க.நா.சு கவிதை - விலை
payon twit
payon twit
மஞ்சள் மீன் - அம்பை
www.archive.org
Automated Google-OCR
www.archive.org
Automated Google-OCR
மணலில் சூடு கண்டாகிவிட்டது. வெய்யில் காலம். மணலில் ஈரம் தங்குவதில்லை. இடதுபக்கம், சுருங்கிப்போன வீர்யமற்ற அலைகள் மடங்கிய கடலிலிருந்து கண்ணைத் திருப்பிவிட்டால் பாலைவனம் மாதிரி மணல் பரந்து கிடந்தது. ஆனால் பார்வை கடல் பக்கமே ஒடுகிறது. வெள்ளைப்படகு வந்துவிட்டது. கட்டியங் காரன். அது வந்தவுடன் மீன் பிடிக்கப்போன படகுகள் வர ஆரம்பித்து விட்டன என்று தெரிந்துகொள்ளலாம். மிதந்து வருகிறது அன்னம் மாதிரி சாய்ந்துசாய்ந்து. கரையில் வெகு தூரத்தே சில வண்ணப் புள்ளிகள் எழுந்தன. மீன்காரிகள் கிளம்பிவிட்டார்கள், படகுகளை எதிர்கொள்ள. வண்ணங்கள். தீர்க்க ஊதா. ராட்சசச் சிவப்பு. கனமான பச்சை அடிக்கும் நீலம், வெளுத்த நீலமும் சாம்பலுமாகிப்போன வெள்ளைப் படகோடும் கடலுக்கு எதிரான வண்ணங்கள் எழும்பி வந்தன வேகத்துடன்,
மற்ற படகுகளை இப்போது பார்க்க முடிந்தது. நடையை எட்டிப் போட்டால் படகுகள் அருகே போய் வலை மீன்களைப் பார்க்கலாம். கடல் உப்புக் காற்றில் அலுத்த உடம்பும் கைகளுமாய், வந்து இறங்கிய உடனேயே வலையைப் பிரித்து மீன்களைத் தரம் பிரிக்க ஆரம்பித்து விடுவார்கள். பிளாஸ்டிக் வாளிகளில் கண்களை வட்டமாய் மலர்த்திக் கொண்டு சப்சப்பென்று விழும். வேண்டாதவை வெளியே பொதுவாக, மங்கிய, இடையிடையே வினாடி நேரத்துக்கு உரத்துப்போன பேச் சொலிகள்.
கைகளின் கறுப்பு படகுகளின் மரப்பழுப்பு வலைக் கண்ணிகளின் ஊடே வெளுத்த வயிற்று மீன்கள். வெகு அருகே, பலத்துடன் ஆனால் மென்மையாய்க் கண்களில் அழுத்தும் புடவைச் சாயங்கள். வண்ண வாளிகள். உலர்ந்த மணல், அபூர்வ வண்ணச் சேர்க்கை. கடல் விரிந்துகிடந்த கரையின் ஒரத்தில், மனத்தில் மெல்லத் தேங்கி உறைந்து போகும் வண்ணச் சேர்க்கை. ஒரு மஞ்சள் மீன் சொத்தென்று மணலில் ஏறியப்பட்டது.
->
278 -> அம்பை
________________
இலையுதிர் காலத்துப் பழுப்புக்கு முன் வரும் ஒரு மஞ்சள். கறுப்புப் புள்ளிகளுடன் குனிந்து பார்த்தபோது துளளியது. வாயைப் பிளந்துபிளந்து மூடியது. சுடுமணலில் துள்ளித்துள்ளிப் புரண்டது. மீன் பிரித்தல் அதன் பாட்டுக்கு மும்முரமாய் நடந்து கொண்டிருந்தது. அந்த வாய். குவிந்து குவிந்து திறந்து நீருக்குத் தவித்த வாய். ஜலஜாவின் வாய் மாதிரி.
அவசரக் குடுக்கை ஜலஜா முட்டிமுட்டி வெளியே வந்துவிட்டாள். முதலியேயே பெயர் யோசித்து வைத்தாகிவிட்டது. ஜலத்திலிருந்து வருபவள். தாமரை, ஜலஜா. இன்குபேடரில் வைத்துவிட்டார்கள். அறையின் வெளியே நின்று பலமுறை அவளைப் பார்த்தேன். இளஞ்சிவப்பு வாய். உருண்டைக் கண்கள். வாயைச் சப்புவது போல் திறந்து மூடுவாள் இடையில்.
மின்சார எரிப்புச் சுடுகாட்டிலிருந்து அருண் கொண்டுவந்த அவள் சாம்பல் ஒரு சிறு குடுவையிலிருந்தது.
ஹரப்பா- மொஹெஞ்சதாரோ காலத்தில் மனிதர்கள் புதைக்கப் பட்ட பெரிய மண் குடுவைகளின் சிறு வடிவம். அதன் கூம்பிய வாய் ஒரு துணியால் கட்டப்பட்டிருந்தது.
"வாய் ஏன் மூடியிருக்கு ?"
"என்ன வாய்?"
"அந்தக் குடுவையோட வாய். அதைத் தொறந்துடு." "அனு, அதுக்குள்ள வெறும் சாம்பல்." "எனக்குப் பார்க்கணும். வாயைத் தொறந்துடு."
"வாயைத் தொறந்துடு . வாய். அந்த வாய்."
AA
yy
குரலெடுத்து அழுகை துணி எடுக்கப்பட்டபோது சிறு குடுவையின் செப்பு வாய். இந்தக் கடலில்தான் அவள் சாம்பல்.
கடல் சற்றுத் தூரத்தில், மஞ்சள் மீன் துள்ளப் பார்த்துத் துவண்டது. வாயை ஆகாசத்தை நோக்கிப் பிளந்தது. சுடுமணலில் கையிட்டு அதை எடுத்தபோது வழுக்கி விழுந்தது. துள்ளி வட்டமிட்டது. அருகே அலை அடித்தப்போட்ட இலையால் அதை ஏந்த முயன்ற போது மீண்டும் வழுக்கல்.
மீனவப் பையன் அலையில் அளைந்துவிட்டு வந்தான். "இகட ஏ" என்று மராட்டியில் விளித்தவுடன் வந்தான். "இந்த மஞ்சள் மீனைத் திருப்பி சமுத்திரத்தில் போடறியா ?”
மஞ்சள் மீன் K- 279 -8-
________________
அஸ்க்கென்று சிரித்தான். சடாரென்று வாலால் பிடித்தான். கடலை நோக்கி ஓடி ஆரம்பித்தான். அவன் பின்னால் ஒட்டம். வேகமின்றி அடித்த அலையின் நுனியில் அதைப் போட்டான். மளக்கென்று நீரை விழுங்கியது. கள் குடித்தாற்போல் கிறங்கி
நீரை உள்ளே உறிஞ்சியது. பிறகு ஒரு வால் வீச்சு மமதையுடன் ஒரு குதிப்பு. வாலை இரு புறமும் சுழற்றி முன்னால் நீந்தியது. வெகு தூரம்வரை மஞ்சள் தெளிந்தது. பின்பு கடல் நீலச் சாம்பல் வெள்ளையில் மஞ்சள் மறைந்தது.
O
K-
280 xx அம்பை