காலச்சுவடு - 28 ஜனவரி-மார்ச் 2000
www.padippakam.Com
AUTOMATED GOOGLE-OCR
மழை வீட்டின் முன் வண்டிகள் நின்றதும் பரமசிவம் பிள்ளையும் சிந்தாமணியும் அவரவர் காலங்களிலிருந்து தனித்தனியே வெளிப்பட்டுக் கீழிறங்கினார்கள். சொல்லி வைத்தாற்போல மழையும் வந்துவிட்டிருந்தது. அவர்களை அங்கே கொண்டு வந்துவிட்ட கூண்டு வண்டிகள் பார்வையிலிருந்து நகர்ந்தபோது மண்சாலையின் எதிர் புறத்திலிருந்து அது தன் முழு ஆகிருதியையும் அறிவித்த படி அவர்கள் முன் திடீரென்று எழுந்தது. சச்சதுரமான கற்பாளங்கள் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டு வானளாவ உயர்ந்திருந்த நேர்த்தியையும் அவற்றின் தேர்ந்த இழைப்பில் மதிய கொண்டிருந்த வண்ணங் களையும் கண் பார்வை எட்டு மட்டும் விரிந்திருந்த நந்தவனத்தையும் பார்த்து அவர்களிருவரும் சற்று நேரம் பிரமித்து நின்றார்கள்.
அது கடினமான கற் களால் கட்டப்பட்ட வஸ்து என்றே சிந்தாமணியால் நம்ப முடியவில்லை. கற்களுக் குள் அவற்றின் உறுதியைத் தளர்த்தாமலேயே பஞ்சின் மென்மையையும் லகுவையும் எப்படிப் புகட்ட முடிந்தது என்று பரமசிவம் பிள்ளையின் தொழில் புத்தியும் ஆச்சர்யப்பட்டது. பின்புறம் விரிந்திருந்த வானம் பார் வைக்குள் அகப்படும் எல்லையைக் கணித்து அந்த எல்லை வரை கட்டிடத்தின் மேல் முகப்புகளை வெளிப்புறம் நீட்டியும் இழைத்தும் பொருத்தியிருந்த விதம் வானத்தை யும் அந்த வீட்டின் ஒரு அங்கமாக இணைத்து விட்டிருந் தது. நாளின் சுழற்சி வெளிப்படுத்தும் ஆரஞ்சு, ஊதா, வெளிர்ப்பச்சை, சிவப்பு, மஞ்சள் மற்றும் கருநீலம் ஆகிய எந்த நிறமாயிருந்தாலும் அதை வெளிச்சுவர் கிரகித்துக் கொண்டு உடனே அதற்கேற்பத் தன் நிறத்தையும் தகவமைத்துக் கொள்ளுமென்பது அதைப் பார்த்த மாத்திரத்தி லேயே பரமசிவம் பிள்ளைக்குத் தெரிந்தது.
முகப்புக்கும் எதிரே விரிந்திருந்த மரக்கூட்டங்களுக்கு மாக பறந்து பறந்து மாயப்பாலமிட்டுக்கொண்டிருந்த பறவைகளின் கூட்டுக் கெச்சட்டம் அந்த அற்புதத்துக்கு வாயில்லாத குறை மட்டுமிருப்பானேனென்று ஒரு தனி மொழியையும் அதனால் சூழலுக்கு முழுமையையும் தந்து கொண்டிருந்தது. மேல் தளத்தில் கணிசமாக வளர்க்கப் பட்டிருந்த, முத்துப் போன்ற சிறிய இலைகளைக்கொண்ட கொடி வர்க்கங்கள் கைப்பிடிச் சுவர்களைப் பற்றிக் கொண்டு விளிம்புக்கு ஏறி அங்கிருந்து வெளிப்புறமாக வழிந்து அடித்தளத்தை நோக்கிச் சரேலென்று இறங்கிக் கொண்டிருந்தன. அவற்றின் அடர்த்திக்குள் சுவர்கள் பதுங்கிக் கொண்டதில் ஒரு பிரம்மாண்டமான புராதன விருட்சத்தின் சாயலைக் கட்டிடம் பெற்றிருந்தது. வெளிச் சுவர்களின் சரிவோடு சரிவாக அதை உறுத்தாதபடிக்கு ஆங்காங்கே பதிக்கப்பட்டிருந்த பிறைகளும், கூம்புகளும், ம்ேடைகளும் அந்தப் பசிய வியாபகத்தோடு இழைந்து கொள்ள, பறவைகளின் பயமும் தயக்கமும் அறவே அற்றுப் போயிருந்தன. கால்களால் கூம்புகளைப் பற்றிக் கொண்டு இலை இடுக்குகளிலிருந்து பூச்சிகளைப் பிடுங்கும் உள்ளான்களும், கொடித்தண்டைப் பற்றிக் கொண்டு ஊஞ்சலாடும் கிளிகளும், உள்ளே மறைந்திருந்த பிறைகளைத் தேடிப்பிடித்து அதற்குள் கூடமைத்துக் கொண்டுவிட்ட குருவிகளும், இரவெல்லாம் அலைந்து திரிந்த அலுப்பைத் தூங்கிப் போக்கிக் கொள்ளவென்று
நேர வெளிச்சத்துக்குப் புதிய அர்த்தத்தைக் கொடுத்தவாறு صص எண்திசைகளிலும் சிதறிக் 48 συΙ ܓܔ=ܒܣܦ
56N/
மிகுந்திருந்த பிறைகளுக்கு வந்து சேர்ந்த கூகைகளும், எங்கும் அமர மனமில்லாமல் எல்லாவற்றையும் சந்தேகக் கண்ணோடு பார்த்தபடி சொடுக்கிச் சொக்கிப் பறந்து கொண்டிருந்த மைனாக்களும் மேலும் குயில்களும், அணில் வர்க்கங்களும் இவற்றை முழுவதும் அணைத்த படி பெய்துகொண்டிருந்த மழையும் அந்தப் பிரதேசத் தையே வேறோர் உலகத்துச் செய்தி போலாக்கி வைத்தி ருந்தன.
அவர்கள் வந்து இறங்கிய போது பாரம் குறைந்த மகிழ்ச்சியில் சற்றே தங்களைத் தளர்த்திக்கொள்ளவென்று கூண்டு வண்டிகளில் பூட்டப் பட்டிருந்த குதிரைகள் தங் கள் முன் கால்களைத் தரை யில் அடித்துச் சொடுக்கிக் கொண்ட போது அந்தச் சப்தத்தில் - அது சிறியதே யானாலும் - வீட்டின் முன் ما நிறைந்திருந்த அமைதியில் பெரிய அசம்பாவிதம் ஏற் பட்டு இழைவுகளின் மொத்த லயிப்புக்கும் பங்கம் வந்து விட்டதைப் போல நூற்றுக் கணக்கான சிறகுகள் ஒரே நேரத்தில் பக்கவாட்டிலிருந்து விரிந்தன. சபிக்கப் பட்ட அரக்கனைப் போல கட்டிடம் தன் பெருத்த சரீரம் முழுவதையும் அப்படியே அந்தரத் தில் எழுப்பியது. அடித்தளத்திலிருந்து மேல்தளம் வரை கற்கள் கொடி வர்க்கங்களுடன் குலுங்கின. பயத்தையும் அதிருப்தியையும் சொல்லிச் சத்தமிட்டன. வீடு தன் இலைகளை உதிர்த்து வெறுப்பைக் காட்டியது. தங்கள் கண் முன்பிருந்து கட்டிடம் பறந்து மறைந்து போகப் போவதை எதிர்ப்பார்த்து இருவரும் திகைத்துப் போய் நின்றிருந்தார்கள். ஒரு வினாடி பயமும் சகுன பங்கமும் அவர்கள் முகத்தை வெளிறச் செய்தன. (பிள்ளையை அணைத்துக்கொள்ள கைகள் இருந்தன. தனியாக வந்த சிந்தாமணி தானே தன்னைத் தேற்றிக்கொள்ள வேண்டி யிருந்தது) தங்கள் முன் கட்டிடம் நடத்திக் காட்டும் நாடகம் முடியும்வரை அவர்கள் பொறுமையாகக் காத்தி ருந்தார்கள். மீண்டும் சூழலில் குதிரைக் குளம்பொலியின் எதிரொலி மறைந்து அமைதி திரும்பும்வரை அந்த வினோத மிருகம் தன் இருப்பின் மீதான நிச்சயமின்மை யில் நிலை கொள்ளாமல் தவித்துக்கொண்டிருந்தது. பிறகு ஒரு வழியாகக் கலவரம் அடங்கி சமாதானம் ஏற்பட்டு விட்டதான அறிகுறியுடன் சாதுவாகத் தன்னைத் தன் நிலையில் பழையபடி பொருத்திக்கொண்டது.
பா. வெங்கடேசன்
பரமசிவம் பிள்ளையும் சிந்தாமணியும் தத்தம் காலங் களில் நகர்ந்து, நிலை வாயிற்படியை அடைய வெளிப்புற மதிலுக்கும் வீட்டுக்கும் இடையிலிருந்த பாதையைக் கடக்க வேண்டியிருந்தபோது மரங்கள் மழையைத் தடுத்து மிதப்படுத்தி அவர்கள் மீது குடையாய் கவிழ்ந்தபடி உள்புறம் அழைத்துச் சென்றன. நிலைப்படியில் கட்டப் பட்டிருந்த வாழை மரங்களும் பூத்தோரணங்களும் இருவரின் பட படப்பையும் தணித்து வரவேற்றன. வாயிற் கதவைத் திறந்ததும் உள்ளே இருந்த பெரிய வரவேற்பறை பிலும் வாசலுக்கு நேரெதிரே முன்னறையிலிருந்து உள் புறமாக நீண்ட நடை பாதையின் மறுகோடியில் சதுர வடிவமாக அமைக்கப்பட்டிருந்த முற்றத்திலும் காட்சி நிறைந்திருந்தது. முற்றத்தின் மேலிருந்த, முற்றத்தின் அளவேயான திறப்பின் வழியே மழையும் ஒளியும் வீட்டினுள் பொழிந்துகொண்டிருந்ததைப் பார்க்க முடிந் தது. பிரமாதமாக சலவை செய்யப்பட்ட சல்லாத்துணி வலை ஒன்று தொங்கிக்கொண்டிருப்பதை ஒத்திருந்தது
அது. முற்றத்தை மையமாக வைத்தே வீட்டின் மொத்த அமைப்பும் தீர்மானிக்கப்பட்டிருந்தது என்பதை பரம சிவம் பிள்ளை பார்த்த மாத்திரத்தில் தெரிந்து கொண் ார். அது ஒர் ஆரோக்கியமான, மிகப் பழைய கட்டிட அமைப்பு முறை. வெள்ளைக்காரன் வரவுக்குப் பிறகு பொதுவான கட்டிட அமைப்பு முறைகளில் மாற்றமேற் பட்டு முன்னறையின் அமைப்பே வீட்டின் மற்ற பாகங் "களைத் தீர்மானிப்பதாக ஆகியிருந்தது. அது வீட்டின் ஒவ்வொரு நிலைகளும் தத்தமக்குள் கொண்டிருந்தாக வேண்டிய உள்வயப்பட்ட சமச்சீர் நிலை, ஒத்துழைப்பு மற்றும் எடையை பலவீனப்படுத்திக்கொண்டிருக்கும். மழை வீட்டில் முற்றத்தை ஒட்டி நாற்புறமும் கரை "கட்டியிருந்த வராந்தாவின் மேல் விதானத்திலிருந்து உத்தரக் கட்டைகள் அதைச் சுற்றி கரைக்கு இரண்டாக அமைக்கப்பட்டிருந்த எட்டு அறைகளின் உள்புறத் தூண்களுக்குப் பற்றாக இருக்கும் வண்ணம் சொருகப்பட் டிருந்தன. முற்றத்தை ஒட்டி வராந்தாவின் வெளி முனை யில் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த மரத் தூண்கள் அறைகளுக்குள்ளிருந்த தூண்கள் ஏற்றிருந்த பளுவைச் சமன் செய்யும் R ம்கமாக இந்த முனையில் நின்றிருந்தன. மெளனம் மினுமினுக்கும் கரும்பழுப்பு நிறத்தில் அவை மழையும் ஒளியும் இழையும் பிரமாதமான கூட்டு வெளி யில் கலைக்க முடியாத தவத்தில் ஆழ்ந்திருந்தன. அறை களின் அமைப்பை மட்டுமல்லாது அறைகளினுள் உண் டாகக்கூடிய சிறு சலனத்தைக்கூடத் தீர்மானிக்கும் ஆளுமையும் பொறுப்பும் அவற்றின் இருப்பில் பிரகா சித்துக்கொண்டிருந்தது. வராந்தாவின் மேற்புறத்தை அனைத்துப் போர்த்தியிருந்த ஒட்டுக் கூரையின் தணுப் பில் அறைகள் கதகதப்பையூட்டும் மிதமான இருட்டுக் குள் பதுங்கியிருந்தன. பிறைச்சுவர்களைப் பிளந்துகொண்டு நீண்ட நடைபாதைகளும் அவற்றிலிருந்து இடவலமாகப் பிரிந்த கிளைப் பாதைகளும் வீட்டின் மற்ற அறைகளுக்கு அவர்களை இட்டுச் சென்றன. (சிந்தாமணி படுக்கை யறைக்குள் அனுமதிக்கப்படவில்லை) பாதையெங்கும் மனதை வெருட்டாத தண்மையான வெப்பத்தையும் நிழலையும் உண்டாக்கியபடியே முற்றத்தின் பிரதிபலிப்பு கூட வந்தது. கருங்கல் பாவிய அதன் தரையில் மழை மோதி உண்டாக்கிய ஈரத்தூசி வீடு முழுக்கப் பஞ்சுப் | படுக்கை போல விரிந்திருந்தது.
மழைப் பருவத்தில் மழையிலிருந்து வீட்டின் எந்த மூலையும் தப்பித்துவிட முடியாத படி அத்தனை கவனமாக அறைச் சுவர்களில் சன்னல்கள் அமைக்கப் பட்டிருந்தன. மட்டு மீறிய மழை விழும்போதுகூட ஒவ்வொரு நிலையிலும் அதன் சாரல் பாய்ச் சலைக் கட்டுப்படுத்தி உள்ளறை களின் சீதோஷ்ணம் தாங்குமள வுக்கு அதை அனுமதிக்கும் விதத் தில் பாதை வளைவுகள் திடீரென்று சில இடங்களிலும் மழுங்கலாக சில இடங்களிலும் திரும்பிச் செல் லும்படி திட்டமிட்டுக் கட்டப்பட் டிருந்தன. எனவே மழையோ வெயிலோ முற்றத்தில் விழுந்த வேகத்திலேயே திரும்பிப் பாய்ந்து வீட்டின் உள்ளார்ந்த மிதப்பைத் தாக்கிக் காயப்படுத்திவிடும் அபா யம் தவிர்க்கப்பட்டிருந்தது. கீழ்த் தளத்தில் ஒவ்வொரு நாணும் வீட் 'டின் மத்திய பாகத்திலமைந்த முற் றத்தின் அதிகாரத்துடன் இப்படி
இணைத்துக் கட்டப்பட்டிருக்க, மேல்தளம் இதற்கு நேர் மாறாகவும் இதைச் சமன் செய்யும் விதத்திலும் ஒவ்வொரு திசையும் அதற்கே உரிய இயல்புடன் எழும்பி நிற்கும்படி தளர்த்தப் பட்டிருந்தது. கீழ் மேல் தளங்களில் வீட்டின் ஆயுள் காலத்தை நிர்ணயிக்கும் பிரதான ஈரடுக்குச் சுவரும், புவியீர்ப்பு விசையை எதிர்த்து நிற்க அது நிலை கொள்ள வேண்டிய புள்ளியும் ஒரே நேரத்தில் முறையே மையத்தை நோக்கிக் குவிவதாகவும், மையத்தை விட்டு விலகிச் செல்வதாகவும் அமைக்கப்பட்டிருந்ததால் இரு தளங்களையும் இணைக்கும் படுகையின் பொறுப்பு மிகத் துல்லியமான சமனியல்பு கொண்டதாக ஆகிவிட்டிருந் தது. வீட்டின் ஆயுட் காலம் இன்னும் பல நூறு வருடங் களைக் கடந்து நீளும் என்று பரமசிவம் பிள்ள்ை தனக்குள் சொல்லிக்கொண்டார். கீழ்த்தளத்தில் கட்டிடக் கலையின் நுணுக்கம் செவ்வனே வெளிப்பட்டிருந்ததைப் போலவே மேல் தளத்தில் அதைக் கற்பனை செய்தவனின் அழகு ணர்ச்சி அதன் முழுமையை எய்தியிருந்தது.
மழை வீட்டுக்கு அந்தப் பெயரை ஊரார் தான் வைத்தார்கள். அதன் வெளிப்புற மதிலில் அப்படிப் பெயர் பொறித்த பலகை எதுவும் தொங்க விடப்படவில்லை. ஆனால் அந்தப் பெயர் அதற்கு முற்றிலும் பொருந்து மென்பதை நிரூபிக்கும் விஷயங்களை சிந்தாமணியால் மேல்தளத்தில் பார்க்க முடிந்தது. அங்கே திறந்த வெளி யில் வீழும் மழை நாற்புறங்களிலும் சீரான சரிவுகளில் | இறங்கி சற்று கீழே பாதையிட்டிருந்த ஓடைகளுக்குள் வடிந்து சேகரமாகி முடிவில் ஒரோர் அடி இடைவெளி யில் இருந்த துளைகள் வழியே நூல் பிடித்தது போல மாடியின் வெளிப்புறத்துக்கு திரையிட்டு இறங்கியது. மாடியின் கீழ்ப்புறம் வெளியே நீட்டிக்கொண்டிருந்த தகரத் தரவுகளில் அது வீழ்ந்ததும் இரண்டிரண்டு அங் குல இடை வெளியில் நீண்டிருக்கும் துளைகள் வழியே பின்னும் சன்னமான திரையாகச் சலிக்கப்பட்டு வீட்டை நாற்புறமும் வளைத்துக்கொண்டு மெல்லிய பனிப்புகை போல தரைக்கு வந்து சேர்ந்தது. தரையில் புற்களின் நடுவே இடப்பட்டிருந்த, சிறுசிறு செதிள்களாக வெட்டப் பட்டு படிப்படியாக நீண்ட வாய்க்கால்கள் வழியே குதித்து ஒடி மருங்கின் தாவரப் பச்சையுடன் அது சேர்ந்து கொள்ள வழி செய்யப்பட்டிருந்தது. மொட்டைமாடிக் கைப்பிடிச் சுவரின் விளிம்புகள் தோறும் நிறுத்தப்பட்டி ருந்த, ஆண்மை பொலியும் நான்கு யாளிகள் இயன்ற வரை முன் வளைந்து ஊரின் திசைகளை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தன. "ஒவ்வொரு வருக்குள்ளும் இருக்கும் வேறு யாரையோ பிய்த்து எடுத்து விழுங்கப் போகும் பாவனையை அவை கொண்டிருக்கின்றன.") அவற்றின் முதுகில் பெரிய கல் பை ஒன்று தொங்கிக்கொண் டிருந்தது. மழை பொழியும் போதெல்லாம் நீரை அவை அந்தக் கல் பையில் வாங்கிக் கொண்டன. நீர் நிரம்ப நிரம்ப பையின் மத்திய பாகத்திலிடப் பட்டிருந்த துளை வழியே அது கசிந்து யாளிகளின் அகலப் பிளந்திருக்கும் வாயை அடைந்து, அங்கிருந்து முழு வேகச் ன் இ ଜ தள்ளி பெரும் நீர்த்துரணாக தரையை நோக்கி வீழ்ந்தது. 'யாளிகளின் உடல்களுக்குள்
LILQLILIġbLDWWW.padippakam.Com
நவபாஷாணமும், பச்சிலைகளும், கிடைத்தற்கரிய கொட் டைகளும், மரப் பட்டைகளும் புதைத்து வைக்கப்பட்டி ருக்கக் கூடுமென்று பேசிக்கொண்டார்கள். யாளிகளின் உமிழ் நீர் மழை பொழியும் காலங்களில் மனதைக் கிறுகிறுக்க வைக்கும் மனத்தை ஊருக்குள் பரவச் செய்தது. அந்த வாசனையை முகர்ந்தபடி பிறந்த குழந்தை கள் ஊனமற்ற வலிவும், மருவற்ற அழகும் கொண்டிருந் தன. அந்த நேரத்து இரவுகளுக்கு இணை விழையும் தாகத்தை அதிகமாக்கும் மல்லிகை மணமும் நீல நிறமும் இருந்தது. மழை வீடு மழையின் ஸ்தூல வடிவை ஒளி யாயும் வாசனையாயும் மனநிலையாயும் அதன் சம்மதத் துடனேயே தொடர்ந்து சிதைத்துக்கொண்டிருந்தது. அவை ஒசூரின் தனித்துவ மிக்க காற்றில் கலந்த போது, காலங்களுக்குப் பிறகும் அங்கே வரும் புதியவர்களுக்கு மழை வீட்டைப் பற்றிச் சொல்லும் நிரந்தரக் கதை சொல்லியாக மழை மாறிப்போனது.
