தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Saturday, April 12, 2025

  ஓதாமல் ஒருநாளும்  - தேவிபாரதி & மீதி - தேவிபாரதி

ஓதாமல் ஒருநாளும்  - தேவிபாரதி

அன்றைக்கென்று பார்த்து பால்ராஜ் வாத்தியார் வரவில்லை. அவருக்குப்

 பதிலாய் லீவ் லெட்டரொன்று வந்து சேர்ந்தது.
சேர்ந்தது. இவருக்கு என்ன செய்கிறதென்று
தெரியவில்லை.
இனி அய்ந்து வகுப்புப்
ஒருத்தராக மாரடிக்க வேண்டும்.
பிள்ளைகளிடமும் இவர்
எல்லாப்
இது கடலைக் கொடி பிடுங்குகிற காலம். பிள்ளைகளும் கிழக்கு வெளுக்கும் முன்பே காடுகளில் இருக்கும். அங்கே, விளையாடிக் கொண்டே ஒவ்வொரு பிள்ளையும் நாலு கொட்டுக்கூடை கடலைக்காய் பறித்துவிடும். கொட்டுக்கூடை எட்டணாவென்று போட்டால்கூடத் தலைக்கு இரண்டு ரூபாய் தேறும். 'பள்ளிக்கூடத்துக்குப் போய் படிச்சுக் கிழிக்கிறதென்ன இப்போ?'
பிள்ளைகள் கொஞ்ச நேரத்துக்கு அமைதியாய் இருந்து பார்த்தார்கள். பிறகு ஒருவரோடொருவர் குசுகுசுவென்று பேசத் துவங்கினர். நேரம் செல்லச் செல்லப் பேச்சுப் பெரிதாகிப் பெரிதாகி வளர்ந்தது. வகுப் பறையிலேயே தட்டாங்கல் விளையாட்டுத் துவங்கி யிருந்தது.

கோபத்துடன் மேசையைத் தட்டி, "பேசாம, இருங் கடா...!'' என்று சத்தம் போட்டார். சூட்டோடு சூடாக ஸ்கேலை எடுத்துக் கொண்டு பிள்ளைகளுக்குள் புகுந்து பிள்ளைகள் தலைக்கு ஒரு அடியாகப் போட்டார், மிரண்டு அமைதிப்பட்டார்கள்,
“இனிமே எவனாச்சும் சத்தம் போட்டீங்கன்னா தோல உரிச்சுப் புடுவேன், உரிச்சு... படவா ... எல்லோரும் சிலேட்ட எடுங்கடா... எடுத்து ஒண்ணுலயிருந்து நூறு வரைக்கும்
எழுதுங்கடா..."
பழையபடி, சன்னத்துச்குக் கைகளை முட்டுக் கொடுத்து உட்கார்ந்தார். ஒரு பையன் தயக்கத்தோடு எழுந்து நின்றான்.

'எங்கிட்டே சிலேட்டில்லீங்க சார்...'
அவனது முசத்திலும்
குரலிலும் நடுக்கம். இவருக்கு
எரிச்சலாக இருந்தது.
"சிலேட்டில்லாம இங்க செரைக்கறதுக்காடா வந்தே?
வாடா இங்க...
பையன் நடுங்கினவாறே அருகில் வந்தான்.
"சிலேட்டு என்னடா ஆச்சு?''
"ஒடஞ்சு போச்சுங்க சார்...”
“ஒடஞ்சா இன்னொண்ணு வாங்கறதுக்கென்ன? சிலேட்டில்லாம இங்க புடுங்கறதுக்கா வந்த...?"
பட்டனில்லாத சட்டைத்
திறப்பினூடே, ஒட்டிக்
கிடந்த அவனது கறுத்த வயிற்றில் கைபோட்டுக் கிள்ளி னார். பையனின் சண்களில் கதகதவென்று நீர் திரண்டு விட்டது. பிரம்பில் இரண்டடி போட்டார்.

"போடா...போய் உக்காரு...
பையன் விசும்பிக் கொண்டே போய் உட்கார்ந்தான், இவர் கொஞ்ச நேரம் கூரை முகட்டை வெறித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார். ஜன்னலருகே நின்று வெளியில் பார்வையை ஓட்டினார்.
பிள்ளைகள் இவரது நடையையும், பிரம்பையும் பார்த்து மிரண்டு போனார்கள். ராகம் போட்டுச் சொல்லிக் கொண்டே எழுதினார்கள். தளர் வாயிருந்த இடுப்பு வேட்டியை இறுகக் கட்டிக் கொண்டு வெளியில் வந்தார். ஒரு பழைய மாணவன் இவருக்குக் 'குட் மார்னிங் சார்' சொன்னான். கொஞ்சம் சந்தோஷமாக இருந்தது சட்டைப் பாக்கெட்டைத் துழாவினார். ஒரு ரூபாய் கிடந்தது.
பிரம்படிபட்ட பையன் இன்னும் விசும்பிக் கொண் டிருந்தான். புறங்கைகளைத் தொட்டுத் தொட்டுப் பார்த்துக் கண்ணீர் விட்டான். இவருக்குப் பரிதாபமா யிருந்தது. அவன் பெயரைச் சொல்லிக் கனிவாகத் தன்ன ருகே அழைத்தார். விழிநீரைப் புறங்கைகளால் துடைத்த படி அருசில் வந்து நின்றான் பையன்.
இவர் எங்கோ பார்த்தபடி பேசாமல் உட்கார்ந்திருந்தார். என்னத்துக்குக் கூப்பிட்டோமென்று யோசிக்கிற மாதிரி.
சார்..."
திரும்பி, என்ன வேணும் என்பது போல் பார்த்தார்.
கூப்புட்டீங்க சார்..."
"ம்... ம்... போய் நாடார் கடையில்
நா சொன் னன்னு சொல்லி ஒரு டீ வாங்கிட்டு வா..
"சரீங்க சார்..." என்று துள்ளலுடன் ஓடினான். பையன்.

