தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Tuesday, April 24, 2018

ஆல்பெர் காம்யுவின் மனித நேயம் - வெ. ஸ்ரீராம் :: காலச்சுவடு - ஆண்டுமலர் 1991

www.padipkam.com
ஆல்பெர் காம்யுவின் மனித நேயம்
வெ. ஸ்ரீராம்
இருபதாம் நூற்றாண்டின் மேற்கத்திய தத்துவ ஞானிகள் வாழ்வின் வெறுமையைப் பற்றிப் பல கோணங்களில் அலசி யுள்ளனர். இரண்டு உலகப் போர்களின் சூழ்நிலை யில், அரசியல் நிர்ப்பந்தங்கள் என்ற பெயரில் தனி மனிதன் நசுக்கப்பட்டுக் கொண்டிருந்ததில் மனித நேயம் பலியாகிக் கொண்டிருந்தது. தெய்வ நம் பிக்கையை இழந்து, கடவுளை மறுத்த சில சிந்த னையாளர்கள் இயற்கையின் உலகத்தையும் அதில் மனிதனின் பங்குகளையும் குறித்து தீவிர மாக மறு பரிசீலனை செய்யத் தொடங்கினார்கள். மானுட உலகுக்கு அப்பால் மனித வாழ்க்கைக்கு எந்தவிதப் பொருளும் இருக்க முடியாது என்கி றார் காம்யு. சாவிற்கு அப்பால் இருப்பதாகச் சொல்லப்படும் வேறு உலகிலி ருந்தோ, வாழ்வின் ஓட்டத்தை முன் கூட்டியே நிர்ணயித்து விட்டதாகக் கருதப்படும் விதி யிடம் இருந்தோ வாழ்க்கைக்கு அறிவுபூர்வமான ஒரு விளக் கம் கிடைப்பதில்லை . ஆகவே, தன்னைச் சூழ்ந்துள்ள உல கத்தை மனிதன் தானாகவே அறிந்து, புரிந்து கொள்ள வேண்டியதாகிறது. இயற்கை யின் உலகம் நமது ஆசைகளின் உலகமாக - இருப்பதில்லை .
காலச்சுவடு --

________________
மேலும், மற்ற உயிரினங்கள் இயற்கையோடு ஒருங்கிணைந்து வாழும்போது, மனிதன் மட் டுமே தன் அறிவின் மூலம் அதை எதிர்கொள்ள முனைகிறான். அவன் காணும் நிகழ்வுகள் எல் லாமே காரணகாரிய ரீதியாக அமைவதில்லை. ஆனாலும், அவற்றுடன் அவனும் பிணைக்கப் பட்டு இருப்பதால், அவனது செயல்களும் பொருளற்றுப்போய்விடுவதாக அவன் உணர்கி றான். வாழ்க்கை அர்த்தமற்றுப் போகிறது. இந்த அபத்த நிலையைத்தான் தனது தேடலுக்கு ஆரம்பமாக எடுத்துக்கொள்கிறார் காம்யு, 1938 இல், சார்த்தரின் குமட்டல்' என்ற நாவலைப்பற்றி அல்ஜேர்ரிபப்ளிகன் என்ற பத்திரிகையில் விமர் சிக்கும்போது அவர் சொன்னார்: "வாழ்வின் அபத்தத்தை சுட்டிக்காட்டுவது ஒரு தீர்வாக
இருக்க முடியாது; அது ஒரு ஆரம்பமே. பல பெரிய அறி ஞர்களின் தேடலுக்கு இந்த உண்மை ஆரம்பமாக இருந்தி ருக்கிறது. நமக்கு முக்கியம் இந்த கண்டுபிடிப்பு அல்ல; அதிலிருந்து தெரிந்துகொள் ளக் கூடிய விளைவுகளும், செயல்முறைகளும்தான்.''
- ஆக, காம்யுவின் மனித நேயத்தின் முதலாவது அஸ்திவாரம்: மனிதன் தன்னுடைய நிலையைப் பற்றி ஒரு தெளி வான பிரக்ஞை கொள்ள


