சேன் தெரு - ழாக் ப்ரெவர்
(மொ.பெ. வெ.ஸ்ரீராம்)
-க்ரியா அலியான்ஸ் ஃபிரான்சேஸ், சென்னை
சேன் தெரு
இரவு மணி பத்தரை
இன்னொரு தெருவின் திருப்பத்தில்
ஒருவன் தள்ளாடுகிறான்... இளைஞன்
தொப்பியுடனும்
மழைக் கோட்டுடனும்
ஒரு பெண் அவனை உலுக்குகிறாள்...
அவனை உலுக்கியபடி
அவனிடம் பேசுகிறாள்
அவன் தலையை உலுக்குகிறான்
Born 4 February 1900 Neuilly-sur-Seine, France Died 11 April 1977 (aged 77) Omonville-la-Petite, France |
பெண்ணின் தொப்பி பின்புறமாக விழ இருக்கிறது
அவர்கள் இருவருமே மிகவும் வெளிறிப்போய்
அவனுக்கு உண்மையிலேயே போய்விட ஆசை...
மறைந்து போக... இறந்துவிட...
அவளுக்கோ வாழ வேண்டுமென்ற வெறித்தனமான ஆசை
அவள் குரல்
கிககிகக்கும் அவள் குரல் அதைக் கேட்காமல் இருக்க முடியாது
அது ஒரு முறையீடு...
ஒரு ஒலம்...
அவ்வளவு உருக்கமான அந்தக் குரல்...
சோகமாகவும்
உயிர்துடிப்புடனும்...
குளிர்காலத்தில் ஒரு கல்லறையின் மேல்
நடுங்கிக்கொண்டிருக்கும் நோயாளிப் பச்சிளங்குழந்தை...
கதவிடுக்கில் விரல்களை நசுக்கிக்கொண்ட
ஒரு பிறவியின் அலறல்...
ஒரு பாடல்
ஒரு வாக்கியம்
அதுவே எப்போதும்
ஒரு வாக்கியம்
திரும்பத்திரும்ப...
முடிவில்லாமல்
பதிலில்லாமல்.
அவளைப் பார்க்கிறான் பார்வையைத் திருப்பி
கைகளை ஆட்டிச் சைகைசெய்கிறான்
நீரில் முழ்கியவன்போல் அவள் வாக்கியம் திரும்பக் கேட்கிறது
சேன் தெருவில் மற்றொரு தெருவின் திருப்பத்தில்
அவள் இன்னும் தொடர்கிறாள்
சோர்ந்துவிடாமல்...
கவலை தோய்ந்த தன் கேள்வியைத் தொடர்கிறாள்
ஆற இயலாத காயம்
பியர், உண்மையைச் சொல்
பியர், உண்மையைச் சொல்
எனக்கு எல்லாம் தெரிந்தாக வேண்டும்
உண்மையைச் சொல்...
பெண்ணின் தொப்பி விழுகிறது
பியர், எனக்கு எல்லாம் தெரிந்தாக வேண்டும்
உண்மையைச் சொல்...
மகத்தான மடத்தனமான கேள்வி
பியருக்குப் பதிலளிக்கத் தெரியவில்லை
திக்குத் தெரியாமல் திணறுகிறான்
பியர் எனப்படும் அவன்...
ஒரு புன்னகையை வீச அவனுக்கு விருப்பம்தான்
மீண்டும் சொல்கிறான்
அமைதியாக இரு நீ ஒரு பைத்தியம்
என்றெல்லாம்
ஆனால் அப்படிச் சொல்ல முடியுமென்று
அவனுக்குத் தெரியவில்லை
அவனுக்கு நம்பிக்கையில்லை
அநத மனித முகத்தின் வாய்
புன்னகையில் எப்படிக் கோணிவிட்டதென்று
அவனுக்குத் தெரியவில்லை....
