தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Monday, September 11, 2023

இச்சை-ஆர் இராஜேந்திரசோழன்

 
இச்சை
+++++++++
பட்டப் பகல்
மாதிரித் தெரிகிறது.
நட்சத்திரங் கள் பிரகாசித்துக்கொண்டிருக்கின்றன. எண்ணமுடியாத நட்சத்திரங்கள், மொத்தமாய்த் திரண்டு எழுந்திருக் கின்றன. நிலவு ஒளி வீசுகிறது. கொஞ்சம் பின்னமான நிலவு. சாம்பல் பூத்த மாதிரி. சரசரவென்று ஊரும் மேகங்களுக்கிடையே மறைந்து மறைந்து வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. பூமியெங்கும் லேசாய் மங்கிய வெளிச் சம். எது எது என்ன என்று ஓரளவு தெரிந்துகொள்கிற மாதிரி
...
நீளமாய்
ஒரு பாதை தெரிகிறது. கட்டை வண்டிப் பாதை. இரண்டுபுறமும் வண்டித்தடம் பதிந்து நடுவில் மேடு தட்டியிருக்கிறது. பாதை நெடுகிலும் பனைமரங்கள். சாரிசாரியாய்.கருப்பு கருப்பாய். உயர உயரமாய். பனை ஓலைகள் சலசலக்கும் சத்தம் கேட்கிறது. நடுநடுவே முட் செடிகள். புதர் மாதிரி மண்டிக் கிடக்கின்றன. அங் கெல்லாம் ஒரே இருட்டு. பாதை மட்டும் மங்கலாய் பூஞ்சை படிந்த மாதிரித் தெரிகிறது.
மெல்ல
நடந்துகொண்டிருக்கிறான். எதற்கு தெரியவில்லை. எதற்காகவோ காத்துக்கொண்டிருக்கிற
என் று


மாதிரியிருக்கிறது. கிடைத்துவிடும் என்று நம்பிக்கையிருக்கிறது. ஒவ்வொரு பொருளாக உற்றுப் பார்த்துக்கொண்டே நடக்கிறான். நாக்கு வரள்கிறது. மூச்சு இறுகுகிறது. அடிக்கடி பெரு மூச்சாய் வெளிப்படுகிறது.
அது இன்னும் கொஞ்ச நேரத்தில்
பாதையில் இப்போது வீடுகள் தெரிகின்றன. வரிசையாய் நெருக்கமாய் பார்ப்பதற்கு ஒரு தெரு மாதிரியில்லை. இங் கொன்றும் அங்கொன்றுமாகப் பரவலான வீடுகள். பனை ஓலை வேய்ந்து, விழல் வேய்ந்து குடிசைகள் போல் இருக் கின்றன. கருப்புக் கூடாரம்போல குகைகளைப்போல கானகத்திலே அமைந்த ஆசிரமங்களைப்போல இருக் கின்றன. குடிசைகளில் ஜனங்கள் வசிப்பதற்கான அறி குறியே தென்படவில்லை. சாத்தியிருக்கிறதா திறந்திருக் கிறதா என்பதைக் கூட தெரிந்துகொள்ள முடியவில்லை. ஏதோ வீடுகள் என்பதை மட்டும் உணர முடிகிறது. எதையோ நோட்டம் விட்டபடி குறுக்கும் நெடுக்குமாக நடக்கிறான். குடிசைகளிலிருந்து யாராவது வருவார்கள் என்று எதிர்பார்த்து நடக்கிற மாதிரித் தோன்றுகிறது. ஆனால் யாரும் வரவில்லை. எங்கும் ஒரே நிசப்தமே நிலவி யிருக்கிறது. சின்ன சப்தம்கூட வரவில்லை. மேகங்கள் கருத்துக்கொண்டு வருகின்றன. நிலவு வெளிறிக்கொண்டு போகிறது. சிதைந்து, கொஞ்சம் கொஞ்சமாக விரிந்து அகலமாகி, வண்டிச் சக்கரமளவுக்குப் பெரிதாகத் தெரி கிறது. கீழே ஒளி கொஞ்சம் மங்குகிறது. முன்னைவிட இருட்டாகிவிட்டதுபோல் தோன்றுகிறது.
பாதையின் வலதுபுறத்தில் பசுமையான வயல்வெளிகள் தென்படுகின்றன. பயிர்கள் பசுமை கட்டி குத்திட்டு நிற்கின்றன. பனி பெய்கிறது. இளந்தாள்கள் கிசுகிசுத்து தலையாட்டுகின்றன. வயல்களுக்கு நடுவே வரப்புகள். அடர்த்தியாய் புல் வளர்ந்து செழித்திருக்கிறது. வரப்பும் வயலும் நெருக்கமாய் மணற்பாப்பையே பார்க்க முடி

யாதபடி மறைத்திருக்கிறது. நடுவில் வெள்ளையாய் ஏதோ ஒன்று தெரிகிறது. உற்றுப் பார்க்கிறான். வெள்ளை வெளே ரென்று சட்டை வேட்டி. வெள்ளைத் தலைப்பாகை, எவனோ நிற்கிற மாதிரித் தெரிகிறது. முகம் தெரியவில்லை பக்கத் தில் எதுவோ ஒன்று பசு மாதிரித் தெரிகிறது. அதுவும் வெள்ளை. பளிச்பளிச்சென்று எல்லாம் சுத்த வெள்ளை. மாடு மேய்க்கிறாற் போலிருக்கிறது.
திரும்பி நடக்கிறான். ஒரு பக்கம் நெருக்கமான தென்னந் தோப்புகள். நிழல் மண்டிக் கிடக்கிறது. வெளிச்சம் வந்த மாதிரியிருக்கிறது. தண்ணீர் பாய்ச்சிய ஈரம் மிகுந்த சொத சொதப்பான நிலம் தெரிகிறது. திட்டுத் திட்டாய் அருகம்புற்கள் வளர்ந்திருக்கின்றன. காய்ந்து மக்கிய ஓலைகள் சிதறிக் கிடக்கின்றன. தோப்பு முழுதும் இளநீர்க்குலைகள், தேங்காய்கள் கேட்பாரின்றிக் காய்த்துத் தொங்கிக்கொண்டிருக்கின்றன. சுற்றிச் சுற்றிப் பார்க்கிறான். பாதையின் இருபுறமும் முட்புதர்கள். அடர்த்தியாய் இடுப்புயரத்துக்கு வளர்ந்து கிடக்கின்றன. வழியொன்றும் தெரியவில்லை. அண்ணாந்து பார்த்துக் கொண்டே சிறிதுநேரம் நிற்கிறான். மெல்ல நடக்கிறான்.
அமர்ந்து
ஒருபுறம் அரசமரத்தடியில் கொஞ்சம் பேர் கும்பலாக பேசிக்கொண்டிருக்கிறார்கள். குளத்தங்கரை அரசமரம் போலத் தெரிகிறது. குளம் தெரியவில்லை. அவர்களும் உருவம் தெரியாதவர்களாயிருக்கிறார்கள். அரசமரம் லேசாய் கிளைகளை ஆட்டுகிறது. கிழே கிழவி யொருத்தி நிழலில் தூங்குகிறாள். கால்களை மடக்கி வலது கையைத் தலைக்கு வைத்துச் சுருண்டு படுத்துக்கொண்டிருக் கிறாள். பக்கத்தில் ஒருத்தன் கீற்று முடைகிறான். முண்டாசு கட்டிக்கொண்டு ஒரு காலை சப்பணம் போட்டு ஒரு காலை குத்திட்டு கீற்றை மெறித்து முடைந்துகொண்டிருக்கிறான். யார் முகமும் பழக்கமானதாய்த் தெரியவில்லை. தோப் புக்கும் அவர்களுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிற மாதிரித்


