தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Wednesday, December 13, 2017

எம். வி. வெங்கட்ராமின் "இனி புதிதாய்' (ஒரு பிரதியியல் ஆய்வு) - அ. மார்க்ஸ

எம். வி. வெங்கட்ராமின்
"இனி புதிதாய்'
(ஒரு பிரதியியல் ஆய்வு)
எழுத்தாளனைக் காட்டிலும் வாசகனுக்கும் வாசிப் பிற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வாசிக்கப்படும் சூழல், எழுத்தாள னுக்கும் வாசகனுக்குமிடையிலான ஊடகத்தின் தன்மை, வாசிக்கப்படும் பிரதி பற்றிய இதர பிரதிகளின் கருத் தாடல்கள் போன்ற இதுவரை முக்கியத்துவம் கொடுக்கப் படாத அம்சங்களெல்லாம் பிரதியை உருவாக்குவதில் பெரும்பங்கு வகிக்கின்றன என்கிற புரிதலின் அடிப்படை யில் பிரதியின் அரசியல் வாசிப்பின் அரசியல் பற்றியெல் லாம் பேசவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. எழுத் தாளனின் முக்கியத்துவம் மறையும்போது கூடவே உண் மையை, உள்ளதை, எதார்த்தத்தை அப்படியே பிரதி பலிக்கக் கூடியவை என்கிற தகுதியையும் புனிதத்தையும் எதார்த்தவாதமும் இழந்துவிடுகிறது. எந்த ஒரு எதார்த்த வாத எழுத்தாளனும் தன்முன் விரிந்து கிடக்கும் எதார்த் தங்களில் ஒரு சில அம்சங்களைத் தேர்வு செய்கிறான் வரிசைப்படுத்துகிறான். சிலவற்றிற்கு அதிகமுக்கியத்துவம் அளிக்கிறான்; சிலவற்றை வேறு சிலவற்றில் பொதிந்து கொடுக்கிறான் என்கிற வகையில் ஒரு புதிய எதார்த்தமே
படிப்பகம்WWW.padippakam.com
அ. மார்க்ஸ் 19
அங்கு உருவாகிறது. இந்த உருவாக்கத்தில் எழுதுபவனின் கருத்தியல் முக்கியபங்கு வகிக்கின்றது. இதனால்தான் ஒரே சம்பவத்தை இருவர் தனித்தனியே எழுதும்போது இரண்டும் வேறுவேறாக, சமயங்களில் எதிர்எதிராகக்கூட அமைந்து விடுகின்றன. இவ்வாறு எழுதப்பட்ட எழுத்தும் 5 L வாசகனைச் சென்றடையும்போது ஒரே எழுத்து இருவேறு சூழல்களில் அல்லது இரு வேறு வாசகர் களுக்கு இருவேறு பொருள்களை அளித்துவிடக்கூடும். ஒரு நிர்வாணப் படம், செக்ஸ் புத்தகம் ஒன்றில் இடம்பெறும் போதும், மருத்துவ நூலொன்றில் இடம்பெறும்போதும் ஏற்படும் விளைவுகள் வேறு வேறு. இவை தவிர ஒரே பிரதிகூட வெவ்வேறு கோணங்களில் வெவ்வேறு அர்த்தங் களை வாசகனுக்கு ஏற்படுத்தி விடுவதுமுண்டு. பட்டை தீட்டப்பட்ட வைரமொன்று வெவ்வேறு கோணங்களில் வெவ்வேறு வண்ணங்களை வாரி இறைப்பதில்லையா அப்படி, இதுகூட நல்ல உதாரணமில்லை. ஒருவரது எச்சில் ஒரே சமயத்தில் எச்சிலாகவும், காசநோய் இருக் கிறதா இல்லையா எனக் கண்டறிய உதவும் சோதனைத் திரவமாகவும், காம வேட்கையைத் தணிக்கும் அசுர பானமாகவும் அமைந்துவிடுகிறதல்லவா! ஒரு பத்திரி கையில் வரும் புகைப்படத்தை எடுத்துக்கொள்ளுங்களேன். விளம்பரம் அல்லது செய்தியோடு அது இணைந்துள்ளது என்றால் அந்தத் தகவலை வாசகனுக்குத் தொடர்பு படுத்தும் தளத்தில் அதன் பொருள் ஒன்று; இன்னொரு தளத்தில் ஏதோ ஒரு உண்மையின் சான்றாக அது வெளிப் படுகின்றது; மூன்றாவது தளத்தில் அது வாசிப்பவனை ஈர்த்து, கிளர்ச்சியூட்டி, ஒரு சில விருப்பங்கள் உடையவ னாக மாற்றுகிறது.
எந்தப் பிரதிக்கும் இதனைப் பொருத்திப் பார்க்கலாம். ஒரு பக்கம் ரொம்பவும் முற்போக்காய் காட்டிக்கொள் -ஞம் ஒரு பிரதி இன்னொரு பக்கம் ஆணாதிக்கக் குரலை ஒலிக்கக் கூடும். ஒரு பக்கம் வெறும் "செக்சாகத் தோற்ற :மளிக்கும் ஒரு பிரதி, இன்னொரு பக்கம் செயல்படும்
படிப்பகம்WWW.padippakam.Com
20 உடைபடும் மெளனங்கள்
அதிகாரத்தைக் கேள்விக்குள்ளாக்குக் கேலி செய்வதாய் அமைந்து விட முடியும். இவற்றை நுண்மையாய் நோக்கி பிரதியின் வாசிப்பின் அரசியலை வெளிப்படுத்திவிடுவது பண்பாட்டு அரசியலில் ர்வமுடையவர்களின் கடமை யாகிறது என்கிற சிறிய முன்னுரையோடு மூன்று வேறு விதங்களில் திரு எம். வி. வெங்கட்ராம் அவர்களின் இனி புதிதாய்' எனும் சிறுகதைத் தொகுப்பு செயல்படுவதை அடையாளம் காணமுயல்வோம்.
