தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Wednesday, October 02, 2019

பாரசெல்சஸின் ரோஜா, நீலப்புலிகள்- ஜோர்ஜ் லூயி போர்ஹே,:கடற்கரையில் கிடக்கும் பெண் : சுரேந்திர பிரகாஷ் : பவளக்கொடி

 பாரசெல்சஸின் ரோஜா 
ஜோர்ஜ் லூயி போர்ஹே 
இரு அறைகள் அடங்கிய நிலவறையிலிருக்கும் பரிசோதனைக் கூடத்துக்கு இறங்கி வந்த வேளை ரூபவரையற்ற - எக்கடவுளானாலும் - தனது கடவுளிடம் தனக்கொரு சீடனை அனுப்புமாறு பிரார்த்தித்தார் பாரசெல்சஸ். 
இரவு கருக்கொண்டு வந்தது. கணப்படுப்பு எரியோடை வடிகால்களில் கனலும் ஜ்வாலைகளின் ஒழுங்கற்ற நிழற்பிரதிமைகள் ஊடாடும் அறை. எழுந்து எஃகு விளக்கை கண்கொள்வது பெரிதும் அலைகழிவானது. நாளின் கதியிலுற்ற களைப்பில் இருப்பற்ற உணர்வு ஆழ்ந்தூர பிரார்த்தனை மறதி கொண்டது. அவரது வீட்டு வெளிக்கதவில் தட்டப்படும் ஓசை வந்தபோது கழுத்து வளைவான வடிகலங்கள் உலைகளத்தில் செறிந்த தூசிக்கழிவை இரவு எடுத்தகற்றியிருந்தது. அரைத்தூக்க மயக்கத்தோடு எழுந்து சிறிதான சுருள்வட்டப் படிகட்டுகளில் ஏறி ரெட்டைக்கதவின் ஒருபுறம் திறந்தார் பாரசெல்சஸ். ஓர் அந்நியன் உள்ளே அடியெடுத்து வந்தான். அவன் மிகவும் சோர்வுற்றிருந்தான். பெஞ்ச் ஒன்றில் அவன் அமர சைகை செய்தார் பாரசெல்சஸ். அதிலமர்ந்து அவன் பொறுத்திருதந்தான். கொஞ்ச நேரம் இருவர் பேச்சுக்கும் இடமற்ற வேளை. 
நிபுணம் கொண்ட ஆசான்தான் முதலில் பேசினார் : 
பாடல் 
"மேற்கிலிருந்தும் கிழக்கிலிருந்தும் வருவோரின் முகவதன சாயல்களை ஞாபகங் கூர்கிறேன்" என்றவர், ஐயுறவான அறிமுகமின்மையை வெளிகாட்டாத நாகரிகத்துடன் "ஆனால் உன் முகச்சாயலை நினைவில் திருப்ப முடியவில்லை , நீ யார்? என்னிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறாய்?" என்றார். 
பதிலுக்கு அவன், "எனது பெயர் அவ்வளவு முக்யமில்லை. உங்கள் வீட்டுக்கு மூன்று பகல்கள் மூன்று இரவகள் பயணத்தோடு வந்திருக்கிறேன். உங்கள் சீடனாகுவதே என் விருப்பம். எனது எல்லா உடமைகளையும் எடுத்து வந்திருக்கிறேன்." - 
மேஜையில் அவனது சிறு பையனின் கர்ப்பந்திறந்து அதிலிருந்த பொருட்களை வெளிபிறப்பித்து காலி செய்தான். நிறைய நாயணங்கள் இருந்தன. எல்லாம் தங்க நாணயங்கள். இதை அவன் தன் வலதுக்கையால் செய்து முடித்தான். பாரசெல்சஸ் விளக்கில் சுடரேற்ற முகந்திரும்பினார். மீண்டும் திரும்பியபோது, அந்த மனிதன் தன் இடதுக்கையில் ஒரு ரோஜா மலரை ஏந்தியிருப்பதைப் பார்த்தார். அவருக்கு சங்கடமான அலைகழிவைத் தந்தது 
அந்த ரோஜா. 
பின்னால் சாய்ந்து, கைக்கூடாய் விரல்நுனிகளை ஒன்றுசேர்த்தபடி அவர் சொன்னார் : 
பாரசெல்சஸின் ரோஜா - 57 
"கல்லின் கருச்சத்தை வடித்திறக்கி எல்லா கூறுகளிலும் அதை தங்கமாக ரூபமாற்றும் ரஸவாதத்தில் கைதேர்ந்த கலைஞனாய் என்னைக் கருதுகிறாய். இதற்குச் சான்றாக தங்கத்தையும் என்னிடம் 
"ல் நான் தேடும் தங்கம் இதுவல்ல. உன்னைக் கவரும் தங்கம் இதுவென்றால் ஒருபோதும் நீ என் சீடனாக முடியாது." 
D என்னைக் கவருவதல்ல" . அந்த மனிதன் பதிலுற்றான் : "உங்கள் கலைப்பணியில் என்னை 
கொள்ள எழுந்த ஆசையின் குறியீடு மாத்ரமே இந்த தங்க நாணயங்கள். அந்தக் கலையை எனக்கு போதிக்கவே உங்களைக் கோருகிறேன். அந்தக் கல்லை நோக்கி அழைத்துச் செல்லும் பாதை நடை பயிலவே நான் விரும்புகிறேன்." 
"கல்லே பாதையாக இருக்கிறது. துவக்கத்தின் பயணப்புள்ளி அந்தக் கல்தான். இந்த வார்த்தைகள் உன் ஞையேறவில்லை என்றால், கிரஹித்துணரும் பயணத்தை இன்னும் நீ துவங்கவில்லை. இப்பயணத்தில் உன் ஒவ்வொரு தடப்பதிவும் உன் தேடலான இலக்கை நோக்கியதாகும்." - பாரசெல்சஸ் மெல்ல பேசினார். 
அந்த மனிதன் அவரை அவநம்பகத்தோடு பார்த்தான். 
"ஆனாலி" - அவன் சொன்னான் .... அவனது குரல் குலைந்திருந்தது : "அப்படியானால், இலக்கு என்று எதுவுமில்லைதானே?" 
பாரசெல்சஸ் பலமாகச் சிரித்தார். 
--- "எண் அளவில் புத்தி பலவீனர்களைவிட அனேகமாய் இருக்கும் சகரஸவாதிகள் கூட அப்படியொரு இலக்கு இல்லையென்றுதான் கூறுகிறார்கள். என்னை ஏமாற்றுச் சூதன் என்கிறார்கள். அவர்கள் தவறாய் கிரஹதித்து அபார்த்தம் செய்து கொள்வோர் எனவும், மாயத்தோற்றங்களுக்கு இரையாகி நான் மருட்சியுற்றாலும் அப்படியொரு இலக்கு சாத்தியம்தான் எனவும் நான் நம்புகிறேன். நானறிவேன், பாதை என ஒன்று இருக்கிறது என்று. 

அங்கே மெளனம் நிலவியது. மெளனம் சலனமுற அந்த மனிதன் பேசினான் . 
* "பல வருஷ தூரம் நாம் நடந்து செல்ல நேரிடினும் உங்கள் உடனாக நடைகொள்ள நான் சித்தமாயுள்ளேன்., பாலைவனத்தைக் கடக்க எனக்கு இசைவளியுங்கள். தம்மீதாக கால்பாவ நட்சத்திரங்கள் என்னைத் தடுத்தாலும் வாக்குத்தத்தமளிக்கப் பெற்ற நிலத்தின் க்ஷணநேர தரிசனத்தையாவது தொலைவிலிருந்தேனும் காணப்பெற அனுமதியுங்கள். நான் கேட்பதெல்லாம் நாம் பயணம் துவங்கும் முன்னதாக நம்பத்தக்க நிதர்சன சாட்சியத்தை மெய்ப்பித்துக் காட்டுங்கள் என்பதுதான்". A 
பாரசெல்சஸ் அமைதி குலைவுற்று கேட்டார் - "எப்போது?" தீர்வாய் அறுதியிடும் நயமற்ற திடீர்க் குரலில் "இப்போதே" என்றான் சீடன். :) 
சம்பாஷணையை அவர்கள் லத்தீன் மொழியில் தொடங்கியிருந்தார்கள். இப்போது ஜெர்மன் மொழியில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். 
. . 
அந்த இளைஞன் ரோஜா மலரை வெற்றுவெளியில் காற்றாட உயர்த்தி ஏந்தியிருந்தான். 
" "ரோஜாவை தீயில் பொசுக்கி சாம்பலாக்கியப் பின்னர் மீண்டும் அது புனருருப் பெற்றெழச் செய்யும் மாயஜால கலைவித்தையில் கீர்த்திமிக்கவர் நீங்கள். அந்த அற்புத அதிசயத்தை கண்கூடாய் நான் காணச் செய்யுங்கள். அதைத்தான் உங்களிடம் கோருகிறேன். அதற்கீடாக என் வாழ்வின் முழுஆயுளையும் அர்ப்பணிப்பேன்" என்றான் அவன். 
"எதையும் எளிதில் நம்பி ஏமாறும் குணம் உனக்கு" என்ற ஆசான், "இத்தகைய சஞ்சலமான ஏமாளித்தனம் எனக்கு வேண்டியிரவில்லை. நான் வேண்டுவது ஸ்திரமான நம்பிக்கைதான்" என்றார் பாரசெல்சஸ்.. ' ' 
அந்த மனிதனோ விடாது வற்புறுத்தி முன்னும் மூர்க்கப் பிடிவாதத்திலிருந்தான். 
"என் சொந்த விழிகளால் ரோஜாவின் நிர்மூலத்தையும் புனருத்தானத்தையும் தரிசிக்க விழைவதே சஞ்சல் ஏமாளித்தனம் எனக்கில்லை என்பதைச் சாற்றும்" என்றான் அவன். 
பவளக்கொடி 0 58 
"எளிதில் நம்பும் ஏமாளியே நீ" என்று மறுபடியும் வலியுறுத்தி, "ரோஜாவை என்னால் அழித்தொழிக்க முடியுமென்றா சொல்கிறாய்" என வினவினார் ஆசான். ஃ 
- "எவ்வொருவனும் ரோஜாவை அழித்தொழிக்கும் வல்லமை பெற்றிருக்கிறான்" என்றான் சீடன், 
"தவறான கற்பிதத்திலிருக்கிறாய்" - பதிற்பகர்ந்தார் ஆசான். "எந்தவொன்றும் இல்லாத ஒன்றாக மாறநேரும் என மெய்யாகவே நம்புகிறாயா? ஒரு தனியான ஒற்றை மலரையோ ஒற்றை புல்லிதழையோ : 
அழித்தொழிக்கும் வல்லமையோடு ஸ்வர்க்கத்தில் முதல் மனிதன் ஆதாம் திகழ்ந்தான் என நம்புகிறாயா?", ஓகே 
2" . "நாம் ஸ்வர்க்கத்தில் இல்லை" என அடமாய் மறுத்து பதிலுறுத்தான் அந்த இளைஞன் : "இங்கிருப்பது நிலவிற்கு கீழான பூவுலகம், இங்கே எல்லா வஸ்துகளும் அநித்தியமானவை." 
பாரசெல்சஸ் வெறுத்தெழுந்து அமர்ந்தார். 
"ஸ்வர்க்கத்தில் இல்லை என்றால் வேறு எங்குதான் நாமிருக்கிறோம்" - அவர் வினவினார் : "கடவுளால் சிருஷ்டிக்க முடிகிற வாஸஸ்தலம் ஸ்வர்க்கமாக இருக்கவியலாது என்று நம்புகிறாயா? நாம் ஸ்வர்க்கத்தில் வாழ்வதை வாஸ்தவ அனுபவமாய் உணராததை விடவும் வேறெதும் வீழ்ச்சி இருப்பதாக நம்புகிறாயா?" 
இசைந்தேற்க மறுத்து "ரோஜாவை எரித்தழிக்க முடியும்" என்றான் சீடன். 
- "அதோ, கணப்படுப்பில் இப்போதும் கொஞ்சம் நெருப்பு கனல்கிறது. அந்த நீறுபூத்த தணலில் இவ்வொற்றை, ரோஜாவை நீ எறிந்தால், அது தழலீர்த்து வாடிக் கருகி சாம்பலாகி, அச்சாம்பலே மலரின் நிஜமென்றும் நீ நம்புவாய். உனக்குச் சொல்கிறேன், ரோஜா அனந்தமானது ... சாஸ்வதமானது... முடிவற்றது. அதன் வெளித்தோற்றங்கள் மாத்ரமே உருமாற நேரும். என்னிலிருந்து பிறக்கும் ஒரு சொல்லில் அது புத்துயிராகி மீண்டும் அதை நீ காண்பாய்." 
திக்பிரம்மாகி "ஒரு சொல்லா?" எனக் கலவரப்பட்டான் சீடன்: "உலைக்களம் குளிர்ந்துள்ளது. அதன் " வடிகலங்கள் தூசடைந்துள்ளது. இதிலிருந்து புத்துயிராய் எதை நீங்கள் திரும்பக் கொணரப் போகிறீர்கள்?" 
பாரசெல்சஸ் கண்களில் துயரம் மிதந்தூர அவனைப் பார்த்தார். 
"ஆம்" என சம்மதமாய் தலையசைத்து, "குளிர்ந்த உலைக்களம், தூசடைந்த வடிகலங்கள். ஆனால் எனது நெடும்பயணத்தின் ஆதாரசக்தியான இந்தக் காலின் தடம் பற்றி நான் ஏனைய சாதனங்களைப் பிரயோகிக்கிறேன்" என்றார் பாரசெல்சஸ். 
"அவை என்ன சாதனங்கள் என கேட்காமலிருக்க நான் துணிவுற்றுள்ளேன்" என்று அந்த மனிதன் விநயமாக அல்லது சூழ்ச்சியாகத் தெரிவித்தான். 
34 "கடவுள் ஆகாயத்தையும் பூதலத்தையும் படைக்கப் பிரயோகித்த சாதனம் பற்றியே நான் பேசுகிறேன். ஆனால் நாம் வாழும் இக்கட்புலனாகா ஸ்வர் கத்தை தீவினையின் முதல் பாவம் நம் பார்வையினின்று முடி மறைத்திருக்கிறது. புத்துயிர்ப்பிக்கும் அந்தச் சொல்லை, காப்பலாவின் விஞ்ஞானம் எங்களுக்குப் போதித்த அந்தச் சொல்லைப் பற்றியே நான் பேசுகிறேன்." 
" உணர்ச்சி குளிர்ந்த குரலில் சீடன் சொன்னான்: "பெரிதும் தயைகூர்வீர்களானால், ரோஜாவின் மறைவையும் மீள்வையும் எனக்கு ருகப்படுத்திக் காட்டுங்கள். நீங்கள் இதை பழங்கால வடிகலம் அல்லது சொல் இவ்விரண்டில் எந்த ரீதியில் நிகழ்விக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து அது எனக்கு அற்பமல்ல, பிரதானம்." 
பாரசெல்சஸ் ஒரு கணம் உத்தேசித்து பின் பேசினார் : 
"நீ கோருவதை நான் ஈடேற்றினால் உன் மீது ஏவிய கண்கட்டுவித்தை மூலமே அத்தோற்றம் உருவானதென்று நீ சொல்வாய். அற்புதத்தின் நேர்வு நீ தேடும் நம்பகத்தை உன்னிடம் கூட்டி வராது. எனவே அந்த ரோஜாவை ஒதுக்கி ஒரு ஓரமாய் வை." 
