தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Saturday, October 26, 2019

நாற்பத்து எட்டுக் கோடி வார்த்தைகளின் மரணம் அல்லது சும்மாகிட சவமே - - கோணங்கி

நாற்பத்து எட்டுக் கோடி வார்த்தைகளின் மரணம் அல்லது சும்மாகிட சவமே - - கோணங்கி
I
பால்வண்ணம் பிள்ளையின் தினக் குறிப்பு: 
இந்த வருஷம் என்ன வார்த்தைகளை   எழுதலாம். நாடக விமர்சனம் எழுதலாமா. டாக்குமெண்டரி சினிமா  பற்றி.. நாவல் எழுதலாமா.வேலைக்கு விண்ணப்பங்கள் எழுதலாமா. அறிவொளி இயக்கத்தில் சேர்ந்து கைநாட்டை மாற்றி எழுதப் படிக்கத்தெரிந்தோரை அபிவிருத்தி செய்யலாமா.சென்றாண்டு அறிவொளி பெற்றோர் 80,000பேர். தினத்தந்தி பேப்பர் சர்குலேஷன் தமிழ் நாட்டில் 50,000 கூடுதல். பாண்டிச்சேரியில் 30,000 கூடியது. 'தோழர்' வந்தார்-'சங்க' த்தில் சேர்ந்தார் ‘மூலதனம்' படித்தார்- ''உலைக்கள' ' த்தில் இரும்பால் அடிபட்டார். 'நாவல் கிழார்' 'சர்க்கரை' உற்பத்தி செய்தார்-வெகுஜனங்கள் சர்க்கரைப் பொங்கலிட்டார்- அதன் மீது ஆரியவேத மந்திரங்கள் ஓதி 'நைவேத்யம்' செய்தார். சும்மா கிட சவமே ...... சும்மா கிட சவமே . .... எத்தனை முறை சொல்ல ... எழுதாட்டி என்ன அப்படி எழுதாமல் போனால் என்ன... சும்மா கிட சவமே ....... 
ஏற்கெனவே 35 பதிப்பகங்கள் பதிப்பிக்க மறுத்து நாவலில் மறுபடி சேர்க்க வேண்டிய எழுத்துகள். நாளைக் காகஇன்று குறித்து வைக்கப்பட்டவை. 'ஒரு வார்த்தையை கண்டு பிடிக்கப் போய் .. தூக்குக் கயிறு சுருங்கத் துடி துடித்த போது மூளை - ரத்தக்குழாய் உடைந்து எல்லா நாளங்களிடையேயும் பயணமான சம்பத் மரணத்தின் விளிம்பில் ஸ்தம்பித்து நின்றபோது.. சம்பத் என்ன சொன்னான் ... என்ன சொன்னான்: 
----------------------------------------------------------------------------------------------------------
பிரபல எழுத்தாளர் குறுமலை சுந்தரம் , 
----------------------------------------------------------------------------------------------------------

'எண்ணங்களைத் துருவி அறியவே ஆசைப்பட்டான். மரணத்தால் முற்றுப்புள்ளி பெறாது, ஆராய்ச்சியின் நுனிக்கொழுந்து வளர வேண்டுமென்ற நினைப்பினால், அவன் ஏற்றுக் கொண்ட சிலுவை அது. அன்று முதல்–ஆம் அது நடந்து வெகுகாலமாகி விட்டது இன்று வரை, ஆசைகள் உந்த அழிவு அவனைக் கைவிடமரணம் என்ற விழிப்பற்ற ஒரு சொப்னாவஸ்தை போல, மூல காரணங்களாலும் நியதிகளாலும் எற்றுண்டு, ஜடத்திற்கும் அதற்கு வேறான பொருளுக்கும் உண்டான ' இடைவெளியில்' அவன் அலைந்து திரிந்தான். ஆசை அவியவில்லை; ஆராய்ச்சி அவிந்து மடிந்து, நியதியையிழந்து விபரீதத்தில் தீவிர கதியில் சென்றது. அவன் இப்பொழுது வேண்டுவது, முன்பு துருவிய இடைவெளி ஆராய்ச்சியன்று; சாதாரணமான மரணம். உடல் இருந்தால் அல்லவா மரணம் கிட்டும்! ஜடமற்ற இத்திரிசங்கு நிலையில் சமூகத்தில் அடிபட்டு நசுங்கியவர்கள் ஆசைப்படும் மோட்ச சாம்ராஜியம் போல், மரண லட்சியம் அவனுக்கு நெடுந்தூரமாயிற்று.' 
'                                                                                                                              பிரம்மராக்ஷஸ்

II
பிரபல கவிஞரும் பத்திரிகையாளருமான ஒருவரின் நாட் - குறிப்பிலிருந்து இடையோட்டம்:

மீனாட்சி பிரொவிஷன் அண்ட் பயர் வுட் ஸ்டோர்ஸ், பூர்வத்தில் பேட்டை பிள்ளை ஒருவரால் பவழக்காரத் தெருவில் நிறுவப்பட்டு, திருநெல்வேலியில் வசிக்கும் பிள்ளைமாரின் சுயஜாதி அபிமானத்தை உபயோகித்து சில காலம் பலசரக்கு வியாபாரம் நடந்தது. அங்கு பெட்டியடியில் மூக்க பிள்ளை தான் குமாஸ்தா. மூக்க பிள்ளை உப்பு புளி பற்று வரவு கணக்கின் மூலமாகவும் படிக்கல்லின் மூலமாகவும் மனித வர்க்கத்தின் சோக நாடகங்களையும் மனித சித்தத்தின் விசித்திர ஓட்டங்களையும் அளந்தவர். மூக்க பிள்ளை கவிஞராக மாறி தராசைப் பிடித்து பல கூண்டுப் புலிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்ததும், பின்னர் அவர் கவிதைகள் பலசரக்கு கமறல்களுக்கு மேல் தாண்டாமல் பிற்காலத்தில் இலக்கிய வியாபாரியாக மாறி பண வசூல், கணக்கு, வியாபாரம் என்ற நாணாவித இலாக்காக்கள் பெருகி இலக்கிய 'மரண விலாஸ்' ஆக மாறியதும் சமீபத்தில் நாடு பிரஸ்தாபித்துக் கொண்டிருந்த விஷயம். மெட்டாபிஷனின் ஆதரைஸ்டு டீலர் கும்பகோணம் பிள்ளைவாள் 27 பேர்களுக்கு 'கருப்பு பூணூல்' அணிவித்து இலக்கியப் பிரவேசம் நடத்தியது சற்று முன் முடிந்த விஷயம். நவீன தி.க.சி களுக்கும் மூனா அருணாசலங்களுக்கும்  ஸ்ரீமான் மூக்க பிள்ளையின் பிடி வாரண்ட்: 