________________
|
வேண்டும்,
- 'அந்நியன்' நாவலில் வரும் மெர்சோ தனது தாயாரின் சவ அடக்கத்திற்கு மறுநாள் தனது தோழி மாரியை சந்திக்கிறான். அவனது கறுப்பு டையைப் பார்த்து, அவன் துக்கம் அனுசரிக்கி றானா என்று கேட்கிறாள். "என் அம்மா இறந்து விட்டாள் என்பதைத் தெரிவித்தேன். எப்பொ ழுது என்று அவள் கேட்டதால், ''நேற்றுத்தான் " என்று சுருக்கமாகச் சொன்னேன். சற்றே பின் வாங்கிய அவள் எதுவும் கேட்கவில்லை. அம்மா வின் மரணத்திற்கு நான் பொறுப்பில்லை என்று கூறலாம்போல எனக்குத் தோன்றினாலும், ஏற்க னவே என் முதலாளியிடம் அவ்வாறே சொல்லி யிருக்கிறேன் என்ற நினைவு வரவே நிறுத்திக் கொண்டேன். எல்லாம் அர்த்தமற்றதாகப் பட் டது. எப்படியும் எல்லாரிடமும் ஏதாவதொரு தவறு இருக்கத்தான் செய்கிறது.''
காம்புவின் அபத்த நாயகன் மெர்சோவிற்கு இதுபோன்ற தெளிவான பிரக்ஞை எப்பொழுதும் இருப்பதைப் பார்க்கலாம். அவள் பேசிக் கொண்ட டிருக்கும்போதே அதில் ஒரு அர்த்தமின்மை இருப்பதையும் உணர்கிறான். தன் தாயாரின் மர ணத்திற்கு தான் பொறுப்பில்லை என்று அவனுக் குத் தோன்றினாலும் தோன்றாவிட்டாலும், எல் லாரிடமும் ஏதாவதொரு தவறு இருக்கிறது . என்று அறிந்திருக்கிறான்.
''சிசிஃபின் புராணம்' என்ற தத்துவக் கட்டுரை யில் காம்யு சொல்கிறார்: "இந்த பிரக்ஞை ஒரு தனி மனிதனின் சொந்த விவகாரம், மற்றவர்கள் ளுக்குத் தெரிவிக்கப்பட முடியாதது. குறிக்கோ எற்ற. இயந்திர கதியில் இயங்கும் இருத்தல் (வாழ்க்கை) ஏற்படுத்தும் குமட்டல் போன்ற உணர்விலிருந்து இப்பிரக்ஞை பிறக்கலாம். ஒரு நாள் இந்த இயந்திர கதி நின்றுவிடுகிறது. 'ஏன்' என்ற கேள்வி பிறக்கிறது. ஏமாற்ற உணர்வில்
காலச்சுவடு --

________________

- தோய்த்த சலிப்பில்தான் எல்லாமே தொடங்குகிறது.'
இந்த ஏமாற்ற உணர்விற்கு அடிப்படை காரணங்கள் : 1. உலகின் விரோதப்பாங்கு, 2. காலத் தின் முரண்பாடு, 3. சாவின் நிச்சயம்.
1. உலகின் விரோதப் பாங்கு என்பது தனி மனி தனின் மனித நேயத்திற்கு ஒரு சவால் என்று காம் யுவின் சக சிந்தனையாளர்களும் கூட சொல்லி யுள்ளனர். இந்த விரோதப் பாங்கை வன்மையாக எதிர்த்துப் போராடுவது, அல்லது அலட்சியப்ப - டுத்துவது என்ற செயல்பாடுகள், அவற்றின் விளைவுகள் பற்றி அவர் பின்னால் ஓரிடத்தில் சொல்லுகிறார். இங்கு வாழ்க்கையில் ஏற்படும் சலிப்பிற்குக் காரணங்கள் என்ற அளவில் மட்டும் இதைப்பற்றி குறிப்பிடப்படுகிறது. 'அந்நியன்' நாவலில் நாயகன் மெர்சோவிடம், முன் காரணங் கள் எதுவுமின்றி, சமூகத்தின் பல பிரதிநிதிகள் ஒரு விரோதப் பாங்கு கொண்டுள்ளனர்: நீதி மன் றத்தின் ஜூரிகள், மாஜிஸ்டிரேட், பார்வையாளர் கள். வழக்கு விசாரணையின் ஆரம்பக் கட்டத் தில், முதியோர் இல்லத்தலைவரை குறுக்கு விசா ரணை செய்து முடித்தபின் மெர்சோ சொல்கி நான்: ''பல வருடங்களுக்குப் பிறகு முதல்முறை யாக, அழ வேண்டும் போன்ற அசட்டுத்தனமான ஒரு ஆசை என்னுள் தோன்றியது. ஏனென்றால், இங்குள்ள மனிதர்கள் என்னை எவ்வளவு தூரம் வெறுத்தார்கள் என்பதை உணர்ந்தேன்.''
1 2, வாழ்வின் பொருள் என்ன என்பதை அறிய யாத நிலையில், இயந்திர கதியில் இயங்கிக் கொண்டிருக்கும் ஒளிமயமற்ற இருத்தலின் ஒவ் வொரு நாளும் மடத்தனமாக 'நாளையை நோக் கிச் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் காலம் என்ற எதிரி நாளை என்று சொல்லி மனிதனை அழைத்துச் செல்வது அவனுடைய இருத்தலை அழித்துவிடும் சாவு என்ற முடிவை நோக்கித் தான். ஆக, காலத்திற்கும் மனிதனுக்கும் உள்ள உறவு என்ன? காலம் மனிதனுக்கு அளிப்பது நாளை என்ற எதிர்பார்ப்பா அழிவு என்ற முடிவா? இந்த முரண்பாடும் ஏமாற்ற உணர் விற்கு ஒரு காரணம்.
76
ஆண்டுமலர் 1991

