தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்து காலத்தால் அழிக்கமுடியாதவை சிலவற்றை இங்கே இந்த இடத்தில் தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (TShrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

Saturday, May 13, 2017

நிகழ்வுகள் - ழாக் ப்ரெவர்

நிகழ்வுகள் - ழாக் ப்ரெவர் மொ.பெ வெ.ஸ்ரீராம்

 CAMSCANNER Android App and Automated Google-OCR
crea

சிட்டுக்குருவி ஒன்று ஆகாயத்தில் பறக்கிறது
தன் கூட்டை நோக்கிப் பறக்கிறது
குஞ்சுகள் இருக்கும் கூட்டை நோக்கி
அவற்றுக்காக ஒரு குட்டிக் குடையையும்
புழுக்களையும் டான்டிலியோன் மலர்களையும் கொண்டுவருகிறது
கூடு இருக்கும் விட்டிலுள்ள
குழந்தைகளை மகிழ்விக்க
எராளமான பொருட்களைக் கொண்டுவருகிறது
தன் கட்டிலில் ஒரு இளம் நோயாளி
மென்மையாக இறந்துகொண்டிருக்கிறான்
தன் கட்டிலில்
கதவுக்கு முன்னால்
நடைபாதையில் கரிய நிறத்தவன்
ஒருவன் கதவைத் திறந்து நிற்கிறான்
கதவுக்குப் பின்னால் ஒரு பெண்னை முத்தமிட்டுக்கொண்டிருக்கிறான் ஒரு பையன்
இன்னும் சற்றுத் தொலைவில் தெருக்கோடியில் ஓரினச் சேர்க்கையாளன் ஒருவன்
மற்றொரு ஓரினச்சேர்க்கையாளனைப் பார்க்கிறான்
கையை அசைத்து அவனிடமிருந்து விடைபெறுகிறான்
இருவரில் ஒருவன் அழுகிறான்
மற்றவன் பாசாங்கு செய்கிறான்
அவன் கைவில் ஒரு சிறிய பெட்டி
தெருமுனையில் திரும்பிச் செல்கிறான்
தனியாகப் போனவுடனேயே புன்னகை செய்கிறான் சிட்டுக்குருவி மீண்டும் ஆகாயத்தில் கடந்து செல்கிறது ஓரினச்சேர்க்கையாளன் அதைப் பார்க்கிறான்
அதோ ஒரு சிட்டுக்குருவி. ...


தன் வழியில் அவன் தொடர்கிறான்
தன் கட்டிலில் இளம் நோயாளி இறந்துவிடுகிறான்
சிட்டுக்குருவி சன்னலுக்கு முன்னால் பறக்கிறது
சன்னல் சட்டம் ஊடாகப் பார்க்கிறது
அதோ, ஒரு இறந்த மனிதன். . . ...
இன்னும் ஒரு மாடி உயரே பறக்கிறது
கண்ணாடிச் சன்னல் வழியாகப் பார்க்கிறது
தலையைக் கைகளில் ஏந்தியிருக்கும் கொலைகாரனுக்கு இதிலிருந்து எப்படி மீள்வதென்று தெரியவில்லை
எழுந்து சென்று ஒரு சிகரெட்டை எடுக்கிறான்
சிட்டுக்குருவி அவனைப் பார்க்கிறது
அதன் அலகில் ஒரு தீக்குச்சி
 சன்னல் சட்டத்தைத் தன் அலகால் தட்டுகிறது
சன்னலைத் திறக்கிறான் கொலைகாரன் தீக்குச்சியைப் பெற்றுக்கொள்கிறான்
சிகரெட்டைப் பற்றவைக்கிறான்
இது கூடவா செய்யக் கூடாது
மிகச் சாதாரண விஷயம் இது
என்கிறது சிட்டுக்குருவி

