தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

Monday, December 26, 2016

விலகல் - மு. புஷ்பராஜன் (லண்டன்) : கனவு 24


WWW.tamilarangam.net
www.padippkam.com

AUTOMATED GOOGLE-OCR


விலகல்

மு. புஷ்பராஜன் (லண்டன்) யன்னல் திரையை நீக்கினான்

பத்து மணிக்கு மேலாகிவிட்டது. இருள் முற்றாகக் கவியவில்லை. கீழே, வீதியின் இரு கரைகளிலும் கார்கள். எதிரிலுள்ள இத்தாலிய பப்பில் மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டு விட்டன. தெரு விளக்கின் மெல்லிய செம்மை ஒளி, அருகிலுள்ள இலைகளுடன் சோபை கொண்டன. நல்ல திரைப்படங்களில் வரும் அழகியல் காட்சி போல்

 பப்பின் சிரிப்பொலிகள் போதை ஏறிவிட்டன போலும், போதையில் தான் புறச்சூழலை மறக்க முடியுதுற சுயமாய் இயங்க முடியுது. இனியென்ன? ஒருவரஒருவர் அணைச்சுக் கொண்டு வெளியேறுவாங்க . அவன் இல்லாட்டி அவள் அறயில இந்த இரவு.

திரும்பிக் கட்டிலைப் பார்த்தான்

 "குயில்ற்"ரால் அறைகுறையாக மறைத்தபடி ஒருக்களித்துத் தூங்கிய நிலையில் அவள். கூந்தல் வழிதவறிய கருநதிகளாய் முகத்தில் வழிந்து கிடந்தன. விரல் அளவில் பல சிக்காகியும் கிடந்தன

 "தூக்கமா..? மயக்கமா..? ரெண்டும்தான் 
எல்லாம் துறந்த நில."
 யன்னல் கண்ணாடியைத் தூக்கிவிட்டான். காற்று வெம்மை உடலில் இதமாக வீசியது. கோடையில்தான் இவ்வாறு முடிகிறது. யன்னலைத் தூக்கிவிட காற்றின் சுகத்தை அனுபவிக்க, சேட்டு இல்லாமல் அறையில் இருக்க குளிர்காலம் எல்லாவற்றையும் இழுத்துப் போர்த்தி குறங்கிக் கொண்டு 

"வின்ரரில் இவளால் இப்படி படுக்க ஏலுமா" 

கட்டிலை மீண்டும் நோக்கினான். அவள் அதே நிலையில்தான். 

"முன்பக்கம் போய் குயில்ற்ர விலத்தினா
 கோயாவின்ர ஓவியம் போல." 

சிரித்துக் கொண்டான். அவள் முன்பக்கம் போக முடியாமல் அறைச்சுவர் இருந்தது. "பப்"பில் இருந்து பலத்த சிரிப்பொலிகள்

 "அப்பிடி என்னதான் ஜோக்ஸ், தனி மனித சுதந்திரம் எண்ட பெயரில் இந்த வெள்ளகள் என்னென்ன வெல்லாம் செய்யுறாங்க. அது மற்றவர் சுதந்திரத்தில குறுக்கிடுகிறது பற்றி கவலபடமாட்டாங்க யன்னலில் நிண்டு பார்க்கிறத அவங்களில் ஒருவன் கவனிச்சா வெளியில வந்து கத்தி கூக்குரலிடுவான், பிறகு எல்லாம் அலங்கோலமாயிடும்."

 திரும்பி வந்து கட்டிலில் அமர்ந்து கொண்டான். அவன் இருப்பை உணர்ந்தவள். அவள் ஒரு கையை எடுத்துத்தன் மார்புகளிடையே இறுக வைத்துக் கொண்டாள். 

வழிதவறியோடிய கரு நதிகளை விரல்களால் ஒதுக்கி கன்னத்தில் முத்தமிட்டான்
 'ஏய் நீ போடட்டா' 
வேண்டாம படுங்க" 
அவள் தன்னை அரக்கி, அவன் படுப்பதற்குரிய போதிய இடத்தை ஏற்படுத்தினாள். படுத்தவன் கட்டில் அருகேயுள்ள மேசையில் இருந்த புத்தகத்தை எடுத்துப்பிரித்தான்.

When your face 
appearded over my crumpled life
 at first I understood
only the poverty of what I have. 

எதிர்பார்த்த ஒன்று கிடைக்காத உணர்வில் கண் திறந்தவள்.