________________

- 3. சாவு என்பது நிச்சயம் என்பதும், ஆனா லும் அது எப்படி, எப்பொழுது நேரும் என்பது நிச்சயமில்லை என்பதும் இந்த ஏமாற்ற உணர் விற்கு ஒரு அடிப்படை காரணம். மரண தண்ட னையை எதிர் நோக்கியிருந்த மெர்சோ, பாதிரி யாரைச் சந்தித்த பிறகு, சொல்கிறான்: ''இருந்தா லும் நான் அவரை விட நிச்சயத்துடன் இருந் தேன். என்னைப் பற்றிய நிச்சயம், எல்லாவற்றை யும் பற்றிய நிச்சயம், என் வாழ்வைப்பற்றிய நிச்ச யம், எனக்கு வரவிருக்கும் மரணத்தைப் பற்றிய நிச்சயம். ஆம் என்னிடம் இருந்ததே இதுபோன்ற நிச்சயுங்கள் தாம். எதற்குமே முக்கியத்துவம் இருக்கவில்லை ; ஏன் என்று எனக்குத் தெரியும்.''
ஆக, இந்த சலிப்பின் பின்னணியில், தெளி வாக பிரக்ஞையோடு இருக்கும் மனிதனுக்கு உல கம் அபத்தமானது என்று தோன்றுகிறது. அப்ப டித்தான் அவன் அறிவு சொல்கிறது. ஆனால் காம்யு சொல்கிறார்: "அபத்தமாக இருப்பது உல கம் அல்ல. காரண - காரிய ரீதியாக இல்லாத உலகத்தில் அவ்வாறு இருக்க விழையும் மனிதன் தூக்கி எறியப்படுகிறான். இது ஒரு மோதல்." A ''மனிதனின் உரத்த கூவலுக்கும், உலகின் நியாயமற்ற மௌனத்திற்கும் ஏற்படும் மோதலில் பிறப்பதுதான் அபத்தம்" - ஆல்பெர் காம்யு.
(இந்த மெளனம் என்பது காம்யுவின் உலகில் பல தளங்களிலும் செயல்படுகிறது. உண்மையான சமூகப் பிரக்ஞை உள்ள ஒரு கலைஞர் காம்யு, ஆழ்ந்த மனித நேய உணர்வுடன், தனி மனித னின் நிலைமையைப் பற்றித் திறம்பட தன் படைப் புகளில் எழுதியுள்ளார். அதே சமயம், எந்த ஒரு மனிதனும் தன்னுடைய சமூக, அரசியல், பொரு ளாதார சூழ்நிலைகளுக்கு அப்பால் இருந்து கொண்டு தன் வாழ்வை நிர்ணயித்துக் கொள்ள முடியாது என்பதைப் பற்றியும் தெளிவாக இருந் தார். சமூக, அரசியல், பொருளாதார நிர்ப்பந்தங் கள் மனிதனைப் பாதிக்கும் போது, நியாயம் நேர்மை என்ற அளவுகோல்களை மீறாமல் அவற்றை எதிர்கொள்ளும் முயற்சியில் அவன் மௌனம் சாதிக்க நேருகிறது. இந்த மௌனத்திலி ருந்து மனத்தெளிவோ, அலட்சிய பாவமோ
காலச்சுவடு
2

