https://ta.wikisource.org/wiki/Page:தமிழ்_நாவல்கள்-நாவல்_விழாக்_கருத்துரைகள்.pdf/72
78 பாகம் பாதி இல்லையா? நானும் என் குழந்தையும் ஏன் சுகமாகக் காலத்தைக் கழித்துக்கொண்டு போகக் கூடாது? என் குழந்தைக்கு அழகான சிலை, ஒரு நகை நட்டு பண்ணிப் போட்டுப் பார்த்தால் எப்படி இருக்கும்? மாதத்திற்கு நாலு பேருக்குக் குறையாமல் அவர்களுக்கு வேண்டியவர்கள் சொந்தம் பாராட்டிக் கொண்டு வந்து விடுகிரு.ர்கள். இதெல் லாம் யார் சம்பாதித்தது?' என்று பொருமுகிருள் நாகம் LÖTT GYf. -
"நல்லதோ, கெட்டதோ எதுவும் இப்படித்தான். ஒரு சிறு வித்து எப்படிப் பிஞ்சும் பூவும் குலுங்கும் விருட்சமாகி அதன் நிழலிலேயே எத்தனையோ ஜீவராசிகளுக்குக் குளிர்ந்த நிழலைத் தருகிறதோ, அந்த மாதிரி இந்தச் சிறு கனல் பொறியும், மகாப் பெரிய அனல் மலையை வளர்க்க லாயிற்று' (பக்கம் 32)
பாகப் பிரிவினை என்ற விஷவித்து, நாகம்மாளின் மதியைக் கெடுக்கிறது; மானத்தை அழிக்கிறது; இறுதியிலே சின்னப்பனின் உயிரையும் பறித்து, அந்தக் குடும்பத்தையே சிதைத்து விடுகிறது.
-- நாகம்மாளின் மனப் போராட்டங்களையும் அவளுள்ளே. விசுவரூபமெடுக்கும் அசுரப் பண்புகளையும், எதிரிகளின் சதி வலையிலே அவள் சிக்குவதையும் தலையாய இலக்கியத் திறனுடன் சித்திரிக்கிருர் ஆர். ஷண்முக சுந்தரம்.
நாகம்மாளுக்கு அடுத்தபடியாக, நம்மை ஈர்ப்பவன் கெட்டியப்பன். இவன் 11 அத்தியாயங்களில் வருகிருன், மூன்ரும் அத்தியாயத்தில்-மாரியம்மன் உற்சவ காலத்தில் - அவனை இவ்வாறு அறிமுகப் படுத்துகிருர் ஆசிரியர் :
'ஜல்ஜல்' என்று சதங்கைகள் ஒலிக்க, கம்புத்தைச், சுற்றிச் சிறியவர்களும் பெரியவர்களும் ஆடிக் கொண்டிருந் தார்கள். அந்த ஆட்டக்காரர்களிலே ஒருவன் அடிக்கடி பறையர்கள் அடிப்பதைக் குற்றம் குறை சொல்லி வந்தான்,
79 அதிகாரம் தொனிக்கும் குரல், உயரத்திற்கேற்ற பருமன்; உருட்டிக் கட்டின வேஷ்டி, சரியான தலைக்கட்டு. அவனேக் கண்டுகூட இருப்பவர்கள் சந்தோஷம் கொள்வதும், அவன் அதட்டும்போது கொல்லென்று சிரிப்பதுமாயிருந்தார்கள். அவன்தான் கெட்டியப்பன். அவனுக்குக் குடிப்பதற்குப் பணம் எப்படிக் கிடைக்கிறது? ஏதாவது மந்திரம் தந்திரம் கற்று வைத்திருக்கிருளு: அதெல்லாம் ஒன்றுமில்லை. தனக்கு இருந்த காடொன்றையும் தொலைத்து விட்டான். அவன் வேறு ஒன்றும் செய்யவில்லை; இட்லியும் கள்ளும் அந்தக் காட்டை விலைக்கு வாங்கிவிட்டது! இப்போது வெறும் ஆள். அந்த விடுசூளே யாருக்கும் பயப்பட மாட்டான். ஊரில் எல்லோரும் அவனே ஒரு மாதிரியாகத்தான் நடத்து வார்கள். அவனிடம் பகைத்துக் கொண்டால் போச்சு; அன்றைக்கு விரோதித்துக் கொண்டவனுக்கு வாழைத் தோட்டமிருந்தால், பத்துப் பன்னிரண்டு தாராவது பிஞ்சோடும் பூவோடும் அறுபட்டுப் போய்விடும். அல்லது தென்னந் தோப்பு உள்ளவராயிருந்தால், இருபது முப்பது குலேயாவது பாளைக் குருத்தோடு காணுமல் போயிருக்கும் அவனிடம் தன்னைப் போன்ற நாலைந்து ஆட்களும் உண்டு. ’’ (பக்கம் 15)
இப்படிப்பட்ட மனிதனிடம்’ ’தான் நாகம்மாள் அன்பு செலுத்துகிருள்; அடிக்கடி ஆலோசனை கேட்கிருள்! இந்நிலையில் அவள் தலைமை தாங்கும் குடும்பத்தின் கதி என்னவாகும்? நீங்களே ஊகித்துக் கொள்ளளலாம்.