உத்தனப்பள்ளி ஜமீன்தார் தன் மனைவி தனக்கு வாரிசு சாதையும் தராமல் செத்துப் போய் விட்டாளென்று மைசூரிலிருந்து ஒரு பெண்ணை இரண்டாம் தாரமாக்கி கூட்டி வந்த போது, அதற்கு வெகுகாலத்துக்கு முன்பே அவருடைய இளமை அவரை விட்டு பறந்து போயிருந் தது. கூட்டி வந்த பெண்ணோ யெளவனப் பருவத்தினள். ஜோடிப் பொருத்தத்தைப் பார்த்துவிட்டுத் தன் முது குக்குப் பின்னே ஊரார் சிரிக்கிறார்கள் என்பது ஜமீன் தாருக்கும் தெரிந்தேயிருந்தது. அவர் அதைப் பற்றி கவலைப் படவில்லை. ('தனக்கு வந்தால் தெரியும் தலை வலியும் காய்ச்சலும்') ஆனால் திருமணமாகி கொஞ்ச நாட் களுக்குப் பின் படுக்கையறையில் விளக்குகள் அணைக்கப் பட்ட பிறகு அந்தப் பெண்ணே தன்னைப் பார்த்துச் சிரிப்பதாகத் தோன்றியபோது அதைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள அவரால் முடியவில்லை. காதல் உணர் வில் இளவட்டங்களுக்கு தான் எந்த வகையிலும் குறைந்த வனில்லை என்பதை அவளுக்கு நிரூபித்துவிட வேண்டு மென்று அவர் தவியாய் தவிர்த்தார். நரைத்த மீசை அதற்கு ஒத்துழைக்கவில்லை தான். ("ஆனால் உடல்கள் இணை வது மட்டும்தானா காதல் ?") உடலால் தள்ளாமை கொண்டுவிட்டாலும் உள்ளத்தால் தானொரு சிறந்த காதலன் என்பதை எப்படித் தெரிவிப்பது என்கிற யோசனையில் அவர் பல இரவுகளைத் தூக்கமில்லாமல் செலவிட்டார். கடைசியில் வடக்கே யாரோ ஒரு பாதுஷா தன் மனைவிக்காக கட்டியதைப் போல ஒரு மாளிகையை தானும் தன் மனைவிக்காகக் கட்டி விடுவது என்று முடிவு செய்தார்.
உத்தனப்பள்ளியிலிருந்து சற்றுத் தொலைவிலிருந்த ஒசூரின் வெளிப்புறமாக மொத்தம் அக்ரஹாரத்தின் தலையில், ராமநாயக்கன் ஏரியைப் பார்த்து அமைந்தி ருந்த - அற்புதமான கால நிலை வருடம் பூராவும் தங்கி யிருக்கும் - ஒரு பரந்த நிலப்பரப்பை அந்தப் பெண் போகிற போக்கில் கையைக் காட்டிவிட்டுப் போனாள். சாரட் வண்டி அந்தப் பிரதேசத்தைக் கடக்க எடுத்துக் | கொண்ட சில நிமிட அவகாசத்துக்குள் பார்த்தபோது எல்லாம் மிக எளிதான காரியமாகத்தான் தோன்றிற்று. ஆனால் யதார்த்தத்தில் அப்படி அமையவில்லை. நிலத் துக்குச் சொந்தக்காரனான பசவண்ணா நிலத்தை விற்பது பற்றிய பேச்சையே எடுக்க வேண்டாமென்று ஜமீன் ஆட்களிடம் சொல்லியனுப்பி விட்டான். ஜமீன்தாருக்கு முகத்திலடித்தாற்போல ஆகிவிட்டது. ஏற்கெனவே தானொரு சிறந்த காதலனென்பதை நிரூபிக்கும் வெறியில் தவித்துக் கொண்டிருந்தவருக்கு இப்போது கூடவே தன் செல்வாக்கையும் தன் இளம் மனைவி முன் நிரூபித்தாக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிட்டது. அவர் ரகசிய மாகவும் பகிரங்கமாகவும் ஆட்களை அனுப்பியும் நேரில்
சென்றும் நயமாகப் பேசியும் பயமுறுத்தியும் பசவண் ணாவை மசிய வைக்கப் படாத பாடுபட்டார். விற்கும் நிலத்துக்கு ஈடாக அதைப் போல இரு மடங்கு மதிப்பும் அளவுமுள்ள நிலத்தை மத்திகிரியிலோ அந்திவாடியிலோ தருவதாகச் சொல்லியும் கேட்டுப் பார்த்தார். பசவண்ணா மசியவில்லை. பிரச்னை என்னவென்றால் பசவண்ணா வின் பிரச்சனை நிலத்தின் அமைவிடமோ, அளவோ, மதிப்போ அல்ல என்பதுதான். மாறாக அதன் பாரம் பரியச் சிறப்பு: திப்பு மன்னன் ஒரு சமயம் தன் குதிரை களைக் கட்டிவைக்கும் லாயமாக உபயோகப்படுத்திக் கொண்டிருந்த கீர்த்தியைப் பெற்றிருந்தது அது குதிரைச் சாணத்தால் மற்றெந்த நிலத்தையும் விட அதிக வருடங் கள் தாக்குப் பிடிக்கக் கூடிய உரச்சத்தும் ஏற்றப்பட்டிருந் தது. அதை விற்பதென்பது பரம்பரைப் புகழோடும் இறுமாப்போடும் சவக்குழிக்குள் ஒய்வெடுக்கும் முன் னோர்களின் பெயர்களையும் ஆசிகளையும் விற்பதற்குச் சமம், ஆனால் ஜமீன்தார் விடுகிறதாயில்லை. அவர் விட்டாலும் அந்த இளம் பெண் அவரை விடுகிறதா யில்லை. இரவு நேரங்களில் விளக்கை அணைக்கவே பயப்படும் அளவுக்கு நிலைமை முற்றிப் போனபோது சாம பேத தான வழிகளில் முயன்று தோற்றுப்போன ஜமீன்தார் தன் செல்வாக்கைப் பயன்படுத்தி பசவண் ணாவை வீழ்த்திவிட முடிவு செய்தார்.
இவ்வளவு சின்ன விஷயத்துக்கெல்லாம் தன்னை அணுக வேண்டிய அளவுக்கு இரண்டாம் திருமணத் தால் ஜமீன்தார் தன் செல்வாக்கை குறைத்துக்கொண்டு விட்டார் என்று கேலி பேசினாலுங்கூட ஜில்லா கலெக் டர் அவருக்கு உதவுவதாக உறுதியளித்தார். உடனே தன் வாக்கை காப்பாற்றவும் செய்தார். அவர் எதிர்பார்த்த படியே சர்க்கார் இலச்சினைப் பொறித்த காகித உறையைக் கண்டதுமே பசவண்ணா நடுங்கித்தான் போய்விட்டான். ராமநாயக்கன் ஏரிக்கரை மேலிருக்கும் நிலத்தில் அவனு டைய பாத்யதையை நிரூபிக்கும் ஆவணங்களோடு உடனே கலெக்டர் அலுவலகத்துக்கு அவன் வரவேண் டும் என அதில் கண்டிருந்தது. பசவண்ணாவிடம் அப்படி ஆவணங்கள் எதுவுமில்லை. திப்பு மன்னன் போகிற போக்கில் பரிசாக வீசி எறிந்துவிட்டுப்போன நிலத்தை எழுத்து மூலமாக கிரயப்படுத்திக்கொள்ள வேண்டு மென்று அவனுக்கும் அவனுடைய அப்பன், பாட்டன், முப்பாட்டன்களுக்கும் தோன்றவில்லை. அதற்கு கார ணங்கள் இரண்டு. ஒன்று, அவனுடன் கூட வளர்ந்து பழகியவர்கள் எல்லோருமே அவனுடைய அப்பன், பாட்டன், முப்பாட்டன்களோடு கூட வளர்ந்து பழகிய வர்களின் வாரிசுகள்தான். எல்லோருக்குமே பசவண்ணா வின் நிலம் திப்பு மன்னனின் மாஜி குதிரை லாயம் என்பது தெரியும், இரண்டு, அவர்களுமே கூட திப்பு மன்னனின் காலத்திலேயே ரொம்ப வருஷங்களாக வாழ்ந்துகொண்டிருந்தார்கள். ஒசூர், உத்தனப்பள்ளி, பாகலூர், அந்திவாடி, மத்திகிரிக்கு அப்பால் நில உரிமை கள் யாவும் காகிதங்கள் மூலமாகவே உறுதி செய்யப் பட்டுக்கொண்டிருக்கின்றன என்பதை அவர்களும் அறிந் திருக்கவில்லை. இதெல்லாம் இருக்க, அப்படி ஆவண மென்று ஏதும் கையில் இருந்திருந்தாலுங்கூட நிலத்துக்குச் சொந்தக்காரனுக்கும் அதை அபகரிக்க நினைக்கிறவனுக் கும் இரண்டு வேறுவேறுவிதமான அர்த்தங்களை அதே ஆவணம் கொடுக்கும். அதிலும் விசேஷமாக துாை சர்க்காருக்கென்றால் அதன் விசுவாசம் தன் சரித்திர முக்கியத்துவத்தையெல்லாம் கூட சட்டை செய்யாமல் இடம் மாறிவிடும். எப்படியோ வெள்ளைக்காரன் தலை யிட்டுவிட்டால் நிலம் தன்னுடையதாயிராது என்பது பசவண்ணாவுக்கு தெரிந்து போயிற்று. விஷயம் இவ்வளவு தூரத்துக்கு முற்றிப் போனபின் ஜமீன்தாரும் இனி
ஜனவரி -மார்ச் 2000
சமாதான்த்துக்கு இறங்கி வர மாட்டார். அவரை அணுக நிலச் சொந்தக்காரன் என்கிற சுய கெளரவம் இடங்கொடுக்க வில்லை. அதே சமயம் தன் தோல்வியை ஒப்புக் கொள்ளவும் மனமில்லை. பச வண்ணா ஒரு உபாயம் செய்தான். தன் பெண்டு பிள்ளைகளுக்கு விஷம் கலந்த சோற்றைக் கொடுத்துக் கொன்றுவிட்டுத் தானும் ஒரு புங்கை மரத்தில் தூக்கு மாட்டிக்கொண்டு தொங்கிவிட்டான். கதைகளின் வழியாகத் தொடர்ந்து கொண் டிருந்த அவனுடைய சொத்துரிமை மர ணத்தின் மூலமாக உறுதி செய்யப்பட்டு விட்டது. பிரஸ்தாப நிலத்தின் மேல் உறைந்து நின்ற பருவ நிலையோடு கலந்து மண்ணின் மேல் ஸ்திரமாகப் படிந்துவிட் டது. பசவண்ணாவின் சாவை சர்க்காரும் எதிர்பார்க்கவில்லை, ஜமீன்தாரும் எதிர்பார்க்கவில்லை. சர்க்கார் இதை உடனே மறந்துவிட்டது. அதற்கு இதை விட முக்கியமான கவலைகள் நிறைய இருந்தன. ஆனால் ஜமீன்தாருக்குத்தான் பசவண்ணாவின் வெற்றி மறக்க முடியாத அச்சுறுத்தலாக மாறிப் போய்விட்டது. அவர் முதலில் தன் மாளிகை கட்டும் யோசனையை கை கழுவி விட நினைத்தார். ஆனால் அவ்வளவு தூரம் முயற்சி செய்து காரியம் கைகூடி வந்தபின் உருவமற்ற எதிரிக்குப் பயந்து கைவிடுவானேனென்று ஜமீன்தாரணி வற்புறுத்திய தன் பேரில் வேண்டாவெறுப்பாகச் சம்மதித்தார்.
பாரமகால் (தர்மபுரி) வட்டாரத்தில் அப்போது
பிரசித்திபெற்ற கட்டிடக் கலைஞராக விளங்கியவரும், ஜமீனின் குடும்ப நண்பராக இருந்தவருமான பரமசிவம் பிள்ளை என்பவரிடம் கட்டிடம் கட்டும் பொறுப்பை ஒப்படைத்தார். காரியம் நிறைவேறப் போவதில்லை என்பது அவருக்கும் ஊராருக்கும் தெரிந்தேயிருந்தது. வெட்டிக் கெளரவத்துக்காக பணத்தை இழக்க ஜமீன்தார் தயாராக இருந்தார். பசவண்ணாவின் சாபத்துக்கும், அவருடைய ஆசைக்குமிடையே நடக்கும் துவந்தத்தில் அவர் தன் செல்வத்தையும் நிம்மதியையும் இழந்து அவதிப்படட்டுமென்று ஊராரும் சும்மா இருந்தார்கள். ஒன்றல்ல, இரண்டல்ல, கட்டிட வேலைகள் ஏழு வருடங் கள் நடந்தன. ஒரு அடுக்கு கூட உயரவில்லை. பசவண்ணா வின் சாபம் கெட்ட சகுனங்களை வாரியிறைத்தது. மாளிகை கட்ட ஆரம்பித்த முதல் வருடத்திலேயே ஜமீன் வாரிசு என்று அந்தப் பெண்ணின் வயிற்றில் வளர்ந்த கரு இறந்து பிறந்தது. ஜமீன்தாருக்கு அதில் உள்ளுர சந்தோ ஷம் இருக்குமென்றே ஊர் பேசிக்கொண்டது. ("ஜமீன் பரம்பரையின் உண்மையான வாரிசுகள் இறந்து பிறந்த தாய்ச் சரித்திரமே கிடையாது") அந்தச் சம்பவத்தோடு தன்னுடைய தர்மசங்கடமான நிலைமையும் ஒரு முடிவுக்கு வந்துவிடுமென்று ஜமீன்தார் நம்பினார். ஏனென்றால் குழந்தையென்று நம்பி வயிற்றில் சுமந்த கொண்டிருந்தது உண்மையில் ஒரு பிணம் என்பது தெரியவந்ததும் அதிர்ச்சி யில் அந்தப் பெண் மனங்கலங்கி, புத்தி பேதலித்துப் போய் பிரசவித்த அறைக்குள்ளேயே தன்னை அடைத்துப் போட்டுக்கொண்டு விட்டாள். பிறகு அவள் ஊரார் கண்களில் தட்டுப் படவேயில்லை. அவளுக்காக ஓசூரில் கட்டப்பட்டுக் கொண்டிருந்த மாளிகையும் அவள் நினை விலிருந்து சுத்தமாக மறைந்து போய்விட்டது. துயரத்தால் பருவத்துக்கு இரண்டாக அவள் வயது கூடிக்கொண்டே போனதில் இரண்டு வருடங்களுக்குப் பிறகு அவள் ஜமீன் தாரைக் காட்டிலும் மூப்பும் தள்ளாமையும் கொண்ட கிழவியாகிவிட்டாள். எனவே காதல் மாளிகையைக் கட்டும் அவசியமும் இனி இல்லையென்று ஜமீன்தார்
நிம்மதியடைந்தார். தன் மனைவியின் அருவருக்கத்தக்கத் தோற்றமும், அவள் உடலிலிருந்து வீசிக்கொண்டிருந்த துர்கந்தமும் அவளிருந்த அறைப் பக்கமே அவரை அண்ட விடவில்லை.
கட்டிட வேலைகளை நிறுத்தி விடும்படி பரமசிவம் பிள்ளையைக் கேட்டுக்கொண்டார். அதற்காகப் பேசிய முழுத் தொகையையும் தந்துவிடுவதாகவும் உறுதியளித் தார். ஆனால் ஜமீன்தார் நினைத்ததைப் போல பச வண்ணாவின் நிலத்தைக் கை கழுவி விடுவதும் அவ்வளவு எளிதான காரியமாய் இருக்கவில்லை. பிரச்சினை வேறு ரூபத்தில் தொடர்ந்தது. துவக்கிய வேலையை பாதியில் நிறுத்துவெதன்பது புகழுக்கும் தொழில் தர்மத்துக்கும் பங்கம் விளைவிக்கும் செய்கை என்று பரமசிவம் பிள்ளை கருதினார். எனவே அவர் ஜமீன்தாரின் பேச்சைக் காதில் வாங்கிக்கொள்ள மறுத்துவிட்டார். ஜமீன்தார் ஒப்புக் கொண்டாலும் ஒப்புக் கொள்ளவிட்டாலும், பணம் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் கட்டிட வேலை களைத் தொடரப் போவதாகவும் அறிவித்துவிட் டார். பரமசிவம் பிள்ளையும் பாரமகால் வட்டாரத்தின் பெருந் தனக்காரர்களில் ஒருவர். அவரும் பணத்தை ஒரு பொருட்டாக மதிப்பவரில்லை என்பது ஜமீன்தாருக்குத் தெரியும். அவருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. புலி வாலைப் பிடித்தக் கதையாகக் கட்டிட வேலைகள் தொடர்ந்து நடந்துகொண்டிருந்தன. காரியம் கைமீறிப் போய்விட்டது என்பது மட்டும் அவருக்குத் தெரிந்தது. எக்கேடாவது கெட்டுப் போகட்டுமென்கிற மாதிரியான சலிப்பான மனோநிலைக்கு அவர் வளர்ந்துவிட்டிருந்தார். அவரிடம் செலவழிக்க பணம் இருந்தது. உயிருடன் இருக்கும் வரை அதைக் குறையின்றிச் செய்தார். பிள்ளையின் குடும் பத்துக்கு (பிள்ளை பசவண்ணாவின் நிலத்திலேயே தங்கி யிருந்தார்) சரியான தேதிகளில் பணத்தை அனுப்ப ஏற்பாடு செய்தார். ஆனால் தன் பொருட்டுத் திறமையையும், காலத்தையையும் நிறைவேறவே போகாத ஒரு முயற்சியில் தன் நண்பர் வீணாக்கிக்கொண்டிருப்பதைத்தான் அவ ரால் கண் கொண்டு பார்க்க முடியவில்லை. பிள்ளைதன் உறுதியிலிருந்து பின் வாங்கிக்கொள்ளாத பட்சத்தில் அவருடைய சாவும் பசவண்ணாவின் நிலத்தில்தான் என்று எண்ணி குற்ற உணர்வில் மனம் புழுங்கினார். "நரைக்காத ஆசையால் இரண்டு அப்பாவிகளின் மரணத் துக்கும் சாபத்துக்கும் ஆளாக நேரிட்டு விட்டதே.") ஆனால் பிரச்னைகள் பிறக்கும் போதே அவற்றுக்கான முடிவுகளும் சேர்ந்தே பிறந்துவிடுகின்றனவே. பல வேளை களில் அவற்றைத் தர்க்கத்தால் இணைக்கும் மூளைக்காக அவை காத்திருப்பதில்லை. ஏழு வருடங்களுக்குப் பின் ஒருநாள் பாரமகால் வட்டாரத்தை உலுக்கியெடுத்த
LILQL IL IġbLDWWW.padippakam.Com
மழையில் நனைந்தபடி வீட்டுக்குப் போன பரமசிவம் பிள்ளை மீண்டும் பசவண்ணாவின் நிலத்துக்குத் திரும்பி வரவில்லை. அந்த நிலத்திலிருந்து அவர் ஒரு குழந்தையைக் கண்டெடுத்ததாகவும் அதைத் தன் மனைவியிடம் ஒப்படைத்து விட்டுத் திரும்பப் போவதாகவும் சொல்லிக் கொண்டே ஓடியதாக ஊரார் சொன்னார்கள். ஆனால் அப்படித் திரும்ப முடியாதபடி மழை அவரை அடித்துப் போட்டுவிட்டதாகவும் ஜமீன்தார் கேள்விப்பட்டார். அவரைப் போய்ப் பார்க்க உடல்நிலை இடங் கொடுக்க வில்லையானாலும் (இது அவராகச் சொல்லிக்கொண் டது. உண்மையில் பரமசிவம் பிள்ளையின் மனைவியை நேருக்கு நேராக எதிர்கொள்ளும் தைரியம் அவருக்கு இருக்க வில்லை என்றுதான் ஊரில் பேசிக்கொண்டார்கள்) பிள்ளை வேலையை நிறுத்திய பின்னரும் தன் திருப்திக் காகப் பணம் அனுப்புவதை நிறுத்தாமல் தொடர்ந்து செய்துகொண்டிருந்தார். பதினேழு வருடங்களுக்குப் பிறகு அவர் திடீரென்று காலமான போது உயில் எதுவும் எழுதி வைத்திருக்காததால் ஜமீன் சொத்துப் பூராவும் அரசுடைமை யாக்கப்பட்டுவிட்டதாக சர்க்கார் அறிவித்துவிட்டது. அதை எதிர்த்து ஜமீன்தாரின் பைத்தியக்கார மனைவி சார்பாக அவள் சகோதர்களில் மணமாகாமல் சுற்றிக் கொண்டிருந்த ஒருவன் வழக்குப் போட்டு இருந்த கொஞ்சநஞ்ச பணத்தையும் பெயரையும் கெடுத்துக் கொண்டிருந்தான். சர்க்காரின் முற்றுகையிலிருந்து ஒரே ஒரு சொத்து மட்டும் தப்பிவிட்டிருந்தது. பசவண்ணாவிட மிருந்து கைப்பற்றியிருந்த நிலம். அதை ஜமீன்தார் பரம சிவம் பிள்ளையின் பேருக்கு மாற்றி எழுதியிருந்ததைக் கண்டுபிடித்து மிகுந்த நேர்மையுடன் சர்க்கார் அவர் குடும்பத்திடம் ஒப்படைத்துவிட்டது. பிள்ளையை பச வண்ணாவின் நிலத்திலிருந்து விரட்டிய மழை பெய்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு பத்திரம் பதிவு செய்யப் பட்டிருந்தது. பிள்ளையின் மனைவி இறந்தவரின் ஆத்ம சாந்தியை நினைத்து அதைக் கையில் வாங்கினாளே யொழிய வாங்கிய கணத்திலேயே அதைத் தூக்கிக் கிடப் பில் போட்டுவிட்டாள். அடுத்த கணம் அதை மறந்தும் விட்டாள். மழை பெய்து ஒய்ந்த இரண்டாம் நாள் கடைசித் தடவையாக ஜமீன்தார் அந்த நிலத்துக்கு வந்ததாகச் சொன்னார்கள். அரைகுறையாகவேனும் அதுவரை எழும்பி யிருந்தக் கட்டிடத்தை மழை சல்லடைக் கண்களாகத் துளைத்துப் போட்டிருந்ததைப் பார்த்துவிட்டு அவர் தன் வயதையும் அந்தஸ்தையும் மறந்து போய் எல்லோ ரும் வேடிக்கை பார்க்க கதறி அழுத காட்சியை ஊர் ரொம்பக் காலத்துக்கு நினைவில் வைத்திருந்தது. அதற்குப் பிறகு ஊர்க்காரர்களில் கூட யாரும் அந்த திசைப்பக்கம் தலை வைத்துப் படுக்கவில்லை. அந்தப் பிரதேசத்துக்கும் ஊருக்கும் இடையே காடு வளர்ந்து கொஞ்சங்கொஞ்ச மாக அதைப் பிரித்து உள்ளே வெகு தொலைவுக்கும் தனிமைக்கும் தள்ளிக்கொண்டு போய்விட்டது. காட்டின் நடுவே வெறும் குட்டிச் சுவராக ஜமீன்தாரின் கனவும் பாழடைந்துவிட்டது.
