தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Sunday, March 26, 2017

கயிறு-தகழி சிவசங்கரப்பிள்ளை

'கயிறு நீண்டதொரு காலகட்டத்தின் வரலாறு குட்டநாடு என்ற கிராமத்தில் பல தலைமுறைகளாக மனிதன் வாழ்ந்து வந்த கதை. என்னுடைய பார்வையில் தேசத்தின் வரலாறு என்பது மனிதன் எப்படி மண்ணுடன் உறவுகொண்டு வாழ்ந்தான் என்பதுதான். இந்த நாவலின் படைப்பில் கதை சொல்ல நான் எடுத்துக் கொண்ட நிகழ்ச்சிகள்தான் மிகவும் கவனிக்கத்தக்கவை என்று எனக்குத் தோன்றுகிறது. மகாபாரதத்தின் கதை நிகழ்ச்சிதான் எனக்குத் தூண்டுதலாக அமைந்தது. அத்துடன் என்னுடைய கிராமத்திற்கே உபரிய கதை சொல்லும் சம்பிரதாயங்களும உண்டு. நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா இநத நாவலின் சுருக்கப் பதிப்பை வெளியிடத் தீர்மானித்தபோது அது வெற்றி பெறுமா என்று நான் சந்தேகப்பட்டேன், காரணம, சுருக்கி எழுத முடிவதான ஒரு நாவல் அல்ல இது. அதை விரிவுபடுத்தி எழுதவும் முடியாது. அதற்கென்று தனித்ததோர் உருவமைப்பு உண்டு. அந்த உருவமைப்பின் போககில்தான நாவல் முன்னோக்கிச் செல்கிறது. என் அறிவுக்குப் புலப்பட்ட வரையில் இந்த நாவலைச் சுருக்கித் தருவதில் முனைவர் வேணுகோபாலன வெற்றி பெற்றிருக்கிறார். கயிறு நாவலிலிருந்து ஒரு சுயசரிதை நாவலை எழுதியது போலிருக்கிறது. இந்த நாவலின சுருக்கப் பதிப்பு ஒரு வேளை 'கயிறு நாவலில் விவரிக்கப்பட்டுளள வாழககை புனைவர் வேணுகோபாலனுக்கும் அறிமுகமானது என்பதால் இருககலாம்.
-தகழி சிவசங்கரப்பிள்ளை


அரசாங்கத்தின் ஆணைப்படி கிராமத்தில் புதிதாக நிலஅளவை நடக்க இருந்தது-இதற்காக வரவிருக்கும் அதிகாரியின் பெயர் க்லாசிப்பேர். அவர் தங்கியிருப்பதற்கான இடமாக எருமத்ரமடம் சுத்தமாக்கப்பட்டுத் தயாராகிக் கொண்டிருந்தது.
சமூகத் தலைவர்களில் ஒருவரான கோடந்த்ா மூத்தாசான் செய்தி கேட்டு ஒடிவந்தார். கோயில் நிர்வாகம் ஸ்தானிகள் எனப்படும் சமூகத் தலைவர்களின் அதிகாரத்திற்கு உட்பட்டது ஊரின் முதல் முக்கிய இடம் கோயில்தான் மூத்தாசான் கோயில் நிர்வாகியிடம் கேட்டார். "என்ன. கணக்குப்பிள்ளே, எருமத்ரமடம யாருக்காகத் தயாராகிக் கிட்டிருக்கு?