இப்போதும் சந்தேகத்தோடு அந்த மனிதன் அவரைப் பார்த்தான். இதனால் பாரசெல்சஸ் தனது குரலை ஓங்கி உயர்த்தினார். " 
"அப்படியிராவிடில், ஒரு ஆசானின் வீட்டுக்குள் நுழைந்து அவரின் அற்புதத்தை வேண்ட நீ யார்? அத்தகைய பரிசுக்கு ஏற்றவனாயிருக்க நீ எதைச் செய்து முடித்தாய்?" 
அந்த மனிதன் நடுங்கி பதற்றத்தோடு பதிலளித்தான் ; 
* "நான் ஒன்றும் செய்து முடிக்கவில்லைதான். பற்பல வருஷங்கள் கற்பதற்காக உங்கள் நிழலாயிருப்பேன் என்பதன் பேரில் கோருகிறேன் . ரோஜாவின் சாம்பலையும் பின் அதன் புனருருவையும் காண அனமதியுங்கள். வேறொன்றையும் நான் வேண்டவில்லை. என் கண்களின் சாட்சியத்தை நம்புவன் நான்." - - - - - 
பாரசெல்சஸ் மேஜையில் கிடக்க விட்டுச் சென்ற பூச்சரேந்தரித்த அந்தச் செந்நிற ரோஜாவை அவன தலமரபை பற்றியெடுத்து கணப்படுப்பின் தழல் ஜ்வாலைகளுக்குள் வீசியெறிந்தான். ரோஜா நிறம் படிப்படியாக மங்கி இல்லாமற் மறைந்துப் போனது. எஞ்சியதெல்லாம் ஒரு சிட்டிகையளவு சாம்பல்தான். அவன் முடிவற்ற ஒரு க்ஷணத்தில் ஆசாதனிடம் பிறக்கும் சொல்லையாம் அற்புதத்தின் நேர்வையும் எதிர்நோக்கி காத்திருந்தான் 
பாரசெல்சஸ் எச்சிறு அசைவின்றி அமர்ந்திருந்தார். ஆச்சரியத்தரும் முன்னில்லா சாமானியத்தோடு அவர் சொன்னார் : 
"பாசெலில் இருக்கும் எல்லா மருத்துவர்களும் மருந்தாக்க கலைஞர்களான ஒளஷதர்களும் நான் வஞ்சனை மோசடி செய்யும் போலி ரஸவாதியென்று கூறுகிறார்கள். ஒருவேளை அவர்கள் கூற்றில் நிஜமிருக்கலாம். அங்கே இருக்கும் சாம்பல்தான் அந்த ரோஜா. தன் ஸ்தூலமின்மையின் உருவேந்திய ரோஜா." 
- அந்த மனிதன் வெட்கிக் குறுகிப் போனான். அவன்வரையிலும் பாரசெல்சஸ் ஒரு போலி அறிஞர் அல்லது புனைவைக் கனவும் வெறுங்கற்பனையாளர், கீர்த்திமிக்க அவரது ரஸவாத மாயக்கலை அசத்தியமான போலியானதென குற்றபாவத்தோடு தானாகவே ஏற்கும் முனைப்போடு அவரது வீட்டுக்குள் புகுந்து இடையில் குறுக்கிட்டவன் அவன். 
ஆசான் முன் முழந்தாழிட்டு அவன் சொன்னான் : 
"நான் செய்தது மன்னிக்கத்தக்கதல்ல. கடவுளுக்கு வேண்டுவதெல்லாம் விசுவாச நம்பிக்கையே. அந்த நம்பிக்கை இல்லாமலிருப்பவன் நான். ஆதலால் அந்தச் சாம்பலை தொடர்ந்து நான் காணவிடுங்கள். எனக்கு வல்லமை வாய்ந்தவுடன் திரும்பவும் நான் வருவேன். உங்கள் சீடனாகுவேன். பாதையின் முடிவில் நான் அந்த ரோஜாவைத் தரிசிப்பேன்." 
களங்கமற்ற உணர்ச்சி பெருஞ்சலனமுற அவன் பேசினான். ஆனால் இம்மனோசலனம் வயது முதிர்ந்த ஆசானிடம், மதிப்பார்ந்த ... நிந்தனைக்குரிய ... கீர்த்திமிக்க ... ஆகையால் போலியான ஆசானிடம் அவன் பரிதாபமுற்று எழுந்ததே. புனிதத்தைக் குலைக்கும் தெய்வதுரோக கரங்கொண்டு முகமூடிக்கு பின்னாலிருப்பதை எதுவுமல்ல எனக் கண்டுபிடித்து வெளியாக்க அவன், ஜோகன்னெஸ் கிரிபெக், யார்? 
வறியோருக்கு இடும் பிச்சையாக தங்க நாணயங்களை மேஜைனயிலேயே கிடக்க விட்ட அவன் பிறகு மீண்டும் அவற்றை பொறுக்கியெடுத்துக் கொண்டு வெளியேறினான். எப்போதும் அவன் வருகைக்கு தன் வீடு திறந்திருக்கமெனக் கூறி படிகட்டுவரை அவனுடன் போய் வழியனுப்பி வைத்தார் பாரசெல்சஸ். தாம் பரஸ்பரம் சந்திக்கப் போவதில்லை என்பதை இருவருமே அறிவர். 
பின்னர் பாரசெல்சஸ் தன்னந்தனியாக இருந்தார். விளக்கை அணைத்து தன் சோர்வுற்ற நாற்காலிக்குத் திரும்புமுன், மலரின் நொய்ந்த சாம்பலை முஷ்டியால் பிரயத்தனப்பட்டு ஒரு கையில் எடுத்து இன்னொரு உள்ளங்கை குழிவில் கொட்டினார். பிறகு ஓர் ஒற்றைச்சொல்லை அவர் ரகஸியமாய் முணுமுணுத்தார். ரோஜா மீண்டும் பூத்தெழுந்தது. 
தமிழில் : சாந்தம் காக்க 
****************************************************
< நீலப்புலிகள் - 
- ஜோர்ஜ் லூயி போர்ஹே , - 
ப்ளேக்கின் ஒரு பிரபலமான கவிதை, புலியை ஒரு ஒளியாக பிரகாசமாக எரியும் தீயாகவும் தீமையின் முதலும் முடிவுமற்ற மூதாதையுருவாகவும் சித்தரிக்கிறது. பயங்கரமான நளினத்தின் குறியீடாகப் புலியை வார்த்தெடுக்கும் செஸ்டர்டனின் பொதுக்கருத்தை நான் விரும்புகிறேன். இவற்றைத் தவிர புலியை, மனித குலத்தின் கற்பனைகளில் நூற்றாண்டுகளாக வாழ்ந்துவிட்ட அந்த வடிவத்தைப் பாடக்கூடிய வார்த்தைகளெதுவும் இல்லை. நான் எப்போதும் - புலியால் ஈர்க்கப்பட்டிருந்தேன். சிறுவனாக நான் மிருகக்காட்சி சாலையில் ஒரு குறிப்பிட்ட கூண்டின் முன் காலந்தாழ்த்திக் கொண்டிருப்பேனென்பது எனக்குத் தெரியும். மற்றவைகள் எனக்கு சுவாரஸ்யமெதுவும் வைத்திருக்கவில்லை அகராதிகளையும் இயற்கை வரலாறுகளையும், புலியைப் பற்றிய அவற்றின் பதிவுகளைக் கொண்டு மதிப்பிடுவேன். எனக்கு ஜங்கிள் புக்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டபோது ஷேர் கான் என்ற புலி , கதாநாயகனுக்கு " எதிரியாயிருந்ததில் வருத்தமடைந்தேன். வருடங்கள் கடக்க, இந்த வினோதக் கவர்ச்சி என்னை விடவே இல்லை. அனைத்து பொதுவான நியதி மாற்றங்களிலும் அது செய்தது போலவே, வேட்டைக்காரனாக வேண்டும் என்ற என் முரணான ஆசையிலிருந்தும் அது தப்பித்திருந்தது. அதிக நாட்களுக்கு முன்பில்லாதவரை (தேதி தொலைவிலிருப்பதுபோல் தான், ஆனால் உண்மையில் அப்படியில்லை) லாகூர் பல்கலைக்கழக்தில் என் தினசரி வேலைகளுடன் அமைதியான முறையில் உடனிருந்தது. நான் ஒரு கீழை மற்றும் மேலைத் தர்க்கப் பேராசிரியர். என் ஞாயிற்றுக்கிழமைகளை ஸ்பினோஸாவின் தத்துவம் பற்றிய கருத்தரங்கொன்றில் செலவழித்தேன். நான் ஒரு ஸ்காட்லாந்துக்காரன் என்பதையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். புலிகள் மேலுள்ள என் காதல் ஒரு வேளை என்னை அபெர்தீனிலிருந்து பஞ்சாபுக்குக் கொண்டு வந்திருக்கலாம். என் வாழ்க்கையின் வெளிப்புற ஓட்டம் சாதாரணமான ஒன்றாக இருந்தது. ஆனால் என் கனவுகளில் எப்போதும் நான் புலிகளைக் கண்டேன். இப்போது மற்ற வடிவங்கள் அதை நிரப்புகின்ற ன . - 

- இந்தக் தகவல்களையெல்லாம் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் மறுபடி எண்ணிப் பார்த்திருக்கிறேன். இப்போதுவரை அவை கிட்டத்தட்ட இன்னொருவருக்கு உரிமையானது என்றே தோன்றுகிறது. அவைகளை நிறுத்தி வைக்கிறேன். எப்படியும் ஏனெனில் அவை என் வார்த்தைகளை நம்பியிருக்கின்றன. 
2 1904களின் இறுதியில் கங்கைக் கழிமுகப் பிரதேசத்தில் அந்த இனத்தின் நீல வகையொன்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறதென்று படித்தேன். தொடர்ந்து தந்திகள் மூலம் செய்தி உறுதிசெய்யப்பட்டது. இதுபோன்ற விஷயங்களில் ஒருவர் எதிர்பார்க்கக்கூடிய முரண்பாடுகள் மற்றும் ஒவ்வாமைகளுடன், என்னதானிருந்தாலும், ஏதோ தவறை நான் சந்தேகிக்கிறேன். ஏனென்றால் நிறங்களின் பெயர்கள் விஷமத்தனமாகத் துல்லியமற்றவை. ஐஸ்லாந்திய மொமியல் எத்தியோப்பியாவை 'ப்ளால்ணட்' நீல நிலம் அல்லது கறுப்பு மனிதர்களின் நிலம் என்று ஒருமுறை படித்ததாக நினைவுகூர்ந்தேன். நீலப்புலி ஒரு கறுஞ்சிறுத்தையாகவே கூட இருக்கலாம். வரிகளைப் பற்றி ஏதும் கூறப்படவில்லை . லண்டன் பிரசுராலயமொன்று பதிப்பித்த நீலப்புலியை வெள்ளி வரிகளுடன் காண்பிக்கும் படம் சுத்தமான கட்டுப்பட அதேபோல, படத்தின் நீலநிறம் உண்மையைவிட அதிகம் முன்னறிவிப்பாகவே இருந்தது. ஒரு கனவில் நான் முன்பு எப்போதும் பார்த்திராத, எந்த வார்த்தையும் அதற்கு நான் கண்டுபிடிக்கமுடியாத ஒரு நிலத்தில் புலிகளைப் பார்த்தேன் அது ஏறக்குறைய கறுப்பாக இருந்ததென்று எனக்கு தெரியும். ஆனால் நான் பார்த்த நிறச்சாயலுக்கு அந்த விவரணை" கொஞ்சமாகவே நியாயம் செய்கிறது. - 
நீலப்புலிகள் 0 61 
சில மாதங்கள் கழித்து, கங்கையிலிருந்து பலமைல் தூரத்திலுள்ள ஒரு குறிப்பிட்ட கிராமத்தில் நீலப்புலிகளைப் பற்றிய பேச்சுக்களைக் கேள்விப்பட்டிருப்பதாக என் சகா ஒருவன் கூறினான். அந்தச் செய்தியால் நான் ஆச்சரியமடைந்தேன். ஏனென்றால் அந்தப் பிரதேசத்தில் புலிகள் அரிதானவை. மணல் நிறைந்த தரைமேல் தன் வழியமைத்துக் கொண்டு போகையில் தன் நீளமான நிழலை விசிறிச்செல்லும் நீலப்புலியை மற்றுமொருமுறை கனவு கண்டேன். பெயரை (விரைவில் தெளிவாகக்கூடிய காரணங்களுக்காக) தான் நினைவு கூற விரும்பாத அந்தக் கிராமத்துக்கு, அந்தக் கல்விப்பருவத்தின் முடிவைச் சாதகமாக்கிக்கொண்டு பயணித்தேன். " 
மழைக்காலத்தின் இறுதியினருகில் நான் வந்து சேர்ந்தேன். ஆழ்ந்த பழுப்பு நிறமான காடுகளால் சூழப்பட்டு மரட்டப்பட்டுக்கொண்டிருந்த அந்தக் கிராமம், ஒரு மலையடிவாரத்தில் குத்துக்காலிட்டிருந்தது. கிப்ளிங்கின் பக்கங்களிலென்று கட்டாயம் என் சாகஸ கிராமத்தைக் கொண்டிருக்கும். ஏனென்றால் அனைத்து இந்தியாவையும், எப்படியோ அனைத்து உலகத்தையும் அங்கே காணமுடியும். ஒரு கால்வாயும் அசையும் மூங்கில் கழிப் பாலமும் குடிசையின் பலவீனமான பாதுகாப்புகளாயிருந்தன என்று தெரிவித்தால் போதும். தெற்குப் பக்கம் சதுப்பு நிலமும், நெல் வயல்களும், நான் அறிந்துகொள்ளாத பெயர் கொண்ட ஒரு கலங்கலான ஆறு ஓடும் மலையிடுக்கும் இருந்தன. அதற்கப்பால் மறுபடியும் காடு. 
.: அந்தக்கிராமத்தில் வாழ்ந்தவர்கள் இந்துக்கள். அதை நான் எதிர்பார்த்திருந்தாலும், விரும்பவில்லை. நான் எப்போதும் முஸ்லீம்களுடன் சௌஜன்யமாயிருந்து வந்தேன், யூதாயிஸத்திலிருந்து கிளைத்த மதங்களிலேயே தரங்குறைந்தது இஸ்லாம்தான் என்று நான் அறிந்திருந்தாலும்.. 
ப இந்தியா மனித நேயத்தில் நிறைந்திருக்கிறதென்று நாம் பொதுவாக உணர்வோம். இந்தக் கிராமத்தில் * இந்தியா காடுகளால் நிறைந்திருக்கிறதென்று உணர்ந்தேன். பகல்கள் அழுத்தம் மிக்கவையாயிருக்க, இரவுகள் 
ஏதும் ஆசுவாசம் தரவில்லை . 
