தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

Monday, May 15, 2017

வாசனை - சுந்தர ராமசாமி

வாசனை - சுந்தர ராமசாமி
GOOGLE-OCR 

சாம்பசிவன் தன் மனைவி லலிதாவுடன் அந்தப் புண்ணிய ஸ்தலம் வந்து சேர்ந்தபோது காலை வெயில் உக்ரம் கொள்ள ஆரம்பித்திருந்தது. அவர்கள் அதிகாலையில் சேர இருந்ததை எண்ணி வந்தவர்கள். வாகனங்கள் ஏமாற்றிப் பிந்திப்போனதில் அலுப்படைந்து வேறு பல அசெளகரியங்களையும் வழி நெடுக வார்த்தையாடி மனதில் உப்பவைத்து வந்து சேர்ந்தனர். ரயிலிலிருந்து வெளிப்பட்டது தப்பித்து விரையக் குதிப்பது போலிருந்த்து.


எதிர் வெயிலில் உடல் முன் சரிய, ஒருவர் முகம் ஒருவர் பாராமல் துரிதமாக நடந்தனர். ஆடைகள் வேர்வையில் நனைந்து முதுகில் ஒட்டி பிசுபிசுத்து வெறுப்பூட்டிற்று. கோயிலில் அப்பொழுது நடை சாத்தியிருக்கக்கூடும். இருந்தாலும் வெளிப் பிரகாரத்தில் விக்ராந்தியாய்ச் சுற்றி மண்டபத்தில் படுத்துப் பேசி கடற்காற்றில் இளைப்பாறலாம் என்பதை ஓரிரு வார்த்தைகள் விட்டுக்கொண்டதிலேயே அவர்கள் மனதில் சுகந்தரும் காட்சிகள் விரிந்தன. ஒட்டல் அறை ஒன்றை அமர்த்தி, குளித்துப் புதுசு உடுத்திக்கொண்டு கிளம்பியபோது பார்ப்போர் இஷ்டப்படும்படி இருவரும் இருக்கிறோம் என்ற எண்ணமும், பரஸ்பரம் பிரியமும் அதனால் ஒரு மிதப்புணர்ச்சியும் ஏற்பட்டன.

லலிதா மாடிப்படிகளில் நாகரிகப் பாங்காக இறங்க ஆரம்பித்தாள். சாம்பசிவனின் அடிகள் அவளுடைய அசைவுகளுக்கு அனுசரணைப்படாமல் வேறுபட்டு லலிதாவின் கற்பனையை உறுத்திற்று. பூண் கட்டிய அவன் ஊன்றுகோல் வெற்று மரப் பலகைப் படிகளில் மிகையாக சப்தித்தது அவளுக்கு மனக் கூச்சம் உண்டாக்கிற்று. லலிதாவின் உணர்ச்சி இதனால் பாதிக்கப்பட்டு, கீழே நிற்காத பலர் அவளைப் பார்த்து பரிதாபம் கொள்வது போல் மனக் காட்சிகள் விரிய தன்னிரக்கம் கொண்டாள். இக்கற்பனை மறு கணம் கலையவும் விபத்தில் ஊனமாகிவிட்ட கணவனுக்கு சிச் ரூஷை செய்து நலியும் திரைப்பட நாயகியாகத் தன்னை பாவனை செய்துகொண்டாள். இப்பொழுது பலர் சேர நின்று அவர்களைப் பார்க்கவேண்டும் என்று அவளுக்குத் தோன்றியது. நிகழவிருக்கும் விபத்தைத் தடுக்க ஜாக்கிரதை கொள்வது போல் அவன் அருகில் அவள் நெருங்கிக்கொண்டாள். தன்னுணர்வின்றி அவளிடம் ஒரு புன்சிரிப்பு வெளிப்பட்டது. சாம்பசிவன் இதை கவனித்ததும், எதற்கு என்ற அர்த்தத்தில் "ம்?" என்று கேட்க, 'ஒண்ணுமில்லை' என்றாள் அவள் அவன், எதற்குன்னே தெரியாத சந்தோஷமா? நான் கேடறது உனக்குக் கிடைச்சுட்டுதா?’ என்றான். லலிதா சிரித்தாள். மிதப்பும், திரைப்பட உணர்வுகளும் அவள் மனதில் குழம்பிப்போலிச் சந்தோஷத்தை அளித்தன.

வெளியே வெயிலின் பிரகாசமும், உஷ்ணக் காற்றும் சகிக்க முடியாமல் இருந்தது. அந்த அக்கிரகாரம், கோயிலின் புதுப் பிரபல்யத்தில் கடைத்தெருவாய் மாற்றமடைந்து, சொற்ப வீடுகளே மிஞ்சியிருந்தன. அங்கு குடும்பக் காட்சிகள் வியாபாரச் சந்தடியில் குழம்பிக்கொண்டிருந்தன. கடையோரச் சிறு நிழல்களில் ஆண்கள் கூடி அரசியல் கத்திக்கொண்டிருந்தனர். எளிய வீடுகள் முன் போடப்பட்டிருந்த கோலங்களை முரட்டுப் பாதங்கள் மிதித் துச் சிதைத்திருத்தன.

உடம்பில் படாமல் கீழ் மட்டத்தில் அடித்துக்கொண்டிருந்த உஷ்ணக் காற்று புழுதி சுருட்டிக் குப்பைகளைச் சிதறச் தள்ளிக்கொண்டிருந்தது. மறுகாற்றுக்குக் குப்பைகள் மீண்டும் மேலெழுந்து பறந்தன. நின்று. தெருவின் இருபக்கமும் பார்த்து விட்டு சாம்பசிவன் தன் அசைவுகளைத் துரிதமாக்க ஆரம்பித் தான். அவன் கைக் கழி அவன் முன் குத்திப் புழுதி கிளறிப் பின் நகர்ந்து அவனை முன் பக்கம் நகர்த்திற்று இரு கைகளும் கைத்தடி பிடித்திருக்க, அடி வயிற்றை அதன் மேல் சாய்த்து உன்னி அவன் சென்றுகொண்டிருந்தான். 'எத்தனை மைல் வேணும்னாலும் இப்படியே போகலாம். ஒண்னும் சிரமம் இல்லை' என்று அவன் லலிதாவிடம் சொல்லியிருக்கிறான். கூடாது என்று எப்பொழுதும்போல் நினைத்துக்கொண்டபோதே, அன்றும் அவள் பார்வை அவன் பதித்துச் செல்லும் ஒற்றை அடிக்கவட்டில் பதிந்தது. தனக்கும் தன் கணவனுக்குமான இடைவெளி விரியப் பயப்படுவதுபோல் தன் வேகத்தை அனுசரணைப்படுத்தி பின்னால் நகர்ந்து கொண்டிருந்தாள். அவள் தலை மயிர் ஈரம் காய காற்றில் பறந்தது. குங்குமத்தின் சில சிதறல்கள் அவள் புருவத்தின் மேல்பக்கமும் முக்கின் துனியிலும் உதிர்ந்திருந்தன. மங்கல உணர்வையும். ஆலிங்கனம் செய்து கொள்ளவேண்டும் என்ற ஆசையையும் பார்ப்போருக்கு எழுப்பும் விதமாய் அவள் தோற்றம் இருந்தது.
o

"பாப்பாத்தி. வாடி ராஜாத்தி. ''

ஒரு காட்டு மிருகத்தின் சப்தம்போல் மற்ற இரைச்சலினின்று தூக்கலாயும் கரகரத்தும் அவ்வார்த்தைகள் சாம்பசிவன் காதில் விழுந்தன.