தோன்றுகிறது. எல்லாரும் இவனைப் பார்த்துச் சிரிக்கிறார் கள். கையைக் காட்டி எதுவோ சொல்லிப் பேசிக்கொள் கிறார்கள். அசிங்கப்பட்டவன் போலத் திரும்பிக்கொள் சிறான். வேறு பக்கமாய் நடந்து போகிறான்.
மேகங்கள் கலைகிற மாதிரித் தெரியவில்லை.நிலவு அகலமாக வேயிருக்கிறது. ஆனால் வெளிச்சம் இல்லை. கருக்கலில் நடப்பதைப் போல இருக்கிறது. முட்புதர்களிலிருந்து தீச்சுகீச்சென்று எதுவோ சத்தம் வருகிறது. ஓலைக்குருத்து களிலிருந்து டுகுடுகுவென்று வேறு சத்தம்
கேட்கிறது. பாதையில் புதுசாய் ஏதோ ஒரு வண்டி வந்துபோன தடம் தெரிகிறது. நடுமேட்டிலேயே நடக்கிறான்.
எல்லா வீடுகளும் தியானத்தில் ஆழ்ந்திருக்கின்றன. கோடி. யில் தனியாய் ஒரு வீடு. கல்வீடு. மெத்தை வைத்துக் கட்டப் பட்டிருக்கிறது. சுற்றிலும் தென்னை மரங்கள். தாழ்ந்த ஓலைகள் மெத்தையைத் தொட்டுத் தொங்கிக்கொண்டிருக் கின்றன. சுற்றிலும் குளிர்ந்த நிழல். ஓலைகள்
சலசலக்கின்றன.இதமான காற்று தவழ்கிறது. வீட்டை நோட்டம் விடுகிறான்.
வீட்டோடு சேர்ந்தாற்போல முன்புறம் வெற்றிலைக்கடை. கிராமப்புறத்துக் கடைகளைப் போல இருக்கிறது. கிழவன் ஒருத்தன் கடையில் குந்தியிருக்கிறான். நரைத்த தலையும், சுருக்கம் விழுந்த முகமும் இவனுக்குப் பிடிக்கவில்லை. ஒட்டிப்போன கன்னங்கள் மேலும் ஒட்டி ஒட்டி டொங்கு விழுமளவுக்கு சுருட்டை வாயில் வைத்துப் பக்பக்கென்று இழுத்துப்புகை விட்டுக்கொண்டிருக்கிறான். அருவருப்பாய் இருக்கிறது. வயிற்றைக் குமட்டுகிறது. புறங்கையால் முகத்தைத் தேய்த்துவிட்டுக்கொண்டு நிற்கிறான்.
வாசலில் பசுமாடு கட்டியிருக்கிறது. படுத்து
வைக்கோலின்மீது தெருவில்
அசைபோட்டுக்கொண்டிருக்கிறது.

நின்றபடியே வீட்டை ஊடுருவி நோக்குகிறான். பரக்கத் திறந்து கிடக்கிறது. நாலைந்து வாயிற்படிகளைத் தாண்டிப் பின்னால் தோட்டமும் பூச்செடிகளும் நீலவானமும் தெரி கின்றன. கொஞ்ச நேரம் நின்று பார்க்கிறான். யாரையும் காணவில்லை. கிழவன்தான் இருக்கிறான். அவனைக்கூடப் பார்க்க முடியாதபடி சுற்றிலும் சுருட்டுப்புகை சூழ்ந்து கொள்கிறது. ஏமாற்றத்துடன் நிற்கிறான். கண்கள் ஏக்கத்தோடு சுழல்கின்றன. காற்று கொஞ்சம் பலமாய் வீசுகிறது. தெருவின் மேல் புழுதியை வருடிக் கிளப்பிக் கொண்டுவந்து முகத்தில் அப்புகிறது நின்று முகத்தைக் கைகளால் மூடிக்கொள்கிறான். காற்று நிற்கிறது. அப் பால் நகர்கிறான்.
தவிப்போடு நடந்து செல்கிறான். வழி தெளிவாக இல்லை எங்கே போகிறான். எதற்காகப் போகிறான் என்பதும் சரியாகப் புரியாமலிருக்கிறது. கால்போன போக்கில் நடப்பது மாதிரியிருக்கிறது. ரொம்பதூரம் வந்துவிட் டிருக்கிறான். வீடுகளெல்லாம் பின்னால் தங்கிவிட்டிருக் கின்றன.
ஜனங்களெல்லாம் பின்னால் தங்கிவிட்டிருக் கிறார்கள். தனியாக இருக்கிறான். தனியாக இருப்பதும் ஒரு வகையில் நிம்மதியாய் இருப்பதுபோல் தோன்று சிறது.
உட்காரலாமா என்று பார்க்கிறான். உட்காரப் பிடிக்கவில்லை.
பக்கத்தில் ஆலமரம் ஒன்று தெரிகிறது. தனியாய் நிர்க் கதியாய் நிற்கிறது. கிளைகள் படர்ந்து விழுதுகள் நிறை யத் தொங்குகின்றன. இப்போது காற்று இல்லை. இலை களெல்லாம் நிச்சலனமாய் அமைதியோடு இருக்கின்றன. தூரத்தில் சவுக்கைத் தோப்பு தெரிகிறது. நுனிமரங்கள் கூகூகூசாய்த் தெரிகின்றன. எங்கிருந்தோ நாய் ஒன்று ஓடி வருகிறது. கருப்புநிற நாய். சுத்த அட்டைக் கருப்பு. அந்தக் கருக்கலிலும் கருப்பாய்த் தெரிகிறது. பெண்நாய் போலிருக்கிறது. அடிவயிற்றில் காம்புகள் தெரிகின்றன.



