தொன் க்விஹோதே. :: கார்லோஸ் ஃபுயண்டஸ்
Hackett Memorial Lecture-ன் பொருட்டு 1975ல் கார்லோஸ் ஃபுயண்டஸ் எழுதி வாசித்த
டுரை. டோபியாஸ் ஸ்மோல்லெட் மொழியாக்கத்தில் The Modern Library, New
(2004) வெளியிட்டுள்ள 0௦ஈ பெல்! நூலுக்கான முன்னுரையாக இடம்
பெற்றுள்ளது. தமிழில்: சா. தேவதாஸ்
some scanned pages are not clear So OCR very bad
புது எழுத்து - 15 / 2007
மறுமலர்ச்சி என்னும் கடல் வெள்ளத்திற்கும் எதிர்சீர்திருத்தவாதம் என்னும் கடல் வடிதலுக்கும் இடையே சிக்கிக் கொள்ளும் செர்வாண்டிஸ், ராட்டர்டாமின் எராஸ்மஸைப் **பற்றிக் கொள்கிறார்.
ஸ்பெயினில் எராஸ்மஸின் பாரியதாக்கம் தற்செயலானதாக இருக்க முடியாது. நம்பிக்கை மற்றும் பகுத்தறிவின் மெய்மைகளுக்கும் பழமை மற்றும் புதுமையின் காரணங்களுக்கும் இணக்கம் காண்பதற்காகப் போராடிக் கொண்டிருந்த மறுமலர்ச்சி மனிதராக அவர் சரியாகவே அடையாளங் காணப்பட்டார். செர்வாண்டிஸின் முறையான கல்வியைப் பொறுத்தவரை, அவர் தனது அசிரியரான யுவான் லோபஸ் டெ ஹோயேஸ் மூலமாக எராஸ்மஸ் சிந்தனைகளில் தோய்ந்தவர். ஹோயோஸ், எராஸ்மஸின் ஸ்பானிய சீடர்.
செர்வாண்டிஸின் மீதான எராஸ்மஸ் தாக்கத்தை மூன்றங்கங்களாகக் காணலாம். அவை எத்தத்துவாசிரியருக்கும் நம் நாவலாசிரியருக்கும் பொதுவானவை: உண்மையின் இருமைநிலை, தோற்றங்களின் மாயத்தன்மை மற்றும் மடமையைப் போற்றுதல். எராஸ்மஸ் மறுமலர்ச்சிக்கால இருமைநிலையைப் பிரதிபக்கின்றார்: புரிதல், நம்பிக்கை கொள்வதினின்றும் வேறாகலாம்.
ஆனால், புறத்தோற்றங்களை வைத்து முடிவுக்கு வருவதில் பகுத்தறிவு அலுத்துப்போய்விடும். “ஒன்றுக்கொன்று நேர்எதிரான இருமுகங்களைக் கொண்டிருந்த அல்ஸியையாடெஸின் நிசப்தங்கள் போலவே, மானுட அம்சங்கள் அனைத்துமே இரு அம்சங்கள் கொண்டிருப்பவை; இவ்வகையில், முதல் பார்வைக்கு மரணமாகத் தோன்றியது, நெருங்கிப் பார்க்கையில் உயிராக இருக்கும்” ( Praise of Folly). அவர் கூறிக்கொண்டு போகிறார். “விஷயங்களின் யதார்த்தம்... அபிப்பிராயத்தினையே சேர்ந்தது வாழ்க்கையிலுள்ள ஒவ்வொன்றும், எந்தவொரு உண்மையிலும் நாம் உறுதி கொள்ள முடியாதபடிக்கு, அவ்வளவு வேறுபட்டதாக, அவ்வளவு எதிரானதாக, அவ்வளவு இருண்மைமிக்கதாக உள்ள து”.
தொன் க்விஹோதே உலகளாவியதன் மொழிபேச, சாஞ்சோ பான்ஸா குறிப்பானதன் மொழிபேசுகிறான்; நாயகன் நம்பிக்கை கொள்ள, துணைநிற்பவன் சந்தேகிக்கிறான்; ஒவ்வொருவரின் தோற்றமும் மற்றவரின் யதார்த்தத்தால் வேறுபடுகிறது, இருண்மையடைகிறது மற்றும் எதிர்க்கப்படுகிறது: சாஞ்சோ நிஜமனிதன் எனில், அப்போது அவன், தொன் க்விஹோதேயின் மாயஉலகில் பங்கேற்பவனே; அனால் தொன் க்விஹோதே மாயமனிதன் எனில், அப்போது அவன், சாஞ்சோவின் யதார்த்த உலகில் பங்கேற்பவன் அகிவிடுகிறான்.
தெய்வீகக் காரணத்தில் மயக்கமுற்றிருந்த காலகட்டத்தில், எல்லா விஷயங்களையும் விட்டுவிட்டு எராஸ்மஸ் மடமையைப் போற்றி எழுதுவது, சிந்தனை வரலாற்றின் முக்கியமான புதிர்களுள் ஒன்றாகும். எனினும், இப்பைத்திய நிலையில் ஓர் ஒழுங்குமுறை இருந்தது. பகுத்தறிவினிடமிருந்தே அவசர அழைப்பொன்றினை எராஸ்மஸ் பெற்றிருந்தது போலிருக்கிறது: கடந்த காலத்தில் நம்பிக்கை இருந்தது போல், நான் இன்னொரு தனிமுதலாகி (65000) விடக்கூடாது - அப்போது நான் என் பகுத்தறிவின் பகுத்தறிவை இழந்து போவேன். எராஸ்மஸின் மடமை இருமடங்கான முரண்கவை நடவடிக்கையாகும் பொய்மையான அறுதிகள் மற்றும் இடைநிலைக்காலத் தில் இணிக்கப்பட்ட மெய்மைகன் ஆகியவற்றினின்றும் ஒரே வேளையில் அது மடையனை விலக்கிவிடுகின்றது: இருப்பினும் பசூத்தஜிவின் மிகே அளப்பெரும் சந்தேகத்தை விசிவிரடுகின்றது
... இருபண்பாடுகளின் முச்சந்தியில் நிறுத்தப்பட்ட எராஸ்மஸ் மடமை. இரண்டின் அறுகிகளையும். இணக்கம்காணச் செய்கிறது; இப்பைத்திய நிலை. நம்பிக்கையின் நெஞ்சத்திலே விமர்சனாபூர்வமாக பதிக்கப்பட்டதாகும்: பகுத்தறிவின் -நெஞ்சத்திலேயும் கூட. எராஸ்மஸின் பைத்தியதிலை. மனிதன் மனிதனை வினவுவது. பகுத்தறிவு பகுத்தறிவை. வினவுவதே ஒழிய. மாறாக, கடவுளாலோ பாவத்தாலோ சாத்தானாலோ வினவப்படுவதல்ல. இவ்வாறாக விமர்சனாயூர்வ மற்றும் மூரண்குவையான மடமையால் இணக்குவிக்கப்பட்ட மனிதன். விதிக்கோ நம்பிக்கைக்கோ கட்டுப்பட்டவனாக இருப்பதில்லை, அதேவேளையில் பகுத்தறிவின் அறுதியான எஜமானனாகவும் இருப்பதில்லை
எராஸ்மஸினால் பிரதிபக்கப்பட்ட ஆன்மீக யதார்த்தங்கள்: இலக்கியத்தளத்தில் எவ்விதம் மொழியாக்கம் செய்யப்படுகின்றன?.... வார்க்கைகள் நடவடிக்கைகளாகுகன்றன. வார்த்கை ஒரு வாளாகுகின்றது. மற்றும் ஹேம்லட்டின் வாளால் இலக்கியவாளா௱ல் துளைக்கெடுத்துப்படுகிறான் பொலோனியஸ். வார்த்தைகள். வார்த்தைகள்... வார்த்தைகள் - முணுமுணுக்கின்றான் ஹேம்லட்: அதனை அவன்! இழிவுபடுத்தும்வகையில் கூறவில்லை: எராளமான சூஇப்பணர்த்துதல்கள்! இவ்வாறு. இலக்கியம் என்ற ஒன்றின் இருப்பினை, அவன் வெறுமனே சுட்டிக்காட்டுகின்றான். தெய்வீக வினைச் சொல்ன் (௮! நிலைநிறுத்தப்பட்ட. சமுக அமைப்பின் வெளிப்படையான வாசிப்பாக இல்லாது போயுன்ன ஒரு புது இலக்கியம்: ஆனால், கடந்த காலத்தின் மதவியல் மற்றும் சமூகவியல்! அமைப்புகளைப் போன்று இசைவான (௮! சந்தேகிக்கமுடியாக புதியதொரு மானுட அமைப்பைப் பிரதிபலிக்கின்ற அடையாளமாக மாற முடியாது போயிருப்பது.