சாம்பசிவனின் அசைவு நின்றுபோக அவன் பக்கவாட்டில் பார்த்தான்.

'பாப்பாத்தி, வாடி ராஜாத்தி.'

குரல் கீழ் ஸ்தாயியில் இறங்கி, இம்முறை அதில் இளப்பமும் கொஞ்சலும் கலந்திருந்தது.

டீக்கடை முன் அந்த ஆசாமி நின்றுகொண்டிருந்தான், நாலைந்து சிறுவர்கள் அவன் முன்னால் சிதறியிருந்தனர். மொட்டைக் கைகளை அந்தரத்தில் அசைத்து. பார்வைக்குப் புலனாகாமல் பறக்கும் ஈக்களைச் சாகடிப்பதுபோல் அவன் கைகள் சேர்த்து தட்டிக் கொண்டிருந்தான். நாசித் துவாரம் சிதைந்து வாய் மடையில் வழிந்திருந்தது. முகத்தில் பல இடங்களில் இளஞ்சிவப்பு நிறத்தில் ஈரத்தொளைகள் தெரிவதுபோல் தோன்றிற்று பாதங்கள் வீங்கி அழுகிக்கொண்டிருந்தன. கட்டுப் போட்டுச் சுற்றியிருந்த துணியில் சீழ் பட்டுக் கறை படிந்திருந்தது. கால் விரல்கள் திருகி ஒன்றின் மேல் ஒன்று ஏறிக்கொண்டிருந் தன. கழுத்தில் அழுக்குக் கயிற்றில் தொங்கிய தகரக் குவவை விலாவுக்கும் தொப்புளுக்கும் ஆடிக்கொண்டிருந்தது. -

சாம்பசிவத்தின் பார்வையை சந்தித்ததும் ஒர் இயந்திரத்தின் முடுக்கல்போல் அவன் சிரித்தான். அச்சிரிப்பு வெட்கம் கெட்டதாய், பரிகாசமாய் எடுத்துக்கொள்ளும்படி இருந்தது.

சாம்பசிவனின் கவனம் லலிதா பக்கம் திரும்பியது. அவன் நின்றபோது அவள் கால்களும் நின்றுபோயிருந்தன. அவன் மனம் அந்தப் பிராந்தியத்தில் இல்லை. அவன் பார்வை கோயில் வாசலில் நுழைவோர் மீது படிந்திருந்தது. லலிதாவின் கவனமின்மை சாம்பசிவனுக்கு ஆறுதல் அளித்தது. நின்றதற்குச் சாக்குப்போல் கோபுரத்தைக் காட்டி, நியான் போட்டுக் கெடுத்து விட்டார்கள்' என்று தேசலாகச் சொல்லிவிட்டுப் புறப்பட்டான். தன் அங்கஹீனத்தை அவன் பயன்படுத்திக்கொண்டதாக சாம்பசிவன் மனதுக்குப்பட்டது. அதற்கு என்பது யோசித்துப் பக்கம் அவனுக்குப் பிடிபடவில்லை. லலிதா , காதில் விழுந்திருந்தால் அருவருப்பு ஏற்பட்டிருக்கும். அப்படி அவள் காதிலும் விழுந்திருந்தால் என்ன செய்ய முடியும் என்று அவன் யோசித்துப் பார்த்தான். கெட்ட வார்த்தைகளில் தன்னால் அவனை மிஞ்ச முடியும் என்று எண்ண இடமில்லை. மேலும் கெட்ட வார்த்தைகளை  ஒன்றின் பின் ஒன்றாய் தடங்கல் இல்லாமலும் விஷ. ஊசி போலவும் அக்ஷர சுத்தமாயும் பயன்படுத்தச் சிறு வயதிலேயே பயிற்சி பெற்றிருந்தால்தான் முடியும் என்று அவனுக்குப் பட்டது. அப்படியே சொல்ல முயன்றாலும்கூட தன் உச்சரிப்புகள் தன்னையே நாண வைக்கும் என்று தோன்றியது. தான் மறைத்து வைத்திருந்த வார்த்தைகளை ஏக காலத்தில் லலிதா கேட்க தேர்ந்து தரக்குறைவாய்த் தன்னை எண்ணிவிடுவது அவனை சங்கடப்படுத்தும். தான் ஊர்விட்டுப்போவதற்குள், அந்தப் பிச்சைக்காரன் தன்னை மீண்டும் ஒருமுறை அவன் முன் வெளிப்படுத்திக் கொள்வான் என்று சாம்பசிவனுக்கு உறுதியாய்ப்பட்டது. அவ்வாறு நிகழ்ந்தால் மனங்கூசி ஒதுங்காமல் தைரியமாய் அதை சமாளிக்க வேண்டும் என்று அவன் நினைத்தான். லலிதா தன்னுடன் இருப்பது சாம்பசிவனுக்கு இடையூறாய்ப் பட்டது. லலிதா மீது வைத்திருக்கும் பிரியத்தை வெளிப்படுத்தவும், அவள் உள்ளூர சந்தேகப்பட்டுக்கொண்டிருப்பதற்கு நேர் மாறாக, நெருக்கடி ஏற்பட்டால் அவனால் அவளுக்குப் போதிய பாதுகாப்புத் தர இயலும் என்பதை நிரூபிக்கவும் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற யோசனை அவனுள் மூண்டது.

