கொந்தளிப்பு - சுந்தர ராமசாமி
CAMSCANNER & GOOGLE-OCR
அந்த நாளை நினைக்கும்போது, எனக்கு நடுக்கம்தான் ஏற்படுகிறது. அன்று என் கபோலம் சிதற. என் கபோலத்தால் ஒரு விரோதியின் கபோலம் சிதறிற்று. மரணத்தைத் தேர்ந்தெடுத் துக்கொண்ட விதத்தில் முழு வாழ்வுக்குமே ஒரு அர்த்தம் கிடைத்து விட்டது. அன்று நடந்ததை எல்லாம் ஏதோ அரைகுறையாகச் சொல்ல முடியுமே தவிர, தெளிவாக வர்ணிக்க முடியும் என்று தோன்றவில்லை. அன்றைய விடியலே அதற்கான விடியல் மாதிரி தான் பட்டது. வானத்து மூட்டம் எங்கும் கவிந்து பூமியை நோக்கிப் படர்ந்து கொண்டிருந்தது. ஒரு முகத்துக்கு மறு முகமோ, ஒரு மரத் துக்கு மறுமரமோ தெரியவில்லை. மண்ணை ஒட்டிக் கொஞ்சம் வெளிச்சம் புழுபோல் நெளிந்து கொண்டிருந்தது. கட்டிடங்களும் தாவரங்களும் உள்ளூர உருகிக் கொண்டிருந்தன. பறவைகள், மிகுந்தகலவரம் கொண்டிருந்தன. மின்னல் வீச்சுகளில் வரவிருக் கும் காலத்தின் துணுக்கு பயங்கரங்கள் அவற்றிற்குப் புலப்பட்டன வோ என்னவோ? அவற்றிற்குப் புலனாகும் ஒன்று எனக்கு ஆக வில்லை என்று தோன்றியபோது கலவரம் என்னையும் பிடித்து ஆட்டத் தொடங்கிற்று. புலப்படுபவைகள்கூட மங்கிப்போகட்டும் எனச்சோர்வு கொள்ளும்படி இருந்தது சூழல்.
பேரெழுச்சி பற்றிய செய்திகள் காலங்காலமாக என் காதில் விழுந்துகொண்டிருந்தன. என் முன்னோர்களும், அவர்களின் முன்னோர்கள் இதுபற்றித் தங்களிடம் கூறியிருப்பதாகச் சொன் னார்கள். என் காலத்தைச் சேர்ந்தவர்களும் இப்படியே நம்பி னார்கள். ஆனால் இதுகாறும் பொதுமையாக இருந்தது, இப் போது முனைப்பு தட்டி விட்டது என்று தோன்றிற்று. காலங் காலமாகக் கொண்ட பிரயாசைகளின் அவ்வளவு முகங்களும் இப் போது ஒன்று சேர்ந்து விட்டன என்றார்கள். ஆனால், அப்போதும் எழுச்சி இன்னவிதம் என்று யாருக்கும் கூறத் தெரிந்திருக்க வில்லை. கற்பனையால் பார்த்துக் கொண்டிருந்ததை வார்த்தை களால் வர்ணித்து கொண்டிருந்தார்கள். விவேகிகளுக்கு அப்போதும் சந்தேகம் ஏற்பட்டது. இதற்குமுன் குறித்திருந்த நேரங்களில் எல்லாம் பிசுபிசுத்துப் போனதுபற்றி அவர்கள் சரித்திர ஞானத்துடன பேசினார்கள். ஆனால், மனுஷன்களில் பலரும் வரும் என்று தான் நம்பினார்கள். மனுஷிகளும் நம்பினார்கள். இன்றும் துககம, இனிமேலும் துக்கம் என்பதை அவர்களால் ஏற்றுக் கொண்டு தொடர முடிந்திருக்கவில்லை. அவர்களுடைய துக்கங் கள் விளிம்புகட்டி விட்டன.