"க்லாசிப்பேர்க்கு" "அப்படின்னா என்ன ஜாதியோ" மூத்தாசான் விசாரித்தார். "அனேகமா சூத்திரனாயிருக்கும்." "அப்படின்னா நம்பூதிரிப் பெரியவங்களும் மததவங்களும், எதிரே வந்தால் என்ன செய்வாரு?" மூத்தாசானின் கேள்வி புறக் கண்ணிககத்தக்கதல்ல. இன்று வரை தந்த்ரிமார்களான பிராமணர் களுக்கு மட்டுமே எருமத்ாமடம் தங்குவதற்காகக் கொடுக்கப்பட் டிருக்கிறது. நடைமுறையில் இல்லாத காரியம் இது. ஆனால் தாசில்தார் கச்சேரியிலிருந்து வந்த ஆணை, க்லாசிப்பேர்க்குத் தங்கு வதற்கு இடம் கொடுகக வேண்டுமெ6ாறு சொல்கியூது வரவிருக்கும் கிளிமானூர்க்காரர் ஒரு சூத்திரர் என்றும் பொனனு தம்புரானுக்கு வேண்டியவர் என்றும், கோயில் நிாவாகத்தைப் பார்த்துக் கொள்ளும் கணக்குப் பிள்ளைக்குத் தகவல் எட்டியிருந்தது. "அப்படின்னா மடத்தை நல்லா சுத்தப்படுத்தணும்" எனறு மூத்தாசான் சொல்ல வேண்டியதாயிற்று
மாணியும், குஞ்துதேவியும் குஞ்னுக்கியும் தரையைச் சானம் கொண்டு மெழுகினார்கள. க்லாசிப்பேர் என்பவர் பொன்னுதம்பு ரானுக்கு நெருக்கமானவர் என்பது அவர்களுக்கும் தெரிந்திருந்தது. குஞ்னுதேவி சிறுமியாக இருந்தபோது அம்பலப்புழையில் பொன்னுதம்புரானைப் பார்த்திருக்கிறாள. அந்தக் கம்பீரம்பார்க்கத்தக்கதுதான். அவருடன் தம்புராட்டியம்மாவும் இருந் தார்கள். மார்க்கச்சு உடுத்தி, தங்க நகைகள் அணிந்து அவர் நடந்து போன காட்சி இப்போதும் நினைவிருக்கிறது. தம்புராட்டி அம்மாவின் நிறம் சொக்கத்தங்கம் தங்கத்துக்கும் மேனியின் நிறத் திற்கும் வித்தியாசமே தெரியவில்லை. இன்றைக்கும் குஞ்னு தேவிக்கு அது நினைவிருக்கிறது. குஞ்லுக்கி தனிப்பட்டவள். அவள் எதற்கும் எங்கேயும் முரண்படுவாள். யார் எது சொனனாலும் எதிர்த்துப் பேசியாக வேண்டும்.
"நம்மஞம் பொம்பளைங்கதான். அவங்களும் பொம்பளை தான். நம்ம வயித்திலே உண்டாகப் போகிற மாதிரிதான் அவங் களுக்கும் வயித்திலே உண்டாகும்." குஞ்னுக்கி மறுத்துப் பேசலானாள், "விளக்கை அணைச்சிட்டா அதுக்குப்பிறகு நிறம் என்ன கணக்கு? எல்லாப் பொம்பளைங்களும் ஒரே மாதிரிதான். செத்த பிறகு புதைச்சா அழுகிப் போகும், எரிச்சா சாம்பல்
"கொஞ்சம் மெள்ளப் பேசுடி, பொட்டச்சி. பொன்னு தம்புரான் வீட்டு அம்மாவைப் பத்திப் பேசுறே. கவனம். தலை போயிரும் குஞ்ஞளாச்சிதான் இதைச் சொன்னாள்.
ஆனால் குஞனுக்கி அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை. மற்ற பெண்கள் அந்த ராஜதுரோக வார்த்தைகளைக் கேட்கப் பொறுக்காமல் திரும்பிக்கொண்டார்கள். வேறு யாராவது கேட்டுத் தம்புரானுக்கு வேண்டியவர்கள் க்லாசிப்பேர் வரும்போது அவரிடம் சொல்லிவிட்டால் என்னாவது எனறு அவர்கள் பயப்பட்டார்கள்.