ச.ஞ... எழுதிய கதைகள், த.ந.ப எழுதிய நாவல்கள், ப.ம.ய எழுதிய நாடகங்கள், ந.ப.ம புனைந்த கட்டுரைகள், க.பூ.ச. அமைப்பு மையவாதம். இவற்றை படியுங்கள் என்றார் மூக்கபிள்ளை. லிங்கத்தைக் கட்டி அழுதார் மூக்க பிள்ளை . மரத்தைக் கட்டி அழுத கவிஞனைக் கண்டு மரங்களே தப்பி ஓடுகின்றன. தி.சு.ந என்பவரை பார்க்கும் போது சொன்னது 'புதுமை வேண்டுமானல் சூ.சா.ரு. தாவை படியுங்கள், கொந்தளிப்பு வேண்டுமானால் மு.க. ஜெவைப் படியுங்கள். கலகப்பிரதி வேண்டுமானால் டொ. பா. மேவை படியுங்கள். கவிதை வேண்டுமெனில் 'ரிஷி கஞ்சாஞ்சநேய ஹிரிபரி ஆச்சார்யகோவ்'.வைப் படியுங்கள். 
மரண விலாஸ் 
''பட்டுக் கோட்டையின் பாட்டு - அது 
பதினெட்டு சுவைக்கூட்டு.''- நவகவி மரண விலாஸில் உற்பத்தியாகும் கவிதை- சிறுகதை -லீனியர்- நான் லீனியர்- நாவல்களை எழுதுபவர்களுக்கு பதினெட்டு சுவை கூட்டுவடை பாயாசத்துடன் இலக்கிய விருந்து. யந்திரங்களால் உற்பத்தி செய்து குவிக்கப்படும் பண்டங்கள் இவை. இவற்றை உண்பதால் - இலக்கிய ரஸனை என்பதற்கோ அழகியல் என்பதற்கோ எதிரிகளாகி விடுவார்கள். (நான் அழகியல் எதிரி) கால்ரா பவனில் யாரும் உணவருந்த வேண்டாம். மூன்றாம் உலக நாடுகளில் கால்ராபவனும் மரணவிலாஸும் பல நவீன கரடி வித்தைகள் மூலம் இறக்குமதி செய்யப்படுகிறது. மலட்டுத் தன்மைக்கு எடுத்துக்காட்டு இது.