நான் ஊர்விட்டுக் கிளம்பும்போது உள்ளூர பயந்து கொண்டே கிளம்பினேன். மனித உள்ளங்களிலிருந்து பீறிடும் நெருப்பு என்னைப் பொசுக்கிவிடுமோ என்ற அச்சம் என்னை வாட்டிக்கொண்டிருந்தது. எனக்கு இன்னும் பார்க்க வேண்டும் என்றிருந்தது. பார்த்துப் பதிவுசெய்ய வேண்டும் என்றும் இருந் தது. கொந்தளிப்பில் நானும் ஆவேசம் பெற்று என்னை அழித் துக்கொள்ளும் தருணம் கூடும் எனில், அப்படியே நடக்கட்டும். புற எழுச்சியில் ஆவேசம் பெற்று மோசமான கோழைகளும் துணிச்சலான காரியங்களை ஆற்றியிருக்கிறார்கள். அன்று நிகழ இருப்பவற்றை மிக நுட்பமாக மூளையில் பதித்துக் கொள்ள வேண் டும் என எண்ணி, பிரக்ஞையால் மூளையை உருட்டிவிட்டுக் கொண்டிருந்தேன். என் ஜாக்கிரதைகள் இன்னும் சில கணங்க ளில் குலைந்து போய்விடும் என அப்போது என்னிடம் யாரேனும் கூறியிருந்தால் நம்பியிருக்க மாட்டேன். என் உடைமைகள் என் பையிலிருந்து பறிபோய் விட்டன. உடையில் உரசி, உடம்பில் உரசாமல் என்ன கள்ளத்தனமான விரல்கள்! விழிப்பு நிலையை நான் முற்றாக இழந்திருந்தேன் என்பதற்கு இது நிரூபணமா யிற்று. அப்போது வாகனத்தின் இரும்போசைகளும் எனக்குக் கேட்கவில்லை. மனிதச் சந்தடிகள் ஏதும் என் காதில் விழவும் இல்லை.
நான் ஏறிய வாகனங்களும் சரியில்லை. சரியான போதைக் கூட்டம் அங்கு. அ- பாவிகளா! இவ்வளவு பகிரங்கமாகவா? குடித்து, கஞ்சா அடித்து தலைசுற்றிச்சுழலும்போது, மீண்டும் க்ஞ்சா அடிக்கும் கூட்டம் பெண்கள் வேறு இடங்களுக்கு நழுவி யிருந்தார்கள். நான் சரியாக மாட்டிக்கொண்டு சரிய ஆரம்பித்து விட்டேன். ஒரு நாளும் நான் அவ்வளவு குடித்ததில்லை. என உடமைகளைத் திருடிக்கொண்ட கள்ள விரல்கள் என்னை ஒரு பூச்சிபோல் மாற்றி புட்டிகளில் இறக்கி குலுக்கியெடுத்து வெளியே Lன. என் கடிவாளங்கள் எல்லாம் அறுந்துபோய்விட்டன. அதுகாறும் நான் அவற்றை இழுத்துப்பிடித்துக்கொண்க: எவ்வித பொருளும் இல்லை என்றாயிற்று. தடை பழுதுறற வாக னம் பள்ளங்களில் உருளுவதுபோல் நா? சரிய ஆரம்பித்தேன். இநட் இருப்பவற்றைப் போசை' பொறிகள் என்ன பதிவு செய்யும்? இந்தப் போதைப் பொறிகள் அளிக்கும் செய்திகளை, இந்த பிரக்ஞை இனி எப்படி தொகுக்கும்? இதற்கு முன்னர் நடந் கது போலவே இப்போதும் நடந்துவிட்டதே. பொறிகளில் கசியும் போதைகளை முற்றாகத் துடைக்க எண்ணி நான் எடுத்துக் கொள் ளும்பிரயாசைகளும் பொறிகளைப் போதைகளில் முக்கும் காரியங்க ளாகச் சரிகின்றன. இதனால் எனக்கு ஏற்படும் மன ஆயாசம் கொஞ் சம் நஞ்சமல்ல. இவ்வாறு மனமுறிந்த ஒரு நேரத்தில், "தற்கொலை தவிர வேறு மார்க்கமில்லை எனக்கு" என நான் கூறியபோது நீங்கள் என்னிடம் மிகுந்த கோபம் கொண்டீர்கள். கயிற்றிலிருந்து விடுபட்ட பம்பரத்தின் துக்கத்தை நான் சொல்ல முற்படும் போது, சொல்லச் சொல்ல பம்பரத்திற்கும் கயிறுக்குமான உற வைப் பற்றியே சொல்லிக்கொண்டிருக்கிறேன். இந்த துக்கமும் சேர்ந்ததில்தான் நான் தற்கொலையைப் பற்றிச் சொன்னதே.
