தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Wednesday, April 18, 2018

அன்புப்பிடியில் இருவர்.- வில்லா காத்தர் :: முதல் அத்தியாயம் :: முதல்பாகம்

ஜோதி நிலையம் வெளியீடு


அன்புப்பிடியில் இருவர்.- வில்லா கேதர் :: 
மொ.பெ : சி.ஸ்ரீநிவாசன்


முதல் பாகம்

விகார் விரைகிறார் !

சிலுவையுருவ மரம்

1351-ம் வருடம், இலையுதிர்காலத்தில் ஒரு நாள், பிற்பகல் நேரம், மத்திய நியூமெக்ஸிகோவில் ஒரு பாலை வெளி வழியே குதிரையேறிச் சென்று கொண்டிருக்கிறார் ஒருவர் ; பின்தொடரும் பாரக் கழுதை தவிர அவருக்கு வேறு துணையில்லை. வழி தவறிவிட்டது; எனவே பாட்டையைத் திரும்பக் கண்டுபிடிப்பதில் அப்போது அவர் ஈடுபட்டிருந்தார். அதில், திசை காட்டும் கருவியும், திக்குகள் பற்றிய அவருடைய உள்ளுணர்வும் தான் உதவி செய்தன. மற்றப்படி, அடையாளம் கண்டு கொள்ளத்தக்கதாக அப்பகுதியில் இயற்கையம்சம் ஏதும் கிடையாது. எந்தப் பக்கம் திரும்பினாலும். கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் ஒரே மாதிரியான செம் மணற் குன்றுகள் எங்கணும் நிறைந்து அலுப்பூட்டின. தன் திருஷ்டிப்பரப்புக்குள் இப்படி ஒரே சீரான மணல் திட்டுகள் இத்தனை இருக்கக்கூடுமென எவரும் கற்பனை கூடச் செய்திருக்க முடியாது - அதிகாலையிலிருந்தே அவற்றிடை அலைந்து கொண்டிருந் தார் அவர்; எனினும், இருந்த இடத்தைவிட்டு இம்மியும் நகரவில்லை என்றே நினைக்கும்படியாக இயற்கைக் காட்சி மாறாமலே இருந்தது. கூம்பு வடிவமுடைய இந்தச் சிவந்த குன்றுகளினிடையிலிருந்த குறுகிய சந்துகள் வழியே அதுவரையில் குறைந்த பட்சம் முப்பது மைல்களாவது அவர் சுற்றித் திரிந்திருப்பார்; எனவே, இனி வேறெதையும் காணவே மாட்டோம் என்றே எண்ண ஆரம்பித்துவிட்டார் அவர். அந்தக் குன்றுகள் அனைத்தும் ஒரே அச்சாக இருந்தமையால், தாம் ஏதோ க்ஷேத்திர கணிதச் சிக்கலில் மாட்டிக் கொண்டு விட்டதாகவே அவருக்குப் பிரமை ஏற்பட்டு விட்டது ! உச்சியில்

________________

20

தட்டையாயிருந்த அந்தக் கும்பங்கள், வைக்கோற் போர்களை விட மெக்ஸிக மோஸ்தர் அடுப்புக்களை ஒத்திருந்தன என்று கூறுவதே பொருந்தும் - ஆம். அசல் மெக்ஸிக அடுப்புகளே தான் அவை ! செங்கற் பொடி தூவியது போன்றிருந்த அவற்றில் சிறிய ஜூனிபர் மரங்களைத் தவிர வேறெவ்விதத் தாவர வர்க்கமும் காணப்படவில்லை. அந்த மரங்களும் கூட மெக் மிக அடுப்புகளைப் போலவே இருந்தன ! கூம்பு வடிவிலான ஒவ்வொரு குன்றிலும் சிறிய கூம்புருவான அம் மரங்கள் முளைத்திருந்தன; குன்றுகளெல்லாம் ஒரே மாதிரியாகச் சிவப்பு நிறமுடையனவாயிருந்தது போலவே, அந்த மரங்களிலும் ஒரே சீராக மஞ்சள் பூத்த பச்சை வர்ணம். ஒன்றையொன்று முட்டித் தள்ளுவது போலத் தோன்றுமளவு அடர்த்தியாக அக்குன்றுகளனைத்தும் பூமியிலிருந்து பீறியெ ழுந்திருந்தன.

