தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Saturday, September 17, 2016

நீலகண்டப் பறவையைத் தேடி. . . .484.- 509 வங்காள மூலம் : அதீன் பந்த்யோபாத்யாய

நீலகண்டப் பறவையைத் தேடி. . . .484.- 509  வங்காள மூலம் :  அதீன் பந்த்யோபாத்யாய

அவனுக்கு எரிச்சல் அதிகரித்துக்கொண்டு வந்தது. கன்றுக் குட்டி எதையோ பார்த்துப் பயப்பட்டது. அவன் நாற்புறமும் திரும்பிப் பார்த்தான். ஓ, சனியன் பிடித்த அந்தக் கோவில் காளை ! ஹாஜிசாயபுவின் கோவில் மாடு இரண்டு முன்கால்களையும் ஊன்றிக் கொண்டு, பின்னங்கால்களை உயரே தூக்கி, வாலை விறைப்பாக வைத்துக்கொண்டு கொம்புகளால் மண்ணைக் குத்தி எடுத்தது. கன்றுக்குட்டியைப் பயமுறுத்தியது. அது நெல்லைத் தின்றாலும் யாரும் எதுவும் சொல்ல முடியாது. மண்ணைக் குத்தித் தன் பலததைச் சோதித்துப் பார்த்துக் கொண்டது அது. கூர்மையான கொம்புகத்தி முனை போல் பளபளப்பாக இருந்தது. அது இஷ்டம் போல் சுற்றிக்கொண் டிருக்கும். கோவில் மாடு என்று யாரும் அதை ஒன்றும் செய்வதில்லை, அது கொம்புகளை த தீட்டிக்கொல்லன டு ராஜாபோலக் கம்பீரமாகக் கழுததை நீட்டிக்கொண்டு மைதானத் தில் நின்றது. இப்படிப்பட்ட வீரம் நிறைந்த பிராணியைக் கண்டால் பெலுவின் பிராணன் வற்றிவிடுகிறது. அந்தக் கன்றுக் குட்டியைக் கண்டாலே அதை விரட்ட ஓடி வரும் அது. ஒருநாள் அது கன்றுக்குட்டியின் வயிற்றைக் கிழித்துவிடப் போகிறது. ஒரு சாதாரண மிருகத்துக்கா பேலு பயப்படுவான்! அவன் தன் தைரியத்தைக் காட்டிக் கொள்வதற்காக, 'நாசமாப் போன மாடே !' என்று அதைத் திட்டினான்.

திட்டியதோடு திருமதி அடையவில்லை, அவன் பலி கொடுக்க உபயோகிக்கும் கத்தியால், “பிஸ்மில்லா ர கிமானே ரகீம்'' என்று சொல்லி அதன் கழுத்தை வெட்டத் துடித்தான். அவன் உபயோகித்த வசவுகள் யாரைக் குறித்துச் சொல்லப் பட்டவை என்று சொல்வது கஷடம். எந்த மாடு ரொம்ப மோசம் ? அவன் முன்னால் நிற்கும் மாடா, அல்லது ஆகாலுவா ?

அவன் கத்தினான் : "நாசமாப் போன காக்கா ! நாசமாப் போன ஆகாலு.''

கட்டம் போட்ட லுங்கியும், தலையில் துருக்கிக் குல்லாயும் அணிந்துகொண்டு தாடியில் அத்தர் தடவிக்கொண்டு பேலு வீட்டு வாசல் வழியாகப் போனான் ஆகாலு. சிவப்பு நிறத் துருக்கிக் குல்லாய், அதில் ஒரு கறுப்புக் குஞ்சம், காக்கை மாதிரி, "ஏய் ராஸ்கல்! நீ என் பெணடாட்டி மேலே கையை வைக்கிறியா ? நாசமாப் போ க நீ! என் வீட்டு வாசல்லே எப்படிப் போறே, பார்க்கிறேன்" என்று சொல்லி, அவன் தன் வீட்டுவாசலில் கல்யாண முருங்கைக் கிளைகளை நட்டு வேலி போட்டுவிட்டான். "இது பொது வழியில்லை, மியான் ! இது ரஸ்தா இல்லே!" ஆனால் அவன காலையில் எழுந்து பார்த்தபோது வேலியை யாரோ பிய்த்துப்

484போட்டிருந்தார்கள் பீபியின் முகத்தை நிமிர்ந்து பார்க்கக்கூடத் துணிவு ஏற்படவில்லை போலுவுக்கு. அவளைக் கேட்டால் எரிந்து விழுவாள் ; "எனக்கென்ன தெரியும், யார் வேலியைப் பிய்ச்சு எறிஞ்சாங்க?" என்று.

"நாசமாப் போறவ! உனக்குத் தெரியாதாக்கும் !" என்றெல்லாம் அவன் கத்தலாம். ஆனால் இப்போதெல்லாம் அவனுக்கு அவளிடம் பயம். ஜப்பர் பச்சை நிறத்தில் கட்டம் போட்ட புடைலை வாங்கிக் கொடுத்தான் அவளுக்கு. வாசனைத் தைலம் வாங்கிக் கொடுத்தான். பதிலுக்கு அவள் அவனுக்கு என்ன கொடுத்தாளோ, யாருக்குத் தெரியும் ? பேலு தன் கை நொண்டியாகி விட்டதற்காக எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டான். இப்போது அவனுடைய பீபியிடம் ஒரே ஒரு துண்டும் ஒரு கிழிந்த புடைவையுந்தான் இருக்கின்றன. இரவில் வயலில் கதிர் திருடப் போகும்போது அவள் கிழிந்த புடைவையைக் கட்டிக்கொள்வாள், வீட்டுக்குள் இருக்கும் போது துண்டைத்தான் உடுத்தியிருப்பாள். எப்போதாவது துண்டு ஈரமாகி விட்டால் அதை வேலியின்மேல் காயப்போடுவாள். அப் போது அவள் நிர்வாணந்தான் அநேகமா க என்ன, முற்றிலுந்தான்! சீதாமர வேலி மறைவில் வீடு. எதிரில் புதர், காடு. வேலியின் மறுபுறம் செல்பவர்களுக்குத் தெரியாது வேலியின் மறுபக்கத்தில் பேலுவின் பீபி நிர்வாணமாக உட்கார்ந்துகொண்டு சோறு சமைப்பாள், அல்லது கோதுமை வறுப்பாள், அல்லது மக்காச் சோளம் ஊறவைப்பாள். எந்தக் காலத்தில் எந்தத் தானியம் விளைகிறதோ அதைத் திருடிக்கொண்டு வந்து அதைக் கொண்டு எப்படி ஒரு வருஷத்தைக் கடத்துவது என்று கவலைப்பட்டுக் கொண்டே வேலை செய்வாள் போலுவின் பீபி.

பீபி இப்படி நிர்வாணமாக உள்ளே வேலை செய்யும்போது பேலு வாசலில் உட்கார்ந்து கொண்டு ஹக்கா பிடிப்பான். இடை யிடையே வேலியிடுக்கு வழியே பீபியின் வாழைக் குருத்துப் போன்ற இளமையைப் பார்த்து ரசிப்பான். சரியான பராமரிப்பு இல்லாமல் அந்த இளமை வீணாகிக் கொண் டிருந்தது. அவளுக்குத் தலையில் தடவிக்கொள்ள எண்ணெய் இல்லை. கண்களில் மை தீட்டிக்கொள்ள வழியில்லை. விசேஷ நாட்களில் பீபி கடன் வாங்கித் தலைக்கு எண்ணெய் தடவிக்கொண்டு அலங்கரித்துக் கொண்டால் அவளை அழைத்துக் கொண்டு படகில் உல்லாசப் பிரயாணம் செய்யத் தோன்றும் பேலுவுக்கு.

பேலு வீட்டில் இருந்தால் வாசலில் காவல் காத்துக்கொண் டிருப்பான். யாராவது அங்கே வந்தால் விரல்களால் சுண்டி ஒலி யெழுப்புவான். இரண்டு தடவை இந்த ஒலி வந்தால் ஆன்னு

485ஜாக்கிரதையாகி விடுவாள். வேலையை அப்படியே போட்டு விட்டு அவசர அவசரமாகப் புடைவையை எடுத்து உடுத்திக் கொள்வாள். திருடி வந்த கதிர்களைச் சட்டிப் பானைக்குள் போட்டு மறைப்பாள். அவள் ராத்திரியில் கதிர் திருடி வந்தாள் என்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது.

வேலிக்கு அப்பாலிருந்து திருட்டுத்தனமாகப் பீபியைப் பார்க்க ரொம்பப் பிடிக்கும் அவனுக்கு. சில சமயம் கண் கண்ணாகக் கிழிந்த துண்டை உடுத்தியிருப்பாள் அவள். மூங்கில் தட்டி மாதிரி ஓட்டை ஓட்டையாக இருக்கும் அது. அவன் முன்பு ஹாஜிசாயபுவின் வீட்டுத் துறையை ஒட்டிய புதரில் ஒளிந்துகொண் டிருப்பானே ஹாஜிசாயபுவின் இரண்டாவது பீபியைப் பார்ப்பதற்காக, அது போல அவன், வீட்டுக்குள் தன் பீபியைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருப்பான், தன் சொந்த பீபியின் நிர்வாணமான உடலைப் பார்க்க அவனுக்கு ரொம்ப ஆசை.

இந்த வறுமையிலும் பற்றாக்குறையிலும் எப்படித்தான் உடம்பை இவ்வளவு வாளிப்பாக வைத்துக்கொண் டிருக்கிறாளோ அவள்? ஆகாலுவின் ஆஜானுபாகுவான உடல். உரமேறிய நெஞ்சு, சிவப்பு நிறக் குல்லாய் இவையெல்லாம் கானல் நீர்போல் பேலுவின் ஆசையைக் கிளப்பிவிடும்.

ஆகாலு தாடியில் அத்தர் தடவிக்கொள்வான். அவன் பெரிய தந்திரசாலி. அவன் பேலுவின் வீட்டு வழியே போகும்போது அத்தரின் மணம் வீட்டுக்குள் பரவும். அந்த மணத்தை முகர்ந்ததும் ஆன்னுவின் நெஞ்சு குதிக்கத் தொடங்கிவிடும். அவளுடைய ஆள் வந்துவிட்டான்! மூங்கில் காட்டுப் பக்கம் போயிருப்பான்! அவள் உடனே ஜப்பர் கொடுத்திருந்த பச்சைப் புடைவையைக் கட்டிக் கொண்டு வெளியே கிளம்பிவிடுவாள்,

"எங்கே போறே?” ''மதி உர் வீட்டுக்கு, அவ அவலுக்கு நெல் ஊறப் போட்டிருக் கா, வறுத்துக் கொடுத்தா ரெண்டு தொன்னை அவல் கொடுப்பா.''

"வேறே ஒண்ணும் கிடைக்காதா ?'' "வேறே என்ன கிடைக்கும் ?" "ஏன், முத்தம் கிடைக்காதா ?" புருஷன் தன்னைச் சந்தேகிப்பது ஆன்னுவுக்கு நன்றாகப் புரியும். அத்தர் மணத்தை அவனும் மோப்பம் பிடித்துவிட்டான்! அல்லா இந்த மனிதனை நொண்டியாக்கி வலுவைப் பிடுங்கிக் கொண் டாரே, மோப்ப சக்தியை ஏன் பிடுங்கிக் கொள்ளவில்லை ? சில சமயங்களில் காதல் வேண்டியிருந்தது ஆன்னுவுக்கு.

486ஆகாலு, ஆன்னுவின் காதலைத் தன்னிடமிருந்து பறித்துக்கொண்டு விட்டான் என்று பேலுவுக்குப் புரியும். அப்போது அவன் பலி ஆடு வெட்டும் கத்தியை எடுக்கத் துடிப்பான். ஆனால் நண்பகல் வெயிலில் ஆகாலு சிவப்புநிறத் துருக்கிக் குல்லாயும், கறுப்பு நிற மஸ்லின் ஜிப்பாவும், கட்டம் போட்ட லுங்கியும் அணிந்து கொண்டு போவதைப் பார்க்கும்போது அவனும் ஒரு கோயில் காளை என்றே தோன்றும்.

