஒரு தேசீய அடிப்படை இருந்ததில்லை-இன அடிப்படை தவிர. இதற்குக் காரணம் இந்தியாபோல இலங்கை தனது சுதந்திரத்துக்காக கடுமையான போரில் இறங்கின அதன் தேவையினால் தன்னை ஒரே நாடாக உணர்ந்து கொள்ள அவசியமற்றிருக்கிறது. அதன் விடுதலை இந்தியாவின் விடுதலையுடன் பிரிட்டிஷ் ராஜரீகக் காரணங்களை யொட்டிதரப்பட்டதாகும்.
விடுதலைக்குப் பிறகு சிங்களவரிடையே இனவாத. உணர்வுகளை மட்டும் எழுப்பி ராஜீயத் தலைமை பெற்ற ஓவ்வொரு அரசும் சிங்களவரின் இனரீதியான கலகம் எதையும் ராஜீய யந்திரத்தின் மூலம் தவிர்க்கவோ அடக்கவோ முடியாதபடி கட்டுப்படுகிறது. இந்தப் பாரதூர மான நிலை SWRD பண்டார நாயக்காவின் காலத் துடன் தான் முழு மூர்க்கமடைகிறது. இனவாதம் என்ற மிருகத்துக்கு தேர்தல் களத்தில் மட்டும் ரத்தவாடையைக் காட்டி அரசைக் கைப்பற்றிவிட்டுப் பின்பு அதை ராஜீய யந்திரத்தின் மூலம் கட்டிப் போட்டுவிடலாம் என நம்பிய சிங்கள அரசுகளின் உள் நாட்டுக் கொள்கையே இது விஷயத்தில் மாற்றமடைந்தது. தேர்தல் களத்தில் மட்டுமன் றி ராஜீயத் தளத்திலும் தமிழருக்கு எதிரான இனவாதம் பிறந்தது.
சிங்கள மக்களை மதத்தின் அதிகார வழியில் எட்டியதன் மூலம் அரசியல் சக்தி பெற்றிருந்த பௌத்த பிக்ஷக்கள். சிங்கள இன வாதத்தக்கு அளித்த ஆதரவும் தூண்டுதலும் கூட இச்சமயத்தில் முக்யமடைகின்றன. எல்லா பிஷக் க ளுமே இனவாதிகளல்லர் என்பதை இவ்விடத்தில் கூற வேண்டும். நாரத தேரோ போன்றவர்களின் அறிவார்த்த மான பிக்ஷ பரம்பரையோ தமிழர்களது பழைய இலக்.33
கியங்களை சிங்கள மொழிபெயர்ப்புகள் மூலம் பரப்பிய சிங்களச் சான்றோர்களின் பகுதியைச் சார்கிறது. இத் தகையோரைவிட இன வெறி பிடித்த இன்றைய பன்ன nஹ போன்ற பிஷக்களே மக்களின் மனோபாவத்தினை நிர்ணயிக்க ஆரம்பித்தது SWRD பண்டாரநாயக்காவின் காலத்திலிருந்து தான். பண்டாரநாயக்காவை தமிழினத்தின் பரமவைரியாக நம்பி பதவிபெற உதவியதே பிக்ஷகேந் திரம் தான். அரசியல் சாசனத்தின் வழி தமிழர்கள் பெற்றிருந்த ஜீவாதார உரிமையை இவர் பறித்தும்கூட பிக்ஷகேந்திரம் சாந்தி பெறவில்லை. தமிழ்த் தலைமை 1956லிருந்து காட்டிய எதிர்ப்பினை சமனப்படுத்த வேண்டி, இவர் தமிழர்களது பிராந்தியக் கவுன் ஸில் அமைப்பு ஒன்றுக்கு உடன்பட்டார். சிங்களவரைத் தமிழ்ப் பகுதிகளில் குடியேற்றும் திட்டத்தையும் வாபஸ் பெறுவ தாக வாக்குறுதி கொடுத்தார். இவை இவருக்கு சிங்கள இன வாதத்தின் பகைமையையே தருவித்தன. பண்டார நாயக்காவின் தமிழ் பிராந்தியக் கவுன்ஸில் உடன்படிக் கையை ரத்து செய்யக்கோரி, அன்று புத்த பிக்ஷக்களுடன் சேர்ந்து உடன்படிக்கைக்குப் பிண ஊர்வலம் நடத்திய வரே இன்றைய இலங்கை பிரஸிடென்ட் ஜெயவர்த்தனே என்பது கவனத்துக்குரியது. இந்த உடன்படிக்கை எத்தனையோ வாக்குறுதிகளைப் போன்று அமுல்படுத்தப் படாமல் போன வற்றுள் ஒன்று தான்.
பண்டாரநாயக்காவின் வாக்குறுதிகளும் உடன் படிக்கையும் எவ்வித நன்மையையும் தரவில்லை என்பது மட்டுமல்ல-சிங்கள வெறி 1958ல் தமிழ்ப்பகுதிமீது நடத்திய இனத்தாக்குதலையும்கூட அவை வரவழைத்திருக் கின்றன. ஏற்கெனவே தேர்தல் சமயத்தில் அவர் தூண்டி, விட்ட இனவெறிதான் இது. இதன் பசியை அவர் பரிபூர்ண மாகத் தீர்ப்பதைவிட்டு தமிழருடன் உடன்படிக்கைகளில் இறங்கியபோது இந்த இன வெறி கட்டுமீறிற்று. அது வரை இல்லாத பிரமாண்டமான தாக்குதல் இது. இதை பண்டாரநாயக்கா அடக்கவில்லை. காலம் கடந்தபின்பு34
இத்தகைய சமயத்தில் நேரடியாக அரசு யந்திரத்தை இயக்கும் அதிகாரம் பெற்றிருந்த அப்போதைய கவர்னர் ஜெனரலான ஸர் ஆலிவர் குணத்திலக்கா ராணுவத்தையும் போலீஸையும் கொண்டு களேபரத்தை ஒடுக்கினார். இதன் விளைவாக இவர் ஒருபுறம் - இலங்கையைவிட்டே நீங்க வேண்டியவரானார். மறுபுறம் சிங்கள இனத்தை சிங்கள அரசு கட்டுப்படுத்தி தமிழரைப் பாது காத்தது என்ற குற்றத் துக்கு இலக்காக 5W-D பண்டார நாயக்கா ஆக்கப் பட்டார். இதன் விளைவாக இவர் அரசியல் கொலை செய்யப் பட்டார். இந்த காலகட்டம் இலங்கையின் சிங்கள அரசி யலுக்கு ஒரு ஏகாக்ரக மூர்க்கத்தை அளிக்க ஆரம்பிக்கிற து. இலங்கையின் போலீஸ் ராணுவம் ஆகியவை, தமிழரைச் சிங்களவர் தாக்கும் போது சும்மா இருக்கவேண்டும் என்ற மனோபாவம் பிறக்கிறது. ராஜீய யந்திரம் சட்டஒழுங்குக் காக அல்லாமல் இன வெறிக்குத் துணைபோகும் ஒழுங்கீனம் பிறக்கிறது.
0 ()
1958ல் தமிழர்கள் கொழும்புப் பகுதியில் அகதிகளாகு மளவுக்கு உறைவிட அழிவுகள் நிகழ்த்தப்பட்டன. இதன் நேரடித் தூண்டுதல்களுள் ஒன்று தமிழ்த் தலைமையின் தூரதிருஷ்டியற்ற உணர்ச்சிகரப்ர கடனங்கள ாகும். சிங்கள வெறியைத் தூண்டும்படியாக தமிழ்த் தலைமையின் பிரபாவச் சொற்பொழிவுகளும் சில குறிப்பான பிரசுரங்களும் இருந்தன. இது நவீன யதார்த்தபூர்வமான அரசியல் உணர்வு அற்ற நிலப்பிரபுத்துவ ரொமான்டிக் மனோபாவத் துக்கு ஆட்பட்ட 'வீரப்பேச்சுக் கிளர்ச்சி. இதன் விளை வாக பழந்தமிழுலகின் ராஜீய மகோன் ன தங்கள் வான். வேல், குந்தங்களை ஏணிப்படிகளாக்கி எட்டப்பட்டவை என்பதே சிங்கள இன வாதிகளின் பார்வைக்குப் புலனாகின. தமிழகத் தமிழர் அணிதிரண்டு வந்துவிடுவர் என்ற சிங்களப்பீதியை யே இது உறுதிப்படுத்திற்று.)
அதாவது சிங்கள வெறி என்ற மனோபாவத்தின் தார்மிக அத்திவாரம், தமிழன து ரொமான்டிக்கான தற்35
பெருமையாகும். திரு. ஏ. அமிர்தலிங்கம், திரு. R. ராஜ துரை, திரு. வி. நாக நாதன் போன்றோரும் இவர்களது அடியொற்றிகளும் இந்த தமிழ்ப்பெருமைப் பாணியை ஒரு கலைத்தொழிலாகவே தங்கள் மேடைப் பேச்சுக்கள் மூலம் நிகழ்த்தினார்கள் என்றால் மிகையாகாது. தமிழகத்துத் திராவிட இயக்கத் தலைவர்களின் பாணியைத்தான் இவர் கள் இலங்கையில் இறக்குமதி செய்தார்கள். அரசியல் சதுரங்கத்தைப் பொறுத்தவரை இந்த இறக்குமதி விவேக மற்ற து. இலங்கைத் தமிழ்த் தலைமையின் அரசியல் ேநாக் க ங்களுக்கும் தமிழ கத்துத் திராவிட அரசியல் நோக்கங் களுக்குமிடையே ஒரு தொடர்பும் கிடையாது. ஆனால் இரு பகுதியினரும் உபயோகித்த பிரச்சாரப் பாணி இருபகுதி எயினருள்ளும் ஒரு பழந்தமிழ்ப் பட்டாளக் கொண்டாட்ட மாக சிங்கள இன வாதி களுக்குத் தென்பட்டிருக்கிறது . இது பிரமை. இத்தகைய எந்தப் பிரமையும் தன்னை எதிர்க் கிற அரசியல் அ ணிக்கு ஏற்படாத வாறு தவிர்ப்பதும் ஏற்பட்ட பிரமைபைக் களை வ து ம் பிரச்சாரத்தின் முக்ய கடமையாக வேண்டும். ஆனால் இலங்கைத் தமிழ்ப் பிரச்சாரம் இதைச் செய்யவில்லை.
இலங்கையில் காலங்காலமாக சிங்களரும் தமிழரும் ஒருவர்மீது மற்றவர் கொண்டிருந்தது வக்ரபீதிதான்அர்த்தமற்ற பயம் தான். உதாரணமாக, இந்தியாவின் --எந்தக் கிராமத்திலும் ஒரு வெளி மாநிலத்தவனைக் கண்டு - ஐயோ தெலுங்கன், ஐயோ மலையாளி' என்று கிலி பிடித்து ஓடுவதில்லை, இலங்கையின் கதை வேறு. இதை ஒரு ஏழைச் சிங்களப் பெரியவர் என்னிடம் தமிழில் கூறிய நிகழ்ச்சி ஒன்றில் காணலாம்.
இந்த விவரிப்புக்கு முதலில் சில உதவிக் குறிப்புகள்டம்புல்ல என்பது திரிகோண மலைக்கு மேற்கே உள்ள சிங்கள ஊர். தம்பலகாமம் திரிகோணமலையைச் சார்ந்த தமிழ்க் கிராமம். இந்தப் பெயருக்கும் தெற்கே உள்ள கதிர் காமத்துக்கும் பெயர் ஒற்றுமையைக் காணலாம். சிங்கள வர்களுள் வழங்கும் அப்புஹாமி என்பது அப்புசாமியின்36
மரூஉ என்பது எவருக்கும் புலனாகக் கூடியது. 'மாத்தயா? என்பது 'மஹாத்மியாவின் பேச்சு வழக்கு வடிவம். நான் குறிப்பிடும் ஏழைச் சிங்களவரின் தமிழ்ப் பேச்சு நடை யிலேயே அவர் சொன் ன தை கீழே தருகிறேன்:
(6அப்ப வெள் ளைக்காரன் தான் ராஜா. நாங்கள் டம்புல்ல இருந்து திரிக்கு னாமலேக்கி பொடியங்கள் வாறம். ஊரில் வேலை இல்ல. வாடா திரிக்குனா மலே மேல தம்பலகமேக்கு , எண்டு மச்சான் பொடியன் சொன்னான். சரி எண்டு வெளிக்கிட்டு வாறம். இது ஜப்பான் குண்டு போட முந்தி, அப்ப நீ புறக்கவுமில்ல. தம்பலகமேத்தில் மத்தி யானம் வந்து இறங்கினம். நாங்கள் மூண்டு பொடி யங்கள். மச்சான் துணிஞ்சவன். அப்புஹாமி எண்டு பேர். இப்ப செத்துப் போயிட்டான். இங்கின ஒரு தமிழ்ச் சாமி கோயிலிருக்கு. கும்புடு வண்டா. புறகு போய் வேலை தேடுவம் எண்டான். கோயில் எங்கின இருக்கென்டு தெரியாது. ஆரோ சொன்ன தக் கேட்டுத்தான் அவனும் வந்தவன். எங்க பார்த்தாலும் வயல். அப்ப நாலஞ்சுபேர் வயலால வந் தாங்கள். தமிளங்கள். இவங்க ளிட்டக் கேட்டுப் பாப்பமெண்டான் அப்புஹாமி. எனக்கு அவங்களப் பாத்ததும் பயம். தமிளன் பொல்லாதவன் எண்டுதான் சொல்லுறது. அவங்க எங்களப் பாத்தாங்க. நாங்க அவங்க ளப் பாத்து, அவங்க எங்களப் பாத்து நிக்கிறம். நான் அப்புஹாமிண்ட முதுகுப்பின்னால ஒளிச்சுக் கொண்டு நிக்கிறன். 'டொம், டொம்' எண்டு எனக்கு நெஞ்சு இடிக்குது. அப்புஹாமி (மாத்தயா!? எண்டான். அவ்வளவுதான், 'ஐயோ சிங்களவன் !? எண்டு கத்திக் கொண்டு ஓடுறாங்கள். நாங்கள் ஆளை ஆள் பாத்தம். பயம் போச்சுது. 'வாடா திரத்துவம்' எண்டான் அப்புஹாமி. (ஹோய்!' ஹோய்!' எண்டு கத்திக் கொண்டு திரத்தினம்,37
அவங்கள் 'ஐயோ ஐயோ!” எண்டு கத்திக் கொண்டு ஓடினாங்கள். என்ன த்துக்கு ஓடினாங்க ளெண்டு இண்டைக்கும் எனக்குத் தெரியாது.
