தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Monday, July 09, 2018

மெளனி :: மனக்கோலம் :::: - சி. சு. செல்லப்பா -4

மனக்கோலம் சி. சு. செல்லப்பா
http___tamildigitallibrary.in_admin_assets_periodicals_TVA_PRL_0000793_எழுத்து_1961_03-25.pdf
மெளனி வேடிக்கையாகவும் எழுத முடியும் என்பது ஒருபுறம் இருக்க, மெளனி கதாபாத்திரங்கள் நடமாட்ட உலகமே ஒரு வேடிக்கை உலகம் என்பதை இது வரை ஆராய்ந்த பன்னிரெண்டு கதைகளில் பெரும்பாலனதில் பார்த்தோம். அழியாச் சுடர் தொகுப்பில் மீந்துள்ள கதைகள் மூன்றும் இந்த விசித்திர, வேடிக்கை உலகப் பரப்பை இன்னும் விளக்கிக் காட்டுபவை. நினைவுச் சுழல், மனக் கோலம், நினைவுச் சுவடு ஆகிய மூன்றின் தலைப்பும் பொதுப் போக்காக, ஒரு சிந்தனை ஓட்ட நிலையை குறிப்பதானாலும் சிந்தனைப் போக்கின் தன்மையில், வீச்சில், சாயல் வேறுபாடு கொண்டவை. நான் ஏற்கெனவே குறிப்பிட்டது போல சுவட்டின் ஒரு வழிப்போக்கும் சுழலின் ஒரு வட்ட இயங்கலும் கோலத்தின் கணக்கற்ற நானாவித வரைதலும் வெவ்வேறு பாதையும் எல்லையும் கொண்டவை.

நினைவுச்சுழல் கதை இது தான். மாமன் மகன் அத்தை மகள் உறவுள்ள, சிறு வயதில் சேர்ந்து விளையாடின சேகரனும் கமலாவும்-சமீபமாக அதிகம் பார்த்திராதவர்கள் எதிர்பாராதவிதமாக சந்திக்கிறபோது கமலா அவன் குடிகாரனாயும் பிடில் வாசிப்பில் சாதகம் உள்ளவனாயும் இருப்பதைக்கண்டு, முன்னதுக்கு வெறுப்பும் பின்னதுக்கு திருப்தியும் கொண்டு தன் கல்லூரி விழாவில் தன் கச்சேரிக்கு பிடில் வாசிக்கும்படி கேட்கிறாள். தாமதமானாலும் சேகரன் சமயத்துக்கு வந்து விடுகிறான். அவன் வாசிப்பில் தனக்கு ஏதாவது அது சமாசாரம் சொல்லுகிறதா என்று நினைக்கத் தோன்றியது அவனுக்கு. இறந்த காலத்தின் எதிரொலி இடைவிடாது அசரீரியாகக் கூப்பிடுவதாக எண்ணினான். 'யாவராலும் தொடர முடியாத அங்கே போகிறேன்' என்று அவன் பிடில் சொல்லிக்கொண்டிருந்ததாக உணர்ந்தாள். கச்சேரி முடிந்து அவன் வந்தவாறே வெளியேறிவிட்டான். மனது நிதானம் இழந்த அவன் நிதானம் பெற மீண்டும் குடித்து விட்டு தன் அறையில் பிடில் வாசிக்கிறான். 'உலகிலே ஒளிக்கப்பட்டவனே போன்று இருத்தலை மிக வேண்டினான் .' மறு நாள் மாலை கமலா சேகரனை காணச் சென்றபோது அவன் போய்விட்டான். முதல் தடவை அவனைப் பார்த்ததும் 'ஏதோ காணாமற்போன வஸ்துவைத் தேடி எடுக்க முயற்சிக்கும் சிரமத்தை அனுபவித்த கமலா, 'அவனைப் பால்யமுதல் தான் அறிந்த ஒவ்வொன்றையும் கிளறிப்பார்த்த கமலா எதற்காக அவன் இப்படிப் போய்விட்டான் என்பது புரியாது திகைத்தவள் - 'அவன் கானம் தனக்கு ஏதாவது செய்தி கொண்டதா' என்று அறிய அவதிப்பட்டு, ''எங்கேயோ இருந்து, ஒளிந்ததைத் தேடித்தருவித்து அழைத்ததை அது மறைந்தும் சஞ்சலம் கொடுப்பதற்குக் காரணம் புரியாமல் தவித்து, 'சேகரன் எங்கு சென்றான் என்பது தெரியாததனாலா இவ்வளவு மனச் சஞ்சலம் அல்லது அவனிடம் ஏதாவது ரகசி யம் அவளால் பகரப்பட்டதாக நினைத்து அவன் இழப்பல் சஞ்சலமா' என்றெல்லாம் மனம் உழன்று, யோசிக்க முடியாமல், நினைவுச் சுழல் மாறி நினைவுச் சுழலில் சிக்கினவளாக நிலை அடிபட்டுப்போனவள் ஆகிறாள். தன் பெண்மையே. வீழ்ச்சி உற்றதாக அவளுக்கு ஒரு உணர்வு ஏற்படுகிறது.