 பிறகு விருட்டென்று பறக்கிறது.
 சன்னலை மூடுகிறான் கொலைகாரன்
நாற்காலியில் அமர்ந்து புகைக்கிறான்
கொலையுண்டவன் எழுந்து பேசுகிறான்
இறந்தவாறிருப்பது பெரும் சங்கடம்

*ஒரேயடியாக ஜில்லிட்டுப்போய்விடுகிறது
இதைப் புகைத்து சூடேற்றிக்கொள் என்றபடி
கொலைகாரன் அவனுக்கு சிகரெட்டை அளிக்கிறான்
தயவுசெய்து கொடுங்கள் என்கிறான் கொலையுண்டவன்
மிகச் சாதாரண விஷயம் இது என்கிறான் கொலைகாரன் உங்களுக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேனே
தொப்பியை எடுத்துத் தன் தலையில் அணிகிறான்
புறப்பட்டுச் செல்கிறான்
தெருவில் இறங்கி நடக்கிறான்
திடீரென்று நிற்கிறான்
அவன் ஒரு காலத்தில் தீவிரமாகக் காதலித்த
பெண்ணை நினைத்துப்பார்க்கிறான்
அவளுக்காகத்தான் கொலையைச் செய்தான்
இனி அப்பெண்ணிடம் அவனுக்குக் காதல் இல்லை
ஆனால் அதை அவளிடம் சொல்ல
அவனுக்கு ஒருபோதும் துணிவிருந்ததில்லை
அவளை மனம் நோகச்செய்யவும் விருப்பமில்லை
அவ்வப்போது யாரையாவது அவளுக்காக
அவன் கொலைசெய்கிறான்
அது அவ்வளவு மகிழ்ச்சியளிக்கிறது
அந்தப் பெண்ணிற்கு
அவளை வருந்தச்செய்வதைவிட
அவன் இறந்தேபோகத் தயார்
தன்னுடைய வருத்தம் கொலைகாரனுக்குத்துச்சம்
ஆனால் வருந்துவது மற்றவர்களாயிருந்தால்
அவனுக்குப் பைத்தியமே பிடிக்கிறது
நிலைகுலைந்து