DATED 1-5-1991 

மே தினம் இந்த வருஷம் ரொம்ப அதிகமா ஒண்ணும் எழுதல; எழுதுனது மொத்தம் 4,20,000 வார்த்தைகள் தான். தினப்புரட்சி பத்திரிகையில் எழுதினதையும் சேத்தாக்க 6, 00, 000 வரும். இந்தக் கணக்கில் பழசையெல்லாம் சேக்குரது சரியா தோணல. 50 டாக்குமெண்டரி படம் பார்த்தேன். மக்களுக்கான சினிமா இயக்கம் துவங்கி திருநெல்வேலியில் மட்டும் ஐநூறு கிளைகள் உதயமானது. 20 வருஷமக்கள் சினிமா திட்டமே இருக்கு. ஆப்லைஃப், சேக்ரிபைஸ் ஆப் பாப்புலால் பொலியா, ஷார்க் காலர்ஸ் ஆப் கோண்டு, டைம்டுரைஸ் . . . . . . 
500 புஸ்தகங்களை புரட்டிப் பார்த்தேன் படிச்சது 200 இருக்கும். 140 கவிதைகள் எழுதினேன். பிரசுரம் ஆகாத கவிதைகள் 260 யும் சேத்தாக்க 400 கவிதை ஆகுது. ஒரு கவிதைக்கு 2 வார்த்தை சேர்த்து தலைப்பு 10+ 2 = 12 வார்த்தைகள் கொண்டிருந்தன ஒவ்வொரு கவிதையம். முழுநீளக் கோவா கலரில் கவிதைகள் போடுரதா 
ஹைதராபாத் எழுத்தாளரிடமிருந்து கடிதங்கள் வந்து . . வந்து சிறு பத்திரிகை விளம்பரம் வந்து அவருக்கு தனி கவனம் எடுத்து நாலு தொகுதியில் இருந்தும் ஒரு வார்த்தையை எடுத்து வார்த்தைக்கு வார்தை சேர்த்து 12,000 எதிரொலிகளை வார்த்தைகளாக்கி நெடுங் கவிதை... நெடுங்காவியம் என ஆந்தாலஜி வெளியீடு தேதி 29-4-1991. அன்று சென்னையில் 41.6 செல்சியஸ் வெயில் அடித்தது. இந்த நாற்றாண்டின் உச்சபட்ச வெயில் என்று முன் பக்கத்திலும் ஆந்தாலஜிக் கவிதை பற்றி பின் பக்கத்திலும் விமர்சனம் வெளியானது. ஸ்ரீமான் பிள்ளையின் பழைய டைரியில்... பாரதி நூற்றாண்டாச்சே நவகவிதை சீரியல் வெளியானது. பாரதி நூற்றாண்டில் எல்லோரும் கவிதை எழுதினார்கள். கவிஞர்களின் பிள்ளைகள் வெளியிட்ட தொகுதிகளுக்கு MGR அரசு காகித மானியம் வழங்கியது. அந்த வருஷம் ஒரு கோடி வார்த்தைகள் தமிழுக்குக் கிடைத்த கொடை என்றார் சின்னத்தம்பி. 
பாரதிதாசன் நூற்றாண்டும் வந்து சேர்ந்தது. பாரதி நூற்பாலைகளும், பல்கலைக்கழகமும், கலைக்டர் வளாகங்களும் தோன்றியது. பெயரிடப்படாத ஸ்தலங்களுக்கு பாரதிதாசன் நூற்றாண்டு நினைவு கவிதைப் பூங்கா என்று பெயர் சூட்டப்பட்டது. கவிதைப் பூங்காவில் அமைக்கப் பட்ட கவியரங்க மேடையில் அந்தர்வன், பூவை-அறு பாலாஜி, தோனி வசந்தன், புரளியன், வாபா செல்லக்கிளி, ராசாக்கனி, சோத்துநிலவன், வேர்க்கிளம்பி, நாடு கலக்கி வன்னியத்தேவன் ஆகியோருக்கு பாரதிதாசன் விருதும் 10,000 பணமுடிப்பும் வழங்கப்பட்டது. 
திருச்சி தேவர்ஹாலின் மேற்கூரைத் தகரங்களில் தட தடத்த கவிதைகளால் தகரங்கள் மேலேயிருந்து கீமே விழுந்தபோது 26 ரஸிக சிகாமணிகள் காயமுற்று அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்பும், கவிஞர்கள் கலைந்து ஓடிவிட்ட பின்னும் மைக் மட்டும் தனியாக நின்று கவியரங்கம் நடத்திக் கொண்டிருந்தது. 
தலை நகரின் முச்சந்திகளில் நவீன குளியல், கழிப்பறைகள் நிர்மானித்தார்.MGR. அவற்றில் பாரதி, பாரதிதாசன் . . . நூற்றாண்டு நினைவு நவீன குளியல், கழிப்பறைகள் என்று பெயர்ப் பலகை மாட்டி திறப்பு விழாக்கள் நடத்தினார் கருணாநிதி. நினைவுக் கழிப்பிடங்கள் ஏலம் விடப்பட்டு நலிவுற்ற பிரிவு தொண்டர்களுக்கு வாழ்க்கைப் பாதுகாப்பளித்தன கழக அரசுகள். அப்போது ஊர் சுற்றிக் கொண்டி ருந்த ஒரு நவீன கவிஞர் அவசரமாய் கட்டண கழிப்பிடம் சென்றார். வெகு பாடுபட்டு மலச்சிக்கலில் இருந்து விடுபட்டு உச்சத்தில் ,ங்கப்பா...... பாரதி தாசா' என்று உள்ளே இருந்து நினைவு கூர்ந்தார். அவர் கழிப்பறையை விட்டு வெளி வந்தபோது பாரதிதாசன் நூற்றாண்டு கழிப்பறைகளுக்கு அருகில் குஷ்டரோகிகள் பிச்சைக்காரிகள் குழந்தைகள் குடியமர்த்தப்பட்டிருந்தார்கள். அண்ணா சிலையில் இருந்த, ஒரு ஆள்க் காட்டி விரல் காட்டிய இடத் தில் 'மரண விலாஸ்' ஹோட்டலில் இலக்கியவாதிகளின் நெரிசல் அதிகமாக இருந்தது கண்டு ஓரமாய் நடந்தார். பாரதிதாசன் நூற்றாண்டு மலர் 13 ஆவது பதிப்பு மிகுந்த பரபரப்பாக விற்கப்பட்டு வந்த சாலையோரங்களில் நடந்து மறைந்தார் கவிஞர். 

சும்மா கிட சவமே 

III

பிரஞ்சு சஞ்சிகையொன்றில் 'வி. வியின் நாட்குறிப்புகள்' நாவலைப் பற்றி ஸ்ரீமான் பால்வண்ணம்பிள்ளையின் விமர்சனம் 25-4-1991.
பனை மரத்தில் ஊசியை சொருவிக் கொண்டு நடந்த பரமார்த்த குருவின் சீடர்களைப் போல் பிரபல எழுத்தாளர் வி.வி.யின் 'கட்டவுட்'டை இந்தக் கள்ளச்சீடர்கள் கதை, கவிதை, கட்டுரை, நாவல், பேச்சு, மூச்சு வரை தூக்சிச் சுமப்பது ஜெயலலிதா கருணாநிதி எம்ஜியார் கட்டவுட் களை தூக்கி நடந்த கழகத்தொண்டர்களின் பத்தாவது பாராளுமன்றத் தேர்தலின் கரடிவித்தைகளுக்கு ஒப்பாகும் இந்த எழுத்தும்போக்கும் அச்சுவடிவத்தில் வந்து கண்களில் கத்தியை ஆழமாய் சொருவுவதை அனுபவித்தவனே சொல்வதில்லை. ஆசையும் சொந்தரசனைகளும் இலக்கிய விமர்சனத்தில் செல்லுபடி ஆவதில்லை.பரங்கிக்காய் குதிரை முட்டை ஆகிவிட்டது. பாரீஸ் தெருக்களில் 'ஈசாவஸ்யோபனிஷத்' புத்தகத்தோடு ஆல்பெர் காமுவை பார்க்க அலைந்து கொண்டிருந்த திருவாளர் வி.வி; பாரீஸ் தெருக்களில் அன்னாடம் விற்கப்படும் புஸ்தகங்களை வாங்க அன்னாடம் வந்து செல்லும் தமிழ்க்கவிஞர் 'ரிஷிகஞ்சாஞ்சநேய ஹிரிபரி ஹாச்சார்ய கோவ்' சுருக்கமாக 'கோவ்' அவர்களை சந்தித்து கை குலுக்கிக் கொண்டார். பிரிந்து சென்றார். தமிழ் நாட்டில் பிரபல மடைந்த நாவல்களை பாரிஸில் தான் வரவேற்கிறார்கள் என்று மு.போ. எழுத்தாளர் ச.த.ரா. 'என் தோழர்' நாவலை பிரஞ்சு பெண் ஷபீனா மேரிக்கு அர்ப்பணித்து அது 17 ருஷ்ய தேசீய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுக் கொண்டிருந்தபோது தான் ' பிரஸ்த்தொரேய்க்கா ' தீவிரமடைந்தது. 
ஆனால் திருவாளர் வி.வி., ச.த.ரா வையெல்லாம் சுண்டைக் காயாக்கிவிட்டு பாரீஸ் தெருவில் அலைந்து கொண்டிருந்தார். பெரும் மன நெருக்கடிக்கு உள்ளானவராயிருந்தார். 