அதுவும் எங்களைப் பாத்து!?)
இத்தகைய வக்ரபீதிகள் விதவித வடிவங்களை எடுத் திருக்கின்றன. நில அளவையாளராக வேலை செய்த என் நண்பனின் சிங் கள மொழி ஞானத்தின் மூலம் அவனை சிங்களவ னென்றே நம்பினார் ஒரு குடியேற்றத் திட்ட சிங்களப்பாமரர். மட்டக்களப்பு என்ற தமிழ்ப் பிராந்தியத் தில் (கல்லோயா? என்ற சிங்களக் குடியேற் றப் பகுதியில் நடந்தது இது. சிங்களப் பாமரர் என து நண்பனின் ஊரை விசாரித்திருக் கிறார். திரிகோணமலை என்று அறிந்ததும், பயந்து ((தமிழனுடைய ஊராச்சே, அங்கே எப்படி உயிரோடு இருக்கிறீர்கள்?'' என்றார். தான் ஒரு தமிழன் தான் என்று நண்பன் கூறியதை சிங்கள வரினால் நம்ப முடியவில்லை. நண்பனின் விளையாட்டுப் பேச்சுக்களில் ஒன்றாகவே நினைத்தார். தனது பெயரே கோபால் கிருஷ்ணன் என்று கூறியபோது பாமரருக்கு ஒரே குழப்பம் தான் ஏற்பட்டிருக்கிறது. 'தமிழரென்றால் இந்த மாத்தயா எப்படி இவ்வளவு நல்லவராயிருக்கிறார்?' என்று ஏற்பட்ட குழப்பம் இது. கிராமத்தில் இது ஒரு சலசலப்பையே ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தியாவில் முஸ்லிம் சமூகத்துக்கும் ஹிந்து சமூகத் துக்கும் இடையே அவ்வப்போது பயங்கர மோதல்கள் எழுந்தபோதிலும் இரு தரப்பினரையும் பிணைக்கிற சில சக்தி கள் இயங்கி உள் ளன.மிக உயரிய தர்சனத் தலைமையிலேயே இந்த சக்திகள் செயல்பட்டிருக் கினறன. கபீர்தாஸ், ஷீர் தி சாயிபாபா, ராமகிருஷ்ணர், காந்தி போன்றோர் இந்த தர்சன த் தலைவர்கள், ஹிந்துத்வத்துக் கும் இஸ்லாமுக்கும் உணவுப் பழக்கம் ஈறாக அனுஷ்டான உடன்பாடின்மை இரு ந் தும்கூட இந்தியாவின் தர் சி கள் தங்களது தத்துவ38.
சிகரத்தின் ஒருமையை அடிப்படையாக்கி, பகிரங்கத்தில் இந்து முஸ்லீம் இணைப்பினைப் பேணியுள்ளனர். அது வும் மதமாற்றம் எதையும் வற்புறுத்தாத எளிமையுடன். இது குடிமையுணர்வு (Civil Sensibility)க்கு இந்திய தர்சிகள் அளித்த கலங்கரை விளக்கமாகும். மக்களுள் ஒரு பகுதி யினரையேனும் அவர்களது களேபர காலங்களில் திசை தவறாதபடி இவ்வுணர்வே காக்கவல்லது.
தர்சிகள் இலங்கையில் இவ்விதம் அங்கங்கே செயல் பட்டிருந்தும், அவர்கள் தேசீயப் பிரதிமைகளாகிய பகிரங்கப் நிலை அவர்களுக்குக் கிட்டவில்லை. நான் நேரில் திரிகோண மலையில் அறிந்திருந்த அப்பாத்துரை என்ற தர்சி ஒரு தேசீய சக்தியாக இவ்வகையில் இயங்கி இராதவரெனினும் இவரிடம் பௌத்த-ஹிந்து பேதமின்மை இருந்திருக்கிறது. ஆனால் இவரை இது வ ஷயத்தில் மிகத் தீவிர சந்தர்ப்பங் களின் போது, இவரது 'பக்தர்களான திரிகோணமலைத் தமிழ்த் தலைவர்கள் அனுசரிக்க மறுத்துள் ளனர். ஊரில் உள் ள போதி மரங்களை ஊர்த்தலைவர்கள் வெட்டி வீழ்த்த. எழுந்தபோது, அதை அப்பாத்துரை வன்மையாக மறுத், திருக்கிறார். புத்தர் பிரானின் குறியீடான இம்மரம் பௌத்தர்களுக்கு மிகப் புனிதமான து. திரிகோணமலையின் கோணேஸ்வரர் கோயில் பிரகாரத்தில் நின்ற பெரிய போதி மரத்தினை பௌத்த சிங்களவர் வழிபடுவதைக் கண்டதும் கோணேஸ்வரத்தைக் காப்பாற்றவென அம்மரத்தையும் ஊரின் தமிழ்த் தலைவர்கள் வெட்ட முடி, வு செய்தனர். அப்பாத்துரையின் மறுப்பு இந்த சமயத்தில் மிகத் தீவிரமாக இருந்தும்கூட தங்கள் முடிவை இவர்கள் மறுபரிசீலனை செய்ய வில்லை. பிரமாண்ட மான இம் மரம் வீழ்த்தப்பட்ட, போது அப்பாத்துரை சிங்களவரைக் குறித்து, அந்த ஏழைகள் வந்து அங்கே இப்போதிருக்கிற வெறும் வெளி யைப் பார்த்தால் அவர்களது மனம் என்ன பாடுபடும்!) என்று பதைப்புடன் கூறியிருக்கிறார். இதனால் ஏற்பட்ட தர்மார்த்த அதிர்ச்சி (Vioral Shock) தான் அவரது மறைவுக்கே காரணமாயிற்று.39
பெளத்த இயக்கம் தமிழரது பிராந்தியங்களில் போதி மரங்களினடியில் சிறு புத்த நிலையங்களை எழுப்பி வந்தமைக்கு தமிழ் ஹிந்து த் தலைவர்களிடமிருந்து வெட்டி வீழ்த்தும் பரிகாரமே பிறந்திருக்கிறது. இவ்வளவுக்கும் போதிமரம் ஹிந்துத்வத்திற்கே புனிதமானதாகும். சிந்து வெளியின் முத்திரைக் கற்களிலேயே இதற்கு சாட்சிய முண்டு. ஆனால் பௌத்த- சிங்கள ஆதிக்கத்தின் ஊடுருவலைப் பற்றிய பீதியில் ஹிந்துத் தமிழர் தங்களது புனிதக்
குறியீட்டையே தறிக்க முன்வந்திருக்கின்றனர்.
சிங்களப் பகுதியான தென்னிலங்கையில் கதிர்காமம் காலம் காலமாக தமிழ்ஹிந்துக்கள் சிங்கள பௌத்தர்கள் இரு தரப்பினராலுமே வழிபடப்பட்டு வந்துள் ள து. ஆனால் இப்போது அந்த முருகன் கோவில் பௌத்தாலயமாகி விட்டது என்பதை தமிழ்த்தலைமை எமக்குச் சுட்டிக் காட்டலாம். சிங்களவர்கள து ஒரே நோக்கம் தமிழ்ப் பகுதிகளை சிங்களமயமாக்குவதே என்பது இவர்கள் கட்சி.
சிங்களப் பகுதிகளில் ஏற்பட்ட ஜனத்தொகைப் பெருக்கமும் சென்றுதேய்ந்திருந்த இலங்கையின் பொருளாதாரமும் தான் இது விஷயத்தில் அடிப்படைப் பிரச்னைகள். இவற்றுக்கு இலங்கை அரசுகள் மேற்கொண்ட பரிகாரங்களுள் ஒன்று நதிப்பள் ள த்தாக்குகளையும் காட்டுப் புறங்களையும் குடியேற்றத் திட்டத்தின் மூலம் உபயோகிப்ப தா கும். அதே சமயத்தில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்கிற பகுதிகளினுள் சிங்களவர்களைக் குடியேற்றி தேர்தல்களில் சிங்களப் பிரதிநிதித்வத்துக்கு அப்பகுதிகளை ஆட்படுத்தும் நோக்கமும் அரசுக்கு இருந்திருக்கிறது.
- இந்தியவம்சத் தமிழர்களின் வாக்குரிமையைப் பறித்த அதே நோக்கத்திலிருந்து பிறந்த திட்டம்தான் இதுவும். என வே குடியேற்றத்திட்ட விஷயத்தில் தமிழ்த் தலைமை கொண்ட அச்சம் அர்த்தமுள் ளது. ஆனால் அந்த அச்சம் போதிமரங்கள் மீது கோடரிகளாகிப் பாய்ந்ததை நியாயப் டடுத்த முடியாது. இந்தப் பாய்ச்சல் குருட்டுத்தனமானது40
தமிழ்ஹிந்துக்கள் மீது சிங்கள பௌத்தர்களுக்கு - இருந்த அச்சத்தினை நியாயப்படுத்துவது. நாம் ஏற்கெனவே குறிப்பிட்டபடி இருதரப்பினருமே ஒருவர்மீதொருவர் வக்ரபீதி கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், தன் மீது கொண்ட அச்சத்தின் விளைவாகவே அடுத்தவன் தன் னை
அச்சுறுத்துகிறான் என்ற விவேகம், சிங்கள - தமிழ்த் தலைமைகள் இரண்டிடமுமே இருக்கவில்லை. .
இந்தியாவில் கி.பி.1000 அளவில் பௌத்தம் ராஜீய நிராகரணங்கள் மூலமும் பிராமண இயக்கங்கள் மூலமும் பகிஷ்கரிக்கப்பட்டு மறைகிறது. இந்த ம றுப்பின் ஞாபகங்களை இலங்கையின் பிக்ஷகேந்திரம் பேணி வளர்த்து, இலங்கையின் தமிழ் - ஹிந்துக்களை தனது பரமவைரியாகக் கணித்து வந்ததை முன்பு குறிப்பிட்டோம். பாமர மனங்களினுள் ஊடுருவும்படி தமிழ்த் துவேஷப் பிரச்சாரம் செய்ய இது வழி வகுத்துள் ள து. இத்துவேஷப் பிரச்சாரத்துக்கும் பகைக்கும் காரணம் அச்சமே. இந்த அச்சத்தினைக் களையும் இயக்கம் இருதரப்பினரிடையிலுமே ஒரு கலாச்சாரத் தளத்தில் பிறக்கவில்லை. - பார்க்கப்போனால் ஹிந்துத்வத்தைவிட பௌத்தம் ஒரு உந்நதமான மதம். தமிழின் ஐம்பெருங்காப்பியங் களுள் மணிமேகலையும் ஜீவகசிந்தாமணியும் பௌத்தத்தைச் சித்தரிப்பவை. மறுபுறம் சிகரகாப்பியமான - சிலப்பதி காரத்தின் ஆசிரியர் பௌத்தத்தின் சாயலுள்ள ஜைன மதத்தினர். திருவள் ளுவர்கூட ஒரு ஜைனர்தாம். தமிழ் உள்ளத்திற்கு வேற்றுமதம் பற்றிய விழிப்புகள் பாரம்பரிய மானவை என்பதற்கான சான்றுகள் இவை. ஆனால் தமிழின் உந்நதங்கள் என்று இத்தகைய விழிப்புகள் இலங்கைத் தமிழ்த் தற் பெருமைப் பேச்சாளர்களால் காட்டப்படவில்லை. தமிழர் வீரம்(?) தான் இவர்களை மெய்சி சிலிர்க்க வைத்தது. அதாவது அறிவார்த்தமான அணுகு முறைகள் தவிர்க்கப்பட்டன. அச்சத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியலுக்கும் அறிவார்த்தத்துக்கும் சம்பந்த41
மில்லை. இந்தக் கட்டத்தில் தான் 1974 ஜனவரியில் யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த , நான் காவது உலகத்தமிழ் மாநாட்டு விபரம் ஆராயத்தக்கது.
ஒரு தமிழ் சாம்ராஜ்யத்தை தென்னிந்தியாவிலிருந்து இலங்கைவரை, மொரீஷியஸிலிருந்து மலேஷியாவரை நிர்மாணிக்க எடுக்கப்படுகிற முஸ்தீபுகள் தான் இந்த தமிழ் மாநாட்டு வரிசைகள் என்பதே சிங்கள இனவாதி களின் கண்டுபிடிப்பு. இத்தகைய அபார கண்டுபிடிப்புகளை தவிர்க்கக்கூடிய எவ்வித சமிக்ஞையும் தமிழ் மகாநாடுகளில் இடம் பெறுவதில்லை. மேலும், அரசியல் சார்ந்த புலவர்ப் புள்ளிகளேயன்றி சமகால உலகுடனோ சிந்தனையுடனோ தொடர்புள்ள தமிழ் இயக்கம் எதற்கும் இந்த மாநாட்டு வரிசையில் இடம் இருந்ததில்லை. எனவே வக்ரபீதியை அடிப்படையாகக் கொண்டு எழுந்து, நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமும் சிங்களப் பாஸிஸமாக வடி வெடுத்து வளர்ந்த இலங்கை அரசு இப்போது காலிப் படையாகவே தன து போலீஸ் முனையை ஆக்கிற்று. உலகத் தமிழ் மாநாடு தாக்கப்பட்டது - அதுவும் திட்ட மிட்ட போலீஸ் அமைப்பினால். தாக்கப்பட்டவர்கள் ஏதோ கும்பல் அல்ல, சொற்பொழிவைக் கேட்டபடி குழுமியிருந்த செவி நுகர்வாளர்கள். இத்தகைய ஒரு சாமான்யமான மக்கள் மீது நடத்தப்பட்ட திட்டமிட்ட போலீஸ் தாக்குதல், களேபரம் செய்யும் காலிக் கும்பலைக் கலைக்கும் வழி முறையைக் கையாண்டிருக்கிறது - சிலரைக் கொன்று பலரைக் காயப்படுத்துமளவுக்கு. ஏன்?