அபபோதுதான் குறுப்பாசான் அங்கே வந்து சேர்ந்தாா. எருமத்ரமடம் மிகவும் சுத்தமாக இருக்கவேண்டும் பொனனுதம்பு ரானுக்கு வேண்டியவர் தங்குவதற்கு வருகிறார். சாணத்தில் சாம்பலையும் சேர்த்து மெழுகும்படி பெண்களிடம் ஆசான் ஆணையிட்டார். காலை நேரத்துக் கோயில் நைவேத்தியப் பிரசாதம் கொடுத்த தெம்பு என்று பெண்கள் பேசிக் கொண் டார்கள். காலை நைவேத்தியப் பிரசாதத்தின் சரியான ருசியை அறிந்திருந்த ஒருவர் ஊரிலுண்டு. அவர்தான் மூத்தாசான். அந்தப் பிரசாதத்தைக் கொடுத்தால் ஆசானை மடக்கிவிடலாம் என்பது கோயிலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த எல்லோருக்கும் தெரியும்.
க்லாசிப்பேர் தங்குமிடத்தைச் சரிபார்ப்பதற்காக அந்த இடத்திற்கு அதிகாரி வந்தார். மூத்தாசானும் நிர்வாகியும் தோளில் இருந்த மேல்துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டார்கள்.
2சமூகத தலைவரான கோடாந்த்ர மூத்தாசானே நேரடியாக வந்துநின்று, க்லாசிப்பேரின் தங்குமிடத்தை சுத்தப்படுத்துகிறார் என்பதைப் பார்த்தபோது அதிகாரிக்குத் திருப்தியாயிற்று.
ஆசான் சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்வதற்காக அதிகாரி யிடம் கேட்டார்:
யாருங்க இந்த க்லாசிப்பேர்" "நில அளவை வருது குறுப்பே, அது சம்பந்தப்பட்டவருவிஷயம் புரிந்தது போலிருந்தது ஆசானுக்கு இனிமேல் வரியைப் பணமாகக் கட்டவேண்டும் என்றும், அதற்காகத்தான் சர்வே வருகிறது என்றும் அதிகாரி சொன்னார். நடுங்கச் செய்யும் செய்தியாக இருந்தது அது நிலததில் விளைவதில் ஒரு பங்குதான் ராஜபோகம், அதுதான் இன்றுவரை கொடுத்துக் கொண்டிருந்த வரி. இனிமேல் அப்படியல்ல. வரியைப் பணமாகக் கொடுக்க வேண்டும்! எந்த நிலத்தில் பணம் விளைகிறது?
குறுப்பாசான் கேட்டார், 'பொன்னுதம்புாான் இப்படி கட்டளை போடுவாரா? அவர் விவசாயிகளோட கண்கண்ட தெய்வமில்லையா? இதெல்லாம் தம்புரானுக்குத் தெரிந்து நடக்கிற காரியங்களல்ல. தளவாயின் வேலைகள் என்பது அதிகாரியின் அபிப்பிராயம்,
இனிமேல் நிலங்களை அளந்து இவ்வளவு பணம் என்று வரி நிச்சயிப்பார்கள். அதை வசூலிப்பது தாலுகா கச்சேரிக் காராகள். தண்டல்காரனோ அளவுகாரனோ யாரும் வேண்டாம் வரி நெல்லாக இருந்தால் இவர்களெல்லாம் தேவைப்படுவார்கள் அடுத்து பதவிக்கு வரவேண்டிய அதிகாரி வாரிசு முறையில் அவருடைய மருமகனாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது என்பதையும் அதிகாரி சூசகமாகத் தெரிவித்தார். தலைமுறை தலைமுறையாக முல்லேப்பிள்ளிக் குடும்பத்தார் களிடம்தான் அதிகாரப்பதவி இருந்து வநதிருககிறது. குடும்ப அமைப்புகளின் பெருமை அஸ்தமிக்கிறதோ என்று குறுப்பாசான் சந்தேகப்பட்டார்.
