தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்து காலத்தால் அழிக்கமுடியாதவை சிலவற்றை இங்கே இந்த இடத்தில் தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (TShrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

Thursday, March 30, 2017

அசோகமித்திரனின் ’வாழ்விலே ஒரு முறை’ - ஞானக்கூத்தனின் முன்னுரை

அசோகமித்திரனின் முதல் தொகுதியான ’வாழ்விலே ஒரு முறை’க்கு ஞானக்கூத்தனின் முன்னுரை
automated google-ocr
maamallan facebook
https://archive.org/details/@madrasdada
http://www.gnanakoothan.com/2017/04/01/வாழ்விலே-ஒரு-முறை-முன்/
இந்தத்தொகுப்பில் நிறையக் கதைகள் இருக்கின்றன. அசோக மித்திரன் நிறைய்வும் எழுதியிருக்கிார். நன்ாகவும் எழுதியிருக்கிருர்,

ஒரு விதத்தில் நிறைய எழுதவில்லை. ஒவ்வொரு கதை யின் முடிவிலும் அது எழுதி முடிக்கப்பட்ட ஆண்டு குறிக்கப் பட்டிருக்கிறது. பதினைந்தாண்டு எழுத்துக்கு இருபத்தாறு கதைகள், இருந்தும் இந்த எழுத்து புதிது.

இந்தக் கதைகளை மட்டும் முதன் முறையாகப் படிக்க நேர்கிறவர்கள்கூட ஒரு விஷயத்தைப் ப்ார்க்கத் தவறமாட் டார்கள்: அசோகமித்திரன் பார்த்துச் சொல்லி யிருக்கிற விஷயங்களைப் போலவே தாங்களும் சொல்லிய வேறு பல எழுத்தாளர்கள் பதறி இருக்கிருர்கள். இதை நினைவில் கொள்ளும்போது வாசகர்களிடத்தில் உட்னடியான பலா பலன்களை அசோக மித்திரன் எதிர்பார்ப்பவர் இல்லை என்ப தும் கலைப் படைப்பில் அவரது ஈடுபாடு எவ்வளவு அழுத்த மானது என்பதும் தெரியும், ஒரு கவிஞனின் நேர்த்தியான செய்யுள் திறனுக்கு இணையான் உரைநடை அவருடையது. இந்த உரைநடையும் உரத்துப் பேசாத அவர் இயல்பும் சேர்ந்து சொல்கிற விஷயத்தை ஊன்றிக் கவனிக்க வைக் கின்றன; சொல்கிற விஷயத்தில் அவருக்குள்ள நிச்சயத் தைத் தெளிவாகக் காட்டுகின்றன.

அசோக மித்திரன் பாத்திரங்களை வர்ணிப்பதில்லை. ஸ்தூலமாகக் காட்டுவது என்றில்லாமல் அவர்களுடைய ஸ்திதியைக் காட்டுவதுதான் அவருடைய நோக்கமாக இருக் கிறது. பாத்திரங்களின் பேச்சுகளாலும் சூழ்நிலைகளாலுமே அவை நமக்கு உருவாகி விடுகின்றன. இந்தப் பாத்திரங்கள் தங்கள் இருப்புக்குத் தங்கள் சொந்தமான வாழ்க்கையையே ஆதாரமாகக் கொண்டுள்ளன.

இங்கே ஒரு கேள்வி எழுகிறது. இங்கே கதைகளில் சொல்லப்பட்ட அளவிலேயே இந்தக் கதைகளும் இந்தப் பாத்திரங்களும் முற்றுப் பெற்றுவிடுகின்றனவா? எந்தக் காரணத்தால் மிகச் சாதாரணமான மனிதர்கள் பற்றி மிகச் சாதாரண்மாக எழுதப்பட்டது போன்ற இக் கதைகள் ஒவ் வொரு பாத்திரத்திற்கும் ஒவ்வொரு சம்பவத்திற்கும் பூல் வேறு சாத்தியக் கூறுகளைப் படிப்போருக்குத் தோற்றுவிக் கின்றன? எப்படி ஒரு சொல்லைக் கொண்டு பத்து சொற்களின் பொருளைத் தொனிக்க வைக்க முடிகிறது? ஒரு உதா ரணம் பார்வை'.