இந்த நிகழ்ச்சி 1974 ல் நடந்தது என்றால் இதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பே, யாழ்ப்பாணப் பகுதியில் தமிழ் இளைஞர்களின் ஆயுத இயக்கம் ஒன்று ஆரம்பித்து விட்டமையை நினைவுகூர வேண்டும். தனிச்சிங்கள மசோதாவைத் தொடர்ந்து, உயர் கல்விகளுக்கு தமிழ் மாணவர்கள் செல்வதுவரை எழுப்பப்பட்ட தடைகள், அதுவரை பிரிந்து செயல்பட்ட தமிழர்களின் கட்சிகளை ஒன்றிணை த்ததுடன், ஒரு சந்தர்ப்பத்தில் தமிழர்கள்42
தனி நாட்டுப் பிரகட ன மாக ஒரு தபால் முத்திரையைக்கூட வெளியிட்டிருக்கிறார்கள். இந்த முத்திரை, தபாலுக்காக பெருவாரித் தமிழர்களினால் உபயோகிக்கப்பட்டு மிருக்கிறது. இவை தமிழ் மாநாடு தாக்கப்பட்டதற்கான நேரடிக் காரணங்கள். அதாவது தனி நாட்டுப் பிரகடனத்தின் அரசியல் தன்மையினூடேதான் தமிழ் மாநாடு சிங்கள அரசினால் கணிக்கப்பட்டுள்ளது. சிங்கள அரசின் கண்களில் அங்கே குழுமி இருந்தவர்கள் சாமான் யர்களல்ல, நாட்டைப் பிரிக்கிற மனோபாவத்துடன் திரண்டிருந்த தீவிரவாதிகள் :
கலாச்சாரரீதியாகப் பார்த்தால்கூட தமிழ்மாநாடு சிங்கள வருக்கு சமாதானம் தருகிற வகையாக நடத்தப் படாத ஒன்று எனக் காணலாம். அங்கே நிகழ்ந்து, கொண்டிருந்த எதிலும் பௌத்தமோ சிங்களச் சான்றோரின் சாதனைகளோ இடம் பெறவில்லை. தமிழை முறையாகக் கற்று அதன் பழைய இலக்கியங்கள் வரை ஊடுருவிய சிங்கள அறிஞர்கள் இருந்திருக்கிறார்கள். இவர்களுக்கும், யாழ்ப்பாண த்துத் தமிழ் மாநாட்டுக்கும் சம்பந்தம் இல்லை. ஏன், வாசக அனுபவத்தைத் தவிர வேறு எந்த லாப நோக்கி முமற்று தமிழைக் கற்றுக்கொண்டு கல்கி வகையறாப் பத்திரிகைகளை வாங்கிப் படிக்கிற சாமான்யமான சில சிங்களவர்களை நான் அறிவேன். தமிழர்களின் பரதம், கர்நாடக இசை போன்ற நுண்கலைகள் தங்களிடம் இல்லை என்றும் தாங்கள் காட்டுமிராண்டிகள் என்றும் குறைப் பட்டுக் கொள் கிற சிங்களக் கலைஞர்கள் சிலரையும் நான் அறிவேன். இத்தகைய மனோபாவங்களுள் ள வர்களுடன் தமிழர் க ளுக்கு ஒரு கலாச்சார சங்கமத்தை ஏற்படுத்தும் வகையாக தமிழ் மாநாடு நடத்தப்படவில்லை. இத்தகைய ஒரு சங்கமம், ஏன் பௌத்தர்களாலும் ஜைனர்களாலும் எடுத்தாளப்பட்ட தமிழில் அதுவும் பௌத்தம் நிலவுகிற ஒரு நாட்டில் ஏற்படக் கூடாது?
- தமிழ் மாநாடுகளுக்கும் கலாச்சாரத்துக்கும் சம்பந்த மில்லை அவை அரசியல் சகதியில் புரள் கிறவர்களினால் நடத்43
தப்படுவது. இந்த மாநாடுகள் சிந்தனைப் பயிற்சி உள்ளவர் களின் நகைப்புக்கே இடமானவை. மேலும், தமிழ் மாநாட்டுத் தண்டவாளத்தில் ஓடுவது பழைய ரொமான்டிக் ரதம் தானே அன்றி விஞ்ஞான பூர்வமான ஆய்வு யந்திர மல்ல, நேற்றைய சரித்திரத்தை இன்றைய உலகப் பின்னணியில் பார்த்து மன விரிவுடன் சிந்திக்கும் பயிற்சி எதுவும் இந்தத் தமிழ் மாநாடுகளில் நடப்பதில்லை. இத்த கைய மாநாடுகளை அக்கறையுடன் பேணி அவற்றுக்காக. நேரத்தையும் கவனத்தையும் செலவிடும் மக்கள் அறிவார்த் தமாக எதையும் கிரகிப்பதுமில்லை. சிந்தனைவடிவிலோ தகவல்களாகவோ, அறிவைப் புதிய பரிமாணங்களுக்கு வளர்த்துக் கொள் வதுமில்லை. ஏற்கெனவே உள்ள ஒரு பெருமித உணர்வு தொய்ந்துவிடாமலிருக்க தமிழ்ப்பெருமை யினை உச்சாடனம் செய்வதே இத்தகைய கூட்டங்களின் நோக்கம். எனவே இது மதரீதியான அரசியல் அனுஷ் டானம். தற்பெருமையைப் பேணும் அனுஷ்டானம். அறிவியக்கத்தின் விமர்சனப் பண்பை நிராகரித்துவிட்டு திரும்பத் திரும்ப ஒரே பார்வையினை வலியுறுத்துகிற அனுஷ்டானம். அறிவின் விழிப்புடன் பார்த்தால் இத்தகைய மாநாடு ஒரு கோமாளித்திருவிழாவாகக் காட்சி யளிக்கும். இப்படியாகப்பட்ட ஒரு சங்கதிக்கு கோடிக் கணக்கில் பொதுச் சொத்து விரயம் செய்யப்பட்டு
வருகிறது...
இதை எல்லாம் ஏதோ கலாச்சாரச் சடங்குகள் என்றும், பாவனை பண்ண முயற்சிக்கிற எவருக்கும் கலையுணர்வோ, புதுப்புது இலக்கியப் படைப்புகளை அனுபவிக்கும் சக்தியோ, விமர்சனப்பண்போ கிடையாது. அப்படி ஏதும் இருந்தால் அது தமிழின் எல்லையினை மீறியே பார்வையை விரிவடைய வைக்கும். தமிழ்-சிங்களப் பிரிவினையை கலாச்சாரத் தளத்தில் உடைத்தெறிந்திருக்கும். சிங்கள ஓவியர்களும் சிங்கள நாடகவிற்பன்னர்களும் தமிழ்க்கலைஞர்களுடன் இணை ந்து செயல் படும் இன்னொரு கொழும்பாக யாழ்ப்பாண
44
(மும் ஆகி இருக்கும். ஆனால் கலாச்சாரம், இலக்கியம் என்ற போர்வையில் இனப்பெருமையைப் பேணும் அரசியல் இயக்கம் அங்கங்கே அரிதாக அழுத்திவதைக்கும் பொருள் I தார நிலையில் எழுந்து எழுந்து வாழத் தவித்து மடிகிற உண்மையான கலை இலக்கிய இயக்கத்தை வெளித்தெரி யாதபடியே மறைத்து வந்துள் ளது என்பது தான் நவீன தமிழ்க் கலாச்சார சரித்திரமாகும்.
உண்மையான ஒரு கலாச்சார நோக்கத்துடன் யாழ்ப் பாண த்துத் தமிழ் மாநாடு நடத்தப்பட்டிருந்தால் அது சிங்களக் கலைஞர்களை விருந்தினராக வரவேற்றிருக்கும். சிங்கள ஓவியர்களின் படைப்புகளை காட்சிக்கு வைத்திருக் கும். மேதமை வாய்ந்த ஹென்றி ஜயஸேன போன்ற சிங்கள நாடகக்கலைஞர்களின் படைப்புகளை மேடையேற்றி இருக்கும். தமிழுடன் தொடர்பு கொண்டிருந்த சிங்கள அறிஞர்களை தமிழ் மகா நாட்டில் கெளரவித்திருக்கும். சிங்கள மொழியின் மூலம் திருக்குறள் போன்ற நூல் களைப் படித்துள்ள பிஷக்களைச் சொற்பொழிவாற்றுவதற்கு அழைத்திருக்கும்.
- ஜன வரி 10 ந்தேதி 1974ல் தமிழ்மாநாட்டின் இறுதி நாளன்று சுமார் ஒரு லட்சம் பேர் குழுமியிருந்து, தமிழ் நாட்டின் திரு நைனா முகம்மது செய்த சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டிருந்தபோது அவர்கள் மூளைகளிலோ பேச்சாளர்களின் மூளைகளிலோ மேலே குறிப்பிடப்பட்ட மனோபாவத்தின் எவ்விதச் சாயலும் இருக்கவில்லை. பேச்சாளர் பேசிக்கொண்டிருக்கும்போதே திடீரென நூற்றுக்கணக்கான போலீஸ்காரர்கள் கூட்டத்தின்மேல் பாய்ந்தனர். கண்ணீர்ப்புகை, தடிகள், துப்பாக்கிப்பிடி, ஆகியவற்றினால் பெரியவர்களும் பெண்களும் குழந்தை களும் நிரம்பி இருந்த கூட்டம் தாக்கப்பட்டது. இதன் விளைவாகச் சிதறிய கூட்டத்தினால் ஏற்பட்ட மின்சார விபத்தில் எட்டு பேர் உயிரிழந்தனர். பெண் கள் உட்பட நூற்றுக் கணக்கானவர்கள் பலத்த காயமுற்றனர்.45
கண்ணீர்ப்புகையினால் தாக்குண்டவர்களுக்கு ஓரிரண்டு நாட்கள் தூக்கமற்ற அவஸ்தை வேறு, இதன் நேரடிக் காரணம் என அங்கே குழுமி இருந்த தமிழர்களை சிங்கள அரசு தீவிரவாதிகளாகக் கணித்ததாக ஏற்கெனவே கலிப் பிட்டோம். திரு நைனா முகம்ம து அந்த சமயத்தில் செய்க சொற்பொழிவின் கருத்து , இந்தத் தீவிரவாதத்துடன் நேர்த்தொடர்பு கொண்ட ஒன்றாகும். 'தமிழர்களுக்கு ஒரு தனிநாடு வேண்டும்' என்ற சங்கதியை மெய்சிலிர்க்க வைக்கும் தமிழ்ப்பெருமை பார்முலாக்களின் மூலம் இந்த அன்பர் அங்கே அவிழ்த்துவிட்டுக் கொண்டு நின்றிருக் கிறார். இந்த உள் விபரம் தமிழ் மாநாடு தாக்கப்பட்டது பற்றிய செய்தி எதிலும் இது வரை வெளிவராத ஒன்றாகும்.
சரி. தமிழருக்குத் தனி நாடு வேண்டும் என்ற பிரகட னத்தைச் செய்வதுக்காகப் போடப்படும் கூட்டம் தற்காப்புக் கொண்ட ஒன்றாக நிர்மாணிக்கப்பட்டிருக்க வேண்டுமே. ஆனால் அத்தகைய முன்னெச்சரிக்கைக்கு அடியில் விஞ்ஞான பூர்வமான காரணகாரியங்கள் பற்றிய விழிப்பு ஏற்கெனவே இருந்திருக்கும். அத்தகைய விழிப்பு பிரிவினையைப் பேணாது என்பதும் ஒரு விஷயம். மறுபுறம் உண்மையில் திரு நைனா முகம்மதுவின் சொற்பொழிவு தமிழ்ப் பெருமையின் கற்பனாதீத ரொமான்டிக் மண்டலத் தில் நிகழ்ந்து கொண்டிருந்த ஒன்றே தவிர, நவீன உலகில் யதார்த்தபூர்வமான விளைவுகளைக் கணிக்கும் பிரக்ஞையுடன் நடந்த ஒன்றல்ல. இந்த கற்பனா தீதச் சஞ்சாரத்தினுள் நுழைந்த யதார்த்த சக்திதான் சிங்கள அரசின் போலீஸ்படை. இதன் நியாயம் சட்டரீதியானது. தனிநாட்டுக் கோரிக்கை என்பது தேசத்துரோகம் என்ற அடிப்படையினைக் கொண்டது. இந்த அடிப்படையையும், இதனைப் பாதுகாக்கிற ராஜீய யந்திரங்களையும் பற்றிய விழிப்பற்று கற்பனாதீத அரசியல் பண்ணிய தமிழ் மரபு தான் யாழ்ப்பாணத்தில் அன்றைய குற்றவாளி. இந்த மரபு, அச்சத்தை அடிப்படையாகக் கொண்டு வளர்ந்த
46
இன வாதப் பாஸிஸமான சிங்கள அரசுடன் இணைக்குற்ற வாளியாகவே நிறுத்தப்பட வேண்டிய ஒன்றாகும்.