"வரி கொடுக்கவில்லையானால்" குறுப்பாசான் கேட்டார். அதிகாரிக்குச் சந்தேகம் ஏற்படவில்லை வரி செலுத்தவில்லை யானால் ஜப்தி நடவடிக்கைதான் தண்டனை குடும்பங்களில் குழந்தை குட்டிகள் எல்லோருக்குமே இது அல்லல்தான்.
இதற்கு முன்பும் நில அளவை நடந்திருக்கிறது. ஆச்சோமன் மாமா சொல்லக்கேட்ட சில கதைகள் ஆசானின் நினைவில் இருக்கின்றன. வெட்டிக்காட்டு வயல் கோடாந்த்ர குடும்பத்திற்கு
சர்வேமூலம் கிடைத்த கதையைக் கோடாந்த்ர ஆச்சோமக் குறுப்பு விரிவாக சொல்வார். அது ஒரு நலல கதை காரணவா-மருமககட தாய முறையில் குடும்பத்தை நிர்வகிக்கும் குடும்பத்தலைவர். இவர் அக்குடும்பத்தினரின் தாய்மாமனாக இருப்பார். இவருக்குப் பின் இவரது மருமகன் காரணவர் பதவியைப் பெறுவார். குறுப்பாசான் நினைத்துப் பார்த்தார். அன்று குடும்பத்தின் காரணவராக இருந்தவர் இட்ராமன்கோந்தி, விவசாயம் செய்ய நாட்டம் உள்ள வர்களுக்கு நிலத்தை எழுதி வைப்பார் நிலத்தைத் தரிசாகப் போட்டுவைக்கக் கூடாது அதுதான் அன்றைய முறை. அன்றைக்கு அவ்வாறு விவசாய நிலத்தின் பெயரில் ஒப்பந்தப் பத்திரம் போட்டுக் கொடுத்த உத்தியோகஸ்தரின் பெயர் குறுப்பாசானுக்கு நினைவில்லை. அன்றையத் தண்டல்காரர்கள் தகுதியான வர்களைத் தேடிக்கண்டுபிடித்து அந்த உத்தியோகஸ்தர்களின் எதிரில் கொண்டுவந்து நிறுத்துவார்கள். பிறகு நிலத்தைக் குத்தகைக்குப் பதிந்து கொடுத்துவிடுவார்கள். ஐந்நூறு மரக்கால் விதைப்பாட்டு நிலம் இட்ராமன்கோந்தியின் பெயரில் பதிவாகியது. அவ்வளவு நிலத்தையும் விவசாயம் செய்வதற்கான ஆள் பலமும் பணமும் அன்று கோடாந்த்ர குடும்பத்தில் இல்லை. எழுபது ராசிகள் அதாவது, எழுநூறு வெளளி சக்கரக்காசுகள், லஞ்சம் கொடுத்து அதை நூறாகக் குறைத்தார். ஆற்றருகில் அமைந்து வண்டல் படியும் வளமை கொண்டிருந்தது அது அப்படித்தான் வெட்டிக்காட்டு வயல் கோடாந்த்ர குடும்பத்திற்கு வந்து சேர்ந்தது. இப்படி ஒவ்வொரு குடும்பத்திற்கு ஒவ்வொரு கதை உண்டு. ஒரு குடும்பத்தைப் பற்றி ஏதாவது சொல்ல நேரும்போது ஆச்சோமன்மாமா அதனுடைய கதையைச் சொல்லத் தொடங்குவார். இப்போதைய மூத்தாசானின் வாலிபப் பருவத்தில் அவர் கேட்ட அந்தக் கதைகளைத் திருப்பிச் சொல்லும்முறை சுவாரசியமாக இருக்கும். வீட்டுத் திண்ணையிலோ, களத்து மேட்டிலோ, மாந்தோப்பிலோ, எங்கே கதை சொன்னாலும் ஆச்சோமன்மாமா சொல்வதைக் கேட்க ஆட்கள் எப்போதும் இருப்பார்கள். இல்லாவிட்டால் அனுப்பிக் கூட்டிவரச் செய்து கதை சொல்வார். அந்தக் கதைகளை எழுதி வைத்தால் அதுவும் ஒரு புராணமாகிவிடும்-ஆச்சோம புராணம்,