பாரீஸ் நகருக்கு வெளியில் செங்குத்துப் பாறை மீது இருந்த ஆல்பெர் காமுவின் வீடு அடிக்கடி புயலுக்கு ஆட்பட்டு கதவுகளும் ஜன்னல்களும் தாமே அடித்துக் கொண்டன. 
வீட்டுக்கு வெளியே புயலில் அகப்பட்டுக் கொண்டு மிக மோசமான நெருக்கடியையும் பேரின்ப நிலையையும் அடைந்த வி.வி. சவரக்கத்தி போன்ற மொழி வேண்டி காமு வீட்டு கதவுகளை ரகஸியமாக பார்த்தபடி இருந்தார். புயலுக்குப் பிந்தியும் கூட எந்தப் பொருளும் எதுவாகவும் மாறாமல் இருந்தது. வி. வியின் மெலிந்த திரேகத்தையும் ஒழுங்கற்ற அவரது ஆடையையும் கண்டு மன வருத்தம் அடைந்த காமுவின் வழக்கமான ழான்தெரு முடி ஒப்பனையாளன் ஜுன் மெரி உல்கா ''ஏன் சார்.... இப்படி இருக்கிறீர்கள் என்ன ஓய்!'' என்றதற்கு என்னைக் கவனிக்கும் போது கூட பொழுது வீணாகிறதே சார்'' என்று சலூனில் சுழல் நாற்காலியில் சாய்ந்து கொண்டிருந்தார் (P 104) 
ழான் தெரு முடி ஒப்பனையாளன் ஜுன் மெரி உல்கா தன் வாடிக்கையாளர்களில் ஒருவரான 'கோவி'டம் சொல்லும் போது, பாளையங்கோட்டை பப்ளிக் லைபிரெரி பராமரிப்பற்றுப் போய் சிதிலமடைந்தும் பல புஸ்தகங்களும் மொழி பெயர்ப்புகளும் கவிதைகளும் சாஸ்திரங்களும் திருடு போய்விட்டன என்றான். 
இதை கேட்டபடியே இருந்த திருவாளர் வி.வி. நூலகப் பராமரிப்பு, புஸ்தகங்களை ஒட்டுவது, வாசகர் வட்டம் ஏற்படுத்தி பைண்டிங் நன்கொடை, லைபிரரிக்கு தண்ணீர் வாளி வாங்கி வைப்பது, புஸ்தக இடுக்குகளில் உள்ள மூட்டைப் பூச்சிகளை குண்டூசி மூலம் நசுக்குவது, டினோ லெக்ஸ் ரெஜினா என்ற மஞ்சள் பூக்கும் புஸ்தக மரங்களை பாளைங்கோட்டையைச் சுற்றி உண்டாக்குவது பற்றி பதிலளித்துக் கொண்டிருந்தார். கவிஞர் கோவ் உணர்ச்சி வசப்பட்டு உன்னதம் . . உன்னதம் என்றார். . 
பெரும் உன்னத முடிவான பிச்சைக்காரனுக்கு பிச்சை இடுவது தீர்மானத்திற்கு வருவதற்குள் 64 காலி விஸ்கி குப்பிகளை சுவரில் எறிந்து உடைத்தார் - வி.வி.பிச்சை இடுவதற்கு எதிராக எந்த குரலும் எழும்பாது என்ற நாவக்கு வந்த போது,பேன்ஸி பனியன் போட்ட அச்சா.. அச்சா...கோவிந்தசாமி என்ற நாவலாசிரியரின் நாவலில் வரும் பனி இரவில் மூத்திரப்பிறைக்கு அருகிலும் அவற்றின் குமட்டலிலும் நீண்ட காலம் தூங்கி வரும் பிளாட்பார வாசிகளில் ஒருவனிடம் ' 'என் நண்பன் உடனே இருபது ரூபாய் நோட்டை எடுத்து ' 'அவனுக்குப் பக்கத்தில் வைக்கவா?'' என்று கேட்டுக் கொண்டே அவனருகே போனான். 