அ. விக்கிரக விநாசம்
பிரதியை மேலோட்டமாக வா சிக் கும் போ து தமிழ்ப் பண்பாட்டில் காலங்காலமாக இன்றளவும் கட்டிக் காப்பாற்றப்பட்டுள்ள 8 ഒി : ) ; உருவாககங்கள் நாசம் செய்யப்படுவதை நாம் உர்ை கிறோம். குறிப்பாக குடும்பம் தொடர்பான பல விக்கிரக உருவாக்கங்கள் தூளாக்கப்படுகின்றன. ஒண்டியாய் உழைத்து குடும்பத்தைக் காப்பாற்றும் பொறுமையும் நற்குணங்களும் மிக்க மகனைக் கொத்திக் கொடுமை செய்யும் சுய தல வெறிபிடித்த ராட்சசி அம்மா, தனது சுய முன்னேற்றத்திற்காக சொத்த மகனைத் தனது குடும் பத்தினருக்கு வேண்டாத பணக்கார உறவினருக்குத் தத்தாக விற்கத் தயாராகி சொந்தக் குடும்பத்தையே ஏமாற்றி நாடகம் நடிக்கும் அப்பா, சாகக் கிடக்கும் தந்தைக்கு மருந்தைக் கூடக்கொடுக்காமல் காதில் கிடக்கும் கடுக்கன் உட்பட அவரது சொத்துக்களைப்பறிப்பதற்குப் போட்டி போடும் மனைவி பிள்ளைகள், கற்பனைத் துடிப்பு மிக்க எழுத்தாளக் கணவனின் அமைதியான குடும்ப வாழ்க்கையை அழித்தொழிக்கும் லண்டி மனைவி, சமூகத்தை எதிர்த்துக் கொண்டு துணிச்சலுடன் தன்னைக் கூட்டிப்போக வக்கில்லாத காதலனை நினைத்துப் பொருமிக் கொண்டு இளம் கணவனை ஏமாற்றி நடித்து
படிப்பகம்WWW.padippakam.Com
அ. மார்க்ஸ் 2.
வாழும் புது மனைவி, அமைதியான குடும்ப வாழ்க்கையில் சலிப்புற்று இளமைக்கால உல்லாசங்களை நினைத்து ஏங்கும் கணவர்கள், சுய நலத்திற்காக அடிப்படை மனித நியாயங்களை எதிர்த்து நீதி மன்றத்திற்குச் செல்லும் குடும்ப உறுப்பினர்கள், நோயாளி செத்தானா, பிழைத் தானா என்பது பற்றிக் கவலையின்றி தான் படித்த புதிய மருந்தொன்றைச் சோதனை செய்து பார்க்கத் துடிக்கும் ஆங்கில மருத்துவர்-இலிர்கள்தான் இந்தத் தொகுப்பு முழு வதும் நடைபோடும் நாயகர்கள்.
"குடும்பம் என்கிற ஊழல் மிக்க நிறுவனம்" பற்றி இன்று அதிகம் ஆய்வு செய்யப்படுகின்றது. எம்.வி. வியே சொல்வது போல "ராஜ்யம் நிலைக்க' கண்டுபிடிக்கப் பட்ட நிறுவனம்தான் (பக். 48) அது. நிலவுகிற அரசமைப் பிற்கேற்ற "குடிமக்களை" உருவாக்கும் முதற் பயிற்சிக் களம் அது சுயநலத்தையும் அடிமைப் பண்பையும் மனிதன் அங்கே கற்றுக் கொள்கிறான். ஒழுங்குகளுக்கு வயப்படுதல் என்கிற வகையில் இப்பயிற்சி அவனுக்கு அளிக்கப்படுகிறது. இந்த நிறுவனத்தின் நியாயப்பாட் டிற்கு முன் வைக்கப்படும் பினாமி காரணம் உறுப்பினர் களுக்கு இந்நிறுவனம் பாதுகாப்பு வழங்குகிறது என்பது. இது எவ்வளவு போலியானது, உறுப்பினர்கள் ஒருவரை யொருவர் அதிகாரம் செலுத்துவதிலும் சுரண்டுவதிலும் எத்தனை குறியாக இருக்கிறார்கள் என்பதையெல்லாம் வெட்ட வெளிச்சமாய் தோலுரித்துக் காட்டுகிறது இத் தொகுப்பு. உதிரத்தைப் பாலாக்கிப் பாசத்தைப் பிழிந்து வளர்க்கும் 'அம்மா' பற்றின தமிழ்ப் பண்பாடு கட்டி வைத்த விக்கிரகத்தை இவ்வளவு அலட்சியமாய் வேறு யாரும் நொறுக்கித் தூளாக்கியதாய் நமக்குநினைவில்லை. குடும்பம் என்கிற நிறுவனத்தின் ஊழல்களைத் தொட்டுக் காட்டிவிடும் அளவில் ஒர் அதிகார எதிர்ப்புக் குரலை நம்மால் மேலோட்டமான கவனிப்பிலேயே அடையாளம் காண முடிகிறது.
