தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Saturday, April 12, 2025

 

நினைவுச் சித்திரம்
வாழ்விலிருந்து என் இலக்கியம்: ஓதாமல் ஒரு நாளும், மீதி
தேவிபாரதி
===========================================
என் தொடக்க காலச் சிறுகதைகளில் ‘ஓதாமல் ஒருநாளும்', 'மீதி' ஆகிய இரண்டும் தனிப்பட்ட முறையில் எனக்கு முக்கியமானவை. அந்த இரண்டு கதைகளிலும் என் தந்தை முதன்மையான பாத்திரங்களாக இடம் பெற்றிருந்தார். ஒன்றில் உயிராகவும் மற்றொன்றில் உடலாகவும்.
'ஓதாமல் ஒருநாளும்' சிறுகதையை 1982இன் தொடக்கத்தில் எழுதினேன். அதே ஆண்டில் மனஓசையில் வெளிவந்த அந்தக் கதையின் முதல் வாசகர்களில் அப்பாவும் ஒருவர். அவர் அந்தக் கதையின் கையெழுத்துப் படியை வாசித்திருந்தார். கதை பிரசுரம் பெற்றிருந்த மனஓசை இதழின் ஒரு பிரதியை எடுத்துக்கொண்டு போய்த் தன் சக ஆசிரியர்களுக்கு வாசிக்கக் கொடுத்தார். அந்தக் கதை பற்றிய தன் அபிப்பிராயங்களை என்னிடம் பகிர்ந்துகொள்ளவும் செய்தார். 'மீதி' சிறுகதையை வாசிக்க அவருக்கு வாய்க்கவில்லை. அந்தக் கதையை எழுதுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே மரணமடைந்துவிட்ட அப்பா, அதில் ஒரு சடலமாக இடம்பெற்றிருந்தார்.
'மீதி' எந்த இதழிலும் பிரசுரம் பெறவில்லை. ஏறத்தாழ பத்து வருடங்களுக்குப் பிறகு வெளிவந்த என் முதல் தொகுப்பான 'பலி'யில் அது இடம்பெற்றிருந்தது. இருபது வருடங்களுக்குப் பிறகு கல்யாணராமனால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு 2013ஆம் ஆண்டு Harper Collins Publications வெளியிட்ட எனது Farewell Mahatma தொகுப்பில் இடம்பெற்றது. அடுத்த ஐந்தாண்டுகளுக்குப் பிறகு, இப்போது 2018இல் அந்தக் கதை மலையாளத்தில் வெளிவந்திருக்கிறது. கொச்சியிலிருந்து வெளிவரும் மலையாள இலக்கிய இதழான 'எழுத்து' ஜனவரி 2018 இதழில் வெளிவந்துள்ளது 'மீதி'. ஆங்கிலம் வழியாக மொழிபெயர்த்தவர் குஞ்ஞாம்பு.
இதயக்கோளாறால் பாதிக்கப்பட்டிருந்த என் தந்தை நல்லமுத்து ஆசிரியர் 1983 மார்ச் 18ஆம் தேதி இறந்துபோனார். ஈரோடு பிரப் சாலை,
சி.எஸ்.ஐ. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அப்பா மரணத்திற்கு இரண்டு மூன்று நாள்களுக்கு முன்னால் என்னை அழைத்து அருகே அமர்த்திக்கொண்டார். கைகளைப் பற்றித் தன் உள்ளங் கைகளுக்குள் பொதிந்து வைத்துக்கொண்டார். திடீரென இழுத்து நெஞ்சோடணைத்து நெற்றிலும் கன்னத்திலும் முத்தமிட்டார். பிறகு ஒரு ரகசியத்தைப் பரிமாறிக்கொள்வது போன்ற தணிந்த, பலவீனமான குரலில் மிகச் சுருக்கமாகத் தன்னால் அதிக நாட்கள் தாக்குப் பிடிக்க முடியாது என்றார். அதற்காக யாரும் அதிகமாகக் கவலைப்பட வேண்டியதில்லை எனவும் தான் இறந்துவிட்டால் தனது வாரிசுதாரர்களில் மூத்தவனான எனக்குக் கருணை அடிப்படையில் அரசு வேலை கிடைக்கும் எனவும் அம்மா, அக்கா, தம்பி, தங்கைகளைப் பொறுப்பாகப் பார்த்துக்கொள்வது என்னுடைய கடமை எனவும் சொன்னார். பழுத்து சாம்பல் நிறமாகிப் போயிருந்த அவருடைய கண்கள் என்னை ஆழமாகப் பார்த்துக் கொண்டிருந்தன.