பித்துப்பிடித்து
 ஆத்திரமுறுகிறான்
 எதை வேண்டுமானாலும் செய்கிறான்
 26
எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும்
பிறகு தப்பி ஓடியே விடுகிறான்
ஒவ்வொருவருக்கும் அவரவர் வேலை
சிலர் கொலைசெய்கிறார்கள்
சிலர் கொல்லப்படுகிறார்கள்
எப்படியாவது எல்லோரும் பிழைக்க வேண்டுமே
இதையா பிழைப்பு என்கிறாய்
மிக உயரத்திலிருந்து பேசிய கொலைகாரனை
கேள்வி கேட்ட அந்த ஆள்
நடைபாதையில் உட்கார்ந்திருக்கிறான்
அவன் வேலையில்லாதவன்
காலையிலிருந்து மாலைவரை அங்கிருக்கிறான்
நடைபாதையில் அமர்ந்தவாறு
இந்நிலை மாறுமென்று காத்திருக்கிறான்
நான் எங்கிருந்து வருகிறேனென்று
தெரியுமா என்று கேட்கிறான் கொலைகாரன்
மற்றவன் தலையை ஆட்டுகிறான்
நான் ஒருவரைக் கொன்றுவிட்டு வருகிறேன்
எல்லோரும் இறந்துதானே ஆக வேண்டும்
என்று பதிலளிக்கிறான் வேலையில்லாதவன்
பிறகு திடீரென்று அவசரஅவசரமாகக் கேட்கிறான்
உனக்குச் செய்தி தெரியுமா?
செய்தியா, எதைப் பற்றி?
உலகைப் பற்றிய செய்தி
உலகைப் பற்றிய செய்தி... எல்லாம் மாறப்போகிறதாமே
வாழ்க்கை மிக அழகாக ஆகப்போகிறதாம்
எல்லா நாளும் நமக்கு உணவு கிடைக்கும்
நல்ல சூரிய வெளிச்சம் இருக்கும்
எல்லோரும் இயல்பான பரிமாணத்தில் இருப்பார்கள்
யாரும் இழிவுபடுத்தப் படமாட்டார்கள்
அதோ அப்போது திரும்பி வருகிறது சிட்டுக்குருவி
கொலைகாரன் சென்றுவிடுகிறான்
வேலையில்லாதவன் அங்கேயே இருக்கிறான் மெளனமாகிவிட்டான்
சில ஒசைகளைக் கேட்கிறான்
காலடி ஓசைகள் காதில் விழுகின்றன
அவற்றை எண்ணுகிறான்
இயந்திரத்தனமாக நேரத்தைக் கழிப்பதற்காக
1 2 3 4 5
இத்யாதி... இத்யாதி...
 நூறுவரை... பலமுறைகள்...
காகிதங்கள் நிரம்பியுள்ள ஒரு அறையில்
தரைமட்டத்தில்
குறுக்கும் நெடுக்குமாக உலாத்தும் ஒரு மனிதரின்
காலடி ஓசை அது
சிந்தனையாளர் என்ற திமிருடன் ஒருவர்
 ஷெல் ஃபிரேம் மூக்குக் கண்ணாடி
தான் ஒரு “சிந்திக்கும் நாணல்" என்ற திமிர்
குறுக்கும் நெடுக்குமாக உலாத்தித்
தேடிக்கொண்டிருக்கிறார்
அவரைப் பிரபலமாக ஆக்கப்போகும்
ஏதோ ஒன்றைத் தேடிக்கொண்டிருக்கிறார்
அவர் வீட்டுக் கதவை யாராவது தட்டினால்
யாரையும் பார்க்கப்போவதில்லை என்கிறார்
உலகம் முழுவதுமே அவரது கதவைத் தட்டலாம்
உலகம் முழுவதுமே மிதியடியில் கிடந்து உருளலாம் முனகலாம்
அழலாம்
கெஞ்சலாம்
குடிப்பதற்கு ஏதாவது கேட்கலாம்
28

குடிப்பதற்கோ சாப்பிடுவதற்கோ
அவர் கதவைத் திறக்க மாட்டார்...
தேடுகிறார்
தராசுகளை எடைபார்க்கும் புகழ்பெற்ற கருவியை
அவர் தேடுகிறார்
தராசுகளை எடைபார்க்கும் புகழ்பெற்ற கருவியை
அவர் கண்டுபிடித்தவுடன்
தன் நாட்டிலேயே மிக்க புகழ்பெற்றவராகிவிடுவார்
எடைகள் அளவைகளின் அரசர்
அதாவது பிரான்ஸ் நாட்டின் எடைகள் அளவைகளின் தனக்குள்ளேயே மெல்லிய கோஷங்களை
எழுப்பிக்கொள்கிறார்
என் அப்பா வாழ்க
நான் வாழ்க
ஃபிரான்ஸ் வாழ்க
திடீரென்று அவர் கால் விரல் கட்டில் காலில் இடிக்கிறது
கட்டிலின் கால் நல்ல உறுதி
ஒரு மேதையின் காலைவிட மிக உறுதி
ஆக, 'சிந்திக்கும் நாணல்" அதோ தரைவிரிப்பின் மேல்
வலிக்கிற அந்தத் துர்பாக்கியக் காலைத் தாலாட்டியபடி
வெளியே வேலையில்லாதவன் தலையை ஆட்டுகிறான் தூக்கமின்மையால் தாலாட்டப்பட்ட தன் துர்ப்பாக்கியத் தலையை அவனருகே வந்து நிற்கிறது ஒரு டாக்ஸி
அதிலிருந்து மனிதப் பிறவிகள் இறங்குகின்றனர்
அவர்கள் துக்கம் அனுசரித்துக்கொண்டிருக்கிறார்கள்
சீரிய உடையணிந்து, கண்ணிர் வடித்தபடி
அவர்களில் ஒருவர் ஒட்டுநருக்குக் காசு கொடுக்கிறார்
ஒட்டுநர் புறப்படுகிறார்
தனது டாக்ஸியுடன்
மற்றொருவர் அவரைக் கூப்பிட்டு