இம்மாதிரிப் பல நூற்றுக்கணக்கான தடவைகள் அந்த முனை மழுங்கிய குன்றுகளே அவ்வழிப்போக்கரின் கண்களைத் திரும்பத் திரும்பத் தாக்கியதுடன், வெய்யிலின் உக்கிரமும் சேரவே அவர் குழம்பித் தத்தளித்தார். 'என்னே விசித்திரம்! என்று முனகியவாறே, அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருந்த அந்த முக்கோண வடிவங்களினின்றும் கணமேனும் விடுதலை பெறும் பொருட்டுக் கண்களை மூடிக்கொண்டார். திரும்ப விழித்துக் கொண்டபோது, மற்றவைகளிலிருந்து தோற்றத்தில் வேறுபட்ட ஒரு ஜூனிபர் மரத்தின் மீது அவர் பார்வை தேங்கியது- அடர்த்தியாக வளர்த்த கூம்பாக இல்லை அம் மரம். இலைகளற்றிருந்த அதன் நடுப்பாகம் முறுக்கிக் கொண்டிருந்தது. சுமார் பத்தடி உயரமேயிருந்த அதன் உச்சியில் இரு கிளைகள் பிரிந்து, பக்கவாட்டில் படந்திருந்தன. அவை பிரியுமிடத்துக்குச் சற்று மேலே சிறியதொரு இலைத் திட்டும் மையத்தில் காட்சியளித்து-உயிருள்ள தாவர மெதுவும் இதைவிடச் சிறப்பாக சிலுவையின் வடிவத்தை உருவாக்கியிருக்க முடியாது.

அதைக் கண்டதும், குதிரையிலிருந்து குதித்தார் அந்தப் பிரயாணி. மிகவும் நைந்துபோன புத்தகமொன்றைத் தம் சட்டைப் பையிலிருந்து உருவியெடுத்தார். பின்னர், தொப்பியை அகற்றிவிட்டு அந்தச் சிலுவையுருவ மரத்தினடி

________________

யில் மண்டியிட்டு அமர்ந்து விட்டார். - முயல் தோலாலான சவாரிக் கோட்டிற்கு அடியில் கருப்பு நிற நெட்டங்கி, பாதிரிக்குரிய கழுத்துக் குட்டை, பட்டை முதலியவற்றை அவர் தரித்திருந்தார். எனவே, பிரார்த்தனையிலீடுபட்ட அந்த இளைஞர் ஒரு பாதிரியே என்பதில் ஐயமில்லை. அது மட்டுமா , ஆயிரத்திலொரு பாதிரி என்று எவரும், பார்த்த மாத்திரத்தில்லேயே கூறிவிடுவர் என்பதும் திண்ணம்! குனிந்திருந்த அவரது தலை, சாதாரண மனிதனொருவனுடையதல்ல; அரியதொரு மூளை உறைவதற்கு உருவாகியதே அது. விரிந்து பரந்த நெற்றி, அவரது உதார குணத்தையும், சிந்தனா சக்தியையும் சுட்டியது. பொதுவாக அவரது அங்க அமைப்பில் சற்றுக் கடுமை தெரிந்ததாயினும், பார்க்க லக்ஷணமாக இருந்தார். முயல் தோல் சட்டைக்கு வெளியே தெரிந்த முன்னங்கைகளில், தனியொரு எழில் திகழ்ந்தது. அவரை யொட்டிய ஒவ்வொரு அம்சமுமே, அவர் நற்குடியில் பிறந்தவர் என்பதை எடுத்துக் காட்டின ; தைரியம் மிக்கவர். இளகிய இதயமுடையவர். மரியாதை அறிந்தவர் என்பதைப் பறைசாற்றின. அந்தப் பாலை நிலத்தில் தனித்திருந்த அவ்வேளையிலும் கூட, அவருடைய நடத்தையில் பண்பு துலங்கியது. தம்மிடத்திலேயும், தம் குதிரை, கழுதையினிடத்தும் தாம் முழந்தாளிட்டுள்ள அந்த மரத்தின் பாலும், ஆண்டவர்னிடமும் ஒரு விசேஷ மரியாதையை வெளிக்காட்டினார் அவர்.