மூன்றாம் நாள் அவருடைய உயிர் பிரிந்தது.
இரண்டு ஆண்டுகளில் எனக்குக் கருணை அடிப் படையில் வேலை கிடைத்தது. தமிழக அரசுக் கல்வித் துறையில் இளநிலை உதவியாளர் பணி. 1986ஆம் வருடம் 16ஆம் தேதி மொடக்குறிச்சி ஒன்றியம் மின்னப்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் இளநிலை உதவியாளராகப் பணியில் சேர்ந்தேன். இருபதாண்டுகளுக்குப் பிறகு 2006ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பத்தாண்டு பணிக் காலம் மீதமிருந்தபோது விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டு
45
46
அப்பா
சென்னைக்கு இடம் பெயர்ந்தேன். எனக்குக் கிடைத்த இருபதாண்டு கால
கால அரசுப் பணி என்பது எனக்கு அப்பாவின் மரணம் தந்த கொடை.
இரண்டு வருடங்களுக்கு மேலாக இதயக் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்த அப்பா தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஓரிரு தனியார் மருத்துவமனைகள் என வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். சாகும்போது தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி, பூதலூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்துகொண்டிருந்தார். செங்கிப்பட்டியுடனோ தஞ்சை மாவட்டத்துடனோ எங்கள் குடும்பத்தினருக்கோ என் தந்தைக்கோ ஒட்டுறவு ஏதும் இருந்ததில்லை. வருடங்களாக ஓயாத கடன் தொல்லைகளாலும் கடுமையான பொருளாதார நெருக்கடிகளாலும் சூழப்பட்டிருந்த எங்கள் குடும்பத்தின் அற்பத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக ஐநூறு ரூபாயோ ஆயிரம் ரூபாயோ பெற்றுக்கொண்டு ஒவ்வொரு வருடமும் யாராவது ஓர் ஆசிரியருக்கு விருப்ப மாறுதல் கொடுத்து ஊர் விட்டு ஊர், ஒன்றியம் விட்டு ஒன்றியம், மாவட்டம் விட்டு மாவட்டம்
இடம் பெயர்ந்துகொண்டிருந்தார் என் தந்தை.
என
மொடக்குறிச்சி, சென்னிமலை ஒன்றியங்களில் 1948 முதல் அப்போதைய ஈரோடு மாவட்டத்திற்குட்பட்ட 1976 வரை கிட்டத்தட்ட 28 ஆண்டுகள் வரை ஆறேழு பள்ளிகளில் பணிபுரிந்த என் தந்தை தன் கடைசிக் காலங்களில் தஞ்சை மாவட்டத்திலிருந்த இரண்டு வெவ்வேறு ஒன்றியங்களில் ஏழாண்டுகள் பணிபுரிந்தார்; சாகும்போது செங்கிப்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில். அப்பா வெளியூர்களில் கொண்டிருந்தபோது நாங்கள் இங்கே ஈரோட்டில் அம்மாவின் பாதுகாப்பில் இருந்தோம். அப்பா வாரம் ஒருமுறையோ இரண்டு வாரங்களுக்கு ஒருமுறையோ
வந்துவிட்டுப் போவார்.
பணிபுரிந்து
தட
எங்களுடைய குடும்பம் ஈரோட்டில் திருச்சித் ரயில்வே லைனை ஒட்டியிருந்த லோகநாதபுரம் என்னும் கைவிடப்பட்ட புறநகர்ப் பகுதியில் வசித்து வந்தது. நானும் தம்பி தங்கைகளும் அங்கேயிருந்த சாயப்பட்டறைகளில்
பணிபுரிந்துகொண்டிருந்தோம். இலக்கியம், அரசியல் சார்ந்த
செயல்பாடுகளில் நான் முனைப்போடு இயங்கிகொண்டிருந்த காலம் அது. இடதுசாரி இயக்கங்களில் தீவிரமாகச் செயல்பட்டுக்கொண்டிருந்தேன். என் சிறுகதைகள் அப்போதைய இலக்கிய இதழ்கள்
சிலவற்றில் பிரசுரமாகிக்கொண்டிருந்தன. அப்பாவுக்கு அது குறித்த பெருமிதம் இருந்தது. 1982இல் மனஓசை இதழில் வெளிவந்த ஓதாமல் ஒருநாளும்' என்னும் சிறுகதை தொடக்கப்பள்ளி ஆசிரியர் ஒருவரைப் பற்றிய கதை. பிள்ளைகளின் மதிய உணவுக்காக இருப்பு வைக்கப்பட்டிருந்த கோதுமை ரவையைத் திருடி மகனிடம் கொடுத்தனுப்பும் ஆசிரியர். அப்போது அப்பா அப்போதைய மொடக்குறிச்சி ஒன்றியம், நல்லிக்கவுண்டன் வலசு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்துகொண்டிருந்தார்.