லலிதா எத்தனை பிரியத்துடன் தன் மீது ஒட்டிக்கொண்டிருக்கிறாள் என்பதை சாம்பசிவன் நினைக்க ஆரம்பித்திருந்தான். மன ஒதுக்கம் என்பதே அவளிடம் இல்லை. அதுபோல் இறுக்கமாக அவள் மீது கவிய அவனால் முடியவில்லைதான். அவள் இயல்புக்குத் தன் குணம் சமமாய் அமையவில்லை என்று அவனுக்குப்பட்டது. வார்த்தைகளில் வெளிப்படுத்தத் தெரியவில்லையே தவிர மற்றபடி லலிதா மற்றபடி' என்று சில சமயம் அவ விடம் அவன் இழுப்பான் 'சரி சரி, யாரு இல்லைனு சொன்னா இப்போ " என்று அடக்குவாள் அவள். அது சாதாரணமாக சரியாகவும் இருக்கும். பிரியமாகவும் தெரியும். கேலி மாதிரியும் அர்த்தம் கொடுக்கும். லலிதா தன் மீது கொண்டுள்ள பிரியம் உடல் உறவை மையமாக வைத்து வேர்விட்டு வேறுபல மையங்களை கிளை வீசி இணைத்துக்கொண்டுள்ளதாக சாம்பசிவன் எண்ணினான். அவளுடைய வேட்கை மிகுதியானது என்பதை விடவும் குருட்டுதனமான வெறி என்பதில் அவனுக்குத் திருட்டு சந்தோஷமுண்டு. உடலுறவு கொள்ளும்போது பின்னால் நினைத்துக் கூசும்படி அவளிடம் உணர்ச்சியின் கற்பனைகள் வெடிக்கும். அதிகாலைகளில் அவள் மீது வெட்கம் பல சமயம் கவிந்திருக்கும் என்றாலும் வாய்விட்டு எதுவும் பிரஸ்தாபித்து அவளை அவன் நாண அடித்தது கிடையாது. இது தன்னை ஒத்த கனவானின் இயல்பு என்று அவன் மனதில் கூறிக்கொண்டாலும், உண்மையான காரணம் அதைப்பற்றி பிரஸ்தாபித்தால் அவள் வெட்கம் அடைந்து காதல் விளையாட்டில் தன் உணர்ச்சியைத் தணித்துக் கொண்டு விடுவாளோ என்ற பயம்தான். இவ்வளவு ஆசைகளுக்கும் நடுவில் லலிதாவால் தன் உடற் குறையை மிச்சமின்றி விழுங்கவும் முடியவில்லை என்பதும் சாம்பசிவனுக்குத் தெரிந்திருந்தது. இருவரும் ஒன்றாகத் தெருவில் நடக்கிறபோது, (இதுபோன்ற சந்தர்ப்பங்கள் உருவாவதற்கு முன்னாலேயே லலிதா சாதுரியமாகக் கலைத்துவிடுவதுண்டு) தன் குறையைக் கவனிக்கும் பார்வைகளைத் தவிர்ப்பதற்காகத்தான் அவள் தூரத்தில் பார்வை குத்தி விறைப்புற்று செல்கிறாள் என்பதும் அவனுக்குத் தெரியும்.

சாம்பசிவனை ஒரு விசித்திரப் பிறவி என்று கற்பனை செய்துகொள்ள லலிதாவுக்குப் பிடித்திருந்தது. வேறு யாருக்கும் அடங்காத அவன் தன் மந்திரத்துக்குக் கட்டுண்டு கிடப்பதாக எண்ணம் கொள்வாள். சாம்பசிவனைப் பற்றித் தன் தாயாரிடம் 'இரண்டு ஜென்மம் அதுகூட வாழ்ந்தாலும் இன்ன சமயத்தில் அதுக்கு இன்னமாதிரி மூளை வேலை செய்யும்னு கண்டுக்கவே முடியாதம்மா...' என்பாள். இவ்வார்த்தைகளை அப்படியே வெள்ளையாக எடுத்துக்கொண்டு அவள் தாயார் அலுத்துப் பேசும்போது அவளுக்கு உள்ளுர ஒரு சந்தோஷம் கிளம்பும். இதுபோன்ற மன விளையாட்டுகளில் ஈடுபடும் நாட்களாகவே லலிதாவுக்கு வந்துகொண்டிருந்தன என்பதில்லை. சாம்பசிவன் சிறுகச் சிறுக பல மன மாற்றங்களுக்கு உட்பட்டுக் கொண்டிருந் தான். அவனது ஆசையும் கவனமும் ஆத்மீகப் பாதையில் திரும்பிக் கொண்டிருந்தன. பிரம்மச்சரிய நெறியை மிகுந்த வைராக்கியத்தோடு அவன் பின்பற்றினான். இதில் சில சறுக்கல்கள் அவ்வப்போது ஏற்பட்டுப்போயின என்றாலும் அவன் வயதுக்கு அவன் கொண்டிருந்த வைராக்கியங்கள் சாதாரணமானவை என்று சொல்லமுடியாது. இதற்கு அனுசரணையாக வேறு பல மனப் பயிற்சிகளும் உடல் அப்பியாசங்களும் அவன் அன்றாட வாழ்வில் இடம்பெற்று நீண்டநேரங்களை விழுங்கிக் கொண்டிருந்தன. விட்டில் தனது ஆத்மீகப் பயிற்சிகளுக்கென மேலும் ஒரு தனி அறை ஒதுக்கிக் கொண்டான் லலிதாவுக்கு அவ்வறையில் பிரவேசனம் கிடையாது என்பது வழக்கத்தில் ஆகியிருந்தது. அவனுடைய ஆத்மீக விசாரம் அவனை முழுசாக ஸ்விகரித்துக் கொண்டு தன்னை ஒதுக்கிவிடுமோ என்ற உள்பயம் அவளுக்குத் தட்ட ஆரம்பித்திருந்தது. முதல் குறைப் பிரசவத்துக்குப்பின் அவள் கருவுறவில்லை. மாசாமாசம் போய் உக்காந்துக்கோ பெத்தேனே பொண்ணை’ என்று அவளையே முழுப் பொறுப் பாக்கி அவள் அம்மா நெஞ்சில் தட்டிக் கொள்வாள். அவனுடைய ஆத்மீக வாழ்க்கைபற்றி சில சமயம் சாம்பசிவனே அவளிடம் மறைமுகமாக அபிப்பிராயம் ஆராய்வான்.  உங்க குடும் பத்துக்கு இது புதுசா பெரிய அண்ணா உங்களை இருகிளை வாரிஸு அப்டீன்னு சொல்வாராமே" என்பாள் லலிதா.

பெரிய அண்ணா என்று லலிதா குறிப்பிட்டது அவளுடைய மாமனாரை தெரிந்தவர்கள் எல்லோருக்கும் அவர் பெயர், வித்தியாசம் இல்லாமல் அதுதான். எஸ் எஸ். அய்யர் என்பது தஸ்தாவேஜகளில் இடம்பெற்றிருந்ததோ என்னவோ, ஊரில் தனி கவுரமும் வித்தியாசமான வாழ்க்கை முறைகளும் பெற்றுப் புகழடைந்த குடும்பம் அது. நில புலன்கள் இருந்தன. ஆனால் இரண்டு தலைமுறைகளில் அவர்கள் வீட்டில் யாரும் லெளகீகம் பார்க்கவில்லை. விளைந்துவந்த வரையிலும் சரிதான் என்று விட்டிருந்தார்கள் இந்த குடும்பத்தில் தலைமுறைக்கு ஒருவர் சந்தியாசியாகச் சென்றுகொண்டிருந்தார்களாம். பெரிய அண்ணாவின் தகப்பனார் கணபதி அய்யர் தனது நாற்பதாவது வயதில் ஞான வாழ்க்கை தேடி வடக்கே சென்றுவிட்டார். பின்னால் அவரை உறவினர் யாரும் பார்க்கவில்லை. அவரைப்பற்றி யாரோ எழுதிய ஆங்கிலப் புத்தகத்தையும் அதனுள்ளே பழுப்பேறிய ஆர்ட் தாளில் அவர் படத்தையும் லலிதா சாம்பசிவனின் புத்தக அலமாரியில் பார்த்திருக்கிறாள். பெரிய அண்ணா தன் வாழ்நாளின் சத்தான பகுதியைப் பூராவும் காந்தி அடிகளைப் பின்பற்றிச் செலவழித்தவர். அவர் குடும்பம் கைதுசெய்து அழைத்துச் செல்லப்படுவதை லலிதா தன் விட்டில் சாத்தப்படும் வாசல் கதவுக்குப் பக்கத்திலுள்ள ஜன்னல் வழி பார்த்திருக்கிறாள்.