தொன் க்விஹோதே. வியர் அரசன் மற்றும் மேக்பெத் ஆகிய அனைத்தும் ஒரே பிறந்த நாளான 1605ஆம் அண்டினை க் கொண்டிருப்பது. தற்செயலானதாக இருக்க முடியாது போகலாம். உலகின் இருகால! கட்டங்களானது இந்த இடைநிலை மாறுதலை நாடகமாக்கிட. உலகின்! மேடைமீது இருமுட்டாள்களும் ஓர் இளம் கொலையாளியும் ஒரே வேளையில் தோன்றுவது “நாம் மூவரும் திரும்பவும் எப்போது சந்திக்கலாம்?” என்று சூனியக்காரிகள் வினவுவது: “என் வாளின் மீதே நான் ஏன் மடியவேண்டும்?” என்று மரணமடைய ஆயத்தமாகும் மேக்பெதி வினவுவது மற்றும் “என் முன் நான் காண்கின்ற இது சூறுவானளா?”, என்னும் அடிப்படைக் கேள்விகள் என கேள்விகளால் ஆன நாடகம் “மேக்பெதி' என்கிறார் இ. வில்சன் நைட் நட்சத்தாங்களும் இராகணங்களூம். கோள்களின் தாக்கமும் விண்ணக உருக்களால் ஆன நம் அரசின் அரசாங்கமும், திசைமாறிப்போன மண்ணக அம்சங்களின் படிமங்களுடன் கலந்து போகின்ற கொந்தளிப்பான பிரபஞ்சத்திருந்து பெறப்பட்ட மாட்சிமைமிகு உருவகங்களால் ஆன நாடகம் “லியர் அரசன்”. விண்ணகம் மற்றும் பூமியின் இப்புயலின் மத்தியில், ஒரு முட்டாளின் துணையுடன் மட்டும், ஏற்கனவே தான் அறிந்துள்ளதற்கும் அதிகமாக அறிந்து கொள்ள இயலாது, வேதனைமிக்கதும். தனிமையானதுமான இயற்கை உலகிற்குள் ஒன்று கலந்தவனாக, நிராதரவான திழவன் ஒருவன் தத்து நடை போடுகின்றான். உலகமெல்லாம் ஓரு நாடகமேடை, அதனின்றும் பேசப்படும் வார்த்தைகள் சப்தமும் சீற்றமும் நிறைந்தவை. உலகின் அரசு நில்லாது போய்விட்டது மற்றும் மேடைமீது தத்தி நடக்கும் நடிகன் அலைபாய்கின்றதும் அனாதையான துமான வார்த்தைகளைப் பேசுகின்றான்: நம் தந்தையை இழந்திருக்கிறோம், ஆனால் நம்மை கண்டறிந்திருக்கவில்லை. வார்த்தைகள் தெளிவின்மை மற்றும் புதிரின் வாசனமாகின்றன. அனைத்தும் சாத்தியமே, என்கிறார் மர்ஸியோ ஃபிளர்னோ. அனைத்தும் சந்தேகத்தில் உள்ளன என்கிறார் ஜான்டன். ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் உச்சரிக்கப்பட்ட இவ்விருவாக்கியங்களுக்கிடையே, ஒளி ஊடுருவாத வட்டமாக புதிய இலக்கியம் தோற்றமளிக்கிறது - அங்கே, ஹேம்லட் தன் முறையான பைத்திய நிலையை, ராபின்ஸன் க்ரூுஸோ, தன் நன்னம்பிக்கை சார்ந்த பகுத்தறிவுவாதத்தை, செவில்லேயின் டான் யுவான் மதச்சார்பற்ற பாயல் தன்மையை மற்றும் புனித யோவான் தனது விண்ணகக் காமவியலைப் பிரதிநிதித்துவப் படுத்தமுடியும்: இலக்கியத்தில் அனைத்தும் சாத்தியமா கின்றது.
இடைக்காலத்துப் பேரண்டத்தில், தெள்ளத்தெளிவான நிலையில் அங்ககரிக்கப்பட்ட அடையாளங்களுக்கேற்ப, ஓவ்வொரு யதார்த்தமும் இன்னொரு யதார்த்தத்தை வெளிப்படுத்திக் காட்டிற்று ஆனால் கோபர்நிகஸ் விட்டுச் செல்லும், மிகவும் நிலையற்றதும் தெளிவற்றதுமான உலகிலே இம்மைய அடிப்படைகள் எப்போதைக்குமாக காணாது போகின்றன.
அனைத்தும் சாத்தியம், ஆனால் அனைத்தும் சந்தேகத்தில் உள்ளன. அனைத்தும் ஒத்திசைவை இழந்துள்ளன. மனிதாய உறுதிப்பாட்டின் விடியலிலே சந்தேகங்கள், விமர்சனங்கள், கேள்விகளால் தனிநபர் தாக்குதலுக்குள்ளாகின்றான் - இவற்றைக்கொண்டு தான் கோபர் நிக்கஸும் கலீலியோவும் பிரபஞ்சத்தில் அடங்கி இருந்த அற்றல்களை விடுவித்தனர்; குள்ளமாக்கப்பட்ட தனிநபர், அடக்கி வைக்கப்பட்ட தன் வேட்கைகளை, கட்டற்ற பெருமிதத்தை, தன் அரசியலதிகாரத்தின் குரூர பயன்பாடுகளை, சூரியனது புதிய நகரம் குறித்த கற்பனாவாதக் கனவினை, பிரபஞ்சத்தின் புதிரானதும் ஊமையானதுமான வெளியை எதிர்கொள்வதற்கான, புதிய மானுட. வெளியின் பாலான தாகத்தை, பிரம்மாண்டமாக வெளிக்காட்டும் அளவுக்கு விரிவுபடுத்தினர்: புதிய உலகின் கண்டுபிடிப்பிலும் Piero della Francesca -வின் சுவரோவியங்களிலும் தென்படுகின்ற வெளிசார்ந்த வேட்கை அது.
எதனையும் மறுக்கக்கூடாது, என்றெழுதுகிறார் ஃபிஸினோ:
அதலபாதாள சக்திகளின் குரூர வடிவங்களிருந்து, அனுபூதியாளர்களால் விவரிக்கப்படும் தெய்வீக ஞானப்படி நிலைகள் வரையிலான, படைப்பின் ஒவ்வொரு தளத்தையும் மானுட இயல்பு கொண்டுள்ளது; எதுவும் நம்பமுடி யாததல்ல, எதுவும் சாத்தியமற்றதல்ல. நாம் மறுதலிக்கின்ற சாத்தியப்பாடுகள் நாம் புறக்கணிக்கின்ற சாத்தியப்பாடுகளே. உல்லாசியும் துறவியும், டான்யுவானும் ப சவோனரோலாவும், செஸேபர் போர்கியாவும் ஹெர்னான கோர்டெஸகம், கொடூரவாதியும் சாகசக்காரனும், மார்லோவின் ஃபாஸ்டும் ஃபோர்டின் முறையற்ற காதலர்களும், மாக்கியவல்லியின் . இளவரசனும் தாமஸ் மோரின் கற்பனாவாதப் பயணியும், கலகக்கார அறிவும் கலகக்காரத் தனைமயும் (0) அனைத்தையும் உள்ளடக்கும் கற்பனை: : தவறுகள் ஒருபோதும் தொன்மையான அமைப்பினை மறுநிர்மாணம் செய்வதில்லை. பெருமிதம், வேட்கை, அறிவு, சந்தோஷம் மற்றும் அதிகாரம் என்னும் தற்சார்பான அக்கினிகளில் அவை தம்மை எரியூட்டிக் கொள்கின்றன. ஆனால், அவை வெல்லப்பட்டாலும், விமர்சனாபூர்வ உணர்வு அவற்றை நிறுவியமை காரணமாக, இப்புதிய யதார்த்தங்களை விமர்சனாபூர்வ உணர்வினால் சந்தேகிக்கப்படுகின்றன.
|
அனைத்தும் சாத்தியம். அனைத்தும் சந்தேகத்தில் உள்ளன. கேஸ்டிலேயின் மத்திய பீடபூமியின் வறண்ட லா மஞ்சா சமவெளியிருந்து வரும் கனவான் (hidalgo) மட்டுமே உறுதிப்பாட்டின் நெறிகளைப் பின்பற்றுகிறான். அவனைப் பொறுத்தவரை எதுவும் சந்தேகத்தில் இல்லை, அனைத்தும் சாத்தியம். விமர்சனத்தின் புது உலகத்தில், தொன் க்விஹோதே நம்பிக்கையின் நாயகன். இந்நம்பிக்கை அவனது வாசிப்பிருந்து வருகின்றது, அவனது வாசிப்பு ஒரு வித பைத்தியமானவை. (வாசிப்பு மற்றும் பைத்திய நிலைக்கான ஸ்பானியச் சொற்கள் இத்தொடர்பினை வலுவாக உணர்த்துகின்றன: வாசிப்பு: (பாக; பைத்தியநிலை: locura) EN: அக, வாசிப்பின் உடனடித்தளத்தில், தொன் க்விஹோதே தன் மூளையை வாடி வதங்க வைத்த, முந்தைய வாசிப்புகளின் நாயகன். ஆனால் வாசிப்பின் இரண்டாம் தளத்தில், “தொன் க்விஹோதே” என்னும் தலைப்பிடப்பட்ட புத்தகத்தின் வார்த்தைப் பிரபஞ்சத்தில் உள்ள வார்த்தைகளின் நாயகன் ஆகின்றான். சாகச நாவல்களின் வாசகனாக இல்லாது, தனது இதிகாச சாகசங்களின் நடிகன் ஆகின்றான். அவனது புத்தகங்களின் வாசிப்புக்கும் அவற்றில் சொல்லப்பட்டுள்ளவற்றின் மீதான அவனது நம்பிக்கைக்கும் இடையே நிரடல் இல்லாது இருந்தது போலவே, இப்போது அவனது சாகச நடவடிக்கைகளுக்கும் வார்த்தைகளுக்கும் இடையே பிரிவினை இல்லாது இருக்கிறது. தொன் க்விஹோதேயுடன் ஒன்றாகிவிட்ட காரணத்தால், நாம் அதனை வாசிக்கிறோம். ஆனால் காண்பதில்லை, அக்கனவான் தன் தலையில் வைத்துக் கொள்வது என்னவென்று நமக்கு ஒருபோதும் தெரியப்போவதில்லை. அது மாம்ப்ரினோவின் கதையில் வரும் தலைக்கவசம் (அ) இழிவான நாவிதனின் வட்டில். முதல் சந்தேகம் நம்மைத் தாக்குகிறது: க்விஹோதேயின் நிலை சரியா, குருடன், முட்டாள் என ஒவ்வொருவரும் வட்டிலையே காண்கின்றதான இடத்தில், கீர்த்திமிக்க தலைக்கவசத்தை அவன் கண்டறிந்திருக்கின்றானா?