எங்கள் குடும்பம் அறச்சலூர், வெள்ளியங்கிரிப் புதூரில் வசித்து வந்தது. நானும் அக்காவும் அறச்சலூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்தோம். தம்பியும் தங்கைகளும் தொடக்கப்பள்ளியில் படித்துக் கொண்டிருந்தனர். படித்துக்கொண்டே அங்கிருந்த டூரிங் டாக்கீஸ் கேன்டீனில் வேலை செய்துகொண்டிருந்தேன். டீ, காபி, மிக்சர், முறுக்கு விற்கும்
வேலை. அப்போதெல்லாம் திரையரங்குகளுக்குள் படம் பார்த்துக்கொண்டே மிக்சர் முறுக்குத் தின்னவும் டீ, காபி குடிக்கவும், பீடி, சிகரெட், சுருட்டுப் புகைக்கவும் பார்வையாளர்கள் உரிமை பெற்றிருந்தனர். படம் ஓடிக்கொண்டிருக்கும்போது முறுக்குத் தட்டத்தை எடுத்துக்கொண்டு கொட்டகைக்குள் போய் மிக்சர், முறுக்கு, டீ, காபி எனக் கூவிக்கொண்டே பார்வையாளர்களை ஊடுருவிச் செல்ல வேண்டும். சிரித்துக்கொண்டோ கண்ணீர் உகுத்துக்கொண்டோ படம் பார்த்துக்கொண்டிருக்கும் பார்வையாளர்கள் ஒரு மிக்சர் பொட்டலத்தையோ, முறுக்கையோ வாங்கிக் கொறித்துக்கொண்டே டீ, காபிக்கு ஆர்டர் கொடுப்பார்கள். கேன்டீனுக்குப் போய் அவற்றைப் பெற்றுக்கொண்டு வர வேண்டும். ஒரு ரூபாய்க்குப் பத்துப் பைசா கமிஷன். என்னோடு எட்டு வயது முதல் பதினாறு,
உயிர் எழுத்து : ஏப்ரல் 2019
பதினேழு வயதுடைய நான்கைந்து சிறுவர்கள் அந்தக் கேன்டீனில் வேலை செய்துகொண்டிருந்தார்கள் (அந்த அனுபவங்கள் சார்ந்த குறிப்புகளில் சில எனது 'நிழலின் 'தனிமை' நாவலில் இடம்பெற்றிருக்கின்றன). ஒவ்வொரு நாளும் பள்ளி நேரம் முடிந்து வீட்டுக்கு வந்து அவசர அவசரமாக வீட்டுப் பாடங்களை எழுதி வைத்துவிட்டு ஆறு ஆறரை மணி சுமாருக்குக் கொட்டகைக்குப் போனால் ஒரு ரூபாயோ ஒன்றரை ரூபாயோ சம்பாதித்துக்கொண்டு மறுநாள் அதிகாலை இரண்டு மணிக்கு வீடு திரும்புவேன். இரண்டு அல்லது மூன்று செலவுக்காக வைத்துக்கொண்டு மீதியை அம்மாவிடம் கொடுத்துவிடுவேன். அப்போது அதைக்கொண்டு ஏழு உறுப்பினர்களைக் கொண்ட எங்கள் குடும்பத்தின் ஒருவேை
என்னுடைய
ள சாப்பாட்டுச் செலவை ஈடு கட்டிவிட அம்மாவுக்கு முடியும். அப்பாவுக்குப் பிடித்தமெல்லாம் போக மாதம் அறுபது ரூபாயிலிருந்து அறுபத்திரண்டு ரூபாய் வரை சம்பளம். முதல் ஐந்து நாள்களுக்கு நல்ல சாப்பாடு, அடுத்த ஐந்தாறு நாள்கள்வரை சிக்கனம். மீதியுள்ள இரண்டு வாரங்கள் பசியும் பட்டினியுமாகக் கழியும்.
