தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Tuesday, October 30, 2018

கற்பனை அரண் - ந. முத்துசாமி :: எழுத்து 1967_09-98

கற்பனை அரண் - ந. முத்துசாமி :: எழுத்து ezhuttu_1967_09-98
from
 http___tamildigitallibrary.in_admin_assets_periodicals_TVA_PRL_0000847_ezhuttu_1967_09-98.pdf

காலையில் வீட்டில் காப்பி குடித்து விட்டால் கூட கிடாரங்கொண்டானில், காவிரிப்பூம்பட்டிகனம் சாலையில் காவிரியைப் பார்த்துக் கொண்டி ருக்கும் நாயர் கடையில் டீ குடித்துவிட்டுக் கொஞ்ச நேரமாவது அரட்டை அடித்து விட்டு வர வேண்டும் எனக்கு. அன்று நான் நாயர் கடையை நோக்கிப் போய்க் கொண்டிருந்த போது வழியில் கொல்லன் பட்டறையில் ராமையா படையாச்சியின் பக்கத்து வீட்டுக்காரன் உட்கார்ந்திருந்தான்.

நான் டீக்கடைக்குப் போய்ச் சேர்ந்த பிறகு ராமையா படையாச்சி அங்கு வந்து சேர்ந்தார். ''ஒய் நாயரே சாயமா அஞ்சு டீ போடு" என்று துண்டை உதறி பெஞ்சில் போட்டுவிட்டு அதில் உட்கார்ந்தார் அவர்.

"அஞ்சு டீயா நீ ஒருத்தன் தானே இருக்கே" என்றார் நாயர் டீயைப் பாகம் போட்டுக் கொண்டே ...

"கிடாரங்கொண்ட சோழனின் படைத் தலைவன் கேட்கிறேன். அஞ்சு டீ போடு... ஒன்று எனக்கு மிச்சமெல்லாம் என் மெய்க்காப்பாளர்களுக்கு" என்று பத்து விரல்களை விரித்து ஒரு விரலை மடக்கி நாயரிடம் காட்டினார் படையாச்சி.

என்னோடு டீ குடித்துக் கொண்டிருந்தவர்கள், தஞ்சாவூர்க்காரர்களுக்கு அன்று திண்ணை இன்று டீக்கடை என்று சுவாரஸ்யமாய் உட்கார்ந்து கொண்டு விட்டார்கள். படையாச்சியின் விரல் களை உரக்க எண்ணிவிட்டு அவரைப் பார்த்து நாயர் விழிப்பதைக் கண்டு படையாச்சி பேச ஆரம்பித்தார்.

''என்னங்காணும் ஓய் நாயரே முழிக்கறே. போடு அஞ்சு டீ.. அப்பறமா ஐயனார் கோயில் முன்னடியான் போல முழிக்கலாம். அது முழிச்சா விழி கண்ணுக்குள்ளே இருக்கும். நீ முழிச்சே விழி கோலிக்குண்டு மாதிரி வெளியில் வந்து விழுந்துடும். கோலி ஆட்டம் எனக்கு மறந்து போச்சு. அப்பறம் அந்தப் பய வந்துடுவான் விளையாட. கட்டை விரலைக் கீழே ஊன்றி ஆள் காட்டி விரலை ஆகாசத்தைப் பார்த்து நிறுத்தி நிக்கும் விரலைச் சிட்டி கையாய்ப் புடிச்சு அடிச்சான்னா குண்டு மேலே குண்டு நங்குன்னு பாயும். நின்ற குண்டு சோழனைத் தேடிக் கொண்டு ஓடும். அப்பறம் அவனுக்கு நான் பதில் சொல்லணும்."

''அந்தப் பய இருக்கானே.''

''அவன் காயடிக்காத மாடு. திமில் தோள் பட்டையிலே முதுகுப்புறமா திரளுது சோழன் முன்னாடி நின்று திமிலை ஆட்டறான். சோழன் முகத்துக்கு நேரே ஆடுது திமில். அவன் மூஞ்சி எனக்குத் தெரியாமே மறைக்குது இந்த மாடு. நான் பதில் சொல்லும் போதெல்லாம் மன்னன் ஏன் முகத்தைப் பார்க்க திமில் மறைவிலிருந்து அப்படியும் இப்படியும் திரும்பிப் பார்க்கிறான். திமில் பாம்பின் படமாய் ஆடி அவன் முகத்தை மறைக்குது. மனிசனுக்கு மனிசன் ஓடிப் புடிச்சு விளையாடலாம் நாயரே. பாம்பு கிட்டே பாச்சா காட்டலாமா? பாச்சா காட்டினே அது உன் மூக்கிலே முத்தம் கொடுத்துடும்'' என்று தன் மூக்கை சுண்டு விரல் நீக்கிய மற்றை விரல்களால் தொட்டு, பிறகு அவ்விரல்களை முத்தமிட்டார். முத்தமிட்ட உதடுகள் குவிந்தே இருந்தன. விரல்கள் குவிந்தபடியே படம் ஒடுங்கிய பாம்பின் தலை போல் அவர் பார்வையில் இருந்தது.

''அந்தப் பய இருக்கானே.'' ''அவன் முதுகெலும்புப் பதிவிலே பாம்பெ எடுத்துப் படுக்க வைச்சா அதுலே அது மறைஞ்சு போயிடும் கவசம் போட்டாப்பிலே ரெண்டு பக்கமும் மார்பு. மார்பு கூடர இடத்திலே சங்கிலி கோத்தாப்பிலே இருக்கு

''ஒய் நாயரே போடுய்யா டீ, ரத்தம் கணக்கா இருக்கணும் சொல்லிட்டேன். சீக்கிரமா போடு. நேரம் ஆயிக்கிட்டே போகுது. ரத்தம்

- இன்னா ஒனக்கு எங்கே தெரியப் போகுது. வாயிலே வெத்திலே போட்டுக்கிட்டு இருக்கேல்லே அது மாதிரி இருக்கணும், போடு... போடு... சீக்கிரமா போடு.

'ஓய் நாயரே ஆரம்பத்திலே உன் மேலே எனக்குச் சந்தேகம்தான். நீ சேர நாட்டு ஒற்றன்னு சந்தேகப்பட்டேன். அப்புறம் நீ குளிர் ரத்தப் பிராணின்னு தெரிஞ்சதும் சந்தேகம் தெளிஞ்சு போச்சு. ஒன் ஒடம்பிலே தண்ணீ தான் ஓடுது. ரத்தம் ஓடலே. அதனாலேதான் நெஞ்சு ஈரத்தை எல்லாம் பிழிஞ்சு டீயிலே கலந்துடரே.

''இருந்தாலும் ஒங்கடை டீ தான் எனக்கு ரொம்பப் பிடிக்கும். எங்கள் கண்ணகி கோவலனே உங்கள் மலைமேலே சந்திக்கிறபோது ஓங்க அப்பன் பக்கத்திலே நின்று வேடிக்கை பார்த்துக் கிட்டிருந்தான், அதனாலே தான் ஒன் கடையிலே டீ குடிக்கிறேன். வேடிக்கை பார்த்துட்டுப் போய் அவன் சேரன் செங்குட்டுவன் கிட்டே சொல்லிட்டான். உடனே அவன் ''டேய் என்னடா பேசிக்கிட்டாங்க" இன்னான். ஒங்க அப்பனுக்கு ஒரே வெட்கம். 'என்னமோ பேசிக் கிட்டாங்க. காதல் பேசிக் கிட்டாங்க' இன்னு சிரிச்சுக்கிட்டே கையைக் கொழச்சு கவிட்டியிலே வைச்சுக்கிட்டு நாயைப் போல நின்னான்.

''சபாஷ் மகனே சபா ஷ்" இன்னான் மன்னன்.

"அப்போ அந்தக் காதல் தெய்வத்துக்கு ஒரு சிலை சமைச்சிடுவோம். அடுப்பிலே நெருப்பிருக்கு பூனையைப் போல முழிச்சுப் பார்க்கு துன்னுட்டு படையை எடுத்துக்கிட்டு நேரே இமயமலையைப் பார்க்கப் போனான். மலையிலே போய் ஒரு கல்லை வெட்டி தலையிலே தூக்கிக் கிட்டான். ஒரே குளிரு. பல்லு கொட்டுது உதடு வெடிச்சுப் போச்சு. பேச முடியலே. இருந்தாலும் சிலை சமைக்கணும்கிற பசியிலே கல்லைச் சுமந்துக்கிட்டு நடந்தான். தலைக் கல்லு உருகி உடம்பிலே வழியுது. குளிரு அதிகமாச்சு. உடம்பு மரத்துப் போச்சு. நாக்கை அசைக்க முடியலே. ஊருக்கு வந்ததும் உளர்றாள். பேச்சு மறந்து போச்சு... உதடு வெடிச்சு வெள்ளிரிப் பழமாத் தொங்குது. மூக்காலே பேசினான். அந்த ஊரிலே பொறந்த பயதானே நீ, அதனாலே ஒனக்குத் தமிழ் மறந்து போச்சு.

பிறகு அவர் மெளனமானார். விழிகள் கால ஓடையில் போட்ட தூண்டிலின் மிதப்புகள் போலிருந்தன. பக்கத்துப் பெஞ்சில் உட்கார்ந்து கொண்டிருந்த ஒருவர் பெஞ்சில் சொட்டி இருந்த டீயை விரலால் இழுத்துக் கேள்விக்குறி போட்டுக் கொண்டிருந்தார். இரண்டையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்த இன்னொருவர், ''உலகில் உயர்ந்தது எது?'' என்று கேட்டு வைத்தார். நாயர் ''உலகில் உயர்ந்தது இமயமலை'' என்றார். 'இல்லை, இளய முலை' என்றார் படையாச்சி. 'எப்படி?'' என்றார் இன்னொருவர்

இப்படிச் சொல்லு. மண்ணில் உயர்ந்தது மலை பெண்ணில் உயர்ந்தது முலை, மண், பெண், பொன் எல்லாம் ஒன்னு தான். பெண் அதனாலே தான் பொண்ணாச்சு. மலையும் முலையும் ஒன்று தான். மேகத்தை முட்டுவது மோகத்தை முட்டுவது, மேகந்தான் மோகம். வந்து கவிழ்கிறது. விலகத் தெரிகிறது."

"ஓய் நாயரே படையாச்சிக்கு முதல்லே டீ போட்டுக் கொடய்யா."

''ஆமாம்... எனக்குச் சாயமாய் உன் எச்சில் போன்ற ரத்தம் போல் டீ போட்டுக் கொடு. அந்தப் பயலின் கையை வாங்கப் போகிறேன். 'டேய்.... சொத்தை ஆளப் பிறந்த கைடா இது.' அந்தப் பயல் கையை ஆகாயத்தில் நீட்டினான். அது ஆகாயத்தை எட்டுவதற்கு முன்னால் வெட்டி விட வேண்டும்.''

''நாயரே" சொத்துன்னா என்ன தெரியுமா?''

''மண் பெண். பொன். வைக்கோல் போர் இருக்கே.. வைக்கோலின் நிறமென்ன? பொன் நிறமய்யா, பொண் நிறம், மண்நிறம், ஓய்.. வைரக் கண்ணு படையாச்சி கத்தியேத் தீட்டு.''

"அந்தப் பய இருக்கானே...''

''அவனுக்கு சிலம்பம் தெரியும்: மதுரையிலேருந்து ஒருவன் வந்தான். எனக்கு சிலம் பம் தெரியும்: கத்திச் சண்டை தெரியும்னான். அவனுக்குத் தெரிஞ்சு எனக்கு என்ன ஆச்சு. பக்கத்து வூட்டுப் பய இருக்கானே. நாடாரே, எனக்குப் பழகித் தரயான்னான்: ராத்திரி நிலவு வெளி சத்திலே ஆரம்பிச்சானுவ. ராத்திரி முழுசும் கழிக்குக் கழி மோதிக்குது. டொக்கு டொக்குன்னு என் வீட்டுக் கதவை வந்து தட்டுது.

''டேய் யார்டாது ?" 'நாந்தான்.'' ''நாந்தான்னா?'' ''நாந்தான்.''

''ஓகோ பாண்டிய நாட்டுக்காரன் கிட்டே சிலம்பம் பழகிக்கிற பயலா ... கிடாரங்கொண்ட சோழன் படைத் தலைவனா ஆகற உத்தேசமோ? எனக்குப் போட்டியா வரயாடா பயலே .. ஒங்க அப்பன் வந்தாலும் நடக்காது. நான் சோழ நாட்டின் நிரந்தர படைத் தலைவன்.

''எந்த மடப் பயலாவது அவனைத் தூக்கி படைத்தலைவனா போடுவானா?

"அவன் நாட்டைக் காட்டிக் கொடுத்திடுவான். நாடு பாண்டிய நாட்டுக்கு அடிமையா யிடும். அப்புறம் நாமெல்லாம் அடிமை. என்ன ? தும் கியா போல் தே ஹோ நாயர் ?'' தும்தோ சேர் தேங்கி சோர் ஹோ!

''அப்புறம்?''

''போய் வாசல் கதவைத் திறந்தேன். ஒரு பயலையும் காணும். பய ஒடிப் பூட்டான். எம் பொண்டாட்டியே நோட்டம் பாக்க வந்தாப்போலேருக்கு. அப்போ அவ புடவை விலகி வயித்துலே கிடந்தது. அது தெரிஞ்சு பய வந்திருக்காம் போலருக்கு.''

''ஓய் கோவிந்தசாமி படையாச்சி ... அந்தப் பயலே போய் நோட்டம் பார்த்துட்டு வா. அந் தப் பய கொல்லன் வீட்டுக்குப் போயிருக்கான்.''

"நாய்ரே ஏன் நேரம் வளத்தரே: படையாச்சிக்கி முதல்லே டீ போட்டுக் கொடு."

"சோழ நாட்டின் தலைநகரான இந்தக் கிடாரங்கொண்டான்லே பொழைக்க வந்த பய நீ. எம்மாம் நேரமா நான் கேட்டுக் கிட்டே இருக்கேன், கரிகாலன் போய் . கிடாரங்கொண்டான் வந்து விட்டான்.''

''டீத் தூளு இல்லே .'' - ''கடைக்கு ஓடு , நாடார் கடைக்கு இல்லே. காவிரிப்பூம் பட்டிணத்துக்கு ஓடு. நாளங்காடிக்கு ஓடு... காலு காலா இருக்கக் கூடாது. ஆரக் காலாய் மாறிடணும். ஓடு.

"ஒய், ராமசாமிப் படையாச்சி. நீ கிடாரங் கொண்டான் பாப்பாரப் படித்துரைப் பக்கமா ஓடு. ஓடி காவிரிலே இறங்கி, மணல்லே மேலண்டைக் கையிலே காலைப் பரப்பிக்கிட்டு நில்லு. பய வந்தான்னா மேற்கே ஓடாமேப் பார்த்துக்கணும். கவுட்டிக்கி அடியிலே பூந்து ஓடிடப் போறான். பார்த்துக்க, ஓடு.'

''அந்தப் பய இருக்கானே ..'' ''அவன் கையை வாங்கப் போறேன்.'' ''வியாபாரமா?'' ''வியாபாரத்துக்கு கை என்ன மீனா? காலா இருந்தாலும் சூப்புக்கு வாங்குவானுவோ...''

''வியாபாரத்திலே உயர்ந்த வியாபாரம்.''

"சாமி வியாபாரம். இல்லேன்னா இவனுக்கு ஏதுய்யா மாடி வீடு. சாமி வித்துச் சம்பாதிச்ச காசு. இடிஞ்ச கோயிலைப் பழுது பார்க்கணும்னு கிடாரங்கொண்ட சோழன் கிட்டே போய் நின்னான். நான் அப்பவே சொன்னேன். மன்னன் கேட்டானா?' மூட்டையாத் தூக்கிக் கொடுத்தான் கோயில் சுவர் இடிஞ்சு கல்லு காவிரியிலே மிதந்து போச்சு. குருக்கள் எண்ணெயே வீட்டுக்கு எடுத்துக் கிட்டுப் போய்க் கரி வதக்கறாரு. சொறிநாய் காலை கிளப்பிக்கிட்டு சிலை மேலே மூத்திரத்தை அடிச்சுட்டு மோந்து பாக்குது. மூத்திரம்னு பார்க்காமே சாமியே கிளப்பிட்டு இந்தப் பயல் அடியிலே இருந்த பொன்னை அடிச்சுக் கிட்டுப் பூட்டான். வெங்கலச் சிலையே காணலை, மூல விக்ரகத்தின் வேர் அறுந்த பிறகு உற்சவ விக்ரகம் வாடிப் போச்சுன்னு அதை இந்தத் தர்மகர்த்தா காவிரிப்பூம்பட்டணத்து வியாபாரி கிட்டே வித்துப்புட்டான். அவன் அதைக் கப் பல் ஏத்தி அனுப்பிச் சுட்டான். வியாபாரத்திலே உயர்ந்த வியாபாரம் தழை வியாபாரம் தான்.

''ஒய் கிருஷ்ணசாமி படையாச்சி. நீ சரிஞ்ச கோயில் சுவர்லே போய்க் குந்திக்க மூத்திரத்தை தாய் மாதிரி, சாய்ஞ்சு கிடக்கிற சாமி மேலே அடிச்சுடாதே, அந்தப் பய ஓடி வந்தார். கோயில் குள்ளே போய்ப் பூந்துக்கப்போறான்." : 

"என்னங்காணும் நாயரே இன்னும் டீ போடலையா ?'' . .

''டீத்தூளுக்கு இனிமே காவிரிப்பூம்பட்டின மில்லே போயாகணும்."

இன்னும் காவிரிப்பூம்பட்டணம் கிளம்பலையா?'

"கிளம்பத்தான் பார்த்துக்கிட்டு இருக்கேன்.''

"கடையே என்கிட்டே ஒப்படைச்சுட்டுப் போ நீ திரும்பி வரத்துக்குள்ளாரே ஒன்னே பத்தாக்கி வைப்பேன் கூரைக் குடிசையெ கல்லு வீடா மாத்திக்கலாம். அந்தப் பய வீட்டைப் போல மாடி வீடாவும் கட்டிக்கலாம். நான் காவிரிப்பட்டணம் போயிட்டு வரப்போல்லாம், வீட்டுக் கொல்லையிலே வைக்கப்போரே காண மாட்டேங்குது. எல்லாம் அந்தப் பய வேலை தான். கொல்லையிலே காட்டாமணக்குக் காலை உன்றி வேலி போட்டேன். காலுன்னதும் அதுக்கு நடக்கணும்னு தோணிப் போச்சு. ஊன் ன காலைப் பெயர்த்து வைச்சு நடக்க ஆரம்பிச்சுட்டுது நம்ம வைக்கப் போரு பக்கமா நடந்து வந்துக்கிட்டே இருந்துது. பய இருக்கானே அவன் தலையை விட்டு வேலியிலே ஓட்டை செஞ்சான். விரல் நுழைய இடம் கெடச்சதினாலே உடலை நுழைக்கணும்னு அவன் வூட்டு மாடு அதுலே நுழைஞ்சு உள்ளே வந்துட்டுது. முன் காலு ரெண்டும் என் வூட்டுக் கொல்லையிலே. தலையும் வாயும் வைக்கோல் போருலே. பின் ரெண்டு காலும் வாலும் ஆசனவாயும் அவன் வூட்டுக் கொல்லையிலே என் வீட்டு வைக்கோலைத் தின்னுது. மாட்டுக்கு வயிறு அப்படியே இருக்குது. ஆனா வைக்கோல் போருலே பாதி கொறைஞ்சு போச்சு குறைஞ்ச வைக்கோல் மாடாய்க் கூட்டி இருக்கனுமில்லே. இல்லையே அதனாலே அந்தப் பயலும் தின்னு இருப்பான் போலேருக்கு. மாடு வைக்கோலைத் தின்னுட்டு சாணி போட்டுது. அவன் வூட்டு எருக்குழி நிறம்பிப் போச்சு. " ,

''டேய் வைக்கோல் தான் போச்சு..பரவா யில்லை. சாணியாத்தான் மாறியிருக்கு ... அதையாலும் கொடு''

''முடியாது." 'டேய். இது அடுக்குமாடா?'' ''பய முட்டியே மடிச்சு கையே மேலே தூக்கறான். வைக்கப்போரு மாதிரி முண்டா கிளம்புது.. விழிரெண்டும் வண்டாப் பறந்து வந்து எம்மேலே மோதுது.'

''வண்டு கொட்டினாத் தாங்க முடியுமா?''

''அதைக் கேக்க காவிரிபட்டணம் போனேன். கிணற்றடியி லே எம் பொண்டாட்டியிருந்து வேடிக்கை பார்த்த விஷயம் மறந்து போச்சு அது அவளைக் கொட்டிடுச்சுன்னு வைச்சுக்க : இன்னு திரும்பி வந்தா."திரும்பி வந்தால் ''திரும்பி வந்தா. தை மாசம் ஒன்னாம் தேதி. பொங்கல் விழாவுக்கு ஊரெல்லாம் ஏற்பாடு கடையெல்லாம் வாழைத்தாரு தொங்குது. கரும்பு கட்டுக் கட்டா சாத்தி வைச்சிருக்கு. கோடை வெயில் இல்லையா? தோகை காய்ஞ்சு பழம் புடவையாய்ப் போயிட்டுது. அந்த நாடார் கடையிலே இந்தப் பயல் உட்கார்ந்திருக்கான். அவன்தான்யா இவனுக்கு சிலம்ப வாத்தியாரு புடிச்சுக் கொடுத்தவன். துரோகிப் பய. இங்கே மளிகைக் கடை வைச்சுக்கிட்டு அவன் பாண்டிய நாட்டுக்கு உளவு பார்த்துக் கிட்டிருக்கான். சோழன் பணத்தைச் சுரண்டி பாண்டியனுக்கு அனுப்பறான். இந்தப் பய கரும்பு வெட்டிக் கிட்டிருக்கான். கரும்பு தோளிலே சாத்தி இருக்குது. பின்னாடி எம் பொண்டாட்டி பொடவையைப் போலத் தோகை தொங்குது. கையிலே பளபளன்னு அரிவாள். நாடாரோட அரிவாள். பனங்காள் சீவர அரிவாள் .

