உறவுக் குறிஞ்சியும் பிரிவு நெருஞ்சியும் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)
பாறையாய் உறைந்திருக்கிறது அகம் பகிர்தலற்று.
பேசா வார்த்தைகளின் பாரம் பாசக் கயிறாய்.
மௌனம் மொழியான பொழுது போய் இன்று
யாதும் மாறியது போலானாலும் வேறாத லன்றி
ஊறி வரும் உன் நினைவின் ஈரமும் சாரமும்
வேரூன்றி, சேயாகி யாயாகி எந்தையுமாகி
நின்றான் முத்தத்தில் என் மொத்தமும்
செருக்கழிந்து செத்தொழிந்த பின்பும்
எனபு தோல் போர்த்திய உரு மாறாதிருத்தல் போல்
இருக்கிறேன் இன்னும் பிரிவின் அனலிலும்
இருந்தவாறு சிறகுகள் கரிய ஒருவருமறியாமல்
என் அன்பின் சுடுநெருப்பில் மிகத்
தன்னந்தனியனாய் எரிந்தவாறு.
பாறையாய் உறைந்திருக்கிறது அகம் பகிர்தலற்று.
பேசா வார்த்தைகளின் பாரம் பாசக் கயிறாய்.
மௌனம் மொழியான பொழுது போய் இன்று
யாதும் மாறியது போலானாலும் வேறாத லன்றி
ஊறி வரும் உன் நினைவின் ஈரமும் சாரமும்
வேரூன்றி, சேயாகி யாயாகி எந்தையுமாகி
நின்றான் முத்தத்தில் என் மொத்தமும்
செருக்கழிந்து செத்தொழிந்த பின்பும்
எனபு தோல் போர்த்திய உரு மாறாதிருத்தல் போல்
இருக்கிறேன் இன்னும் பிரிவின் அனலிலும்
இருந்தவாறு சிறகுகள் கரிய ஒருவருமறியாமல்
என் அன்பின் சுடுநெருப்பில் மிகத்
தன்னந்தனியனாய் எரிந்தவாறு.