மணியக்கார ராமசாமிக் கவுண்டரையும், அவரது மந்திரி நாராயண முதலியையும் பார்ப்போம் :
'மணியக்கார ராமசாமிக் கவுண்டர் நல்ல பாரா சாரி யான ஆள். கருவேலங்கட்டை மாதிரி அவரது காலும் கையும் உறுதியாயிருக்கும். அவரது நிறமும் கருஞ்சாந்து போலத்தான். கிருதா மீசைக்கும் அவரது மேனிக்கும் வித்தியாசமே தெரியாது. அவரது முறுக்கு மீசையில்
8 : நடை
ஆர். ஷண்முகசுந்தரத்தின் தமிழ் நடைக்குச் சில உதாரணங்கள் : - г
'அடை மழைக் காலம் வந்து சேர்ந்தது. புரட்டாசி கழிந்து ஐப்பசி ஆரம்பம். வான வீதியில் எந்நேரமும் சாயை படிந்து கருமுகில்கள் கவிழ்ந்த வண்ணம் இருந்தன. திடீரென்று மழை கொட்டும். அடுத்த கணமே கம்மென நின்றுவிடும். எதையோ நினைத்துக் கொண்டதைப்போல மறுபடியும் சோவெனத் துளிக்கும். இப்படிப் பெய்யும் மழையைப் பார்க்கும்போது யாரோ ஒரு தாய், தன் வாவிப மகனைப் பறி கொடுத்ததை எண்ணி ஏக்கத்தால், பலபல' வென்று நின்று நின்று கண்ணிர் விடுவதைப் போலிருந்தது.
இங்ங்ணம் அடை மழை சொல்லாமல் கொள்ளாமல் வந்தாலும் பட்டிதொட்டிக்குப் போகிறவர்கள் நிற்கவே யில்லை. ஒலைக் குடைகளையோ, பனந்தடுக்குகளையோ அல்லது கோணிப் பைகளையோ போட்டுக்கொண்டு தங்குதடை யின்றி அவரவர் வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தனர். வயது வந்த கிராமச் சிறுமிகள் ஆடைகளைச் சரியாகக்கூட மார்பில் போடாமல் சில்லிட்ட சாரலில் இட்டேறித் தடத் தில் செல்லும் காட்சியே காட்சி! ஆட்டு மந்தைகளின் பின்னலோ, வேலி யோரங்களிலோ, காட்டின் நடுவிலோ அவர்கள் செல்லுவதைப் பார்த்தால், எங்கோ மாய உலகத்திலிருந்து வந்த மதன மோகினிகள் திரிந்து கொண் டிருப்பதைப் போலிருக்கும்!'" (பக்கம் 65). - '
முலாம் பூசிக்கொண்டிருந்த இயற்கை, தன் அழகுக் கதிர்களைக் கொஞ்சம் கொஞ்சமாக அடக்கிற்று. மரங்கள் உச்சியிலும், வீட்டுக் கூரையிலும் படிந்திருந்த தங்க நிறம், மெதுவாக மறைந்தது. இரவு தன் நீண்ட கரும்போர் வையை விரித்தது. இரவின் சாந்த மடியிலே பகதி ஜாதி கள் தலை சாய்த்தன. அந்த அமைதியான வேளையில்
o
ஆர். சண்முகசுந்தரத்தின் நாகம்மாள் - தி க. சிவசங்கரன்
ஆர். ஷண்முக சுந்தரத்தின் நாகம்மாள் பிரபல மான சமூக நாவல் அல்ல! ஆனால், மிகுந்த இலக்கிய நய முள்ள நாவல்; சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த ஒரு மணிக் கொடி எழுத்தாளரின் படைப்பு.
27 அத்தியாயங்களும், 124 பக்கங்களுமுள்ள நாகம் மாள்' ஒரு தத்ரூபமான கிராமிய இலக்கியம். அதனல் தான் தமிழ்ப் பெருமக்களின் இதயத்திலே இடம் பிடிக்க, அதற்கு இத்தனை காலம் போலும்! 1941-இல் வெளிவந்த இந்நாவலை, நான் ஒரு சிறிய இதிகாசமாகவே (Minor clasic) கருதுகிறேன்.
கடந்த கால் நூற்ருண்டுக் காலத்திய தமிழ் நாவல்களில், ஒரு தலைசிறந்த படைப்பாக மதிக்கிறேன். - -
நான் இந்த முடிவுக்கு எப்படி வந்தேன் என்பதை விளக்க வேண்டுமல்லவா? என் உரையை, கதை-கட்டுக்கோப்பு-நடை என்ற மூன்று பகுதிகளாகப் பிரித்துக் கொள்கிறேன். -
கதை சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு, மின்சார ஒளி பரவாத கோவை மாவட்டச் சிற்றுார் ஒன்றிலே, கதை நிகழ் கிறது.
கொங்குச் சீமையிலே சிவியார் பாளையம் என்ற சிற்றுார். அங்கு சின்னப்பன் குடும்பமும் மிகச் சிறியது தான்.
சின்னப்பன், அவன் மனைவி ராமாயி, அண்ணி நாகம் மாள், அவளது குழந்தை முத்தாயா ஆகிய நால்வரே அந்த விவசாயக் குடும்ப உறுப்பினர்கள்.
நாகம்மாளின் கணவன், சில ஆண்டுகளுக்கு முன்பு, உடம்பிலே வாணம்பட்டு இறந்து விடுகிருன். அன்று முதல், தானே குடும்பத் தலைவியாக இருந்து, எல்லாக் காரி யங்களையும் கவனித்து வருகிருள் நாகம்மாள், ! -
எனினும், கடந்த ஒராண்டாகவே அவள் நெஞ்சில் பிரி வினை எண்ணம் முளைவிடத் தொடங்கிவிட்டது. இதற்குக் காரணம், சின்னப்பனின் மாமியார் காளியம்மாளும், அவ் வூரிலுள்ள எதிர்க்கட்சியும்தான்.
அக்கிராமத்தில் இரு கட்சிகள். சின்னப்பனும் அவனது. உறவுக்காரரும் ஒரு கட்சி, மணியக்கார ராமசாமிக் கவுண் டரும், அவரது மந்திரிப் பிரதானிகளும், அடியாட்களும் மற் ருெரு கட்சி.