விமர்சன திருஷ்டியற்று வெறும் தற்பெருமையை மட்டும் மூலதனமாகக் கொள் ளும் அரசியல் இன்றைய ஜன நாயக உலகிலும் சோஷலிஸ் உலகிலும் நெருக்கடிகளை மட்டுமே உருவாக்கும். ஜன நாயக அடிப்படையில் உரிமை கோருவதுக்காக இனரீதியான தற்பெருமைகளைப் பிரச்சாரக் கருவி ஆக்குவது பொருத்தமற்றது. சமத்துவம் வேண்டிய தமிழர்களின் கோரிக்கைகள் நியாயமானவை. தமிழ்ப் பகுதிகள் அரசினால் கவனிப்பாரற்றுக் கிடப்பதற்குப் பரிகாரமாக பிரதேசரீதியான மாநில அடிப்படையில் மத்திய அரசின் ஆட்சிப் பொறுப்பை தமிழர்கள் தங்களுக்கு பகிர்ந்து தரும்படி கோரினர். இதுவும் நியாயமானது தான் - ஆனால் இந்தக் கோரிக்கைகளின் நியாயம், சிங்கள வாக்காளர்களை எட்டவில்லை. தமிழர்கள் தற்பெருமை பாராட்டிக் கொண்டிருந்தமை தான் சிங்கள அரசியல்வாதி களினால் சிங்கள வாக்காளர்கள் இடையிலே பிரச்சாரம் செய்யப்பட்டு வந்துள்ளது. இதன் விளை வாக தமிழர்களது கோரிக்கைகளின் ஜன நாயகரீதியான நியாயம் இலங்கை அரசியலில் உணரப்படவில்லை. அவர்களது கோரிக்கைகள் ஒரு பகை இனத்தின் கோரிக்கைகளாகவே சிங்கள வாக்காளர்களுக்குப் பட்டிருக்கிறது -- சகமனிதர்களின் கோரிக்கைகளாக அல்ல. இதன் சரித்திர துவேஷப் பின்னணிகளை ஏற்கெனவே கண்டோம். நவீன பிரச்சாரக் கருவிகளும் இந்த துவேஷத்தின் கானக இருள் குரல் களாகவே ஒலித்தன. நவீன உலகின் தேவைகளாக அல்ல. இவ்வகையில் தமிழர்களது கோரிக்கையை மனிதாய மான நவீன ஜன நாயகரீதியில் கணிக்காதபடி சிங்கள வாக்காளரை தமிழருக்கு எதிரிகளாக்கி, தமிழர்கள் தனி நாட்டுக்காகப் போராடுமளவு தமிழர்களைத் தள்ளிய அடிப் படைக் குற்றவாளிகள் சிங்கள இன வெறியர்களாவர்.இன்று சிங்கள அரசியல், தமிழ் அரசியல் இரண்டுமே இதன் விளைவாக குருட்டாம்போக்குகளை அனுசரிக்கின்றன. இலங்கைத் தமிழர்கள் உழைப்பு சக்தியும் பொருளாதார உணர்வும் உள்ளவர்கள். இந்த சக்திக்கும் தேச நலனுக்கும் இடையே உள்ள ஜீவாதாரத் தொடர்பு சிங்கள இனவாதி களின் கண்களுக்குப் படவில்லை. இதன் விளைவாக தமிழர்களை ஒழித்துக்கட்டும் திட்டங்களைத் தீட்டியதின் மூலம் தேசத்தின் ஜீவனையே சிங்கள இனவாதத் தலைவர்கள் அழிக்கிற நடவடிக்கைகளில் இறங்கி இருக் கிறார்கள். இலங்கையின் உண்மையான தேசத் துரோகிகள் இவர்களே ஆவர். ஆனால் இவர்களை அச்சுறுத்தும் வகை யான குடிமையுணர்வுள்ள சட்டம் ஒழுங்கினை ராஜீய யந்திரம் எப் பாதோ இழந்துவிட்டது என்று, பண்டார நாயக்காவின் காலத்தைப் பற்றிய விவரங்களில் கண்டோம்.
1972ல் பிறந்த இளைய தலைமுறைத் தமிழ் ஆயுத இயக்கம் தமிழ்த் தலைமைக்குக்கூடப் புறம்பான ஒன்று தான். தமிழ்த் தலைமை சிங்கள அரசுகளிடமிருந்து தமிழருக்காக எவ்வித நியாயபூர்வமான பலாபலன் களையும் பெறவில்லை என்ற உணர்விலிருந்து பட்டுமல்ல. உயர்கல்விக்காகச் செல்லக்கூடிய வழிவகைகள் தடுக்கப்பட்டதின் விளைவாகக் கூட இளைஞர்கள் ஆயுதத் தீர்வை நோக்கித் திரும்பினர். தீவிரமான சக்தியும் திறனும் கொண்ட ஒரு ஜனத்தொகை யின் புதிய தலைமுறையின் சக்தி உரிய வழியில் செல்வதுக்கு தடை இட்டால் இயற்கையாகவே விளையக்கூடிய பலா பலன் இதுவாகும். இந்த அடிப்படையை உணராமல் ஆயு தவாதிகளின் இயக்கத்துக்கு முழுத் தமிழினத்தையுமே குற்றம் சாட்டும் மனோபாவமே தமிழ் மாநாட்டில் குழுமி யிருந்த தமிழ்க் குடி மைமீது அரசு பாய்ந்தபோது வெளிப் பட்டிருக்கிறது. இதற்குப் பிரதி பலனாக, இலங்கைப் போலீஸ் யாழ்ப்பாணப் பகுதியில் தமிழ் ஆயுதபாணிகளின் அதிரடிகளுக்கு இலக்காயிற்று.48
இத்தகைய மோதல்கள் ஒரு குறிப்பிட்ட விகித ஓழுங்கில் செயல்படுவது உண்டு. மக்களின் திசையிலிருந்து ஆயுதரீதியாகக் காட்டப்படும் எதிர்ப்பு பத்து என்ற எண்ணினால் குறிப்பிடப்படுமானால் அதற்கு ராஜீய யந்திரம் தரும் பதிலடியை 10x10 அதாவது நூறு என்ற எண்ணாகக் காண வேண்டும். உலகின் பலபகுதிகளிலும் இத்தகைய மோதல் ஏறத்தாழ இந்த விகிதாசரத்தையே காட்டுகிறது. இதற்குக் காரணம், அதிரடி செய்கிற புரட்சிப் படை யின ருக்கு தாங்கள் தாக்கப் போகிற அணி வெளிப் படையானது. மேலும் அவர்கள து தாக்கு சக்தியில் சிக்கன மும் விரிவாகச் செய்ய முடியாத ஆயுதவறுமையும் இருக்கும். ராஜீய யந்திரத்திடம் ஆள் பலம் ஆயுதத் திரள் ஆகியன இருக்கிறபோதே எதிராளியான புரட்சிப் படையினைக் குறிகாண முடியாத நிலையும் உண்டு. எந்த ஜனத்தொகையின் பிரதிநிதிகளாகப் புரட்சிப்படை செயல் படுகிறதோ அந்த முழு சமூகத்தையுமே இதன் விளைவாக ராஜீய யந்திரம் தாக்குகிறது. இது தான் இத்தகைய மோதலில் உள்ள விகிதாசார நியதிக்குக் காரணமாகும். இளை ஞர்களின் அதிரடிகளுக்கு அரசிள் பதிலடி இந்த விகிதாசாரத்திலேயே அடுத்த எதிரடியைத் தருகிறது.
தமிழ் ஆயுத இயக்கத்தும்கு எதிராக ராஜீய யந்திரத். துக்கும் புறம்பான சக்திகளை, இந்த சமயத்தில் சிங்கள், இனவாதிகள் திரட்ட ஆரம்பித்திருக்கிறார். இது மீண்டும் மீண்டும் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட காலிக்கும்பல். மலையகத் தமிழர்கள், தமிழ்த் தலைமை ஆகியவர்களது அனுசரணையுடன் பதவிக்கு ஜெயவர்த்தனே வந்த பிறகு 1977ல் இக்கும்பல் மீண்டும் தமிழர்மீது பாய்ந்தது. இது சிங்களத்தலைமை தமிழரிடமிருந்து பெறும் எந்த அனுசரணைக்கும் பிரதியாக எவ்வித அரசியல் தீர்வையும் தமிழருக்குத் தராது என்பதை மட்டுமல்ல, - தமிழரிடமிருந்து அனுசரணையைப் பெற்ற மறுகணமே தமிழரைச் சின்னாபின்னமாகக் குதறவும் செய்யும் என்றே தோன்ற வைத்துள்ளது. இந்த 1977 ன் இன வெறித்.49
தாக்குதல் முந்திய தாக்குதல்களை விடப் பிரமாண்டமான து. 77,000 கொழும்புத் தமிழரை அகதிகளாக்குமளவு நடந்த தாக்குதல் இது. இங்கேகூட விகிதாசார அடிப்படை பெருக்கல் வாய்ப்பாட்டு நியதியில் அமைவதைக் காணலாம். இங்கே, தமிழரது கோரிக்கையும் நம்பிக்கையும் அவற்றுக்கு சிங்கள அரசு செவி சாய்க்கக்கூடிய சாத்யக்கூறையும் பத்து என்ற எண் ணாகக் கொள்ள வேண்டும். இத்தகைய ஒரு நிலை எழுந்தால் உடனே 10X10 அதாவது நூறு எண்ணால் குறிக்கத்தக்க அளவுக்கு தமிழர், சிங்கள இன வாதிகளால் தாக்கப்படுவர். ஒவ்வொரு சிங்கள அரசுடனும் தமிழர் கொள்ளும் சுமுக உறவைத் தொடர்ந்தவை சிங்கள வெறியரின் தாக்குதலாகும். இது ஒரு ஒட்டுமொத்த இலங்கை அரசியல் சரித்திரம்.
1977க்குப் பிறகு தமிழர்கள் ஒரேயடியாக அரசியல் தீர் வின் மீது இருந்த நம்பிக்கையினை இழந்து விட்டதாக தமிழ்த் தலைமையின் போக்குகள் காட்ட ஆரம்பித்தன. ஆனால் கொழும்பில் அகதிகளாகியவர்கள் யாவருமே எந்தக் காலகட்டத்திலும் தமிழ்த் தலைமையின் தனிநாட்டுக் கோரிக்கையை அனுசரித்தவர்களல்ல. இது 1977க்கு முன்பும் பின்பும் மாறாத கொழும்புத் தமிழ் மனோபாவம், மேலும் தனித் தமிழ் நாட்டுக் கோரிக்கையை நிராகரிக்கிற மனோபாவத்தையே மலையகத் தமிழர்களும் அவர்களது தலைமையும் காட்டினர். இலங்கையின் யாழ்ப்பாணப்பகுதி தவிர்ந்த இதர பகுதிகளில் வாழும் இலங்கைத் தமிழ் மனோபாவமும் தனித்தமிழ் நாட்டுக் கொள்கைக்கு எதிரானதே. யாழ்ப்பாணப் பகுதித் தமிழர் மட்டும் தான் இந்தக் கோரிக்கை விஷயத்தில் தீவிரம் காட்டுவோராவர். ஆனால் சிங்கள இனவெறியின் குருட்டாம்போக்கு இத்த கைய பேதங்களைக் கண்டு கொள்ளவில்லை. இதைக் கண்டு கொள்ளாது செயல்பட்டமையினாலே தமிழர்கள் யாவரும் தனிநாட்டுக் கொள்கையின் பிரதிநிதிகளாகுமளவு நிலைமை ஆக்கப்பட்டுள்ளது.
50
யாழ்ப்பாணப் பகுதியை தனிநாட்டுக் கோரிக்கையின் தலைமையகமாகக் கண்ட சிங்கள அரசு 1978ல் அங்கே ராணுவத்தை அனுப்பிற்று.
குடிமைக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டிய ராஜீய யந்திரம் குடிமைமீது குருட்டுத் தாக்குதலை ஆரம்பிக்கிறது. இந்நிலையில் யாழ்ப்பாணத் தமிழர்கள் தங்களது பாதுகாப் புக்கும் எதிர்காலத்துக்கும் ஒரே நம்பிக்கை தருபவர்களென ஆயுதப் புரட்சியாளர்களை யே நம்பினர். ஆனால் அத்தகைய பாதுகாப்பைத் தரக்கூடிய ஆயத்த நிலையில் அவர்கள் இருக்கவில்லை. அவர்களால் அவ்வப்போது சிறு பகுதி ராணுவத்தினர் மீதோ போலீஸ் நிலையத்தின் மீதோ அதிரடிகளைத்தான் தாக்குதலாகத் தர முடிந்திருக்கிறது. இதன் விளைவாகக் கிலி கொண்ட ராஜீய யந்திரவாதிகள் குடிமக்கள் மீது காட்டுத்தனமாகப் பாய்ந்தனர். 1981ல் அதுவும் சிரில் மத்தியு, கேமினி திஸ்ஸ நாயக்க என்ற இரண்டு மந்திரிகள் யாழ்ப்பாணத்துக்கு வந்தபோது இந்தத் தாக்குதல் உலகின் காட்டுமிராண்டிச் சரித்திர சாதனை களுள் ஒன்றை நிறைவேற்றிற்று. யாழ்ப்பாணச் சந்தையும் அதனைச் சார்ந்த கட்டிடங்களும் அழிக்கப்பட்டன என்ப துடன் கனடா நாட்டின் அன்பளிப்பாக யாழ்ப்பாணத்தில் கட்டப்பட்டிருந்த ஒரு நூலகத்தை இலங்கை ராணுவமே எரித்திருக்கிறது. 90,000 நூல்கள் தீக்கிரையாக்கப் பட்டன. சிரில் மத்தியு, கேமினி திஸ்ஸ நாயக்க ஆகிய இருவரும் இவர்களைச் சார்ந்த சிங்கள வெறியர்களும் இந்த சாதனை மூலம் உலகின் தலைசிறந்த காட்டுமிராண்டிகளின் வரிசையில் இடம் பெறுகின்றனர்.