மூன்று கோவில் மாடுகள் மூன்று பக்கங்களிலிருந்து பேலுவை விரட்டிப் பைத்தியமாக அடித்தன. ஒன்று ஹாஜிசாயபுவின் கோவில் காளை, இரண்டு ஆகாலு, மூன்று, பைத்தியக்கார டாகுர்.

பேலு கன்றுக்குட்டியை இழுத்துக்கொண்டு சென்றான். அவன் சில சமயம் பலியிடும் கத்தியைக் குடிசையின் எரவாணத்தில் எங்காவது ஒளித்து வைத்திருப்பான். ஆன்னு அவனு டைய கழுத்தை வெட்டிவிட்டு ஓடிப் போனாலும் போய்விடுவாள். இரவும் பகலும் அவனுக்கு அவநம்பிக்கை . அவன் அடிக்கடி எரவாணத்தில் பார்த்துக் கொள்வான், கத்தி இருக்கிறதா என்று. அதையும் ஆகாலு, ஆன்னு முலம் எடுத்துக்கொண்டு போய் விட்டானோ என்று சந்தேகம் தோன்றும்.

அவனால் கன்றை அசைக்க முடியவில்லை. கோவில் மாடு பூதா காரமாக நின்றுகொண் டிருந்தது. இந்தப் பக்கம், அந்தப் பக்கம் திரும்பாமல் கன்றையே முறைத்துப் பார்த்தது. நடுநடுவில் அவன் கண்ணுக்கு முன்னால் அது மியான் ஆகாலுத்தீனாக மாறிவிட்டது! கன்றுக்குட்டியை விரட்டுவதற்காக வாலைத் தூக்கியது அது.

அது கொம்பை உயர்த்திக்கொண்டு இந்தப் பக்கம் ஓடிவரலாம்! அது ஓடிவந்தால் கன்றும் ஓடும். பேலு கயிற்றைப் பிடித்துக் கொண்டிருந்தால் அவனையும் இழுத்துக்கொண்டு வீட்டில் கொண்டு போய்ச் சேர்த்துவிடும், நாசமாப் போன மாடு! அதற்கு முன்னாலே இருக்கிற வயல்கள், அவற்றில் விளைந்திருக்கும் பயிர், பசும்புல் எல்லாவற்றையும் தின்றுவிடலாம் என்று அதற்கு நினைப்பு! 'இந்த உலகத்திலே என் தீனியிலே பங்கு கேட்க யாருக்குத் தைரியம் இருக்கு? யார் என் முன்னாலே வரமுடியும்?' என்று கேட்பது போல் இருக்கும் அது நிற்கும் நிலை.

பேலு மாட்டை ஆபாசமாகத் திட்டினான். அதன் முன்னால் போகப் பயமாக இருந்தது கன்றுக்குட்டிக்கு. கன்றைச் சொல்லிக் குற்றம் என்ன ? அவனுக்கே பயமாக இருந்தது. அவன் அவசர அவசரமாக ஒரு கிட்கிலா மரக்கிளையை ஒடித்து வைத்துக்கொண் டான். ஒரு கையாலேயே அதன் இலைகளைப் பிய்த்து எறிந்து விட்டு ஒரு ஈட்டிமாதிரி அதைச் செய்துகொண்டான். அதைத்

487தலைக்கு மேல் கையால் சுழற்றினான். அவனுக்கு எவ்வளவு தைரியம், சக்தி இருக்கிறதென்று மாடு பார்க்கட்டுமே!

கம்பைச் சுழற்றி அதைப் பயமுறுத்தப் பார்த்தான் அவன். அவன் சாதாரண ஆள் இல்லை. பேலுவாக்கும்! ஒரு கை போனாலும் அவனுக்கு இன்னும் பழைய வலு இருக்கிறது. மாடு அருகில் வந்தால் அதை உதைத்து நொறுக்கிவிடுவான் அவன். இதுதான் அவன் மாட்டுக்கு உணர்த்த விரும்பியது.

ஒரு நாள் மாடு கன்றுக்குட்டியைத் துரத்தியது. பேலுவால் தன் நொண்டிக் கையுடன் கன்றைத் தடுக்க முடியவில்லை. கன்று அவனை இழுத்துக்கொண்டு வீட்டில் கொண்டு வந்து சேர்த்து விட்டது. மாடு. மகாமாரியைப் போல் திடுதிடுவென்று வீட்டு வாசலுக்கு வந்துவிட்டது. கோவில் மாட்டுக்குத் தான் எத்தனை பிரதாபம்!

அது வீட்டு வாசலுக்கு வந்ததும் எங்கும் ஆரவாரம். கன்று வீட்டுக்குள் நுழைந்துகொண்டது. மாடு கொம்புகளால் பேலுவின் குடிசையையே பிய்த்துப் போட்டிருக்கும். நல்ல வேளை, ஆன்னு வின் கையில் சூடான கஞ்சிச் சட்டி இருந்தது. அவள் மாட்டைக் கண்டு பயந்து கஞ்சியை அதன் மேல் கொட்டிவிட்டாள். அதன் முகம் வெந்துப் போய்விட்டது. அது, 'அம்மா அம்மா' என்று அரற்றத் தொடங்கியது. வாலைத் தூக்கிக்கொண்டு வயற் பக்கம் ஓடிவிட்டது. அதுமுதல் மாடு அதன் எல்லைக்குள் நிற்கும் ; பேலு அவனுடைய எல்லைக்குள் இருப்பான். மாட்டின் முகம் வெந்து போய்விட்டது. ஒரு கண் அழுகிப் போய் நெற்றிக்குள் இடுங்கி விட்டது. பெரியம்மையால் பேலுவின் ஒரு கண் போய்விட்டது. ஆகவே இரு பிராணிகளுக்கும் ஒவ்வொரு கண் தான். சமயம் கிடைத்தால் இரண்டும் சண்டை போடும்,

பேலுவுக்கு இப்போது பயந்தான். இருந்தாலும் கையில் தடி இருந்ததால் பயம் கொஞ்சம் குறைந்திருந்தது. அவன் கன்றைக் கூட்டிக்கொண்டு நடந்தான். மாஜி வீட்டு வயல் வரப்பில் நல்ல புல் வளர்ந்திருந்தது. அவன் கன்றை அங்கு விட்டுவிட்டுக் கயிற்றைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்தான். நாற்புறமும் நெல் வயல்கள். 'கன்று புல்மேயும்போது 'சப் சப்' என்று ஒளி எழுந்தது. அது வாலை ஆட்டிக்கொண்டு கவலையில்லாமல் புல்லை மேய்ந்தது. அது புல் மேய்வதைப் பார்த்து ஏனோ பேலுவும் உணர்ச்சி வசப் பட்டுப் போனான். அவனுக்கு கடந்த இரவின் நினைவு வந்தது.

இரவு முழுவதும் அவன் பயத்தால் தூங்கவில்லை. சாயங்காலத்தி லிருந்து ஆன்னு வீட்டில் இல்லை. கிழிந்த புடைவையைக் கட்டிக் கொண்டு எங்கேயோ போய்விட்டாள் அவள். அவன் அவளைப்

488பக்கத்து வீடுகளில் தேடினான். ஹாஜிசாயபு வீட்டுக்குப் போக அவனுக்குப் பயம். அவனைக் கண்டால் ஹாஜிசாயபுவின் இரண் டாவது பீபி, 'அடியே தோழி லலிதே!' என்று பாடத் தொடங்கி விடுவாள், ஹாஜிசாயபு தடியால் அடிக்க வருவார்.

அவன் திரும்பினான் வீட்டுக்கு. ஆன்னுவைக் காணோம். கடைசி யில் அவள் இரவு வெகுநேரத்துக்குப் பிறகுதான் வீடு திரும்பினாள். அவள் தலையில் ஒரு கட்டு உளுந்துக் கதிர். ஹாஜிசாய்புவின் நிலத்திலிருந்து திருடிக்கொண்டுதான் வந்தாளா அல்லது அவள் செய்த குற்றத்தை மறைப்பதற்காக ஆகாலுவே ஒரு மூட்டைக் கதிர் அறுத்துக் கொடுத்தானா என்று போலுவுக்குப் புரியவில்லை.

பீபி சொல்லிக் கொள்ளாமல் வெளியே போனால் திருட்டுத் தனமாகக் காதல் செய்யத்தான் போகிறாள் என்று பேலுவுக்குத் தோன்றும். கள்ளக் காதலன் ஆகாலுவுடன் காட்டில் சரசமாடப் போயிருக்கிறாள் பாவி!

கடந்த இரவில் எங்கும் போவதாகப் பேச்சே இல்லை. இருந் தாலும் சொல்லிக்கொள்ளாமல் போய்விட்டாள். அவ்வளவு ஆசை வெறி! தலையில் துருக்கித் தொப்பி போட்டுக்கொண்டு தாடியில் அத்தர் தடவிக்கொண்டு இருட்டில் காட்டுப்பக்கம் போயிருக்கிறான் ஆகாலு. ஆன்னு அத்தரின் மணத்தை மோப்பம் கண்டுகொண்டே இருட்டில் அவனைக் கண்டுபிடித்து விடுவாள் பேலு அன்று கெளர்சந்தா வீட்டுக்கு வேலைக்குப் போவதாகவும் இரவானதும் திரும்பி வருவதாகவும் சொல்லியிருந்தான். இந்த வாய்ப்பை நழுவவிடாமல் பீபி காட்டுக்குப் போய்விட்டாளே, கள்ளக் காதலனைச் சந்திக்க!

வீட்டு வேலை முடிந்துவிட்டால் ஆன்னு கன்றுக்குட்டிக்குப் புல் கொண்டு வருவதாகச் சொல்லிவிட்டு வெளியே போய் விடுகிறாள். இருட்டில் வயலிலிருந்து உளுத்தம் பயிரைப் பறித்துக் கொண்டு வருகிறாள். என்னதான் நடக்கிறதோ? கிராமத்தார் எல்லா ருக்கும் தெரிந்து போய்விட்டது, முரட்டுப் பேலுவின் பீபிக்குக் கள்ளக் காதலன் இருக்கிறான் என்று. முரட்டுப் பேலுவின் நிலை இப்படி ! அவனுக்கு உள்ளுற ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.

அவள் தலையிலிருந்து மூட்டையை இறக்கக்கூட இல்லை அவளுடைய இடுப்பில் காலால் உதை உதை என்று உதைத்தான். அவன் கால் முடமில்லையே! கையின் வலுவும் அவனுடைய காலுக்கு வந்துவிட்டதோ? அந்த உதைகளைத் தாங்க முடியாமல் அவள் குப்புறக் கீழே விழுந்தாள். அடி வாங்கினால் ஆன்னு வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து பிலாக்கணம் பாடத் தொடங்கி

489விடுவாள், வீட்டில் இழவு விழுந்துவிட்ட மாதிரி. அழுகைக்கு நடுவே ஆபாசமாகத் திட்டுவாள், பேலுவை, ராகம் போட்டு. அப்போது வயல் பக்கம் செல்பவர்கள் பேலுவுக்கு வெறிபிடித்து விட்டது என்று புரிந்துகொள்வார்கள், இது சகஜம் என்று யாரும் பொருட்படுத்த மாட்டார்கள்.

இருந்தாலும் தம்பதிகளுக்கிடையே எவ்வளவு ஆசை ! இப்போது ஆன்னுவின் விவகாரம் எல்லாருக்கும் தெரிந்து போய் விட்டது. சென்ற இரவு இவ்வளவு உதை வாங்கியும் அவள் கொஞ்சமும் அழவில்லை. அவளுக்கு எங்கோ நன்றாகக் காலை ஊன்றிக்கொள்ள இடம் கிடைத்துவிட்டது. அவள் அழுது பிலாக் கணம் பாடித் திட்டினால் பேலு கவலைப்படுவதில்லை. இந்தத் தடவை அவள் அவனைத் திட்டவில்லை. உண்மையில் எங்கேயாவது போய்விடப் போகிறாள் அவள். பேலு தலாக் கொக்காவிட்டால் அவளால் எங்கும் போகமுடியாது. பேலு தலாக் கொடுக்கட்டும் என்று தான் ஆகாலு விரும்புகிறான். தலாக் கொடுத்தால் அவனுக்குப் பணம் கொடுப்பதாகக் கூட ஆசை காட்டினான் ஆகாலு. பேலு இப்போது எடுத்தற்கெல்லாம் கத்துவதும் சண்டை போடுவதும். பணம் இன்னும் நிறைய வாங்கச் செய்யும் தந்திரமோ என்று கூடத் தோன்றும். ஆனால் பேலுவுக்கு உள்ளுறத் தெரியும், அவனால் பீபிக்குத் தலாக் கொடுக்க முடியாதென்று. பீபி இல்லாவிட்டால் செத்துப் போய்விடுவான் அவன்.