அடேய் முட்டாள்'' என்று கத்தினேன். அவன் கையைப் பிடித்து இழுத்து சற்று தூரத்திலிருந்த நடை பாதை ஓரங்களில் உறங்கும் மனித உருவங்களை எல்லாம்காட்டினேன். 'இப்போது நீ இத்தனை பேருக்கும் இருபது ரூபாய் - நோட்டு வைக்க வேண்டும் - செய் என்றேன்''..-- 
அச்சா .. அச்சா...உன் கருத்தான வசனம் . . . . ஆந்திரா டப்பிங் வசனமாக .. உன்னதமாக-ஆக,  வி. விபும் கோவிந்தசாமியும் சேர்ந்து கும்மியடி . . கோலாட்டம் ஆடு என்று எதிரும் புதிருமாய் குச்சுப்புடி நாட்டியமாடினர். அப்போது தமிழ் நாவலின் சரித்திரம் நடுக் கடலில் நங்கூரம் பாய்ச்சப்பட்டதுதான் நங்கூரத்தை அகற்றவோ கப்பலிலிருந்து நாவல் இலக்கியம் தப்பிக்கவோ முடியாமல் போனது. இப்படி இப்படி லட்சிய முலாம் பூசி மூடினார்கள்.
சும்மா கிடசவமே . . . .
இப்படியாக திருவாளர் வி.வி. குஷ்டரோகியை தேடிய போது குஷ்டரோகி நகரத்திற்குள் மறைந்து போனான். உன்னத முடிவின் செயல்பாடு தேடி தெருத் தெருவாக அலைந்த போது மரப்படியில் குஷ்டரோகியை சந்தித்தார். தான் தேடிய குஷ்டரோகி அவனல்ல என்று தெரிந்த பின்பும் தன் தீர்மானத்தை நிறைவேற்றும் பேருந்துதலோடு வெள்ளி நாணயத்தை எடுத்து குஷ்டரோகியின் முன் வீசியபோது குஷ்டரோகி ஒரு கணம் நிலை குலைந்து போனான்(ப 85)உன்னதச் செயல்பாடு முடிந்த திருப்தியில் வி.வி நிற்கும் போது காசை அவரிடம் தள்ள அவன் கைகளை நாணயத்தின் மீது வைத்தான். பெரும் தத்துவப் பிரச்சினை பூதாகரமாகக் கிளம்பி எது பொருள்.-- எது இருப்பு- எதை நம்புவது-எது தத்துவம் - என்ற சந்தேகங்களோடு பேராசிரியர் சிங்காரவேலன் வீட்டுக்கு ஓடினான் வி.வி. உன்ன தங்கள் சீரழிவதற்காக இர்வெலலாம் தேம்பித் தேம்பி அழுதான். அழுவாதே... அழுவாதே... உனக்கு பத்து பைசா தாரேன் ... என்று உச்சிக்குடும்பி இடுப்பை நெளித்து கூத்தாடுகிறான். 
மு.போ. எழுத்தாளர் கோவிந்தசாமிக்கும் உன்னத எழுத்தாளர் வி. விக்கும் வ.உ.சி உடற்பயிற்சித் கழக்த்தில் நடந்த குஸ்தி சண்டையில் எல்லா எழுத்தாளர். சங்க பயில்வான்களும் வந்து வி.வியிடம் வர்மம்ப்பிடி கற்றுக் கொண்டார்கள். கோவிந்தசாமி உடல் சுளுக்குகளுக்கு இலக்கிய விளக்கெண்ணை தடவி போர்டு மாட்டிக்கொண்டு பிரபல எழுத்தாளர் கோவிந்தசாமி என்ற பட்டம் பெற்றார். எங்கும் பரபுரப்பாக கோவிந்தசாமியின் புகழ் பரவியது . கோவிந்தசாமியிடம் இலக்கியம் பற்றி அபிப்ராயம் கேட்பது பயில்வானிடம்சுளுக்கு - எடுத்துக் கொள்வதற்கு ஒப்பாகும். 

பால்வண்ணம் பிள்ளையின் பாய்ச்சல்: குஷ்டரோகியின் தெருவைப் பற்றி பால்வண்ணம் பிள்ளையின் வர்ணனை: 
வி.வியின் வெள்ளி நாணயத்தை அவன் விரல்களில்லாத கைகைளால் தொட்டு அந்தரத்தில் நிறுத்தி வேடிக்கை காட்டினான். தன் நெருப்புப் பற்றும் பார்வையால் இரு துவாரமிட்டு தன் அழுக்குச் சட்டையில் புதைந்திருந்த ஊசிநூலை எடுத்து தன் சட்டையில் 1003வது பித்தானாக தைத்துக் கொண்டான். அவன் ஒவ்வொரு நாளும் கண்டு வந்த திருவாளர் வி.வியின் முகங்கள் குஷ்டரோகக் குழிகளுக்குள் கைகால் இழத்து முகமழிந்து ஒரு வெள்ளி நாணயமாகச் சுருங்கிப் போ வதை அன்றாடம் கண்டு வந்தான். 
அவன் தெருவில் கக்கூஸ்களின் குமட்டல்கள், எழுத்தாளர்கள் தலைவர்களின் பெயர்ப் பலகையில் சிரித்த முகத்தின் ஊத்தைகள், வார்த்தைக் கோழை வடிய வைக்கோல் பொம்மைக்குள் வார்த்தைகள் அடைத்த மத்தியதர வர்க்க அறிவுஜீவித் தலைகளில் இருந்து குமட்டும் ஊரிய வைக்கோல் பேச்சுகள், தோவாணத்தில் இரும்புப் பிளேட்டு திறந்தது போல் இரையும் கோடி கோடி வார்த்தைகளின் தொற்றுநோய்கள், மைனர் குற்றவாளிகள் டாப்பர்கள் அபினி விற்போர், பைத்தியமாவதற்கு முன் பிளாட்பார மனிதனின் கண்களில் இருந்த வெறுமை ... பைத்தியம் தொடர்ந்து சிரித்துக் கொண்டிருந்தது. ஒவ்வொரு வினாடியிலும் உலகின் அமைதிக்காக பைத்தியத்தின் சிரிப்பிலிருந்துகடலின் சிரிப்பு....... குஷ்டரோகியின் இருப்பிடம் நோக்கி தலை வணங்கி நிற்கும் நகரத்தின் அனாதையான மரங்கள். அவற்றின் மீது பைத்தியத்தைப் போல் சிரித்துக் கொண்டு வெளிவரும் சூரியன்... 
சூர்யா ... சூர்யா 20 ரூபாயை உன் நண்பன் நீட்ட அதை நீ தடுத்து வசனம் பேசியதும் அந்த வெள்ளி நாணயமும் உன் வசனமும் வி.வியின் உன்னதமும் உன்னதத்திற்கு எதிரான உன் புளுகும் சூர்யா . . .அவன் குஷ்டரோகி. அனாதை ... கால் மேல் கால் போட்டு படுத்தபடி இப் பிரபஞ்ச இயக்கத்தையே தன் வெறுமை நிறைந்த கண் களால் பார்த்துக் கொண்டிருந்தான். 