 'சதா புத்தகம்தானா? தமிழ்த் தேச்3 ஆவணச் சுவடிகள்________________
WWW.tamilarangam.net

சிணுங்கியபடி புத்தகத்தைப் பிடுங்கி வீசினான். ஜெவ்ருசெங்கோ பரிதாபமாக மூலையில் கிடந்தான். அவள் பாதி அவனில் படர அனைத்துக் கொண்டாள். 

இந்த உரிமை இந்த உறவின் நம்பிக்கயிலா? இந்த உறவுக்கு அர்த்தமென்ன? இங்க வர்ரத்துக்கு முதல் நீண்ட நீண்ட இடங்களில் எத்தின புதிய புதிய முகங்கள் வேரோடி போக உறவுகள் உறவுகள் அடிக்கடி சந்திக்கிறதிலதான் வேர் கொள்ளுதா? அம்மா, தங்கச்சி தம்பி உறவுகளெல்லாம் வேரறுந்தா போயிற்று 

ஜெவ்ருசெங்கோவைப் பார்த்தான் சிவந்த முட்செடிகளுடன் அது அப்படியே கிடந்தது. 

காலை 08-40 க்கு சின்போர்ட்டுக்குப் போகும் 444இலக்க பஸ்ஸிற்கு நின்ற பொழுதுதான் கண்டு கொண்டான். பரவலாகத் தென்படும் வெள்ளை, கறுப்பு முகங்களிடையே ஆசிய முகமாக, குறிப்பாக இந்திய முகமாக அவள் தென்பட்டாள். 

அவளுக்கும் அது தான் பஸ், தொடர்ந்து வந்த நாட்கள் பலதின்பின் பரஸ்பர புன்னகை துளிர் கொண்டன. துளிர் கொண்ட புன்னகையின் துணிவில் ஒரு நாள் அவள் இருந்த சீட்டில் அவன் அமர்ந்த பொழுது

 நீங்கள் சிறீ லங்கனா அவள் ஆங்கிலத்தில் கேட்டாள். 

குஜராத்தி அல்லது வங்காளி என்ற அவன் கற்பிதங்கள் சிதற ஆச்சரியத்துடன் தலையை ஆட்டினான். 

நீங்கள்.?

 "சிறீலங்கன்தான்' 

தமிழா அவசரமாகக் கேட்டான்

. வலமும் இடமுமாகத் தலையை ஆட்டினாள். நறுக்கெண்றது அவனுக்கு தொடர்ந்து என்ன பேசுவதென்றே தெரியவில்லை. நீண்ட மெளனம் அந்த மெனளம்அவனுக்குச் சங்கடமாக இருந்தது.

 'ஊர்'

 'கண்டி 

"ஓ! மிகவும் அழகான இடம் இப்போது அவன் குரல் உற்சாகம் இழந்திருந்தது 

'போயிருக்கிறீர்களா 

தலையை ஆட்டினான். அவள் தணிந்த குரலில் மிகவும் தயக்கத்துடன் 

சிங்களம் தெரியுமா?

 இப்போ இவன் வலமும் இடமுமாகத் தலையை ஆட்டினான். 

ஆரம்பத்தில் இருந்த ஆர்வம் வடிந்து ஏனோதானோ என்றி ருந்தது. தொடர்ந்த மெளனத்தினூடே அவன் இறங்குமிடம் வந்தது. 

மீண்டும் சந்திப்போம் மரபிற்காக கூறிச் சென்றான். 

மறுநாள் காலை பஸ்நிலையத்தில் அதே புன்னகையுடன் அவள் முதல் நாள் இறுக்கத்தை அப்புன்னகைக் கரைத்தது. அந்த நெருக்கம் பார்க்பப் மக்டொனால்ட் என்று ஆரம்பித்து. இப்போ ஒவ்வொரு ஞாயிறும் அவன் அறையில் அவளாக, அவனது லேடி சட்டர்லியாக தொடர்கிறது. 

சில சமயங்களில் அவளைச் சந்தோசப்படுத்த தனக்குத் தெரிந்த சில சிங்களச் சொற்களைக் கூறுவான். அவள் குதூகலித்தாள். அவன் உச்சரிப்பைத் திருத்த முயன்றாள். இந்த ஆசிரிய, மாணவத்தனம் இருவருக்குமே பிடித்திருந்தது. இருவருக்கும் தெரியும். இதில் எவ்வித பலனும் இல்லையென்று ஆயினும் அவர்கள் அதை தொடர்ந்தார்கள். அவள் ஒரு தடவை கூட தமிழ் சொல்லை சொன்னதில்லை சொல்ல முயன்றதுமில்லை. 