- வந்து சேர்ந்ததும் மூத்தோர்களால் வரவேற்கப்பட்டேன். நோக்கமெதுவுமற்ற உபசரணைகளால் கட்டப்பட்ட ஒரு தற்காலிகப் பேச்சுவார்த்தையை அவர்களுடன் தொடரவைத்துக்கொண்டேன். அந்த இடத்தின் வறுமையைப்பற்றி நான் குறிப்பிட்டிருக்கிறேன். ஆனால் தான் வாழும் தான் கடன்பட்ட மண் ஒரு தனித்துவமான பிரத்யேகத்தன்மையைக் கொண்டிருக்கிறதென்பது ஒவ்வொரு மனிதனின் நம்பிக்கைகளின் ஒத்துக்கொள்ளப்பட்ட உண்மைகளிலும் ஒன்றென்பது எனக்குத் தெரியும். எனவே அந்த நிச்சயமற்ற குடியிருப்புகளையும், இன்னும் நிச்சயமற்ற அதன் சிறப்புக்களையும் பளபளக்கும் வார்த்தைகளால் புகழ்ந்தேன். அந்தப் பிரதேசத்தின் புகழ் லாகூரை எட்டிவிட்டதென்று அறிவித்தேன். அந்த மனிதர்களின் முகத்திலிருந்த பாவங்கள் மாறின. நான் வருத்தப்படக்கூடிய தவறொன்றைச் செய்து விட்டேனென்று உடனே உணர்ந்தேன். அந்நியர்களுடன் பகிர்ந்துகொண்டிராத ஒரு ரகசியத்தை இந்த மக்கள் கொண்டிருக்கிறார்களென்று உணர்ந்தேன். ஒரு வேளை அவர்கள் நீலப்புலியை வழிபட்டிருக்கலாம். என் நிதானமற்ற வார்த்தைகள் புனிதத்தன்மையைக் களங்கப்படுத்திவிட்ட ஒரு சமயமரபின் பக்தர்களாக ஒருவேளை இருக்கலாம். 
மறுநாள் காலைவரை நான் காத்திருந்தேன். சாதத்தை உண்டு தேனீரைக் குடித்து முடித்ததும், என் விஷயத்தைப் பற்றிப் பேச்சைத் துவக்கினேன். முந்தைய இரவின் அனுபவம் இருந்தாலும்கூட அங்கே என்ன நடந்ததென்று எனக்குப் புரியவில்லை. புரிந்து கொள்ள என்னால் முடியவில்லை, மொத்தக்கிராமமும் உணர்வு. மழுங்கிப்போய் என்னைப் பார்த்தது. கிட்டத்தட்ட திகிலுடன், ஆனால் வினோதமான தோலுடைய விலங்கைப் பிடிப்பதுதான் என் நோக்கமென்று அவர்களிடம் நான் சொன்னதும் என் வார்த்தைகளால் ஏறக்குறைய 'ஆசுவாசமடைந்தவர்கள் போலவே அவர்கள் தோன்றினர். அவர்களிலொருவன் அந்த விலங்கைக் காட்டின் விளிம்பில் தான் பார்த்துள்ளதாகக் கூறினான். 
இரவின் நடுவில் அவர்கள் என்னை எழுப்பினார்கள். ஆடு ஒன்று பட்டியிலிருந்து தப்பிவிட்டதாகவும் அதைத் தேடிப்போனபோது தான் நீலப்புலியை ஆற்றின் அக்கரையில் பார்த்ததாகவும் ஒரு சிறுவன் என்னிடம் கூறினான். தேய்பிறையின் குறைந்த ஒளி நிறத்தைக் கணிக்க அவனை ஏறக்குறைய அனுமதித்திருக்காது என்று நான் எண்ணினேன். ஆனால் அனைவரும் கதையை உறுதிப்படுத்தினார்கள். அந்தத் தருணம் வரை அமைதியாயிருந்த அவர்களில் ஒருவன், தானும் அதைப் பார்த்ததாகக் கூறினான். ரை.'பிள்களுடன் நாங்கள் வெளியே சென்றோம். ஒரு பூனை இன நிழல் வனத்தின் நிழல்களுக்குள் நழுவுவதை நான் பார்த்தேன் அல்லது பார்த்தேனென்று நினைத்தேன், அவர்கள் ஆட்டைக் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் அதைத் தூக்கிச்சென்ற உயிரினம் எனது நீலப்புலியாகவோ அல்லது அதில்லாமலோ இருக்கலாம். மற்ற தடயங்களை அழுத்தத்துடன் எனக்கு அவர்கள் சுட்டிக் காண்பித்தனர். அவை உண்மையில் எதையும் நிருபிக்கவில்லை . 
பவளக்கொடி 0 624 
பின் சில இரவுகள் கழித்து, இம்மாதிரியான தவறான எச்சரிக்கைகள் ஒருவகையான நியதியென்று உணர்ந்தேன். டேனியலடி.ஃபோ போல சந்தர்ப்பவசமான நுணுக்கத் தகவல்களைக் கண்டுபிடிப்பதில் திறமையுள்ளவர்களாக இருந்தனர் கிராமத்தின் ஆண்கள், புலி எந்த நேரத்திலும் காணப்படலாம். தெற்குப்பக்கமாக வயல்களினருகில் அல்லது வடக்குப்பக்கமாக காட்டினருகில் ஆனால் அதை அடையாளங்காண்பதில் ஒரு சந்தேகப்படத்தக்க வரிசையைக் கிராமவாசிகள் கடைப்பிடித்தார்களென்பதைக் கண்டுபிடிக்க எனக்கு வெகுநேரமாகவில்லை. காணப்பட்ட இடத்துக்கு நான் வருவதும் அப்போதுதான் புலி ஓடிப்போன நேரமும் துல்லியமாக ஒத்துப்போனது. எப்போதுமே எனக்கு ஒரு தடயம் காட்டப்பட்டது. ஒரு பாதச்சுவடு. ஏதோ ஒடிந்த குச்சி. ஆனால் ஒரு மனிதனின் முஷ்டி புலியின் சுவடுகளென்று ஏமாற்றிவிடக்கூடும். ஒருமுறையோ இரண்டு முறையோ நான் ஒரு இறந்த நாயைக் கண்டேன். நிலா வெளிச்சமுள்ள ஒரு இரவில் ஆடொன்றைப் பொறியாக வைத்தோம். ஆனால் விடியும்வரை வெற்றியின்றிப் பார்த்துக்கொண்டிருந்தோம். இந்த தினசரிக்கதைகள், அங்கே எனது இருப்பை நீட்டிக்க என்னைத் தூண்டச்செய்வதற்காகத்தான் என்று முதலில் நான் நினைத்தேன். ஏனென்றால் அது உண்மையில் கிராமத்துக்கு லாபகரமாக இருந்தது - மக்கள் எனக்கு உணவை விற்கவும் தினப்படி வேலைகளை எனக்காகச் செய்தும் வந்தனர். இந்த யூகத்தைச் சரிபார்க்க, நீரோட்டப் போக்கிலுள்ள இன்னொரு இடத்துக்கு புலியைத்தேடிச் சென்றுவிடுவதைப்பற்றி நான் யோசித்துக்கொண்டிருப்பதாகச் சொன்னேன். என் முடிவை அவர்கள் வரவேற்றதைக் கண்டு ஆச்சரியமடைந்தேன். இருந்தாலும், ஏதோ ஒரு ரகசியம் இருக்கிறதென்றும் அனைவரும் என் மேல் ஒரு எச்சரிக்கையான கண் வைத்திருந்தார்களென்பதையும் தொடர்ந்து உணர்ந்தேன். 
துகிடந்த கிராமத்தைக்கொண்ட காடுகள் நிறைந்த மலை உண்மையில் அதிக உயரமிருக்கவில்லை, என்பதை முன்பே கூறினேன், உச்சியில் அது தட்டையாக இருந்தது. ஒரு சமவெளிபோல. மலையின் மறுபுறத்தில் மேற்குக்கும் வடக்குக்கும் அருகில் காடு மறுபடித் தொடங்கியது. சரிவு கரடுமுரடான ஒன்றாக இல்லாததால் அதில் நாங்கள் ஏறலாமென்று ஒரு மதியத்தில் எடுத்துக் கூறினேன். என் எளிய வார்த்தைகள் - கிராமவாசிகளைப் பெரும் பீதியில் ஆழ்த்தியது. மலைப்பகுதி மிகவும் செங்குத்தாக இருப்பதாக ஒருவன் எதிர்ப்பு தெரிவித்தான். அவர்களில் மூத்தவன், என் குறிக்கோள் அடையமுடியாததென்றும், மலையுச்சி புனிதமானதென்றும், மனிதனின் எற்றத்தை மாயத்தடைகள் வழிமறிக்கின்றன என்றும் ஆழ்ந்த சிந்தனையுடன் கூறினான். மரணமடைக்கூடிய பாதங்களைக் கொண்டு சிகரத்தில் கால்பதிப்பவன் கடவுளின் சிரசைப் பார்க்கவும், குருடாகிப் போகவோ மனப்பிறழ்வு கொள்ளவோ கூடிய ஆபத்துக்குள்ளாவான். 
கட்டை 33 34 3 
5" 24 "நான் வாதாடவில்லை, ஆனால் அந்த இரவு, அனைவரும் தூங்கிக்கொண்டிருந்தபோது என் குடிசையிலிருந்து, ரகசியமாக நழுவி, சுலபமான மலைச்சரிவில் ஏறத்தொடங்கினேன். 
211 பாதை எதுவும் இருக்கவில்லை . மரங்களுக்கடியிலுள்ள புதர்கள் எனக்குத் தடை செய்தன. இது ஒரு முக்கியமான நாளாக - ஒருவேளை எனது அனைத்து நாட்களிலும் முக்கியமான நாளாக இருக்கப்போகிறதென்று நான் உணர்ந்தாலும், ஒருமித்த கவனத்துடன் அனைத்தையும் குறிப்புணர்ந்து கொண்டேன். இலைகள் மற்றும் புதர்களின் அந்த இருண்ட, ஏறக்குறைய கறுப்பான நிழல்களை நினைவு கூர்கிறேன். விடியல் நெருங்கியிருந்தது. வானம் வெளுக்கத் தொடங்கியிருந்தது. ஆனால் சுற்றியிருந்த மொத்தக் காட்டிலும் ஒரு பறவை கூடப் பாடவில்லை. 17 
இருபது அல்லது 30 நிமிடங்களின் ஏற்றம் என்னை மலைமுகட்டுக்குக் கொணர்ந்தது. கீழே பறங்கிக்கொண்டிருந்த கிராமத்தைவிட அது குளிர்ச்சியாக இருந்ததென்ற கற்பனை செய்துகொள்ள எனக்கு மிகச் சிறிது பிரயத்தனமே தேவைப்பட்டது. இது ஒரு சிகரமல்ல. ஆனால் ஒரு கூரை போன்ற, மிக அகலமற்ற ஒரு சமவெளிதான். மலையில் விலாப்பகத்தில் அதுவரையிலும் காடு சுற்றிலும் பரவியிருந்தது என்று நான் கூறியது சரியாயிருந்தது. நான் சுதந்திரமாக உணர்ந்தேன். ஏதோ கிராமத்தில் நான் தங்கியிருந்தது ஒரு சிறையிலிருந்தது போல், கிராமவாசிகள் என்னை முட்டாளாக்க முயன்றது குறித்து நான் கண்டுகொள்ளவில்லை. ஏதோ ஒரு வகையில் அவர்கள் குழந்தைகள் என்று நினைத்தேன். -- 4:52 
- புலியைப் பொறுத்தமட்டில் ... நிலையாகத் தொடர்ந்த எரிச்சல் என் நம்பிக்கையையும் ஆர்வத்தையும் தீர்த்துவிட்டிருந்தது. ஆனால் கிட்டத்தட்ட இயந்திரத்தன்மையுடன் தடயங்களுக்காக நான் தேடினேன், 
தரை வெடிப்புகளுடனும் மணல் நிறைந்தும் இருந்தது. ஆழமற்ற, மற்றவைகளுக்குள் கிளை பரப்பிய வெடிப்புகளில் ஒன்றில் ஒரு நிறத்தை நான் கண்டேன், நம்பமுடியவில்லை. என் கனவுகளின் புலியின் நிறம் போன்றதே அது. அதன்மேல் என் கண்களை எப்போதும் பதித்திருக்கவே கூடாதென்று விரும்பினேன். நெருக்கமாகப் பார்த்தேன், அந்த இடுக்கு சின்னக் கற்களால் நிறைந்திருந்தது. அனைத்தும் ஒன்றே போல், வட்டமாக சில சென்டிமீட்டர்கள் 
நீலப்புலிகள் 0 63 
மட்டுமேயான விட்டத்துடன் வழுவழுப்பாக, அவைகள் ஏதோ நாணயங்கள் போல அல்லது பித்தான்கள் போல, அல்லது ஏதோவொரு விளையாட்டில் எண்ணிக்கைக்காக வைத்துக்கொள்ளப்படும் வட்ட உலோகத்துண்டுகள் போல அவற்றின் சீரான தன்மையே அவற்றுக்கு ஏறக்குறைய ஒரு செயற்கைத் தனத்தை அளித்தது. 
நான் குனிந்து, வெடிப்புக்குள் என் கையைவிட்டு சில கற்களையே வெளியே எடுத்தேன். ஒரு மெலிதான்" அதிர்வை உணர்ந்தேன். கைநிறைய இருந்த சின்னக் கற்களை, ஒருசின்ன கத்திரிக்கோலும் அலகாபாத்திலிருந்து - வந்த ஒரு கடிதமும் இருந்த என் மேலுடையின் விலாப்புறப்பையில் போட்டேன். அந்த இரண்டு தற்செயலான பொருட்கள் என் கதையில் அவைகளுக்கான இடத்தை பெற்றிருக்கின்றன. 
அ. பிறகு என் குடிசையில், மேலுடையை நான் கழற்றினேன். படுத்து, மற்றுமொருமுறை புலிமைக் கனவில் கண்டேன். என் கனவில், அதன் நிறத்தை விசேஷமாக கவனித்தேன். நான் கனவு கண்டிருந்த புலியின நாமதான் அது, மேலும் சமவெளியில் கிடைத்த பொடிக் கற்களுடையதும், என் முகத்தில் படிந்த முதிர்ந்த காலைச் சூரியன் என்னை எழுப்பியது எழுந்தேன். கத்திரிக்கோலும் கடிதமும் வில்லைகளைப் பையைவிட்டு வெளியே எடுக்க சிரமப்படுத்தின, பாதைகளில் அவை குறுக்கிட்டுக்கொண்டே இருந்தன. ஒரு கை நிறைய நான் வெளியே எடுத்தேன் , ஆனால் இன்னும் இரண்டு மூன்றை விட்டுவிட்டேன் என்பதை உணர்ந்தேன். ஒரு குறுகுறுப்புண்டாக்கும் உணர்வும், மிக மெல்லிதான அதிர்வு போன்றதும் என் உள்ளங்கைக்கு ஒரு மென்மையான வெதுவெதுப்பைத் தந்தன. என் கையைத் திறந்தபோது, அது 30 அல்லது 40 வில்லைகளைக் கொண்டிருப்பதைக் கண்டேன். 10க்கு மேல் எதையும் நான் எடுக்கவில்லை என்று சத்தியம் செய்திருப்பேன், அவைகள் பெருக்கமடைந்து விட்டன என்பதைக் காண நான் அவைகளை எண்ணத் தேவையிருக்கவில்லை, அவைகளைச் சேர்த்து ஒரே குவியலாக்கி, ஒவ்வொன்றாக அவைகளை எண்ண முயன்றேன். -- -- 
14. அந்தச் சின்ன காரியம் இயலாததாகிப்போனது, அவைகளில் ஏதேனுமொன்றை நிலையாகப் பார்ப்பேன், என் கட்டை விரலையாம் ஆள்காட்டி விரலையும் கொண்டு அதை எடுப்பேன். இருந்தும் அதை நான் செய்ததும், அந்த ஒரு வில்லை மற்றவைகளிலிருந்து பிரிக்கப்பட்டதும், அது பலவாக மாறியிருக்கும், எனக்குக் காய்ச்சல் இல்லையென்பதை (இல்லை) நான் சோதித்தேன், பின்பு அதே சோதனையை மறுபடியும் மேற்கொண்டேன், அந்த வெறுப்பூட்டும் அற்புதம் நிகழ்ந்து கொண்டேயிருந்தது. என் பாதங்கள் ஈரப்பதமடைவதுபோலவும் என் வயிறு பனிக்கட்டியாக மாறுவதையும் உணர்ந்தேன். என் முழங்கால்கள் ஆடத்தொடங்கின. எவ்வளவு நேரம் கழிந்ததென்று எனக்குத் தெரியவில்லை . 