"அந்த நாடார் கிட்டே உண்மையான சோழ நாட்டான் எவனாவது பனைமரம் குத்தகைக்கு விடுவானா?''

''துரோகிப் பசங்க விட்டுட்டானுவளே. அவன் ஏதுக்கய்யா மரத்தைக் குத்தகைக்கு எடுக்கிறான். மரத்திலே ஏறி நோட்டம் பார்க்கிறான். மரத்திலே கலயம் கட்டறாப்பலே சோழநாட்டு அரணை உளவு பார்க்கிறான்.

''நாடாரே, பாத்துக்க ஒரே வெட்டு ... எந்தப் பய வந்தாலும் ஓரே வெட்டு.''

''பய கரும்பை ரெண்டு துண்டா வெட்டிப் போட்டுட்டான். அப்புறம் நான் கிடாரங் கொண்டான் சிவன் கோயில் பக்கமா போயி காவிரிக்கரையிலே பாப்பாரப் படித்துறைப் பக்கமா நின்னுக்கிட்டேன். காவிரியிலே தண்ணி ரெண்டு கரையும் ஒத்து ஓடுது. ஆடிப் பெருக்கு அன்னிக்கி , பசங்க சப்பரத் தட்டியோட கரையிலே நிக்கறானுவோ. சின்ன வயசிலே கல்யாணம் பண்ணிக்கிட்டிருந்தா இந்தப் பசங்க மாதிரி பசங்க இருப்பானுவோ.'' உள்ளங்கையைக் குழித்து தரைக்கு மேல் மார்பளவுக்கு குடைபிடித்துக் காட்டினார்.

''அப்புறம்.''

"கிடாரங்கொண்ட சோழன் காவிரிப்பூம் பட்டிணத்திலேருந்து வந்திருக்கான். மன்னனுக்குப் பக்கத்திலே ஆதிமந்தி நின்னுக்கிட்டிருக்கா. ஆட்டன் அத்தி அரச மரத்திலே ஏறி காவிரித் தண்ணியிலே குதிக்கறான். தண்ணீர் செரடேர்னு

அரசங்கிளை வரைக்கும் எழும்புது.

''சபாஷ் ஆட்டன் அத்தி, சபாஷ்'' என்றான் மன்னன். குதிச்சவன் மேலே கிளம்பவேயில்லை. பனங்காய் மிதந்தாப்பலே தலை மட்டும் மிதந்து போச்சு.''

சும்மா வேடிக்கை பார்த்துக் கிட்டா நின் னீங்க .''

''குதித்துத் தூக்கினேன். அது அழுகின தேங்காமட்டை. ஊறி நார் கிளம்பிப் போயிருக்கு. தூக்கிக் காவிரியிலே எறிஞ்சேன். ஆட்டன் அத்தி தலைமுடிமாதிரி காவிரியிலே அது மிதந்துக் கிட்டே போயிடிச்சு. .

''ஆதிமந்தி தலையிலும் வாயிலும் அடிச்சுக்கிட்டு அழுறா. பெரிசா ராகம் போட்டு ஒப்பாரி வைக்க ஆரம்பிச்சுட்டா. மன்னன் ரொம்ப தேத்திப் பார்த்தான். நடக்கல்லே. அவனும் அழ ஆரம்பிச்சுட்டான், மகளைக் கட்டி அணைச்சுக் கிட்டு அழுதான், நானும் அழுதேன்.''

'' நீங்க அப்படி அழலாமா படையாச்சி ?''

"சோழ மன்னா நீ இப்படி அழலாமா? நீ அழுதால் நான் அழுவேன், மக்கள் அழுவர், நாடு ' அழும், அழாதே நான் இருக்கிறேன். வலைபோட்டுத் தேடுவோம். மருமகன் கிடைத்து விடுவான் வேந்தே அழாதே என்றேன்.'' மன்னன் அழு கையை நிறுத்தி விட்டான்.

''டேய் வலை கொண்டு வாங்கடா.'

காவிரியில் வலை போடப்பட்டது. 'இழுத்துக் கிட்டே வாங்கடா. நான் காவிரியில் இறங்கி விட்டேன். கழுத்து மட்டம் தண்ணீர். நான் முன்னாலே நடக்கறேன், என் பின்னாடி பசங்க வலையியே இழுத்துக்கிட்டே வரர்னுவோ.''

''ஆதிமந்தி காவிரிக்கரையோடு நடந்து. வரா. அவ கையைப் புடிச்சு மன்னன் அழைச்சுக்கிட்டு வரான்.''

'காவிரிப்பட்டணம் முகத்துவாரத்திலே போய் வலையே மேலே தூக்கினோம். அழகான மீன். ஆள் உயரம் வாட்ட சாட்டமாய் இருக்கு. கரையிலே கூடைக்காரப் பசங்க நிக்கறானுவோ கழுகு மாதிரி மீனையே பார்த்துக்கிட்டு நிக்கிறானுவோ .

''என்ன படையாச்சி மீன் விக்கறதா ?''

''பல விஷயத்திலே ஏமாந்துட்டோம். இந்த மீனு விஷயத்திலே ஏமாற வேண்டாம். இந்தக் கூடைக்காரன் கிட்டே விக்கறத்தே நாமே தூக்கிக்கிட்டு சித்தக்காட்டு சந்தையைப் பார்க்க - ஓடினா நாலு காசு லாபம் கிடைக்கும்னு தோணிச்சு. அந்தப் பயலுக்கு நேரா ராவணன் முன்னாடி அனுமார் குந்திக்கிட்ட மாதிரி வளர்ந்து மார்பு அகலத்தை சாண்போட்டு அளந்துக்கன்னு காட்டனும்னு தோணிச்சு. ஆனா கவுச்சே நாத்தத்தே சகிச்சுக்கிட்டு தலையிலே கூடை சுமர, கல்லு ரல்லே குழவி ஆடராப்பலே இடுப்புக்குக் கீழே காலாட ஓடணும். 'படையாச்சி மீன் விக்கராரு டோய் இம்பானுவோ... அதனாலே என்ன... விடியரத்துக்கு முன்னாடி ஓடினாப் போச்சு. பசங்க என்ன ஆந்தையா ராவியிலே கண் தெரிய ..ஆனா .... இந்தக் காவிரிக்கரை மரத்துக்குக் கூட கண்ணு இருக்குமய்யா, விடிஞ்சா ஊர்கிட்டே சொல்லிடும். ஆனா ஒண்ணு செய்யலாம். சித்தக்காட் டுக்குப் போக வேறு வழியே இல்லையா? கீழை யூறுமேலே பூந்து போனா போச்சு... 'டேய் மீனு விக்கரதில்லே' இன்னு சொல்லிட்டேன். இந்தப் பசங்க ஓட ஆரம்பிச்சுட்டானுவோ.

''ஏனய்யா ஓடரே தெடைக்கப்போற லாபத்தைக் கண்டு பயந்து பூட்டியா?''

''இல்லே.... அதோ ... ஆட்டன் அத்தி 'ன்னு கத்திக்கிட்டே ஓடிப் . பூட்டானுவோ.''

''என்னாம்மே... ஆட்டன் அத்தியா ஆட்டுக் குட்டியா என்ன சொல்றானுவோ.'

ஆமாயா - ஆட்டன் அத்தி ... ஆட்டன் அத்திக்கி மூர்ச்சை தெளிஞ்சு மூச்சு வந்திடிச்சி.''

''யாரவன் புடிச்சான்... தூண்டில் போட்டுப் புடிச்சானா ?"

"நம்ப பாட்டிக்கிக் பாட்டிக்கிக் கொள்ளுப் பாட்டிக்குப் பாட்டி புருஷன் குதிச்சு தூக்கினான்' இன்னான் அவன் சபாஷ் அப்போ இந்த மீனு ஒனக்குத் தான்னு மீனேத் தூக்கி செம்படவச்சி தலையிலே வைச்சேன். அவ தூக்கிக்கிட்டு காவிரிக் கரையோட சித்தக்காட்டேப் பாக்க ஒடினா.

'நான் திரும்பி வந்து காவிரிக் கரை ஓரமா சவுக்கைத் தோப்பிலே சுருட்டுக் குடிச்சிக்கிட்டே குந்திக் கிட்டிருக்கேன்.

'ஓய் படையாச்சி ... அந்தப் பய உலைக் கூடத்திலேருந்து பொறப்பட்டானான்னு பாருய்யா ..... போ.. போ அப்பறமா....டீக்கி நாக்கே நீட்டலாம் ஓடு.''

"இவன் ஒரு சவுக்கை மரத்திலே சாஞ்சிக் கிட்டு கரும்பு வெட்டிக் கிட்டே நிக்கறான் யாரா வது மீன்காரி வருவாளான்னு பார்த்துக்கிட்டே நிக்கறான். நான் இருக்கறதை அந்தப் பய பார்க்கலை. அவ தலையிலே மீனேத் தூக்கிக்கிட்டு சித்தக்காட்டு சந்தைக்கு வியாபாரத்துக்குப் போனா. அவ ஒடம்பு வியர்த்து வழியுது . ரவிக்கை போட்டுக் கிட்டில்லே. முந்தானையே சும்மாடாய் சுருட்டி தலைக்கு வச்சுக் கிட்டிருக்கா ஒரு கை தலைக் கூடையைப் புடிச்சுக் கிட்டு இருக்கு. மார்பு பக்கத்திலே தெரியுது. ஓடிவர வேகத்திலே ஆடுது. பய பார்த்தான். கரும்பை வெட்டிக்கிட்டிருந்தவன் அதை அப் படியே போட்டுட்டு காவிரிக் கரைக்கு வந்தான். அவ பக்கத்திலே வந்ததும் பின்னாடி பாஞ்சு வாயைப் பொத்தினான். ஒரு கையை இடையிலே வளைச்சான். அவளே அப்படியே அலாக்கா தூக் கிக்கிட்டு சவுக்கைத் தோப்புக்குள்ளே போய் அவளே படுக்கப் போட்டான். முந்தானையே கிழிச்சு வாயிலே அடைச்சான். வாயிலே துணியே அடைச்சதும் என்னாலே சத்தம் போட முடியலே. இடுப்புத் துணியே அவுத்துப் பக்கத்திலே எறிஞ்சுட்டான். உடனே அந்த இருள் பரவ ஊரு இருட்டிப் போச்சு.''

(வழியே தடவிக்கிட்டு நான் வீட்டுக்கு வந்தேன் . கால் கழுவ கிணற்றடிக்குப் போனேன். பய வைக்கப் போருலே சாஞ்சுக் கிட்டு கரும்பை வெட்டிக் கிட்டு நிக்கறான். பெண்டாட்டியே கூப்பிட்டுக் கிட்டு கூடத்துக்கு வந்தா பய. அங்கே எம் பொண்டாட்டியோட பேசிக்கிட்டு நிக்கறான். அவ சிரிச்சுக்கிட்டு நிக்கிறா.''

''என்னடி கிரிக்கிறே ?'' ''இன்னும் ரெண்டு பல்லு விழட்டும்.'' ''என்னடி சிரிக்கிறே?'' ''அவ சிரிச்சா ."

''விரிச்ச பொகையிலே மாதிரி ஏன் சிரிக்கிறே?'

'''அவ சிரிச்சா .''

''ஒய் படையாச்சி ஓடய்யா. அந்தப் பய உலைக்கூடத்திலேருந்து புறப்பட்டிருப்பான். பய காவிரியிலே இறங்கினதும் எனக்குக் குரல் கொடு. அரிவாளும் கையுமாய் நான் வருவேன். ஒரே வெட்டு. வலது கைதுண்டு, ஓடு.''

அப்பொழுது கொல்லன் வீட்டிலிருந்து தெருவோடு வந்து கொண்டிருந்த அவருடைய பக்கத்து வீட்டுக்காரன் டீக்கடையைக் கடந்து காவிரிப் படித்துரைப் பக்கம் போனான். அதைப் படையாச்சியும் கவனித்துக் கொண்டிருந்தார்.

'ஒய் படையாச்சி அந்தப் பய காவிரியிலே எறங்கிட்டான். படித்துறையிலே குளிச்சுக் கிட்டிருந்த ஆட்டன் அத்தியே தண்ணீரிலே தள்ளி வைச்சு அமுக்கறான்.'' என்று நாயர் காவிரிக்கரைப் பக்கமாகக் கையை நீட்டினார்.

தூணில் சாய்ந்து கொண்டிருந்த ஒருவர், நிமிர்ந்து ' நாயரே படையாச்சிக்கி உடைவாளை எடுத்துக் கொடய்யா'' என்றார்.

உடனே படையாச்சி "ஆதிமூலமே .... ஆதி மூலமே" என்று கத்திக் கொண்டே பக்கத்தில் ஒருவர் வைத்துக் கொண்டிருந்த அரிவாளை எடுத் துக் கொண்டு காவிரிக்கரையை நோக்கி ஓட ஆரம்பித்து விட்டார்.

முட்டாள்தனமான காரியம் செஞ்சுட்டீங்க'' என்று படையாச்சியைத் தொடர்ந்து ஓடினேன். நான் ஓடுவதைப் பார்த்து டீக்கடையில் உட்கார்ந்திருந்தவர்கள் எல்லோரும் எழுந்து ஓடி வந்தார்கள். நாங்கள் ஓடுவதற்குள் அவர் படித்துறையை அடைந்து காவிரிக்குள் நீட்டிக் கொண்டிருக்கும் படித்துறையின் பக்கச் சுவரின் மேல் ஏறி விட்டார். படையாச்சி. படையாச்சி" என்று நாங்கள் கத்திக்கொண்டே ஓடினோம். அதற்குள் அவர் காவிரியில் குதித்து விட்டார். அவரைத் தொடர்ந்து நாங்கள் குதித்தோம். அப்பொழுது பக்கத்து வீட்டுக்காரன் காவிரியை நீந்திக் கட்ந்து அக்கரையில் ஏறிக் கொண்டிருந்தான்.

Wednesday, October 24, 2018

தேனடையும் பாம்பும் - ந. முத்துசாமி

ezhuttu_1966_08-89

தேனடையும் பாம்பும் - ந. முத்துசாமி

ஊரில் இருந்து அழைப்பிதழ் வந்தது அலுவலகம் விட்டதும் ஊர் சுற்றி விட்டு இரவு, அறைக்குத் திரும்ப வெகு நேரம் ஆகிவிட்டது. வந்ததும் அழைப்பிதழைக் கொடுத்தான் அறை நண்பன். படித்துப்பார்த்துவிட்டு மேஜை மீது தூக்கிப் போட்டேன். சென்னை மின் ஆரவாரமெல்லாம் அடங்கி விளக்குகள் அணைந்த பிறகு படுக்கப் போக வெகு நேரமாகி விட்டது.

புஞ்சையில் எங்கள் வீட்டுக் கொல்லைப்புறம் கைக் கெட்டும் தூரத்தில் ஒரு தேனடை; மறைவாக, மிக மறைவாக - யாருக்கும் தெரியாது என்று தான் நினைத்துக்கொண்டிருந்தேன் - தொங்கிக் கொண்டிருந்தது. அந்தக் கிளை தாங்கும், காத்திருக்கும் எனக்குக் காலம் வரும் வரை அது காத்திருக்கும் என்றிருந்தேன். கொல்லை வாயிற் படியில் நின்று தென்னைமர இடுக்கின் வழியே பார்ப்பேன். தினமும் பார்ப்பேன். தேனீக்கள் அமர்ந்து கருப்பாய் இருக்கும். காற்றில் அலையும் மயிராய் வந்து போகும் தேனீக்கள். பெண்ணின் மறைவிடம் போல் வளர்ந்து தொங்கும் தேன் கூடு. தினமும் பார்ப்பேன், கதவைப் பிடித்துச் கொண்டு கிணற்றின் கைப் பிடிச்சுவருக்கும் தென்னை மரத்திற்கும் இடை வழியே அலுப்புத் தோன்றும் வரை பார்த்திருப்பேன். அலுப்புத் தோன்றுமா? தேனல்லவா? தேன். மனதில் தேன் ஊறும்

எத்தனை நாட்களாய்க் காத்துக் கொண்டிருந்தேன் . பருவம் வரக் காத்திருந்தேன். கருப்பு இருட்டு அமாவாசைக்காக அல்லவா காத்திருந்தேன், அமாவாசை வரையில் தேனீக்கள் தேனைச் சேகரிக்கின்றன. பிறகு குடித்து விடுகின்றன என்று சொல்வார்களே என்பதால் தேன் திரண்டு பக்குவமாய் ஆகட்டும் என்று காத்துக் கொண் டிருந்தேன்.

பாம்பொன்று அந்தத் தேனடையைக் காவல் புரிந்து கொண்டிருந்தது. பாம்புக்கும் தேனடைக்கும் என்ன சம்பந்தம்? அது ஏன் அந்தத் தேனடைக்குக் காவல் இருக்கிறது. எனக்கு ஒன்றுமே புரிய வில்லை ;

அது எனக்கு ஒரு நாள் இரவுதான் தெரிந்தது. மோழையாய் தலையும் வாலும் அற்று சாண் நீளம் ஒரு பாம்பு அந்தத் தேனடைக்காகக் காத்துக்கொண்டிருந்தது. கொல்லை வாயிற்படி மறைவில் இருந்து கதவை ஒருக்களித்து ஒருகையால் கதவைப் பிடித்துக்கொண்டு அந்த இடுக்கு வழியே எட்டிப் பார்த்தேன். பாம்பு காத்துக் கொண்டிருந்தது. தென்னை மரத்தை ஒட்டி வேப்பமரத்திற்கிடையில் அந்தப் பாம்பின் வால் தெரிந்தது. நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று அந்தப் பாம்பிற்கு எப்படித் தெரிந்தது? அதற்குத்தான் கண்ணில்லையே. கண்ணில்லா விட்டாலும் நான் பார்த்ததை அது உணர்ந்து கொண்டது போலும். வால் வேப்பிலையாகி விட்டது. பூசாரியைப்போல் வேப்பிலை அடித்தது.

பாம்பால் தேனடைக்குத் தீம்பில்லை, அது எனக்காகத்தான் தேனடையைக் காத்துக் கொண்டிருக்கிறது. பாம்பின் தலைப்பக்கம் தெரியவில்லை, ஆனால் அது தேனடைக்குள் இல்லை என்று தான் நினைக்கிறேன், பாம்பின் விஷம் தேனில் கலந்து விடாது என்ற நம்பிக்கை இருந்தது. சுயத்தேனாகக் கிடைக்கும் என்று நாக்கில் நீர் ஊறக் காத்துக் கொண்டிருந்தேன்.

அமாவாசைக்கு இன்னும் எத்தனை நாட்கள் இருக்கின்றன? அந்தக் கருப்பிருட்டு, வானில் நட்சத்திரங்கள் பூத்து வர இன்னும் எத்தனை நாட்கள் இருக்கின்றன? மேற்கு வானத்தில் பூசணிக்கீற்று நிலா தொங்கிக் கொண்டிருந்தது. அமாவாசை இரவுக்கு இன்னும் எத்தனை நாள்? வேப்பிலை அடிக்கிறது பாம்பு. சல சல வென்று சப்தம், வேப்பிலைக்காற்று மேலே வீசுகிறது. கதகதப்பாய்ச் சூடு மேலே ஏறுகிறது. மூச்சு இறைக்கிறது. மயிர்க்கால்கள் குத்திடுகின்றன கெட்டியாகக் கதவைப் பிடித்துக்கொண்டேன். புளியங் கொம்பைக் குரங்கு பிடித்துக் கொள்வதைப் போலக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டேன். உடம்பின் பாரம் கையில் விழுந்தது. மொத்தப் பாரமும் கதவில் சாய்ந்தது. கதவின் காது பிய்த்துக் கொண்டு போகாமல் இருக்க வேண்டுமே என்ற கவலை வந்துவிட்டது. என் பாரத்தைத் தாங்க அந்த வாசலுக்குச் சக்தியில்லை, ஒன்று கதவைச் சாத்து அல்லது கதவில் சாயாதே என்னும் பிடிவாதம் அந்த நிலைப்படிக்கு. தேனடையைப் பார்ப்பதற்காகக் கட்டிவைத்த வாசலா? இவ்வாசலுக்கு முன்பே தோன்றியதா இந்தத் தேனடை என்று கேட்கிறது வாசல். நியாயம் தான் எத்தனை நாட்களாய் அமாவாசைக்காகக் காத்துத் தினமும் நான் சாயத் தாங்கும் இது ஆனால், இந்தப் பூமி என்னை , நிலைப்படியை, கதவை தேனடையைப் பாம்பைத் தாங்க வில்லையா என்று நான் நினைத்தது தவறுதான். ஆனால் அது இன்றைக்குத்தான் தெரிகிறது. தேன் ஊறத் தேனடை எனக்காகக் காத்திருக்கும்' என்று நினைத்தேன்.

பூசணிக் கீற்று சங்களவு ஆயிற்று, சங்கு பரங்கிக் காயாய் மாறி கீழ் கடலில் விழுந்து மிதக்க இன்னும் எத்தனை நாள்? பிறகு அதைக் கூறு போட்டு விற்க தர்ப்பைப் புல்லோடு வருவார் சாஸ்திரிகள். எள்ளும் தண்ணீரும் இறைத்து விட்டு தட்சிணைக்கு ஏய் என்பேன். அவள் வருவாள். 