பிரார்த்தனை சுமார் அரைமணி நேரம் நடந்தது. அதை முடித்துக் கொண்டு அவர் எழுந்திருந்தபோது, மறுபடியும் அவரிடம் தென்பு தென்பட்டது. உடனே தன் குதிரையுடன் தமக்குத் தெரிந்த அரைகுறை ஸ்பானிஷ் மொழியில் பேசத் தொடங்கி விட்டார் - களைப்புற்றிருந்த போதிலும் நேர்ப் பாதையைக் கண்டு பிடிக்கும் நம்பிக்கையில் தொடர்ந்து செல்வது தான் நல்லது என்ற தம் கருத்தை அது ஒப்புக்கொள்கிறதா என்று வினவினார் அவர். அவரிடமிருந்த குடிதண்ணீர் தீர்த்துவிட்டது. முதல் நாள் காலையிலிருந்து குதிரையும், கழுதையும் தண்ணீர் குடிக்க வில்லை. எனவே மரணாவஸ்தையுடனேயே மேற்கொண்டு அடி எடுத்து வைக்கக் கூடிய நிலைக்கு அவை வந்துவிட்டன. ஆகையால் கொஞ்ச

i

________________

22

நஞ்சமிருக்கும் பலத்தையும் நீரைத் தேடிக் கண்டுபிடிப்பதில் செலவழிப்பது தான் உத்தமம் என்று அவருக்குத் தோன் றியது.

ஒருமுறை டெக்ஸாஸ் பிரதேசத்தில் நெடுந்தொலைவு பிரயாணம் செய்ய நேர்ந்தபோது, அவர் அடங்காத் தாகத்தை அனுபவித்ததுண்டு. தொடர்ந்து பல தினங்களை அற்ப ஜல வசதியுடனேயே சமாளிக்கும் நிர்ப்பந்தம் அப்போது பன்முறை ஏற்பட்டது. ஆனால் அவருடைய அப்போதைய அவதி, இப்போதைய கஷ்டத்துக்கு உறைபோடக் காணாது! மேலும், அன்று காலையிலிருந்து அவரது உடல் நிலையும் சரியாயில்லை, வாயெல்லாம் காய்ச்சல் கசப்பு; கடுமையான தலை சுற்றல் வேறு. இந்நிலையில், கூம்புருவான இக்குன்றுகள் இருபுறமும் மென்மேலும் தம்மை நெருங்கி வருவதைக் கண்டபோது, தாம் பிறந்து வளர்ந்த ஆவர்ண் மலைகளிடை தொடங்கிய தமது நீண்ட வாழ்க்கைப் பிரயாயாணம் ஒருகால் இங்கேயே முற்றுப் பெற்று விடுமோ என்று நினைக்கலானார் அவர். அப்போது சிலுவையிலறையப்பட்ட ரக்ஷகரின் திருவாயிலிருந்து 'தாகத்தால் தவிக்கிறேன்' என்ற கூக்குரல் வெளிப்பட்டது அவர் நினைவுக்கு வந்தது. நம் பிரபு எத்தனையோ கஷ்டங்கள் பட்டபோதிலும் தாகத்தால் தவிக்கிறேன்' என்ற அந்த ஒரே சொற்றொடர் தவிர அவை குறித்து அவர் வேறெதுவும் சொன்னதேயில்லையல்லவா ?- வெகு நாளையப் பழக்கத்தால் தம்மை அறவே மறந்து, கர்த்தரின் துன்பத்தைப் பற்றியே அவ்விளம் பாதிரி சிந்திக்கத் துவங்கினார். இயேசுவின் உபாதை மட்டுமே அவர் கருத்தை நிறைத்தது. சொந்த தேகத்தின் தேவைகூட அச்சிந்தையில் ஒடுங்கிவிட்டது !