இந்தப் புத்தக எரிப்பு, தமிழர்களது அறிவார்த்த உயர்வை அழித்து அவர்களைக் கீழ்மைப்படுத்திவிடலாம் என்ற முட்டாள் கொள்கையிலிருந்துதான் பிறந்திருக்க முடி யும். இத்தகைய கொள்கை அறிவையும் அதன் உபகர ணங்களையும் பகை கொண்ட கீழ்மட்ட ரெளடிக் கொள்கை. இத்தகைய ஒரு கொள்கை உள்ள ரெளடிகள் ராஜீய கேந்தி51
ரத்தில் இன்றைய உலகின் எந்தப் பகுதியிலும் இருப்பதாகத் தோன்றவில்லை. 1978ல் நிகழ்ந்த இந்த வகைத் தாக்குதல் - உடனடியாக பிரஸிடென்ட் ஜெயவர்த்தனேயை எச்சரிக் திருக்க வேண்டும். இந்நிகழ்ச்சியைத் தொடரக் கூடிய ரெளடி-ராஜீய இயக்கம் எவ்வளவு தூரம் இலங்கையைச் சீர்குலைக்க வல்லது என்பதனை இலங்கைத் தலைமை ஊ கிக் கத் தவறி விட்டது. ஊகித்திருந்தாலும் நாம் ஏற்கெனவே காட்டியபடி- ராஜீய யந்திரத்தையே ஒழுங்கீனத்துக்குக் காவலாக்கு கிற இனவெறியின் பிரதி நிதிகளே தனது பதவியின் தூண்களாக நிற்கும் சூழல்தான் ஜெயவர்த்தனே யுடைய சூழல் இந்த வகையான ஒழுங்கீன வாதத்திற்கு அவரும் ஒரு போஷகர் என்பதைக்கூட பண்டார நாயக்கா சமயத்தில் அவர் செய்த காரியம் பறை சாற்றுகிறது, தமிழர்களுக்கும் நியாயமான வழியில் பிராந்தியக் கவுன்ஸில் அழைப்பு ஒன்றைத்தர SWRD பண்டார நாயக்கா அன்று செய்த உடன்படிக்கையை ஒரு சவப்பெட்டியில் வைத்து பிக்ஷக்களுடன் கொழும்பிலிருந்து கண்டிவரை பாதயாத்திரை செய்தவர் இந்த ஜெயவர்த்தனே. எனவே தனது சகபாடிகள் சாதித்த புத்தக எரிப்பை இலங்கையின் நேர் எதிர் காலப் பொருளாதார எரிவின் சகுனமாகக் காண இவர் தவறிவிட்டார். மனித வர்க்கத்தின் பொது உடைமை யான நூல்களை அழிப்பவன் தன்னையே அழிக்கும் முழு மூடன் என்ற நியதியினை உணரத் தவறி விட்டார். கனடா நாட்டினர் தமிழருக்குத் தந்த நூல்களை ராஜீய யந்திரத்தின் மூலம் சிரில் மத்தியுவும், கேமினி திஸ்ஸ நாயக்காவும் திருடி லாரிகளில் வாரிக் கொண்டு போய் சிங்களக் கேந்திரம் ஒன்றில் ஒரு நூலகத்தை உருவாக்கி இருந்திருந்தால் அது தரும் சகுனக்குறியே வேறு வகையாக இருந்திருக்கும். அது தங்களது மண்டைகளுக்கு உபயோகமாகாவிட்டாலும் தங்கள் இனத்து அறிவு விருத்திக்கேனும் உதவுகிற ஒரு தன்னினப் பேணலையேனும் காட்டியிருக்கும். ஆனால் ராஜீய-ரெளடிகளின், இனவாதம் தன் இனப் பேணலை அல்ல-மாற்று இனத்தின் நிர்மூலத்தை மட்டுமே லட்சிய52
மாகக் கொண்டது. இது தன் இன அழிவுக்கே உபாய மாகும்.
இலங்கையின் அரசு எவ்வளவு தூரம் பொறுப்புணர் வற்றவர்களின் கையில் வசப்பட்டிருக்கிறது என்பதை இந்த புத்தக எரிப்பு வெளிப்படுத்தி இருக்கிறது. அன்றைய காட்டுமிராண்டி உலகில்கூட எதிராளியின் கருத்துக்கள் அடங்கிய நூல்களைத்தான் அழித்த சரித்திரம் உண்டு. தன து பகுதியினருக்கு உதவக்கூடிய நூல்களையே எரித்த சரித்திரம் கிடையாது. எனவே இந்த நூல் எரிப்பு தமிழ்மாநாட்டைத் தாக்கிய நிகழ்ச்சியினின்றும் வேறு. பட்டது. நியாயப்படுத்தவே முடியாத ஒரு பொறுப் பின்மையைக் காட்டுவது.
இன வெறியை ஒரு அரசியல் கொள்கையாக்கி அதற்கு ராஜீய யந்திரம் பாதுகாப்புத்தர ஆரம்பித்த உடனேயே இந்த வகைப் பொறுப்பின்மையை நோக்கித்தான். இலங்கை சரிந்திருக்கிறது. பதவிகளுக்கு வெறும் ரெளடி.. களே வரத்தக்க சரிவு இது. இந்த ரெளடிகளின் கண் களுக்கு பிறரது நலனில் தன து நலன் தங்கியிருக்கிற சமூக, பொருளாதாரக் கட்டுமானத்தின் ஜீவ நரம்புப் பிணைப்புகள் தென்படாது. எனவே நாம் இங்கே (பொறுப்பின்மை" என்ற லகுவான சொல்லில் அர்த்தப்படுத்துவது ஒரு பாரதூரமான மனோபாவத்தினை என்று புரிந்து கொள்ள வேண் டும். இப்பொறுப்பின்மையின் விளைவாக இலங்கை யின் இனவெறித் தலைமையிலுள்ள ரெளடிகள் தொடர்ந்து, செய்த சாதனை, பிறர் தலை என நினைத்து தன் தலைமீதே. பெட்ரோலை ஊற்றிக் கொளுத்திக் கொண்ட அபார சாதனை யாகும். மாற்று இனத்துக்கும் தன் இனத்துக்குமிடையே உள்ள ஜீவாதாரப் பிணைப்புகளை உணராத பொறுப்பின்மை இது.
ரீடர்ஸ் டைஜஸ்ட் பத்திரிகையில் இலங்கையின் பொருளாதாரப் புத்துணர்வு புகழப்பட்ட ஓரிரு மாதத் திற்குள் ஜூலை 1983 ல் இந்தச் சாதனையை இலங்கையின்53
ராஜீய ரௌடிகள் நிறைவேற்றினர். இதன் விளைவாக அ லறியவர்கள் பிரஸிடென்ட் ஜெயவர்த்தனேயும் பிரதமர் பிரேமதாஸாவும் ஆவர். இது வரைக்கும் இல்லாத அளவில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் விளைவு இவர் களுடைய இந்த அலறல்.
ஜெயவர்த்தனே பதவிக்கு வந்ததும் இலங்கையின் தலை நகரான கொழும்புவில் வெளிநாட்டு டாலரைக் கொண்டு எவ்விதமான நவீன உபகரணப் பொருளையும் வரியின்றி வாங்கக் கூடிய ஒரு சந்தையினை அமைத் தார். அதாவது வெளிநாட்டினர் எவரும் வரியற்ற மலிவு விலையில் இக்கடைகளில் யந்திர, மின் கலக் கருவிகளைப் பெறலாம். இதற்கு பாஸ்போர்ட், டாலர் - இரண்டும் அவசியமானவை. (சிங்கப்பூரின் சுங்கவரி இல்லாத துறைமுகப் பொருளாதாரம் இதைவிடப் பின்னலான மிகப்பெரிய ஒரு அமைப்பு.) இந்த வரியற்ற கொழும்புச் சந்தையின் மூலம் அரசு லாபமடைந்தமையினால் சராசரி மனிதனை அதுவரை பயமுறுத்திய அடிப்படைப் பொருள் களான அரிசி முதலியவற்றின் விலை ஏற்றம் கட்டுப்பட்டது. வர்க்க பேதத்தின் விளைவான அடிப்படை அதிருப்திகளை இது தீர்த்துவிடவில்லை எனினும் நிச்சயமாக இடதுசாரி சக்திகளின் நம்பிக்கையூற்றான அடிப்படைப் பொருள் விலையேற்றம் கட்டுப்பட்டமை ஒரு சாதனையாகும். இலங்கை யின் பொருளாதாரப் புத்துணர்வின் இன்னொரு காரணம் தமிழரது ஊக்கமாகும். வெளிநாட்டு உற்பத்திப் பொருள் களை இலங்கைக்குப் பதன நிலையில் இறக்குமதி செய்து, அவை உணவு போன்றவை எனில் சந்தைப் பொருள் வடிவு தரவும், கருவிகளெனில் தொகுப்பு வடிவு தரவும் விசேஷ அயல் நாட்டுறவு நிறுவனங்களான கொலாபரேஷன்கள் அமைக்கப்பட்டன. இவற்றுள் துணி ஆலைகளும் அடங்கும். இந்த கொலாப்ரேஷன்களை தொண்ணூற்றென் பது விகிதம் எடு த்தாண்டவர்கள் பொரு ளாதார சூஷ்மமும் ஊக்கமும்54
மனத்திடனும் உள் ள இலங்கைத் தமிழர் தாம். சிங்கள பணப்புள்ளிகள் அல்ல. கொலாபரேஷன் அமைப்புகளில் வேலை செய்த பெரும்பான்மைத் தொழிலாள வர்க்கம் சிங்களவரென்பது ஒரு முக்ய விஷயம். ராஜீய அமைப்புக்கு
அப்பாற்பட்ட இந்தத் தொழில் பிராந்தியத்தினை ஆளுமை. கொண்ட தமிழர்கள் அயல் நாட்டுத் தொடர்பும் டாலர் சம்பாத்யமும் வெளி நாட்டுச் சாதன வசதிகளும் கொண்ட ஒரு அதி உயர் வர்க்கமாயினர். இந்த வர்க்கத்தின்மீது கட்டுக்கடங்காத பொறாமை கொண்டவர்கள் சிங்களத் தொழிலாள வர்க்கத்தினரல்ல. ராஜீய கேந்திரத்தினைக் கைப்பற்றி அதன் பாதுகாப்புடன் தமிழர்கள் மீது தாக்குதல் செய்கிற சிங்கள இனவெறியாளரே இந்தப் புது உயர்
வர்க்கத் தமிழர்மீது அளவிலா ஆத்திரம் கொண்டனர்.- இந்த ஆத்திரத்திற்கு முந்திய ஆத்திரமாக ஏற்கெனவே யாழ்ப்பாணத்து நூலகத்தை எரித்த அதே காரணம்தான் இருக்கிறது. தமிழரது அறிவார்த்த உயர்வின் மீது. கொண்ட ஆத்திரமும் பொறாமையுமே அந்தப் புத்தகாலய
எரிப்பு. இந்த ஜன்மம் முழுவதும் கண்ணில் எண்ணெய் விட்டுக் கொண்டு தேடினாலும் அந்தப் புத்தகாலய எரிப்பில் வர்க்கப் போராட்டத்துக்கான எலிவால் தடயம்கூட மார்க்ஸிஸ்டுகளுக்குக் கிட்டாது. அந்த எரிப்புக்குக் காரணமான 1 அதே பொறாமையும் ஆத்திரமும்தான் கொழும்புத் தமிழர்கள து பொருளாதார உயர்வின் மீது கூட, அதுவும் அதே ராஜீய ரெளடிகளிடமிருந்து பாய்ந்திருக் கிறது. இது வர்க்க உணர்வின் விளைவல்ல. காலம் காலமாக தமிழர் கள து - சுயக்கட்டுப்பாடும், ஊக்கமும் சிங்களவர்களினுள் அமைந்திருந்த ஒரு உயர் வர்க்கத்து) இனவாதிகளுக்கே அள விலா ஆத்திரம் தந்து வந்திருக்.. கிறது. இவர்கள் நேரடியாக பௌத்த பிக்ஷகேந்திரத்தின் இன வாதக் குணங்களுடன் தொடர்புள்ளவர்களுமாவர். இவர்கள் தான் பாமரச் சிங்களவர்களையே தமிழ் துவேஷி - களாக மாற்றுகிற பிரச்சாரங்களைச் செய்தவர்கள். இதன் அரசியல் போட்டிப் பிராந்தியத்தினை ஏற்கெனவே குறித்து55
விட்டோம். இந்த சிங்கள உயர்மட்ட வர்க்கம் நிலச்சுவான் தாரர்களும் அவர்கள து ரௌடிச் சேவகர்களாக இருந்து குறுக்கு வழிகளில் செல்வந்தரானவர்களும் ஆவர். தமிழர்களைப் போல் உழைப்பாலும் ஊக்கத்தாலும் உயர்ந்த சி5 களவர்கள் அல்ல. இவர்கள். இவர்களினால் தான் பெருமளவுக்கு சிங்கள இன வெறியும் அதன் ராஜீய ரெளடித் தன மும் பேணப்பட்டன. இவர்களுள் ஒரு பகுதியினர் இன வெறியையும் இடதுசாரி அரசியலையும் கலந்து (தமிழன் சிங்களவனைச் சுரண்டுகிறான்' என்ற அலாதியான வர்க்கப் போராட்ட சுலோகம் ஒன்றை உருவாக்கினார்கள். இந்த சூஷ்மத்தினடியில் நிலவியது வெறும் இனவாத ஆத்திரம் தானே யன்றி வர்க்க உணர்வல்ல என்பது தமிழ் இடதுசாரி களுக்குக்கூடப் புலனாகவில்லை.