இவ்வார்த்தைக் கோளத்திற்குள், தொன் க்விஹோதே முதல் வெல்லமுடியாதவனாக இருக்கின்றான். இவ்வார்த்தை நோக்கு நிலையிலிருந்து பார்த்தால், சாஞ்சோவின் அனுபவவாதம் பயனற்றது, ஏனெனில், தோற்றுப்போகும் ஒவ்வொருமுறையும் தொன் க்விஹோதே உடனடியாக தன் இலக்கியச் சொற்பொழிவை தளராது ஆரம்பித்து விடுகிறான் - வார்த்தைகள் எப்போதும் யதார்த்தத்தை ஓத்து இருக்குமாறு பார்த்துக் கொள்கிறான்.
யதார்த்தத்துடன் கற்பிதத்தை அடையாளங் காண்பது, ஹேம்லட்டை யதார்த்தத்திடம் சேர்க்கிறது மற்றும் இயற்கையாகவே யதார்த்தத்திருந்து மரணத்திடம் அவனை ஓப்படைக்கின்றது. ஆனால் கற்பிதத்துடன் கற்பிதத்தை அடையாளங் காண்பது தொன் க்விஹோதேயை புத்தகங்களிடம் சேர்க்கின்றது. தன் வாசிப்புகளிலிருந்து வரும் தொன் க்விஹோதே, அவற்றை நோக்கிப் போகின்றான். தொன் க்விஹோதே வாசிப்புகளின் தூதுவன். அவன் மனதில், அவனது நடவடிக்கைகளுக்கும் யதார்த்தத்திற்கும் இடையே குறுக்கிடுவது, யதார்த்தமே அல்ல. தன் வாசிப்புகளின் மூலமாக அவனறியும் மாயாஜாலக்காரர்கள்.
இது அப்படி இல்லையென்று நாமறிவோம். தொன் க்விஹோதேயின் பைத்தியக்கார வாசிப்புகளுடன் முரண்பட்டு நிற்பது யாதார்த்தமே என்றும் நாமறிவோம். ஆனால் அவன் அதனை அறிவதில்லை மற்றும் இவ்வறியாமை (அல்லது இந்நம்பிக்கை) நாவன் மூன்றாம் தளவாசிப்பை ஏற்படுத்துகின்றது. “நாம் காண்பது அரக்கர்கள் அல்லர், மாறாக, காற்றாலைகளே” என்று சாஞ்சோ சதா கூறுகின்றான். அனால் தொன் க்விஹோதே அதை கண்டு கொள்வதில்லை: தொன் க்விஹோதே வாசிக்கின்றான், அவை அரக்கர்களே என்கிறது அவனது வாசிப்பு.
தனிச்சிறப்பானதும் புனிதமானதுமான சங்கேதத்தின் வாசிப்புகளாக இவை இருக்கும் மட்டும், தொன் க்விஹோதே ஒட்டுமொத்த உலகத்தையும் தன் வாசிப்புகளுக்குள்ளே அறிமுகப்படுத்த விரும்புகின்றான். ரோன்செஸ்வால்லெஸில் நடப்பது, புத்தகங்களின் உன்னத நடவடிக்கையுடன், வரலாற்றின் உன்னத நடவடிக்கையை அடையாளங் காணும் சங்கேதம் அது. ரோலண்டின் தியாகம்: அல்லது ஆர்லாண்டே. மேற் ன் அக்கிலஸ்' என்று போற்றப்படுபவர். Song of Roland- இல் நாயகனான இவர் 8 அடி உயாமுன்ன போர்த்தனபதி வீரப் பெருந்தன்மையின் வீரலட்சியத்தையும் கிறித்தவ அரசில் அரகியல் நாணயக்கையம் பாதுகாத்குது அவரது உற்சாகம் இலட்சிய அதெறியாகும்: வீரப் பெருந்தன்மைப் புகினங்கனது நாயகர்கள் அனைவருக்குமான இலட்சிய வடிவமாகும் அவர்களுடன் கன்னை எண்ணிக் கொள்கிறான். கொன் க்விஹோதே வரலாற்றின் உன்னகு சழிக்ஞைகளுக்கூம் முற்றும். பூக்க்கங்களின் உன்னது சுமிக்ஞைகளூக்கூப இடையே பிளவுகள் எதும் இருக்க முடியாது என அவனும் நம்புகிறான் எனெனில் அவை எல்லாவற்றுக்கும் மேலாக அவை இரண்டையும் ஆளுகின்ற புஸித சங்கேகும் நித்கின்றது: அச்சங்கேகுதக்குன். மெலே கடவளனால் வடிவமைக்கப்பட்ட உலகின் தட்டையான காட்சி எழுகின்றது இவவாக௫ூப்புகளிருந்து . வெளிவரும் கொன் க்விஹோகே. தோற்கின்ற ஒவ்வொரு முறையும். கன் வாடிப்பூகளில் பகடம் தேடுகின்றான்
. நாவன் இரண்டாம் பகுதிக்கு வரும்போது. செர்வாண்டிஸ் நூல்
பகழைக்கொண்டு ஆகாயம் தேடுவதற்காக. அவெல்லானெடா. என்பவா எழுதிய இரகசிய நாவன் விஷயமாக தான். இருந்தின்னதை தொல் க்விஹோவகேயடனல் கணிக்க அடையாளம் பவபெருக்கமுடைவத௱ாகு கோன்றுகிறது. தொன் கவிஹோகே அவெல்லானெடாவின் வினக்கத்லை விமர்சிக்கின்றான் ஆனால் தன்னைப் பற்றிய இன்னொரு புத்தகத்தில் இருப்பு அவனது வழித்தடத்தை மாற்றவைக்து, இந்தவீன வரலாற்றாகிரியரில் பொய்களை பொதுமக்களின் பார்வைக்குக் கொண்டுவா மூடியும்! என்பதற்காக. பார்ஸிலோனா போகின்றான் - “அப்போது அவள் கூறுப கொன் கவி3ஹோசகே நானில்லை என்பகை மக்கள் கண்டு கொல்வார்கள்”
கன் கந்பித சாகசங்களில் வாழ்கின்ற ஒரு பாத்திய. அதேவேனையில கான் எழுதப்பட்டுக் கொண்டிருப்பதை அறிந்துகொள்வது. இலக்கியத்தில முதல்முறையாக இருக்கக் கூடும். அடுத்து வரப்போவதைத் தீர்மானிக்? இப்புதிய வாசிப்புத்தளம் முக்கியமானதாகும். முந்தைய இதுகாசங்களால கன்னை நஇறுக்திக்கொன்வகை நிறுத்திவிடும் கொன் கவிஹோோதே, கனவு இ காசத்லைக் கொண்டே கன்னை நிறுத்திக் கொள்ளத் தொடங்குகிறான் ஆனால் அவனது இதிகாசம் இதிகாசமாய் இல்லை. இஞ்தருணத்தில்தால செர்வாண்டிஸ் நவீன நாவலைக் கண்டநி௫ன்றார். வாசகணாண தொல க்விஹோசகே. கான் வாசிக்கப்படுவகை அறிகின்றான். - ஆஅக்கிலஷரிக்ு ஒருபோதும் தெரியாத ஒன்று இது. கொல் க்விஹோதே என்னும் மனிதனில் வி. கொன் கீவிஹோகே என்னும் புத்தகத்தின் விதியிலிருந்து பிரிக் முடியாததாக ஆகியுன்னது - ஒடிஸியைப் யொறுத்த அனவில், யுலிஸ ஒருபோதும் அறியாதது கட்டையானதும். வெளிப்படையானதுமால இதிகாச வாசிப்பின் நாயகன் என்னும் அவனது நாணயம். கூப்பஷில அடிமைகளாலோ (அ) அவனைப் பார்த்துக் எரிக்கும் அடுக்களை: பெண்டிராலேோ (அ! கோட்டைகள் என்று அவன் கருதிக் செல்லு விடுதிகளிலிருந்து அவன் தாங்கிக். கொள்ள வேண்டிய அம்புகள் மற்றும் கற்களாலோ (அ) யுத்தகளங்கள் என்று அவன் கருதும் மேய்ச்சல் நிலங்களாலோ தகர்க்கப்படுவதில்லை. தன் இதிகாச வாசிப்புகளிலுள்ள அவனது நம்பிக்கை, யதார்த்தத்தின். அனைத்துத் தாக்குதல்களையும் த/ வன் தாங்கிக் கொள்ளுமா று செய்கின்ற து ஆனால் இப்போது, அவனது நாணயம் அமன் சரண லை ந் துள்ள வாரா திப்புகளா ரல் .அழித்தொழிக்கப்படுகிற து