பெரிய அண்ணாவின் குடும்பம் தெருக்காரர்களின் மானசீக ஒதுக்குதல்களுக்கு ஆளாகியிருந்தாலும் லலிதாவின் சிறுவயது நினைவுகளில் இக்குடும்பம் விசேஷக் கவர்ச்சி பெற்றிருந்தது. அவளுக்கு அந்த வீட்டுக்காரர்கள் பேரில் ரொம்பவும் ஆசையாக இருந்தது. அவர் குடும்பத்தைச்சுற்றி நடைபெறும் நிகழ்ச்சிகளிலும், அவர்கள் ஒருவருக்கொருவர் கொண்டிருந்த உறவுகளிலும், அந்த வீட்டின் பகுதிகள் மீதும் அவளுக்கு ஆசையாக இருந்தது. பெரிய மா மியைத் தவிர - அவர்கள் வீட்டில் எல்லோரும் - தரை சிறுவயதிலேயே குருடாகிவிடுவார்கள் என்று அவள் நினைத்திருந்தாள். . பின்னால், சாம்பசிவன்அவளை மணந்து கொண்டபின் அவனுக்கு தெரியாத மறைந்துபோயிருந்த - குடும்ப காட்சிகளையும் விஷயங்களையும் செய்திகளையும் '' நினைவுறுத்தியிருக்கிறாள். பல காட்சிகளை நடித்தும் காட்டியிருக்கிறாள். பெரிய அண்ணா சிறுவயதில் விதவையாகி விட்ட தன் தங்கை ஜானகியை மேல்படிப்பு படிக்கவைத்து தன் கிருஸ்துவ நண்பருக்கு கல்யாணம் செய்துவைத்திருந்தார். அவர்கள் இருவரும் திருச்சியில் கல்லூரியில் ஆசிரியர்களாக வேலை பார்த்தனர். விடுமுறை நாட்களில் சாம்பசிவனின் ஜானகி அத்தை காரை அவளே ஒட்டியபடி பெரிய அண்ணாவின் @ు 蠶 இறங்குகிறபோது, கூடி வேடிக்கை HTఉల్త్ లే o லலிதாவும் நின்றிருக்கிறாள். ஜானகி மாமியின் ---- தோற்றமும், காரிலிருந்து திண்னைக்கு இறக்கப்படும். _ெ. ஞம், தலையணை உறைகளும், மாமியின் கைப்பையும, செருப் பும், சங்கிலி தொங்கும் தண்ணீர்ப்புட்டியும் - ஒவ்வொன்று-ே லலிதாவிடம் விவரிக்க முடியாத கனவுகளை விரிக்கும். ! Tx டாவிலும் நடுக்கூடத்தின் வாசலிலும் குழந்தைகளின் அடைசல் பெரிய இம்சையாகிப்போகிறபோது, உள்ளே இருந்து யாராவது வந்து போயுட்டு அப்புறமா ஹாங்கோ' என்று குழந்தைகளை வெளியே நக்ர்த்தி விடுவார்கள். தான் பார்த்ததை எல்லா தாயாரிடம் சொல்ல லலிதா ஒடிப்போவாள். அவள் சொல்ல ஆரம்பித்ததுமே, போகச்சொல்லு அந்த முண்டையை என்பாள் லலிதாவின் தாயார். அப்போது தன் தாயாரின் முகம் படுத்திய வெறுப்பையும், வலிப்பையும் லலிதா நடித்திருக்கிறாள். அதைப் பார்த்து அவன் கடகடவென்று சிரிக் கிறபோது நிஷ்களங்கமான அவன் குணத்திற்காக அவனை அங் கேயே அனைத்துக் கொள்ள அவள் மனதில் ஆசை எழும். நாவிதன் ராமசாமியை பெரிய அண்ணா வாங்க, போங்க என பன்மையில் அழைத்துப் பேசுவதை ஊர்க்காரர்கள் கேலிசெய்து பேசுவார்கள். வெற்றிலைப்பெட்டியை அவனுக்கு நகர்த்துவா தாம் பெரிய அண்ணா. பெரிய அண்ணாவின் தம்பி சின்னண்ணா தன் தகப்பனாரைப் பின்பற்றி, மேலும் சற்றுத் தீவிரமாக, கல்யாணத்திற்கு முன்பே புதுச்சேரி சென்று அரவிந்த யோகி யுடன் இணைந்து கொண்டார். அப்போது சாம்பசிவன் சிறு குழந்தை சாம்பசிவன் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது அவனுக்கும் சின்ன அண்ணாவுக்கும் விட்டுப் போயி ருந்த தொடர்பு கடிதம் மூலம் புதுத் துவக்கம் கொண்டது. அவ்வப்போது சின்ன அண்ணா அனுப்பிவைத்த புத்தகங்களும் அவனுக்குத் தபாலில் வந்தன. நாள் செல்லச் செல்ல சாம்பசிவ னின் ஈடுபாடு ஆத்மீகத் துறையில் வளர்ந்து விடவே, சிவராத்திரி தோறும் அரவிந்தர் தரிசனத்துக்கு அவன் புதுச்சேரி போய் வந்தான். ஊர் திரும்பியதும் சாம்பசிவனிடம், சித்தப்பாவைப் பார்த்தேளா?' என்று லலிதா கேட்பாள் இப்போ அவர் எனக்கு சித்தப்பா இல்லேடி, அசடே' என்று அவன் பதில் சொல்வான்.