பிள்ளைகள் ஒவ்வொருவராக வந்து எழுதியதைக் காண்பித்தார்கள். சாக்பீசால் எல்லோருக்கும் 'டிக்’ செய்தார். பிறகு எல்லோரையும் 'நூத்தி ஒண்ணுலயிருந்து இருநூறு வரைக்கும்' எழுதச் சொன்னார். வாசலில் 'அப்பா' என்ற குரலுடன் வந்து நின்றான் செல்வம். இவர் ஒரு பையனைக் கூப்பிட்டு, பால்ராஜ் வாத்தியாரின் நாற்காலியைக் கொண்டுவரச் சொல்லி, அவனை உட்காரச் சொன்னார். இதற்குள் பையன் டீயுடன் வந்து சேர்ந்தான்.
"செல்வம் டீக் குடிக்கிறயாப்பா...?"
அந்தப் பையனிடம் ஒரு டம்ளர் எடுத்துவரச் சொல்லி,. பாதியை ஊற்றி செல்வத்துக்குக் கொடுத்து விட்டு, டீயை உறிஞ்சத் தொடங்கினார்.
"பால்ராஜ் சார் வரலியாங்கப்பா?" என்று பதட்ட மான குரலில் கேட்டான் செல்வம்.
"இல்லப்பா... அவரு திடீர்னு லீவு போட்டுட்டாரு... அதான் என்ன பண்றதுன்னு தெரியாமத் தவிச்சுக் கிட்டிருந்தேன்..."
செல்வம் பெருமூச்சு விட்டான்.
யோசனையுடன் எழுந்து, "இரு வர்றேன்" என்று செல்வத் திடமும், 'சத்தம் போடாமல் எழுதுங்கடா" என்று பிள்ளைகளிடமும் சொல்லி விட்டு, வெளியில் வந்தார். நிராதரவாக விடப்பட்ட குழந்தை போல வெறுமையாய் கிடந்த தெருவை வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றார். பிள்ளைகள் பாடமெழுதுகிற சப்தத்தையும், தூரத்தில் எப்போதாவது கத்தும் செம்மறியாடுகளின் சத்தத்தையும் தவிர, ஊரே நிசப்தமாயிருந்தது. பால்ராஜ் ாத்தியார் வந்திருந்தால் இப்படி நிராதரவாய் நிற்க வேண்டியிருந்திருக்காதென நினைத்தார்.

தூரத்தில் மளிகைக்கடை ராமசாமியின் தலை தெரிந் தது. இவர் பதட்டத்துடன் கைதட்டி அவனைக் கூப் பிட்டார். அவன் திரும்பி அவரைப் பார்த்துப் புன்ன கைக்கும் முன்பே அவனை நோக்கி நடந்தார். மர நிழலில் ஒதுங்கி அவருக்காகச் சலிப்புடன் காத்திருந்தான். இவருடைய பழைய மாணவன் அவன். அய்ந்தாம் வகுப்புடன் புத்தகங்களை மூட்டை கட்டி வைத்துவிட்டு, மளிகைக்கடை வைத்து உட்கார்ந்து விட்டான். இப்போது கல்யாணமாகி பிள்ளை குட்டியென்று வாழ் கிறான், கடையும் ரொம்பப் பெருத்து விட்டது.
"என்ன ராமசாமி...? எப்படியிருக்கு ஏவாரமெல்
லாம்?'' என்று சிநேக பாவத்துடன்
அவன் சிரித்தான்.
"என்னமோ ஓடுது சார்... வண்டி
கேட்டார்.
"பெரிய முதலாளியெல்லா
எப்பிடி?"
இப்பிடிச்
சொன்னா
ராமசாமியின் முகத்தில் இளவெயிலாய் ஒரு பெருமிதம்.
"என்ன சார் பெரிய முதலாளி... நம்பளவிடப் பெரியவ னெல்லாம் இருக்கான். நீங்கதாஞ் சொல்றீங்க என்னெ முதலாளின்னு...
கோ சொ
அவன் நகைச்சுவையாய் ஏதோ சொல்லிவிட்டது போல அவர் சிரித்தார். சிரிப்பு ஓய்ந்ததற்கப்புறம் சொன்னார்.
"ஒண்ணுமில்ல ராமசாமி...பணமிருந்தா ஒரு 10 ரூபா கெடைக்குமா? செல்வத்துக்கு வேணுமாம்... என்னமோ அப்ளிக்கேஷன் போடணும்னு..."
நா குளறி பேச்சுத் தடைபட்டு, முகம் வியர்க்க அவனைப் பார்த்தார்.
ராமசாமி எங்கோ பார்த்தான். கொஞ்ச நேரம்
மெளனம்.