________________

கிளர்ச்சி உணர்வோ பிறக்கலாம். எப்படியும் அவ னுடைய சிந்தனையின் பரிணாம வளர்ச்சியில் ஒரு முக்கியமான கட்டம் இந்த மௌனம். காம்யு வின் வாழ்க்கை வரலாறு, அரசியல் ஈடுபாடுகள், கடிதங்கள், நாட்குறிப்புகளில் இந்த மௌனத் திற்கு ஒரு தத்துவார்த்த, தார்மீகப் பரிமாணம் இருப்பதைப் பார்க்கலாம். தவிர, அவரது இலக்கி யப் படைப்புகளிலும் மெளனத்தை ஒரு இலக்கிய | உத்தியாகக் கையாண்டிருக்கிறார்.)
ஆக, அபத்தம் அடிப்படையான ஒரு அம்சம் என்றால், நமது நிஜங்களில் முதன்மையானதும், முக்கியமானதும் என்றால், இந்த மானுடப் பிரச்சி னைக்கு முன் வைக்கப்படும் எந்தத் தீர்வும் இதை - மறக்கக்கூடாது. அபத்தம் என்று ஒன்றும் இல்லை என்பது போல் நடிக்கக் கூடாது. விழிப்புணர்வு டன் இதைப்பற்றித் தெளிவாக இருக்கும் மனிதன், இதை எதிர்கொள்வது எப்படி? இதை எதிர் கொள்வதில் மனிதர்களிடம் காணப்படும் மனப் பான்மைகளை இருவிதமாகப் பிரிக்கிறார் காம்யு: துரோக மனப்பான்மை, விசுவாச மனப்பான்மை. இந்த அணுகலிலும் இவரது மனித நேயம் மேலோங்கி இருக்கிறது.
- துரோக மனப்பான்மை :
11. தற்கொலை : இது ஒரு தப்பித்தல் உபா யம்; எதிர்கொள்ளல் ஆகாது என்கிறார் காம்யு. மேலும், இது பிரக்ஞையை அழித்து விடுகிறது. அபத்தத்தின் பல அம்சங்களையும் தெரிந்து கொண்ட பின், வாழ்க்கை என்பது இவ்வளவு பெரிய சுமையா என மனம் அசந்து போய் விடுகி றது. தற்கொலை ஒரு சுலபமான முடிவாகத் தோன்றுகிறது. ஆனால், உண்மையில் அது கோழைத்தனம் என்கிறார். சரித்திர ரீதியாகப் பார்த்தால், இரண்டாம் உலகப் போருக்குப் பிந் திய காலகட்டத்தில் ஐரோப்பிய இலக்கியத்தில் தற்கொலை அளவுக்கு அதிகமாகவே இடம் பெற் றிருக்கிறது. ஐரோப்பிய சமூகத்திலும் கூடத்தான். சமூகவியலாளர்களும், மனோதத்துவ நிபுணர்க ளும் கூட தற்கொலையின் காரணங்களைப் பற் றிப் பல ஆராய்ச்சிகள் நடத்தியுள்ளனர். இந்தப் பின்னணியில்தான் காம்யு தன்னுடைய முதல் தத்
ஆண்டுமலர் 1991

________________
|
துவக் கட்டுரைப்புத்தகத்தின்(சிசியின்ஃபுராணம்) ஆரம்பத்தில் சொல்கிறார்; ''உண்மையிலேயே மிக முக்கியமான தத்துவப் பிரச்சினை ஒன்றே ஒன்றுதான்: தற்கொலை"'. அதன் பிறகுதான் வாழ்க்கையின் அபத்தநிலையைப் பற்றித் தெளி வாக அலசுகிறார். ஆகவேதான், தெளிவாக பிரக்ஞை உடைய மனிதன் தற்கொலை என்ற கோழைத்தனமான முடிவெடுப்பது துரோக மனப் பான்மை என்கிறார்.
- 2. வாழ்க்கைக்கு அர்த்தம் அளிக்கக்கூடிய காரணங்களையும், நம்பிக்கைகளையும் உலக வாழ்க்கைக்கு அப்பால் நிறுத்தும் கோட்பாடு கள்: இதற்கு ஒரு உதாரணம் மத நம்பிக்கை . ஏனெனில், இதில், ஐம்புலன்களால் உணரப்பட முடியாத ஒரு சக்தியை நோக்கி மனிதனின் கவ னம் திருப்பப்படுகிறது. மெர்சோவை விசாரணை செய்யும் மாஜிஸ்டிரேட் "இறைவனை நிராகரிக்கி றவன் உள்பட எல்லோருமே இறைவன் மேல் நம்பிக்கை கொண்டுள்ளனர் என்றும் கூறினார். அவருடைய அசைக்க முடியாத கொள்கை அது தான். அதிலேயே அவருக்கு சந்தேகம் ஏற்படுமா னால், அவரது வாழ்க்கைக்கு ஒரு அர்த்தமே இல் லாமல் போய்விடும்" என்கிறார், சிறைச்சாலை யில் பாதிரியார் அவனைச் சந்திக்கிறார். எனக்குக் கடவுள் மீது நம்பிக்கை இல்லை என்று பதிலளித் தேன். 'உனக்கு நிச்சயமாகத் தெரியுமா?' என்று கேட்டார். இந்தக் கேள்வியை என்னை நானே கேட்டுக் கொள்ள வேண்டிய அவசியம் எனக்கு இருந்திருக்கவில்லை; என்னைப் பொருத்தவரை எனக்கு நம்பிக்கை இருப்பதும் இல்லாததும் அப் படியொன்றும் முக்கியமானதல்ல என்று தோன்றி யது.
(இந்த இடத்தில் காம்யு நாஸ்திகரா இல் லையா என்ற கேள்வி எழலாம். இந்தக் கட்டுரை
| காலச்சுவடு