பின்னாலேயே ஒரு நாய். ஆண் நாயாக இருக்க வேண்டும். அதுவும் கருப்பு. பெண் நாயின் பின்புறத்தை மோந்து மோந்து பார்த்துக்கொண்டே ஓடி வருகிறது. பெண் நாய் நிற்கவில்லை. வாலை மடக்கிப் பின்புறத்தை மூடிக் கொண்டே நிலையில்லாமல் இங்குமங்குமாக ஓடுகிறது. ஆட்டங் காட்டுகிறது.
இவன் வெறியோடு பார்க்கிறான். கண்கள் விழுங்கி விடுவதைப் போல நோக்குகின்றன. அவைகள் ஆலமரத் தைச் சுற்றிச்சுற்றி ஓடி வருகின்றன. மரம் மறைகிறது. அவைகள் மறைகின்றன. பார்க்காமலிருக்க முடியவில்லை. எட்டிச் சென்று பார்க்கிறான்.
அவைகள் சமரசமாகி விட்டிருக்கின்றன. பெண் நாயின் அடிவயிற்றை தன் முன்னங்கால்களால் பின்னிக்கொண்டு நிற்கிறது ஆண் நாய். பின்னங்கால்களை மட்டும் தரையில் ஊன்றி இடுப்பை ஆட்டி ஆட்டி அசைக்கிறது. அசைவு வேகம் கொள்கிறது. கண்கள் செறுகுகின்றன. பெண் பேசாமல் நிற்கிறது
வாய் பிளந்து நீர் சொட்டுகிறது. இவனுக்குத் தாங்கலில்லை. உடம்பு சூடேறுவதைப் போல இருக்கிறது. நரம்புகள் புடைத்துக்கொண்டு வருகின்றன. தத்தளிப்போடு நிற்கிறான்.
பின்னாலிருந்து யாரோ கைகொட்டிச் சிரிப்பது போலத் தோன்றுகிறது. ஆச்சர்யத்துடன் சத்தம் வந்த திசையை நோக்கித் திரும்புகிறான். வியப்பு மேலிடுகிறது.
புதர் மறைவிலிருந்து ஒருத்தி இவனைப் பார்த்துச் சிரிக் கிறாள். இளவயசு மாதிரியும் இல்லை.கிழவயசு மாதிரி யும் இல்லை. நடுத்தரம். முகம் தெளிவாய்த் தெரிய வில்லை. புடவை தெரிகிறது. இடுப்பில் தண்ணீர்க் குடம் தெரிகிறது. மண்குடம். இன்னமும் இவனைப் பார்த்துச் சிரித்துக்கொண்டுதானிருக்கிறாள். இவனை அதிகநேர மாய் கண்காணித்துக்கொண்டு இருந்தவளைப் போலவும்,

இவனுடைய தவிப்புகள், உணர்ச்சிகளைப் புரிந்துகொண்ட வள் போலவும் நிற்கிறாள்; இவனுக்காகக் கையைக் காட்டி அழைக்கிறாள். அழைப்பு கவர்ச்சிகரமாக இருக்கிறது.
ரத்தம் சூடேறுகிறது. சித்தம் கலங்கிய நிலையில் சுவா தீனம் இழந்தவனைப் போல அவளை நோக்கி நடக்கிறான். கிட்டத்தில் மிக நெருக்கத்தில் போகிறான். சிரித்துக் கொண்டே அவள் வலது கையால் இவன் இடுப்பைச் சுற்றித் தன்னோடு சேர்த்து
அணைத்துக்கொள்கிறாள். ரொம்பக் குள்ளமாக இருக்கிறாள். தலைமயிர் கலைந்து காதுகளை மூடித் தொங்குகிறது. மார்பிலும் புரள்கிறது. உடம்பில் நகை நட்டு எதுவுமில்லை. ரவிக்கை கூட இல்லை. வெறும் புடவை மட்டும் கட்டி மாராக்குப் போட்டிருக் கிறாள். கருப்பு உடம்புதான். முகம் வசீகரமாய் இருப்ப தாகப் படுகிறது. குடத்தைக் கூட கீழே வைக்காமல் அன் பும் ஆதரவும் பொங்க குழந்தை மாதிரி இவனை நின்ற வாக்கிலேயே சேர்த்து அணைத்துக்கொண்டிருக்கிறாள். இதமாகவும் சுகமாகவும் இருக்கிறது. மெய்மறந்து நிற் கிறான். மேற்கொண்டு என்ன செய்வது என்று புரியாத வன் போல நிற்கிறான்.
அவள் பிடியைக் கொஞ்சம் தளர்த்தி இவனைக் கொஞ்சம் விலக்குகிறாள். பரிவும் கனிவும் தழைய இவன் முகத்தைப் பார்க்கிறாள். பச்சாதாபம் கொண்டவள் மாதிரிப் பார்க் கிறாள். வெறும் மாராக்கால் மூடியிருந்த அவள் மார்பை விலக்கித் தளர்ந்து தொங்கிக்கொண்டிருக்கும் வலது ஸ்தனத்தை வலதுகையால் தூக்கிப்பிடித்து இவனுக்குக் காட்டுகிறாள்.
கிறக்கத்துடன் கண்கள் செறுகக் குனிந்து வாயை வைத்துச் சப்ப ஆரம்பிக்கிறான். அப்படியே அவளை இரண்டு கைகளாலும் சேர்த்துப் பிடித்து அணைத்து வாயை மட்டும் வைத்துச் சப்பிக்கொண்டிருக்கிறான். மென்மையாகவும்