IV 

"பால்வண்ணம் பிள்ளை'' 

பால் பிரச்சனை அத்துடன் தீர்ந்து போக வில்லை. அவர் மனைவியின் கையில் இரண்டு கெட்டிக் காப்பு இருந்தது. அவளுக்குக் குழந்தையின் மீதிருந்த பாசத்தினால் அந்தக் காப்புகள் மயிலைப் பசுவும், கன்றுக் குட்டியுமாக  மாறின. இரண்டு நாட்கள் கழித்து பால் வண்ணம் பிள்ளை ஆபீஸிலிருந்து வந்து புறவாசலில் கைகால் கழுவச் சென்றபோது உரலடில் கட்டியிருந்த கன்று, வைக்கோல் அசை போட்டிருக்கும் மாட்டைப் பார்த்து'அம்மா' என்று கத்தியது. ‘ஏலா?'' என்று கூப்பிட்டார். மனைவி சிரித்துக் கொண்டே-உள்ளுக்குள் பயம்தான் வந்தாள். ''மாடு எப்பொழுது வந்தது? யார் வாங்கிக் கொடுத்தா? என்றார். ' 'மேல வீட்டு அண்ணாச்சி வாங்கித் தத்தாக பாலு ஒரு படி கறக்குமாம்'' என்றாள். ‘ 'உம்'' என்றார். 
அன்று புதுப்பால், வீட்டுப் பால் காப்பி கொண்டு கணவரைத் தேடினாள். அவர் இல்லை . அதிலிருந்து பிள்ளையவர்கள் காப்பியும், மோரும் சாப்பிடுவதில்லை . | அவர் மனைவிக்கு வருத்தம். ஒரு பக்கம் குழந்தைகள், மற்றொரு பக்கம் புருஷன் என்ற குழந்தை. வம்ச விருத்தி என்ற இயற்கை அவளை வென்றது. இப்படிப் பதினைந்து நாட்கள். மாட்டை என்ன செய்வது? அன்று இரவு எட்டு மணி இருக்கும்.பால் வண்ணம் பிள்ளையும், சுப்புக் கோனாரும் வீட்டினுள் நுழைந்தார்கள். 'மாட்டைப் பாரும் இருபத்தைஞ்சு ரூபாய்'' என்றார். "சாமி, மாடு அறுபது ரூபாய் பெறுமே'' என்றார் சுப்புக்கோனார். ''இருபத்தஞ்சுதான். உனக்காக முப்பது ரூபாய். என்ன? இப்பொழுதே பிடித்துக் கொண்டு போக வேண்டும்!'' 'சாமி ராத்திரியிலா? நாளைக்கி விடியன்ன பிடிச்சிக்கிடுதேன்'' என்றார் சுப்புக்கோனார். ''உம். இப்பவே?'' மாட்டை அவிழ்த்தாகிவிட்டது. மனைவி ''மாடு எழுபத்தஞ்சு ரூபா இல்லே . குழந்தைக்குப் பால் ஆயிற்றே'' என்று தடுத்தாள். "மேலும் வரும்படி வேறு வருகிறதாம்". ''என் புள்ளைகள் நீத்தண்ணி குடிச்சு வளந்துக்கிரும்'' என்றார் பிள்ளை. 

சுப்புக்கோனார் மாட்டை அவிழ்த்துக்கொண்டு போகும் போது மூத்த பையன் அம்மா என் கன்னுக்குட்டி'' என்று எழுந்து உட்கார்ந்து கொண்டு அழுதான். ''சும்மா கிட சவமே'' என்றார் பால் வண்ணம் பிள்ளை . பாரிஸில் ழான் தெருவில் திறந்த வெளி அரங்கில் திரை யிடப்பட்ட குட்டி ஜப்பானில் குழந்தைகள்' பால்வண்ணம் பிள்ளை பார்த்துவிட்டு சொன்னார். ''என் புள்ளைகள் நீத்தண்ணி குடிச்சு வளந்துக்கிரும்'' ''அம்மா என் கன்னுக்குட்டி'' என்று உட்கார்ந்து அழுதான் , பையன். சும்மா கிட சவமே'' என்றார் பால்வண்ணம் பிள்ளை . 
கை கால் வீங்கிய குடியானவர்களும், பிச்சைக்காரர்களும் வண்டிச் சாளரத்திற்கு நேராக குச்சியான கை கால்களும் மொடா மொடா வயிறுகளும் ஆடி அசையும் பணங்காய்த் தலையும் உடைய கோரமான குழந்தைகளைக் காட்டி பிச்சை கேட்கும் பெண்களும் ஒரு பிஸ்கோத்துத் துண்டுக்கு பூவேலை செய்த கைக்குட்டைகளையோ தேசிய ஆடைகளையோ வாங்கலாம். சலாம் சலாம். குட்டி ஜப்பான் ஆனந்த்பட்வர்த்தன் பாம்பே அவர் சிட்டி, ''என் புள்ளை கள் நீத்தண்ணி குடிச்சு வளந்துக்கிடும்'' என்றார் பால் வண்ணம் பிள்ளை. 
இருபது வயதுப்பையன் மவுண்ட் ரோட்டில் இருண்டதார் விரிப்பின் ஓரங்களில் தாளை பொறுக்கித் திரிந்தான். பழைய துணிகளை ' எடுத்து அதிலுள்ள பித்தான்களை அறுத்துத் தன் சட்டையுடன் தைப்பதே அவனது வேலையாக இருந்தது. அவன் வெள்ளை நிற மனித எலும்பால் செய்யப்பட்ட பித்தான்களையே தன் சட்டையோடு இணைத்துக் கொண்டான். (அவன் ஒரு அமைப்பியல்வாதி) மேலும் அவனிடம் பெரிய கோணிப்பை இருந்தது. அதில் இடைவெளி இல்லாமல் பொறுக்கிய தாளை இறுக்கி திணித்துக் கட்டியிருந்தான். அவ்வளவும் அவன் சேகரித்த அச்சுத்தாள். அவற்றையெல்லாம் தன் பேனாவால் திருத்தி எழுதியிருந்தான். வரிக்கு வரி வார்த்தைக்கு வார்த்தை எல்லா எழுத்தையும் திருத்தி எழுதியிருந்தது வியப்பாக இருந்தது. அவனைப் பின் தொடர்ந்து சென்றேன் அவனுக்கே தெரியாமல். திடீரென்று அவன் முன் சென்று என்கையிலிருந்த கறுப்பு நிற கர்நாடக முரசை அவனிடம் கொடுத்தேன். அட்டையிலுள்ள எழுத்து வடிவங்களால் ஆதி ஞாபகம் தோன்ற திரும்பத் திரும்ப வாசித்தான். அவன் இரண்டடிப் பேனா ஆச்சரியத்தால் குதித்துக் கீழே விழுந்து இரண்டாய்ப் பிளந்தது. அதன் உள்ளே இருந்து திருநெல்வேலி மாமுனிவர் எழுந்து நின்றார். நான் லீனியர்.. நான் லீனியர்... என்று பூமி அதிர முழங்கினார். 