நான் எதிர்பார்த்ததைவிடச் சீக்கிரமாகவே அந்த ஊருக்கு வந்து சேர்ந்துவிட்டேன், தெரு விளக்குகள் எரிந்து கொண்டி ருந்தன. அவை விடிந்தும் எரியும் விளக்குகளா? அல்லது வரப் போகும் இருட்டை விரட்டவா? நான் எப்போது கிளம்பினேன்? எல்லாக் காலங்களிலும் நடந்திருந்த காரியங்கள் அப்போதும் நடந்துகொண்டிருந்ததால், காரியத்தை வைத்துக் காலத்தை எப்ப நிர்ணயிப்பது? அந்தக் கற்கட்டிடத்தின் படிகளில் மூன்று பெண்டி களைக் காவல் வீரர்கள் பிரம்பால் அடித்துக்கொண்டிருந்தார்கள். இவ்வாறு இவர்கள், பிரம்பால் அடிப்பதை, வெவ்வேறு இடத் திலும் வெவ்வேறு காலங்களிலும் நான் பார்த்திருக்க இங்கு இவர்கள் இப்போது அடிப்பதை வைத்து இது எந்த இடம் என்றோ, எந்தக் காலம் என்றோ எப்படிச் சொல்வது? அந்தப் பெண்களைப் போலவே இந்தப் பெண்களும் அசையாமல் உட் கார்ந்துகொண்டிருக்கிறார்கள். இருந்த இடத்தில் இருந்தே உடம்பை நெளிக்கிறார்கள். ரவிக்கையின் கீழே ஒருத்திக்கு தோல் உரிந்து ரத்தம் துளிர்த்திருந்தது. சுற்றிவர மனிதர்கள் நின்று கொண்டிருந்தார்கள். ஆடை அணிந்திருந்தார்கள். தாடி, மீசை இருந்தன. முகங்கள் இறுகிப் போயிருந்தன.
எனக்கு மயக்கமும் வயிற்றுப்புரட்டலும் வந்துகொண்டி ருந்தன. ஒரு ஆவேச வாந்தி ஆரம்பம் கொள்கிறது என்று நினைத் தேன். குப்பைத் தொட்டியைப் பிடித்தவாறே நின்று கொண்டி ருந்தேன். அப்படியானால் என் சாட்சியம் என்ன? என் பதிவுகள் எவ்வாறு? என் பங்களிப்பு எப்படி? சரித்திரம் எனக்காக எவ்வளவு தான் கதறித் துடித்தாலும், குப்பைத் தொட்டிப் பிடியைத் தளர்த்த முடியாது. அங்கு நின்று வாந்தி எடுத்தவாறு, வாந்தியெடுப்பு களின் இடைவேளைகளில் என்னென்ன பார்க்கமுடியுமோ அவற்றைப் பார்த்து என்னென்ன புரிகிறதோ அவற்றைப் பதிவு செய்யலாம். குப்பைத்தொட்டியை விட்டுத் தெருவில் குதித்து, தெருத் தெருவாக வாந்தியெடுத்து, வாந்தி எடுத்ததையெல்லாம் சரித்திரம் என்று சொல்லக்கூடாது என்று நினைத்தேன். நான் குடிக்காமல் இருந்திருந்தால் இன்னும் தெளிவாக இருந்திருக்க
அடர்த்தியான காடு ஊருக்குள் புறப்பட்டு வருவது போல் ஜனக் கூட்டம் வந்து கொண்டிருந்தது. தேனீக்களின் எண்ணற்ற கூடுகள் ஏக காலத்தில் கலைக்கப்பட்டது போல் பரவெளியில் ஹ2ங்காரம். போர் முழக்கத்தின் பீதியை விரோதிகளின் மனத் தில் ஆழப் பாய்ச்சும் ஹாங்காரம் அது. மிகப் பெரும் சாகஸம் கொள்ள இருப்பதை சரித்திரம் எவ்வளவு வலுவாக வெளிப்படுத்தி விட்டது. திட நிச்சயம் கொண்டிருக்கவில்லையெனில் அது இவ் வளவு பெரிய ஹ7ங்காரத்தை எடுப்பில் எழுப்பியிருக்க முடியாது, ஆக, இதற்கு முன் எப்போதும் வராமல் போன எழுச்சியல்ல இது. உருத்திரண்டு வந்துகொண்டிருக்கும் எழுச்சி. சரித்திரத்தில் மிகப்பெரிய கொந்தளிப்புக்கு சாட்சியம் அளிக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்திருக்கிறது.