சமாளிப்பதற்கு அம்மா படாதபாடு பட்டுக் கொண்டிருந்தார்.
அதுபோன்ற ஒருநாளில்தான் அம்மா என்னை அப்பா பணிபுரிந்துகொண்டிருந்த அந்தப் பள்ளிக்கு அனுப்பினார். வாடகை சைக்கிள் ஒன்றை எடுத்துக்கொண்டு நான்கு மைல் தொலைவிலிருந்த நல்லிக்கவுண்டன் வலசுக்குப் போனேன்.
அப்பாவுக்கு நான் எதையும் சொல்ல வேண்டிய தேவை இருக்கவில்லை. என்னைப் பார்த்தவுடன் ஒன்று முதல் நூறு பிள்ளைகளுக்கு வரை எழுதச் சொல்லித் தன் உத்தரவிட்டுவிட்டு வேட்டியை இறுகக் கட்டிக்கொண்டு வகுப்பறையை விட்டு வெளியே வந்தவர் பள்ளியின் பின்புறம் தென்வடலாக நீண்டுகிடந்த வண்டிப் பாதையில் நின்றுகொண்டு அதைக் கடந்துசென்ற ஒவ்வொருவரிடமும் கடன் கேட்டுக்கொண்டு நின்றார். யாரிடமிருந்தோ கசங்கிய இரண்டு ரூபாய்த் தாளொன்றைப் பெற்றுக்கொண்டு வகுப்பறைக்குத் திரும்பியவர் சிதறிப் போன மனதுடன் தன் மர நாற்காலியில் சரிந்து சற்று நேரம் எதையோ யோசித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார். பிறகு தன் மாணவன் ஒருவனிடமிருந்து அவனுடைய அழுக்கடைந்த புத்தகப் பையை வாங்கிகொண்டு ஸ்டோர் ரூமுக்குள் போய்க் கதவைச் சாத்திக்கொண்டார். அவர் வெளியே வந்தபோது, அந்தப் பள்ளிக் குழந்தைகளின் மதிய உணவுக்காக அமெரிக்காவின் கேர் நிறுவனம் அனுப்பி வைத்திருந்த கோதுமை ரவையால் அந்தப் பை பாதியளவுக்கு நிரம்பியிருந்தது (சுமார் இரண்டு அல்லது மூன்று கிலோ).
சில வருடங்களுக்குப் பிறகு அந்த அனுபவத்தை ஒரு
சிறுகதையாக எழுதி மனஓசைக்கு அனுப்பினேன்.
ஓதாமல் ஒருநாளும்' என்னும் தலைப்பிலான அந்தக் கதை பிரசுரமானதும் அப்பாவிடம் ஒரு பிரதி கொடுத்தேன்.
வாசித்தவர் அதைப் பற்றி எதுவுமே சொல்லவில்லை. ஆழ்ந்த பெருமூச்சுடன் அதைத் தன் கைப்பையில் வைத்துக்கொண்டு செங்கிப்பட்டிக்குப் புறப்பட்டுப் போனார். அந்தப் பாசஞ்சர் ரயிலின் ஏழெட்டு மணி நேரப் பயணத்தின்போது அப்பா அந்த நாளின் கசப்பை நினைவுகூர்ந்துகொண்டிருக்கக் கூடும். அவர் அதை ஓர் அவமானகரமான அனுபவமாக உணர்ந்திருக்கலாம். அவருக்கு அது குற்ற உணர்வையும்கூடத் தந்திருக்கலாம். எழுதத் தொடங்கியபோதும் எழுதி முடித்த பின்பும் நான் நிறைவாக உணர்ந்த கதைகளில் ஒன்று 'ஓதாமல் ஒருநாளும்' எனக்குக் குற்ற உணர்வு ஏதுமில்லை. சுயபச்சாதாபத்திற்கோ அவமானத்திற்கோ இரையாவதிலிருந்து தப்பித்துச் செல்லும் பக்குவத்தை எட்ட முற்பட்டுக்கொண்டிருந்தேன். அதைவிட முக்கியமாக அனுபவம் கலையாகும்போது கலை கோரும் மாற்றங்களை ஏற்கும் பக்குவம் கைகூடியிருந்தது. அந்தக் கதையைப் பற்றி அப்பா ஏதாவது சொல்லியிருந்திருந்தால் இதையெல்லாம் அவரிடம் பகிர்ந்துகொள்ள எனக்கு முடிந்திருக்கும்.