பழங்காலத்து வீரனின் கேச்சுத்துரமான தொன் sa preg a, இவ்வாசிப்புகளனோே முதலாவது நவீன வீரனாக உருமாற்றுகின்றன பல்கோணங்களிருந்து நோக்கப்படும், வீரப்பெருந்தகை நெறிகளில் உள்ள அவனது நம்பிக்கை . இல்லாதிருக்கும், பலவான கண்களால் DID அராயப்பறும், அவனை வா௫ுக்கும் TaN னேயே ஒன்று கலந்து, அவர்களைப் போலவே தன் கற்பனையில் தொன் க்விஹோதேயை மறுபடைப்பாக்கம் செய்துகொள்ள நிர்ப்பந்தக்கப்படும் நவீன வீரன் அவன் வாதிப்பு நடவடிக்கையால் இரட்டைப் பலியாள் அன தொன் க்விஹோதே, கக டர த இருமுறை தன் நினைவை இழந்து போகின்றான் ADD, அவன் வாசிக்கப்படும். போது ஏனெனில் இப்போது, பழைய வீரர்களின் இருப்பினை நிரூபணம் செய்வதற்குப் பதிலாக, இன்னும் சிக்கலான சவாலை .எதிர்கொள்கிறான்; தன் இருப்பினையே அவன் நிரூபிக்க வேண்டும்
இது மேலும் ஒரு வாசிப்புத்தளத்திற்கு நம்மை இட்டுச் செல்கிறது இரவு பகலாக தீவிரமாக இதிகாசங்களை வாசிக்கும் தொன் த்விஹோதே, ம்தார்த்தத்திற்கு வந்து சேரவேண்டும் என்பது பீடிப்பாகி, தன் அசலான நோக்கில் பரிதாபமாகத் தோற்றுப் போகிறான். ஆனால் அவன் வாசிப்புப் பொருனான துமே யதார்த்தத்தை வெல்லத் தொடங்குகிறான், தன் பைத்திய வாசிப்பால் அதனை மாசுபடுத்தத் தொடங்குகிறான்: வீரப் பெருந்தகை நாவல்களின் வாசிப்பால் அல்ல, மாறாக புதிய நாவலான, தொன் க்விஹோதேயின் நிஜமான வாசிப்பால் மற்றும் இப்புதிய வாசிப்பு, உலகை உருமாற்றுகின்றது - இவ்வுலகம், மேலும் மேலும், தொன் க்விஹோதே என்னும் நாவலுள்ள உலதினை ஒத்திருக்கத் தொடங்குவதால்
தொன் க்விஹோதேயைப் பரிகசிப்பதற்காக, தொன் க்விஹோதேயின் பீடிப்புகளால் ஆன முகமூடிகளைக் கொண்டு, உலகம் மாறுவேடம் பூணுகிறது. எனினும், தனது சொந்த அகத்தைவிடவும் மோசமானதாக ஒருவர் தன்னை மறைத்துக் கொள்ள முடியுமா? நமது அன்றாட தோற்றத்தை விடவும் மிகப்பெரும் உண்மையுடன் நமது மாறுவேடங்கள் நம் யதார்த்தத்தை வெளிப்படுத்தவில்லையா? தொன் க்விஹோதேயின் பக்கங்களுக்காக, தொன் .க்விஹோதேயை வாசித்துள்ளவர்களின் மாறுவேடம் பூண்டுள்ள உலகம், உலகின் மாறுவேடம் புனையாத யதார்த்தத்தை வெளிக்காட்டுதிறது: அதன் குருரத்தை, அதன் அறியாமையை, அதன் அநீதியை, அதன் முட்டாள்தனத்தை, ஆக, தன் காலத்ததும் எல்லாக்காலங்களின துமான தீவினைகளை நிந்திக்க, செர்வாண்டிஸ் அரசியல் அறிக்கை ஒன்றினை எழுதவேண்டிய அவசியம் இல்லை. அவர் ஈஸாப்பின் மொழியைத் தேடவேண்டிய அவசியம் இல்லை விஞ்சிச் செல்வதற்காக மரபார்ந்த இதிகாசக் கட்டுமானங்களிருந்து அவர் தீவிரமாக விலகிச் செல்லவேண்டிய அவசியம் இல்லை: தன் புத்தகத்தின் ஆயுள், தர்க்கம் மற்றும் அவசியத்திற்குள்ளாகவே, அவர் இதிகாசக் கருத்தினையும் யதார்த்த எதிர்கருத்தினையும் ற ரீதியில் ஒன்றிணைத்து, நாவலார்த்தக் கூட்டிணைப்பை செய்து முடிக்கின்றார். அவருக்கு முன்னே ஒருநூலகத்திற்குள்ளாக இப்பன்முகப் படைப்பினை யாரும் கருதிப்பார்த்து இருந்ததில்லை.
அபரிமிதமாக எழுதும் செர்வாண்டிஸ், இப்போது நம்மை மேலுமொரு வாசிப்புத் தளத்திற்கு இட்டுச் செல்கிறார். உலகம் மேலும் மேலும் தன்னை ஓத்திருப்பதாக ஆகிவர, தொன் க்விஹோதே, மேலும் மேலும், தன் இருப்பின் மயக்கத்தினை இழக்கின்றான். வாசிப்பு நடவடிக்கையால் அவன் பூஜ்யமாகி இருக்கிறான்; பிகாஸ்ஸோ அவனை வரைய இருந்ததுபோல, ஒரு திருப்புமைக் கேள்விக்குறியாக. ஆனால் பிரபுக்களின் கோட்டையை அவன் சென்றடையும்போது, அக்கோட்டை நிஜமாகவே கோட்டை என்று தொன் க்விஹோதே காண்கிறான்; இதற்கு முன்னரோ, கேஸ்டிய சாலையோரத்து சாதாரண விடுதியை கோட்டையென்று கண்டதாக கற்பிதம் செய்ய முடியும்.
தன் கனவுகள் யதார்த்தத்தில் உருக்கொள்வது, தொன் க்விஹோதேயின் கற்பனையினைக் கொள்ளையிட்டுவிடுகிறது. பிரபுக்களின் உலகிலே, நிஜமற்ற உலகினை அவன் கற்பிதம் செய்து கொள்வது அவசியம் இல்லாது போகிறது: அவன் கற்பனை செய்திருப்பவற்றை எல்லாம் பிரபுக்கள் நிஜமாகவே முன்வைக்கின்றனர். அப்போது, வாசித்தன் அர்த்தம் என்ன? புத்தகங்களின் அர்த்தம் என்ன? அவற்றின் பயன் என்ன? அதிருந்து அனைத்தும் சோகம் மற்றும் எமாற்றம். முரண் சுவையான வகையில், யதார்த்த உலகிலே அவனது வாசிப்புகளின் உலகம் அவனுக்குத் தரப்படுகின்ற தருணத்தில், தொன் க்விஹோதே தன் நம்பிக்கை இழந்து விடுகிறான்.
தனது முட்டாள் இளவரசன் மிஷ்கின் என்னும் நல்லவனுக்காக உத்வேகத்தை செர்வாண்டிஸிடம் கண்டு கொண்ட ரஷ்ய நாவலாசிரியர் தாஸ்தோயெவ்ஸ்கி, செர்வாண்டிஸின் நாவலை “மிகவும் வேதனைதரும் நூலாகக் குறிப்பிடுகின்றார். நாவல் முடிவுறுகையில் அந்நாயகன் வேதனை தரும் தோற்றத்தைக் கொண்டுவிடுகிறான். தொன் க்விஹோதேயை வாட்டும் இந்நோய், “யதார்த்தத்தின் மீதான ஏக்கம்” என்கிறார் தாஸ்தோயெவ்ஸ்கி.
_....தொன் க்விஹோதே தன் பகுத்தறிவை மீண்டும் பெறுகின்றான். அவனைப் போன்றோருக்கு இது உன்னதமான மடமையாக இருக்கிறது: அது தற்கொலையாகும். மரபார்ந்த “யதார்த்தத்தை” ஒத்துக்கொள்ளும்போது தொன் ' க்விஹோதே, ஹேம்லட்டைப் போல், மரணமடையுமாறு விதிக்கப்படுகிறான். ஆனால், நவீன நாவலை நிறுவுகின்ற நடவடிக்கையில், - செர்வாண்டிஸினால் கண்டறியப்பட்ட விமர்சனாபூர்வ வாசிப்பால், தொன் க்விஹோதே இன்னொரு ஆயுளை வாழ்ந்து கொண்டு செல்வான்: தன் இருப்பினை நிரூபணம் செய்வது தவிர்த்து வேறெந்த வழிவகையும் இல்லாமல் விடப்படுகிறான் - அவனது அசலான இருப்பினை அவனுக்களித்த தட்டையான வாசிப்பில் அல்லாமல், அதனை அவன் இழக்கச் செய்த பன்முக வாசிப்புகளில், தனது ஏக்கமிகுந்த, தற்செயல் ஓப்புமையான யதார்த்த வாழ்வை இழந்துபோகும் தொன் க்விஹோதே, தன் புத்தகத்தில், தன் புத்தகத்தில் மட்டுமே, எப்போதைக்குமாக வாழ்ந்து கொண்டு போகிறான்.