________________

யின் வரம்பிற்கு அப்பாற்பட்ட விஷயம் அது என் பதால் அதை இப்பொழுது விட்டுவிடுகிறேன். இங்கு அவர் சொல்வதெல்லாம் வாழ்க்கைக்கு அப்பாலில் நம்பிக்கைகளை நிறுத்தும் ஒரு கோட் பாடு அறிவுபூர்வமாக வாழ்க்கையைப் புரிந்து கொள்ளும் முயற்சியிலிருந்து மனிதனைத் தடம் புரள வைக்கும் என்பதுதான்.) - இதற்கு மற்றொரு உதாரணம், இருத்தலியல் வாதிகளின் தத்துவார்த்த தற்கொலை. அர்த்த மின்மை என்பதையே தெய்வமாக்கி வழிபடுப் வர்கள் இவர்கள் என்கிறார் காம்யு. இதற்கு உதார ணமாக, ஜாஸ்பர்ஸ், கிர்க்கார்ட், செஸ்டோவ் (Jaspers, Kierkegaard, Chestov) போன்ற சில இருப் தாம் நூற்றாண்டின் தத்துவ ஆசிரியர்களையும், அவர்களுடைய தத்துவ கோட்பாடுகளையும் சொல்கிறார்.
(அவற்றைப் பற்றி விரிவாகப் பேச இங்கு இடமில்லை; சுருக்கமாகச் சொன்னால், காம்பு வைப் பொறுத்தவரை, இதுபோன்ற தத்துவங்க ளில் அர்த்தமின்மைக்குக் கொடுக்கப்படும் முக்கி யத்துவம் மனிதன் அதை எதிர்கொள்ள முடியும் என்ற சாத்தியக் கூற்றிற்கு இடமில்லாமல் செய்து விடுகிறது. இவர்கள் சமூகத்தை அராஜகத்திற்கு இட்டுச் செல்கின்றனர்.)
விசுவாச மனப்பான்மை:
காம்யு இதுவரை விளக்கமாக சுட்டிக் காட்டிய துரோக மனப்பான்மை என்பதெல்லாம் எதிர் மறை மனநிலைகள். மனிதனின் வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுக்கக் கூடியதாகச் சொல்லப்பட்ட சக்திகள் அவனுடைய மானுட அனுபவ அறி
விற்கு அப்பாற்பட்டவை. அனுபவ ரீதியாகத் தானாகவே ஒரு சக்தியையோ, கொள்கை யையோ அவன் தேடுவதற்குப் பதிலாக, ஏற்க னவே இருப்பதாகச் சொல்லப்படும் சக்திக்கு, கொள்கைக்கு அடிபணியும்படி அவனுக்குச் சொல்லப்படுகிறது. நமக்கு தெரிந்தவற்றை வைத் துக் கொண்டு வாழ்க்கையை எதிர் கொள்வது தான் விசுவாச மனப்பான்மை' என்கிறார் காம்யு. தூக்குத் தண்டனையை எதிர்நோக்கி இருக்கும் மெர்சோவிடம் ('அந்நியன்') பாதிரியார் பேசுகி
78
ஆண்டுமலர் 1991

________________

றார். ''என் அப்பீல் ஏற்றுக் கொள்ளப்படுமென்று அவர் நிச்சயமாக இருந்தார். ஆனால் அதற்கு 6 முன்னால் நான் சுமந்திருந்த பாவச்சுமையிலி ருந்து என்னை விடுவித்துக் கொள்ள வேண்டும் என்றார். அவரைப் பொறுத்தவரை மனிதனின் தீர்ப்பு ஒன்றுமேயில்லை; இறைவனின் தீர்ப்பு தான் எல்லாம். எனக்குத் தீர்ப்பளித்தது மனிதன் தானே என்றேன். இருந்த போதிலும் அது என் னைப் பாவத்திலிருந்து விடுவிக்கவில்லை என் றார். இதில் 'பாவம்' என்ன இருந்ததென்று எனக் குப் புரியவில்லை . நான் குற்றம் புரிந்தவன் என்று மட்டும்தான் எனக்கு அறிவிக்கப்பட்டது. நான் குற்றவாளி, அதன் பலனை அனுபவித் தேன். அதற்கும் அப்பால் என்னிடமிருந்து எது - வும் எதிர்பார்க்கக் கூடாது. இப்படி நான் சொல் லிக் கொண்டிருக்கையில் அவர் மீண்டும் எழுந் தார். அப்போது நான் நினைத்துக் கொண்டேன், இவ்வளவு குறுகலான இந்த அறையில் அவர் சற்றே அசைய விரும்பினாலும் அவருக்கு அது சாத்தியமில்லை; ஒன்று உட்கார வேண்டும் அல் லது நிற்க வேண்டும்.''
மேலே உள்ள மேற்கோளில், தடிமன் எழுத் தில் இருக்கும் சொற்றொடர்களை மட்டும் ஒன் றன்பின் ஒன்றாக படித்துப் பார்த்தால் காம்பு சொல்லும் 'விசுவாசமனப்பான்மை' யின் வரைய றைகள் என்ன என்பது தெரியும். மற்றபடி, குற் றம், பாவம், தீர்ப்பு, தண்டனை என்பதெல்லாம் உதாரணங்கள் காட்டி மானுட நிலையைப் பற்றி விளக்குவதற்காக எடுத்துக் கொள்ளப்பட்ட, இலக்கியக் குறியீடுகள். பாதிரி, மெர்சோ போன்ற வர்கள், துரோக விசுவாச மனப்பான்மையின் பிர திநிதிகள். விசுவாச மனப்பான்மை நமக்குக் காட் டும் வழி என்ன?
''அபத்தத்திலிருந்து நான் பெறுவது மூன்று விளைவுகள்: என்னுடைய கிளர்ச்சி, எனது சுதந் திரம், என்னுடைய தீவிர ஆசைகள். என்னுடைய பிரக்ஞையின் உதவியை மட்டுமே கொண்டு, 1 1 சாவிற்கு அழைப்பாக இருந்த ஒன்றை வாழ்க்கை யின் நியதியாக மாற்றி அமைத்து, தற்கொ லையை மறுக்கிறேன். இது கொடுமையானதும், அற்புதமானதுமான ஒரு சவால். இறுதியில் மனி
-
காலச்சுவடு
279
|
________________