இந்தக் கட்சி விவகாரம், முந்திய தலைமுறையில்." துவங்கியது. அன்று சின்னப்பனின் தத்தை ராமசாமி கவுண்டர்தான் ஊரிலே என்ன சச்சரவு நடந்தாலும் பஞ்சா யத்துச் செய்வார். இன்றைய மணியக்காரரின் தந்தையான அன்றைய மணியக்காரருக்கு அது பிடிக்கவில்லை. எனவே பொய்க் கேஸ்கள், அபராதங்கள். குட்டிக் கலவரங்கள் இப் படியாகப் பகைவளர்ந்தது.
73 நாளாவட்டத்தில் சின்னப்பனின் கை இளைக்க, மணியக் காரரின் கை வலுக்கிறது.
இந்நிலையைக் கண்டு அஞ்சி, தன் மகள் ராமாயியையும், மருமகன் சின்னப்பனேயும் தன் வீட்டோடு குடியேற்ற விரும் புகிருள், காளியம்மாள். அவள் மருமகனின் நிலத்தை விற்க முனைகிருள்; ஆனல், குடும்பத் தலைவியான நாகம்மா ளின் எதிர்காலத்தில் அக்கறை காட்டவில்லை.
ஒரு நாள் காளியம்மாள் தனது அந்தரங்கத்தைப் பொது மனிதன்போல் சின்னப்பன் வீட்டுக்கு வந்து கொண்டிருந்த கெட்டியப்பனிடம் கூறுகிருள். அவன் அதை மணியக்கார ரிடம் கூற, மணியக்காரரும், அவரது மந்திரி நாராயண முதலியும் கெட்டியப்பனைத் துருப்புச் சீட்டாகப் பயன் படுத்தி, சின்னப்பன் குடும்பத்தைச் சீரழிக்கத் திட்டமிடு கின்றனர்.
கெட்டியப்பன், அந்தக் கிராமத்துப் போக்கிரி. குடி யிலும் தீனியிலும் சொத்து அனைத்தையும் தீர்த்துவிட்டு, மதயானைபோல் வாழ்பவன்.
இந்த முரடன்மீது இப்போது நாகம்மாளுக்கு ஒரு அலாதி அபிமானம். அவனது இருப்பிடம் சென்று, பண்டம் பலகாரங்களைக் கொடுத்து, குடும்பப் பிரச்னைகளை அலசு கிருள்.
கெட்டியப்பன், பாகப்பிரிவினைக்காகச் சண்டை போடும் படி, நாகம்மாளிடம் உருவேற்றுகிருன். மணியக்காரரும், அவரது மந்திரியும் தமது மகத்தான ஆதரவைத் தெரிவிக் கின்றனர்; நேரடி நடவடிக்கைக்குத் தூண்டுகின்றனர்.
அவர்களது திட்டம், மிகப் பயங்கரமானது. முதலில் சின்னப்பன் குடும்பத்தைப் பிளந்து, பரம்பரைப் பகையைத் தீர்த்துக் கொள்வது; பின்னர், நாகம்மாளின் நிலத்தை மெல்ல அபகரித்துக் கொள்வது. அதாவது, பறவையைக் நா-5
74 கூண்டிலிருந்து விடுவிக்கும் பாவனையில், அதன் இறக்கைகளை நறுக்கிக் கொல்வது!...
ஆணவம், ஆத்திரம், அவநம்பிக்கை, துர்ப்போதனை ஆகியவற்றுக்கு இரையான நாகம்மாள், ஒரு நாள் சின்னப் பனிடம் பங்கைக் கேட்கிருள்.
ஒஹோ, பங்கு வேணுமா? செரி. எந்தக் காமாட்டிப் பயெ கேக்கச் சொன்னனே அவனெ வரச்சொல்’’ என்று ஒரே போடாகப் போட்டு விடுகிருன், அவன்.
நாகம்மாள் கப்சிப்பென அடங்கிவிட்டாள். ఆఅత சல்லியர்களும், சகுனிகளும் அவளை விடவில்லை. பிரிவினை வெறியை மூட்டிக்கொண்டே இருக்கின்றனர்.
ஒரு நாள் மைத்துனனின் மரணச் சேதி வருகிறது. சின்னபயன் தன் மனைவியுடன் மாமியார் வீடு செல்கிருன், இந்த நல்வாய்ப்பை "மும்மூர்த்தி'களும் பயன்படுத்திக் கொண்டு, சின்னப்பன் வீட்டிலே விருந்துண்டு, நாகம்மா ளின் கலக்கத்தைத் தெளிவிக்கின்றனர். அவள் இதயத் திலே பிரிவினைப்பேய் ஓயாது கூத்தாடுகிறது! -
சின்னப்பன் ஊர் திரும்பியதும். நாகம்மாள் ஓர் அதிர்ச்சி வைத்தியம் செய்கிருள். அதாவது, அந்தக் குடும் பத்தையும் தனது குழந்தையையும் விட்டுப் பிரிந்து, மணியக் காரர் வீட்டில் குடியேறி விடுகிருள்! .
மணியக்காரர் அவளை வீடு திரும்பச் சொல்கிரு.ர்.
நா அந்தப் பக்கம் தலெ வெச்சுப் படுக்க மாட்டே அவர்கள் கொளமரத்தைத் தெரிந்த பிற்பாடு, அங்கு இருக்க லாமா? உங்களெநா நம்பினே. நீங்க எப்பிடி உட்டாலும் சரி. என்று பிடிவாதமாகப் பேசுகிருள், நாகம்மாள்.