இந்
“எங்க சார்...பணத்தயெல்லா நேத்துத்தாம் பொறுக்கி
சரக்கு வாங்கக் கொடுத்தனுப்பிச்சேன் ... தெட்டுக்கு நெறையக் கடன் வேற... வாங்கறாங்க, அப்புறம் கடப்பக்கம் வர்றதேயில்ல... என்று அவர் முகத்தைப் பார்த்தான்.
அவர் கூட அவனது கடைக்குப் பாக்கி தர வேண்டியிருந் தரவில்லை. ஓரிரு தது. இரண்டு மாசமாய் எதுவும் தடவை ஆளனுப்பிக் கேட்டிருந்தான் ராமசாமி.
“நம்பளுது இந்த மாசம் வந்துரும்... நீ கவலைப்பட வேண்டாம்... இப்ப வாங்கற பத்தயுஞ் சேத்துப் பையங்கிட்டக் குடுத்தனுப்பிடறேன்..."
பின்னும் என்னென்னவோ சொன்னான் ராமசாமி.
டுங்க...'' என்று அவன் கடைசியாய்ச் சொன்னது
வேணும்னா ஒரு
பையெனக் கடைக்குத் தாட்டியு
மட்டும் அவருக்கு ஞாபகம் இருந்தது.
வகுப்புக்குத்
திரும்பி, சிலேட்டில்லாத அந்தப் பையனை ராமசாமியின்
கடைக்கு அனுப்பி விட்டு உட்கார்ந்தார்.
“செல்வம் அந்த இண்டர்வியூ எத்தனாந் தேதின்
னுப்பா சொன்ன?"
* “எந்த இண்டர்வியூங்கப்பா?"==
ஐயா
"அதாம்பா, தபால் தந்தில கிளார்க் போஸ்ட்டுக்கு...'
“இருபத்தி நாலாந் தேதிங்கப்பா...” "இண்டர்வியூ எங்கே?”
"கோயமுத்தூர்லங்கப்பா...?"
அவர் பின்னால் திரும்பி காலண்டரைப்
பார்த்தார்.
தேதி இருபதாகி விட்டது, நாலே நாட்கள் தானிருக் கின்றன. எப்படியும் பால்ராஜ் வாத்தியார் இருக்கிறார்...

கொஞ்ச நேரத்தில் பையன் வந்தான்,
ஓதாமல் ஒருநாளும்
“சார் அவருகிட்ட அஞ்சு ரூபாதான் இருந்துச்சாம்.... ஒண்ணாந் தேதி கண்டீப்பாக் குடுத்துரணும்னு சொன்னாரு...
அவர் ஒரு பெருமூச்சுடன் அதை வாங்கிக் கொண்டார். இதைத் கொண்டு என்ன செய்ய? எதுவும் செய்யத் தோன்றாதவராய் மேசையின் மேல் எழுதுவதும், அழிப்பதும்...எழுதுவதும் அழிப்பதுமாய்...
"டேய்... யாராச்சும் ஒரு பை குடுங்கடா..." சட்டென்று எழுந்து பிள்ளைகளைப் பார்த்துச் சப்தம் போட்டார். நாலைந்து பிள்ளைகள் புத்தகங்களைக் கொட்டிவிட்டுப் பைகளை நீட்டினர். அவற்றில் நல்லதாக ஒன்றை வாங்கிக் கொண்டு ஸ்டோர் ரூமுக்குள் நுழைந் தார். எல்லாவற்றையும் துயரத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான்செல்வம்.
ஸ்டோர்ரூம் கதவை உட்புறம் சாத்திக் கொண்டு பிள்ளைகளின் மதியச் சாப்பாட்டுக்கென்றிருக்கும் கோதுமை ரவையில், அவசர அவசரமாக ஒரு ரண்டு மூன்று கிலோவுக்கு அள்ளிப் பையில் போட்டுக் கொண்டு வெளியில் வந்தார்.
செல்வத்திடம் பையைக் கொடுத்துப் பத்திரமாய்ப் பார்த்துக் கொள்ளச் சொன்னார். ராமசாமியிடம் வாங்கிய அய்ந்து ரூபாயைக் கொடுத்து,
''கொண்டுபோய் அம்மா கிட்டக் குடுத்து மத்தியானம் உப்புமாக் கௌ றிக்கச் சொல்லு... நா சாயந்திரமா வர்றேன்...''
“உங்களுக்கு மத்தியானச் சாப்பாடுங்கப்பா?"
"எனக்கு எப்பிடியோ ஒண்ணு ஆவுது... நீ போ... யாராச்சும் பைல இருக்கறதெப் பாத்துடப்

போறாங்க

எங்கியும் நிக்காமப் போ..." என்று
தணிந்த குரலில் பதட்டமாகச் சொன்னார்.
பையை எடுத்துக் கொண்டு
கொண்டு குனிந்த தலையுடன் வெளியேறினான் செல்வம். இவர் அவன் தலை மறையும் வரை பார்த்துக் கொண்டு நின்றார். பின்பு, முகத்தில் பொடித்திருந்த வியர்வைத் துளிகளை வேட்டித் தலைப் பினால் துடைத்துக் கொண்டு உள்ளே வந்தார்.
மணி பதினொன்றாகிவிட்டது.



ae
காலையிலிருந்து பாடமே நடத்தலை. பாடம் நடத்த லாமா, மதிய உணவுக்கு ஏற்பாடு செய்யலாமாவென யோசித்தார். காலையிலிருந்து எதுவுமே சாப்பிடாதது நினைவுக்கு வந்தது, டம்ளரைக் கொடுப்பதற்காக டீக்கடைக்குப் போன, சிலேட்டில்லாமல் அடிவாங்கிய பையன் திரும்பி வந்ததும், அவனிடம் தீப்பெட்டியைக் கொடுத்து, அடுப்புப் பற்ற வைக்கச் சொல்லி அனுப்பி
னார்.
ரொம்பவும் உற்சாகத்தோடு, கிழிந்த காக்கி டிரௌசரின் வழியே குண்டிகள் தெரிய சமையல் கட்டுக்குப் போன வனைப் பார்க்க அவருக்கு ஒரு கணம் மனசு கனத்துப் போயிற்று.
சத்தம் போடாமல் படிக்க வேண்டுமென்று பிள்ளைகளை எச்சரித்துவிட்டு அவரும் சமையல் கூடத்தை நோக்கிப் போனார்.
மத்தியானம் போகிறது...?
பாடம் நடத்திக் கொண்டால்