செயலில் இருந்த காலத்தில் பரமசிவம் பிள்ளை பெரும் பணக்கார்களுடனும்துரைமார்களுடனும் வினோத மான ஒப்பந்தம் செய்துகொண்டிருந்தார். அதாவது கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டு சாவி கை மாறிய நாளிலிருந்து ஒரு குறிப்பிட்ட வருடங்களுக்கு அவற்றின் சொந்தக்காரர்களிடமிருந்து பிள்ளைக்கு ஒரு குறிப்பிட்ட தொகை மாதாமாதம் சன்மானமாக வந்து சேர வேண்டி யது. இதற்குப் பிரதியுபகாரமாக ஒப்பந்த காலத்துக்குள் கட்டிடத்துக்கு ஏதும் அசம்பாவிதம் ஏற்பட்டாலோ அல்லது விசேஷ மராமத்து வேலை தேவைப்பட்டாலோ அந்தச் செலவுக்குப் பிள்ளை சொந்தப் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டியது. பெரும்பாலும் ஒப்பந்தத்தின்
இந்த இரண்டாவது கூடிரத்தை நடைமுறைப்படுத்துவதற் கான வாய்ப்பே இரு தரப்பார்களுக்கும் கிடைத்ததில்லை. பிள்ளை கட்டும் கட்டிடங்களுக்கு காலங்கடந்த உத்திர வாதம் உண்டு என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷ்யம்.
இப்படி ஒரு ஒப்பந்தத்துக்கு பெரும் புள்ளிகளையும்
துரைமார்களையும் சம்மதிக்க வைக்கும் அளவுக்குக் கீர்த்தியும் தைரியமும் பிள்ளையைத் தவிர வேறெந்தக் கட்டிடக் கலைஞனுக்கும் அப்போது இருக்கவுமில்லை. காரிமங்கலத்திலிருந்து மைசூர் சமஸ்தானம்வரை அற்புத மான பல கட்டிடங்கள் பிள்ளையின் கை வண்ணத்தில் எழும்பியிருந்தன. நெடுஞ்சாலை மருங்குகளில் அடிக்கடி அவற்றைப் பார்க்க முடியும்.
பிள்ளையின் கலை அவருடைய அப்பன் பாட்டன் முப்பாட்டன் கைகளிலிருந்து அவர் பெற்ற பரம்பரைச் சொத்து. எனவே நவீன மோஸ்தர் கட்டுமானங்களில் அவருக்கு இயல்பாகவே ஈடுபாடு இல்லாமலிருந்தது. ஆனால் அது ஒரு குறையாக இருக்கவில்லை. ஹொகே ! 6வக்கல், ஏலகிரி, ஓசூர் மலைப் பிரதேசங்களிலும் தளி, மத்திகிரி போன்ற குளிர் பிரதேசங்களிலும் தனிமையான பல ஓய்வு இல்லங்கள் துரைமார்களுக்காகத் தமிழகத்துக் காரைச்சுவர் பாணியிலும், கேரளத்து ஒட்டுக்கூரை பாணி யிலுமாக அவர்கள் விருப்பத்துக்கிணங்க பிள்ளையால் உருவாக்கப்பட்டிருந்தன. அவை மேலை தேசங்கள் அறி யாத பல ரகசிய - பாரம்பரிய - கட்டுமான வித்தைகளை உள்ளடக்கியவை. குறிப்பாக, பிள்ளை கட்டும் கட்டிடங் களின் உட்புறச் சுவர்களிலிருந்து எழும் செண்பகப்பூ மணம், அந்த மணம் எந்தெந்தப் பொருள்களின் கலவை யால் கிடைக்கிறதென்பது பிள்ளை மட்டுமே அறிந்த அவருடைய குடும்ப ரகசியம். அதே போல கட்டிடங் களும் தரையைப் பிளந்துகொண்டு எழுந்தவை போல அசம்பாவிதமான தோற்றத்தைக் கொண்டிராமல் சம வெளி தன் போக்கில் வாழ்விடங்களாக, மிதமாக உயர்ந்து தாழ்ந்ததைப் போல அவ்வளவு இயல்பாக எழும்பி நிற்பன. ("பிள்ளையின் கைவண்ணம் பறவைக் கூடுகளின் செய்நேர்த்திக்கு நிகரானது.") அதிகச் சிக்கலில்லாத உள்ளமைப்பையும், பார்வைக்கு ஊறு செய்யாத வெளித் தோற்றமும், மனதுக்கு அமைதியளிக்கும் வெளிச்சத் திறப்பும், காற்றோட்டமான திறப்பும் பிள்ளை கட்டும் கட்டிடங்களின் சிறப்பம்சங்கள். வேறு முறைகளை அவர் அறிந்தவரல்லர். அதாவது ஆச்சரியப்படுத்தும் அமைப்பு களை உருவாக்க அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. (எனவேதான் சாரங்கன் மழை வீட்டின் முன் அவரைக் கொண்டு போய் நிறுத்தியபோது பிரமிப்பில் மூச்சுவிட வும் மறந்துவிட்டார்) அவரளவில் சாதாரண கீற்றுக் கொட்டகைக்குக் கூட ஒரு தாவரத்தின் சாயலையும், தண்மையையும், அன்னியுோன்னியத்தையும் கொடுத்து முடிப்பதில் பிள்ளை மன்னன். அதில் கிடைத்த பெயரும் புகழுமே அவருக்குப் போதுமானதாக இருந்தது. உத்தனப் பள்ளி ஜமீன் மாளிகையை பிள்ளையின் பூட்டனார் கட்டிமுடித்த காலத்திலிருந்தே ஜமீனுக்கும் பிள்ளை குடும்பத்துக்கும் பரம்பரை பரம்பரையாக நீடித்து வந்த நட்பிருந்தது. அந்த நட்பை முன்னிறுத்தித்தான் ஜமீன் தாரும் தன் இரண்டாம் தாரத்துக்காக ஒரு அழகிய மாளிகையைக் கட்டித் தர பிள்ளையை ஒப்புக்கொள்ள வைத்தார். கெலமங்கலத்திலிருந்த பிள்ளையின் ஜாகை யிலிருந்து ஒசூர் மொத்தம் அக்ரஹாரம் வரை கட்டிட வேலைகளுக்காக தினம் அவர் வந்து போவதற்கு வண்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நிலம் பசவிண்ணா என்கிற அப்பாவிக் குடியானவனிடமிருந்து அராஜமாகப் பிடுங்கப்பட்ட ஒன்று என்று தெரிந்திருந்தாலும், அந்த நிலத்தில் மாளிகை எழுப்புவது என்பது உண்மையில் ஊர் மக்களின் வெறுப்பின் மேலும் பசவண்ணாவின்
68 தலசீடு 28 6 ஜனவரி - மார்ச் 2000
படிப்பகம்WWW.padippakam.Com
சாபத்தின் மேலும் என்றும் தெரிந்திருந்தாலும் பிள்ளை நட்புக்காக சம்மதித்தார்.
மேலும், கலைஞனான அவர் ஜமீன்தாரின் காதல் மாளிகையைச் சாக்காக வைத்துத் தன் கிரீடத்தில் இன்னுமொரு புகழ் சிறகை சொருகிக்கொள்ளவும் விரும்பி னார். ஒருவேளை ஊர் மக்கள் எச்சரித்தது போல் மாளி கையைக் கட்டும் முயற்சியில் தன் வாழ்நாள் முழுவதும் விரயமானாலும் கூட ஒரு விதத்தில் அதுவும் தனக்குப் பெருமைதானென்றும் எண்ணினார். முயல் எறிந்து பெறும் வெற்றியைக் காட்டிலும் யானையிடம் தோற்கும் நெஞ்சுரம் அவருக்கு இருந்தது. இதற்கெல்லாம் மேலாக தன் திறமையில் அவருக்கு அபார நம்பிக்கையும் இருந் தது. ஆனால் பசவண்ணாவின் பலம் தான் எண்ணியிருந் ததை விட பல மடங்கு அசாத்தியமானது என்பதை அவர் போகப் போகத்தான் தெரிந்து கொண்டார். அதை அவர் அவ்வளவு தூரம் எதிர்பார்க்கவில்லை. விதானம் வரை வேலைகள் முன்னேறியிருந்த நிலையில் ஒரு சமயம் உள்ளறை ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்த அசலூர் பெண் முட்டுக் கம்புகள் கொடுத்துக் கொண்டிருந்த போது அதில் ஒன்றில் பசவண்ணர்வின் பிரேதம் தொங்குவதை பார்த்து விட்டு பயத்தில் தன் குரல் வளையைத் தானே கிழித்துக் கொண்டு விட்டாள். பிரேதத்தின் கனம் தாங்காமல் முட்டுக் கம்பு முறிந்து விதானம் தூளி போல் உள்ளே தொங்கிவிட்டது. இன் னோர் சமயம் கலவையினுள் பல்லிகள் விழுந்து கிடந்ததால் ஆறு நாட்கள் வைத்திருந்து பதப் படுத்திய, செண்பகப்பூ மணம் வீசும் கலவை முழுவதையும் கீழே கொட்டும்படி ஆயிற்று. கலவை வைத்திருந்த பாண்டத்தைச் சுக்கு நூறாக உடைக்கச் சொல்லிவிட் டார் பிள்ளை. குறுக்குக் கட்டை கள் வைத்து ஆட்கள் வேலை செய்வதற்கென்று பக்கச் சுவர் களில் போடப்பட்டிருந்த துளை களில் பாம்புகள் புகுந்துகொள்ள, அவற்றைக் கவனிக்காமலே வேலையாட்கள் துளைகளை அடைத்துப் பூசிவிட, கட்டிடம் முழுவதும் ஓரிரவில் பாம்புகளின் உடல்களாய் விரிசல் கண்டுவிட்டது. ஏழு வருடங்களில் நான்கு தடவைகள் வேலை செய்துகொண் டிருந்த ஆட்கள் மாறிப்போய்விட்டார்கள்.
புதிதாக வருகிறவர்களுக்கு கட்டிடத்தின் மானசீக வரை படத்தையும் அமைப்பையும் விளக்கிச் சொல்லி பழக்கப்படுத்த அவகாசம் தேவைப்பட்டது. வெறுமே | கற்களை அடுக்கி கலவைகளைப் பூசும் எந்திரங்களாக வேலையாட்களை உபயோகப்படுத்திக்கொள்ளவும் பிள்ளை விரும்பவில்லை. சோபன விளையாட்டுப் போல அங்குல அங்குலமாக பிள்ளை ஏணியில் ஏறுவதும் விதி யின் வாயில் விழுந்து மீண்டும் புறப்பட்ட இடத்துக்கேத் திரும்பி விடுவதும் திரும்பத் திரும்ப நடந்துகொண்டி ருந்தது. ஆனால் ஒரு கட்டத்திலும் அவர் சோர்ந்துவிட வில்லை. பிள்ளை விரும்பினால் எந்த நிலையிலும் வேலையை நிறுத்திக்கொண்டுவிடலாம் என்று ஜமீன்தார் அனுமதித்திருந்தாலும் அவர் மனதால் கூட அதைப் பற்றி நினைக்கவில்லை. ஜமீன்தாரின் ஆர்வம் கொஞ்சங் கொஞ்சமாகத் தேய்ந்துகொண்டு வந்த காலக்கட்டங் களில் அதற்கு நேர்மாறாக பிள்ளையின் ஆர்வம்
பசவண்ணாவின் தந்திரங்களாலும் முறியடிப்புகளாலும் சீண்டப்பட்டுத் தீயாக வளர்ந்ததேயன்றி குறையவில்லை. தொடர்ந்த தோல்விகள் அவருக்குள் மேலும் மேலும் பிடிவாதத்தை வளர்க்கவே செய்தன. நாளாக நாளாக அதுவே வெறியாக மாறி அவரைப் பிடித்து ஆட்ட வாரம்பித்து விட்டிருந்தது. பொழுது புலர்ந்தால் ஜமீன் வண்டியை எதிர்பார்த்துக் கிடப்பதும், இரவு நெடுநேரம் கழித்து வீடு திரும்புவதுமாக கொஞ்ச காலம் கடந்தது. பிறகு வீட்டுக்கு வரும் நாட்களும் குறையத் துவங்கின. மூன்று வருடங்களுக்குப் பின் பசவண்ணாவின் வேகம் அதிகரிக்கத் துவங்கிவிட்டதாகத் தோன்றியதிலிருந்து பிள்ளை வீட்டுக்கு வருவதை அறவே நிறுத்திக்கொண்டு விட்டார். எப்போதும் பூர்த்தியுறாத கட்டிடத்துக்குள் ளேயே தம்மை அடைத்துக்கொண்டு கிடக்கத் தலைப் பட்டார்.
கதவுகளுடனும், சன்னல்களுக்காகத் தோண்டப்பட்டி ருந்த பொக்கைகளுடனும் அவர் பேசிக்கொண்டிருக்கும் காட்சியைப் பார்த்துவிட்டு அவரை அழைத்துப் போகும்
முடிவோடு வந்திருந்த அவர் மனைவி | அலறியடித்துக்கொண்டு திரும்ப வீட்டுக்குத் தனியாக ஓடி வந்துவிட் டாள். உங்கள் தந்தை அசப்பில் அந்தப் பசவண்ணாவைப் போலவே இருக்கிறார் என்று அவள் தன் பிள்ளை களிடமும் பெண்ணிடமும் அதிர்ச்சி யோடு தெரிவித்தாள். பிறகு அவ ளும் பிள்ளையும் நான்கு வருட காலம் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளவேயில்லை. குழந்தைகளி டம் அவருக்கான உணவு மற்றும் | உடை வகைகளைக் கொடுத்தனுப்பி விட்டு அவர் திருப்பியனுப்பும் போது அவற்றைப் பார்த்துப் பார்த்து அழுதுகொண்டிருந்தாள். பல சமயங்களில் தன் கணவரை அந்த நிலைக்கு ஆளாக்கினாரென்று ஜமீன்தாரை அவள் வாய்க்கு வந்த படி திட்டித் தீர்த்தாள். அவரைப் பகைத்துக்கொள்ள முடியாத பட்சத் தில் குடும்பத்தோடு குடி பெயர்ந்து வேறு ஊருக்குப் போய்விடலாம் என்று பிள்ளைகள் மூலமாக தன் கணவரிடம் மன்றாடிப் பார்த்தாள். பிள்ளை மசியவில்லை. அவள் கேட்டுக் கொண்டதன் பேரில் அவரைப் பார்த்துப் பேசப் போன அம்பலக்காரர்கள் அவளுக்கு ஏற்பட்ட அதே அதிர்ச்சி யுடன் திரும்பி வந்தார்கள். "அங்கே உட்கார்ந்திருப்பது பரமசிவம் பிள்ளை அல்ல, மாறாக பசவண்ணா. அவ னுடைய அதே பழைய பிடிவாதத்துடனும் நிலத்தின் மீது மாறாத காதலுடனும்") அவரை வீட்டுக்குத் திருப்பும் முயற்சிகள் பயனற்றுப் போனபோது ஊராரும், பிள்ளை யின் குடும்பத்தாரும் அவர் இனி வரவே போவதில்லை யென்று முடிவு செய்து கொண்டனர். காலப் போக்கில் அவர் பிரிவு பழகியும் விட்டது.அவர் இருப்பையே கிட்டத் தட்ட மறந்தும் போய்விட்டார்கள். இந்த நிலையில்தான் ஏழு வருடங்களுக்குப் பிறகு ஒருநாள் தன் வீட்டு வாசலில், கையில் ஒரு புத்தம் புதுக் குழந்தையுடன் பிள்ளை திடீரென்று தோன்றினார்.
அப்போது நல்ல மழை பெய்து கொண்டிருந்தது. பிள்ளை தெப்பமாக மழையில் நனைந்திருந்தார். காண் பது கனவா நனவா என்பது புரியாமல் ஆனந்தமும் அதிர்ச்சியும் ஒன்றையொன்று மேவ குழம்பி நின்ற மனைவியிடம் கையிலிருந்த குழந்தையை ஒப்படைத்தார்.
இசைடு 28 9 ஜனவரி-மார்ச் 2000 69
L JILQL IL IġbLDWWW.padippakam.Com
பசவண்ணாவின் நிலத்தில், தான் எழுப்ப முயன்று கொண்டிருந்த மாளிகைக்கு நூறு அடி தொலைவில் எடுப்பாரற்று மழையில் மூழ்கிப் போய் அந்தக் குழந்தை மண்ணில் கிடந்ததாகவும், கண்ணுக்கும் நினைவுக்கும் எட்டிய மட்டில் அங்கே நெடுநேரமாகவே ஆள் நடமாட் டம் இருக்கவில்லையாகையால் அதன் தாய் யாரென் பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் அவர் கூறினார். நெடுநேரமாகவே அந்தக் குழந்தை மழையில் நனைந்து கொண்டிருக்கிறதென்பதை பிள்ளையின் மனைவியும் பார்த்தவுடனேயே கண்டுகொண்டாள். அதை நன்றாகக் கவனித்து ரசிக்கும் மனோ நிலையிலும் அவகாசத்திலும் இல்லையென்றாலும் வார்த்தையால் விவரிக்க முடியாத அழகுடன் மிளிர்வதை ஒரு விநாடி அவள் மனம் அவதானிக்கத்தான் செய்தது. பிள்ளை திரும்பிப் போகும் அவசரத்தில் இருந்தார். "இத்தனை நீரைக் குடித்த பிறகு இது இனி உயிருடன் இருக்கப் போவதில்லை. ஆனால் இவ்வளவு அழகான ஒரு படைப்பு இந்த உலகுக்கு வந்த சுவடே தெரியாமல், ஊரார் யார் கண்ணிலும் படாமல் மண்ணுக்குள் அனாதையாய்ப் புதைந்து போக இருந்த கொடுமையைச் சகித்துக்கொள்ள முடியாமல்தான் இங்கே எடுத்துக் கொண்டு வந்தேன்." அந்தக் குழந்தை இறந்தவுடன் அந்த அம்மணியின் பொறுப்பில் நல்ல முறையில் விரிவான சடங்குகளுடன் ஊரார் பார்க்க அதை அடக்கம் செய் வது என்று அவர்கள் முடிவு செய்தார்கள். பிள்ளையின் மனைவி எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் பிள்ளை திரும்பிப் போவதில் பிடிவாதமாக இருந்தார். பசவண் னாவின் மோசமான தந்திரங்கள் மழையையும் ஒரு கருவியாக பயன்படுத்திக்கொண்டு விடக் கூடுமென்று அவர் இருப்புக் கொள்ளாமல் தவித்தார்.
ஆனால் அதே மழை தன்னை மிக ஆழமாக தனக்கே தெரியாமல் பலவீனப்படுத்திக் கொண்டிருந்ததென்பதை உணராதவராயுமிருந்தார். அவர் மீண்டும் மழையில் நனைந்தபடி வீட்டு வாசற்படியைத் தாண்டும்போது அவர் மனைவிக்குத் தன் விதியை நினைத்து அழுவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. அத்தனை வருடங் களுக்குப் பிறகும் சுயநலத்தினாலன்றி தன் கணவர் காதலினால் தன் குடும்பத்தைப் பார்க்க வரவில்லையே என்கிற எண்ணம் க்சப்பாய் கசக்க, அந்த அம்மணி பிள்ளையின் முதுகின் மேல் கதவை அறைந்து சார்த்திக் கொண்டாள். மழையின் வேகம் பிள்ளையை முன்னி றுத்தி அவளை மிகவும் அச்சுறுத்தியது. அந்த அச்சம் நூறு சதவீதம் நியாயமானதாகவும் இருந்தது. பாரமகால் வட்டாரத்தில் அப்படி ஒரு மழை நூறு வருடங்களில் முதன்முறையாகப் பெய்ததென்று அரசுக் குறிப்பில் அது பதியப்பட்டிருக்கிறது. இப்போதும் அந்த மழையைப் பற்றிக் குறிப்பிடும் நூல்களெல்லாம் அந்தப் பிர்தேசம் அப்படி ஒரு மழைக்குப் பிறகும் பிரளயத்தில் மூழ்கிப் போகாமல் மீண்டு வந்ததை ஒரு ஆச்சர்யமாகவேதான் குறிப்பிடுகின்றன. குறுக்கும் நெடுக்குமாக ஊர்களை வளைத்துக்கொண்டு ஓடிய காவிரியின் சீற்றம் நிலப்பரப் பின் உட்புறமாக அமைந்திருந்த ஊர்களைக்கூட பகடைக் காய்களாக உருட்டி விளையாடிவிட்டது. குறைந்த பட்சம் அடுத்த ஒரு வருடத்திற்காவது வானத்தில் சூரிய சந்திரர் களும் நட்சத்திர தேவதைகளும் உலாவ இடம் கிடைக்கா மல் தவிக்கப் போகிறார்கள் என்று சோதிடர்கள் கூறிக் கொண்டார்கள். மூன்று நாட்கள் விடாமல் வானம் பிளந்துகொண்டு கொட்டியது. பெரும் கண்ணாடிக் குண்டுகளாக மேலிருந்து பொழிந்த நீர் கூரைகளைச் சிதறடித்தது. அதே சமயம் கீழே பெருகி ஓடிய வெள்ளம் அஸ்திவாரங்களை அளித்துப் போட்டுக்கொண்டிருந்தது. கட்டிடங்கள் பொம்மலாட்டப் பதுமைகளைப் போல
ஊசலாடிக் கொண்டிருந்தன. இத்தனை மழைக்கும் காற்று சுவாச வேகத்தைத் தாண்டி ஒரு நூலளவு வேகங்கூடப் பிடிக்கவில்லை. அலைவில் புரண்டு தேய வேண்டுமென விதிக்கப்பட்டிருந்த இடியும் மின்னலும் நகர்ந்து செல்ல காற்றின் பாதையின்றி தோன்றிய இடத்திலேயே கனத்து தொங்கிக் கொண்டிருந்தன. ஓசூர் போன்ற உயர்ந்த நிலப்பகுதிகளில் சில வெள்ளத்திலிருந்து தப்பிக்க முடிந் தது. ஆனால் மழையின் உக்கிரம் அங்கே மிக வலுவாக இருந்தது. மலையடிவாரங்களில் அமைந்த ராயக் கோட்டை, தேன்கனிக்கோட்டை, சூளகிரி பிரதேசங் களின் வெள்ளப் பெருக்கில் கால் நடைகளின் பிணங்கள் மிதந்தன. முனட நாற்றமும், இருளும், குளிரும், ஈரமும் ஊர்களின் முகங்களைக் கோரமாக மாற்றிவிட்டிருந்தன. பேராசைக்காரர்களும், கருமிகளும், திருடர்களும் புதைத்து வைத்திருந்த செல்வம் எடுக்க ஆளில்லாமல் நீரின் போக்கில் இழுபட்டுப் போயொழிந்து கொண்டிருந் தது. ஹொகேனக்கல், கிருஷ்ணகிரி, முத்தியால்மடு அருவி கள் மலையுச்சி வரை நிரம்பி வழிந்த வெள்ளத்துக்குள் மூழ்கிக் காணாமல் போய்விட்டிருந்தன. யாரும் யாரை யும் பார்த்துக்கொள்ளவில்லை. யாரும் யாருடனும் பேசிக் கொள்ளவில்லை, யாரும் எதற்காகவும் வீட்டைவிட்டு வெளியேறவில்லை. மூன்று நாட்கள் பெய்த மழை அதன் முதல் துளி விழுந்த அந்தக் கணத்திலேயே காலம் உறைந்து நிற்கும்படி செய்துவிட்டிருந்தது.