"பார்வையில் வரும் சோப்புப் பொடி விற்கும் அந்த பெண் வேறு வேலை கிடைத்தால் அல்லது கிடைத்திருந்தால் என்ன உடுத்தியிருப்பாள், எப்படிப் பேசியிருப்பாள், '" றெல்லாம் நினைத்துப் பார்ப்பதிலிருந்து மீள முடியவில்லே. மாதிரிக்காக அலசிக் கொடுத்த புட்வை என்ன புடவை: எந்த ஊர்ப் புடவை? என்ன விலை? புடவையின் அளவு மட்டுமே நமக்கு ஏன் தெரிவிக்கப்படுகிறது? வீட்டுக்கு வீடு ஏதாவது ஒரு துணியை வாங்கி அதை அழுக்குப் ?ே அலசிக் கொடுத்து அவள் விற்றுவரும் அந்த சோப்புத் துள்ளின் மகிமையை அவள் விளம்பரப் படுத்தியாக வேண்டும். இந்தக் காரியத்தில் அவளை எதிர் கொள்ளக் கூடிய பெரிய ஆபத்து பெரிய துணிகள்தான். வீட்டுக்கு வீடு சோதித்துக் காண்பிப்பதற்குப் பதினெட்டு முழப் புடவை யையே ஒவ்வொருவரும் கொடுப்பார்களானல் அவள் நிலைமை எப்படி யிருக்கும்? அவள் ஏற்றுக் கொண்டிருக்கும் வேலையே அவளைப் பாதி சலவைத் தொழிலாளியாக்கி விட் டிருப்பதை நினைவில் கொண்டால் புடவையின் நீளம் பற்றிய தகவல் தரப்படுவதின் அர்த்தம் தெரியும், குறைந்த பகஷ் அதிர்ச்சி நோக்கம்கூட இல்லாமல் இந்தத் தகவல் தரப் படுகிறது! இப்படி வீட்டுக்கு வீடு பதினெட்டு முழப்புடவை யைத் தோய்த்துத் தர நான் என்ன வண்ணுத்தியா' என்று பிறரையோ தன்னையோ அவள் கேட்டுக்கொள்ளவில்லை. அவளுடைய சிரமம் அவளை உள்ளூர வருத்தியிருக்கக் கூடும் என்ருலும் அவள் இங்கிதமாகவே நடந்து கொள் கிருள். அந்த வீட்டை விட்டு வெளியே போகும்போது கூட வாசற் கேட்டை ஓசைப்படாமல் சார்த்திக் கொண்டு போவது அவள் இயல்புக்குப் பொருந்தி வருகிறது.

பார்வையில் அந்தப் பெண் பேசிய பேச்சையும் தன் குடும்பத்தைப் பற்றி அவள் தெரிவித்த செய்தியையும் பரி சோதித்துப் பார்த்தால் அவர் வாழ்க்கை வசதியின்மையால் மட்டுமல்லாமல் பல்வேறு விதமாகவும் பாதிக்கப்பட்டிருப் பது புலனுகும். வீடு வீடாகச் சென்று சோப்புப் பொடியின் விளம்பரத்தை அவள் ஒவ்வொரு நாளும் காலையிலிருந்து மாலை வரை செய்கிருள். ஒரு நாளின் விழித்திருக்கும் பெரும் பகுதியில் தன்னுடைய வேலையை முன்னிட்டுக் கற்றுத் தந்த பேச்சுகளையே அவள் கிளிப்பிள்ளை மாதிரி சொல்லவேண்டி யிருக்கிறது. அந்தச் சமயத்தில் சுயமாகப் பேசுகிற வாய்ப்பு அவளுக்குக் கிடைப்பதில்லை. அப்படிப் பேச  நேர்ந்தாலும்_
கற்றுத் தந்த பேச்சுக்குத் துணையாகவே அது இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அவளுடைய குடும்பத்தைப் பற்றி அதாவது தனது குடும்பம் எப்படி கிறிஸ்துவ மதத்திற்கு மாறியது என்பது பற்றி அவள் சொல்வதுகூட மதசம்பந்த மான துண்டுப் பிரசுரமொன்றில் காணப்படுகிற கதையை' போல இருக்கிறது. வேலை நேரத்திலும் மற்ற நேரத்திலும் அவள் வாழ்க்கை அவளிடத்திலிருந்து கட்டறுக்கப்பட்-1- தையே இந்த விவரங்கள் காட்டுகின்றன. அவளுடைய சுவையற்ற வாழ்வைக் கண்டு நமக்குப் பரிவு ஏற்படுகிறது: இந்தக் க்தையில் அசோகமித்திரன் இவற்றையெல்லாம் தானே நேரடியாகச் சொல்லி விடவில்லை. ஆனல் கதையில் இவற்றைத் தெரிவிக்காமலும் விடவில்லை. இது ஒரு கதை யைப் பற்றி. இப்படி ஒவ்வொரு கதையும் மிக விரிவான, அபூர்வமான, துணுக்குறும்படியான, ஏங்கும்படியான கோபப்படும்படியான, இறுதியாக வாழ்க்கைத் தெளிவு இபறும்படியான சிந்தனையோட்டத்திற்கு வித்தாக இருக் OD gils