மணியக்காரர் குழுவுக்குக் கொண்டாட்டமாகி விடு கிறது ! -
፳5 நாளேக் காலையில் ஏற்றம் இறைக்கச் சின்னப்பன் வருவான். அப்போது நீ அவனைத் தடுத்து நிறுத்தவேண்டும். விவகாரம் வரும்போது, அக்கம்பக்கத்தாருடன் சென்று நாம் பஞ்சாயத்துச் செய்யவேண்டும்’ ’ என்று மந்திரி முதலி யார் யோசனை சொல்ல, அனைவருக்கும் திருப்தி ஏற்படு கிறது.
- மறுநாள் காலையில், சின்னப்பன் தோட்டத்துக்கு ஏற்றம் இறைக்க வரும்போது, நாகம்மாள் அப்படியே செய்து விடுகிருள் !
'உங் கையெக் காலெ முறுச்சிருப்பே; எனக்கு வந்த கோவத்தை அடக்கீட்டே ஓடிப் போ, என் முன்னலே நிக்காதே!' என்று உறுமுகிருன் சின்னப்பன்.
என்ன? நான ஒடறது? என் தலே துண்டாத்தாம் போவட்டுமே!’ என்ருள் நாகமாம்ள்.
அவ்வளவு தைர்யமா உனக்கு அப்படீன இன்னக்கி அடிதடிக்கினே ஆளுகளயும் வரச் சொல்லி இருக்கிறயா? ஒரு கை பாத்துட்டுத்தாம் போக உத்தேசமா?' என்று சீறு கிருன், சின்னப்பன்.
அச்சமயம் கெட்டியப்பனும், அவனது நண்பன் செங்காளியும் மூக்கு முட்டக் குடித்துவிட்டு, கையில் தடி யுடன் நாகம்மாளின் துணைக்கு வருகின்றனர்.
சின்னப்பன் கடுங்கோபத்தோடு அவர்களை வைகிருன்.
ஆத்திரமுற்ற கெட்டியப்பன், கைத்தடியால் அவன் மண்டையில் ஓங்கி அறைந்து விடுகிருன் கைத்தடி சின்ன பின்னமாக முறிகிறது. -
இரத்த வெள்ளத்தில் கிடக்கும் சின்னப்பனின் உயிர் பிரிகிறது. குழந்தை முத்தாயா கீச்செனக் கத்தி, ராமாயியைத் தழுவுகிறது; அவள் ஹோவெனக் கதறிக் கொண்டு கணவன்மேல் விழுகிருள். . * × -

76 இதுதான் கதை. காதல் நிகழ்ச்சிகளோ, கிளர்ச்சி பூட்டும் சம்பவங்களோ இல்லாத இந்தக் கதையை வைத்துக் கொண்டு, ஒர் அருமையான நாவலை எழுதியிருக்கிருர், ஆர். ஷண்முக சுந்தரம். . .
. . . . . ஆர்ப்பாட்டமில்லாத கதைப் போக்கு உயிர்த் துடிப் புள்ள பாத்திரப் படைப்பு: தெள்ளத் தெளிந்த சொல் லாட்சி-இவையே இந்நாவலின் சிறப்பியல்புகள்.
பாத்திரப் படைப்பு
இந்நாவலின் பாத்திரப் படைப்பைச் சற்று நோக்கு வோம். - . . .
நாகம்மாள், சின்னப்பன், ராமாயி, முத்தாயா, காளி யம்மாள், கெட்டியப்பன், மணியக்கார ராமசாமிக் கவுண்டர், மந்திரி நாராயண முதலி ஆகியோர் இந் நாவ வின் முக்கிய பாத்திரங்கள். இவர்களின் ஒரு சிலரை யேனும் நாம் தெரிந்து கொள்ளவேண்டும். -
நாகம்மாளே எடுத்துக் கொள்வோம். கதாநாயகி யான அவள், இந் நாவலில் 17 அத்தியாயங்களில் நடமாடு
முதல் அத்தியாயத்திலேயே வெங்கமேட்டுச் சந்தை யிலிருந்து, மாலையில் வீடு திரும்பும் பெண்களுடன் நாம் அவளைச் சந்திக்கிருேம். அப்பொழுது ஆசிரியர் எழுது கிருர்: - - - ਾਂ
எறும்புச் சாரை போல் அவர்கள் போகும் தினுசு வெகு அழகாயிருந்தது. அப்போது மணியடித்தது போல, ஒரு குரல் எழுந்தது. முன்பின் போகிற பத்து முப்பது பேரும் கப்பென்று பேச்சை விட்டனர். - : -
நா எல்லா வாங்கியும் ஒண்ணெ மறந்திட்டேனே!" என்று கணிரெனும் ஒரு குரல் எழுந்தது. ‘. . . . . . . . . .
7 7 'யார் இந்த வெண்கலத் தொண்டையில் பேசியது? பெண்ணுக்கா பிரமன் இவ்விதமான குரல் மகிமையை அளித்தான்? இந்தப் பெண் நாகம்மாள், கணவன் இறப்ப தற்குப் பத்து வருஷத்திற்கு முன்பிருந்தே ஒரு ராணி' போலவே நடந்து வந்திருக்கிருளென்றும், பிறருக்கு அடங்கி நடக்கும் பணிவும் பயமும் என்னவென்றே அவள் அறிய மாட்டாளென்றும் இப்போது குறிப்பிட்டாலே போதும்.' என்று நாகம்மாளை நமக்கு அறிமுகம் செய்து வைக்கிருர் ஆசிரியர். (பக்கம் 7)
ராணியைப்போல் கர்வங்கொண்ட நா கம்மாள். சின்னப்பனின் மனைவி ராமாயியை அதட்டி அதிகாரம் செய்கிருள்; ஆளுல், மாரியம்மன் உற்சவத்தின்போது, ஏழை எளியவர்களைத் துன்புறுத்தும் கெட்டியப்பனின் அட்டகாசங்களை ரசித்து மகிழுகிருள்; அவனிடம் பேசிச் சிரிக்கிருள்; பூஜை முடிந்து எல்லோரும் வீடு திரும்பும் போது, கோவிலுக்குப் பின்புறத்தில் கெட்டியப்பனுக்கு மடியிலிருந்து என்னவோ எடுத்துக் கொடுக்கிருள்!