என் தந்தை முன்னாள் ராணுவ வீரர். 1937 முதல் 1947 வரை இந்திய ராணுவத்தில் பணிபுரிந்தவர். 1948 முதல் ஆசிரியர் பணி. அவர் மூலமே எனக்கு இலக்கியம் அறிமுகமானது. அவரது 1946ஆம் வருட டைரி ஒன்றில் மியான்மரிலிருந்து அமுதசுரபி, கலைமகள், ஆனந்த விகடன் ஆசிரியர்களுக்கு அடிக்கடி கடிதம் எழுதியிருப்பதற்கான பதிவுகள் இருக்கின்றன. சம்பந்தப்பட்ட இதழ்களின் ஆசிரியர்களிடமிருந்து அவருக்குக் கடிதங்கள் வந்ததற்கான பதிவுகளும் தென்படுகின்றன. பின்னாள்களில் கொடிய வறுமைக்கிடையேயும் புத்தகங்களுக்காகச் செலவிடுவதை, நூலகங்களுக்குச் செல்வதை, வாசிப்பதை விடாப்பிடியாகப் பின்பற்றி வந்தவர் அவர். நான் எதையாவது எழுதி வைத்திருப்பேன். நான் இல்லாத நேரத்தில் என் தந்தை அதை எடுத்துப் படிப்பார். ஒன்றுமே சொல்ல மாட்டார்.
மணமாகாத
உடல் நலம் குன்றியிருந்தபோது தனக்குப் பிறகு நாங்கள் எப்படி வாழ்வை எதிர்கொள்ளப் போகிறோம் எனக் கவலைப்பட்டுக்கொண்டிருந்தார் அப்பா. வயது வந்த, கடக்கத் பதின்பருவங்களைக் திணறிக்கொண்டிருந்த என் தங்கைகள் இருவரையும் படிப்பறிவற்ற அம்மாவையும் விருகோதரனைப் போல் பசியைத் தாங்கிக்கொள்ள முடியாத என் தம்பியையும் குறித்த பதற்றம் அவரை ஓயாமல் அலைக்கழித்துக்கொண்டிருந்தது.
அந்த அப்பாவை ஒரு பாத்திரமாகக் கொண்டு ‘மூப்பு’ எனத் தலைப்பிட்டுச் சிறுகதை ஒன்றை அப்போது எழுதத் தொடங்கினேன். ஒரு பக்கம் இரண்டு பக்கம் என எழுதி வைத்துவிட்டு வெளியே சென்றுவிடுவேன். திரும்ப வந்து பார்க்கும்போது அவை என் அப்பாவின் படுக்கையில் அவரது தலைமாட்டில் இருக்கும். அப்பா அந்தக் கதையைப் என்பதை படித்துக்கொண்டிருக்கிறார்
47
உயிர் எழுத்து 1 ஏப்ரல் 2019
உயிர் எழுத்து
ஏப்ரல் 2010
நல்லிக்கவுண்டன்வலசு பள்ளியின்
இரு தோற்றங்கள்
தாக்குதலுக்குள்ளாகி ஓய்வெடுப்பதற்காக என முதல் முறையாக செங்கிப்பட்டிக்குப் போயிருந்தேன். நான் சார்ந்திருந்த இடதுசாரி அமைப்புடன் ஏற்பட்டிருந்த முரண்கள் தந்த கசப்பிலிருந்து தப்புவதற்காக இரண்டாவது முறையாக அங்கு போனேன். என்னுடைய கைப்பையில் மீகயீல் ஷோலகோவின் 'வெற்றி முரசு' என்னும் ஆயிரம் பக்கத்திற்கு மேற்பட்ட நாவல், அவரது புகழ்பெற்ற 'டாண் நதி அமைதியாக ஓடிக்கொண்டிருக்கிறது' என்னும் நாவலின் என நினைக்கிறேன்.. மூன்று, நான்காம் பாகங்கள் தா.பாண்டியன் மொழி பெயர்த்தது என நினைக்கிறேன். பதிப்பகத்தின் பெயர் நினைவில்லை. அப்பாவின் அந்தச் சிறிய வீட்டில் பத்து நாள்கள் தங்கியிருந்து அந்த நாவலை வாசித்து முடித்தேன். இடையில் இரண்டு மூன்று முறை தஞ்சைக்குப் போய் பெருவுடையார் கோயில் பிரகாரத்திலும் சிவகங்கைப் பூங்காவிலும் சுற்றிக்கொண்டிருந்தேன். அந்தப் பத்து நாள்களும் அப்பா எனக்குச் சமைத்துப் போட்டார், தேநீரும் காபியும் போட்டுக்கொடுத்தார். அதிகாலையில் பெட்டிக்கடைக்குப் போய்விட்டுத் திரும்பும்போது எனக்காக சிகரெட் பாக்கெட் ஒன்றை வாங்கிவந்து அலமாரியில் என் பார்வையில் படும் இடத்தில் வைத்துவிட்டுப் பள்ளிக்குச் சென்றுவிடுவார். ஷோலகோவின்
மொடக்குறிச்சி உராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி
நக்கிக்கவுண்டன்வனம்.