ஆன்னுவை விட்டுக் கொடுக்க எவ்வளவு பணம் வாங்குவது என்று யோசி ததுக்கொண்டு பேலு ஒற்றைக் கண்ணால் புன்சிரிப்புச் சிரித்தால் அவனுடைய அம்மைத் தழும்பு முகம் தாடிக்கு நடுவில் அருவருப்பாகக் காட்சி அளிக்கும். பெண் ணுக்குப் பதிலாகப் பணம்.

ஆன்னு இருக்கும் வரையில் வறுமை, பற்றாக்குறை, கடன் பிழைப்புத்தான். அவள் இல்லாவிட்டால் அந்த நாசமாய்ப் போன ஆகாலு பேலுவை வீட்டை விட்டே விரட்டியிருப்பான். ஆகாலு தன் வீட்டு வாசல் வழியே போவதைப் பேலு பொறுத்துக்கொள்ள வேண்டியதுதான். ஆகாலு தன் வீட்டு வழியே போகும்போது அவனை த் தடியால் ஒரேயடியாக அடித்துவிட தோன்றும் போலுவுக்கு. நீசப் பயலோட கள்ளக் காதல் மாயமாப் பறந்துடும். ஆனால் மறு கணமே பேலுவுக்கு ஞாபகம் வரும், தன் ஒரு கை வழங்கவில்லை என்று. பேலு ஆகாலுவை அடிக்கப் போனால் ஆகாலு அவனைப் பிடித்து அவனுடைய நொண்டிக் கையை முறுக்குவான். பேலு. வெறிநாய் போல ஊளையிடுவான். ஆகையால், ஆகாலு அந்தப் பக்கமாகப் போனால் பேலு அவனுடன் சிரித்த முகத்துடன் பேசு

490வான். ''எங்கே போறீங்க ? இந்தத் தடவை விளைச்சல் எப்படி? கார்த்திக் சால் நெல் சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு, அறுவடையான தும் ஆன்னுவை அனுப்பறேன். ரெண்டு நாழி நெல் கொடுத் தனுப்பறீங்களா ?"

ஆகாலுவுக்குக் கோபங் கோபமாக வரும். எப்போ அறுவடை யாகும்னு காத்திட்டிருக்கானா பேலு? என்ன பதில் சொல்வதென்று தெரியாது அவனுக்கு. 'சரி, ஆன்னு எங்கே?' ஆகாலு திருட்டுத் தனமாகச் சீதாமர வேலிப் பக்கம் பார்வையை ஓட்டுவான். அவனுடைய தாடியின் அத்தர் மணம் அவளுக்கு எட்டவில்லையா ? அவன் ஆன்னுவைப் பார்ப்பதற்காக அங்கேயே நிற்பான். ஏதோ பேச்சுக் கொடுப்பான், இங்குமங்கும் பார்த்துக்கொண்டு சொல் வான் : "பீபியை அனுப்பு, ரெண்டு நாழி நெல், பாக்கு, வெத்திலை புகையிலை எல்லாம் கொடுத்தனுப்பறேன்.''

பேலு தன் பீபியையே திருட்டுத்தனமாக இடுக்கு வழியே பார்த்துக்கொண் டிருக்கிறான் என்று தெரிந்தால் அவன் முகத்தில் காரித் துப்பத் தோன்றும் ஆகாலுவுக்கு.

பாவம், இந்த ஆளிடம் மாட்டிக் கொண்டு எவ்வளவு கஷ்டப் படுகிறாள் ஆன்னு! அவனை விட்டுவிட்டு வரவும் முடியவில்லை அவளால். பேலு எங்கிருந்து, எப்படித்தான் இவ்வளவு அழகான பீபியைப் பிடித்துக் கொண்டு வந்தானோ? இந்த விஷயம் யாருக் கும் தெரியாமல் இல்லை. ஆனால் தெரிந்தும் தெரியாதது போல் எல்லாரும் நடந்துகொண்டார்கள். பேலுவின் பீபி ஆன்னு என்ற விஷயம் எல்லாராலும் ஒப்புக்கொள்ளப்பட்டது. பேலு முறைப் படி ஆன்னுவுக்குத் தலாக் கொடுத்தாலொழிய ஆகாலு அவளைத் தன் வீட்டுக்குக் கொண்டுவர முடியாது. வேண்டுமானால் அவளை இழுத்துக் கொண்டு வேறு ஏதாவது ஓர் ஊருக்கு ஓடிப் போய்விடலாம்.

தன் பீபி ஒரு நாள் உண்மையிலேயே ஓடிப் போய்விடுவாள் என்று பேலுவுக்குத் தோன்றும். சும்மா ஓடிப் போகமாட்டாள். அவன் மியான் சாயபுவின் கழுத்தை இரண்டாக வெட்டிப் போட்ட மாதிரி அவளும் அவனுடைய கழுத்தை இரண்டாக வெட்டிவிட்டு ஓடிப்போகப் போகிறாள்.

இவ்வாறெல்லாம் நினைத்துக்கொண்டு அவன் அன்றிரவு பீபியின் முகத்தைப் பார்த்தான். இவ்வளவு உதை வாங்கியும் அவள் அழவில்லை. சிம்னி விளக்கின் வெளிச்சத்தில் தலையைக் குனிந்து கொண்டு உம்மென்று உட்கார்ந்திருந்தாள். அவள் என்ன செய் வாளோ என்ற பயத்தில் பேலு முன்னிரவில் தூங்கவில்லை. அவன் பிரப்பம்பாயை விரித்துப் படுத்துக்கொண்டு அவளைப் பார்த், துக் கொண்டே இருந்தான். அவளுடைய முகம் இறுகியிருந்தது. கண்

491வெளிறிப் போயிருந்தது. அப்போது வெளியே ஏதோ ஒரு பறவை கூவியது. பின்பனிக் காலப் பனி வயலில் விழுந்துகொண் டிருந்தது. கிரவுஞ்சப் பறவைகளின் முட்டைகளிலிருந்து குஞ்சுகள் வெளி வந்திருக்கும். இதற்குள். பேலு பெருமூச்சு விட்டான். ஆன்னு கொஞ்சம் அசைந்தாள். இப்போது அவனுக்கு அவளிடம் பரிவு ஏற்பட்டது. பாவம், ரொம்பத்தான் அடிபட்டுவிட்டாள் அவள், அவன் கேட்டான், “எங்கே போயிருந்தே ?" என்று.

"சாகப் போயிருந்தேன் !'' ''சாக எங்கே போயிருந்தே ?" "வயலுக்கு ." ''வயல்லே என்ன வேலை?" "புல் அறுத்துக்கிட்டு வரத்தான் ! புல் இல்லேன்னா உன் அருமை கன்னுக்குட்டி என்னத்தைத் தின்னும்?"

" அவன் எழுந்து உட்கார்ந்தான். "சரி, சோறு போடு" ''என்னாலே முடியாது !" 'ஏன் முடியாது ? யாரு உனக்குச் சோறு போடறா ?'' மறுபடி அவளை உதைக்கலாமா என்றுகூட நினைத்தான் பேலு. ஆனால் அவள் உட்கார்ந்திருக்கும் நிலையைப் பார்த்து அவனுக்கு அவளை அணுகத் தைரியம் வரவில்லை, எரவானத்தில் செருகி வைத்திருந்த கத்தி இருக்கிறதா என்று பார்த்தான், இல்லை. பரபரப்புடன் இங்குமங்கும் பார்த்தான் அவன். ஒற்றைக் கண்ணால் பார்க்கவேண்டி யிருந்ததால் கழுத்தை முழுவதும் திருப்ப வேண்டி யிருந்தது. வேறு எங்கேயாவது வைத்து விட்டோமோ என்று நினைத்தான். தேடிப் பார்த்தால் கிடைக்கும். அவன் பீபியின்மேல் வீணாகச் சந்தேகப்படுகிறானோ ? தவிர. அவனால் பீபிக்கு என்ன சுகம்? ஒருசமயம் அவனுக்கு அவளிடம் அநுதாபம் பிறந்தது. மறுநிமிடமே அவநம்பிக்கை ஏற்பட்டது. அவன் அவள் அருகில் போய் உட்கார்ந்தான் அவளுடைய முதுகை வருடி, அவளை இறுகத் தழுவிக் கொஞ்ச முயற்சி செய்தான். ஆன்னு கடிக்க வரும் பாம்பு போல் சீறினாள். "மியான் என்னைத் தொடாதே! நீ ஒரு சைத்தான், ஒரு ராட்சசன்!''

"என்ன சொன்னே? நான் சைத்தானா, ராட்ச்சனா ?'' பேலு எகிறிக் குதித்தான். இவ்வளவு காலத்துக்குப்பின் அவள் சொல்லிக் காட்டு கிறாளா, அவன் சைத்தான் என்று !

பேலுவின் கால் ரத்தம் தலைக்கேறி விட்டது. அவன் ஏதோ ஒரு பயங்கரமான காரியம் செய்யப் போகிறான். அவன் வெளியே இருட்டுக்கு வந்தான். வீட்டுக்குள் இருந்தால் இப்போதே ஒரு கொலை விழுந்துவிடும். நான் சைத்தானா ராட்சசனா என்று முணு

-492முணுத்துக்கொண்டே அவன் வெளியிலிருந்தே எரவானத்தில் கத்தியைத் தேடினான் "ஆமா, நான் தொழுகை செய்யறதில்லே, அல்லா பேரைச் சொல்றதில்லே, நான் செஞ்ச பாவத்துக்குக் கணக்கு இல்லே. அதையா இப்போ சொல்லிக் காட்டறே நீ?" என்று சொல்லிக்கொண்டே அவன் உள்ளே நுழைந்து தடாரென்று அவள் அருகில் உட்கார்ந்தான். பிறகு தன் முறிந்த இடக்கையைச் செத்த பாம்பைத் தூக்குவது போல் வலக்கையால் தூக்கி அவ ளுடைய கண்ணுக்கு நேரே ஆட்டினான். "பீபி, நீ ரொம்பத் தைரியசாலி தான். என் கை ஒடிஞ்சு போனதுதான் உனக்கு இவ் வளவு தைரியத்தைக் கொடுத்திருக்கு. நீ என்னைச் சைத்தான்னு சொன்னியா ? இந்தமாதிரி யாராவது சொன்னாக் கதறக் கதறச் சாக அடிப்பேன். நீ ஒரு பொம்பளை என்று பார்க்கிறேன், சரி, கத்தி எங்கே ? பலி வெட்டற கத்தி ?''

''ஏன்? என் கழுத்தை வெட்டப்போறியா?" "வெட்டித்தான் பார்க்கலாமே, உன் கழுத்து அறுபடறதா, இல்லையான்னு !''

ஆன்னுவின் அழுத்தம் அதிகரித்தது. "இதுவா உன்னோட எண்ண ம் ?"

அவன் புல் கட்டுக்குள்ளிருந்து கத்தியை எடுத்துப் போட்டாள். "இந்தா. கொடுத்துட்டேன் ! எங்கே வெட்டு பார்ப்போம்! உருப்படியா இந்தக் காரியமாவது செய்யறியா, பார்க்கலாம்."