இந்த கதையின் உள்ளடக்கம் ஒரு நிச்சயம் கொண்டிராதது போலவும் வழுக்கிப்போகிற மாதி ரியும் மேலுக்குத் தோன்றுகிறது. உண்மையில் மற்ற கதைகளைவிட இதில் தான், அவர்களிடையே உள்ள உறவு என்ன, என்ன உறவில் எத்தகைய மோதல் (கான்ஃப்ளிக்ட்) காட்டப்பட்டு, வளைவு தெரிவிக்கப்பட்டிருக்கிறது என்பதை பார்க்க கொஞ்சம் சிரமப்பட வேண்டி இருக்கிறது. இந்த கதையில் வருகிற துறவுகோல் வாக்கியம் இது. 'தன் மனதில் புரியாது புறம்பாக மறைந்து நின்ற ஒரு உணர்ச்சி எழுப்பப்பட்டதுதான் இவ்வகை மனக்கிளர்ச்சிக்கு ஆதாரம்போலும். என்ன எண்ணம், அறியாத வகையில் ரகசியமெனக்கருதிய எண்ணம், அவரோடு பகிர்ந்து கொண்டேன்? வெளியே தெளியத் தோன்ற முடியாதது உள்ளே இருந்ததா?' இந்த வாக்கியத்தைக் கொண்டு நாம் கதையை முழுக்கப் பார்க்கப் போனால் முழுக்கதை மிகத் தெளிவாகிவிடும். சிறு வயதில் சேர்ந்து விளையாடின அத்தங்காள் அம்மான் சேய் உறவுள்ள அவர்கள் சந்தர்ப்பத்தால் அதிகம் சந்திப்பது நின்று போயும் ஒருவரையொருவர் மனதில் போட்டுக்கொண்டவர்கள், நெஞ்சுக்குள் நசுக்கிவிடப்பட்ட (ரிப்பரஸ்டு) நினைப்புகள் இருவர் வாழ்விலும் மூடிக்கிடந்துவிட்டன, அவன் ' நீ எங்கே இருக்கிறாய் என்பது தெரிய வில்லை. உன்னைப்பார்க்க - ' என்கிற போதும், அவள் அவனை பால்யமுதல் தான் அறிந்தவிதம் ஒவ்வொன்றையும் கிளறிப்பார்க்கிற போதும், அவை ஞாபகங்களாக மேல் எழும்பி 'ஏன்'னிலும் 'அழியாச் சுடரிலும் போல தாக்கி பாதிக்கின்றன. ஆனால் அவைகளின் பாதிப்பு தோரணையிலிருந்து இது மாறுபட்டது. ஒருவர் மற்றவருக்காக அல்ல என்பது இருவருக்கும் நிச்சயமாகி விட்டது. அவர்கள் சந்திப்பே இருவரையும் திடுக்கிட'வைக்கிறது. அவர்கள் எதிர்பார்க்கவேயில்லை. ஆனால் யதேச்சையாக பார்த்துவிட்டபிறகு கமலா பின்தொடர்ந்து அவனை அறையில் சந்திக்கிறாள். மதுக் குப்பியை பார்த்து வீட்டு 'அதை கொட்டப் போகிறேன். நீ யாரென உனக்குத் தெரிகிறதா? மாமா இருந்தால் இப்படி இருப்பாயா?' என்கிற போது பழைய உறவை அதனால் உள்ள உரிமையை வலியுறுத்துபவளாகிவிடுகிறாள் - சேகரனும் 'இனி' இல்லை, இதுமட்டும்' என்று மன்றாடுபவன்போல் பேசும்போது அந்த உரிமையை வழங்குபவனாக ஆகிவிடுகிறான். குடிகாரனான அவனை வெறுக்கும் அவள் கலைஞனான அவனை விரும்புகிறாள். பக்கவாத்தியம் வாசிக்க அழைக்கிறாள். ஆனால் அவன் சரி என்று சொல்லியது அவளுக்கு பிடிக்கவில்லை. அதே சமயம் தான் எதற்காக அழைத்தோம் என்றும் அவளுக்கு யோசனை எழுந்தது. அந்த இடத்தைவிட்டுப் போகவே அவசரப்படுகிறான். ஆக அவர்கள் வைக்கப்பட்டுள்ள நிலை சிக்கலானதாக ஆகிவிடுகிறது.