ஆகவேதான், தொன் க்விஹோதே எல்லா நாவல்களிலும் மிக ஸ்பானியத்தன்மை கொண்டதாக உள்ளது. இதன் சாரம்: இழப்பு, சாத்தியமின்மை, அடையாளத்தின் மீதான தகிக்கும் தேடல் மற்றும் இருந்திருக்கக் கூடியவை ஆனால் இல்லாது போனவை குறித்த வேதனையான மனசாட்சி - மற்றும் இவ்விழப்புக்கு எதிர்வினையாக, யதார்த்தத்தில் காண முடியாதவற்றையெல்லாம் காணமுடிகின்ற கற்பித தளத்தின் முழுமையான இருப்பினை உறுதிப்படுத்துதல் - உண்மை சார்ந்த இம்மறுதலிப்பின் காரணமாகவே, மிகத் தீவிரத்தளத்தில் இருக்கும் உண்மை. ஏனெனில் ஸ்பெயினின் வரலாறு, அது என்னவாக இருந்துள்ளதோ அப்படி இருக்க, அதன் கலை, வரலாறு ஸ்பெயினுக்கு மறுத்துள்ளவை எவையோ அவையாக உள்ளன. ஸான் யுவான் டெலாக்ரூஸின் அனுபுதிக் கவிதை, லூயி டெ கோன்கோராவின் அலங்காரக் கவிதை, வேலஸ்கொயஸின் Menians, கோயாவின் Caprichos மற்றும் லூயிபுனூவலின் திரைப்படங்கள் பொறுத்தும் இதுவே உண்மை. வரலாறு கொன்றுள்ளதை, கலையானது வாழ்க்கைக்கு அளிக்கின்றது. வரலாறு மறுதலித்தவற்றுக்கு, நிசப்தமாக்கியவற்றுக்கு (அ) ஓடுக்கியுள்ளதற்கு கலை, குரனை அளிக்கின்றது. வரலாற்றின் பொய்களுக்கு கலை, உண்மையினைக் கொண்டுவந்து சேர்க்கிறது.
உண்மை, பொய்மையால் காப்பாற்றப்படும் நாவல் தொன் க்விஹோதே என்று தாஸ்தோயெவ்ஸ்கி குறிப்பிட்டபோது இதனைத்தான் அர்த்தப்படுத்தினார். ஒரு தேசத்தின் கலைக்கும் அதன் வரலாற்றுக்குமான உறவினைத் தாண்டியும் செல்வது ரஷ்ய ஆசிரியரின் அழ்ந்த குறிப்பு. தாஸ்தோயெவ்ஸ்கி இங்கே யதார்த்தத்திற்கும் கற்பனைக்கும் இடையிலான விரிவான உறவுநிலையினைப் பேசிக் கொண்டிருக்கிறார்.
தொன் க்விஹோதேயின் வழித்தடத்தில் முதலாவதாகவும் முடிவானதாகவும் உள்ள புள்ளிகள், வாசிப்பு நடவடிக்கையே. அவன் வாசித்த யதார்த்தமோ அவன் வாழ்ந்த யதார்த்தமோ இப்படியில்லை, வெறுமனே காகிதப் பேய்களே. தன் வாசிப்புகளிலிருந்து மட்டும் விடுபடுகிறான்; ஆனால்... முடிவற்றவகையிலே நாவன் தளங்களை பெருகச் செய்யும் வாசிப்புகளால் கைப்பற்றப்படுகிறான்; தனது அசலானதும் கற்பிதமானதுமான யதார்த்தத்தின் மத்தியிலே தன்னந்தனியாக நிற்கும் தொன் க்விஹோதே வியப்படைய முடி கிறது:
“என்னை நம்புங்கள்! என் சாகசங்கள் உண்மை, காற்றாலைகள்
அரக்கர்கள், ஆட்டு மந்தைகள் இராணுவங்கள், விடுதிகள் கோட்டைகள்; லா
மஞ்சாவின் சக்கரவர்த்தினி, ஈடிணையற்ற டல்ஸீனியாவை விடவும் அழகான
பெண் இவ்வுலகில் இல்லை! என்னை நம்புங்கள்".
இத்தகைய வார்த்தைகளைக் கேட்கும் யதார்த்தம் நகைக்கலாம் (அ) அழலாம். அனால் யதார்த்தம் அவற்றால் படையெடுக்கப்பட்டு, நன்கு வரையறுக்கப்பட்ட தன் எல்லைகளை இழந்து, இடம் பெயர்ந்ததாக உணருகிறது - வார்த்தைகள் மற்றும் காகிதத்தால் ஆன இன்னொரு யதார்த்தத்தால் உருமாற்றப்படுகிறது.
ஸ்பானிய மேதமையின் மாபெரும் படைப்புகள் ஸ்பானிய சமூகத்தின் நெருக்கடி மற்றும் சீரழிவுக் காலகட்டங்களுடன் தற்செயலாகப் பொருந்திப் போயுள்ளன. ஃபெர்னாண்டோ டெ ரோஜஸின் . ட8 celestina (1499) யூத ஸ்பெயினின் தலைசிறந்த படைப்பாகும்: ஸ்பானிய ஹீப்ருக்களை வெளியேற்றியது மற்றும் ஒடுக்குமுறைக்குள்ளானதுடன் அது பொருந்திப் போகிறது. செர்வாண்டிஸ், லோப் டெ வேகா, கியூவெடோ, கோன்கோரா, கால்டெரான் என்னும் ஸ்பானிய இலக்கியத்தின் ஓட்டுமொத்த பொற்காலமும் ஸ்பெயின் சரிவுகாணும்போது மலர்கின்றது. வேலஸ்கொயஸ், நான்காம் பிப்பின் அறிவு விளக்கம்பெறாத அரசவையில் ஓவியர்; கோயா, நான்காம் சார்லஸ் மற்றும் ஏழாம் ஃபெர்னாண்டோ என்னும் சீரழிந்த மன்னர்களின் உடனிகழ்காலத்தவர். ஸ்பானிய அமெரிக்க யுத்தத்தில் பேரரசின் மிச்சம் மீதிகளை இழந்து போயிருந்த ஸ்பெயின் சிந்தனை, அறிவியல் மற்றும் கலையில் அசாதாரணமான ஆளுமைகளை எழுச்சி கொள்ளச் செய்தது: உனாமுனோ, வல்லே இன்க்லான், ரமோன் அய் கேஜல், ஆர்டெகா ஓய் கேஸேட், புனுவேல், மிரோ மற்றும் கார்ஸியா லோர்க்காவின் கவிதைத் தலைமுறை. ஸ்பெயினின் அரசியல், பொருளாதார மற்றும் தொழில்நுட்ப வளங்கள் தாழ்நிலையில் : இருந்துள்ளபோ து, கலையின் அறுதியான மதிப்பு மிகவும் பிரகாசமாய் இருந்திருக்கிறது.