' - வில்லைகளைப் பார்க்காமல், ஒரு குவியலாக அவைகளை அள்ளி ஜன்னல் வழியாக விட்டெறிந்தேன். அன்னியமான ஒரு ஆசுவாச உணர்ச்சியுடன், அவைகளின் எண்ணிக்கை சுருங்கியிருப்பதை உணர்ந்தேன். கதவை இறுக்கமாக மூடிவிட்டு என் படுக்கையில் படுத்தேன். நான் முன்பு படுத்திருந்த அதே நிலையைக் கண்டுபிடிக்க முயன்றேன், இது அனைத்தும் ஒரு கனவு என்று என்னையே நம்பத்தூண்டுவதற்கு, வில்லைகளைப்பற்றி நினைக்காமலிருக்க, ஆனால் எப்படியோ நேரத்தை நிரப்ப, ஒழுக்கவியலின் எட்டு பொருள் வரையறைகளையும் ஏழு இப்பக்கொள்ளப்பட்ட உண்மைகளையும் சப்தமாக, மெதுவான துல்லியத்துடன் திரும்பக் கூறினேன், அவை உதவினவா 
• என்பது உறுதியில்லை , 
கெப் பேயோட்டும் பயிற்சிகளுக்கிடையில் என் கதவு தட்டப்பட்டது. என்னுடனே நான் 
மருந்ததை வட்டுக்கேட்கப்பட்டிருக்கிறோம் என்று உள்ளுணர்வுடன் பயந்துகொண்டு, கதவருகில் சென்று அதைத் திறந்தேன். 15 
அது கிராமத்தலைவன், பகவான் தாஸ், அவனுடைய இருப்பு என் அன்றாட வாழ்க்கையின் நிஜத்தை ஒருகணம் உயளித்தது. நாங்கள் வெளியில் காலடி எடுத்து வைத்தோம். வில்லைகள் மறைந்திருக்ககூடும் என்று சிறிது நம்பிக்கை கொண்டிருந்தேன். ஆனால் அவை அங்கே இருந்தன. தரைமேல் அங்கே எத்தனை இருந்தன என்பது 
அனால் உறுதிகொள்ளமுடியவில்லை . 

மந்த மத்தவன் அவைகளைப் பார்த்து பின்பு என்னைப் பார்த்தான்.' '. 
- 'இந்தக் கற்கள் இங்கேயுள்ளவை அல்ல, அங்கே மேலே உள்ள கற்கள்' என்றான் அவன், அவனுக்குச் சொந்தமற்ற ஒரு குரலில், கட்ட 
பவளக்கொடி 0 64 
' ம் அது உண்மைதான்'. நான் பதிலளித்தேன். அதை நான் மேலே சமவெளியில் கண்டுபிடித்ததாக (சிறிது எதிர்ப்புணர்வுடனில்லாமலில்லை) கூறினேன். ஆனால் யாருக்கும் விளக்கமளிக்க நான் கடமைப்பட்டிருக்கிறேன் , என்று நினைத்ததற்கு என்மேலேயே அவமானங்கொண்டேன். பகவான்தாஸ் என்னை ஒதுக்கினான். கற்களைப் : பிரமிப்புடன் வெறித்துப் பார்ப்பதைத் தொடர்ந்தான், அவைகளைப் பொறுக்க அவனுக்கு ஆணையிட்டேன். அவன் : - அசையவில்லை . ---- 
இந்தத் தடவை சற்று அழுத்தமான குரலில் ரிவால்வரை உருவியவாறு ஆணையைத் திரும்பக் கூறினேன் : என்பதை ஒப்புக்கொள்வதில் வருத்தமடைகிறேன், 
'கையில் ஒரு நீலக் கல்லைவிட நெஞ்சில் ஒரு துப்பாக்கிக்குண்டே விரும்பத்தக்கது தடுமாறினான் பகவான்தாஸ். 
நீ ஒரு கோழை' என்றேன் நான், 
அவனை விடக் குறைவாக நான் பயப்பட்டிரவில்லையென்பதை நான் நம்புகிறேன். ஆனால் நான் என் கண்களை மூடிக்கொண்டு என் இடக்கையில் ஒருகைநிறையக் கற்களை எடுத்தேன், பிஸ்டலை என் பெல்ட்டில் ! செருகிக்கொண்டு, கற்களை ஒவ்வொன்றாக என் வலதுகையின் திறந்த உள்ளங்கைக்குள் நழுவவிட்டேன். அவற்றின் எண்ணிக்கை குறிப்பிடும்படி அதிகரித்திருந்தது. ; 
இந்த வகையான மாறுதல்களுக்கு உள்நோக்கமெதுமின்றி நான் பழக்கப்பட்டுவிட்டிருந்தேன். பகவான்தாஸின் அலறல்களைவிட அவை என்னைக் குறைவாகவே ஆச்சரியப்படுத்தின. 
'இவை பெருகும் கற்கள்' அவன் அதிசயித்தான். 'அவைகளில் பல இப்போது இருக்கின்றன. ஆனால் " '... அவைகளால் மாற முடியும். அவைகளின் வடிவம் பெளர்ணமி நிலா போன்றது. அவைகளின் நிறம், நம் கனவுகளில் 2 மட்டுமே நாம் பார்க்க அனுமதிக்கப்படும் நீலம். அவற்றின் வலிமையைப்பற்றி ஆட்களுக்கு கூறும்போது என் 
அப்பாவின் அப்பா உண்மையிலேயே பேசியிருக்கிறார்', ' - பாசம் 
மொத்த கிராமமும் எங்களைச் சூழ்ந்து கொண்டது. எல். எம் கே 
அந்த அற்புதத்தன்மையுடைய பொருட்களின் மாய உரிமையாளன் நான் என்பதுபோல் உணர்ந்தேன். அனைவரும் அதிர்ச்சியடையும்படி, வில்லைகளைப் பொறுக்கி, உயர்த்தி கீழே விட்டு, சிதறவிட்டு, அவைகள் வளர்ந்து பெருக்கமடைவதையோ மர்மமான முறையில் குறைந்துபோவதையோ பார்த்தேன். 
பிரமிப்பினாலும் திகிலினாலும் ஆட்கொள்ளப்பட்ட கிராமவாசிகள் நெருக்கமாக ஒண்டிக்கொண்டனர். அந்த : அற்பகத்தைக் காணுமாறு தங்கள் மனைவிமார்களை ஆண்கள் கட்டாயப்படுத்தினர். ஒரு பெண் தன் முகத்தை முன்னங்கையால் மூடிக்கொண்டாள். இன்னொருத்தி தன் கண்களை இறுக மூடிக்கொண்டாள். வில்லைகளைத் தொடும் தைரியம் யாருக்கும் இருக்கவில்லை, அதனுடன் விளையாடிய ஒரே ஒரு மகிழ்ச்சியான குழந்தைச் சிறுவனைத் கலி சரியாக அந்தக் கணத்தல் இந்தக் குழப்பமெல்லாம் அற்புதத்தைக் களங்கப்படுத்துகிறதென்று உணர்ந்தேன். வில்லைகளைச் சேகரித்தேன். என்னால் முடிந்தவரை அனைத்தையும், பின்பு என் குடி 'க்குத் திரும்பினேன்." 
இப்போதுவரை தொடர்ந்து கொண்டிருக்கும் துரதிர்ஷ்டவசமான நிகழ்ச்சிகளின் தொடக்கமான அந்த நாளின் திருக்கை மறக்க முயன்றிருக்கிறேன் எனலாம். அந்த நாளை மறக்க முயன்றேனோ இல்லையோ அது எனக்கு நினைவில்லை. ஒரு வகையான நினைவுத்துயருடன் குறிப்பாக மகிழ்ச்சியாயிருந்திராத முந்தைய இரவைப்பற்றி மறுபடி நினைக்கத்தொடங்கினேன். மற்ற பலதையும் போல் குறைந்தபட்சம் அதுவாவது புலியின் மீதான என் வேட்கையால் நிறைந்திருந்தது. ஒரு காலத்தில் சக்தியால் நிரம்பியிருந்த, இப்போது சாதாரணமாகிவிட்ட அந்த மனக்காட்சியில் ஆறுதல் கொள்ள விரும்பினேன், தொடர்ச்சியாக ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்ட ரோமன் கறுப்பு அன்னத்தைவிட குறைச்சலான தீங்கின்மை உடையதாக நீலப்புலி தோன்றவில்லை." 

- மதிப்புள்ளதைத் திரும்ப வாசிக்கும்போது ஒரு அடிப்படைத் தவறை நான் செய்துவிட்டதைக் vள் மனோதத்துவம் என்று தவறாக அழைக்கப்படும் நல்ல அல்லது மோசமான இலக்கியத்தின் பழக்கத்தால் கட்டு என் கண்டுபிடிப்பின் நேர்க்கோட்டு காலவரிசையை - ஏனென்று தெரியவில்லை - ஈடுகட்ட 
லாக் வில்லைகளின் மிருகத்தன்மைக்கு நான் அழுத்தங்கொடுத்திருக்கவேண்டும். முயன்றிருக்கிறேன். அதற்குப் பதிலாக, வில்லைகளின் மிருகத்தன்மைக்கு நான் அழுக்கங்கொடி 

என்னிடம் யாராவது சந்திரனில் ஒற்றைக்கொம்புடைய குதிரைகள் இருக்கின்றன என்று சொன்னால், அந்தத் தகவலை நான் ஏற்றுக்கொள்ளலாம் அல்லது மறுக்கலாம், அல்லது ஏதும் தீர்மானிக்காமலிருக்கலாம், ஆனால் அது என்னால் கற்பனை செய்து பார்க்கக்கூடிய ஒன்று. இன்னொரு வகையில், சந்திரனில் ஆறு அல்லது ஏழு ஒற்றைக்கொம்புக் குதிரைகள் மூன்றுதான் என்று சொல்லப்பட்டால் அப்படியொரு விஷயம் சாத்தியமற்றது என்று உடனே அறிவிப்பட்ட முன்றையும் ஒன்றையும் கூட்டினால் நான்கு என்று கற்றிருக்கும் மனிதன், நாணயங்கள், அல்லது தாயங்கள், அல்லது சதுரங்கக் காய்கள் அல்லது பென்சில்கள் கொண்டு அந்தத் தர்க்க நிலைப்பாட்டை நிருபிக்கத் தேவையில்லை, அவலுக்கு அது தெரியும். அவ்வளவுதான் அது. வேறு ஒரு கூட்டுத்தொகையை அவன் சிந்திக்க முடியாது. மூன்றையும் ஒன்றையும் கூட்டுவது என்பது நான்கை வேறு வார்த்தைகளில் சொல்வது. வேறு வழியில் 'நான்கு' என்று கூறும் கணிதவியலாளர்களும் இருக்கிறார்கள்...... ஆனால் உலகத்திலுள்ள மனிதர்கள் அனைவரிலும், அலெக்ஸாண்டர் க்ரெய்க் ஆன நான, மனாத் மனத்தின் அடிப்படையான ஒரே பொருட்களை கண்டுபிடிக்க விதிக்கப்பட்டேன். . 
தொடக்கத்தில் நான் ஒருவிதமான மனவேதனையிலிருந்தேன். நான் பைத்தியமாகிவிட்டேனோ என்று அச்சப்பட்டு, அதிலிருந்து வெறும் பைத்தியமாக மட்டும் நான் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமென்று நான் நம்பத் தொடங்கினேன். ஏனென்றால் வரிசைக்குலைவுகளை இந்தப் பிரபஞ்சம் , விட என் தனிப்பட்ட பிரமைகள் குறைச்சலான தொந்தரவுடையதாகவே இருந்திருக்கும். மூன்றும் ஒன்றும் கூட்டினால் 14 என்றால் காரணம் பைத்தியக்காரத்தனம் தான். 
அந்த சமயத்தில் அடிக்கடிக் கற்களைப் பற்றி நான் கனவு கண்டேன். கனவு ஒவ்வொரு இரவும் திரும்ப நிகழவில்லையென்பது ஒரு சிறு கீற்று நம்பிக்கையளித்தது. விரைவில் திகிலாக மாறிப்போன நம்பிக்கையென்றாலும், கனவு எப்போதும் ஏறத்தாழ ஒரேபோலிருந்தது. அதன் ஆரம்பம்...... அச்சமூட்டும் முடிவை அறிவித்தது. ஒரு சுழல்படிக்கட்டு, ஒரு இரும்புவேலி, மற்றும் சில கால்வைக்கும் இரும்புப்படிக்கட்டுப்பாகங்கள், அதன்பிறகு ஒரு சிற்றறை, அல்லது ஆழங்கள் வழியாக திடீரென்று முடியும், அல்லது திடீரென்று இரும்பு வேலைப்பாடுகளுக்குள் பூட்டு செய்பவனின் பட்டறைகளுக்குள், நிலவறைகளுக்குள், அல்லது சதுப்பு நிலங்களுக்குள் அழைத்துச்செல்லும் ஒரு சிற்றறைத் தொகுதி. பூமியில் எதிர்பார்க்கப்படும் அவைகளின் வெடிப்புகளின் ஆழத்தில் கடவுள் அறிவுக்கப்பாற்பட்டவரென்று நானும் திருமறை நூலின் உயிரினங்களான பெஹிமோத் அல்லது லெவியாத்தனாகவும் அந்தக் கற்கள். நான் நடுங்கிக்கொண்டு விழிப்பேன். அங்கே பெட்டியில் கற்கள் இருக்கும். தங்களைத்தானே மாற்றிக்கொள்வதற்கு தயாராக. 
என் மீதான கிராமவாசிகளின் மனப்பான்மை மாறத்தொடங்கியது. கிராமவாசிகள் 'நீலப்புலிகள்' என்று பெயரிட்டிருந்த கற்களைப் பற்றியிருந்த தெய்வீகத்தன்மையின் ஏதோவொன்றால் நான் பைத்தியமாக்கப்பட்டிருந்தேன். ஆனால் மலைமுகட்டை களங்கப்படுத்தியவனாகவும் அறியப்பட்டேன். இரவின் எந்தத் தருணத்திலும், பகலின் எந்தத் தருணத்திலும் கடவுள்கள் என்னைத் தண்டிக்கக்கூடும். நான் செய்திருந்ததற்கு என்னைத் தாக்கவோ தூற்றவோ கிராமவாசிகள் துணியவில்லை. ஆனால் அனைவரும் இப்போது ஆபத்துக்குரியவகையில் அடிமைத்தனத்துடனிருப்பதைக் கவனித்தேன். கற்களுடன் விளையாடிய குழந்தையை நான் மறுபடி ஒருபோதும் பார்க்க முடியவில்லை. ஒரு காலையில் விடியுமுன்னர் நான் கிராமத்தை விட்டு நழுவினேன். அதன் மொத்த ஜனத்தொகையும் என் மேல் ஒரு கண் வைத்துக்கொண்டிருந்ததென்றும், என் தப்பித்தல் அவர்களுக்கு ஆசுவாசமாயிருக்குமென்பதையும் உணர்ந்தேன். அந்த முதல் காலை முதல், கற்களைப் பார்க்க வேண்டுமென்று எவரும் கேட்டிருக்கவில்லை. 