திரைப்படங்கள் பற்றிப் பேச நேர்ந்த பொழுதெல்லாம் லெஸ்ரா ஜேம்ஸ் பீரிஸ், யூடிஎல்பெரரா கொலுகதவத்த கந்தான் கதாவ என்றெல்லாம் கூறி அவளை வியப்பில் ஆழ்த்தினான். தமிழ்த் தேசிய ஆவச் சுவடிகள்________________
WWW.tamilarangam.net

ஒரு தடவை அவள் படம் பார்க்க அழைத்திருந்தாள். இரு டிக்கட் வாங்கிவிட்டதாகவும் சொன்னாள். "பாலம ஜட்ட கீதா குமாரசிங்க நேரில் வருவதாகவும் கூறினாள். அப்படம் பற்றி ஊரில் கேள்விப்பட்டிருந்தான். ஆனால் பார்த்ததில்லை. 

தியேட்டர் முன் சிங்களக்குரல்கள். இடையிடையே ஆங்கிலம் கொழும்பில் நிற்பது போன்ற பிரமை அவனுக்கு சூழலுக்கும் தனக்கும் இடையில் ஒரு அன்னியத் தன்மை உலவுவதை உணர்ந்தான். 

அவள் உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தாள். சில வேளைகளில் அவனைவிட்டுவிட்டுச் சென்று சிலருடன் கதைத்தாள். பின் மீண்டும் வந்து அவனுடன் சேர்ந்து கொண்டான்.

 "ஹலோ சுகர்னா" 

திரும்பினாள். இரண்டு சோடிகள் ஆங்கில நாகரீகம். முகங்கள், அவர்களைத் தெரியாதவர்களுக்கு ஆசியர்கள்.

 இவன் கையைப் பிடித்து இழுத்துச் சென்று அவர்களுடன் சிங்களத்தில் கதைத்தாள். இடையில் தெமுழு என்ற சொல்மட்டும் புரிந்த போது திக்கென்றது அவனுக்கு 

ஒரு நூதனசாலைப் பார்வையுடன் "ஹலோ" என்றபடி கையை நீட்டினார்கள், சடம் போல் கையைக் குலுக்கிக் கொண்டபோது இவனது ஹலோ என்ற வார்த்தை உலர்ந்த நாவுடன் ஒட்டிக் கொண்டு இறந்தது. அவர்கள் மீண்டும் சிங்களத்தில், 

இடைக்கிடை அவர்கள் பார்க்கும் பார்வையில் வேண்டாத உணர்வும் வெறுப்பும் புரிந்தது. வந்திருக்க வேண்டியதில்லை என நினைந்தான். உரையாடலில் பங்கு கொள்ளாமல் தனித்து நிற்பது சங்கடமாக இருந்தது. வெளியேறிவிட விரும்பினான். முடியவில்லை. வீதியில் விரையும் கார்களைப் பார்த்துக் கொண்டு நின்றான். 

அவர்கள் சென்றபின் தியேட்டர் வாசல் கதவை நெருங்குகையில்

 "எனக்கு புரியாத பாஷையில் நீ
என்னப் பற்றி பேசுவது நாகரீகம் இல்ல"

 அவன் குரலில் தெறித்த சினம். பதட்டம் அவளை வியப்பில் ஆழ்த்தின. அவனை உற்றுப் பார்த்தாள். 

"நான் ஒன்டும் தப்பா சொல்லயில்ல 
எப்படியோ நான் இங்கிலீசில்தான் பேசியிருக்க வேணும்
 மன்னித்துவிடு" 

வேறு இடமாக இருந்தால் இந்த மன்னிப்புடன் அவளை அணைத்து முத்தமிட்டிருப்பான். சூழ்நிலையின் சங்கடம் அவன் இயல்பை மறுத்தன.

 படம் முடிந்து வெளியில் வந்தவுடன் மிகுந்த ஆவலுடன் கேட்டாள்.

 "படம் எப்படி? 
கீதா நல்ல வடிவுதானே" 
"ம் கீதா நல்ல நடிகை" 

"ரியூப்பில்" வரும் பொழுது ஏற்பட்ட நீண்ட மெளனத்தை குலைத்தாள்.

 "என்ன பேசாமல் வாlங்க உங்களுக்கு என்ன நடந்தது." 