 ....
ஒட்டுநர் நினைவில் பதிவாகிறது முகவரி
தேவையான நேரம்வரை அவர் நினைவில் அது இருக்கும்
எபபடிப் பார்த்தாலும் இது அர்த்தமற்ற வேலைதான்...
 ஒட்டுநருக்குக் காய்ச்சல் வரும்போதெல்லாம்
இருட்டியபின் இரவில் அவர் தூங்கும்போது
ஆயிரமாயிரம் முகவரிகள் விரைந்து வந்து
அவரது நினைவில் மோதிக்கொள்ளும்
அவருடைய தலை ஒரு டைரக்டரி போல் இருக்கிறது
ஒரு வரைபடம்போல
பிறகு அந்தத் தலையைத் தன் கைகளில் ஏந்துகிறார் கொலைகாரன் செய்தது போன்ற அதே சைகை
மிக மென்மையாகப் புலம்புகிறார்
222 வோழிரார் தெரு
33 மெனில்மோன்தான் தெரு
பெரிய அரண்மனை
சேன்-லசார் ரயில் நிலையம்
தெர்னியே-தெ-மோஹிகான் தெரு
மனிதனைச் சிதைக்க என்னவெல்லாம்
மனிதனே கண்டுபிடிக்கிறான்
என்ன பைத்தியக்காரத்தனம் இது
ஆனால் எல்லாமே அமைதியாகப்
போய்க்கொண்டிருப்பதால்
தான் வாழ்ந்துகொண்டிருப்பதாக மனிதன் நம்புகிறான்
ஆனாலும் ஏற்கனவே அவன் கிட்டத்தட்ட
இறந்துவிட்டான்
ஆக நீண்ட காலமாகவே
சோகச் சூழல் பின்னணியில்
30
போய்வந்துகொண்டிருக்கிறான்
குடும்ப வாழ்க்கையின் வண்ணப்பூச்சுடன்
வருடத்தில் அன்றைய தினத்தின் வண்ணப்பூச்சுடன்
தாத்தா பாட்டியின் உருவப் படங்களுடன்
காதுகளிலிருந்து துர்நாற்றம் வீசிக்கொண்டு
ஒரு பல்லைத் தவிர மற்றவற்றை இழந்துவிட்டிருந்த
மாமா ஃபெர்டினான்டின் உருவப்படத்துடன்
ஒரு கல்லறையில் மனிதன் உலாவிக்கொண்டிருக்கிறான்
சங்கிலி கட்டித் தன்னுடைய அலுப்பை அழைத்துச்
செல்கிறான்
எதையும் சொல்லத் துணிவில்லை
எதுவும் செய்யத் துணிவில்லை
எல்லாம் முடிந்துவிட வேண்டுமென்று அவசரப்படுகிறான்
ஆகவே, போர் மூளும்போது
அதில் சாகவும் தயாராக இருக்கிறான்
கொலைசெய்யப்படும் ஒருவனும்
பயம் தெளிந்தவுடன்
அப்பாடா, உங்களுக்கு நன்றி
இப்போது நான் விடுவிக்கப்பட்டுவிட்டேன் என்கிறான்
.........................................................................
ஆகவே, கொலையுண்டவன் தானாகவே உருளுகிறான்
தன் குருதியிலேயே முழுவதும் தோய்ந்தவாறு
மிக அமைதியாக இருக்கிறான்
இந்த அழகிய சிறிய இருப்பிடத்தில்
ஒரு மூலையில் ஒதுக்கிவைக்கப்பட்டிருக்கும்
இப்பிணத்தைப்
பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது
சாவின் அமைதி நிலவுகிறது