நன் அபத்தம் என்ற மதுவை அருந்தி, அலட்சியம் என்ற ரொட்டியை உண்டு தனது உயர்வைப் பரா மரித்துக் கொள்வான்." -
1. கிளர்ச்சி : அனுபவங்களின் வாயிலாக வாழ்க்கையை வாழ்ந்து பார்த்தே தீருவோம் என் பதான மனத் திண்ணம்தான் இந்த கிளர்ச்சி. அபத் கத்தில் முரண்பாடுகளுக்குச் கண்களை மூடிக் கொள்ளாமல், அல்லது அது அப்படித்தான் இருக் தம் என்ன செய்வது என்று அவற்றிற்குத் தலை வணங்காமல், இவையெல்லாம் வாழ்க்கைக்கு நாம் அளிக்க வேண்டிய விலை என்றும், நம்மு டைய வாழ்க்கையின் மகத்துவமே இந்தப் போராட்டத்தில் தான் இருக்கிறது என்றும் சொல்லி நம்மை இயக்குவதுதான் இந்தக் கிளர்ச்சி. தன்னையும் மீறி இருக்கும் உண்மை நிலையைத் தன் கரங்களில் பற்றிக் கொண்டிருக் தம் மனிதனின் கர்வத்தையும், அறிவையும் அது பறை சாற்றுகிறது. அபத்தத்தினூடே அறிவின் உதவி கொண்டு ஆக்கபூர்வமான செயல்களை - வெற்றி கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் - செய்ய வேண்டும் என்பது அவருடைய கருத்து.
2. சுதந்திரம் : அபத்தத்தைச் சந்திக்கும் பரை. மனிதன் தான் சுதந்திரமாக இருப்பது போன்ற ஒரு மாயையில் இருந்தான். ஆனால் உண்மையில் அவன், தன் வாழ்க்கைக்கு ஒரு தறிக்கோளையும் மதிப்பையும் அளிப்பதுபோல் தோன்றிய சில விருப்பு - வெறுப்புகளுக்கும், பழக்கங்களுக்கும் அடிமையாகவே இருந்தான். இப்பொழுது அவனுக்கு ஒரு புதிய பார்வை கிடைக்கிறது. பழக்கம், விருப்பு - வெறுப்பு என்ற தளைகளிலிருந்து விடுபட்டு, போலி நம்பிக்கை களுக்கு மனதைப் பறிகொடுக்காமல் தானாகவே செயல்படுவதற்கு உண்டான சுதந்திரத்தைப் பெறுகிறான்.
3. தீவிர ஆசை : கிளர்ந்தெழுந்து சுதந்திர மாகச் செயல்படும் பொழுது கிடைக்கப்பெறும் தெளிவான அனுபவங்களைத் தீவிர ஆசையுடன் சேகரிப்பதுதான் இந்த எதிர்கொள்ளலின் மூன்றா வது கட்டம், அனுபவங்களின் ஆனந்தம்தான் அபத்தத்தினூடேயும் மனிதனை மகிழ்ச்சியாக
ஆண்டுமலர் 1991