ஆசசோமன் மாமாவுக்குக் குடும்பக் காரியம் எதுவும் தெரியாது. பாவம், கதை சொல்லிச் சொலலியே காலம் முடிந்து இறந்தார்,
முல்லேப்பிள்ளி குடும்பத்திற்கும் கதை உண்டு. ஆச்சோமன்
4.மாமா சொல்லக் கேட்ட கதை குறுப்பாசானுக்கு நினைவிருக்கிறது. பழைய சர்வே சம்பந்தப்பட்ட கதை அது ஆச்சோமக் குறுப்பு கோடாந்த்ர மூத்தகுறுப்பிடம் சொல்லத் தொடங்கியதுபோலக் குறுப்பாசான் அந்தக் கதையைச் சொல்லத் தொடங்கியபோது அதிகாரியின் முகம் சற்றே வாடியது தன்னுடைய குடும்பத்தைப் பற்றிய அவமானகரமான குறிப்பு ஏதேனும் அதில் இருந்து விட்டால் என்ற பயம்.
அன்றைக்கு ஒப்பந்தப் பதிவுக்காரர்கள் ஊர் முழுக்க அலைந்து தகுதியானவர்களைத் தேடிப் பிடித்துக்கொண்டு வந்தார்கள். யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது. ராஜாங்க உத்தரவு அல்லவா? ஒவ்வொரு குடும்பத்திற்கும் சமாளிக்க முடிந்த அளவு கூடுதல் நிலம் பதிவு செய்து கொடுக்கப்பட்டது. அப்படி யிருந்தும் நிலம் மிச்சம் இருந்தது. முடிந்த மட்டுக்கும் அதிகப் படியாக எழுதி வாங்கிக் கொள்ளலாம் எனபதாக ஒரேயொரு காரணவர் மட்டும் தன்னம்பிக்கையுடன் காரியஸ்தரிடம் சொன்னார். காரணம், அவருக்கு அனுமன் கடாட்சம் இருந்தது. அதனால்தான் அவருக்கு அவ்வளவு தைரியம்.
அதற்குப் பிறகும் நிலம் மிச்சமிருந்தது. மண்ணுக்கு மேற்படியாக எதுவும் போடத் தேவையில்லை. நல்ல வளமான வண்டல் படிந்த மண், காலம் பார்த்து வெயிலும், மழையும் உண்டு. விதையைப் போட்டால்போதும், ஆயிரம் மடங்கு கொடுக்கப் பஞ்ச பூதங்கள் தயாராக இருந்தன. இங்குள்ள மனிதர்களெல்லாம் சாப்பிடுவதற்காக மண்ணில் இறங்கி வேலை செய்ய வேண்டும். அதற்காகத்தான் பொன்னுதமபுரான் குத்தகை ஒபபந்தப் பதிவு முறையை ஏற்பாடு செய்திருந்தார். அப்படியானால் நிலத்தை சும்மா போட்டு வைப்பது தவறு. குற்றம் காரியஸ்தர் இப்படிக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தபோது முல்லேப்பிள்ளி குடும்பத்தைப் பற்றி நினைத்துப் பார்த்தார். ஏராளமாகத் தங்கமும், வெள்ளியும், செல்வாககும் உள்ள குடும்பம். முனபு வெள்ளைக் காரர்களின் வியாபாரத்தில் வேலை பார்த்துச் சம்பாதித்தது. காரியஸ்தர் முல்லேப்பள்ளி காரணவரைக் கூப்பிட்டனுப்பினார். அன்று கொஞ்சம் கூடுதலான நிலத்தை எழுதி வாங்கியதன் காரணமாக முல்லேப்பிள்ளி குடும்பத்தின் நிரந்தர அதிகாரி ஸ்தானம் அவருக்குக் கிட்டியது.