மெதுமெதுப்பாகவும் இருக்கிறது. கண்கள் தாமாகவே
மூடிக்கொள்கின்றன.
போலிருக்கிறது.
அவளைக் கீழே தள்ளவேண்டும்
சட்டென்று கொஞ்சமும் எதிர்பாராதவிதமாக அவள் இவன் முகத்தை விலக்கித் தள்ளுகிறாள். மாராக்கால் மூடிக்கொள்கிறாள். ஏமாற்றமாகப் போய்விடுகிறது. தூண்டிலிடப்பட்ட உணர்ச்சிகளுடன் அசைவற்று நின்று அவளையே வெறித்துப் பார்க்கிறான்.
"ரெண்டு ரூவா குடுக்கணும்” என்று சிரிக்கிறாள்.
இவனுக்குத் திக்கென்கிறது. பாக்கெட்டைத் தடவுகிறான். ஒரு ரூபாய் நோட்டும் கொஞ்சம் சில்லறையும் இருக் கின்றன. இவன் முன்புறம் பாக்கெட் வைத்து சட்டை தைப்பதில்லை. பாக்கெட் இருக்கிறது. காசு எப்படியோ வந்திருக்கிறது. இவனுடைய திகைப்பைக் காண அவள் "எவ்வளோதான் வச்சிக்னு இருக்கற காட்டு பாப்பம்' என்கிறாள். எக்கிப் பாக்கெட்டைப் பார்க்கிறாள். சில்லறை இருப்பதைப் பார்த்துக் கையைவிட்டு எடுத்து எண்ண ஆரம்பிக்கிறாள். எவ்வளவு என்று தெரியவில்லை. இடுப் பில் செறுகிக்கொள்கிறாள்.
எல்லாவற்றுக்கும் இவன் பேசாமல் இருக்கிறான். அவள் இஷ்டத்துக்கு விட்டுச் சும்மா நிற்கிறான். பாக்கெட் எட்டாமல் இவனைப் பிடித்துக்கொண்டு இவனையே தாங்கு தலாக ஆக்கிக்கொண்டு எட்டிப் பார்ப்பதும், நெஞ்சிலே சாய்ந்து எம்புவதும் கிளுகிளுப்பாக இருக்கிறது. உள்ளே கைவிடும்போது சுகமாக இருக்கிறது. சில்லறையை எடுத் துக்கொண்டு நோட்டையும் எடுக்க யத்தனிக்கிறாள் அவள். சட்டென்று பாக்கெட்டோடு சேர்த்து ரூபாயை அழுத்திப் பிடித்துக்கொள்கிறான். அவளையே உற்றுப் பார்க்கிறான். கண்டிப்புக் காட்டிவிட்டு "அப்பறமா" என்கிறான். அவளுடைய வெறுங்கை மட்டும் வெளியே வருகிறது. பழைய படியே சிரித்துக்கொண்டே அவள் “சரி வா" என்கிறாள்.
செடிகளிலும் புதர்களிலும் பனி பெய்து கொண்டிருக் கிறது. வானத்தில் நிலவு இல்லை. பெரிதாகி வந்த நிலவு
இல்லை.பெரிதாகி எங்கோ மறைந்துவிட்டிருக்கிறது. நட்சத்திரங்கள் மட்டும் மினுக்கிக்கொண்டிருக்கிறன. அவள் போகிற வழியில் அவளோடே நடந்து செல்கிறான். பக்கத்திலேயே உரசிக் கொண்டு கைகளால் வளைத்து அணைத்துச் சேர்த்துக் கொண்டு தள்ளாடியபடியே நடக்கிறான். கிறக்கத்தில் கால்கள் பின்னுகின்றன. அவள்மேல் சாய்ந்து அவளையே பற்றுதலாக ஆக்கிக்கொண்டு நடக்கிறான். அதே தெரு அதே பனைமரங்கள். முட்புதர்கள். தென்னந்தோப்புகள் வந்த வழியாகவே திரும்புகிற மாதிரியிருக்கிறது. ஆனால் தெருவில் யாரும் இல்லை.யாரும் பார்த்துவிடுவார்களோ என்று கூச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை. இவனும் அவளும்தான் இருக்கிறார்கள். அவள் வழிக்கு நடக் கிறான்.
வலதுபக்கம் ஒரு
ஒரு கட்டை வண்டிப்பாதை தெரிகிறது. பிரிவில் பாலம் ஒன்று தெரிகிறது. கீழே தெருவை ஒட்டினாற் போல நீளமான வாய்க்கால். வாய்க்காலில் இல்லை. பசுமையான மெத்து மெத்தென்ற புல்வெளிதான் தண்ணீர் தென்படுகிறது. பாலத்தின் அடியில் இருள். கம்மலான இருள். கமுக்கமாக இருக்கும் என்று தோன்றுகிறது. இவன் இருளுக்காகக் கையைக் வேண்டாம் என்று தலையை அசைத்துவிட்டு நகர்கிறாள்.
காட்டுகிறான். அவள்
இவன் முகம் கொஞ்சம் சுருங்குகிறது. பேசாமல் கூடவே நடக்கிறான். சாலையிலேயே வெகுதூரம் போகிறாள். கொஞ்சதூரத்தில் இடதுபக்கம் ஒரு மாந் நடந்து தோப்பு தெரிகிறது. அடர்ந்த தோப்பு. நிலவொளியில் மங்கித் தெரிகிறது. காய்கள் பருத்துத் தொங்குகின்றன. கீழே சன்னமான இருள். நடுவே கட்டில் ஒன்று. மேலே


கோரைப்பாய் விரித்துக் கிடக்கிறது. யாரையும் காண

எதிர்பார்த்துப் போட்டு வைத்த
வில்லில.
மாதிரியிருக்கிறது.
இவன் அந்தப் பக்கமாகக் கையைக் காட்டுதிறான். அவள் விருப்பமில்லாமல் தலையை அசைக்கிறாள். எதுவும் பதில் கூடச் சொல்லாமல் நடந்து போகிறாள். இவனுக்கு சுவாரஸ்யம் குன்றுகிறது. ஏதாவது ஒரு இடமாகப் பார்த்துப் போகாமல் அவள் பாட்டுக்கு எங்கோ போய்க் கொண்டிருப்பதாகப் படுகிறது. எங்கே போய்க்கொண் டிருக்சிருள் என்பது தெரியவில்லை. சோர்வு ஏற்படுகிறது.
சட்டென்று நின்று இவனைப் பார்க்கிறாள். ஆதரவாக இரண்டு கைகளாலும் இவனைத் தாங்கிக்கொள்கிறாள். இடுப்பில் தண்ணீர்க் குடத்தைக் காணவில்லை. எங்கு போயிற்று என்று தெரியவில்லை. இவனும் கூடவேதான் வருகிறான். ஆச்சரியமாக இருக்கிறது. சந்தேகத்தோடு அவளை உற்று நோக்கியபடியே நடக்கிறான்.
சற்றுத் தள்ளி ஒரு மண்டபம் தெரிகிறது. பாழடைந்த மண்டபம் மாதிரியிருக்கிறது. முன்புறம் இரண்டு தூண்கள். பின்புறம் இடிந்து சரிந்துபோய் மேல்தளம் மட்டும் அப்படியே அந்தரத்தில் நிற்கிறது. காரை பெயர்ந்த தரையில் இலைச்சருகுகள் பரவிக் கிடக்கின்றன. எதிர்த்தாற்போல் ஒரு வேப்பமரம். நாகவடிவத்தில் கற் சிலை ஒன்று. மண்டபத்தைப் பார்த்தவாக்கில் நட்டிருக் கிறது. மண்டபத்தின் உள்ளே மங்கலான
மண்டபத்தை அவளுக்குக் காட்டுகிறான்.
இருள்
பலமாகத் தலையை அசைத்துத் தன் மறுப்பைத் தெரிவிக் என்பது கிருள். "வேண்டாம். யார்னா வருவாங்க" போல கையால் எதுவோ சைகை காட்டுகிறாள். பின்பு ஒரு திசையைக் காட்டி "அங்க போகலாம் வா" என்பது மாதிரி பாவனை செய்கிறாள்.