''சாஸ்திரிகளே தாலிக்குத் தங்கம் வாங்க நாள் பாரும்.''

கடலில் விழுந்த பரங்கி என்ன வாச்சு, அழுகிப் போச்சு, வானம் இருண்டுதான் இருந்தது. அமாவாசை வரவேயில்லை.

நிலைப்படியைப் பிடித்துக்கொண்டே நின்றேன். தூங்கிவிட்டேன். எத்தனை நாட்கள் தூங்கினேனோ தெரியவில்லை. ஆனால் அமாவாசை வரவேயில்லை. வரட்டும், வரட்டும் ஒரு நாள் வராமலா போகும் என்று காத்திருந்தேன் ஓர் அடி எடுத்து வாயிற்படிக்கு அப்பால் வைத்திருக்கக் கூடாதா? அதுவாக வராவிட்டாலும் நானாகப் போகலாம் இல்லையா? இந்த யோசனை முன்பே தெரியாமல் போயிற்று கண்ணில் தாக்கம் சுழல நிலைப்படியைப் பிடித்துக் கொண்டே நின்று இருந்துவிட்டேன். உடம்பு நிலைப்படிக்கு இப்பாலும் தலை மட்டும் அப்பாலும் இருக்க எட்டிப் பார்த்துக் காத்திருந்துவிட்டேன். அமாவாசை இருட்டு வராமலா போகும்? தேனடை ஓடியா போகும்? எதிரில் இருக்கும் கிணற்றுத் தண்ணீரை வெள்ளம் கொண்டு போவதில்லை.

தூங்கித்தான் விட்டேன். தூங்கிய நேரத்தில் அமாவாசை வந்து போய் இருக்குமோ என்று இப்பொழுது நினைத்துப்பார்க்கிறேன். என்ன பயன்? ஆனால் அமாவாசை எனக்குத் தெரிந்து வரவில்லை. ஆகவே தேனடையில் தேன் ஊறியிருக்கும். குழந்தை வரப் பால் ஊறித் திரண்டிருக்கும் முலையைப் போலத் திரண்டிருக்கும்.

இருளின் நிறத்தில் தேனடை கலந்து போய் விட்டது. பாம்பின் வால் மட்டும் வேப்பிலையாய் ஆடுகிறது. வேப்ப மரத்தின் அடிப்பகுதி சொர சொரப்பாய்த் தெரிகிறது. மேல் கிளைகளும் தழையும் தெரியவில்லை. தேனடையைக் காணவில்லை. அது இருளில் கலந்து போய்விட்டது. அது இருளில் கலந்ததால் இல்லை என்று ஆகுமா? இல்லை. விடியும்போது எனக்காகக் காத்திருக்கும்.

ஒரு குரங்கு வந்தது. அதன் உடம்பு தெரிய வில்லை. இருளை அது போர்த்திக் கொண்டிருந்தது. நீண்ட முகம் தெரிந்தது. என்னைப்பார்த்துச் சிரித்தது. பற்கள் மட்டும் நட்சத்திரங்கள் போல் பளிச்சென்று தெரிந்தன. அடி உதட்டைப் பிதுக்கி முழுப் பற்களையும் எனக்குக் காட்டிவிட்டு ஒரே தாவில் வேப்ப மரத்தின் அடியில் தாவி ஏறி விட்டது. அது மரத்தில் ஏறுவது தெரியவில்லை. அடிக்கடி, தாவுக்குத் தாவு எட்டி எட்டித் தென்னை மரத்தின் ஓரமாய் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தது. ஆமாம், அது வேப்ப மரத்தில் ஏறிக் கொண்டிருக்கிறது. எனக்காகத்தான் அது மரத்தில் ஏறிக் கொண்டிருக்கிறது. எனக்குத் தேனடையைக் கொண்டு வருவதற்காகவே அது மரத்தில் ஏறிக்கொண்டிருக்கிறது. நிச்சயம் தேனடையைக் கொண்டு வரும் ராமனுக்கு சீதையைச் செய்தியாய்க் கொண்டுவந்த குரங்கு அது.

ஐயோ! அதோ பாம்பு தேனடைக்குக் காத்துக் கொண்டிருக்கிறதே! குரங்கைப் பிடுங்கி விடுமே . கள்ளையும் குடித்து விட்டுத் தேளையும் கொட்டிக் கொண்ட குரங்கின் கதையாய்ப் போய் விடுமே! அதெல்லாம் இல்லை. குரங்கிடமா அதன் சவடால். அதெல்லாம் நடக்காது. கிரைப் மிக்சர் குழந்தையைப் போல் பாம்பின் மென்னியைப் பிடித்து விடும் குரங்கு. அவிழ்ந்து தொங்கும் கூந்தலாய்ப் புரளும் பாம்பின் உடல். அதன் மூச்சுத் திணறும், வாயைப் பிளக்கும். நச்சுப்பல் வெளித் தெரியும். பல்லின் இடுக்கில் நஞ்சு பீச்சி வரும். சனியன் குரங்கு அதுவும் தேன் தான் என்று குடித்துவிட போகிறது. விஷம் தேனில் கலந்து விடப் போகிறது. பாம்பு நாக்கால் உதட்டைத் தடவிக் கொள்ளும். இரைட்டை நாக்குப் பாம்பு. பாம்பால் குரங்குக்கு ஆபத்தில்லை. அது கெட்டியாய்ப் பாம்பின் மென்னியைப் பிடித்து விடும். கீழே முறுக்கு அவிழும் கயிறாய்ச் சுழலும் பாம்பின் உடல். எனக்காகத்தான் அந்தப் பாம்பைப் பிடிக்கப் போய் இருக்கிறது குரங்கு. குரங்கின் வால் தான் பாம்பாய் இப்படி நீண்டிருக்கிறது போலும் பாம்பால் அதற்கு ஆபத்தில்லை. தன் வால் தான் என்பதால் விஷமில்லை என்று ஆகுமா? தேளின் வாலில் விஷமில்லையா? தன்னையே கடித்துக் கொண்டு செத்த பாம்பின் கதை எனக்குத் தெரியும். இருந்தாலும் பாம்பாய் நீண்ட தன் வாலின் மென்னியைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு விடும் இக் குரங்கு.

குரங்கு மரத்திலிருந்து இறங்கி விட்டது. எனக்குத் தெரியாமல் ஓடப்பார்த்தது. இளித்து அழகு காட்டி விட்டு ஓடியது. அடி எடுத்து வைத்தேன். பூமியில் புதைந்திருந்த பாதத்தை இப் பொழுது இழுக்க வில்லையா? இதை முன்பே செய்திருக்கக் கூடாதா? குரங்கு குறுக்கிடும் முன்பே இதை செய்திருக்கக்கூடாதா? தேனடை என்ன வாயிற்று என்று பார்க்கத் தோன்றவில்லை. குரங்கு பாம்பை பிடித்துக்கொண்டுதான் ஓடுகிறது போலும். மனம் போன்று இருண்ட பாதை யில் அது ஓடிக்கொண்டிருக்கிறது. பின் தொடர்ந்தேன் . பாம்பு என்னவாயிற்று?

பாழடைந்த கூரை வீடு. கூரை பிய்ந்து காற்றோடு என்றோ கலந்து போய்விட்டது. கட்ட விழ்ந்த மூங்கில் கழிகள் சரிந்து மொட்டைச் சுவுருக்கு அப்பால் சாய்ந்து கிடந்தன. மழை பொழிந்து சுவர் கரைந்து மண் பூமியில் முட்டு முட்டாய்க் குவிந்து கிடந்தது. நீர் வழிந்த பாதை சுவர் முழுதும். குட்டிச் சுவர்கள் கழு மரங்கள் போல் இருட்டு வானத்தைப் பார்த்து நிமிர்ந்து நின்றன. எத்தனை யுகமாய் இது காற்றும் மழைக்கும் ஈடு கொடுத்ததோ? எங்கும் ஒரே இருட்டு. கூரை வீட்டுக்குள் இருட்டுத்திரண்டு ஒடுங்கி விட்டது. குரங்கு அந்த வீட்டுக்குள் போய்ப் புகுந்து கொண்டு விட்டது. அது குரங்கின் இருப்பிடம். குரங்கைப் பின் தொடர்ந்தேன்.

குரங்கைக் காணவில்லை, பாம்பைக் காண வில்லை. தேனடையைக் காணவில்லை. என்னவாயின?

குரங்கு நுழைந்த வீட்டில் குரங்கேயில்லை. கதவற்ற நிலைப்படியே. உள்ளே எட்டிப் பார்த்தேன் . குரங்கைக் காணவில்லை. கதவில்லாவிட்டாலும் பூட்டிவைத்த இருட்டு.

வெளியில் தலையை இழுத்துக் கொண்டேன், ஒரு காளை மாடு வந்தது. இந்த மாடு எங்கிருந்து வந்தது? எனக்குப் போட்டியாக வந்தது?

வந்த மாடு ஒரு மூங்கில் முளைக்கடியில் வந்து நின்றது. முளையில் தொங்கிய பழம் தும்பில் தானே காலில் பிணைத்துக் கொண்டது, எனக்காகத்தான் அந்தத் தும்பு தொங்கிக் கொண்டிருந்தது என்று நினைத்தேன். இனிமேல் நீ கிட்டே அண்ட முடியாது என்னும் தீவிரம் காளையின் விழியில். நீண்ட கொம்புகள், சீவிட்ட கொம்புகள். கிராமத்துக் காளை. பசும்புல்லை மேய்ந்து கொழுத்த காளை. அடித்தடித்து தலை விரிந்து பூமியில் இறங்கிய அந்த முளையில் அது தன்னைப் பிணைத்துக் கொண்டு விட்டது. எத்தனை அடி வாங்கி அது பூமியில் நிலைத்ததோ? இல்லையென் றால் அதை நான் பிடுங்கிக் கொண்டு வந்திருக்க மாட்டேனா? நான் முளையைச் சுற்றி, சுற்றித் தேய்ந்த பாதை, மண் புரண்ட இடம், இளி முத்திரம் சுவறிக் குழைந்த சேறு, முளையில் கட்டிய மாடு.

முளையைச் சுற்றி வந்து தும்பு நீளம் குறைந்து கீழே இழுக்கப் படுத்துக்கொண்டு விட்டது. அதன் விழிகளில் காதல் வேகம். மூச்சில் காமச் சூட்டின் கதகதப்பு வீசுகிறது. மாடு படுத் துக் கொண்டு விட்டது. மூளையில் உராய்ந்து நெறுக்கமாய்ப் படுத்துக் கொண்டுவிட்டது.

தேனடை எங்கே என்று இன்னமும் தேடினேன்.

அதோ மாடு சப்புக் கொட்டுகிறது. நாயைப் போல் அது காலில் இடுக்கிக் கொண்டு எதையோ நக்கிச் சப்புக் கொட்டுகிறது. சப்புக் கொட்டுகிறதா இல்லை அசை போடுகிறதா? மாட்டின் நாக்கில் என்னவோ மஞ்சளாய்த் தெரிந்தது.

தேனடை எங்கே? பாம்பு என்னவாயிற்று? எனக்கு ஒன்றுமே புரிய வில்லை.

தேனடையை நினைத்து அழலாமா என்று நினைத்தேன். அழுகை நெஞ்சை அடைத்தது. எங்கோ சிரிப்பொலி கேட்டது. என்னை நினைத்து எள்ளும் சிரிப்பொலி. எங்கே கேட்கிறது? கண்ணை இருட்டியது. பாம்பாய் நீண்டத் தன் வாலைச் சுருட்டி வைத்துக்கொண்டு சிரித்தது குரங்கு. எங்கே? என் தேனடை எங்கே என் தேனடை எங்கே' என்று விரல்களால் என் வாயைக் கிழித்துக்கொண்டு கத்தினேன். அடிவயிற்றை இழுத்துக் கொள்ளும்படியாய்க் கத்தினேன். சப்தம் வெளியில் வரவில்லை, எனக்குள்ளேயே ஒடுங்கி விட்டது படர்ந்து எரிந்து அணையும் விளக்காய் ஒடுங்கி விட்டது. ''தேனடைதான் முளை' 'முளைதான் தேனடை" என்ற கேலிச் சிரிப்பிற்குப் பிறகு கிராமத்து முளையில் பழம் தும்பில் மாடாய்ப் பிணைத்துக்கொள்ள இருந்த முட்டாளே! என்று நீண்டு ஒடுங்கியது எங்கிருந்தோ வந்த சப்தம்.

இருண்ட என் மனக்குள் திரும்பிப் பார்த்தேன். ஒன்றும் தெரியவில்லை. எழுந்ததும் முதல் வேலையாக புஞ்சைக்கு ஒரு வாழ்த்துத் தந்தி அனுப்பி வைத்தேன்.

****(விட்டு தான் எள்ளும் பைப்பு)

''உடன் பிறந்த தளை' - தி. சோ. வேணுகோபாலன்

அறிவின் சிறையாய் 
இதயத்தின் உள்ளுறையாய் 
இறுகப் பற்றிய 
சோம்பல் - 
ரப்பர் குழாய் வளையம் ! 
எழுத்துக் காற்று 
எண்ண மணம் சுமந்து 
உலகம் சுற்ற 
முடியாமல் 
வளையக் குழாயுள் 
விழியிருண்டு 
விம்முகிறது !

Saturday, October 20, 2018

பட்டினி கலைஞன் - ஃப்ராங் காஃப்கா ::: தமிழாக்கம் : சி. சு. செல்லப்பா --..எழுத்து 31, 1961

ஃப்ராங் காஃப்கா

பட்டினி கலைஞன்

சமீப பத்தாண்டுக் காலங்களில் பட்டினி - கலைஞர்களிடம் காட்டப்பட்டுள்ள அக்கறை வீழ்ந்துவிட்டது தெளிவு. முன் காலத்தில் ஒருவன் தன் சொந்தச் செலவில் அந்தமாதிரி கண்காட்சிகள் நடத்தி அதன் வெற்றியை நிச்சயமாக நம்பி இருக்கலாம், ஆனால் இன்று அது சாத்தியமே இல்லை. அந்த காலம் வேறு. அந்த காலத்தில் நகரம் முழுவதும் பட்டினி - கலைஞர்கள் நிறைந்து இருந்தது. பட்டினி நாளுக்குப் பட்டினி நாள் அவன் மீது உள்ள அக்கறை அதிகரித்தது. ஒவ்வொருவரும் ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது பட்டினி - கலைஞனை பார்க்க வேண்டும் என்று விரும்பினார்கள். பின்னர் போகப் போக அந்த சின்ன கிராதிக் கூட்டின் முன்னால் பகல் முடிகிறவரை அதன் முன் உட்காரும் வழக்கமான சந்தாதாரர்களும் ஏற்பட்டிருந்தார்கள். வெய்யில் அடிக்கிற நாட்களில் கூடு வெட்டவெளியில் கொண்டு வைக்கப்பட்டது. இந்த சமயங்களில் முக்யமாக குழந்தைகளுக்குத்தான் இந்த பட்டினி . கலைஞன் வேடிக்கை காட்டப்பட்டான் , வயதானவர்களுக்கு அவன் நகைப்புக்கு உரியவனாக இருந்தான் என்பதுக்கு மேல் எதுவும் இல்லை. அவர்கள் கலந்து கொண்டதும்கூட எதோ அதுதான் நாகரீகமானது என்பதுக்காகத்தான். குழந்தைகளோ, அவன் அங்கே வைக்கோல் மீது உட்கார்ந்து, ஒரு நாற்காலியையும் அலட்சியமாக நினைத்து, மரண வெறுப்புடன் கருப்பு டிராயர் அணிந்து விலா எலும்புகள் தூக்கி துருத்தித் தெரிய, சில சமயம் விநயமாக தலை அசைத்தும் வலிந்த புன்னகையுடன் கேள்விகளுக்கு பதில் சொல்லியும் அவர்கள் தன் உடல் மெலிவை உணரும்படி செய்ய கைகளை கிராதிகளுக்கு வெளியே நீட்டிக் கொண்டும் கூட்டின் ஒரே அலங்காரமாக இருந்த அந்த கடியாரத்தின் அடிப்பையும் கவனியாமல், யாரையும் பார்க்காமல் கிட்டத்தட்ட கண்ணை மூடிக் கொண்டு தன் முன் நேரெதிரே பார்த்துக் கொண்டு மீண்டும் தன் நிலையில் ஆழ்ந்தும் உதடுகளை நனைத்துக்கொள்ள ஒரு சிறு பிங்கானிலிருந்து எப்போதாவது தண்ணீரை உறிஞ்சிக் கொண்டும் அவன் உட்கார்ந்து கொண்டிருந்த போது குழந்தைகள் திறந்த வாயுடன் அவனை பார்த்துக்கொண்டிருப்பார்கள்.


வந்து போய்க் கொண்டிருந்த வேடிக்கை பார்ப்போரைத் தவிர அங்கே பொது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த காவல்காரர்கள் இருந்தார்கள். என்ன விசேஷ காரணமோ கசாப்புக்காரர்கள் அவர்கள், அதுவும் எப்பவும் மூன்று மூன்று பேர்களாக திருட்டுத்தனமாக அந்த பட்டினி - கலைஞன் எங்கேயாவது உணவருந்த விடாமல் இருக்கப் பார்த்துக் கொள்ளத்தான் இராப்பகல் வேலை அவர்களுக்கு இடப்பட்டிருந்தது. ஆனால் இது ஒரு ஒப்புக்குத்தான். பொது ஜனங்களை திருப்திப் படுத்தத்தான் இது ஏற்படுத்தப்பட்டது. ஏனென்றால், பட்டினி கலைஞன் என்ன நேர்ந்தாலும் வலுக்கட்டாயப் படுத்தினாலும் கூட, பட்டினி நோம்பு நாட்களில் எந்த ஆகாரமும் எடுத்துக் கொள்ளமாட்டான் என்பது விவரம் அறிந்தவர்களுக்கு நன்றாக தெரியும். கலைஞன் என்ற அவனுக்கு உள்ள ஒரு அந்தஸ்து, அத்தகைய காரியத்தை அவன் செய்யவிடாது. எல்லா காவலாளிகளுக்கும் இது அவ்வளவாக தெரியாது. சில சமயம் தங்கள் காவல் வேலையில் கண்டிப்பில்லாத காவல்கோஷ்டி உண்டு. அந்த பட்டினி - கலைஞன் ஏதாவது ரகசியமாக வகை செய்து கொள்வான் என்று அவர்கள் நம்பிக்கொண்டு அவன் அதை சாப்பிட்டு பசியாற்றிக் கொள்ள வாய்ப்புத் தரும் உத்தேசத்துடன் வேண்டுமென்றே தள்ளி ஒரு ஓரமாக சேர்ந்து உட்கார்ந்து சீட்டாட்டத்தில் மூழ்கி இருப்பார்கள். அந்தமாதிரி காவலாளிகளைவிட வேதனை தருவது பட்டினி - கலைஞனுக்கு வேறு எதுவும் இல்லை. பேச முடியாத துக்கம் பெருகச் செய்தார்கள் அவர்கள். அவன் உண்ணா நோன்பு இருப்பதை ரொம்ப கஷ்டமானதாக ஆக்கினார்கள் அவர்கள். சில சமயம் தன் பலவீனத்தையும் பாராட்டாமல் இதுமாதிரி காவல் சமயங்களில் அவன் பாடுவான், ஜனங்களது சந்தேகங்கள் நியாயமானதல்ல என்று அவர்களுக்கு காட்டதன் பலம் இடம் கொடுக்கும் வரை வெகு நேரம் பாடுவான். ஆனால் அவை கூட அவனுக்கு பயன்படவில்லை. அந்த மாதிரி நிலைகளில் பாடும் போது கூட அவன் சாப்பிட முடிகிற சாதுர்யத்தைப்பற்றி அவர்கள் வியப்பார்கள். தன் கூண்டுக்கு அருகே உட்கார்ந்து ஹாலில் மங்கலான வெளிச்சமும் போதாது என்று, காட்சி மானேஜர் அவர்களுக்கு கொடுத்திருந்து பாக்கெட் டார்ச்சுகளை அவன் மீது திருப்பி விட்டுப் பார்க்கும் காவலாளிகளைத்தான் அவன் மனதுக்குப் பிடித்திருந்தது. பிரகாசமான அந்த வெளிச்சம் அவனுக்கு தொந்திரவாகவே இல்லை. எப்படி இருந்தாலும் அவனால் நன்றாக தூங்க முடியாது, ஏதோ கொஞ்சம் பூனைத் தூக்கம் போடலாம், எந்த வேலையில் எந்த வெளிச் ச த் தி லு ம் ஹாலில் கூட்டம் நிரம்பி வழிந்து ஓரே சத்தமாக இருக்கிறபோதும் சரி. அந்த மாதிரி காவலாளிகளுடன் இரவு முழுக்க தூங்காமல் விழித்திருக்கத்தான் அவனுக்கு இஷ்டம். அவர்களுடன் தமாஷ் பேசவும் தான் ஊர்சுற்றின் கதைகளை எல்லாம் அவர்களுக்கு சொல்லவும் அல்லது அவர்களது கதைகளை கவனிக்கவும் ஈடுபட்டிருந்தான். எப்போதும் விழித்தே இருக்க ஏதாவது செய்ய, தன் கூண்டில் சாப்பிட எதுவும் இல்லை என்றும் அவர்களில் யாரும் செய்ய முடியாத விதமான ஒரு பட்டினி நோம்புதான் மேற்கொண்டிருப்பதாக அவர்களுக்கு காட்ட ஏதுவாக இருக்கும் எதையும் செய்ய அவன் விரும்பினான். ஆனால் அவனுக்கு ரொம்ப மகிழ்ச்சி ஏற்படுகிற அந்த விநாடி, காலை வந்ததும் அவனை ஒட்டி அவர்களுக்கு நல்ல சாப்பாடு கொண்டு வரப்பட்டதும், இரவு முழுக்க விழித்து அலுத்து நல்ல பசியுடன் இருக்கும் ஆரோக்யக்காரர்களுக்கு உள்ள பசியுடன் அவர்கள் அதை கவ்விச் சாப்பிடு வதை பார்க்கிற போது தான். இந்த உணவு காவலாளிகளை வசப்படுத்துவதற்காக அசிங்கமான முயற்சி என்று பாவனை செய்கிறவர்களும் இருந்தார்கள். ஆனால் அப்படி ரொம்ப சொல்லி விடக்கூடாது. இந்த உணவு இல்லாமல் இரவு முழுக்க இந்த காவலை அவர்கள் அந்கறையாக செய்ய இஷ்டப்படுவார்களா என்று அவர்களை கேட்டால், மனசுக்குள்ளே ஒரு சந்தேகத்துக்கு இடம் கொடுத்து வந்தாலும்கூட, தேள்வி பிடிக்காத பாவனையாக முகத்தை சுளித்துக் கொள்வார்கள்.