நாகம்மாள்-கெட்டியப்பன் நட்பு சின்னப்பனுக்கும் ராமாயிக்கும் பிடிக்கவில்லை. அவர்கள் மனத்துக்குள் குமுறு கிருர்கள். இக் குமுறல் நாகம்மாளுக்கும் தெரிந்து விடு கிறது. எனவே, வீட்டிலும் விவசாய வேலைகளிலும் அவளது சண்டித்தனம் அதிகரிக்கிறது. . . .
. ஒரு நாள் தோட்டத்தில் எள் விதைப்பு: சின்னப்பன் உழுது கொண்டிருக்கிருன்; சந்தேகமும் வெறுப்பும் குமிழி யிட, நாகம்மாள் கூடையிலிருந்து எள்ளைக் குத்துத் குத்தாக வாரி இறைக்கிருள்! - - * - - -- -
நண்பகலில் வரப்போரத்தில் உட்கார்ந்து கசப்புடன் சிந்திக்கிருள்: "இந்த மாதிரிக் கானலிலும் காற்றிலும் உழைத்து என்ன பயன்? ஏன் இப்படி இவர்களுடன் ஒட்டுக் குடியாக வாழ வேண்டும்? இந்தப் பரந்து கிடக்கும் காட்டி லும் தோட்டத்திலும் என் கணவனுக்குச் சேரவேண்டிய
ராணியைப்போல் கர்வங்கொண்ட நா கம்மாள். சின்னப்பனின் மனைவி ராமாயியை அதட்டி அதிகாரம் செய்கிருள்; ஆளுல், மாரியம்மன் உற்சவத்தின்போது, ஏழை எளியவர்களைத் துன்புறுத்தும் கெட்டியப்பனின் அட்டகாசங்களை ரசித்து மகிழுகிருள்; அவனிடம் பேசிச் சிரிக்கிருள்; பூஜை முடிந்து எல்லோரும் வீடு திரும்பும் போது, கோவிலுக்குப் பின்புறத்தில் கெட்டியப்பனுக்கு மடியிலிருந்து என்னவோ எடுத்துக் கொடுக்கிருள்!
நாகம்மாள்-கெட்டியப்பன் நட்பு சின்னப்பனுக்கும் ராமாயிக்கும் பிடிக்கவில்லை. அவர்கள் மனத்துக்குள் குமுறு கிருர்கள். இக் குமுறல் நாகம்மாளுக்கும் தெரிந்து விடு கிறது. எனவே, வீட்டிலும் விவசாய வேலைகளிலும் அவளது சண்டித்தனம் அதிகரிக்கிறது. . . .
. ஒரு நாள் தோட்டத்தில் எள் விதைப்பு: சின்னப்பன் உழுது கொண்டிருக்கிருன்; சந்தேகமும் வெறுப்பும் குமிழி யிட, நாகம்மாள் கூடையிலிருந்து எள்ளைக் குத்துத் குத்தாக வாரி இறைக்கிருள்! - - * - - -- -
நண்பகலில் வரப்போரத்தில் உட்கார்ந்து கசப்புடன் சிந்திக்கிருள்: "இந்த மாதிரிக் கானலிலும் காற்றிலும் உழைத்து என்ன பயன்? ஏன் இப்படி இவர்களுடன் ஒட்டுக் குடியாக வாழ வேண்டும்? இந்தப் பரந்து கிடக்கும் காட்டி லும் தோட்டத்திலும் என் கணவனுக்குச் சேரவேண்டிய
78 பாகம் பாதி இல்லையா? நானும் என் குழந்தையும் ஏன் சுகமாகக் காலத்தைக் கழித்துக்கொண்டு போகக் கூடாது? என் குழந்தைக்கு அழகான சிலை, ஒரு நகை நட்டு பண்ணிப் போட்டுப் பார்த்தால் எப்படி இருக்கும்? மாதத்திற்கு நாலு பேருக்குக் குறையாமல் அவர்களுக்கு வேண்டியவர்கள் சொந்தம் பாராட்டிக் கொண்டு வந்து விடுகிரு.ர்கள். இதெல் லாம் யார் சம்பாதித்தது?' என்று பொருமுகிருள் நாகம் LÖTT GYf. -
"நல்லதோ, கெட்டதோ எதுவும் இப்படித்தான். ஒரு சிறு வித்து எப்படிப் பிஞ்சும் பூவும் குலுங்கும் விருட்சமாகி அதன் நிழலிலேயே எத்தனையோ ஜீவராசிகளுக்குக் குளிர்ந்த நிழலைத் தருகிறதோ, அந்த மாதிரி இந்தச் சிறு கனல் பொறியும், மகாப் பெரிய அனல் மலையை வளர்க்க லாயிற்று' (பக்கம் 32)
பாகப் பிரிவினை என்ற விஷவித்து, நாகம்மாளின் மதியைக் கெடுக்கிறது; மானத்தை அழிக்கிறது; இறுதியிலே சின்னப்பனின் உயிரையும் பறித்து, அந்தக் குடும்பத்தையே சிதைத்து விடுகிறது.
-- நாகம்மாளின் மனப் போராட்டங்களையும் அவளுள்ளே. விசுவரூபமெடுக்கும் அசுரப் பண்புகளையும், எதிரிகளின் சதி வலையிலே அவள் சிக்குவதையும் தலையாய இலக்கியத் திறனுடன் சித்திரிக்கிருர் ஆர். ஷண்முக சுந்தரம்.