ஆனால், அவர்கள் ஒருவரை ஒருவர் முன்பு காதலித்தார்களா, இல்லை இப்போதைய நிலையில் காதலிக்கிறார்களா? இது வெகு சூசனையாகத்தான் உணர்த்தப்பட்டிருக்கிறது. 'சிறு வயதில் இருவரும் சேர்ந்தே சகோதர சகோதரியாக விளையாடினார்களானாலும்' என்கிற வாக்கியத்தை நாம் பொருட்படுத்தினாலும் பொருட்படுத்தாவிட்டாலும் குழந்தைகளாக, சிறுவர்களாக அவர்களிடையே இருந்த அபிமானம் வளர்ந்து வந்திருப்பதும் சந்தர்ப்பத்தால் அது நிறைவேற்றலுக்கு இடம் இல்லாது போய்விட்டதும் தெரிகிறது. அந்தஸ்து வித்யாசத்தாலோ அல்லது வேறு எந்த வேறுபாடாலோ அவர்கள் ஒன்றுபட ஏது இல்லாமல் இருந்திருக்கக்கூடும். அது எது என்பதைப்பற்றி நமக்கு கவலை இல்லை, ஆனால் கச்சேரியில் அவர்கள் சேர்ந்து வாசித்த போது அவர்கள் இருவரும் ஒன்றாகிவிடுகிறார்கள். 'இரவின் இருள் வெளியில் பயந்த இரு குழந்தைகளின் மெளனமான பிணைப்புப்போல இருந்தது அந்த சேர்ந்த வாசிப்பு' என்கிறதில் அந்த ஒன்றிப்பை, அவர்கள் இருவரிடையேயும் இறுகிய பந்தத்தை, அவன் அவளுக்கு ஏதோ செய்தி தெரிவித்ததாகவும், அவனிடம் தன்னால் ஏதோ ரகசியம் கொடுக்கப்பட்டதாகவும் நினைக்கத் தோன்றுகிற ஒரு உறவை அவர்கள் அந்த கணங்களில் பெற்று, சாச்வதமானதாக ஆக்கிவிட்டார்கள் என்பது தெளிவாகிறது. அதற்குப்பின் அவன் எங்கு போனால் என்ன ? அவள் எந்த மற்றொரு சுழலில் தடு மாறினால் என்ன ? அந்த ஒரு சுழல் போதும் அவர்களுக்கு. அவன் மறைந்துவிட்டான். அவள் தன் 'பெண்மையின் வீழ்ச்சியை' நன்கு உணர்ந்து கொண்டாள். இந்த பெண்மையின் வீழ்ச்சி கமலாவுக்கு ஞானோதயமாக வருகிறது. குடிப்பழக்கத்துக்காக அவனை வெறுத்தாலும் கச்சேரிக்கு மறு நாள் அவனை காணப்போனாள் கமலா. அவனை தனக்குள்ளிருந்து அகற்றமுடியாதவளாக-அவனைக் காணாமல் மனம் சஞ்சலப்பட்டு 'என்ன எண்ணம், அறியாத வகையில் ரகசியமெனக் கருதிய எண்ணம், அவனோடு பகிர்ந்துகொண்டேன்' என்கிறபோது தன் பெண்மையின் வீழ்ச்சி அவளுக்கு படுகிறது. இந்த பெண்மையின் வீழ்ச்சியைக் கொண்டு முன் பார்க்கிற போது சேகரனைப்பற்றிய கமலாவின் நினைப்புப் போக்கு எப்படி எல்லாம் இருந்திருக்கக்கூடும் என்று அநுமானிக்க முடிகிறது. மேலாக, அவர்கள் உறவு சரித்திரமே நம் கண் முன் விரிகிறது. 'கொ ஞ்சநேரம்' ல் அவனுக்கும் ரோஸ்ஸுக்கும் உள்ள உறவைவிட மென்மையானது, நுண்மையானது, சிக்கலானது கமலா-சேகரன் உறவு. 'வெளியே தெரியத் தோன்றமுடியாதது உள்ளே இருந்ததா? இந்த புரியாத அமைதிக்கு காரணம்? என்று கமலா தன்னைக் கேட்டுக் கொள்கிறபடி, பிரக்ஞை நிலைக்கும்  அடியில் உள்ள ஒரு உணர்வு நிலையில் இருவரிடையேயும் இருந்து வந்திருக்கிற உறவு அது. 'சப்கான்ஷஸ்' என்கிற, தான் அறிய இயலாத ஒரு மங்கலான பிரக்ஞையாக, நம் கவனத்துக்கு வராத ஒரு நிலையில் இருந்து, ஏற்பட்ட ஒரு உணர்ச்சிக் கொதிப்பில், மேலெழும்பி வந்தது. அந்த நிலையை மெளனி வெற்றிகரமாக கையாண்டிருக்கிறார். கதையை படித்து முடித்ததும் ஒரு முழுமையை நமக்குள் உணரமுடிகிறது.