பார்க்கப்போனால் உண்ணாவிரதத்துடன் தவிர்க்க முடியாதபடி சம்பந்தப்பட்ட சந்தேகங்களில் இது ஒன்று. ஒரு பட்டினி - கலைஞன் பக்கத்தில் தினம் இராப்பகலாக ஒரு காவல்காரனாக பொழுதை கழிக்க யாருக்கும் இயலாது என்பது தெரிந்தது. அவன் உன்ணாவிரதம் உண்மையில் தடைப்படாமல் பூரணமானது என்று யாரும் தன் கவனிப்பிலிருந்து நிச்சயமாக சொல்லிவிட முடியாது. பட்டினி - கலைஞன் ஒருவனுக்குத்தான் அது தெரியும். எனவே பட்டினி விரதக்காரனேதான் தன் பட்டினி விரதத்தை முழுத்திருப்தியுடன் பார்க்கும் ஒருவனாக இருக்க முடியும்; ஆனால் அவனுக்கு திருப்தி ஏற்படாததுக்கு இன்னொரு காரணமும் உண்டு. அவனை பார்க்க சகிக்கவில்லை என்று வருத்தத்துடன் பலர் வராமல் தங்கிவிட்டதுக்கு காரணமான அவன் உடல் மெலிவு பட்டினி காரணமாக ஏற்பட்டது என்று இல்லாமலும் இருக்கலாம். ஒருவேளை அவனுக்கு தன்மீதே ஏற்பட்ட அதிருப்தியினால் இந்த மெலிவு ஏற்பட்டிருக்கக் கூடும்; உண்மை என்னவென்றால் அவனுக்கு மட்டும்தான் தெரியும், வேறு யாருக்கும் - அறிவாளிகளுக்கும் கூட தெரியாது - பட்டினி எவ்வளவு லேசான காரியம் என்று உலகத்துலேயே எளிதான விஷயம் அதுதான். அவன் அதை ரகசியமாக வைத்துக்கொள்ளவில்லை : ஆனாலும் யாரும் அவனை நம்பவில்லை; உயர்த்திச் சொன்னால் அவன் அடக்கமானவன் என்றார்கள். ஆனால் சகஜமாக. அவன் விளம்பர வேட்டைக்காரன், சுத்த புரட்டுக்காரன், பட்டினி இருப்பது எளிது அவனுக்கு, ஏனென்றால் எப்படி எளிதாக ஆக்கலாம் என்று அவனுக்குத் தெரியும், அது சாத்தியம் என்கிறதையும் வாய்விட்டு ஒப்புக்கொள்ளக்கூடிய துடுக்கு இருக்கிறது என்றுதான் ஏசப்பட்டான். இதையெல்லாம் அவன் ஏற்றுக்க வேண்டி இருந்தது. வருஷம் ஆக ஆக இதெல்லாம் பழக்கமாகிவிட்டது அவனுக்கு . ஆனால் அவனுக்குள்ளே ஓயாத அரிப்பு இருந்து வந்தது.


இருந்தாலும், தன் உபவாச காலமுடிவில் ஒரு தடவை கூட அவன் தன் கூட்டை விட்டு மனமொப்பி தானாக வெளியேறினான் என்று கிடையாது - இதை எல்லாரும் ஒப்புக் கொள்ள வேண்டித்தான் இருந்தது. காட்சி நிர்வாகி அதிகபக்ஷ பட்டினிக் காலம் நாற்பது நாள்தான் என்று நிர்ணயித்திருந்தார். அதற்கு மேல் போகவிடமாட்டார், பெரிய உலக நகரங்களில் கூட. தக்க காரணம் இல்லாமல் இல்லை. படிப்படியாக அதிக விளம்பரம் மூலம் ஒரு நகரத்து மக்களின் அக்கறையை ஒரு நாற்பது நாட்களுக்கு ஏற்றிவைக்க முடியும். ஆனால் அந்த கால் முடிவில் பொதுஜன உற்சாகம் இறங்கிப் போய் ஆதரவு வெளித்தெரிய வீழ்ந்து விடுகிறது என்பது அனுபவத்தில் தெரிய வந்திருக்கிறது. இது சம்பந்தமாக தேசத்துக்கு தேசம் நகரத்துக்கு நகரம் சொற்ப வித்தியாசங்கள் இருந்தாலும் உயர்ந்த பக்ஷ கால் வரை நான்பது நாட்கள்தான் என்று வரையறை இருந்தது. ஆகவே நாற்பதாம் நாளன்று புஷ்ப அலங்காரக் கூண்டின் கதவு திறக்கப்படும். உற்சாகமுள்ள கூட்டம் அரங்கு நிறைந்து இருக்கும். ராணுவ பாண்டு வாசிக்கும். பட்டினி - கலைஞனின் உடல் அளவை எடுக்க இரண்டு டாக்டர்கள் கூண்டுக்குள் நுழைவார்கள் ஒரு மெகா போன் மூலம் ஹால் கூட்டத்துக்கு முடிவு அறிவிக்கப்படும். பிறகு முடிவாக இரண்டு யுவதிகள் வருவார்கள். இந்த வேலைக்கு வேறு யாரையும் இல்லாமல் தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதில் மகிழ்ச்சி அவர்களுக்கு. அந்த பட்டினி - கலைஞனை கூண்டிலிருந்து வெளியே படி இறங்கி அழைத்துச் செல்ல வேண்டியது அவர்கள் வேலை. படி அடியில் ஜாக்கிரதையாக தயாரித்துத் தேர்ந்தெடுத்த ஒரு நோயாளியின் பத்திய உணவு வைக் கப்பட்ட ஒரு சிறு மேஜை இருக்கும். இந்த சமயத்தில் வழக்கமாக பட்டினி - கலைஞன் முரண்டுவான். அந்த யுவதிகள் குனிந்து உதவிக் கை நீட்டும் போது தன் எலும்புக் கைகளை அவர்கள் கைமீது வைப்பதற்கு அவனுக்கு சம்மதம் தான். ஆனால் அவன் அதை நிறுத்தத்தான் விரும்பவில்லை. நாற்பதாம் நாள் முடிவில் எதுக்காக இப்போது நிறுத்தவேண்டும், இன்னும் நீண்ட காலம் - கணக்கிட முடியாத நீண்ட காலம் - அவன் அதை தாங்கி இருக்க முடியும். இப்போது ஏன் நிறுத்தவேண்டும், அவன் பட்டினி நோன்பு நல்ல கட்டத்தில் இருக்கும் போது? இல்லை, இன்னும் நல்ல கட்டத்தை அடைந்து விட்டதாகக் கூட சொல்ல முடியாது. உண்ணாவிரதம் இருந்துகொண்டே இருக்கும் கவுரவம் ஏன் அவர்கள் தனக்கு கிடைக்காமல் இருக்கச் செய்ய வேண்டும். தன்னையே தான் மேலே மேலே மிஞ்சிக்கொண்டு - ஏனென்றால் தன் பட்டினி சக்திக்கு எல்லையே கிடையாது என்று அவனுக்குத் தெரியும் - எக்காலத்துக்குமான தலைசிறந்த பட்டினி - கலைஞனாக - ஒரு வேளை ஏற்கனவே ஆகிவிட்டானோ - தான் ஆக விடாமல் ஏன் செய்ய வேண்டும் அவர்கள்? தன் வித்தையைக் கண்டு வியப்பதாக பாவிக்கும் இந்த கூட்டம் தன்னிடம் அவ்வளவு பொறுமை ஏன் காட்டாமல் இருக்கவேண்டும்? பட்டினி நோம்பு இருந்துகொண்டே இருப்பதை தான் பொறுத்துக் கொள்ள முடியுமானால் அவர்கள் ஏன் தன்னை சகித்துக்கொள்ள முடியாது. தவிரவும் அவனுக்கும் அலுப்பாக இருந்தது. வைக்கோல் நடுவில் அவன் ஆசனம் வசதியாக இருந்தது. இப்போது அவர்கள் அவனை கிளப்பி எழுந்திருக்கச் சொன்னார்கள். சாப்பிடப் போகச் சொன்னார்கள். அந்த சாப்பாட்டு நினைப்பே அவனுக்கு குமட்டல் உண்டாக்கியது. அந்த பெண்களிடம் உள்ள மரியாதையால்தான் அவன் அதை அடக்கிக்கொண்டான். ரொம்ப சினேக பாவனையாகத் தோன்றின, ஆனால் உண்மையில் கொடுமையாக இருந்த அந்த பெண்களை உற்று நோக்கினான். ஒல்லியான கழுத்துக்கு மீறி பளுவாக இருந்த தன் தலையை மறுத்தாட்டினான். ஆனால் இந்த சமயத்தில் எப்பவும் நடப்பது நடந்தது. காட்சி நிர்வாகி வருவார், மவுனமாக, ஏனென்றால் - வாத்ய இசை பேச விடாமல் செய்துவிடும் - அந்த பட்டினி - கலைஞனுக்கு மேலாக கையை உயர்த்தி, வைக்கோல் மீது இருந்த அந்த பரிதாபகர பிராணத்தியாகியை பார்க்கும்படி தேவலோகத்தையே அழைப்பது போல ஏதோபாவனை செய்வார். அந்த பட்டினி - கலைஞன் உயிர்த் தியாகிதான், நிச்சயமாய் , ஆனால் வேறு ஒரு அர்த்தத்தில் . பிறகு அவர் பட்டினி - கலைஞ்னின் ஒல்லியான இடுப்பை , எவ்வளவு எளிதில் முறியத்தக்க பொருளைதான் கையாள வேண்டி இருக்கிறது என்பதை அதீதமான எச்சரிக்கை எடுத்துக்கொள்வதன் மூலம் வெளித் தெரியச் செய்ய முயற்சிப்பவராக, பிடிப்பார். பிறகு அவனை - மறைவாக கொஞ்சம் ஆட்டிக்கொடுத்து அவன் கால்கள் லேசாக தள்ளாட, அவன் உடல் வசமில்லாமல் தடுமாறச் செய்து அவனை அந்த பெண்களிடம் ஒப்பிப்பார். இதுக்குள் அவர்கள் முகம் வெளிறிப்போய் இருப்பார்கள். அப்புறம் அந்த பட்டினி - கலைஞன் மேற் கொண்டு எதிர்ப்பு காட்டமாட்டான். அவன் தலை நெஞ்சில் படிந்திருக்கும், ஏதோ அங்கே உருண்டு போய் பிரிக்க முடியாதபடி ஒட்டிக் கொண்டிருப்பது போல். அவன் வயிறு குகை மாதிரி இருக்கும். அவன் கால்கள், தம்மை காத்துக்கொள்ள முற்படும் ஒரு உறுத்தலால் உந்தப்பட்டு முழங்கால் இடுக்கில் நெருங்கி இருக்கும். இருந்தாலும் அவன் பாதங்கள், தரையை அது உண்மை இல்லை என்பது போலவும், உண்மையான ஒன்றை தேடிக் கொண்டிருப்பது போலவும் சுரண்டிக்கொண்டிருக்கும். அவன் உடலின் பளு முழுவதும் அவன் லேசாக இருந்தாலும், பெண்களில் ஒருத்தி மீதே விழுந்தது. அவள் மூச்சுத் தடுமாறி, உதவியை எதிர்பார்த்து மன்றாடுபவளாக சுற்றுமுற்றும் பார்த்து (தனக்கு கிடைத்த இந்த கவுரவ பதவியை அவள் இப்படி சித்திரித்துப் பார்க்கவில்லை) முதலில் அந்த பட்டினி - கலைஞனுடன் ஒட்டாமல் இருக்க தன் கழுத்தை முடிந்த மட்டுக்கு தள்ளி வைத்துக்கொண்டாள். பிறகு இதனாலும் எதுவும் பயன் இல்லாது போகவே, அவளது அதிர்ஷ்டக்கார கூட்டாளி அவளுக்கு எந்த வித உதவியும் தராது போகவே, தன் நடுங்கும் கையில் வெறும் எலும்புக் கட்டாக இருந்த அந்த பட்டினி - கலைஞன் கையை சுமந்து கொண்டு போவதோடு திருப்திப் பட்டுக் கொண்டாள். சபையோரது மகிழ்ச்சி ஆரவாரம் தொடர , அவள் கண்ணீர் விட்டாள். வெகு நேரமாக தயாராக இருந்த ஒரு பணியாள் வந்து, அவளிடமிருந்து வேலையை மாற்றிக்கொண்டாள். பிறகு சாப்பாடு வரும். அதில் கொஞ் சம், பாதிப் பிரக்ஞை தப்பிய அந்த பட்டினி - கலைஞன் விழுங்கச் செய்வார் அந்த காட்சி நிர்வாகி. இடையே அவனது நிலைமையிலிருந்து பிறர் கவனத்தை திருப்ப சுமுகமாக வம்பு அடிப்பார் . பிறகு பொது ஜனங்கள் முன் ஒரு டோஸ்ட் நடக்கும். பட்டினி - கலைஞன் இதை ரகசியமாக தன் காதில் ஓதினமாதிரி அவர் பாவனை செய்வார். வாத்யகோஷ்டி முரசு தட்டி ஆர்பாட்டம்மாக உச்சகட்டத்தில் இசைக்கும். கூட்டம் கலைந்து போகும். தான் தான் பார்த்ததைப் பற்றி அதிருப்தி கொள்ள யாருக்கும் இடம் இருக்காது அந்த பட்டினி - கலைஞனைத் தவிர யாருக்கும். எப்பவும் அவன் ஒருவனுக்குத்தான்.

இப்படி பல வருஷங்கள் நடந்தது. உடம்பைத் தேற்றிக்கொள்ள கொஞ்சம் கொஞ்சம் இடை நாட்கள் மட்டும் இருக்கும். உலகத்தால் கவுரவிக்கப்பட்டு அவன் கீர்த்தியுடன் வாழ்ந்தான். ஆனால் அவனோ பெரும்பாலும் மனக் கிலேசம் நிறைந்து இருந்துவந்தான். யாரும் அதை அறிந்து கொள்ளாதது அந்த விசனத்தை இன்னும் அதிகப்படுத்தியது. உண்மையாக, ஒருவன் அவனுக்கு என்ன வேறு வசதி செய்து தர முடியும்? அவன் விரும்பக் கூடியது வேறு என்னதான் இருக்கிறது. சில சமயம் ஒரு நல்லெண்ணக்காரர் அவனிடம் பரிதாபம் கொண்டு, அவனுக்கு ஆகாரம் இல்லாதது தான் இந்த விசனத்துக்கு காரணம் என்று விளக்க முயன்றால் அது இருக்கலாம். பட்டினி நாட்கள் ரொம்ப அதிகம் ஆகிவிடுகிற போது - அந்த பட்டினி - கலைஞன் ஒரே கோபத்துடன், சுற்றி இருப்பவர்கள் பயப்படும் படியாக ஒரு காட்டு மிருகம் மாதிரி கூண்டுக் கிராதிகளை ஆட்டி பதில் சொல்வான். ஆனால் அந்த மாதிரி ஏற்படும்போது நிர்வாகி தனக்குப் பிடித்த, வழக்கமாக கையாளும் தண்டனையை கையாளுவார். பட்டினி - கலைஞன் சார்பாக, கூடியிருந்தவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டு, பட்டினியால் ஏற்படும் ஆத்திரத்தை அறிந்து கொண்டால்தான் அவனுடைய நடத்தையை மன்னிக்க முடியும், நன்றாக சாப்பிட்டவர்களிடம் இந்த ஆத்திரம் இருப்பதை அவ் வளவு எளிதில் அறிந்து கொள்ள முடியாது என்று சொல்வார். பிறகு அந்த பட்டினி - கலைஞன் இன்னும் நீண்ட காலம் உண்ணாவிரதம் இருக்க முடியும் என்று அதேபோல் புரியத்தக்க தாவாவையும் தர்க்கரீதியாகக் கூறி அதனால் ருஜுவாகும் உயர்ந்த முயற்சி, போற்றக்கூடிய உறுதி, மகத்தான தன் மறுப்பு இவையெல்லாம் புகழ்வார். பிறகு அவர் இந்த உரிமையை மறுப்பது போல் சில போட்டோக்களை விநியோகிப்பார். அவை விலைக்கும் தரப் படும். அவைகளால் அந்த பட்டினி - கலைஞன் நாற்பதாம் நாள் உபவாசத்தில் படுக்கையில் பலவீனமாக படுத்து சாகிற சமயத்தில் இருப்பதை ஒருவன் பார்க்கலாம். இப்படி உண்மை திரிக்கப்படுவது பட்டினி - கலைஞனுக்கு ரொம்ப நன்றாகத் தெரியும். இருந்தாலும் இப்படி நடக்கும்போது அவனால் தாங்க முடியாதபடி ரொம்ப வாதைப்படுத்தும். உபவாசத்தை இப் படி அகாலத்திலேயே முடித்து விட்டதால் ஏற்பட்ட ஒரு விளைவை இங்கே அதற்கு ஒரு காரணமாக எடுத்துக் காட்டுகிறார்கள்! இந்த அறியாமைக்கு, உலகத்தின் அறியாமைக்கு எதிரே போராடுவது முடியாத காரியம். ஒவ் வொரு தடவையும் கூண்டுக் கம்பிகளை ஒட்டி நின்று கொண்டு காட்சி நிர்வாகி சொல்வதை ஆர்வத்துடன் கேட்பான். ஆனால் எப்பவும் ஃபோட்டோக்கள் கொண்டு வரப்பட்டதும் கம்பிகளைப் பிடித்த பிடியை தளர்த்தி திரும்புடவைக் கோலில் உட்காந்து விடுவான். நிச்சயப்படுத் திக்கொண்ட கூட்டம் மறுபடியும் கிட்டவந்து தொந்திரவு இல்லாமல் அவனை பார்க்கமுடியும்.

- இந்தமாதிரி காட்சிகளை பார்த்தவர்கள் சில வருஷங்கள் கழித்து அவை பற்றி நினைத்துப் பார்த்தபோது அவர்கள் தங்களை அறிந்து கொள்ள சிரமப்பட்டார்கள். ஏனென்றால் இதற்கிடையே மேலே குறிப்பிட்ட மாறுதல் ஏற்பட்டு விட்டது. ஒருவேளை அதுக்கு ஆழ்ந்த உட்காரணங்கள் இருக்கலாம். ஆனால் அவைகளை எல்லாம் துருவிப்பார்க்க யாருக்கு அக்கறை? எதானாலும், போஷிக்கப்பட்ட அந்த பட்டினி - கலைஞன் ஒரு நாள் வேடிக்கை பார்க்கும் கூட்டம் தன்னை கைவிட்டுவிட்டதை உணர்ந்தான். இதைவிட மற்ற வேடிக்கைகளை பார்க்க அது கூடினது. மறுபடியும் அந்த நிர்வாகி அங்கே இங்கே அந்த பழைய அக்கறை வெளித்தோன்றதா என்று பார்க்க அவனோடு பாதி ஐரோப்பா சுற்றினார். பயனில்லை - ஏதோ ஒரு ரகசிய ஏற்பாடு போல எங்குமே பட்டினிக் காட்சிகளிடம் ஒரு வெறுப்பு வளர்ந்திருந்தது. திடீரென இப்படி ஏற்பட்டிருக்க முடியாது உண்மையாக வெற்றி போதை நாட்களில் போதுமானபடி கவனித்திராத அல்லது தக்கபடி தடுத்திராத சில எச்சரிக்கைக் குறிகள் இப்போது யாருக்காவது மந்தமாக ஞாபகத்தில் இருக்கும். ஆனால் அது விஷயமாக எதாவது செய்ய காலம் மீறிப்போய்விட்டது. பட்டினி நோன்புக்கான காலம் மீண்டும் திரும்பும் ஒரு நாள் என்பது நிச்சயம் தான், ஆனால் இப்போது இருப்பவர்களுக்கு அது ஆறுதல் இல்லையே. அந்த பட்டினி - கலைஞன் இப்போது என்ன செய்வது? ஆயிரக் கணக்கானவர்கள் பாராட்டுக்கு உள்ளான அவன் சின்ன திருவிழாக் காட்சி சாலைகளிலும் கூட தன்னை வேடிக்கை காட்டிக் கொள்ள முடியவில்லை. வேறு வேலைக்குப் போகலாம் என்றால் அவனுக்கு வயது அதிகமாகி விட்டது; அது மட்டுமில்லை, உபவாசத்தில் தான் அவனுக்கு ரொம்பவும் ஈடுபாடு வெறியாக ஏற்பட்டு விட்டது. ஆகவே நிர்வாகியை. நல்ல வாழ்க்கைப்போக்கில் உடன் இருந்த தோழனை விலக்கிவிட்டு ஒரு பெரிய சர்க்கஸில் சம்பளத்தில் சேர்ந்தான். தன் உணர்ச்சி பாதிக்கப்படாமல் இருக்க அவன் ஒப்பந்த நிபந்தனைக் கூட ஆராயவில்லை.