நாகம்மாளுக்கு அடுத்தபடியாக, நம்மை ஈர்ப்பவன் கெட்டியப்பன். இவன் 11 அத்தியாயங்களில் வருகிருன், மூன்ரும் அத்தியாயத்தில்-மாரியம்மன் உற்சவ காலத்தில் - அவனை இவ்வாறு அறிமுகப் படுத்துகிருர் ஆசிரியர் :
'ஜல்ஜல்' என்று சதங்கைகள் ஒலிக்க, கம்புத்தைச், சுற்றிச் சிறியவர்களும் பெரியவர்களும் ஆடிக் கொண்டிருந் தார்கள். அந்த ஆட்டக்காரர்களிலே ஒருவன் அடிக்கடி பறையர்கள் அடிப்பதைக் குற்றம் குறை சொல்லி வந்தான்,
79 அதிகாரம் தொனிக்கும் குரல், உயரத்திற்கேற்ற பருமன்; உருட்டிக் கட்டின வேஷ்டி, சரியான தலைக்கட்டு. அவனேக் கண்டுகூட இருப்பவர்கள் சந்தோஷம் கொள்வதும், அவன் அதட்டும்போது கொல்லென்று சிரிப்பதுமாயிருந்தார்கள். அவன்தான் கெட்டியப்பன். அவனுக்குக் குடிப்பதற்குப் பணம் எப்படிக் கிடைக்கிறது? ஏதாவது மந்திரம் தந்திரம் கற்று வைத்திருக்கிருளு: அதெல்லாம் ஒன்றுமில்லை. தனக்கு இருந்த காடொன்றையும் தொலைத்து விட்டான். அவன் வேறு ஒன்றும் செய்யவில்லை; இட்லியும் கள்ளும் அந்தக் காட்டை விலைக்கு வாங்கிவிட்டது! இப்போது வெறும் ஆள். அந்த விடுசூளே யாருக்கும் பயப்பட மாட்டான். ஊரில் எல்லோரும் அவனே ஒரு மாதிரியாகத்தான் நடத்து வார்கள். அவனிடம் பகைத்துக் கொண்டால் போச்சு; அன்றைக்கு விரோதித்துக் கொண்டவனுக்கு வாழைத் தோட்டமிருந்தால், பத்துப் பன்னிரண்டு தாராவது பிஞ்சோடும் பூவோடும் அறுபட்டுப் போய்விடும். அல்லது தென்னந் தோப்பு உள்ளவராயிருந்தால், இருபது முப்பது குலேயாவது பாளைக் குருத்தோடு காணுமல் போயிருக்கும் அவனிடம் தன்னைப் போன்ற நாலைந்து ஆட்களும் உண்டு. ’’ (பக்கம் 15)
இப்படிப்பட்ட மனிதனிடம்’ ’தான் நாகம்மாள் அன்பு செலுத்துகிருள்; அடிக்கடி ஆலோசனை கேட்கிருள்! இந்நிலையில் அவள் தலைமை தாங்கும் குடும்பத்தின் கதி என்னவாகும்? நீங்களே ஊகித்துக் கொள்ளளலாம்.
மணியக்கார ராமசாமிக் கவுண்டரையும், அவரது மந்திரி நாராயண முதலியையும் பார்ப்போம் :
'மணியக்கார ராமசாமிக் கவுண்டர் நல்ல பாரா சாரி யான ஆள். கருவேலங்கட்டை மாதிரி அவரது காலும் கையும் உறுதியாயிருக்கும். அவரது நிறமும் கருஞ்சாந்து போலத்தான். கிருதா மீசைக்கும் அவரது மேனிக்கும் வித்தியாசமே தெரியாது. அவரது முறுக்கு மீசையில்
& O எலுமிச்சங் கனியை நிறுத்தலாம்! என்ன நிறுத்தியே காண்பித்திருக்கிருர்! '
தன் தகப்பனர் காலத்தில் தோல்வி மேல் தோல்வி யானலும், தாளுவது வெற்றி கண்டுவிட வேண்டும், சின்னப்பனையும் அவன் பங்காளிகளேயும் பிரித்து மட்டம் தட்டவேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண்டிருந்தார், மணியக்காரர். இதில் அநேகமாக வெற்றியும் அடைந்து விட்டார். இப்போது சின்னப்பனை என்ன செய்தாலும் கேள்வியில்லை. அதற்குத் தகுந்தாற்போல் நாகம்மாள் சங்கதி வேறு கிடைத்திருக்கிறது. -
எப்போதும் மணியக்காரருக்கு யோசனை சொல்வ தற்கு அநேக மந்திரிகள் உண்டு, அவர்களில் முதன்மை யானவர் நாராயண முதலி. இவன் ஒரு புளுகுணி, குண்டுப் புரட்டன். எங்கு என்ன நடந்தாலும் துளி விடாது வந்து சொல்வி விடுவான். இதற்கு இப்படிச் செய்ய வேண்டும்; அவர்கள் சங்கதி அப்படி அது இது என்றெல்லாம் யோசனை சொல்வான். மற்றவர் யோசனையானுல் மணியக்காரர் நிராகரித்து விடுவார்; நாராயணசாமி முதலி விஷயம் அப்படியல்ல. எங்கே கல்லெறிஞ்சால் எப்படி விழும் என்று தெரிஞ்சவன். சாதாரணமாகப் கோர்ட்டு விஷயங்களில் அபாரத் திறமை. மற்றும் சாட்சிக்குச் செல்லும்போது, சாப்பிடுவதற்கு எந்த ஒட்டலுக்குப் போனல் ரொம்ப திவ்ய மாயிருக்கும், குறிப்பிட்ட மனிதர்களே எங்கு அழைத்துச் செல்வது என்பதெல்லாம் மனப்பாடம் (பக்கம் 72) என்று மணியக்காரரையும், அவரது மந்திரியையும் நமக்கு அறி முகப் படுத்துகிருர், ஆசிரியர். -
ஏனைய பாத்திரங்களின் குணநலன்களை வாசகர்களே படித்து அநுபவிக்க வேண்டியதுதான் f