புதிய நிலப்பதிவு வருவதனால் முல்லேப்பிள்ளி குடும்பத்தின் அதிகார ஸ்தானம பறிபோகும். இந்த நிலப்பதிவினால் ஜனங்களுக்கு நல்வதும் உண்டு, கெடுதலும் உண்டு. ஆசான்
5யோசித்தார். ஆனால் உத்தரவு எப்படிப் பட்டதாக இருந்தாலும், அதை அமல்படுததும் அதிகாரி சிந்தித்துப் பார்த்தால் விவசாயிகளுக்குக் கெடுதல் வராமல் பார்த்துக் கொள்ள முடியும். ஆசான் விவரம் தெரிந்தவர் என்பது அதிகாரிக்கு விளங்கிவிட்டது. கதை கேட்டு, அதனால் உண்டான தெளிவாக இருக்கலாம்.
அதிகாரி போய்விட்டார். சில விவகாரங்களைப் பற்றி ஆலோசனை நடத்தும் ஏழுபுரத் திண்ணைச் சாய்மானத்திற்குப் போய் ஆசான் உட்கார்ந்தார். ஊர் முழுக்க ஒரு குழப்பம் வரப் போகிறது என்ற கவலை ஆசானுக்கு இந்த நிலப்பதிவு ஒரு வேளை மங்கலசேரி குடும்பத்திற்கு நல்லது செய்யலாம். அங்கே தடிமாட்டுப்பயல்களான மருமகன்மார் இருபதோ இருபத்தைந்து பேரோ இருந்தார்கள், வேலை செய்யச் சோம்பல் படாதவர்கள் அவர்கள். இப்போதே புறம்போக்கு நிலங்களில் யாரையும் கேட்காமல் கொள்ளாமல் ஏமாற்றி வளைத்துப் போட்டு விவசாயம் செய்து வருகிறார்கள். ஆனாலும் அந்தக் குடும்பத்திற்கு வருஷாவருஷம் செலவுக்கு நெல் போதவில்லை. எவ்வளவு நிலம் அவர்களுக்கு எழுதிக்கொடுத்தாலும் அவர்கள் அதில் விவசாயம் செய்துகொள்வார்கள். ஆசான் நிர்வாகிக்கு ஒரு புத்திமதி சொன்னார். "தேவஸ்தானத்துக்குப் பத்திரம் போட்டுக்கிடைக்கிற அளவு நிலத்தைக் கேட்டு வாங்கிக்குவோம். தேவஸ்தானத்திற் கென்றால் வரி இருக்காது. க்லாசிப்பேரை சந்தோஷப்படுத்தணும். நம்ம சொந்தக்காரியத்துக்காக இல்லே, தேவ காரியமில்ல இது? பாலத்தோள் முகுந்தர் அங்கே வந்து சேர்ந்தார். அவர் பெரிய பிராமணர் ஐம்பது ஆண்டுகள் கோயிலில் மேல் சாந்தியாய் இருந்த அவர் எருமத்ரமடம் யாரோ ஒரு சூத்திரன் தங்குவதற்குத் தரப்பட இருக்கும் செய்தியைக் கேட்டு விசாரிக்க வந்திருந்தார்.