நான் வாந்தி எடுக்க ஆரம்பித்தேன். இதுபோல் ரோஷம் கெட்டு நான் ஒருபோதும் வாந்தி எடுத்ததில்லை. என் குடல்கள் புறஉலகில் இழுக்கப்பட்டு, கண்ணுக்குப் புலப்படாத எந்த அசுத் தத் தொட்டிகளுடன் இணைக்கப்பட்டிருக்கின்றன? என்ன இது? இவ்வளவு அசுத்தங்களைக் குடலுக்குள் வைத்துக்கொண்டு சரித் திரத்தை எப்படிப் பதிவு செய்யப் போகிறேன்? ஜனக்கூட்டம் என்ன இப்படித் திரள்கிறது. ரோகிகள் இலட்சக் கணக்கில் கூடி விட்டார்கள். மருத்துவர்களுக்கு எதிராக அவர்கள்தானே கலகத் தை முதலில் ஆரம்பித்தார்கள்? ஆமாம். துக்கத்தின் எரிவாயுக் கிடங்குகளில் அவர்கள்தான் முதல் நெருப்பு கிழித்தார்கள். நாற் றிசையும் பரந்து பிடித்துவிட்டது ஜாவாலை, கடல் அலைகள் ஜுவாலைகளாக மாறிக் கரையேறி வருகின்றன. தென்னந் தோப்புகள் பற்றி எரிந்தன. என்னைச் சுற்றி எங்கும் நீக்கமற நோயாளிகள். கண்ணுக்குப் புலப்படும் உறுப்புகள் அனைத்தி லும் நோய் கொண்டவர்கள். புலப்படும் உறுப்புகள் பளபள வென்று இருக்க, புலப்படா உறுப்புகள் உள்ளுர அழுகிக்கொண் டிருப்பவர்கள். இவர்கள் மத்தியில் எனக்குப் பெரும் ಆಹ೩೦ கிடைத்தது. சத்தத்தை அமுக்குவதற்குப் பதிலாக, ஊக்குவித்துக் கொண்டு ஓங்கார வாந்தி எடுக்க ஆரம்பித்தேன். வாந்தியில் தான் எத்தனை நிவர்த்தி குடல் மட்டும் எடுக்க இவ்வளவு நிவர்த்தி என்றால் சகல உறுப்புகளும் எடுக்கத் தொடங்கினால் எவ்வளவு நிவர்த்தி ஏற்படும் இந்த ரோகிகள் உருவாக்கும் சூழல் தான் எவ்வளவு சுதந்திர வாந்திக்கு இட்டுச் செல்கிறது.