தன் தகப்பனர் காலத்தில் தோல்வி மேல் தோல்வி யானலும், தாளுவது வெற்றி கண்டுவிட வேண்டும், சின்னப்பனையும் அவன் பங்காளிகளேயும் பிரித்து மட்டம் தட்டவேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண்டிருந்தார், மணியக்காரர். இதில் அநேகமாக வெற்றியும் அடைந்து விட்டார். இப்போது சின்னப்பனை என்ன செய்தாலும் கேள்வியில்லை. அதற்குத் தகுந்தாற்போல் நாகம்மாள் சங்கதி வேறு கிடைத்திருக்கிறது. -
எப்போதும் மணியக்காரருக்கு யோசனை சொல்வ தற்கு அநேக மந்திரிகள் உண்டு, அவர்களில் முதன்மை யானவர் நாராயண முதலி. இவன் ஒரு புளுகுணி, குண்டுப் புரட்டன். எங்கு என்ன நடந்தாலும் துளி விடாது வந்து சொல்வி விடுவான். இதற்கு இப்படிச் செய்ய வேண்டும்; அவர்கள் சங்கதி அப்படி அது இது என்றெல்லாம் யோசனை சொல்வான். மற்றவர் யோசனையானுல் மணியக்காரர் நிராகரித்து விடுவார்; நாராயணசாமி முதலி விஷயம் அப்படியல்ல. எங்கே கல்லெறிஞ்சால் எப்படி விழும் என்று தெரிஞ்சவன். சாதாரணமாகப் கோர்ட்டு விஷயங்களில் அபாரத் திறமை. மற்றும் சாட்சிக்குச் செல்லும்போது, சாப்பிடுவதற்கு எந்த ஒட்டலுக்குப் போனல் ரொம்ப திவ்ய மாயிருக்கும், குறிப்பிட்ட மனிதர்களே எங்கு அழைத்துச் செல்வது என்பதெல்லாம் மனப்பாடம் (பக்கம் 72) என்று மணியக்காரரையும், அவரது மந்திரியையும் நமக்கு அறி முகப் படுத்துகிருர், ஆசிரியர். -
ஏனைய பாத்திரங்களின் குணநலன்களை வாசகர்களே படித்து அநுபவிக்க வேண்டியதுதான் f
ஆர். ஷண்முகசுந்தரத்தின் தமிழ் நடைக்குச் சில உதாரணங்கள் : - г
'அடை மழைக் காலம் வந்து சேர்ந்தது. புரட்டாசி கழிந்து ஐப்பசி ஆரம்பம். வான வீதியில் எந்நேரமும் சாயை படிந்து கருமுகில்கள் கவிழ்ந்த வண்ணம் இருந்தன. திடீரென்று மழை கொட்டும். அடுத்த கணமே கம்மென நின்றுவிடும். எதையோ நினைத்துக் கொண்டதைப்போல மறுபடியும் சோவெனத் துளிக்கும். இப்படிப் பெய்யும் மழையைப் பார்க்கும்போது யாரோ ஒரு தாய், தன் வாவிப மகனைப் பறி கொடுத்ததை எண்ணி ஏக்கத்தால், பலபல' வென்று நின்று நின்று கண்ணிர் விடுவதைப் போலிருந்தது.
இங்ங்ணம் அடை மழை சொல்லாமல் கொள்ளாமல் வந்தாலும் பட்டிதொட்டிக்குப் போகிறவர்கள் நிற்கவே யில்லை. ஒலைக் குடைகளையோ, பனந்தடுக்குகளையோ அல்லது கோணிப் பைகளையோ போட்டுக்கொண்டு தங்குதடை யின்றி அவரவர் வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தனர். வயது வந்த கிராமச் சிறுமிகள் ஆடைகளைச் சரியாகக்கூட மார்பில் போடாமல் சில்லிட்ட சாரலில் இட்டேறித் தடத் தில் செல்லும் காட்சியே காட்சி! ஆட்டு மந்தைகளின் பின்னலோ, வேலி யோரங்களிலோ, காட்டின் நடுவிலோ அவர்கள் செல்லுவதைப் பார்த்தால், எங்கோ மாய உலகத்திலிருந்து வந்த மதன மோகினிகள் திரிந்து கொண் டிருப்பதைப் போலிருக்கும்!'" (பக்கம் 65). - '
முலாம் பூசிக்கொண்டிருந்த இயற்கை, தன் அழகுக் கதிர்களைக் கொஞ்சம் கொஞ்சமாக அடக்கிற்று. மரங்கள் உச்சியிலும், வீட்டுக் கூரையிலும் படிந்திருந்த தங்க நிறம், மெதுவாக மறைந்தது. இரவு தன் நீண்ட கரும்போர் வையை விரித்தது. இரவின் சாந்த மடியிலே பகதி ஜாதி கள் தலை சாய்த்தன. அந்த அமைதியான வேளையில்
2 சித்திரப் பாலை போன்று நாகம்மாள் அமர்ந்திருந்தாள். ஒவ்வொரு சருகின் அசைப்புக்கும் சட்டெனத் திரும்புவாள்' சிறு காற்றில் ஒலேகள் படபடக்கும்போது செருப்புச் சத்தம் என்று எண்ணி ஏமாறுவாள். அர்த்தமற்ற சத்தம் ஹோ" என எழும், திடுக்கிட்டுத் தலை நிமிர்வாள். கெட்டியப்பன் முன்னல் வந்திருக்கப்படாதா என்று சலித்துக் கொள் வாள். (பக்கம் 1.06)
ஆர். ஷண்முகசுந்தரத்தின் தமிழ் நடையை எளிய, இனிய, உணர்ச்சிகரமான தமிழ்நடை என்று சொன்னல் போதாது; அழகிய அற்புதமான தமிழ் வசனம் என்றும் கூறவேண்டும். இத்தகைய தமிழ்நடை கைவரப்பெற்ற அவர் ஒரு பாக்கியசாலி என்று சொல்லலாம் அல்லவா?
