தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்து காலத்தால் அழிக்கமுடியாதவை சிலவற்றை இங்கே இந்த இடத்தில் தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (TShrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

Wednesday, September 18, 2013

காற்றின் திசையெங்கும் - கைலாஷ் சிவன், வறட்சி -ராஜ சுந்தரராஜன்

காற்றின் திசையெங்கும் 
உயிர் கொண்டு
அலையும் 
இறகொன்று 
முடிவுறா தொடர்ச்சியில் 
முடிவுறும் கவிதை  

            -கைலாஷ் சிவன் 
வறட்சி 

வானுக்கு இல்லை இரக்கம். பூமிக்கு 
வெயில் என்று வருகிறது நெருப்பு.
காற்றுக்கு விடை சொல்லித்
துக்கித்து இருக்கிறது வீதி 
அடி உறைகளும், கிணற்றுக்குள், வாய் வறண்டு
சுருண்டு விட்டன  
தாகித்து அணுகிற வாளிக்கு
என்ன சொல்வது பதில்?
கறங்குவெள் அருவி கல் அலைத்து  ஒழுகிய 
பறம்பும் இன்று வெறும் பாறை 

                           ராஜ சுந்தரராஜன்