அடுத்த கதை 'மனக்கோலம்.' 'வாழ்க்கை லக்ஷ்யம் என்பது என்ன வென்றே புரியாத கேசவன், 'நிலைகொள்ளாது இச்சைகள் மன விரிவில் விரிந்து கொண்டே போனால் மதிப்பிற்கான துரத்துதலில் தானாகவா இச்சைகள் பூர்த்தியாகின்றன? பிடிக்க முடியாதெனத் தோன்றும் எண்ணத்தில் இந்த துரத்திப் பிடிக்கும் பயனிலா விளையாட்டு எவ்வளவு மதியீனமாகபபடுகிறது' என்று சொல்லிக்கொள்ளும் கேசவன், கெளரியின் கண்களை ஒருநாள் சந்தித்த வாய்ப்பில், அவளை 'அகலாத லக்ஷியமாக' அவள் வேறு ஒருவரது மனைவி என்பதையும் ஏற்க மறுத்து இச்சை விரிப்பு கொள்கிறான். அதன் வேகம் அவனை வெகு தொலைக்கும் உந்திவிட்ட நிலையில் ஒரு பயங்கர கனவு போன்ற பிரமை உணர்வு நிலையில் பதறி விழிப்புக்கொள்கிறான். அவன் மனது அதன் பின் காலைகாண ஆரம்பித்தது, தெளிகிறது. மெளனியின் மற்ற காதல் கதைகளுக்கு மாறாக 'இச்சைக்கு அர்த்தம் கொடுக்கப்பட்டுள்ள கதை. கு. ப.ரா, வைப்போல காதலுக்கு ஒரு புனித அர்த்தம் கொடுத்திராத புதுமைப்பித்தன் 'இயற்கையின் தேவை' என்ற நோக்கில் தன் கட்டுக்கதை ஆண்பெண் உறவு உலகத்தை நடத்தி இருப்பவர். மெளனி இந்த கதையில், 'கையால் ஆகாதவன் கணவன் ஆகிறான். பசிக்குப் பிச்சை கேட்க யாரிடமும் என்னேரமும் முடிகிறதா? தனக்கென்று ஒரு மனைவி. தன் பலவீனத்தை உணர்ந்ததில் தான் மனைவி என்கிற பாத்தியம் கொண்டாட இடமேற்படுகிறது ஆண்களுக்கு. பெண்ணோ எனில் தன் பலத்தை மறக்க, மறைக்கத்தான் மனைவியாகிறாள்' என்று கேசவனின் இச்சை விரிப்புக்கு ஆதாரமான வரிகள் மூலம் 'உள்ளுற உறைத்து தடித்ததொரு, உணர்ச்சி வேகம் அவனை வெகு தூரம் உந்தித் தள்ளிவிட்ட, 'அகத்தில் பிளவுபட்ட ஒரு நிலையை எடுத்துக் காட்டி இருக்கிறார். ஆனால் புதுமைப்பித்தனது 'இயற்கையின் தேவை' அடிப்படைக் கதைகளில்" உள்ள ஒரு வலுசத்து இந்த கதையில் ஏறவில்லை, அவனுடைய இச்சை விரிப்பு வெகு சாமான்யமாக எழுச்சி கொள்கிறது. அவனுடைய விழிப்பும் வெகு மந்தமாக விழுந்திருக்கிறது. கேசவன் சிந்தனைகளிலே காலத்தை கழித்தமாதிரி கதையும் சிந்தனைகளாகவே நிரம்பிக் காண்கிறதே தவிர உச்சநிலைக்கு உதவக் கூடிய (உச்ச நிலையே சப்பையாக வந்திருக்கிறபோது) வகையில் தீவிரம், பொருத்தம், தேவையளவு கொள்ளவில்லை. அர்த்த புஷ்டியான தலைப்புக்குத் தக்க கதையாக உருவாகாமல் திறமைக்குறி காட்டுகிறது, ஆனால் சாதனை காட்டாத ஒரு இளம் கையின் படைப்பாகவே தோன்றுகிறது.