"
அவள் காட்டிய திசையைக் காண இவனுக்கு அதிர்ச்சி ஏற்படுகிறது. எவ்வளவோ தூரம் அது. எவ்வளவு இருக்கும் என்று சொல்ல முடியாது. அந்தத் திசையில் உயர உயரமான மலைச்சரிவுகள் தெரிந்தன. அடர்ந்த இருள் மண்டிய காடுகள் தெரிந்தன. நீண்டு கிடக்கும் பசுமை யான வயல்வெளிகளையும் தனித் தனியாக நிற்கும் ஒற்றை மரங்களையும் தாண்டிக் கண்ணுக்கெட்டிய தூரம் பூமி யின் மறுகோடி போல் தெரிந்தது அது. கரிய கரிய மலைச் சிகரங்கள் வானத்தையே மூட்டிக் குத்திக் கிழிப்பது போல் உயர்ந்து நிற்கின்றன. மேக மூட்டங்கள் மலைச்சிகரங் களை முட்டுகின்றன. இவனுக்கு என்னவோ போல இருக் கிறது. அவளை ஏறிட்டு நோக்குகிறாள்.
இவனைப் பொருட்படுத்தாதவள் போல் அவள் 'வா போக லாம்' என்கிற பாவனையில் இவன் கையைப் பிடித்து அழைத்துச் செல்கிறாள். மறுப்பு எதுவும் சொல்லாமல் கட்டுண்டவனைப் போல அவள் பின்னாலேயே நடக்கிறான்.
கொஞ்சம் வெளிறிய ஒரு ஒற்றையடிப்பாதை வழியே அழைத்துச் செல்கிறாள் அவள். இருபுறமும் தாழம் புதர் கள் மண்டிக் கிடக்கின்றன. லேசாய்க் குளிர்வது போலக் காற்று வீசுகிறது. கைகால்களிளெல்லாம் சிலுசிலுவென்று ரோமங்கள் சிலிர்க்கின்றன. பனிமழையில் ஊறிய பசிய வயல்வரப்புகளிலிருந்து சிள்வண்டுகளின் ரீங்காரம் கேட் கிறது. வயல் வரப்புகளைக் கடந்து ஓடை ஒன்று குறுக்கிடு கிறது. நீர் வற்றிய ஓடை, பிறகு வெறும் களர் நிலம். அப் புறம் ஒரே சமவெளி. வழி நீண்டுகொண்டே போகிறது. முடிவு தெரியாமலே நீள்வதைப் போலத் தோன்றுகிறது.
வெகுநேரம் கடந்த பிறகு காடு ஒன்று குறுக்கிடுகிறது. நிழல் மண்டிய காடு. வலைப்பின்னல் மாதிரி இலைகளின் வழியே கொஞ்சம் சந்திர வெளிச்சம் பூஞ்சையாய்த் தெரி கிறது. மரங்களும் புதர்களும் நெருக்கமாக இருக்கின்றன.


ஒரே நிசப்தம் எங்கும் குடிகொண்டிருக்கிறது. வழியும் சரியாய்த் தெரியவில்லை. தரை வேறு சொத சொதப்பாய் இருக்கிறது. ஒவ்வொரு அடியிலும் சதுப்புத்தரை 'சளப் சளப் பென்று சப்தமிடுகிறது. மக்கிய சருகுகள் காலடி வில் புதைகின்றன,
திருரென்று எங்கிருந்தோ ஒரு சத்தம் கேட்கிறது. டக்... டக்சென்ற சத்தம். நிச்சலனமாயிருந்த அமைதியைக் கீழித்துக்கொண்டு நெஞ்சை அதிரவைப்பது மாதிரி தொடர்ந்து கேட்டுக்கொண்டேயிருக்கிறது.
யுடன் அவனைப் பார்த்திருன்.
மிரட்சி
“யாரோ மரம் லெட்டருங்க...வா!" என்கிறாள் அவள். இவனை விடாமல் இழுந்துக்கொண்டு போகிறாள். என்ன ஆகுமோ?
"நான் வல்ல" இவன் கையை இழுத்துக்கொண்டு நிற் திறன், கால்களில் அபாரமான வலி. மேற்கொண்டு நடக்க முடியாதுபோல் தோன்றியது. ஒருகணம் அவளும் நின்று இவனைப் பார்க்கிறாள். “இன்னும் கொஞ்ச தூரம் தான்... வா!தோ வந்துடிச்சி" முரட்டுத்தனமாக இவனை இழுத்துக்கொண்டு நடக்க ஆரம்பிக்கிறாள். பிரயாசை யோடு நடக்கிறான். எவ்வளவோ தூரம் நடந்துவந்த கால்கள் நோக்காடு தாளாமல் வலிக்கின்றன. அவளும் தான் கூட நடந்து வருகிருள். அவளுக்கு வலிக்கவில்லையா. இவனுக்குச் சந்தேகம் வலுக்கிறது. ஓடி விடலாமா என்று நினைக்திறன். ஓட முடியாது போலிருக்கிறது. கையை அப்படி இறுக்கிப் பிடித்திருக்கிறாள். அவளை மீறி எதுவும் செய்ய முடியாதுபோல் தோன்றுகிறது. பேசாமல் நடக் கிருன். வரரை அவள் அசுரத்தனமாக இழுத்துக்கொண்டு நடப்பதுபோல் படுகிறது. அவள் வேகத்துக்கு ஈடு நடக்கிறான்.
கொடுக்க முடியாமல் தள்ளாடியபடியே ரொம்ப அசதி மேலிடுகிறது. குளிரானாலும் வியர்த்துக் கோட்டுகிறது.

எவ்வளவு நேரம் இப்படி இழுத்துக்கொண்டு
நடக் கிருாளோ... காலநிலை எதுவும் தெரியவில்லை. எதையும் தெளிவாய்ப் புரிந்துகொள்ளும் சக்திகூட இல்லாததாகி விட்டதுபோல் படுகிறது. எல்லாவற்றையுமே இழந்து விட்ட மாதிரி இருக்கிறது. இவன் இஷ்டப்படாமலே எல் லாம் நடப்பதுபோல் தெரிகிறது. எல்லாமே சூட்சமமாக இருக்கிறது. பின்னாலேயே நடக்கிறான்.
வெகுநேர நடைக்குப் பிறகு காடு முடிந்தது. அப்பால் நல்ல வெட்டவெளி. எங்கும் மங்கலான வெளிச்சம். ஒரு பக்கம் அடிவானம் வரைக்கும் தெரிகின்ற தரைப் பரப்பு. வறண்ட நிலம். வெறும் பொட்டல் வெளியாய்க் காய்ந்து கிடக்கிறது. மறுபுறம் உயர உயரமான மலைகள். மொட்டை மொட்டையான பெரிய பெரிய கனத்த பாறைகள், கறுத்த பிசாசுகளைப் போல சயனித்திருந்தன. சராசரி சந்தடிக்கெல்லாம் அப்பாற்பட்ட ஏதோ ஒரு சூன்யமான பிரதேசத்துக்கு வந்துவிட்டதுபோல் தோன்று கிறது. பயங்கரமான நிசப்தம் எங்கும் குடிகொண் டிருக்கிறது.
கூர்மையான சிகரங்களும் செங்குத்தான
செங்குத்தான பாறைகளும் நிறைந்து பார்ப்பதற்கே அச்சமூட்டும் ஒரு பக்கம் கையைக் காட்டி, அவள் 'அங்க போகலாம் வா!' என்கிற பாவனை யில் சைகை செய்கிறாள். இவன் சொல்வதறியாது நிற் கிறான். இவன் பதிலைக் கூட எதிர்பார்க்க அவசியமில்லாத வள்போல் அவள் பிடியை விடாமலே இழுத்துக்கொண்டு வேகமாக நடக்கிறாள். விருப்பமின்றியே பின்னால் நடந்து செல்கிறான். கொஞ்சதூரம் சென்றதும் பாறைகள் நிறைந்த ஒரு குன்றின்மேல் அவள் ஏறத்தொடங்குகிறாள்.
இலகுவாகவும் வேகமாகவும்
ஏறிக்கொண்டிருந்தாள்
அவள். பின்னால் தடுமாறி சிரமப்பட்டு அவளைத்தொடர்ந்து கொண்டிருந்தான்.
கூசான கற்கள் பாதத்தைக்