குதிரையின் தடுமாற்றம் அவரது சிந்தனைத் தொடரை அறுத்தது. தம்மைவிட அந்த வாயில்லா ஜீவன்களிடம் தான் அவருக்கு பச்சாத்தாபம் பெருகியது. அம்மிருகங்களைக் காட்டிலும் அறிவு மிக்கவராகக் கருதப்படும் அவர் தானே, முடிவேயில்லாத இந்த அடுப்புத் தொடர்ப் பாலைவனத்தில் அவற்றைச் சீக்க வைத்துவிட்ட்ார். மறதி வீசப்பட்டு, நம் பிரச்னையைப்பற்றியே சிந்தித்துக் குழம்பி, வழி தவறி விட்டோமே என்று வருந்தினார் அவர். தம் அத்தியட்ச குரு மண்டலத்தை

என்று வருந்தினர் இதுக் குழம்பி, வபபட்டு, நம் பிரச்னை

________________

23

எப்படி மீட்பது என்பதுதான் அவரை ஆட்டி வைத்த பிரச்னை. பிரதிகுருவாக அவர் நியமிக்கப்பட்டு விட்ட போதிலும் அந்த குருபீடம் இன்னும் அவருக்குக் கிட்டிய பாடில்லை. எப்படியோ அப்பதவிக்கு அவர் நெட்டித் தள்ளப் பட்டு விட்டார்; ஆனால் அவருடைய மத ஆளுகைக்குட்பட வேண்டிய மக்களோ அவரை வேண்டவேயில்லை !

ஆம், அப்பிரயாணி தான் நியூமெக்ஸிகோவின் பிரதி குருவும், அகாதோனிகாவின் அத்தியட்ச குருவுமான ஜீன் மேரி லாடூர்! இப்பதவிகளுக்கான பட்டாபிஷேகம் ஓராண்டுக்கு முன்பே எசன்ஸினாட்டியில் நடைபெற்று விட்டது. தம் மண்டலத்தை அடைய அப்போதிலிருந்தே அவர் முயன்றாரெனினும் இப்போது தான் பயணம் கைகூடிற்று. நியூமெக்ஸிகோவை எய்த எவ்வழி செல்வது, எவ்வாறு செல்வது என்பதைப் பற்றி மின்மினாடியில் அவருக்குச் சொல்வார் யாருமில்லை; அங்கு யாராவது சென்றிருந்தாலல்லவோ தெரியும்? அவ்விளம் பாதிரி அமெரிக்காவுக்கு வந்த பிறகே நியூயார்க்கிலிருந்து ஸின்ஸினாடி வரை இருப்புப் பாதை போடப்பட்டது; அவ்விடத்துடனேயே அது நின்றுவிட்டது. எனவே இருண்ட கண்டமொன்றின் இடையிலேயே இன்னமும் கிடந்தது நியூ மெக்ஸிகோ. அங்கே செல்ல இரண்டேயிரண்டு வழிகளைத் தான் ஓஹியோ வியாபாரிகள் அறிந்தனர். ஸெயிண்ட் லூயியிலிருந்து புறப்படும் ஸாண்டாஃபே பாதை அவற்றிலொன்று; ஆனால் அது அவ்வமயம் இந்தியர் தாக்குதல்களுக்கிலக்காகி அபாயகரமாகி விட்டிருந்தது. ஆகவே அவரது நண்பர்கள், மிஸிஸிபி நதி வழியே முதலில் நியூ ஆர்லீன்ஸுக்குச் சென்று, அங்கிருந்து படகு மூலமாக கால்வெஸ்டனுக்குப் போகச் சொன்னார்கள். பின்னர், டெக்ஸாஸைக் குறுக்காகக் கடந்து, ஸான் அன்டோனியோவை அடைந்து, அப்பால் கிராண்ட் நதிப் பள்ளத்தாக்கு வழியாக நியூ மெக் ஸிகோவுக்குப் போய்ச் சேரலாமென்றார்கள் - அவரும் அப்படியே செய்தார். ஆயினும், அவ்வழியிலும் தான் எவ்வளவு இடர்கள் !

