தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

Wednesday, December 06, 2017

பேச்சு - பிரமிள்

Kaala Subramaniam updated his cover photo. 22-Dec-17 பனைமலை ஓவியம்


Vimaladhitha Maamallan
7 hrs ·1939ல் பிறந்த பிரமிள் 1962ல் 23 வயது இளைஞனாக, சி. சு. செல்லப்பாவின் எழுத்து சிறுபத்திரிகையில் எழுதிய கவிதை

அலட்டல் ஸ்பெஷலிஸ்ட் வைரமுத்து என்கிற முரடன் முத்துவின் லவட்டல்கள் எங்கிருந்து என்று தெரிகிறதா

1. பேச்சு
கேள், அழகு கதைக்கிறது :
பச்சைச் சதையுதடு
ரத்தப் பளபளப்பு.
கண்ணின் இமைக்கரங்கள்
மெல்ல அருகழைக்கும்.
பார்வைச் செவிப்பறையில்
பருவம் முரசறையும்.


பூவின் இதழ்ச் சுவருள்
வண்டுக்குரல் ஒலிகள்
மோதி மடிகிறது.
முத்தத்திரை மறைவில்
பேச்சுப் புதைகிறது.
ஆனால், ரத்தம் கதைக்கிறது
மவுனம் அதிர்கிறது.

எழுத்து, பிப். 1962.

அமேஸானில் பிரமிளை வாங்க
https://www.amazon.in/dp/B077Y7DBKS ‬
‪https://www.amazon.com/dp/B077Y7DBKS


கைப்பிடியளவு கடல்: Kaippidiyalavu Kadal (Tamil Edition)
பிரமிள் (1939-1997), நவீன தமிழ் இலக்கியத்தின் சாதனையாளர்க...
AMAZON.IN
https://www.amazon.in/dp/B0785X27Z9
மொழியின் ஊழிக்கூத்து பிரமிள் என்கிற பெருங்கவிஞன்

*
கன்னி

ஒரு நூற்றெட்டு
அரிவாள் நிழல்கள் பறக்கும்
அறுவடைவயல்வெளியில்
ஏதே ஒரு ஆள்நிழல்
மிதிக்க மடங்கி
சிரம் பிழைத்துக் கிடந்து
அறுவடை முடிய
ஆள் நகர
மெல்ல வளைந்தெழுந்து
தனித்து நாணிற்று
ஒரு கதிர்; உச்சியில்
ஒரு நெல், சுற்றிலும்
வரப்பு நிழல்களின்
திசை நூல்கள்
இன்று நிழல்நகரும்
நாளை உதயம்;
உனக்கும்
நாணத் திரை நகரும்
உயிர் முதிரும்; உன்
கூந்தலின் உமிநீக்கி
வெடித்தெழும் வெண்முகம்.
ஒரு அணுத் தான்யத்தின்
பகிரங்கம்.

முகமூடி உடன்படுகிறது

கவிதை என்றெதையோ
எழுதி என்
கழுத்தை அறுக்கும் நண்பர்
இன்னொரு கரடிவிட்டார்:
‘சொற்களைத் துறந்தேன்
நான்
நானே யானேன்!'

சுவரில் தொங்கிய
முகமூடி கூறிற்று:
‘உடன்பாடு நண்பரே!
என்னைப் பொருத்தி
ஆடிய கூத்து
ஓய்ந்து
ஒப்பனை கலைந்தது.
மீந்தது
முகமில்லாத் தலை!'


பிரமிள் (1939-1997), நவீன தமிழ் இலக்கியத்தின் சாதனையாளர்களில் குறிப்பிடத்தக்கவர். தருமு சிவராம் என்றும் அறியப்பட்டவர்.
காலாதீதத்திலும் இக்கணத்திலும் அலையும் அவருடைய கவிதையும் ஆய்வுக்கூர்மை, தீவிரம், பன் முகத்தன்மை நிறைந்த அவருடைய விமர்சனமும் அவரது இருபெரும் சிகரங்கள். மேலும் புனைகதை, நாடகம், ஓவியம், சிற்பம், ஆன்மீகம், மறை முக ஞானம் ஆகியவற்றிலும் அவரது ஆற்றலும் வெளிப்பாடும் உயரிய நிலையைப் பெற்றுள்ளன.
மேதமையும் மரபின் அத்திவாரமும், அறிவார்த்தச் செழுமையும் அங்கதக் கூர்மையும் ஆன்மீக விரிவும் சமூக விமர்சனமும் கவித்துவத்தின் அதிகபட்ச சாத்தியமும் பெற்று விளங்குகின்றன இவருடைய கவிதைப் பனுவல்கள்.
பிரமிளின் வாழ்நாளில் வெளியான கவிதைத் தொகுப்பு நூல்கள் கண்ணாடியுள்ளிருந்து (1972), கைப்பிடியளவு கடல் (1976), மேல்நோக்கிய பய ணம் (1980) ஆகியவை. https://www.amazon.in/dp/B0785X27Z9அவரது மறைவுக்குப் பின் வெளிவந்த முழுக்கவிதைகளின் தொகுப்பு பிரமிள் கவிதைகள் (1998) என்ற நூல். இதில் பிரமிளின் பிரதான கவிதைகள், விமர்சனக் கவிதை கள், தமிழாக்கக் கவிதைகள், ஆங்கிலக் கவிதைகள் ஆகிய எல்லா கவிதைகளும் முழுமையாக அடங்கி யிருந்தன.
இவையாவும் தனித்தனி நூல்களாகவும் முழுத் தொகுப்பாகவும் வரவிருக்கின்றன. பிரமிளின் நெருங்கிய நண்பரும் ஆய்வாளரும் அவரது எழுத்துகளின் பதிப்பாளருமான கால சுப்ரமணியம் அவர்கள், பிரமிளின் அச்சுப் புத்தகங்களைக் கொண்டுவரும் பணியில் முழுமூச்சாக ஈடுபட்டுள்ளார். ஆகவே பிரமிள் கவிதைகளின் ஆர்வலரான விமலாதித்த மாமல்லனின் முயற்சியில், அமேஸானில் eBookகுகளாக பிரமிளின் அனைத்து எழுத்துக்களும் அடுத்தடுத்து வெளிவரவிருக்கின்றன.