குத்தின. முட்செடிகள் கணுக்கால், முழங்கால் சதை களைக் கிழித்தன. அவள் கையைப் பிடித்துத் தொங்காத குறையாக ஏறிக்கொண்டிருந்தான். அவள் உயரே ஏறி ஏறி நின்று இவனுக்குக் கைவாகு கொடுத்து மேலே தூக்கி விட்டுக்கொண்டிருந்தாள். மேலே ஏன் ஏற வேண்டும் என்பது இவனுக்குப் புரியவில்லை. எதுவும் கேட்க வேண்டும் என்று கூடத் தோன்றவில்லை. எல்லாம் ஏதோ மந்திரத்துக்குக் கட்டுண்ட மாதிரியிருக்கிறது.
கடைசியில் குன்றின் உச்சியிலே கொண்டு போய் நிறுத்து கிறாள் அவள். சுற்றிலும் மலைச்சரிவுகள். கண்கண்ட டமெல்லாம் வெறும் சிகரங்களாகவே தெரிகின்றன. நடு நடுவே ஆழமான பள்ளத்தாக்குகள். மருந்துக்குக் கூட ஒரு நீரோடையைக் காண முடியவில்லை. பச்சென்று ஒரு செடியைக் காணமுடியவில்லை. வெறும் வறட்சி. வெறும் கற்களும் பாறைகளுமே குவியல் குவியலாகவும் கனத்தும் காணப்படுகின்றன. கறுப்பு கறுப்பாய் பயங்கரமாய் ஆழ்ந்த நித்திரைகொள்ளத் தனித்து வந்து ஒதுங்கி யிருப்பது மாதிரித் தெரிகின்றன. வானத்தில் நட்சத்திரங் கள் மறைகின்றன. கரிய கரிய மேகங்கள் வெளிறிப் பிரிந்து
கலைகின்றன. லேசான வெள்ளை நிறம் அடைகின்றன.
மங்கிய நீலவானம் தெரிகிறது. கரிய சிகரங்களின் மேல் வெள்ளை மேகம் விழுகிறது. விழுந்து படிகிறது. கொஞ்சம் கொஞ்சமாகத் தரையை நோக்கி மெல்ல இறங்கி வரு வதைப் போல இருக்கிறது.
அவள் கீழே கையைக் காட்டுகிறாள். இவன் குனிந்து பார்க் கிறான். கால்கள் நடுங்குகின்றன. முட்டிக்குக் கீழும் கணுக்கால் தசைகளிலும் வெடவெடவென்று எதுவோ ஆடுகிறது. லேசாய்த் தள்ளாடுவதுபோல இருக்கிறது. தலையைச் சுற்ற, அவள் கையைப் பிடித்துக்கொள்கிறான். அதையே எதிர்பார்த்தவள் போல அவளும் இவன் கை யைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்கிறாள்.

கீழே பாதாளமான பள்ளம். சரிவு. இவன் சற்றும் எதிர் பாராதவிதமாக இவன் கையைப் பிடித்து, விடாமல் இழுத்துக்கொண்டே அவள் சரிவில் இறங்கத் தொடங்கு கிறாள். கண்மண் தெரியாமல் மூர்க்கத்தனமாய் இழுத் தடித்துக்கொண்டு இறங்குகிறாள். தடுமாறி விழுந்தடித் துக்கொண்டே பின்னால் ஓடுகிறான். கொஞ்சமும் இவனைப் பற்றி லட்சியம் செய்யாமலே அவள் இஷ்டத்துக்குப் போய்க்கொண்டிருக்கிறாள்.
தரையை வந்தடைந்ததும் இவனுக்கு மூச்சு இறைத்தது. கணுக்கால்களில் விண்விண்ணென்று தெறித்தது. காயம் பட்ட இடங்களிலிருந்து ரத்தம் கசிந்தது. காய்ந்த முட்கள் எங்கு பார்த்தாலும் தோலைக் கிழித்திருந்தன. தள்ளாட்டத்துடனும் சோர்வுடனும், களைத்து மயங்கி அப்படியே ஒரு பாறையில் சாய்கிறான். ஓய்வெடுத்துக் கொள்ள அவகாசம் கொடுப்பவளைப் போல அவளும் இவன் கையை விட்டுக் கொஞ்சநேரம் பேசாமல் நிற்கிறாள்• இவனுக்குக் கண்கள் மயங்குகின்றன. எதுவோ தோன்று கிறது. மூட விருப்பமில்லாமல் கண்களைப் பிரயாசையுடன் திறந்து விழிக்கிறான். தூக்கிவாரிப் போடுகிறது இவ னுக்கு. அவள் இல்லாததைக் காண நடுக்கம் ஏற்படு கிறது.
எதிரில், பக்கத்தில், சுற்றுமுற்றும் கண்பார்வையின் வீச்சு எட்டுமளவுக்கும் எங்குமே அவளைக் காணமுடியாதிருக் கிறது.
சற்றுமுன் அப்படி ஒருத்தி அங்கே இருந்தாள் என்பதற்கான அறிகுறிகூட. தென்படாதிருக்கிறது. எங்கோ மறைந்துவிட்டிருக்கிறாள்.
எங்கே மறைந்திருப்பாள்...
வெலவெலத்துப் போய்விடுகிறது இவனுக்கு.
குலை நடுங்கவைக்கும் அமைதி. எல்லாப் பக்கமும் வெறும் மலைப்பாறைகளே தெரிகின்றன. எந்தப் பக்கமும் வழி இருக்கிற மாதிரித் தெரியவில்லை. அடித்துப் போட்டால்