மாறுபட்ட வித்தைக்காரர்களையும் மிருகங் களையும் நிறைந்த கருவிகளையும் சாதனங்களை யும் நிறைய கொண்ட ஒரு பெரிய சர்க்கஸில் இன்னொரு , வேடிக்கைக்கும் இடம் இருக்கும், ஒரு பட்டினி - கலைஞனுக்கும் கூட. அதாவது, அவன் ஏதோ ஒரு அளவுக்கு தன் சாதனையை காட்டிக் கொள்ள முடியுமானால். ஆனால் இந்த விஷயத்தில் அமர்த்தப்பட்டது பட்டினி கலைஞன் மட்டும் இல்லை, அவனது வெகு நாளைய பிரபலமான பெயரும் கூடச் சேர்ந்தது. வயது அதிகரிப்பினால் வித்தைத் தரம் குறையாத இந்த கலையின் தனித்தன்மையால், ஏதோ தன் சக்தி எல்லாம் இழந்த ஒரு தளர்ந்த கலைஞன் ஒரு சர்க்கஸில் நிம்மதியாக ஒரு மூலையில் போய் தஞ்சம் புகுந்து கொண்டான் என்று சொல்லிவிட முடியாது. அதுக்கு மாறாக எப்பவும் போலவே தான் உபவாசம் இருக்கமுடியும் என்று அந்த பட்டினி - கலைஞன் உத்திரவாதம் அளித்தான். முழுக்க உண்மையான ஒரு உத்தரவாதம் தான். உண்மையில் அவன் தன் இஷ்டப்படி விட்டால் (அந்த சலுகை அவனுக்கு உடனே தரப்பட்டது முதல் தடவையாக உலகத்தையே நியாயமான வியப்பில் ஆழ்த்தி விட முடியும் என்று வலியுறுத்திச் சொன்னான். காலத்தின் சுபாவத்துக்கு ஏற்ப தன் உற்சாகத்தில் அந்த பட்டினி - கலைஞனே மறந்து இருந்த ஒரு உரிமை விஷயம் தெரிந்தவர்களிடமிருந்து கிளம்பும் ஒரு புன்னகையில் தான் இது வெளித்தெரியும்.

பட்டினி - கலைஞன், இருந்தாலும் உண்மை நிலையை கவனிக்கத் தவறல்லை. தன் கூண்டு ஒரு விசேஷ கவனத்துக்கு உரியதாக சர்க்கஸ் மத்தியில் வைக்கப்படாமல், லாயங்களுக்குப் பக்கத்தில் - அங்கேயும் யாரும் வர வழி ஒருவிதமாக இருந்தது - வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அவன் ஆச்சர்யப்படவில்லை. பெரிய வர்ண அலங்கார ஜோடனைகள் கூண்டைச் சுற்றி செய்யப்பட்டு அங்கே பார்க்கவேண்டியதை வெளித் தெரிவித்தன. காட்சிகளின் இடைவேளையின் போது மிருகங்களை பார்க்க கூட்டம் லாயங் களில் மொய்த்தபோது அந்த பட்டினி - கலைஞனை கடக்காமல், கொஞ்சம் நின்று பார்க்காமல் போகமுடியாது. ஒருவேளை அவர்கள் இன்னும் கொஞ்சம் நின்றிருப்பார்கள். ஆனால், அந்த ஒடுக்கமான நடைபாதையில் தாங்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் லாயங்களுக்கு போக என் தாமதப்படுகிறது என்று அறியாமல் பொறுமை இழந்தது. பின்னாலிருந்து முண்டித்தள்ளும் கூட்டம் சாவகாசமாக நின்று அவர்கள் பார்க்க முடியாமல் செய்தது. தான் உயிர் வாழ்வதுக்கே காரணமாக இருப்பது இவர்கள் தன்னை வந்து பார்ப்பதுதான் என்று. அவர்கள் வருகையை ஆவலுடன் அந்த பட்டினி - கலைஞன் எதிர் பார்த்தாலும் அதே சமயம் ஒருவித ஐயம் ஏற்படுவதை தவிர்க்க அவனால் இயலவில்லை. ஆரம்பத்தில் இடைவேளைக்கு காத்திருக்கவே அவனுக்கு முடியவில்லை. மகிழ்ச்சி எதிர்பார்ப்புடன் கூட்டம் வருவதை கவனிப்பான். ஆனால் அதி சீக்கிரமே, அவர்கள் திரும்பத் திரும்ப தவறாமல் லாயங்களைத் தேடித்தான் போகிறார்கள் என்ற உண்மையை உணர்ந்து கொண்டான். இதுயத்தில் அவன் அனுபவம், விடாப்பிடியான தெரிந்து தன்னை ஏமாற்றிக் கொள்ளுதலையும் மீறி அவனுக்கு ஏற்பட்டு விட்டது. கூட்டம் இப்படி தள்ளி இருந்து கருத்துக் கொள்வது கூட அவனுக்கு ரொம்ப பிடித்திருந்தது. ஏனென்றால் அவர்கள் கூண்டை நெருங்கினால் ஓரே கூச்சலுக்குள், சதா மாறிக்கொண்டிருக்கும் சுபாவ கோஷ்டிகளின் பேச்சுகளேபரத்துக்குள் அவன் அமுங்கிப்போய் விடுவான். ஒரு கோஷ்டி அவனை சாவகாசமாக பார்க்க விரும்புவர்கள் அடங்கியது - அவனை புரிந்து கொண்டவர்கள் என்பதால் இல்லை. ஏதோ மன உவப்பு அல்லது வெறும் பிடிவாதத்தால் உந்தப்பட்டவர்கள். (இதெல்லாம் பட்டினி - கலைஞனுக்கு பிடிக்கவே இல்லை) மற்றது, உடனே லாயங்களுக்குப் போக துடிக்கும் கோஷ்டி பெரும் கூட்டம் போய்விட்ட பிறகு ஒருவர் ஒருவராக சிலர் வருவார்கள். இவர்களுக்கோ, விருப்பம் இருந்தால் குறுக்கிட எதுவும் இல்லாததால் லாயங்களுக்கு நாழிகை யாகி விடப்போகிறதே என்று அவசர நடை போட்டுச் செல்வார்கள். அடிக்கடி வராத அதிர்ஷ்ட மாக, அபூர்வமாக ஒரு குடும்பத் தந்தை தன் குழந்தைகளுடன் வந்து பட்டினி - கலைஞனை காட்டி விஷயத்தை விளக்குவார். இதே மாதிரி ஆனால் ஒப்பிட முடியாதபடி இன்னும் சிறப்பான கண்காட்சிகளை தான் பார்த்த நாட்களைப் பற்றி அவர் சொல்வார். ஆனால் இயல்பாக குழந்தைகளுக்கு பள்ளிக் கூடத்திலும் வாழ்க்கையிலும் போதிய விஷய அறிவு ஏற்றப்படாததால் எப்போதும் எதுவும் புரிந்து கொள்ளாமல் இருக்கும். உபவாசம் என்றால் அவர்களுக்கு என்ன தெரியும்? இருந்தா லும் ஊடுருவிப் பார்க்கும் அவர்களது கண் மினுக்கலில் புதிய, அதிக தயை காட்டும் நாட்கள் வர இருப்பதன் சூசனை தெரிந்தது. அந்த மாதிரி சமயங்களில் தன் இடம் லாயங்களுக்கு இவ்வளவு கிட்ட இல்லாமல் இருந்தால் எல்லாம் சரியாக இருந்திருக்கும் என்று பட்டினி கலைஞன் தனக்குள் ஒரு வேளை சொல்லிக்கொள்ளலாம். ஜனங்கள் இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்க இது எளிதாக்கி விட்டது. கொட்டங்களிலிருந்து துர்நாற்றம், இரவில் மிருகங்களின் பதைப்பு, காட்டு மிருகங்களுக்கு கொண்டு போகப்படும் பச்சை இறைச்சிகளை பார்த்தல், உணவு நேரத்தில் மிருகங்களின் கத்தல் இவை எல்லாம் அவனுக்கு எரிச்சல் தந்து சதா மனம் புழுங்கின நிலையில் வைத்து விட்டன. ஆனால் மானேஜ்மெண்டாரிடம் இதுபற்றி புகார் கொடுக்க அவன் முற்படவில்லை. அந்த மிருகங்களை சாக்கிட்டு பார்க்க வரும் பலரில் அவ்வப் போது தனக்காக ஏற்பட்டவர்கள் ஒருவர் இருக்கக்கூடும். அதுக்கு தான் அந்த மிருகங்களுக்கு கடமைப்பட்டவன்தானே. தவிரவும்தான் இருப்பதை அவர்களுக்கு நினைவூட்டினால் திரும்ப கவனித்து லாயங்களுக்குப் போகும் வழியில் தான் ஒரு தடையாக இருப்பதாக நினைத்து விட்டால் வேறு எந்த இடத்துக்கு தான் கடத்தப்படுவான் என்பது யாருக்குத் தெரியும்?

ஒரு சிறு தடைதான், அதுவும் போகப் போக குறுகிக்கொண்டிருந்தது. தற்காலத்தில் ஒரு பட்டினி - கலைஞன் தான் காட்ட விரும்பும் புதுமையை ஜனங்கள் ஒத்துக்கொண்டு வந்தார்கள். இப்படி அவர்கள் கருதி விட்டதே அவன் அழிவைக் கொண்டு வந்துவிட்டது. அவனுக்கு சாத்யமான திறமையுடன் அவன் பட்டினி வி தம் இருந்தாலும் - அவன் அப்படி இருந்தான் - அவனை எதுவும் காப்பாற்ற முடியாது. ஜனங்கள் அவனை கடந்து போய்க்கொண்டிருந்தார்கள். யாருக்காவது உண்ண விரதக் கலை பற்றி விளக்க முயற்சிப்பார்கள்! எவனுக்கு அதில் ஈடுபாடு இல்லையோ அவன் அதை புரிந்துகொள்ளவும் முடியாது. அழகான குறிப்புகள் ஜோடனைகள் எல்லாம் அசிங்கமாகி புரியாதவையாகி விட்டன. அவை கிழிந்தும் போயிருந்தன. அவைகளுக்கு பதில் வேறானவைகளை வைக்க யாருக்கும் தோன்றவில்லை. பட்டினி நாள் கணக்கு குறித்த சின்ன போர்டு. ஆரம்பத்தில் ஞாபகமாக குறிக்கப்பட்டு வந்தது. சில வாரங்களாக கணக்கு மாற்றப்படாமலே இருந்தது. ஏனென்றால் இந்த சின்ன வேலை கூட பணியாட்களுக்கு அலுத்து விட்டது. ஆகவே பட்டினி - கலைஞன் ஒரு காலத்தில் செய்ய ஆசைப்பட்டபடி எவ்வித குறிக்கீடும் இல்லாமல் பட்டினி இருந்துவந்தான். அவன் ஒரு சமயம் முன்னறிவித்திருந்த படி, சிரமம் இல்லாமல் செய்ய முடிந்தது அவனுக்கு. ஆனால் யாரும் நாட்களை கணக்கிடவே இல்லை. யாருக்கும், அந்த பட்டினி - கலைஞனுக்கும்கூட அந்த சாதனை எவ்வளவு மகத்தானது என்பதே தெரியவில்லை. அவன் நெஞ்சு குமைந்தது. ஏதாவதொரு சமயம் ஒரு சோம்பேறி நின்று போர்டில் உள்ள கணக்கைப் பார்த்து பரிகசித்து பித்தலாட்டம் என்று பேசினால் அது அசிரத்தையும் பிறவி அசூயையும் விளைவிக்கும் ஒரு அசட்டுப் புளுகு என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் ஏமாற்றுவது பட்டினி - கலைஞன் இல்லை; அவன் தன் கடமையை கவுரவமாகத்தான் செய்து கொண்டிருந்தான். ஆனால் உலகம்தான் அவனுக்கு உரிய பரிசை தராமல் ஏமாற்றிக் கொண்டிருந்தது

இப்படி இன்னும் பல நாட்கள் போய்விட்டன. ஆனால் அதுக்கும் ஒரு முடிவு வந்தது. ஒருசமயம் மானேஜர்களில் ஒருவர் அதை பார்க்க நேர்ந்தது. நாற்றம் அடிக்கும் வைக்கோலுடன் உள்ள இவ்வளவு நல்ல, உபயோகப்படும் கூண்டு ஏன் உபயோகப்படுத்தப்படாமல் இருக்கிறது என்று பணியாட்களை கேட்டார். யாருக்கும். சொல்லத் தெரியவில்லை. ஒருவர் மட்டும் கணக்.குக் குறிப்பு போர்டின் உதவியால் பட்டினி - கலைஞனை ஞாபகப்படுத்திக் கொண்டு விளக்கினார். கழிகளைக் கொண்டு வைக்கோலை கிளறினார்கள். அடியில் பட்டினி - கலைஞனை கண்டார்கள். 'நீ இன்னுமா உபவாசம் இருக்கிறாய்? என்று மானேஜர் கேட்டார். 'கடவுளே, நீ எப்.போது இதை முடிப்பாய்?!' 'என்னை மன்னிக்க வேண்டும் நீங்கள் எல்லாம்' என்று பட்டினி கலைஞன் ஓதிய குரலில் சொன்னான். நிச்சயமாய்' என்று மானேஜர் சொல்லிவிட்டு பணியாட்களுக்கு பட்டினி - கலைஞனது நிலையை உணர்த்த தன் விரலால் அவன் தலையை சுட் டிக்காட்டிக்கொண்டே 'உன்னை மன்னிக்கிறோம்' என்றார். 'என் உபவாசத்தை நீங்கள் எப்பவும் மதிக்க வேண்டும் என்று நான் விரும்பி ன்' என்றான் பட்டினி - கலைஞன் 'நாங்கள் நிச்சயமாய் மதிக்கிறோமே' என்று மானேஜர் தயைகாட்டிச் சொன்னார். 'ஆனால் நீங்கள் அதை மெச்சக் கூடாது' என்றான் பட்டினி - கலைஞன். 'சரி, நாங்கள் மெச்ச வில்லை. ஏன் மெச்சக். கூடாது' என்று கேட்டார் மானேஜர். 'ஏனென்றால் நான் பட்டினி இருந்துதான் ஆகவேண்டும். என்னால் இல்லாமல் இருக்க முடியாது' என்றான் பட்டினி - கலைஞன். இதை கவனியுங்கள்' என்றார் மானேஜர். ஏன் முடியாது? ஏனென்றால்,' என்று தன் நேர்த்தியான தலையை கொஞ்சம் உயர்த்தி முத்தமிட முயல்வது போல் உதடுகளை குவித்துக்கொண்டு ஒரு வார்த்தையும் விழாமல் போய்விட ஏற்படாமல் மானேஜரின் காதுக்கு நேராகச் சொன்னான்; 'ஏனென்றால் எனக்குப் பிடித்த உணவு எதையும் நான் காண முடியவில்லை. அதை கண்டிருந்தால் - என்னை நம்புங்கள் - நான் பரபரப்பு உண்டாக்கி இருக்க மாட்டேன். உங்களையும் மற்றவர்களைப் போலவும் சாப்பிட்டிருப்பேன்' இவைதான் அவனது கடைசி வார்த்தைகள். ஆனால் அவனது பளீரிடும் கண்களில், பெருமை என்று இனி சொல்ல முடியாது போனாலும் தான் இன்னமும் உபவாசம் இருப்பதான உறுதியான தன்னம்பிக்கை இருந்தது.

சரி, இதெல்லாம் சுத்தப்படுத்துங்கள்' என்றார் மானேஜர். அந்த பட்டினி - கலைஞனை வைக்கோலோடு சேர்த்தே அடக்கம் செய்தார்கள். கூண்டுக்குள் ஒரு இளம் சிறுத்தையை அடைத்தார்கள். இவ்வளவு நாள் பாழாகக் கிடந்த அந்த கூண்டில் இந்த காட்டுமிருகம் நடமாடிக்கொண்டிருப்பதை பார்க்கும் மந்த சுபாவம் உள்ளவருக்கும் கூட கொஞ்சம் உற்சாகமாக இருக்கும். அதுக்கு எதுவுமே குறைச்சல் இல்லை. அட்டியின்றி அது விரும்பான அதே உணவை அதுக்கு கண்காணிப்பவர்கள் கொண்டு கொடுத்தார்கள். தன் சுதந்திரத்தை இழந்து விட்டதைக் கூட அது பொருட்படுத்தினதாகத் தோன்றவில்லை. இந்த தகைமையான உடல், வெடிக்கப்போகும் அளவு ஆரோக்யமானது, தன் சுதந்திரத்தை தன்னைச் சுற்றி சுமந்து கொண்டிருப்பது போல தோன்றியது. (அதன் பற்கள் உள்ள பிரதேசத்தில் எங்கோ தங்கி இருப்பதாகத் தோன்றும் - சுதந்திரம் ) வாழ்வதில் அதுக்கு உள்ள ஆனந்தம் அதன் தொண்டைக்குள்ளிருந்து எவ்வளவு மூர்க்கத்துடன் வெளிவந்தது. அதை பார்த்துக்கொண்டிருப்பவர்களுக்கு அதைக் கேட்டு நிலைத்து நிற்கக் கூட எளிதாக இல்லை. ஆனாலும் இந்த தயக்கத்தை சமாளித்துக்கொண்டார்கள். கூண்டைச் சுற்றி குவிந்தார்கள். தங்களை அங்கிருந்து விடுவித்துக்கொண்டு போகக்கூட அவர்களால் இயலவில்லை.

தமிழாக்கம் : சி. சு. செ.


Friday, October 19, 2018

காஃப்காவின் பட்டினி - கலைஞன் - பேராசிரியர்கள் ரே. பி. வெஸ்ட், ராபர்ட் பூஸ்டர் ஸ்டால்மன்

எழுத்து 32 - 1961

ஆய்வு

காஃப்காவின் இலக்கணை உணர்த்தல்

சென்ற ஏட்டில் வெளியான காஃப்காவின் பட்டினி - கலைஞன் கதையைப் பற்றிய இந்த ஆய்வையும் எழுதியவர்கள் பேராசிரியர்கள் ரே. பி. வெஸ்ட், ராபர்ட் பூஸ்டர் ஸ்டால்மன் இருவரும். அதே நூலிலிருந்து எடுத்தது.

சரியாகச் சொல்வதானால், ஒரு கதையின் இயக்கத்தின் எல்லா விவரக் குறிப்புகளும் அந்த கதை குறிப்பிடும் சரித்திர அல்லது புராண சம்பவங்கள் அல்லது கருத்துக்களின் விவரக்குறிப்புகளுடன் நேரடியாக சம்பந்தப்படுகிறபோதுதான் அது ஓரு 'அலிகரி' இலக்கணக் கதை ஆகும். அலிகரிக்கும் அதாவது இலக்கணைக்கும் ஸிம்பாலிஸத்துக்கும் அதாவது குறியீட்டுப் பிரயோகத்துக்கும், கட்டுக்கதைப் பிரிவில் பின்வருமாறு வேற்றுமை வகுத்துக்கொள்ளலாம். குறியீடுகள், அந்த கதையின் எல்லா முக்கியமான விவரணங்கள் மூலமும் இன்னொரு நிலை நிகழ்ச்சித் தொடர்களை குறிப்புணர்த்த, பொருத்தமாக, ஏற்ப உபயோகப்படுத்தப் படுகிறபோதுதான் ஒரு கதை இலக்கணையானதாக ஆகிறது.

இந்த திட்டமான அர்த்தத்தில் ஒரு பட்டினி - கலைஞன்' ஒரு இலக்கணைக் கதை. காஃப்காவின் வழி , இருந்தாலும், ஜான்பன்யன் முறையிலிருந்து முழுக்க வேறுபட்டது. 'பில்:கிரிம்ஸ் பிராக்ரஸ்' ஸில் ஒவ்வொரு கதாபாத்திரமும் தங்கள் பெயர்களைக் (கிரிஸ்தியன், என்வி இந்த மாதிரியானவை ) கொண்டே தங்கள் குணங்களை வெளித்தெரிவிக்கும். மறைபொருளாக நீதிபோதிக்கும் தன் கதையில், கதையின் ஒவ்வொரு அவயவமும் நேரடியாக பொருள் அதில் தொனிக்க, அந்த கதைக்குள்ளே இந்த கதாபாத்திரங்களை நடமாட வைக்கிறார். மேலும் இந்த பொருள்கள் கதை நெடுக இடைவிடாமல் காணப்படுகின்றன. ஃபெய்த்ஃபுல் எப்பவும் விசுவாசம் உள்ளவனாகவும் என்வி அசூயைக்காரனாகவும்... இப்படியே இருப்பார்கள்.