இவ்வாறு கத்திக்கொண்டே அவள் பத்ரகாளி போல் கண்களை அகல விரித்துக்கொண்டு புடைவையை அவிழ்த்தெறிந்து விட்டு நிர்வாண நிலையில் கழுத்தை அவனுக்கு முன் நீட்டினாள். "உம், தைரியம் இல்லே மியானுக்கு ! வெட்ட முடியல்லே !'' என்று சொல்லிவிட்டு அவள் விறைத்துக்கொண்டு உட்கார்ந்தாள். பேலு வுக்கு வந்த கோபத்தில் அந்த நிமிஷமே அவளுடைய கழுத்தை வெட்டிவிடலாம் போல் இருந்தது. ஆனால் சற்றும் பயப்படவில்லை ஆன்னு. ஏனென்றால் அவனுடைய கண்ணைப் பார்த்தே அவள் புரிந்துகொண்டுவிட்டாள், அவன் பயந்துவிட்டான் என்று. அவன் முன்போல் கண்களை அகலமாக விரித்துக்கொண்டு, கண்களில் ஆத்திரம் ஜொலிக்க, வெறி பிடித்தவள் போல் அட்டகாசமாகச் சிரித்தாள். முன்பொரு நாள் தன் கணவன் வயலில் கொல்லப் பட்டான் என்பதைக் கேட்டுவிட்டுப் பேலுவுடன் ஓடிவரும் போது சிரித்தாளே அது போல்.

உடனே பேலு தன் முறிந்த கையைப் போல் தானும் ஜீவனற்றுப் போனான். முரட்டு மனிதர் அடங்கிப் போய்விட்டதைக் கவனித்

493தாள் அவள். அவள் ஏளனமாகக் கேட்டாள் : "என்ன மியான்

தைரியம் வரல்லியா ? உனக்கு அதுக்கெல்லாம் திராணி ஏது ?"

''இல்லை பீபி.” "அப்படியானா, உன் மூஞ்சியை வெளியே காண்பிக்காதே !' உண்மையாகவே தான் உயிரோடு இருப்பதில் அர்த்தமில்லை என்று தோன்றியது பேலுவுக்கு. பீபியின் கேலிக்குப் பதில் சொல்வதானால் அவன் தன் தலையைத் தானே வெட்டிக்கொண்டு, வெட்டப்பட்ட தலையைக் கையில் வைத்துக்கொண்டு ஆட வேண்டும். ஆனால் இந்த இருட்டு, அந்தப் பக்கம் கொட்டிலில் இருக்கும் கன்றுக்குட்டியின் கண், நெல்லைத் - திருட்டுத்தனமாக அறுத்துக்கொண்டு வந்து அவன் நடத்தும் பிழைப்பு - எல்லாமே அவனுக்கு உயிரில் ஆசையை உண்டாக்கியிருந்தன. அவனுக்குத் தலையை வெட்டிக்கொண்டு வெறியாட்டம் ஆடத் துணிவு வர வில்லை. அவன் அவளுக்குத் தெரியாமல் கத்தியைப் புல்லுக்குள் ஒளித்து வைத்துவிட்டுப் பிரப்பம் பாயில் படுத்துக்கொண்டு விட்டான். இரவு முழுவதும் தூங்க முடியவில்லை அவனால்.

அவன் சற்று அயர்ந்துவிட்டால் பீபி வீட்டுக்கு நெருப்பு வைத்து விட்டு ஓடிப் போய்விடுவாள். எரிந்த சாம்பற் குவியலில் வெந்து கிடப்பான் அவன். ஆன்னுவும் தலைப்பை விரித்துக்கொண்டு ஒரு புறம் படுத்துவிட்டதைப் பார்க்காதிருந்தால் அவன் அன்று பைத்திய மாகவே ஆகியிருப்பான். அவன் அவள் அருகில் சென்று பார்த தான், அவள் நிஜமாகவே தூங்குகிறாளா அல்லது தூங்குவதாகப் பாவனை செய்து கொண் டிருக்கிறாளா என்று. ஆன்னு உண்மை யாகவே தூங்கிக்கொண் டிருந்தாள். அவனுக்கு அவள் மேல் அநுதாபம் ஏற்பட்டது. அவளைக் கொஞ்ச ஆசை. ஆனால் அவன் தன் கழுத்தை அவள் அருகில் கொண்டு சென்றும் அவளைத தொடத் துணிவில்லாமல் விலகிக்கொண்டான்,

பெண் பாம்பிடம் பயப்படுவதுபோல் அவளிடம் அவனுக்குப் பயம். அவளைக் கொஞ்சப் போனால் கழுத்தைப் பிடித்துக் கடித்து விடுவாள். அவன் அவளுக்கு அருகில் துண்டை விரித்துக்கொண்டு படுத்தான். காலையில் ஆன்னு அவனை எழுப்பி, “'கன்னுக்

குட்டியை வயல்லே மேயவிட்டுட்டு வா!'' என்றாள்.

மேய்க்கக் கன்றை இழுத்துவந்த இடத்தில்தான் இந்த ஆபத்து. கோவில் மாடு உறுமிக்கொண்டு நின்றது. அது விசாலமான மைதானம், நெல்வயல்கள், சோனாலி பாலி நதிப்படுகை - எல்லா வற்றையும் அலட்சியமாகப் பார்த்துக்கொண்டு அவனைப் பய முறுத்தியது.

494ஹாஜிசாயபுவின் சிறிய மகன் ஏற்கனவே நல்ல உயரம், இன்னும் நல்ல உயரமாக ஆசை அவனுக்கு. தலையில் சிவப்புக் குல்லாய். லுங்கி அணிந்து கொண்டு வெயிலில் நின்றான் அவன். தாடியில் அத்தர் மணம். ஆன்னு கடந்த இரவு தான் வாங்கிய உதைகளை மறந்துவிட்டு மூங்கில் காட்டுக்குள் நுழைந்தாள்.

பேலு, கோவில் மாடு, ஆகாலுதீன், பைத்தியக்கார டா குர் இவர்கள் எல்லாரும் ஒருவருக்கொருவர் எதிரிகளாகி விட்டார்கள். அந்தப் பனிக்காலத்தின் காலைவேளையில் ஸோனாலி பாலி ஆற்றின் படுகையில் வியாபித்திருக்கும் தெய்வத்துக்குத்தான், கோவில் மாடு வேகமாகப் பாய்ந்தால் பேலுவின் வயிறு எப்படிக் கிழியும் என்று தெரியும்.

பேலுவைப் பார்த்துவிட்டு ஊழி நடனமாடுகிறது. மாடு, இதோ பாயப் போகிறது அவன் மேல்!

மாலதி சிரித்தாள். ரஞ்சித்தின் பேச்சைக் கேட்டுச் சிரித்தாள். சிரிப்பிலும் இவ்வளவு வேதனை இருக்கும் என்ற உண்மை ரஞ்சித் துக்கு மாலதியின் முகத்தைப் பார்த்திராவிட்டால் தெரிந்திருக்காது. வறண்ட சிரிப்பு! எவ்வளவு பரிதாபமாக இருக்கிறது மாலதியின் முகம்!

தன் தனிக்குடிசையில் ஒரு வாத்துப் போல் உட்கார்ந்திருந்தாள் மாலதி. குடிசையின் கதவாகப் பயன்பட்ட படலின்மேல் பின்பனிக் காலத்தில் வெயில் விழுந்தது. பின்பனிக் கால் இறுதியான தால் கொஞ்சம் குளிரும் இருந்தது. மாலதி ஒரு கம்பளத துண்டை ஆசனமாக விரித்துக் கொண்டு, ஒரு மெல்லிய போர்வையை மேலே போர்த்திக்கொண்டு உட்கார்ந்திருந்தாள் ; தான் தீட்டுப் பட்டவள்போல, நாற்புறமும் கவனக் குறைவின் அடையாளங்கள், வெளியே நரேன் தாஸ் வைக்கோலைக் குவித்துக்கொண் டிருந்தான். ஆபாராணி நெல்லைத் தூற்றினாள், சோபா, ஆபு வீட்டில் இல்லை.

இப்போதெல்லாம் மாலதி சாதாரணமாக வீட்டை விட்டு வெளியே வருவதில்லை. நடுநடுவே வீட்டுக்கு அருகிலுள்ள கட்டாரி

மரத்தடியில் போய் உட்கார்ந்திருப்பாள்.

ரஞ்சித் வந்ததும் படலைத் திறந்துவைத்தாள் அவள். ஏனென்றால் படலைச் சாத்தினால் வீட்டுக்குள் இருட்டாயிருக்கும். அவளுக்கு

495வர வர இருட்டு பிடித்துப்போய்விட்டது. மிருகக்காட்சி சாலையி லுள்ள பிராணிபோல் பிழைத்திருக்க முடியவில்லை, அவளால். அவள் இப்போது என்ன செய்வது ? அவளுக்குள்ளே என்ன நடக்கிறது? எப்போதும் ஒரு குளிர், ஒரு பயம், நெஞ்சு நடுங்கியது. அவள் வறட்டுச் சிரிப்பு சிரிக்கும்போது நரேன் தாஸுக்குப் பயமாக இருக்கும். அவன் ரஞ்சித்தைப் பார்த்தால் அவனிடம் சொல்லுவான் : "போய்ப் பாருங்க அவளை ! பைத்தியம் மாதிரி சிரிக்கிறா !'

இவ்வாறு கேட்டுத்தான் ரஞ்சித் வந்திருந்தான், அவளைப் பார்க்க. அவனைக் கண்டதும் அவள் சாதுவாக, அடக்கம் நிறைந்த இளம் பெண்ணாக ஆகிவிட்டாள். சற்றுத் தள்ளி ஒரு பலகையைப் போட்டு அதில் அவனை உட்காரச் சொன்னாள். ரஞ்சித் வந்து உட்கார்ந் தால் அவளுக்கு எப்படியோ தெம்பு வந்துவிடும். தன் மனத்தில் உள்ளதை அவனிடம் சொல்லவேண்டும் எனறு தீர்மானிக்க முடியும். அவளுக்கு இப்போது என்ன செய்வதென்று தெரியவில்லை. தெரியாததால் அவளுடைய முகம் பரிதாபமாகத் தோற்றம் அளித் தது. அவளால் வாய் திறந்து பேச முடியவில்லை. அவள் அவனைப் பார்த்ததும் ஒரு மயக்க நிலையை அடைந்தாள்.

'நீ ஏன் இந்தமாதிரி பைத்தியக்காரத்தனம் பண்ணறே, மாலதி ?" "என்ன பைத்தியக்காரத்தனம்?” "நடுநடுவிலே கட்டாரி மரத்தடிக்கு ஓடிப் போய்ப் பேசாமே உக்கார்ந்திருக்கே! ஒணணும் சாப்பிடறதில்லே!"

"ஒண்ணும் சாப்பிடவே பிடிக்கல்லியே!'' "பிடிக்கலேன்னு விடமுடியுமா ? சாப்பிடணும், உசிரோட இருக் கணும்.”

"நான் உன்னை ஒரு கத்தி கேட்டேனே! ஏன் கொடுக்க மாட் டேங்கறே?''

"உனக்கு எப்போதும் இந்தப் பேச்சுத்தான்." ''ஆமா, எனக்கு வேறே பேச்சு இல்லே." ''நீ இந்த மாதிரியெல்லாம் பண்ணினா நரேன் அண்ணா உன்னை வச்சுக்கிண்டு என்ன பண்ணுவார்?''

"என்னை வச்சுண்டு யாரும் ஒண்ணும் பண்ண வேண்டிய தில்லே ."

''அப்படிச் சொல்லாதே! அப்படியெல்லாம் சொல்லக்கூடாது.'' "நீ என்ன நினைக்கறே டாகுர் ? எனக்குப் பிசாசு பிடிச்சிருக்கா?" "எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லேன்னு உனக்குத் தெரியாதா?"

"பின்னே நீ ஏன் அண்ணா சொல்றதைக் கேட்கறே?” ''ஏன்னா உன் மூஞ்சியைப் பார்த்தா எனக்குப் பயமா இருக்கு.

496“என்ன பயம் ?" "உன்னோட கண்ணும் முகமும் இயற்கையாகவே இல்லே. நீ முந்தி யெல்லாம் இப்படி இல்லையோ, மாலதி! மனப்பூர்வமாகக் கடவுளைக் கூப்பிடு. அவர் உன்னைச் சொஸ்தமாக்கி விடுவார்."

"டாகுர், உனக்குக் கடவுள் மேலே அவ்வளவு நம்பிக்கையா?" ''நான் உனக்கு என்ன தான் சொல்லுவேன் ? மறுபடியும் நீ ஒரு நாள் தற்கொலை பண்ணிக்குவேன்னு எனக்குப் பயமா இருக்கு."