அப்பையில் கைநிறையக் கற்களுடன் லாகூருக்குத் திரும்பினேன். என் புத்தகங்களின் பழக்கமான சூழல் நான் விரும்பிய விடுதலைக் கொணரவில்லை. அந்த வெறுக்கத்தக்க கிராமம் மற்றும் காடு, சமவெளியை நோக்கி எழும் முட்கள் நிறைந்த சரிவு, கற்கள் - அனைத்தும் கிரகத்தில் இருப்பதை தொடர்கின்றன என்று நினைத்தேன். என் கனவுகள் குழம்பி, அந்த ஒத்திராத விஷயங்களைப் பெருக்கினர். கிராமம்தான் கற்களாயிருந்தது. காடுதான் சதுப்புநிலமாயிருந்தது. சதுப்பு நிலம்தான் காடாக இருந்தது. - 
என் நண்பர்களின் உடனிருப்பைத் தவிர்த்தேன். வில்லைகளில் ஒன்றில், சிலுவை வடிவிலான ஒரு கீறலை உருவாக்கினேன். ஒன்று அல்லது இரண்டு மாற்றங்களுக்குள் நான் அதைத் தொலைத்திருந்தேன். வில்லைளின் - எண்ணிக்கை அதிகரித்திருந்தாலும், நான் அரைவட்டமான வெட்டுக்குறியொன்றை உருவாக்கிய வில்லையென்றாலும் அதேபோன்ற சோதனையைச் செய்துபார்த்தேன். அந்த வில்லையும் மறைந்து போனது. துளைக்கருவியால் ஒரு வில்லையின் மையத்தில் துளையிட்டு சோதனையை மறுபடி முயன்றேன். அந்த வில்லை ஒரேயடியாக மறைந்துபோனது. மறுநாள் சிலுவை செதுக்கப்பட்ட வில்லை, இன்மைக்குள் போயிருந்த தன் பயணத்திலிருந்து மறுபடித் தோன்றியது. புரிந்துகொள்ள முடியாத விதிகள், அல்லது ஒரு அமானுட விருப்பத்துக்குக் கீழ்ப்படிந்து கற்களை உள்ளிழுத்துக்கொண்டு பிறகொரு காலத்தில் எப்போதாவது ஒன்றைத் திரும்ப எறியும் இது என்ன வகையான மர்ம வெளி ? 
பவளம்மகாலே 
கணிதத்தை உருவாக்கியிருந்த அதே ஒழுங்கமைவுக்கான ஆழ்ந்த விருப்பம், தங்களைத்தானே பெருக்கிக்கொள்ளும் சுரணையற்ற கற்களில் கணிதத்தின் பிறழ்வு பற்றிய ஒரு ஒழுங்கமைவை தேடிச்செல்லச் செய்தது. முன் கூட்டிக் கணிக்க முடியாத அவைகளின் வேறுபாடுகளில் ஒரு விதியைக் கண்டுபிடிக்க முயன்றேன். மாறுதல்களைப் பற்றிய புள்ளிவிபரங்களை நிறுவுவதற்கு இரவுகளையும் பகல்களையும் தியாகம் செய்தேன். என் புலனாய்வின் அந்தக் கட்டத்திலிருந்து பயனற்றுப் பூஜ்யங்களால் நிரப்பப்பட்ட பல நோட்டுப்புத்தகங்களை இன்னும் வைத்துள்ளேன். என் வழிமுறை இதுதான். கண்களால் கற்களால் கற்களை எண்ணி, இலக்கங்களை எழுதிக்கொள்வேன். பிறகு அவற்றை நான் இரண்டு கைப்பிடிகளாக பிரித்து வைத்து மேஜையில் தனித்தனியாக வைப்பேன். இரண்டு கூட்டுத்தொகைகளையும் எண்ணி, குறித்து வைத்துக்கொண்டு, இந்தக் காரியத்தைத் தொடர்வேன். இந்தச் சுழற்றல்களுக்குள்ளாக ஒரு ஒழுங்கமைவுக்கான ஒரு ரகசிய மன்மாதிரிக்கான தேடல் எங்கும் அழைத்துச் செல்லவில்லை. நான் கணக்கிட்ட கற்களின் அதிக பட்ச எண்ணிக்கை 419. குறைந்தபட்சம் மூன்று. அவைகள் மொத்தமாக மறைந்துவிடுமென்று நான் நம்பிய, பயந்த நேரமும் உண்டு. மற்றவைகளிலிருந்து பாக்கப்பட்ட ஒரே ஒரு வில்லை பெருக்கமடையவோ மறைந்து போகவோ முடியாதென்பதைக் கண்டுபிடிக்க குறைவான சோதனை முயற்சியே தேவைப்பட்டது. 
இயற்கையாகவே நான்கு கணித வழிமுறைகளும் - கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல், சாத்தியமற்றிருந்தன. நிகழ்தகவுகளைக் கணக்கிடுதலை எதிர்ப்பதுபோலவே எண்கணிதத்தையும் எதிர்த்தன கற்கள். நாற்பது வில்லைகள் வகுபட்டு ஒன்பதாகலாம். அந்த ஒன்பதை வகுத்தால் 300ஐத் தரக்கூடும். அவை எவ்வளவு எடையிருந்தன என்பது எனக்குத் தெரியவில்லை. நான் ஏதும் அளவுகோலைப் புகலிடங்கொள்ளவில்லை. ஆனால் அவற்றின் எடை நிலையானதாகவும், எடை குறைந்ததாகவும் இருந்ததென்பதில் எனக்கு உறுதியுண்டு. அவற்றின் நிறம் எப்போதும் அதே நீலமாயிருந்தது. 
சித்தப்பிரமையிலிருந்து என்னைக் காப்பாற்றிக்கொள்ள இந்த வழிமுறைகள் உதவின. கணித அறிவியலை அழித்த அந்தக் கற்களை நான் கையாண்டபோது, முதல் ரகசியக் குறியீடான, பல மொழிகளுக்குள் 'நுண்கணிதம்' என்ற வார்த்தையாகப் பரவிவிட்ட அந்தக் கிரேக்கக் கற்களை ஒன்றுக்கு மேற்பட்ட முறை நினைத்துக்கொண்டேன். கணிதம், எனக்கு நானே கூறிக்கொண்டேன். அதன் தொடக்கத்தையும் இப்போது அதன் முடிவையும் கற்களிலே கொண்டிருக்கிறது. பித்தகோரஸ் இவைகளைக் கொண்டு உழைத்திருந்தால் .... 
ஏறத்தாழ ஒருமாதம் கழித்து இந்தப் பெருங்குழப்பத்திலிருந்து வெளியேற வழியேதுமில்லை என்பதை உணர்ந்தேன். அங்கே கிடந்தன கட்டுக்கடங்காத வில்லைகள். அங்கே இருந்தது நிலையான கவர்ச்சி, அவைகளைத் தொடுவதற்கு, மற்றுமொருமுறை அந்தக் குறுகுறுப்புணர்வை உணர்வதற்கு, அவைகளைக் கலைத்துப் போடுவதற்கு, அவைகள் அதிகரிப்பதை அல்லது குறைவதைப் பார்ப்பதற்கு, மற்றும் அவை ஒற்றைப்படையில் வருகின்றனவா இரட்டைப்படையிலா என்று குறிப்பதற்கு, அவைகள் மற்றப் பொருட்களை மாசுபடுத்திவிடுமென்று 'பயப்படத்தொடங்கினேன். குறிப்பாக அவைகளைக் கையாளவேண்டுமென்று வற்புறுத்திய விரல்களை, 
அவைகளை மறப்பது ஒரு குறிப்பிட்ட தருணத்துக்கே சாத்தியம் என்றும், அந்த வதையைத் திரும்ப அனுபவிப்பது தாங்க முடியாததென்று இருக்குமென்று எனக்கு தெரிந்திருந்ததால், கற்களைப் பற்றி தொடர்ந்து யோசிப்பதற்கான தனிப்பட்ட கட்டாயத்தன்மையை பலநாட்களுக்கு என்மேலேயே திணித்துக்கொண்டேன் 
ஃபிப்ரவரி 10ன் இரவில் நான் உறங்கவில்லை . விடியல் வரை என்னை வழிநடத்திச் சென்ற நடைக்குப் பிறகு. வாஸில்கான் மசூதியின் வாயிற்கதவுகளுக்குள்ளாக நுழைந்தேன், பொருட்களின் நிறங்களை ஒளி இன்னும் வெளிப்படுத்தியிருக்காத நேரம் அது. முற்றத்தில் ஒரு உயிர் கூட இல்லை. ஏனென்று தெரியாமல் பனிகரோடும் ஊற்றுத் தண்ணீருக்குள் என் கைகளை நுழைத்தேன். மசூதிக்குள் கடவுள் மற்றும் அல்லா என்பவை ே 
அறிவக்கப்பாற்பட்ட இருப்புக்கான இரண்டு பெயர் களென்று எனக்குப் பட்டது. என் சுமையிலிருந்து நான் விடுவிக்கப்படுமாறு சப்தமாகப் பிரார்த்தித்தேன். அசைவின்றி, ஏதாவது பதிலுக்காக காத்திருந்தேன், 
காலடிச் சப்தங்களை நான் கேட்கவில்லை. ஆனால் ஒரு குரல். ஓரளவு நெருக்கத்தில் என்னுடன் பேசியது 
'நான் இங்கே இருக்கிறேன்' 
ஒரு யாசகன் என்னருகில் நின்றிருந்தான், மெலிதான வெளிச்சத்தில் அவன் தலைப்பாகை, அவனது பார்வையற்ற கண்கள், அவனது வெளிர் மஞ்சள் தோல், அவனது சாம்பல் நிறத் தாடியை என்னால் கவனிக்க முடிந்தது. அவன் அதிக உயரமில்லை . பா . 
- அவன் ஒரு கையை என்னை நோக்கி நீட்டி, இன்னும் மென்மையாச் சொன்னான். - 
11 - 
'யாசகம் ... ஓ... ஏழைகளின் பாதுகாவலனே ...'' 
"*. 1 - 
ஃதே 
என் கைகளைப் பைக்குள் விட்டு, 
" - பேப்ப 
ர் 
'என்னிடம் ஒரு நாணயம் கூட இல்லை ' என்று பதிலளித்தேன். 
'உங்களிடம் நிறைய இருக்கிறது' 
கற்கள் எனது வலது பையில் இருந்தன. ஒன்றை எடுத்து அவனது குழிந்த உள்ளங்கைக்குள் போட்டேன், மிக மெலிதான சப்தங்கூட இல்லை. 
- 'அவை அனைத்தையும் நீங்கள் எனக்குத் தர வேண்டும்' என்றான் அவன். அனைத்தையும் கொடுக்காத ஒருவன் எதையும் கொடுத்திருப்பதில்லை . : 
, " 
நான் புரிந்துகொண்டேன். சொன்னேன் . . . . 
மத் 14: 
'என் பிச்சை ஒரு சாபமாயிருக்கும் என்பதை நீ தெரிந்துகொள்ள வேண்டும்.' 
'ஒருவேளை அந்த அன்பளிப்புதான் நான் பெற அனுமதிக்கப்பட்ட ஒரே அன்பளிப்பாயிருக்கும். நான் பாவம் செய்திருக்கிறேன். 
அவனுடைய குழிந்த உள்ளங்கைக்குள் அனைத்து கற்களையும் போட்டேன். கடலின் ஆழத்துக்குள் விழுவது போல் சிறிதளவு கூடச் சத்தமின்றி அவை விழுந்தன. 
பிறகு அந்த மனிதன் மறுபடி பேசினான். 
'உங்கள் அன்பளிப்பு எனக்கு என்னவென்று இன்னும் எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான் உங்களுக்கு அளித்தது தெய்வீக அச்சமூட்டும் ஒன்று. உங்களது இரவுகளையும், பகல்களையும், அறிவையும், பழக்கவழக்கங்களையும், உலகத்தையும் நீங்கள் வைத்துக்கொள்ளலாம்'. 
அந்தக் குருட்டு யாசகனின் காலடிகளையோ, விடியலுக்குள் அவன் மறைவதையோ நான் கேட்கவோ பாாமையோ இல்லை . இப்ப --- -- 

தமிழில் : ரவிஷங்கர் ஜெர்லேஸ் - 
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
பவளக்கொடி 0 68 
கடற்கரையில் கிடக்கும் பெண் : 

சுரேந்திர பிரகாஷ் 
( சதாத் ஹாசன் மாண்டோவிற்குப்பின், உருது சிறுகதைக்கு புதுவடிவமும் புதுக் கடையாடலும் தந்து வளர்த்தெடுத்தவர்களுள் சுரேந்திர பிரகாஷ் ஒருவர். அவரது குறியீடுகள் வித்தியாசமான பணியாற்றினர். அவரது உரைநடை அழகானது. அந்நடையில் மிகுந்திருப்பது முரண்சுவையா சோகமா என்று கூற இயலாதிருக்கும். வன்முறையும் பயங்கரமும் அடங்கிய குரலில் கூறப்பட்டிருக்கும். தன் உணர்வுகளையும் உரைநடையையும் இறுக்கமான கட்டுக்குள் வைத்திருப்பார். சில கதைகள் தொன்மங்களை உருவாக்கும் ஆற்றல் கொண்டிருந்தன. ஆத்திரத்தையும் வேதனையினையும் முரண்சுவையாக, தொன்மவரைவாக மாற்றிவிடுவார். பிரபஞ்சத்தில் மேலோங்கியிருப்பது மர்மமே என்று கூறுவதாக இருக்கும் அவரது எழுத்து. சாகித்ய அகடெமி 1997 இல் வெளியிட்ட சுரேந்திர பிரகாஷின்' Retelling தொகுப்பிலிருந்து இக்கதை ) 
வேட்டைக்காரன் மிர்கோலுக்கு கண் தெரியாது. அவனுக்கு எப்படிப் பார்வை போனது என்பது பற்றி மர்மமான கதை நிலவியது. இப்போது அவன் வசித்த நகரத்திற்கு விரைந்து செல்லும் மானினை துரத்திச் சென்றபோது அந்நகரம் உருவாகிக் கொண்டிருந்தது. அந்நகரை அடைந்தமாத்திரத்தில், அவனை மூச்சத்திணறும்படி விட்டுவிட்டு, மலைக்குப்பின்னே மாயமாய் மறைந்து போனது. அதுதான் எல்லை, அதனைத் தாண்டிப் போவது தடை செய்யப்பட்டிருந்தது. சட்டம் என்பது மனிதனுக்கு மட்டுமே பொருந்தக்கூடியது என்பதை நினைவில் கொள்ளுங்கள், தனக்கும் சமூகத்திற்கும் நல்லது எது, கெட்டது எது என்பதைப் புரிந்து கொள்ளும் வகையில் கல்விகற்று பண்புடையவனாய் இருப்பன் அவன் மட்டுமே. செல்லுபடியாகும் பாஸ்போர்ட் இல்லாது ஒரு தேசத்திலிருந்து - இன்னொன்றிற்குப் போகக்கூடிய மானுக்கு அது பொருந்தாது. 