விபத்துக்காளாகி கால்வெஸ்டன் துறைமுகத்தில் மூழ்கி விட்டது. அவர் சென்ற நீராவிக் கப்பல். அதில் புத்தகங் கள் தவிர தமது இதர உடைமைகள் அனைத்தையும் இழந்து

11:11

-

________________

*24

விட்டார் அவர். அப்புத்தகங்களையும் கூடத் தன் உயிரைப் பணயம் வைத்துத்தான் அவரால் காப்பாற்ற முடிந்தது. பின்பு, வியாபாரிகள் கோஷ்டியொன்றுடன், சேர்ந்து டெக்ஸாவைத் தாண்டினார். ஆனால் ஸான் அன்டோனியாவை நெருங்குகையிலோ, அவர் ஏறியிருந்த வண்டி குப்புறக் கவிழ்ந்த போது கீழே குதித்ததில் அவரது கால் எலும்பு முறிந்தது. அது நேராகி நடக்கச்சக்தி பெறுமளவு, சம்ஸாரி யான ஏழை ஐரிஷ்கார ரொருவரின் இல்லத்தில் மூன்று மாத காலம் நெருக்கியடித்துக் கொண்டு படுத்திருக்க நேர்ந்தது.

எனவே மிஸிஸிபி நதியில் பிரயாணம் செய்யத் துவங்கியதிலிருந்து ஏறக்குறைய ஓராண்டு கழிந்த பின்பே தம் இலக்கை அவ்விளம் பாதிரி எட்டிப் பிடிக்க முடிந்ததுஅப்போது கோடை காலம். சூரியன் மலைவாயில் விழும் தறுவாயில், அதைக் கண்ணுற்றார். மெழுகு மரங்கள் மிகுந்த சமவெளி வழியேதான் பூராவும் ஊர்ந்து கொண்டிருந்தது; அவர் பயணம் செய்த வண்டித் தொடர், அந்தி மாலையில் அவரது சகபிரயாணிகள் 'அதோ ஊர் தெரிகிறது!' என்று கூவினர். அந்தத் திசையில் பார்த்தபோது, மணல்மேடுகளைப் போல் தோற்றமளித்த குட்டையான பழுப்புநிறத் திட்டுகளைத்தான் பூஜ்யர் லாடூர் காணமுடிந்தது. அமைதியான கடலில் பெரும் புயலால் எழுப்பப்பட்ட பேரலைகளை நிகர்த்த மலைத்தொடரின் அடிவாரத்தில் அந்தப் பழுப்புக் குவியல் இருக்கக் கண்டார். மடிப்பு மடிப்பான அம்மலைகளின் உச்சியில் எவ்விதத் தாவரத்தையும் காணோம். மற்றப் பகுதிகளிலோ வெளிர்ப்பச்சையும் கரும்பச்சையும் திட்டுத் திட்டாக ஒளியும் நிழலுமாடின.

வண்டிகள் மேலே தொடர்ந்து சென்றன. சூரியனும் அடிவானத்தை நோக்கி விரைந்தான். அத்தருணத்தில் செக்கச் செவேலென்று சுடர்விட்ட குன்றுக் கும்பலொன்று மலையடிவாரத்தில் தெரிந்தது. சமவெளியிலிருந்த ஒரு தாழ்ந்த பிரதேசத்தைச் சுற்றி இரு கைகளைப்போல் அணைத்திருந்தன அக்குன்றுகள். அந்தத் தாழ்வெளியில் தான் ஸான் டாஃபே உள்ளது. அப்பாடா, ஒரு வழியாக அதை எட்டிப் பிடித்துவிட்டார் லாடூர்!