மூச்சுத்திணறுகிறது
உலகம் அவன்மேல் கவிழ்ந்து உறங்குகிறது
மூச்சுத்திணறுகிறது
அவனுடைய வாக்குறுதிகளிலேயே
மாட்டிக்கொண்டு கைதியாகிறான்...
விளக்கங்கள் கேட்கப்படுகின்றன....
அவன் எதிரே....
கணக்குப் போடும் ஒரு இயந்திரம்
காதல் கடிதங்கள் எழுதும் ஒரு இயந்திரம்
அல்லலுறும் ஒரு இயந்திரம்
அவனைப் பற்றிக்கொள்கிறது...
அவன்மேல் தொற்றிக்கொள்கிறது.
பியர், உண்மையைச் சொல்.
பிரமாண்டமாக, சிவப்பாக
பிரமாண்டமாக சிவப்பாக
பெரிய அரண்மனைக்கு மேலே
குளிர்காலச் சூரியன் தோன்றி
மறைகிறது
அதேபோல் என் இதயமும் மறைந்துவிடும்
என் ரத்தம் முழுவதும் போய்விடும்
உன்னைத் தேடிப் போய்விடும்
என் அன்பே
என் அழகே
உன்னைப் பிடிக்கப் போய்விடும்
நீ இருக்கும் இடத்திலேயே.
Kanchanai Filmsociety liked this.
Follow
கவிஞர் தி.சோ.வேணுகோபாலனுடன்....
சின்னஞ் சிறிய திரி.
எண்ணெய் முழுகியது.
சூடு நெருப்பாச்சு.
காணும் ஒளியாச்சு.
கண்ணில் பிடிபடலாம்.
கையில் பிடிபடுமா?
தத்துவமா? தெரியாது.
போகட்டும்.
எண்ணெய் முழுகியது.
சூடு நெருப்பாச்சு.
காணும் ஒளியாச்சு.
கண்ணில் பிடிபடலாம்.
கையில் பிடிபடுமா?
தத்துவமா? தெரியாது.
போகட்டும்.
சின்னஞ்சிறு விட்டில்.
சன்னச் சிறகாலே
புயலைச் சூல்கொண்ட
காற்றைக் கிழித்தது.
எப்படி? தெரியாது.
போகட்டும்.
சன்னச் சிறகாலே
புயலைச் சூல்கொண்ட
காற்றைக் கிழித்தது.
எப்படி? தெரியாது.
போகட்டும்.
ஒளிமோகம் கொண்டது
களிகொண்ட விட்டில்.
காற்றைச் சிறகின்மேல்
ஏற்றிச் சுழன்றது.
வட்டம் குறுகியது
சொட்டாமல்த் திரிநுனியில்
நிற்கும் ஒளித்திவலை,
'மெய்' தீண்டும் காட்சி,
'சொய்' என்னும் விசும்பல்
ஒளியின் குரலா?
ஊனின் ஓலமா?
எரியாமல் திரியில்
கருகியது சிறகு.
களிகொண்ட விட்டில்.
காற்றைச் சிறகின்மேல்
ஏற்றிச் சுழன்றது.
வட்டம் குறுகியது
சொட்டாமல்த் திரிநுனியில்
நிற்கும் ஒளித்திவலை,
'மெய்' தீண்டும் காட்சி,
'சொய்' என்னும் விசும்பல்
ஒளியின் குரலா?
ஊனின் ஓலமா?
எரியாமல் திரியில்
கருகியது சிறகு.
என்னடா இதிலும்
தததுவ மயக்கா?
தெரியாது
போகட்டும்.
மீண்டும் ஒரு வீட்டில..
தூண்டாத் திரியின் மேல்
பாய்ந்து விழுந்தது.
'சொய' என்னும் விசும்பல்
தேய்ந்து கருகியது.
'மை' யாச்சு சிறகு.
வெட்டவெளிவட்டம்
முட்டிச் சிதறிவிழும்
சுடர்த்தலை அழுத்திக்
கபந்தனாய் விட்டதா?