திடீரென்று கர்நாடக முரசு அறையப்படும் சத்தம் எங்கும் கேட்டது. அந்த முட்டாள் கர்நாடக முரசை திருத்தி எழுதுவதற்காக குனிந்து போனாவை எடுத்து ஒட்ட வைத்தான். நெல்லை முனிவர் இரண்டடிப் பேனாவுக்குள் சென்று மறைந்தார். ஒவ்வொரு உடைந்த எழுத்தையும் தாள் வைத்து எச்சில் தொட்டு ஒட்டினான். அவன் வெட்டி ஒட்டிய உடைந்த எழுத்துக்களை கீழ்க்கண்டவாறு நாம் வாசிக்கத் துவங்கலாம். கடவுளும் கந்தசாமி பிள்ளையும் டிராம் வண்டியில் ஏறி வந்து மரணவிலாஸில் ரெண்டு கப் காபி அருந்தி விட்டு செல்லாத நோட்டை (100 ரூபாய்) கல்லாவில் இருந்த நெல்லை முனியிடம் கொடுத்துச் சென்றார். அவர் 'திறந்து கிடக்குமொரு தேதியில்லா பற்று வரவு நோட்டில்' கடவுள் கணக்கில் ரெண்டு கப் காபி பற்று எழுதிவைத்தார். 
மரணவிலாஸில் பற்று--வரவு இல்லாத எழுத்தாளர்களே இல்லை. நூறாண்டு காலமாகிறது. மரணவிலாஸிற்கு வராத எழுத்தாளர்களின் எழுத்துகளும் மரணமலரில் இடம் பெறச் செய்வது திருநெல்வேலி முனிவனின் கையில் தான் இருக்கிறது. அம்முனிவர் பாவை கூத்திலே வரும் உச்சிக்குடும்பி. தன்தொந்தியால் இலக்கிய கோட்டைகளை தகர்த்தெறிந்தார். இடுப்பை நெளித்து ஆடுகிறான் உச்சிக்குடும்பி. . டம்கு டம்கு டம்கு . . ரோஜாப்பூக்களால் குல்கந்து தயாரிக்கும் படைப்பு அதிகாரிகளுக்கே மரண விலாஸில் இடம் கலைஞர் மு. கருணாநிதியின் வார்த்தையில் சொல்லப் போனால் '' என்றே அண்ணா அன்றே சொன்னார். நான் கல்கத்தாவிலே சித்தார்த்த சங்கர்ரேயை பார்க்கப் போன போது 'தம்பி கருணாநிதி, தமிழ் நாட்டிலே அதி நவீன மரணவிலாஸ் நடத்தி வரும் கோவிந்தசாமியின் இலக்கியப் பணி எப்படி இருக்கிறது என்று கேட்டார். நான் சொன்னேன் கண்ணீரைத் துடைத்துச் கொண்டு.(அழுதபடி) 
சித்தார்த்த சங்கர் ரே அவர்களே! கோவிந்தசாமியின் இலக்கியப்பணி மரண உற்பத்தியில் இஸ்ரேலையும் விஞ்சும் அளவிற்கு ஆற்றல் மிக்கதாக இருக்கிறது. அதன் துல்லியமான கணக்கை திருநெல்வேலி முனிவரிடம் கேட்டுப் பார்த்தேன். அவர் சொன்னார். . கலைஞர் கருணாநிதி அவர்களே! . . அச்சா. . அச்சா.. கோவிந்தசாமியின் இலக்கியப்பணி. . மூன்றாவது உலக நாடுகளின் மரண உற்பத்தியை 1.3-1.5 சதவீதம் அதிகப்படுத்தியுள்ளது . . 1.3சதவீதத்தை எல்லா இலக்கியவாதிகளும் அந்த 0.2 சதவீதத்தை கோவிந்தசாமியின் ''ஏ. கே 47'' என்ற நாவல் மட்டும் ஈட்டித் தந்துள்ளது என்பதை உங்களிடம் நான் சொல்லிக் கொள்கிறேன் கலைஞரே என்றார் 