இதன் காரணமாக மிர் கோல் அங்கே நின்றுபோனான். , 'பாஸ்போர்ட் இல்லாது இங்கிருந்து போவது தடைசெய்யப்பட்டுள்ளது' என்று மலை அடிவாரத்தில் எழுதிவைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகையைப் பார்த்தான் ....... இருதேசங்களின் ஆட்சியாளர்களது இசைவைப் பெற்றே இச்சட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தது. 
அது தனது தோல்வியெனும் தீவிர உணர்வு மிர்கோலுக்கு இருந்தது. தனது இயலாமை பற்றி வருந்தினான், மனிதனாய் இருப்பதற்கு வெட்கப்பட்டான். வலது கையில் கனக்கும் துப்பாக்கியைப் பற்றியபடி பெருமூச்செறிந்த அவன், சேறுபடிந்த காலணிகளைக் கவனித்தான், நீருற்றிலிருந்து பொங்கும் நீரைப் போல அவன் உடம்பினின்றும் வியர்வை கொட்டியது. தன்னைச் சுற்றிலும் நோட்டம் விட்டான். அவனுக்கு வலப்புறத்தே, புதர்களும் செடிகொடிகளும் மண்டிய சாம்பல் நிறப்பாறைகளைக் கொண்ட மலையிருந்தது ...... அவனுக்கு முன்னே தென்றலில் அசைகின்ற நெடிதுயர்ந்த மரங்களைக் கொண்ட பசியவெளி தொலைதூரத்திற்கு விரிந்து கிடந்தது. அவனுக்கு இடப்பறத்தே பைத்தியத்தைப்போல கரையில் வந்து மோதும் அலைகளைக் கொண்ட ஆழ்கடலும், அவனுக்குப் பின்னே அவன் தாண்டிவந்த காடும் இருந்தன ...... இவற்றுக்கு மத்தியிலே நீலவானின் கீழே எல்லோரது தேவைகளையும் ஈடுசெய்யும் வசதி வாய்ப்புகளுடன் புதியதொரு குடியிருப்பு நிர்மாணிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. நகரின் சுற்றுச்சுவர் ஆளுயரத்திற்கு எழுந்திருக்க, பிரதான வாயில் கட்டுமான நிலையிலிருந்தது. 
பவளக்கொடி 0 48) 
அங்கே அவனுக்கு எல்லாமே இசைவாயிருந்தன. எங்கே வசிப்பதென தீர்மானித்தவன் அங்கேயே வசிக்கத் தொடங்கிவிட்டான். சிலநாட்கள் அவனைச் சுற்றியுள்ள உலகின் அங்கமாகிவிட்டான், அங்குள்ள மற்றவர்கள் அவனை அறிந்து கொண்டனர், அவன் அவர்களுடன் பரிச்சயமாகிப் போனான் ...... பொழுது புலர்ந்தால் போதும், பிரதான வாயிலிருந்து வெளிப்பட்டு துப்பாக்கியடன் கிளம்பி தன்னால் முடிந்ததை வேட்டையாடி மாலைநேரம் திரும்புவது பே?"" இருந்தான். 
* ஒரு மாலைப் போதில், சில முயல்களை வேட்டையாடிவிட்டு திரும்பும்சமயம் விநோதமொன்றைக் கண்டான். 
கன்னங்கரியபெண்ணொருத்தி கடலிலிருந்து வெளிப்பட்டு, கடற்கரை மணலில் தன் சுவடுகளை பதித்துவிட்டு, 
மனம் நோக்கிப் போகத் தொடங்கினாள். அவளது உடல் ரம்மியமானதாயிருந்தது, அவயவம் ஒவ்வொன்றும் அபெறும் சூரிய ஒளியில் பிரகாசித்தது. மிர்கோலின் மனம் அலைபாய்ந்தது. மடிந்துபோன முயல்களுள் ஒன்று, சட்டெனத் தன் விழிகளைத் திறந்து கொட்டாவி விட்டதும் கயிற்றை அவிழ்த்து காட்டின் திசைநோக்கி ஓடியதை கண்ணுற்றான். 
மிர்கோல் மாபெரும் வேட்டைக்காரனாயிருந்தான். ஆனால் இயற்கை வஞ்சகமானதாகையால், தன் பொக்கிஷங்களையெல்லாம் தனியொருவனுக்கே அளித்துவிடுவதில்லை......மிர்கோல் தனது ஆண்மையையிழந்தவனாய் இருந்தான் ....... ஆனால் இம்முயலின் நடவடிக்கை அவன் உடலில் சலனத்தை உண்டுபண்ண, அவன் இதுவரையிலும் உணர்ந்திராத உணர்வொன்றை அனுபவித்தான்... கிளர்ச்சியுற்ற அவன் ஆவேசம் கொண்டவனாக அப்பெண் பின்னே ஒடினான் .... அவள் துரிதகதியில் ஓடத் தொடங்கினாள். மூச்சிரைத்தபடி அவளைத் துரத்திக் கொண்டிருந்தான். மலையின் பின்னே சூரியன் அமிழ்ந்தது. ஒட்டு மொத்த சூழலும் புகைமூட்டமாயிற்று. அப்புகைமூட்டத்தில் குகையொன்றில் நுழைந்த அப்பெண் பார்வையிலிருந்து மறைந்து போனாள். அங்கு விரைந்து சென்றவன், குகையின் உள்ளே இருள் கவிந்து எதுவும் புலப்படாதிருப்பதைக் கண்டான். "ஏ பெண்ணே ! எங்கேயிருக்கிறாய்? உன்னைப் பார்க்க ஆசைப்படுகிறேன். என் வாழ்வுக்கு அத்தியாவசியமானவளாகிவிட்டாய் .......என்று கூச்சலிட்டான். 
4 வேட்டைக்காரன் மிர்கோலெ! உள்ளே வர முயலாதே. வாசலைத் தாண்டியிருக்கும் பூமி உன்மீது சுவாலைகளை கொட்டும், உன்னுள்ளும் வெளியும் எரியும் அக்கினியால் சாம்பலாகிவிடுவாய் .... என்னை அடைய விரும்பினால் ஆண்டுக்கணக்கில் நீ முயலவேண்டும். அப்போதுதான் என்னுடன் கூடும் ஆனந்தம் உனக்கு கிட்டும் ...... குகையின் உள்ளிருந்து கன்னங்கரியப் பெண்ணின் சங்கீத குரல் கேட்டது, அக்குரல் அவளது உடலைவிட ரம்யமாயிருந்தது "கையில் அவன் பற்றியிருந்த துப்பாக்கி நடுங்கிற்று. கோபத்தால் அவனுடல் துடித்தது, கல்லொன்றை எடுத்து குகைக்குள் எறிந்து சீற்றத்துடன் கத்தினான் : "நானொரு ஆண், நீ சொல்வதை நம்பவில்லை நான். நீயாக உன்னை வழங்காத போனால் என் துப்பாக்கியை பயன்படுத்த நேரிடும்". 
வேதனைப்படும் கத்தலுடன் சேர்ந்து சீற்றம் கொண்ட குரல் வெளிப்பட்டது : "என்மீது கல்லெறிந்திருக்கிறாய் ... ஒவ்வொரு நாளும் இதே வேளையில் இனிமேல் இங்கு வந்து என்மீது கல்லெறிய வேண்டும் என்பது இப்போது விதிக்கப்பட்டுவிட்டது. இதனை மீறும் நாளில் என் சீற்றம் உன்மீது கவிந்து உன்னை விழுங்கி விடும்." அப்போது மின்னல் வெட்டியது, இடி இடித்து ... 150ரமும் இருள் கவிழ்ந்தது. மிர்கோல் கலவரமுற்றான். கையில் அவள் பற்றியிருந்த துப்பாக்கியும் தோளி) (எழங்கும் செத்த முயல்களும் மழையில் நனைந்து போயின, குளிரில் நடுக்கத்துடன் கிளம்பியவன் வீடு சேர்ந்த பின்னர்தான் ஓய்வெடுக்க முடிந்தது. - 
மறுநாள் காலையில் மிர்கோல் முழுமையான மனிதனாயிருந்தான் ...... அதன் பின்னே, ஒருத்தி மாற் இன்னொருத்தியாக பலருடன் உறவு கொண்டு எல்லையற்ற ஆனந்தமடைந்தான். இப்போது அவனால் நெருங்கி வரு மிருகத்தின் அல்லது படபடக்கும் பறவையின் சப்தத்தைக் கொண்டே சுட்டுவீழ்த்த முடியும் என்பதால் மிகவு சந்தோஷமாயிருந்தான். காட்டில் வேட்டையாடிவிட்டுத் திரும்புகின்ற ஒவ்வொரு மாலையிலும், குகை வாசலில் நின் 
களே கல்லொன்றை எறிவான். அப்போது இருளில் அப்பெண்ணின் உள்ளடங்கிய சிரிப்புக் குரல் கேட்கு சதியற்றவனாக வீடு நோக்கித் திரும்புவான் ...... அப்போது அந்நகரம் முழுதும் மக்களால் நிரம்பிவிட்டது. 
ஆண்டுக்கணக்கில் அவன் இப்பழக்கத்தை தொடர்ந்து வந்தான் . . . . . ஒரு நாள் சூரியன் உதிக்கா, காலைப்பனிமூட்டம் நாலாதிசையிலும் கவிந்துவிட்டது. கைக்கெட்டிய தூரத்திலுள்ளதைக்கூட காணமுடியாத வகையில் மட்டம் அடர்த்தியாயிருந்தது. இரவெல்லாம் அவனுடன் தங்கியிருந்த, நகரின் மாபெரும் அழகியானவள் அவ படுக்கையில் கிடந்தாள். டல்லாக. உணர்வுகளில் தன் உடல் ஆழ்ந்திருக்க அவள் இன்னும் தூக்கத்திலிருந்தாள். 
அழகிய வடிவு கொண்ட அவளின் மிருதுவான உடலில் அவன் கையைப்படரவிட்டான். சிறிதே சலனமுற்றப் புன்னகைத்த அவள் தொடர்ந்து தூங்கினாள். பறவைகளும் மிருகங்களும் தத்தமது புகலிடங்களில் இன்று ஓய்வுகொள்ளும் என்பதால் இன்று வேட்டைக்குப் போக வேண்டாம் என்று மிர்கோல் தீர்மானித்தான். கதகதக்கும் அப்பெண்ணின் உடலைச் சேர்த்தணைத்தபடி தூங்கிப் போனான்..........யதார்த்தத்துடனான தொடர்பை இழந்தான் .... அந்த நெருங்குவதற்குள் மழை பெய்யத் தொடங்கிற்று. 
அடுத்தநாள் மிர்கோல் வேட்டையாட ஆயத்தமானதும் விழிகளை உயர்த்தி குகையை நோக்கிப் பார்த்தான். வகாய அப்பெண் குகை வாசலில் நின்றிருந்தாள். 'பீதியுற்றிருந்த அவள், சலனமின்றி மிர்கோலின் திசையில் உலகினாள். மாயத்தால் பீடிக்கப்பட்டவனாக குகைநோக்கி மெதுவாகப் போகத் தொடங்கினான் .... அப்புறம் அப்பெண்ணுக்கு முன்னே நின்றுகொண்டிருந்தான். ஒருவார்த்தை உச்சரிக்கும் சக்திகூட அவனுக்கு இல்லாதிருந்தது. 
"வேட்டைக்காரன் மிர்கோலே, நேற்று நீநியமத்தை மீறிவிட்டாய்! நேற்று நீ என்மீது எறியவேண்டிய கல்லுக்கு என்ன நேர்ந்தது? ...... எறிதலைப் பெறவேண்டிய என் அவயவத்திற்கு என்ன நேருமோ .......? உனக்கு நான் வழங்கிய ஆண்மை இயற்கையால் தரப்பட்டதல்ல. தவறாது நாள்தோறும் என்மீது கல்லெறிய வேண்டுமென்பது நிபந்தனை. நீ உறுதிப்பாட்டை மீறிவிட்டாய். ஆதலின் அதன் தண்டனையை ஏற்க ஆயத்தமாகும். இப்போது நீ வாழும் கணமே இறுதியானது. இப்போது நீ விடும் மூச்சே இறுதியானது" ஆர்திரங்கொண்ட விழிகளுடன் அவனைப் பார்த்தபடி , கூறினாள். 
குகையிலிருந்து வெளிவந்த நாகம் ஒன்று அவளின் சமிக்ஞைக்காக காத்திருந்தது அவன் கண்ணில்பட்டது. மிர்கோலின் கண்களின் முன்னே மரணம் நடனமாடத் தொடங்கியது. 
"கருணை காட்ட வேண்டும் பெண்ணே, கருணை காட்ட வேண்டும்! உன் வழிபாட்டுக்காக நான் கல்லெறியவேண்டிய நேற்று, அடர்ந்த பனிமூட்டமும் கனத்த மழையும் இருந்தது ....... இன்று நான் இரு கற்களைப் போடுகிறேன் ...... மிர்கோல் அவளிடம் மன்றாடினான். 
| "இரண்டென்ன, நான்கு கற்களைக் கூட என்மீது எறியலாம்! ஆனால் அக்கல்லின் விதியுடன் பிணைப்புற்ற அக்கணம் ...... திரும்பி ஒருபோதும் வராதே ....... எப்படியாயினும் நீ தண்டனை பெற்றாக வேண்டும்" என்றாள் அப்பெண். கறுத்த நாகம் அவனை நெருங்கத் தொடங்கியது. 
" வேண்டாம், நான் வாழ வேண்டும்!" மிர்கோல் அலறினான். 
"அப்படியானால், உயிர் போன்று மதிப்புவாய்ந்த ஒன்றை நீ இழக்க வேண்டும்!" என்றாள் அப்பெண். 
"அது என்னவாயிருக்கும்?" அவனருகே வந்திருந்த பாம்பு அவளைத் திரும்பி நோக்கிற்று. 
"ஆண்மை அல்லது பார்வை....!" தணிந்த குரலில் அவள் கூறினாள். 

ஒரு கணம் யோசித்துப் பார்த்த மிர்கோல் "பார்வை" என்றான். 
அவள் தனது வலக்கரத்தின் ஆட்காட்டி விரலை வானத்தை நோக்கி உயர்த்தினாள் ....... பாய்ந்தெழுந்த பாம்பின் வாய் அடுத்த கணம் மிர்கோலின் கன்னத்தில் ஒட்டியிருந்தது. கடுமையான வலியை உணர்ந்தான் அவன், அதன் பின் உடலெல்லாம் பற்றி எரிந்தது. திடுமென இருள் அவனைச் சுற்றி இறங்கிற்று. எதுவும் புலப்படவில்லை ,.... அப்பெண்ணோ பாம்போ, மலையோ கடலோ காடோ எதுவும் ....... மிர்கோல் கேவிக்கேவி அழுது கொண்டிருந்தான். 