பரமசிவம் பிள்ளையின் முதுகின் மேல்- கதவை அடித்துச் சாத்திய அவர் மனைவி நான்காம் நாள் புலர்வில் கெலமங்கலம் கிராமத்தின் பிறவீட்டுக் கதவுகள் திறக்கப்படும் சத்தம் கேட்ட போதுதான் தன் வீட்டுக் கதவையும் திறந்தாள். வருமா வருமா என்று நினைத்த சூரியன் வந்து விட்டிருந்தது. வீட்டு வாசற்படியிலேயே பிள்ளை பிரக்ஞையற்ற நிலையில் விழுந்து கிடந்தார். மழை அவரை பலமாகத் தாக்கியிருக்கிறது என்பதும், அவர் அவள் கதவைச்ஆசாத்திய கணத்திலேயே நகர முடியாமல் கீழே விழுந்திருக்கிறார் என்பதும் அவளுக்கு உடனே புரிந்து போயிற்று. தொண்டையைக் கிழிக்க முயன்ற குமுறலை அடக்கிக்கொண்டு அக்கம்பக்கத்தவர் களின் உதவியுடன் கீழே விழுந்து கிடந்தவரைத் தூக்கிப் படுக்கறைக்குக் கொண்டு சென்று கிடத்தினாள். பிள்ளை யின் உடல் நெருப்பாய்க் காய்ந்தது. வைத்தியம் தொடர்ந்து நடந்தது. மருந்துகளைத் தயாரித்து வாயில் புகட்டுவதும் ஒழிந்த நேரங்களில் உட்கார்ந்துகொண்டு அழுது தீர்ப்பது மாகப் பொழுது கழிந்தது. ஒரு வார விஷக் காய்ச்சலுக்குப் பின் பிள்ளை கண்களைத் திறந்தார். திறந்தவுடன் தன் மனைவியின் கையிலிருந்த குழந்தையைப் பார்த்துவிட்டு யாருடையது இத்தன்ை அழகான குழந்தை என்று கேட்டார். மழை ஒரே வீச்சில் அவருடைய ஞாபகத்தி லிருந்து ஜமீன்தாரின் காதல் மாளிகை, பசவண்ணாவின் தந்திரங்கள், அவருடைய வனவாசம், அவர் சகதியிலி ருந்து கண்டெடுத்ததாகச் சொல்லிக் கொண்டுவந்து கொடுத்த குழந்தை யாவற்றையும் அழித்துப் போட்டு விட்டது. அவர் ஏழு வருடங்களுக்கு முந்தின பரமசிவம் பிள்ளையாக மாறிவிட்டிருந்தார். அந்த அம்மணி யாரு மற்று அனாதையாகச் சகதியில் புதைந்து போக இருந்த அந்தக் குழந்தையை வளர்க்கும் பொருட்டுத் தான் எடுத்து வந்ததாகக் கூறினாள். பிள்ளையின் மனம் ஏழு
வருடங்களை சுத்தமாக மறந்து விட்டிருந்தாலும் உடல் |
மழையின் ஞாபகங்களை வலுவாக ஏற்றிருந்தது. அந்த
மழைக்குப் பிறகு இருபத்திரண்டு வருடங்கள் அவர்
தன் அறையை விட்டு வெளியே வரவில்லை. அவருடைய
கட்டாய ஓய்வு குடும்பத்தின் பொருளாதாரச் சூழலை பாதிக்கவில்லை. ஏற்கனவே தேடி வைத்திருந்த பொரு ளும், செய்து கொண்டிருந்த ஒப்பந்தங்களுமே எப்போதும்
70
தலசீடு 28 9 ஜனவரி - மார்ச் 2000
படிப்பகம்WWW.padippakam.Com
போல சம்சார வண்டி யைத் தடங்கலில்லாமல் செலுத்திக் கொண்டு போக அவர் மனைவிக்குப் போதுமானதாக இருந் தன. பற்றாக்குறைக்கு ஜமீன்தாரிடமிருந்தும் அவர் சாகும் வரை பணம் தவறாமல் வந்துகொண்டு இருந்தது. அந்த அம்மணி சாகும் வரை அவற்றைக் கொண்டு நிர்வாகத்தைத் திறம்படச் செய்து கொண்டுதாணிருந்தாள்.
ஜமீன்தார் இறந்த நான்காம் மாதத்தில் ஒரு நாள் பின்னிரவில் புழக் கடைப் பக்கம் எழுந்து சென்ற அவள் பல வரு டங்களாகப் பழக்கப் பட்டிருந்த கிணற்றை அதன் பக்கத்திலிருந்த நீர்த்தொட்டி என்று நினைத்து நீர் மொள்ளக் குனிந்து ஆழத்தை எதிர் பாராமல் கைகளைத் தொடர்ந்து உடலும் அந்தரத்தில் வளைந்து தொங்க, பிடிமானம் தவறிப் போய் உள்ளே விழுந்துவிட்டாள். காலையில் பிணமாகத்தான் அவளை வெளியே எடுக்க முடிந்தது. மனைவி இறந்த அதிர்ச்சி பிள்ளையை பின்னும் இறுக்கமாக வியாதிப் படுக்கை யோடு சேர்த்துக் கட்டிப்போட்டுவிட்டது. அவள் இறந்த போது தகனத்துக்காகக் கூட அவர் தன் அறையை விட்டு வெளியே வர உடல்நிலை இடங்கொடுக்கவில்லை. குடும்பப் பொறுப்புகளை அவர் ஸ்தானத்தில் நின்று, அவர் சகதியிலிருந்து கண்டெடுத்த பிள்ளைதான் செய்து முடித்தான். மனைவியின் இறப்புக்காகவே காத்திருந்தது போல பிள்ளையின் வாழ்க்கைச் சக்கரமும் வெகுவேக மாக சுழலத் துவங்கியது. நிகழ்வுகள் மளமளவென்று நீண்டன. அவர் பெண், அவள் தாய் இறந்து ஒரு வருடத் துக்குள்ளாகவே திருமணமாகி புகுந்த வீடு சென்றாள். பிள்ளை தன் குலத்தொழிலான கட்டிடங் கட்டும் கலை யையே தன் செல்வங்களும் கற்றுக்கொண்டு பரம்பரைப் புகழை நிலை நிறுத்த வேண்டுமென்று விரும்பினார். ஆனால் அவருடைய சொந்தப் பிள்ளைகள் இருவருக் குமே அதில் விருப்பமில்லாதிருந்தது. அவர்கள் தங்கள் தந்தையை தங்களுக்கு வேறுவிதமான வாழ்க்கையை அமைத்துக் கொடுத்துவிடும்படி வேண்டினர். மூத்தவன் பிள்ளையின் செல்வாக்கில் ராயக்கோட்டை வனச்சரகத் தில் ரேஞ்சர் வேலையில் சேர்ந்துகொண்டான். அங்கி ருந்து பிறகு தென்தமிழ் நாட்டின் மூலையிலிருந்த புன லூர் வனச்சரகத்துக்கு மாற்றப்பட்ட பின் அவனை பிள்ளை பார்க்கவேயில்லை. பிராமணப் பெண் ஒருத்தியை கல்யாணம் செய்து கொண்டு, சில வருடங் களுக்குப் பின் நெல்லைச் சீமையில் அப்போது கிலியூட் டும்படி பிரபலமாகியிருந்த தலைமறைவு இயக்கமொன் றில் ஈர்க்கப்பட்டு சுதேசியாகி தூத்துக்குடி கலவரத்தின் போது அந்தப் பையன் சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டான். செய்தி கிடைத்தபோது பிள்ளை பெரிதாக அதிர்ச்சி யடையவில்லை. அவரைப் பொறுத்தவரை அவன் அதற்குப் பல வருடங்களுக்கு முன்பே செத்துப்போய் விட்டிருந்தான். இரண்டாவது பையன் கொஞ்சம் நாக ரீகப் பேர்வழி அவன் தன் தகப்பனிடமிருந்து கணிசமான
ෂෙණිyūs 28
ஒரு தொகையைப் பெற்றுக்கொண்டு சேலம் போய்விட் டான். அங்கே சொந்தமாகத் தொழில் செய்து கண்ணிய மாக பிழைத்துக்கொண்டிருப்பதாகத் தகப்பனையும் தம்பியையும் பார்க்க வருகிற போது சொல்வான். தங்கைக்காக அவன் கொண்டு வருகிற சீதனப் பொருள் களும் அது உண்மைதான் என்று அவர்கள் நம்பும்படி செய்திருந்தன. அவனுக்குக் கூத்தியாள் தொடர்பிருப்ப தாக சேலம் போய்விட்டு வந்தவர்கள் பிள்ளையின் காதுகளில் விழாதபடி தத்துப் பிள்ளையின் காதுகளில் சொல்லி அங்கலாய்த்துக்கொண்டார்கள். கல்யாணம் எதுவும் செய்துகொள்ளாமல் அந்தப் பிள்ளை கடைசி வரை 'மைனராகவே" தன் காலத்தைக் கடத்திவிட்டான்.
ஆக, எஞ்சியிருந்த ஒரே பையன், பரமசிவம் பிள்ளை சகதியிலிருந்து கண்டெடுத்த, சாரங்கன் என்பதாகப் பெயரிடப்பட்ட அந்தப் பையன்தான். அவன் சந்தோஷ மாக பிள்ளையிடமிருந்து பரம்பரைத் தொழிலைக் கற்றுக்கொள்ள இசைந்தான். மழைவீட்டைக் கட்டியது அவன்தான். இருபத்திரண்டாவது வயதில் ஒருநாள் அவன் தன் தகப்பனை, அவர் பல வருடங்கள் பார்க்கா மல் மறந்தே போய்விட்ட வெளி உலகத்தை மீண்டும் பார்க்கும் பொருட்டாக படுக்கையிலிருந்து எழுப்பி அழைத்து வந்தான். சொல்லி வைத்தாற்போல அன்று மழையும் வந்துவிட்டிருந்தது. அவன் கட்டியிருந்த வீட்டைப் பார்த்த போது அதுவரையில் தன்னை அலைக் கழித்துக் கொண்டிருந்ததாக நினைத்த பயமும் கவலையும் வியாதி யும் உண்மையில் தன்னுடைய கற்பிதங்களேயன்றி நிஜ மில்லை என்பதை பிள்ளை உணர்ந்தார். பல உண்மைகள் அவருக்குப் புரிவதுபோல இருந்தது. வருடங்களுக்கு முன்பு அவரை விட்டு அகன்று போன அமைதியும் தெளிவும் நிதானமும் இளமையும் மீண்டும் அவரை வந்தடைந்தன. பிறகெப்போதும் அவர் அவற்றை இழக்காதிருந்தார்.
சிகதியில் புதைந்து கொண்டிருந்தானென்று சாரங் கனை பரமசிவம் பிள்ளை அவர் மனைவியிடம் கொண்டு வந்து கொடுத்த போது அவனை முழுதாகக் கவனிக்கும் சாவதானமான மனநிலையில் அவள் இல்லை, மீண்டும் பசவண்ணாவின் நிலத்துக்குப் போகும் முனைப் பிலிருந்து தன் கணவனை எப்படியாவது மீட்டுக்கொள்ள வேண்டுமென்கிற துடிப்பிலும், பிறகு சாத்திய கதவின் பின்னே அவரைத் திரும்பத் தொலைத்துவிட்ட துக்கத் திலும் அவனை முற்றிலுமாக மறந்துவிட்டாள். நெடுநேரத் துக்குப் பிறகு மனதைத் தேற்றிக்கொண்டு தன் அன்றாடத் துக்குள் தன்னைப் புதைத்துக்கொள்ள திரும்பியபோது தான் சொந்தக் குழந்தைகளின் கையில் வேறொரு புதிய குழந்தையையும் பார்த்தாள். அந்தப் புத்தம்புதிய, இரண்டு நாள் குழந்தை அவர்களின் முகம் பார்த்துச் சிரித்துக் கொண்டிருப்பதைப் பார்க்க அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. அங்கே துவங்கி சாரங்கன் அவள் அடிக்கடி ஆச்சரியப்படும்படியான கணங்களை தொடர்ந்து கொடுத்துக்கொண்டே இருந்தான். அவன் சிரித்து விளை யாடிக் கொண்டிருந்ததைப் பார்த்த போதுதான் அவன் அழவேயில்லை என்கிற விஷயமும் அவள் கவனத்தில் பிடிபட்டது. மழையில் நனைந்த அதிர்ச்சியில் அவன் அழுவதை மறந்து போயிருக்கக்கூடும் என்று அவள் எண்ணிக்கொண்டாள். அப்போது மட்டுமல்ல, தன் இருபத்திரண்டாவது வயதில் கமலத்தைப் பார்க்கும்வரை சாரங்கனின் கண்களில் கண்ணீரை யாரும் பார்த்ததில்லை. அடுத்த இரண்டு நாட்களில் அவனைப் பராமரிக்கும் பணியில் அவள் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட போது, அவன் அழகை விஸ்தாரமாகக் கண்டு வியக்கும் ஆசுவாச மான மனநிலையும் அவளை வந்தடைந்தது. செதுக்கி யதைப் போல நாசியும், உதடுகளும், கைகால்களும் பின்னாளில் ஊரில் அதிகம் பேசப்படும் விஷயங்களில்
6 ஜனவரி - மார்ச் 2000 71
LIIգIIլ 151DWWW.padippakam.Com
ஒன்றாக இருக்கப் போகிறதென்பதை அவள் அப்போதே தெரிந்துகொண்டாள். குழந்தை கரிய நிறத்தவனாக இருந்தான். கறுப்பென்றால் பட்டுக் கறுப்பு கொஞ்சமும் பிற நிறம் கலக்காத தூய கறுப்பு. பாம்பின் உடல் போலக் கிலியூட்டும் விதத்தில் அந்த நிறம் அவள் கைகளில் நெளிந்த போது பளபளத்தது. அதற்கு நேரெதிராக அல்லது அதை மேலும் எடுத்துக்காட்டும் விதத்தில் பின்புலமாக அவன் கண்கள் நெருப்பைப்போலக் கனிந்து சிவந்திருந் தன. இந்தச் சிவப்பைப் பார்த்துவிட்டுத்தான் வெளியே இல்லாதது போல இருந்தாலும் உள்ளே அவனைக் கொன்று கொண்டிருக்கும் காய்ச்சல்தான் கண்களின் வழியே அப்படி ஜொலிக்கிறதென்று கணவன் மனைவி இருவருமே எண்ணிவிட்டார்கள். ஆனால் குழந்தை சாகவில்லை. சாகவில்லையென்பது மட்டுமல்ல, மழை யில் அவ்வளவு நேரம் நனைந்ததென்று பரமசிவம் பிள்ளை சொன்னதை ஆமோதிக்கும் விதத்தில் ஒரு சிறு தும்மலை யேனும் வெளிப்படுத்தவில்லை. சாரங்கன் வளர்ந்த போதும் நீர் சம்பந்தப்பட்ட வியாதி எதிலும் சிக்கிக் கொண்டு ஒரு நாளேனும் படுக்கையில் விழுந்து கிடந்த தில்லை. அவன் உடல் வியாதிகள் தாக்கவியலாத வலு வும், ஒளி ஊடுருவக்கூடிய ஸ்படிகத்தன்மையும், காயம் பட முடியாத நெகிழ்வும் கொண்டதென்று சில நாட் களில் பிள்ளையின் மனைவி தெரிந்துகொண்ட போது, பின் எப்படி அவன் மூப்பையும் சாவையும் சந்திக்கப் போகிறானென்று எண்ணி சில சமயங்களில் கவலைப் பட்டிருக்கிறாள். (“ஒரு எல்லைக்கு மேல் வாழ்க்கை சகித்துக்கொள்ள முடியாதபடி அலுப்பூட்டக் கூடியதாகி விடும்போது ?") -
பிள்ளையின் வீட்டில் சாரங்கன் செல்லக் குழந்தை ய்ாகவே வளர்ந்தானென்றுதான் சொல்ல வேண்டும். பிள்ள்ையின் மனைவியைப் பொறுத்தவரை அவன் ஒரு அதிசயக் குழந்தை மண்ணில் புதைந்து கொண்டிருந் தவனில்லை. மாறாக மண்ணிலிருந்து முளைத்துக் கொண் டிருந்தவன். தன் கணவன் திரும்ப வீடு வந்து சேரவும் பாழாய்ப் போன சாபம் பிடித்த பசவண்ணாவின் நிலத்தை மறந்து போய் வீட்டிலேயே நிரந்தரமாகத் தங்கவும் அவன்தான் காரணம். பிள்ளையும் அவர்களின் சொந்தக் குழந்தைகளுமே கூட சாரங்கன் மீது அன்பைப் பொழிவதில் குறை வைக்கவில்லை. சாரங்கன் சிறுவனாக வளர்ந்துகொண்டிருந்த போதோ அந்தக் குடும்பத்துக்கு மட்டுமின்றி ஊராருக்கும் செல்லக் குழந்தையாகியிருந் தான். பத்து வயது நிறைவடைந்த போது அவன் அவனை யொத்த சிறுவர்களின், ஏகமனதாய் தேர்ந்தெடுக்கப் பட்டத் தலைவன். எப்போதும் அவனைச் சுற்றி சிறுவர் பட்டாளம் நெருக்கிக் கொண்டிருக்கும். அவன் சொல் லும் கதைகள் அவர்களை,அவர்கள் அதுவரையில் பார்த் தேயிராத உலகங்களுக்கு அழைத்துச் சென்றன. உலகின் மறுபக்கத்திலிருக்கும் அநேக தேசங்களைப் பற்றியும் அவற்றின் பிரமிப்பூட்டும் மாளிகைகள் பற்றியும் அவற் றில் தூங்கிக்கொண்டிருக்கும் அழகிய இளவரசிகளைப் பற்றியும் அவர்களை யார் எப்போது எப்படி வந்து எழுப்பு வார்கள் என்கிற ரகசியத்தையும் சாரங்கன் தெரிந்து வைத்திருந்தான். விளையாடுவதற்கென்று அவன் கண்டு பிடிக்கும் இடங்கள் அவன் நண்பர்கள் சந்தோஷ பயத் தில் மூச்சடைத்துப் போகும்படிச் செய்ய வல்லனவாக இருந்தன. அவர்கள் அதற்கு முன் ஒருபோதும் அவற்றை விளையாட ஏதுவான இடங்களாக கற்பனை செய்து கூடப் பார்த்ததில்லை. நீர்ப்படுகைகளின் ஒரத்திலிருக்கும் எலி வளைகள், அடர்த்தியாகப் பின்னப்பட்டிருக்கும் சிலந்திக் கூடுகள், மரப்பொந்துகள், பறவைகளின் கூடுகள் என்று இப்படி ஏராளமான ஒளிவிடங்களை அவர்கள்
சாரங்கனோடு சேர்ந்து கண்டுபிடித்தார்கள். அவற்றில்
ஏற்கனவே வசித்து வந்த உயிர்களோடு சாரங்கன் அவர் களுக்குப் பழக்கமேற்படுத்திக் கொடுத்தான். இதையெல் லாம் சாரங்கன் மட்டும் எப்படித் தெரிந்து வைத்திருக்' கிறான் என்று அவர்கள் ஆச்சரியப் பட்டார்கள். அவற்றைப் பற்றி அவனுக்குச் சொல்லும் ரசியக் குரலை அவர்களால் , கேட்க முடியவில்லை, அந்த நட்பை சாரங்கனுடைய தனிமை அவனுக்குப் பெற்றுத் தந்தது. மழைப் பருவங்களில் மற்ற பிள்ளைகளை அவர் களுடைய கண்டிப்பு மிகுந்த பெற்றோர்கள் சாரல் தெறிக் காத வண்ணம் வீட்டின் உள்ளறைகளுக்குள் வைத்துப் பூட்டி வைத்தார்கள். அப்போதெல்லாம் சாரங்கன் தனிமையில் தன் பொழுதைக் கழிக்கும்படி விடப்பட் டான். மழைப்பருவங்களில் அவனைக் கைவிட்டு விடாத நட்பு ஒன்று இருந்ததென்றால் மழைதான் அது சாரங்கன் மழையோடுதான் வளர்ந்தான். ('வானத்தின் முகம் கருக்கும்போதெல்லாம் சாரங்கனின் முகம் பிரகாசமாகி விடும்") மழை, ஊர்க்காரர்கள் நினைத்திருந்ததைப் போல கொள்ளை நோயை ஊருக்குள் ஏவிவிடும் மந்திரவாதி | யாக சாரங்கனிடம் நடந்து கொள்ளவில்லை. மாறாக அது அவனை அந்த ஊருக்குள்ளேயே இருந்த, ஆனால் யாருமே அதுவரை பார்த்திராத, பிரமாதமான ஒளிவிடங் களுக்கெல்லாம் அழைத்துப் போய்க் காண்பித்தது. மிக உயரத்திலிருந்து உலகம் முழுவதையும் சுற்றிப் பார்த்து அங்கே கண்ட விந்தைகளையெல்லாம் பற்றி அவனுக்கு கதைகதையாய்ச்சொன்னது சாரங்கன் மழையின் குரலைத் தெளிவாகக் கேட்டான். மழையுடன் காலம் போவது தெரியாமல் விளையாடினான். பெரும்பாலும் அந்தப் பருவங்களில் அவன் வீட்டுக்கு வரும் நேரம் குறைவாக இருந்தது. ஆனாலும் பிள்ளையோ அவர் மனைவியோ அவனைத் தடுக்கவில்லை. மழைக்கும் அவனுக்கும் ! இடையே இருந்த உறவைப் பற்றி அவர்களுக்கும் தெரிந் திருந்தது ஆதலால் அவனை அவன் போக்கில் அனு' மதித்து விட்டார்கள். அறைகளுக்குள் அடைபட்டுக் கிடக்கும் மற்ற சிறுவர்களெல்லோரும் பொறாமையோ டும் ஏக்கத்தோடும் புழுங்கிக்கொண்டிருக்கையில், சாரங் கன் அந்தப் பருவம் பூராவும் மழையுடன் தனிமையில் உறவாடிக்கொண்டிருப்பான். பருவம் முடிந்தவுடன் மழை விடைபெற்றுக் கொள்கையில், சொல்லி அதிசயப் படுத்துவதற்கு மேலும் எண்ணற்ற வினோதமான கதை களையும், காட்டிப் பீற்றிக் கொள்வதற்கு மேலும் அற்புத மான ஒளிவிடங்களையும் தன் பரிசாக சாரங்கனிடம் விட்டுச் செல்லும், மழைப்பருவம் ஒன்றில்தான் சாரங் கன் ஊராரால் மறக்கப்பட்டுவிட்ட பசவண்ணாவின் நிலத்தை மீண்டும் கண்டுபிடித்தான்.