இடதுசாரி இயக்கத்தின் அதிதீவிர ஆயுத இயக்கம் ஒன்று 1970ல் இலங்கை அரசைக் கைப்பற்ற எழுந்தபோது அது உண்மையில் இடதுசாரி அம்சங்களைவிட சிங்கள இன வாத அம்சங்களையே வெளிப்படுத்திற்று என்பது மேலே கூறப்பட்டிருப்பவற்றுக்கான சரித்திர சாட்சியமாகும். இனவாதமே சிங்கள வாக்காளர்களுக்கு தலைமுறை தலைமுறையான அரசியல் பாடம். இடதுசாரிச் சிந்தனையோ வர்க்க வாதமாகும். மூலதனமிடுகிற முதலாளியாகவும் அவனால் சுரண்டப்படுகிற தொழிலாளியாகவும் பிரிகிற வர்க்கங்களினிடையே ஏற்படும் மதிப்பீடுகள் யாவையும் பொருளாதாரக் கட்டுமானத்தின் பிரதிபிம்பங்கள் என்பதே இடதுசாரி நோக்கு. இந்தச் சிந்தனையில் இன உணர்வுக்கு இடமில்லை. அவ்விதம் இடமில்லா வகையில் மார்க்ஸிய பொருளாதார தத்துவ சிந்தனையாளர்களது நோக்கத்துக்கு கண்பட்டை கட்டி சோஷலிஸத்தினை நோக்கி அவர்கள் ஓடும்படி கம்யூனிஸ்ட் கட்சி அவர்களை முடுக்கிவிட்டிருக் கிறது. இதனால் 1947ன் இலங்கை இடதுசாரிப் புரட்சி இயக்கம் எவ்வளவு தூரம் சிங்கள இனவெறியினது துணை கொண்டு எழுந்தது என்பதை இவர்கள் உணரவில்லை. மதிப்பீடுகளின் மனிதவிசித்ரங்களை உணராத நோக்கத்56
திலிருந்தே 'சர்வம் பொருளாதார வர்க்கப் போராட்ட மயம் ஜகத்' என்ற சுலோகம் பிறக்கும். இன உணர்வுக்கு அப்பாற்பட்ட வர்க்கப் போராட்டம் எதையும் சிங்கள வெறியினால் மூளைச்சலவை செய்யப்பட்டவர்களுக்கு பிரச்சாரம் செய்திருக்க முடியாது. 1970ன் இந்த சிங்கள ஆயுத இயக்கத்தின் தோல்வி சுமார் பத்தாயிரம் இளம் சிங்களவர்களை அரசு யந்திரத்துக்குப் பலியாக்கியமையும் இங்கே குறிப்பிடப்பட வேண்டும்.
இப்போது 1983ல் கொழும்பில் பொருளாதாரப் புத்துணர்வினை இலங்கைக்கு நல்கிய தமிழர்களது உழைப்பின் மீது காட்டம் கொண்டது இன வெறியே அன்றி வர்க்க உணர்வல்ல. இது வர்க்கப் போராட்டத்தின் அகராதியினை உபயோகித்த இனவெறி என்று மட்டுமே கூறலாம். ஜூலை 1983ல் கொழும்புத் தமிழர் தாக்கப்பட்ட துக்கு பூசப்பட்ட வர்க்கப் போராட்டச் சாயம் இவ்வளவு தான். இத்துடன் இத்தாக்குதலைத் தூண்டிய பொறி, பனிரெண்டு ராணுவக்காரர்களையும் ஒரு ராணுவ அதிகாரி யையும் தமிழ் ஆயுதபாணிகள் யாழ்ப்பாணப் பகுதியில் ஒரு அதிரடி மூலம் கொன்றமை என்ற நியாய விளக்கமும் தரப்பட்டது.
இந்தத் தாக்குதல் தான் கொழும்பில் தமிழர்களைச் சிங்களவர்கள் தாக்கியதன் காரணம் என்பதை தமிழ்த் நீவிர வாதிகளும் தமிழ்த் தலைமையும் மறுக்கின்றன. இதற்கு இவர்கள் தரும் சாட்சியம் உலக அவதானத்தின் கண்கள் மூலமே ஒப்புக் கொள் ளப்பட்டுள்ள து. அது, முன் கூட்டியே அதுவும் அரசாங்க வாக்காளர் பட்டியலின் துணையுடன் தமிழ் வீடுகள் அடையாளம் காணப்பட்டு பின்பு பக்கத்துச் சிங்கள வீடுகள் பாதிக்கப்படாவண்ணம் முதலில் சூறையாடப்பட்டு பின்பு எரிக்கப்பட்டமை. இதற்குப் பாதுகாப்பினை ராஜீய யந்திரமே தந்தமை. பதிமூன்று ராணுவக்காரர்களின் மரணத்திற்கு முன்பே போடப்பட்ட திட்டமும் பயிற்சியும் ரெளடிகளின் தாக்கு தலில் தெரிந்ததுடன், இதற்கு முந்திய தாக்குதல்களை57
விடவும் நேர்த்தியாக அதுவும் அதிகபட்ச அழிவு தரக் - கூடிய விதத்தில் இது செய்யப்பட்டுள்ளது. எனவே இத்தாக்குதலின் காரணம் கொழும்புத் தமிழர்களை நிர்மூல மாக்கும் அசுரத் திட்டமாகும். ஆனால் இதற்கும் தமிழர் கள து ஆயுத இயக்கத்துக்கும் சம்பந்தமே இல்லை என்று கூறுவது தவறு. படிப்படியாக அதிரடிகளைத் தந்து கொண்டிருந்த தமிழ் ஆயுதவாதிகளின் ஆணிவேர்களை அறுத்தெறியும் நோக்கம் என்று தான் கொழும்புத் தமிழர் களைத் தாக்கியமை காணப்பட வேண்டும். தமிழர்களின் அறிவார்த்த முன்னேற்றத்துக்குக் காரணம் நூல்கள் எனக்கண்டு நூலகத்தை எரித்த மடையர்கள், ஆயுதவாதி களுக்கு 'துப்பாக்கி வாங்க காசு குடுக்கிறவர்கள் கொழும்பி லுள்ள தமிழ்ச் செல்வந்தர்களே என்றும் சிந்தித் திருக் கிறார்கள். எனவே கொழும்புத் தமிழர்களை நிர் மூல மாக்கினால் தமிழ் ஆயுத இயக்கம் படுத்து விடும் என இவர்கள் கண்டுபிடித்திருக்கலாம். ஆனால் தமிழ் ஆயுத பாணிகளுடன் சில செல்வந்தருக்கு இருந்த தொடர்பினை விட அதிகமாக கொழும்புத் தமிழர்களுக்கு இலங்கையின் பொருளாதாரத் தலைவிதியுடனே யே உண்மையான தொடர்பு இருந்திருக்கிறது. இலங்கையின் ராஜீய ரெளடி களுக்குத் தென்படாத சூஷ்மம் இது. அடி தடிச் சிந்தனை யாளர்களுக்கு இந்த சூஷ்மம் எப்படி எட்டியிருக்க முடியும்?
கொழும்பிலிருந்த தமிழர்கள் துணிமில்கள் மூலமும், டி.வி. முதலியவற்றின் பகுதிகளை இறக்குமதி செய்து பொருத்தும் நிறுவனங்கள் மூலமும் தங்களை மட்டுமல்ல சிங்களத் தொழிலாளிகளை வேலைக்கு அமர்த்தி அவர்களையும் அபிவிருத்தி அடைய வைத்திருக்கின்றனர். இந்தத் தமிழர்களுள் அகப்பட்ட. ஆண், பெண், சிறார் . உட்பட பாரபட்சமற்று இங்கே நாம் விவரிக்க விரும்பாத வகையில் ராக்ஷஸத்தனமாகச் சின்னாபின்னப்படுத்தி, அவர்களது உடைமைகளை அபகரித்து, அபகரிக்க முடியாதவற்றையும் வீடுகளையும் கடைகளையும் தொழில் நிறுவனங்களையும் வாகனங்களையும் எரித்த தாக்குதல் ஒரு யுத்தத்தின்58
சேதத்தை இலங்கைத் தலைநகரான கொழும்புக்குத் தந் துள்ள து. அத்துடன் எட்டு வருஷ காலத்துக்குப் பின்னே தள்ளப்பட்ட நிலை ஆகிற்று தேசீயப் பொருளாதாரம்.
இவ்வளவுக்கும் கொழும்பிலிருந்து வெளிப்பட்ட தமிழர் களுள் செல்வ நிலையிலிருந்த எவரும் 'நிர் மூலம்' ஆகவில்லை, இவர்களுள் கணிசமான தொகையினர் வெளிநாட்டுத் தொடர்பு மூலம் சேமிக்கப்பட்ட தங்கள் செல்வத்துடன் அண்டை நாடுகளுக்கு சென்றுள்ளனர். அதுமட்டுமல்ல. ஜூலை 1983 வரை தமிழ் ஆயுத இயக்கத்தையும் அதன் தனித் தமிழ்நாட்டுக் கோரிக்கையையும் பற்றிப் பாராமுக மாக இருந்த இவர்களுள் ஒரு பகுதியினர், இப்போது அந்த இயக்கத்தையும் கோரிக்கையினையும் ஆதரிக்கக்கூடத் துவங்கியுள் ளனர். இலங்கையின் ராஜீய ரௌடிகள் சாதித்தது. மொத்தத்தில் இதைத்தான். இது மட்டுமல்ல. எட்டு வருஷ காலத்துப் பொருளாதார சாதனையை இவர்கள் ஒன்பது நாட்களில் அழித்திருக்கிறார்கள். இந்தப் பேரழி வினால் கதிகலங்கிய பிரஸிடெண்டும் பிரதமரும் இதற்குக் காரணகர்த்தாக்களைக் கண்டு பிடித்துத் தண்டிப்பதாக அலறியதுடன், அழிக்கப்பட்ட பொருளாதாரத்தினை மீண்டும் கட்டி எழுப்பப்போவதாகவும் சூளுரை விடுத்தனர். எனில் யார் கட்டி எழுப்புகிற இந்த வேலையைச் செய்ய முன்வருவது? பொருளாதார சூட்சுமத்துடனும் முன் நோக்கத்துடனும் மனத்திடத்துட னும் முதலீடு செய்து தமிழர்கள் விட்டுச் சென்ற தொழில் நிறு வனங் களை. எவர் இயக்குவது? சிங்களவர்களா? அவ்வித முதலீடுகளைச் செய்யக்கூடிய திடம் அவர்களிடம் இருந்திருந்தால் சிங்கள வரினால் சிங்கள வருக்காக நடக்கும் அரசின் துணையுடன் ஏற்கனவே அவர்கள் அல்லவா தமிழர்கள் கொழும்பில் வகித்த செல்வத் தலைமையினை வகித்திருப்பர்? இலங்கை யின் ராஜீய ரெளடிகள் தமிழர்களை நிர்மூலமாக்கி விட்டால், இலங்கையின் தொழில் நிறுவனங்கள் சிங்களக் கைகளுக்கு வந்து விடும் என எதிர்பார்த்திருக்கிறார்கள். இதன் விளைவாக இன்றுவரை, தமிழர்கள் விட்டுச்சென்ற தொழில்59
இயக்கங்களைத் தீண்ட எவரும் வராத ஒரு பொருளாதாரச் சுடுகாடு தான் கொழும்பில் நிலவுகிறது. ராஜீய ரௌடிகளின் சிகர சாதனை இது. இதன் மூலம் வேலையிழந்து நடுத் தெருவில் நிற்கும் தொழிலாளிகள் சிங்களவரே. .
ராஜீயரெளடிகளும் தமிழ்த் தலைமையும் ஒரு உள் விபரத்தினை வேண்டுமென்றே மழுப்புகின்றனர். உண்மை யில் ஜூலை 1983ன் ஒன்பது நாள் தாக்குதலையும் நடத்திய காலிகள் சிங்களவரல்ல என்பதே இந்த விபரம். ரா ஜீய ரெளடிகள் இதை மறைத்து தமிழரைத் தாக்கியவர்கள் சிங்களவரே” என்ற தோற்றத்தினைத் தருவது சிங்கள இனவாத அரசியலைப் பேணுவதற்காகும். தமிழ்த் தலைமை களும் இவர்களைச் சிங்களவர் என்றே குறிப்பிடுவது சிங்கள் வருடன் வாழ முடியாது என்ற அடிப்படையில் தனி நாட்டுக் கோரிக்கையினை வலியுறுத்துவதற்காகும். ஜூலை 1983ல் ஒன்பது நாட்கள் கொழும்பை ராஜீய ரெளடிகளின் பாது. காப்புடன் சேதமாக்கியவர்கள் சிங்களவர்களல்ல. ஆனால் உடைமைகளை விட்டு. உயிரைக் காப்பாற்ற சிதறி ஓடிய எத்தனையோ தமிழர்களைக் காத்தவர்கள் சிங்களவர்கள். இதற்காக அந்த குறிப்பிட்ட சிங்களவர்கள் தங்களது : பாதுகாப்பையே பணயம் வைத்திருக்கிறார்கள். அத்தகைய வர்களையே சிங்களக் குடிமை எனக் கணித்து அவர்களுடன் கூடி வாழமுடியாதா என்பதைப் பரிசீலிப்பது தமிழ்த் தலைமைக் குப் பயன் தர முடியும். சிங்கள இனவாத ராஜீய ரெளடிகளின் அடுத்த குறி இந்த சிங்களக் குடிமையாகவே இருக்கமுடியும் என்பதனையும் நாம் அந்தக் குடிமையினை நோக்கி உரத்துக் கூற வேண்டும்.