வேட்டைக்காரன் மிர்கோலால் பார்க்க இயலாது போயிற்று ...... ஆனால் நெருங்கி வரும் மிருகம் மற்றும் படபடக்கும் பறவையின் சப்தத்தைக் கொண்டு நேராகச் சுடமுடிந்தது, ஒரு போதும் குறி தவறவில்லை ......... எல்லாவற்றுக்கும் மேலாய் அவனிடம் ஆண்மையின் செல்வம் மிகுந்திருந்தது. 
பவளக்கொடி 0 50 
ஒரு மாலை வேளையில் வேட்டையாடிவிட்டு திரும்புகையில் குறித்த நேரத்தில் குகை வாயிலில் நன்றாக வழக்கம்போல கல்லொன்றை எடுத்து தனது நிதானப்படி குகையில் எறிந்தான். ஆனால் எதிர் பார்த்தபடி . உள்ளேயிருந்து சப்தமேதும் வரவில்லை. உள்ளடங்கிய சிரிப்போ, வேதனைமிக்க அழுகையோ எதுவும் கேட்கவில்லை. அது அவனைப் பெரிதும் வியப்படையச் செய்தது. இத்தனை ஆண்டுகளில் முழுதும் மெளனம் நிலவியது இதுவே முதல் முறை. எச்சரிக்கை இன்றி அவன் கூச்சலிட்டான் : . 
"ஏ, பெண்ணே , எங்கேயிருக்கிறாய்? என் தினசரிக் கடமையை முடித்துவிட்டேன். ஆனால் உன்னிடமிருந்த பதில் இல்லை. நான் வேட்டையாடியவற்றறுடன் வீடு செல்ல அனுமதி உண்டா?" 
அப்போதும் கூட பதிலேதும் கிடையாது. மலையிலிருந்து கடற்பக்கமாகத் திரும்பி, நகரின் வாயிலை நோக்கி கிளம்பத் தொடங்கினான். அவனது வேட்டைக் காலணிகளுக்கு கீழாக மணல் அமிழ்ந்தது. பயமும் வியப்பும் கலந்த உணர்வில் ஆழ்ந்திருந்தான். எச்சரிக்கையாக முன்னேறிய அவன், தன் நிதானப்படி சரியான திக்கில் போய்க் கொண்டிருந்தபோது ஏதோவொன்றின்மீது இடறினான். மிகுந்த சிரமத்துடன் விழாதிருந்தான். சில அடிகள் பின்சென்று மீண்டும் முன்னகர்ந்த அவன் இடறி வீழ்ந்தான். முழுதுமாய் விரைத்துப் போயிருந்த சில்லிட்ட உடல் மீதுதான் அவன் இடறி வீழ்ந்தது. தன் விரல்களை படரவிட்டு, உணர்ந்து கொள்ளத் தொடங்கினான்....... தலையிலிருந்து முகம்வரையும் ...... முகத்திலிருந்து கழுத்துவரையும் ........... கழுத்திலிருந்து மார்பகம் வரையும் ...... பெண்ணின் உருண்டு திரண்டிருந்த மார்பகம், அப்புறம் அடிவயிறு, உந்திச்சுழிப்புவரையும் ... ஆழத்தின் நடுவே கீழாக ...... அடர்ந்த ரோமக்காட்டிலே ........... அவன் பீதியுற்றான். 
56) 
அவளின் திண்ணிய தொடைகளிலிருந்து விரல்களை இறக்கியவன் அவளின் மெல்லிய பாதங்களின் விரல்களைப் பற்றிக் கொண்டான். 
- "யாரிது? இது ....... இருக்கமுடியுமா ...... ?" இரகசியமாய் தன்னையே கேட்டுக் கொண்டான். " 
இவ்வெண்ணம் மின்னலைப் போல அவளின் மனதில் பளிச்சிட்டபோது...... நெஞ்சைப் பிளந்திடும் கூச்சலொன்று அவன் உதடுகளிலிருந்து கிளம்பிற்று, சட்டென அக்கணத்தில் தன் ஆண்மையை அவன் இழந்துபோனான். திகைப்புற்று, வேட்டையாடியவற்றை அங்கேயே போட்டுவிட்டு, நகரினை நோக்கி விரைந்தான். இன்று அவன் துப்பாக்கி மிகவும் கனப்பதாகத் தோன்றியது. . 
நகாத்துச் சத்திரத்தைக் கடந்து போகையில் குதிரைகளின் குளம்பொலிகளை கேட்டான். அக்குதிரைகளின் வேகத்தை விடவும் துரிதமானகதியில் அவன் இதயம் துடிக்கத் தொடங்கியது ...... வீட்டை அடைந்து, துப்பாக்கியை காமாகப் போட்டுவிட்டு. உடைகளை களையாமலும் காலணிகளைக் கழற்றாமலும் படுக்கையில் விழுந்தான். 
. காலையில் உலவிய செய்தி, வெள்ளைக் குதிரையில் பயணம் செய்த அந்நியன் ஒருவன் நகரத்துச் இரத்தக்கு வந்தான் ...... கம்பம் ஒன்றில் குதிரையைக் கட்டிவிட்டு, அதற்குப் புல்லைப் போட்டான். குதிரை அவனைப் பார்த்து கனைக்கவும் கழுத்தைத் திருப்பவும் தொடங்கியது. அந்நியன் சத்திரத்திற்குள் போனான். தனது இருந்து வயின் பட்டியை எடுத்துக் கொண்டு, வறுத்த கறியை வரவழைத்து உண்டு, அருந்தி முடித்ததும் சோர்வில் காங்கிப்போனான் ....... அன்று காலையில் அத்தூக்கத்திலிருந்து விழிக்கவே இல்லை. அவன் சடலத்தைச் சுற்றிலும் மக்கள் மொய்த்தன, கம்பத்தில் கட்டப் பெற்றிருந்த குதிரை தன் முன்னங்கால்களால் தரையை உதைத்தபடி கனைத்துக் கொண்டிருந்தது. 
வேட்டைக்காரன் மிர்கோல் இச்செய்தியைக் கேட்டதும் நடுநடுங்கினான். அதே சமயத்தில், அந்நகரில் வச் செழிப்புள்ளவளும் மிக்க அழகியுமானவளின் வேலைக்காரி, வரப்போகும் இரவில் அவனுடன் தன் எஜமானி ஆக இருப்பதாக செய்தியுடன் அங்கு வந்தாள். அவளைத் துரத்திவிட்டு, துப்பாக்கியுடன் கடற்கரையை நோக்கி விரைந்தான். 
கடற்கரையில் கிடக்கும் பெண் 0 51 
கடற்கரையில் அப்பெண்ணின் உடலை அவனால் கண்டறிய இயலவில்லை. அவனது வேட்டைப் . பொருள்களையும் காண இயலவில்லை. மலைக்குகையை நோக்கிப் புறப்பட்டான். போய்ச் சேர்ந்ததும், பைத்தியம்போல் கத்தத் தொடங்கினான் ...... "ஏ, பெண்ணே ....... ஏ, பெண்ணே ...... ஏ, பெண்ணே ....." ஆனால் குகையிலிருந்து ஒரு சப்தமும் வரவில்லை. அப்புறம் ஆவேசம் கொண்டவனாய் கற்களைப் பொறுக்கி குகைக்குள் எறியத் தொடங்கினான் ..., அப்போதும் கூட பதிலேதும் இல்லை ......... அப்புறம், காட்டுக்குப் போவதற்குப் பதிலாக, மெல்ல மெல்ல நகரினை நோக்கி நடக்கத் தொடங்கினான். 
அன்று மாலையே, பக்கத்து தேசத்திலே மர்மமான தொற்றுநோய் பரவியிருந்த வதந்தி ஒட்டுமொத்த நகரத்தையும் பற்றிக் கொண்டது ........ இரவில் தூங்கப்போகும் எவரும் காலையில் செத்துக் கிடந்தனர் . . . . அப்போது, சத்திரத்துக்கு வெளியேயிருந்த கம்பத்தில் கட்டப் பெற்றிருந்த குதிரை, கடைசி முறையாக கனைத்துவிட்டு நின்றபடியே தூங்கிவிட்டு தரையில் சாய்ந்து மாய்ந்து போனது என்று இன்னொரு செய்தி வந்தது. 
ஒட்டுமொத்த நகரே விளக்குகளால் பிரகாசித்தது, மக்கள் வீடுகளிலிருந்து கிளம்பி வந்து விதிகளையும் கடைவீதிகளையும் நிறைத்தனர் ......... யாரும் தூங்குவதற்கு தயாராயில்லை . எல்லாரும் இத்தெய்வீக விபரீதம் பற்றியே பேசிக் கொண்டிருந்தனர். பெண்கள் கதவுகளுக்குப் பின்னே நின்று கொண்டிருந்தனர், சிறுவர்கள், பெரியவர்களைப் பார்த்தவாறு அவர்கள் பேசியதை கேட்டுக் கொண்டிருந்தனர். 
ஒருவழியாக அந்த இரவு முடிவுக்கு வந்தது. காலையில் சில சடலங்கள் கடலில் மிதந்தன. அண்டை நாட்டு மக்களது பிரேதங்கள் அவை. தூக்கம் இவ்வளவு அரிதானதாக இவர்களுக்குத் தோன்றக் காரணம் என்ன, அதன் பொருட்டு இவர்கள் ஏன் விலைமதிப்பற்ற உயிரை இழக்க வேண்டும் என்பது குறித்து ஒவ்வொருவரும் மருட்கையுற்றனர். 
வேட்டைக்காரன் மிர்கோல், நகரத்துத் தெருக்களில் தட்டுத் தடுமாறியபடி, சுவர்களில் விரல்களால் தடவிக் கொண்டு, பயங்கரமான இரகசியம் ஒன்றை தனக்குள் ஒளித்திருப்பவன் போன்று, தலையைத் தொங்கப்போட்டவாறு மெதுவாக நடந்து கொண்டிருந்தான் ...... தன் ஆண்மையினையும் பார்வையினையும் இழந்துபோன அக்குருடன்..... அவனால் என்ன பயன் ? ஆனால் அப்போது கூட அவன் அழ விரும்பவில்லை ....... இரக்கமற்ற பாவத்தில் தோளில் துப்பாக்கியை தொங்கவிட்டிருந்தான். 
இரவெல்லாம் முழுநகரமும் விழித்திருந்தது. அது முதல் இரவு. ஏதோ திருவிழா கொண்டாடப்படுவதாய் தோன்றிற்று. இரவு செல்வதற்காக, அங்கங்கே கணப்புகள் முட்டப்பெற்று, அவற்றைச் சூழ்ந்து நின்று மக்கள் அரட்டையடித்துக் கொண்டிருந்தனர். தூங்கி விழுந்த சிறுவர்கள், முரட்டுத்தனமாய் எழுப்பப்பட்டு, விழிப்போடு இருக்குமாறு செய்யப்பட்டனர். 
விழித்திருந்து தம் கனவுகளில் ஆழ்ந்திருப்பதே இளைஞர்களின் ஆசையாய் இருந்தது. 
இவ்விதம் சிலநாட்கள் கழிந்தன. தூக்கம் இல்லாத களைப்பு மக்களின் நரம்புகளைப் பற்றிக் கொண்டது. இரவில் ஏற்றப்பட்ட விளக்குகள் காலையில் அணைக்கப்பட்டனவா என்ற பிரக்ஞைகூட மக்களுக்கு இல்லாதிருந்தது. வியாபாரமனைத்தும் ஸ்தம்பித்துப்போனது. அந் நகரில் நுழைய அந்நியர் பீதியுற்றனர், உள்ளேயே இருந்தவர்கள் சலிப்புற்றனர். விழித்திருப்பதும் உயிர்த்திருப்பதும் தவிர வேறெதுவும் அவர்களுக்கு ஆர்வமூட்டவில்லை. 
அப்புறம், திடீரென சிறுவர்கள் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டனர். விழித்திருக்கச் செய்வதற்காக அவ்வப்போது அறை வாங்கினர், உத்தரங்களின் கயிறுகளுடன் தம் கூந்தலைப் பிணைத்துக் கொண்டிருந்த பெண்டிர், தூங்கி விழுந்ததும் உஷார்படுத்தப்பட்டனர் கயிற்றின் இழுப்பாய், தூங்கி விழுவோரைக் கொண்டு செல்லும் மரணத்திலிருந்து தம்மைக் காத்துக் கொள்வதற்காக ஆண்கள், தம் நகங்களைக் கடித்துக் கொண்டிருந்தனர் . . . இப்போது, விழித்திருப்பதும் உஷாராயிருப்பதும் சாபமாகிக் கொண்டிருந்தது.. 
தொடர்ந்து விழித்திருப்பதும் இப்போது சாவுக்கான காரணமாகிவிட்டது. நகரின் திறந்த வெளிகளில் எல்லாம் அலைபாய்ந்து கொண்டிருந்த மக்களின் விழிகள், தொடர்ச்சியாக தூக்கமில்லாததால், சிவந்துபோயின, கயிற்றின் இழுப்பால் உண்டாகும் வலிக்குப் பெண்கள் பழகிப்போயினர், மீண்டும் மீண்டும் சிறுவரை அறைந்தது பயனற்றுப்போனது, நின்ற நிலையில் நிலைகுலைந்து வீழ்ந்து மாண்டனர் மக்கள். 
பவளக்கொடி 0 52 
இப்போது பிரச்னை, தூக்கத்திலிருந்து வந்த புலப்படாத சாவு அல்ல. உயிர்த்திருப்பதாலும் ராயிருப்பதாலும் வரும் சாவே இப்போது பெரும் பிரச்னையாயிருந்தது. தம்மிடம் இன்னும் ஜீவன் எஞ்சியுள்ள தகரின் பெரியவர்கள் விழிப்பு நிலையிலேயே மடிகின்றவர்களைக் குறித்து விவாதிக்கத் தொடங்கினர். தாங்கும் வாற்றலை இழந்துபோய் சிவந்துபோன விழிகள் திறந்தபடியே, நின்ற நிலையிலேயே மடிந்து போயினர் . . . . சாவிடமிருந்து தப்பித்தல் இல்லை என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்திருந்தனர் .... தூக்கமோ விழிப்போ எல்லாம் வருமாறு விதிக்கப்பட்டிருந்தது. : இதனால் நகரின் புத்திமான்கள், விழித்த நிலையில் மரிப்போர் உயிர்த்தியாகியாக ' கருதப்பட வேண்டுமென தீர்மானித்தனர்; தூக்கத்தை கட்டுப்படுத்த முடியாது தலையைத் தாழ்த்துபவர் கோழையாகக் 
கருதப்படவேண்டும். கோழையின் மரணத்தை அடைவதற்கு இப்போது யாரும் விருப்பம் கொள்ளவில்லை. 
வேட்டைக்காரன் மிர்கோல், கடைசி முயற்சியாக குகை வாசலுக்குச் சென்று, கல்லெடுத்து உளளே எறந்தான. ஆனால் உள்ளேயிருந்து எந்தப் பதிலுமில்லை. தூக்கமின்மையால் அவன் சோர்ந்துபோயிருந்தான். கடைசியாக அவன் வேட்டைக்குப்போய் பலநாட்கள் ஆகியிருந்தன. அவனது துப்பாக்கி நுனி பூமிப்பரப்பைத் தட்டிக் ' கொண்டிருந்தது. இப்போது காட்டை நோக்கிக் கிளம்பினான். அவனது காலடிகள் கனத்திருந்தன, சிரமத்துடன் நடந்து கொண்டிருந்தான். அவன் தலை தாழ்ந்திருந்தது. இனிமேல் எட்டுவைக்க இயலாது என்பதை சட்டென உணர்ந்தான். கலவரமுற்ற அவன் அலறினான் .... "வேண்டாம்! .... உயிர்த்திருப்பதற்காக என் பார்வையைக்கூட தியாகம் செய்தேன் .... பேடியின் வாழ்வை ஏற்றுக் கொண்டேன் .... சாக விரும்புகிறேன்!" 