கெலமங்கலத்திலிருந்து விளையாடியபடியே ஒகுர் வரை கூட்டி வந்துவிட்ட மழை, ஜமீன்தாரின் பழைய காதல் மாளிகை முன் அவனைக் கொண்டு வந்து நிறுத்திய போது தொடர்ந்து வேறெங்கும் தேட வேண்டிய அவசிய மின்றி விளையாடுவதற்கு மிகச் சிறந்த இடமொன்றைக் கடைசியில் கண்டுபிடித்தாயிற்று என்றே சாரங்கன் எண்ணினான். எலி வளைகளும், புதர்களும், அடர்ந்த மரங்களும், ஊஞ்சலாடத் தோதாக கிளைகளைப் பிணைத்துக் கட்டப்பட்டிருந்த, கயிற்றின் பருமனுள்ள சிலந்தி வலைகளும் பறவைக் கூடுகளும் ஏராளமாய் அந்தக் கட்டிடத்தினுள் வளர்ந்து மண்டிக் கிடந்தன. ஒளிந்துகொள்ள ஏதுவாக" இருளும் குறைவில்லாமல் செழித்திருந்தது. தனித்தனியாக ஒவ்வோர் இடத்தில் ஒவ்வொன்றாக சிதறிக் கிடந்த வசதிகள் அனைத்தும் அலையத் தேவையில்லாதபடி ஒரே இடத்தில் குவிந்து கிடந்தன. சாரங்கன் அடைந்த சந்தோஷத்துக்கு அனவே யில்லை. தன் வருங்காலத்தைப் பற்றி முன்னரே ஊகிக் கும் அளவுக்கு அப்போது அவன் மனத்தால் வளர்த்திருந்
72. aegros 275 28 00 gesegrafi - Lord 2000
LILQÜL 1d5LDWWW.padippakam.Com
தானோ இல்லையோ, ஆனால் இனி அந்த இடம்தான் தன்னுடைய நிரந்தரமான விளையாட்டு மைதானம் என்று அதைப் பார்த்த மாத்திரத்திலேயே அவன் மனம் நிச்ச யித்துக்கொண்டுவிட்டது. மழைப்பருவம் எப்போது முடியும், எப்போது அந்தப் புதிய இடத்தைத் தன் சகாக் களுக்குக் காட்டி அவர்கள் வாயைப் பிளப்பதைப் பார்த்து சந்தோஷப்படுவது என்று அவன் துடித்துக் கொண்டிருந் தான். ஆனால் மழைப் பருவம் முடிந்து அவர்களை அவன் அந்த இடத்துக்கு அழைத்துக்கொண்டு வந்தபோது அவர் களனைவரும் பாழடைந்த பழைய மாளிகையைப் பார்த்துவிட்டு பயத்தில் முகம் வெளிறிப் போனார்கள். தன்னைத் தவிர மற்ற எல்லாச் சிறுவர்களுக்கும் அவர்கள் பிறந்த நாள் முதலாகவே அந்த இடத்தின் கதை பெரிய வர்களால் சொல்லப்பட்டு வந்திருக்கிறதென்கிற உண்மை அப்போது தான் சாரங்கனுக்குத் தெரியவந்தது. தன்னால் தான் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டதாக நினைத்துப் பெருமையுற்றுக்கொண்டிருந்த அந்த இடம் உண்மையில் தன்னைத் தவிர மற்ற எல்லோருக்கும் நெடுங்கால்த்துக்கு முன்பே பரிச்சயமான ஒன்று என்பதை அறிந்தபோது சாரங்கன் திடுக்கிட்டுப் போய்விட்டான்.மேலும் வினோத மென்னவென்றால் மறக்கப்பட வேண்டுமென்பதற்கா கவே அந்தக் கதை அவர்களுக்குச் சொல்லப்பட்டிருந்தது. துயரமேகம் சாரங்கனின் நிர்மலமான மனதைச் சூழ்ந்து கொண்டது. எல்லோருக்கும் தெரிந்திருக்கும் ஒரு சாதார னமான உள்ளுர் விஷயம் உலகின் மறுபக்கத்திலிருக்கும் அதிசயங்களைக்கூடத் தெரிந்து வைத்திருப்பதாய் பீற்றிக் கொள்ளும் தனக்குத் தெரியவில்லையென்கிற தாழ் வுணர்ச்சியும் அவனைப் பற்றிக்கொண்டது. தன் சகாக் கள் மத்தியில் முதல் தடவையாக ஆனால் மிக மோச மாகத் தோற்றுப் போய்விட்டதாக நினைத்து அவன் மிகவும் தனிமைப்பட்டுப் போனான். தனக்கு மட்டும் ஏன் இது சொல்லப்படவில்லையென்பதும் அவனுக்கு விளங்க வில்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயமாகத் தெரிந்தது. இதுகாறும் சொல்லப்படாத கதையை இனி மேலும் தன் தாய்தந்தை யரிடமிருந்து வரவழைக்க முடியாது மறைத்து வைக்கப்படும் விஷயங்களின் மேல் கூடுதல் அபிமானம் கொள்ளும் மனித இயல்பு சாரங்கனை அந்த இடத் துக்குப் பிறகு அடிக்கடி வந்துபோகத் தாண்டியது. மற்ற சிறுவர்களெல்லோரும் மறுத்துவிட்டாலும் அவன் அங்கே தொடர்ந்து சென்று வருவதை வழக்கமாக்கிக்கொண்டு விட்டான். மழை அவனை தைரியப்படுத்தி வைத்தது. மழைப்பருவங்களில் இரவு நேரத்தில் கூட அவன் அங்கே மழையுடன் தங்கினான், தாய் தந்தையரும் ஊராரும் சொல்லாத கதையை தனிமை அவனுக்குச் சொன்னது. சாரங்கனுடைய நடவடிக்கைகள் ஊராருக்குத் தெரிய வந்தபோது அதை அவர்கள் அவனுடைய தாய் தந்தை யரின் காதுகளில் போடத் தயங்கினார்கள். பசவண்ணா வின் நிலம் பற்றிய செய்தி மறுபடி பரமசிவம் பிள்ளை குடும்பத்தின் காதுகளில் விழுமானால் உடனே அங்கே மரணம் சம்பவிக்குமென்று அவர்கள் அஞ்சின்ார்கள். எனவே சாரங்கனையே கூப்பிட்டு மிக மெல்லிய குரலில் அவன் காதுகளுக்குள் அவனை எச்சரிக்க முயன்றார்கள். சாரங்கன் காதுகளை மூடிக் கொண்டுவிட்டான். ஒளிந்து ஒளிந்து புழுங்கிக்கொண்டிருந்த பழைய ஞாபகங்கள் மீண்டும் ஊருக்குள் வளைய வரத்துவங்கின. இந்தச் சமயத்தில்தான் ஜமீன்தார் எதிர்பாராதவிதமாக திடீர் மரணம் அடைந்தார். தொடர்ந்து பிள்ளை மனைவியின் அகால மரணம். ஊராரால் செய்ய முடியாத காரியத்தை அந்த அம்மணியின் இறப்பு தற்காலிகமாகச் செய்து வைத்தது. தாயின் சாவு அதுவரை விளையாட்டுப் பிள்ளையாய் இருந்த சாரங்கனை பெரிய மனிதனாக்கி விட்டது. தந்தையின் இயலாமையை ச்டு செய்யும் வண்ணம் அவன் குடும்பப் பொறுப்புகளில் தன்னை
ஐக்கியப்படுத்திக்கொள்ளும் கட்டாயமேற்பட்டது. இத னால் பசவண்ணாவின் நிலத்துக்கு சாரங்கன் போய்வரும் தருண்ங்கள் சிறிது சிறிதாக ஆனால் தற்காலிகமாகக் குறைந்தன. ஒரு மூன்று வருடங்கள் கிட்டத்தட்ட நின்றே போயிருந்தன என்றுகூடச் சொல்லலாம். ஆனால் உட லால் அல்லாவிட்டாலும் உள்ளத்தால் அவன் அங்கே தான் தன்னை முழுவதுமாக ஒப்படைத்திருந்தான். அப்போது அவனுக்கு வயது புதினேழு துவங்கியிருந்தது. மலைபோல் தன் முன் குவிந்திருந்த பொறுப்புகளையெல் லாம் அவன் கரைக்க முனைந்தபோது பெரியவர்களின் உலகை அறிந்துகொள்ளும் சந்தர்ப்பங்கள் கிடைக்கத் துவங்கின. அவனிடமிருந்த குழந்தைமை மெதுமெதுவாக அவனிடமிருந்து விடை பெற்றுக்கொண்டது. முன்னோர் இறந்த ஒரு வருடத்துக்குள்சுபகாரியங்கள் நடந்தால் இறந்த வர்களின் நேரடியான ஆசிகள் கிட்டுமென்று பிள்னை யின் மனைவி இறந்த ஒன்பதாவது மாதத்தில் தேன்கணிக் கோட்டை பக்கத்திலிருந்து ஒரு வசதியான வரனைப் பிடித்துத் தன் தமக்கையின் திருமணத்தை முதலில் நடத்தி வைத்தான். பிள்ளையின் மற்ற இரு மகன்களும் வீட்டி லிருந்து உத்தியோக நிமித்தமாக வேறு வேறு ஊர்களுக்குப் பிரிந்து சென்றபின் தந்தையின் வேண்டு M கோளின்
أمير விருப்பத்தின் பேரி Af A. லும் குலத் M. M. A கற்றுக்கொள்வதில் بے گی”
முனைந்தான். தன் தந்தையை தன் குரு வாகவும் ஏற்றுக் கொண்டான். கெல மங்கலம் வீட்டில் அவர்களிருவர் மட் டும் தான் இருந்தார் கள், பிள்ளை எவ்வ ளவோ வற்புறுத்தி யுங்கூட ஒரு வேலைக் காரனை அமர்த்திக் கொள்ள சாரங்கன் சம்மதிக்கவில்லை. தந்தையின் பணி விடைகள் யாவற்றை
செய்து வந்தான். அதை குருதட்சினை என்றும் கூறிக்கொண்டான்.
அது ஒரு வினோதமானப் பள்ளியாக இருந்தது. கட்டிட வேலை நடக்குமிடங்களுக்கு சாரங்கனைக் கூட்டிச் சென்று பயிற்றுவிக்கும்.உடல் வலு பிள்ளைக்கு இல்லை. வீட்டிலிருந்தபடியேதான் அந்த வித்தையை அவனுக்குக் கற்றுக் கொடுத்தார். அதை அவன் நடை முறைப்படுத்திப் பார்க்கும் இடங்களிலிருந்து மிக விலகி யிருந்தார். கட்டிடம் கட்ட வேண்டிய நிலத்தின் அளவு, மண்ணின் தன்மை, பருவ நிலை, திசை, கட்டுபவனின் நிதி வசதி, கிரக நிலை, குடும்ப அங்கத்தினர்களின் எண்ணிக்கை, குணாம்சம், கட்டப்படும் நிலத்தின் மேல் காற்று நிலை கொள்ளும் உயரம் ஆகியவற்றைச்சாரங்கன் அவரிடம் வந்து சொல்லுவான். சொன்ன மாத்திரத்தில் வீட்டின் அளவு, அறைகளின் எண்ணிக்கை, அமைவு, விஸ்தீரணம், தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டிய இல் வகை, நடப்பட வேண்டிய பலிமரம், கலவையின் தன்மை, நீர் மூலை, கட்டிடத்தின் உயரம், சமையல் நெருப்பின் திசை அஸ்திவாரத்தினுள் வைக்கப்பட வேண்டியதிருஷ்டிப்
பொருள்கள், பூசை கொள்ள வேண்டிய தெய்வம்,
A.
społąrs 28 9 garafi-Lordó2000 73
L JILQL IL IġbLDWWW.padippakam.Com
நிறம், உட்புறச் சுவர்களின் மணம் இவ்வள்வையும் கணக்கிட்டு பிள்ளை சாரங்கனிடம் சொல்லிவிடு வார். அதற்கேற்றபடி கலன் வகள் அமைய வேண்டிய விதத்தையும் விளக்கிவிடுவார். சாரங்கன் முதலில் தன் தகப்பன் காட்டிவிட்ட வழியிலேயே கட்டிடங்களைக் கட்டி முடித்து பயிற்சி பெற்றான். வீடுகட்ட"விழைகிறவர் களின் குணாம்சங்களும் அதற்கேற்றபடி அன்மக்கப்படும் வீடுகளின் தன்மையும் பாணியும் ஒரு குறிப்பிட்ட சுழற்சி யில் திரும்பத் திரும்ப வருகின்றன என்பதைப் புரிந்து கொள்ள அவனுக்கு அவகாசம் தேவைப்பட்டது. ஆனால் அதிகம் தேவைப்படவில்லை. விரைவிலேயே அவன் அந்த வட்டத்தைத் தன் கற்பனையால் பெரிதுபடுத்தத் துவங்கிவிட்டான். தன் கடும் உழைப்பாலும் ஈடுபாட்டா லும் கட்டிடங்களின் மேல் பளிச்சிடும் தன் தந்தையின் சாயலை அகற்றி தன் முத்திரையை அவற்றில் பதிப்பதில் வெற்றி பெற்றான். பிள்ளையின் விலகல் அவனுக்கு மேலும் சில வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக்கொடுத்தது. பரீட்சார்த்தமாக சில பாணிகளை அவன் தன் தந்தையின் சேய்மையை பயன்படுத்திக்கொண்டு முயன்று பார்த் தான். உதாரணமாக சுண்ணாம்புக்கு பதிலாக மணலும், சுண்ணாம்பும், கருங்கல் துகள்களும் கலந்த சாம்பல் நிற செயற்கை மண் ஒன்றை தான் கட்டும் கட்டிடங் களில் புதிதாக அறிமுகப்படுத்தினான். தூர தேசங்களில் அது பயன்படுத்தப்படும் விதத்தை மழை அவனுக்கு தெரியப்படுத்தியிருந்தது. அது போலவே விதானங்களுக்கு சுள்ளிகளை இணைத்து இலை தழைகளால் படுகையிட்டு அதன் மேல் கலவையைக் கொட்டி கெட்டிப்படுத்தும் பழைய முறைக்குப் பதிலாக, கம்பிகளை வளைத்து உலோக வலைகளை விரித்து கலவையைப் பரப்பிக் கிட்டிக்கும் புதிய முறையையும் அந்த வட்டாரத்துக்குக் கொண்டு வந்தான். அறைகளின் நடுவே பார்வையை மறைத்தபடி நிற்கும் தூண்களைச் சுவரோரத்திற்கு நகர்த் தினான். விதான மையங்களை ஒரே இடத்தில் குவிக்கா மல் பக்கச்சுவர்களைத் தாங்கிகளாக்கிப் ப்ரவலாக்கி னான். சீக்கிரமே தந்தையின் இடத்தை சாரங்கன் பிடித்துக் கொண்டான். அவர் தொழில் களத்திலிருந்து விலகியிருந்த காலத்தில் அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன் படுத்திக் கொண்டு இலுப்பைப் பூக்களாக மொய்த்துக் கொண்டிருந்த பல போலிகளை சாரங்களின் மேதமை மேடையிலிருந்து கீழே தள்ளியது. பிள்ளைப் பிராயத்தில் அவனுடைய தனிமையைப் போக்கும் துணையாயிருந்த மழை சாரங்கன் வளர்ந்த போது விசுவாசமிக்க வேலை யாளாக மாறியது. பருவகாலங்களின் மாறுதல்கள் சாரங் கன் ஏற்றுக்கொண்ட வேலைகளைத் தாமதப்படுத்தவோ தடுத்து நிறுத்தவோ இல்லை. மழைக்காலங்களில் அவன் பொறுப்பெடுத்துக்கொண்ட கட்டிடங்களில் மட்டும் வேலை நடந்துகொண்டிருந்தது. புதிதாகப் பூசப்பட்ட, ஈரம் காயாத பச்சைச் சுவரானாலும் பலத்த மழைக்குப் பிறகும் அதன் அடையாளம் சுவற்றில் பதிந்திருக்காது. அதற்குப் பின்னும் அது வெயிலில் காயத்தான் வேண்டுமென்றால் மழை தன் வரவைச் சில நாட்கள் தாமதப்படுத்திக் கொண்டது. தேவைப்படும் போது பருவகாலம் துவங்கி யிரர்விட்டாலும் ஓரிருமுறை சாரங்கனுடன் வந்து | இருந்துவிட்டுப் போனது. தண்ணீரின் சுவை கலவை களில் குறிப்பிடத்தக்க அளவு அடர்த்தியை குறைக்கவோ, சேர்க்கவோ செய்யுமென்று அதற்கேற்றபடி நீர்ச் சேர் மானத்தை மாற்றிக்கொள்ளும் ரகசியத்தையும் மழை அவனுக்குச் சொல்லிக் கொடுத்திருந்தது. பிள்ளை அறிந்தி ராத பல நெளிவு சுளிவுகளை சாரங்கன் இரவு நேரங் களில் அவரருகே அமர்ந்துகொண்டு கதை போலச் சொல்லும் போது அவர் வியப்பிலாழ்ந்து போவார். சிறுவயதில் தன்னையொத்த சிறுவர்களுக்குச் சொன்னக்
வாஸ்து புருஷனின் அமைவு, பார்வை மூலை, ၈႔မှိ႔၏ir
கதைகளில்ருந்தது போலவே பல புதிர்ப்பாதைகள் அதனுள் செல்லச் செல்ல நீண்டுகொண்டே போவது தந்தையிடம் பேசப் பேச அவனுக்கும் அனுபவப்பட்டது. உண்மையில் தன் சிறுபிராயத்து விளையாட்டுகளின் நீட்சியாகவே தன் தொழிலையும் சாரங்கன் அனுபவித்துச் செய்துகொண்டிருந்தான். அதில் அவனுக்குச் சவாலும் அபரிமிதமான சந்தோஷமும் கிடைத்து வந்தன. மூன்று வருடங்களுக்குப் பின் பசவண்ணாவின் நிலத்துக்கு மறுபடி திரும்பி வந்தபோது அவன் பழைய சிறுவன் சாரங்கனாக இல்லை. உடலாலும் உள்ளத்தாலும் நன்கு வளர்ந்த, பக்குவப்பட்ட, பெயர் பெற்ற கட்டிடக் கலை ஞர்கள் மத்தியிலும், தனவந்தர்கள் வட்டாரத்திலும் தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்துத் தக்க வைத்துக் கொண்டுவிட்ட பெரிய மனிதனாகியிருந்தான். பச வண்ணாவின் நிலமும் அவன் பார்வையில் பழைய விளையாடும் மைதானமாக இல்லை. இனி அதுதான் தன் இருப்பிடம் என்பது சாரங்கனுக்கு உறுதியாகத் தெரிந்திருந்தது. அங்கே கட்டப்படவிருக்கும் வீட்டின் வரைபடமும் அவன் மனதில் வண்ணத் தூரிகையால் தெளிவாக வரையப்பட்டிருந்தது. அடுத்த சில தினங்களி லேயே அவன் வேலையைத் துவக்கிவிட்டான். அடர்ந்த காட்டை வெட்டி வெளியை உண்டாக்கினான். மழை அரித்தது போக எஞ்சியவற்றை கரையானும் அரித்து ஏற்கனவே எலும்புக் கூடாகியிருந்த ஜமீன்தாரின் பழைய கனவு மாளிகையை இடித்துத் தரைமட்டமாக்கினான். வேலைகள் மளமளவென்று நடந்தன. பசவண்ணாவின் சாபம் பற்றி யார் சொன்னதும் அவன் காதுகளில் ஏறவில்லை. ஊராரின் கதைகளில் மேலும் காட்சிகள் சேர்ந்தன. விலக்கப்பட்டவற்றின் மீதான விருப்பத்தை ஒருவனுக்குள் விதைப்பது அவன் முதியவனாயிருந்தால் தொழில் விரோதியும், இளைஞனாயிருந்தால் காதலியும் என்பார்கள், சாரங்கன் தன் மனதில் மறைத்து வைத்திருக் கும் காதலிக்காகவே அந்த வீடு எழுப்பப்படுகிறது என்று ஊர் பேசிக்கொண்டது. அதை யாரும் அவனிடம் வெளிப்படையாகக் கேட்கவில்லையானாலும் ஒவ்வொரு வர் மனதிலும் அந்த எண்ணமே மேலோங்கியிருந்தது. ஆசைக்கும் சாபத்துக்குமான பழைய துவந்தம் மீண்டும் துவங்கிவிட்டதென்று முதியவர்கள் சொல்லி வருத்தப் பட்டுக்கொண்டார்கள். இதற்கு நேர்மாறாக சாரங்கனின் கனவுகளில் நடமாடுவதாக நம்பப்பட்ட காதலியோ ஊர் முழுக்க பெற்றவர்களுக்குத் தெரியாமல் ஒவ்வொரு இளம் பெண்ணுக்குள்ளும் புகுந்துப் பெருகினாள். ஆக நம்பிக்கையுடனோ அவநம்பிக்கையுடனோ, துயரத்து டனோ சந்தோஷத்துடனோ ஒவ்வொருவரும் சாரங்கன் தன் வீட்டைக் கட்டி முடிக்கும் நாளை ஆவலோடு எதிர் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