"டாகுர், எனக்குச் சாக இஷ்டமில்லே. நீ என்னை நம்பு. நீ பக்கத்திலே இருந்தா, எனக்குச் சாகக்கூடத் துணிவு வரதில்லே."

சற்று நேரம் மெளனமாக இருந்துவிட்டு அவள் சொன்னாள் : 'கத்தியாவது கொடுக்கக் கூடாதா? நீங்க என்னைச் சாகக் கூட விடமாட்டீங்க. நான் என்ன பண்றது இப்போ ?''

ரஞ்சித்தின் தலைமேல் பின்பனிக் காலத்து வெயில் விழுகிறது. எங்கோ பரிசயமான பறவையின் கூவல். உள்ளே இருளில் மாலதி உட்கார்ந்திருக்கிறாள். வெகுநாட்களாக ரஞ்சித்திடம் ஏதோ சொல்ல வேண்டுமென்று அவள் தூங்கக்கூட முடியாமல் காத்திருக் கிறாள். கண்களுக்குக் கீழே கருமை படிந்திருக்கிறது. கை, கால்கள் மெலிந்திருக்கின்றன. களைத்துச் சோர்ந்த முகம். நாற்புறமும் அலாதி யான வெறுமை. அவள் மறுபடியும் கத்தியைப் பற்றியே பேச் செடுக்கிறாள்.

"மாலதி, நீ அன்னிக்கு நெத்தியிலே குங்குமமும், காலில் ஆல்த் தாவும் போட்டுக்கிண் டிருந்தே. எவ்வளவு அழகாயிருந்தது, தெரியுமா ?"

மாலதி பதில் சொல்லவில்லை. "உன் கண்ணு எவ்வளவு அழகாயிருக்கு, மாலதி ! என்னாலே உனக்கு ஒண்ணும் பண்ண முடியல்லியேன்னு வருத்தமா இருக்கு. நான் வேறே என்ன சொல்லுவேன் ?''

என்னவோ யோசிப்பதுபோல் மாலதி தலையைக் குனிந்து கொண் டாள்.

“நான் போயிடுவேன், மாலதி ! இனிமேல் உன்னைப் பார்ப்பேனா இல்லியான்னு தெரியாது. எப்போ பார்ப்பேன்னும் தெரியாது. என்னோட அக்ஞாதவாசம் முடிஞ்சு போச்சு. நான் போறதுக்கு முன்னாலே உன்னைப் பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன்.''

மாலதியின் கண்கள் விரிந்தன ''நான் ஏன் இவ்வளவு பெரிசா பைத்தியம் மாதிரி சிரிக்கறேன்னு நீ கேட்கல்லியே ?"

"ஏன் கேட்கணும்? உனக்கு உதவி பண்ண என்னாலே முடியல்லே ! கேட்டு என்னப் பிரயோசனம் ?"

497

8)Atiti

''உன்னோட அக்ஞாதவாசம் முடிஞ்சு போச்சா?" கேட்டபோது மாலதியின் நெஞ்சு படபடவென்று அடித்துக்கொண்டது.

"ஆமா. நான் இந்தப் பக்கத்திலே இருக்கேன்னு போலீசுக்குத் தெரிஞ்சு போச்சு. இன்னிக்கோ நாளைக்கோ என்னைப் பிடிக்கப் போலீஸ் வரதுக்குள்ளே நான் இங்கேயிருந்து ஓடிப்போயிடணும்.'' மாலதி தான் ஒரு துக்கத்தில் ஆழ்ந்திருப்பதை மறந்து போனாள், அவள் தன் அன்புக்குரியவனின் முகத்தையே பார்த்துக்கொண் டிருந்தாள். இந்த இளைஞன் அவளிடம் வந்தால் யாரும் சந்தேகம் கொள்ளமாட்டார்கள். காரணம், இவன் எவ்வளவோ காலமாக அவளுக்குக் கத்தி விளையாட்டும் சிலம்பமும் கற்றுக் கொடுத்து வந்திருக்கிறான். ரஞ்சித் ஒரு மகத்தான லட்சியத்தில் பற்று வைத்த வன், மாலதி போன்ற சாதாரண இளம் விதவை அவனுக்கு ஒரு பொருட்டல்ல. அவன் அருகில் வந்தால் அவளுடைய இறுகிய முகம் இயற்கை நிலைக்கு வந்துவிடும். மாலதிக்கு ரஞ்சித் திடம் பயம் என்று நரேன் தாஸும் மற்றவர்களும் நினைத்தார்கள், இப்போது அவன் மறுபடி எங்கோ போய்விடப் போகிறான் . அவனும் போய்விட்டால் அவளுக்கென்று என்ன மிஞ்சியிருக்கும்? அவள் இப்போது எல்லாவற்றையும் அவனிடம் சொல்லிவிடலாம். ஆனால் எப்படிச் சொல்லுவாள் ? நரேன்தாஸ் தெரிந்தும் மறைத்து வைத்திருக்கும் ஒரு விஷயத்தை! அவள் அழாக்குறையாகச் சொன்னாள், "டாகுர், எனக்குச் சாக இஷ்டம் இல்லே! நீ எங்கே யாவது கூட்டிண்டு போ !"

மாலதியின் கண்களிலிருந்து நீர் அருவியாகக் கொட்டியது. கொஞ்சங் கொஞ்சமாக மாலை மங்கிக்கொண்டே வந்தது. வயல்களிலிருந்து நெல்லின் மணம் மிதந்து வந்தது. நாற்புறமும் நெல், பருப்பு வயல்கள். பருப்புப் பயிரில் நீல நிறப் பூக்கள் மலரத் தொடங்கியிருந்தன. நெற்பயிரில் கதிர் முற்றியிருந்தது. எங்கிருந்தோ அறுவடைப் பாட்டு காற்றில் மிதந்து வந்தது. இவை எல்லாமே அர்த்தமற்றவையாகத் தோன்றின மாலதிக்கு. ரஞ்சித் என்ன சொல்லப் போகிறான் என்று கேட்கத் துடித்தாள் அவள்.

இதுவரை ரஞ்சித் அவனுடைய சங்கத்தின் கட்டளைப்படி எவ்வ ளவோ பெரிய பெரிய காரியங்களை அநாயாசமாகச் சாதித்திருக் கிறான். குமில்லாவில் ஹட்சன் துரையைக் கொன்றுவிட்டுத் தப்பி யோடி விட்டான், அவன் அ கர்த்தலா வழியாகச் சில்சாருக்குப் போய்ப் பிறகு அங்கிருந்து அஸ்ஸாமில் எங்கோ மறைந்து போய் விட்ட தாகப் போலீஸார் நினைத்தார்கள். எவ்வளவோ முயற்சி செய்தும் அவனுடைய இளம் பிராயத்து வரலாற்றைப் போலீஸாரால் அறிய முடியவில்லை. அவனுக்குப் பல பெயர்கள் - ரஞ்சித் சுகமஸ்

IA:

498iiii

தாஸ், சரண்பண்டல் .... ஒரு தடவை ஆற்றுக்கு மறுகரையில் கோபால் சாமந்தா என்ற பெயரில் வாத்தியம் வாசித்தான் அவன். இவ்விஷயங்களைக் கண்டுபிடித்த போலீசுக்கு அவன் இந்த இடத்தில் தான் வாலிபப் பருவததைக் கழித்தான் என்று தெரிய வில்லை. இந்தப் பிராந்தியத்து மக்களுக்கோ ரஞ்சித் தேசத்துக்குச் சேவை செய்கிறான் என்று மட்டுந்தான் தெரியும்.

இப்போது அவன் முன்னால் மாலதி சோகமே உருவாக உட்கார்ந் திருந்தாள். தான் இதுவரை போற்றிவந்த லட்சியங்கள் எல்லாம் அர்த்தமற்றவையாக ரஞ்சித்துக்குத் தோன்றின. மாலதியின் இந்நிலையைப் பார்க்க அவனுக்குத் தாளவில்லை. அவன் தன்னைப் பலவீனனாக உணர்ந்தான்.

அவனுக்கு முன்னே உலகமே நெல்வயலாக விரிந்து கிடக்கிறது. ஒரு துண்டு நிலத்தை வைத்துக்கொண்டு அவன் என்ன செய்வான்? மாலதியை எங்காவது கொண்டு போய்ச் சேர்க்க முடியவில்லையே அவனால்! இது தான் மாலதியின் விதியா ? அவனுக்குப் பேச வாயெழவில்லை. அவன் தலையைக் குனிந்து கொண்டே நடந்து போய் மரங்களுக்குப்பின் மறைந்து போனான்.

மாலதி தன் குடிசைக்குள் வாத்தைப் போல் அடைந்து கிடந் தாள். சற்று நேரத்துக்குப் பின் சோபா வந்தாள். அவளுடைய இடது கையில் லாந்தர். வலது கையில் ஒரு தட்டில் பொரியும் வெல்லமும் - மாலதியின் இரவு ஆகாரம். அதை வாங்கிக் கொண்டு மாலதி தன் குடிசைப் படலைச் சாத்திக்கொண்டாள். பிறகு அந்த இருட்டில் கண்களை இடுக்கிக் கொண்டு படுத்துக் கிடப்பாள், கண்களில் உறக்கம் இருக்காது. ஏதோ ஒரு பாலைவன எல்லையில் ஒரு மொட்டைமரம் தன்னைக் கைத் தட்டி அழைப்பதாகத் தோன்றும் அவளுக்கு.

ரஞ்சித் நடந்துகொண்டே குளத்தங்கரைக்கு வந்து சேர்ந்தான். மருதமரம் கொப்புங்கிளையுமாகப் பெரிதாக வளர்ந்திருந்தது. நாற்புறமும் கொஞ்சங் கொஞ்சமாக இருட்டுப் பரவியது. தெற்குப் பக்க அறையில் சசிபூஷண் சிறுவர்களுக்குப் பாடஞ் சொல்லிக் கொடுத்தார்.

உரக்கப் படித்துக்கொண்டிருக்கிறான் சோனா. ரஞ்சித் வீட்டுக்கு வந்தால் சோனா அவனுடைய காதில் படும்படி பெரிய பெரிய வார்த்தைகளை உரக்கப் படிப்பான். தான் இந்த வயதிலேயே எவ் வளவு பெரிய வார்த்தைகளைக் கற்றுக்கொண் டிருக்கிறான் என்பதை மாமாவிடம் காட்டிக்கொள்ள ஆசை அவனுக்கு. இதை நினைக்கும் போது ரஞ்சித்துக்கு இவ்வளவு கவலைகளுக்கிடையிலும் சிரிப்பு) வந்துவிடும். அவன் போய்விடப் போகிறான்.

499இவையெல்லாவற்றையும் விட்டுவிட்டுப் போகக் கஷ்டமாக இருந்தது அவனுக்கு, அக்காவிடம் வளர்ந்தவனாதலால் தனிப்பட்ட பாசம் அவனுக்கு. தவிர, அவளுடைய கணவர் பைத்தியம் என்பதால் அவளிடம் அநுதாபம். அந்த மனிதர் வாழ்நாள் முழுவதும் இப்படியே கவிதையை ஒப்பித்துக்கொண்டு இருந்துவிடப் போகிறார். அண்ணியின் வாழ்க்கை துன்பமயமாகவே கழிந்துவிடும். இந்த ஊருக்கு வரும்போது தன் சொந்த வீட்டுக்குத் திரும்பும் உணர்வு ஏற்படும் அவனுக்கு. இங்கு எல்லாமே அவனுக்குப் பரிசயமானவை. ஆகையால் தான் போவதற்கு முன் கடைசியாக ஒரு தடவை) எல்லாவற்றையும் பார்த்துவிட்டுப் போக விரும்பினான் அவன்.