படிப்பகம்WWW.padippakam.Com
22. உடைபடும் மெளனங்கள்
ஆ. விக்கிரக உருவாக்கம்
இன்றைய வெகுஜனப் பண்பாட்டு நடவடிக்கை களைக் கூர்மையாகக் கவனித்தோமானால் அதிகார அமைப்பைக் கட்டிக் காப்பதற்கான விக்கிரக உருவாக்கம் என்பது வழிபடுவதற்கான தேவ விக்கிரகங்களை மட்டு மல்ல, வெறுத்து ஒதுக்குவதற்காக அசுர விக்கிரகங்க ளையும் உருவாக்குவதைக் காணமுடியும். தீயகுணங்களின் உறைவிடமாக, இரக்கமற்றவர்களாக, தூய்மையற்றவர் களாக நாசூக்கும் நளினமும் இல்லாதவர்களாக, கொடூர மானவர்களாக ஒரு பிரிவினர் பற்றிய பிம்பம் திட்ட மிட்டு உருவாக்கப்படுகிறது. உலக அளவில் ஆசியஆப்ரிக்க மக்களைப் பற்றி இனவாத நோக்கில் ஏகாதி பத்தியங்களும், இந்திய அளவில் சீக்கிய-இசுலாமியர் பற்றி இந்திய மேலாண்மைச் சக்திகளும் இத்தகைய அசுர விக்ரகங்களை உருவாக்குவதைக் காணலாம். இன்றைய அமைப்பின் வழிபாட்டுக்குரிய பல விக்கிரகங்களை நாசம் செய்யும் இத்தொகுதி இப்படி எதிர்நிலையான விக்கிரக உருவாக்கம் ஒன்றிற்குக் களமாவதைச் சற்று கூர்ந்து கவனித்தால் விளங்கிக் கொள்ளமுடியும். இதனைப் புரிந்து கொள்ள இந்நூல் முழுவதும் அடிப்படையாக இழை யோடும் சமூக முரண்பாடுகள் குறித்த ஒரு பார்வையை நாம் கவனிக்க வேண்டும். எம். வி. வி. தானோ என நாம் ஐயம் கொள்ளும் எழுத்தாளனாக வரும் ஒரு கதாபாத் திரம் கூறுகிறது:
'இது யுக சந்திக் காலம்; சந்தி என்றால் பொழுது விடிவதற்கு முன்னதா அல்லது அஸ்தமிப்பதற்கு முன்னதா என்றே புரியவில்லை; மேலை நாட்டு நாகரிகமும் கீழை நாட்டு நாகரிகமும் மல்லுக்கு நிற்கின்றன; உடல்தான் எல்லாம் என்று உலகை வற்புறுத்துகிறது ஒன்று. ஆத்மா என்பது வெறும் பொய் என்கிறது அது, ஆத்மா தான் நித்தியம், அது தான் எல்லாம் என்று அழுத்தமாய்ச் சொல்கிறது:
படிப்பகம்WWW.padippakam.com
அ. மார்க்ஸ் 23.
மற்றொன்று. இரண்டும் வகை தெரியாமல் மோதிக் கொள்கின்றன; ஒன்றுக்கொன்று முரணானவை என்று அவை நினைக்கின்றன. ஆனால் இரண்டை யும் சமமாகவும் சமாதானமாகவும் இணைக்கலாம். அப்படி இணைப்பதில்தான் மனித ஜாதிக்கு கதி மோட்சம் என்பதைத்தான் நான் உலகக்கு என் எழுத் துக்கள் மூலம் காட்ட விரும்புகின்றேன்." (பக். 49) இந்த நோக்கம் நிறைவேறியிருக்கிறதா இல்லையா என்பதை அப்புறம் பார்ப்போம். இப்போதைக்கு "மேலை நாகரிகம் x கீழை நாகரிகம்" என்கிற முரண் முன்வைக்கப்படுவதை மட்டும் கணக்கிலெடுத்துக் கொள் வோம். மேலை நாகரிகம் குறித்த வேறு இரண்டு வெளிப் படையான வாசகங்களையும் பிரதியில் பார்க்கலாம். ஒன்று : "மேற்கு நாகரிகத்தில் லட்சணக் குறைவுகள் அதிகம், பிராந்தி, சிகரெட், மேலைநாகரிகம் எல்லாம் போதைப் பொருட்கள்; ஒரே ரகம், பிடித்தால் விட முடியாது." (பக். 119) மற்றது : "கள்வனிடமிருந்து பொருளைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக மின்சாரம் பாய்ச்சிய நாற்காலியில் உட்கார்ந்து கொள்கிற கன வான் தான் இன்றைய மனிதன். உயிருடன் இருப்பதற்காக உயிரைக் கொடுக்க வேண்டும் என்ற அரிய தத்துவத்தைப் பிராச்சாரத்தின் மூலம் மேற்கு நாகரிகம் வற்புறுத்தியதன் விளைவுதான் இந்தத் தொழிற்சாலை. யுத்தத் துக்காக எவ்வளவு அழிவுச்செலவு?’ (பக். 113).
