எலிஸபெத் பேரட் பிரெளனிங் (ஆங்கிலம்)
காதலின் பொருட்டே காதல்செய்
தமிழில் ஃ செந்தில்குமார்.
நீ என்னை காதலித்துதான் தீரவேண்டும் என்றால்,
காதலின் பொருட்டன்றி
வேறு எக்காரணமும் விழையாதே..
“நான் காதலிக்கிறேன் அவளை
அவளது புன்னகைக்காக,
அவளது தோற்றத்துக்காக,
அவள் பேசும் மென்மொழிக்காக,
அவளை நினைத்தாலே இனிக்கிறதே அதற்காக,
அன்று அற்புதமானதொரு இன்னுணர்வை
உண்மையில் பெற்றோமே அதற்காக”
என்றெல்லாம் சொல்லாதே.
இவையாயும் இயல்பிலேயே, என் அன்பே,
மாறக்கூடும். நீ பின் மாற்றவும்கூடும்.
காதலை இழைத்து இழைத்து செய்தால்,
காதல் இல்லாமலும் ஒழியவும்கூடும்.
என் கன்னத்தில் வழியும் நீரைத்துடைக்கவென இரங்கி
உன் பெருங்கருணையைக் காட்டுவதற்காக
என்னைக் காதலிக்காதே.
உன் சுகத்தை அனுபவித்து அனுபவித்து,
செளகரியம் நெடுநாள் நீள,
அழுகையையும் மறக்கக்கூடும் ஓர் பிராணி.
உன் காதலையும் இழக்கக்கூடும் அதனால்.
காதலின் பொருட்டே என்னைக் காதலி.
நீ முன்பினும் அதிகமாய்
என்னைக் காதலிக்கலாம்,
காதலின் நித்தியம்வரை காதலிக்கலாம்.
https://www.poetryfoundation.org/poems-and-poets/poems/detail/43736
Sonnets from the Portuguese 14: If thou must love me, let it be for nought
Related Poem Content Details
If thou must love me, let it be for nought
Except for love's sake only. Do not say
I love her for her smile ... her look ... her way
Of speaking gently, ... for a trick of thought
That falls in well with mine, and certes brought
A sense of pleasant ease on such a day'—
For these things in themselves, Belovèd, may
Be changed, or change for thee,—and love, so wrought,
May be unwrought so. Neither love me for
Thine own dear pity's wiping my cheeks dry,—
A creature might forget to weep, who bore
Thy comfort long, and lose thy love thereby!
But love me for love's sake, that evermore
Thou may'st love on, through love's eternity.
Sonnets from the Portuguese 38: First time he kissed me, he but only kissed
Related Poem Content Details
First time he kissed me, he but only kissed
The fingers of this hand wherewith I write,
And ever since it grew more clean and white,...
Slow to world-greetings...quick with its “Oh, list,”
When the angels speak. A ring of amethyst
I could not wear here plainer to my sight,
Than that first kiss. The second passed in height
The first, and sought the forehead, and half missed,
Half falling on the hair. O beyond meed!
That was the chrism of love, which love’s own crown,
With sanctifying sweetness, did precede.
The third, upon my lips, was folded down
In perfect, purple state! since when, indeed,
I have been proud and said, “My Love, my own.”