குளத்தங் கரையிலிருந்து அவனுக்குப் படிப்பறையின் வெளிச்சம் தெரிந்தது. சசிபூஷண் உடம்பை ஆட்டி ஆட்டிக்கொண்டே பாடம் கற்பிப்பார். சரித்திரம் கற்பிக்கும்போது 'ஜனனீ ஜன்ம பூமிஸ்ச ஸ்வர்கதபி கரீயஸ்' என்று சொல்லும்போது இந்த மண்ணுக்காகவும் மண்ணில் வசிக்கும் மக்களுக்காகவும் உணர்ச்சி வசப்பட்டு விடுவார் அவர். இந்தச் சிறுவர்களைத் தம் குழந்தைகள் போல் நேசிக்கிறார் அவர்.

ரஞ்சித் இருட்டிலிருந்து கிளம்பி வந்தான். உலகத்தில் அவனு" டைய ஒரே உறவு அவனுடைய அக்கா மட்டுந்தான். அவளுடைய கணவரோ பைத்தியம் !

அவன் நேரே வீட்டுக்கு வந்தான். தன் அறைக்குப் போய் உடைகளை மாற்றிக்கொண்டான். தன் சூட்கேஸைத் திறந்து அதில் எல்லாச் சாமான்களும் சரியாக இருக்கின்றனவா என்று பார்த்துக் கொண்டான்.

மகேந்திரநாத் தம் அறையில் உட்கார்ந்திருந்தார். இந்தச் சமயத்தில் அவர் சூடான பால் குடிப்பார். இப்போது அக்கா அவருடைய காலடியில் உட்கார்ந்திருப்பாள்.

அவன் அக்காவைப் பரிமாறச் சொல்லிக் கொஞ்சம் சாப்பிட் டான். மகேந்திர நாத்தின் அறையில் நுழைந்து அவரை வணங்கி விட்டு, “நான் இன்னிக்கே புறப்பட்டுப் போறேன்" என்றான்,

ரஞ்சித்தின் இம்மாதிரி செய்கைகள் பெரிய மாமிக்கு வியப் பளிப்பதில்லை. அவன் எங்கே போகப் போகிறான், எங்கே தங்கப் போகிறான் என்று அவனைக் கேட்டால் பதில் கிடைக்காது. முன் பெல்லாம் இது பற்றி அவள் ரஞ்சித்துடன் சண்டை போடுவாள் : இப்போதெல்லாம் அப்படிச் செய்வதில்லை. வேளை கெட்ட வேளையில் அவன் திடீரென்று புறப்பட்டாலும் அவளுக்கு ஆச்சரியம் ஏற்படுவதில்லை. அவள் அதிகம் பேசாமல் அவனு டைய பிரயாணத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்வாள்.

500தான் செய்வது குறித்து அவளுக்கு உள்ளுற ஏற்படும் கஷ்டம் அவனுக்குத் தெரியும், அவன் போன பிறகு அவள் அழுவாள் என்பதும் தெரியும். அவன் புறப்படுவதற்கு முன் வழக்கம்போல் அவளுக்கு நமஸ்காரம் செய்தான், அவளுடைய சோகமான முகத்தைப் பார்த்து அவளைக் கேட்டான் :

" நீ ஏன் சிரிக்க மாட்டேங்கறே அக்கா? நீ சிரிச்ச முகத் தோடே இல்லேன்னா நான் எப்படிக் கிளம்புவேன்?''

பெரிய மாமி பலக்கச் சிரித்தாள், தம்பிக்கு விடை கொடுக்க. ''உம், இதுதான் என்னோட அக்கா !" என்று சொல்லிவிட்டு, அவன் எல்லாரிடமும் விடைபெறுவதற்காக முதலில் தென் பக்கத்து அறைக்குள் நுழைந்தான். "நான் போயிட்டு வரேன்" என்று சசிபூஷணிடம் சொல்லிவிட்டுச் சோனாவின் தலையில் அடர்ந்து வளர்ந்திருந்த மயிற் கற்றைகளைக் கையால் அளைந்து அவனைக் கொஞ்சினான். "நான் போயிட்டு வரேன். நீங்க சமத்தா இருக் கணும். அம்மா பேச்சைக் கேட்கணும், பெரியப்பாவைக் கவனிச்சுக்கணும், தெரிஞ்சுதா?"

சசிபூஷண் கேட்டார் : "மறுபடியும் தலைமறைவாகப் போயிடப் போறீங்களாக்கும் ?"

''ஆமா." ''எப்போ திரும்புவீங்க ?" ''திரும்பி வர முடியாதுன்னு தோண்றது."

"ஏன் ?"

''சில அசெளகரியம் இருக்கு." " நீங்க சுதேசி இயக்கத்தைச் சேர்ந்தவர். உங்களைப் பத்தி எல்லா விஷயமும் தெரிஞ்சுக்க எங்களுக்கு வாய்ப்பு இல்லை. ஆனால் சில சமயம் உங்க மாதிரி தேசசேவை செய்யப் போயிடணும்னு தோண்றது !"

''இப்பவுந்தான் நீங்க தேச சேவை செய்யறீங்க. இதை விடப் பெரிய சேவை என்ன இருக்கு ?''

''ஆனால் பாருங்க, தேசம் எப்போ விடுதலையடையும்னு எனக்குப் புரியல்லே .”

"விடுதலை கிடைச்சுடும்!'' "கிடைக்கும். ஆனால் ரொம்பத் தாமதமாறது. நாம எல்லாரும் தேச சேவையிலே இறங்கல்லேன்னுதான் இப்படித் தாமதமாறது."

ரஞ்சித் பதில் சொல்லவில்லை. ''நீங்க என்ன நினைக்கிறீங்க?" "எதைப் பற்றிச் சொல்றீங்க ?'' அதேச விடுதலையைப் பத்தித்தான்."

501'எல்லோரும் தேச சேவையில் இறங்கிட்டா, வாழ்க்கை எப்படி நடக்கும் ?''

“ நீங்க சொல்றது சரிதான். ஆனால் லீக் போற போக்கைப் பார்த்தால் கடைசி வரையிலே என்ன ஆகுமோன்னு பயமா இருக்கு."

ரஞ்சித் இதற்குப் பதில் சொல்ல விரும்பாமல் பேச்சை மாற்றினான். ""இந்தப் பசங்களுக்கு உங்ககிட்டே ரொம்ப விசுவாசம். இப்போ எல்லாம் ரொம்பக் கவனமாப் பல் தேய்க்கறாங்க."

"பல்லுத்தான் ரொம்ப முக்கியம். எங்கே, உங்க பல்லைக் காட்டுங்க, பார்க்கறேன்.”

வேறு சமயமாயிருந்தால் ரஞ்சித் என்ன செய்திருப்பான் என்று சொல்ல முடியாது. ஆனால் இப்போது அங்கிருந்தே போய்விட இருந்ததால் மிகவும் எளியவனாக ஆகிவிட்டான். ஆகவே அவன் சற்றும் தயக்கமின்றிச் சசிபூஷணுக்குத் தன் பற்களைக் காட்டினான். சசிபூஷண் விளக்கைத் தூக்கி ரஞ்சித்தின் பற்களைக் கவனித்தார். கை தேர்ந்த பல் டாக்டரைப் போல. ஈறுகளை அமுக்கி அமுக்கிப் பார்த்தார். பல்டுவை ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டுவரச் சொல்லிவிட்டு ரஞ்சித்தின் பக்கம் திரும்பிச் சொன்னார். " கீழ் வரிசைப் பல்லுகள் நன்னாயில்லே.”

ரஞ்சித் சிரித்துக்கொண்டே கேட்டான். "என்ன பண்ணணும் அதுக்கு ?"

"தினம் ராத்திரி ஒரு கடுக்காய் சாப்பிடுங்க." அவர் வெளியில் போய்க் கையை அலம்பிக்கொண்டு திரும்பி வந்து சொன்னார். கேடுக்காய் சாப்பிட்டால் பல் கெட்டிப்படும். ஈரப் த ன வேலை செய்யும். நன்னாத் தூக்கம் வரும். கடுக்காய் ஜீரணத்துக்கும் நல்லது" என்று சொல்லி நிறுத்திவிட்டு, அவர் தம்முடைய நோட்டுப் புத்தகத்தை எடுத்தார். அதன் அட்டவணையைப் பார்த்து 'கடுக்காய்' எந்தப் பக்கத்தில் இருக்கிறதென்று தெரிந்துகொண்டு அந்தப் பக்கத்தைப் பிரித்தார். பிறகு கடுக்காயின் குணங்களைப் பற்றி விவரமாகச் சொல்லிக்கொண்டே போனார் அவர்.

அந்த நோட்டுப் புத்தகத்தில் ஆயுர்வேதத்தில் பயன் படும் இலை கள். பூக்கள், பழங்களைப் பற்றிய எல்லா விவரங்களும் இருந்தன. ஒவ்வொன்றின் குணங்களும் உபயோகங்களும் விவரமாக எழுதியிருந்தன.

"இதிலே இருக்கிறதெல்லாம் இவங்களுக்குச் சொல்லிக் கொடுங்க. இந்த நாட்டு மண்ணிலே கிடைக்கற சாமான்கள் உலகத்திலே வேற எங்கேயும் கிடைக்காது" என்றான் ரஞ்சித்.

502"லால்ட்டு ! பல்ட்டு ! உங்க மாமா என்ன சொல்றார், கேட்டீங் களா? அவர் வெளியூர் போகப்போறார். அவருக்கு நமஸ்காரம் பண்ணுங்க !"

சிறுவர்கள் ஒரே சமயத்தில் எழுந்தார்கள். யார் மாமாவுக்கு முன்னால் நமஸ்காரம் செய்துவிட்டுத் தன் இடத்தில் திரும்பிப் போய் உட்காருவது என்பதில் அவர்களுக்குள் போட்டி, ரஞ்சித் சொன்னான. ''பரீட்சை சமயத்திலே இந்தமாதிரி போட்டி போட்டுக்கிணடு படிக்கணும். பரிட்சையிலே எல்லாரையும்விட முன்னாலே நிற்கணும், எல்லாத்திலேயும் வெற்றி அடையணும்."

அந்தப் பக்கத்தில் இருண்டிருந்த வராந்தாவில் மணீந்திர நாத் மெளனமாக உட்கார்ந்திருப்பதைப் பார்த்தான் ரஞ்சித். அவன் அவரிடம் சென்று, ''மாப்பிள்ளை, இன்னிக்கு நான் ஊருக்குப் போறேன்” என்று கூறி, அவன் அவருடைய கால்களில் தலையை வைத்து வணங்கினான், "நான் நல்ல காரியம் செய்யணும்னு ஆசீர் வாதம் பண்ணுங்க.''

அவர் உட்கார்ந்தே இருந்தார். பேசவில்லை. அவருடைய கண் கள் இருட்டில் தெரியவில்லை. ஆனால் ஒன்றுமட்டும் தெரிந்தது. இந்த மனிதர் தம் வாழ்நாள் முழுதும் ஒரு பொன்மானின் பின்னால் ஓடிக்கொண் டிருக்கிறார். அவரைப் பார்த்தாலே ரஞ்சித்தின் கண் களில் நீர் நிறைந்துவிடும்.

அவன் அவசர அவசரமாக மேற்குப் பக்க அறைக்குள் நுழைந் தான். தனமாமிக்கு நமஸ்காரம் செய்துவிட்டுச் சொன்னான் : "அக்கா. நான் இன்னிக்குப் புறப்படறேன்.''

"பத்திரமா இரு அப்பா !" ரஞ்சித் சசீந்திரநாத்திடமும் விடைபெற்றுக் கொண்டு அந்த அடர்ந்த இருளில் புறப்பட்டான். சசிபூஷண், சோனா, லால்ட்டு, பல்ட்டு எல்லாரும் அரிக்கேன் விளக்குடன் குளத்தங்கரை வரையில் அவனை வழியனுப்ப வந்தார்கள்,

ரஞ்சித் சொன்னான். "இனிமே நீங்க திரும்பிப் போங்க, மாஸ்டர் பாபு! எனக்கு இருட்டிலே வழி தெரியும். வெளிச்சம் இருந்தாத்தான் கண் கூசும், வழி சரியாத் தெரியாது."