பதின்மூன்று மாதங்களில் சேலம் முதல் மைசூர் வரை அதற்கொப்பான அழகிய வீடு வேறொன்று இல்லை என்று சொல்லும்படி மழைவீடு கட்டி முடிக்கப்பட்டது. ஊராரும் ஹ்ரின் பேரைச் சொல்லும் நிரந்தர அடை யாளமாக இனி அந்த வீடு விளங்கப் போவதாகச் சொல்லிப் பெருமைப்பட்டுக் கொண்டார்கள். மனை புகும் வைபவத்துக்கு முன்தினம் தான் சாரங்கன் தன் தந்தையை வீட்டைப் பார்க்கும் பொருட்டாக அவருடைய இருண்ட படுக்கையறையிலிருந்து வெளியே அழைத்து வந்தான். பரமசிவம் பிள்ளை அந்த, பழைய கட்டிட பாணியும் புதிய கட்டுமான முறைகளும் இணைந்த வீட்டின் வனப்பையும் விஸ்தாரத்தையும் பார்த்துப் பிரமித்துப் போனார். இரண்டு பேருக்கு அவ்வளவு பெரிய வீடு எதற்கு என்று அவர் சாரங்கனைக் கேட்டபோது அவன் மழையையும் சேர்த்து அது மூன்று பேருக்கானது என்று பதில் சொன்னான். ("ஆனால் மன்ழ மனிதர் களைப் போல குறுகிய வாழ்விடங்களில் தன்னை
74 இசைதி 28
9 ஜனவரி - மார்ச் 2000
படிப்பகம்www.padippakam.Com
| மேடைக்குமாக, வந்திருந்தவர்
அடைத்துக்கொள்ள விரும்புவதில்லை. குழந்தையைப்
போல அது திசை வெளிகளில் விளையாட அதிகபட்சத்
தொலைவுகளுக்குச் சுவர்களைப் பிரித்து வைக்க வேண்டி யிருக்கிறது.") வைபவத்துக்கு சாரங்கன் அனைவரையும் அழைத்திருந்தான். ஒருவர்கூட அன்று தன் வீட்டில் சமையல் செய்யக்கூடாதென்றும் அன்புக் கட்டளையிட் டிருந்தான். முதியவர்களுக்கு சாரங்கன் அவன் தவழ்ந்து விளையாடிய நாள் முதலாகவே அறிமுகமான குழந்தை இளைஞர்களுக்கு அவன் அவர்களுடைய இளம் பிரா யத்து நண்பன். குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும்
மழையைப் பிடித்து வைத்து வேடிக்கை காட்டும்
வித்தைக்காரன். யுவதிகளுக்கு அவர்களின் மானசீக காதலன். வீட்டினுள் எள் போட்டால் கீழே விழ இட மின்றிப் போயிருந்தது. புெற்றோர்கள் தங்கள் வயது வந்த பெண்களைச் சிறிதும் கூச்சமின்றி அலங்கரித்துக் கூட்டி வந்திருந்தார்கள். அந்தப் பெண்கள் சாரங்கனை மையமாகக் கொண்டு அவன் அமர்ந்திருந்த மேடையைச் சுற்றிச் சுற்றி வண்ணத்துப் பூச்சி களாய்ப் பறந்து கொண்டிருந் தார்கள். வரவேற்புப் பந்தலுக் கும் உள்ளறைகளுக்கும் விழா
கள் ஒருவர் மீது ஒருவர் வழுக் கிய படி நகர்ந்து கொண்டேயி ருந்த காட்சி, மிதமான காற்றில் அலைகளை எழுப்பும் நிறைந்த வயலின் தோற்றத்தைக் கொண் டிருந்தது. பிள்ளையின் இரண் டாவது மகனும், பெண்ணும் மாப்பிள்ளையும் வைபவ நிகழ் வில் தங்களுக்குள்ள உரிமையை உரத்தக் குரலில் அறிவித்துக் கொண்டிருந்தார்கள். சாரங்க னின் பெயர் எப்பொழுதும் ஏதாவது ஒரு மூலையிலிருந்து அழைக்கப்பட்ட படியே இருந் தது. அக்கினிக் குண்டத்திலி ருந்து எழுந்த புகையும், சமைய லறைப் புகையும், மூலிகைகளும், சுள்ளிகளும், அவிர்பதார்த்தங்களும் நெருப்பில் வேகும் இனிய மணத்தை வீடு முழுக்கப் பரப்பிக்கொண்டிருந் தன. இத்துடன் புதிய ஆடைகள், கூந்தல் பூக்கள், வியர்வை ஆகியவற்றின் மணம் கலந்து போயிருந்தது. எங்கும் இரைச்சல், இளம்பெண்களின் சிரிப்பிலிருந்து சிதறிக் கொண்டிருந்த உமிழ்நீரின் மணமோ இவை யனைத்தையும் மேவிக்கொண்டு அங்கே குழுமியிருந்த இளைஞர்களைப் போதை வசப்படுத்தும் மூர்க்கத்துடன் கூட்டத்தின் மேல் கவிந்திருந்தது. துரைமார்களின் வாழ்த்து மடல்களை கைகளில் தாங்கிய சிப்பாய்கள் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட பாதைகளில் டாக்குடாக் கென்று நடை போட்டுக்கொண்டிருந்தார்கள். சின்னச் சின்னழிராசுகளும், மிட்டாதார்களும், ஜமீன்தார்களும் தனியாகப் போடப்பட்டிருந்த இருக்கைகளில் முகமன் களைப் பெற்றுக்கொண்டு அளவளாவிக் கொண்டிருந் தார்கள். சாரங்கன் விழாவின் நாயகனாக அக்கினிக் குண்டத்தின் முன் அமர்ந்து சடங்குகளில் ஈடுபட்டிருந் தான். பரமசிவன் பிள்ளை இருபத்தெட்டு வருடங் களுக்கு முந்தின ஞாபகங்களோடு நண்பர்களுடன் கூடத் திரிந்தபடி அனைத்துக் காரியங்களிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருந்தார். சூழலின் வசீகரத்தில் ஒவ் வொருவரும் தத்தம் சொந்தக் கவலைகளை மறந்து
(
| சாரங்கனின் விருந்தினர் என்கிற ஒற்றை நினைப்பு
li l
மட்டும் மனதை ஆக்கிரமித்துக்கொள்ள வளைய வந்து கொண்டிருந்தார்கள், சாரங்கன் கமலத்தை முதல் தடவையாகப் பார்த்தது இந்தச் சந்தடியின் நடுவில்தான். அதாவது சதா பரபரத்து நகர்ந்துகொண்டேயிருந்த கூட்டத்தினிடையே தோன்றியும் மறைந்தும் அவன் கண்களை ஈர்த்த பெண்ணின் பெயர் கமலம் என்று அவன் காதுகளில் மந்திரகோஷங்களிடையே umr(Birm' சொன்னார்கள். தன் பார்வை செல்லும் திசையைக் கூடச் சரியாகச் சொல்லுமளவுக்குத் தன்னைக் கூர்ந்து கவனித்துக்கொண்டிருக்கும் நபர் யாரென்றறிய விரும்பி சாரங்கன் திரும்பிப் பார்த்தபோது அங்கே யாரையும் குறிப்பாக அவனால் அடையாளம் கான முடியவில்லை. ஆனால் கமலத்தை கண்கள் பார்த்த விநாடியில் காதுகள் அவள் பெயரைக் கேட்க நேர்ந்ததானது அவனைச் சற்றே அதிரச் செய்துவிட்டது. கூட்டத்தின் முன் திடீ ரென நிர்வாணப்படுத்தப்பட்டது போல அவன் உணர்ந் தான். ஒரு சில விநாடிகள்தான் என்றாலும் முன்னெப்போதும் உணர்ந்திராத வலியொன்றுக்கு முதன் முதலாக அவன் மனம் அனுபவப்பட்டது. சடங்குகளி னுள் வற்புறுத்தப்பட்டுக்கொண் டிருந்த அவன் மனம் அப் போதைக்கு அதற்குமேல் அந்த யோசனையில் ஈடுபடக் கூட வில்லை. மனை புகு விழா முடிந்து இரண்டு நாட்கள், அமர்க்களத்தால் தாறுமாறாகக் கிடந்த வீட்டை ஒழுங்குக்குக் கொண்டு வருவதிலும் புதிய பொருள்களை நிரப்பி அழகு படுத்துவதிலும் கெலமங்கலம் வீட்டிலிருந்த பொருள்களை புதிய வீட்டுக்கு மாற்றுவதிலும் தகப்பனும் மகனும் வெறெதை யும் பற்றிச் சிந்திக்க நேரமின்றிப் பொழுதைச் செலவிட்டுக் கொண்டிருந்தனர், இரண்டா வது பிள்ளையும் பெண்ணும் விழா முடிந்த அன்றே புறப் பட்டுப் போயிருந்தனர்)
இரண்டாம் நாள் இரவு சாரங்கன் படுக்கைக்குச் செல்லும் போது ஏனோ அவனுக்கு அழவேண்டும் போல இருந்தது. அவன் கண்களில் அவனையுமறியாமல் நீர் சுரந்து இறங்குவதைக் கண்டு அவன் ஆச்சரியப்பட்டான். அன்று நள்ளிரவில் பத்துப் பேர் சேர்ந்து தன் உடலை அழுத்திக்கொண்டிருப்பதைப் போன்ற பார உணர்வும் அறினுக்கு ஏற்பட்டது. அதன் பின் அவன் தூங்கவில்லை. மூன்றாம் நாள் காலையில் இருபத்திரண்டு வருடங்களில் முதல் தடவையாகத் தன் உடல் நெருப்பாய்ச் சுடுவதை பும்வாய் கசந்திருப்பதையும் உணர்ந்தான். அப்போது வந்திறங்கிக்கொண்டிருந்த மழையிலும் மனம் செல்ல
- வில்லை.வெஜிறுே, செல்ல வ்ேண்டுமென்ற எண்ணமே
வேப்பங்காயாகக் கசந்தது. என்னென்னவோ குழப்பமான நினைவுகளுடன் அப்படியே கிடந்தான். பகல் கனவுகளு டன் படுக்கையில் புரண்டு கொண்டிருப்பதன் சுகத்தை யும் சாரங்கன் அன்றுதான் முதல் தடவையாகத் தெரிந்து கொண்டான். மகனின் நடத்தை பிள்ளைக்குச்சங்கடத் தையும் ஆச்சரியத்தையும் கொடுத்திருந்தாலும் கேட்கும் தைரியம் அவருக்கு உண்டாகவில்லை. தன் பிரச்னை களைத் தானே தீர்த்துக்கொள்ளும் பக்குவம் சாரங்கனுக்கு உண்டு என்பதை அவர் அறிவார். அன்றையப் பொழுதை இருவருமே வலுக்கட்டாயமாக வரவழைத்துக்கொண்டி
தலசீடு 28 9 ஜனவரி-மார்ச் 2000 75
L JLQ JL IġbLDWWW.padippakam.Com
தனிமையில் கழித்து முடித்தார்கள். மூன்றாம் நாளிரவு முந்தைய இரண்டு நாட்களின் அசதியால் சாரங்கன் தன் அமைதியின்மைக்கு நடுவிலும் சற்றுத் தூங்கினான். நான்காம் நாள் புலர்வில் கண் விழித்த போது நிலைமை யில் சற்றும் மாற்றமில்லாதிருந்தது கண்டு அவன் உண் மையிலேயே பயந்து போய்விட்டான். எஜமானனின் அழைப்புக்காகக் காத்திருக்கும் நாய்க்குட்டி போல காய்ச்சலும் கலக்கமும் கண் விழித்ததும் அவன் மேலேறி உட்கார்ந்து கொண்டுவிட்டன. மேலும் முந்தைய தினம் மழையைப் பார்க்காமலே தவிர்த்துவிட்டம் சம்பவமும் அவன் மனக்கிலேசத்தை இரட்டிப்பாக்கியது. தான் தானாக இல்லை என்பது அவனுக்குத் தெரிந்தது. ஒரு நாளுமில்லாமல் தன்னுள் நிகழும் இந்த வினோதமான மாற்றம் நல்ல சகுனத்திற்கா கெட்ட சகுனத்திற்கா என்று தெரியாமல் யோசித்து மேலும் குழம்பினான். வீடு எங்கேயிருக்கிறதென்பதைத் தெரிந்துகொள்ளாதவன் வீட்டுக்குக்கொண்டு செல்லும் வழிகளிலேயே சுற்றிக் கொண்டிருப்பான் என்பார்கள், சாரங்கள் தன்னுள் என்ன இருந்து தன்னை என்ன செய்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள முடியாமல் அந்த வாதை கொடுத்துக் கொண்டிருந்த போதையிலேயே சுற்றிச்சுற்றி வந்து கொண்டிருந்தான். நான்காம் நாள் காலையில் அறையை விட்டு வெளியே வரும் வரைதான் அவனுடலில் பலம் இருந்தது. முகத்தைக் கழுவுவதற்காக முற்றத்துக்கு வந்த போது கண்கள் இருண்டு விட்டன. எதிர்கரையில் தூண்களின் மறைவில் இருட்டோடு இருட்டாக நிற்கும் உருவத்தை அவன் அதற்கு முன் பார்த்தான். அதை அடை யாளங்கண்டு கொண்ட கணத்தில் தன்னுள் ஒளிந்திருந்த இன்னொரு சாரங்கனையும் அவன் கண்டு கொண்டான். கமலம் என்று அவன் வாய் மிகப் பிரயாசையுடன் முணு முனுத்தது. அதை அவன் உச்சரித்த கணத்தில் மூன்று நாட்களாக அவனுள் பதுங்கிக் கொண்டிருந்த வலி முழு வீச்சோடு அவனை ஒரு முறை சுழற்றிடிடித்தது. சாரங்கன் தலை தரையில் மோத அப்படியே பின்புற மாகச் சாய்ந்துவிட்டான். அத்தோடு நிஜத்தையும் கற்பனையையும் பிரிக்கும் பிரக்ஞையின் மெல்லிய இழையையும் தவறவிட்டுவிட்டான். தன் உடல் தன் முயற்சியின்றியே பறந்துகொண்டிருப்பதாக அவனுக்குத் தோன்றியது. குளிர்ந்து இருண்ட ஒரு அறைக்குள் அது நுழைந்தது. சுவர்களில் இருட்டு கால வித்தியாசமிழந்த நிரந்தர வண்ணமாகப் பூசப்பட்டிருந்தது. சரவிளக்கு, சன்னல்கள், ஆளுயரக் கண்ணாடி, உயர்ந்த வாயிற்கதவு, மரப் பொம்மைகள், அலங்கரிக்கப்பட்ட கட்டில், நீர்க் குவளை ஆகியவற்றுடன் தாயின் உருவப்படமும் இருட் டுக்குள் மங்கலாகத் தெரிந்தன. பரிச்சயப்பட்டதாக அந்த இருட்டும் இடமும் தோன்றிய போதே அவனுக்குச் சற்றும் பரிச்சயப்படாதப் பட்டுப் புடவையின் வாசனை (அவன் தாயும் தமக்கையும் பட்டுப் புடவையை வெறுத் | தார்கள்) அந்தப் பொருள்களிலிருந்து எழுந்தது. பின் சாரங்கன் முலைப்பாலின் மணத்தை நுகர்ந்தான். பூக்க ளின் கதம்ப மணமாக அது மாறியது. தாம்பூலம் தரித்த உமிழ்நீரின் கிறக்கமூட்டும் மணமும் எழுந்தது. பின் வாசனைகள் ஒன்றாகத் திரண்ட போது அவனருகே கமலத்தை மீண்டும் அவன் கண்டான். அவனை அவன் நன்றாகப் பார்க்க முடிகிற வகையில் அவளின் முகம் | சுயமாகப் பிரகாசித்தது. அவள் அவனைக் கட்டிலில் வீழ்த்தி ஆடைகளைக் களைந்தாள். மீண்டும் அவனுன் துடித்துக்கொண்டிருந்த வலி அவனை அறைந்தது. அவள் அவன் உடல் மீது வழுக்கியபடி மேலும் கீழும் ஊர்த் தாள். பெண்ணுடலின் மேடுபள்ளங்களும் சமவெளி களும் சாரங்கனை மூச்சுத் திணறி ஸ்பரிசித்தன. முகத்தில் அடர்ந்து கிடந்த பலவீனத்தையும் ரோமத்தையும் விலக்கி கமலம் அவன் வாயில் முத்தமிட்டாள். சில்லிடும் அதன்
தாக்குதலின் வலி பொறுக்க மாட்டால் அவன் உடல் தடதடவென அதிர்ந்தது. பாம்பின் செந்நிற நாக்கு அவன் உதடுகளைப் பிளந்து உள் நாக்கைக் கவ்வுவதாக அவ ணுக்குத் தோன்றியது. சூழல் கமலத்தின் பேரழகில் | சிறைப்பட்டிருந்தது. ஒரு போதும் பார்த்தறியாத நிர்வா ணத்தின் பிரகாசம் அவனைக் கூசிப் போகச் செய்தது. கைகள் அதன் பரப்பில் ஊர்ந்த போது அவளுடலின் ஆச்சர்யப்படுத்தும் தட்பவெப்பத்துக்குள் சாரங்கன் அமிழ்ந்தான். முலைகளும் பிருஷ்ட மேடுகளும் நீராய்க் குளிர்ந்து கிடக்க, சுவாசமும் அடிநாபியும் நெருப்பாய்ச் சுட்டன. கழுத்து வளைவிலும் உள்ளங்கைகளிலும் கன்னங்களிலும் ஆசுவாசமளிக்கும் அதன் தண்மைக்குள் அவன் தன் முகத்தைப் புதைத்துக்கொண்டான். காலகால மாக சாவைக் காண முன்னும் புராதன வெறிக்குள் அவளுடலின் சீதோஷ்ணம் அவளை உந்தித் தள்ளியது. சாரங்கனும் அந்த பேரழகுப் பேயின் பசிக்கு இரையாவ தையே விரும்பினான். அது மட்டும் அப்படியாகியிருந் தர்ல் பாரமகால் வட்ட்ாரம்புல வருடங்களுக்கு முன் தன் யுகாந்திரத் த்ன்னிமேயை ஜ்ெறுத்துப் பெய்த மழையின் கோரத்தாண்டவத்தை மீண்டும் ஒரு முறை சந்தித்திருக் கும். அது பழைய அழிவிலிருந்தே தன்னை முழுவதுமாக மீட்டுக்கொண்டிருக்கவில்லை. பல வளர்களையும் உயிர் களையும் காவு கொள்ளும் கொலையாளியாக மீண்டும் தன்னைக் காண்பித்துக்கொள்ள மழைக்கும் விருப்ப மில்லை. புதையல் தோண்டியெடுத்த தரித்திரனின் ஜாக்கிரதையுணர்வு அதற்கிருந்தது. தன் கையிலிருந்த அதிர்ஷ்டத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் தந்திரத்தை யும் அது அறிந்திருந்தது. எனவே சாரங்கனை, அவன் கமலத்துடன் ஏற்படுத்திக் கொண்டிருந்த தனிமையை, மழை தகர்த்தது. சாரங்கன் விரும்பியபடி கமலத்தின் ஆகர்ஷ்ணத்துக்குள் தன்னைக் கரைத்துக் கொண்டு விட முடியாதபடி மழையின் நேர்பார்விையில் முளை யடித்து நிறுத்தப்பட்டிருந்தான். அது அவனை உற்றுப் பார்த்துக்கொண்டிருப்பதையும் உணர்ந்தான். உணர்ந்த தும் அவனுடல் குளிர்ந்து விரைத்துக்கொண்டு விட்டது. மேனியைத் தகடாய் இளக்கும் வெப்பம் வடிந்துவிட்டது. தன் நிர்வாணத்தை மழையின் விழிகளால் தானே பார்த்துக்கொண்டிருப்பதாக அவனுக்குத் தோன்றிய போது வெட்கத்தால் அவன் ஆண்மை கூசிப் போய்விட் டது.தன்னைப் பின்னிப் படர்ந்துகொண்டிருந்த கமலத்தைப் பிடுங்கி அப்பால் எறிந்தான். ஆடைகளிற்றிருப்பதை லட்சியம் செய்யாமல் கட்டிலை விட்டுக் கீழிறங்கி வாசலை நோக்கி ஓடினான். தன்னைக் கேலி செய்யும் வழிகளைக் கண்டுபிடித்து விடும் வெறியுடனும் தந்திரத் துடனும் அறைக்கதவை விரியத் திறந்தான். அறைக்கு வெளியே காலகாலமாய் தொடர்ந்து கொண்டேயிருக்கும் அந்தப் பார்வையின் புனைவே தான் என்பதைச் சாரங் கன் தெரிந்துகொண்ட கணத்தில் கட்டிலின் மேல் அந்த அழகி காணாமல் போயிருந்தாள். அடுத்த கணத்தில் அவன் முற்றிலுமாக விழித்துக்கொண்டுவிட்டான். மீண்
டும் பழைய சாரங்கனாகிவிட்டான்.