ஓதாமல் ஒருநாளும்
ஒரு விமர்சனம் :
'ஓதாமல் ஒருநாளும்'

வேலையின்மை, பற்றாக்குறை, வறுமை போன்றவை இன்றைய சமூக அமைப்பின் அரசியல், பொருளா தாரத்தின் விளைவுகள். இவ்விளைவுகள் மனித ஆளுமையின் மீதும், மனிதப் பண்புகள் மீதும், ஆதிக்கம் செலுத்தி அவற்றைச் சிதிலப்படுத்து கின்றன. தன்னிரக்கம், பொய், திருட்டு, போலித் தனம் போன்ற சிதைவுகளுக்கு இவை காரணமா கின்றன. இளம் உள்ளங்களில் மேலான மனிதப் பண்புகளையும், மனித இனத்தின் வளர்ச்சிக்கேற்ற அறிவியல் பார்வையையும் ஊட்டி, அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு இவற்றைக் கையளிக்கச் செய்கிற பணி, ஆசிரியப் பணி. இத்தகைய உயர்ந்த பணியில் ஈடுபட்டுள்ளோரிடம் மேற்கண்ட சிதைவுகள் தோன்றுவது இந்தச் சமூக அமைப்பின் மிகப் பெரிய அவலமாகும். இந்த அவலத்தை எதார்த்தத்தோடு சித்தரிப்பது 'ஓதாமல் ஒருநாளும்.'
-நா. இராதாக்கிருட்டிணன்.
படிப்பகம்

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
மீதி - தேவிபாரதி


எல்லோரும் அவனிடம் பிரியம் செலுத்தினார்கள். அவனைப் பார்க்கும்போது அவரவர்க்குள்ள முகங்களை உடனே பிரியமுள்ள முகங்களாக மாற்றிக் கொண் டார்கள். பிரியஞ் செலுத்தலொரு கடமையெனக் கொண்டார்கள். தகப்பனை இழந்து வந்திருக்கிறவனின் மேல் பிரியஞ் செலுத்தாமலிருப்பது கூடாது.
பஸ்ஸை விட்டிறங்குகிற போதே அவனைக் கண்டு
கொண்டவர் சுப்பிரமணியம் சார்,
"அட நீங்களா...? வாங்க
தம்பி சௌக்கியமா இருக்கீங்களா? திடீர்னு பொறப்புட்டு வந்திருக்கீங் களே, ஒரு லெட்டர் கீது போட்டுட்டு வந்திருக்கலா மில்லையா? ஊர்ல எல்லோரும் சௌக்கியமா? அம்மா தேறீட்டாங்களா? அந்தப் பொடியன்... அவம் பேரென்ன... அவென் பேருலதான் உசுராயிருந் தாரு ஒங்கப்பா!"
எல்லாவற்றுக்கும் ஒரு சேரத் தலையாட்டிச் சொன்னான், "எல்லாரும் சௌக்கியமாத்தான் சார் இருக்கோம்.
நீங்கள்ளாம் நல்லாயிருக்கீங்களா சார்...?"
"என்னமோ இருக்கோம்... சார்தான் இப்படி அகால மாய்க் காலமாயிட்டாரு. இனியும் அதயே நெனச்சு கவலப்பட்டுட்டு இருக்காம ஆகவேண்டியதெல்லாம் பார்த்துத்தான் ஆகனும்...'
 
தந்தையின் நினைவுகள் தூண்டப்பட்டவனாய் சுப்பிரமணியம் சாரின் பாதச்சுவடு பற்றி நடந்தான். தந்தையைப் போன்றவரிவர். தந்தையின் திரேகமும் தந்தையின் குரலும், தந்தையின் சுபாவமு முடையவர்.
"அப்பாவோட சாமானெல்லாம்
போலாம்னு வந்தீங்களா தம்பி..."
எடுத்துட்டுப்
"ஆமா சார்... அப்பா குடியிருந்த வீட்டைக் காலி பண்ணியாகணுமில்லையா? மற்றபடி சாமானெல் லாம் ஒண்ணும் அதிகமிருக்காது...?"
'ஆமாமாம்... என்னமோ கஞ்சி காச்சிக்குடிக்க ரெண்டு சாமாணும். உடுத்திக்க நாலு துணிமணியும், படுத்துக்க பாய் பெட்ஷீட்டுன்னும் வெச்சிருந்தாரு...? அப்புறம் அவரு ஓட்டிக்கிட்டு இருந்த பழைய சைக்கிள் ஒண்ணிருக்கும். அது டயர் டியூப்பெல்லாம் ஒண்ணும் வேலைக்காகறாப்பல இல்ல. மாத்தி, ஓவராயில் பண்ணுனா கொஞ்சநாளைக்கு ஓட்டலாம் அப்படியே..."
சுப்பிரமணியம் சாரின் வீட்டுக்குப் போகிற போதே சங்கிலிமுத்து சாரும், துரைராஜ் சாரும் கண்டு கொண்டு உடன் நடந்தார்கள். அப்பாவை எல்லோருமே கடைசி காலங்களில் நிறையப் பராமரித்திருக்கிறார்கள்.
அப்பா செத்துப்போன அன்றைக்கு ஹெட்மாஸ்டருக்கு தந்தி கொடுத்திருந்தான். எல்லாரும் இரவோடிரவாய்ப் புறப்பட்டு வந்துவிட்டார்கள். சுப்பிரமணியம் சாரென் றால் அப்பாவின் பாதந்தொட்டு வணங்கி
சிறு பிள்ளையாய் அழத் துவங்கி விட்டார். சங்கிலிமுத்து சாரும், துரைராஜ் சாரும் எல்லோருக்கும் ஆறுதல் சொன்னார்கள்.