ஏகாதிபத்தியங்கள் முன்னிலைப் படுத்தும் வணிக நோக்கிலான நுகர்வுப் பண்பாடு குறித்த எதிர் கருத்துக் கள் நம்மனைவரிடமும் உண்டு, ஆனால் பொத்தாம் பொதுவாக மேலை நாகரிகம் என மேற்கத்திய பண்பாடு முழுவதையும் ஒற்றைப் பரிமாணமாய்ப் பார்த்து க்ண்டனம் செய்வதும் அதற்கு எதிர் நிலையாக, கீழைப்
படிப்பகம்WWW.padippakam.Com
24 உடைபடும் மெளனங்கன்
பண்பாடு என்ற ஒன்றே, ஒற்றைப் பரிமாணமாய் அதன் சகல கொடூரமான அம்சங்களுடனும் உயர்த்திப் பிடிப் பதையும் நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆனால் இந்தப் பிரதியில் அத்தகைய முயற்சியே மேற்கொள்ளப் படுகிறது. மேலை நாகரிகத்தின் வெளிப்பாடாக உடலை இழந்து உல்லாசம் தேடும் இரு பெண்கள் (போதையும் போதமும்', 'தோழி) உருவாக்கப்பட்டுள்ளனர். ஒருத்தி மேரி; இன்னொருத்தி ஸ்டெல்லா. இந்த இரு பெயர் களுமே கிறிஸ்தவப் பெயராக இருப்பது எதேச்சையான தல்ல. இருவருமே 'கவுன் அணிந்த பிராணிகள்." கிராப், லிப்ஸ்டிக், ஸ்நோ, ஷ", பவுடர், சகிதமாய் இவர்கள் நிறுத்தப்படுகின்றனர். இருவரும் உல்லாசிகள், ஸ்டெல்லா "ஒவ்வொரு மாத ஆரம்பத்திலும் தகப்பனார் அனுப்பும் பணத்தைப் பதினைந்து இருபது தேதிக்குள் தாம் துரம் என்று செலவழித்து விட்டு அப்புறம் சந்தியில் நிற்பாள்.' ஸ்நோவும் பவுடரும் வாங்குவதற்காகவும், சினிமா பார்ப் பதற்காகவும் பக்கத்து வீட்டுக்காரனிடம் உடலை விற்பாள். மேரியோ முன்பின் தெரியாத ஒருவனைச் சிந்தித்த அன்றே ஒட்டலுக்கு அழைத்துச் சென்று மது அருந்தி விட்டுத் தெருவில் மயங்கிக் கிடப்பாள்.
இவர்கள் இருவரும் அறிமுகப்படுத்தப்படும்போதே அருவருப்பாகத்தான் செய்யப்படுகின்றனர் ரயிலுக் காகக் காத்திருப்பவனின் அருகில் அமர்ந்து உதட்டில் இருக்கும் சிகரெட்டை பற்ற வைக்கச் சொல்லும் மேரியைப் பற்றிய சில வருணனைகள்:
(1) 'திடீரென்று லாடம் கட்டிக்கொள்ளும் மாடு உதைத்துக் கொள்வதைப் போல் அவள் பூட்ஸ் கால்களைக் கீழே உதைக்கவே, என்னவோ என்று திரும்பினேன்' (பக். 19-120).
{i) 'அந்த நகர தேவ ைகயின் வாய் தான் முடிவில் என்னை ஆகர்ஷித்தது. ஏனென்றால் அது சாப்பிட்டுக் கொண்டிருந்தது. போரிட்டுப்
படிப்பகம்WWW.padippakam.Com
அ மார்க்ஸ் 25
பெருச்சாளியை வென்று ரத்தத்தில் தோய்ந்த நாயின் வாய்போல் இருந்தது அதன் வாய்கொஞ்சம் அதிகமாகவே உதட்டுச் சாயம் பூசிவிட்டதால் தலை மயிரைத் தாறுமாறாக முள் வேலியைப் போன்று கோணலும் மானலு மாய் வெட்டிக் கொண்டிருந்தது. பெண்கள் கிராப் வைத்துக் கொள்வதால் அழகு குன்றிவிடு வதாக நான் நினைக்க வில்லை. ஆனால் என் தேவைக்கு அது நன்றாக இல்லை." (பக். 112)
(i) "அலங்கோலமாக அவள் விழுந்து கிடந்த அந் நிலையில் அருகில் இருக்க எனக்கு அருவருப்பாக இருந்தது" (பக். 116).
ஸ்டெல்லா அவலட்சணமில்லை; அழகி, கவர்ச்சி அயானவள். எனினும் அவள் இப்படித்தான் அறிமுகப் dபடுத்தப்படுகிறாள்.
"மிஸ் ஸ்டெல்லாவின் அறையில் நான் நுழைந்த போது கால்களை மேஜைமீது தூக்கி வைத்துக் கொண்டு சாய்வு நாற்காலியில் அலங்கோலமாக உட்கார்ந்திருந்தாள் அவள்’ (பக். 139).
அவளின் அறை வாசலில் கிடக்கும் பல ஜோடி செருப் புகள் கட்டிக்காட்டப்படுகின்றன. பெண்கள், அடிமை கள் ஆகியோரின் அங்க வீச்சுக்கள், புழங்கும் வெளிகள் ஆகியவைகூட ஆதிக்கச் சமூகத்தில் வரையறுக்கபட்டுவிடு கின்றன. வரையறையை, எல்லையை மீறுவோர் வேசி களாய்த்தான் இருக்க முடியும், சங்க காலத்திலேயே கையை வீசி வீசி வீதியில் நடப்பவள் என விலை மகளிர் வருணிக்கப்படவில்லையா? ('ஆய் கோல் அவிர் தொடி விளங்க வீசிப் போது அவிழ் புதுமலர் தெரிவுடன் கமழ." மதுரைக்காஞ்சி,563).