கூடக் கேட்பதற்கு நாதியற்ற இடம்போல் இருக்கிறது. எந்தப்பக்கம் ஓடுவதானாலும் உயரமான மலைகளைத் தாண்டித்தான் ஓட வேண்டும் போலிருக்கிறது. அண் ணாந்து பார்த்தபடியே நிற்கிறான். கழுத்து வலிக்கிறது. நடுவில் நிற்பது ஏதோ ஒரு ஆழமான பள்ளத்தில் புதை யுண்டு நிற்பதுபோல் தோன்றுகிறது. கிலியோடு நிற் கிறான். சுற்றிச் சுற்றிப் பார்த்துக்கொண்டே நிற்கிறான்.
மேவே மேகங்கள் தரையில் இறங்க முயன்றுகொண்டிருக் கின்றன. சிகரங்களின் வழியாக இறங்குகின்றன. நாலா பக்கமும் மலைகள். சுவர்களைப் போல சுற்றி வளைக் கின்றன. ஒரே நிசப்தம். நிச்சலனம். என்ன செய்வது என்பது தெரியவில்லை. எதுவோ நேரப் போகிறது என்பது மட்டும் தெரிகிறது. கலவர மிகுதியால் 'ஓ!' என்று கத்துகிறான். தொண்டையைத் தீட்டிப் பலங்கொண்ட மட்டும் கத்தியதாகத் தோன்றியது. ஆனால் குரல் வெளியே வரலில்லை. எதுவோ பெயர் சொல்லி அவளை அழைக்க முயற்சிக்கிறான். இவன் குரலே இவனுக்குப் பயமாயி ருப்பது போல இருக்கிறது. எல்லாம் மலைப்பாறைகளில் மோதுண்டு இவனையே திரும்ப வந்தடைகிறது. கத்தத் துணிவிழந்தவனாகக் களைத்துப்போய் காதுகளை மூடிக் கொள்கிறான். காதுகளில் தொடர்ந்து இவன் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது.
குரல்
மலைப்பாறைகள் இவனை நோக்கி நெருங்கி வருவதுபோல் தோன்றுகிறது. அது உண்மையா பிரமையா என்பதைக் கூடச் சரியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. மிரட்சி யுடன் சுற்றிச் சுற்றிப் பார்க்கிறான். திடீரென்று மண் டையே வெடித்துப்போவது மாதிரித் தபதபவென்று ஒரு சத்தம் கேட்கிறது. உடம்பே ஒரு கணம் நடுங்கி ஓய பீதி யில் ஒரு கணம் அசைவற்றுப் போய் நின்று விடுகிறான். என்ன நிகழ்ந்தது என்று அறியுமுன்பே இடதுபக்கம் சற்றுத் தள்ளியிருந்த மலைச்சிகரம் ஒன்று சரிந்து விழுந்து

கொண்டிருந்தது. மிச்ச மீதிக் கற்கள் இன்னும் உருண்டு கொண்டிருந்தன. காலடியில் ஒரு கல் வந்து விழுந்திருந்தது;
கலவரத்தோடு சற்று மேடான ஒரு பாறையில் ஏறி நின்று கொள்கிறான். சந்தேகத்தோடு ஒவ்வொரு பாறையாக உற்று நோக்குகிறான். உயிரைக் கையால் பிடித்து வைத்துக் கொண்டிருப்பவன் மாதிரி நிற்கிறான். மறுபடியும் பழைய படியே நிசப்தமாக இருக்கிறது. கொஞ்சம் நிம்மதி ஏற் பட்டாற்போலத் தோன்றினாலும், திகில் மறையாமலிருக் கிறது. திக்திக்கென்று அடிக்கிறது. இவன் இதயத் துடிப்பே இவனுக்குக் கேட்கிற மாதிரியிருக்கிறது. குத்துக் கால் போட்டு முகத்தை முட்டிகளுக்கிடையே புதைத்துக் கொண்டு உட்காருகிறான். கொஞ்சம் நிம்மதியாய் இருப்பதுபோல் தோன்றுகிறது.
எங்கிருந்தோ வீல் என்று ஒரு சத்தம் எழுகிறது. உறைந் திருந்த அமைதியைக் கிழித்துக்கொண்டு யாரோ அழுகிற மாதிரி. வாயிலடித்துக்கொண்டு அழுகிற மாதிரி. பெண் குரல். இவனுக்கு ஒன்றும் புரியவில்லை. குரல் எங்கிருந்து வருகிறது என்பதும் தெரியவில்லை. தெரிந்துகொள்ளவும் ஆசையில்லை. தெரிந்துகொள்ளும் ஆசையே பயமூட்டுவ தாக இருந்தது. அழுகை தொடர்கிறது. தொடர்ந்து பெரிய கதறலாக வெளிப்படுகிறது. கதறல் நெருங்கி வந்து கொண்டிருப்பதாகப் படுகிறது.
உடம்பு சில்லிடுகிறது. கண்களை இறுக்கி மூடிக்கொள் கிறான். குரல் ஓயட்டும் என்று காத்திருப்பவனைப் போல இருக்கிறான். ஆனால் குரல் மிகமிக நெருக்கத்தில் கேட்கிறது. “இனிமே எதுக்காகடி உயிர வச்சிக்னு இருக்கணம். ஒழிஞ்சிபோ!" "வேணாம்மா. வேணா. என்ன உட்டு டும்மா... நான் எங்கியாவுது ஓடிப் போயிடறேன்."
#
இவனுக்கு ரத்தத்தையே உறைய வைப்பதைப் போலி ருந்தது. இரண்டு குரல்கள் கேட்டன. இரண்டாவது
குரல்தான்
அழுதது. தீனமாகவும் உயிருக்கு மன்றாடு வது போலவும் ஒலித்தது. முதல் குரலில் உன்மத்தத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை. தெளிவான மனிதக் குரல்கள் மாதிரி உணரக் கொஞ்சம் தைர்யத்தை வரவழைத்துக் கொண்டு மெல்ல எழுந்திருக்கிறான். கொஞ்சம் யோசித்துக் குரல் வந்த திக்கை நோக்கி மெல்ல நகர்கிறான். பெரிய பெரிய பாறைகளைக் கடந்து சத்தம் போடாமல் தயங்கித் தயங்கி நகர்கிறான். ஒரு பாறை மறைவில் நின்று சத்தம் வந்த திசையை நோக்கி மெள்ள எட்டிப் பார்க்கிறான்.
அங்கே கண்ட காட்சி இவனை மெய்சிலிர்க்க வைப்பதாக இருந்தது. இரண்டு பெரிய சிகரங்களுக்கிடையே முதுமை யான பெண்மணியொருத்தி, ஒரு இளம் பெண்ணை நெட்டித் தள்ளிக்கொண்டு வந்தாள். அவள் கண்களில் கொலைவெறியும் ஆவேசமும் வெளிப்பட்டன. மூக்கு புடைத்துக்கொண்டிருந்தது. பற்களைக் கடித்துக்கொண் டிருந்ததால் தாடை எலும்புகள் கிட்டிப் போயிருந்தன. கலைந்து பரட்டையாகி முன்புறம் தொங்கிய தலை மயிர்களை வேகமாகத் தலையைச் சொடுக்கிப் பின்னுக்குத் தள்ளி விட்டுக்கொண்டு விடாப்பிடியாய் இளம்பெண்ணை இழுத்துக்கொண்டு வந்தாள் அவள். கண்கள் சிவப்பேறி யிருந்தன. பலி பீடத்துக்குச் செல்லும் கிலியுடன் இளம் பெண்ணின் கண்கள் மிரண்டன. முதியவளின்
பிடியி லிருந்து விடுபட முரண்டு பண்ணி விடாது கெஞ்சிக் கொண்டிருந்தாள். அவள் முகம் வெளுத்துச் சலத்தைப் போலக் கிடந்தது. கைகளில் வளையல்கள் உடைந் திருந்தன. அழுது அழுது நீர்வற்றிய கண்களைத் துடைத்துக்கொண்டு மேலும் அழுதாள். அவள் முகம் மேலும் கண்ணீரால் பெருகிக் கசகசத்தது.
எதுவும் விளங்கவில்லை இவனுக்கு. அவள் என்ன தப்பு செய்திருப்பாள். எங்கே தள்ளிக்கொண்டு போகிறாள். என்ன செய்யப் போகிறாள். எதுவும் புரியவில்லை. போய்