- ஜூலை 1983ல் கொழும்பை ஒன்பது நாட்கள் ஆளுமை கொண்ட ரௌடிகள் எழுச்சி கொண்டு தங்களை மறந்த சிங்களவரல்ல. பெரும்தொகைப் பணத்தை வாங்கிக் கொண்டு ராஜீய யந்திரத்தின் பாதுகாப்புடன் செயல்பட்ட வர்கள் இவர்கள், இது எழுச்சியாகாது. இவர்கள் சிங்கள வரைப் போலவே சிங்கள மொழி பேசினாலும் சிங்கள மொழியைத் தவிர வேறு மொழி தெரியாதவர்களெனினும்60
இவர்களைச் சிங்கள வராகக் கணிக்க முடியாது. ஏனெனில் முந்திய பரம்பரைகளில் தமிழ் பேசுவோராக இருந்தவர்கள் இவர்கள். ஆனால் ஹிந்துக்களல்ல, இந்த ரெளடிகளுக்கு உண்மையில் எதுவித இன அடையாளத்தையும் தர முடியாது. தமிழ் பேசுகிற தங்கள் மதத்தினரையே இவர்கள் தமிழர்களாகப் பாவித்துத் தாக்கி அவர்கள் உடைமைகளையும் அழித்திருக்கிறார்கள். இவர்கள் து அடை யாளம் அதனால் குறிப்பிடப்படுகிற மக்களையே இழிவு படுத்திவிடும். எனவே அதை மட்டும் தவிர்ப்போம். இந்த ரெளடிகள் பெருமளவுக்கு மத்ய கொழும்புவின் (வாழைத் தோட்டம்' என்ற பகுதியிலும் வெளிப்புறக் கொழும்புவின் *புதுக்கடை' பகுதியிலும் உள்ள கேடிகள். - இவர்கள் சிங்கள இன வெறியின் ஆவேசத்தையே வெளிப்படுத்தி தமிழ்க்குடிமையினைத் தாக்கியதாகச் சித்தரிக் கப்பட்டிருக்கிறார்கள். இவர்களது ஆவேசத்தின் ரகஸ்யம் இனவெறி அல்ல. இவர்களை ஒரு ராக்ஷஸப் படையாக மாற்றுவதற்காக இவர்களுக்கு விசேஷமான வெளிநாட்டு ரஸாயன லாகிரி ஒன்று தரப்பட்டிருக்கிறது. இவர்களை இயக்கியவர்கள் நேரடியாக ராஜீயத் தளத்தில் பதவி வகித்த தலைமைப் புள்ளிகள் தாம். மறுக்கவே முடியாத சாட்சியம் இதற்கு உண்டு. அது, இலங்கையின் பொருளா தாரத்தினையே அழித்த இந்த ரெளடிக் கூட்டத்தில் ஒருவர் கூட தண்டனை பெறாமையாகும். ஒன்பது நாட்களில் கொழும்பு நகரின் பொருள் நிலையங்களை சுடுகாட்டுக் கோலத்துக்கு மாற்றிய இவர்களைப் பின்தொடர்ந்த ராஜீய யந்திரம் செய்தது ஒரே கடமையைத்தான். அது இவர் களால் தெருவில் சின்னாபின்னப் படுத்தப்பட்டுக் கிடந்த தமிழ்ப் பிரேதங்களை அகற்றிய அபூர்வ கடமை ஆகும். கொலைக் குற்றத்துக்கும் மேற்பட்ட பேரழிவுகளைச் செய்த ரெளடிக்கும்பலை செளக்யமாக வீட்டுக்கு அனுப்பி வைத்த அரசு முறை தன து பதவியின் தூண்களான ராஜீய ரெளடி களைக் காப்பாற்றுவதற்காகவே இவ்விதம் பாராமுகமாக இருந்திருக்கிறது. தாக்குதலைச் செய்தவர்கள் கைது61
செய்யப்பட்டால் அவர்கள் உடனே தங்களைப் பணத்துக்கு அமர்த்திய ராஜீய ரெளடி களை பகிரங்கப்படுத்திவிடுவார் கள். விநோதம் என்ன வென்றால் இலங்கை அரசுத்தலைவர் களின் (பேட்டிகள் பிரசுரமாகிற இந்தியப் பத்திரிகைகள் எதிலும் இந்த விபரம் மட்டும் ஆராயப்படுவதில்லை.
ஜூலை 1983ன் திட்டமிட்ட கொழும்புத் தாக்குதல் வழக்கமான சிங்கள இன வெறியாளர்களின் எழுச்சியையும், தூண்டியிருக்கிறது என்று தான் இலங்கையின் இதர பகுதி களில் அதே சமயம் தமிழர் தாக்கப்பட்டதைக் கொண்டு உணர முடிகிறது. மலையகத் தமிழர்களையும் ஒரு பெரிய அளவில் இன வெறியாளர்கள் தாக்கி இருக்கிறார்கள். ஜெயவர்த்தனே யின் அரசு அமைவதற்கு வாக்களித்தவர் கள் இந்தத் தமிழர்கள் என்ற உண்மையை மறைத்து இவர் களும் தமிழர்களே என்ற அடிப்படை முன் நின்றமைதான் காரணம். தங்களது சிங்கள அரசியல் சார்புகூட தங்களைக் காப்பாற்றாது எனக்கண்ட இவர்களுள் சுமார் 40, 000 பேர் பீதிகொண்டு இந்தியாவுக்கு வந்தனர். இவர்களை இந்தியா வுக்கு ஈர்த்தது தமிழகத்துத் தலைவர்களது கற்பனைரதப் பேச்சுக்கள் தான். பேச்சை மீறிய செயல்வடிவ ாக இவர் களைநோக்கி தமிழ்த் தலைவர்கள து கரங்கள் மீளவில்லை. ஆனால் இவர்களைக் காட்டி நிறைய நிதி திரட்டப்பட்ட டுள் ள து.
(தமிழர் படை' என இலங்கையை நோக்கித் தமிழகத் தினூடே சென்ற பாதயாத்திரையும் ராமேஸ்வரத்தினைத் தாண்டி நீளவில்லை. இது ஒருபுறம் உலகத்தின் கவனத்தை ஈர்த்து இலங்கைத்தமிழர் பிரச்னையை உலகறியச் செய்த படை தான். மறுபுறம் இது ஒரு முக்யமான சாதனையைச் செய்திருக்க வேண்டும். சிங்கள மக்களுக்கு காலங்கால மாக (இந்தியத் தமிழர் திரண்டு வந்தால் என்ன ஆகும்? எனப் புகட்டப்பட்ட, வக்ர பீதியை இந்தத் "தமிழர்படை யின் லட்சணம் ஒரேயடியாகக் களைந்திருக்க வேண்டும்...62
- இது இயற்கையாக நிகழமுடியாதவாறு சிங்கள இன வெறித் தலைமைகள் செயல்படுகின்றன. இதை விட இந்தியா ராணுவத்தை இலங்கைத் தமிழருக்குச் சாதகமாக அனுப்பக் கூடும் என்ற சிங்கள பீதி ஆதாரமற்றது என்பதும் உணரப் பட்டிருக்க வேண்டும். பங்களாதேஷ் போல இந்திய உதவி தமிழருக்குக் கிட்டும் என நம்பியமை அதுபற்றிய சிங்களவரது பீதியைப் போலவே சூஷ்ம உணர்வற்ற நம்பிக்கையாகும். பங்களாதேஷ் விஷயத்தில் இந்தியா ராணுவத்தை அனுப்பியதற்கு இருந்த அழுத்தமான உந்து தல்கள் இலங்கை விஷயத்தில் இருக்கவில்லை. முதன்மை யாக பாகிஸ்தானுடன் இந்தியாவுக்கு தொடர்ச்சியாக இருந்த யுத்தமுனை மோதலின் ஒரு அங்கம் பங்களாதேஷ் என்பதுகூட இலங்கையருக்குத் தென்படாதது ஆச்சரியம் தான். இலங்கை விஷயத்தில் இந்தியா காட்டியது அற்புதமான ஒரு பொறுப்புணர்வினை ஆகும். இந்தப் பொறுப்புணர்வின் விளைவாக இந்தியாவின்மீது சிங்கள வருக்கு இருந்த வக்ரபீதி களையப்பட்டிருக்க வேண்டும். சிங்கள வர் தங் கள து பிக்ஷக்களது பீதியை சுவீகரிப்பது நிறுத்தப்பட்டிருக்க வேண்டும். இலங்கை அரசியலுக்கு இது ஒன்றுதான் விமோசனம் தரவல்லது. இந்த விமோ சனத்தின் தொடர்ச்சியாக இலங்கைத் தமிழரை சிங்களவர் சகோதர பாவத்துடன் பார்க்கும் சாத்யம் பிறக்க இட - முண்டு .
இத்தகைய ஆரோக்யம் எதுவும் இலங்கைக்கு ஏற்பட்டு விடக்கூடாது என்பது தற்போதைய இலங்கை அரசினதும் தமிழ்த் தலைமையின தும் நோக்கம் என்றே தோன்றுகிறது. இத்தகைய ஆரோக்யத்தைச் சந்திக்க இவர்களுள் எவரும் தயாராயில்லை. முக்யமாக இலங்கை அரசின் நிலை உள்ளூரப் பரிதாபகரமான து. இந்தப் பரிதாப நிலை இலங்கை அரசுத் தலைகள் தரும் பேட்டிகளைப் பிரசுரிக்கிற இந்தியப் பத்திரிகைகள் மூலம் வெளிப்படுவதில்லை. இந்த 1984 ஆகஸ்டில் யாழ்ப்பாணத்து ஊர்களையும் மன்னாரையும் ராணுவத்தைக் கொண்டு தாக்கி, கட்டிடங்களை அழித்து,- 63
தமிழ்மக்களைப் பீதி கொள்ளவைத்த இலங்கை அரசு தமிழ் ஆயுத இயக்கவாதிகளைத் தேடி’ இதனைச் செய்ததாகக் கூறப்படுகிறது. இதே காரியங்களைத்தான் இந்தியாவில் போலீசும் செய்வதான விளக்கத்தை இலங்கையின் உள் துறை மந்திரியான லலித் அத்துலத்முதலி கூற நமது பத்திரிகைகளும் அந்த (அபத்தத்தினைப் பிரசுரித்துள்ளன. 'தேடிப்பிடி பட்டவர்கள் ஆயுதவாதிகளல்ல. எத்தனை பேரென்று தெரியவராத தொகையளவு இளம் தமிழர்கள் இவர்கள். ஆயுத இயக்கத்துடன் தொடர்பு ஏதுமற்ற இவர்களுள் பலரை சிங்களப் பகுதிகளுக்குக் கொண்டு போய் ஆயுதவாதிகளைப் பிடித்து வந்திருப்பதாகக் கண் காட்சி வைத்துள் ளது இலங்கை அரசு. தமிழ்ப்பிராந்தி யங்கள் மீது இந்த ஆகஸ்ட் தாக்குதலும் இந்தக் கண் காட்சியும் சிங்களப் பகுதியினுள் ளேயே அரசுக்கு எதிராக எழக்கூடிய கலக நிலைகளைத் தவிர்ப்பதுக்காகச் செய்யப் பட்ட திசைதிருப்புதல் என்றே தோன்றுகிறது. இது தான் இலங்கை அரசின் இன்றைய பரிதாப நிலை. - இதன் நேரடிக் காரணம் சென்ற ஜூலை 1983 ன் பொருளாதார அழிவாகும். இந்த அழிவு அடிப்படைப் பொருள்களான அரிசி போன்றவற்றின் விலைகளை ஏற்றி இருக்க வேண்டும். ஏற்றினால் ஏற்படக்கூடிய கலகத்தைத் தவிர்க்க தன்மீதே நிதிப்பளுவைத் தாங்கிக் கொண்டு தத்தளிக்கும் நிலையே இன்றைய இலங்கை அரசின் நிலை. இந்தப்பளுவைத் தாங்கமுடியாதபடி பல்லை நறநறவென்று கடித்தமையின் விளைவு ஆகஸ்ட் 1984ல் தமிழ்ப் பிராந்தி யங்கள் மீது ராணுவப் பாய்ச்சல். -
ராணுவம் கேட்டவிழ்ந்து', மேலதிகாரிகளிடமிருந்து வருகிற ஆணை களை மீறியே தமிழ்க்குடிமைமீது பாய்வதாக அரசுத்தலைமை சாதித்து வருகிறது. ஜூலை 1983ன் சந்தர்ப்பத்தில் மட்டுமே இதற்கு சாத்யக்கூறுகள் இருந் திருக்கின்றன. பதிமூன்று ராணுவக்காரர்களை தமிழ் ஆயுத பாணிகள் தாக்கியதற்குப் பிரதியாகத் "தமிழனை அழிக்கும்64
திட்டம் இதோ கொழும்புவில் ஆரம்பித்து விட்டது' என்ற பிரகடனத்தின் மூலம் இந்த ராணுவக் கட்டவிழ்ப்புக்கு இடமிருந்திருக்கிறது. ஆனால் இதைத் தவிர்ந்த முழு நிகழ்ச்சிகளிலும் யாதுமறியாத சாமானியர்களை ஊர் ஊராக போர்க்கால முறையில் தாக்கி வீடுகளை அழித்த ராணுவம் முக்யமாக இதைப் பெருமளவில் இந்த ஆகஸ்ட் 1984ல் இருந்து செய்கிறபோது அது மேலிடத்து ஆணையினையே நிறைவேற்றுகிறது. மேலும் அமெரிக்காவுக்கு திரிகோண மலைத் துறைமுகத்தில் சில வசதிகளை வியாபாரரீதியில் இலங்கை அரசு செய்துவருவது இந்தியாவை அச்சுறுத்து வதற் குத்தான். அதாவது தமிழர்களுக்காகப் பரிந்து இந்தியா - படை எடுத்தால் இந்து சமுத்ரத்தினையே திரிகோணமலைத் துறைமுகத்தின் வழியில் அமெரிக்க போர்த்தளமாக விற்று விடுவோம் என்ற அச்சுறுத்தல் இது. உண்மையில் இது செயல்ரீதியாவது மிகப் பின்னலான தாகும். இருந்தும், இந்து சமுத்ரத்தினை தமது போர்த்தள மாக்குவதற்கு உபாயங்களை வல்லரசுகள் தேடிக் கொண் டிருக்கின்றன. அவர்களுடைய இந்தத் தேடலே இந்தியா, வைப் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ளத் தூண்டு கிறது.