படிப்பகம்WWW.padippakam.Com
26 உடைபடும் மெளனங்கள்
இந்தக் குறிப்புகளெல்லாம் கூட தற்செயலான வையல்ல. உடல் பற்றிய இத்தகைய குறிப்புகள் நூல் முழுவதும் ஒரு சில இடங்களில்தான் வருகின்றன. பைத் தியக்காரப் பிள்ளையில் கொடுமைக்குள்ளாக்கப்படும் மகன் ராஜம் ரயிலில் விழுந்து நசுங்கிச் செத்தபின்னும் கூட அவன் உடல் அழகாகவே இருக்கிறது எனவும் "போஸ்ட்மார்டமும் கூட அந்த அழகைச் சிதைக்கவில்லை எனவும் ஒரு அதீதமான குறிப்பும் கதையில் உள்ளது (பக். 37),
உடலை விற்று உல்லாசம் தேடுவதால் விளைந்த வெறுப்பு என்றும் இதனை ஒதுக்கிவிட முடியாது. இந்தத் தொகுதி முழுவதும் உடலை விற்பவர்களாகவும் உல்லாசி களாகவும் நால்வர் அறிமுகப்படுத்தப்படுகின்றனர். மனோரமா (ஏன்), சரோஜா (இனி புதிதாய்) ஆகியோர் மற்ற இருவர். இவர்களில் சரோஜா ஒரு சில விநாடிகளே வநது போதம் (விலைமாது, நடிகை) மிகச் சிறிய பாத்திாம். மனோரமா கீழை நாகரிகத்தின்படி பொட்டுக் கட்டிக்கொண்ட தாசி. ஸ் டெல்லா மேரி ஆகியோருக்கு நேரெதிராக இவள் படைக்கப்பட்டுள்ளாள். தூய்மை, வசீகரம், இனிமை, இன் சொல், நறுமணம், மகிழ்ச்சி, உற்சாகம், அழகு, இளமை ஆகியவற்றின் பின்னணியில் மனோரமா வளைய வருகிறாள். பூமணமும், புனுகு மணமும் அவள் மீது எப்போதும் வீசும். மனோரமா,
"இருட்டும் சமயம் (அவள்) எழுந்து விளக்கை ஏற்றினாள், வாசலில் திண்ணை மாடத்தில் ஒரு அகல் விளக்கு. சமையல் அறைக்குள் இருந்த பூஜை அறை ராதாகிருஷ்ண படத்துக்கு முன் ஒரு பெரிய குத்து விளக்கு. பிறகு நாங்கள் இருந்த இடத்தில் ஒரு பவர் லைட் இவ்வளவையும் ஏற்றினாள்."
என அறிமுகப்படுத்தப்படுகிறாள்.
படிப்பகம்WWW.padippakam.Com
அ. மார்க்ஸ் 27
சாமிபடத்திற்கு விளக்கேற்றுபவளாக மனோரமா காட்டப்படுவது கவனிக்கத்தக்கது. அருகிலுள்ள முரண் மூலம் இந்தப் பண்புகள் மேலும் துலக்கம் பெறும் பொருட்டு இதே கதையில் 'வெள்ளிக் கிழமை கூட வாயிலில் தீபம் ஏற்றச் சோம்பும் நாகமணி" (பக் 1^2) என்கிற குடும்பப் பெண்மணியும், ஆபாசப் ாட்டுப் பாடும் அவளின் முரட்டுப் பைத்தியக்கார மகனும் அதே கதையில் சித்திரிக்கப்பட்டுள்ளனர். மனோரமா பற்றி
ன்னொரு வருணனை
'அவளுடைய சிரிப்பு மட்டுமல்ல, உடையும் அதிசயம். ஒவ்வொரு நாளும் அவள் புதுப் புதுக் கோலத்தில் தோன்றுவாள். ஒருநாள் சாதாரணமாக மற்ற பெண் களைப் போல் புடவை கட்டியிருப்பாள். மறுநாள் முஸ்லிம் மாதரைப் போல் முக்காடு; மூன்றாம் நாள் பாவாடையும் மேலாக்கும்; வங்காளி, பஞ்சாபி பெண்களைப் போல பல விதமாய் உடுத்துக் கொள் வாள். எந்த ஆடையும் அவளுக்குப் பொருத்தமாய் இருந்தது’ (புக். 163)
கவனமாகக் கவுன் மற்றும் மேலை நாகரிக உடைகள் தவிர்க்கப் பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் விரும்பத் தக்கவளாக அவளின் பக்கம் நின்று அவளின் நியாயங்கள் பேசப்படுகின்றன.
பெண்ணிய நோக்கு தவிர இன்னொரு அம்சத்திலும் மேலை நாகரிகம் சற்று கீழே இறக்கப்பட்டு கீழை நாகரிகம் மேலுயர்த்தப்படுவதைக் காணமுடியும். 'மருந்து கதையில் ஒரு மேலை மருத்துவர், நோயாளி குணமாவதைப் பற்றிக் கவலைப்படாமல் தனக்கு அறிமுக மான புதிய மருந்தொன்றைச் சோதித்துப் பார்ப்பதில் குறியாய் இருக்கிறார். இவரிடம் வருமுன் ஒரு வாரம் அம்மன் கோயில் பூசாரியிடம் விபூதி போட்டும், பதினைந்து நாட்கள் வேலாயுத வைத்தியரிடம் நாட்டு
படிப்பகம்WWW.padippakam.Com
28 உடைபடும் மெளனங்கள்
வைத்தியமும் முயற்சித்து இருக்கின்றனர். இது குறித்து L一T古L一町,
'இந்த இருபதாம் நூற்றாண்டில் இந்த மடமை தொலைய வில்லையே. மந்திரத்திலும் மூக்குப்பொடி மருந்திலும் நம்பிக்கை வைத்திருக்கிறார்களே!' என்று கேலி செய்வதாய் ஒரு குறிப்பு. உண்மையில் இது மேலை மருத்துவத்தின் மீதான கேலிதான் என்பது கதைப் போக்கில் வெளிப்பட்டுவிடுகிறது.