துப்பாக்கியை உயர்த்தினான்... அது மிகவும் சோர்வூட்டுவதாயிருந்தது. அப்போது மின்னலைப்போல ஒர் எண்ணம் பளிச்சிட்டது. கன்னத்தில் துப்பாக்கியைப் பதித்து விசையை அழுத்தினான் .... பயங்கரமான சப்தம் அதிர்ந்தது . . . . சில பறவைகள் மரங்களிலிருந்து அலறியடித்து விரைந்தன, முயல் காட்டுக்குள் பதுங்கியது; மிர்கோலின் தோளிலிருந்து தாவிச்சென்று தப்பித்தது; காதை உயர்த்தி ஒரு புதரிலிருந்து இன்னொன்றுக்கு ஒடியது. 
கடும் வேதனையில் மிர்கோல் கத்தினான் .... கன்னத்தை தடவினான்..... விரல்களில் திரவம் பட்டது... அது குருதி..... ஆனால் அவன் உடலெங்கும் தூக்கத்தைப் போன்ற ஒன்றைக் காணவில்லை .... விழித்திருப்பதற்கு காயம் ஒன்று வேண்டும் என்பதை அவன் உணர்ந்து கொண்டான் .... இத்தகவலைத் தெரிவிப்பதற்காக நகரத்தை நோக்கி விரைந்தான். 
குருட்டு வேட்டைக்காரன் மிர்கோல், நகரின் பிரதான வாயிலை நொண்டி நொண்டி வந்து சேர்ந்தான் .... இது அவனுக்கு நிகழ்ந்து பல நாட்கள் ஆகியிருந்தன. இதற்கிடையில், பெரும் எண்ணிக்கையில் உயிர்த்தியாகிகளின் சாவினைப் பலர் அடைந்தனர். அது பகலா இரவா என்பது பற்றிக் கூட அவனுக்குத் தெரியவில்லை . அவனைச் கற்றிலாம் மம நிசப்தம் .... அவன் கன்னத்தில் கடுமையான வலி. அவனால் எதனையும் காண இயலவில்லை .... அங்குமிங்குமாக உயிர்த்தியாகிகளின் சடலங்கள் மீது அவன் கால்கள் தடுக்கின. தடுக்கியும் விழுந்தும் நகரின் மையத்தை வந்து சேர்ந்தான். தட்டுத்தடுமாறி மேடை மீது ஏறி, தன் வல்லமையையெல்லாம் ஒன்று திரட்டி, துப்பாக்கியை தோள்மீது வைத்து, சிப்பாய்போல் நின்றான். மக்களுக்கு அழைப்பு விடுத்தான் : 
"பிரஜைகளே ... வாழ்வின் இரகசியத்தை கண்டறிந்திருக்கிறேன். ஒருமுறை நான் வேட்டையாடிவிட்டு காட்டிலிருந்து திரும்புகையில், கடலிலிருந்து கன்னங்கரிய பெண்ணொருத்தி வெளிப்பட்டு மலையை நோக்கிச் 
க்குச் சொல்ல விரும்புகிறேன்.... அப்புறம் என்ன நிகழ்ந்தது என்பது சென்றதை நான் பார்த்தேன் என்பதை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். அப்பறம் என்ன 
முக்கியமில்லை .. . . . ஆனால் முக்கியமானது, நீங்கள் உயிர்த்திருக்க விரும்பினால், நீங்கள் விழித்திருந்து உஷாராயிருக்க வேண்டும் .... அதற்கென உங்களுக்கு ஒரு காயம் தேவை .... . அக்காயம் . .. ."திடீரென அவன் மௌனமானான். யாரும் தன்னைச் செவிமடுக்கவில்லை என உணர்ந்தான். எங்கேயும் சலனமோ சப்கமோ எதுவுமில்லை ; அவன் சொல்வதைக் கேட்க யாருமில்லை .... அப்போது அவன் உரத்த குரலில் மீண்டும் கூறினான்: 
"என் குரலைக் கேட்கிறீர்களா?" ஆனால் பதிலில்லை. குருட்டுவிழிகளால் வெளியை அவன் நோக்க நோக்க . விழிகள் கண்ணீரால் நிரம்பி, உதடுகளை நோக்கி விழத் தொடங்கியது கண்ணீர். 
வேட்டைக்காரன் மிர்கோல் குருடாயிருந்தான். அவன் சொல்வதைக் கேட்க நகரில் y( நவருமில்லை என்பதை அறிய இயலாதவனாயிருந்தான் .... ஆனால் நகரம் முழுதும் காலியாகிவிட்டது என்பதை ஒருவ:6)கப்பில் 2-ணர்நது கொண்டான். சூரியனின் கிரணங்கள் வீடுகளின் கூரைகள் மீது சிதறிக்கிடந்தன், கழுகுகளும் வல்லுது ரெக்கைகளை விரித்து மெல்லப் பறந்து கொண்டிருந்தன. 
மேடையிலிருந்து மெதுவாக இறங்கியவன், தட்டுத்தடுமாறி நகரின் பிரதான வாயிலிருந்து வெளியே வந்தான். அழுகும் பிணங்களின் நாற்றம் முதல்முறையாக அவன் நாசிகளில் நுழைந்தது, பீதியடைந்து, முன்னோக்கி விரைந்தான். அவன் பாதத்தின் கீழே கடற்கரை மென்மணல் அழுந்த, சட்டென எதன் மீதோ இடறினான். இறந்துபோன முயலின் உடலது...... அதன்கீழ் கைகளை வைத்து அதனை எடுத்தான். மென்முடிகளைக் கொண்ட அதன் உடலை மடிமீது கிடத்தி, அங்கேயே அமர்ந்தான் ...... கடலை நோக்கி தன் முகத்தை திருப்பிக் கொண்டு அதன் விரிந்த பரப்பை அளவிட முயன்றான் .... அவனது துப்பாக்கி அருகே கிடந்தது. அவனது இருப்பு எந்தவித அர்த்தமும் இல்லாது போனதை உணரத் தொடங்கினான். தன்னை நோக்கி விரைந்து வந்து, அதன் கரங்களால் தன்னை ஏந்திக் கொண்டு, கடலின் ஆழத்திற்கு எடுத்துச் செல்லும் அலைக்காக, தனது துப்பாக்கியுடனும் கன்னத்தின் காயத்துடனும் காத்திருக்கத் தொடங்கினான். திடீரென மலைக்குகையிலிருந்து பெண்ணின் அலறல் கேட்டான். அதனைநோக்கி திரும்பினான், ஆனால் இப்போது, மலைக்குகைக்குத் திரும்பிப்போய் கல்லெடுத்து எறிவதற்கான திராணியெதுவும் அவனிடம் இருக்கவில்லை ....... 
தமிழில் : சா. தேவதாஸ் 
பவளக்கொடி 054 
************************************************************************
(கோணங்கியின் பாழி நாவலிலிருந்து) 

" ஞாபகங்களில் சிதறிவாடும் கல்உருவங்கள் சஞ்சலதேவதைகளாய் மனிதர் களைப் பீடித்து பனியில் துயருற்ற கற்கனியை வீட்டுக்குள் நீட்டி மறைந்த வளின் அளகம் விதிர்க்க ஏர் கலந்து முயங்கிய கார்காலம் முல்லைகாடாய் எழுந்தது மெல்ல. நடக்க இருப்பதின் முன்னுணர்வில் சுடரும் முல்லை வெண் பளிங்காய் கற்பரப்பில் ஊர்ந்து செல்லும் முன் கடந்த ஞாபகபடிகம் வில்லுடன் வந்த ரோகி வெண்பளிங்கில் அரியகனியைக் குறிவைத்தபோது ஏற்கனவே கற்குவாளையின் குடத்தில் வீழ்ந்த கனியாயிற்று. விதியின் நிழல் வழியே போய் காவலனிடம் கேட்கிறான் கற்குவேல் அரிய கனி ஒன்று பூவுக்கு ஒரு வேளை பழுத்து என் பிதிர் உறவாய் வரும்போது அது காணாமல் போன தென்ன சொல்வாய் காவலா' 'வெண்பளிங்காய் ரோக உடல் உதிரும் கற்கு வேலே ... உன் அம்பு தொடாத கனி உன் ஞான ரோகத்திலும் தப்பிவிட்ட தென்றால் கிணற்றடியில் நீர் எடுக்க வந்த ஸ்திரீகளிலே சஞ்சல தேவதையான காட்டில் நிற்பவள் கற்குவாளை, அவள் தான் நீரில் படிகம் பார்த்து உள் மறைகிறாள். இந்நேரம் அவள் ஆடுகளின் பின்னே வாங்கரையில் மேய்ந்து கொண்டிருப்பாள். வீடு புகுந்து தேடுவோம்' என்றான். பணிந்த காவலன், கிணத்தடியில் கற்குவாளை மரம் விட்ட அரியகனி அவள் குடத்திலிருந்த நீரில் தகதகத்தது. கையை நுழைத்து எடுத்தான் கற்குவேல். எடுத்த கனி வெறுங் கல்லானது. அதன் அதிசயம் கரைந்தது நீரில். திரும்பவும் நீருக்குள் விட்ட கனி கல்மீனாய் மாறி இசை கொடுக்கும் விந்தையாக மாறி அதிர்ந்தது. எப்போது பழுத்தோம். உதிர்த்ததை யார்யாரெல்லாம் கொண்டு போனார்கள் என அறியாத கிணத்தில் எத்தனையோ காலம் உதிர்ந்த அறியகனி கல்மீன் களாய் உள்ப துங்கி எங்கோ மறைகின்றன பிதிரில். திரும்ப எடுத்தால் கல்லில் எத்தனையோ புராதன விருட்சங்களின் வாசனை. கற்கனியின் ரஸ நாரில் சிற்பிகளின் உளிகள் மறையும் கற்பனைத்தாது உயிருடன் பழுத்திருந்தது. 
கல்லின் மெளனம் கனியெனத் தோற்றம் கொள்ள உட்குடைந்து கல் விதையொன்று கலகலக்கும் ஓசையை கர்ப்பத்தின் ரகசியமாய் புதைத்தது யாரோ. தனித்தனி கனிகளின் ஸ்பரிசத்தை அடைந்த விரல் உணர்வில் தானிய நகரின் மறைபொருள் கலக்கமாயிருந்தது. எத்தனையோ கல்லரவுகளின் சாயைகள் விஷ ஒளியில் தோன்றி அறையெங்கும் நீலம். விருட்சத்தின் நள்ளிரவு நேரத்தில் கனிகவர வந்த வேடரின் அம்புகள் தாறுமாறாய் குறுக் கிட்டுத்தைத்திருக்கும் முனிவன் கணிகையிடம் கொடுத்தகனி இன்னும் தீராமல் வழிவழியாய் வந்து கொண்டிருந்தது அம்புகளின் கோரவரிகளுடன் கன்னிகள் வலம்வந்து கற்கனியை கவரவேண்டி நோன்பிருந்த பசித்தவத்தில் பழுத்தகனி கல்லாய் மாறியது. கடந்த காலத்திலிருந்து வந்த தோற்றம் அழிந்து வர இருக்கும் கலவிகளில் பழுத்து எங்கோ ஆழத்தில் பயண மாகி கொண்டிருந்தது கற்கனி. கடவுளின் அற்புதம் அத்தனையும் அதன் தொலி மேல் உருமாறி இயற்கையெனும் ஆசையை சதாவும் தூண்டிக் கொண்டிருந்தது வாசனையின் ஈர்ப்பில், நேசத்தை ஈடேற்ற வழி திறந்தது கனியில். அதுவோ வெள்ளி நாகம் தீண்டிய விஷவேருடன் தொங்கிக் கொண்டிருக்கிறது. 
பாழி 0 55 
கற்குவாளையின் குடத்துக்கும் கனிக்குமிடையே தீராதபந்தம் இலைகள் படரும். திரும்பவந்த கற்குவாளை முன் கற்கனியுடன் நிற்கிறான் வில்ரோகி. தாகத்திற்கு நீர் கேட்டு வந்தேன்... நெடுந்தூரம் பயணப்பட்டேன்' என்றான் வரையாடுகள் சூழ்ந்து மூச்சுவிட உள்போய் குடத்தில் கைவிட்டு நீரைத் திரட்டி அரிய கனியொன்றை எடுத்து வந்தாள். அதை வாங்கிக்கொண்டு 'இன்னொன்று கொடு' என்றான் ஆசை விஷம் ஏற, திரும்பவும் நீரை விரல் களால் திரட்டி வேறொரு கனி எடுத்தாள் கற்குவாளை. கூரைவீட்டுக்குள் இருட்டில் கொடிபடர்ந்த கற்குவாளை கோபத்தால் கண்தாளமாகி மரமாகிப் பிளந்து உள்மறைந்தாள் வில்ரோகியுடன் அவன் ரோகம் உதிர பூடமாய் நிற்கிறான் கற்குவாளை மரத்தடியில். உடல் நீறு எடுத்து பூசிப்போனாள் கருத்த வருணம். 
- மீண்டும் அரியகனி கற்குவாளை மரத்தில் பழுத்து கிணத்தில் நீர் பார்த்த பிரதிமையில் ஆசைகொண்ட கருத்தவருணம் விதியில் சிக்கி ராவிருட்டில் கிணற்றில் நீர் இறைத்து துணி அலசுகிறாள். தீட்டுத்துணி அலசும் வேலை கழுவிய உதிரம் கரையாமல் நார் நாராய் ஊர்ந்துபோய் மரப்பொந்திலிருந்த வெள்ளி நாகத்தைத் தொட நீல இறகு முளைத்த சர்ப்பமாய் வாலில் விசும்பி அவள் சாயலில் மயங்கிச் சீறியது. யுவன்ரூபமாய் புணர்பாகம் தகுந்த வேளை வெள்ளைக் குதிரை யேறி வருகிறான் வெள்ளி நாதன். 'உனக்கு என்ள வேண்டும் கடைக்கன்னி' அந்த அரியகனி பறித்துத்தா வெள்ளி நாகமே' என்றாள். 
(பாழி நாவலிலிருந்து) 
கோணங்கியின் நாவல் "பாழி படைப்பில் ஆழ்ந்த உள்விழிப் பார்வைக்கும் வாசகப் பார்வைக்குமான பகிர்வாக விமர்சனக் கலந்துரையாடல் பாழி நாவல் (பக்கங்கள் - 498) விலை ரூ 185 வெளியீடு 
தி பார்க்கர் 293, அகமது காம்ப்ளெக்ஸ் ராயப்பேட்டை நெடுஞ்சாலை 
சென்னை -600 014 வாசக வேடனை எதிர்நோக்கி ... 
செப்டம்பர் மாதத்தில் நடைபெறும். நாள், இடம் அழைப்பிதழோடு உங்களைச் சேரும். . 

பவளக்கொடி - 56

No comments:

Post a Comment