அழியாச் சுடர் தொகுப்பில் பாக்கி உள்ள கதை நினைவுச்சுவடு. கடற்கரையில் எதிர்பாராத சந்திப்பில், தன் நண்பனுடன் இருந்த சேகரன் தனக்கு சற்று தள்ளி உட்கார்ந்திருந்த பெண்களில் ஒருத்தியை வீடு திரும்புகையில் தொடர்ந்து சென்று அவள் நுழைந்த வீட்டிலிருந்து சேகரா' என்றுவந்த அழைப்பின் பின் நண்பனுடன் நுழைந்து, தான் அங்கு கண்ட சுசீலா முன்பு தனக்கு உறவு இருந்த ஒரு தாசியாயும் தான் தொடர்ந்து வந்த பெண் காந்தா தன் மகளாயும் இருக்க காண்கிறான். காந்தாவை உச்சி மோந்துவிட்டு, அப்பா.... அம்மாவுக்காக இல்லாவிடினும் எனக்காக இருக்கமாட்டீர்களா?' என்று அவள் ஏங்கிக் கேட்கையிலேயே வாசலை நோ க்கிப் போய்க்கொண்டிருந்தான். இந்த கதையின் உள் ளடக்கம் மெளனியத்தன்மை வாய்ந்ததாக இருந்தா லும், 'பிரபஞ்சகானம்' 'அழியாச்சுடர்,' 'மாறுதல்,' 'மாபெருங்காவியம்' போல, சிந்தனைச் சுழற்சியும் சிக்கலும் காணப்படாத, கதையம்சத்தை குடைந்து பார்க்க சிரமப்படுத்தாத, சொல் முறையில் மனோ தத்துவ வெளியீட்டுக்கு காட்டப்பட்டிருக்கிறதை விட வர்த்தமான வெளியீட்டுக்கு அதிகம் அக்கறை செலுத்தப்பட்டு, இந்த கதை சொல்லலும் கலைக் குறை காணாமல் அளவான ரசப்பாங்குடன் வந்திருக் கிறது.

'அழியாச் சுடர்' தொகுப்பு கதைகள் பதினைந்தையும் நாம் பார்த்தாகிவிட்டது. முழுமொத்தமான மதிப்பீட்டை செய்யுமுன் இதில் சேராத சமீபத்திய 'குடை நிழல்' (1959 அக்டோபர்) 'பிரக்ஞை வெளி யில்' (1960 அக்) கதைகளையும் தனியாக பார்த்து விடலாம்.

அதற்கு முன் ஒரு தகவல். தேடின மூன்று மெளனி கதைகளில் ஒன்று எதிர்பாராமல் கிடைத்திருக்கிறது, 'சரஸ்வதி' ஆசிரியர் விஜயபாஸ்கரன் முயற்சியால், சமயத்துக்கு அவர் கதையை என்னிடம் தந்திருக்கிறார். அவருக்கு என் நன்றி. 'மாறாட்டம்' (1938) என்ற அந்த கதை மெளனி வேடிக்கையாக எழுதக்கூடும் என்பதற்கு மற்றொரு உதாரணம். அன்று, முப்பதுக்களில், தேசிய வேஷம் போட்டுக்கொள்ளும் ஒரு மனப்பாங்குள்ளவர்கள் இருந்ததை கிண்டல் செய்தது. வழக்கமாக சில்க் ஷர்ட்டும் விசிறி மடிப்பு அங்கவஸ்திரமும் அணிகிற; மேடையில் ஆசனங்களில் உட்கார அந்தஸ்துள்ள ஒருவர், அன்று கதர் ஜிப்பாவும் காந்தி குல்லாவுமாக மாறி விட, தற்செயலாக அவரது வழக்க உடை போல வேறு ஒருவர் அன்று போட்டுக்கொள்ள, அதனால் அவர்தான் இவர் என்று கருத இடம் ஏற்பட்டதைப் பற்றியது. லேசுக்கதை, மெளனி 'ஸ்பெஷல்' களில் ஒன்றல்ல.