அந்த மடம் கோயில் தரிசனத்துக்கு வருகின்ற பிராமணர்களுக்கு ராத்திரி தூங்குறதுக்காக இருக்கிற இடமாச்சே, அங்கே சூத்திரர்களைக குடும்பத்தோட தங்கவிடலாமா? என்ன குறுப்பு? குறுப்பு கோடாந்த்ர குலமா இல்லையா? குலவிதிகளும் தர்ம நியாயங்களும் தெரியாதா உங்களுக்கு
பாலத்தோள் முகுந்தரின் கேள்விக்கு முன்னால் குறுப் பாசான் தளர்ந்து போனார். ஆனாலும் பணிவுடன் சொன்னார், இது ஊருக்காகச் செய்ய வேண்டிய காரியமாயிருச்சு. வரப் போகிறவர் பொன்னுதம்புரானின் உததியோகஸ்தர் அவரைச் சரியாக கவனிக்கலேன்னா ஊர்ககாரங்களுக்குத் தொந்திரவு வரும், கரிசல் காடெல்லாம் கூடப் பத்திரம் போட்டு எல்லாத்துக்கும்
6தீர்வை விதிச்சா விவசாயிகளெல்லாம் ஊரைவிட்டுப் போகும் படியா ஆயிடும். க்லாசிப்பேரை சந்தோஷப்படுத்தினா பல சலுகைகள் கிடைக்கும்" மூத்தாசான் சொன்னதைக் கேட்டபோது நம்பூதிரியின் சிந்தனை வேறொரு திசைக்குத் திரும்பியது. தேவஸ்தானத்திற்கும் பிராமண சொத்துக்கும் வரிபோட மாட்டார்கள் அல்லவா ஏராளமான நிலத்தைத் தன் வீட்டாரின் பெயரில் எழுதிவாங்கிக் கொள்ளவேண்டும். இந்த விஷயத்தைப் பிள்ளைகளுடன் கலந்து ஆலோசிக்க முகுந்தர் வீட்டிற்குத் திரும்பினார்.
***
திருவனந்தபுரத்திலிருந்து க்லாசிப்பேரும் அவரது குடும்பத்தாரும் வந்து சேர்ந்தார்கள். அவர்கள் எருமத்ர மடத்தில் குடியேறி னார்கள். க்லாசிப்பேர் கொச்சுப்பிள்ளை நல்ல அழகன். குடுமியும் கல்பதித்த கடுக்கனும் அணிந்திருந்த அவா முண்டாசு கட்டி நடந்துபோகும்போது எவரும் ஒருமுறை நின்று பாாத்துவிட்டுப் போவார்கள். ஆனால் அவருடைய மனைவி குஞ்னுலட்சுமி கறுத்து, தடித்த ஒரு கரும்பூதம். கந்தர்வனைப்போல் இருக்கும் ஒருவருக்குக் குறத்தறக்காளியைப்போல் ஒரு மனைவி எந்தப் பொருத்தமும் கிடையாது. ஆனாலும் அவர்களுக்கு ஒருவரை யொருவர் பிடித்துப் போயிற்று. உவரில் இளவட்டங்களுக்கு அது ஒரு வியப்பாகத்தான் இருந்தது. இந்த கந்தர்வணுக்கு இந்த கரும்பூதத்திடம் எப்படிப் பிடிமானம் ஏற்பட முடியும்!
க்லாசிப்பேர் நிலஅளவை வேலையைத் தொடங்கினார். தண்டல்காரன், அதிகாரி ஆகியோர் பின்தொடர அவர் வீடு வீடாக ஏறியிறங்கித் தகவல் பதிவேடைத் தயாரிக்கத் தொடங் கினார். நிலஅளவை எனறால் என்ன என்பதை ஊர்க்காரர்களும் தெரிந்துகொள்ளத் தொடங்கினார்கள் வரிகூட்டப்போகிறார். இனி வரியை நெல்லுக்குப் பதிலாகப் பணமாகக் கட்டவேண்டும். நிலப்பதிவு சம்பந்தமாகக் குறைபாடு நேராதிருக்கக் க்லாசிப்பேரை சந்தோஷப்படுத்த வேண்டும். அதற்குக் க்லாசிப்பேரை நேரில் போய்ப்பார்த்துச் செய்ய வேண்டியதைச் செய்யவேண்டும். முதலில் இப்படி அவரை நேரில் பார்த்து அன்பளிப்புச் செய்தது மங்கலச் சேரி ரவிபபிள்ளை. எண்ணெய், சர்க்கரை, பெரிய பெரிய நேந்திரம் பழக்குலைகள், காய்கறிகள் ஆக எல்லாமாகச் சேர்ந்து பெரிதும்
.................
7