இடைவேளையின் போது கவனித்தாயா சிலர் என்னை பார்த்த பார்வைய வேண் டாதவன் போல, நீ அறிமுகப்படுத்தினவங்க வேறு சிலரிடம் நான் யாரென சொல்லி யிருக்கலாம். அவர்களாகவும் இருக்கலாம். 

அவள் எரிச்சலடைந்தாள். 

"அப்படி ஒன்டுமில்ல நீங்கதான் 
அப்படி நினைக்கிறிய, தாழ்வுச்சிக்கல்"

தமிழ்த் தேசிய ஆவணச் சுவடிகள்________________
WWW.tamilarangam.net

பிறகு மெல்லச் சிரித்தபடி அவன் தோள் மீது தலையை சாய்த்துக் கொண்டு அவன் காதுக்குள்

 "நான் தான் உங்களோட இருக்கிறனே." 

அவன் முன் சீற்றிலிருந்த வெள்ளையைப் பார்த்தான். மூலை சீற்றிலிருந்த ஒரு கறுப்பன் ரெனன்ஸ் குடிப்பதும் இவர்களைப் பார்ப்பதுமாக இருந்தான். இதை கவனித்த அவள் தன் கைகளை அவன் கைகளுடன் கோர்த்துக் கொண்டாள். நெருக்கமாக அணைந்து கொண்டாள். 

பாதிபடர்ந்து கிடந்த அவள் உச்சியில் முத்தமிட்டபடி அனைத்துக் கொண்டான். அடர்ந்த அவள் கூந்தலின் குளிர்ச்சி அவனுக்கு இதமாக இருந்தது. 

வேண்டியது அதுதான் என்பது போல் முனகியபடி அவள் அவனை இறுக அனைத்துக் கொண்டாள்

. இந்த இரவுகளின் போது அவனுள் ஒரு குறை, உள்ளம் நெகிழ்ந்துவரும் அன்பு வார்த்தைகளை தன் மொழியில் சொல்ல முடியாமல் இருக்கிறதே என்பது தான். ஆங்கிலம் எப்படியும் அன்னிய மொழிதானே. உணர்வின் ஜீவனை சுயமொழி மூலம் தான் உணரமுடியும் அவளுக்கும் அக்குறை இருக்கலாம் என எண்ணினான். 

அவனை உள்வாங்கும் போதெல்லாம் தன் மொழியில் அவள் முனகுவதுண்டு. பின்னர் அதன் அர்த்தம் பற்றி வினவியபோது அப்படி எதுவும் சொல்லவில்லை என்று கொடுப்புக்குள் சிரித்துக் கொண்டாள் 

டெலிபோன் மணி அழைத்தது. வலதுகையை விடுவிக்க மனமில்லாது இடது கையால் ரீசிவரை எடுத்தான்

 "ஹலோ" 
"ராஜாதானே" 
"ம். ............
குரல் யாருக்குரியது எனப் புரிந்தது.
 "ரெலிரெக்ஸ் பாத்தியா"
 "இல்ல
' "அடிச்சுப்பார் முக்கியமான விசயம்" 
"நீதான் சொல்லன்" 
"அடிச்சுப்பார்"

 மறுபுறம் ரிசீவரை வைக்கும் ஒலி கேட்டது. சலித்துக் கொண்டான். அவளை விலக்கி ரிமோட் கொண்றோலர் மூலம் பேக்ஸின் உலகச் செய்தியை எடுத்துக் கொண்டான்.

 ".இராணுவமுகாம் நிர்மூலமாக்கப்
 பட்டது. எழுபத்து ஐந்து பாதுகாப்புப் படை
 யினரும் ஐம்பது போராளிகளும் கொல் 
லப்பட்டனர்."

 சுகமான இருப்பு குலைக்கப்பட்டதால் சினத்துடன் எழுந்த அவள் பயஐ பார்த்தாள் 

"ஐயோ கடவுளே" சிங்களத்தில் கூறினாள். 

அதிர்ச்சி அடைந்த அவன் அவளைப் பார்த்தான். அவள் பேக்ஸ்ஸையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் பேக்ஸ்ஸை ஒவ்' பண்ணினான் ரிமோட் கொன்றோலரை அவனிடமிருந்து பறித்து திரும்பவும் அதை அடித்தாள். 