__________________"நான் உன் புருஷன் இல்லேடீ அசடே அப்டீனு என்கிட்டேச் சொல்ல கத்துத்தந்தாரா? என்று லலிதா தொடர்ந்து கேட்பாள். அதற்கு அவன், 'இது கத்துத் தெரிஞ்சுக்கற சமாசாரம் இல்லேடீ" என்பான்.சுதந்திரம் கிடைப்பதற்கு முன்னரே ஒய்ந்து விட்டோடு ஒதுங்கிவிட்டார் பெரிய அண்ணா. வயோதிகம் கவிந்து உடல் கட்டு விட்டு ஆட்டம் கண்டுவிட்டிருந்தது. ஒருநாள், வாடிக்கைப் பாலை பித்தளைச் செம்பில் வாழை இலைபோட்டு மூடி எடுத்துக் கொண்டு லலிதா பெரிய அண்ணா வீட்டுக்குப் போனாள். ஹாலில் நுழைய முடியாதபடி வழிமறித்து உட்கார்ந்தபடி சீட்டுக் கச்சேரி நடந்து கொண்டிருந்தது. பெரிய அண்ணாவும் மூத்த மாட்டுப்பெண் சுசியும் ஒரு கட்சியாகவும், மூத்த பிள்ளையும் கடைசிப் பெண்ணும் மறு கட்சியாகவும் ஆடிக்கொண்டிருந்தனர். தைலம் பூசியிருந்த தன் காலை நீட்டி வைத்துக்கொண்டிருந் தார் பெரிய அண்ணா. மாட்டுப் பெண்ணைச் சமமாக 5 lia, TJ வைத்துச் சீட்டு விளையாடும் பெரிய அண்ணா மீது லலிதாவுக்கு மிதமிஞ்சிய பிரியம் கவிந்து அவருக்குப் பணிவிடை செய்வதில் தன்னைப் புகுத்திக்கொள்ள வேண்டும் என்று தோன்ற ஆரம் பித்தது. சாம்பசிவன் ஊஞ்சலில் கவிழ்ந்து படுத்தபடி புத்தகம் படித்துக்கொண்டிருந்தான். அவன் வலது கால் வேஷ்டிக்கு வெளியில் தெரிந்தது. கால் கும்பியிருந்தது. மற்ற இடங்களை விடவும் அக்கால் பெரிய மறுப்போல் கறுத்தும், சொரசொரப் பாகவும் ரோமம் படர்ந்தும் இருந்தது. பாதம் குறுகி சிறு குழந் தையுடையது போலிருந்தது. அவள் வந்து நின்றுகொண்டிருந் தது யாருடைய பார்வையிலும் விழவில்லை, அப்படியே நின்று கொண்டிருக்கத்தான் அவளுக்கும் ஆசையாக இருந்தது. தன் கற்பனையில் பெரிய அண்ணாவின் பிள்ளையும் மாட்டுப்பெண் ணையும் தள்ளிவிட்டு, தன்னையும் சாம்பசிவனையும் அந்த இடங்களில் இருத்தி அவள் பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் பெரிய அண்ணா கட்சி, அவளுடைய இறக்கம் ஒன்று வெகு வாய்ப்பாக அமைந்துபோக, 'சபாஷ்டீ பெண்ணே, இந்தப் பயலைத் தொலச்சுப்புடறேன்' என்று அவர் சாம்பசிவனைப் பார்த்துக் கத்துகிறார். சாம்பசிவனை அடைந்துவிட வேண்டும் என்று தான் முடிவுசெய்தது அநேகமாக அந்த நிமிஷமாகத்தான் இருக்கும் எனப் பின்னால் லலிதா நினைத்துக் கொள்வதுண்டு. சாம்பசிவனும் லலிதாவும் கோயிலிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்தனர். சாம்பசிவனுக்கு அவசியமில்லாமல் அந்தப் பிச்சைக்காரன் நினைவாகவே இருந்தது. அவன் மீண்டும் தன் முன் எதிர்ப்படப் போகிற இடத்தையும் நிமிஷத்தையும் எதிர்

DJ TF52 5T 465

பார்த்துக்கொண்டே வந்தான் அவன். அவன் c6tb பிரக்ஞை குறைந்து உறைந்துபோயிருந்தது. லலிதா நெகிழ்வாகவும் கலகலப்புடனும் இருந்தாள். நிறைய ஆசைப்பட்டு சிறு விஷயங்களை விரித்தும் நீட்டிக்கொண்டும் இருந்தாள். நீடித்த குடும்ப வாழ்க்கை தனக்கு அளிக்கப்பட வேண்டுமென்ற பிரார்த்தனையை தெய்வ சந்நிதியில் சமர்ப்பித்த பின், தன் மனச் சுமையை சேர வேண்டிய இடத்திற்குத் தள்ளி விட்டோம் என்ற நிம்மதியில் அவள் இலேசாகியிருந்தாள். ಆTLசிவனுக்குக் காதில் ஏதோ சத்தம் விழுந்துகொண்டிருந்ததே தவிர, அதன் பொருளை கிரகித்துக் கொள்ள அவன LC50 LO ஒத்துழைக்கவில்லை. தன் கவனக் குறைவு பட்டவர்த்தனமாகாத படி, அவள் பேசி நிறுத்தும்போதெல்லாம், " சரிதான் 墨 சொல்வது ரொம்ப சரி'; 'இல்லாவிட்டாலும் அப்படித்தானே என்றெல்லாம் பொதுப்படையாக உளறிக்கொண்டிருந்தான்.

டீக்கடை வாசலில் இப்போது ஒரு சிறுகூட்டம் கூடியிருந் தது. வயது வந்தவர்களும் நின்றுகொண்டிருந்தனர். வியாதிக் காரன் வாய்கிழியக் கத்திக் கொண்டிருந்தான். சில கெட்ட வார்த்தைகள் சாம்பசிவன் காதில் விழுந்தன. அவன் தெருவின் மறுபக்கம் நகர்ந்துவிட உத்தேசித்து குறுக்காகத் தாண்டுவது தோல்வி என்று நினைத்து, இயற்கையாய் நகரும் பாவனையில் சரிவாகத் தாண்டி இடதோரம் சென்றான். அவனும் லலிதாவும்

பிச்சைக்காரனுக்கு நேராக எதிர்ப்பக்கம் வந்தபோது, '' it பாத்தி ஒதுங்கிப்போறா பாரு. ஒதுங்கி போறாப்லே ஒதுங்கிப் போய்.” மீதி சாம்பசிவன் காதில் விழவில்லை. கூட்டத்தில்

பலர் சிரித்தனர்.

சாம்பசிவன் அறைச் சாவியை லலிதா கையில் கொடுத்து, "நீ போய் ரூமைத் திற, பின்னாலே வறேன்' என்றான். தாண்டி எதிர்ப் பெட்டிக் கடைக்கு அவன் போகப்போவதாக அவள் அனுமானித்து, 'பெட்டியிலே சிகரெட் இருக்கு’ என் றாள். 'இல்லே, நீ போ, வறேன்' என்று சொல்லிவிட்டு அவன் தெருவைத் தாண்ட ஆரம்பித்தான். நடுவில் வந்ததும் திரும்பிப் பார்த்தான். லலிதா லாட்ஜில் நுழைந்து கொண்டிருந் தாள்.

கூட்டத்தின் பின்வரிசையை அடைந்ததும் சாம்பசிவன் தலையை உயர்த்திப் பிச்சைக்காரனின் கண்களைப் பார்த்தான்.

"எப்படி இந்த வியாதி வந்ததுன்னா கேக்கறாங்க. இப் பொப் போனா பாரு அதே மாதிரியா ஒரு பாப்பாத்தி ஆசையாக் கூப்பிட்டா. போனேன் . ஒரே ஒரு நா ராவுதான். இதைத் தந்துப்புட்டா சண்டாளி.'___________________


அவன் தன் மொட்டைக் கைகளை அரைவட்டத்தில் கூட்டத்தினர் முன் நகர்த்திக் காட்டினான். சிரிப்பொலிகள் எழுந் தன. சிலர் பின்பக்கம் திரும்பி சாம்பசிவன் முகத்தைப் பார்த்தனர்.