"அப்பா போயிட்டா
என்ன?

நாங்கள்ளாம்
இருக்கோம்ல...? அப்பாவோட ஸ்தானத்துல நாங்க இருக்கோம்... யாரும் அழக்கூடாது,"
எல்லோரும் சேர்ந்து பெரிய ரோஜா மாலையாய் வாங்கிப் போட்டார்கள். பாடை தூக்குகிற போது மூன்று பேரும் மாற்றிமாற்றி அப்பாவைச் சுமக்கிறதில் பங்கெடுத்துக் கொண்டார்கள். உறவுக்காரர்களும் ஊர்க்காரர்களும் ரொம்ப ஆச்சரியப்பட்டார்கள். இறந்து போன அப்பா வைக் குறித்துப் பெருமையாய்ப் பேசிக் கொள்ளலா னார்கள்.
சங்கிலிமுத்து சார் சொன்னார்,
"அப்பா சாகறதுக்கு ஒரு ரெண்டு மூணு மாசத்துக்கு முன்னாலேயே அவரால் நடக்க முடியாமப் போயிடுச்சு... பேசக்கூட ரொம்பச் சிரமப்பட்டாரு... நான்தான் இருந்த நெலமயப் பாத்துட்டு சாருகிட்டச் சொன்னேன்... பேசாம ஸ்கூலுக்கு லீவு போட்டுட்டு
ஓடம்பப் பத்தரமாப் பாத்துக்குங்க க சாருன்னு
எனக்கான வரையிலுஞ் சொன்னேன். கேக்கல, மெல்ல ஊர்ந்து ஊர்ந்துன்னாலும் வந்துருவேன்னு சொன்னார். அப்புறந்தான் நெலமயப் பாத்துட்டு தினசரி அவரச் சைக்கிள்ல ஒக்கார வெச்சு கூட்டிக் கிட்டுப் போயிட்டு வர ஆரம்பிச்சோம்."
துரைராஜ் சார் சொன்னார்,
அவரென்ன அந்தச் சீக்குக்குப் பயப்பட்டாரா? கையெழுத்துப் போட்டுட்டு பேசாம உக்காந்துக்குங்க சாருன்னு எல்லாருஞ் சொல்லுவோம், கேக்க மாட் டாரு. கொஞ்சம் சுடு
சுடு தண்ணியெ மேஜைமேல் வெச்சுக் குடிச்சிக்கிட்டு அந்தக் குழந்தைகளுக்கு எதை யாவதொன்னச் சொல்லிக் குடுத்துக்கிட்டேயிருப்
பாரு...உ
நினைவுகள் சேரச் சேர மனசின் துயரம் அதிகமாயிற்று. அப்பா ஏன் இப்படியெல்லாம் அவஸ்தைப்பட்டார். லீவும் எடுக்காமல்... வைத்தியமும் பார்த்துக் கொள் ளாமல்... மௌனமாய் நடக்கச் சங்கடமாயிருந்தது.
அப்பாவைக் குறித்துப் பேசுகிறவர்களிடம் ஏதும் பேசாமல் வருகிறது சரியில்லை. ஆனால் என்ன பேசுகிற தென்று தெரியாதவனாய் சுப்பிரமணியம் வீட்டுக்குப் போகிற வரையிலும் சங்கடத்துடனேயே நடந்தான்.
சாரின்
சுப்பிரமணியம் சார் வீட்டு வாசலை எட்டுகையிலேயே அவரது சம்சாரம் வீட்டுக்குள்ளேயிருந்து ஓடி வந்து அவர்களை எதிர்கொண்டு நின்றது. சொல்லமுடியாத பிரியத்துடனும், தவிப்புடனும் அவனைப் பார்த்தது. பக்கத்து வீடுகளிலிருந்து கமலத்தம்மாள், போஸ்ட்மேன் சம்சாரம் பேச்சிப்பாட்டி, கோயமுத்தூர் அத்தை எல்லோரும் வந்து அவனைச் சுற்றித் திரண்டார்கள்.
ஒவ்வொருவரும் அவன் மேல் தனிப்பட்ட பிரியம் செலுத்தி னார்கள். அவனால் தாங்கமுடியாத அளவுக்கு ரொம்பவும் வெளிப்படையானதாகவும் சம்பிரதாயமானதாகவும் இருந்தது அவர்கள் காட்டின பிரியம். அவனைப் பார்க்கிற போது இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டுமென்று முன்கூட்டியே பேசி வைத்துக் கொண்ட வர்களைப் போல எல்லோரும் ஒரே மாதிரி நடந்து கொள்ளலானார்கள்.
கோயமுத்தூர் அத்தை மட்டும் எல்லோரையும் விட அதிக உரிமையெடுத்துக் கொண்டு அவனைக் கட்டிப்பிடித்து என்னென்னவோ சொல்லிச் சொல்லியழத் துவங்கிற்று. அவனுக்கு இன்னும் சங்கடமானது. தவிப்புடன் இதிலிருந்து விடுபடும் வழிதேடி யோசித்தான்.
எல்லோரிடத்திலும் அப்பா ஆஸ்பத்திரியிலிருந்து, கடைசி காலங்களில் பேசினது, சாப்பிட்டது.
பின் செத்துப்
போனது எல்லாவற்றையும்