- 'குடை நிழல்' கதையும் நினைவுச்சுவடு' போல சிக்கல் இல்லாத கதை. ஆனால் மனோதத்துவமும் கதை சொல்லலும் இழைந்துவிட்ட ஒரு வெளியீட்டுத்தன்மை கொண்டதாக இருக்கிறது. முந்தின கதைக்கும் இதற்கும் உள்ள ஒரு வித்யாசத்தைக் காட்டுவதற்காக இது சொல்லப்படுகிறதே தவிர ஏதோ ஒரு குறிப்பிடத்தக்க ஒரு தனி விசேஷ குணம் என்பதற்காக சொல்லப்படவில்லை. கதைப் படைப்பில் இந்த இரண்டும் இயல்பாக திறம்பட கையாளப்பட்டிருப்பது தான் முறை. கதை இது. மழையில் நனைந்து இருந்த அழகிய ஜோன்ஸை பஸ் ஸ்டாண்டில் சந்தித்த சுந்தரம்; ஏற்பட்ட அறிமுகத்தில், தன் குடையில், அவள் போகவேண்டிய இடத்துக்கு இட்டுச் செல்ல முன் வந்து, அவளது விரும்பியும் விரும்பாமலுமான அநுமதியுடன் வீட்டுக்குப் போகிறான். தான் 'யார் என்று சொல்லவேண்டிய அவசியம் இல்லாமலே அநேக ஆடவர்கள் அறிந்து கொண்டு இருக்க, அவனால் தெரிந்து கொள்ள இயலாதது மட்டுமின்றி, 'சொன்னாலும் நீங்கள் தெரிந்து அறிந்து கொள்ளமுடியுமோ.'என்று சந்தேகப்பட்டதுடன் 'முடிந்தாலும், உங்களுக்கு நன்மையானதா' என தான் சந்தேகப்பட்டதாக அவனிடமே கூறும் ஜோன்ஸ் அவனை ஒரு கணத்தில் நன்றாக அறிந்து கொண்டவளாகிறாள். இவ்வளவுக்குப்பிறகு அவனுக்கு கொஞ்சம் புரிகிறது. அவளிடம் அது தாபம் தோ ன்றுகிறது. அவனை புரிந்து கொண்ட அவள், 'உங்களைப் பெண்ணுடையில் பெண்ணாக்கி என் சினேகிதியாக என் பக்கத்திலேயே, ஏன்-என் உள்ளேயே வைத்துக்கொள்ள ஆசையாக இருப்பதாகக் கூறிய அவள், தன் வாடிக்கைக்காரர்களிலிருந்து விலக்கானவனாக இருந்த அவனது குடும்பத்தைப்பற்றி அவனிடமிருந்தே அறிந்து கொண்டிருந்த அவள், 'இப்போது நீங்கள் வேண்டா விருந்தினன் போல வந்திருக்கிறீர்கள். பிரிவு உபசாரம் தான் உங்களுக்கு நான் செய்கிறேன். உங்களைப் பிடிக்காது வெளியனுப்பத்தான் என் மனம் உங்களிடம் இவ்வளவு ஆசை கொள்கிறது' என்று 'அத்தகைய ஒருத்தியிலிருந்து வந்த 'விலக்கான' வார்த்தைக்க ளுடன் அனுப்பிவிடுகிறபோது, அநுதாபம் கொண்ட அவன் ஐந்து ரூபாய்களை வைத்துவிட்டுப் போய்விடுகிறான். ஜோன்ஸ் சிரித்துக் கொள்கிறாள். ஆனால் மறுநாள் அவள் எதிர்பார்த்து இராதநிலையில் அவன் திரும்பி வரவும் அவனது அநுதாபத்தை விரும்பாத அவள், 'உங்களால் ஒன்று செய்ய முடியாததினால் தான் உங்களிடம் நான் பிரியம் கொண்டிருக்கிறேன்' என்று சூசனையாக தனக்கும் அவனுக்கும் இடையே இருக்கிற, இருக்கவேண்டிய நிலையை உணர்த்துகிறாள். மூன்றாம் தடவை சுந்தரம், ஜோன்ஸ் எதிர் பாராது வந்த போது, ஆச்சர்யம் அடைந்த அவள், 'என்னை, உன்னைப்பற்றிய வரையில் என்னை, நீ இன்னும் அறிந்து கொள்ளவில்லை என்று தோன்றுகிறது. உன்னையும் நான் சரியாகத் தெரிந்து கொள்ள வில்லை என்று நினைக்கிறேன். இல்லாவிட்டால், நீ எனக்கு இப்படி வருத்தம் கொடுக்கமாட்டாய்,' என்று கூறி தடை விதித்தவள், நான்காம் தடவை அவன் வருகையை எதிர்பார்த்து அவன் பாதையிலிருந்தே விலகிவிடுகிறாள். நான்காம் தடவை போன சுந்தரம் ஜோன்ஸ் இடத்தில் வேறொருவளைக் காண 'ஒருக்கால் இவ்வூருக்கு வராமல் இருந்தாலும் இருக்கலாம்' என்று ஜோன்ஸைப் பற்றி அவள் தகவல் சொன்னதுடன், அவள் கொடுக்கச்சொன்னதாக ஐந்து ரூபாயை கொடுக்கிறாள். 'நீயே வைத்துக்கொள்' என்ற சுந்தரம் வீழ்ந்தவனாக திரும்பு கிறான். கதை உள்ளடக்கம் ஏதோ தனிப்பட்டது, என்று சொல்லத்தக்காவிட்டாலும் சொல்முறையில் ஒரு நேர்த்தி இருக்கிறது. மெளனியின் இந்த கதை நீண்ட இடைக்காலத்துக்குப் பின் வெளிவந்தது. மெளனியின் நடையிலே இயல்பாக உள்ள இறுக்கம் இதில் சற்று தளர்ந்தும்: சூசனை உணர்த்தல் (ஸஜஸ்டிவிட்டி) மென்மை குறைந்தும் இருப்பதும் தெரிகிறது. பல வாக்கியங்கள் அவ்வளவு அப்பட்டமாக (ஆப்வியஸ்) இருக்கின்றன. அதே சமயம் மனோதத்துவ தாத்பரியம் சந்தேகத்துக்கு இடமின்றியும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஒரு கதையைக் கொண்டு மெளனியின் இன்றைய எழுத்துப் போக்கில் மாறுதல் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறதாக திடீர் முடிவுக்கு வந்து விடுவதற்கில்லை.