திறந்தவெளி, ஸோனால் பாலி ஆற்றின் படுகை, தர்மூழ் வயல், மேலே வானம், வானத்தில் ஒளிர்ந்த நட்சத்திரங்களும் நிர்ஜன மான அந்தத் திறந்த வெளியும் அவனுக்கு அவனுடைய குழந் தைப் பருவத்தை நினைவூட்டிக் கொண்டிருந்தன. சிறுவயதில் அவன், சாம்சுதீன், மாலதி மூவரும் இந்த நதியில் விளையாடு வார்கள். நீந்தி மறுகரைக்குப் போய் விடுவார்கள், கொய்னாப்

503படகுக்குப் பின்னால் ரஞ்சித் ஒளிந்துகொள்வான். மாலதி அவனைக் காணாமல் பயந்துபோய், "டாகுர்!'' என்று கூப்பிடுவாள்.

இப்போதும் அவள் தன்னைப் பின்னாலிருந்து கூப்பிடுவதாக அவனுக்குத் தோன்றியது 'டாகுர், நீ என்னை யார்கிட்டே ஒப்ப டைச்சுட்டுப் போறே? நீ தேச சேவை பண்ணிக்கிண்டு திரியறியே? நான் மட்டும் இந்தத் தேசத்திலே சேர்ந்தவ இல்லையா? இந்த மண்ணிலேயும் தண்ணியிலேயுந்தானே நானும் வளர்ந்து பெரியவளானேன். என்னோட சுகதுக்கம் உன்னோட சுகதுக்கம் இல்லையா ? டாகுர், டாகுர்! நீ ஏன் பதில் பேசமாட்டேங்கறே?' நினைத்த அளவு வேகமாக நடக்க முடியவில்லை ரஞ்சித்தால், யாரோ இவனைக் கூப்பிட்டுக்கொண்டே இருக்கிறார்கள், பின்னா லிருந்து, ''நான் என்ன செய்வேன், டாகுர்?'' அவன் தன்னை மறந்து ஒரு மரத்தடியில் நின்றுவிட்டான், அவளுடைய கால்கள் நகர மறுத்தன. அவனுக்கு மேலே வானத்தைப் போல் தூய்மையே உருவாகத் தோன்றுகிறாள் மாலதி. ஓர் அடிகூட முன்னால் வைக்க முடியவில்லை அவனால்.

அவன் இதுவரை நினையாத நினைவுகள் இப்போது திடீரென்று அவனைத் தாக்கின. அவன் தன் லட்சியங்களை, கனவுகளைத் துச்ச மாக மதித்து வேறொரு வாழ்க்கையில் புகலாமா என்று நினைத்தான். இந்தக் காரியத்தின் மகத்துவம் நாட்டு முன்னேற்றத்தின் முக்கியத்து வத்தை விடச் சற்றும் குறைந்ததில்லை என்று அவனுக்குத் தோன்றியது.

அரசமரத்தடியில் நின்றுகொண் டிருந்தான் அவன். அடர்ந்த இருள். இருளில் நின்றுகொண்டே எதையோ பார்க்க முயற்சி செய்தான் அவன். தூரத்தில் கிராமங்களின் விளக்குகள் பொட்டுக் கள்போலத் தெரிந்தன. இரவு வெகு நேரமாகவில்லை. கவிராஜிடமும் புஜங்கனிடமும் கத்திப் பயிற்சி, சிலம்பப் பயிற்சி சம்பந்தமான எல்லா விஷயங்களையும் - எங்கெங்குப் புதிய பயிற்சி நிலையங்கள் ஆரம்பிக்க வேண்டும், அவன் இல்லாதபோது யாருடன் தொடர்பு கொள்ளவேண்டும் என்பது போன்ற விஷயங்களை - சொல்லிவிட் டானா என்று ஒரு தடவை நினைத்துப் பார்த்துக் கொண்டான்.

எங்கோ ஒரு நாய் குரைத்தது. நரிகள் ஊளையிட்டன, ஜாலாலியின் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் இதற்குள் நாணல் காடாக வளர்ந்துவிட்டது. அதன் வெள்ளைப் பூக்கள் இந்த இடத்தில் நிலாத் துண்டு போல் பளிச்சென்று கண்ணில் பட்டன, ஜாலாலி தன் வாழ்நாள் முழுதும் பிழைப்புக்காகப் போராட்டம் நடத்தினாள், சாவுக்குப் பின் தனக்கென்று ஒரு சிறிய நிலத்தை அடைந்து விட்ட மகிழ்ச்சியில் எவ்வளவு அழகாகச் சிரிக்கிறாள் அவள்! ஆம்,

504இருளில் வெள்ளையாகப் பளிச்சிடுவது நாணற் பூவுமல்ல, நிலாவு மல்ல. ஒரு துண்டு நிலம் கிடைத்த மகிழ்ச்சியில் சிறு குழந்தை போல் சிரிக்கும் ஜாலாலியின் சிரிப்புத்தான் அது. மலரைப் போன்ற பவித்திரமான சிரிப்பில் அவளது முகம் மலர்ந்திருக்கிறது.

இருட்டில் நின்றுகொண் டிருந்த ரஞ்சித்துக்குத் தோன்றியது ; 'உலகத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரு துண்டு நிலம் கிடைக்க வேண்டும்; சாப்பாட்டுக்கு இல்லாத மனிதன், தன் கால்களுக்குக் கீழே தனக்கென்று கொஞ்சம் சொந்த நிலம் இல்லாத மனிதன்.' இப்படி மனிதர்கள் இருப்பதைக் கற்பனை செய்துபார்க்கக் கூடப் பிடிக்கவில்லை அவனுக்கு. மனிதனுக்கு வீடு இருக்கவேண்டும், உழுது பயிர் செய்து சாப்பிடக் கொஞ்சம் நிலம் இருக்கவேண்டும். சாப்பிட வழியில்லா த மனிதனுக்குச் சுதந்தரம் கிடைத்து என்ன பிரயோசனம்? வீடு, வாசல், உணவு, துணி - இவையே சுதந்தரத் துக்கு அடையாளம். மாலதிக்கும் ஒரு துண்டு நிலம் கொடுக்க வேண்டுமென்று ரஞ்சித்துக்குத் தோன்றியது.

இருளில் இருக்கும்போது அவனுக்கு அசாதாரண தைரியம் பிறந்துவிடுகிறது. அப்போது அவனுக்கு மரண பயம் இருப்ப தில்லை. இரவு பகல் என்று பாராமல் வயல்கள், காடுகள், நதிகள் ஆகியவற்றில் சுற்றித் திரிவது, மலைகள் இருந்தால் அவற்றின் மேல் சிங்கக்குட்டி போல் ஏறிச் சுற்றுவது - ஒரு கிரகத்திலிருந்து இன்னொரு கிரகத்துக்குப் பிரயாணம் செய்வது போன்ற சஞ்சாரங்கள் மூலம் அவனுக்கு உயிர் வாழ்வதில் ஆர்வம் உண்டாகிறது.

ஒன்றும் செய்ய முடியாது போனால் அவன் தன்னைச் சவமாகக் கருதிக் கொள்கிறான். மாற்றமில்லாத ஒரே மாதிரியான வாழ்க்கை அவனுக்கு அலுப்பைத் தருகிறது. அத்தகைய வாழ்க்கையில் அவனுக்கு உயிருடனிருக்கும் ஆசையே மறைந்துவிடுகிறது. உற்சாகம் மறைந்துவிட்டால் அவன் தன் கடமையையே மறந்து போகிறான்.

ஹட்சன் துரையைக் கொன்ற பிறகு இப்போது மறுபடி ஒரு புதிய சாதனையைச் செய்யப் போகிறான் அவன் ; ஒரு கிரகத்தி லிருந்து இன்னொரு கிரகத்துக்குப் பிரயாணம் செய்வதைப் போல.

இருளில் நரேன்தாஸின் வீடு தெளிவாகத் தெரிந்தது. அதில் பொட்டுப் பொட்டாக வெளிச்சம் தெரிந்தது. நரேன்தாஸ் மாட்டுக் கொட்டகையில் மாடு கட்டுகிறான் போலும். ஆபாராணி துறையில் பாத்திரங்களைத் தேய்த்துவிட்டுத் திரும்பி வந்தபின் தான் அவன் மேலே செல்ல முடியும். வீடு திரும்பியதும் படுத்துக் கொண்டு விடுவார்கள் அவர்கள். மாலதியைப் பற்றிய அவனு

505டைய பயம் குறைந்துவிட்டது. காரணம், இப்போது அவளுடைய உடலில் முன்பு இருந்த இளமை வெறி இல்லை. அவள் உடல் மெலிந்து சோர்ந்து நோயாளியாகி விட்டாள். தர்மம், அதர்மம் பற்றிய உணர்வுகள் அவளைக் குழப்பிக்கொண் டிருக்கின்றன. நரேன் தாஸ் அவளைத் தன் வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை, அவள் இங்கேயே தங்கியிருந்தால் அவளுக்குப் பைத்தியம் பிடித்துவிடும்.

இரவு நேரம் கழிந்துகொண் டிருக்கிறது. பொழுது புலரும் முன் போலீஸ் டாகுர் குடும்பத்து வீட்டைச் சூழ்ந்து கொள்ளும். இந்தச் செய்தி அவனுக்குக் கிடைத்திருந்தது. சந்தோஷ்*தாரோகா ஆயுதம் தாங்கிய போலீசை அழைத்துவர நாராயண கஞ்ச் போயிருக்கிறான் - ஒரு சாமானிய ஆளைப் பிடிப்பதற்காகப் பிரமாத ஏற்பாடுகள் செய்திருக்கிறான் சந்தோஷ தாரோகா. அவனுடைய அபரிமிதமான பயத்தைப் பார்த்துச் சிரிப்பு வந்தது ரஞ்சித்துக்கு,

அவனைக் காட்டிக்கொடுப்பவர்கள் யார் ? ரஞ்சித்துக்கு இது தான் புரியவில்லை. இந்தக் கிராமத்தில் அவனுடன் யாருக்கு விரோதம் ? போலீஸ் ஸ்டேஷன் அங்கிருந்து சில கோசதூரம். ஸ்டேஷ னுக்குப் போய்வர அதிக நேரம் பிடிக்கும். தண்ணீர் சூழ்ந்த இடமாதலால் அந்தப் பக்கம் போலீஸ் அதிகம் வருவதில்லை, ஆகவேதான் அவனால் அவ்விடத்தில் செளகரியமாக நீண்ட காலம் அக்ஞாதவாசம் செய்ய முடிந்தது. ஆனால் வேலையின்றிச் சும்மா உட்கார்ந்திருக்கப் பிடிக்கவில்லை அவனுக்கு. ஆகையால் அவன் தன் சங்கத்தின் ஆலோசனையை வேண்டிக் கடிதம் எழுதினான். சங்கத்தின் உத்தரவுப்படி ஒவ்வொரு கிராமத்திலும் பயிற்சி நிலையங்களைத் துவக்கினான். ஒரு நாள் தேசாந்திரிப் பாடகன் போல் வேடமணிந்த ஒருவன் அவனுக்கு ஒரு செய்தி கொண்டு வந்தான், 'போலீஸ் அவனைத் தேடிக்கொண் டிருக்கிறது, அவன் அங்கிருந்து ஓடிவிடவேண்டும்!' என்று.

இப்போது நரேன் தாஸின் வீட்டு விளக்குகள் அணைந்துவிட்டன. ரஞ்சித காவிநிற ஜிப்பாவும் அதன்மேல் கையில்லாத குட்டைக் கோட்டும் அணிந்திருந்தான், கோட்டின் உட்புறப் பைக்குள் கையை விட்டுப் பார்த்தான். அவன் அதில் வைத்திருந்த சாமான் பத்திரமாக இருந்தது. எதிரில் இருட்டில் ஏதோ உறுமும் ஒலி, அவசர அவசரமாக ரிவால்வரை எடுக்கக் கோட்டுக்குள் கையை விட்டபோது அவனுக்குத் தோன்றியது. அது அவர்களுடைய வளர்ப்பு நாய். அவனுக்கு விடை கொடுக்க வந்திருக்கிறது போலும்.

"இங்கே என்ன வேலை உனக்கு ? வீட்டுக்குப் போ" என்று ரஞ்சித் சொன்னான்.

*தாரோகா- போலீஸ் இன்ஸ்பெக்டர்.