சொல்லத் துவங்கினான். சொல்லி முடிக்கையில் பின்னுமிருவர் வந்தனர். அவர் களுக்கும் அதே விவரங்களைச் சொன்னான், பின்னும் வந்தனர். ஒவ்வொரு முறை வந்தவர்களுக்காகவும் ஒவ்வொரு தடவை சொல்ல வேண்டியதாயிற்று.
திரும்பத் திரும்ப ஒரே மாதிரியான விவரங்களை ஒரே மாதிரியான வார்த்தைகளால் கோர்த்துச் சொன்னான். நிறைய பேருக்குத் திரும்பத் திரும்பச் சொன்ன விவரங் களாதலால் எல்லோரிடத்திலும் ஒரே மாதிரி சொன் னான். வார்த்தைகளோ, பாவனைகளோ எதுவும்
மாறவேயில்லை. எழுதி வைத்துப் படிக்கிறது போலிருக் கிறது அவன் சொன்னது.

கடைசியில் இதில் அவனுக்கே ஒரு சலிப்புத்தட்டி எரிச்சலு றலானான். மனசில் ஏக்கம் பிடித்தது. முகம் வியர்த்தது; மெலிதாக நடுக்கமுற்றான். பின் சுப்பிரமணியம் சார் சொன்னார்,
"சரி, போதும் விடுங்க. அவர் சாப்பிடட்டும். வந்ததி லிருந்து வெறுங்காபியோட ஒக்காரவச்சு பேசிக்கிட்டி ருக்கோம். எங்க எப்பச் சாப்புட்டாரோ என்னவோ! வாங்க தம்பி, கையைக் கழுவுங்க சாப்புடலாம்..."
துரைராஜ் சாரும், சங்கிலிமுத்து சாருங்கூட தங்கள் வீடு களில் சாப்பிடக் கூப்பிட்டார்கள். அவன் யாரிடமும் எதையும் மறுக்கவில்லை. ஒவ்வொருவரிடமும் ரொம்பவும் ஜாக்கிரதையாயும், நிதானமாயும் பேசினான். தன் பேச்சின் காரணமாய் யாருடைய மனசும் புண்பட்டு போய்விடக் கூடாதென்கிற பயத்துடனேயே பேசினான். அவர்கள் அவனிடத்தில் பிரியம் செலுத்துதலை அவன் உள்ளூர விரும்பினான். யாரும் அந்த நேரத்திய தங்களது முகங்களை மாற்றிக் கொண்டு விடாதிருக்க வேண்டும்.
பரிமாறுகிறபோது சுப்பிரமணியம் சாரின்
சம்சாரம் சொன்னது,