49
50
முல்லக்குடியில் அப்பா தங்கிய வீடு
அந்தப் புத்தகத்தை அவ்வப்போது புரட்டிப் பார்ப்பார். என் வாசிப்பு, எழுத்து சார்ந்த முயற்சிகளைப் பற்றி ஏதாவது கேட்பார்.
அப்பாவுக்கு நான் எந்த வேலைக்கும் போகாமல் கட்சி கட்சி என ஊர்சுற்றிக்கொண்டிருக்கிறேன் என்கிற வருத்தம் இருந்தது.
எஸ்.எஸ்.எல்.சி.யில் நான் நல்ல மதிப்பெண் பெற்றிருந்தேன். எனக்கு ஏதாவது அரசு வேலை கிடைக்கும் என அப்பா நம்பினார். எனக்குச் சில நேர்காணல்களுக்கான அழைப்புகளும் வந்தன. தொலைபேசி ஆபரேட்டர் வேலை கிடைத்துவிடும் என அப்பா உறுதியாக நம்பினார். அதேபோல் கத்தோலிக் சிரியன் வங்கியிலிருந்து வந்த நேர்காணல் அழைப்பும் அவருக்கு அதிக நம்பிக்கையை ஊட்டியிருந்தது. சிறிது காலம் நான் சில தனியார் நிறுவனங்களில் சொற்ப ஊதியத்தில் வேலை செய்திருந்தேன். எதுவுமே நிலைக்கவில்லை. அதற்குப் பிறகு இலக்கியக் கிறுக்குப் பிடித்து வெறுமனே சுற்றியலைந்து கொண்டிருந்தேன். கூடவே புரட்சிகரக் கனவுகள். இயக்கங்களுடன் தொடர்பு, ஒரு கட்டத்தில் முழு நேர ஊழியன்
அப்பாவின் உடல்நிலை கொஞ்சம் கொஞ்சமாக மோசமாகிக்கொண்டு வந்தது. அவரது இதயத்தின் அர்த்தச்
சொன்னார்கள். எங்களின் அப்போதைய நிலைக்கு அது சந்திர வால்வுகள் பலவீனமடைந்திருப்பதாக மருத்துவர்கள் எதிர்நோக்கிக்கொண்டிருந்தார். எங்கள் ஐந்து பேரையும் அசாதாரணமான நோய். அப்பா தன் கடைசிக் காலத்தை
அம்மாவையும் பரிதவிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தார்.
நிலைமை கைமீறிப் போய்க்கொண்டிருந்தது.