ஆகஸ்ட் 1984னைத் தொடர்ந்து யாழ்ப்பாணப் பகுதியின் தமிழ்க் குடிமை ராணுவத்தின் யந்திரப் போக்குவரத்துக்கு இடமில்லாதவாறு பாதைச் சேதங்களைச் செய்து விட்டது. இது பீதியை மீறிய போர் முகம் ஒன்றினைக் குடிமைக்கு. அரசின் முட்டாள் கொள்கையும் செய்கையும் தருவித்த சாதனையாகும். தொடர்ந்து தமிழ் ஆயுதவாதிகளின் இயக்கத்தினை நேரடியாக குடிமை சுவீகரிக்கிற தவிர்க்க முடியாமை பிறக்க இடமுண்டு. இதை தனது ராணுவத்தின், மூலம் அரசினால் சந்திக்க முடியாத நிலையும் பிறக்கக்கூடும். அப்போது எவ்வித பிரச்சாரத்தினை உலகத்தளத்தில் இலங்கைத் தமிழருக்கு எதிராக அரசு செய்யக்கூடும் என்பதுக்கும் உதாரணங்கள் உள்ளன. 'ஐயோ கம்யூனிஸ்டு,65
கம்யூனிஸ்டு' என்ற அலறல் பிரச்சாரமாகவே இது இருக்கும். உடனே உலகத்தை கம்யூனிஸத்திலிருந்து காத்து அருள் பாலிக்கும் அமெரிக்க அரசின் தலையீடு, வெளித்தெரியாத வகைகளில் இலங்கையில் ஊடுருவ இடமுண்டு. ஆனால் சர்வதேச உடன்படிக்கைகளை கண்களில் மாட்டிக்கொண்ட பார்வைகளுக்கு மட்டுமே தெரியாததாகத்தான் இது இருக்குமே அன்றி உண்மையில் வெளித் தெரியாத ஊடுருவல் எதுவுமே இன்று சாத்யமில்லை. இவ்வித் ஊடுருவல் எதுவும் ஏற்பட்டால் நிச்சயமாக தமிழர்களுக்குச் சார்பாக அமெரிக்காவின் எதிர்முகாமிலுள்ள சக்திகளும் இலங்கையுள் ஊடுருவும். இந்தியா நேரடியாக ராணுவத் தலையீடு செய்யும். ரஷ்யாவை துணைக் கு அழைக்கும்.
அதாவது இலங்கை அரசின் முட்டாள் போக்குகள் மிகப் பயங்கரமான சர்வதேச நெருக்கடி நிலைமை ஒன்ற கவே மாற்றமடையும். இது பெரிதுபடுத்துதல் அல்ல. உலகசரித்திரத்தின் தீவிர நிலைமைகள் மிகச்சிறு பொறி களில் இருந்தே ஆரம்பித்துள்ளன. இதற்கு முதல் தர உதாரணம் முதல் உலகப்போராகும். இதைச் சுருக்க மாகக் கவனிப்போம்.
- ஏற்கெனவே ஜெர்மன் மொழி பேசிய தனித்தனி நாடு களை பிரஷ்ய அரசு ஒரே ஜெர்மன் நாடாக்க முனைந்ததின் விளைவாக கடந்த நூற்றாண்டு ஐரோப்பா போர் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. பிரான்ஸின் மீது இந்தப் புதிய ஜெர்மனி கடந்த நூற்றாண்டில் பெரிய ஒரு தாக்குதலையும் செய்துள்ளது. எனவே புதிய ஜெர்மனி பற்றிய ஐரோப்பிய விழிப்பு பிரான் ஸையும் பிரிட்டனையும் ரஷ்யாவையும் எச்சரிக்கையாக்கியதினால் போர்த் தளபாட உற்பத்தி தாடுக்கப்பட்டது. ஜெர்மனியும் பிரிட்டனும் பெருமளவுக்கு போர்த்தளபாட உற்பத்தியில் போட்டியிட ஆரம்பித்தன. வடகடலை ஆளுமைகொள் ளும் நோக்கம் இருவரையும் வைரிகளாக்கிற்று. ரஷ்யா தென்புறத்தில் ஜெர்மனியைச் சூழ்ந்த சிறு நாடுகளின் பாதுகாவலனாக தன்னை ஒப்பந்தப்
-566
படுத்திற்று. இவையும் பிறவும் அழுத்த நிலைமை ஒன்றை ஐரோப்பாவுக்குத் தந்திருந்த சமயத்தில் ஜெர்மன் பிராந் தியமான - ஆஸ்திரோ - ஹங்கேரியின் பெர்டினாண்ட் கோமகன் சில கல்லூரி இளைஞர்களினால் சரஜீவோ என்ற சிறு நகரில் கொலை செய்யப்பட்டார். இது ஒரு சிறு பொறி. செர்பிய மொழி பேசிய இவர்கள் தங்கள து சிறு நாட்டினுள் ஜெர்மன் மொழியாளரது தலையீடு இருப்பதற்கு எதிராகச் செய்த நடவடிக்கை இது. ஆனால் ஆஸ்திரோ- ஹங்கேரி சார்ந்த ஜெர்மனி இந்தச் சிறு பொறியை இந்த இளைஞர் களின து தரத்திலேயே தீர்க்கவில்லை. செர்பிய மொழி பேசியவர்களையே தனது தாக்குதலுக்கு ஆட்படுத்திற்று. அவர்களது பாதுகாவலனான ரஷ்யா உடனே ஜெர்மனிமீது போர்ப் பிரகடனத்தை விடுத்தது. இந்தப் பிரகடனம் வெறும் எச்சரிக்கை ஆகும். ஆனால் ஜெர்மனி இதை இதன் தரத்துக்கு மீறியே கணித்ததின் விளைவாக ஒரு (சிறு போர்ச்சந்திப்பு ஆரம்பித்தது. இந்தச் 'சிறு' சந்திப்பினை நான்கு நாட்களுக்குள் தீர்த்து விடலாம் என சகல சக்தி களும் நம்பினர். அது 1904ன் கிறிஸ்துமஸ் சமயம். பசங்கள் கிறிஸ்துமஸ்ஸிற்கு வீடு திரும்பிவிடுவார்கள் என ராணுவத்தினரை. பிரிட்டனும் பிரான்ஸும் ரஷ்யாவும் ஐரோப்பிய முனைக்கு அனுப்பின. ஆனால் சுமார் பத்து வருஷங்களாகியும் பசங்கள் கிறிஸ்துமஸ் எதற்கும் திரும்பி வரவில்லை. ஏற்கெனவே இருந் த அழுத்த நிலை பூராவும் சர்வோவின் பொறியிலிருந்து பற்றி முதல் உலக யுத்த மாக வெடித்தெழுந்தது. இந்தச் சிறு பொறி, செர்போ என்ற மெ ழி பேசிய செர்பியர் களை ஜெர்மன் மொழிபேசிய ஆஸ்திரோ- ஹங்கேரியர்கள் ஒடுக்க முயன்றதின் விளை வாகும். இது 'செர்போ' என்றால் வெண்டைக்காயா பூசணிக்காயா என்று கூட அறியாத உலக நாடுகளை எல்லாம் ஒரு பேரழிவுக்கே ஆட்படுத்திய சிறு பொறி. ஒருவரை ஒருவர் பீதியுடனும் பகையுடனும் பார்த்தபடி போர்த்தளபாட உற்பத்திகளில் ஈடுபட்டிருந்த மகாசக்தி களை ஒருவர்மீது ஒருவர் பாயவைத்த சின்னஞ்சிறு மிளகாய்67
வெடி. முதல் உலகயுத்தத்தில் தீர்வடையாத ஜெர்மன் பிரச்னையிலிருந்தே இரண்டாவது உலகயுத்தமும் தொடர்ந் துள் ளது. - எனவே இலங்கையில் நடந்து கொண்டிருப்பது எதுவும் பிராந்திய எல்லையினுள் மட்டும் கோடிட்டுத் தீர்வடையக் கூடிய ஒன்று அல்ல. சரஜீவோவை விடவும் இலங்கைக்கு அதன் இந்து சமுத்ரக் களனைப் பொறுத்து உலக நிலையுடன் தர்க்கபூர்வமான நரம்பு இணைப்பு உண்டு.
- இலங்கை விஷயத்தில் இந்தியா கட்டுப்பட்டு நிற்பதற் குள்ள உண்மையான பின்னணி இது தான். ஆனால் நாம் ஏற்கெனவே ஆராய்ந்த புத்தகாலய எரிப்பையும் பொருளா தார அழிவையும் இலங்கையில் செய்த ராஜீய ரெளடி களுக்கு இந்தியாவின் பொறுப்புணர்வு இருக்குமென்று எதிர் பார்க்க முடியாது. இந்தியாவின் பொறுப்புணர்வினை இலங்கை அரசு தனக்குச் சாதகமான தாகக் கருதுவதாகவே அதன் பேச்சும் நடத்தையும் காட்டுகின்றன. இதற்குக் காரணமாக இலங்கையின் பரிதாப நிலையினை ஏற்கெனவே சித்தரித்தோம். சிங்கள இனவாதிகள் தமிழர்களை நீர் மூல மாக்குவதும் தங்களையே நிர்மூலமாக்கிக் கொள்வதும் ஒன்றே என்ற போதம் சிங்களவருக்கு எழுவது அவசியம். இந்த போதம் பௌத்த போதமாக சிங்கள இனத்தினூடே உடனடியாகப் பரவும் வகை செய்யப்பட வேண்டும். இலங்கை அரசு எடுக்கக் கூடிய ஆரோக்யமான நடவடிக்கை இது தான். ஆனால் இதற்குத் தேவையான முதுகெலும்பு இலங்கை அரசிடம் இருக்குமா? இதை இலங்கை அரசு சாதனை வடிவில் காட்டினால் அதை அங்கீகரிக்கக்கூடிய மனோவிலாசம் தமிழ்த் தலைமையிடம் பிறக்குமா?
இலங்கை அரசுத் தலைமையுடன் தனிப்பட்ட தேவை அடிப்படையில் லைசன்ஸ் முதலியவற்றை வாங்குவதும், பாதிக்கப்பட்ட தமிழர் நிலைமைக்குப் பரிகாரமாகத் தரப்68
பட்ட நிதியினைப் பதுக்குவதுமாக இலங்கைத் தமிழ்த் தலைகளிலிருந்து, இந்தியத் தமிழ்த் தலைகள் வரை நடந்து கொண்டுள்ள பயங்கர சந்தர்ப்பவாதங்கள் இவ்விடத்தில் கவனத்துக்குரியவை. இத்தகைய குறுகிய மனோபாவக் காரர்கள் ஆரோக்யமான நிலை எதையும் வரவேற்க இடமுண்டா ?
இந்தியாவை மிரட்டுவதற்காக மட்டும் தான் திரிகோண மலைத் துறைமுகத்தைத் தனக்குத் தந்து விடுகிற நாடகத்தை ஸ்ரீலங்கா நட த்துகிறது என்பதை அமெரிக்க வல்லரசு ஊகிக்காமல் இருக்காது. . இத்தகைய நடிப்புகள் உலக அரசியல் களத்தில் செல்லுபடியாகாதவை. இதை ஸ்ரீலங்காவின் ராஜீய ரெளடித்தனம் உணர இடமில்லை, மறுபுறம் இந்தியாவின் பார்வை 1. ஸ்ரீலங்காவில் தேசீயப் பிரிவினை கூடாது. 2. ஸ்ரீலங்கா ராணுவத்தின் மூலம் தமிழ்க் குடிமக்களை கண்மண் தெரியாமல் கொல்லுவது உடனே நிறுத்தப்பட வேண்டும். 3. அங்குள்ள தமிழினத்தின் அடிப்படை உரிமைகள் கௌரவிக்கப்பட வேண்டும்.) இதே அம்சங்களைக் கொண்ட அறிக்கையினை ஸ்ரீலங்கா பற்றி இன்று அமெரிக்க ஆட்சியும் தெரிவித்து விட்டது. ஸ்ரீலங்காவின் கண் மூடித்தனம் இந் நிலையிலேனும் முடி வடைந்து ஒரு தேசீய ஆரோக்யம் அங்கே தலை தூக்குமா? இதற்கு வழிவகுப்பதைத் தவிர இனி ஸ்ரீலங்காவுக்கு வேறு வழியில்லை என்றே தெரிகிறது. காரணம் அமெரிக்காவை அது நம்பி ஆடிய நாடகம் செலாவணியாகவில்லை. -- பங்களாதேஷ் விஷயத்தில் தலையிட்டது போல் இந்தியா இலங்கைத் தமிழர் விஷயத்தில் தலையிடும் என்ற எதிர்பார்ப்பும் சரி, அமெரிக்காவுக்கு துறைமுகத்தைக் காட்டி அதை பாக்கெட்டுக்குள் போட்டுவிடலாம் என்ற நம்பிக்கையும் சரி, ஸ்ரீலங்காவின் - தமிழ் - சிங்களத் தலைமைகள் இரு பகுதியினருமே முதிர்ச்சியற்ற அரசியல் வாதிகள் என் பதைக் காட்டுகின்றன. இவர்களுக்கும், இவர்கள் எந்த ஜனங்களின் பிரதிநிதிகளோ அந்த ஜனங்
69
களுக்கும் உலகக் களத்தின் பிரமாண்டமான சதுரங்க த் துடன் நேர்த்தொடர்பு கொண்டது தங்கள் சின்னஞ்சிறு பிராந்தியம் என்பது புலனாகவில்லை. இது ஆரம்பத்திலேயே இருபகுதியினருக்கும் புரிந்திருந்தால் பொரு ளாதார, மனித. தார்மீக, நாகரீக நாசங்களாக ஸ்ரீலங்கா அனுபவித்து வந்துள்ள எதுவும் நடந்திராது. தங்கள் பிரச்னைகளை தங்களுக்குள் சுமுகமாகத் தீர்க்கிற மனிதத்தனம் செயல் பட்டிருக்கும்.
12. டிஸம்பர், 1984, மெட்ராஸ் BIRUMIL DHARMOTH JEEVRAMOW
பின்னட்டை குறிப்பு :
இலங்கை இன்று ேபா ர் க் க ர ல த் தி ன் தீவிர நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. சிங்கள வரின் மனிதாய சக்திகளும் இலங்கைத் தமிழரின் மனிதார்த்தங்களும் இந்தத் தீவிர நிலையை அறிவுசான்ற தளத்துக்குக் கொண்டு செல்ல முடியாதவாறு நிலைமை ஆக்கப்பட்டு விட்டது. இந்நிலை தவிர்க்க முடியாதவாறு நிகழ்ந்த ஒன்றுதானா? இதற்கு இரு பிரிவினருள் ஒருவர் மட்டும்தான் பொறுப்பாளியா? இத் தகைய கேள்விகளின் சலனங்களைக்கூட எழவிட முடியாத தீவிர நிலைதான் இன்றுள்ளது என உணர்கிற போதே இக்கேள்விகள் கேட்டாக வேண்டியவை என்பதையும் நாம் கண்டு கொள்வது மிக அவசியம்.