முற்றிலும் பச்சை வெட்டுக் கற்களாலான வீடுகளே

________________

25

கொண்ட நகரம் அது. அகலம் அதிகமின்றி, நீண்டு நெளிந்து கிடந்தது. பசும்புல் சதுக்கமொன்றும் இருந்தது. ஒரு கோடியில் மாதா கோயில் காட்சியளித்தது; அதன் இரு மண் கோபுரங்களும், தட்டையான அந்நகரக் கூரைகளுக்கிடையே உயர்ந்தோங்கி நின்றன. நகரின் முக்கியத் தெரு அந்த மாதா கோயிலிலிருந்து துவங்கியது - ஊற்றுக்கண்ணிலிருந்து உற்பத்தியாகி ஓடும் ஓடையைப் போல அந்நகரம் அந்த ஆலயத்திலிருந்தே தொடங்கிப் பெருகியிருந்தது - கோயில் கோபுரங்களும், தாழ்ந்த வீடுகளும் அந்த அஸ்தமன ஒளியில் ரோஜா வண்ணமாகத் திகழ்ந்தான். அவ்வப் போது காற்றில் தழைந்தாடிய பெருமரங்கள், அவ்வினிய காட்சிக்குச் சுவை கூட்டின.

உள்ளத்தையள்ளிய அந்நேரத்தில் அவ்விளம் பிஷப் தனியாக இருக்கவில்லை. பால்ய நண்பரும், இந்த நீண்ட யாத்திரையில் பங்கெடுத்து, ஆபத்துக்களைப் பகிர்ந்து கொண்டவருமான பூஜ்யர் ஜோஸப் வெய்லாண்டும் உடனிருந்தார் : ஆண் டவன் கீர்த்தியை நிலை நாட்ட ஒன்றாகவே ஸான்டாஃபே நகரினுள் நுழைந்தனர். அவ்விருவரும் .....

அந்த பூஜ்யர் லாடூர் இப்போது இந்த மணல் குன்றுகளுக்கு மத்தியில் மாட்டிக் கொண்டது எப்படி? தமது தலைமையகத்திலிருந்து வெகு தூரத்துக்கப்பால் தன்னந்தனியாய்த் திண்டாடுவதேன் ? வழிதவறிப்போய் திரும்பவும் பாதையை அடையத் தெரியாமல் முழிப்பானேன்?

அவர் ஸான்டாஃபேயை அடைந்ததும், நடந்தது இது தான் : அங்கிருந்த மெக்ஸிகப்பாதிரிகள் அவரது அதிகாரத்தை ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டனர். பிரதி குரு அல்லது அக தோனிகாவின் பிஷப் என்று எவரும் இருப்பதாகத் தங்களுக்குத் தெரியவே தெரியாதென அவர்கள் கூறிவிட்டனர். டூராங்கோ பிஷப்பின் ஆளுகைக்கே தாங்கள் உட்பட்டவர்கள் என்றும், அதற்கு மாறான ஆக்ஞை எதுவும் தங்களுக்குக் கிடைக்கவில்லை என்றும் சாதித்தனர். பூஜ்யர் லாடூர் உண்மையிலேயே அவர்களுடைய பிஷப்பாக இருப்பாரேயா னால் அவருடைய அதிகாரப் பத்திரங்கள் எங்கே என்றும் கேட்டனர். அப்படிப்பட்ட ஒரு தோற்பத்திரமும், கடிதங் களும் டூராங்கோ பிஷப்புக்கு அனுப்பப் பட்டது லாடூருக்குத்

530 - 2

________________

26

தெரியும். ஆனால் இப்போதோ அவை அந்த பிஷப்பினிடமே முடங்கிவிட்டன என்பது தெளிவாகத் தெரிந்தது. அந்த பிராந்தியத்தில் இன்னும் தபால் போக்குவரத்து வசதி ஏற் படவில்லை; டூராங்கோ பிஷப்புடன் தொடர்பு கொள்ள வேண்டு மென்றால் அதற்குத் துரிதமான நிச்சயமான ஒரேவழி, அவரிடம் நேரிடச் செல்வதுதான்!- ஆகவேதான், சுமார் ஓராண்டு காலம் பிரயாணம் செய்து ஸான்டாஃபேயை அடைந்த பூஜ்யர் லாடூர், மீண்டும் சில வாரங்களுக்குள்ளாகவே பழைய மெக்ஸிகோவுக்குப் பயணம் புறப்பட வேண்டியதாகிவிட்டது. போகவர மூவாயிரம் மைல் பிடிக் கும் அப்பிரயாணத்தைத்தான், குதிரை, கழுதை தவிர வேறு துணையின்றி அப்போது மேற்கொண்டிருந்தார்,