இப்படித்தான்
சாரும்... சூதுவாதறியா மனுஷன். ஒண்ணு வேணும்னா கூச்சப்படாமக் கேட்டு வாங்கிச் சாப்புடுவாரு. சலிச்சு வந்தாருன்னா ஒரு டம்ளர் காபி குடுங்க டீச்சரம்மான்னு கேட்பாரு. டீச்சர், டீச்சர்னு கூப்புடாதீங்க சார். எனக்குக்கையெழுத்துப் போடவுங்கூட தெரியாதும்பேன். அதனால டீச்சர்... வாத்தியார் சம்சாரம் டீச்சர்தானேன்னு
என்ன
சொல்லுவார். சொல்லிட்டுச் சிரிசிரின்னு சிரிப்பார்..
பாவம் எதார்த்தமான மனுஷன்.”
உதட்டில் ஒரு புன்னகை அவிழ பெருமூச்சுவிட்டு நின்றது. சாப்பிட்டபடியே சுப்பிரமணியம் சார் சொன்னார்,
"யதார்த்தம்னா எல்லாருகிட்டயுமா...? அந்த மளிகைக்
18 கடைக்காரன் என்னமோ சுருக்குனு ஒரு
ஒரு வார்த்த சொல்லிட்டான்னு கடேசி வரையிலும் மொகங் குடுத்து அலங்கிட்ட ஒரு வார்த்த பேசலியே... நான் தான் அவருகிட்டச் சொன்னேன். ஒடம்புக்குச் சரி யில்லாத சமயத்துல சமைச்சுக்கிட்டுக் கஷ்டப்பட்டுக் கிட்டு இருக்காதீங்க சார். ஒங்களுக்கு என்ன வேணும் னாலும் கேளுங்க சார். கூச்சப்படாம கேட்டு வாங்கிச் சாப்புடுங்க
இது ஒங்க வீடு மாதிரிம்பேன். அதே மாதிரி தான் நடந்துக்கவும் செஞ்சாரு.''
சாப்பிட்டு முடித்து எல்லோரும் வேப்பமர நிழலில் கட்டில் போட்டு உட்கார்ந்தார்கள். துரைராஜ் சார் சொன்னார்,
"கடசீல எங்களுக்கெல்லாம் புரிஞ்சு போச்சு... சாரை
வண்டியேத்தி
ஒங்க ஊருக்கு அனுப்பறப்போ எல்லோரும் பஸ் ஸ்டாப் வரையிலும் வந்தோம். சங்கிலிமுத்து சார் தான் கூடக்கௌ பினாரு. அப்ப நாங்க நாங்க எல்லோரும் சார் மொகத்த பார்த்தோம்.
அப்படியென்ன நெனச்சாரோ தெரியல. அவரும் எங்களையெல்லாம் வெறச்சு வெறச்சுப் பாக்குறாரு. எங்களுக்குன்னா ரொம்ப கவலயாப் போச்சு. எங்க சார மறுபடி உயிரோட பாப்பமான்னு நெனச்சேன்.
கண்ணுல தண்ணி ஊற ஆரம்பிச்சிட்டுது.
அத
சாருக்குத் தெரியாம மறைக்கனுமேன்னு துண்டால மொகந் தொடைக்கற மாதிரி தொடச்சிக்கிட்டேன்.''
துரைராஜ் சாரின் விழிகளில் இப்போதுங்கூட லேசான மினுமினுப்புத் தென்பட்டது. வேட்டித் தலைப்பினால் துடைத்துக் கொண்டு அமைதிப்பட்டார். பின் சங்கிலி முத்து சாரும், போஸ்ட்மேன் சம்சாரமும்
கமலத்தம் மாளும், கோயமுத்தூர் அத்தையும் அவரவர்க்குள்ள நினைவுகளைச் சொல்லத் துவங்கினர். எல்லோருக்கும் அப்பாவைக் குறித்து எவ்வளவோ விஷயங்கள் நினைவி லிருந்தன.
பிறகு எல்லோரும் அவனைச் சுற்றி உட்கார்ந்தார்கள். துரைராஜ் சார் பேப்பரும் பேனாவுமாக கணக்குப் போடத் தொடங்கினார். அப்பா இறந்து போனதனால் கிடைக்கிற பத்தாயிரம் ரூபாய், பிராவிடன்ட் தொகை, கிராஜிவிட்டி, இன்சூரன்ஸ் தொகைகள் எல்லாவற்றையும் கணக்குப் போட்டார்கள். அதோடு அப்பா ஊர்க்காரர் களிடமும், ஆசிரியர்களிடமும் பட்டிருந்த கடன்களையும் கணக்கிட்டார்கள். சங்கிலிமுத்து சார் எல்லாவற்றையும் டைரியில் குறித்து வைத்திருந்தார்.
ப்து
கடைசியில் எல்லோரிலும் மூத்தவரான சங்கிலிமுத்து சார் சொன்னார்,
வர்ற
'தம்பி, அப்பாவோட பணமெல்லாம் வந்தவொடனே
மொதல்ல கடனெல்லாம் அடச்சிடுங்க. பணத்தை பொறுப்பாப் பாத்துச் செலவு பண்ணுங்க.
தங்கச்சிங்க ரெண்டு பேருக்கும் கல்யாணத்தைப் பண்ணி வையுங்க மொதல்ல... அப்புறம் அம்மாவை பத்திரமாப் பாத்துச்குங்க. அவங்க மேலதான் உரு ராயிருந்தாரு ஒங்கப்பா... நீங்களும் ஏதோ ஒசு பொண்ணப் பாத்துக் கல்யாணத்தப் பண்ணிக்கப் பாருங்க... எப்படியோ பொளச்சு அப்பா பேர எடுத் தாக வேண்டியது ஒங்க கடமையில்லையா?''
எல்லோருமாய் அப்பா குடியிருந்த வீட்டைப் பார்க்கப் புறப்பட்டார்கள். அப்பா குடியிருந்த வீடு ரொம்பவும் சின்னது. நாலைந்து மாசமாய்ப் பூட்டிக்கிடந்த வீட்டில் தூசியும், பூச்சிக் கூடுகளும் மண்டிக்கிடந்தன. ஒரு விதமான புளுக்கமான காற்றும் மட்கிய வியர்வை வாடையும் வீசிற்று.
சுப்பிரமணியம் சார் சொன்னது போலதான், சாமான்கள் ஒன்றும் அதிகமில்லை. உடுத்திக் கொள்ள ரெண்டு வேட்டியும் (பழையதாகிப் போனதும் கிழிந்து தையல் போடப்பட்டதுமான எட்டுமுழ வேட்டி ஒன்று, புதியதும் சலவை செய்யப்பட்டதுமான நாலுமுழ வேட்டி இன்னு மொன்று) இரண்டு சட்டைகளும், அண்டர்வேர்களும் துண்டுமருந்தன. அப்புறம் சில அலுமினியப் பாத்தி ரங்கள். ஒரு ஸ்டவ் அடுப்பு, ஒரு தகரப்பெட்டி, பாய், தலையணை, போர்வை இவ்வளவுதான் அப்பாவி: னறையில் இருந்தவை.
தகரப்
பெட்டியில் அப்பாவின் சர்ட்டிபிகேட், ஒரு பஞ்சாங்கம், அப்பாவுக்குக் கருங்கல்பாளையம் மச்சான் கொடுத்த டயரி, அப்பாவுக்கு வந்த கடிதங்கள் ஆகியன
இருந்தன. டயரியில் நிறையப் பக்கங்கள் காலியாகக்
கிடந்தன. இந்த வருஷம் டயரி எழுத அப்பாவுக்கு வாய்க்கவேயில்லை. கடிதங்களை எத்தனையோ வருஷங் களாகப் பாதுகாத்து வைத்திருக்கிறார் அப்பா. அப்பா, அம்மா எடுத்துக்கொண்ட பழைய போட்டோ ஒன்றும்
இருந்தது. தவிர, தாத்தாவும் அப்பாவும் ரொம்ப வருஷங்களுக்கு முன்பே சேர்ந்தெடுத்துக்
போட்டோ
'கொண்ட ஒன்றுமிருந்தது. அதிலிருக்கிற
அதிலிருக்கிற அப்பா இளமையுடனும் அழகுடனுமிருந்ததைப் பார்த்துச் சந்தோஷப்பட்டான். அந்த போட்டோவில்
உள்ள அப்பா இவனைப் போலவும் தாத்தா அப்பாவைப் போலுமிருப்பதாய் சுப்பிரமணியம் சார் சொன்னார்.
அப்பாவின் சைக்கிள் காற்றுப்போன நிலையில் கிடந்தது. வீட்டுக்காரருக்கு அப்பா தரவேண்டிய வாடகை பாக்கிக்காக அந்த சைக்கிளை அவருக்குக் கொடுத்தான். மீதியிருந்த சாமான்களை ஒரு மூட்டையாகக் கட்டி எடுத்துக்கொண்டான். வேட்டியிலும் சட்டையிலும் அப்பாவின் வியர்வை வாடை இருக்கும். ஒவ்வொருவர் உடம்புக்கும் ஒரு தனி வாடை உண்டே. அப்பாவுக்குரிய உடம்பு வாடை அவரது துணிகளில் இருக்கும். அந்தத் துணிகளைத் துவைக்காமல் அப்பாவின் உடம்பு வாடையைப் பாதுகாத்து வைக்க வேண்டும். பாத் திரங்கள் அப்பாவின் எச்சில்பட்டவை. அப்பாவுக்கு வந்த கடிதங்கள் அப்பாவின் வாழ்க்கையைப் பற்றி நிறையச் சொல்லும்.
சுப்பிரமணியம் சாரைத் தவிர மற்றவர்கள் அவரவர் வேலையைப் பார்க்க விடைபெற்றுப் போயினர். சுப்பிரமணியம் சார் மட்டும் பஸ் நிறுத்தம் வரையிலும் வந்தார். சுப்பிரமணியம் சாருக்குப் பிற ஆசிரியர்கள் மேல் ரொம்பக் கோபம்.
"பார்த்தீங்களா தம்பி, இப்படி ஒங்களை ஒத்தையில நிக்க வச்சிட்டு அவுங்கவுங்க பாட்டுக்குப் போயிட் டாங்க... நாளைக்கு அவங்களுக்கு ஏதாச்சும் ஒண்ணுன்னா கடசிவரையிலும் இருக்க மனசு
வருமா...? எல்லோரும் வாயிலதான்
வாயிலதான் சர்க்கரைய
வச்சுக்கிட்டுப் பேசுவாங்க...?" T_"
"அதனால என்னங்க சார், பரவாயில்லை...?''
மீதி
அவன் எவ்வளவோ சொல்லியும் கூட அவர் பஸ் வருகிற வரையிலும் அவர்களைக் குறை சொல்லிக் கொண்டிருந் தார். பஸ் ரொம்ப நேரத்துக்கப்புறமே வந்தது. அது வரையிலும் சலிப்பின்றிக் காத்திருந்தார்.
அவர் மட்டும் இல்லாதிருந்தால் பஸ்ஸில் மூட்டையை ஏற்றுவதற்கு ரொம்ப சிரமப்பட்டிருக்க வேண்டும்.
எல்லாவற்றையும் அம்மாவிடம் சொன்னபோது அம்மா ஒரு விஷயத்தைப் பேச்சுப் போக்கில் அவனிடம் சொன்னாள். கடைசிக் காலத்தில் சுப்பிரமணியம் சார் அப்பாவோடு சண்டை போட்டுக் கொண்டாராம். இதனால் அப்பாவும் அவரும் ரொம்ப நாட்கள் பேச்சு வார்த்தையின்றி இருத்தார்களாம்.
- 1984.
**************************************
ஒரு அனுபவம்
'மீதி'
திசைகளெங்கும் சப்தக் கங்குகள் வெடித்துச் சிதறிய நவீன இலக்கியக் கூட்டமொன்றில்தான் அந்த அற்புதம் நிகழ்ந்தது! 'இவர்தான் தேவிபாரதி' என்றார் தவமணி. ஒரே நேர்க்கோட்டில் சந்தித்து உரசிக்கொண்டன பார்வைகள். அவர் விழிகளில் ஒளிப்புழுதி எனது உள்ளங்கையில் அன்பின் ஈரம் கசிந்தது. சற்றைக்கெல்லாம் நாங்கள் நவீன இலக்கியத்தைக் கதைத்தோம். இந்த நிகழ்வு எந்நேரம் வரை நீடித்ததோ, மேடையிலிருந்து அழைப்பு.