ஏனெனில், அவரது இருபதாவது கதையான 'பிரக்ஞைவெளியில்' (அக்டோபர் 60) கதையில் வேதாளம் திரும்ப முருங்க மரம் ஏறிச்கொண்டதாக மெளனி உள்ளடக்கத்திலும், சரி சொல் வழியிலும் சரி தன் பழைய நிலையை எடுத்துக்கொண்டு விட்டது தெரிகிறது. முதலில் கதையை பார்த்து விடு வோம். கடற்கரையில் நண்பனுடன் நடந்து சென்ற சேகரன் சற்று தள்ளி உட்கார்ந்து இருந்த மூன்று பெண்களில் ஒருத்தி மீது விழுந்த தன் கவனத்தில், நண்பனிடம், சமீப காலமாக சுசீலா (கிராமத்தில் இருக்கும் அவன் மனைவி)வைப் பார்க்கும் தோற்றம், பார்த்தால் தோன்றும் நினைப்புகள் எழுவதாகச் சொல்கிறான். மறுநாள் சேகரனுக்கும் அந்த பெண்ணுக்கும் ஏற்பட்ட யதேச்சை சந்திப்பில் அறிமுக மாகிறார்கள். மாலையில் கடற்கரையில் அவளையும் மற்றவர்களையும் சந்தித்து அறிமுகம் ஏற்பட்டு அந்த கோஷ்டியில் ஒருவராக ஆகிறான். ஒருவர் பெயரை மற்றவர் கேட்காமலேயே அவர்கள் தினம் பழகி வருகையில், ஒரு நாள் தன் மனைவி பெயரும் அந்த பெண் பெயரும் ஒன்றாக இருப்பதை அறிந்த வியப்பில் 'முன்பு தான் ஒரு உருவை வைத்துக் கொண்டு இருவராகக் கண்டு ஆட்டினேன் போலும். இப்போதோவெனில் ஒரு பெயரை வைத்து இருவராக ஆட்டுகிறேன் போலும்' என்று 'சுவாதீனமாக' பேசி அந்த விநோதத்தை மனதில் எண்ணிப் பார்க்கிறான். நாட்கள் ஆக, மறுநாள் ஊருக்குப் போவதாக அந்த பெண்களிடம் சொல்லி, தினமும் தள்ளிக் கொடுத்துக்கொண்டிருக்கிறான். ஒருநாள் அவர்களை சந்திக்கும் பதைப்பில் சென்றபோது அவன் 'கல்சட்டிக்கார' பிரயாணத்தை மற்ற இரு பெண்களும் சுட்டி பரிகசிக்கையில், சுசீலா மட்டும் அவனைப்பற்றி ஆழ்ந்து சிந்திக்கிறாள். காத்திருக்கும் மனைவியைப் பார்க்க அவன் ஊர் திரும்பாது இருப்பது தவறாகப்பட, அதற்கு காரணம் தான் தானா தன்னிடம் பழகுவதில் அவன் ஒருவகை இன்பம் கண்ட பிரமையலா, அப்படியானால் ஒரு கணவனை மனைவியிடமிருந்து பிரிப்பது குரூரம் அல்லவா, தான் தானறியாமல் அதைச் செய்கிறாளா, என்று தெளிவு படாத நிலையில் உழல்கிறாள். 'சேகரனை தான் ஒரு பெண்ணாக மதித்துத் தான் பழகுவது போன்ற ஒரு உணர்ச்சி தனக்கு இருந்து வருவது போலவும் ஒரு வேளை தன் பெயர் கொண்ட மனைவி அவனுக்கு இருப்பதால் தான் அவளை இவனிடம் பார்ப்பது போலவும் உணர்வு நிலையை தன் சினேகிதர்களிடம் வெளிக்காட்டிக் கொண்டவள், அவளை ஊரடையாது தடுப்பதைத்தான் தான் செய்வதாகவும் அவ்வித எண்ணம் தனக்கும் ஒரு இடமளிப்பதாகவும் தனக்கு அதில் திருப்தி ஏற்படுவது போலவும் தோன்றுவதாகவும் உணர்கிறாள். கடற்கரையில் பேசிவிட்டு அவர்கள் திரும்புகையில், சேகரனை பிரியும் இடத்தில், இரண்டு சுசீலாக்களுக்கு நடுவே நிதானிக்க முடியாமல் முன் பின் போவது தெரியாமல் தவித்தது போலவே சேகரன் நடுத்தெருவில் வந்த மோட்டாரை சமாளிக்க முடியாமல் காரடிபட்டு 'சாவு' பிடித்துக்கொள்ள கீழே விழுகிறான், தன் மனதிற்குள் இதை நிச்சயம் செய்து கொண்ட சுசீலா'ஒரு கணத்தில் தான் நின்ற இடம் மறுபடி சூன்யமானதென' உணர்வு பெற்று 'கணவனுக்கும் மனைவிக்கும் குறுக்காகத் தடுத்து நின்றதென்பதில் தான் பெற்றி ருந்ததாக கருதும் இடத்தை மரணம் தட்டிக் கொண்டு போய்விட, இனி எவ்விடம் தன்னிடமாகக் - காண்பது என்ற மனத்தடுமாற்றத்தில் அறை திரும்புகிறாள். சுசீலாவின் நினைப்போட்டத்தில், 'பெயரென தன்னைக் களைந்து கண்டதில் சேகரன் மனைவி சுசீலா என வா மனதில் உருக்கொண்டாள்' என்று கேட்டுக் கொள்ள ஆரம்பித்து, தானாக வேண்டி எதிலும் தன்னைக் காணத் தேடுவதுபோல, கன்னியான தான் சேகரன் மனைவி சுசீலாவை மனதில் கண்டதில், அவளாகத் தன்னையும் கண்டுகொண்டுவிட்டாள் போலும்' என்று, கணவன் வருகைக்காக எதிர்பார்த்து காதல் கொண்ட மனைவியாக தன் மாடி ஜன்னலடியில் நிற்பதான ஒரு உணர்வு எழ 'அப்படியாயின் ஒருவகையில் தான், 'காதல்' கண்ட பெண், கலியாணமாகாத கைம்பெண் தானே' என்ற ஒரு உலுக்கும் நினைப்பு உச்சத்தை எட்டுகிறாள்.