மற்ருெரு விஷயம்; முக்கியமான விஷயம்; இந்நாவலின் உரையாடல்கள் எல்லாம் கொங்கு மண்ணின் மணம் கமழும் பேச்சுத் தமிழில் அமைந்துள்ளன. அவற்றைப் புரிந்து கொள்வதில் சிரமமேயில்லை. நமக்கு அது ஒர் இன் அநுபவமாகவே இருக்கிறது.
- இத்தகைய கொச்சைத் தமிழ் நடை இந் நாவலின் தனிச் சிறப்பு என்றே கூறவேண்டும்.
இலக்கியத்தில் கொச்சை என்ற பிரச்னைக்கு வெகு அழகாகத் தீர்வு கண்டிருக்கிருர், ஆர். ஷண்முக சுந்தரம். கடைசியாக இந்நாவல் எழுதப் பெற்ற காலத்தையும் சற்று எண்ணிப் பார்க்கவேண்டும். o - 1941-మ, இரண்டாம் மகாயுத்த காலத்தில், இந் நாவல் வெளிவந்துள்ளது. х .
இது உலக அரங்கில் பாசிஸ் எதிர்ப்புப் போர் நிகழ்ந்த காலம்: 'வெள்ளையனே வெளியேறு!’ என்று நமது தேச விடுதலை இயக்கம் பொங்கி எழுந்த காலம்.

83 இந்தக் கால கட்டத்தில் மணிக்கொடி பரம்பரையைச் சேர்ந்த ஒருவரால் இந்நாவல் எழுதப்படுகிறது.
இந்நாவல் மனிதனின் எழுச்சியைப் பாடவில்லை; வீழ்ச்சி யைப் பாடுகிறது.
நமது கிராம மக்களின் பலவீனங்களே மறைக்கவில்லை; யதார்த்த நிலையைக் கீறிப் பிளந்து காட்டுகிறது.
இந் நாவலில் நன்மை வெற்றி பெறவில்லை; தீமை முடி சூட்டிக் கொள்கிறது; சதியும், சூழ்ச்சியும். வன்முறை களும் அரசோச்சுகின்றன. இது தேச பக்தியைத் தட்டி எழுப்பும் கதையல்ல; தேசத்தில் புரையோடிப்போன புண்ணை, ஜனசமூகத்துக்குக் காட்டும் ஜன்னல்!
இந் நாவல் வெளிவந்த சமயத்தில், மணிக்கொடி’க் காரர்களான புதுமைப்பித்தன், கு. ப. ராஜகோபாலன், பி. எஸ். ராமையா, சிட்டி, சிதம்பர சுப்ரமண்யம், சி. சு. செல்லப்பா, மெளனி, பிச்சமூர்த்தி, லா. ச. ராமா மிருதம், எம். வி. வெங்கட்ராம் ஆகியோர் நாவல்கள் எழுதியதாகத் தெரியவில்லை.
கந்தர்வ வாழ்க்கை என்ற பெயரில் ராஷ்டிரவாணி' யில் கி. ரா. வின் நாவல் ஒன்று வந்ததாக நினைவு. -
நாகம்மாளுக்கு முன்பாக பசி என்ற புதுமையான நாவலே, தனி மனிதனின் தத்துவக் கொந்தளிப்பைப் பிரதி பலிக்கும் நாவலை, சோதனை உணர்வுடன் க. நா. சுப்ர மண்யம் எழுதியிருந்தார். அதை அவரது பெரிய படைப் பின் ஒரு பகுதியென்றுதான் சொல்ல வேண்டும். '
பசி ஒரு தனித்தன்மையான நாவல் என்ருல், அதை யடுத்து வெளிவந்த நாகம்மாளும் மற்ருெரு புதுமையான தனித்தன்மையான, முழுமையான நாவல். காலஞ்சென்ற கு. ப. ராஜகோபாலனின் பாராட்டைபெற்ற நாவல். அவர் இந் நாவலுக்கு ஒரு அரிய முன்னுரை எழுதியிருந்தார்.

& 4 ஏனே, அந்த முன்னுரை பிற்காலப் பதிப்புக்களில் நீக்கப் பட்டு விட்டது. இது மிக வருந்தத் தக்கதாகும். -
மொத்தத்தில், ஆர். ஷண்முகசுந்தரத்தின் நாகம் மாள்', 1940 முதல் 1950 வரையுள்ள காலகட்டத்தில் வெளிவந்த தலையான இலக்கியப் படைப்புக்களில் ஒன்று; இந்தக் கால் நூற்ருண்டுக் காலத்தில், தமிழ் நாவல் இலக்கி யத்தில், தனித்து நின்று ஒளி வீசும் நவரத்தினம் !
இந்த அற்புதத் தமிழ் நாவல் இந்திய மொழிகளிலும், உலக மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட வேண்டும். அதற்குத் தமிழ்ப் பெருமக்களும், பேரறிஞர்களும் ஆவன செய்ய வேண்டும். - - - - -