HTTI

IT

5

506நாய் அவனோடு நடக்க ஆரம்பித்தது. ''நீ போ, போ! நான் இவ்வளவு நாள் கழிச்சு ஒரு நல்ல காரியம் செய்யப்போறேன்!''

நாய் அவன் பேச்சைக் கேட்காமல் அவனுடனேயே நடந்தது. "சொல்றேனே, காதிலே விழல்லே ? '' நாய் அவனுடைய கால்களில் விழுந்து சுருண்டு படுத்துக் கொண்டது.

"போதும், போதும் ! நமஸ்காரம் பண்ணினது போதும்! இப்போ வீட்டுக்குப் போ!"

நாய் குளத்தங்கரையை நோக்கி ஓடியது. மருத மரத்தடியில் நின்றுகொண்டு அவன் எங்கே போகிறான் என்று பார்த்தது. ரஞ்சித் மாலதியின் குடிசை வாயிலில் நின்றான். மூங்கில் படல். டார்ச்சை அடித்துப் படல் கொஞ்சமாவது திறந்திருக்கிறதா என்று பார்த்தான் ரஞ்சித். அது திறந்திருக்கவில்லை. அவன் வெளியிலிருந்து மெல்லிய குரலில் கூப்பிட்டான் “மாலதி !” என்று. விழித்துக்கொண்டுதான் இருக்கிறாள் அவள். அவன் ஒரு தடவை கூப்பிட்டதும் அவள் எழுந்து உட்காரும் அரவம் கேட்டது. ரஞ்சித்தின் குரலை அடையாளங் கண்டுகொண்ட மாலதியின் நெஞ்சு அடித்துக்கொண்டது. அவள் நடுங்கும் கைகளால் படலைத் திறந்தாள்.

"நான் தான்.'' மாலதி ஒன்றும் பேசவில்லை. *இந்தத தடவை நாம் போகலாம்.” மாலதிக்கு ஒன்றும் புரியவில்லை. 'நாம போகலாம்!' என்ற வார்த்தைகளால் என்ன சொல்ல விரும்புகிறான் அவன் ? அவள் தலையைக் குனிந்து கொண்டு அசையாமல் நின்றிருந்தாள்.

''என்னோட நீயும் வா." “எங்கே ?" "கண் போகிற இடத்துக்கு.'' "நான் உனக்கு ஒரு விஷயம் சொல்லணும், டாகுர்." "இப்போ ஒண்ணும் சொல்ல வேண்டியதில்லே நீ . தாமதமானால் பிடிபட்டுடுவோம். கிளம்பு உடனே !''

''எனக்குப் பயமா இருக்கு, உன் கிட்டே எல்லா விஷயத்தையும் சொல்லாட்டா.''

"போற வழியிலே எல்லாம் கேட்டுக்கறேன். சீக்கிரம் வா." மாலதி குடிசைக்குள் நுழைந்து இரண்டு வெள்ளைப் புடைவைகள், பாவாடைகள், ஒரு மாக்கல் தட்டு இவற்றை எடுத்துக் கொண்டாள்.

"இவ்வளவையும் தூக்கிண்டு உன்னாலே நடக்க முடியாது."

507மாலதி தட்டை வைத்துவிட்டு வந்தாள். "பொழுது விடியறதுக் குள்ளே சாலமரக் காட்டுக்குள்ளே நுழைஞ்சுடணும்" என்று ரஞ்சித் சொன்னான்.

அவர்கள் ஆற்றுப் படுகையில் நடந்து போகும்போது தோடார் பாகின் மறுபக்கத்தில் யாரோ டார்ச்சைப் போட்டுக்கொண்டு வரும் அரவம் கேட்டது. குதிரைகளின் குளம்பொலி. இரவோ டிரவாகச் சந்தோஷ் தாரோகா கிராமத்தைச் சூழ்ந்துகொண் டிருக்கிறான் என்று ரஞ்சித்துக்குப் புரிந்தது. “தண்ணியிலே குதிச்சுடு!" அவன் மாலதியிடம் கூறினான்.

போலீஸ்காரர்கள் டார்ச்சை அணைத்துவிட்டு நடந்து போனார்கள். அவர்கள் நீரில் குதித்த அரவம் போலீசுக்குக் கேட்டிருக்கும் என்று ரஞ்சித்துக்குத் தோன்றியது. அவன் மாலதியிடம், எவ்வளவு வேகமாக முடியுமோ அவ்வளவு வேகமாக மறுகரையை நோக்கி நீந்தச் சொன்னான்

அவர்கள் நீந்திப் போய் மறுகரையை அடைந்தார்கள். டார்ச்சின் வெளிச்சமும் அந்தக் கரையில் வந்து விழுந்தது. ரஞ்சித் பிடிபட்டு விடுவானோ ? அவர்கள் அவனைத் தேடுகிறார்கள்.

இந்த ஆபத்தான நிலையிலும் ரஞ்சித் சற்றும் சலனமடையவில்லை. மாலதியும் கூட இருப்பதால் அவனுக்குச் சற்று அசௌகரியம். அவ்வளவுதான்! அவன் சொன்னான் :"'நான் தப்பிப்போயிடுவேன்னு அவங்களுக்கு எப்படியோ தெரிஞ்சுடுத்து. அதுதான் அவங்க முன்னாலேயே வந்துட்டாங்க."

மாலதிக்கு ஒன்றும் புரியவில்லை. அவளுக்குக் குமட்டிக்கொண்டு வந்தது.

“உனக்கு என்ன வந்தது?'' "டாகுர், நீ ஓடிப்போ ! நீ தாமதம் பண்ணினா உன்னைப் பிடிச்சுடு வாங்க '

அவன் சற்றும் பரபரப்படையாமல் மெல்லச் சிரித்தான். மாலதி யிடம் சொன்னான், ''இதை எடுத்துப் போட்டுக்கோ. எவ்வளவோ ஆபத்திலேருந்து என்னைக் காப்பாத்தியிருக்கு இது."

அவன் மாலதியிடம் ஒரு கறுப்பு நிறப் *புர்க்காவை எடுத்துக் கொடுத்தான். அவர்கள் காட்டுக்குள் நுழைந்து உடை மாற்றிக் கொண்டார்கள். அவன் தன் சூட்கேசிலிருந்து ஏதேதோ சாமான் களை எடுத்தான். ஒரு துப்பாக்கியை எடுத்து மாலதிக்கு டார்ச் ஒளி யில் விளக்கினான். "இதோ பார், இதுதான் ரிவால்வரோட குதிரை. இதை அழுத்தினால் குண்டு வெளியிலே பாயும். இதை நன்னாப்

*புர்க்கா - கோ ஷாப் பெண்கள் தங்கள் உடலை மறைத்துக்கொள்ள அணியும் -உடை . 1

508
பிடிச்சுக்கணும். நன்னாக் குறிவைக்கணும். இதென்ன மாலதி ? ஏன் ஓங்களிக்கறே ?''

ஓங்களித்துக்கொண்டே இருந்ததால் மாலதியால் பதில் பேச முடியா வில்லை .

"உனக்கு என்ன வந்தது, மாலதி? எனக்கு ஒண்ணும் புரியல் லியே? விளக்கமாச் சொல்லேன்.''

மாலதி ரஞ்சித்திடம் இவ்வளவு நாட்களாகச் சொல்ல விரும்பி யதை, அருவருப்பிலும் தயக்கத்தாலும் இதுவரை சொல்லாமல் இருந் ததை, இப்போது சொல்லிவிட்டாள்.

"டாகுர், நான் அம்மாவாகப் போறேன், மூணு பிசாசுகள் என்னை அம்மாவாககிட்டாங்க !" மேலும் பேச முடியாமல் அவள் ஓங்களித் தாள்.

இருட்டில் ரஞ்சித்துக்கு ஒன்றும் தெரியவில்லை. அவள் அவன் காலடியில் உட்கார்ந்திருந்தாள். மறுகரையில் தொடர்ந்தாற்போல் எண்ணற்ற டார்ச்சு விளக்குகளின் வெளிச்சம் தெரிந்தது. ஆனால் காட்டுக்குள் அதிகம் நுழையவில்லை. சிறு ஒளிக்கீற்றுகள் மட்டும் மழைத் தூறல் போல் இலைகளின் இடைவெளிகள் வழியே வந்தன. ரஞ்சித மண்டியிட்டு உட்கார்ந்தான். மாலதியின் தலைமேல் வைத்தான். ''நாம ரொம்பத் தூரம் போகணும். மாலதி எங்கே போவோம்னு தெரியல்லே எனக்கு. நீ எழுந்திரு!"

முன் ஒரு தடவை சோனாவின் பைத்தியக்காரப் பெரியப்பா யானை மேல் உட்கார்ந்துகொண்டு கடந்த ஆற்றங்கரைக் காட்டில் ரஞ்சித்தும் மாலதியும் ஒரு மரத்தடியில் அருகருகே படுத்துக் கொண்டு காலைக்காகக் காத்திருந்தார்கள். ரஞ்சித் ஒரு வார்த்தை யும் பேசவில்லை. பயந்திருந்த மாலதி புல்லுக்குள் முகத்தைப் புதைத்துக் கொண டிருந்தாள். இருவருமே இரவு முழுதும் விழித் திருந்தார்கள். இவ்வளவு நிகழ்ந்த பிறகு என்ன பேச்சு பேசினால் சகஜ நிலைக்குத் திரும்பிவர முடியும் என்று ரஞ்சித்துக்குப் புரிய வில்லை. அவன் இந்தப் பெண்ணை அழைத்துக்கொண்டு எங்கே போவான் ? அவளை எங்கே, யாரிடம் விடுவான் ? மரக்கிளைகள் காற்றில் அசைந்தன. மரங்களின் இலைகளில் நிலவு -- முடியப் போகும் இரவின் நிலவு விழுந்தது. 'பாதாய் பாதாய் பொடே நிசிர் சிசிர்!' யாரோ உரத்த குரலில் படிக்கிறாற் போன்ற பிரமை ""அட்லாஸ்ட் தி செல்ஃபிஷ் ஜயண்ட் கேம்.''

அதிகாலையில் கிழக்கு வெளுக்கு முன்பே மாலதிதான் ரஞ்சித்தை எழுப்பினாள். விடியற்காலையில் அவன் தூங்கிப் போயிருந்தான்,

509ரஞ்சித் பரபரத்துக்கொண்டு எழுந்தான். ஒரு லுங்கியணிந்து கொண்டான். தன் சூட்கேஸிலிருந்து கோந்தும் கொஞ்சம் சணலும் எடுத்துத் தன் முகத்தில் ஒட்டிக்கொண்டு முற்றிலும் ஒரு புதிய மனிதனாக மாறிவிட்டான். இப்போது அவன் ஒரு மியான் சாயபு. அவனுக்கு அருகிலுள்ளவள் புர்க்கா அணிந்த அவனுடைய பீபி. கட்கத்தில் ஒரு கிழிந்த குடை , மியானும் பீபியும் உறவினர் வீடு போகும் பாவனையில் நடந்தனர். சற்றே நொண்டி நொண்டிக் கொண்டு நடந்தான் ரஞ்சித்.

போகும் வழியில் மாலதி சொன்னாள் ; "டாகுர், என்னை ஜோட்டன் கிட்டே விட்டுட்டுப் போ!''

ரஞ்சித் ஒன்றும் சொல்லவில்லை. இந்த நிலையில் அவளை வேறு எங்கே கூட்டிக்கொண்டு போவது? அவர்கள் தர்காவை நோக்கி நடந்தார்கள். நாள் முழுதும் நடந்தால் தர்காவை அடையலாம். மாலதியை ஜோட்டனிடம் விட்டுவிட்டு அவன் வேறெங்காவது போகத் தீர்மானித்தான்.

நடந்துகொண்டே அவன் யார் மேலோ கோபங் கொன்ட வனாக அந்தக் காட்டுக்குள்ளே உரக்கக் கூவினான் : "வந்தே மாதரம்," அவனுடைய கோபம் ஜப்பர் மேலா அல்லது சந்தோஷ் தாரோகா மேலா என்று ரஞ்சித்தின் முகத் தோற்றத்திலிருந்து கண்டுபிடிக்க முடியவில்லை.

முதற்பாகம் நிறைந்தது.