ஆக, வெளிப்படையாய் இல்லாமலேயே பிரதியியல் அணிவகுப்பின் (Textual strategy) மூலமாகவே ஒட்டு மொத்தமாய் மேலை நாகரிகம் பற்றிய எதிர் நிலையான பிம்பமும் கீழை நாகரிகம் பற்றிய ஒரு வழிபாட்டு விக்கிரக உருவாக்கமும் மேற்கொள்ளப்படுகிறது. பெண்கள் மற்றும் கீழ்சாதியினர் மீதான கடும் ஒடுக்கு முறைகள், பார்ப்பனிய அதிகாரத்துவம் போன்றவற்றைக் கண்டுகொள்ளாமல் தாசிமுறை உட்படக் கீழை நாகரிகம் விரும்பத்தக்க ஒன்றாக முன் வைக்கப்படுவதை அவ்வளவு எளிதில் சலுகை அளித்துப் புறக்கணித்துவிட முடியாது.
இ) விருப்பக் குவிப்பு
கதையாடல் கருவிகள் (Narative Devices) மற்றும் பிரதியியல் அணிவகுப்பின்மூலமாக எத்தகைய அம்சங்கள் மிது ஈர்க்கப்பட்டு, கிளர்ச்சியூட்டப்பட்டு வாசகர்களின் விருப்பங்கள் குவிக்கப்படுகின்றன என்பதைப் பார்க்க
எந்த ஒரு எழுத்துக்குள்ளும் ஒரு கதை சொல்லி இருக் கிறான். அது "நான்’ ஆக இருக்கலாம் அல்லது ஒரு மூன் றாம் நபரின் நோக்கில் கதை சொல்லப்படலாம். நானாக இருக்கும் போதுகூட வாசகர்கள் நானுக்குச் சார்பாக வயப்படுத்தப் படாமல் நானுக்கு எதிராகவே கூட இயைபு
படிப்பகம்WWW.padippakam.Com
அ. மார்ச்ஸ் 29->
படுத்தப்படலாம் என்பதெல்லாம் நாம் அறிந்தவை தான். கதை சொல்லி யாருக்கு அருகாமையில் நிற்கிறான், யாரைக் கூர்மையாய் கவனிக்கிறான், யாருடைய நியா யங்களைப் பேசுகிறான், யாரைத் தூரப்படுத்துகிறான், யாரை விட்டு விலகி நிற்கிறான், யாருக்கு எதிராகப் பேசு கிறான்,யாரை மெளனமாக்குகிறான் என்பவை கவனிக்கப் படவேண்டிய அம்சங்கள்.இந்தத் தொகுப்பிலுள்ள பன்னி" ரண்டு கதைகளும் குடும்ப நிறுவனத்தின் ஊழல்களைத் தோலுரிப்பது குறித்தும் மேலை நாகரிகத்திற்கு எதிராக நிற்பது குறித்தும் விளக்கமாய்ப் பார்த்தோம்.
ஸ்டெல்லா, மேரி, நவீன மருத்துவர் தவிர எதிர்
நிலையில் ராஜத்தின் அம்மா, எழுத்தாளனின் மனைவி, சம்பத்தின் மகன் மருமகன் போன்றோர் உருவாக்கப் பட்டுள்ளனர். எதிர் நிலையில் வைக்கப்பட்டவர்களின் நியாயங்கள் ஒரிரு கதைகள் தவிர மற்றவற்றில் முற்றிலும் மெளனமாக்கப்பட்டுள்ளன. எழுத்தாளனின் மனைவியை எடுத்துக் கொள்வோம். அவள் ஏன் இப்படிப் பூடகமாக இருக்கிறாள், கணவனுடன் ஒத்துழைக்க மறுக்கிறாள் என்பதற்கு மெளனம் தான் பதில். ராஜத்தின் கொடுமைக் கார அம்மாகூட அப்படித்தான். வாழ்நாள் முழுமையும் பொறுப்பற்ற கணவனால் ஒடுக்கப்பட்டவள் அவள்; விதவையான இறுதிக் காலத்தில் இரண்டு பெண்களைத் திருமணத்திற்கு வைத்துக் கொண்டிருக்கும் சூழலில் சம்பாதிக்கும் மகன் தனக்குத் தெரியாமல் வருங்கால மனைவிக்குச் சொத்து சேகரிக்கும் போது ஒரு பாதுகாப் பற்ற உணர்வு வருவது சகஜந்தான். இன்றைய சமூகச் சூழலில் இது எதிர்பார்க்கக் கூடியதுதான். ஆனால் இவை யெல்லாம் பிரதியில் பேசப்படவில்லை. மாறாக அனுதா பத்திற்குரிய பாத்திரங்கள் மட்டும் பொறுமைசாலிகளாக வும் கடைசி வரை குழைந்து குழைந்து பேசுபவர்களாக வும் உருவாக்கப்பட்டுள்ளனர். பைத்தியக்காரப் பிள்ளை ராஜத்தின் மீது அனுதாபத்தைக் கூட்டுவதற்காக அவனைத் திருமணம் செய்து கொள்ள இருந்த பங்கஜம்.
படிப்பகம்WWW.padippakam.Com
30 உடைபடும் மெளனங்கள்
‘பைத்தியக்காரப் பிள்ளை கல்யாணம் ஆணப்புறம் இந்த வேலை செய்யாமல் இருந்தானே' (பக் 38) எனப் போர்வையை இழுத்து மூடிக்கொண்டு படுத்துக் கிடப்பதாக ஒரு குறிப்பு வேறு.