உள்ளே நுழையும் ஒரு ஈ
இது நெஞ்சைத் தொடும்வண்ணம் இருக்கிறது
மாதாகோவிலில் இருப்பதைப் போல என்கிறது
ஈக்கள் எல்லாம் ஒன்றுசேர பக்தி சொட்டும் ரீங்காரம் கேட்கிறது
பிறகு அவை ஒரு குட்டையை நெருங்குகின்றன
ஒரு பெரும் ரத்தக்குட்டை
ஆனால் ஈக்களிடம் அவற்றின் மூத்த தலைவி சொல்கிறாள்
அங்கேயே இருங்கள், குழந்தைகளே
முன்னறிவிப்பின்றி அமைந்த இந்த விருந்திற்காக
ஈக்களின் கடவுளுக்கு நன்றி சொல்வோம்
நன்றி நவிலும் பாடலை எல்லா ஈக்களும்
ஒரு ஸ்வரம் பிறழாமல் பாடின
சிட்டுக்குருவி கடந்து செல்கிறது
புருவங்களைச் சுருக்கியவாறு
இப்போலி நாடகங்கள் அதற்கு வெறுப்பூட்டுகின்றன
ஈக்கள் பக்தர்கள்
சிட்டுக்குருவி நாத்திகவாதி
அது உயிர்த்திருக்கிறது
அழகாக இருக்கிறது
வேகமாகப் பறக்கிறது
ஈக்களுக்கு ஒரு கடவுள் இருக்கிறார்
கறையான்களுக்கும் ஒரு கடவுள்
சிட்டுக்குருவிகளுக்குக் கடவுள் இல்லை
அவற்றுக்கு அவர் தேவையுமில்லை.
தன் பாதையில் தொடர்ந்து செல்லும் சிட்டுக்குருவி
திரைச்சீலை பாதி விலகிய மற்றொரு சன்னல் வழியாகப் பார்க்கிறது
இளைஞனின் பிரேதத்தைச் சுற்றி அமர்ந்திருக்கிற குடும்பம்
டாக்ஸியில் வந்துள்ளார்கள்
கண்ணீர் மல்க துக்கம் அனுசரித்து மிகச் சீரிய உடையில்
32
பிரேதத்தைச் சுற்றிக் காவல்காத்து
அங்கேயே இருக்கிறார்கள்
குடும்பம் அங்கே தங்கியிருக்கவில்லையென்றால்
பிரேதம் ஒருவேளை தப்பிச் சென்றுவிடலாம்
அல்லது வேறொரு குடும்பம் அங்கேவந்து
அதை எடுத்துக்கொள்ளலாம்
பிரேதம் ஒன்றிருந்தால் அதற்குச் சொந்தம்கொண்டாடுவது
இல்லையென்றால் ஒரு பிரேதத்தை விழைவது '
எவ்வளவு அல்பங்கள் இம்மனிதர்கள்
இல்லையா மாமா க்ராஸியென் அவர்களே
மக்கள் பொறாமைபிடித்தவர்கள்
நம் பிரேதத்திற்கு அவர்கள்
சொந்தம்கொண்டாடுகிறார்கள்
நமக்குப் பதிலாக அவர்கள் அழலாம்
அதுதான் பொருத்தமற்று இருக்கும்
ஒவ்வொருவரும் தங்கள் குளிர்பதன அலமாரியில் இருந்துகொண்டு
தாங்கள் அழுவதைத் தாங்களே பார்த்தபடி...
நடைபாதையில் அமர்ந்திருக்கும் வேலையில்லாதவன்
அகல நிழற்சாலையில் டாக்ஸி
ஒரு பிரேதம்
மற்றொரு பிரேதம்
ஒரு கொலையாளி
ஒரு பூவாளி
ஆகாய நிறத்திலேயே இருக்கும் ஆகாயத்தில் குறுக்கும் நெடுக்கும் பறக்கும்
சிட்டுக்குருவி இறுதியாகப் பெரும் மேகம் ஒன்று வெடிக்கிறது ஆலங்கட்டி மழையாக. கை முட்டி அளவு பெரிய ஆலங்கட்டிகள்