________________

வைத்திருக்கிறது. ''நிகழ்காலமும், எப்பொழுதும் தெளிவான பிரக்ஞையுடன் இருக்கும் ஒரு ஆத் மாவின் முன்னால் அணிவகுத்துச் செல்லும் அல் றாட நிகழ்வுகளும்தான் அபத்த மனிதனின் இலட் சியம்" - காம்யு. காம்யுவின் படைப்புகளில் முதல் கால கட்டத்தில் 'சிசிஃபின் புராணம்" (1942) என்ற நீண்ட தத்துவக் கட்டுரையும், ''அந்நியன்' (1942) என்ற நாவலும், ''புரிதல் கோளாறு'' "காலிகுலா" (1944) என்ற இரு நாடகங்களும் இடம் பெறும். பின்னர் 1947 இல் கொள்ளை நோய்' நாவலும், 1951 இல் "புரட்சி மனிதன்' என்ற கட்டுரையும் வெளிவந்தன. முதல் கால் கட்டத்தில் வாழ்க்கைப் பிரச்சினை பற்றி ஒரு தனி மனிதனின் பார்வையிலும், பிறகு சமூகப் பிரச் சினை குறித்து சமுதாய, தார்மீக, அரசியல் கண் ணோட்டத்துடனும் எழுதியுள்ளார். அதற்குப் பிற கும் அவர் எழுத்துக்களைப் படிக்கும்பொழுது அவரது கருத்துக்களின் பரிணாம வளர்ச்சியை நன்றாகக் காணமுடிகிறது. இருத்தலியல்வாதத்த டன் (Existentialism) அவரைச் சேர்த்துப் பேசுவது தவறு. அவருடைய சம காலத்தவரும் புகழ் பெற்ற இருத்தலியல்வாதியுமான சார்தர் (Jean : Paul artre) 'அபத்தம் என்ற தத்துவக் கோட் பாட்டை அறிமுகப்படுத்தி, விஞ்ஞான ரீதியில் அதைப் பற்றித் தெளிவாகக் கூறியிருக்கும் தத் துவ ஆசிரியர் ஆல்பெர் காம்யு' என்கிறார். இவ ருடைய எழுத்துக்களில், அபத்தம், அபத்த நாம் கன், கிளர்ச்சி, சுதந்திரம் போன்ற பதங்களுக்கு ஒரு விசேஷ அர்த்தம் இருக்கிறது.
''சிசிஃபின் புராணம்" என்ற படைப்பில் காம்யு சொன்ன கருத்துக்களின் முக்கியமான அப் சங்களை, ஏற்கனவே தமிழில் மொழி பெயர்க்கப் பட்டுள்ள "அந்நியன்' நாவலுடன் ஒப்பிட்டு ஓ ளவு விளக்கமாக இந்தக் கட்டுரையில் எழுதியும் "ளேன். மேலெழுந்த வாரியாகவோ, அல்லது அவருடைய ஒரு சில படைப்புகளை மட்டுமே படித்தாலோ. அவருடைய கருத்துக்களில் ஒரு சோகமூட்டம் இருப்பது போலவும், வாழ்க்கை என்பது வெற்றி காண முடியாத ஒரு போராட்டம் என்றுதான் அவர் சொல்வது போலவும் தோல் றும். ஆனால், ஒட்டு மொத்தமாக அவருடைய படைப்புகளில் மனித குலத்திடம் அவருக்
காலச்சுவடு -
-- --
________________