ஸ்டெல்லா, மேரி ஆகியோர் உலவும் இரு கதைகளி லும் இன்னொரு குறிப்பும் கவனிக்கத்தக்கது. இரண்டுமே மிகப் பல ஆண்டுகளுக்குப் பிந்திய பின்னோக்கிய நினைவு களாகவே எழுதப் பட்டுள்ளன. இரண்டிலுமே ஸ்டெல்லா, மேரி ஆகியோருக்கு இணையாக நாயகர்களின் மனைவி கள் நிறுத்தப்படுகின்றனர். இரண்டிலுமே அமைதியான வாழ்க்கைக்கு அப்பால் பழைய உல்லாசப் குறித்த ஏக்கங் கள் இருந்த போதிலும் மனைவியுடனான வாழ்க்கையே சிறந்தது என்கிற கருத்து முன் வைக்கப்படுகின்றது. ஒன்றில் வெளிப்படையாகவே பழையதை அசை போட்ட வுடன் வெறுத்துவிடுகிறது. பழைய உல்லாச வாழ்க்கை பற்றிய ரகசியங்கள் அம்பலமான பின்னும் கூட ஏற்றுக் கொள்ளும் பொறுமையும் அன்பும் பக்குவமும் உடையவ ளாக மனைவி காட்டப்படுகிறாள். 'மனைவியின் கோபம் பற்றிய கவலை இல்லை அவளைச் சமாதானம் செய்து விடலாம்' (பக். 119). இன்னொரு கதையில் ஸ்டெல்லா வின் அழகின்பத்தை நுகர்ந்த நினைவுகள் 'மனைவி பக்கத்தில் இல்லாது' போகும் போது மட்டுமே வருகின்றன (பக். 150). அந்தக் கதையின் நாயகன் ஸ்டெல்லாவைத் திருமணம் செய்து கொள்ள மறுக்கும் போது தனது வருங்கால மனைவி பற்றிக் குறிப்பிடுபவை கவனிக்கத் தக்கன.
(i) பிளாட்டிங் பேப்பர் போன்ற லேசான நெஞ் கள்ள உன்னைப் போன்றவர்களிடம் கலையின் பரிசுத்தத்தை எப்படி எதிர்பார்ப்பது? எதிர் பார்த்து ஏமாறுவது முட்டாள்தனம் என் மனைவி என் சுகத்தில் மாத்திரமல்ல, துக்கத்தி லும் என்னுடன் பங்கெடுத்துக் கொள்வதைத் தான் நான் விரும்புவேன்' (பக். 147). ாணை
படிப்பகம்WWW.padippakam.Com
அ மார்க்ஸ் 3.
{i) அவன் : "எனக்குக் கல்யாணம் நடக்கப்
போகிறது"
ஸ்டெல்லா : "யாராவது ஒரு பட்டிக்காடா
யிருக்கும்'
அவன் : ஆமாம்;ஆனால் அவள் என் கஷ்ட
காலத்திலும் கூட இருந்து உதவி புரிவாள்' (பக். 149)
கீழை நாகரிகம் கண்ட மனைவி இவள். கஷ்ட காலத் திலும் கூட இருப்பாள். கணவன் அப்படி இப்படி இருந் ததை, இருப்பதை அறிந்தாலும் கண்டு கொள்ள மாட் உாள். குடும்பப் பொறுப்பை சுமையை ஏற்றுக் கொண்டு கணவனுக்கு அமைதியான வாழ்க்கையை அளிப்பாள். குடும்பத்தின் ஊழல்களைத் தோலுரிப்பது போலத் தோற்றமளிக்கும் இப்பிரதியில் அமைதியான குடும்ப வாழ்க்கை பற்றிய ஏக்கம் தொடர்ந்து ஊடாடி நிற்பது குறிப்பிடத்தக்கது. பைத்தியக்காரப் பிள்ளை ராஜம் கூட அமைதியான குடும்ப வாழ்க்கைக்காக ஏங்கி ஏங்கித்தான் செத்துப் போகிறான். வேறு சில எடுத்துக்காட்டுகள்:
(i) அமைதி இழந்த குடும்ப வாழ்க்கை எழுதுவதற்கு முட்டுக்கட்டை தானே? திருப்தியும் சந்தோஷ மும் நிறைந்த குடும்பந்தான் ராஜ்யம் நிலைக்க உதவும் என்று ஒரு பெரிய சரீர சாஸ்திரி கூறு கிறார்" (பக். 48) (i) "இருபது வயதுப் பெண்கள் முழுப் பொறுப் பையும் ஏற்று குடும்பம் நடத்தவில்லையா?” (பக். 50).
(i) "மீண்டும் புனாவுக்குச் சென்று, அந்தப் பெண்"
களில் யாராவது ஒருத்தியின் கரம் பற்றிக் கொண்டு, கண்டோன்மென்டிலோ டெக்கான் ஜிம்கானாவிலோ உள்ள ஏதாவது ஒரு ஒட்டலில்
படிப்பகம்WWW.padippakam.Com
32
உடைபடும் மெளனங்கள்
புகுந்து உண்டு குடித்து-இந்தத் தாபம் எழுகிறது அடிக்கடி, ஏனோ குடும்ப வாழ்க்கை அமைதி யாக-தேக்கம் கொண்ட நீர் சலனமற்று அமைதி யாக இருக்குமே, அது போலவா?-இருப்பதாலா? அமைதியுமா அலுக்கும்?' (பக். 106-107)
கடைசி மேற்கோள் குடும்ப வாழ்க்கையின் அமைதி பற்றி மட்டுமல்ல, அந்த அமைதியில் தோன்றும் அலுப்பு பற்றிப் பேசுகிறது. ஆனால் அதற்குத் தீர்வு ஸ்டெல்லா அல்லது மேரி அல்லது சரோஜா கூட அல்ல மனோரமா போன்றவர்களின் உல்லாசத்தின் பால் கவனம் ஈர்க்கப் படுகிறது. இந்தத் தொகுதி முழுமையுமுள்ள கதைகளி லேயே கொஞ்சம் வாசகர்கள் பாலியல் ரீதியாய்க் கிளர்ச்சி யூட்டப்பட்டு ஈர்க்கப்படுவதுமனோரமாவின் பக்கந்தான். மற்ற விலை மாதர் போலன்றி அவள் அசூயையுடன் அறிமுகப்படுத்தப்படாததை முன்பே சுட்டிக்காட்டி னோம்.