செங்கிப்பட்டியில் அப்பா வசித்துவந்த அந்த வீட்டில் ஒரு பழைய டிரங் பெட்டி இருந்தது. அந்தச் சிறுகதையில் வந்திருப்பதைப் போலவே பாத்திரங்கள் இருந்தன, டிரங் பெட்டி இருந்தது, கடிதங்கள் இருந்தன, கருங்கல்பாளையம் தேய்ந்துபோன அப்பாவின் பழைய சைக்கிள் ஒன்றும் மச்சான் கொடுத்த டைரி இருந்தது. டயர்களும் டியூப்களும் இருந்தது. அப்பாவின் வியர்வை வாசனையுள்ள ஓரிரு வேட்டிகளும் சட்டைகளும் இருந்தன. கடிதங்களில் அறிந்திராதவையுமான எவ்வளவோ தகவல்கள் இருந்தன அப்பாவின் வாழ்க்கையைப் பற்றி நான் அறிந்திருந்தவையும் நண்பர்கள், உறவினர்கள், சக ஆசிரியர்கள், வட்டிக் கடைக்காரர்கள் எனப் பலரிடமும் கடன் வாங்கியிருந்தார் அப்பா. கடனை விரைவில் திருப்பித் தருமாறு வலியுறுத்தி தனியாகக் கட்டி எழுதப்பட்ட கடிதங்களைத் வைத்திருந்தார். சிலவற்றில் அவருடைய சுயமரியாதையைக் காயப்படுத்தும் வசைகளும் எச்சரிக்கைகளும் தென்பட்டன. நல்லமுத்து அறிவது, இப்பவும் நான் இங்கு நலம். அதே போல் உமது நலத்தையும் அறிய விரும்புகிறேன். ஆறு வருடங்களுக்கு முன் நீர் என்னிடம் நூறு ரூபாய் கடன் வாங்கியிருந்தீர். ரூபாய்க்கு இரண்டணா வட்டியுடன் ஆறு மாதத்தில் திருப்பித் தந்துவிடுவதாகச் சத்தியம் செய்திருந்தீர் ஆனால் நாளது வரை அது பற்றி எந்தத் தகவலும் உம்மிடமிருந்து கிடைக்கவில்லை. இந்தக் கடிதம் கண்டவுடன் உடனடியாக நீர் வாங்கிய கடனைத் திருப்பித் தந்துவிடவும். இல்லையென்றால் நாங்கள் உமது பள்ளிக்கூடத்திற்கே வந்து உமது மானத்தை வாங்க நேரிடும் என அறிக.
இப்படிக்கு
இதே தொனியில் எழுதப்பட்ட ஏழெட்டுக் கடிதங்கள். அப்பாவின் சக ஆசிரியர்களான துரைராஜ் சாரும், சங்கிலிமுத்து சாரும், சுப்பிரமணியம் சாரும்தான் அப்பா குடியிருந்த அந்த வீட்டுக்கு என்னை சென்றவர்கள். தந்தையை இழந்து வந்திருந்த என்னிடம் பரிவு காட்ட முயன்றார்கள், அப்பாவைப் பற்றிய தங்கள் அழைத்துச் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்கள். ஓய்வூதியம், பணப்பலன்களைப் பெறுவதற்குத் தேவையான எல்லா வாக்களித்தார்கள், கருணை அடிப்படையில் பணிவாய்ப்புக் கோரி பூதலூர் உதவித் தொடக்கக் கல்வி அலுவலருக்கு செய்து தருவதாக ணப்பிக்கச் சொன்னார்கள், அம்மாவைப்
ஏற்பாடுகளையும் தாங்களே
அம்மா
பொறுப்பாகப் பார்த்துக்கொள்ளச் சொன்னார்கள், தங்கைகளுக்குக் கல்யாணம் செய்து வைக்க வேண்டும், தம்பிக்கும் ஏதாவது செய்ய வேண்டும், பிறகு நானும் ஒரு நல்ல பெண்ணாகப் பார்த்துக் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும். தங்கள் வீடுகளுக்கு அழைத்துச் சென்றார்கள், சாப்பிடச் சொல்லி உபசரித்தார்கள், காபியோ டீயோ கொடுத்தார்கள், அம்மாவிடம் சேர்க்கச் சொல்லி கொஞ்சம் மாவடுக்களைக் கொடுத்தார்கள். சுப்பிரமணியம் சாரிடம் மனஓசையின் ஒரு பிரதி இருந்தது. 'ஓதாமல் ஒருநாளும் ' பிரசுரம் பெற்றிருந்த பிரதி. படிக்கச் சொல்லி அப்பா தனக்குக் கொடுத்ததாகச் சொன்னார், நீங்க கதை எழுதறதுல அப்பாவுக்கு ரொம்பப் பெருமைங்க தம்பி, எங்ககிட்டச் சொல்லிக்கிட்டே இருப்பாரு, அத விட்டுடாதீங்க என்றவர் பிறகு பஸ் ஸ்டாப் வரை வந்து பஸ் வந்து என்னை அங்கிருந்து அழைத்துச் செல்லும்வரை பக்கத்திலேயே நின்றுகொண்டிருந்தார்.