திருநெல்வேலி முனிவர். ஆகவே, கோவிந்தசாமியின் குதிரை' என்ற நாவலை மரணவிலாஸில் வைத்து வெளியிடுவதற்கு உங்களுக்கு தேதி குறிப்பிடுகிறேன் . . நீங்கள் அதை ஒப்புக்கொள்ள வேண்டும் ... என்றுகூறி உங்களிடமிருந்தும் கல்கத்தாவிலிருந்தும் விடை பெற்றுக் கொள்கிறேன். தமிழ் வாழ்க!'' வெளிநாட்டு வாணிபம் 
முசிறியும் கொற்கையும் புகாரும் துறைமுகங்களாகத் திகழ்ந்தன. கரையிலே பல கலங்கள் காத்து நின்றன. பின் அமைப்பியலும் இலக்கியமும் ஊழல்களும் போர்டு மானியங்களும் சர்வதேச கண்ணீரும் கப்பல் கப்பலாக இறக்கு மதியாகின. 
ஆடுகளும் கோழிகளும் மென்மயிர் தோலும் பதனிட்ட கவிதைகளும் கலப்பு உர நாவல் மூடைகளும் கொண்டு சென்றார் கோடி கோடியாக . . . . சர்வதேசச் சந்தையிலே நமது பொருள் விற்பனையானது. அந்நியச் செலாவணி கொண்டு குவித்தனர். சிவகாசி காகா பட்டாசுகள் அமெரிக்காவிலே விண்ணை அதிர வைத்தன. கோட் சூட் போட்ட புதிய வணிகக் கூட்டம் அமெரிக்க மேடைகளில் யேல்'' பல்கலைக் கழகத்தில் அண்ணாவைப் போல் முழங்கினர். குட்டி ஜப்பானில் குழந்தைகளுக்கு வெளிநாட்டார் உற்ற நண்பனைப் போல் மானியங்கள் வழங்கி குழந்தைகளின் கண்ணீரை தனியே பிரித்து எடுத்து கப்பலிலே கொண்டு சென்றார். கண்ணீர் பணமாக மாறியது. தீக்குச்சி; தீப்பெட்டி;பொன்வண்டு. பணங்காச்சி மரம். திக்கெட்டும் சென்றுகலைச் செல்வம் கொன்று குவித்திடுவோம்: ஜப்பானிலே பம்பாயிலே பாரிஸிலே குட்டி ஜப்பானுக்கு விருதுகளை அள்ளித்தந்தார். மீனம்பட்டியிலே முன்னூறு பேர் செத்தார். நவீன உல்டா  ரிசிகஞ்சாஞ்சநேயகிரிபரி ஹாச்சார்யகோவ்களுக்கு .. தேவையான வார்த்தை செட்டு : (உ.ம்) தன்னந்தனியாய் தீவில் உலகப் போருக்காக காத்திருக்கும் ஒருவன் சகோதரக் கொலையை நேசித்துப் பாடுகிற கீதம் இசைக் கலைஞர்களை விரட்டியடிக்கிற பிரம்புகள்.வெள்ளி நாக்கு கருப்பு ரத்தம் சொட்டும் இதயம் மோசார்ட் இசை ஜன்னலில் வழிய தூக்குக்கயிறு சுருங்கித் துடி துடித்தது. அவநம்பகம் கிறுக்கிய முகம். தற்கொலைக் கரங்களின் கண்டுபிடிப்புகள். நவீன பாதிப்புகளின் ரத்தக்காடு. மேற் கத்திய குற்றங்களின் தொட்டில். 


மரண விலாஸில் நடந்த நிகழ்ச்சிகள் :
சிறப்புப் பேச்சாளர் பட்டியல்    Words
1 தீப்பொறி ஆறுமுகம் எழுத்தாளர் கோவிந்தசாமி XXX
2 வைரமுத்து படிமங்கள்  XXX
3 சகோ. தினகரன் நிலவ, தாச.வண்ணன்லவ்லவ்லவ்வு XXX
4 வாரியார் கி.ரா. XXX
5 வானம்பாடிகள்' முகில்கள் XXX
6 ஸ்பான்சர் புரோகிராம் ரேடியோ நாடகம் XXX
7 பட்டிமன்றம் நவீன இலக்கியம் XXX
8 நாவல் கிழார், டயர் வால் டீப் XXX.

நமக X நமக X நமக X ஆமென் X ஆமென் X ஆமென்X அல்லேலூயா X அல்லேலூயா X அல்லேலூயா X மந்திர உச்சாடணம்:ஆஷா ஆஷா ஆஷா ஆஷாஆஷாஆஷா ஆஷா இசை: ரிங் ரிங் ரிங் ரிங் ரிங் ரிங்' ரிங் ரிங் ரிங் ரிங் வார்த்தைகள், வண்ணங்கள், குறில், நெடில், நாலடியார், ஈரடிக் குறள் கடல் நடுவே 130 அடி வள்ளுவர் சிலை. வார்த்தைகள் சொற்கள் பாரக்கள் முன் பாரா பின் பாரா அத்தியாயங்கள் எழுத்துக்கள் புள்ளிகள் காமாக்கள், கோடுகள் கோலங்கள் அதிர்வு விழிப்பு முழக்கம் வார்த்தை நடுவில் சப்பணமிட்டு அமர்ந்து அகராதி கோர்த்துக் கொண்டிருந்த மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள். காலம் தின்றது. கறையான் தின்றது. நதியில் எதிர் நீச்சல் போட்ட சுவடிகள் ''அவருடைய வார்த்தையில்சொல்லப் போனால்'' வஞ்சப் புகழ்ச்சி, சிலேடை, பெரியார் சீர்திருத்த எழுத்து, ஜாடை மொழி. தட்டெழுத்து Xerox, Fax, போட்டோ கம்போசிங், லேசர், அச்சுக்கோர்த்தது, புரூப் பார்த்தது, புஸ்தக கடையில் புஸ்தகத் திருடனின் கண்ணில் பட்ட வார்த்தைகள். தாள் பொருக்கி, எந்திரங்களின் முழக்கம். கம்யூட்டரில் புகுந்த நாற்பத்தி எட்டுக் கோடி வார்த்தைகள் கொன்ற சொல் . எழுத்தாளர்பாணி: தட்டு-தீனி-விவாவம். நண்பனுக்கு எழுதிய கடிதத்தில் அவனுக்கு சொல்ல முடியாமல் போன வார்த்தைகள். எல்லா வார்த்தைகளும் இறந்து போக, வெறுமையில் வார்த்தையை தேடிச் சென்ற முட்டாளிடம் அவர்கள் கேட்டு நச்சரித்த கேள்விகள். பாமரனை தூக்கில் மாட்டியபடியே எழுத்தாளர்களும், கல்விமான்களும், கேட்டது. “உன் கடைசி வார்த்தை என்ன?'' கழுத்து நெரிபடும்போது கயிறு தடித்து தடித்து கனத்து கொல்லத் துடித்த போது இடைவெளிக்குள் ரத்த நாளங்கள் புடைத்து அந்த ''ஒரு வார்த்தை '' அவன் இருந்த அடையாளமாக... அவன் நிழலைப் போல தோண்டத் தோண்ட வராததாக அவனது குறியீடாக மாறிப் போயி ருந்தது. நாற்பத்தி எட்டுக் கோடி வார்த்தைகள் மரணமடைந்த பின்னும் அந்த ''வார்த்தை'' இன்னொரு கதைக்குள் ஓடி ஒளிந்து கொண்டது. 



No comments:

Post a Comment