ஒளியெங்கே?
இருளில்
'மை'ச் சிறகில் கூடி
வட்டம் பெரிதாக்கிக்
கருகியது ஒளியும்.
இருள்கூட ஒளியா?
கண்ணில் பிடிபடலாம்.
கையில் பிடிபடுமா?
வெற்றியா? தோல்வியா?
அதுவும் யாருக்கு?
ஐயையோ இதிலும்
தத்துவப் பொருளா?
தெரியாது
போகட்டும்.
தததுவ மயக்கா?
தெரியாது
போகட்டும்.
மீண்டும் ஒரு வீட்டில..
தூண்டாத் திரியின் மேல்
பாய்ந்து விழுந்தது.
'சொய' என்னும் விசும்பல்
தேய்ந்து கருகியது.
'மை' யாச்சு சிறகு.
வெட்டவெளிவட்டம்
முட்டிச் சிதறிவிழும்
சுடர்த்தலை அழுத்திக்
கபந்தனாய் விட்டதா?
ஒளியெங்கே?
இருளில்
'மை'ச் சிறகில் கூடி
வட்டம் பெரிதாக்கிக்
கருகியது ஒளியும்.
இருள்கூட ஒளியா?
கண்ணில் பிடிபடலாம்.
கையில் பிடிபடுமா?
வெற்றியா? தோல்வியா?
அதுவும் யாருக்கு?
ஐயையோ இதிலும்
தத்துவப் பொருளா?
தெரியாது
போகட்டும்.
தத்துவத் திரையை
ஒதுக்கிப் பார்த்தேன்
புரிந்தது கொஞ்சம்.
கொஞ்சமும் புரிந்ததா?
தெரியாது
போகட்டும்.
ஒதுக்கிப் பார்த்தேன்
புரிந்தது கொஞ்சம்.
கொஞ்சமும் புரிந்ததா?
தெரியாது
போகட்டும்.
எழுத்தாளன் எங்கே?
கேட்கப் போனேன்.
நடப்பூர் தாண்டி
நினைவூர் கடந்தபின்
கற்பனைத் தோப்பிலே
கள்ளுக் கடையில்
கவிஞனைக் கண்டேன்.
போதைக் கிறக்கம்
எழுதிய கவிதை
எங்கே கிடைத்தது?
கேள்வி குழைந்தது.
பதில் ஒரு குமறல்.
கேட்கப் போனேன்.
நடப்பூர் தாண்டி
நினைவூர் கடந்தபின்
கற்பனைத் தோப்பிலே
கள்ளுக் கடையில்
கவிஞனைக் கண்டேன்.
போதைக் கிறக்கம்
எழுதிய கவிதை
எங்கே கிடைத்தது?
கேள்வி குழைந்தது.
பதில் ஒரு குமறல்.
இருட்குகை ஒன்றில்
இலககியப் பொருளில்
சோதனை நடந்ததாம்.
தட்டித் தடவினான்.
சிந்தனைக் கையில்
வந்ததை எடுத்து
வீசினான் வெளியில்.
இருளில் குமைந்த
பொருளை ஒளியில்
கண்டவன் திகைத்தான்
தத்துவம் எங்கே?
பொருளும் மெய்யா?
பயனும் உண்டா?
..........................
இலககியப் பொருளில்
சோதனை நடந்ததாம்.
தட்டித் தடவினான்.
சிந்தனைக் கையில்
வந்ததை எடுத்து
வீசினான் வெளியில்.
இருளில் குமைந்த
பொருளை ஒளியில்
கண்டவன் திகைத்தான்
தத்துவம் எங்கே?
பொருளும் மெய்யா?
பயனும் உண்டா?
..........................
எனக்குத் தெரியவே
தெரியாது
கவிஞன் மதுவின்
அவதியில் இருப்பதால்
தெரியாது.
தெரியாது
கவிஞன் மதுவின்
அவதியில் இருப்பதால்
தெரியாது.