மீன் சொத்து பறிமுதல் விஷயமாக சீமை அதிகாரி ன் நடமாட்டம் உத்தனபள்ளியில் அதிகமாகத் தொடங் கிய காலக் கட்டத்தில்தான் கமலம் பிரபலமானாள். அப்போது அவளுக்கு வயது இருபத்தொன்று. அவள் தாய் ராயக்கோட்டை மிராக அவளுக்கு தானமாகக் கொடுத்திருந்த, உத்தனபள்ளியிலிருந்த வீட்டையும் கொஞ்சம் நிலபுலன்களையும் கமலம் தன்னை ஸ்திரப் படுத்திக் கொள்ளும் மட்டும் அனுபவிப்பதற்காக விட்டுச் சென்றிருந்தாள். சொற்பச் சொத்தேயானாலும் கமலம் சமாளித்து விடுவாளென்பது அவளுக்குத் தெரியும். கமலம் அழகி. அப்படிச் சாதாரணமாகச் சொல்லி விட்டுவிட முடியாது. எந்தக் கொம்பனான ஆண்மகனை
76 அலசீடு 28 9 ஜனவரி-மார்ச் 2000
படிப்பகம்கள். ஆனால் அதெல்லாம் பின்பு, அதாவது 'சீமைக்காரன்
WWW.padippakam.Com
யும் தாழ்வுணர்ச்சி கொள்ளச் செய்யுமளவுக்கு வலிமை வாய்ந்தது அந்த அழகு. செக்கச்செவேலென்று சிவந்த அவள் உடல் அது வெளிப்பட்டுப் பிரகாசிக்கும் இடங் களிலெல்லாம் ஆரோக்கியமான குருதியோட்டத்தைப் பறை சாற்றியபடியிருந்தது. பெரிய கரிய, எப்போதும் கண்ணிருக்குள் மிதந்துகொண்டிருக்கும் விழிகள், சிறிய ஆனால் தீர்க்கமான, பின்னும் சிவந்த நாசி, உதடு மற்றும் காது மடல்கள். செம்பழுப்பு நிறக் கூந்தல். குதிரையினுடையதைப் போல நீண்ட கால்களையும் பாம்பினுடையதைப் போன்ற நீண்ட நாக்கையும் கமலம் பெற்றிருந்தாள். அவள் உயரம் ஆண்மைக்குச் சாவல் விடும் இன்னொரு அம்சமாக பின்னாளில் பிரசித்தி பெற்றது. வயதையும் தேவையையும் அறிந்தே பூத்தவை போல அற்புதமான வடிவமைப்புக்கொண்ட முலைகளை யும் அவள் பெற்றிருந்தாள். பார்த்த மாத்திரத்தில் ஆக வாசமளிக்கும் மிதமான நாபி, அவள் அழகு பார்த்து ரசிக்கும் ஸ்தூலத்தன்மை குறையக்கொண்டு, உணர்ந்து அனுபவிக்கும் குணரூபத் தன்மை நிறையக்கொண்டிருப் பது என்பார்கள். ஒவ்வொரு அவயவத்தின் தனித்தனி அழகையும் சிதறவிட்டுவிடாமல் சரியான வளைவுகளில் இழைத்துச் செதுக்கி கமலத்தை ஒரு அப்பழுக்கற்ற சிற்பமாக உருவாக்கியிருந்ததனாலேயே பருவம் தன் வெற்றியை உரக்க அறிவித்துக்கொண்டிருந்தது. அவள் ஒரு அலங்காரப் பிரியை. ஆடைகளை முன்னிருத்தி நிர்வாணத்தை ஊகிக்க வைக்கும் அழகுக் கலையை அறிந்தவள். அதை அவள் தாய் அறிந்ததில்லை. அவளுக் குள் இயல்பாகவே முகிழ்த்திருந்த ரசனையுணர்வின் வெளிப்பாடாக அது இருந்தது. கமலத்தின் உடலில் ஒட்டிக் கொண்டிருக்கும் 'ஆடைகளையும் ஆபரணங்களையும் பார்த்தவர்கள் அவை பஞ்சாகவும் தங்கமாகவும் இருந்த போதே அவளுடைய பெயர் பொறிக்கப்பட்டவையாக இருந்திருக்குமென்று சொல்லி சிலாகித்துக் கொண்டார்
கமலத்தை 'கண்டுபிடித்ததற்குப் பின்பு". அதற்கு முன் கமலம் உத்தனபள்ளியில் சாதாரண மனுஷியாக, மற்றவர் களைப் போலத்தான் நடமாடிக்கொண்டிருந்தாள். அவள் அழகு, பேசிப் பரப்ப ஆளின்றி, காட்டில் நிலவாக விணே காய்ந்துகொண்டிருந்தது. அப்படியொரு அழகி தங்களி டையே இருக்கிறாள் என்கிற பிரக்ஞையே ஊர்க்காரர் களுக்கு ஏற்படவில்லை. தாய் போன பிறகு கமலம் தனி யாகத்தான் இருந்தாள். தனிமை அவளை அச்சுறுத்த வில்லை. தன் அழகின் மேல் அவளுக்கு நம்பிக்கை இருந் தது. அந்த நெருப்பைக்கொண்டு ஊரையே பொசுக்கிவிட முடியுமென்பது அவளுக்குத் தெரியும். அந்த நம்பிக்கை யும் கர்வமும் அவளுக்குள் அவளை அலட்சியப்படுத்திக் கொண்டிருந்த பெரிய மனிதர்களின் மேல் கேலியையும்
வன்மத்தையும் வளர்த்துவிட்டிருந்தது. அவள் சரியான நேரத்தை எதிர்பார்த்து ரொம்ப நாட்கள் பொறுமை யோடு காத்துக்கொண்டிருந்தாள். அவள் அழகும் அதன் பதத்தில் நன்கு கனிந்து திரண்டுகொண்டிருந்தது. உத்தன பள்ளி ஜமீன் ஜrகைக்கு வந்த ஜில்லா கலெக்டர் வடிவத் தில் அவள் எதிர்பார்த்துக்கொண்டிருந்த நேரம் அவளை வந்தடைந்த போது அவள் அதை மிகச் சரியாக பயன் படுத்திக்கொண்டுவிட்டாள். கடைத் தெருவில் பாதசாரி களில் ஒருத்தியாக அவளை அந்த ஆங்கிலேயர் மோட் டார் வாகனத்தில் கடந்து செல்ல இருந்த போது அவள் சிரிப்பில் சிக்கிக்கொண்டு அது ஓடாமல் நின்றுவிட்டது. அவர் தான் வந்த வேலையை ஒத்திப் போட்டுவிட்டு வேறொரு கூண்டு வண்டியைப் பிடித்துக்கொண்டு தன் அலுவலகத்துக்குத் திரும்பிவிட்டார், திரும்பியவர் அன்று வேறெந்த வேலையையும் செய்யவில்லை. கோப்பு களில் கையெழுத்திடவில்லை. அன்று இரவு மலர்ச் செண்டுகளுக்கும் பிரமாதமான ஆனால் ரகசியமான விருந்தொன்றுக்கும் ஏற்பாடு செய்யும்படி கீழ்நிலை அதிகாரிகளுக்கு உத்திரவிட்டார். உத்தனபள்ளி கடைத் தெருவில் ஒரு பெண்ணின் முன் தன்னைக் காலை வாரி விட்டுவிட்ட தன் வாகனத்தை அவர் பின்னெப்போதும் திரும்ப எடுத்துக் கொள்ளவேயில்லை. அந்த ஒரே இரவில் கமலத்தின் பெயர் ஜில்லா முழுவதும் பரவிவிட்டது. அவள் கீர்த்தி போய் முட்டிப் பிளந்த கூரையின் வழியே செல்வம் பொத்துக்கொண்டு கொட்டியது. கமலமே எதிர்பாராத உயரத்திற்கு அதிர்ஷ்டம் அவளைத் தூக்கிச் சென்றது. இதற்குப் பின்புதான் உள்ளூர்க்காரர்கள் கமலத்தின் அருமையை உணர ஆரம்பித்தார்கள். ஆனால் அப்போது காலம் கடந்து, போய்விட்டிருந்தது. ராயக் கோட்டையிலிருந்து அவள் தன் ஊருக்கு கலெக்டரால் பரிசளிக்கப்பட்ட மோட்டார் காரில் வந்திறங்கிய போது சாமானியர்களுக்கு எட்டாக் கணியாக ஆகிவிட்டிருந் தாள். அவள் சிரிப்பு முன்பு கடைத்தெருவில் அவள் இருப்பை பொருட்படுத்தாமல் கடந்து போய்க்கொண் டிருந்த ஏராளமான ஆண்மக்களின் நிரந்தர கனவாகப் போயிருந்தது. கைக்கு எட்டும் தூரத்தில் கமலம் நடமாடிக் கொண்டிருந்த நாட்களை நினைத்து மனைவிகளுக்குத் தெரியாமல் பல கணவன்மார்கள் ஏங்கிச் செத்தார்கள். ஊர் அவளைப் பார்க்கும் பார்வையே மாறிப் போய்விட் டது. கமலம் அப்படியேதானிருந்தாள். ஊராரின் மேல் வாஞ்சையும் தன்னை முன்பு கண்டு கொள்ளாமலிருந்த கிழட்டு ஜமீன்தார்களின் மேல் வன்மமும் அவளுக்குள் எப்போதுமே கனன்று கொண்டுதாணிருந்தது. பணமும் பெயரும் வந்த பின்னால் கமலம் சாத்தியப்படும் | போதெல்லாம் சாத்தியப்படும் வழிகளிலெல்லாம் ஆண் களைச் சீண்டிவிட்டு வேடிக்கைப் பார்ப்பதை வழக்க
தசைடு 28 6 ஜனவரி-மார்ச் 2000 77
L JILQL IL IġbLDWWW.padippakam.Com
மாக்கிக் கொண்டுவிட்டாள். வெள்ளைக்காரனுடன்
விருந்துண்டு விட்டு வந்த பிறகு வேறெந்த உள்ளூர்
மிட்டாதாரின் அழைப்பின் பேரிலும் அவர்களுடைய இடத்துக்கு போவதைப் பிடிவாதமாக நிராகரித்தாள். ஒருபுறம் கமலம் தேவைப்படும் எந்தக் கொம்பனும் - அவன் எத்தனைப் பெரிய ஆளாக இருந்தாலும் - மேல் துண்டை எடுத்துவிட்டு அவள் வீட்டு வாசலில் போய்க் காத்துக் கிடக்க வேண்டியிருந்தது. இதனால் ஏற்படும் மனத்தாபங்களையெல்லாம் தன் அழகால் அனாயாச மாக அவள் சமாளித்தாள். மறுபுறம் ஊரில் எந்த வீட்டில் விசேஷமென்றாலும் அழையா விருந்தாளியாக முதலில் போய் நின்றாள். அது வேறொருவிதமான விளையாட்டு. கமலத்தைப் பார்த்தவுடனேயே கல்யாணமான பெண் களின் முகங்கள் பயத்தில் கறுத்துப் போய் விடுவது வழக்கம். மாறாக ஆண்களுடைய அசைவுகள் துல்லியப் படுவதும், பார்வை கூர்மையடைவதும் தவறாமல் நடக் கும் வைபவச் சூழலுக்குள் கமலம் பிரவேசிக்கும் போது பெண்கள் தங்கள் அரட்டைகளை நிறுத்திவிட்டு புருஷன் களைத் தேடி விரைவதும், ஆண்கள் கமலத்தை ரசிக்கும் பொருட்டு மனைவிகளைத் தவிர்க்க தூண் மறைவுகளைத் தேடி விரைவதுமான விளையாட்டு துவங்கிவிடும். கமலம் இதையெல்லாம் தாய் தன் பிள்ளைகளுடன் விளையாடு வதைப் போல பரிவுடனும் சந்தோஷத்துடனும் அணு பவித்துக்கொண்டிருந்தாள். அவளுக்கு வேண்டியவர்கள் வேண்டாதவர்கள் கிடையாது. அவளை அழைக்கும் குரல்கள் கிடையாது என்பதைப் போலவே அழைக்காத மனங்களும் கிடையாது. அவர்களுக்கும் ஒருவேளை இந்த விளையாட்டு பிடித்திருக்கக்கூடும். இத்தனைக்கும் கமலம் பொது இடங்களில் யாரையும் நிமிர்ந்து பார்ப்ப தில்லை. தன்னை வேண்டிய மட்டும் ரசிக்க ஆண் | பிள்ளைகளுக்கு அவள் கொடுக்கும் சுதந்திரம் அது. அதே சமயம் எல்லோரையும் பார்த்துச் சிரித்துத் தன் அழகை மலினப்படுத்திக்கொண்டு விடாதிருக்க அவள் கைக் கொண்ட தந்திரமும் கூட. கமலத்தைக் கண்டு பெண் களும் பயந்தார்களே தவிர வெறுக்கவில்லை. கமலம் அந்த ஊரின் நல்லடையாளம் என்பது அவர்களுக்கும் தெரியும், ஏனென்றால் அவள் நித்திய சுமங்கலி, மேலும் கமலத்தின் அழகுதான் ஊருக்குள் சாரட்டு வண்டிகளுடன் மோட் டார் வாகனங்களும் போய்வரும் பெரிய சாலைகளை அமைத்துக் கொடுத்தது. தங்கம் விற்கும் கடைகளை உருவாக்கிக் கொடுத்தது. கமலம் பிரபலமான பிறகு அவளுடைய ஊரைச் சுற்றியிருந்த வேறு பல சிற்றூர்களி லும் புதிய சந்தைகள் தோன்றலாயின. உத்தனபள்ளி பெண்களுக்கு சீக்கிரமே திருமணக் கொடுப்பினை சித்தித்தது. (அநேகம் பேர் வீட்டோடு மாப்பிள்ளையாக உத்தனபள்ளியிலேயே தங்கிவிட்டிருந்தார்கள்)
குழந்தைகளுக்குச் சொல்ல அற்புதமான கதைகள் கமலத்தின் அசைவுகளிலிருந்து உதிர்ந்து பரவிப் பிரசித்தி பெற்றன. அவளோவெனில் ஊர் விசேஷங்களில் பங்கு கொள்ளும்போது தன் அழகையும் செல்வாக்கையும் மறந்த சாதாரண கமலமாய், சுழற்றிவிடப்பட்ட பம்பரமாய்ச் சுழன்று காரியங்களைத் தன் வசப்படுத்திச் செய்து முடித்துக் கொண்டிருந்தாள். கடைசி அதிதியும் கடைசிப் பிச்சைக்காரனும் அகலும் மட்டும் இருந்து உபசரித்து விட்டு ஒரு வாய் தண்ணீர் கூட எடுத்துக்கொள்ளாமல் தாம்பூலத்தை மட்டும் பெற்றுக்கொண்டு, சிரிப்பை வீட்டினுள் நிறைத்துவிட்டு விடை சொல்லியனுப்பாமலேயே விரோதம் எதுவுமின்றி திரும்பிப் போனாள்.
பணம் உள்பட பொக்கை விழும் இடங்களிலெல்லாம் கேட்காமலேயே அடைத்துக் கொடுத்தாள். கமலம் தன் சிரிப்பால் கலெக்டர் துரையின் காரை நிறுத்தி வைத்த சம்பவத்திலிருந்து ஊர் அவள் மந்திர வித்தைகள் தெரிந்த்
78 ୫୩୪oହିଁ?) {5 28
6 ஜனவரி - மார்ச் 2000
வளென்று நம்பத் துவங்கியிருந்தது. (“எவ்வளவு ரகசியமாகச் செய்தாலும் சாந்தி முகூர்த்த அறையினுள் கமலத்தின் வாசனையும், காலடித் தடங்களும் பதிந்திருக்கின் றன. எவ்வளவு தொலைவாக இருந்தாலும், கர்ப்பிணிப் பெண்கள் வலியின் போது கமலத்தின் சிரிப்பைத் தெளி வாகக் கேட்கிறார்கள். கமலத்தின் தந்திரங்கள் ஊகிக்க முடியாத அளவுக்கு புதிர்த் தன்மை கொண்டவை.") எனவேதான் பிடிவாதக்காரியான கமலம் சாரங்கன் பொருட்டுத் தன் நிலையிலிருந்து இறங்கி வந்த சம்பவம் ஊர்க்காரர்களை ஆச்சரியப்படுத்தவில்லை. ஊராரின் ஊகங்கள் பொய்யோ மெய்யோ, ஆனால் ஒசூர் ராம நாயக்கன் ஏரிக்கரையில் கட்டப்பட்டிருந்த, வியப்பூட்டும் அழகிய வீட்டின் மனை புகு விழாவில் அவள் முதல் தடவையாக சாரங்கனைப் பார்த்த கணத்திலேயே அவனை வெகுவிரைவில் மீண்டும் தனிமையில் சந்திக்கப் போகிறோம் என்பதைத் தெரிந்துகொண்டு விட்டாள். சடங்குத் தீயின் வெளிச்சத்தில் ஜொலித்த அவனுடைய கரிய வண்ணமும் மார்பின் விசாலமும் திண்மையும் அவளுடைய பக்குவப்பட்ட மனதையே சற்றுத் தடுமாற வைத்துவிட்டன. பதினைந்து நாட்களுக்குப் பின் அவனு டைய தந்தை என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட முதியவர், நீர் சம்பந்தப்பட்ட எந்த வியாதியும் அண்ட முடியாத, மழையின் நண்பனான தன் மகன் கமலத்தின் நனைவில் நனைந்து காய்ச்சலில் விழுந்துவிட்டானென்று கூறிக்கொண்டு அவள் வீட்டு வாசலில் வெட்கமும் பயமும் உடலைக் கூசச் செய்ய வந்து நின்றபோது அவரை வெகு நேரம் காக்க வைக்காமல் கமலம் உடனே அவருடன் சாரங்கனைப் பார்க்கக் கிளம்பிவிட்டாள். பிரமாதமான மனக்கோட்டைகள் கட்டுமளவுக்கு ஆண்களைச் சந்திக் கும் அனுபவம் அவளுக்கு முதல் தடவையல்லவென்றா லும் சாரங்கனின் உருவத்தை அவள் தன் மனக்கண்களில் திரும்பக் கண்டபோது அது அவளுக்குள் சிருங்கார உணர்வுகளைக் கிளர்த்தத்தான் செய்தது. அவனுடன் பகிர்ந்துகொள்ள இருக்கும் கணங்கள் பிற்காலத்தில் தன் தனிமையைப் போக்கும் நினைவுத் தூண்களாய் மூப்பின் பாரத்தை ஏற்கும் என்று அவள் நம்பினாள். ஆனால் மழை அப்போது ஏற்படுத்தியிருந்த மந்தகாசமான சூழலின் பின்னணியில் வியாதிப் படுக்கையில் சாரங்கனைக் கண்ட போது அவளுடைய சிருங்கார கற்பனைகள் தகர்ந்து போய்விட்டன. பதினைந்து தினங்களுக்கு முன் அதே இடத்தில் வேறொரு சூழலில் கண்ட ஆஜானுபாகுவான இளைஞன் இல்லை அங்கே படுத்திருந்தது. காதல் ஒரு மனிதனை அவ்வளவு தூரம் சக்கையாய்ப் பிழிந்து துப்பி விடுமென்பதை கமலத்தால் நம்ப முடியவில்லை. சாரங்கனின் வாய் அவள் பெயரை விடாமல் பிதற்றிக் கொண்டிருந்ததைக் கேட்டபோது வாழ்வில் முதன்முறை யாக அவள் தன் அழகையெண்ணித் தாங்கொணாத அரு வருப்பும் கோபமும் கொண்டாள். கட்டில்மேல் அவன ருகே அமர்ந்தாள். ஆதூரத்துடன் அவனை வருடினாள். வியாதியின் புழுக்கத்தில் வியர்த்து உடலோடு ஒட்டி துர்மணம் வீசிக் கொண்டிருந்த அவன் ஆடைகளை முற்றிலுமாகக் களைந்து அவனை நிர்வாணமாக்கினாள். அத்தனை காய்ச்சலிலும் கட்டுவிடாத சாரங்கனின் திண்ணிய மார்பு மீண்டும் அவள் கண்களின் முன்புடைத்து எழும்பியது. அவளின் பரிவு மணம் வீசும் காமமாக வளர்ந்தது. அடர்ந்து புதராக வளர்ந்திருந்த தாடியை விலக்கி வாயில் முத்தமிட்டாள். அப்போது சாரங்கன்
விழித்துக்கொண்டான். இருளினூடே
ளங்காணும் முகமாக அவளை உற்றுப் பார்த்தான். ஆனால் அதற்கு முன்பே அவளை அவன் உணர்ந்து கொண்டிருந்தான். எவ்வித ஆச்சரியமும் இன்றி அவளைப் பார்த்துச் சிரித்தான். ஆனால் பேதலிப்பிலிருந்து முற்றிலு மாக விடுபடவில்லை. சந்தோஷத்திலும் அவநம்பிக்கை
aaaaat al -S<!-EST SSSIL-Lrr
ш19llшағырWww.padippakam.Com