5
இருந்த ஈடுபாடு ஒரு முக்கிய அம்சம் என்பதை அவரைக் கடுமையாக விமர்சித்தவர்கள்கூட ஒப் புக் கொள்வார்கள். தமிழ் வாசகர்களுக்கு அவருடைய படைப்புகளின் மொழிபெயர்ப்புகள் எல் ம் லாம் இன்னும் கிடைக்கப் பெறாத இந்நிலையில் ) இதற்கு சான்றாக நிறைய உதாரணங்கள் கொடுக்க இயலாத நிலை இப்பொழுது. 'அந்நி யன்' - மெர்சோ - இறுதியில் சொல்வதும்
அதுதானே?
2
L.
|
--- ''.இவ்வுலகின் மென்மையான அலட்சி யத்தை மனந்திறந்து வரவேற்றேன். என்னைப் போலவே அது இருந்தது என்பதை உணரும் போது, அந்த சகோதர மனப்பான்மையில், நான் மகிழ்ச்சியாக இருந்தேன், மகிழ்ச்சியாகவே இருந்து கொண்டிருக்கிறேன் என்பதை அறிந்து கொண்டேன்'', 'கொள்ளை நோய்' என்ற நாவ
லின் நாயகன் டாக்டர் ரியு சொல்கிறார்: "வீரம் து என்ற குணத்திற்கு ஒரு முக்கிய இடமளிக்க வேண்டியது அவசியம்தான். ஆனால் மனிதன் ? மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைப்ப
தற்கு அடுத்தபடியாகத்தான் வீரம் இருக்க வேண் டுமே தவிர, அதற்கும் மேலான ஒரு முக்கியத்து வம் வீரத்திற்கு அளிக்கக்கூடாது. அதே நாவலில், கொள்ளை நோய் என்ற தொத்து வியாதி ப _யால் ஓரான் (Oran) நகரில் பல்லாயிரம் பேர்கள் - இறக்கிறார்கள். நோய் பரவாமல் இருக்க நகரின் எல்லா எல்லைகளும் மூடப்பட்டு யாரும் வெளியே போக முடியாத, யாரும் உள்ளேயும் வர முடியாத நிலை. பாரிஸில் இருக்கும் தன் காதலியைப் பிரிந்து இந்நகரில் மாட்டிக் கொண்ட ப் ராம்பெர் (Rambert) என்ற பத்திரிகை நிருபர் ஒரு
வன் திருட்டுத்தனமாகத் தப்பி ஓட முயல்கிறான், ர் நோயை எதிர்த்துப் போராடுபவர்களின் மைய து - மாக இருக்கும் பாத்திரமான டாக்டர் ரியு அவ ம னுக்கு உதவ மறுத்தாலும், தப்பி ஓடுவதால் ராம்பெர்க்கு மகிழ்ச்சி கிடைக்கும் என்றால் மனிதாப க ரீதியில் அதைத் தான் புரிந்து கொள்ள முடியும் ம் என்றும் சொல்கிறார். சில நாட்களில் தப்பி ஓட ன் வாய்ப்பு கிடைத்தும், ராம்பெர் போவதில்லை. ப எல்லோரும் ஒரு கொடிய நோயை எதிர்த்துப் கு போராடும்போது தான் மட்டும் தன் சொந்த
280
ஆண்டுமலர் 1991

________________

மகிழ்ச்சியைக் கருதி ஓடிப் போவது சரியல்ல : என்று சொல்கிறான். "மகிழ்ச்சியாக இருக்க ஒரு வன் விழைவதில் அவமானம் ஒன்றும் இல்லை யே", என்கிறார் ரியு. ராம்பெர் சொல்கிறான்; ''தான் மட்டும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று ஒருவன் நினைப்பது அவமானப்பட வேண்டிய விஷயமில்லையா?''
1960 ஜனவரி 4 ஆம் தேதி, ஆல்பெர் காம்யு ஒரு கார் விபத்தில் இறந்தார். 1952 முதலே அவ ருக்கும் சார்த்ருக்கும் இடையே கருத்து வேறு பாடு காரணமாகப் பிளவு ஏற்பட்டு இருந்தது. ஆனாலும் காம்யுவின் ''தூய, எளிய, உணர்வு பூர்வமான மனிதாபிமானத்தைப் பற்றிக் குறிப் பிட்ட சார்தர். "அந்தக் கால கட்டத்தின் முகமற்ற, பூதாகரமான நிகழ்வுகளை எதிர்த்து முடிவில்லா மல் போராடுவதில் பிடிவாதமாக இருந்தது அவ ருடைய மனித நேயம்" என்றும் சொன்னார்.
முடிவாக, அவருடைய நாட்குறிப்புகளில் ருந்து ஒரு பகுதி: ''நான் அல்ஜீரியாவில் இருந்த போது. குளிர் காலத்தில் மிகவும் பொறுமைக்காகக் காத்திருப்பேன். ஏனெனில், ஒரு இரவுப் பொழுதில், மிகவும் குளிராகவும் தூய்மையாக கவும் இருக்கும் ஒரே ஒரு பிப்ரவரி மாத இரவில், கான்ஸல் பள்ளத்தாக்கில் உள்ள பாதாம் மரங்கள் முழுவதும் தூய வெள்ளை நிறப் பூக்களால் மூடப் பட்டு இருக்கும். அதற்குப் பிறகு வரும் மழை, கடற்காற்று இவற்றையெல்லாம் மிருதுவான உலர்பனி போன்ற இம்மலர்கள் எதிர்த்துப் போராடி நிலைத்து இருப்பதைப் பார்த்து ஆச்சரி யம் அடைவேன். எப்படியிருப்பினும் ஒவ்வொரு வருடமும் காய்கள் தோன்றும் வரை, அதற்கு வேண்டிய அளவு பிடிவாதத்துடன் இருக் கத்தான் செய்தன இம்மலர்கள்.''
(சென்னை அலியான்ஸ் பிரான்சேஸ்-ல், 1990 நவம்பர் 21 ஆம் தேதி அன்று நடைபெற்ற ஆல் பெர் காம்யு பற்றிய கருத்தரங்கின் போது வாசிக் கப்பட்ட உரையுடன் சில குறிப்புகள் சேர்த்து எழு தப்பட்டது.)