"தந்தையே தேவிடியா, திரும்ப எடுத்துண்டு போயேன்னு வாற போற பாப்பாத்தி ஒவ்வொருத்தியையும் கொஞ்சிக் கொஞ்சிக் கூப்புடறேன். தேவிடியா தாண்டித் தாண்டிப் போறாளே ஒழிய வரமாட்டேங்கறாளே. யாருகிட்டெச் சொல்லி அழ."

சாம்பசிவன் அறைக்குள் நுழைந்ததும், "எங்கே போனேள்?" என்று லலிதா கேட்டாள்.

சாம்பசிவன் சட்டையைக் கழற்றி நாற்காலிமேல் போட்டான். கண்ணாடியில் முகத்தைப் பார்த்துக் கொண்டான். முகஞ் சிவந்து நெற்றியிலும் மூக்கிலும் வேர்வை அரும்பியிருந்தது. மார்பும் கழுத்தும் மிகவும் உஷ்ணமாக இருப்பதாக உணர்ந்தான். துண்டால் முகத்தையும் மார்பையும் துடைத்துக் கொண்டான்.

"என்ன விஷயம்?"

"எங்கே

"என்னது என்ன விஷயம்? ஒண்ணுமில்லை." சாம்பசிவன் நாற்காலியை வராண்டாவில் இழுத்துக் கொண்டான். அறைப்பக்கம் பார்த்து, "நீ தூங்கறதுன்னா தூங்கு" என்றான்.

'நீங்க ராத்திரி கண் கொட்டலியே." 'தூக்கம் வரலே.' 'படுத்துண்டு ரெஸ்ட் எடுத்துக்கலாமே." அதற்கு அவன் பதில் சொல்லவில்லை. 'அங்கே என்ன பாக்கறேள்?" லலிதா அறையிலிருந்து வெளியே வந்தாள். டீக்கடை முன் பிச்சைக்காரனுடைய கத்தல் உச்சக்கட்டத்தில் ஏறி களைக்கட்டிக் கொண்டிருந்தது. கூடியிருந்தவர்கள் நெகிழ்ந்து சிரித்துக் கொண் டிருந்தனர்.

"என்ன சொல்றான் அவன்?" 'நீ போய்ப்படு' என்றான் சாம்பசிவன். அவன் சொன்ன தோரணை அவளுக்கு உறைத்துவிட்டது. தன் எதிர்ப்பைப் பின்திரும்பிச் சென்ற அசைவுகளில் காட்டிய படி அறைக்குள் நுழைந்தாள். பெட்ஷீட்டைத் தரையில் விரித்து, லைட்டை அணைத்துவிட்டுப் படுத்துக்கொண்டாள்.

திடீரென்று விழிப்புத் தட்டியபோது வெகுநேரம் அடித்துப் போட்டாற்போல் தூங்கிய சுகம் தனக்குக் கிடைத்திருந்ததை லலிதா உணர்ந்தாள். எழுந்திருந்து பாத்ரும் போய்விட்டு வந்த போது பாத்ரூம் விளக்கொளியில் கட்டில் காலியாக இருப்பது தெரிந்தது. பரபரப்புடன் அறை விளக்கைப் போட்டாள். கட்டில் மெத்தையில் ஒரு உடல் சரிந்த அடையாளமே இல்லை. மேஜை மீதிருந்த கைக்கடிகாரத்தைப் பார்த்தாள். மணி ஒன்று. சாம்ப சிவனின் சட்டையைக் காணவில்லை. கதவுப் பக்கம் நகர்ந்து வந்தாள். அடித்தாழ்ப்பாள் கீழே தள்ளப்பட்டு வெளியே இழுத்து கதவு சாத்தப்பட்டிருந்தது. கதவை திறக்கலாமா என்ற தயக்கத் திலேயே சில நிமிஷங்கள் சென்றன. இருமிக்கொண்டே கதவை சிறிது திறந்து எட்டிப்பார்த்தாள். வராண்டா விளக்கில் பல்பு பொருத்தப்பட்டிருக்கவில்லை. வீதியில் ஒரு லாறியின் டயரைக் கழற்றி ஏதோ ரிப்பேர் செய்துகொண்டிருந்தனர். ஒரு சிறுவன் குப்பையைக் கூட்டி எரித்து அவர்களுக்கு வெளிச்சம் தந்துகொண் டிருந்தான். காற்றிற்காக சாம்பசிவன் வராண்டாவில் படுத்திருக் கலாம் என்ற நம்பிக்கையும் இப்பொழுது குலைந்து விட்டது. நாலைந்து அறைகள் தாண்டி ஒரு ரூமில் ஜன்னல்வழி விளக் கொளி வராண்டாவில் விழுந்துகொண்டிருந்தது. மன உந்துதலை வரவழைத்துக்கொண்டு அரைச் சுவர் ஒரமாய் ஏணிப்படிகள் வரை யிலும் அவள் நடந்து வந்தாள். விளக்கு எரிந்த அறையில் ஒரு வன் அண்டர்வெயர் அணிந்து வேஷ்டியின் கிழிசலுக்குத் தையல் போட்டுக்கொண்டிருந்தான்.

ஜன்னல் வழி அவன் லலிதாவைப் பார்த்தபோது அவள் மனதில் பீதி புகுந்துகொண்டது. விரைவாக நடந்து அறைக் குள் நுழைந்து கதவைச் சாத்தினாள். தைத்துக்கொண்டிருந் தவன் இப்பொழுது தன் அறைமுன் நின்றுகொண்டிருப்பது தெரிந்தது. விளக்கைப் போட்டு மேஜையைப் பார்த்தாள், மணி பர்ஸ் இரவு வைத்த இடத்திலேயே இருந்தது. தலையணை களை ஒன்றன் மீது ஒன்றாக வைத்து அதில் சாய்ந்துகொண் டாள். விளக்கொளியில் தனிமையில் அப்படி உட்கார்ந்து கொண் டிருக்கவும் கஷ்டமாக இருந்தது. பலர் பார்க்கத் திறந்த வெளியில் படுத்துக்கிடப்பது மாதிரி இருந்தது. தைத்துக் கொண் டிருந்தவனிடம் போய் விஷயத்தை சொல்லலாமா என்று யோசித் தாள். அவன் மீது சந்தேகமாக இருந்தது. தன்னை எழுப்பிச் சொல்லிவிட்டுப் போயிருக்கவேண்டியதுதான் எந்த விதத்திலும் நியாயமாகப்பட்டது. தன்னுடைய உணர்ச்சிகளை அவன் எப் போதுமே மதித்ததில்லை என்று நினைத்துக்கொண்டாள். இது பற்றிப் பேச்சு எழும்போது இவ்வாறு கலவரம் அடைந்தது ரொம்பவும் அசாதாரணம் என்று அவனால் ஆக்கிவிட முடியும். அதற்கு அவசியமே இருக்கவில்லை என்று வாதாடவும் அவனால்S சுந்தர ராமசாமி

முடியும். என்ன அவசரம் என்பதை அவளால் யோசித்துத் தெரிந்துகொள்ள முடியவில்லை. அவளால் யோசிக்கவே முடிய வில்லை. "இப்படிச் செய்திருக்க வேண்டாம்' என்ற ஒரு வாக் யத்தையே அவள் மனம் ஜபித்துக்கொண்டிருந்தது. சாம்ப சிவனின் தாத்தாவும், சின்ன அண்ணாவும் ராத்திரியில் காணாமல்போனார்கள். ஆனால் அவர்கள் வீட்டிலிருந்து மறைந்து போனார்கள். வெளியூரில் ஒரு ஒட்டல் அறையில் தன்னை சாத்திப்போட்டுவிட்டு அவள் கணவன் மறைந்து போவான் என்று அவளுக்குத் தோன்றவில்லை.