அகவே, செர்வாண்டிஸ் பொதுவிதிக்கு விலக்கல்ல. அனால், மறுமலர்ச்சி மற்றும் எதிர்சீர்திருத்தவாதம் அகியவற்றின் அநாதைக் குழந்தையான அவர், யதார்த்தத்தை இருதயத்திலே திரும்பப் பதிக்கின்ற குறிப்பான பெறுமதிகள் எவை: லாஃபயாட்டே சீமாட்டியின் பகுத்தறிவு சார்ந்த தெளிவு மற்றும் சுய - திருப்தி ஆகியவற்றின்பால் நெருங்கமுடியாத (அ) டெஃபோவின் நடைமுறைத் திறன் இல்லாத அவர் தந்த பெறுமதிகள் எவை? செர்வாண்டிஸ் மீதான எராஸ்மஸின் செல்வாக்கினை நினைவு கூர்ந்துள்ளேன். (100/8 வைப் போற்றுதலை ஒத்து, மடமையைப் போற்றும் ஒரு ஸ்பானிய விரிவாக்கமான தொன் க்விஹோதே, காதல் மற்றும் நீதியின் அறத்தைக் கொண்டுள்ளது. தான் வாழும் சமூகத்தின் மையத்தில் அது இருக்க முடியாததால், ஒரு தார்மீக யதார்த்தம், செர்வாண்டிஸின் கற்பனை மையத்தை இடம் பிடித்துக் கொள்கிறது. |
காதல் மற்றும் நீதி. பைத்தியக்காரன் தொன் க்விஹோதே, தான் வாசித்திருப்பவற்றை எல்லாம் நம்பியிருப்பதால் மட்டும் பைத்தியமில்லை. வீரச்செயலை நாடித்திரியும் நாயகன் என்றவகையில், நீதி, தன் கடமை மற்றும் நீதி, சாத்தியமானது என்று அவன் நம்புவதாலும் பைத்தியமாய் இருக்கிறான். திரும்பத்திரும்ப அவன் தன் கொள்கையை பிரகடனம் செய்கின்றான்: “தவறுகளையும் பொல்லாங்குகளையும் அழிக்கின்ற, வீரதீரமிக்க தொன் க்விஹோதே டெ லா மஞ்சா நானே.” “என் கடமை அநீதியைப் போக்கி, தேவைப்பட்டோருக்கு உதவச் செல்வதே.” அவன் கருணை காட்டுவோரிடமிருந்து தொன் க்விஹோதே பெறுகின்ற நன்றி எத்தகையது என அறிவோம்: அவன் அடிபடுகிறான், பரிகசிக்கப்படுகிறான். இக்காட்சிகளிலே செர்வாண்டிஸின் சமூக முரண்சுவை உச்சத்தை தொட்டுவிடுகிறது. ஏழைகளும் பரிதாபமானவர்களும் தவறிழைக்கப்பட்டவர்களும் தொன் க்விஹோதேயால் உதவப்பட, அவர்களோ அவனால் காப்பாற்றப்படுவதை விரும்பாது உள்ளனர். ஒருவேளை அவர்கள் தம்மைத் தாமே காப்பாற்றிக்கொள்ள விரும்பி இருக்கலாம்... தங்கள் தர ளன போன்றே சாதாரண மக்களும் அவ்வளவு குரூரமாய் இருக்கக் கூடியவர்களே என்பதை செர்வாண்டிஸ் கண்டு கொள்கிறார். நீதியற்ற ஒரு சமூகம், பலவான்களும் பலவீனர்களும், உயர்ந்தவரும் தாழ்ந்தவரும் அன தன் உறுப்பினர்களை எல்லாம் பிறழ்வுநிலை கொள்ளச் செய்கிறது என்னும் உள்ளார்ந்த குறிப்பினை இது முன்வைக்கவில்லையா?
நன்மை செய்பவனாக தொன் க்விஹோதே, திரும்பத்திரும்ப தோல்விகளை எதிர்கொண்டாலும், நீதி என்னும் இலட்சியத்தில் உள்ள நம்பிக்கையில் ஒருபோதும் தோற்பதில்லை. அவனொரு ஸ்பானிய வீரன்; சாதாரண யதார்த்தத்தின் விபத்துகளால் இயற்கை கடந்த கருத்து ஊனப்பட்டு விடாது. தொன் க்விஹோதேயின் நீதிக்கான தேடலை நிலைநிறுத்தி வைக்கும் சித்தாந்தம் எது? அது பொற்காலத்தின் கற்பனாவாத உலகம். எருதினைப் போல வலுவும் முரட்டுத் தனமும் கொண்டு, உரத்துக் கத்தும் குடியானவப் பெண்ணான அல்டோன்ஸா லோரென்ஸோவை அழகியான டல்ஸீனியா என்று தொன் க்விஹோதே கூறுவதைக் கண்டு அப்பகுதியினர் எல்லாம் நகைக்கின்றனர். இதற்கான தொன் க்விஹோதேயின் எதிர்வினை, இதுவரை எழுதப்பட்டிருப்பதான நெகிழ்ச்சி தரும் காதல் பிரகடனங்களில் மிகவும் நெகிழவைப்பதாக உள்ளது. டல்ஸினியா யார், எப்படிப்பட்டவள் என அவனறிவான்; எனினும் அவன் அவளை காதலிக்கிறான் - உலகிலுள்ள இளவரசிகளில் மிக உன்னதமானவள்” அவள் என்பதால் அவளை காதலிக்கிறான். குடியானவப்பெண் அல்டோன்ஸாவை, தனது கற்பனையே சீமாட்டி டல்ஸீனியாவாக உருமாற்றியுள்ளதை அவன் ஓத்துக்கொள்கிறான்: செல்வம்/வறுமை,
தனிச்சிறப்பு / சாதாரணம் என்னும் நிலைகளையெல்லாம் பொருட்படுத்தாது, நேசிக்கும் ஒருவரை ஓப்பீடு அற்றவராக, தனிச்சிறப்பானவராக உருமாற்றிவிடுவது காதலின் சாராம்சம் அல்லவா? “இவ்வகையில், அல்டோன்ஸா அழகானவள் மற்றும் நேர்மையானவள் என்று நான் எண்ணுவதும் நம்புவதும் போதுமானது; வர்க்கம் தொடர்பான பிரச்சினை இங்கே எடுபடாது... நான் அவளை விரும்புவதுபோலவே என் கற்பனையில் தீட்டுகிறேன்.... உலகம் தான் விரும்பியதை எண்ணிக் கொள்ளட்டும்”.
காதல் மற்றும் நீதி ஆகியவற்றின் இம்மறுசந்திப்பில், தொன் க்விஹோதேயின் சமூக, அறிவியல் மற்றும் அரசியல் உள்ளடக்கம் வெளிப்படையாகின்றது. பொற்காலத்தின் தொன்மம் அதன் சித்தாந்த அடிப்படையாகும்: சகோதரத்துவம், சமத்துவம் மற்றும் சந்தோஷத்தின் கற்பனாவாத சமூகம். கடந்த காலத்தை அழித்தொழித்து, ஒன்று மற்றதிருந்து தீரமிகு புது உலகை நிர்மாணிக்கத் தொடங்குவதன் மூலம் கற்பனாவாத சமூகத்தை சாதிக்காமல், கடந்த காலத்திலிருந்து கிடைப்பவை மற்றும் நிகழ்காலத்தில் நம்மால் படைத்துக்கொள்ளக் கூடியவை என்னும் பெறுமதிகளின் ஒருங்கிணைப்பால் சாதிக்க வேண்டும். தற்காலத்தில் நீதி இல்லாதிருக்கின்றது என்பதை தொன் -க்விஹோதே குறிப்பிடுகிறான்; காதல் மட்டுமே நீதிக்கு நிஜத்தைத் தரக்கூடியது; தொன் க்விஹோதே பேசுகின்ற காதல், ஒரு ஜனநாயக நடவடிக்கை, வர்க்க பேதங்களைத் தாண்டிய ஒரு நடவடிக்கை, சீழ்நிலையிலுள்ள குடியானவப் பெண்களிடையே காணப்படக் கூடிய ஓர் உண்மை. அனால் இக்காதலிடத்தே, சீரானதும், உயர்குடி வீரப்பெருந்தகை மதிப்புகளும், நீதி நாணயம் மற்றும் பராக்கிரமத்திற்குமான தேடலுள்ள தனிநபர் பணயமும் கொண்டுவரப்பட வேண்டும். வீரப்பெருந்தகை காலத்தின் பெறுமதிகள், காதலின்மூலமாக, ஜனநாயக இசைவை தொன் க்விஹோதேவில் பெறுகின்றன; மற்றும் ஜனநாயக வாழ்வின் பெறுமதிகள் உயர்குடியின் இசைவைப் பெறுகின்றன. வல்லவர்களின் குரூர அதிகாரத்தையும், தாழ்நிலையினரின் மந்தை உணர்வையும் தொன் க்விஹோதே மறுதலிக்கின்றான்: மானுடம் குறித்த அவனது நோக்கு, சாதாரண நிலை மீதமைந்ததில்லை, மாறாக, சாத்தியமாகும் உயர்ந்தபட்ச சாதனை மீதமைந்தது. காதல் மற்றும் நீதி குறித்த அவனது கருத்தமைவு, ஒடுக்குவோர் மற்றும் ஒடுக்கப்படுவோர் அகிய இருவரையும், அவர்களிருவரையும் பிறழ்நிலை கொள்ளச் செய்யும் ஒடுக்கு முறையிலிருந்து காப்பாற்றுகின்றது. இந்த அறவியல் நிலைபாட்டின் மூலமாகவே பழையதும் புதியதுமான உலகங்களை இணைத்திட செர்வாண்டிஸ் போராடுகின்றார். வாசிப்பு குறித்த அவரது ஆய்வுரை, இடைக்காலங்களின் இறுக்கமானதும் ஓடுக்குகின்றதுமான தன்மைகள் மற்றும் ஸ்பானிய எதிர் சீர்திருத்தவாத அம்சங்களை மறுதலிப்பது; அதேவேளையில், நவீன உலகைநோக்கிய இடைநிலை மாறுதல் கட்டத்தில் தொலைத்துப்பட்டு விடக்கூடாத தொல் மதிப்புகளை ஏற்பதுமாகும். ஆனால் தொன் க்விஹோதே பன்முகப் பார்வையின் நவீன மதிப்புகளை ஏற்பதுமாகும் என்றால், செர்வாண்டிஸ் நவீனத்திடம் சரணடைவதும் இல்லை. இத்தருணத்திலேதான் அவரது தார்மீக மற்றும் இலக்கிய நோக்கு முழுமையானதாக ஒன்றிணைகின்ற து... யதார்த்தமானதின் பன்முகத்தளங்களின் பெயராலே இலக்கியம் யதார்த்தத்தைப் படைக்கிறது, யதார்த்தத்துடன் சேர்க்கிறது; நெகிழவைக்காத மெய்மைகள் (அ)யதார்த்தத்திற்கு முன்னுள்ளவற்றினுடனான வார்த்தைத் தொடர்புறுத்தலாக இல்லாது போகின்றது. இப்புதிய அச்சிடப்பட்ட யதார்த்தமான இலக்கியம் உலக விஷயங்களைப் பற்றிப் பேசுகின்றது; ஆனால் இல்க்கியம், தன்னளவிலே உலகின் புதிய விஷயமாகும்.