'மீதி' சிறுகதையில் துரைராஜ் சாரும், சங்கிலிமுத்து சாரும் சுப்பிரமணியம் சாரும் அதே பெயர்களில் பாத்திரங்களாக இடம் பெற்றிருப்பார்கள். அவர்களுடனான உரையாடல்களில் அநேகமாக ஒரு சொல்லைக்கூடத் திரிக்காமல் அந்தக் கதையில் பதிவு செய்திருந்தேன்.
திருச்சியிலிருந்து ஈரோட்டுக்கு பாசஞ்சர் ரயில் பயணம். கிட்டத்தட்ட ஆறு மணி நேரம். அப்பாவின் டிரங் பெட்டியிலிருந்த அந்தக் கடிதங்களையும் டைரிக் திரும்ப திரும்பத் குறிப்புகளையும் வாசித்துக்கொண்டிருந்தேன். சங்கிலிமுத்து சாரும் துரைராஜ் சாரும் சுப்பிரமணியம் சாரும் என் மேல் செலுத்திய பரிவை நினைத்துக் கொண்டேன், அங்கேயே விட்டுவிட்டு வந்த அப்பாவின் பழைய சைக்கிளை நினைத்துக் கொண்டேன், அப்பாவின் உடைகளில் அவர் விட்டுச் சென்ற வியர்வையின் வாடை இருக்கிறதா என அறிந்துகொள்வதற்காக அவருடைய பழைய அரைக்கைச் சட்டை ஒன்றை உருவி நாசியருகே வைத்துச் சோதித்துப் பார்த்தேன். மீதமிருக்கும் அப்பாவின் உடைமைகளைக்கொண்டு அவரைப் பற்றிய கோட்டுச் சித்திரமொன்றை வரைந்து பார்த்துக்கொள்ள முயன்றேன்.
நான் பயணம் செய்துகொண்டிருந்த பெட்டியின் இருக்கையில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டேன். பாழாய்ப் போன என் இலக்கிய மனதில் அது ஒரு சிறுகதையாக உருப்பெறத் தொடங்கியது. ரயில் கரூரைக் கடந்து செல்வதற்குள் கதையின் மனப்பிரதி முழுமை பெற்றிருந்தது.
லோகநாதபுரத்திலிருந்த
எங்கள்
வீட்டை
அடைந்தபோது இரவாகியிருந்தது. பயணம் பற்றிய சுருக்கமான தகவல்களை அம்மாவுக்கும் தம்பி தங்கைகளுக்கும் சொல்லிவிட்டு ஆசாரத்திற்கு வந்து காண்டாவிளக்கின் நடுங்கிக்கொண்டிருக்கும் பழுப்பு நிற ஒளியில் கால்களை மடக்கிக் குப்புறக் கவிழ்ந்துகொண்டு ஒரே அமர்வில் எழுதி முடித்தேன்.
கால்களை
காலையில் வீட்டுக்கு வந்த நண்பன் ராஜ்குமாரை அந்தக் கதையின் முதல் வாசகனாகத் தேர்ந்தெடுத்து இன்னும் ஈரம் உலர்ந்திராத அந்தத் தாள்களைக் கொடுத்தேன். அவன் மடித்து கயிற்றுக்கட்டிலில் உட்கார்ந்துகொண்டான். நான் எதிரே தரையில் சம்மணமிட்டு உட்கார்ந்தேன். எதனாலோ அவன் அந்தக் கதையை உரத்த குரலில் வாசிக்கத் தொடங்கினான். எங்கிருந்தோ வந்த அம்மா அவனது வாசிப்பைக் கேட்டுக்கொண்டு வாசற்படியில் உட்கார்ந்துகொண்டாள். கேட்கக் கேட்க அம்மாவின் முகம் வெவ்வேறு உணர்வுகளால் நிரம்பத் தொடங்கியிருந்தது, ததும்பியது. புரட்டத் கதையின் நான்காவது பக்கத்தைப் தொடங்கியபோது அம்மாவிடமிருந்து விசும்பலொன்று எழுந்தது, ராஜ்குமார் ஒரு கணம் தயங்கினான். பிறகு வாசிப்பைத் தொடர முற்பட்டான்.
போல்
தணியாமல் சூறைக்காற்றைப் சுழன்றுகொண்டிருந்த அம்மாவின் விசும்பல் பிறகு பேரழுகையாய் மேலெழும்பியது. ராஜ்குமார் அப்போது வாசித்துக்கொண்டிருந்த வாக்கியம் சடாரென முறிந்து விழுந்த சப்தத்தை அப்போது நான் கேட்டேன்