அவளுக்குத் தூக்கம் வந்தது. அது எப்பொழுதும் வரும் தூக்கமல்ல என்றும் மயக்கம் தான் வருகிறது என்றும் அவள் நினைத்துக் கொண்டாள். கதவு சாத்தியிருக்கும் நிலையில் மயக் கம் போட்டுவிட்டாலும் கூட ஆபத்து எதுவுமில்லை என்று அவளுக்குத் தோன்றிற்று. அவளுக்கு பெரிய அண்ணாவின் நினைவு வந்தது. இன்று அவர் உயிரோடு இருந்து இதுபற்றி அவள் சொல் லியிருந்தால் "மடையன், மடையன் படிச்சமுட்டாள்' என்று சாம்ப சிவனைத் திட்டியிருப்பார். அவர் அந்த அறையில் அவளுடன் தன் கண்களுக்குத் தெரியாமல் இருப்பது மாதிரித் தோன்றிற்று. வீட்டு ஹாலிலிருந்த அவருடைய படத்தை மனசுக்குள் கொண்டு வந்து, அவர் உயிரோடு இருந்தபோது எப்படி இருந்தது என்பதை நினைத்துப்பார்க்க முயன்றாள்.

கதவை விரலால் சுண்டும் ஓசை கேட்டது.

"யாரு?"

"நான் தான்."

சாம்பசிவன் குரல்தான்.

லலிதா கதவைத் திறந்தாள்,

சாம்பசிவன் உள்ளே வந்து தன் ஊன்றுகோலை உயர்த்தி, 'இதால் அவனைத் தாக்கினேன்' என்றான்.

லலிதாவுக்கு சட்டென்று புரிந்தது.

என்ன அசட்டுத்தனம்? ஏன்? எதுக்கு?

சாம்பசிவம் விளக்கை அனைத்துவிட்டு அவளை இறுகத் தழுவியவாறு கட்டிலில் சாய்ந்தான். அவனுடைய அந்த இரவு நடததைகள தன கணவனுடையதாக அவளுக்குப் படவில்லை. ஒரு தாக்குதலாகவே அது ஆரம்பமாயிற்று. ஒரு முரட்டு ஜென்மம் அவன் உடலில் புகுந்துகொண்டு வந்திருப்பது மாதிரிப்பட்டது. அவனுள் ஏதோ ஒன்று உடைபட்டது போலிருந்தது. அவனும் ೨೩೮. தாத்தாவும் சின்ன அண்ணாவும் கட்டிக்காத்த எல்லா விரதங்களையும் அவன் அவள் உடல் மூலம் கிழித்துக்கொண்டிருப்பது மாதிரிப்பட்டது. மூச்சுத்திணறித் தான் இறந்துபோகக்கூடும் என்று அவளுக்குத் தோன்றியது. தன் உடலில் பல இடங்களில் ரத்தம் கசிந்து கொண்டிருப்பதுமாதிரி அவளுக்குப் பட்டது. தன கைகளால் அவன் மார்பைப் பலங்கொண்ட மட்டும் பிடித்துத் தள்ளினாள். அவளால் அவனைத் தள்ள முடியவில்லை.

அறைக் கதவை யாரோ தட்டினார்கள். விடிய ஆரம்பித்திருந்தது. லலிதா எழுந்திருந்து பாத்ரும் கதவுக்குப் பின்னால் மறை வாக நின்று கொண்டாள்.

அவன் பாத்ரூம் வாசலில் வந்து நின்றான். அவள் சாரியைச் சுற்றிக்கொண்டிருந்தாள்.

'போலிஸ் ஸ்டேஷனிலிருந்து போன் வந்திருக்கிறதாம். பேசிவிட்டு வறேன்' என்று சொன்னான் அவன்.

அவன் வராண்டா வழி செல்வதைப் பார்த்துக்கொண்டே இருந்துவிட்டு அவன் உருவம் மறைந்ததும் லலிதா அறைக் கதவைச் சாத்திக்கொண்டாள். O