அசோக மித்திரனின் கதாபாத்திரங்களுக்கு ஏற்படுகிற கஷ்டங்கள் நுட்பமானவை. அவை வந்தே தீரும் என்ப திலும் அவற்றைத் தடுக்க முடியாது என்பதிலும் அவற்றின் மோசத்தன்மை கூடுதலாகிறது. பார்வையில் அந்தப் பெண்ணுக்குப் பதினெட்டு முழப் புடவையைச் சுத்தம் செய்யக் கொடுப்பது கஷ்டத்தை உண்டுபண்ணும். ஆணுல் அவள் அதை எதிர்பார்க்கத்தான் வேண்டும். அம்மாவுக்காக ஒரு நாள் கதையில் வருகிறவனுக்கு ‘நாம் நினைத்தால் அன்றைக்கென்று ஏதாவது ஏற்பட்டு நினைத்தது நடக்க முடியாமல் போய்விடும் என்பது நிச்சயமாகத் தெரிந்திருக்கும். அதற்காக நினைக்காமல் இருக்க முடியாது. அவனுக்கு நேர்ந்த கஷ்டங்கள் நுட்பமானவை. பத்து ரூபாய் நோட்டை வைத்துக் கொண்டு சினிமாவுக்கு அவனை அழைத்துப் போகத் தயாராக யிருக்கும் அவனுடைய நண்பன் ஒரு மிடறு காபிச் செலவைச் செய்ய மனமில்லா மல் இருந்த காசுக்கும் வல்லாவைத்துவிட்டுப் போய்விடு கிருன். இதற்கு அடுத்து வருகிற கஷ்டம்தான் இன்னும் ஆழமானது. அவன் பக்கத்தில் எங்கோ குடியிருக்கும் ஒரு நண்பனைப் பார்த்து நான்களு கடன் வாங்கப் போகிருன், அவன் இல்லை, அவன் மனைவிதான் வீட்டில் இருக்கிருள். ஒரு காய்கறிக் கூடைக்காரிக்குக் காசு கொடுக்கும்பொழுது க்வினப் பிக்காக நான்கன தரையில் நழுவுகிறது. அதை அவள் கவனமாகத் திரும்ப எடுத்துக் கொண்டு விடுகிருள். இந்த மட்டில்தான் கதையில் சொல்லப்படுகிறது. இந்தநிகழ்ச்சி தனக்கு நேர் எதிரான இன்னுெரு நிகழ்ச்சியை அமைத்துக் கொடுக்கிறது. அதில் தெருவில் போகிற ஒருவர் பையிலிருந்து அல்லது மடியிலிருந்து காசு நழுவி விழுந்து - அவர் அதைக் கவனிக்காமல் சென்றும் விடுகிறர். இவன் ... அந்தக் காசைக் கடவுள் கொடுத்தார் என்று எடுத்துக் கொண்டு போய் விடுவாஞ? ஆமாம் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. நடந்து விட்டிருக்க வேண்டியது உண்மை யில் இதுதான். நடந்ததோ நண்பனின் மனைவியிடத்தி லிருந்து காசு நழுவியது. இப்படித்தான் உண்மையான நிவர்த்திக்க முடியாத கஷ்டங்கள் உருவாகின்றன.