மேடையில் தேவிபாரதி, சட்டென சொற்களுக்கு சிறகு முளைப்பதை உணர்ந்தேன். அந்த மண்டபம் முழுவதும் உளியின் செதுக்கல்களில் அதிரும் ஓசை உருண்டோட ஆரம்பித்தது. காற்று உரத்து வீசுகை பில் காலங்காலமாய் திறவுபடா கதவுகள் உடைத்துத் திறந்தன. சட்டென சூல்கொண்ட மேகம் அதிர்ந்து மின்னலும் மழையும் இருதயத்தில் பொழிந்தது.
பிரளயம் ஓய்ந்து ஈரமண்ணின் வாசனையாய் அவர் அழைப்பு, "வீட்டுக்கு வாருங்கள், 'காம்யு'வின்
'அந்நியன்' தருகிறேன்."
வீட்டிற்குப் போனோம். வீட்டில் உறவினர் கூட்டம். அவர் அப்பாவின் ஈமச்சடங்கு நடந்து கொண்டி ருந்தது.
“அம்மா செத்துப் போய்விட்டாள். செத்துப்போனது நேற்றாகவும் இருக்கலாம்; அதற்கு முன்னராகவும் இருக்கலாம்' என்றான் காம்யு.
முந்திய நாள் அவர் அப்பா இறந்து போயிருந்தார். அவரது அப்பாவை நான் பார்த்ததில்லை. வருடம் கழித்து இந்தக் கதையில் பார்த்தேன்.
ஒரு
-கௌதம சித்தார்த்தன்.
படிப்பகம்