ஒரு வயோதிக ஸ்தி? என் தலையைப்பிடித்துக்கொண்டாள். அவள் ஏதும் என்னை விசாரிக்கவில்லை. உடற்பிரயாசையுடன் பலர் நகர்ந்து வந்து என்னை அரவணைக்க முற்படுகிறார்கள். என் உடல் குழைந்து, தலை சரிய முற்பட்டபோது, என் சிரத்தின் அடியே ஒரு மடி வந்தது. அது யாருடைய மடி என்று ஆராய எனக்குத் தெம்பில்லை. அங்கு ஒவ்வொருவரும், ஒவ்வொருவருக் காகவும் நெகிழ்ந்துகொண்டிருப்பதை நாள் உணர்ந்தேன். ஒரு முந்தானை என் முகத்தைத் துடைத்தது. என்னால் நான் வாத்தி யெடுக்கப்பட்டது போல் அவ்வளவு அசுத்தமாக இருந்தேன். ஆனால், என்னை சுச்ருவித்த விரல்களின் குளிர்ச்சி என் உடல் பட்டு ஜில்லிட்டது. ஜீவன்கள் அங்கு அவற்றின் பிறப்பின் கூறு களையும் வளர்ப்புக் கோலங்களையும் தோற்ற குணங்களையும் வீசி உதறி, மூலப் பண்புகளில் முயங்கப் பேராவேசம் கொண்டி ருந்தன. ஒரு தடவை நான் லேசாகக் கண் திறந்து பார்த்தேன். விழி ஓரங்களில் இருளின் ஒரு பெரிய துண்டு ஒட்டிக்கொண்டி ருந்தது. அதை ஊடுருவிப் பார்த்த போது தேள் கூட்டை பூதக் கண்ணாடியில் பார்ப்பதுபோல் திக்பிரமை அடைந்தேன். என்ன இப்படி கூட்டம் திரள்கிறது! புசுபுசுவென்று எங்கிருந்து வந்து கொண்டிருக்கிறார்கள் இப்படி! ஊர் ஊராகக் காலி செய்துவரு கிறார்களா? ஆறுகள் தாண்டி, மேடு பள்ளங்களில் ஏறி இறங்கி, காட்டுப்பாதைகளில் புகுந்து புறப்பட்டு வருகிறார்கள் போலிருக் கிறது. சகல பேதங்களையும் அழித்துக்கொண்டு சகல ஜீவன்சு ரூம் ஒன்றாகத் திரண்டுவிட்டன. ஜீவன்கள் ஒன்றுகூடித் தங்கள் மொத்த வடிவத்தை நீளமாக அமைத்துக்கொண்ட வடிவத்திற்கு அப்பால் அவர்கள் இல்லாமல் இருக்கும்போதுதானே ஊர்வலம் என்பது சாத்தியம்? இங்கு காலூன்ற இடமில்லாமல் ஒவ்வொரு வரும் மற்றவர் மீது புதைந்துகொண்டு நிற்கும்போது எங்கு அவர்கள் ஒதுங்குவது? காடுகள் புறப்பட்டது போலவும், மலைகள் நகர்வது போலவும் இவர்கள் வந்துகொண்டே இருந்தால் கொள் ளிடம் ஏது?
எனக்கு மயக்கம் போட்டுவிட்டது. அப்போதும் ஒரு பிர காசமான மெழுகுவர்த்தி என் மனவெளியில் எரிந்து கொண்டிருப் பதை உணர்ந்தேன். மஞ்சளும் உதாவும் கலந்த அந்த சுட்ரின் அழகை எப்படி வர்ணிப்பது? பதட்டம் இல்லாமல் உடம்பைச் சுருக்கிக்கொண்டு அது மேலெழப் பார்க்கிறது. அதன் துடிப்பைப் பார்க்கும்போது நிமிர்ந்து வானக்கரை முட்டினாலும் அது அடங்காது என்று தோன்றுகிறது. அதன் வென்; எனக்கு சகல காட்சிகளும் தெளிவாகப் புலப்பட்டன. முன்னால் மூளை மட்டும் பிரக்ஞையாக இருக்க, இப்போது உடம்பின் ஒவ்வொரு உறுப்பும், ரோமக்கால்களும் பிரக்ஞையாகி விட்டன. என் கைகள் தடவிவிடப்படுவதையும், என் நெற்றி அமுக்கப்படுவதை யும், என் தலைமயிர் கோதிவிடப்படுவதையும் உணர்ந்தேன். காற்றின் ஸ்பரிசங்களையும் என் ரோமக்கால்கள் வழி. மிகுந்த ஆத்ம நிறைவுடன் சுவீகரித்துக் கொண்டேன். என் மனவெளியைப் பனித்துளிகளால் மெழுகுவதுபோல் இருந்தது.