இந்த கதைச் சுருக்கம் போதாது இந்த கதை யின் தனிச்சிறப்பை அறிய, படிக்கிறபோது உணர்வதிலே தான் இந்த கதை உருவாகிறது, முழுமை பெறுகிறது. சுசீலா வருகிற அதிர்ச்சி நினைவு முடிவுக்கு, மெளனி, கதை ஆரம்பத்திலிருந்து செய்கிற வகைநேர்த்தியானது. நடுவில் தொய்வோ,விலகலோ பராக்கோ இல்லாமலும், ஆரம்பத்தில் இப்படி முடியக்கூடும் என்பதற்கும் எதிர் பார்ப்பு கொடுக்காமல், முடிவில் இப்படி நடக்காது என்பதற்கும் வழி இல்லாமல், உணர்ச்சிப் பெருக்கிலும் மனவோட்டத்தின் தர்க்க நியாயப் போக்கின் வழியே நியாயம் வீழ அது எத்தகைய பிடிக்காத விஷயமானாலும் சரி, அது வேறு விஷயம் - செய்திருக்கிறார். விவரம் காட்ட முடியாத இனம் அறிய முடியாத அடிமனதின் ஒரு ஓட்ட நிலையில், பிரமை என்று வெளித்தெரிய நாம் அபிப்பிராயம் சொல்லக்கூடிய நிலையில் உள்ள ஒரு மனப்போக்கை வெகு நுண்மையாக கையாண்டிருக் கிறார் மெளனி,

ஆக, இந்த நான்கு கட்டுரைகளிலும் மெளனிக்கு ஒரு வாசக வழிகாட்டியாகத் (ரீடர்ஸ் கைட்) தான் கதைகளை தனித்தனியேயும் தேவைப்பட்ட சந்தர்ப்பங்களில் ஒப்பிட்டும் பார்த்திருக்கிறேன் மெளனி விஷயத்தில் மற்றவர்களைவிட அது தேவை என்பதால் . அடுத்த பகுதியில் பொதுக்குணங்களை ஆராய உத்தேசித்திருக்கிறேன்,

No comments:

Post a Comment