கிராண்ட் பள்ளத்தாக்கின் பிரதான சாலையிலிருந்து பல பாதைகள் பிரிந்து போகின்றனவாதலால், அவ்வழியில் புதிதாகச் செல்பவருக்கு எளிதில் திசை தவறிவிடுமென முன்னதாகவே அவர் எச்சரிக்கப்பட்டிருந்தார். எனவே முதல் சில நாட்களுக்கு அவர் ஜாக்கிரதையாக, வழியைப் பார்த்துப் பார்த்தே சென்றார். ஆனால் அதற்குப் பிறகு அலட்சியம் ஆட் கொள்ளவே, அவ்வட்டாரப் பாட்டைகள் ஏதோவொன்றில் அவர் திரும்பிவிட்டார். தாம் வழிதவறி வந்துவிட்டோம் என்பதை அவர் உணர்வதற்குள் அவருடைய தண்ணீர்ப்பை காலியாகிவிட்டது; குதிரை, கழுதையும், வந்தவழியே திரும்ப முடியாத அளவு களைப்படைந்துவிட்டன. ஆயினும் அந்தப் பொதி மணல் பாதையில் போகப் போகச் சுவடுகள் மறைந்து கொண்டே வந்தன; அது எங்காவது ஓரிடத்துக்குக் கொண்டு போய் விட்டேயாக வேண்டுமென்று நினைத்து, விடாமுயற்சியுடன் அப்பாதையிலேயே தொடர்ந்து சென்று கொண்டிருந் தார் பாதிரியார். -

திடீரெனத் தம் குதிரையின் தேகத்தில் ஏதோ மாறுதல் ஏற்பட்டதை அவர் உணர்ந்தார். நீண்ட நேரத்துக்குப் பின்னர் அப்போது தான் தலையை நிமிர்த்திய அக்குதிரை, தனது பலத்தையெல்லாம் கால்களிலே பாய்ச்சியதாகத் தோன்றியது. சுமை கழுதையும் அவ்வாறே செய்தது. இரண்டும் நடையை துரிதப்படுத்தின. தண்ணீரைத்தான் அவை மோப் பம் பிடித்து விட்டனவோ ?

எல்லாம் காயை நிமிர்த்னட நேரத்துக்

________________

27

கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் கழிந்தபின், இதுவரை தாம் கடந்து வந்திருக்கும் நூற்றுக் கணக்கானவற்றைப் போலவேயிருந்த இரு குன்றுகளுக்கிடையே நுழைந்து வளைந்து செல்கையில் இருமிருகங்களும் மகிழ்ச்சியுடன் கனைத்தன, கீழே, அலைபாய்ந்த அந்த மணற் கடலின் மத்தியில் பசும்புல் தரையும், நீரோடை யொன்றும் தென்பட்டன. பாலையிலிருந்த அந்தப் புல்திட்டின் அகலம், கல்லெறி தூரம் தான் இருக்கும் போலிருந்தது. எனினும் இதுவரை கண்டிருந்த யாவற்றையும் விடப் பசுமையாக இருந்தது அது. ஐரோப்பாவிலேயே பசுமை மிக்கதான தம்முடைய சொந்த ஊரில் கூட இவ்விதச் செழிப்பைக் கண்டதில்லை அவர்! குதிரையின் கழுத்தும், தோள்களும் சிலிர்த்திராதிருந்தால் இது வெறும் உருவெளித்தோற்றமே, தாகத்தால் ஏற்பட்ட பொய்க் காட்சியே என்று தான் அவர் முடிவு கட்டியிருப் பார்.

ஓடும் நீர், தட்டைப் புல் நிலங்கள், பருத்திக் காடுகள் வேல மரங்கள், அழகிய தோட்டங்களைக் கொண்ட சிறிய மண்வீடுகள், வெள்ளாட்டு மந்தை யொன்றை ஓடையை நோக்கி ஓட்டிப்போகும் ஒரு சிறுவன்- இவை யாவும் அந்த இளம் பிஷப்பின் கண்களில் பட்டன.