அசோகமித்திரன் கேலியில் பகட்டு, மட்டம் தட்டுகிற தன்மை கிடையாது. இயல்பாகவும், ஒரு சந்தர்ப்பத்தின் இறுக்கத்தைத் தவிர்க்கப் பாத்திரங்கள் தாங்களாகவே தோற்றுவிப்பதாகவும் அவருடைய கேலி அமைகிறது. *திருப்பம்" கதையில் மல்லேயாவுக்குத் தெலுங்கின் மேல் உள்ள அக்கறை ஒரு உதாரணம். தனக்கு மட்டும் பிடிக்கிற சுக்குக் காபியை மற்றவர்களும் குடிக்கச் செய்துவிடும் மல்லேயாவின் தமிழ் மன்னியைப் பற்றிச் சொல்லும் பொழுது அசோகமித்திரன் குறிப்பிடுவது ஒரு உதாரணம். 'மறுபடியும்" என்ற கதையில்வரும் டாக்டர் "சின்னப்பிள்ளை கள் என்ன ஸ்ார்? பெரியவர்களே இரவில் படுக்கையை ஈரப் படுத்திக் கொண்டு விடுகிருர்கள்’ என்று சொல்வது மேலும் ஓர் உதாரணம்.

அசோகமித்திரனின் பாத்திரங்கள் சரீர உபாதைக்கு உட்பட்டவர்கள். அன்றைய காரோட்டம் முடிந்ததும் மல்லையா முதல் காரியமாகச் சுவரோரம் சென்று உட் கார்ந்து எழுந்திருப்பதை நினைவில் கொள்ள வேண்டும் (திருப்பம்" கதையில்). அவருடைய உலகத்தின் மருள் தன்மையின் உக்கிரம் 'குதூகலத்தில் வெளிப்படுகிறது. வாழ்வதின் அவமானம் திருப்பம்', "மஞ்சள் கயிறு', 'எல்லை", வெறி” ஆகிய கதைகளில் வெளிப்படுகிறது.

அசோகமித்திரனின் இலக்கியப் பார்வைக்கு வீச்சு அதிகம். இந்தத் தொகுப்பில் உள்ள இன்னும் பல கதைகள் சுவையான, ஆழ்ந்த, விவாத அடிப்படையில் அனுபவிக்கத் தகுந்தவை. அவற்றைப் பற்றித்தான் உண்மையில் நான் சொல்ல வேண்டும். 'இரு நண்பர்கள்', 'கல்யாணம் முடிந்த வுடன்", "பிரயாணம்", "மஞ்சள் கயிறு', 'குதூகலம் இப்படி பல கதைகள் இருக்கின்றன. அவற்றைப் பற்றிச் சொல்வ் தானுல் விரிவாகத்தான் சொல்ல வேண்டும்.

இந்தத் தொகுப்பில் உள்ள ஒவ்வொரு கதையும் ஒவ் வொரு விதத்தில் உயர்ந்தது. பெருமதிப்புப் பெற்ற அவ ருடைய குறுநாவல்கள் ஒன்றுகூட இத் தொகுப்பில் இல்லை. அவைகளே, மற்றும் அவர் எழுதிய நெடுங் கதைகள், கட்டு ரைகள், விமரிசனங்கள் இவையெல்லாவற்றையும் படித் திருக்கும் எனக்கு இக் கதைகள் அவருடைய இலக்கிய தரத் தில் ஒரு சிறு பகுதியை மட்டுமே வெளிக்காட்டுவதாகத் தெரிகிறது. ஆணுல் அப் பகுதி மட்டுமே ஒரு சிறந்த, அபூர்வ மான இலக்கிய அலுபவத்தைத் தரப் போதுமானது. இப்படிப்பட்ட இலக்கியவாதி ஒருவர் பதினைந்து ஆண்டு களாகவே நம் கையெட்டும் துரத்திலேயே யிருந்து கொண் டிருக்கிருர் என்பது ஒரு விதத்தில் முக்கியத்வம் வாய்ந்தது.

உலகத்தின் பிற பகுதிகளில் காணப்படும் சிறந்த எழுத்துக்கு இணையானதை இந்தக் கதைத் தொகுப்பில்'வாசகர்கள் பார்க்கிருர்கள்

திருவல்லிக்கேணி,
2-_5一1971

ஞானக்கூத்தன்