அடிமைத்தனமிக்க இலக்கிய இயற்கைவாதத்தின் ஆபாசதீ தந்திரங்களை முன்கூட்டியே கண்டுகொண்டதுபோல், யதார்த்தத்தின் வெறும் நகலே இலக்கியம் என்னும் மாயையினை செர்வாண்டிஸ் அழித்தொழிக்கிறார்; கைப்பற்றுவதற்குச் சிரமமானதும் பாரதூரமான ஆற்றல் மிக்கதுமான இலக்கிய யதார்த்தத்தைப் படைக்கிறார்: வாசிப்பு ஆய்வுரையின் அனைத்துத் தளங்களிலும் நாவலின் யதார்த்தம் இருப்பு கொண்டிருப்பதுதான். தொன் க்விஹோதேயின் தார்மீகச் செய்தி, ஆசிரியரால் மேலிருந்து திணிக்கப்படுவதற்குப் பதிலாக, தன் கலையியல் மற்றும் தார்மீக முன்மொழிவுகளையே விமர்சிக்கின்ற படைப்பை வாசித்துக் கொண்டிருக்கும் பலவான வாசகர்களின் பன்மையான வாசிப்புகளின் சல்லடையினூடே கடந்து போகின்றது. படைப்பின் இடத்திலேயே படைப்பின் ஆய்வுரையை வேரூன்றச் செய்வதன் மூலம், நவீன கற்பனையின் நிறுவனர்களுள் ஒருவராக செர்வாண்டிஸ் தன்னை ஆக்கிக் கொள்கிறார். திரும்ப உருவாக்கி மோசமாகச் சேவை புரிந்து யதார்த்தத்தின் அடங்கிய பாவனையாளர்களாக அல்லாமல், தாமாக இருந்திட, கவிதை, ஓவியம் மற்றும் இசை பிற்பாடு. சமஉரிமை கோரும். கலை இன்னொரு யதார்த்தத்தைப் படைக்காது போனால், மேலும் யதார்த்தத்தைப் பிரதிபலிக்காது.
கடந்த காலத்துப் பெறுமதிகளை நிகழ்காலத்தவற்றுடன் ஒருங்கிணைக்கும், காகிதப் பாத்திரம் தொன் க்விஹோதே மூலம், பீதியுற்றதும் அநாதையானதுமான மையமற்ற பிரபஞ்சம் மற்றும் வெற்றிகரமான தனிநபர்வாதம் என்னும் மாபெரும் கருத்திழைகளை, புதிய யதார்த்தத்தின் அச்சாணியாக இலக்கியப் பரப்புக்கு இடம்பெயரச் செய்கிறார் செர்வாண்டிஸ். மேலும் துன்பியல்நாடகமோ மேலும் இதிகாசமோ இருக்கப்போவதில்லை - மீட்டமைக்கக் கூடிய தொல்பழங்கால அமைப்போ (அ) தோற்றுவாயில் தட்டையான பிரபஞ்சமோ இல்லை என்பதால். யதார்த்தத்தின் பன்முக அடுக்குகளைப் பரிசோதிக்கும் திறன்மிகு பன்முகத் தள வாசிப்பு இருக்கும். | தண்டிக்கப்பட்ட கப்பல் அடிமையும், பொய்யான பொம்மலாட்டக் காரனும், கேடியுமான ஜினெஸில்லோடெ பாரபில்லா என்கிற பெட்ரோ மாஸ்டர் என்கிற தினெஸ் டெ பஸாமோண்ட், தன் வாழ்க்கை குறித்தே. ஒரு நூல் எழுதிக் கொண்டிருக்குமாறு அமைந்து விடுகின்றது. “நூல் முடிவடைந்து விட்டதா?” என்று தொன் க்விஹோதே கேட்கிறான். ஜினெஸின் பதில்: “என் வாழ்க்கை இன்னும் முடிவுறாதபோது அது எப்படி முடியும்? *
இது செர்வாண்டிஸின் இறுதிக் கேள்வி: புத்தகங்களை எழுதுவது யார் மற்றும் அவற்றை வாசிப்பது யார்? தொன் க்விஹோதேயின் அசிரியர் யார்? செய்யுளை விடவும் சோகத்தில் அதிகம் தேர்ந்த ஒரு செர்வாண்டிஸா? - தொன் க்விஹோதேயின் நூலகத்தைத் துருவி ஆராய்கின்ற புரோகிதர், அவரின் 0௮81௦8 வைப் படித்து, தனக்குப் பிடிக்காத புத்தகங்களை எரித்துவிட்டு, சட்டென்று செங்கலாலும் சாந்தாலும் அந்நூலகத்தை மூடி முத்திரையிட்டு, அது மந்திரவாதிகளின் வேலை என்று நம்ப வைத்து விடுவார். விடுதலை பெறும்பொருட்டு அனைத்தையும் செய்கின்றவனும், அவன் செய்த காரியங்களுக்காகவே போற்றுதலுடன் தண்டனைக் கைதியால் குறிப்பிடப்படுபவனுமான சாவெட்டாவா?
தொன் க்விஹோதே என்னும் பாத்திரம் போலவே செர்வாண்டிஸ் தொன் க்விஹோதே நாவன் மற்ற பாத்திரங்களால் வாசிக்கப்படுகிறார் - அந்நாவல் அசலான அசிரியர் இல்லாத புத்தகம், அநேகமாக விதி ஒன்று இல்லாத புத்தகம், பிறக்கின்ற நிகழ்ச்சிப் போக்கில் வேதனைக் குள்ளாக்கும் புத்தகம், அரேபிய வரலாற்று நிபுணர் சைடே ஹாமெட் பெனெங்கெலியின் ஆய்வுக் கட்டுரைகளால் மீளவும் உயிரூட்டம் பெற்று, அப்புறம் இனந்தெரியாத மூர் மொழிபெயர்ப்பாளரால் ஸ்பானிஷில் மொழியாக்கம் செய்யப்பட்டது மற்றும் அதுவே வெல்லானெடாவின் இழிவான இரகசியப் பதிப்புக்குரிய விஷயமாக இருக்கப்போகின்றது.... வாசித்தல் மற்றும் எழுதுதலின் முடிவற்ற வளையம் தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறது: செர்வாண்டிஸ், போர்கெஸின் ஆசிரியர்; போர்கெஸ், பியரிமேனார்டின் அசிரியர்; பியரி மேனார்ட், தொன் க்விஹோதேயின் ஆசிரியர்; தொன் க்விஹோதே, மிகுவெல் டெ செர்வாண்டிஸ் சாவெட்ராவின் அசிரியர்.
தான் வாசிக்கப்படுவதை வாசகன் அறிந்துகொள்வதும், தான் எழுதப்படுவதை ஆசிரியன் அறிந்துகொள்வதும், வில்லியம் சேக்ஸ்பியர் போல, 23.04.1616 என்னும் ஒரே நாளில் இல்லாவிட்டாலும், ஒரே தேதியில் அவர் இறந்துபோனார் என்று கூறப்படுவதுமான, புத்தகத்தின் பக்கங்களை செர்வாண்டிஸ் திறந்து வைக்கின்றார். அவர்கள் இருவருமே ஒரெ நபராயிருந்தனர் என்று மேலும் கூறப்படுகிறது. செர்வாண்டி ஷின் கடன்களும் சண்டைகளும் சிறைகளும் தன்னை சேக்ஸ்பியர் என்று மறைத்துக்கொண்டு, அவன் நாடகங்களை இங்கிலாந்தில் எழுதுவதற்குப் பயன்பட்ட கற்பிதங்கள்; தமாஷ் நடிகரும், ஆயிரம் முகங்கள் கொண்ட நபரும், எலிஸபெத் காலத்து ட௦॥ Chaney யுமான வில்லியம் சேக்ஸ்பியரோ, ஸ்பெயினில் தொன் க்விஹோதேயை . எழுதினார். நிஜமான தினங்களுக்கிடையிலான இக்குளறுபடி மற்றும் பொது மரணங்குறித்த கற்பித தேதி அகியன, செர்வாண்டிஸின் ஆவி காலத்தே லண்டனுக்குப் பறந்து சென்று, சேக்ஸ்பியரின் உடலில் மேலும் ஒருமுறை மடிவதற்கான காலத்தைத் தந்தன. அவர்கள் ஒரே நபராக இல்லாதிருக்கக்கூடும் - இங்கிலாந்திலும் ஸ்பெயினிலும், 1எலும் சரி 1975லும் சரி, காலண்டர்கள் ஒருபோதும் ஒரேமாதிரியாக இருந்ததில்லை.