"எழுவத்திஐந்துபேர்"

 பெருமூச்செறிந்தபடி தலையைக் குனிந்து கொண்டாள்.அவன் எதுவும் பேசவில்லை.மனம் அரற்றியது. 

"ஐம்பது பேர்" 
"ஏன் இப்படியெல்லாம்"


16 தமிழ்த் தேசிய ஆவணச் சுவடிகள்________________
WWW.tamilarangam.net

என்ன பதில் கூறுவதென்றே தெரியவில்லை. மெளனமாக இருந்தான்.

இவளுக்கு பிரச்சனையை ஆரம்பத்திலிருந்தா விளக்க முடியும், விளக்கினாலும் புரிஞ்சு கொள்வாளா

"என்ன பேசாமல் இருக்கிறியள்" "என்ன சொல்ல வேணுமென எதிர்பார்க்கிறாய்" 

"ஒண்டும் சொல்ல வேணாம்"

எழுந்து சென்று அவன் சாரத்தை எடுத்து குறுக்குக் கட்டாக கட்டியபடி கண்ணாடி முன் நின்றாள். கண்ணாடி அருகிலிருந்த புத்தகங்களிடையே உற்றுப்பார்த்தவள் அதனுள் செருகப்பட்டிருந்த ஒரு மஞ்சள் துண்டு காகிதத்தை எடுத்துப் பிரித்தாள். சற்று நேரம் உற்றுப் பார்த்தவள் சினைந்த முகத்துடன் திரும்பினாள்.

"இது என்ன?"

தேசிய பாதுகாப்பு நிதிக்கான ரசீது அது. அதை விளங்கப்படுத்தி சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. ரசீதின் இடதுபக்க மூலையிலுள்ள சிவத்த வட்டத்தினுள் பொறிக்கப்பட்டிருந்த சின்னமும் செலுத்தப்பட்ட தொகையும் அவளுக்கு எல்லாவற்றையும் புரியவைத்தது.

 "என்ன இருந்தாலும் 
இந்த யுதத்தில் நாங்க வெல்ல 
வேணும்." 
அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது. எப்படி இதைக் கூறியதென்று. ஒரு வேகத்தில் வெளிவந்தது.


"அப்ப நாங்க சாகவேனுமா" 

அவள் வெடுக்கென வெறித்தாள். இப்போது அவள் கண்கள் தான் மோகத்தில் முத்தமிடும் . கண்களாகத் தெரியவில்லை. தியேட்டரில் பார்த்த அவர்கள் கண்கள் போல் இருந்தது. மீண்டும் உற்றுப்பார்த்தான். சந்தேகமில்லை. தியேட்டரில் பரவிய அன்னியம் தன் அறையில் உலவுவதான உணர்வு 

கதிரையில் கிடந்த தன் உடைகளை அணிந்துகொள்ள ஆரம்பித்தாள் பிளவுசினுள் சிக்கிய தன் கூந்தலை இரு கைகளாலும் கோதி முதுகில் படரவிட்டாள். அவள் ஒவ்வொரு செயல்களிலும் வேகம் படபடப்பு திரும்பி அவனைப் பார்த்தாள். 

"நான் போகப்போறன்" 
"ஏன்" 
"இல்ல நான் போகபோறன்"
 அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான். தன்னை சரிசெய்த பின்னர் கான்பாக்கைத் தோளில் போட்டுக் கொண்டு தயங்கி நின்றாள். பின் தீர்மானமாய்

 "நான் போறன்" 

அறையைவிட்டு மெல்ல வெளியேறினான். படிக்கட்டுகளில் இறங்கும் சத்தம் அவனுக்குக் கேட்டது இப்போது வெளிக் கதவின் சத்தம். 

கட்டிலை விட்டு எழுந்து யன்னல் வழியே நோக்கினான். 

அவன் மோகத்தைக் கிளறும் அடர்ந்த கூந்தல் முதுகில் படர இத்தாலிய பப்பைத் தாண்டிச் சென்று கொண்டிருந்தாள்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

சில இதழ்கள் St A : TAMIL INFORMATION CENTRE, THAMILHOUSE, 720 ROMFORD ROAD, LONDONE 126BT QLDGT66TLô : 6, Square du Roule, 92200 Neuilly S/SEINE - FRANCE நாழிகை : Newsmedia International Limited, Park Royal House, 23, Park Royal Road, London NW 107JHUK. 3.6J(5GiT : Herslebs GT43, 0578 OSLO-Norway.

தமிழ்த் தேசிய7ஆவணச் சுவடிகள்