சில விநாடிகளுக்குப் பிறகு, மிதமிஞ்சித் தண்ணீர் குடித்துவிடாதபடித் தமது குதிரைகளைக் கட்டுப்படுத்த அவர் முயன்று கொண்டிருக்கையில், கருப்புக் கம்பளியால் முக்கா டிட்டிருந்த ஒரு சிறு பெண் அவரை நோக்கி ஓடி வந்தாள். அவளுடைய கனிவான முகத்தைப்போல் தாம் ஒருபோதும் கண்டதில்லை யென்றே எண்ணினார் அவர். கிறிஸ்தவ பாணி யில் முகமன் கூறிய அவள், 'ஐயா, மேரியாப்யூரிஸிமா தங்களை வணங்குகிறாள். தாங்கள் எங்கிருந்து. வருகிறீர்கள் ?' என்று வினவினாள்.

'அருள் பெற்ற குழந்தாய்! வழி தவறிவிட்ட பாதிரி நான். தாகத்தால் தவிக்கிறேன்' என்று ஸ்பானிஷ் மொழி யில் அவர் பதிலளித்தார்.

''பாதிரியார்?'' என்று ஆச்சரியம் மேலிடக் கூவினாள் அவள். "நான் காண்பது கனவா, என்ன ? இல்லை, இதோ உங்களைப் பார்க்கிறேன் ! ஆகவே, நனவுதான் இது ! சுவாமி

________________

28

இது போன்ற பாக்கியம் எங்களுக்கு இதுவரை கிடைத்ததில்லை. என் தந்தையின் பிரார்த்தனைகளின் பலனேதான் இது ... ரெட்ரோ , ஓடு. தந்தையாரிடமும், ஸால்வடோரிடமும் போய்ச் சொல்லு!''

பாலையிலே சோலை

ஒரு மணி நேரத்திற்குப் பின்பு, மணற் குன்றுகள் மீது இருள் கவியத் தொடங்கியபோது அந்த மெக்ஸிகோ கிராமத்தின் பிரதான வீட்டில் உணவுண்ண அமர்ந்திருந்தார் அவ்விளம் பிஷப், 'பாலையிலே சோலை' என்று அவ்விடத்துக்குப் பெயர் என்பதை அப்போது அறிந்தார்; பொருத்தமான பெயர்தான் என்று சிலாகித்தார். அவருக்கு உணவளித்து உபசரிக்க முன்வந்த பெனிடோ என்ற பெரியவர், அவரது மூத்த மகன், இரண்டு பேரப்பிள்ளைகள் ஆகியோரும் மேஜையைச் சுற்றி உட்கார்ந்திருந்தனர். பெரியவர், தாரத்தை இழந்தவர். பிஷப்பை ஓடைக் கரையில் சந்திக்க ஓடிவந்த ஜோஸபா என்னும் அவருடைய மகள் தான் வீட்டைக் கவனித்துக் கொள்பவள், இறைச்சியுடன் சேர்த்துப் பக்குவம் செய்யப்பட்ட மொச்சை, ரொட்டி, ஆட்டுப்பால், புதிய பாலாடைக் கட்டி, பழுத்த ஆப்பிள்கள்- இவையே விருந்துப் படையல்கள்.

பச்சை வெட்டுக் கற்களால் கட்டப்பட்டு வெள்ளை யடிக்கப்பட்ட கனமான சுவர்களைக் கொண்ட அவ்வறையில் நுழைந்தபோதே, அங்கு ஒருவித அமைதி நிலவுவதை பூஜ்யர் வாடூர் உணரவாரம்பித்து விட்டார். அதனுடைய வெறுமையிலும், எளிமையிலும் ஏதோ ஒரு நேர்த்தி பரிமளித்தது. அவர்களுக்கு உணவு பரிமாறிவிட்டு, சுவரோரமாக நிழலில் ஒதுங்கி நின்று, பாதிரியார், முகத்தின் மீது தன் ஆவல் சொட்டும் கண்களைப் பதித்திருந்த அப் பெண்ணிடமும், அதே போன்ற அடக்கமான எழில்தான் கொழித்தது.