ஒவ்வொருவரும் அவர்களுக்குரிய பள்ளதாக்குகளைக்காலி செய்துகொண்டு வந்துவிட்டார்கள். சுதந்திரம் இல்லை எனில், பொன் கொண்டு, பெண் கொண்டு பெற்றெடுக்கும் குழந்தைகள் கொண்டு ஏதும் புண்ணியமில்லை என்பது அவர்களுக்குத் தெளி வாகிவிட்டது. இந்த எளிய உண்மையை இவர்களுக்குக் கற்றுத் தரும் முயற்சியில் கோடானு கோடி வருஷங்கள் தோல்வி கண்ட சரித்திரம் இப்போது வெற்றி கண்டு விட்டது. அவர்களுடைய சகல இருப்பிடங்களையும் இனி வள விலங்குகள் எடுத்துக் கொள்ளட்டும். அவர்கள் உடல் வருந்திச் செழிக்க வைத்த பயிர் கள் எல்லாவற்றையும் கொடிய மிருகங்கள் மேயட்டும். அவர்கள் காலங்காலமாகக் கட்டியெழுப்பிய வீடுகள் மீதும், பண்புகள் மீதும், ஊர்வனவோ இழைவளவோ புகுந்து புறப்படட்டும். அவர் களுடைய குழந்தைகளின் தொட்டில்களில் இனி பாம்புகள் குஞ்சு பொரிக்கட்டும். மரணங்களுக்குப் பயந்து அவர்கள் இதுகாறும் சகித் துக் கொண்டு வந்திருக்கிறார்கள். இனியும் சகிப்பது சாத்திய மில்லை. எந்த மரணத்துக்கு அவர்கள் இதுகாறும் பயந்து வந் தார்களோ, அந்த மரணத்தைக் கொடியாகப் பிடித்துக்கொண்டு இவர்கள் இப்போது புறப்பட்டு விட்டார்கள். இனி, கத்தியைக் காட்டியோ, அம்பைக் காட்டியோ, வேலைக் காட்டியோ அவர் களைப் பயமுறுத்த முடியாது. -
எனக்குப் பலர் விசிறினார்கள். நான் நகர்ந்துகொண்டி ருப்பதும் எனக்கு அப்போது தெரிந்தது. தோளில் தூக்கிக்கொண்டு போகிறார்கள்போல் இருக்கிறது. விரிந்து, வியாபித்து, பரந்து கிடக்கும் ஒரு மலை, பூமியின் உறவில் மனம் கசந்து அடிவயிற்றை உருக்கிக்கொண்டு புறப்பட்டதுபோல் ஐனக்கூட்டம் நகர்ந்து கொண்டிருக்கிறது. அடிவானத்தில்தெரியும்பள்ளத்தாக்கைநோக்கி நகர்கிறது இந்தக் கூட்டம். கழுகுகள் மட்டுமே வாசம் செய்யும் பள் ளத்தாக்குஅது. அங்கு பல கொடிய விலங்குகள் எதிர்விளைத் தெரி யாமல்கத்தி, அந்தக்கத்தலின் பயங்கரமான எதிரொலிச்சுழற்சியால் தாக்கப்பட்டு இறந்திருக்கின்றன. தலையால் வானத்தை முட்டி, பாதங்களால் மேகத்தைத்துவைத்துக்கொண்டிருக்கும் பள்ளத்தாக்கு கள் அவை, கீழே இருந்து நெடிதுயர்ந்து மேலோங்கும் மரங்கள் எதுவும் அதன் பாதங்களைத் தொட்டதில்லை. அந்த ராக்ஷஸ torrir களின் அடர்த்திக்கு வானவெளி போதாமல் ஒன்று மற்றொன்றுள் பாய்ந்து, கிழித்துக்கொண்டு வெளியே வந்துகொண்டிருந்தன. கீழேயிருந்து தனித்தனியாகப் புறப்பட்டவை மேலே பந்தலாகி ஒன் றுடன் ஒன்று பின்னிக்கொண்டிருந்தன. பள்ளத்தாக்கின் சிரசு என்று சொல்லும்படி இருந்தது ஒரு வழுக்கை மலை, அதில் சாய்ந்து இளைப்பாறிக்கொண்டிருந்தது வானம்
தூரத் தொலைவிலேயே நான் கவனித்துவிட்டேன். பள்ளத் தாக்கின் கீழே நெடித்துயர்ந்த மரங்களிலெல்லாம் இலை காய் தெரியாமல் ஜீவன்கள் தொங்கிக்கொண்டிருந்தன. குரங்குகள் என்று தான் முதலில் நினைத்தேன். அப்படியானால் வால்கள் எங்கே? குரங்குகள் அல்ல. ஆடையற்ற மனிதர்கள். ஆடைகளை வழி நெடுகக் களைந்துகொண்டு வந்திருக்கிறார்கள், ஆடை களைக் களைந்து தொங்கிக்கொண்டு கிடந்தால் இனங்கான முடியாது என்ற கற்பனை போலும்,
அட, பாவிகளா! நீங்கள் செய்தகொடுமைகளை எல்லாம் உங்கள் ஆடைகளா செய்தன? நீங்கள் செய்த அவ்வளவு கொடு மைகளும் உங்கள் விழிகளில் பிதுங்கி நிற்கும் போது, எங்கு அந்த விழிகளைப் பறித்து எறிவீர்கள்? ஒவ்வொரு முகத்தையும் நான் கூர்ந்து கவனித்தேன். எல்லோருக்கும் தெரிந்த விரோதிக்ள் அவர்கள். சிறிது காலம் அங்கு தொங்கிக்கொண்டு கிடந்தால், தலைகளைத் தப்ப வைத்துக்கொண்டு மீண்டும் ஊருக்குள் வரலாம் என்ற சப்புக்கொட்டல் போலிருக்கிறது. அது இனி நடக்காது. இப்போது நீங்கள் வெட்டவெளிச்சமாகி விட்டீர்கள். மனிதகுலம் இதுகாறும் பேணிக் காத்து வந்த சகல பயிர்களையும் நீங்கள் அழித்துவிட்டீர்கள்.