யிலும் அவன் மூச்சுத் தாறுமாறாக வெளிப்படத் துவங்கி யது. கமலம் தானும் தன் உடைகளைக் களைந்துவிட்டு அவனைத் தன் நிர்வாணத்தால் போர்த்தி ஆசுவாசப் படுத்த முயற்சித்தாள். அவ்ர்களிருவரும் பேசிக் கொள்ள வில்லை. ஆனால் பகிர்ந்துகொள்ள நிறைய விஷயங்கள் கணத்துக்கு நூறாகப் பெருகிக்கொண்டிருந்தன. அவற்றை எப்படிச் சொல்ல வேண்டுமென்பதும் அவளுக்குத் தெரிந்தேயிருந்தது. அவள் சாரங்கனின் உடலுடன் தன் உடல் நன்கு ப்ொருந்தும் வண்ணம் நம்ப முடியாத கோணங்களில் வளைந்து முயங்கினாள். சாகப் போகிறவ னின் கடைசிப் பிரயத்தனத்தோடு சாரங்கனும் தன் நடுங்கும் கரங்களால் அவளை அணைத்துக்கொண்ட போது அத்தனை பலவீனத்துக்கிடையிலும் அவனுடைய உடல், அவளுக்குப் புதிய அனுபவத்தைத் தந்தது. துவக்க நிமிடங்களில் இருவரும் விலங்குகளைப் போல் கட்டிலில் புரண்டார்கள். அவள் வேறெந்த உடலுடன் பழகிய தருணத்திலும் அத்தனை உறுதியையும், இடைவிடாத பொழிவையும், எதிரியைத் தாக்கும் மூர்க்கத்தையும் உணர்ந்ததில்லை. நேரம் ஆக ஆக சாரங்கனின் ஆகிருதிக் குள் கமலம்தான் அகப்பட்டுக் கொண்டுவிட்டாள். நிர்வாணத்தின் தகிப்பு சாரங்கனுக்குள் புதிய வலுவை ஏற்றிக்கொண்டிருப்பது அவளுக்குத் தெரிந்தது. அவளால் அதன் உக்கிரத்தை - ஆச்சரியப்படும் வண்ணம் - தாங்கத் தான் முடியவில்லை. அவள் அழகின் ஆழம் முழுவதும் தன் ரகசியங்களை இழந்து மலர்ந்துவிட்டது. நாணம் அவளைப் பிடுங்கித் தின்றது. எத்தனையோ வருடங் களாக அவள் அனுபவித்திராத உணர்வு அது ஆண்களை அவமானப்படுத்தும் தன் அழகும் தேர்ச்சியும் புத்தம் புதியவனான, தன்னைவிடச் சிறிய, 'ஒரு நோயாளியிடம் தோற்றுத் தரைமட்டமாகிக்கொண்டிருப்பதை நினைத்து அதிர்ந்து போனாள். அதைச் சொல்லிப் புலம்புவதாக நினைத்துக்கொண்டு சாரங்கனின் காதுகளில் எதையெல் லாமோ பிதற்றினாள். சாரங்கனோ மிகமிக மெளனமாக கமலத்தின் மேல் இயங்கிக்கொண்டிருந்தான். அவன் கண்கள் மீண்டும் மூடிக்கொண்டிருந்தன. விழித்தாலோ பேசினாலோ தன் கனவு கலைந்து விடுமென்று கிலி கொண்டவனைப் போல அவளைத் தன் பிடிக்குள் இறுக்கித் தன் உடலோடு ஒட்டவைத்துக் கொண்டிருந் தான். கமலத்தின் உதடுகளும், முலைகளும், பெண்மையும் விடுபடும் விருப்பமின்றித் திணறின. இருவரில் ஒருவர் சாகப் போவது உறுதியென்று அவள் நினைத்துக்கொண் டாள். சாரங்கனின் உடல் மழையின் சூழ்ச்சியால் திடீ ரென்று தொய்வடைந்தபோதுகூட அனுபவமின்மையே அதற்குக் காரணம் என்று அவள் நம்பியதால் உடல் குளிர்ந்து விரைக்கத் துவங்கிய ஆரம்ப கணங்களில் தன் பங்கைச் செவ்வனே செய்ய எண்ணி அவனை மேலும் அனைத்துக்கொள்ள முயன்றாள். துவளத் துவங்கிய கைகளை வாங்கித் தன் பிருஷ்ட மேடுகளைத் தாங்கிப் பிடிக்கும் வண்ணம் படுக்கையினிடையில் சொருகினாள். ஆனால் அப்போது சாரங்கன் உடல் பலமாக குலுங்கவும் துவங்கியிருந்தது. கமலத்தால் மேற்கொண்டு செயல்பட முடியவில்லை. அவன் அவள் முகத்தைத் தன்னிடமிருந்து பிரித்துத் தூரத் தள்ளுவானென்றும் எதிர்பார்க்கவில்லை. பெருங்கூட்டத்தின் முன் அதே கோலத்தில் தூக்கி எறியப் பட்டு விட்டதைப் போல அவள் அவமானத்தால் கூசிப் போய்விட்டாள். அதற்கு மேல் சாரங்கன் அடுத்துச் செய்த காரியம் அவளைப் பீதியின் எல்லை வரை கொண்டு சென்றுவிட்டது. அறையை நிறைத்திருந்த அந்தரங்கச் சூழலை சற்றும் லட்சியம் செய்யாமல் சாரங்கன் திடீரென்று எழுந்துபோய் அறைக்கதவை விரியத் திறப்பதைப் பார்த்த தும் கமலம் நடுங்கிப் போய்விட்டாள். பதற்றத்துடன் கட்டிலிலிருந்து பாய்ந்து இறங்கி அவிழ்த்துப் போட்டி ருந்த உடைகளை வாரி எடுத்துக்கொண்டு மறைவிடம்
தலசீம் 28, 9 ஜனவரி-மார்ச் 2000
79WWW.padippakam.Com
நோக்கிப் பாய்ந்தாள். அவற்றை அவசர அவசரமாக அணிந்துகொண்டு வெளியே வந்தபோது சாரங்கன் அறை முழுக்க எதையோ தேடுகிற பாவனையில், தனக்குள் முணுமுணுத்தபடி, முழங்காலிட்டு ஊர்ந்துகொண்டிருந் தான். அதற்கு மேல் அவன் தன்னிடம் திரும்புவான் என்று கமலத்தால் காத்திருக்க முடியவில்லை. அறைக்குள் கனிந்து கொண்டிருந்த அந்தரங்கம் சிதறிப் போய் விட்டிருந்தது. அறையின் இளக்கமும் குளிர்ந்து இறுகிப்போய் விட்டி ருந்தது. திடீரென்று இருவருமே உடல் பற்றிய பிரக் ஞையே அரும்பியிராத சிறு குழந்தைகளாக அவரவர் உலகத்தில் ஆளுக்கொரு விளையாட்டை விளையாடிக் கொண்டிருப்பதாக அவளுக்குத் தோன்றியது. அவ்வளவு சிறுபிள்ளைத்தனமாகத் தான் சம்பந்தப்படும் ஒரு நிகழ்வு சிறுத்துக்கொண்டு வருவதை அவளுடைய கர்வம் ஒத்துக் கொள்ள மறுத்தது. அவள் மெளனமாக அறையைவிட்டு வெளியேறினாள். பிறகு கமலம் சாரங்கனை எப்போதுமே பார்க்கவில்லை. ஆனால் பார்ப்போமென்று நினைத்துக் கொண்டிருந்தாள். பரமசிவம் பிள்ளை அவள் முன் எதிர் பட்ட போது, சாரங்கனின் காய்ச்சல் இனி மெதுமெது வாக குணமாகிவிடுமென்றும், தான் நிச்சயமாக மீண்டும் ஒருமுறை அவனைப் பார்க்க வருவதாகவும் கூறிவிட்டு தன் இருப்பிடம் திரும்பினாள். சாரங்கனின் திடீர் மாறுதல் மேலன்றி சாரங்கன் மேல் அவளுக்கு வெறுப்போ பயமோ உண்டாகியிருக்கவில்லை, சாவதானமாக, நிகழ்ந்த வற்றை அசைபோட்டபோதுகூட சாரங்கனின் அணைப் பில் வலுவும் கதகதப்பும் அவளுடைலை நெகிழத்தான் செய்தது. அவனை நினைக்கும் போதெல்லாம் பரிவும் சந்தோஷமுமே அவளுக்குள் மேலோங்கி நின்றன. பல நாள் பசித்தவனின் தொண்டைக்கு விருந்தே விஷம் என்பதுபோல தன் திடீர் பிரவேசத்தை சாரங்கனின் பலவீனப்பட்டிருந்த உடல் நிலையும் பக்குவப்பட்டிராத மனநிலையும் ஜீரணித்துக் கொள்ள முடியாமல் போனதே அவனுடைய வினோதமான நடவடிக்கைக்கு காரணம் என்று அவள் நம்பினாள். "சிறுவன்!” எனவே உண்மையி லேயே அவள் மீண்டும் ஒருமுறை சாரங்கனைப் பார்க்கப் போக வேண்டுமென்றுதான் மனமாற விரும்பிக்கொண்டி ருந்தாள். அதற்கான சந்தர்ப்பத்தையும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனால் அந்தச் சந்தர்ப்பம் பிறகு அவ ளுக்குக் கிடைக்கவேயில்லை. அவளுடைய வாழ்க்கைப் பேராறு அவளால் கட்டுப்படுத்த முடியாத வேகத்தில் சுழன்றோடிச் சென்றது. சாரங்கனை சந்தித்த பிறகு கமலம் அந்த ஊரில் ரொம்ப நாள் இருக்கவில்லை. ஆனேகல் மிராசு தன்னுடனேயே நிரந்தரமாக தங்கிவிட அவளை விரும்பி அழைத்தபோது மறைந்த தன் தாயின் அறிவுரைப்படியும் வழக்கப்படியும் அவள் அவருடன் ஆனேகல் சென்றுவிட்டாள். அவள் குடிபெயர்ந்த நாளில் ஊரே சென்று அவளை வழியனுப்பி வைத்தது. அந்த ஊரை மறக்காதிருக்கும்படி ஊரார் அவளைக் கேட்டுக் கொண்டார்கள், கமலம் அதைக் காப்பாற்றினாளோ இல்லையோ, ஆனால் தன் வாழ்க்கையில் ஒரே ஒருமுறை உடல் வேட்கையைத் தாண்டி மலர்ந்த காதலுணர்வை கொஞ்ச நாட்களிலேயே மறந்துவிட்டாள். ஆனேகல் மிராசு அவளுக்கு வேறு நினைப்பே எழாதபடி அவளை எந்த நேரத்திலும் அண்டியிருந்தார். ராணி போல அவளைக் கவனித்துக்கொண்டார். தனி வீடும், ஏவலாட்களும் அமைத்துக் கொடுத்தார். கமலமும் உத்தனபள்ளியில் இருந்ததைப்போல இல்லாமல் வெளியார் கண்களுக்கு அபூர்வமாகவே தட்டுப்படும் அதிசயப் பொருளாகத் தன்னை ஆக்கிக்கொண்டுவிட்டாள். மிராசுவின் மனைவி பிள்ளைகள் உட்பட அனைவரிடமும் அவளுக்கு நட்பும் செல்வாக்கும் இருந்தன. அங்கும் அவளைப் பற்றின கதைகள் பஞ்சமில்லாமல் வளர்ந்தன. யாரும் கண்ணெ டுத்துப் பார்க்கப் பயப்படும் ஸ்தானத்தில் இருந்தாலும்
அவளுடலின் ஒளியும் தகிப்பும் மணமும் அவள் இருப்பை ஊராரின் மத்தியில் சதா அறிவித்தபடியே தானிருந்தன. கமலம், கீதைகளின் ராணி, தன் முன் குவிக்கப்பட்டிருந்த திகட்டாத அதிர்ஷ்டக் குவியலுக்குள் தன்னை அனுபவிக் காமலே தவறவிட்டுவிட்ட ஒரு வினோதமான காதலனைப் பற்றின ஞாபகங்களைப் புதைத்து வைத்துவிட்டாள்.
ஆறு வருடங்களுக்குப் பிறகு மிராசு மூலமாக ஒரு பெண் வாரிசையும் அவள் பெற்றுக் கொண்டாள். சிந்தா மணி என்று அவளுக்குப் பெயர். அம்மாவை அப்படியே உரித்து வைத்திருந்ததாகச் சொன்னார்கள். சிந்தாமணி பிறந்த பிறகு கமலம் பற்றின கதைகளில் ஏராளமான ஆண்கள் தைரியமாகத் தங்களைச் சேர்த்துக்கொள்ள ஆரம்பித்திருந்தார்கள். கமலம் அவற்றையெல்லாம் கேட்டு ரசித்துச் சிரித்தாள், சிரித்துச் சிரித்து சிரிப்பில் தன் ஞாபகங்களையும் வயதையும் அழகையும் விழுங் கினாள். சாரங்கனிடம் அவள் பட்டிருந்த காதல் கடன் ஞாபகத்துக்கு வந்தபோது காலம் அவள் இளமையைத் தின்றுவிட்டிருந்தது. சிந்தாமணி பெரியவளான போது மிராசு உயிருடன் இல்லை. அவளுக்கு அப்போது பதி னெட்டு வயது. அவள் ருதுவான வைபவத்தை மிராசு வின் மனைவியே தன் கணவருக்குப் பிறந்த குழந்தை யென்று முன்னின்று நடத்தி வைத்தாள். அதோடு மிராசு வின் குடும்பம் கமலத்துடன் கொண்டிருந்த நட்பையும் அறுத்துக்கொண்டுவிட்டது. தன்னையொத்த பெண் களுக்கு அது இயல்பாகவே எதிர்பார்க்கக்கூடிய ஒன்று தானென்று கமலம் அதுபற்றி பிரமாதமாக அலட்டிக் கொள்ளவில்லை. மிராசுவும் அவளையும் அவள் பெண் ணையும் நிர்க்கதியாக நிற்க வைத்துவிட்டுப் போய்விட வில்லை. ஆனால் சிந்தாமணியின் நீராட்டுவிழா அவள் மனதின் வேறு கண்களைத் திறந்து விட்டுவிட்டது. சாரங்கன் வீட்டு வைபவத்துக்குப் பிறகு கமலம் கலந்து கொண்ட வைபவம் அதுவாகத்தானிருந்தது. அங்கே நின்றிருந்த போது தன் வாழ்வின் கவர்ச்சிமிக்க, சாகசங் கள் நிறைந்த பயணம் அதன் முடிவுக்கு வந்துவிட்டதாக அவள் உணர்ந்தாள். வைபவத்துக்கு வந்திருந்த பெரிய மனிதர்கள் அனைவருக்கும் ஒரே நோக்கம்தான் இருக்க முடியும் என்பது அவளுக்குத் தெரியும். ஒரே குரலில் அவர்களனைவருமே சிந்தாமணியின் அழகைக் குறிப் பிட்டுப் பேசப்பேச அது அவளுடைய இளமைக் கால நினைவுகளையும் சாரங்கன் வீட்டு வைபவத்தைப் பற்றின ஞாபகங்களையும் கிளறிவிட்டுக்கொண்டேயிருந்தது. தன் முக்கியத்துவம் குறைந்துவிட்டதென்கிற உண்மை அதிர்ச்சியூட்டும் வண்ணம் புத்தியில் உறைந்தபோது அவள் அதை மெளனமாகவும் பெருந்தன்மையுடனும் ஏற்றுக்கொண்டாள். ஆனால் மிராசு அவளைத் தன் உடமையாக அறிவித்த பிறகும்கூட அவளுடன் பழகத் துடித்த பல பெரிய மனிதர்கள் அவளுடன் கூடவே
80 இசைடு 28 6 ஜனவரி-மார்ச் 2000
LILQÜL | d5LDwww.padippakam.Com
தாங்களும் மூப்படைந்ததை ஒப்புக்கொள்ளாமல் தன் பெண்ணின் முன் குவிந்து கிடப்பதைத்தான் அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவர்களனைவரும் அவளுடைய வாயிலிருந்து வரப்போகும் அதிகாரபூர்வ மான அறிவிப்புக்காகத்தான் காத்திருந்தார்கள். சிந்தாமணியின் வைபவம் அவளுக்குக் கசப்பான உணர்வுகளையே தந்தது. தன்னையும் தன் கடந்த காலத்தையும் தனியே நிறுத்தி சிந்தாமணி உட்பட அனைவரும் தன்னை கேலி செய்து விளையாடுவதாக எண்ணி அவள் மனம் புழுங்கினாள். பல வருடங்களுக்குப் பிறகு சாரங்கனின் நினைப்பு தவிர்க்கவியலாதபடி திரும்பத் திரும்பத் தோன்றி அவளை அலைக்கழித்தது. அவனுக்குக் கொடுக்க வேண்டிய கடனின் பளு அவளை வாட்டியது. அதை இனி திருப்பிக் கொடுக்கவே முடியாதபடி காலம் கடந்து போய்விட்டதென்பதையும் அவள் அதிர்ச்சியுடன் நினைத்துக் கொண்டாள். பெருந்துயரத்தின் அலைக்கழிப்பு வைபவ நிகழ்ச்சியிலிருந்து அவளை இன்னும் அன்னியப்படுத்தி ஒதுக்கிவிட் டது. அன்றிரவே அவள் சிந்தாமணியை அழைத்து இன்னும் ரொம்ப நாட் களுக்கு அவளைக் கன்னியாகவே காப்பாற்றி வைத்திருக்கத் தன்னால் முடியாது என்பதை எடுத்துச் சொன்னாள். தன் இடத்தில் தன் இன்மையைப் பூர்த்தி செய்யும் முன் ஒரு உதவியைத் தனக்காகச் செய்யும்படியும் கேட்டுக் கொண்டாள். சாரங்கன் என்பவனைப் பற்றின கதையையும் மழை வீட்டினு டைய வரலாற்றையும் சிந்தாமணி அறிய நேர்ந்தது அப்போதுதான். அவள் தன் தாயின் வேண்டுகோளின் படி ஆனேகல்லிலிருந்து ஒகுருக்கு மறுநாள்
புறப்பட்டுப் போனாள் சாரங்கனிடம் தான் பட்டிருந்த கடனைத் தன் மகள்
தீர்த்துவிடுவாளென்கிற நம்பிக்கையுடன் கமலம் அவளை அனுப்பிவைத்தாள். ஆனால் சிந்தாமணியால் கமலத்தின் மனோரதத்தை நிறைவேற்ற முடிய வில்லை. அவள் போன வேகத்திலேயே திரும்பி வந்துவிட்டாள். வந்தவள் அதற்காய் ஒன்றும் பெரிதாக வருத்தப்படவில்லை. சாரங்கன் என்பவன் அவளைப் பொறுத்தமட்டில் இன்னொரு ஆண்பிள்ளை. அல்லது சுவராஸ்ய மான ஒரு கற்பனை, ஆனால் தான் பார்த்த மழை வீட்டைப் பற்றியும் அதன் நுட்பமான கட்டிட அமைப்பைப் பற்றியும் அதை வடிவமைத்த மனதின் ரசனை பற்றியும் வாய் ஓயாமல் புகழ்ந்தாள். அவள் அதை வர்ணித்தபோது,
| வருடங்களுக்கு முன் தான் பார்த்து வியந்த வீட்டை கமலம் மறுபடி தன்
மனக்கண்ணில் பார்த்தாள். பொருள்களின் மேல் பொட்டுத்தூசி படியவில்லை. மழைப்புழைகளை மண் அடைக்கவில்லை. கதவுப் பிடிகளில் துரு ஏறவில்லை, செடிகொடிகளில் ஒரு இலை குறையவில்லை, வீட்டின் மேல் சதா படிந்திருக்கு மென்று கமலம் சொன்ன ஈரப்பதமும், வழுவழுப்பும் மாறவில்லை. வாயிலில் வாழை மரங்களும் பூந்தோரணங்களும் கிரஹப்பிரவேசம் முடிந்து மிகச் சில நாட்களே ஆகியிருக்கும் தோற்றத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தன. புதிய சுவர்களின் பொலிவும் மணமும் வீட்டின் முகத்தில் அப்படியே படிந் திருந்தன. "இதை விடச் சிறப்பாக ஒரு வீட்டை வேறு யாரும் பராமரித்து வர முடியாது." கமலம் சாரங்கனைப் பற்றிக் கூறும்படி கேட்டபோது அந்த வீட்டில் வயதான மனிதர் யாரையும் தான் பார்க்கவில்லையென்றாள் சிந்தாமணி. இருபது இருபத்திரண்டு வயது மதிக்கத்தக்க வாலிபன் ஒருவன் told Guo அவ்வளவு பெரிய வீட்டின் மஹா தனிமைக்குள் நடமாடிக் கொண்டிருந்த தாகவும் தன்னைப் பற்றி எதையும் சொல்ல மறுத்துவிட்டதாகவும் அவன் கமலத்தின் கதையையும் அவளுடைய அடையாளங்களையும் ஆச்சரியப்படும் வகையில் கச்சிதமாக வர்ணித்தாகவும் சொன்னாள். சிந்தாமணி ஊகித்தது: அந்த இளைஞன் சாரங்கனின் மகனாக இருக்க வேண்டும். தன் தாய் தனக்கு சாரங்கனைப் பற்றிச் சொல்லியிருந்ததைப் போலவே சாரங்கனும் தன் மகனுக்குக் கமலத்தைப் பற்றிச் சொல்லியிருக்க வேண்டும். "அவன் உன் பெயரை நான் சொல்லக் கேட்டதுமே பரபரப்போடு என்னை வரவேற்று உபசரித்தான். என்னை நீயென்று முதலில் அவன் தவறாக எண்ணிவிட்ட தாகச் சொன்னான். ஆனால் எவ்வளவு வற்புறுத்தியும் என்னைத் தன் படுக்கை யறைக்குள் மட்டும் அனுமதிக்க மறுத்துவிட்டான்." கமலத்தால் சாரங்கன் இன்னொரு பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டிருப்பான் என்பதை ஏனோ நம்ப முடியவில்லை. ஆனால் அது நடந்துமிருக்கலாம். தனக்கு வேறு வழிகளில் சாத்தியப்பட்டதைப் போலவே சாரங்கனுக்கும் வேறு வழிகளில் வாழ்க்கை சாத்தியப்பட்டிருக்கக்கூடும். அவள் சிந்தாமணி பார்த்ததாகச் சொன்ன இளைஞனைப் பற்றி மேலும் கேட்டபோது, சிலைக்கு எண்ணெய் தடவிவிட்டதைப் போல பளபளக்கும் கன்னங்கரேலென்ற, ஆண்மை பொங்கும் உருவம், அகன்று புடைத்த மார்பு, நெருப்பைப் போல ஜொலிக்கும் சிவந்த கண்கள், மின்வெட்டித் தெறிக்கும் பற்கள் என்று அவள் அவனை வர்ணித்தாள்.
ஓவியங்கள் : மருது