காஃப்காவின் வழி ரொம்ப மாறுபட்டது. இலக்கணையான படிமங்களை விட அவர் குறியீடுகளைத்தான் கையாளுகிறார். தனது யதார்த்த அல்லது கற்பிதமான விவரணங்களுக்கு அவர் ஒன்றுக்கு மேற்பட்ட பொருள்களை குறித்துக் காட்டுகிறார். அவைகளின் அர்த்தம் ஒரே நிலையாக இருப்பதில்லை. இல்லை, ஒவ்வொரு கருத்துக்கும் ஈடான வைகளைப் போட்டு அவைகளை வேறு வார்த்தை களில் திரும்பச் சொல்லிவிட முடியாது. டி.எச்.லாரன்ஸ் சொல்கிறார்: 'ஒரு இலக்கணையான படிமத்துக்கு ஒரு பொருள் உண்டு. மிஸ்டர். ஃபேஸிங்-: போத் -வேஸ்ஸுக்கு ஒரு அர்த்தம் உண்டு. ஆனால் ஜேனஸ் (இத்தாலிய இருமுகக் கடவுள்) ஒரு குறியீடு. அதன் முழு அர்த்தத்தின் மீது விரல்வைத்து நீங்கள் சிதைப்பதை எதிர்க்கிறேன். காஃப்கா தொடர்ந்து குறியீட்டுப் பிரயோகத்தை கையாளுபவர். அதனால் அவரது படிமங்கள் வெவ்வேறு சமயங்களில் மட்டுமின்றி ஒரே சமயத்திலேயே வெவ்வேறு விஷயங்களை பொருள் உணர்த்துவதை பார்க்கிறோம். குறியீட்டான அர்த்தங்கள் விடாது பின்னிக் கிடக்கின்றன. இலக்கணை வழி அர்த்த தினிசுகள் (வகைகள்) ஒன்றின் மீது மற்றொன்று சாயல் படிந்து இருக்கின்றன. 'பட்டினி - கலைஞன்'னில் உள்ள இலக்கணை உணர்த்தல்களை குறைந்தது மூன்று வெவ்வேறு நிலைகளில் கண்டறிய சாத்யமாகிறது என்பதை நாம் பின்னால் பார்க்கப்போகிறோம். அதன் அம்சங்களில் ஏதாவது ஒன்று திட்டமாகவும் குறிப்பாகவும் இதைத்தான் குறிக்கிறது என்று நாம் சொல்லக் கூடிய சமயம் ஒருபோதும் இருக்காது.

கதை சொல்வதைவிட குறியீடுகள் விஷயத்தில் தான் காஃப்கா ஒரு நேர்மையை கடைபிடிப்பவர். நடைமுறை தர்க்க அறிவுக்குள் அடங்கி இருப்பதை புறக்கணித்துக்கொண்டே நடைமுறை யதார்த்த உணர்வை உண்டாக்குவதில் அவரிடம் ஒரு விநோதமான மேதைத்தன்மை உண்டு. அவருடைய குறியீட்டுப் பொருள்கள் நடைமுறை உலகத்துப் பொருள்களின் இயல்புக்கு இசைந்து இராது. இயற்கையின் நிலையான நியதிகளுக்கு அவை உட்பட்டிராது. அவைகளுக்கு ஒரு விசேஷ காரியம் இருக்கும். ஒரு தனிமையான உலகத்தின் நியதிகளுக்கு உட்பட்டிருப்பவை. பிரமாண்டமானதும் கலப்பானதும் பயனுள்ளதுமான சாதனம் என்று சொல்லத்தக்க ஒரு பெரிய சர்க்கஸ்க்கு தன்னை அமர்த்திக்கொள்கிறான் அந்த பட்டினி கலைஞன். ஆனால் அதுவோ அவன் இருப்பதையே முழுக்க மறக்க வகை செய்துவிடுகிறது. முடிவில் காலியாகத் தோன்றின அவனுடைய கூண்டின் நாற்றம் அடிக்கும் வைக்கோலுக்குள் துளாவி அவன் கண்டெடுக்கப்படுகிறான். இது ஒரு பிரமைத் தோற்ற சர்க்கஸ் என்றே படுகிறது. காஃப்காவின் மற்ற 'மெய்மைகள் போலவே இதுவும் ஒரு கனவு உலகத்துக்குச் சொந்தமான கற்பனைத் தோற்றம். 'பட்டினி - கலைஞன்'னில் பெளதிக , ஜீவவர்க்க சாஸ்திரங்களின் நியதிகள் தகர்க்கப்படுகின்றன. மானிட வாழ்வு நடப்பு விஷயங்கள் திரிக்கப்பட்டிருக்கின்றன. நிகழ்ச்சி விவரங்கள் எல்லாம் எளிதானதாகவும் சர்வசாதாரணமானதாகவும் இருப்பது போல தெரிந்தாலும் நுணுகிய ஆராய்ச்சியில் பிடிகொடாதும் ஒன்றுக்கு மேற்பட்ட பொருள்கள் பொதிந்தும் ஆகி இருக்கின்றன. காஃப்காவில் நடப்பு விஷயங்களை வெறும் நடப்புகள் என்று மட்டும் கருதுவதோ, அல்லது அவைகளது உருவகத் தன்மைகளை அமுக்கிவிடுவதோ அல்லது குறைத்து கணிப்பதோ முடியாத காரியம். 'பட்டினி - கலைஞன்னை ஆய்வு செய்யும் ஆரம்ப நிலையாக கதைக்கு பாடாந்தரம் சொல்வதை தவிர்த்து, தூலப் போக்காக வெறும் கதையை அப்பட்டமாக சொல்லிப் பார்ப்போம்..

தமாஷ் அனுபவிக்கும் பொது ஜனங்களுக்கு வேடிக்கை காட்டலாக நடத்தப்பட்டு, ஒரு காலத் தில் மிகப் பிடித்திருந்த ஒரு நிகழ்ச்சியைப் பற்றிய கதை, வைக்கோல் போட்டிருந்த ஒரு கூண்டுக்குள் இருந்து 'உபவாசம்' என்கிற வித்தையை தொழிலாகக் கொண்டு செய்து காட்டி வந்த ஒரு பட்டினி . கலைஞனின் கண்காட்சி அது. அவன் கூண்டில் உள்ள ஓரே அலங்காரம் ஒரு கடிகாரம் தான். பார்ப்பவர்கள் அவனை ஒரு ஏமாற்றி, சகஜமான சர்க்கஸ் தந்திரம் என்று கருதி, திருட்டுத்தனமாக அவன் பட்டினியை முறித்து ஏமாற்றுவான் என்று எதிர்பார்ப்பார்கள். ஆனால் பட்டினி நோன்புதான் அவன் வாழ்வதுக்கே காரணம். அவன் வாழ்க்கை நோக்கமும் அதுதான். என்ன வலுக்கட்டாயத்திலும்கூட அவன் சாப்பிடவே மாட்டான். அவனுக்கோ அவன் செய்யக்கூடிய எளிய காரியம் உபவாசம்தான். அதைத்தான் அவன் சொல்கிறான், ஆனால் யாரும் அவனை நம்பவில்லை. பொதுஜனங்கள் அவனை நம்பாததால், அவன் காவலுக்கு உள்ளாகிறான். வழக்கமாக மூன்று கசாப்புக்காரர்கள். ஒரு நாற்பது நாள் கெடுவுக்கு மேல் அவன் பட்டினி கிடக்க விடமாட்டார்கள். இரக்க சித்தத்தால் இல்லை. அந்த காலவரைக்குப்பின் ஆதரிக்கமாட்டார்கள் அவன் உபவாசத்தை. அவன் காவலாளிகள் உணவு ஆசை காட்டுவார்கள் அவனுக்கு. சில சமயம் சரியாக நடத்தமாட்டார்கள்; ஆனால் அவனைச் சாக்கிட்டு அவர்களுக்கு அளிக்கப்பட்ட உணவை ஜமாய்ப்பார்கள் ! அவன் சாதனையை ஒரு மகத்தான பொதுஜன விழாவாக கொண்டாடுவார்கள். இப்படி அவன் உலகத்தால் கவுரவிக்கப் படுவான். ஆனால் கூண்டிலிருந்து வெளியேற்றப் பட்டதும் - பட்டினியால் இல்லை - இன்னும் கணக்கில்லாத நாட்கள் பட்டினியாக இருந்து எக்காலத்துக்கும் தலைசிறந்த பட்டினி - கலைஞன்' என்று ஆகமுடியாமல் அந்த உபவாச கவுரவம் தனக்கு கிடைக்க விடாமல் ஏமாற்றி விட்டார்களே என்ற கோபத்தால் சோர்ந்து விழுந்துவிடுவான். சாகும் அளவுக்கு அவன் இளைத்துப் போயிருந்தாலும் கூட அவன் சீக்கிரமே நலம் அடைந்து உடலைத் தேற்றிக் கொள்ளும் ஒரு சிறு அவகாசத்துக்குப் பிறகு திரும்பத்திரும்ப இதைச் செய்வான்.

இப்போதெல்லாம் அவனை கைவிட்டுவிட்டு வேறு வேடிக்கைகளை பார்க்கிறார்கள். சர்க்கஸ் கூடாரத்தில் உள்ள அவன் கூண்டை ஜனங்கள் பார்த்தாலும் மிருகங்கள் உள்ள லாயங்களுக்கு பக்கத்தில் அது இருந்த காரணத்தால் தான் . பார்க்க வந்தவர்கள் மிருகங்களைப் பார்த்து களிக்கிறார்கள். எல்லாம் மாறிவிட்டது. அங்கே கடிகாரம் கிடையாது. அவன் வித்தையின் நோக்கத்தை ஒரு காலத்தில் குறித்து தெரிவித்த சின்னங்கள் தகவல் சிதைந்து போய்விட்டன. எத்தனை பட்டினி நாள் சாதனை என்ற கணக்கு இப்பொதெல்லாம் வைக்கப்படுகிறதில்லை. காவலாளிகளும் கிடையாது. ஆகவே பட்டினி - கலைஞன் ஒரு காலத்தில் தான் செய்ய ஆசைப்பட்டபடி எவ்வித குறிக்கீடும் இல்லாமல் பட்டினி இருந்து வந்தான் .. அவன் ஒரு சமயம் முன்னறிவித்திருந்தபடி , சிரமம் இல்லாமல் செய்ய முடிந்தது அவனுக்கு. ஆனால் யாரும் நாட்களை கணக்கிடவே இல்லை. யாருக்கும் அந்த பட்டினி - கலைஞனுக்கும் கூட அந்த சாதனை எவ்வளவு மகத்தானது என்பதே தெரியவில்லை. அவன் நெஞ்சு குமைந்தது. இவ்விதமாக உலகம் அவன் பரிசை தட்டிப் பறித்து விட்டது. சிலாகிப்புக்கு பதில் அசிரத்தை ஏற்பட்டுவிட்டது. இதனால் அவன் இறந்து விடுகிறான். அந்த கூண்டு வைக்கோலோடேயே அவன் புதைக்கப்படுகிறான். அவன் இடத்தில் ஒரு சிறுத்தை அடைக்கப்படுகிறது. அது சுபாவமாக ஆசைப்படும் உணவை ஆத்திரத்தோடு தின்கிறது. ஜனங்கள் கூண்டைச் சுற்றி நெருக்கியடிக்கிறார்கள்.

இந்த அப்பட்டமான கதை நடைப்பு விவரத் தகவல்கள் மட்டும் பூரணமானதாகவோ போதுமானதாகவோ இல்லை என்பதும் இவைகளை இந்த அப்பட்டமான அல்லது சொற்பொருள் தரத்திலேயே நாம் ஏற்றுக்கொள்வதுடன் இருந்து விடுவது முடியாத காரியம். அவை ஒன்றோடொன்று போட்டியிட்டுக் கொண்டு தம் சொற்பொருள் கருத்துக்களையும் தாண்டி அவை குறிக்கும் இலக்கணை விசேஷ நிலைக்குள் நம்மை திணித்து விடுகின்றன. அந்த கடிகாரம் ஒரு சாதாரண கடிகாரம் தான்; அது வேறு எதோவொன்றுக்கு பதிலாகவும் இடம் பெற்றிருக்கவில்லை. ஆனாலும் அந்த விசித்திர கடிகாரத்துக்கு அந்த சொல்லுக்கு உரிய அர்த்தத்தில் எந்த குணமும் இருப்பதாக சொல்ல முடியாது. ஒரு நிஜ கடிகாரம் மாதிரி மணி நேரத்தை அடித்துக் காட்டுகிறதே தவிர அது 'டிக்' அடிப்பதாக தெரியவில்லை. பட்டினி - கலைஞனின் ஆயுள் கடிகாரத்தால் அளவிடப்படாதது. அவன் காலத்துக்கு வெளியே ஜீவிப்பவன். எந்த சாதாரண மனிதனும் தாங்க முடியாத பட்டினி முற்றுகைகளையும் அவன் அவ்வப்போது வென்று பிறகு ஜீவித்து வருகிறான். (வாஸ்தவமாக அந்த கலைஞனது உபவாச நாட்களை கணக்கிட ஒரு காலண்டர்தான் முறையான சாதனமாக இருக்கக்கூடியது) மற்ற நடப்புத் தகவல்களை பார்க்கப் போனாலோ அவையும் இதேபோல குறியீட்டான விசேஷப் பொருள்களை எண்ணம் எழுப்புகின்றன. காஃப்காவின் நடப்புத்தகவல்களை ஒரு தனிப்பட்ட தனக்குள்ளேயே ஒன்றோடொன்று பொருந்துவதுடன் நின்று விடும் ஒரு முறைவழி அர்த்தத்துக்குள் குறைத்து விடுவது முடியாத காரியம். அவரது அர்த்தங்கள் ஓரே சமயத்தில் பல தர நிலைகளில் வெளிவருகின்றன. அதுதான் சங்கடம். இந்த தர நிலைகள் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டவை. முழுக்க விரித்துரை கூறுவதும் சாத்யமே இல்லை.

காஃப்கா குறிக்கும் அர்த்தங்களை ஒரேயொரு சிந்தனை வட்டத்துக்குள்ளேயே கட்டுப்படுத்தி வைக்க முடியாது. கூண்டுக்குள் உள்ள பட்டினி - கலைஞனது சங்கட நிலமை இன்றைய உலகத்தில் ஒரு கலைஞனது சங்கட நிலையை சுட்டுவதாக இருக்கிறது. அவன் இருந்து வாழும் ஒரு சமூகத்திலிருந்து அவன் சம்பந்தம் நீங்கி இருப்பது. இந்த பார்வையில் கதையை பார்த்தால் பட்டினி - கலைஞன் ஒரு சமூகவியல் பார்வை விழுந்த இலக்கணக் கதை. ஆனால் இந்த பட்டினி --கலைஞன் ஒரு யோகி , மதவாதி அல்லது மதகுருவை சுட்டிக் காட்டுபவனாகவும் நாம் அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். இந்த வித நோக்குப்படி கதை சரித்திரப் பார்வை வழியே மதத்தின் அவகேடான நிலையை இலக்கணை குறித்துக் காட்டுகிறது எனலாம். படக்கூடிய மூன்றாவது பாடாந்தரம் நமக்கு ஒரு வேதாந்த இலக்கணைப் பொருளை பிதுக்கிக் காட்டுகிறது. அந்த பட்டினி - கலைஞன் ஆத்மாவுக்கு, ஆன்மிக ஜீவனாக இருக்கும் ஒரு மனிதனுக்கு - குறியீடாக இருக்கிறான். அதுக்கு எதிரிடையாக அந்த சிறுத்தை தூலப் பொருளுக்கு, மனிதன் மிருக இயல்புக்கு குறியீடாக இருக்கிறது. எனவே இந்த கதையை வேதாந்த நோக்கில் பார்த்தால் ஆன்மீகத்துக்கும் ஐடத்துவத்துக்கும் உள்ள பாகுபாடு. மதக்கண்ணோட்டத்தில் தெய்வீகத்துக்கும் மனிதத்துவத்துக்கும், அதாவது ஆத்மாவுக்கும் உடலுக்கும். சமூகவியல் பார்வையின் படி கலைஞனுக்கும் அவன் சமுகத்துக்கும் உள்ள பிரிவினை காஃப்காவின் பூர்வாங்க கட்டிட பிளான் - இந்த மறைபொருள் நீதிக்கதை அமைப்பை எதன் மீது கட்டி இருக்கிறாரோ அந்த கருத்துக்களின் நிலைக்கள் 'பிளான் - இந்த மூன்று வெவ்வேறு தத்துவ சிந்தனை முறைகளைக் கொண்டு அடையாளமிடப்பட்டிருக்கிறது.

முதலில் கதையை ஒரு கலைஞனது இக்கட்டான நிலை என்ற இலக்கணை ரீதியாக பார்ப்போம். ஜனத்திரளுக்கு எதிரிடையாக பேதம் காட்டின் ஒரு நிலையில் வைக்கப்பட்டிருக்கிறான் அவன். அவனது உபவாசக் கண்காட்சியை வந்து பார்ப்பவர்களால் அவனது கலையை அறிந்துகொள்ள இயலவில்லை. 'யாருக்காவது உண்ணாவிரதக் கலை பற்றி விளக்க முயற்சிப்பார்கள்! எவனுக்கு அதில் ஈடுபாடு இல்லையோ அவன் அதை புரிந்து கொள்ளவும் முடியாது. தன் தர்சனப் பார்வை நிமித்தமாக கலைஞன் தன்னை பட்டினியால் வருத்திக் கொள்கிறான். தன் தூரப்பார்வையிலே அவனுக்கு நம்பிக்கை; தன் மீதும் அழகுணச்சி யின் நேர்மையிலும் நம்பிக்கை. விவேகிகள் மட்டும் புரிந்து கொண்ட மாதிரி, 'பட்டினி - கலைஞன் என்ன நேர்ந்தாலும், வலுக்கட்டாயப்படுத்தினாலும் கூட, பட்டினி நோம்பு நாட்களில் எந்த ஆகாரமும் எடுத்துக்கொள்ள மாட்டான். கலைஞன் என்ற அவனுக்கு உள்ள அந்தஸ்து, அத்தகைய காரியத்தை அவன் செய்ய விடாது. அவனுடைய தூரதிருஷ்டி, அது ஒன்றே தான் அவனை போஷிக்கிறது. வேறு யாரும் இருக்க முடியாத ஒரு பட்டினி நோன்பு அந்த கலைஞன் இருக்கலாம் தான். எல்லோரும் கலைஞர்களாக இருக்கிறதில்லையே. 'வயது அதிகரிப்பினால் வித்தைத் தரம் குறையாத இந்த கலையின் தனித் தன்மை ' யைக் கொண்டு, கலைப்படைப்புகளை படைப்பதுக்கான எல்லையற்ற தன் திறமை பற்றி அவன் சொல்லிக் கொள்வதை நாம் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் கலைஞனைப் பற்றியும் அவனுடைய கலையைப் பற்றியும் மனம் இசைந்து அறிந்து கொள்ளும் சக்தி இல்லாதவர்களாக அவனுடைய பொது ஜனங்கள் இருந்துவிட்டால், அவனிடம் அவர்களுக்கு நம்பிக்கையும் இல்லாது போய்விட்டால் எப்படி அவன் இந்த நம்பிக்கையை தனக்குள்ளே பிடித்து வைத்துக் கொண்டிருக்க முடியும்? அவர்கள் நம்பிக்கையில்லாதவர்களாக இருந்ததால் தான் கலைஞன் ஒரு கூண்டுக்குள் இருக்கிறான். (கூண்டு அவனுடைய பிரிந்து வேறான வாழ்க்கையை குறியீட்டால் தெரிய விக்கிறது.) சமூகமும் கலைஞனும் - ஒன்றை மற்றொன்று நம்புகிறதில்லை. ஆகவே கலைஞன் முடிவில் தனக்குள்ளேயே நம்பிக்கை இல்லாதவனாக ஆகிவிடுகிறான். அவன் பிரிந்து வேறாகி வாழ்ந்து இருக்க இயலவில்லை.