ஞானரதம் 1973

Last 6 pages  Scanned by CamScanner


பா. வெங்கடேசன்
21 hrs
கூத்தியா !
அப்பா அவளை கை விட்டிருக்க கூடாது என்றே தோன்றியது.அந்த நள்ளிரவு நாளில் கையில் துண்டு சீட்டில் விலாசம் எழுதிக் கொண்டு சென்னையில் அப்பாவை தேடி எப்படி வந்தாள் ஆச்சரியமாக இருந்தது.
அவளுக்கு அப்பாவின் மீது மரியாதை இருந்தது.அதையும் தாண்டி அளவுக்கு அதிகமாக அன்பிருந்தது.எனக்கு நன்றாக நினைவிருந்தது.என் பெயரைச் சொல்லிதான் கதவை தட்டினாள்.அம்மா தான் கதவை திறந்தாள்.சக்காளத்தி இங்கேயும் வந்திட்டியா அம்மா முடியை கொண்டையிட்டு கூச்சலிட்டாள்.திடுக்கிட்டு எழுந்த அப்பா அவளை கூட்டிக்கொண்டு தெருவுக்கு நடந்தார்.அப்பா பின்னாடியே நானும் எழுந்து ஓடினேன்.
தெரு விளக்கு கூட எரியாத அந்த கும்மிருட்டில் அவள் கையை பிடித்துக் கொண்டு அப்பா கெஞ்சினார்.தயவு செய்து இனி என்னை தேடி வராதே.இதெல்லாம் இனி சரிவராது.இப்போதுதான் இங்கே வந்து செட்டில் ஆகிருக்கிறோம்.பசங்களை இங்கயே ஸ்கூல் சேர்த்தாச்சு.இனி அவங்க கூட நானிருக்கனும்..உன்கூட வந்து வாழ முடியாது என்று கெஞ்சினார்.
வழக்கமாக அம்மாவிடம் எகிறும் அப்பாவா இது? எனக்கு வித்தியாசமாக தெரிந்தார்.ஏன் இவளிடம் கெஞ்ச வேண்டும்.கோவமாக பேசி விரட்ட முடியாதா யோசித்தேன்.அப்பாவின் தோளில் சாய்ந்துக் கொண்டு குலுங்கி குலுங்கி அழுதாள் அவள்!
நான் சும்மாதான்யா இருந்தேன்.நீதானே என்னவெல்லாம் பேசி பேசி மனசை கலைஞ்சி விட்டே.இவ்வளவு தூரம் ஒன்னோடு ஒன்னா வாழ்ந்துட்டு இப்ப நடுரோட்டில் விட்டுட்டு போறியே நியாயமா அழுதாள்.
அந்த இருட்டில் அப்பா அழுதாரா என்று தெரியவில்லை.ஆனால்,அவர் குரல் உடைந்து போயிருந்தது.அழுவதற்கு முன்னாலும் அழுத பின்னரும் குரலில் ஒரு சோகம் இருக்குமே அந்த சோகம் இருந்தது.புள்ளைங்களை கிணத்துல தள்ளிட்டு அவளும் செத்து போயிடறேனு மிரட்டறாடி.நான் என்ன பண்ணட்டும்.காலம் பூரா கொலைக்காரன் பட்டத்தோட உன்கூட வந்து வாழ சொல்லறியா?சொல்லு இப்பவே வரேன் என்றார்.
அவ மட்டும்தான் செத்து போவாளா?உனக்காக நான் சாக மாட்டேனா.இப்ப சொல்லுய்யா.உன்னை பிடிக்கலைனு சொல்லுய்யா.ஊர்ல போய் ஒட்டந்தழை வேய்ச்சி குடிச்சிட்டு சாவறேன்.நான் உயிரோட இருக்கறதே என்னை உனக்கு ரொம்ப பிடிக்கும்தான்ய்யா!
நீயே வேணாம் சொல்லும் போது இந்த உலகத்துல என்ன சுகம் இருந்திட போகுது.போறேன்ய்யா.உன் பொண்டாட்டி புள்ளைங்க கூட சந்தோஷமா இரு.கை செலவுக்கு காசு வைச்சி இருக்கியா? புதுயிடத்துல யாருகிட்ட பணத்தை புரட்டுவே?நகை வித்து அஞ்சு ஆயிரம் எடுத்திட்டு வந்திருக்கேன்.இந்தாய்யா வைச்சுகோய்யா அப்பா பாக்கெட்டில் திணித்தாள்.அப்பா மறுக்கலை.வேணாம் சொல்லலை.உனக்கு பஸ்க்கு துட்டு இருக்கா என்றார்.உன்னை நினைச்சிட்டே நடந்தால் ஊரு வந்துடும் அழகையோட சிரித்தாள்.இப்போது ஏனோ அப்பா அழுதார்.
என்னை அருகே கூப்பிட்டாள்.பிஸ்கெட் பாக்கெட் இரண்டை கொடுத்தாள்.என்னை அவளுக்கு ரொம்பவும் பிடிக்கும்.தூக்கி முத்தமிட்டாள்.அக்காக்களோடு சண்டை போடக்கூடாது சரியா?எனக்கும் பத்து ரூபாய் கொடுத்தாள்.உன்னை விட்டு போயிட்டு வேற ஓருத்தன் கூட படுத்துப்பேன் நினைக்காதே.புருசனை விட்டுட்டு தான் வந்தேன்.ஆனால் காசுக்காக வரலை.உடம்பு சுகத்திற்காக வரலை.உனக்காக தான் வந்தேன்.என்னை இறக்கி விட்டுட்டு அப்பாவிடம் சொல்லி விட்டு திரும்பி பார்க்காமல் நடந்தாள்.
எனக்கு அவளை ஊரிலே தெரியும்.அப்பாவிற்கு கூத்தியா என்றுதான்
ஊரே அவளை சொல்லும்.
வீட்டில் நாங்கள் தூங்கிய பிறகு
பின்னிரவில் இது சம்பந்தமாக அப்பாவுக்கும்
அம்மாவுக்கும் நிறைய சண்டைகள்
வெகுநேரம் நடக்கும்.
பேய்கனவுகள் பாதியிலே கலைந்த
நிலையில் விழிந்து பார்க்கையில்
அம்மா தலைவிரிகோலமாய்
பேய்போல இருப்பாள்.என்கிட்ட இல்லாத ஒண்ணு அந்த தேவிடியா கிட்ட என்ன இருக்கு புடவையை அவிழ்த்து போட்டு கத்துவாள்.
ஒன்றும் புரியாமல் மீள்தூக்கம்
ஒன்றை தழுவிவிடுவோம்.
நிறைய முறை பார்த்திருக்கிறேன்.அப்பாவின் சைக்கிள் அந்த வீட்டின்
முன்தான் வெகுநேரம் நிற்கும்.குளிர் காலங்களில் விடிய விடிய சைக்கிள் நின்றுக் கொண்டிருந்ததில் சீட்டில் பனி படர்ந்திருக்கும்.இன்னும் சைக்கிள் அங்கதான் இருக்கா பார்த்துட்டு வாடா
அம்மாவின் தூதுவனாய் நானும்
அந்த வீட்டிற்கு போனதுண்டு.
மீன்குழம்பும் கறிகுழம்பும் வாசமாய் அப்பாவின்
சிகரெட்டு துண்டுமாய் அந்த
வீடு நிறைந்து இருக்கும்.குடித்து மீதியாய் கிடக்கும் பிராந்தி பாட்டில்கள் கிடக்கும்.அவளொரு ரேடியோ கூட வைத்திருந்தாள்.அதில் பாட்டு கேட்பது ரொம்பவும் பிடிக்கும் அவளுக்கு.என்னை அவள் மடியில் போட்டு தட்டிக் கூட பாட்டு கேட்டுக்கொண்டு தூங்க வைத்திருக்கிறாள்.ஒரு முறை அம்மா உன்னை கூட்டிட்டு வரச்சொல்லுச்சுனு அப்பாவை தேடி வந்தபோது அப்பா கூட அவள் மடியில் அசந்து தூங்கிக் கொண்டிருந்தார்.அதே ரேடியோவில் பாட்டு ஓடிக் கொண்டிருந்தது.
என்னை நிறைய முறை அழைத்து
மடியில் அமர வைத்து உச்சத்தலையில்
முத்தமிட்டு கறிசோறு ஊட்டியிருக்கிறாள்.நிறைய இரவில் அவள் வீட்டிலே தூங்கியிருக்கிறேன்.
அப்பாவும் அவளும் வெகுநேரம்
சிரித்து பேசிக்கொள்வார்கள்.
எனக்கொன்றும் புரியாமல் காலையில் வீடு திரும்புவேன்.
அப்பா மீதிருக்கும் கோவத்தில்
என்னை அடிப்பாள் அம்மா.
உன் அப்பன் அங்கே விடிய விடிய என்ன கூத்தடிக்கிறான்
அம்மா கேட்கையில் நான் உண்மையை
சொல்வேன்.
அப்பா அங்கே சந்தோஷமாக
இருக்கிறார் அம்மா.
பா.வெங்கடேசன்.