ஆனால் அக்காலகட்டங்களின் அபிப்பிராயங்களுக்கேற்ப, ஓரே நபராக இல்லாமல் இருக்கலாம், அவர்களெல்லாம் ஒரே எழுத்தாளரே, எல்லா புத்தகங்களுக்கும் ஒரே ஆசிரியரே - ஹோமர், விர்ஜில், தாந்தே, சிடே ஹாமெட் பெனெங்கெ, செர்வாண்டிஸ், சேக்ஸ்பியர், ஸ்டெர்ண், டெஃபோ, கதே, போ, டிக்கென்ஸ், பால்ஸாக், லீவிஸ் கரோல், ப்ரவுஸ்ட், காஃப்கா, போர்கெஸ், பியரி மேனார்ட், ஜேம்ஸ் ஜாய்ஸ்... ஜினெஸ்டெ பஸாமோண்ட்டின் சுயசரிதம் போல் அதே திறந்த புத்தகத்தின் ஆசிரியரான அவர் இன்னும் முடிக்கப்படவில்லை, ஏனெனில் நம் வாழ்க்கைகள் இன்னும் முடிவுறவில்லை. பாரபில்லாவின் கேடியைப் போல, மல்லார்மே ஒருநாளன்று அதே எண்ணத்தை வேறு வார்த்தைகளில் கூறுவார்:
“ஒரு புத்தகம் தொடங்குவதுமில்லை
முடிவுறுவதுமில்லை, அதிகபட்சம்
புனைந்துரைக்கும்....... '
மல்லார்மேயை வாசித்திருந்தவர்போல செர்வாண்டிஸ், முதல்திறந்த நாவலினை எழுதினார். பை தொன் க்விஹோதேயின் வீரப்பெருந்தகை இதிகாசங்களது வாசிப்புடன் தொடங்குவதாகத் தோன்றுவதும், எல்லா யதார்த்தமும் பல தளங்கள் கொண்டதே, படைப்புக்குள்ளே படைப்பின் ஆய்வுரை உள்ளது என்று வாசகன் உணர்ந்து கொள்ளும் வகையில் முடிவுறுவதாகத் தோன்றுவதும் ஆன வாசித்தன் ஆய்வுரை மூலமாக அவர் முன்மொழிகின்றார். தொன் க்விஹோதேயின் உலகியல் சாராததும், அதேவேளையில், உடனடித் தன்மையான பண்பும், அதன் உள்ளார்ந்த யாப்பியல் தன்மையிலிருந்து பெறப்படுவதாகும். தன் அதியாகமத்தை கற்பித நடவடிக்கையாக மாற்றிடும் பிளவுக் கவிதை அது: கவிதையின் பிறப்பைப்பாடி, நாம் வாசிக்கின்ற புதினத்தின் தோற்றுவாயை எடுத்துரைக்கும் அது கவிதையின் கவிதை (அல்லது) புதினத்தின் புதினம்.
இலக்கியம் எல்லாமாகவும், வேறொன்றாகவும் தத்துவம், அரசியல், அறிவியல் மற்றும் அறங்கள் - இருக்க வேண்டும் என்று உலகம் விரும்புகிறது. எல்லாப் பெரிய எழுத்தாளர்களுக்கும் தெரியும் என்றெழுதியிருக்கிறார் கேஸ்டன் பாசெலார்ட். அவன் இக்கோரிக்கை என்று ஃபிரெஞ்சுச் சிந்தனையாளர் வினவுகிறார். தத்துவம், அரசியல், அறங்கள் மற்றும் அறிவியல் ஆகியவை தாமே சாத்தியமாகன்ற பேச்சின் அடியாழத்தே, பேசப்படுவதன் தோற்றுவாய்களுடன் இலக்கியம் நேரிடையான தொடர்பு கொண்டி ருப்பதால்தான்.
அனால் அறிவியலும் அறங்களும் அரசியலும் தத்துவமும் தம் வரம்புகளைக் கண்டறிந்து கொள்ளும்போது, தம்போதாமைகளைத் தாண்டிச் செல்லும்பொருட்டு, இலக்கியத்தின் நயத்திற்கும் நயமின்மைக்கும் காட் சிதருகின்றன. எனினும், அவை இலக்கியத்துடன் சேர்ந்து, வார்த்தைகளுக்கும் விஷயங்களுக்குமிடையேயான நிரந்தர முறிவையே கண்டறிந்து கொள்கின்றன: மொழியின் பிரதிநிதித்துவப் பயன்பாடுகளுக்கும் மொழியாக இருத்தலுக்குமான அனுபவத்திற்கும் இடையேயான பிரிவினை.
அத்தொலைவினைக் குறைத்திடக் கூடிய கற்பனாவாத நடவடிக்கையே மொழி. அது வெறுமனே அம்முறிவை மறைத்திடும்போது, அது இதிகாசம் எனப்படுகிறது. அதனை வெளிப்படுத்துகையில், நாவல் / கவிதை எனப்படுகிறது. வார்த்தைகளும் பொருட்களும் பொருந்திப் போகவேண்டும் என்னும் போராட்டத்திலுள்ள வேதனைதரும் தோற்றத்தின் நாயகனது நாவலும் கவிதையும் இத்தகையன. பொருட்கள் எல்லாருக்கும் உரியன அல்ல என்று நம் வாழ்க்கைகளில் நாமெல்லாம் கண்டறிவது போலவே, தொன் க்விஹோதே கண்டறிகின்றான்; ஆனால் வார்த்தைகள் எல்லாருக்கும் உரியன. வார்த்தைகள் காற்றினைப் போன்றவை: அவை அனைவருக்கும் உரியவை (அ) யாருக்கும் உரியவை இல்லை. பொதுச் சொத்தின் முதலாவதும் மேலானதுமான இயற்கை உதாரணம் மொழியே. அப்படியானால், மிகுவெல் டெ செர்வாண்டிஸ் தன் வார்த்தைகளின் உரிமையாளர் மட்டுமே - அவர் மிகுவெல் டெ செர்வாண்டி.ஸ் அல்ல, எல்லா மனிதரும் என்பது போலவே: ஜாய்ஸின் டெடலாஸ் போல், மானுட இனத்தின் படைக்கப்படாத மனச்சாட்சியினைப் பாடுகின்ற, அவர் ஒரு கவிஞர். தன் நடவடிக்கையான கவிதைக்குப்பின் பிறப்பவன் கவிஞன். கவிதை தன் வாசகர்களை உருவாக்குவது போலவே தன் ஆசிரியரையும் உருவாக்குகிறது. வாசித்தல் குறித்த செர்வாண்டிஸின் ஆய்வுரை மீதான இறுதி விவரிப்பு இந்த எளிய, கல்வெட்டு வாசகமே: ஒவ்வொருவராலும் எழுதப்பட்டுள்ள தொன் க்விஹோதே, ஒவ்வொருவராலும் வாசிக்கப்படுகிறது ஓ
குறிப்புகள் :
Don யixote என்பதைப் பொதுவாக, ஆங்கில எழுத்தமைதிப்படி 'டான்
க்விஜோட்' என்று உச்சரித்து வந்துள்ளோம். ஸ்பானிய உச்சரிப்புப்படி
ச் ‘தொன் க்விஹோதே' என்பதே சரியாகும்.
I ராட்டர்டாமின் எராஸ்மஸ்: எராஸ்மஸ் டெஸிடெரியஸ் என்னும்
ர் புனைபெயரின் முழு வடிவம் Gerhard Gerhards என்பதே இயற்பெயர்.
் 1469-1536 காலகட்டத்தில் வாழ்ந்த இவர் நெதர்லாந்தின் தத்துவவாதி,
சிர்திருத்தவாதத்தின் முன்னோடி கத்தோலிக்க, புராட்டஸ்டண்ட் பிரிவுகளை
மனிதாய நிலையிருந்து விமர்சித்தவர். Praise of Folly என்னும் நூல்
வெறித்தனம், வன்முறை, போத்தனம், மதவெறுப்பு, அறியாமை
்- போன்றவற்றைச் சாடியவர்.
பிஸினோ: (கி.பி. 1433 - 1499) இத்தாலியத்தத்துவாசிரியர், இறையியலாளர்
மற்றும் மொழியியலாளர். பிளேட்டோ மற்றும் இதர கிரேக்க
ஆசிரியர்களது நூல்களை மொழியாக்கம் செய்தார் மற்றும் அவற்றுக்கு
விளக்கவுரை எழுதினார்.
ஈன் யுவான்: 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த செவில்லே
பிரதேசத்தின் மேட்டுக்குடி சார்ந்த உல்லாச.
. சவோனரோலா: (1452-1498). இத்தாலியின் தத்துவவாதி, அறிஞர்,
ஹை புலனடக்கத்தை வற்புறுத்தியவர். இவரைப் பின்பற்றியோர் 'அழுமூஞ்சிகள்'
என்று கேலிக்குள்ளாயினர்.
கனவான்: இங்கு குறிப்பிடப்படும் ॥/0400 என்னும் சொல்லுக்கு,
ஸ்பெயினின் 8ழ்மட்ட வகுப்பைச் சேர்ந்த கனவான் என்று பொருள்.
Sunday, August 10, 2025
தொன் க்விஹோதே. :: கார்லோஸ் ஃபுயண்டஸ்
தளத்தைப் பற்றி
ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com