பட்டினி - கலைஞன் ஏன் இளைத்துப் போனான் என்றால் அவனுக்குள்ளேயே ஏற்பட்ட பொருந்தாமைதான். அது ஆத்மாவுக்கும் சரீரத்தும் உள்ள சேர்க்கைத் தவிர்ப்பின் விளைவுதான்; அவனுக்கும் சமூகத்தும் இடையே ஏற்பட்ட இசைவுக்கேடின் பலன் தான். யதார்த்த உலகப் போக்கை அவன் மறுத்தது தான் அவனை அரிக்கும் சந்தேகத்துக்கும் சதா மனம் ஒடிந்த நிலைக்கும் மூலகாரணம். அவன் வாழ்க்கையை நிராகரிக்கிறான். ஜனசமூகம் அவனை நிராகரிக்கிறது. கலைஞனது மெலிந்த உடலைப் பார்க்கப் பிடிக்காமல் சிறுத்தையின் ஆரோக்ய உடலைக் கண்டு ரசிக்கிறது. வாழ்க்கையை ஏற்று அங்கீகரிக்க மறுத்து விடுகிறார்கள். கூண்டுக்குள் உள்ள இந்த இரண்டும், சுத்த ஆன்மீகமானதும் தூயமிருக இயல்பானதும், மனிதனது இரட்டை இயல்பையே தான் குறித்துக் காட்டுகின்றன. கூண்டுக்கு வெளியே உள்ளவர்கள் - அவர்களோடு வித்தியாசப்படுத்தித் தானே அவன் காட்டப்படுகிறான் - அந்த சிறுத்தை விரும்புகிற அதே உணவைத்தான் இச்சிக்கிறார்கள். அந்த மிருகத்தைப் போலவே அவர்களுக்கும் தங்கள் தொண்டை, வயிற்றுக்கான பிரச்னைகளிலே மகிழ்ச்சி. இந்த மனிதர்களும் மிருகங்களும் இந்திரிய சம்பந்தமான ஆதிக்கத்தின் குறியீடுகளாக இருக்கிறவை. ஒரே மாமிச உருவம்; பட்டினி - கலைஞனோ சதையே இல்லாதவன். ஒன்றில் சுத்த ஜடப் பொருளும் (மாட்டர்) மற்றதில் சுத்த ஆத்மாவும் இருக்கின்றன. ஆனால் பட்டினி - கலைஞன் ஆத்மாவின் தெய்வீகத் தூய்மையின் காரணகர்த்தாவாக இருப்பதில் வெற்றி பெறவில்லை. நமது தூல உடலின் வேட்கைகள் திரும்பத்திரும்ப நமக்குள் கிளர்த்தும் அரிக்கிற அதிருப்திகளிலிருந்து விடுபட்டவனாக வெளிக்குத் தோன்றினாலும், அவன் உடலின் , ஜடப் பொருளின் (மாட்டர் தான் வாழும் உலகத்தின் தேவைப்பாடுகளிலிருந்து முழுக்க விடுபட்டவனாக இல்லை. சுதாவான தீய சமூக உலகத்தை மறுக்கும் அதே சமயத்தில் அவன் அந்த பொது ஜனங்களிடமிருந்தே தன் உபவாசத்துக்கு பாராட்டை எதிர்பார்க்கிறான். கூட்டம் தன் கூண்டைச் சுற்றி கூட வேண்டும் என்று விரும்புகிறான். தான் உயிர் வாழ்வதுக்கே காரணமாக இருப்பது இவர்கள் தன்னை வந்து பார்ப்பதுதான் என்று (ஆவலுடன் லாயங்களுக்கு அவர்கள் போகும் வழியில்) எதிர்பார்த்தாலும், அதே சமயம் ஒருவித ஐயம் ஏற்படுவதை தவிர்க்க அவனால் இயலவில்லை. எவன் அவசரப்படுகிறானோ அவன், அதே சமயம் தன் உபவாசத்தை நிதானித்து திருப்தியடையும் ஒரு பார்வையாளனாக இருக்க முடியாது என்கிற உண்மையை அவன் உணர்கிறான் - தூய ஆன்மிக வாழ்வு மனிதனுக்கு சாத்தியம் இல்லை என்பதை அறிகிறான். ஒரு கலைஞனாகவோ, ஞானியாகவோ அவனுக்கு உளையும் திருப்திப்படுத்தாத, ஒரு வேட்கை அடித்தளத்தில் தனது  தவறாக பொருந்தின, அதனாலேயே முழுமை அடையாத ஆத்மாவின் சைகை என்பதை பார்க்கிறான்.

யதார்த்தத்திலிருந்து முழுக்க வேறுபட்டு நிற்பது ஆன்மிக மரணம்தான். மனிதனது இயல்பு பற்றிய ஒரு இலக்கணைப் பொருள் கொண்ட கதை என்ற அளவில் இந்த கருத்தைதான் 'பட்டினி - கலைஞன் திரட்டிச் சொல்கிறது. மனிதன் 'ஜடப் பொருள் ஆத்மா என்பதெல்லாம் என்ன? இந்த வேதாந்த பிரச்னையின் ஒருவித விமர்சன பரிசீலனையாக இந்த கதையை கொள்ளலாம் - ஆத்மாவும் ஜடப் பொருளும் ஒன்றை நிறைவிக்க மற்றது தேவை. மரண சமயத்தில் பட்டினி - கலைஞன் ஒரு கலைஞனாகவோ படைப்பாளியாகவோ தோற்று விட்டதை புரிந்து கொள்கிறான். இந்த தளர்ந்து போன கலைஞனுக்கு மீட்சிக்கு வழியே கிடையாது. ஏனென்றால் நமது இன்றைய உலகில், ஆத்மா இல்லை , ஜடப்பொருள்தான் ஏற்கப்பட்டிருக்கிறது. இன்று ஆத்மாவை வென்று விட்டது ஜடப்பொருள் என்ற மெய்ம்மை சாகும் பட்டினி கலஞனால் அவன் தன் ரகசியத்தை வெளியிடுகிறபோது தெரிய வருகிறது. தனக்குப் பிடித்த உணவை காண முடியாததால் தான் உபவாசம் இருக்க வேண்டி இருந்தது என்பதை ஒத்துக் கொள்கிறான் அவன். 'பாருங்கள், உபவாசம் இருப்பது என் விதி. ''அதை-- எனக்குப் பிடித்த உணவை நான் கண்டிருந்தால் - என்னை நம்புங்கள் - நான் பரபரப்பு உண்டாக்கி இருக்கமாட்டேன். உங்களையும் மற்றவர்களையும் போல் சாப்பிட்டிருப்பேன்' இவைதான் அவனது கடைசி வார்த்தைகள். ஆனால் அவனது பளீரிடும் கண்களில் பெருமை என்று இனி சொல்ல முடியாது போனாலும், தான் இன்னமும் உபவாசம் இருப்பதான உறுதியான தன்னம்பிக்கை இருந்தது. அவனுடைய புதிர்நிலைமைக்கு தெளிவிப்பு இதோ . ஜனக்கும்பலின் தொடர்பு அறுந்து தன் படைப்புக் காரியத்தில் (உபவாசத்தில்) ஈடுபடும் கலைஞன் தினம் செத்து தினம் மறுபிறப்பு எடுக்க வேண்டி இருக்கிறது. இது பிராணத் தியாகம்தான்; ஆனால் எதுக்காக? ஒரு அழகு அல்லது ஆன்மீக நோக்கில் ஈடுபாடு, அதுவே ஓரு முடிவாக இருந்துவிட முடியாது. எப்படி முழுமுற்றான ஆன்மிகம் சாத்தியம் இல்லையோ கலப்பற்ற படைப்புத் தன்மையும் சாத்தியம் இல்லை. படைப்புக் கற்பனை நடப்பை உணவாகக் கொண்டாக வேண்டும். ஏனென்றால் கலையோ ஒரு யதார்த்த அடிப்படைப் பார்வை. ஒரு வேதாந்த உபவாசக்காரனைப் போலவே கலைஞனும் இந்த லெளகீக உலகத்தில் வாழ்ந்தே ஆகவேண்டும். வாழ்க்கையின் லெளகீக நிலைமைகள் கலைக்குத் தேவை. இந்த நிலைமைகள் தான் அதை போஷிக்கின்றன. கலைக்கும் அதன் ஊற்றுக்கும் மூல விஷயம் வாழ்க்கைதான்.

பட்டினி - கலைஞனின் கூண்டில் உள்ள கடிகாரம்தான் கலைஞனை வென்று விடுகிறது. நமது தற்போதைய நடப்பான காலத்தின் தொடர்ந்த போக்கை மறுப்பவனையே வெற்றி கொள்வது காலம் தான். தன் படைப்புச் செயலின் அல்லது பார்வையின் அழிவின்மையில் கலைஞனுக்கு உள்ள திடநம்பிக்கையை பரிகசிப்பது கூண்டில் உள்ள கடிகாரம் ; தன் கலை சிரஞ்சீவித் தன்மைக்கான ஒரு யுக்திக் காரியம் என்ற அவன் நம்பிக்கையை பரிகசிப்பது. காஃப்காவின் பட்டினி - கலைஞனின் சோக முடிவு அவன் இறந்து விடுகிறான் என்பதில் இல்லை. வாழ்க்கைக்குள் சாக அவன் தவறிவிட்டவன் என்பது தான். அவன் சாகும் போது தன் வாழ்க்கை முழுவதும் யாரை நிராகரித்தானோ அவர்களிடமிருந்தே அவன் அங்கீகாரம் எதிர்பார்க்கிறான். 'நீங்கள் என் உபவாசத்தை மெச்ச வேண்டும் என்றே எப்போதும் நான் விரும்பினேன்' என்றான் பட்டினி - கலைஞன். ஆன்மீகம் ஜடப் பொருளையும், ஆத்மா உடலையும், கலைஞன் வாழ்க்கையையும் முழுக்க முழுக்க தன் ஆதிபத்தியத்துக்குள் கொணர முடியாது என்பது அவன் ஒப்புக்கொண்டது. கதை நெடுக ஆசிரியர் இன்றைய நமது நாகரிகத்திடையே நமது பட்டினி - கலைஞர்களது மறைவு, சீரழிவு பற்றி துக்கப்படுகிறார் என்றாலும் கதை முழுக்க சுய நிறைவு பெற்ற பட்டினி - கலைஞனின் முயற்சிக்கு எதிராகவே நியாயம் நிறை உயர்த்திக் காட்டப்பட்டிருக்கிறது. அவனுடைய கடைசி வார்த்தைகளில் கலைஞன் வாழ்க்கையோடும் தான் உட்பட்டு வாழும் ஒரு நாகரிகத்துடனும், நடப்பு உலகத்துடனும் ஒரு ராஜிக்கு வரவேண்டும் என்ற ஒப்புக்கொள்ளுதல் இருக்கிறது. எல்லோரும் என்னை மன்னியுங்கள்' என்று ஏதோ ஒரு புரோகிதர் முன் பாவமன்னிப்பு கேட்பது போல் சர்க்கஸ் மானேஜரிடம் காதோடு சொல்கிறான். அவர்களும் மன்னித்து விடுகிறார்கள். இயற்கைக்கு எதிராக அவனுடைய அபசாரத்தை அவர்கள் மன்னிக்கிறார்கள்.

வேதாந்த, அழகு அநுபவ நோக்கு அர்த்த நிலைகளில் இலக்கணை ரீதியாக காஃப்காவின் கதைத் தகவல்களுக்கு பொருள் எடுத்துக்காட்ட முடிவது போலவே மதம் சம்பந்தமான இலக்கணை உணர்த்தலாகவும் நடப்பு சம்பவங்களின் பல்வேறு பொருள்கள் சாயல் ஏறி இருக்கின்றன. நமது 'ரினே ஸான்ஸ்'க்குப் பிந்தின கால உலகம் தத்துவ விசாரகன் , கலைஞன், யோகி இவர்களை நிராகரித்து விட்டது. ஒரு யோகி - உபவாசக்காரனாக பட்டினி - கலைஞன் இறந்து விட்டான். அவனை மதகுரு அல்லது கலைஞன் என்று எப்படி குறிப்பிட்டாலும் சரி, 'வேடிக்கை விரும்பும் ஜனக்கும்பலால் அவன் நிராகரிக்கப்பட்டு பதிலாக வேறு வேடிக்கைகள் ஏற்படுத்தப்பட்டு விட்டன. உதாரணத்துக்கு உயிருள்ள ஒரு சிறுத்தைக் காட்சி. முன்காலத்தில் அது வேறுவிதமாக இருந்தது. மத்திய காலத்திலும், ரினேஸான்ஸ் நாட்களிலும் உலகத்தால் கவுரவிக்கப்பட்டு அவன் புகழுடன் வாழ்ந்தான். அப்போது அவனுக்கு போஷகர்கள் இருந்தார்கள். (கலை ஞனது போஷகர் காட்சி நிர்வாகி) அவனுக்கு விமர்சகர்கள் உண்டு. அவனது படைப்புச் செயலை நம் பாத பொதுஜனங்களிடமிருந்து பாதுகாத்து அவனுக்கு காவல் இருந்த மூன்று கசாப்புக்காரர்கள் உண்டு. அவனுக்கு சரித்திராசிரியர்கள் உண்டு. அவனுடைய படைப்புச் செய்கையை பதிவு செய்த அல்லது அசாத்ய வித்தை விவரங்களை கணக்கிட்ட பரிவாரங்கள் உண்டு. அந்த காலத்தில் வாழ்க்கையை அவன் போலி செய்து காட்டின சாதனைக்காக அவனை மெச்சவாவது செய்தார்கள். கூண்டுக்குள் அவன் சிறுத்தை மாதிரி நடந்து கொண்டான். மரண வெறிப்புடன் கருப்பு டிராயர் அணிந்து விலா எலும்புகள் தூக்கித் துருத்தித் தெரிய சில சமயம் விநயமாக தலை அசைத்தும் வலிந்த புன்னகையுடன் கேள்விகளுக்கு பதில் சொல்லியும் அவர்கள் தன் உடல் மெலிவை உணரும்படி செய்ய கைகளை கிராதிகளுக்கு வெளியே நீட்டிக்கொண்டும் ... யாரையும் பார்க்காமல் கிட்டத்தட்ட கண்ணை மூடிக் கொண்டு தன் முன் நேரெதிரே பார்த்துக் கொண்டும்......... ஆனால் நிஜவாழ்க்கையை எவ்வளவு மோசமாக போலி செய்து காட்டினான் அவன்! அந்த நாட் களில் அவன் கொண்டாடப்பட்டான். (பாசாங்கு இல்லாமலில்லை என்பது இருக்கட்டும்) நிர்ணயிக்கப் பட்ட பட்டினி நாட்களில் மனச்சாட்சிக்கு ஒத்த முறையில் நடத்தப்பட்ட சடங்குகளுடன் கவுரவிக்கப்பட்டான். ஒவ்வொருவரும் அவன் ஆராதனைக்கு தினமும் விஜயம் செய்தார்கள். வழக்கமான சந்தாதாரர்கள் தேவாலய ஆசனங்களில் போல 'நாள் முழுக்க அந்த சின்ன கிராதியிட்ட கூண்டின் முன்பாக' உட்கார்ந்திருந்தார்கள். ஒவ்வொருவரும் அவனுடைய பரிசுத்த உபவாசத்தை வியப்பது போல் பாவனை செய்தார்கள். உண்மையில் தொழ வந்த ஒருவனுக்கும் நம்பிக்கை கிடையாது, இருந்தாலும் அவனிடம் காட்டிய இந்த நம்பிக்கை ஏய்ப்புக்கும் மீறி அவன் இந்த பாவனை நம்பிக்கைக்காரர்களிடம் திரும்பத்திரும்ப சிலுவையில் அறைபட அவன் தன்னை உட்படுத்திக் கொண்டான். தன் தெய்வீக லட்சியத்துக்காக உயிர்த்தியாகம் செய்து கொண்டவன் அவன். ஜனக் கும்பல் அப்படி செய்வதுதான் நாகரீகம் என்பதால் அவனுடைய சின்ன கிராதியிட்ட கூண்டைப் பார்க்க விஜயம் செய்தார்கள். ஒரு பாவமன்னிப்பு கோரி குரு பீடத்துக்கு முன் போவது போல வந்தார்கள். ஆனால் ஜனக்கும்பலுக்கு நம்பிக்கை என்றால் என்ன என்றே தெரிய வராத காரணத்தால், ஒப்புக்கொள்ளுவதுக்கு ஒரு பாபமும் இல்லை. பட்டினி - மதகுரு எந்த பாப ஒப்புக்கொள்ளுதலையும் கேட்கிறதில்லை. (எதிர் விபரீதமாக, சாகப்போகும் அவன் தான் பாவ ஒப்புக்கொள்ளுதல் செய்கிறான். சுருக்கமாக - அவனது வழிபாட்டுக்கார ஒரு சில கோவில் பணியாட்களைத் தவிர மனிதவர்க்கம் முழுவதுமே, மனிதனுக்காக பல தடவை உயிர்நீத்த இந்த யேசுகிருஸ்துவிடம் நம்பிக்கை வைக்கவில்லை. அவன் இறக்கவும் இந்த அவநம்பிக்கைக்காரர்கள் அவன் மரண நிகழ்ச்சியை எப்படி தங்களுக்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள் பாருங்கள். கன்னிமேரி தன் மகனுக்காக துக்கிக்கும் சோக நிகழ்ச்சி மாதிரி ஒரு பகடி நிகழ்ச்சி வர்ணனை இதோ :

ஆனால் இந்த சமயத்தில் எப்பவும் நடப்பது நடந்தது. காட்சி நிர்வாகி வருவார். மவுனமாக; ஏனென்றால் வாத்ய இசை பேசவிடாமல் செய்துவிடும். அந்த பட்டினி - கலைனுக்கு மேலாக கையை உயர்த்தி, வைக்கோல்மீது இருந்த அந்த பரிதாபகர பிராணத் தியாகியை பார்க்கும்படி தேவலோகத்தையே அழைப்பது போல ஏதோ பாவனை செய்வார். அந்த பட்டினி - கலைஞன் உயிர்த் தியாகிதான், நிச்சயமாய். ஆனால் வேறு ஒரு அர்த்தத்தில் . பிறகு அவர் பட்டினி - கலைஞனின் ஒல்லியான இடுப்பை, எவ்வளவு எளிதில் முறியத்தக்க பொருளை தான் கையாள வேண்டி இருக்கிறது என்பதை அதீதமான எச்சரிக்கை எடுத்துக் கொள்வதன் மூலம் வெளித்தெரிய முயற்சிப்பவராக, பிடிப்பார் . பிறகு அவனை மறைவாக கொஞ்சம் ஆட்டிக் கொடுத்து அவன் கால்கள் லேசாக தள்ளாட அவன் உடல் வசமில்லாமல் தடுமாறச் செய்து அவனை அந்த பெண்களிடம் ஒப்பிப்பார். இதுக்குள் அவர்கள் முகம் வெளிறிப் போய் இருப்பார்கள்.''

அவன் உயிர்த் தியாகத்தைக் கண்டு இவ்வளவு அளவுக்கு மீறி மனம் உருகும் இந்த பெண்கள் அறிவு இல்லாமல் கொண்ட ஒரு அனுதாபத்துக்கு குறிப்புணர்த்தலாக இருப்பவர்கள். அறிவு கலந்து வராத ஒரு அனுதாபம், வெறும், தனக்காக மனம் உருகிக் கொள்ளும் காரியம் ஆகும். பெண்களில் ஒருத்தி விம்முகிறாள். அவனுக்காக இல்லை. அவனைத் தொட ஏற்பட்டுவிட்டதே என்ற அவமானத்தால் கண்ணீ ர் விடுகிறாள்.

''அவன் உடலின் பளு முழுவதும், அவன் லேசாக இருந்தாலும், பெண்களின் ஒருத்தி மீதே விழுந்தது. அவள் மூச்சுத்தடுமாறி, உதவியை எதிர்பார்த்து மன்றாடுபவளாக - சுற்று - முற்றும் பார்த்து (தனக்கு கிடைத்த இந்த கவுரவ பதவியை அவள் இப்படி சித்தரித்துப் பார்க்கவில்லை.) முதலில் அந்த பட்டினி கலைஞனுடன் ஒட்டாமல் இருக்க தன் கழுத்தை முடிந்த மட்டுக்கு தள்ளிவைத்துக் கொண்டாள். பிறகு இதனால் எதுவும் பயன் இல்லாது போகவே அவளது அதிர்ஷ்டக்கார கூட்டாளி எந்தவித உதவியும் தராது போகவே, தன் நடுங்கும் கையில் வெறும் எலும்புக் கட்டாக் இருந்த அந்த பட்டின - கலைஞன் கையை சுமந்து கொண்டு போவதோடு நின்று விட்டாள். சபையோரது மகிழ்ச்சி ஆரவாரம் தொடர அவள் கண்ணீர் விட்டாள்.

இந்த இரண்டு மேரிகளும் நடிப்பது ஒரு பரிகாச துக்க வெளியீடு.


எழுத்து

Wednesday, October 03, 2018

மெளனியின் மௌனம் கலைகிறது - பேட்டி கண்டவர் : துர்வாஸ ஜே. வி. நாதன்

 mvv

மௌனி அவர்களை பேட்டி கண்டவர் : துர்வாஸ ஜே. வி. நாதன்

மறுபதிப்பு

கணையாழி

டிசம்பர்-1991


மெளனியின் மௌனம் கலைகிறது

சுறுசுறுப்பு நிறைந்த, 68 வயது இளைஞரான மெளனியைச் சமீபத்தில் சிதம்பரத்தில், அவர் இல்லத்தில் சந்தித்தேன். எழுத்துக்களைப் போலவே அவருடைய பேச்சும் ஒரு உன்னதமான அனுபவமாக மிளிர்கிறது. "உங்களுக்காக நான் பேசவில்லை. என்னையே நான் clarify பண்ணிக்கிறேன்" என்று கூறிக்கொண்டு அவர் பேசுகையில்... எனக்குப் பிரமிப்புத்தான்.

படைப்பவனுக்கும் (கலைஞன்) அவனது படைப்புக்கும் உள்ள சம்பந்தம் பற்றி மெளனி கூறினார் : ஒருவன் தன் பிள்ளை கலெக்டராகப் போக வேண்டும் என்று நினைத்து பிள்ளை பெற்றெடுக்கலாம். அவன் வளர்ந்த பின் ஜெயிலில் இருக்கலாம். தகப்பன் எவ்வளவு தூரம் தன் எண்ணம் ஈடேறாததைக் குறித்து நொந்து கொள்ள முடியும், எந்த விதத்தில் கொள்ள வேண்டும்: பிறந்த பிள்ளை தனி object. தனி உயிர் பெற்றது. அது நன்றாக இருக்குமானால் படைப்பாளி தன் மார்பை எப்படி பெருமிதத்துடன் உயர்த்திக் கொள்ள வேண்டும்! அல்லது ஆனந்தவிகடன், குமுதம் போன்ற பத்திரிகைகளுக்கு உயரிய கதை எழுதி அனுப்பி திரும்பப் பெற்றால் எந்த மனோபாவம் கொள்ள வேண்டும் psychological mistake என்று சொல்லக் கூடிய - தரமற்ற பத்திரிகைகள் அவை என்று தூற்றுவது rational ஆகுமா ? அவை அப்படி இருக்கலாம். ஆனால் இவன் இந்த முடிவிற்கு இந்தக் காரணம் முன்னிட்டுக் கொள்வது logical? தற்போது அநேக குழுவினரையும்... ஒரு reaction விளைவாகத்தான் தான் காண முடிகிறது.