33

எல்லோரும் மூச்சுவிடுகிறார்கள்
அப்பாடா
அடிபட்டு விழுந்துவிடக் கூடாது
எதிர்கொள்ள வேண்டும்
சாப்பிட வேண்டும்
ஈக்கள் நாக்கால் நக்கிக் குடிக்கின்றன
சிட்டுக்குருவிக் குஞ்சுகள் டான்டிலியன் மலர்களைத்
தின்கின்றன
குடும்பத்தினர் உலர்ந்த இறைச்சியை
கொலைகாரன் ஒரு டப்பா சிவப்பு முள்ளங்கியை
தோல்பியாக் தெருவில்
மற்ற ஒட்டுநர்களைச் சந்திக்கும் டாக்ஸி ஓட்டுநர்
குதிரை மாமிசத்தின் மெல்லிய ஒரு துண்டை
ஆக, எல்லோரும் சாப்பிடுகிறார்கள்
ஓரினச்சேர்க்கையாளர்கள்... சிட்டுக்குருவிகள்...
 ஒட்டகச்சிவிங்கள்... ராணுவக் கர்னல்கள்...
 எல்லோரும் சாப்பிடுகிறார்கள்
வேலையில்லாதவனைத் தவிர
சாப்பிட ஒன்றுமில்லாததால் சாப்பிடாத வேலையில்லாதவன் நடைபாதையில் உட்கார்ந்திருக்கிறான்
மிகச் சோர்ந்துபோய்
எவ்வளவு காலமாகக் காத்திருக்கிறான் இது மாறுமென்று அலுப்புத்தட்ட ஆரம்பித்துவிட்டது அவனுக்கு
திடீரென்று எழுகிறான்
திடீரென்று புறப்பட்டுச் செல்கிறான்
மற்றவர்களைத் தேடி
மற்றவர்கள்
சாப்பிட ஒன்றுமில்லாததால் சாப்பிடாத மற்றவர்கள்
அவ்வளவு சோர்ந்துபோயிருக்கும் மற்றவர்கள்
34
நடைபாதையில் அமர்ந்திருக்கும் மற்றவர்கள்
காத்திருப்பவர்கள்
இவை மாறுமெனக் காத்திருந்து அலுத்துப்போயிருக்கும் மற்றவர்களைத் தேடிப் புறப்பட்டுச் செல்லும்
மற்ற எல்லோரும்
மிகமிகச் சோர்ந்துபோயிருக்கும் மற்ற எல்லோரும்
காத்திருப்பதால் சோர்வடைந்து
சோர்வடைந்து. ...
பாருங்கள் என்கிறது சிட்டுக்குருவி தன் குஞ்சுகளிடம் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள்
குஞ்சுகள் கூட்டிலிருந்து தலையை வெளியே நீட்டி
நடந்து செல்லும் மனிதர்களைப் பார்க்கின்றன
அவர்கள் ஒன்றுபட்டு இருப்பார்களெனில்
சாப்பிட முடியும்
என்றது சிட்டுக்குருவி
ஆனால் பிரிந்து சென்றால் இறந்துவிடுவார்கள்
சேர்ந்து இருங்கள் ஏழை மனிதர்களே
ஒன்றுபட்டு இருங்கள்
என்று கத்தின சிட்டுக்குருவியின் குஞ்சுகள்
சேர்ந்து இருங்கள் ஏழை மனிதர்களே
ஒன்றுபட்டு இருங்கள்
என்று கத்தின குஞ்சுகள்
சிலர் அவற்றைச் செவிமடுக்கிறார்கள்
முஷ்டியை உயர்த்திக் காட்டுகிறார்கள்
புன்னகைக்கிறார்கள்.
35