மீண்டும் மனோரமாவை ஸ்டெல்லா, மேரியுடன் ஒப்பிட்டுப் பார்ப்போம். பின்னாலுள்ள இருவரையும் முக்கிய ஆண் பாத்திரங்கள் பயன் அனுபவித்த பின்னர் குரூரமாய்ப் பழிவாங்கி விடுகின்றனர். உடல் மீதான பிம்பத்தை உடைப்பதன் மூலமே இரு கதைகளிலும் பழி வாங்கல்கள் மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது. மேரியின் நீட்டிக்கொண்டிருக்கும் பற்களை, கட்டையான மூக்கை, மென்மையும் பளபளப்புமற்ற கூந்தலை குரூர மாய் சுட்டிக்காட்டுகிறான், "அவன்" (பக். 110-111). ஸ்டெல்லாவிடம் தன் முன் பற்கள் இரண்டும் பொய் யானவை என்றும், தனது கண் அரைக் குருடு என்றும் சொல்வி தனது உடற்கவர்ச்சியை நொறுக்கி அரு வருப்பை ஊட்டுகிறான் 'அவன்' (147-48).
"உடல் தான் எல்லாமென்று கருதும்"
மேலை நாகரிகத்தை அடிக்க இந்த உத்திகள் பயன்படுத்தப்படுகின்றன.
படிப்பகம்WWW.padippakam.com
அ. மார்க்ஸ 33
மனோரமாவின் கதையிலும் உடல் பறறிய பிரக்ஞை சரடாக ஒடிக்கொண்டிருக்கிறது. ஆனால் இங்கு பெண் உடல் மீதான கவர்ச்சியின்பால் கவனம் குவிக்கப் படுகிறது.
பதினான்கே வயதான அழகான சிறுவனின் கன்னங் களும் உதடுகளும் புண்ணாகும்படி நெருடிக் கொண்டே மன்னர்களின் உல்லாசங்கள் பற்றிப் பேசிக் கொண்டே இருக்கிறாள் புனுகு மணம் கமழும் கவர்ச்சி நாயகி மன்ோரமா (பக். 150, 172) .
“சகோதர உணர்ச்சி என்கிறார்களே, அநத மாதிரிப் பாசம் ஒன்றும் எனக்கு அவளிடம் ஏற்பட வில்லை. அவளுடைய உடல், அழகு, உடையழகு, சொல்லழகு இவைகளால் கவரப்பட்டுத்தான் நான் அவளை நாடி அடிக்கடி சென்றிருந்தேன்" (பக். 116)
என்று பையனின் வாக்குமூலம் வேறு. அந்தச் சிறுவன் அவளுடனேயே இருக்கத் தயாராக இருந்தால் அவள் வேறு யாரையும் நாடுவதில்லை எனச் சொல்கிறாள். கடைசியில் பிரியும் போது தங்கச் சங்கிலி பரிசளித்துத் தளதளக்கிறாள்.
ஆக, மேலோட்டமாகக் குடும்பத்தின் ஊழல்கள் கண்டிக்கப்பட்டாலுங் கூட இந்த ஊழல்கள் இல்லாத, ராஜ்ய அமைப்பைக் கட்டிக் காக்க உதவும் அமைதியான குடும்ப வாழ்க்கை, செத்துப் போன பின்னும் கூட கனவில் வந்து கஷ்ட காலங்களில் துணை நிற்கும் மனைவி (வெயில்), இந்த அமைதியான வாழ்க்கை அலுத்துப் போகும்போது அதனை ஈடுகட்டும் மனோரமாக் களைத் தன்னுள் கொண்டுள்ள கீழை நாகரிகம் ஆகிய
a -3
படிப்பகம்WWW.padippakam.Com
34 உடைபடும் மெளனங்கள்
வற்றின் பால் நாம் ஈர்க்கப்படுவது மூன்றாம் தளத்தில் பிரதியின் செயல்பாடாக இருக்கிறது. "இந்துத்துவம் என்கிற அடிப்படையில் பார்ப்பனப் பண்பாட்டு மீட்சி களின் மத்தியில் நின்று கொண்டிருக்கிறோம் நாம், நமது சூழலின் இந்தப் பின்னணியில் எல்லாக் குறியீடுகளும், சமிக்ஞையாக்கங்களும் மேல் நிர்ணயம் செய்யப்பட் டுள்ளன. சாதாரண காலங்களில் உள்ளதைக் காட்டிலும் இன்று கீழை நாகரிகத்தின் மீதான ஈர்ப்பு என்பது அதனுடன் இணைந்த சனநாயக விரோதமான, கொடுர மான பல்வேறு அம்சங்கள் மீதும் நம்மை ஈர்க்கும் ஆபத் துடையது என்கிற எச்சரிக்கை நமக்குத் தேவை.
எம். வி. வெங்கட்ராம், இனி புதிதாய் (சிறுகதைத் தொகுதி), சிலிக்குயில், குடந்தை, 1992, 19-04-92 அன்று குடந்தையில் 'இலக்கிய சந்திப்பு' நடத்திய எம். வி. வி. கருத்தரங்கில் வாசிக்கப்பட்டது.
மேலும், ஜன" 93