நான் இப்பல்லாம் ஏன் எழுதறதில்லைன்னு எல்லோரும் கேட்கிறார்கள். எழுத நிறைய விஷயம் இருக்கு. I am a writer and artist always. எனக்கு சுய விமர்சனம் (self criticism) அதிகம். வரவர விமர்சனப் பார்வை அதிகமாவதால் முன்பு எழுதியவதைவிட இப்போது எழுதினால் இன்னும் புரியாமல் தான் போகும் என நினைக்கிறேன். கலை வெளியீட்டுக்கு (expression) தமிழ் மொழி இப்போதுள்ள நிலையில் செயல்பட முடியாது. 40 ஆண்டுகளுக்கு முன்னால் நான் எழுதத் தொடங்கிய போது இருந்ததைப்போலவே, விருத்தியடையாமல் தமிழ் இருக்கிறது. எல்லாவற்றையும் ' in and through words சொல்லியாக வேண்டியிருக்கு. என் மூளை எழுதிப் பார்க்கிற சில அபூத impression களை express செய்ய மிகவும் சிரமமாக இருக்கிறது. '

- கலை என்பது என்ன? - - - - - - -

-- -- -- - அனுபவ வெளியீட்டை அழகாகச் செய்தால் கலை ஆகும். அனுபவம் என்பது வார்த்தையற்றது: உணர்வால் பெறப்படுவது. Experience should be aesthetic. பிரம்மத்தின் manifestationதான் நாமெல்லோரும், அரூப பிரம்மத்தின் குணங்கள் சொல்லப்படும்போது பல்வகைப்படும். முக்கியமாக, சத் (exists) சித் (consciousness) ஆனந்தம் (enjoyment) மாயை என்பது சம்பந்தப்படும்போது நாமரூபங்கள் 5 வித குணமுடையதாக ஏற்படுகின்றன. நாமரூப் பேதமே உலகை விதம் விதமாகக் காட்டுகின்றது. அதனால் தான் அனுபவங்களும் விதம் விதமாக ஏற்பட இருக்கின்றன. பிரத்யட்ச அனுபவத்தில் நான்கு வகை யாகப் பிரித்து தனியெனக் காண வகையுண்டு. (1) Cognitive mode of experience, (2) Moral code, (3) Religious mode and (4) Aesthetic mode. இதன் அடிப்படையில் பிரத்யட்ச ஞானம் இல்லாத போதும் பழைய அனுபவ ஞாபகத்திலிருந்து images தோன்ற முடியும் - 'imagination sublimate ஆகி, symbolical ஆக எழுத்து மூலம் படைப்பாக வெளிவரலாம். இப்படியாக வெளி வியாபகத்திற்கு ஒரு passion மிகத் தேவை. Passion இல்லாத அனேக பெரிய artists அரிய aesthetic experience? அனுபவிக்க முடியும், எழுதாமலே. அநேகமாக இப்படித் தான் என் காலம் இப்போது போய்க்கொண்டிருக்கிறது . அச்சமயம் யாருடனாவது பேசினால் நான் எதை எதையோ, வார்த்தைக்கு அப்பாலிருந்து வார்த்தை மூலம் ஒரு அனுபவத்தைக் கொடுப்பதாகிறது. யார் எவரிடம் என்பதன்றி - அவர்கள் - மனோபாவத்தை, விசாலத்தைப் பொறுத்து - - எதையும் நினைக்க இருக்கலாம்.--

- Aesthetive mode of experience என்கிற போது subjective-objetive  mystic level self contained ஆக சஞ்சாரம் பண்ணின்டு, universal ஆகplace, time எல்லாம் மறைந்து போய்விடுகிற இடம் - அதுவே spontaneous overflow ஆக மாறிவிடுகிறது. உண்மையான கலைஞனுக்கு அனுபவம் வெளியீடு ஆகும் போதும் வார்த்தைகள் தாமாகவே வந்து விழுகின்றன நாயைக் கட்டியிழுப்பது போல் வார்த்தைக்களைக் கட்டி இழுப்பதெல்லாம் timeல் அடிபட்டு போய்விடக்கூடியவை - ஒரு எழுத்தாளனுக்கு எதை எழுத வேண்டும் என்று தெரிந்திருப்பதை விட, எதை எழுதக்கூடாது என்று அவசியம் தெரிந்திருக்க வேண்டும். இந்த - artistic restraintதான் அவனைக் கலைஞன் அளவுக்கு உயர்த்த முடியும் (consciousness proposes- Id disposes)

- என் சிறுகதைகளில் சில வரிகளைப் பாருங்கள் : - "விட்டில் பூச்சிகள் போன்று விளக்கை வட்டமிட்டே அழிவது தானா ஆடவர் வாழ்க்கை ? கிட்டே நெருங்க கவர்ச்சி கொடுக்காது இருக்க எப்படி முடியும் பெண்களால்? இருட்சுடரைக் கொண்டு விளக்காக முடியுமா?'' (சாவில் பிறந்த சிருஷ்டி) (E)161

“நாம் சாயைகள்தானா? எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்?” (அழியாச்சுடர்)

“ஆதாரமற்று நினைப்பதிலும் அதிர்ந்து இடிய, வடிவாகும் கற்பனைக் கோட்டை" (மனக்கோலம்)

நினைப்பதால் உருவாகிற கோட்டை, நினைப்பதால் இடிகிறது. இரண்டுக்கும் நினைவே காரணமாகிறது.

இந்த வரிகள் யாவுமே subjective-objective இரண்டும் ஒன்றாகிக் கலந்து symbolicalஆக மேல் நிலைக்குப் போகிற constructions. வலிந்து கட்டிக் கொண்டு, வார்த்தைகளைக் கோர்த்து இவற்றை உருவாக்கிவிட முடியாது. தானாக, அர்த்த அழுத்தத்துடன் தோன்றி உதிர்ந்தவை இவை.

வார்த்தைகளை வலிந்து அடுக்கி, சுழற்றி மேற்பூச்சு நகாசு வேலை செய்பவன் artist ஆகமாட்டான். அவன் ஒரு artisan அவ்வளவுதான். அதிலும் மொழியின் இலக்கியப் பிரயோகத்தைப் புரிந்து கொள்ளாமல், புரிந்து கொள்ள முடியாமல், மேற்போக்கு நகாசுக்கான pliable medium தான் மொழி என நினைப்பவன், (பொற் கொல்லனுக்குத் தங்கம் மாதிரியாக) மொழி மூலமாக creative process எப்படி இயங்குகிறது (symbolical ஆக) என்பதைப் புரிந்து கொள்ள முடியாதவன் கலைஞனாவது

முடியாத காரியம்.

'நனவோடை எழுத்தாளர்' என்று சிலரைக் குறிப்பது பற்றி....?

Stream of consciousness TOUS unorganised primary data of experience or perception from an artist. பளீர் பளீரென்று artistஐக் வாட்டக்கூடியது. நமக்கு ஒரு aesthetic satisfactionஐ கொடுக்கக் கூடியது. புரியாததை தான் தெரிந்தவன் எனக் காட்டத் தெரிந்ததென இரண்டொரு வார்த்தை பிரயோகங்களை தனக்கு இஷ்ட தேவதையான சில கதாசிரியர்களுக்கு சேர்த்து அடிக்கடி உபயோகப்படுத்துவதால் நிகழும் அபத்தங்களில் ஒன்று இது.

எழுதுவதற்கு, experience பண்ண வேண்டும் என்பது அவசியத் தேவையா?

மனைவி செத்துப்போன ஒருவனின் மன நிலையை 'மாறுதல்' சிறுகதையில் எழுதியிருக்கிறேன். இதோ என் மனைவி உயிருடன் இருக்கிறாள். அனுபவத்தால் தான் எழுத வேண்டுமா என்பது இருக்கட்டும்;. experience பண்ணுகிறபோது எழுதமுடியுமா..?
* குடிகாரன் மாதிரி ஒருவன் நடிக்கிறான். குடித்து விட்டு ஒருவன் மண்ணில் விழுந்து கிடக்கிறான். முன்னது ' குடிகாரனது நிலை' வெளியீடு; பின்னது 'குடிகாரனின்' வெளியீடு. என் 'காதல் சாலை' சிறுகதையில் ஒரு குடிகாரன் வருகிறான். அது Drunken stateன் aesthetic experience ஆகும் - இது ஒரு paradox. - 'கண்ண தாசன்' (செப்டம்பர் -73) எம்.வி.வி. பேட்டியில் என்னைப்பற்றிக் குறிப்பிட்டிருந்தவைகளில் சில தவறுகள் நேர்ந்துள்ளன. 'தேனீ'யில் வெளிவந்த என் இரண்டு சிறுகதைகள் எந்தச் சூழ்நிலையில் எழுதப் பட்டவை, தரப்பட்டவை என்பதைச் சொல்கிறேன். - | 'மனக்கோலம்' (1948) கதையை என் வழக்கப்படி திருப்தியின்றி வெவ்வேறு - Script ஆக பதினைந்து தடவைக்கு மேல் எழுதிக் கிழித்தும், கடைசியாக நான் பக்கம் பக்கமாக எழுதிப்போட, கரிச்சான்குஞ்சு அருகிலிருந்து வாங்கிக் கொள்ள - மகளின் திருமணம் முடிந்த அன்று நள்ளிரவு ரயிலில் சிதம்பரம் திரும்பியாகவேண்டிய அவசரத்தில் - கரிச்சான்குஞ்சு, கதையின் கடைசிப் பக்கத்தை இன்னொரு தடவை படித்துவிட்டு, வேறு எழுதக் கோரியபோது ''அவ்வளவுதான் - அதைத் திருப்பிப் பார்த்தால் எல்லாமே எனக்குத் திருப்தி தராமல் கிழித்துப்  போட்டுவிட்டு வேறு எழுதத் தோன்றிவிடும்... நான் ஊருக்குக் கிளம்பியாக வேண்டும்" என்று கிளம்பி விட்டேன்.

- எம். வி. வி. தன் பேட்டியில் முதல் கதையை நேரில் கொண்டு வந்து தந்தார். திருத்திப் போடு என்று சொல்லி விட்டுப் போனார், என்று கூறியிருப்பதற்காக இதனைக் கூறுகிறேன்.

- -  இரண்டாவது சிறுகதையை நான் 'தேனீ'க்குத் தந்த கதை இது: அப்போது க. நா. சு. பொறுப்பேற்று நடத்திய 'சந்திரோதயம்' பத்திரிகையின் ஆண்டும் மலர் ஒன்று கொண்டு வரப் போவதால் என் கதை வேண்டுமெனக் கேட்க நான் எழுதிக் கொடுத்த கதை: நினைவுச்சுவடு (1948). சந்திரோதயத்தில் அப்போது உதவி ஆசிரியராக சி. சு. செல்லப்பாவும், ஓவியராக சாரதியும் இருந்தார்கள். 'சந்திரோதயம்' மலர் வெளியிடும் முன்பே நின்று விட்டது. அச்சமயத்தில் எம்.வி. வி. 'தேனீ' பத்திரிகைக்கு என் கதை அவசியம் தேவையென்று கேட்க நான் க.நா.சு.விடம் வெளியிடாமல் வைக்கப்பட்டிருக்கும் என் கதையைக் கேட்டுப் பெற்றுக் கொள்ளச் சொன்னேன். க. நா. சு. அந்தக் கதைத்  தாள்களை கறையான் அரித்துவிட்டதாகக் கூறியதால், மறுபடியும் எம்.வி.வி. என்னை வந்து துளைத்தார். 'நினைவுச் சுவடு' கதையைத் திருப்தியின்றி மாற்றி மாற்றி எழுதிய கடைசி versionக்கு முந்திய பிரதி தற்செயலாக அகப்பட, அதை அவருக்குக் கொடுத்தேன். அதுவே 'தேனீ' யில் வெளிவந்த எனது இரண்டாவது சிறுகதை. - 1

நான் கதை எழுதுவது என்பதே நாள் கணக்கில் ஏற்படுகிற - சிரமமான விஷயமாக இருக்க, 'கதை எழுதி வைத்திருந்து விகடனுக்கும் குமுதத்துக்கும் அனுப்பி திரும்ப வந்துவிட்டது' என்று நான் வருத்தப்பட்டதாக(!) எம்.வி. வி. தன் பேட்டியில் கூறியிருப்பது உண்மையில்லாத விஷயம். 542 18 - 2


மேலும் அவர் கூறியிருந்தார் : "மெளனி ஒரு கதைக்கான plot இருப்பதாகவும், எழுதப்போவதாகவும் சொன்னார். plot ஐயும் சொல்லிக்கொண்டே வந்தார். அது எனக்கு மிகவும் பிடித்துவிட்டது . - 'சொல்லாதீர்கள். நானே எழுதிவிடுவேன் போலிருக்கிறது என்று தடுத்தேன். 'எழுதேன், அதனால் என்ன? நானும் எழுதுகிறேன்' என்றார். அவர் சொன்ன கதைக் கருவிலிருந்து தான் 'கருகாத மொட்டு' என்ற என் கதை தோன்றியது. அவர் அதே பிளாட்டைப் பயன்படுத்திக் கதை எழுதுகிறாரா IT என்று எனக்குத் தெரியாது”

- எம். வி. வி.க்கு நான் கூறிய பிளாட்டை வைத்துத் தான் 'பிரக்ஞை வெளியில்' (சரஸ்வதி -1960) என்ற என் சிறுகதை எழுதப்பட்டது. 2

கருகாத மொட்டு, பிரக்ஞை வெளியில் - இவ்விரு கதைகளுடன் ஜெயகாந்தனின் 'உடன்கட்டை' சிறுகதையையும் சேர்த்துப் படியுங்கள்! - அதே போல, என் 'எங்கிருந்தோ வந்தான்' கதையைப் படித்துவிட்டு, புதுமைப்பித்தனின் 'காலனும் கிழவியும்' கதையைப் படியுங்கள். 'எங்கிருந்தோ வந்தான்' சிறுகதையின் இரண்டு வரிகளைக் கொண்டு மிகவும் புத்திசாலித்தனமாக அக்கதையை புதுமைப்பித்தன் எழுதியிருக்கிறார் . உண்மையிலேயே அது நல்ல கதையாக அமைந்து விட்டது' உ 'ஹிந்து' உள்பட முக்கியமான தினசரிகளில் 'மெளனியைச் சந்தியுங்கள்' என்று எம்.வி.வி. விளம்பரம் கொடுத்தது, 'கண்ணதாசன்' இதழைப் பார்க்கிறவரை எனக்குத் தெரியாது .

விமர்சகன் யார் ? 

 : விமர்சகன் என்பவன், தன் மனச்சாயையினைத் தவிர்த்து objective ஆகப் பார்க்க க் கூடியவனே. object என்பது தனித்து எதிரில் உள்ளது. அதுபற்றி விமர்சகன் objective validity கொடுத்து value judgement பண்ண வேணுமே தவிர, முன்னதாகக் கொண்ட அபிப்ராயங்கள், தன் மனச்சாயை போன்றவைகளை அளவுகோல்களாகக் கொள்வது அறவே கூடாது. (factual judgementக்கு objective validity இருப்பது போன்று value judgementக்கு objective basis உண்டா என்பது ஒரு நிரடான பிரச்சினை.) அந்தக் காலத்தில் நாங்கள் இலக்கியம் பற்றிய விஷயங்களைக் காரசாரமாக விவாதிப்போம். ஒருவர் கதை சரியில்லை என்றால் முகத்துக்கெதிரே சொல்வதில் தயக்கமோ, கேட்பதில் அவருக்குக் கோபமோ வராது.

ஒரு தடவை ந. முத்துசாமி பத்திரிகை ஆரம்பிப்பது பற்றிப் பேசியபோது நான் சொன்னேன்: எந்த article யார் எழுதிய போதிலும், அதில் ஒரு வார்த்தைகூட அனாவசியம் - சரியல்ல எனில் அந்த articleஐ தூக்கி எறிந்துவிட்டு - தரமான விஷயம் கிடைக்கவில்லையானால் பக்கங்களை வெள்ளையாக விட்டுவிடும் தைரியம் இருந்தால் ஆரம்பிக்கலாம்."

நான் சிறுகதை எழுதுகிற process ரொம்ப சிரமம் தருவது, ஒரு தடவை எழுதி முடித்த முழு versionஐ மறுபடியும் மாற்றி எழுதுவேன். திரும்பத் திரும்பப் பலமுறை எழுதுகையில் ஒவ்வொரு தடவையும் கதையின் version புதிதாக மாறியிருக்கும். எப்படி எத்தனை தடவைகள் எழுதிய போதிலும் திருப்தி ஏற்படுவதில்லை. பத்திரிகையில் வந்த பிறகும், இதைவிட நன்றாக எழுதி யிருக்கலாம் என்ற தோற்றம் கொடுப்பது தவிர்க்க முடியாததாகிறது. ஏதோ ஒரு versionஐ கேட்டவருக்கு அனுப்பி வைத்துவிடுவேன். என் கதைகள் ஒன்றுக்குக் கூடத் தலைப்பு நான் வைத்ததில்லை. எழுதிய கைப் பிரதிகளையோ, அச்சில் வந்தவைகளையோ பாதுகாத்து வைக்கிற பழக்கம் எனக்கில்லை. )

***இப்போதெல்லாம் என்னைத் தெரிந்த நிறையப் | பத்திரிகைகள் அனுப்பப்படுகின்றன - என் பழைய | விலாசத்திற்கு. எப்படியோ அவை என் புது முகவரிக்கு | வந்து சேர்கின்றன. அநேகம் வராமலும் இருக்கலாம். | பத்திரிகைகளில் கவிதைகள் அதிகம் வெளிவருவதாகத் தெரிகிறது. என் கண்களில் cataractக்கும் Retina detachmentக்கும் ஆபரேஷன் செய்த பிறகு படிப்பது ரொம்ப ரொம்பச் சிரமமான விஷயம். எழுதுவது அதைவிட. சேர்ந்தாற்போல் 10 நிமிஷங்கள் படித்து முடித்து 10 நிமிஷம் கண்களுக்கு ஓய்வு கொடுத்துத் திரும்பவும்... இப்படித்தான் இப்போதும் நாளைக்கு இரண்டு மணிக்குக் குறையாமல் ஏதாவது செய்கிறேன். 

எது கவிதை? -

 - என் சிறுகதைகளை எடுத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொன்றும் ஒரு கவிதையே. poem is a linguistic; artifact whose function is to organise the primary data of experience that can be exhibited in and through words.

சிறுகதை எழுதுவதன் குறிக்கோள் என்ன?

நான் இதற்கு என்ன பதில் கூறவேண்டுமென்று விரும்புகிறீர்கள்? காசுக்காக-புகழுக்காக-கலை, கலைக் காக-என்றெல்லாமா? இதே கேள்வியைச் சற்று மாற்றி ஆல்பர்ட் ஃப்ராங்க்ளின் என்னைக் கேட்டார் , “why do you write?" என்று, அவருக்குக் கூறிய பதிலையே கூறுகிறேன் “என்னால் எழுதாமல் இருக்க முடியவில்லைஅதனால் எழுதுகிறேன்..."

நான் நிறைய எழுத வேண்டும். சிறுகதைகளாக என் இலக்கியக் கொள்கைகளைக் கட்டுரையாக என்றெல்லாம் வற்புறுத்துகிறார்கள். எழுத வேண்டும் என்ற வேகமும் எனக்கு இருக்கிறது . இப்போதுள்ள தமிழ், வெளியீட்டுக்கு சரியான அளவில் துணை புரிய முடிவதில்லை, சிரமப்பட வேண்டியிருக்கிறது - எப்படி யும் எழுதுவேன்.

* தீபம்' பட்டிமன்றத்தில் ' தனக்கும் புரியாமல் பிறருக்கும் புரிந்துவிடக் கூடாது என்று எழுதுபவர்' என்று என்னைப் பற்றி ஒருவர் குறிப்பிட்டார். 'ஞானரதம்' பத்திரிகையில் 'சுயதரிசனம்' என்று நான் பேசியதைத் தொகுத்து எழுதினார்கள். அக்கட்டுரையில் பல பிழைகள்... என் எழுத்தே எனக்குப் புரியாததை பிறருக்குப் புரியாத வகையில் இருப்பதாக இருக்கிறதே! நான் பேசுவது புரிந்தவர்கள் பிறருக்குப் புரிய எழுதுவது எப்படியிருக்க முடியும்? இப்போது நான் பேசியதைப் புரிந்து நீங்கள் எழுதி வெளியிடப் போவதாகச் சொல்கிறீர்கள்...?!

நான் பெயரளவில்தான் மெளனி எனவும், ஓயாமல் பேசுவேன் என்றும் எம். வி. வி. தன் 'கண்ணதாசன் '' பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். உண்மைதான். நான் நிறைய பேசுவேன். பேசுகிறேன். பேசுவது எதிரில் இருப் பவர்களுக்காக அல்ல. என்னால் சுவற்றுடன் பேச முடிய வில்லை . வார்த்தைகள் மூலமாக self clarification பெறும் நோக்கமே என் ஓயாத பேச்சுக்குக் காரணம். 'என் சிறுகதைகளை நான் பலமுறை ஏன் எழுதிப் பார்க்கிறேனோ, அதே காரணம்தான் என் பேச்சுக்கும். எதிரில் இருப்பவர்களுக்குப் புரியவைப்பது என் வேலையென்று நான் நினைக்கவில்லை . In and through wordsல் எல்லாவற்றையும் சொல்லியாக வேண்டியிருக்கிறது. பேச்சில், எழுத்தில் என் impressionகளை , experienceகளை சரியாக express செய்ய நான் பெரிதும் பாடுபடுகிறேன்.

அதனாலேயே நான் பெரிதும் நம்புகிறேன்: “My works will live, so long as Tamil lives".
Δ Δ Δ