ஏதாவது
சொல்ல சொல்ல வேண்டுமென்றோ, தடுத்து நிறுத்த வேண்டுமென்றோ கூடத் தோன்றவில்லை. இவன் இருப்ப தாகக் காட்டிக்கொள்ளக்கூட விரும்பாதவன்போல பயம் மாறாமல் பதுங்கியே நின்றுகொண்டிருந்தான்.
முதியவளின் உக்கிரம் குறையவில்லை. பிரும்மாண்டமான ஒரு அகலப் பாறையின் பக்கமாக மகளைத் தள்ளிக் கொண்டு வந்தாள். மகள் கடைசி முறையாக எதுவோ சொல்வது காதில் விழுந்தது. 'வேண்டாம்மா வேண் டாம் என்ன உட்டுடு. நான் எங்கியாவது ஓடிப் போய்ப் பொழச்சிக்கறேன். என்ன சாவடிச்சிடாதம்மா. சாவடிச் சிடாத..."
தாய் அதை ஒன்றும் காதில் வாங்கிக்கொண்டதாகத் தெரியவில்லை. இளம்பெண்ணைப் பார்க்க இவனுக்கு என்னவோபோல் இருந்தது. நெஞ்சு இரங்கியது. மனசைக் கசக்கியது. ஏதோ கொஞ்சம் புரிகிற மாதிரி இருந்தது. மகள் தவறாக எங்காவது பிள்ளை வாங்கிக் கொண்டிருக்கலாம். எவனாவது ஏமாற்றி விட்டு ஓடிப் போயிருக்கலாம். வயிறு மேடு தட்டியிருந்தது. அவள் நிறைமாதப் பிள்ளைத்தாய்ச்சியாயிருந்தாள். அவள் தோற் றமும் கெஞ்சலும் கொடூரமான காட்சியாய் இருந்தன.
எதேச்சையாகத் திரும்பியவனின் கண்கள், அதிர்ச்சியில் அசைவற்று நின்றுவிடுகின்றன. சரிந்து விழுந்த மலைச் சரிவின் பின்புறம் இவனை அழைத்துவந்த அவள் தென் பட்டாள். தலை மட்டும்தான் தெரிந்தது. தோள்பட்டை வரைக்கும் தெரிந்தது. முக்காடு போட்டுக்கொண்டிருந் தாள்.
நிறம் தெரியவில்லை. இவன் பதற்றத்தோடு கத்திக் கூப்பிட நினைத்தான். வாய் வரவில்லை. அவள் பின்னாலேயே ஓடவேண்டும் போலிருந்தது. கால்கள் வர வில்லை. அதற்குள் அவள் சரிவில் இறங்கி மறைந்துவிடுகிறாள்.


இவன் திக்பிரமையோடு திரும்புகிறன். இப்போது பாறையிலே வேறுவிதமான காட்சி தென்பட்டது.குழப்ப மாக இருந்தது. பாறையில் மல்லாந்தவாக்கில் படுத்துக் கொண்டிருந்தாள் இளம்பெண். போராடவோ முரண்டு பண்ணவோ இல்லை. உயிருக்காகக் கெஞ்சவில்லை. அமைதி பாக இந்த முடிவுக்கு வந்தவளைப் போலவோ, அல்லது இதுதான் சம்பிரதாயம் என்று அந்த சம்பிரதாயத்துக்குக், கட்டுப்பட்டலனைப் போலவோ, தலைமுறை தலைமுறை யாகக் கடைப்பிடித்து வரும் நியாயத்துக்கு உரிய தண் டளையை ஏற்றுத்கொள்ளத் தயாரானவள் மாதிரி சாவ தானமாகப் படுத்துக் கிடந்தாள். கைகள் உடம்போடு சேர்ந்திருந்தன. கண்கள் முடியிருந்தன. மேடு தட்டிய வயீறு ஏறி இறங்கியது. அவள் தலைக்குக் கீழேயும் தலையணை வடிவில் ஒரு கல்.
அவளுடைய தலைமாட்டுப் பக்கம் நின்றிருந்தாள் தாய். கால்களை அகலப் பரப்பி கைகளை உயரே தூக்கி எதற்கோ தயார் செய்துகொண்டவளைப் போல நின்றிருந்தாள். கண்களில் வேதனையும் குமுறலும் வெளிப்பட்டது. இது தான் முடிவு. இதைத் தவிர வேறு வழியில்லை என்று ஏதோ நிர்ப்பந்திக்கப்பட்டவள் போலிருந்தது அவள் முகம். உயரே தூக்கிய அவள் கைகளில் கனத்த பாறை வொன்று தெரிந்தது. மகளின் தலைக்கு மேலே தூக்கிப் போடத் தயாராயிருக்கும் நிலையில் தூக்க முடியாமல் தூக்கிப் பிடித்து நின்றிருந்தாள் அவள். இதோ இந்த நொடியோ அடுத்த நொடியோ கைகளில் பற்றியிருக்கும் கல்லைத் தூக்கித் தடாலென்று மகளின் தலை மேலே போடப் போகிறாள்... இவனுக்கு இதயம் வேகமாக அடித்துக்கொண்டது. ஓடிப்போய் எப்படியாவது அவ
த் தடுத்து நிறுத்த வேண்டும் போலிருந்தது. 'ஐயோ வேண்டாம்...' கத்த முயற்சிக்கிறான். சப்தம் வெளிவர வில்லை. தொண்டை அடைக்கிறது. மூச்சை அடைக் கிறது. திணறிப் புரள்கிறான். திடுக்கிட்டு
விழித்துக்
கொள்கிறான். உடம்பு பூராவும் குப்பென்று வியர்த் திருக்கிறது.சட்டை நனைந்திருக்கிறது. அடித்துப் போட்ட மாதிரி கைகால்கள் தளர்ந்திருக்கின்றன. எதுவும் புரியா மல் எழுந்திருக்கப் பலம் இன்றி சுற்றிலும் மிரள மிரள விழித்துப் பார்த்தபடியே படுக்கையில் படுத்துக் கிடந்தான்.

No comments:

Post a Comment