முழு ஜனமும் இப்போது மழுங்கல் பாறையில் ஏறி விட் டது. அப்போது சற்றும் எதிர்பாராதவிதமாக ஒரு காரியம் நடந் தது. இதுபோன்ற ஒரு யோசனை அவர்களுக்கு இருக்கக்கூடும் என்று நான் அறியவேயில்லை. மலையில் இருந்து ஒவ்வொரு வராகப் பள்ளத்தாக்கை நோக்கிக் குதித்தார்கள். கனத்தோறும் குதித்தவர்களின் எண்ணிக்கையை மதிப்பதுகூடச் சாத்தியமில்லை. நீரில் குதிப்பதுபோல் அவர்கள் குதித்தார்கள். மரணத்தின் கொடி யை ஏந்திப் பிடித்துக்கொண்டு அவர்கள் குறி தப்பாமல் குதித் தார்கள். தலைகீழாக வந்த சிரங்கள், மரத்தில் தொங்கிக்கொண் டிருந்த சிரங்களில் மோதின. கபோலங்கள் மோதிப் பிளந்து தெறித்தன. அந்த மோதலில் வெளிப்பட்ட சத்தம் மலை முகடுகளில் எதிரொலித்து சுருண்டு சுருண்டு வந்தது. அந்தச் சத்தம் வன விலங்குகளுக்குக் கேட்டிருக்கும். காட்டைத் தாண்டி அந்தச் சத்தம் ஊருக்குள் புகுந்து, ஊர்வனவற்றிற்கும் பறப்பனவற்றிற் கும் கிலியை மூட்டியிருக்கும். ஊர் தாண்டி மலை தாண்டியும் கடல் தாண்டியும் எங்கேனும் மனித ஜீவன்கள் மிஞ்சியிருந்தால் அவர்களை அந்தச் சத்தம் சென்று அடைந்திருக்கும்.
கடைசி ஜீவனாக மிஞ்சிவிடக் கூடாது என்று நான் பயந்தேன். அப்படி மிஞ்சினால் அதுபோல் வேறு அவமானம் ஒன்றும் இல்லை. அப்போது எனக்கு வாழ்க்கையும் இல்லை. மனித ஜீவன்கள் அற்ற இடத்தில் உடல் மிஞ்சிக் கிடப்பது வாழ்க்கை ஆகாது என்பதை நான் நன்றாக அறிவேன். ஜீவன்களுடன் ஜீவன்கள் கொள்ளும் உறவு சாத்தியமில்லை எனில், மரணத் துடன் ஜீவன்கள் கொள்ளும் உறவே வாழ்க்கை. நானும் குதித் தேன். எனக்கும் குறி தப்பவில்லை. ஒரு கபாலத்தைச் சிதறடித் துக்கொண்டு என் கபாலம் சிதறிய சத்தம், என் காதில் விழுந் தது. நான் சிதறடித்த கபாலம் யாருடையது என்று எனக்குத் தெரியாது. ஆனால், அது சிதறடிக்கப்பட வேண்டிய கபாலம் என்பதில் எனக்கு எவ்விதச் சந்தேகமும் இல்லை. Ο
மீட்சி - 1985