தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Sunday, June 08, 2014

குருவி பனங்காய் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

குருவி பனங்காய் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

ஊசியிறங்கிய வலியில்உன் நினைவு கலந்தது.
பிறிதொன் றிறங்கப் பின்னும் வலித்த போதும்..
பெறும் நினைவு ஊசி யிறங்காப் போதும்.
காதுங் காதும் வைத்ததா யுறும் வாதையில்
ஆதர வறும் போதில் அதிமதுரத்
தாதுக்க  லைந்திருக்கும் சொல் லளைந்திருக்கும் உள்
உளைந்திருக்கும்
தனிமையே உன் சேய்மையில்  கனக்கும் எனக் கொள்ள
அடர்நெரிசலிலும்  மனந்தோயும் மிகுபாரம்
பிரிவுறுத்தும்  இரவு மட்டும் என்றிலாது
விரவும் வெறுமை சிறுகணமும் பிரியாது.
பொருள் மீறிய வறுமை புரவலர்க்குப் புரியாது.
நாட்பட நாட்பட நீர்த்துக் கெடும் எனப் பட
ஆட்பட்ட நாட்டமெல்லாம் காட்டுத்தீயாகி விட
எந்தையும் தாயுமா யெனை ஏந்திக் கொண்டாடிய வன்
வந்தேகும் வழி செல் சிந்தாநதி தீரத்தில்
சந்தேகத்தில் சிந்தை நிந்தையாக நல்
உரமாகுமோ அன்பை நன்செய்யாக்குமோ சொல்வரி.
விரயமாகா என் கவிதைகள்? கொள்
மருந்தாமோ கொல் வேதனைக்கு? நில்
காக்கைச் சிறகினிலே, கேட்கும் மொழிகளிலே
பார்க்கும் மரங்களிலே, பச்சை நிறந்தனிலே
காளி கண்ணம்மா, பாரதிக்கு; நீ யெனக்கு
கட்டை விர லனுப்பட்டுமா நெருப்பில்
சுட்டெடுத்து?